நான் ஏன் ஒரு முஸ்லீமாக இல்லை? இக்கட்டுரை முஸ்லீம்களுக்காக மட்டும் எழுதப்படவில்லை....
நான் ஏன் ஒரு முஸ்லீமாக இல்லை?
இக்கட்டுரை முஸ்லீம்களுக்காக மட்டும் எழுதப்படவில்லை....
என் மாணவர்களில் ஒருவராகிய துருக்கியைச் சேர்ந்த அல்டன் என்பவர் என்னைப் பார்த்து கிறிஸ்த்வர்கள் இயேசுவை இரட்சகர் என ஏன் அழைக்கிறார்கள்? இரட்சகர் என்றால் என்ன பொருள்? என்று கேட்டார். நான் அவனுக்கு பின்வருமாறு விளக்கினேன்.
நான் அல்டனுக்கு பின்வருமாறு விளக்கினேன்:
கடவுள் இந்த உலகிற்கு பல தீர்க்கதரிசிகளைஅனுப்பியிருக்கிறார் என்றாலும் அவர் ஒரே ஒரு இரட்சகரைத்தான் அனுப்பியுள்ளார். நம் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு அவர் ஒரே ஒரு இரட்சகரைத்தான் அனுப்பியுள்ளார். ஆனபடியால் ஒரு தீர்க்கதரிசியை விட இரட்சகர் மிகவும் முக்கியமானவர் ஆவார். இதன் பின் என் முஸ்லீம் நண்பர் என்னிடம்,- நீங்கள் இயேசுவைக் குறித்து சொல்வது உண்மை என்றால் அல்லா ஏன் முகமதுவை அனுப்ப வேண்டிய அவசியம் வந்தது? இயேசுவைக் குறித்து பைபில் கூறுவது உண்மை எனில் முகமது வரத்தேவையே இருந்திருக்காதே! என்று கேட்டார்.
கிறிஸ்தவம் மூன்று முக்கியமான காரியங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.
1.இயேசுவே உலக மீட்பர்
2. பைபிளில் உள்ளவையே கடவுளின் வார்த்தை
3.நாம் நமது பாவங்களுக்கான மன்னிப்பைஅறிந்து அதை பெற்றனுபவிக்க முடியும்.
பைபிள் இதைத்தவிர மற்றபல காரியங்களை போதிக்கிறது என்றாலும் இவையே அடிப்படையானவை.
1.இயேசுவே உலக மீட்பர்.
இயேசு நமது பாவங்களுக்காக தம்மையே பலியாக ஒப்புக் கொடுத்தபடியால் அவரே இரட்சகர்.அவர் எருசலேமில் கி.பி29ல் ரோம போர்சேவகர்களால் சிலுவையிலறையப்பட்டு மரித்தபோது, அவர் நமக்காக மரித்தார். நாம் நம் பாவங்களுக்கு பெறவேண்டிய தண்டணைக்குப் பதிலாக நமக்குப் பதிலாக அவர் அத்தண்டணையை ஏற்றுக் கொண்டார்.
அவருடைய மரணமானது பண்டைய வரலாற்றாசிரியர்களால் உறுதிப்படுத்தப்பட்டது:
சின்னஆசியாவின் கவர்னராகிய பிளைனி என்பவர் ரோம ராயனுக்கு எழுதிய கடிதத்தில், இயேசு சிலுவையில் மரித்தார் என்று நம்புகிற கிறிஸ்த்வர்களைக் குறித்த காரியத்தில் ஆலோசனை வேண்டி எழுதியிருக்கிறார்.
டாசிடஸ் என்ற ரோம அரசவை வரலாற்றாசிரியர் இயேசு செய்த அற்புதங்களையும், அவரின் பாடு மரணத்தையும் குறித்து தனது குறிப்புகளில் எழுதியுள்ளார்.
ஜோசிபஸ் என்றயூத வரலாற்றாசிரியர் இயேசுவின் அற்புதங்கள், அவரின் மரணாம் மற்றும் அவரின் உயிர்த்தெழுதல் குறித்த அதிகமான தகவல்களை எழுதியுள்ளார்.
மிகவும் முக்கியமாக, பைபிள் பின்வரும் காரியங்களைக் கூறுகிறது:
இயேசுவின் தாயாராகிய மரியாளவரின் சிலுவை மரணத்தின் போதுஅவரருகில் இருந்தததையும்,ரோமசேவகர்கள் தன் மகனின் கைகளிலும் கால்களிலும் ஆணிகளடித்து சிலுவையில் அவரை தூக்கினதை பார்த்தாள் என்றும், இயேசு தன் சீடனாகிய யோவானிடம் தன் தாயை ஒப்படைப்பதையும் பைபிள் கூறுகிறது. நிச்சயமாகவே தன் கண்களுக்கு முன்பாக சிலுவையில் தொங்கினது யாரென்றுமரியாளுக்கு தெளிவாக தெரிந்திருக்கும். அதிலே சிறிதும் சந்தேகமில்லை. அவர் இயேசுவேயன்றி வேறொரு நபரில்லை. நாம் நம் பாவங்களுக்காக தேவன் முன்பாக குற்றமுள்ளவர்களாக இருக்கிறோம் என்று பைபிள் கூறுகிறது. இயேசுவின் சிலுவை மரணம் பாவத்தண்டனையிலிருந்து நாம் தப்பிப்பதற்கான தேவனுடைய செயலாகும்.நம்மை மீட்பதற்கான கடவுளின் திட்டத்தை நாம் நிராகரித்து விட்டால், நம்மை மீட்பதற்கு வேறெந்த மாற்றுத்திட்டமும் இல்லை. கடவுளிடம் நம்மை மீட்க இதை தைத்தவிர வேறொரு திட்டமும் கிடையாது.மருத்துவர் நாம் ஒரு நோயிலிருந்து சுகமடைய ஒரு மருந்தை தரும் போது, நாம் அது கசப்பாயிருக்கிறது என்ற காரணத்திற்காக அவற்றை தள்ளி விடுவதில்லை. அந்த மருந்து நம்மை குணமாகும் என்றசந்தோஷத்தில் நாம் அதை சாப்பிட்டுவிடுவோம். உண்மையில், இயேசுவை என் வாழ்க்கையில் எனது இரட்சகராக அறிந்து கொள்வது எனது மாபெரும் மகிழ்ச்சியானதொரு அனுபவமாக இருக்கிறது.
பைபிள் உண்மை எனில், அல்லா ஏன் முகமதுவை அனுப்பவேண்டிய அவசியம் வந்தது? என்று அல்டன் என்னிடம் கேட்கும் போது அவருடைய கேள்வியிலேயேஅவருக்கு பதிலை காண முடிகிறது. இயேசுவின் சிலுவை மரணம் நமெல்லாருடைய பாவங்களுக்குமான மன்னிப்பை தருகிறது எனில் முகமதுவோ இஸ்லாமோ தேவையில்லை,அவசியமில்லை அப்படிதானே! அவர் இதை உடனடியாக புரிந்து கொண்டு என்னிடம்,'இயேசு உண்மையில் சிலுவையில் மரிக்கவில்லை என்பதை நாங்கள அறிவோம். உண்மையில் இயேசு அல்ல வேறொருவரே சிலுவையில் மரித்தார் என்று குரான் கூறுகிறது" என்றார். இயேசுவை நம்புகிறோம் என்று முஸ்லீம்கள் கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் நம்புகிற இயேசு பைபிளில் சொல்லப்பட்டுள்ள இயேசு அல்ல. அவர்கள் இயேசுவைக் குறித்த ஒரு தவறான கருத்தையே நம்புகிறார்கள்.
2. பைபிளில் உள்ளவையே கடவுளின் வார்த்தை.
இயேசுவைக் குறித்து பைபிள் சொல்லுவது உண்மையா? இயேசுவின் மரணத்தைக் குறித்து 137முறை வேதாகமத்தில் குறிக்கப்பட்டுள்ளது.இயேசு சிலுவையில் மரிக்க வில்லை என குரான் கூறுகிறது. இயேசு சிலுவையில் மரித்தார் என்றும் ஏன் இது நம் பாவ தண்டணையிலிருந்து நம்மை மீட்பதற்கான தேவ திட்டம் என்பதையும் விளக்குகிறது.அப்படியெனில் எது சொவது உண்மை?
பைபிள், குறிப்பாக புதியஏற்பாடு தாங்கள் கண்டவைகளுக்கு சாட்சியாக இருந்தவர்களாலெழுதப்பட்டது. குரான் அதற்கு பின் 600 வருடங்கள் கழித்து எழுதப்பட்டது. நேரடிசாட்சிகளின் கூற்றையா அல்லது நூற்றுக் கணக்கானவருடங்கள் கழித்துஎழுதப்பட்ட ஒரு நூலையா? அதை நாம் நம்ப வேண்டும்?
அ)பேதுரு எண்ற வேதாகம ஆக்கியோன் எழுதியதாவது:நாங்கள் தந்திரமான கட்டுக்கதைகளைப் பின்பற்றினவர்களாக அல்ல, அவருடைய மகத்துவத்தைக் கண்ணாரக் கண்டவர்களாகவே நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையும் வருகையையும் உங்களுக்கு அறிவித்தோம்.
ஆ) தனது பெயரில் நற்செய்தி நூல் எழுதிய யோவான் :அந்தச் சீஷனே இவைகளைக் குறித்துச் சாட்சிகொடுத்து இவைகளை எழுதினவன்; அவனுடைய சாட்சி மெய்யென்று அறிந்திருக்கிறோம்.
இ) இயேசு சிலுவையில் நமக்காக மரிஅத்தார் எனபடகை பிரசங்கித்த பேதுரு தனது பிரசங்கத்தை கேட்டயூதர்களிடமே அதைப்பற்றிய அவர்களின் அறிவை லோருகிறார்.அவர்சொன்னதாவது:னாங்கள் இதற்கு சாட்சிகளாயிருக்கிறோம் என்று கூறி , நீங்கள் அறிந்திருக்கிறபடி என்று தன் பிரசங்கத்தை அவர் முடிக்கிறதையும் நாம் காண்கிறோம்.
நேரடைசாட்சிகளால் எழுதப்பட்ட பைபிள் மட்டுமள்ள, அகழ்வாராய்ச்சிகளும் பைபிள் உண்மை என்று சான்று பகருகின்றன.ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர்வில்லியம் ஆல்பிரைட் அகழ்வாராய்ச்சியின்படி பைபிளே மிகவும் உண்மையானதாகும் என்று கூறுகிறார்.பைபிள் உண்மையா? என்ற தலைப்பில் அமெரிக்கசெய்திகள்&உலக அறிக்கையின் 1999ம் வருட அக்டோபர்25ம் தேதி பதிப்பில் ஒரு கட்டுரை வெளியானது. அந்த கட்டுரை பைபிள்சொல்கிற காரியங்கள் எல்லாம் உண்மை என்பதை நிரூபிக்கிற சமீபத்திய கண்டுபிடிப்புகள் எல்லாவற்றையும் கூறுகிறது.
இஸ்ரவேல் முற்பிதாக்களைக் குறித்த முக்கிய பகுதிகள், யாத்திராகமம், தாவீதின் ஆட்சி, மற்றும் இயேசுவின் வாழ்க்கை மற்றுமவர்வாழ்ந்த காலம் போன்ற பைபிளின் முக்கியமான காரியங்களை நவீன அகழ்வாராய்ச்சி உறுதிப்படுத்துகிறது என அந்த கட்டுரை கூறுகிறது.
பழைமையான கைப்பிரதிகளும் கூட பைபிள் மாற்றப்படவில்லை எனபதற்கு சான்று பகருகிறது. இன்று 4000த்துக்கும் அதிகமான கிரேக்க புதிய ஏற்பாட்டு பிரதிகள் உள்ளன. அவற்றில் சில மிஅக்வும் பழைமையானவை,கி.பி.150௨00 காலகட்டத்தில் எழுதப்பட்டவை என்று கணக்கிடப்பட்டுள்ளது.பண்டிதர்கள் இந்த எல்லா புராதன கைப்பிரதிகளையும் ஒப்பிட்டு பிரதிகள் எழுதப்பட்ட கால இடைவெளிகளில் எந்த வித்தியாசமும் இல்லை என்கிறனர். அதாவதுகி.பி150 எழுதப்பட்ட பிரதிக்கும் கி.பி1200லெழுதப்பட்ட பிரதிக்குமிடையேபெரிதாக எந்த வித்தியாசமும் இல்லை. நானே கூட இத்தகைய பண்டைய கைப்பிரதிகளில் சிலவற்றை லண்டனிலுள்ள ராயல் பிரிட்டீஷ் அருங்காட்சியகத்தில் கண்டிருக்கிறேன்.
பண்டைய கைப்பிரதிகளைக் குறித்த புகழ்பெற்ற பண்டிதர்கள் வேதாகமத்தின் நம்பகத்தன்மைக்கும் துல்லியத்தன்மைக்கும் சாட்சி கொடுக்கிறார்கள்:
1.வெஸ்கோட் மற்றும் ஹோர்ட் ஆகியோர் பண்டைய ஆவணங்களைக் குறித்த முகவுமறியப்பட்ட திறனாய்வாளர்கள் ஆவர். அவர்கள் கூறுவதாவது:சந்தேகத்திற்குரிய நம் கருத்துகள் புதிய ஏற்பாட்டின் ஆயிரத்தில் ஒரு பகுதிக்குக் கூட ஈடாக முடியாது.
2.பண்டைய கைப்பிரதிகளை ஆராய்வதில் புகழ்பெற்ற பிரிட்டிஷ் பண்டிதர் சர்.பிரெடெரிக் கென்யான் என்பார் எழுதியது: பைபிள் எழுதப்பட்ட காலத்திலிள்ளவாறே நாமிடம் இப்போது உள்ளது.இதற்குஎதிரான சந்தேகத்தின்கடைசி அடிப்படையுமிப்போது நீக்கப்பட்டுள்ளது. புதியஏற்பாட்டின் நம்பகத்தனமையும் உண்மைத்தன்மையும் இறுதியாக நிறூபிக்கப்பட்டிருக்கிறது.
3.பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த டாக்டர் ராபர்ட் வில்சன் என்பார் 45 மொழிகளை 30 ஆண்டுகளில் கற்றார். முடிவில் அவர் பைபிள் எல்லா நிலைகளிலும் உண்மையானது என்று அறிவித்தார்.
4. கடவுளுடைய தீர்க்கதரிசியாக இயேசுவால் பொய் சொல்ல முடியாது. அவர் தன்னை பின்பற்றுகிறவர்களிடம் சொன்னதாவது:வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை(மத்.24:35). இஞ்ஜிலில்(பைபிளில்) குறிக்கப்பட்டிருக்கிற தன்னுடைய வார்த்தைகள் ஒருபோதும் அழியாது அல்லது மற்றப்படாது என்று இயேசு வாக்குரைத்தார்.
5.பைபிளில் உள்ளவைகளை மாற்ற முயல்கிறவனை தண்டிப்பேன் என்று தேவனும் எச்சரிக்கிறார்:இந்தப் புஸ்தகத்திலுள்ள தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில் எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார். ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின் வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும் இந்தப் புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார்(வெளி.22:18,19). பைபிள் ஒரு போதும் மற்றப்படாது என்று தேவன் நமக்கு உறுதி தருகிறார். தேவன் சொல்கிறதை நாம் நம்பலாம்.
6.தனது வார்த்தை மாற்றப்படுவது அல்லது திரித்துக்கூறப்படுவது ஆகியவற்றிலிருந்து பாதுகாக்க தேவன் வல்லமையுள்ளவரா? ஆம்.அவர் வல்லமையுள்ளவராகவே இருக்கிறார்.தனது வார்த்தைகளை ஏதாவது மாற்றுவதற்கு தேவன் அனுமதிப்பாரா? நிச்சயமாக இல்லை.
7.அரபி மொழியில் உள்ள குரானும் கூட யூத,கிறிஸ்தவ வேதங்கள் உண்மை,னம்பத்தகுந்தவை என்று போதிக்கின்றன. சுர10:94 கூறுவது: (நபியே!) நாம் உம் மீது இறக்கியுள்ள இ(வ்வேதத்)தில் சந்தேகம் கொள்வீராயின், உமக்கு முன்னர் உள்ள வேதத்தை ஓதுகிறார்களே அவர்களிடம்(கிறிஸ்தவர்களிடம்,யூதர்களிடம்) கேட்டுப் பார்ப்பீராக¢ நிச்சயமாக உம் இறைவனிடமிருந்து உமக்குச் சத்திய (வேத)ம் வந்துள்ளது - எனவே சந்தேகம் கொள்பவர்களில் நீரும் ஒருவராகி விட வேண்டாம்.மனுக்குலத்துக்கு கடவுள் அளித்த எல்லா வேதங்களையும் குறித்து குரான் கூறும் போது, சுரா10:64:அல்லாஹ்வின் வாக்கு(றுதி)களில் எவ்வித மாற்றமுமில்லை - இதுவே மகத்தான பெரும் வெற்றி ஆகும்.
நான் மேற்கண்ட இந்த வசனங்களை என் முஸ்லீம் நண்பரிடம் காட்டி, அல்லாவினால் கொடுக்கப்பட்ட பழைய ஏற்பாடு(தவ்றாத்)மற்றும் புதிய ஏற்பாடு(இஞில்) ஆகியவற்றில் உள்ளவார்த்தைகள் அல்லாவின் வார்த்தைகளா என்று கேட்டேன். அவர் அல்லாவினால் கொடுக்கப்பட்ட வார்த்தைகள் தான் என்று ஒப்புக் கொண்டு,ஆனால் பிபுஅவை மாற்றப் பட்டுவிட்டன என்றார். பின்பு நான் அவரிடம் அப்படியானால் குரான் பிழையானது,அதில் தவறு உள்ளது என்பதைக் குறிக்கிறது என்றேன். ஏனெனில் குரான் அல்லாவின் வார்த்தைகள் ஒருபோதும் மாற்றப்படமுடியாது என்று கூறுகிறது. பழைய,புதிய ஏற்பாட்டில் உள்ளவை மாற்றப்பட்டிருக்குமானால் குரான் பிழையானதாகிவிடும்.குரான் பிழையற்றது எனில் பைபிளும் மற்றப்பட முடியாது. "எது சரி? பைபிள் மாற்றப்பட்டதா? அல்லது குரான் பிழையானதா>என்று நான் அல்டனிடம்கேட்டேன்.இந்தக் கேள்விக்கு எப்படி பதிலளிப்பது எனா அவருக்கு தெரிய வில்லை.
பைபிள் மாற்றப்பட்டு விட்டது என்று சொல்லுகிறவர்கள் பைபிளை தவறாகவிளக்குகிறார்கள் அல்லது மூல எழுத்துகளாகிய எபிரேய கிரேக்க வார்த்தைகளை அவர்கள் பயன்படுத்துவதில்லை. அவர்கள் மொழிபெயர்ப்புகளில் உள்ள பிழைகளையே காண்கிறார்கள். நான் அரபிமொழியிலுள்ள குரானை பயன் படுத்துகிறேன்.
3.நாம் நமது பாவங்களுக்கான மன்னிப்பைஅறிந்து அதைபெற்றனுபவிக்க முடியும்.
பைபிள் சொல்லவரும் கருத்து மிகவும் தெளிவாக உள்ளது. அது தேவன் நம்மை நேசிக்கிறார், நமக்கு ஒரு புது வாழ்வைஅவர் அளிக்கவிரும்புகிறாரென்பதே. நாம் நம் தண்டனைக்கு தப்பும்படிஅவர் வைத்துள்ள திட்டத்தை நாம் ஏற்றுக்கொள்வோமாகில் அவர் நம் பாவங்களை மன்னித்து சமாதானத்தினாலும் மகிழ்ச்சியினாலும் நம் வாழ்வை நிரப்ப அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.னாம் இன்று உலகில் காண்பவை தேவனுடைய திட்டமல்ல. நாம் போர்,பசி,குற்றம்,வெறுப்பு,கொலைபோன்ற காரியங்களைக் காண்கிறோம்.இந்த எல்லா தீஸ்செயல்களும் மனுக்குலம் தேவனுக்கு விரோதமாக வாழ்வதினாலேயே உண்டாகின்றன.அவர்கள் தேவனுடைய பரிபூரன திட்டத்தை தள்ளிவிட்டு தங்களுக்காகவே வாழ்வதைதெரிந்துகொண்டனர்.ஒவ்வொருவனும் தனகாகவே வாழும் போது அவன் தானாகவே ட்ய்கங்களுக்காக வாழ்கிற மற்றவர்களிடம் முரண்படுகிறான். அதன் விளைவைத்தான் நாம் காண்கிறோம். தனிப்பட்ட -நிலையில், தேவனுக்கு விறோதமான மனிதனின் முரட்டாட்டத்தின் விளைவுகளான வெறுப்பு,கோபம்,பொறாமை போன்றவைகளை நாம் காண்கிறோம். தனிமை,குழப்பம்,கலக்கம், குடிவெறி, கிலேசம் ஆகியவற்றையும் நாமெல்லாரும் வாக்கையில் சந்திக்கிறோம். இவை எல்லாவற்றையும் மாற்றுவதுதான் தேவனுடைய திட்டமாகும். அவர் தனது சமாதானம், அன்பு, சந்தோசம்,பொறுமை ஆகியவற்றை நமக்கு தரவிரும்புகிறார். ஆகவேதான் அவரியேசுவை உலகிற்குஅனுப்பினார். நம் பாவங்களுக்கான கிரயத்தை செலுத்தவும், நமக்கு ஒரு புதியவாழ்வை தருவதற்காகவும் இயேசு சிலுவையில் மரித்தார்.இப்படியாகத்தான் நாம் தேவனுடைய பாவமன்னிப்பையும் ஏற்றுக் கொள்ளுதலையும் நாம் நம் வாழ்வில் அறிந்து அனுபவிக்கமுடியும்.
எனக்கு ஏன் ஒரு இரட்சகர் ட்Hஏவை? என்று சிலர் கேட்கின்றனர். நாமெல்லாரும் பாவிகளாயிருக்கிறபடியால் நமக்கு ஒரு இரட்சகர் தேவை. உயிர்வாழ்கிற ஒவ்வொருவரும் சமயங்களில் தவறிழைத்துவிடுகிறோம். பைபிள்மிகவும்தெளிவாகக் கூறுகிறது: எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மை செய்கிறவனில்லை, ஒருவனாகிலும் இல்லை(சங்.53:3) நம்முடைய பாவங்களினிமித்தம் நாம் தேவனுக்கு முன்பாக குற்றவாளிகளாக இருக்கிறோம். நாம் செய்த தீமைகளுக்காக அவர் நம்மை தண்ண்டிப்பார். பைபிள் கூறுவது:பாவஞ்செய்கிற ஆத்துமாவே சாகும்.... துன்மார்க்கனுடைய துன்மார்க்கமும் அவன்மேல்தான் இருக்கும்(எசே.18:20). நாம் நம் பாவங்களிலிருந்து இரட்சிக்கப்படுவதற்கு ஒரே வழி இயேசுவே. ஏன் இயேசுதான் அந்த ஒரே வழி? ஏனெனில் இயேசு ஒருவரே பாவமில்லாதவர்.ஆகவே அவர் ஒருவரேனம்மை நம்பாவங்களிலிருந்து இரட்சிக்கக் கூடியவர்.ஏன் இயேசுதான் அந்த ஒரே வழி? ஏனெனில் அவர் ஒருவரே நம் பாவங்களுக்காக மரித்தார்.ஆகவே அவரொருவரேனம்மைஇரட்சிக்க முடியும்.ஏன் இயேசுதான் அந்த ஒரே வழி?ஏனெஇல் இயேசு ஒருவரே உயிர்த்தெழுந்து தானே உலக இரட்சகரென்பதை நிரூபித்தார்.பைபிள் நமக்கு நம்பிக்கையை தருகிறது. இயேசுவின் மீதுள்ள எளிய விசுவாசத்தினாலும்,அவர் நம் பாவங்களுக்காக சிலுவையில் மரித்தார் என்று நம்புவதினாலும் நாம் தேவனுடைய மன்னிப்பையும் இரக்கத்தையுமறிந்து நித்திய ஜீவனை அளிக்கிற இரட்சிப்பை பெற்றனுபவிக்க முடியும். பைபிள்தெளிவாகக்கூறுகிறது:உங்கள் முன்னோர்களால் பாரம்பரியமாய் நீங்கள் அநுசரித்து வந்த வீணான நடத்தையினின்று அழிவுள்ள வஸ்துக்களாகிய வெள்ளியினாலும் பொன்னினாலும் மீட்கப்படாமல்,குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற இரத்தத்தினாலே மீட்கப்பட்டீர்களென்று அறிந்திருக்கிறீர்களே(1பேதுரு1:18,19).
மற்ற அனைவரும், தேவனால் அனுப்பப்பட்ட ஒவ்வொரு தீர்க்கதரிசியும் கூட தேவனுடன் ஒப்புரவாக்கப்படல் அவசியமான இரட்சகர் தேவையான பாவிகளே.முதல் மனிதன் ஆதாம் பாவம் செய்தான். ஆபிரகாம்,மோசே, தாவீது ஆகிய எல்லாரும் தேவனுக்கு விரோதமாக பாவம்செய்தார்கள். குரான் கூறுகிறபடி,முகமது நபியும் கூட மன்னித்தல் தேவையான ஒரு பாஅவிதான்(சுரா47:19,48:1- 2 பார்க்கவும்).இயேசு ஒருவரே நம் இரட்சகராக இருக்க முடியும்.ஏனெனில் அவர் ஒருவரே பாவமில்லாதவர். தேவன் நம்மை மிகவும் நேசித்த படியால் அவர் இயேசுகிறிஸ்துவை நம்மை இரட்சிக்க உலகிற்கு அனுப்பினார் என்று பைபிள் நமக்கு போதிக்கிறது.பைபிள் கூறுகிறதாவது:தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார். உலகத்தை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்(யோவான்3:16- 17).
இஸ்லாம் மன்னிப்பை அருளுவதில்லை. முகமது நம் பாவங்களுக்காக மரிக்க வில்லை. நாம் நித்திய ஜீவனை உடையவர்களாய் பரலோகத்திற்குசெல்லப் போகிறோம் என்பதை நம் அறிந்து கொள்ளமுடியும் என்று குரான் போதிக்கவில்லை. இஸ்லாம் மார்க்கம் நம் இரட்சிப்பிற்கான உறுதியை நமக்கு தர வில்லை.இயேசுவின் மீதுள்ள விசுவாசம் மாத்திரமே அதைச் செய்ய முடியும்.
இந்த கட்டுரை எவரையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்படவில்லை. இஸ்லாமிற்கும் கிறிஸ்தவத்திற்கும் உள்ள வித்தியாசத்த எடுத்துக் காட்டும் நோக்கிலதான் எழுதப்பட்டிருக்கிறது. மேலும் எந்தெந்த பகுதிகளில் முஸ்லீம்கள் கிறிஸ்தவத்தைக் கூறித்து தவறான கருத்துடையவர்களாக ர்ருக்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டவும் இது எழுதப்பட்டது. நாம் கிறிஸ்தவத்தை வேண்டாம் என்று தள்ளிவிடுவதற்கு முன்பாக கிறிஸ்தவமென்றால் என்ன என்பதை புரிந்து கொள்ளவேண்டும். இல்ல்லையெனில், நாம் ஒரு பொய்யை நம்பி, கடவுள் எல்லாருக்கும்வைத்திருக்கும்மிகப்பெரும் ஆசீற்வாதத்தை நாம் இழந்து போய்விடுவோம்.அந்த ஆசீர்வாதம் பாவங்கள் மன்னிக்கப்பட்டு நித்திய ஜீவனை பெற்றுக் கொள்வதே!