இந்த சமுதாயத்தின் முதலைக் கண்ணீரும்,ஜெய்பூரில் சிதறிய உயிகளும்
இந்த பழைய ஜோக் இந்த நேரத்தில் நினைவு வருகிறது.
துயர நேரத்தில் இந்த ஜோக்கா! மும்பை தொடர் குண்டுவெடிப்புக்கு பல ஆண்டுகளுக்குப் பின்னால் இந்தியாவில் இப்படி ஒரு பேரிழப்புடன் ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு. அதில் சிதறிய மனித உடல் காட்சிகளும், எழுந்த ஓலங்களும் நம் நெஞ்சத்தில் நெருப்பாய் சுடுகின்றன.
இந்த அவலம் ஏன் தொடர்கிறது? இந்த அராஜகம் ஏன் நடக்கிறது? இதற்கு தீர்வுதான் என்ன என்று ஒவ்வொரு இந்தியனும் கேள்வி எழுப்புகிறான். ஒவ்வொரு இந்தியனும் தன்னையும் எல்லோரையும் கேட்கும் கேள்வி இதுதான்.
ஆனால், இந்த குண்டுவெடிப்பிற்கான நம் சகோதர முஸ்லிம்களின் எதிர்வினையைப் பார்க்கும்போது ஆத்திரமாய் இருக்கிறது. இவர்களின் பசப்பலிலும், பாசாங்கிலும் இவர்களின் உண்மை மனநிலை வெளிப்படுகிறது.
இவர்கள் என்ன செய்ய வேண்டும்? தொடரும் இந்த குண்டுவெடிப்புகள், இஸ்லாத்தின் பேரால் நடக்கும் தீவிரவாத செயல்கள், மானாவாரியாக மடியும் மனித உயிர்கள் இவற்றின் அடிப்படை காரணிகளை ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை பரிந்துரைந்திருக்க வேண்டாமா? ஆனால், இதை எதிர்பார்த்தால் நமக்கு பெருத்த ஏமாற்றமே கிடைக்கிறது.
இஸ்லாமிய சமுதாயத்தின் மிகப்பெரும் இழுக்காக மாறிக்கொண்டிருக்கும் இந்த ஜிகாதி சக்திகளை முறியடிக்கும் ஒரு சமுதாய ஆர்வமும், அறைகூவலும், சுய-பரிசோதனையும் நான் இஸ்லாமிய சமுதாயத்திடம் அறவே காணவில்லை.
மாறாக, இந்திய இஸ்லாமியர்கள் இந்த ஈன நிலையை இல்லை என்று மறுக்கப் பார்க்கிறார்கள்.
இந்தியர்கள் எக்கேடு கெட்டாலும் போதும், நாம் இதில் மாட்டாமல் இருக்க வேண்டும் என்பதே இவர்களின் தலையாய கவலையாய் தெரிகிறது. இஸ்லாமியர்கள் என்ற பேருக்கு களங்கம் வரக்கூடாதே என்றுதான் இவர்களின் முழு முயற்சியாகவும் இருக்கிறது.
அதனால், தொடரும் குண்டு வெடிப்புகள் அனைத்திலும் தவராமல் தென்படும் இஸ்லாமிய ஜிகாதி அமைப்புகளின் தொடர்புகள் என்னும் முழு பூசணியை கவளம் சோத்தில் மறைக்க பெரும்பாடு படுகிறார்கள்.
இந்த முயற்சிகள் குண்டுவெடிப்புக்கு உடனேயே ஆரம்பித்தன. குண்டுவெடிப்பு துயர சம்பவம் நிகழ்ந்ததும் ராஜஸ்தான் இஸ்லாமிய போரம் "இறந்தவர்களில் முஸ்லிம்களும் உண்டு" என்று அறிக்கை வெளியிட்டு சதவீத கணக்கு போட்டார்கள்.
எதில்தான் இட ஒதுக்கீடு கணக்கு போடுவது என்று ஒரு மனசாட்சி வேண்டாமா?
பொது இடங்களில் நடக்கும் தீவிரவாத செயல்களில் எல்லா இனங்களும் பாகுபாடின்றி இந்தியர்கள் என்ற முறையில் பாதிக்கப்படுகிறார்கள். இதில் இஸ்லாமிய சதவீதத்தை தலைப்பு செய்தியாக இவர்கள் பிரகடன படுத்துவதன் உள்நோக்கம் இந்த தீவிரவாத சக்திகள் இஸ்லாமியர்களுக்கு கூட எதிரானவை என்று சாதிக்க முயலுவதுதான்.
ஆனால், உண்மையில் இந்த ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு திட்டத்தில் முஸ்லிம்கள் பெருவாரியாக பழகும் இடங்கள் தவிர்க்கப்பட்டுள்ளதாகவே துப்பறியும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாறாக பொது இடங்களில் கணிசமான வியாபார அமைப்புகள் இஸ்லாமியர்கள் கையில் இருக்கின்றன. புகழ்பெற்ற சுற்றுலா தலமான ஹவா மகல் இடத்தில் 50% கடைகள் இஸ்லாமியர்களுடையவை. ஜொகான் பஜாரில் 35% வியாபார தளங்கள் இஸ்லாமியர்களுடையவை. இப்படி இருக்கும்போது இஸ்லாமியர்களும் இந்த குண்டுவெடிப்பில் மடிவதில் என்ன வியப்பு இருக்க முடியும்? இப்படி இஸ்லாமியர்களை பாதிக்கப்பட்டவர்களாக சித்தரிக்கப்படுவதன் முக்கிய நோக்கம் இந்த குண்டுவெடிப்புக்கு அந்த சமுதாயத்தின் பொறுப்பை கை கழுவுவதைத் தவிர வேறு எதுவாக இருக்க முடியும்?
இந்த குண்டுவெடிப்பின் நோக்கமாக இந்திய முஜாஹிதின் அமைப்பு விடுத்திருக்கும் செய்திகள் இந்த குண்டுவெடிப்பின் நோக்கமே ஒரு இஸ்லாமிய ஜிகாத் என்பது தெளிவாகிறது.
இந்த குண்டுவெடிப்பின் நோக்கம் "இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் இந்தியாவில் காப்பது" என்று அந்த ஜிகாதி அமைப்பு பிரகணப்படுத்தி உள்ளது. அந்த அமைப்பு குறிப்பிடும் பிரச்சனைகளும் (குஜராத் முதலியன) இந்திய சார்புள்ளவை. இதனால், இந்த குண்டு வெடிப்பில் இந்திய இஸ்லாமிய சமுதாயத்தினர் சிலர் பங்கு இருக்கலாம் என்று விசாரிக்கப்படும் என்பது எல்லோருக்கும் தெரிகிறது.
இதனால் இஸ்லாமியர்கள் அவமானப்படுகிறார்கள். குர்ஆன் பெயரைச்சொல்லி நடந்த குண்டுவெடிப்பால் இவர்கள் அவமானப்படவில்லை. (அந்த ஜிகாதி அமைப்பு தங்கள் நடவடிக்கைக்கு குர்ஆன், ஹதீத், முகம்மது நபி அவர்களின் ஆதாரங்களைக் குறித்துள்ளது) ஆனால், விசாரணைக்காக சில இஸ்லாமியர்களை அணுகினால் அது இவர்களுக்கு அவமானமாக இருக்கிறதாம்
இது குறித்து இஸ்லாமியர்கள் அவமானப்பட்டு அதை உண்மையில் தவிர்க்க வேண்டுமானால் அவர்கள் தங்கள் சமுதாய கட்டமைப்புகளில் ஊடுருவிய இந்த ஜிகாதி சக்திகளை எப்படி அடையாளம் கண்டு வேரறுப்பது என்பது குறித்து ஆலோசிக்கவேண்டும். இந்த ஜிகாதி சக்திகளுக்கு மறைமுகமாக ஆதரவு கொடுக்கும் பெரும்பான்மை இஸ்லாமிய சமுதாயத்தை எப்படி மேம்படுத்துவது என்று ஆலோசிக்க வேண்டும். ஆனால், வருத்தம்படும் விதமாக, இது குறித்து இஸ்லாமியர்களின் ஒரு கட்டுரை, பேச்சு, பரிந்துரை என்று எதையும் நாம் காணவில்லை.
மாறாக, எல்லா குண்டுவெடிப்புகளிலும் எடுத்த அதே வழிமுறையாக, இந்த முறையும் இஸ்லாமியர்கள், குண்டுவெடிப்புக்கு உடனே, "விசாரணையில் இஸ்லாமிய சமுதாயத்தை இழுக்க கூடாது" என்று எதிர்ப்பு தெரிவித்து கூச்சல் போட ஆரம்பித்துவிட்டார்கள்.
இதனால் தடை இல்லாத விசாரணை நடம்பெறாமல் போனாலோ, விசாரணை தடம் திரும்பினாலோ, உண்மையான தீவிரவாதிகள் தப்பினாலோ அதனால் இவர்களுக்கு சிறிதும் கவலை இல்லை!
ஜமாத்-ஏ-இஸ்லாமி-ஹிந்த் (JIH) கைதான முஸ்லிம் இளைஞர்கள் அப்பாவிகள் என்று இப்போதே தீர்ப்பு சொல்லி விட்டது. அதற்கான ஆதாரம் அவர்கள் இஸ்லாமியர்கள் என்பது மட்டும்தான்! இஸ்லாமியர் என்ற ஒரே காரணத்துக்காக அவர்கள் அப்பாவிகள், தொடமுடியாதவர்கள் என்பது இவர்கள் வாதம்.
இதற்கு முந்தைய பல தீவிரவாத குண்டுவெடிப்பு சம்பவங்களிலும் இஸ்லாமிய அமைப்புகள் கோரசாக அய்யோ, முஸ்லிம்களை விசாரிக்கிறார்களே என்று கூச்சல் போட்டார்கள். பிரதமர் மன்மோகன்சிங் கிடம் முறையிட்டார்கள். மலேகான் முதலான குண்டுவெடிப்புகளில் மனித உரிமை அமைப்புகள் வாயிலாகவும் பல தடைகளை ஏற்படுத்தினார்கள். ஊடகங்களிலும் தடங்கல் இல்லாத விசாரணைக்கு தங்களின் எதிர்ப்பை இடை விடாமல் சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.
இதைத்தான் நான் முதலில் சொன்ன கதையோடு ஒப்பிடுகிறேன். மாமியார் செத்தாலும் பட்டுப்புடவை கெடாமல் இருந்தால் சரி என்கிற மருமகள் போல, எத்தனை இந்தியர்கள் மடிந்தாலும் என் பேர் மட்டும் மாட்டாமல் இருந்தால் சரி என்ற ஒரு தேச விரோத, ஏன் மனித விரோத, அணுகுமுறை இந்திய இஸ்லாமியர்களிடம் இருக்கிறது.
இதோடு நம் இந்திய இஸ்லாமியர்கள் நின்ற பாடில்லை!
இதற்கு ஒரு படி மேலே போய் இந்த குண்டு வெடிப்புக்கு காரணங்களையும், காரணமானவர்களையும் அவர்கள் தங்கள் கற்பனையில் கண்டுபிடித்து அறிவித்து விட்டார்கள்.
இவ்வளவு சுலபமாக இவர்கள் இந்த வழக்கை தீர்த்து விட்டது குறித்து மகிழ்ச்சி அடையாதீர்கள். ஏனென்றால், எல்லா இஸ்லாமிய தீவிரவாதத்திற்கும் இதே தீர்ப்புதான் இவர்களிடத்தில்.
அகில இந்திய இஸ்லாமிய தனிச்சட்ட அமைப்பின் தலைவர் இல்யாஸ் இந்த குண்டுவெடிப்பு அகில உலக சதி என்று தீர்ப்பு சொல்லி விட்டார். அவர் "உலகளாவிய இஸ்லாமிய விரோத சக்திகள் முஸ்லிம்களின் பேரைக்கெடுக்க இந்துத் தீவிரவாதிகளுடன் சேர்ந்து இந்த குண்டுவெடிப்பு செய்தார்கள்" என்கிறார்.
"It seems some international agencies hell-bent on tarnishing the image of Islam and Muslims are conniving with Hindu extremist groups to carry out such attacks so that the entire community could be put in the dock."
"இஸ்லாமிய தீவிரவாதம்" என்கிற வரிகளை சொல்லக்கூடாது, பேசக்கூடாது என்று தீவிரமாக எதிர்க்கும் இந்த இஸ்லாமியர்கள் அதே சமயம் "இந்து தீவிரவாதம்" என்ற வரிகளை கூசாமல் பேசுவதும், எழுதுவதும் எப்படிப்பட்ட இரட்டை வேடம் என்பது ஒரு புறம் இருக்கட்டும்.
விசாரணையைத் திசை திருப்பும் முயற்சிகளில் இதைவிட அபத்தமான ஒரு வழியை நான் அறிந்ததில்லை!
உலகெங்கிலும் நடக்கும் இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு அந்தெந்த ஊருக்கு ஏற்றாற்போல அமெரிக்கா, இஸ்ரயில் என்று காரணம் சொல்லி இந்த பிரச்சனையை பைசல் செய்துவிடும் இஸ்லாமிய அமைப்புகள், இந்தியாவில் தீவிரவாதத்துக்கு அம்மாதிரி காரணிகள் ஏதும் இல்லாததால் இந்து-தீவிரவாதிகள் இதைச்செய்து இவர்கள் பெயரைக் கெடுக்கிறார்கள் என்கிறார்கள்.
மாறாக, இந்த குண்டுவெடிப்புக்கு காரணம் ஏற்ற இந்திய முஜாஹிதின் அமைப்பு விடுத்த அறிக்கையே இவர்களின் திசை திருப்பலை பொய் என்று தெளிவாக்குகிறது. முஜாஹிதின் விடுத்த ஈ-மெயில் செய்தி இந்த குண்டுவெடிப்புக்கான காரணத்தை தெளிவாக சொல்கிறது. குர்ஆனின் வரிகளை ஆதாரமாக்கி இவர்கள் இந்த குண்டுவெடிப்பை நடத்தி இருப்பது வெளிப்படை.
இஸ்லாமிய தீவிரவாதம் இல்லை என்று சொல்லும் மற்ற திம்மி முஸ்லிம்களை இந்த ஜிகாதி அமைப்பே நாய்கள் என்று இழிவுபடுத்துகிறது.
இதனால், இந்த தீவிரவாதத்தின் அடிப்படை ஊற்று எங்கு இருக்கிறது என்று தெளிவாகிறது.
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக நம் தமிழ்நாட்டில் தமுமுக ஏமாற்று அறிக்கையே வெளியிட்டிருக்கிறது.
இந்த குண்டுவெடிப்பின் எதிரொலியாக தமுமுக விடுத்த அறிக்கையில் இந்த தீவிரவாதிகளை தூக்கில் போடவேண்டும் என்று பரிந்துரைத்திருக்கிறார்கள்.
அடாடா, என்ன நியாயமான குமுறல் என்று ஒரு கணம் மகிழ்ந்து விடாதீர்கள். இதே தமுமுக தான் முகம்மது அப்ஸலின் தூக்குதண்டனையை ரத்து செய்ய தீவிரமாக போராடியது. இந்தியாவில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் அப்ஸலின் தூக்கு தண்டனையை எதிர்த்தன.
சுப்ரீம் கோர்ட்டால் "சமுதாயத்திற்கு களங்கம் மற்றும் அச்சுறுத்தல்" என்று அறிவிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட ஒரு தீவிரவாதியின் தூக்கு தண்டனையை அவன் இஸ்லாமியன் என்ற ஒரே காரணத்திற்காக எதிர்த்து விட்டு (அதன் பின்னர் வந்த மற்ற தூக்கு தண்டனைகளை நிறுத்த இவர்கள் போராடவில்லை!), இப்போது இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் இந்தியர்களின் உள்ளம் பதறிக்கொண்டிருக்கும்போது "தூக்கில் போடு" என்று அறிக்கை விடுவது கடைந்தெடுத்த இரட்டை வேடம்.
முதலில் ஒடும் திருடன் பின்னால் தன்னை பிடிக்க துரத்துவர்களிடமிருந்து தப்பிக்க "திருடன் பிடி பிடி" என்று கத்திக்கொண்டு ஓடுவான் இல்லையா அதுதான் இவர்களின் அறிக்கை.
அப்படி தீவிரவாதத்தை கண்டிப்பதாக அறிக்கை விடும் இந்திய இஸ்லாமிய அமைப்புகள் எல்லாம் அதே அறிக்கைகளில் தீவிரவாதத்துக்கு நியாயம் கற்பிக்கும் வரிகளை தவறாமல் சேர்ப்பது வழக்கம். இதனால் இந்த அறிக்கைகள் தீவிரவாதத்திற்கு சப்பைகட்டாகவே முடியும்.
அதுபோலவே, தமுமுகவும் இதுவரை நடந்த குண்டுவெடிப்பில் கைதானவர்கள் அப்பாவிகள் என்றும் அவர்களை விடுதலை செய்து உண்மையான குற்றவாளிகளை கைது செய்திருந்தால் இப்படி குண்டுகள் வெடிக்காது என்றும் கண்டுபிடித்து அந்த அறிக்கையில் சொல்லியிருக்கிறது. அதாவது, 'இந்து தீவிரவாதிகளை' கண்டுபிடித்து தூக்கில் போட வேண்டும். அப்போது குண்டுவெடிக்காது. அப்படியே வெடித்தாலும், மீதமுள்ள இந்துக்களையும் தூக்கில் போடவேண்டும். அதாவது, இந்தியாவில் இந்துக்கள் இருக்கும்வரை குண்டுவெடிக்கும். இதுதான் இவர்கள் சொல்ல வருவது.
இந்த ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பின் காரணம் வெளிப்படை. அதை அந்த குண்டுவெடித்த அமைப்பே தெளிவுபடுத்தியிருக்கிறது. ஆனால், இந்த உண்மையை உணர மறுத்து முக்காடு போட்டு கண்ணை மூடி முதலைக்கண்ணீர் விடும் நம் இஸ்லாமிய சகோதரர்கள் திருந்தினால் தீவிரவாதம் மடியும், இஸ்லாமிய சமுதாயம் தழைக்கும். மாறாக, உண்மையை உணர மறுத்தால் தீவிரவாதம் மடியும் மற்றும் இஸ்லாமிய சமுதாயமும் தனிமைப்படுத்தப்பட்டு மடியும்.