இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Wednesday, July 28, 2010

Fwd: இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!.

 
இரத்ததானம் செய்த முஸ்லிம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாமே!...


முன்னுரை:  முஹம்மதுவை அவமதித்ததற்காக ஒரு பேராசியரின் கைகளை இஸ்லாமியர்களில் சிலர் வெட்டினார்கள். அதைப் பற்றிய ஒரு சிறு கட்டுரையை கீழே முதல் கட்டுரையாக படிக்கவும், அதற்கு வந்த பின்னூட்டத்திற்கான பதிலை இரண்டாம் கட்டுரையாக படிக்கவும்.

1) முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)
கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்

2) வன்முறைக்கு வக்காளத்து வாங்கும் மிஸ்ட் அவர்கள்

வெட்டப்பட்ட ஜோசப் அவர்களுக்கு இன்னொரு இஸ்லாமிய குழு இரத்ததானம் செய்ததாக ஒரு செய்தியை தினமலரில் படித்தேன்.  மக்கள் மனதில் இப்போது தான் குழப்பம் ஆரம்பமாகிறது. அதாவது குழந்தையை கிள்ளியும் விட்டுவிட்டு, அழுதுக்கொண்டு இருக்கும் குழந்தையை தாலாட்டவும் வந்துவிட்டார்கள் என்றுச் சொல்லும் சொற்றொடருக்கு ஏற்ப ஒரு நாடகம் நடந்தேறியுள்ளது.

முதலில் தினமலர் செய்தியை படிக்கவும்:

கண்டனம்: இதற்கிடையில், அகில இந்திய அளவில் பல்வேறு முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஒன்று சேர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இச்சம்பவம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அறிக்கை விவரமாவது:சம்பந்தப்பட்ட பேராசிரியர் விஷயத்தில் சட்டம் தன் கடமையைச் செய்ய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல், இஸ்லாம் மதத்தின் அடிப்படை தத்துவமான மன்னிப்பு வழங்கும் மாண்பிற்கு எதிரானது.தகுதியான அதிகாரிகள் இருக்கும் போது ஒருவர் சட்டத்தைக் கையில் எடுப்பதை இஸ்லாம் கடுமையாக எதிர்க்கிறது. அவருக்கு ரத்தம் வழங்கிய ஜமாத் -இ- இஸ்லாமி இந்த் அமைப்பின் இளைஞர் பிரிவையும் பிற தொண்டர்களையும் பாராட்டுகிறோம்.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.




இரத்ததானம் செய்த இஸ்லாமியர்களுக்கு மனமார்ந்த என் நன்றிகள் உரித்தாகுக.

அனேக தானங்களில் இரத்ததானம் மிகவும் சிறந்தது, அதாவது தங்கள் உடலில் உயிராக ஓடிக்கொண்டு இருக்கும் இரத்தத்தை கொடுப்பது என்பது மிகவும் போற்றுவதற்குரியது. ஆகையால், இரத்த தானம் செய்து காயப்பட்ட ஜோசப்பிற்கு உதவிய இஸ்லாமியர்களை பாராட்டாமல் இருக்கமுடியாது.


இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விவரங்கள் அனேகம் உள்ளன. அதாவது, 

1) தங்கள் உயிரினும் மேலாக மதிக்கும் முஹம்மதுவை அவமதித்த ஒருவருக்கு, இஸ்லாமியர்கள் இரத்ததானம் செய்து இருப்பது ஒரு நல்ல விஷயம் தான்.  (ஆம, இதை நான் சிந்துப்பார்க்கவே இல்லையே என்று சிலர் இப்போது தலையை சொறிந்துக்கொள்வார்கள்)


2) இப்படி தங்கள் மார்க்கத்தலைவரை தாக்கி எழுதியவருக்கே இரத்ததானம் செய்தவர்களாகிய இவர்களைக் கண்டு இஸ்லாம் எப்படிப்பட்டது (அன்பான மார்க்கம்) என்று முடிவு எடுக்கலாமா? அல்லது சட்டத்தின் படி தண்டனை பெற விட்டுவைக்காமல் கைகளை வெட்டிய அந்த இஸ்லாமியர்களைக் கண்டு இஸ்லாம் இப்படிப்பட்டது (அடாவடி மார்க்கம்) என்று முடிவு எடுக்கலாமா?

இந்த முடிவை எடுப்பதற்கு முன்பாக, இஸ்லாமை தோற்றுவித்தவரும், இஸ்லாமின் ஆணிவேராக இருப்பவரும், இஸ்லாமியர்கள் வழிகாட்டியாக இருப்பவருமான முஹம்மதுவைக் கொண்டு இஸ்லாம் எப்படிப்பட்டது என்று தீர்மானித்தால், அது மிகச்சரியாக இருக்கும். இது இஸ்லாமுக்கு மட்டுமல்ல, எல்லா மார்க்கத்திற்கும் பொருந்தும், அதாவது தோற்றுவித்தவர் எவ்வழியோ தொடர்பவர்களும் அவ்வழியே (சிலர் வேறு மாதிரியாக நடந்துக்கொண்டாலும் சரி).

இஸ்லாமியரல்லாதவர்களை எப்படி நடத்த வேண்டும்: முஹம்மதுவின் வழிகாட்டல்: ஒரே ஒரு உதாரணம்

இஸ்லாமியர்கள் இஸ்லாமியரல்லாதவர்களிடம் எப்படி நடந்துக்கொள்ளவேண்டும் என்று அனேக விவரங்களைச் சொல்லியுள்ளார், அவைகளில் ஒரு உதாரணத்தை பார்ப்போம்.

குர்‍ஆனுக்கு அடுத்தபடியாக இஸ்லாமியர்கள் மதிக்கும் ஹதீஸ்களிலிருந்து, முஹம்மது சொன்ன ஒரு கட்டளை அல்லது அறிவுரை: அதாவது யூதர்கள் கிறிஸ்தவர்களை வழியில் கண்டால், அவர்கள் நெருக்கமான வழியில் செல்லும்படி செய்யுங்கள், அல்லது கட்டாயப்படுத்துங்கள் என்று முஹம்மது இஸ்லாமியர்களுக்கு கட்டளையிடுகிறார். அவர் எதைச் சொல்வாரோ அதை ஒரு மயிரிழையும் பிசகாமல் இஸ்லாமியர்கள் பின்பற்றுவார்கள், இதற்கு சந்தேகமே இல்லை.

ஒரே வழியில் செல்பவர்கள் அவரவர் வழியில் செல்ல விட்டுவிடவேண்டியது தானே! முஹம்மது அவர்களே... ஏன் இப்படி மக்களின் மனதிலே வெறுப்புணர்ச்சியை ஊட்டுகிறீர்கள்?

சஹீ முஸ்லிம் ஹதீஸ்: புத்தகம் 26: எண் 5389

அல்லாஹ்வின் தூதர் (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) கூறியதாக அபூ ஹுரைரா அறிவித்ததாவது: "யூதர்களும் கிறிஸ்தவர்களும் உங்களுக்கு முதலாவது வணக்கத்தைக் (சலாம்)  கூறும்வரையிலும் அவர்களுக்கு நீங்கள் வணக்கம் (சலாம்)  கூறாதீர்கள். அவர்களில் ஒருவரை நீங்கள் வழியில் சந்திக்கும்போது,  சாலையின் இடுக்கமான வழியில் அவர்கள் செல்லும்படி செய்யுங்கள்.


Muslim :: Book 26 : Hadith 5389
 
Abu Huraira reported Allah's Messenger (may peace be upon him) as saying: Do not greet the Jews and the Christians before they greet you and when you meet any one of them on the roads force him to go to the narrowest part of it.

இப்போது சில விவரங்களை அலசுவோம் வாருங்கள்.

இரத்த தானம் செய்த முஸ்லீம்கள் முஹம்மதுவை விட நல்லவர்களா?

மேலே படித்த முஹம்மதுவின் கட்டளையை படிக்கும்போது, சில விவரங்கள் தெளிவாக புரிகின்றது, அதாவது

1) இஸ்லாமியர்கள் மற்ற மதங்களை பின்பற்றுபவர்களிடம் கடுமையான நடந்துக்கொள்ளவேண்டும்.
2) அவர்களை இடுக்கமான வழியில் செல்லும்படி கட்டாயப்படுத்தவேண்டும்,
3) அந்த யூதர்கள், கிறிஸ்தவர்கள் வழியில் செல்லும் இஸ்லாமியர்களுக்கு எந்த கெடுதியும் செய்யவில்லையானாலும் சரி, அவர்களை இடுக்கமான வழியில் செல்லச் செய்யவேண்டும், அதாவது இஸ்லாமியர்களின் கை உயர்ந்து இருக்கிறது, மற்றவர்கள் எல்லாம் தாழ்ந்துத் தான் செல்லவேண்டும் என்று காட்டவேண்டும்.
4) முஸ்லீம்களின் மனதில் ஒரு வெறுப்புணர்ச்சியை தூண்டிவிட்டு, மற்ற மார்கத்தவர்களோடு ஒற்றுமையாக இருப்பதை போதிக்காமல், ஒற்றுமையை குலைக்கும் விதமாக நடந்துக்கொள்ளவேண்டும் என்று இஸ்லாமிய நபி கூறியுள்ளார்.

ஆனால், 

1) இன்று, தங்கள் நபி பற்றி அவதூறாக எழுதியவருக்கு இஸ்லாமியர்கள் இரத்ததானம் செய்துள்ளார்கள்.
2) இப்படி கைகளை வெட்டுவது தவறு என்று கண்டித்து அறிக்கையும் கொடுத்துள்ளார்கள்

நாம் என்ன முடிவு எடுக்கப்போகிறோம்?

இந்த இரத்ததானம் செய்த இஸ்லாமியர்கள் முஹம்மது சொன்னது போல செய்யாமல், முஹம்மதுவையே அவதூறாக பேசியவருக்கே இரத்ததானம் செய்து இருப்பதினால், இந்த இஸ்லாமியர்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாக இருக்கிறார்களே என்று எண்ணத்தோன்றுகின்றதல்லவா?

ஒரு வேளை முஹம்மது இப்போது இருந்திருந்தால், இந்த இரத்ததானம் செய்த இஸ்லாமியர்களிடம் என்ன சொல்லியிருப்பார். என்னை திட்டியவருக்கே நீங்கள் உதவி செய்ய சென்றுவிட்டீர்களோ? இரத்தம் கொடுக்க முன் வந்துவிட்டீர்களோ? நீங்கள் அல்லாஹ்வின் தூதருக்கு உதவி செய்யாமல், அவரின் எதிரிகளுக்கு உதவி செய்துவிட்டீர்களே என்று கூறியிருப்பார்.

இஸ்லாமியர்களுக்கு கேள்விகள்:

 நாம் இதுவரை மூன்று வகையான விவரங்களை (நபர்களைக்) கண்டோம்:

1)முஹம்ம்துவை அவமானப்படுத்தியதற்காக வன்முறையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள்

2)பாதிக்கப்பட்டவருக்கு மனமுவந்துச் சென்று இரத்த தானம் செய்த இஸ்லாமியர்கள்

3)மாற்று மதத்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே வெறுப்புணர்ச்சியை தூண்டிய முஹம்மது.


இப்போது இஸ்லாம் எப்படிப்பட்டது என்று யாரைக் கொண்டு தீர்மானித்தால் சரியாக இருக்கும்?


முஹம்மதுவைக் கொண்டா?  ------> இஸ்லாமை தோற்றுவித்தவர்

கைகளை வெட்டியவர்களைக் கொண்டா? ------> இன்று இஸ்லாமை தொடருகிறவர்கள்

இரத்த தானம் செய்த இஸ்லாமியர்களைக் கொண்டா? ------> இன்று இஸ்லாமை தொடருகிறவர்கள்


முஹம்மதுவைக் கொண்டே இஸ்லாம் எப்படிப்பட்டது என்று முடிவு எடுக்கவேண்டுமே ஒழிய, இரத்ததானம் செய்தவர்களைக் கொண்டு அல்ல.

அது எப்படி என்று கேட்பீர்களானால், முஹம்மது சொன்னது தவறு, அவருக்கு இஸ்லாம் பற்றி ஒன்றுமே தெரியாது, நாங்கள் செய்தது தான் சரியானது, அது தான் இஸ்லாம் என்று இரத்ததானம் கொடுத்தவர்கள் சொல்வார்களானால், இது எடுபடாது. அதாவது,முஹம்மதுவின் ஒவ்வொரு அசைவும் இஸ்லாம், ஒவ்வொரு வார்த்தையும் இஸ்லாம், ஒவ்வொரு மூச்சும் இஸ்லாம், முஹம்மதுவே இஸ்லாம்.

எந்த ஒரு முஸ்லிம், முஹம்மது சொன்னது தவறு என்றுச் சொல்வானோ அப்போதே அவன் இஸ்லாமிலிருந்து வெளியேறிவிட்டதாக அர்த்தம். அல்லாஹ்வையும்,அவரது தூதரையும் மதிக்காதவன் முஸ்லீமில்லை, இதை எல்லாரும் (இஸ்லாமியர்கள்) அங்கீகரிப்பார்கள்.

ஆக, இஸ்லாமியரல்லாதவர்கள், இரத்த தானம் கொடுத்தவர்கள் முஹம்மதுவை விட நல்லவர்களாக இருக்கிறார்களே என்றுச் சொல்வதைத் தவிர வேறு ஒன்றும் சொல்லமுடியாது. 

எப்போது நாம் இப்படிச் சொல்கிறோமோ, அப்போதே அவர்கள் இஸ்லாமிலிருந்து வெளியேறிவிட்டதாக பொருள்,முஹம்மதுவை விட நல்லவர்களாக முஸ்லீம்கள் ஆகிவிடுவார்களா? அய்யோ இது முடியாத காரியம், முஹம்மதுவை விட அவர் காட்டிய வழியை விட நல்லவழியை ஒரு இஸ்லாமியன் காட்டமுடியுமா, கற்பனைக் கூட செய்து பார்க்கமுடியாது.

அப்படியானால், கைகளை வெட்டியவர்கள் தான் இஸ்லாமை முழுவதுமாக முஹம்மது சொன்னது போல செய்தவர்களா என்று கேட்கிறீர்களா? இதில் என்ன சந்தேகம் உங்களுக்கு. 

எந்த ஒரு குற்றமும் இழைக்காதவனுக்கே வழியை கொடுக்காதே என்று வெறுப்புணர்ச்சியை தூண்டிவிடுகிறார் முஹம்மது, அப்படி இருக்கும்போது, அவதூறாக எழுதியவருக்கு என்ன கதி? அதைத் தான் கேரளாவின் இஸ்லாமியர்கள் சிலர் செய்து காட்டினார்கள்.  தலைவன் எவ்வழியோ... தொண்டன் அவ்வழி.

அப்படியானால், இரத்த தானம் செய்த இஸ்லாமியர்களின் செயல்.... வெறும் ஏமாற்று வேலை... ஒரு புறம் இஸ்லாமியர்கள் வெட்டிச் சாய்ப்பார்கள்...இன்னொரு புறம் இரத்ததானம் செய்வார்கள்...

கேரளாவின் கோரச் செயலை கண்டித்த இஸ்லாமியர்கள், முஹம்மதுவின் கோரச் செயல்களை கண்டிப்பார்களா?  அவரின் வாயிலிருந்து விழுந்த ஹதீஸ்களை கண்டித்து அறிக்கையிடுவார்களா? 

இதை தான் "தக்கியா" என்பார்கள், அதாவது பொய் சொல்லியாவது, ஏமாற்றியாவது இஸ்லாமுக்கு நல்ல பெயர் கொண்டு வர முயற்சிப்பது.  இது தான் நடந்தேறியுள்ளது.

முடிவுரை:
இந்த நாடகத்தினால் இஸ்லாமுக்கு இரண்டு நன்மைகள்:

1) இனி யாராவது பொதுவாக கூட, மறந்தும் முஹம்மது பற்றி தவறாக எழுதாமல் இருக்க ஒரு நல்ல ஏற்பாடு (ஒருவரின் கைகளை வெட்டியது)

2) அதே நேரத்தில் நாங்களும் இரத்ததானம் செய்கிறோம், அறிக்கையிடுகிறோம், இஸ்லாம் மன்னிக்கின்ற மார்க்கம் (அப்படியா..) என்று சொல்லிக்கொள்ள ஒரு ஏற்பாடு (இரத்த தானம் செய்வது)

ஒருவேளை இரத்ததானம் செய்த சகோதரர்கள், "அய்யா எங்களுக்கு இதெல்லாம் எதுவுமே தெரியாது... நாங்கள் வேதனை அடைந்து தான் இந்த தானத்தைச் செய்தோம். முஹம்மது சொன்னது போல நாங்கள் செய்யவில்லையே" என்று உண்மையாகவே வேதனை அடைந்து கூறுவார்களானால்,......அப்படிப்பட்டவர்களின் கால்களை கழுவி துடைக்க நான் கடனாளியாக இருக்கிறேன்.



முஹம்மது இஸ்லாமியர்களிடம் எப்படி நடந்துக்கொண்டார்? கீழே உள்ள தமிழ் கட்டுரையை படிக்கவும்:

முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்  

முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் 

ஓமன் நாட்டு மக்களுக்கு முகமது அனுப்பிய கடிதம்

முஹம்மது ஒரு தீவிரவாதியா?

முஹம்மதுவும் பத்து மெக்கானியர்களும் 

முஹம்மதுவும் அபு அஃபக்கின் கொலையும்




--
7/22/2010 12:10:00 PM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது


முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள்



முஹம்மதுவை அவமதித்ததால் துண்டிக்கப்பட்ட நம்பிக்(கை)
 
கேரளாவில் அமைதி மார்க்கத்தார்கள்
 
கேரளாவில் ஜோசப் என்ற பேராசிரியர், முஹம்மதுவை அவமதிக்கும் விதத்தில் கேள்வித் தாளை தயாரித்ததற்காக, இஸ்லாமியர்களில் சிலர் அவரது கையை துண்டித்தனர்.
 
இது சரியா தவறா?
 
ஒரு சாரார் "இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்தியதால், இந்த தண்டனை அவருக்கு சரியானது" என்று கூறுவார்கள்.
 
இன்னொரு சாரார் "அவர் தான் மன்னிப்பு கேட்டுவிட்டாரே, கல்லூரியும் அவரை சஸ்பண்ஸ் செய்துவிட்டதே, பின் ஏன் அவருக்கு இந்த தண்டனையை தரவேண்டும்?" என்று கேட்பார்கள்.
 
இந்த கட்டுரையை படிக்கும் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
 
இதை படிக்கும் நீங்கள் இஸ்லாமியராக இருப்பீர்களானால், உங்கள் கருத்தென்ன?
 
ஒரு மார்க்கத்தினரின் மனதை புண்படுத்தினால், இதற்கு காரணமாக இருந்தவருக்கு இந்த தண்டனை சரியானது தான் (அவர் மன்னிப்பு கேட்டுவிட்டாலும் சரி) என்று கூறுகிறீர்களா?
 
அல்லது
 
கைகளை துண்டித்தவர்கள் கொடுமைவாதிகள் என்றுச் சொல்வீர்களா?
 
மேற்கொண்டு இந்த கட்டுரையை படிக்கலாமா வேண்டாமா?
 
ஒரு மார்க்கத்தை விமர்சித்து, அம்மார்க்கத்தவர்களின் மனதை புண்படுத்துபவருக்கு இந்த தண்டனை சரி தான், அவர் மன்னிப்பு கோரினாலும் விடக்கூடாது, இப்படித்தான் செய்யவேண்டும் என்றுச் சொல்பவர்கள் மட்டுமே மேற்கொண்டு இந்த கட்டுரையை படியுங்கள். அவர்களுக்காகத் தான் இக்கட்டுரை எழுதப்படுகின்றது.
 
இது கொடூரம், ஒரு சின்ன விஷயத்திற்காக, அதுவும் மன்னிப்பு கேட்டுவிட்ட பிறகும், சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு கொடூரமாக நடந்துக்கொள்வது காட்டுமிராண்டித் தனம் என்றுச் சொல்பவர்கள், மீதமுள்ள இந்த கட்டுரையை படிக்கவேண்டாம்.
 
.
.
.
.
.
.
இந்த வரியை படிக்கும் நீங்கள் ஒரு முஸ்லீமாக இருந்தால், நிதானத்தை இழக்காமல், நேர்மையான முறையில், ஒரு அமைதி மார்க்கத்தை பின்பற்றுகின்றவர்கள் என்றுச் சொல்லிக்கொள்ளுகின்றவர்கள் நீங்கள்   என்ற விவரத்தை மறந்துவிடாமல் மீதமுள்ள வரிகளை படிக்கவும்.
 
 
அதாவது, நாங்கள் அதிகமாக நேசிக்கும் நபியை அவர் எப்படி கேலி செய்யலாம்? எப்படி விமர்சிக்கலாம், எப்படி அவதூறாக எழுதலாம் என்பது தானே உங்கள் கோபம். 
 
உங்கள் கோபம் நியாயமானதா என்று சிந்தித்துப்பார்க்க உங்களுக்கு விருப்பமா?
 
உங்களின் கருத்துப்படி, ஒருவர் இன்னொருவரின் மார்க்கத்தை, அதன் ஆன்மீக தலைவரை விமர்சித்தால் (தெரிந்தும், தெரியாமலும் செய்தாலும் சரி) அவருக்கு தண்டனை தரவேண்டும்.
 
இந்த நிலையில் உள்ள நீங்கள் நேர்மையானவர்களாக இருப்பீர்களானால் மிகவும் நன்றாக இருக்கும், அது தான் நியாயமும் கூட. இதுவரை நிதானமாக படித்த நீங்கள், கீழ்கண்ட விவரங்களை படித்து கொதித்து எழவேண்டாம், அதற்கு பதிலாக, ஓர் இடத்தில் அமைதியாக உட்கார்ந்துக்கொண்டு, சிந்தித்துப் பாருங்கள். 
 
இதே மனநிலையில் இருந்த மக்கா மக்கள் (குறைஷிகள்): 
 
நீங்கள் மிகவும் நேசிக்கும் உங்கள் முஹம்மது வாழ்ந்த காலத்தில், அவர் இஸ்லாமை பரப்பும் போது, குறைஷிகளின் தெய்வங்கள் பற்றியும், நம்பிக்கைகள் பற்றியும் அவதூறாக பேசினார், அவர்களின் தெய்வங்கள்  வெறும் கற்கள் என்றுச் சொன்னார்.
 
இன்று இஸ்லாமியர்களுக்கு கோபம் வருவது போலவே அவர்களுக்கும் வந்தது, அவர்கள் முஹம்மதுவையும் , அவர்களின் அடியார்களையும், தோழர்களையும் கொல்லவும், கொடுமைப்படுத்தவும் ஆரம்பித்தனர். இதனால், உயிருக்கு பயந்து முஹம்மது மதினாவிற்கு இடம்பெயர்ந்துச் சென்றார்.
 
இப்போது நேர்மையானவர்களாகிய இஸ்லாமியர்களுக்கு சில கேள்விகள்:
 
1) மக்காவினரின் தெய்வங்கள் பற்றி அவதூறாக பேசியதற்காக, உங்கள் முஹம்மதுவை  அவர்கள் வெறுத்து,கொலை செய்ய முயற்சி செய்தது சரியா தவறா?  (கேரளாவின் ஜோசப்பிற்கு செய்தது சரி என்றுச் சொன்னால், முஹம்மதுவை மக்காவினர் விரட்டி அடித்ததும் சரியானது, நியாயமானது தானே) இதை அங்கீகரிக்கின்றீர்களா? இல்லையா?
 
2) ஒரு மார்க்கத்தாரின் மனதை புண்படுத்தியவர் யாராக இருந்தாலும், அவர் கைகள் துண்டிக்கப்படவேண்டும், இது தானே இஸ்லாமியராகிய உங்களின் மனநிலை. இதே மனநிலையில் அக்காலத்தில் மக்காவினரும் இருந்தனர்.  ஆக, இஸ்லாமியர்களும் முஹம்மதுவிற்கு தொல்லை கொடுத்து கொலை செய்ய முயற்சி செய்த மக்காவினரும் ஒரே  இரகத்தைச் சார்ந்தவர்கள். இதை அங்கீகரிக்கின்றீர்களா?  
 
இல்லை! நாங்கள் அங்கீகரிக்கமாட்டோம் என்றுச் சொல்வீர்களானால், எந்த வகையில் நீங்கள் அவர்களை விட வித்தியாசமானவர்கள் என்று இஸ்லாமியரல்லாதவர்களாகிய எங்களுக்கு தெரிவியுங்கள்.
 
இப்போது நீங்கள் என்ன முடிவை எடுக்கப்போகிறீர்கள்?
 
அன்றைய மக்காவினரும், இன்றைய இஸ்லாமியர்களும் ஒன்றா?  அவர்கள் நடந்துக்கொண்ட விதமாகவே அல்லவா நீங்களும் இன்று நடந்துக்கொள்கிறீர்கள்! அப்படியானால், உங்களுக்கும் அவர்களுக்கும் வித்தியாசமென்ன?
 
இன்று கேரளாவில் நடந்தது சரியே என்றுச் சொல்வீர்களானால், அன்று மக்காவில் நடந்ததும் சரியே. 
 
ஜோசப்பை சட்டத்தையும் மீறி இன்று இஸ்லாமியர்களில் சிலர்  கொடூரமாக தாக்கியது சரியே என்றுச் சொன்னால், அன்று மக்காவினர் முஹம்மதுவை கொடுமைப்படுத்தியதும் சரியே?
 
இதற்கு உங்களுடைய பதில் என்ன?
 
 (எந்த தெய்வம் உண்மை, எது பொய் என்பது இப்போது கேள்வி இல்லை,  இங்கு பிரச்சனை -   ஒரு மார்க்கத்தை ஒன்னொரு மார்க்கத்தவர்கள் விமர்சிக்கலாமா என்பது தான். அப்படி விமர்சித்தால், அவர் யாராக இருந்தாலும் [முஹம்மதுவாக இருந்தாலும் சரியே] இப்படியே சட்டத்தை மீறி தாக்கலாமா என்பது தான்).
 
உங்களுக்கும், மக்காவின் மக்களுக்கும் இடையே ஒரு வித்தியாசமும் தெரியவில்லை. நீங்கள் இருவரும் ஒரே வழியில் செல்கின்றவர்களாகவே தெரிகின்றனர்.
 
முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய அன்றைய கிறிஸ்தவர்கள்:
 
கிறிஸ்தவர்கள் உயிரினும் மேலாக மதிக்கும் இயேசுவைப் பற்றி அவதூறாக முஹம்மது பேசினார், குர்‍ஆனில் இன்றும வசனங்கள் உண்டு. இயேசு இறைவன் அல்ல என்றுச் சொல்லும் போதெல்லாம் கிறிஸ்தவ மார்க்கத்தார்களின் மனது புண்பட்டு இருக்கும்? இன்றும் புண்பட்டுக்கொண்டே இருக்கிறது,  வேதனை அடைந்துக் கொண்டே இருக்கிறது. அப்படி இருக்கும் போது, கிறிஸ்தவர்கள் ஏன் முஹம்மதுவின் கைகளை அன்று வெட்டவில்லை. ஏனென்றால், கிறிஸ்தவர்கள் நம்பிக்கை வைத்திருக்கும் இயேசுக் கிறிஸ்து "என்னை அவமானப்படுத்தும் நபர்களை நீங்களே தண்டியுங்கள்" என்றுச் சொல்லவில்லை. ஆகையால், அவர்கள் முஹம்மதுவின் கைகளை வெட்டவில்லை, வெட்ட மாட்டார்களும் கூட.
 
அது அப்படி இல்லை, உண்மையாகவே இயேசு ஒரு நபி மட்டும் தான், அவர் இறைவன் இல்லையே!  அதைத் தான் முஹம்மது விமர்சித்தார் என்று இஸ்லாமியர்கள் இன்று சொல்லுவார்கள். ஆனால், கேள்வி என்னவென்றால்,  சொல்லப்பட்ட செய்தி உண்மையா இல்லையா என்பது இப்போது பிரச்சனை இல்லை, ஒருவர் இன்னொரு மார்க்கத்தவர்களின் மனதை புண்படுத்தினால், அவருக்கு இந்த தண்டனையை அனைத்து மார்க்கத்தவர்ளும் கொடுக்கலாமா? முஹம்மதுவை ஒரு நபி என்று நீங்கள் மட்டும் தான் நம்பிக்கொண்டு இருக்கிறீர்கள், இதை நம்பாதவர்கள் முஹம்மதுவை விமர்சிக்கலாமா?
 
உலகத்தில் இஸ்லாமியர்கள் தவிர வேறு எந்த மார்க்கத்தவர்களும் முஹம்மதுவை ஒரு நபி என்று ஏற்றுக்கொள்வதில்லை, அல்லாஹ்வை ஒரு இறைவன் என்று ஏற்றுக்கொள்வதில்லை, காரணம் அவர் ஒரு பொய் நபி என்று அவர்கள் நம்புகின்றனர். அவரவருக்கு அவரவர் நம்பிக்கை உண்மையானதாக தெரியும்.
 
இன்று இஸ்லாமியர்களின் கருத்தின்படி, அன்று கிறிஸ்தவர்கள் செய்தது தவறு, அதாவது தங்கள் மார்க்கத்தை முஹம்மது விமர்சித்தால், அவர்களின் மனதை புண்படுத்தினால், ஒரு எட்டுப்பேர் சென்று அவரது கைகளை பிடித்து வெட்டியிருக்கவேண்டும், அது தான் சரியானது என்று இஸ்லாமியர்களாகிய நீங்கள் சொல்லமுடியுமா? (நீங்கள் நேர்மையானவர்களாக இருந்தால்?).
 
இன்று கூட கிறிஸ்தவத்தை விமர்சிக்கும் இஸ்லாமிய அறிஞர்களின் கைகளை கிறிஸ்தவர்கள் வெட்டவேண்டும்? ஆனால், செய்வதில்லை?
 
பைபிளை விமர்சிக்கும் ஜாகிர் நாயக்கின் கைகளை வெட்டித் தள்ளவும்,  அதே போல, விமர்சிக்கும் பீஜே அவர்களின் கைகளையும் வெட்டிவிடவும் 
வேண்டுமென்று, எந்த ஒரு கிறிஸ்தவ குழுவாவது கோஷமிட்டுக்கொண்டு வருகின்றதை பார்க்கமுடியுமா?

நம்முடைய எதிர்ப்பை தெரிவிப்பதற்கு விமர்சிப்பவர்களுக்கு  பதில் சொல்லப்போகிறோம், அதுவே போதும் . அதை விட்டுவிட்டு, கத்தியோடும், குண்டுகளோடும் திரிய கிறிஸ்தவர்கள் என்ன காட்டுமிராண்டிகளா?  மத நம்பிக்கயுள்ளவர்கள் மிருகத்திலிருந்து மனிதன் தோன்றினான் என்ற கோட்பாட்டை நம்புவதில்லை,  ஆனால், இஸ்லாமியர்களில் சில நல்ல இஸ்லாமியர்கள் மிருகங்களைப்போலவே நடந்துக்கொள்கிறார்கள்.
 
முஹம்மதுவின் கைகளை வெட்ட தவறிய யூதர்கள் (ஆண்கள்):
 
முஹம்மது யூதர்களையும்,அவர்களின் நம்பிக்கையையும் விமர்சித்தார், இஸ்லாமியர்களைப்போல யூதர்களும் கற்றுக்கொண்டு இருந்திருந்தால், வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று ஒரு கை பார்த்து இருப்பார்கள், ஆனால், அவர்கள் செய்யவில்லை.
 
இன்றைய இஸ்லாமியர்களின் மனநிலையின்படி, அவர்கள் முஹம்மதுவை தாக்கி,கொன்று அல்லவா இருக்கவேண்டும்? ஆனால், அவர்கள் அப்படி செய்யவில்லை. (ஆனால், ஒரு யூதப்பெண் முஹம்மதுவிற்கு விஷம் வைத்து கொன்று விட்டாள்,  இந்தப் பெண்ணும் முஹம்மதுவை கொல்ல வேண்டும் என்பதற்காக விஷம் வைக்கவில்லை, தன்னை பைபிளின் தேவன் தான் அனுப்பினார் என்றுச் சொல்லிக்கொண்டு இருக்கிறாரே இவர், இது உண்மையா என்பதை சோதிக்க விஷம், வைத்தாள், ஜெயித்தாள். முஹம்மதுவும் அல்லாஹ்வும் தோற்றனர்).
 
 
துண்டிக்கப்பட்டது கையா அல்லது இஸ்லாம் மீது மற்றவர்களுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையா?
 
இஸ்லாமுக்கு நல்லபெயர் கொண்டு வர வேண்டும் என்பதற்காக, பல இலட்சங்கள் செலவு செய்து,அனேக நிகழ்ச்சிகளை இஸ்லாமிய அறிஞர்கள் ஏற்பாடு செய்து, படாத பாடு படுகின்றார்கள். ஆனால், ஒரு சிலர் உங்கள் முஹம்மதுவின் வழியில் நடந்து இப்படி வெட்டிச் சாய்க்கிறார்கள். இஸ்லாமியரல்லாதவர்கள் இந்த நிகழ்ச்சி பற்றி என்ன நினைப்பார்கள்?  இஸ்லாம் அமைதி மார்க்கமென்று நினைப்பார்களா அல்லது வன்முறை மார்க்கமென்பார்களா?
 
இஸ்லாமியர்கள் சிந்திக்கவேண்டும்,  எத்தனை அமைதி நிகழ்ச்சிகளை இஸ்லாமியர்கள் நடத்தினாலும், சில நாட்களில் இஸ்லாமியரல்லாதவர்கள் மறந்துவிடுவார்கள், ஆனால், கேரளாவில் நடந்த நிகழ்ச்சியை மக்கள் முக்கியமாக இஸ்லாமியரல்லாதவர்கள் என்றென்றும் ஞாபகத்தில் வைத்திருப்பார்கள்.  நல்ல பெயர் எடுக்க ஆண்டுகள் பிடிக்கும், கெட்ட பெயர் எடுக்க ஒரு நாள் போதும்.
 
ஆக, இந்த நிகழ்ச்சி மூலமாக மக்கள் புரிந்துக்கொண்டது என்ன? இஸ்லாமியர்களில் சிலர் வன்முறைவாதிகளாக இருக்கிறார்கள், இதற்கு அவர்களின் இஸ்லாமிய அறிஞர்களில் சிலர் காரணமாக இருக்கிறார்கள். மொத்தமாக பார்த்தால்,  ஜனநாயக நாட்டிலும், உண்மை இஸ்லாமிய முகம் காட்டப்பட்டுவிட்டது.
 
 
முடிவுரை: இதை நிதானமாக படித்த இஸ்லாமியரே, உங்கள் மார்க்கத்தை விமர்சித்தால், அவருக்கு தண்டனைத்தரவேண்டும் என்று அவேசம் கொள்ளும் நீங்கள், மற்றவர்களின் மார்க்கத்தை விமர்சிப்பது ஏன்?
 
உங்கள் முஹம்மது குறைஷிகளின் தெய்வங்களை ஏன் விமர்சித்தார், கிறிஸ்தவத்தையும், யூதர்களையும் ஏன் விமர்சித்தார்? உங்களுக்கு ஒரு நியாயம்,மற்றவர்களுக்கு ஒரு நியாயமா?
 
மற்றவர்கள் கையில் வாளை எடுக்கவில்லை என்ற காரணத்தால் நீங்கள் தப்பித்துக்கொண்டு உலகில் வாழ்ந்துக்கொண்டு வருகிறீர்கள். உங்களைப்போன்றே மற்றவர்களும் செய்தால், நாட்டில் இரத்தவெள்ளம் அல்லவா ஓடும்?  
 
இனியும், கொடுமையையும், வன்முறையையும் பின்பற்றுவதை விட்டுவிட்டு, மனிதர்களாக வாழ முயற்சி எடுங்கள்.. முடிந்தால்..!!!




--
7/20/2010 10:21:00 AM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது


முஹம்மதுவின் வழி: சாலையில் சமத்துவத்தை போதிக்காத முஹம்மது

 

முஹம்மதுவின் வழி:  சாலையில் சமத்துவத்தை போதிக்காத முஹம்மது 

சஹீ முஸ்லிம் ஹதீஸ்: புத்தகம் 26: எண் 5389

அல்லாஹ்வின் தூதர் (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) கூறியதாக அபூ ஹுரைரா அறிவித்ததாவது: "யூதர்களும் கிறிஸ்தவர்களும் உங்களுக்கு முதலாவது வணக்கத்தைக் (சலாம்)  கூறும்வரையிலும் அவர்களுக்கு நீங்கள் வணக்கம்ன் (சலாம்)  கூறாதீர்கள். அவர்களின் ஒருவரை நீங்கள் வழியில் சந்திக்கும்போது,  சாலையின் இடுக்கமான வழியில் அவர்கள் செல்லும்படி செய்யுங்கள்.


Muslim :: Book 26 : Hadith 5389
 
Abu Huraira reported Allah's Messenger (may peace be upon him) as saying: Do not greet the Jews and the Christians before they greet you and when you meet any one of them on the roads force him to go to the narrowest part of it.

கேள்விகள்:

  • ஒரு ஆன்மீக தலைவர் இப்படித்தான் தன் மக்கள் (இஸ்லாமியர்கள்) மாற்று மதத்தவர்களை நடத்தவேண்டும் என்று போதிக்கலாமா?
  • இப்படி சொல்வதின் மூலம், முஹம்மது எதை சாதிக்க முயற்சி எடுக்கிறார்? இதர மக்களோடு ஒற்றுமையுடன் வாழ்வதையா? சகோதரத்துவத்தோடு வாழ்வதையா? அல்லது இஸ்லாமியர்களின் மனதில் மாற்று மதத்தவர்கள் மீது ஒரு வெறுப்புணர்ச்சி எப்போதும் எரிந்துக்கொண்டே இருக்கவேண்டும் என்பதையா?
  • குறைந்தபட்சம் சாலையில் சமத்துவத்தை போதிக்காத முஹம்மது எப்படி உலகமனைத்திற்கும் ஒரு எடுத்துக்காட்டாக(மாதிரியாக) இருக்கிறார் என்று குர்‍ஆன் போதிக்கிறது?
  • ஒரு கிறிஸ்தவனான என்னை சாலையின் நெருக்கமான வழியில் செல்ல கட்டாயப்படுத்தச் சொல்லும் முஹம்மவை எப்படி என் வழி காட்டியாக கருதமுடியும்?
  • மக்களின் மனதில் வெறுப்புணர்ச்சியை  உண்டாக்கும் விதத்தில் ஒரு மத ஸ்தாபகர் பேசுவது சரியா?
  • இதே போல, வேற்று மதத்தவர்களின் ஆன்மீக தலைவர்கள், முஸ்லீம்களை சாலையில் கண்டால் நெருக்கமான வழியில் அவர்கள் செல்லும்படி கட்டாயப்படுத்துங்கள் என்றுச் சொன்னால், அந்த மார்க்கத்தை அமைதி மார்க்கமென்றும், அப்படிச் சொன்னவர், உலக மக்கள் பின்பற்றத்தகுந்த ஒரு மாதிரி என்றும் இஸ்லாமியர்கள் கூறுவார்களா?

முடிவு.. இஸ்லாமியர்களின் கையில்... 


--
Posted By Isa Koran to Muhammad's Sunna - முஹம்மது சொன்னதும் செய்ததும் at 7/11/2010 10:31:00 AM


Friday, July 2, 2010

"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3

 

"முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு" கருத்தரங்கு - பாகம் 3

"LIFE OF MUHAMMAD" SEMINAR - PART 3

முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு பாகம் 1ஐ இங்கு படிக்கவும்.

முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு பாகம் 2ஐ இங்கு படிக்கவும்.

இந்த கட்டுரையில் அதன் தொடர்ச்சியாக மூன்றாம் பாகத்தை காண்போம்.

எச்சரிப்பவராக முஹம்மது: "பிரச்சாரம் செய்தல், ஒடுக்கப்படுதல் மற்றும் பாதுகாக்கப்படுதல்"

[பிரச்சாரம் செய்தல், ஒடுக்கப்படுதல் மற்றும் பாதுகாக்கப்படுதல்: LoM p117-218, Tabari vol 6 p88-145, various Hadith]

முஹம்மது இரண்டிலிருந்து மூன்று ஆண்டுகள் வரை தனக்கு ஏற்பட்ட அனுபவத்திற்கு பிறகு, இஸ்லாமைப் பற்றி வெளிப்படையாக மக்காவின் மக்களுக்கு பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தார். அவர்கள் "ஓர் இறைவனை" வணங்கும் படி, தன்னை ஒரு உண்மையான அல்லாஹ்வின் நபி என்று நம்பும்படி அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். அவர்களின் இதர தெய்வ நம்பிக்கையைப் பற்றி கடுமையாய் விமர்சித்தார்.

இந்த காலக்கட்டத்தில் முஹம்மது "எச்சரிக்கை" செய்பவராக மட்டுமே இருந்தார். மக்கள் தன் கொள்கை மீது நம்பிக்கை கொள்ளும் படிச் செய்ய, அவர்களை கட்டாயப்படுத்த‌ அவருக்கு ஆற்றல் இல்லாமல் இருந்தது.

"வரவிருக்கும் பயங்கரமான அழிவைப் பற்றி எச்சரிக்கை செய்ய‌ நான் வந்திருக்கிறேன்". "நான் உங்கள் அனைவரையும் ஒன்று கூட்டி, இறைவனின் தண்டனையைப் பற்றி எச்சரிக்கை செய்கிறேன்". Tabari vol 6, page 89, 92.

மேலும், உம் இறைவன் நாடியிருந்தால், பூமியிலுள்ள யாவருமே ஈமான் கொண்டிருப்பார்கள்; எனவே, மனிதர்கள் யாவரும் முஃமின்களாக (நம்பிக்கை கொண்டோராக) ஆகிவிடவேண்டுமென்று அவர்களை நீர் கட்டாயப்படுத்த முடியுமா? குர்‍ஆன் 10:99

மக்காவில் முஹம்மதுவின் வாழ்க்கை இயேசுவின் வாழ்க்கைக்கு ஒத்து இருந்தது.

முஹம்மது தன் செய்தியை உறுதியுடன் போதித்தார். அவர் நிந்தனைகளையும், அவமானங்களையும் பயமுறுத்தல்களையும் சந்தித்தார் மற்றும் சகித்தார். முஹம்மது மக்கா மக்களின் நம்பிக்கையை பரிகாசம் செய்தார் அதனால், மக்கா மக்கள் அவர் மீது கடுங்கோபம் கொண்டு கொதித்தெழுந்தனர். ஒரு குறிப்பிட்ட சமயத்தில், "தங்கள் நம்பிக்கையைப் பற்றி பரிகசித்து பேசுவதை நிறுத்திவிட்டால், உம்மை விட்டுவிடுகிறோம்" என்று அம்மக்கள் சொன்னார்கள், ஆனால், முஹம்மது மறுத்துவிட்டார்.

முஹம்மது மக்கா மக்களின் மத நம்பிக்கையை அவமானப்படுத்தியதாலும், வேறு ஒரு நம்பிக்கையை தங்களுக்கு போதித்ததாலும், அவர்கள் அவருக்கு எதிராக எழும்ப ஆரம்பித்தார்கள். முஹம்மதுவின் சித்தப்பா அபூ தலிப் அவருக்கு பாதுகாப்பு அளித்துக்கொண்டு வந்தார். இதன் காரணமாக, மக்கா மக்கள் உடனே அவரை கொல்லமுடியவில்லை.

"அபூ தலிப் உங்கள் சொந்தக்காரர் [முஹம்மது] எங்கள் தெய்வங்கள் பற்றி தவறாக பேசுகிறார், நம் மதத்தை பகிரங்கமாக குற்றஞ்சாட்டுகிறார். நம்முடைய கலாச்சாரத்தை ஏளனம் செய்கிறார் மற்றும் நம்முடைய முற்பிதாக்கள் வழிதவறியவர்கள் என்றுச் சொல்கிறார். அவர் எங்கள் மீதான தன் குற்றச்சாட்டுக்களை நிறுத்திக்கொள்ளும்படி செய்யும், அல்லது நாங்கள் அவருக்கு தகுந்த பதில் அளிக்க (ஒரு கை பார்க்கும் படி) எங்களுக்கு அனுமதி அளியும். நாங்கள் எப்படி அவருக்கு எதிராக இருக்கிறோமோ, அதே போல நீரும் இருக்கிறீர், உங்களுக்காக வேண்டுமானால் நாங்கள் அவரை பார்த்துக்கொள்கிறோம். Tabari, vol 6, pages 93, 94.

தன்னை பின்பற்றும் சிலரை முஹம்மது சம்பாதித்தார். மக்கா மக்கள் அவரை பின்பற்றுகிறவர்களை அடிக்கடி தாக்கி பேசினார்கள்.

"இஸ்லாமை ஏற்றுக்கொண்டு முஹம்மதுவின் சகாக்களாக இருந்தவர்களுக்கு எதிராக குரைஷி மக்கள் விரோதத்தை வளர்த்துக்கொண்டார்கள், அவர்களுக்கு எதிராக கலகஞ்செய்தார்கள்." Tabari vol 6, page 97.

தன்னை எதிர்த்த சிலரை முஹம்மது வெறுத்தார், "கேளுங்கள் குரைஷி மக்களே, முஹம்மதுவின் உயிர் தங்கியிருக்கும் இறைவனின் பெயரில் சொல்கிறேன், உங்களுக்கு நான் மரணத்தை தருவேன்" என்று முஹம்மது கூறினார். Tabari vol 6 page 102.

இஸ்லாமியர்களுக்கு ஒடுக்குதல் மிகவும் தீவிரமாக இருந்தது, அதனால் முஹம்மது தன்னை பின்பற்றுகிறவர்கள் சிலரை பாதுகாப்புக்காக அபிசீனியாவிற்கு அனுப்பிவிட்டார். முஸ்லீம்களுக்கு எதிராகவும் அவர்களின் இனத்திற்கு எதிராகவும் மக்கா மக்கள் மிகப்பெரிய புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்தார்கள். முஹம்மது தன் மார்க்கத்தை விட்டுவிட, மக்கா மக்கள் அவருக்கு இலஞ்சம் கொடுக்கவும் முயற்சித்தார்கள்.

இறைத்தூதருக்கு குரைஷி மக்கள் அதிகமதிகமான சொத்துக்களை கொடுப்பதாகவும், அதனால், மக்காவில் முஹம்மது மட்டுமே மிகப்பெரிய பணக்காரராக இருப்பார் என்றும் வாக்களித்தனர். அவருக்கு எத்தனை மனைவிகள் விருப்பமோ அத்தனை மனைவிகளை கொடுப்பதாகும், மற்றும் அவரது கட்டளைகளுக்கு கீழ்படிந்து இருப்பதாகும் வாக்களித்தனர்.

குரைஷி மக்கள் முஹம்மதுவிடம் இவ்விதமாக கூறினார்கள், "முஹம்மதுவே நீர் எங்கள் தெய்வங்கள் பற்றி ஏளனமாக பேசாமல் இருந்தால், குற்றப்படுத்தாமல் இருந்தால், இவைகளை நாங்கள் உங்களுக்குத் தருவோம். இப்படி நீர் செய்யவில்லையானால், இன்னொரு விஷயத்தையும் நாங்கள் சொல்கிறோம், இதனால் நீரும் நாங்களும் நன்மையடைவோம்". அது என்ன என்று அவர் கேட்டார். அதற்கு அவர்கள் "நீர் எங்கள் தெய்வங்களான அல் லத் மற்றும் அல் உஜ்ஜாவை ஒரு ஆண்டுகாலம் வணங்கவேண்டும், அதே போல நாங்கள் உங்கள் இறைவனை ஒரு ஆண்டுகாலம் வணங்குவோம்" என்றனர். Tabari, vol 6, pages 106, 107.

இதற்கு முஹம்மது ஒப்புக்கொள்ளவில்லை. அவர் தன் நிலையைவிட்டுவிடவோ, தன் நம்பிக்கையை விட்டுவிடவோ விரும்பவில்லை (பார்க்கவும் குர்‍ஆன் சூரா 109:1 லிருந்து 6 வரை). முஸ்லீம்களுக்கு செய்யப்பட்ட கொடுமைகள் உச்சியை எட்டியது, அவர்களுக்கு வாழ்வு மிகவும் கடினமாக இருந்தது.

ஏதாவது கேள்விகள் உண்டா?

முக்கிய அம்சம்: சாத்தானின் வசனங்கள் (THE SATANIC VERSES)

[சாத்தானின் வசனங்கள்: "Tabari's History", vol 6 p 107-113, "Kitab al-Tabaqat al-Kabir", pages 236-239, LoM p165-167, "The Life of Mahomet", Volume 2, pages 150-152, by W. Muir, quoting "Kitab al-Wakidi"]

அநேகங் கள்ளத் தீர்க்கதரிசிகளும் எழும்பி, அநேகரை வஞ்சிப்பார்கள் - இயேசு, மத்தேயு 24:11

"And many false prophets will appear and deceive many people." Jesus, Matthew 24:11

அனேக‌ இஸ்லாமிய‌ர்க‌ள் இப்ப‌டிப்ப‌ட்ட‌ ஒரு நிக‌ழ்ச்சி (சாத்தானின் வசனங்கள்) ந‌டைபெற‌வில்லை என்றுச் சொல்கிறார்க‌ள். ஆனால், உண்மையில் "சாத்தானின் வ‌சன‌ங்க‌ள்" நிகழ்ச்சி ப‌ற்றிய‌ விவ‌ர‌ங்க‌ள் ஆர‌ம்ப‌கால‌ இஸ்லாமிய‌ நூல்க‌ளில் ப‌திவு செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து. இது ம‌ட்டும‌ல்ல‌, இந்த‌ விவ‌ர‌ங்க‌ள் ஹ‌தீஸ்க‌ள் ம‌ற்றும் குர்‍ஆனில் உள்ள‌ விவ‌ர‌ங்க‌ளோடு ஒத்துப்போகிற‌து.

முஹ‌ம்ம‌து த‌ன்னை ந‌ம்புகிற‌வ‌ர்க‌ளின் துன்ப‌ங்க‌ளுக்கு ஒரு முடிவு க‌ட்ட‌வேண்டும் என்று விரும்பினார். அதே நேர‌த்தில் த‌ன் ஊர் ம‌க்க‌ளாகிய‌ ம‌க்காவின‌ரோடு ச‌மாதான‌மாக‌ இருக்க‌ விரும்பினார். இந்த பிரச்சனைகளுக்கு முடிவு கட்ட அல்லாஹ் ஒரு வெளிப்பாட்டை அனுப்புவார் என்று முஹ‌ம்ம‌து ந‌ம்பினார்.

"இறைத்தூதர் தன் மக்களின் நலனில் அதிக அக்கரையுள்ளவராக இருந்தார் மற்றும் மக்காவினரோடு ஒற்றுமையடைந்து சமாதானமாக இருக்க விரும்பினார்..." Tabari vol 6, page 107, 108.

இந்த சந்தர்ப்பத்தை சாத்தான் பயன்படுத்திக்கொண்டு முஹம்மதுவின் வாயில் தன் வசனங்களை போட்டுவிட்டான். முஹம்மது சாத்தானின் வார்த்தைகளை அப்படியே அல்லாஹ்வின் வார்த்தையாக வெளிப்படுத்திவிட்டார் மற்றும் மக்காவினரின் தெய்வங்களுக்கு மரியாதையும் செய்ய அனுமதித்து விட்டார்.

குர்‍ஆன் சூரா 53:19-20 நீங்கள் (ஆராதிக்கும்) லாத்தையும், உஸ்ஸாவையும் கண்டீர்களா? மற்றும் மூன்றாவதான "மனாத்"தையும் (கண்டீர்களா?) இவைகள் உயர பறப்பவைகள், இவர்களின் மத்தியஸ்தம் அங்கீகாரத்தோடு ஏற்றுக்கொள்ளப்படும்.

முஹம்மதுவின் வார்த்தைகளை மக்கா மக்கள் ஏற்றுக்கொண்டனர், ஏனென்றால், இவர் அவர்களின் தெய்வங்களை அங்கீகரித்தார்.

"குரைஷிகள் இதை கேட்டதும், மட்டில்லா மகிழ்ச்சி கொண்டனர், மற்றும் அவர் தங்கள் தெய்வங்கள் பற்றி சொன்ன விதம் அவர்களுக்கு அதிக சந்தோஷத்தை கொடுத்தது..." Tabari vol 6, page 108.

காபிரியேல் தூதன் முஹம்மதுவை கடிந்துக்கொண்டு அவரின் தவறை திருத்தினார். இதனால், முஹம்மது குர்‍ஆனில் இருந்த அந்த சாத்தானின் வசன பகுதிக்கு பதிலாக வேறு வசனத்தைச் சொன்னார், மறுபடியும் இது மக்காவினரின் மனதை வேதனைக்குள்ளாக்கியது. முஹமம்து தன் பாவத்திற்காக அதிகமாக வேதனையடைந்தார், ஆகையால், காபிரியேல் முஹம்மதுவிடம் "அல்லாஹ் உன் தவறை லேசாக எடுத்துக்கொண்டார்" என்றுச் சொன்னார், அதாவது சாத்தானின் பொய்யான வசனத்தை குர்‍ஆனோடு சேர்த்த முஹம்மதுவின் பாவத்தை அல்லாஹ் அவ்வளவு பெரிய பாவமாக கருதவில்லை. இதோடு நின்றுவிடாமல், முந்தைய நபிகளும் இதே போல சாத்தானால் தூண்டப்பட்டு, இதே பாவத்தை செய்தார்கள், அதாவது சாத்தானின் வசனத்தை இறைவனின் வசனமாகச் சொன்னார்கள் என்றும் அல்லாஹ் கூறினார்.

"முஹம்மதுவே நீர் செய்தது என்ன? நான் இறைவனிடமிருந்து கொண்டுவராத வசனத்தை நீர் சொல்லியிருக்கிறீர் மற்றும் உம்மிடம் சொல்லாத ஒன்றை சொன்னதாக சொல்லியுள்ளீர்". இதனால் இறைத்தூதர் மிகவும் வேதனையுற்றார் மற்றும் இறைவனுக்கு அதிகமாக பயந்தார். ஆனால், இறைவன் அவருக்கு வெளிப்பாட்டை அனுப்பினார், ஏனென்றால், அவர் மிகவும் கிருபையுள்ளவர், முஹம்மதுவை தேற்றினார் மற்றும் இந்த விஷயத்தை மிகப்பெரிய தவறாக எடுத்துக்கொள்ளவில்லை. மேலும், அவருக்கு முன்பிருந்த நபிகளும் அல்லது இறைத்தூதர்களும், முஹம்மது விரும்பியது போல விரும்பினார்கள், ஆனால், சாத்தான் தன் வார்த்தைகளை அவர்களின் வெளிப்பாடுகளில் புகுத்திவிட்டான், எப்படி முஹம்மதுவின் நாவில் போட்டானோ அது போல" என்று அல்லாஹ் முஹம்மதுவிற்கு அறிவித்தார். Tabari Vol 6, p109

பழைய ஏற்பாட்டின்படி, யாராவது ஒரு நபர் தேவனைவிட்டு வேறு தெய்வங்களை வணங்கும்படி செய்தால், அப்படிப்பட்டவர் கொல்லப்படவேண்டும் என்று கட்டளையுண்டு. யாராவது உண்மையான தேவன் சொல்லாத வசனத்தைச் சொன்னால், அவர் கொல்லப்படவேண்டும் உபாகமம் 13:1-5.

யேகோவா தேவன் இப்படிப்பட்ட பாவத்தை லேசாக எடுத்துக்கொள்ள மாட்டார். ஆனால், அல்லாஹ் இப்படிப்பட்ட பாவத்தை லேசாக எடுத்துக்கொண்டார். ஆகையால், யேகோவா தேவனும் அல்லாஹ்வும் ஒருவரே அல்ல. துரதிஷ்டவசமாக, சில கிறிஸ்தவர்கள், இஸ்லாமிய அல்லாஹ்வும், கிறிஸ்தவ தேவனும் அல்லது யேகோவா தேவனும் ஒருவரே என்றுச் சொல்கிறார்கள், ஆனால், உண்மையில் அது தவறாகும், இவ்விருவரும் ஒருவரல்ல.

சிந்திக்க ஆய்வு செய்ய சில கேள்விகள் (QUESTIONS FOR THOUGHT AND STUDY)

1) தேவன் எப்போதாவது இப்படிப்பட்ட மிகப்பெரிய பாவத்தை, லேசாக விட்டுவிடுவாரா?

2) குர்‍ஆன் ஒரு விசேஷித்த ஒன்றாக இருந்தால், ஏன் சாத்தானின் வசனத்திற்கும் அல்லாஹ்வின் வசனத்திற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை குர்‍ஆனால் சொல்லமுடியவில்லை?

3) முஹம்மதுவினாலும், முஸ்லீம்களாலும் எது சாத்தானின் வசனம் எது அல்லாஹ்வின் வசனம் என்று வகைபிரிக்க தெரியாமல் இருக்கும்போது, குர்ஆனில் எவ்வளவு வசனங்கள் சாத்தானால் இறக்கப்பட்டு இருக்கும்?

4) குர்‍ஆன் என்பது பரிசுத்தமான இறைவனின் வேதமாக இருந்தால், முஹம்மதுவினால் உடனே அவ்வசனம் சாத்தானின் வசனம் என்று ஏன் கண்டுபிடிக்கமுடியவில்லை? ஏன் முஹம்மதுவை பின்பற்றினவர்களும் கண்டுபிடிக்கவில்லை? முஹம்மதுவினால், எது சாத்தானின் வசனம், எது அல்லாஹ்வின் வசனம் என்று வேறுபிரித்து சொல்லத் தெரியவில்லையானால், அவர் ஒரு உண்மையான நபி (தீர்க்கதரிசி) என்றுச் சொன்னால் ஏற்கக்கூடியதாக உள்ளதா?

பாகம் 3 முற்றிற்று

ஆங்கில மூலம்: "LIFE OF MUHAMMAD" SEMINAR

நான்காம் பாகம் அடுத்த கட்டுரையில்....

"கிறிஸ்தவர்களுக்காக" பக்கத்தை காண்க


© Answering Islam, 1999 - 2010. All rights reserved.
 


--
6/27/2010 10:43:00 PM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது


இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்