வெட்கப்பட வேண்டாமா? குஜராத்தில்
நரேந்திரமோடி முடிசூடியதன் எதிரொலி இப்போது ஒரிசாவில் கேட்கிறது .மத்திய பிரதேசத்தில் கேட்கிறது .ஒரிசாவில் பிஜு ஜனதா தள -பி.ஜே.பி கூட்டணி ஆட்சி.மத்திய பிரஹேசத்தில் சுத்த சுயம் பிரகாசமான பி .ஜே.பி ஆட்சி. இந்துக்கள்
வசிக்கும் பகுதிகளில் தேவாலயங்கள் இருக்கலாம்.ஆனால் கிறிஸ்துமஸ் கொண்டாடக் கூடாது என்று ஒரிசாவில் "விஸ்வ ஹிந்து பரிஷத்" கட்டளையிட்டது.இது என்ன கொடுமை? கிறிஸ்தவ
முழுக்க ஏற்றுக்கொண்ட அமேரிக்காவில்,பிரிட்டனில்,இதர ஐரோப்பிய நாடுகளில் அங்குள்ள இந்துக்கள் தீபாவளி கொண்டாடுகிறார்கள்.தமிழர்கள் பொங்கல் விழா கொண்டாடுகிறார்கள்.அந்த விழாக்கள் தங்கள் மதத்துக்கு விரோதம் என்று எந்த கிறிஸ்த்தவரும் தீப்பந்தம் தூக்கியதில்லை. இந்தியாவில்
இருந்து குடியேறியவர்கள் தங்கள் குடும்பங்களை மட்டும் தான் கொண்டு சென்றார்களா?இங்கு இருப்பதாக கூறப்படும் முப்பது முக்கோடி தேவர்களையும் பரமசிவன்,பார்வதி ,முருகன்,வள்ளி,திருப்பதி வெண்கடாஜலபதி ,மதுரை மீனாட்சி என்று பல்லாயிரம் கடவுளர்களையும் அங்கே குடியேற்றியிருக்கிறார்கள்.அந்தக் கடவுளர்கள் குடிகொண்ட ஆலயங்களில் ஆறு கால பூஜை முதல் ஆண்டிற்கு ஒரு முறை வரும் விழா வரை அத்தனை வைபவங்களும் நடைபெறுகினறன .ஏன்? ஆர்.எஸ். எஸ்,இஸ்வ ஹிந்து பரிஷத் என்ற எல்லா இந்துத்துவா அமைப்புகளும் அமேரிக்காவில் செயல்படுகினறன.கனடா ,பிரிட்டனிலும் காலூன்றியிருக்கிறது. ஆனால்
, அந்த நாட்டு மக்கள் பைபிளுக்கு போட்டியாக பகவத்கீதையா என்று வெகுண்டெழவில்லை.இப்போது இந்தியாவை விட அமேரிக்காவில்தான் அதிக அளவில் உபந்நியாசங்கள்,காலட்சேபங்கள் நடைபெறுகின்றன. இந்து
மதச் சடங்குகளை நடத்தும் புரோகிதர்களின் எண்ணிக்கை இங்கே குறைந்து வருகிறது.ஆனால் அஸ்திரேலியாவிலும்,அமேரிக்காவிலும் குடியேறி வருகிறார்கள்.அந்த நாடுகளின் குடிமக்களாகவும் ஆகிவிட்ட அவர்கள்,அங்குள்ள இந்துக்கள் இல்லங்களில் சடங்குகளை நடத்துகிறார்கள்.அதற்காக அங்குள்ள பாதிரியார்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை ."இந்துமத உரிமைகள் சடங்குகள் இங்கே கூடாது"என்று அவர்கள் எழுந்தால் என்ன நிலை ஏற்படும் ?. இஸ்லாமியர் ஆளுகையிலுள்ள நாடு மலேசியா
.அங்கே பத்தாயிரம் பள்ளிவாசல்கள் இருக்கின்றன .ஆனால் 29 ஆயிரம் இந்துக் கோயில்கள் இருக்கின்றன. அரசமரத்தைக் கண்டால் ஒரு பிள்ளையாரை வைத்து விடுகிறோம்.வேப்பமரத்தைக் கண்டால் அதன் அடியில் சூலாயுதத்தை நடுகிறோம். கட்டேரி,முனியன்,கருப்பண்ணசாமி ,வீரபத்திரசாமி,மதுரை வீரன்,குதிரை வீரன் என்று அங்கேயும் ஒரு தெய்வம் இருப்பதாகத் தெரிவிக்கிறோம் .மலேசியாவில் அந்த 29 ஆயிரம் இந்துக்கோயில்களின் பட்டியலில் இத்தகைய சாமிகள் இடம் பெறவில்லை .ஆனால் அங்கேயும் மணியோசை கேட்கிறது.மந்திர முழக்கங்கள் கேட்கின்றன . இந்தோனேஷியா இஸ்லாதை ஏற்ருக்கொண்ட நாடு
.ஆனால் பாலித்தீவு மக்கள் இந்து சமயத்தை -குறிப்பாக சைவ சமயத்தை ஏற்றுக்கொண்டவர்கள்.அவர்களுக்குத் தேவையான தெய்வ விக்கிரகங்கள் தமிழகத்திலிருந்துதான் அனுப்பி வைக்கப்படுகின்றன .புதிய புதிய ஆலயங்கள் எழும்புகின்றன.அவர்கள் ஆலயம் எழுப்புவதற்கோ விழாக்கள் கொண்டாடுவதற்கோ இந்தோனேஷியா மக்கள் எந்த தடையும் விதிக்கவில்லை . இப்படி இந்தியாவிற்கு அப்பால் வேற்று மதங்களை அரசாங்க மதமாக ஏற்றுக்கொண்ட நாடுகளில் இந்துமதம் மதிக்கப்படுகிறது
. இந்துக்களின் உரிமைகள் காக்கப்படுகின்றன.ஆனால் இங்கே இந்து மதத்தைக் காப்பாற்றப் போவதாக இந்துத்துவா சக்திகள் போர் வெறி கொள்ளுகின்றன .சர்வதேச அரங்கில் இவர்கள் இந்தியாவைக் கேவலப்படுத்துகிறார்கள்.யானையைக் காக்கப் போகிறோம் என்று புற்றீசல்கள் ஆர்பரிக்கின்றன . குஜராத் சட்டமனறத் தேர்தலில் மோடி வெற்றி பெற்றவுடன் இந்துத்துவா சக்திகளுக்கு புதிய வெறி உதயமாகியிருக்கின்றது
. ஒரிசாவில் தீப்பந்தங்களைத் தூக்கினார்கள்.கிறிஸ்துமஸ் விழா கொண்டாடக்கூடாது என்று கட்டளை பிறபித்தார்கள். மாதா கோயிலகளுக்கும்,ஜெபவீடுகளுக்கும் நெருப்பு வைத்தனர்.ஏசுவின் ஏற்றுக்கொண்ட கன்னியர்களை -அருட் சகோதரிகளை தாக்க்கினார்கள்.பல மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கும் அளவிற்கு நிலமை மோசமானது . ஒரிசாவில் இப்படி தேவாலயங்கள் தீக்கிரையாக்கப்படுவது சர்வ சாதாரணம்
.இதற்கு பின்னரும் இந்துத்துவா சக்திகள் வெறியாட்டம் ஆடியிருக்கின்றன .ஆனால் அந்த காட்டுமிராண்டிக் கூத்துகளெல்லாம் மலை கிராமங்களில்தான் நடந்தன.ஆனால் இன்றைக்கு நகரங்களிலேயே தேவாலயங்கள் எரிக்கப்பட்டிருக்கின்றன . ஓர் இந்துத்துவா சாமியார் தாக்கப்பட்டார்
.அதனைத்தொடர்ந்து தான் இந்த அராஜாகங்கள் என்று பி .ஜே.பி சமாதானம் சொல்லுகிறது. அப்படி எந்தச் சாமியாரும் தாக்கப்பட்டதாக எவரும் கைது செய்யப்படவில்லை.எவர் மீதும் வழக்கு போடவில்லை. குஜராத் வெற்றியைத் தொடர்ந்து இந்துத்துவா சக்திகள்தான் அதிகாரத்தை கரம்பிடித்துக்
கொண்டு கற்காலக் கூத்துகளை அரங்கேற்றின . அவர்களுடைய கட்டளைகளை மீறி எங்கெல்லாம் கிறிஸ்துமஸ் விழாவிற்கு கிறிஸ்தவ மக்கள் தயாரானார்களோ, அங்கெல்லாம் அவர்களுடைய தேவாலயங்கள் கொளுத்தப்பட்டன.தமிழர் திருநாளன்று பொங்கள் பானைகளை சில பைத்தியங்கள் உடைத்தால் நாம் என்ன செய்வோம் ?. இம்முறை இந்துத்துவா சக்திகள் தேவாலயங்களை மட்டும் கொளுத்தவில்லை
.கிறிஸ்தவ மக்களின் வீடுகளுக்கும் தீ வைத்தனர் .அங்கே கிறிஸ்துமஸ் தினத்தில் வெளிச்சம் தேடி காத்திருந்த மக்கள் அந்தகார இருளில் மூழ்கடிக்கப்பட்டனர். இந்தக்கொடுமை மூன்று மாவட்டங்கள் முழுக்கப் பரவியது.இதயமுள்ள மனிதர்கள் தங்களின் உதவிக்கு வருவார்கள் என்று கிறிஸ்தவ மக்கள் எதிர்பார்த்தனர் .ஆனால் மாநில அரசின் இதயம்கூட எப்போதோ எரிந்து போனது.ந்லைமை கட்டுக்குள் இருப்பதாக அந்த மாநில முதல்வர் தினம் தினம் பொய்யான அறிக்கைகளை வெளியிட்டார் . மையத்தில் மன்மோகன்சிங் அரசு மவுனம் காக்கிறது
.மாநிலாரசிடம் அறிக்கை கேட்டிருக்கிறோம் என்கிறது .மத்திய ரிசர்வ் போலீஸ் படையை அனுப்பியிருக்கிறோம் எனைரது.ஏன் இந்த அவமானகரமான செயல் என்று கேட்க அஞ்சுகிறது .காரணம் வழக்கம் போல் மதவாத சக்திகளை பகைத்துக்கொள்ள விரும்ப வில்லை.சிறுபான்மை இன மக்களை சித்திரவதை செய்யப்படுவதைக் கடுமையான சொற்களிலாவது கண்டிக்கவேண்டாமா ? முன்னர்
,கிறிஸ்தவ மத ஊழியர் கிராகாம் ஸ்டெய்ன்சும், அவரது பிள்ளைகளும் உயிரோடு எரிக்கப்பட்டனர்.அந்த கோரக் கொலைகளைச் செய்த விஸ்வ ஹிந்து பரிஷத் பயங்கரவாதிகள்தான் இப்போது முன்னின்று தேவாலயங்களை எரித்து கொண்டிருக்கிறார்கள் .ஆனால்,இந்தியா மதச் சார்பற்ற நாடு என்று மார்தட்டிக்கொள்கிறோம் .வெட்கப்பட வேண்டாமா? கிறிஸ்தவ மக்கள் ஏசுவின் பிறந்த நாளை கொண்டாடத் தயாராகிறார்கள்
.ஆனால் அவர்களுடைய ஆலயங்களையும் ,வீடுகளையும் கொளுத்தி இந்துத்துவா சக்திகள் தீபாவளி கொண்டாடுகின்றனர்.இவை எவ்வளவு சமூகக் கொடுமைகள் ?இந்தக் கொடுமகளின் சூத்திரதாரிகள் இந்த நிமிடம் வரை கைது செய்யப்படவில்லை.நீதி விசாரணை நடத்தப் போவதாக ஒரிசா முதல்வர் நவீன்பட்நாயக் அறிவித்திருக்கிரார் .இந்த அறிவிப்பு, நடந்த கொடுரங்களை விடக் கொடுமையானது .ஏனெனில்,நீதி விசாரணைகளின் லட்சணங்களை நாடு அறியும்.
கட்டுரை வெளியீடு
= குமுதம் ரிப்போர்ட்டர்,6-1-2008 இதழ்
(இஸ்லாமிய நாடுகள் குறித்து இந்தக்கட்டுரயில் சொல்லப்பட்டது புள்ளிவிவர அடிப்படையில் சரியாக இருக்கலாம்,ஆனால் உண்மையான இஸ்லாம் நாடுகள் இந்துத்துவா வெறியர்களின் மூத்த அண்ணன்மார்களே.அதாவது ஒரே குட்டையில் ஊரிய மட்டைகள் என்று அர்த்தம்)