இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Showing posts with label மரியாள். Show all posts
Showing posts with label மரியாள். Show all posts

Wednesday, February 20, 2008

இஸ்லாம் கல்விக்கு பதில்: இயேசு த‌ன் தாயை (மரியாளை) அவமதித்தாரா?



 

இஸ்லாம் கல்விக்கு பதில்: இயேசு த‌ன் தாயை (மரியாளை) அவமதித்தாரா?

(M.M. அக்பர் மற்றும் தேங்கை முனீப், பஹ்ரைன் அவர்களுக்கு மறுப்பு)


எம். எம். அக்பர் என்ற கேரள இஸ்லாமிய அறிஞர், பைபிள் பற்றியும், குர்‍ஆன் பற்றியும் சொல்லியுள்ள செய்திகளை, தேங்கை முனீப் என்ற இஸ்லாமிய சகோதரர் தமிழில் மொழி பெயர்த்து இஸ்லாம் கல்வி தளத்தில் வெளியிடுகிறார். இஸ்லாமிய அறிஞர்களின் பைபிள் ஆராய்ச்சியின் தரம் எந்த அளவிற்கு உள்ளது என்பதை இந்த கட்டுரையில் நான் விளக்குகிறேன்.

M.M. அக்பர் அவர்கள் எழுதியது:

திருக்குர்ஆன் மற்றும் பைபிளில் காணப்படும் வரலாற்றுத் தகவல்கள் - ஓர் ஒப்பீடு

(பகுதி 2)

மூலம்: M.M.அக்பர் - தமிழில் தேங்கை முனீப், பஹ்ரைன்

தீர்க்கதரிசிகளே தீமை புரிந்தனரா? . . .

6. இஸ்ரவேலரின் இரட்சகர் என பைபிள் கூறும் இயேசு கிறிஸ்து தாயை மதிக்காதவராகவும் (யோவான்: 2:5, 19:26) சகிப்புத்தன்மை இல்லாதவராகவும் (மத்தேயு 12:34, 12:39, யோவான் 8:44) முன்கோபம் உடையவராகவும் (யோவான் 2:13-17, மத்தேயு 21:19) திருமண விருந்தில் தண்ணீரை மதுவாக மாற்றி மக்களுக்குக் கொடுத்து அவர்களுக்குப் போதையூட்டியவராகவும் (யோவான் 2:1-11) அறிமுகப்படுத்துகின்றது.

Source: http://www.islamkalvi.com/religions/quran_bible_compare2.htm
Formats mine



1. முஸ்லீம்கள் தீர்க்கதரிசிகளுக்காக ஏன் அதிகமாக பரிந்துபேசுகிறார்கள்:

பைபிள் தீர்க்கதரிசிகளைப் பற்றி சொல்லும் போது அவர்கள் சாதாரண மனிதர்கள் போல, சில தவறுகள் செய்துள்ளார்கள் என்றும், அதற்கு தேவன் தண்டனைகளை கொடுத்துள்ளார் என்றும்  சொல்கிறது. தீர்க்கதரிசிகளும் சாதாரண மனிதர்கள் தான், அவர்களும் தவறுகள் செய்துள்ளார்கள் என்று பைபிள் பாரபட்சம் காட்டாமல், உள்ளதை உள்ளது போலவே சொல்கிறது.

இதை முஸ்லீம்கள் ஏற்றுக்கொள்வது இல்லை. இவர்களின் கருத்துப்படி, தீர்க்கதரிசிகள் மிகவும் நல்லவர்கள், அவர்கள் தவறே செய்யமாட்டார்கள். அவர்களைப் பற்றி பைபிள் சொல்வது தவறு என்று இவர்கள் சொல்கிறார்கள். ஆனால், உண்மையில் பைபிள் சொல்வது போல, குர்‍ஆனும், ஹதீஸ்களும், முகமதுவின் வாழ்க்கை வரலாறும், தீர்க்கதரிசிகள் கூட பாவம் செய்துள்ளார்கள், இறைவனிடம் மன்னிப்பை கேட்டுள்ளார்கள் என்று சொல்கின்றன. இதைப் பற்றிய பதிலை தொடர் கட்டுரைகளாக நாம் காணலாம்.

சரி, ஏன் இஸ்லாமியர்கள் இப்படி சொல்கிறார்கள் என்று சிறிது சிந்துப்பார்த்தால், ஒரு உண்மை புரியும், அது என்னவென்றால், பைபிள் சொல்வது போல, தீர்க்கதரிசிகள் கூட தவறுகள் செய்வார்கள் என்று இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொண்டால், அது இவர்களுக்கு தலைவலியாக மாறும்.  எப்படி இவர்களுக்கு தலைவலியாக மாறும் என்று தெரிந்துக்கொள்ள மேலும் படியுங்கள். பைபிள் சொல்லும் தீர்க்கதரிசிகள் ஏதோ ஒரு சூழ்நிலையில் தவறு செய்ததாக சொல்கிறது, அந்த தவறினால் மற்றவர்கள் பாதிக்கப்பட்டு இருந்தால், அதற்கு உடனே தேவன் அவர்களுக்கு தண்டனை கொடுத்ததாக பைபிள் சொல்கிறது. பிறகு அந்த தீர்க்கதரிசிகள் அந்த தவறை மறுபடியும் செய்யாமல் இருந்தார்கள் என்று பைபிள் சொல்கிறது.

ஆனால், முகமதுவையும் ஒரு தீர்க்கதரிசியாக (நபியாக)  ஏற்றுக்கொண்டால், இவர் பைபிள் சொல்லும் தீர்க்கதரிசிகள் போல ஒரு முறை தவறு செய்யாமல், அதை தொடர்ந்து செய்துள்ளார், இதில் ஒரு வித்தியாசம் என்னவென்றால், அல்லா இவர் செய்த எல்லா தவறுகளை கணக்கில் கொள்ளாமல், தண்டனை கொடுக்காமல் மன்னித்து, இவர் செய்யும் எல்லா செயல்களுக்கு அல்லாவே அங்கீகாரம் கொடுத்துள்ளார். எனவே, பைபிள் சொல்வது உண்மை என்று இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொண்டால், இவர்கள் உத்தமர் என்று பின்பற்றும் முகமதுவுடைய செயல்களும் தவறு தான் என்று இவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டி வரும். எனவே, தங்கள் முகமதுவை காப்பாற்ற மற்ற தீர்க்கதரிசிகளுக்கு இவர்கள் வக்காளத்து வாங்குகிறார்கள்.

இதில் இன்னொரு முக்கியமான விவரம் என்னவென்றால், குர்‍ஆனிலும், ஹதீஸ்களிலும் எங்கும் இயேசு பாவம் செய்ததாக சொல்லப்படவில்லை, அதாவது, முகமதுவை விட பல மடங்கு இயேசு நல்லவர் என்பதை இஸ்லாமிய புத்தகங்களே சொல்கின்றன. இயேசு நல்லவர், முகமது தவறுகள் செய்தார் என்று இஸ்லாமிய ஹதீஸ்கள் சொல்வதை சரி செய்ய, எந்த தீர்க்கதரிசியும் தவறு செய்யவில்லை என்று மழுப்புகிறார்கள இஸ்லாமியர்கள்.

இஸ்லாமியர்கள் சொல்வது தவறானது என்பதை விளக்குவதற்கு முன்பு, இவர்கள் இயேசுவைப் பற்றி இந்த கட்டுரையில் சொல்லியுள்ள சில விவரங்களுக்கு பதிலை சொல்லலாம் என்று கருதுகிறேன்.



M.M. அக்பர் அவர்கள் எழுதியது:  
.....
.....
.....
6. இஸ்ரவேலரின் இரட்சகர் என பைபிள் கூறும் இயேசு கிறிஸ்து தாயை மதிக்காதவராகவும் (யோவான்: 2:5, 19:26) ....



2. இயேசு மரியாளை மதிக்கவில்லையா? யோவான்: 2:5, 19:26 வசனங்கள் என்ன சொல்கின்றன:

இஸ்லாமிய அறிஞர்கள் பைபிள் வசனங்களுக்கு எவ்வளவு அழகாக விளக்கம் அளிக்கிறார்கள் என்பதை இதன் மூலம் அறிந்துக்கொள்ளலாம்.

முதலாவது, அவர்கள் மேற்கோள் காட்டிய வசனத்தை பார்ப்போம்.


யோவான் 2:5 அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள் என்றாள்.



மேலே எம்.எம். அக்பர் அவர்கள் குறிப்பிட்ட வசனத்தை பாருங்கள், ஏதாவது புரிகிறதா? ஒன்றுமே புரியாது! ஏனென்றால், அவர்கள் குறிப்பிட்ட வசனமே தவறாக உள்ளது. உண்மையில் அவர்கள் மேற்கோள் காட்டியிருக்கவேண்டிய வசனம் யோவான் 2:4 ஆகும். அல்லது யோவான் 2:1-4 வரையுள்ள வசனங்களை குறிப்பிட்டு இருக்கவேண்டும்.

இது என்ன பெரிய தவறா? என்று நீங்கள் கேட்கலாம், இது பெரிய தவறு இல்லை, ஆனால், மற்றவர்களின் வேதங்களில் உள்ள வசனத்தை மேற்கோள் காட்டும் போது, குறைந்தபட்சம் ஒரு முறை சரிபார்ப்பது நல்லது. கட்டுரையின் மூல ஆசிரியர் எம். எம். அக்பர் அவர்களோ அல்லது மொழி பெயர்த்த முனீப் அவர்களோ இதை கவனிக்கவில்லை. இது ஒரு பெரிய தவறாக நான் குறிப்பிடவில்லை, ஆனால், இஸ்லாமிய அறிஞர்கள் எவ்வளவு மேலோட்டமாக மற்றவர்களின் வேதங்களின் வசனங்களை கையாளுகிறார்கள் என்பதை குறிப்பிடவந்தேன், அவ்வளவு தான். சரி, விவரத்திற்கு வருகிறேன்.


3. ஏன் இயேசு தன் தாயை ஸ்திரியே(பெண்ணே) என்று அழைத்தார்?

ஒரு முறை இயேசுவும், அவரது சீடர்களும், மரியாளும் ஒரு திருமணத்திற்கு சென்றார்கள். அப்போது, அங்கே திராட்சை ரசம் குறைவுப்பட்டது. இதை கவனித்து மரியாள், இயேசுவிடம் இவர்களுக்கு திராட்சை ரசம் குறைவுப்பட்டது, ஏதாவது (அற்புதம்) செய்யும் என்று கேட்டுக்கொண்டார்கள்.

அதற்கு பதிலாக இயேசு ஸ்திரியே என் வேளை இன்னும் வரவில்லை என்று சொல்கிறார்கள். இதை பைபிள் வசனங்கள் கொண்டு படியுங்கள், இதில் இயேசு மரியாளை எங்கு அவமதித்துள்ளார் என்பதை நீங்களே கண்டுபிடியுங்கள்.


யோவான் 2:1-5 மூன்றாம்நாளிலே கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே ஒரு கலியாணம் நடந்தது; இயேசுவின் தாயும் அங்கேயிருந்தாள். இயேசுவும் அவருடைய சீஷரும் அந்தக் கலியாணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். திராட்சரசம் குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரை நோக்கி: அவர்களுக்குத் திராட்சரசம் இல்லை எனறாள். அதற்கு இயேசு: ஸ்திரீயே, எனக்கும் உனக்கும் என்ன, என் வேளை இன்னும் வரவில்லை என்றார். அவருடைய தாய் வேலைக்காரரை நோக்கி: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படிசெய்யுங்கள் என்றாள்.



பெண்ணே என் வேளை இன்னும்வரவில்லை, நான் எப்போது அற்புதங்கள் செய்யவேண்டும், எப்போது செய்யக்கூடாது என்று எனக்கு தெரியும். இறைவன் சம்மந்தப்பட்ட விவகாரங்களில் இப்படி மனிதர்களின் இடையூறு தேவையில்லை என்ற தோரணையில் இயேசு பதில் அளிக்கிறார். இதில் எந்த தவறும் இல்லை. இதே போல பல சந்தர்பங்களில், இயேசு என் வேளை இன்னும் வரவில்லை என்று சொல்லியுள்ளார் (யோவான் 7:6, 8, 30, 8:20).


பைபிள் காமண்டரி இதைப் பற்றி என்ன சொல்கிறது என்பதை பாருங்கள்:

"The mother of Jesus reported the matter to Him presumably knowing that He could save the situation. 4 Dear women, why do you involve me?(Gk: ti emoi kai soi): This is a translation of an idiom, both in classical Greek and Hebrew, meaning "leave me to follow my own course'. No one has any right of access to the Lord in this matter. (Page : 1236, Zondervan's Understand the Bible Reference Series, New International BIBLE COMMENTARY Based on the NIV. F. F. Bruce, General Editor).

4. தன் வேளை வரவில்லை என்று சொன்னாலும், மறுபடியும் இயேசு மரியாளின் மீதுள்ள அன்பினால் அற்புதம் செய்தார்:

நம் இஸ்லாமிய அறிஞர்கள் சொல்லும் விவரங்கள் எப்படி உள்ளது என்றால், இயேசுவின் தாய் அவரிடம் அற்புதம் செய்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லும் போது, இயேசு பெணணே "என்னை தொந்திரவு செய்யாதே" என்றுச் சொல்லி, மறுபடியும் மரியாள் இயேசுவிடம் அதிகமாக கேட்டுக்கொண்டும், அவர் "முடியாது என்றால் முடியாது" என்று தட்டிக்கழித்ததாக கற்பனை செய்துக்கொண்டு பைபிள் வசனத்திற்கு வியாக்கீனம் செய்கிறார்கள்.

ஆனால், உண்மையில் இயேசு "என் வேளை இன்னும் வரவில்லை" என்று சொல்லிவிட்டு, மறுபடியும் "சரி செய்கிறேன்" என்று ஒப்புக்கொண்டுள்ளார். பிறகு மரியாள், அந்த வேலைக்காரர்களை அழைத்து, அவர் சொல்லுகின்றபடி செய்யுங்கள் என்று சொல்ல, தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றுகிறார் இயேசு. இந்த விவரங்கள் எல்லாம், இஸ்லாமியர்கள் படிக்கமாட்டார்கள். அவர்களுக்கு இந்த வசனங்கள் பைபிளில் இருப்பது தெரியாது! அப்படி தெரிந்தாலும் வெளியே சொல்லமாட்டார்கள்.


யோவான் 2:6-8 யூதர்கள் தங்களைச் சுத்திகரிக்கும் முறைமையின்படியே, ஒவ்வொன்று இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளத்தக்க ஆறு கற்சாடிகள் அங்கே வைத்திருந்தது. இயேசு வேலைக்காரரை நோக்கி: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார்; அவர்கள் அவைகளை நிறைய நிரப்பினார்கள். அவர் அவர்களை நோக்கி: நீங்கள் இப்பொழுது மொண்டு, பந்திவிசாரிப்புக்காரரிடத்தில் கொண்டுபோங்கள் என்றார்; அவர்கள் கொண்டுபோனார்கள்.



இயேசு அனுமதி கொடுக்காமலா! மரியாள் வேலைக்காரர்களை பார்த்து இவர் சொல்கின்றபடி செய்யுங்கள் என்று சொல்லியுள்ளார்கள்? இயேசுவிற்கு மரியாளின் மீது மரியாதை இல்லாமலா அவர் அன்று அந்த திருமண வீட்டில் அற்புதம் செய்தார். சிந்திக்கவேண்டும்.

5. இயேசு "தான் வந்த வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தார்:"

இயேசு தான் எந்த வேலைக்காக வந்தாரோ அதை கச்சிதமாக செய்வதில் கண்ணும் கருத்துமாக இருந்தார், "நீர் இதை செய்யுங்கள்" என்று அவருக்கு அறிவுரை சொல்லத்தேவையில்லை. ஒரு முறை யூத ஆசாரியர்கள் இயேசு செய்த பல அற்புதங்களை கண்டும், அவர் மீது விசுவாசம் வைக்காமல் "வேண்டுமென்றே அற்புதம் செய்துக்காட்டு" என்று சொல்லும் பொது, இயேசு செய்துக்காட்டவில்லை. இந்த விவரத்தைப் பற்றி, பி. ஜைனுல் ஆபீதீன் என்ற இஸ்லாமிய அறிஞருக்கு நான் அளித்த பதிலில் மிகவும் தெளிவாக காணலாம்.

1. பிஜேவிற்கு ஈஸா குர்‍ஆன் பதில்: இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை? பாகம் - 1

2. பிஜேவிற்கு ஈஸா குர்‍ஆன் பதில்: இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை? பாகம் - 2

எனவே, இயேசு தன் தாயை பெண்ணே என்று அழைத்தது ஒன்றும் பெரிய குற்றமில்லை. இஸ்லாமியர்கள், இயேசுவை ஒரு நபி என்று மட்டும் பார்க்கிறீர்கள், ஆனால், அவர் மேசியாவாகிய தேவன் என்பதை நீங்கள் அறியவில்லை. மரியாள் இவ்வுலகத்தில் பெயரளவிற்கு இயேசுவிற்கு தாயாக இருக்கிறார், ஆனால், அந்த மரியாளுக்கு "இயேசு" தேவனாக இருக்கிறார் என்பதை நீங்கள் மறக்கக்கூடாது. மரியாள் தான் இயேசுவிற்கு "அடிமை" என்றும், அவர் "தன் இரட்சகர் - Saviour" என்றும் சொல்லியுள்ளதை நாம் கவனிக்கவேண்டும்.

லூக்கா 1:47 என் ஆவி என் இரட்சகராகிய தேவனில் களிகூருகிறது. 1:48 அவர் தம்முடைய அடிமையின் தாழ்மையை நோக்கிப்பார்த்தார்; இதோ, இதுமுதல் எல்லாச் சந்ததிகளும் என்னைப் பாக்கியவதி என்பார்கள்.



உலக மக்கள் மரியாளை "பாக்கியவதி" என்பார்கள், ஆனால், இயேசுவை விட மனிதர்கள்(மரியாள்) பெரியவர் இல்லையே. எனவே, இயேசுவை பின்பற்றிய சீடர்கள் போல மரியாளும் இயேசுவின் சீடர் ஆவார்கள். மரியாளுக்கும் இயேசு என்னும் இரட்சகர் தேவை.


6. சிலுவை நேரத்தில் மரியாளை பெண்ணே என்று அழைத்த இயேசு:

இயேசு சிலுவையில் தொங்கும் போது கூட ஒரு தாய்க்கு ஒரு சராசரி மனிதன் செய்யக்கூடிய(வேண்டிய) கடமையையும் இயேசு செய்துவிட்டுச்சென்றார். தன் சீடர்களில் எல்லாம் தான் அதிகமாக நேசித்த சீடனாகிய யோவானின் கையில் மரியாளை ஒப்படைத்து சென்றார் இயேசுக் கிறிஸ்து.

யோவான் 19:26 அப்பொழுது இயேசு தம்முடைய தாயையும் அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீஷனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்.



இயேசு மரியாளை அவமதிக்கவேண்டும் என்பதற்காக "ஸ்திரியே" என்று ஒரு திருமண விருந்தில் அழைத்தார் என்று இஸ்லாமியர்கள் குற்றம் சாட்டுகிறீர்கள். அப்படியானால், இந்த சிலுவை நேரத்தில் மரியாளின் மீது இயேசுவிற்கு என்ன கோபம் இருந்தது? அப்படி அவமதிக்கவேண்டும் என்று நினைத்து இருந்தால், ஏன் தனக்கு பிரியமான சீடனை மரியாளை பார்த்துக்கொள் என்று ஒப்படைக்கிறார்?


7. கிரேக்க வார்த்தை "gynai" மற்றும் அதன் உண்மைப்பொருள்:

இயேசு சொன்னதாக பயன்படுத்தப்பட்டுள்ள கிரேக்க வார்த்தை "gynai" என்பதாகும். இதை தமிழில் "ஸ்திரி" அல்லது "பெண்" என்று மொழி பெயர்த்துள்ளார்கள்.

இந்த வார்த்தையை இயேசு மரியாளுக்கு பயன்படுத்தியது "ஒரு தாயை அவமதிப்பதாக ஆகும் " என்று இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள். இந்த வார்த்தை இன்னும் யார் யாருக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை கவனித்தால், இஸ்லாமியர்களின் இந்த வாதம் தவறானது என்ற முடிவிற்கு வரலாம். இந்த கிரேக்க வார்த்தை மதிப்பின், அன்பின் அடிப்படையில் குறிப்பிடும் வார்த்தையாகும்.

1. கிரேக்க புலவர் "ஹோமர் -  Homer " என்பவர் எழுதிய கவிதைகளில், ஒடிஸ்ஸியஸ்(Odysseus) என்பவர், தான் அதிகமாக நேசிக்கும் மனைவியை(Penelope) குறிப்பிடும் போது இந்த வார்த்தையை பயன்படுத்துகிறார்.  (Homer (ancient Greek: Ὅμηρος, Homēros) is a legendary ancient Greek epic poet, traditionally considered the author of the epic poems the Iliad and the Odyssey as well as some lesser-known poems.  Source: http://en.wikipedia.org/wiki/Homer)

2. ரோம சாம்ராஜ்ஜியத்தின் அரசர் சீசர் அகஸ்தஸ், எகிப்து இராணியாகிய "கிளியோபாட்ராவை" குறிப்பிடும் போது, இந்த வார்த்தையையே பயன்படுத்துகின்றார்.

The Protestant commentator William Barclay writes:

"The word Woman (gynai) is also misleading. It sounds to us very rough and abrupt. But it is the same word as Jesus used on the Cross to address Mary as he left her to the care of John (John 19:26). In Homer it is the title by which Odysseus addresses Penelope, his well-loved wife. It is the title by which Augustus, the Roman Emperor, addressed Cleopatara, the famous Egyptian queen. So far from being a rough and discourteous way of address, it was a title of respect. We have no way of speaking in English which exactly renders it; but it is better to translate it Lady which gives at least the courtesy in it" (The Gospel of John, revised edition, vol. 1, p. 98).

In the same way, the Expositor's Bible Commentary, published by Zondervan, states:

Jesus' reply to Mary was not so abrupt as it seems. 'Woman' (gynai) was a polite form of address. Jesus used it when he spoke to his mother from the cross (19:26) and also when he spoke to Mary Magdalene after the Resurrection (20:15)" (vol. 9, p. 42).

The Wycliff Bible Commentary put out by Moody Press acknowledges in its comment on this verse, "In his reply, the use of 'Woman' does not involve disrespect (cf. 19:26)" (p. 1076).

Source:http://homepages.paradise.net.nz/mischedj/ct_theotokos.html

John 2:4 "Dear woman, why do you involve me?" Jesus replied. "My time has not yet come."

Critics often accuse Jesus of being rude to his mother here; however, as parallel phrases in Greek literature show, this is not a phrase of derision or rudeness but of loving respect (as our NIV correctly captures). Consider this relevant data:

The term here is "Jesus' normal, public way of addressing women" (John 4:21, 8:10, 19:26, 20:31; Mt. 15:28; Lk. 13:12). It is also a common address in Greek literature, and never has the intent of disrespect or hostility. [Brow.GJ, 99]. The same term is used in Josephus Antiquities 17.17 by Pheroras to summon his beloved wife. [Beas.J, 34]


Source: http://www.tektonics.org/gk/jesusrudemom.html


சிந்தித்துப்பாருங்கள், ஒருவன் தான் அதிகமாக நேசிக்கும் மனைவியை குறிப்பிடும்போதும், ஒரு அரசியை ஒரு அரசன் குறிப்பிடும்போதும் பயன்படுத்தியுள்ள அதே கிரேக்க வார்த்தையைத் தான் இயேசு தன் தாயுக்கு பயன்படுத்தியுள்ளார், இது மரியாளை அவமதிக்கவோ, கோபத்தாலோ சொன்னது இல்லை, மதிப்பின் அடிப்படையில் சொன்ன வார்த்தையாகும்.

இதை கவனத்தில் கொண்டு பார்க்கும்போது, இயேசு மரியாளை அவமதிக்கவேண்டும் என்பதற்காக "ஸ்திரியே" என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை, அதற்கு மாறாக மதிப்பின் அடிப்படையில் பயன்படுத்தியுள்ளார்.

கிரேக்கத்திலிருந்து புதிய ஏற்பாட்டை ஆங்கிலத்திலோ, தமிழிலோ மொழி பெயர்க்கும் போது, "Woman" என்று பயன்படுத்தியுள்ளார்கள். இதை "Lady" என்று மொழிபெயர்ப்பது தான் சிறந்தது என்று மேலே பார்த்த காமண்டரியில் சொல்லப்பட்டுள்ளது.


"The Protestant commentator William Barclay writes: ....We have no way of speaking in English which exactly renders it; but it is better to translate it Lady which gives at least the courtesy in it" (The Gospel of John, revised edition, vol. 1, p. 98). "

தமிழிலே பெண், அல்லது ஸ்திரி என்பதற்கு சமமான ஆங்கில வார்த்தை "Woman" என்பதாகும், ஆனால், "Lady" என்பதற்கு தமிழில் என்ன வார்த்தை உள்ளது என்பது சந்தேகமாக உள்ளது.

"உன் தாயையும் தந்தையையும் கணம் செய்வாயாக" என்று பழைய ஏற்பாடு சொல்வதை நிறைவேற்ற நான் வந்தேன் என்று சொன்ன அதே இயேசு, எப்படி மரியாளை அவமதிப்பார்?


அவன் அவரை நோக்கி: எவைகளை என்று கேட்டான். அதற்கு இயேசு: கொலை செய்யாதிருப்பாயாக, விபசாரம் செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச் சாட்சி சொல்லாதிருப்பாயாக; உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக; உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்பவைகளையே என்றார். (மத்தேயு 19:18-19 )

நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று எண்ணிக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு அல்ல, நிறைவேற்றுகிறதற்கே வந்தேன். வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்திலுள்ளதெல்லாம் நிறைவேறுமளவும், அதில் ஒரு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் ஒழிந்து போகாது என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். (மத்தேயு 5:17-18 )



8. பொதுவாக வெறுப்பு இன்றி பெண்களை குறிப்பிட இயேசு பயன்படுத்தும் வார்த்தை :

இயேசு பல சந்தர்பங்களில் பெண்களை குறிப்பிடும் போது, "ஸ்திரியே" என்று தான் அழைத்து பேசியுள்ளார், அது நம்பிக்கையை புகழும் போதும் சரி, மன்னிக்கும் போதும் சரி அல்லது சுகமாக்கி ஆறுதலான வார்த்தைகளை பேசும் போதும் சரி, இப்படித் தான் இயேசு குறிப்பிட்டுள்ளார். கீழே வரும் வசனங்களில் இயேசு சாதாரணமாக பேசினாரா? அல்லது அவமதிக்கும் வகையில் பேசினாரா? என்பதை சிந்தித்துப்பாருங்கள்.


நம்பிக்கையை மெச்சிக்கொள்ளும்போது: மத்தேயு 15:28 இயேசு அவளுக்குப் பிரதியுத்தரமாக: ஸ்திரீயே, உன் விசுவாசம் பெரிது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்நேரமே அவள் மகள் ஆரோக்கியமானாள்.

சுகமாக்கிவிட்டு ஆறுதல்படுத்தும் போது: லூக்கா 13:12 இயேசு அவளைக் கண்டு, தம்மிடத்தில் அழைத்து: ஸ்திரீயே , உன் பலவீனத்தினின்று விடுதலையாக்கப்பட்டாய் என்று சொல்லி,

நம்பிக்கையைப் பற்றிய சந்தேகத்தை தீர்க்கும்போது: யோவான் 4:21 அதற்கு இயேசு: ஸ்திரீயே , நான் சொல்லுகிறதை நம்பு. நீங்கள் இந்த மலையிலும் எருசலேமிலும் மாத்திரமல்ல, எங்கும் பிதாவைத் தொழுதுகொள்ளுங்காலம் வருகிறது.

மன்னிக்கும் பொது: யோவான் 8:10 இயேசு நிமிர்ந்து அந்த ஸ்திரீயைத் தவிர வேரொருவரையுங் காணாமல்: ஸ்திரீயே, உன்மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே? ஒருவனாகிலும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார்.

உயிர்த்தெழுந்த பிறகு: யோவான் 20:15 இயேசு அவளைப் பார்த்து ஸ்திரீயே , ஏன் அழுகிறாய், யாரைத் தேடுகிறாய் என்றார். அவள், அவரைத் தோட்டக்காரனென்று எண்ணி: ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டுபோனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக்கொள்ளுவேன் என்றாள்.



8. தன்னை எதிர்த்த பெண்ணை கொலை செய்ய துடித்த முகமது:

இயேசு தன் தாயை "ஸ்திரியே" என்று அழைத்தார், இது ஒரு நபிக்கு இருக்கக்கூடிய தகுதி அல்ல. நபி என்பவர்கள் இப்படி சொல்லமாட்டார்கள் என்றுச் சொல்லும் இஸ்லாமியர்கள், முகமது தன்னை ஒரு பெண் எதிர்த்தாள் (அதுவும் பல பிள்ளைகளுக்கு தாய்) என்பதற்காக "எனக்காக அவளை கொல்பவர் யார்?" என்று கேட்டு, அந்தப் பெண்ணை கொலை செய்யவைத்தவர் முகமது. இது ஒரு நபிக்கு இருக்கக்கூடிய தகுதியா? (படிக்க "முகமதுவின் கொலைகள் மற்றும் இஸ்லாமின் பயமுறுத்தல்")

தன் அனுமதி இல்லாமல், ஒரு மனிதன், தன் மனைவி "முகமதுவை" தொடர்ந்து திட்டிக்கொண்டு இருக்கிறாள் என்பதற்காக கொலை செய்துவிட்டு, முகமது கேட்கும் போது, நான் தான் செய்தேன் என்று சொல்லும் போது:

என்னை திட்டினால் எப்படி உன் மனைவியை நீ கொலை செய்வாய்?

அதுவும் ஒரு கர்ப்பிணிப் பெண் என்றுச் சொல்கிறாய்! எப்படி உன்னால் இது முடிந்தது?

என் அனுமதி இல்லாமல் இப்படி கொலை செய்ததால், இஸ்லாமுக்கு கெட்டப்பெயர் நீ கொண்டு வந்தாய்?

சட்டத்தை ஏன் கையில் எடுத்துக்கொண்டாய்? அரசு எடுக்கவேண்டிய முடிவை எப்படி நீ எடுத்தாய்?


என்று கேள்விகள் கேட்டு, முகமது அந்த மனிதனுக்கு தகுந்த தண்டனை அளிக்காமல், எல்லாருக்கும் முன்பாக, " சாட்சியாளர்களாக அமர்ந்திருப்போரே ! அவளின் இரத்தத்திற்கு பலி எடுக்கப்படாது." என்றுச் சொன்னதாக ஹதீஸ் சொல்கிறதே. இப்படிப்பட்டவரையா நீங்கள் நபி என்றும், இப்படிப்பட்ட மார்க்கத்தையா அமைதியின் மார்க்கம் என்றுச் சொல்கிறீர்கள்?

இயேசு தன் தாயை "ஸ்திரியே" என்று அழைத்தது பைபிளில் சொல்லப்பட்டதால், அது வேதமல்ல என்று சொல்லும் நீங்கள், உங்கள் முகமது, வயிற்றில் இருக்கும் பிள்ளையோடு கொன்ற ஒரு மனிதனுக்கு மன்னிப்பு அளித்தாரே, இந்த பெண்ணுக்காக பலி கொடுக்கப்படாது என்று சொன்னாரே, இவர் நபியா? இதை படிப்பவர்கள் சிந்திக்கட்டும்.( படிக்க : கர்ப்பிணி பெண்ணை கொன்ற மனிதனை தண்டிக்காத முகமது http://unmaiadiyann.blogspot.com/2008/01/blog-post_16.html)


முடிவுரை: அன்பான இஸ்லாமிய அறிஞர்களே, சிந்தியுங்கள், மரியாளை "ஸ்திரியே" என்று இயேசு சொன்னது, மரியாளை அவமதிக்க அல்ல என்பதை இதுவரைக்கும் கண்டோம். ஒரு முறை இயேசு மக்களுக்கு போதித்துக்கொண்டு இருக்கும் போது, உங்கள் தாயாரும் சகோதரரும் வெளியே உங்களுக்காக வெளியே காத்திருக்கிறார்கள் என்று அவருக்கு சொல்லப்பட்டபோது, என் தாய் யார்? என் சகோதரர் சகோதரிகள் யார்? என் பிதாவின் சித்தம் செய்பவர்களே என்று தன் சீடர்களை குறிப்பிட்டுச் சொன்னார்? இப்படி அவர் சொன்னதற்காக, அவருக்கு மரியாளின் மீது அன்பில்லை என்று பொருளா? . தன் சொந்த உலக குடும்பத்தைவிட, தேவனுடைய ஆன்மீக குடும்பத்தின் முக்கியத்துவம் அதிகம் என்பதை காட்டவே, இயேசு இவ்விதமாக சொன்னார்.

யார் யாருக்கு என்ன  முக்கியத்துவம் கொடுக்கவேண்டும், எப்போது கொடுக்கவேண்டும் என்று இயேசுவிற்கு நன்றாகத் தெரியும். எனவே, இயேசு மரியாளை "ஸ்திரியே" என்று சொல்லி அழைத்தது மரியாளை அவமதிப்பதற்காக அல்ல, உங்கள் குற்றச்சாட்டு ஆதாரமற்றது.

என் அடுத்த பதிலில், இயேசு சகிப்புத்தன்மை இல்லாதவர், முன்கோபமுடையவர், மக்களை போதையூட்ட அற்புதம் செய்தவர் போன்ற இஸ்லாமியர்களின் (இஸ்லாம் கல்வி தளம், எம்.எம். அக்பர் அவர்களின்) குற்றச்சாட்டிற்கு என் பதிலை தருகிறேன்.



1. இஸ்லாம் கல்விக்கு ஈஸா குர்ஆனின் இதர பதில்கள் :

1. எம். எம் அக்பருக்கு (இஸ்லாம் கல்விக்கு) பதில்: குர்ஆனில் குலறுபடிகள்

2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில் (குப்பை சடங்குகளை குப்பையில் போடச்சொன்ன இயேசு)

3. இஸ்லாம் கல்வி தள கட்டுரையும் 1 தீமோத்தேயு 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்


2. பி.ஜைனுல் ஆபீதீன் அவர்களுக்கு ஈஸா குர்ஆனின் பதில்கள்

3. நேசமுடன் தளத்திற்கு ஈஸா குர்ஆனின் பதில்கள்

4. டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈஸா குர்ஆனின் பதில்கள்

5. இது தான் இஸ்லாம் தளத்திற்கு ஈஸா குர்ஆனின் பதில்கள்
 
 
 

Thursday, July 12, 2007

பைபிள் புகழும் இஸ்மாயில்;இது தான் இஸ்லாமுக்கு பதில்

பைபிள் புகழும் இஸ்மாயில்;இது தான் இஸ்லாமுக்கு பதில்; ஈசா குர்ஆன் பதில் பாகம் 2

http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=2088#2088

பச்சை நிறமுள்ளது இது தான் இஸ்லாம் கட்டுரை,சிவப்பு நிறமுள்ளது ஈசா குர்ஆன் பதில்

Quote:
பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி்: நீ கர்ப்பவதியாயிருக்கிறாய். நீ குமாரனைப் பெறுவாய் கர்த்தர் உன் அங்கலாய்ப்பைக் கேட்டப்படியினால் அவனுக்கு இஸ்மவேல் என்று பெயரிடுவாயாக. அவன் துஷ்டனுமாயிருப்பான். அவனுடைய கை எல்லோருக்கும் விரோதமாகவும் எல்லோருடைய கையும் அவனுக்கு விராதமாகவும் இருக்கும் தன் சகோதரர்கள் எல்லோருக்கும் எதிராகக் குடியிருப்பான் என்றார். (ஆதியாகமம் 16:11,12) இந்த வசனங்களில் கூறப்படுவது உண்மையென்றால் முன்னர் நாம் எடுத்துக் காட்டிய பைபிள் வசனங்கள் பொய்யாகி விடும். இஸ்மவேல் துஷ்டனாகவும் மனிதகுல விரோதியாகவும் இருந்தால் கர்த்தர் இத்துனை சிறப்புகளை இஸ்மவேலுக்கு வழங்குவாரா... இஸ்மவேல் துஷ்டன் அவன் வழியில் வந்த முஹம்மதை நம்பாதீர்கள் என்று சொல்வதற்காகவே இது நுழைக்கப்பட்டிருக்கின்றது. இல்லை என்று கிறிஸ்த்தவ மதகுருக்கள் மறுத்தால் இஸ்மவேல் பற்றி தேவனால் ஆசிர்வதிக்கப்பட்ட வார்த்தைகளை அவர்கள் மறுத்தவர்களாகி விடுவார்கள்.


------------------ என் மறுப்பு: ------------------ "துஷ்ட மனுஷன்" என்று தமிழில் மொழி பெயர்த்துள்ளார்கள், ஆங்கிலத்தில் அது "Wild Man" என்றும், "Wild Donkey" என்றும் உள்ளது. Genesis16:12 He will be a wild donkey of a man; his hand will be against everyone and everyone's hand against him, and he will live in hostility toward [a] all his brothers." ( NIV - http://www.biblegateway.com/passage/?search=Genesis%2016:12&version=31) Genesis 16: 12 And he will be a wild man; his hand will be against every man, and every man's hand against him; and he shall dwell in the presence of all his brethren. (King James Version : http://www.biblegateway.com/passage/?search=Genesis%2016:12;&version=9; ) இந்த வசனத்தில் சொல்லப்பட்டது, ஒரு மனிதன் வளர்க்கும் தன் கழுதை எப்படி முரட்டாட்டம் பிடிக்குமோ, அப்படி "முரடணாக" இருப்பார் என்று ஒரு உவமையாகச் சொல்லப்பட்டுள்ளது. அவ்வளவு தான். அவரை "மனித குல விரோதி" என்று யார் சொன்னது, நீங்கள் தான் சொல்கிறீர்கள். பைபிள் வசனத்தை நன்றாக பாருங்கள்: "அவனுடைய கை எல்லோருக்கும் விரோதமாகவும் எல்லோருடைய கையும் அவனுக்கு விராதமாகவும் இருக்கும்" "இவருடைய கை எல்லாருக்கும் விரோதமாக இருக்கும்" என்றால், இவர் சண்டை பொடுவார் என்று பொருள் கொள்ளலாம், சரி அதை அடுத்து படியுங்கள் " எல்லாருடைய கை இவருக்கு விரோதமாக இருக்கும்", மற்றவர்களும், இவரைச் சுற்றி உள்ளவர்களும் இவரோடு சண்டை போடுவார்கள் என்று பொருள் வருகிறது அல்லவா? இங்கு சொல்லப்பட்டது இரண்டு பிரிவினரும் ஒருவருக்கு விரோதமாக ஒருவர் இருப்பார்கள் (விடுதலைப் புலிகள், இலங்கை அரசு போல)என்பதே தவிர, இவர் மட்டும் கொடுமைக்காரர் என்று அல்ல. இயேசு தன் முக்கியமான சீடனைப் பார்த்து "பின்னாகப்போ சாத்தானே" என்றுச் சொன்னார்". இவர் தான் பேதுரு, ஆரம்பகால கிறிஸ்தவ சபையின் தலைவர், சொல்லப்போனால், "கிறிஸ்தவ மூத்த குரு". இவரை திட்டிய வசனம் கூட பைபிளில் உள்ளது. இஸ்மவேலுக்கு சொன்னதோ, "ஒரு மனிதனுடைய கழுதை போல", ஆனால், பேதுருவிற்கோ " சாத்தானே" என்று இயேசுவே திட்டிவிட்டார். அதற்காக இன்று உள்ள கிறிஸ்தவர்கள் கவலைப்பட்டுக்கொண்டு இருக்கிறார்களா? என்ன? இயேசு, தன் சபை பொறுப்பை இவரிடம் ஒப்படைக்க வில்லையா? இவர் தான் இயேசுவை விட்டு தூரமாக போய்விட்டாரா?


//இஸ்மவேல் துஷ்டன் அவன் வழியில் வந்த முஹம்மதை நம்பாதீர்கள் என்று சொல்வதற்காகவே இது நுழைக்கப்பட்டிருக்கின்றது.//

நாங்கள் தான் சொல்கிறோமே, தேவன் ஆசீர்வதித்த மனிதன் இஸ்மவேல், தேவன் பெயர் சூட்டிய மனிதன் "இஸ்மவேல்". அவர் குணம் கொஞ்சம் "கடினமானது" என்று பைபிள் சொல்கிறது அவ்வளவு தான். இஸ்மவேலை விடும், ஆபிரகாமைப் பாரும், இவரின் வம்சத்தில் வந்தவர் தானே முகமது கூட (இஸ்லாம் படி, நான் நம்புவது, நம்பாதது அது வேறு விஷயம்), அப்படி இருந்தும், நாங்கள் "முகமதுவை" நபியாக ஏற்றுக்கொள்ள முடியாது. இயேசுவின் வம்சவரலாறு உமக்கு தெரிந்து இருக்கும், அவர் வந்த வம்சம் எப்படிப் பட்டது. தாவிது, தன் சிப்பாயின் மனைவியோடு விபச்சாரம் செய்தான், தேவன் அவன் குழந்தையை மரிக்கச் செய்தார். சாமுவேல் பல மனைவிகளை கொண்டான், தேவனுக்கு தூரமாகச் சென்றான், பிறகு மனம் திரும்பி வந்தான். இப்படி பலபேர் எனவே, "வம்சத்தை பார்த்து கிறிஸ்தவர்கள் விசுவாசிப்பதில்லை, வந்தவரைப் பார்த்து விசுவாசிக்கிறோம்".



Quote:
இஸ்மவேலின் சிறப்பை மறுக்க கிறிஸ்த்தவ மதகுருக்கள் கையாண்ட மற்றொரு வரலாற்று புரட்டலையும் பார்ப்போம். தேவனுக்கு ஆப்ரஹாம் பலியிட துணிந்தது இஸ்மவேலையா.... ஈசாக்கையா..... ஆப்ரஹாம் இஸ்மவேலைதான் கர்த்ருக்காக பலியிட துணிந்தார் என்று கிறிஸ்த்தவ உலகம் நம்பினால் இஸ்லாத்தின் சிறப்பையும் முஹம்மத் அவர்களின் தூதுத்துவத்தையும் நம்பவேண்டும் நிலை ஏற்பட்டு விடும் என்பதால் ஆப்ரஹாம் பலியிட நாடியது ஈசாக்கைதான் என்று நம்புகிறார்கள். அதற்கு ஆதாரமாக பைபிள் வசனத்தையும் காட்டுகிறார்கள். ஆனால் பைபிள் வசனங்களை ஊன்றி கவனித்தலே பலியிட நாடியது ஈசாக்காக இருக்க வாய்ப்பில்லை இஸ்மவேலைதான் பலியிட முடிவெடுத்துள்ளார் என்பதை விளங்கலாம்.


------------------ என் மறுப்பு: ------------------ நண்பரே, முகமது வந்தது கி.பி. 570-632 ல். புதிய ஏற்பாட்டிலேயே முதல் நூற்றாண்டிலேயே சொல்லப்பட்டுள்ளது " ஆபிரகாம் பலியிட்டது ஈசாக்கை" என்று. எபிரெயர் 11:17 மேலும் விசுவாசத்தினாலே ஆபிரகாம் தான் சோதிக்கப்பட்டபோது. ஈசாக்கைப் பலியாக ஒப்புக்கொடுத்தான் எபிரெயர் 11:18 ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும் என்று அவனோடே சொல்லப்பட்டிருந்ததே, இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்களைப் பெற்றவன், மரித்தோரிலிருந்து எழுப்ப தேவன் வல்லவராயிருக்கிறாரென்றெண்ணி, யாக்கோபு 2:21 நம்முடைய பிதாவாகிய ஆபிரகாம் தன் குமாரன் ஈசாக்கைப் பலிபீடத்தின்மேல் செலுத்தினபோது, கிரியைகளினாலேஅல்லவோ நீதிமானாக்கப்பட்டான்? இந்த வசனங்கள் எழுதப்பட்டது முதல் நூற்றாண்டில் சகோதரரே, 7ம் அல்லது 8ம் நூற்றாண்டில் இல்லை.



Quote:
இது குறித்து குர்ஆன் வசனத்தை பார்த்து விட்டு வருவோம். (இஸ்மவேல்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்: 'என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!' (மகன்) கூறினான்¢ 'என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். கர்த்தர் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்.' (அல்குர்ஆன்: 37:102 ) இந்த குர்ஆன் வசனம், ஆப்ரஹாம் பலியிட முடிவெடுத்தது இஸ்மவேலைதான் என்று தெளிவாக அறிவிக்கின்றது. குர்ஆனை ஒப்புக் கொள்ள மனமில்லாதவர்கள் ஆப்ரஹாம் பலியிட நாடியது ஈசாக்கைதான் என்று வலிய அவர் பெயரைத் திணித்துள்ளார்கள்.


------------------ என் மறுப்பு: ------------------ குர்-ஆனில் இந்த வசனத்தில் முதலில் "இஸ்மவேல்" தான் பலியிடப்பட்டது என்று பெயர் வருகிறதா அல்லது அந்தப் பெயரை அடைப்பு குறிக்குள் இடுகிறீர்களா? குர்-ஆன் குறிப்பிட்டு "இஸ்மவேல்" தான் என்றுச் சொல்வதில்லை, அரபிக் குர்-ஆனில் "இஸ்மவேல்" என்ற வார்த்தை இந்த வசனத்தில் உள்ளதா என்று பாருங்கள்.(எனக்கு அரபி தெரியாது, எனவே, வசனத்தை அரபியில் இருந்தால், சொல்லுங்கள்) ஹதீஸ்களிலிருந்து இஸ்மவேல் என்று தெரிந்துக்கொண்டு இங்கு "இஸ்மவேல்" என்று மொழி பெயர்த்துள்ளீர்கள். ஆனால், "இஸ்மவேல்" என்று இந்த வசனம் சொல்வதில்லை.

37:100 رَبِّ هَبْ لِي مِنَ الصَّالِحِينَ குர்-ஆன் 37:100 "என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக" (என்று பிரார்த்தித்தார்).

37:101 فَبَشَّرْنَاهُ بِغُلَامٍ حَلِيمٍ எனவே, நாம் அவருக்கு பொறுமைசாலியான ஒரு மகனைக் கொண்டு நன்மாராயங் கூறினோம். 37:102 فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانظُرْ مَاذَا تَرَى قَالَ يَا أَبَتِ افْعَلْ مَا تُؤْمَرُ سَتَجِدُنِي إِن شَاء اللَّهُ مِنَ الصَّابِرِينَ பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்; "என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!" (மகன்) கூறினான்; "என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்." நான் www.tamililquran.com , www.chittarkottai.com/quran/index.php என்ற தளங்களை தேடிவிட்டேன், நீர் சொன்னது போல, அடைப்பு குறிக்குள் "இஸ்மவேல்" பெயர் இல்லையே? வேறு ஏதாவது மொழி பெயர்ப்பு இருந்தால் சொல்லவும். இந்த இரண்டு தளங்களிலும் "அம்மகன்" என்று தான் வருகிறது.

Quote:
பைபிள் என்ன சொல்கின்றது? அப்போது அவர்: உன் புத்திரனும் உன் ஏக சுதனும், உன் நேசக்குமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக் கொண்டு மோரியா தேசத்துக்குப் போய், அங்கு நான் உனக்கு குறிக்கும் மலைகள் ஒன்றின் மேல் அவனை தகனபலியாக பலியிடு என்றார் (ஆதியாகமம் 22:2) இந்த வசனத்தில் பலியிட கர்த்தர் சொன்னது ஈசாக்கைதான் என்று வருகின்றது. ஆனால் பைபிளின் இந்த வசனத்தையும் இதே அத்தியாயத்தில் இது குறித்து வந்துள்ள மற்ற வசனங்களையும் ஊன்றி கவனிக்கும் போது இஸ்மவேல் என்ற பெயர் எடுக்கப்பட்டு ஈசாக் என்ற பெயர் அங்கு திணிக்கப்பட்டுள்ளது என்பதை விளங்கலாம். எப்படி? நாம் குறிப்பிட்டுள்ள இந்த தகனபலி வசனத்தில் கர்த்தர் 'உன் புத்திரன்' 'ஏகசுதன்' என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறார். 'ஏகசுதன்' என்றால் ஒரேமகன் என்று பொருள். உன்புத்திரனாகிய ஒரேமகனைப் பலியிடு என்பது கர்த்தரின் உத்திரவு. இந்த சம்பவம் நடக்கும் போது ஆப்ரஹாமிற்கு ஈசாக்கு மட்டும் தான் மகனாக இருந்தாரா... நிச்சயம் இல்லை. ஈசாக்கிற்கு முன்பே இஸ்மவேல் பிறந்து விட்டார். ஆகார் அபிராமுக்கு இஸ்மவேலை பெற்றபோது அபிராம் என்பத்தாறு வயதாயிருந்தான். (ஆதியாகமம் 16:16) தனது எண்பத்தாறாவது வயதில் ஆப்ரஹாமிற்கு முதல் குழந்தையான இஸ்மவேல் பிறக்கின்றார். தன் குமாரனாகிய ஈசாக்கு பிறந்த போது ஆபிரகாம் நூறு வயதாயிருந்தான்.(ஆதியாகமம் 21:5) இந்த இரண்டு வசனங்களில் இருக்குழந்தைகளுக்கும் 14 ஆண்டுகள் இடைவெளி இருந்ததை விளங்கலாம். இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகு தகனபலி பற்றி கர்த்தர் சொல்லி இருந்தால் நிச்சயமாக 'ஏகசுதன்' என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்க முடியாது. ஏகசுதன் என்ற வார்த்தையை கர்த்தர் பயன்படுத்துவதிலிருந்தே பலியிட சொன்ன போது ஆப்ரஹாமிற்கு ஒரே மகன் தான் இருந்துள்ளார் என்பது சந்தேகத்திற்கிடமின்றி விளங்குகின்றது. இஸ்மவேல் மட்டும் மகனாக இருந்த சந்தர்பத்தில் கர்த்தரிடமிருந்து வந்த உத்தரவில் ஈசாக்கின் பெயர் எப்படி வந்தது?

என் மறுப்பு: ------------------ இஸ்லாமிய நண்பரே, ஆதியாகமம் 21ம் அதிகாரத்திலேயே, ஆகாரையும், இஸ்மவேலையும் தேவன் தனியே அனுப்பிவிட்டார், அதுவும் அசீர்வதித்து அனுப்பிவிட்டார், நீர் சொல்வது போல இஸ்மவேலை சிறப்பித்து, அனுப்பிவிட்டார். இதை ஆபிரகாமே செய்தார். நீர் கூட இந்த கட்டுரையின் முதலில், பைபிள் சிறப்பித்த இஸ்மவேல் என்றுச் சொல்லி, அந்த வசனங்களை சொல்லியிருந்தீர். ஆதியாகமம்: 21:9. பின்பு எகிப்து தேசத்தாளாகிய ஆகார் ஆபிரகாமுக்குப் பெற்ற குமாரன் பரியாசம்பண்ணுகிறதைச் சாராள் கண்டு,10. ஆபிரகாமை நோக்கி, இந்த அடிமைப் பெண்ணையும் அவள் மகனையும் புறம்பே தள்ளும்; இந்த அடிமைப் பெண்ணின் மகன் என் குமாரனாகிய ஈசாக்கோடே சுதந்தரவாளியாயிருப்பதில்லை என்றான்.11. தன் மகனைக்குறித்துச் சொல்லப்பட்ட இந்தக் காரியம் ஆபிரகாமுக்கு மிகவும் துக்கமாயிருந்தது.12. அப்பொழுது தேவன் ஆபிரகாமை நோக்கி, அந்தப் பிள்ளையையும், உன் அடிமைப்பெண்ணையும் குறித்துச் சொல்லப்பட்டது உனக்குத் துக்கமாயிருக்க வேண்டாம்; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்; ஆதலால் சாராள் உனக்குச் சொல்வதெல்லாவற்றையும் கேள்.13. அடிமைப்பெண்ணின் மகனும் உன் வித்தாயிருக்கிறபடியால், அவனையும் ஒரு ஜாதியாக்குவேன் என்றார். ஈசாக்கை பலியிடச் சொன்னது ஆதியாகமம் 22ம் அதிகாரம். இஸ்மவேலை தேவன் ஆசீர்வதிப்பேன், பிரபுக்களை உண்டாக்குவேன் என்றுச் சொல்லிவிட்ட பிறகு நடந்த விவரங்கள். எனவே, ஆதியாகமம் 22:2ம் வசனத்தில் சொன்ன "ஏகசுதன்" இஸ்மவேல் இல்லை, "ஈசாக்கு" தான். இனி உம் விருப்பம்: 1) பைபிளில் இஸ்மவேலை தேவன் பாலைவனத்தில் பிள்ளையோடு இருந்து, ஆசீர்வதித்தார் என்பதை நம்புவீரோ (ஆதியாகமம் 21ம் அதிகாரம்) அல்லது, 2) இந்த பலியிட்டது (ஆதியாகமம் 22ம் அதிகாரம்) இஸ்மவேல் என்பதை நம்புவீரோ, இனி எல்லாம் உம் கையில். பலியிட்டது "இஸ்மவேல்" என்றுச் சொன்னீர் என்றால், இந்த உம்முடைய கட்டுரையின் "கருவே - பைபிள் புகழும் இஸ்மவேல்" பாதிக்கப்படும் அல்லது பொய்யாகிவிடும். இஸ்மவேலை பைபிள் புகழும் வசனங்கள் நீர் காட்டியது, பாலை வனத்தில் ஆகாரையும், இஸ்மவேலையும் தேவன் ஆசீர்வதிக்கும் போது சொன்ன வசனம்.


Quote:
இந்தக் கேள்வியைக் கேட்டால் கிறிஸ்த்தவ போதகர்கள் என்ன பதில் சொல்வார்கள் என்பதையும் நம்மால் யூகிக்க முடிகின்றது. 'இஸ்மவேல் ஆகாருக்கு பிறந்தவர், ஆகார் ஒரு அடிமைப் பெண், எனவே ஆகாருக்கு பிறந்தக் குழந்தையை சொந்தக் குழந்தையாக எடுத்துக் கொள்ள முடியாது என்பதே அவர்களின் பதிலாக இருக்க முடியும். இதுதான் அவர்களின் பதில் என்றால் அதற்கான விளக்கத்தையும் நாம் பார்த்து விடுவோம். ஒருவன் எந்தப் பெண்ணுடன் சேர்ந்து அவனால் அந்தப் பெண் கர்ப்பம் தரித்து குழந்தைப் பெற்றெடுத்தால் அந்தக் குழந்தைக்கு அவன் தான் தகப்பனாவான். இதுதான் உலக நியதி. பெண்ணின் விருப்பமில்லாமல் பாலியல் வல்லுறவில் ஒருவன் ஈடுபட்டு அவள் கர்ப்பம் தரித்தால் கூட நீதிமன்றம் அந்தக் குழந்தைக்கு அவன் தான் தந்தை என்று தீர்பளிக்கும். ஆகார் அடிமைப் பெண்ணாய் இருந்து விட்டுப் போகட்டும். அந்தப் பெண் கர்ப்பம் தரிப்பதற்கு காரணமாக இருந்தது யார். ஆப்ரகாம் அந்தப் பெண்ணுடன் கூடி அதனால் அந்தப் பெண் கர்ப்பம் தரித்துள்ளார் என்று தெளிவாக தெரிந்த பிறகும் அது ஆப்ரஹாமின் குழந்தை அல்லவென்று எப்படி கூற முடியும். இஸ்மவேல் அடிமைப் பெண்ணுக்கு பிறந்ததால் அவரை மகன் என்று எடுத்துக் கொள்ள முடியாது என்று கிறிஸ்த்தவ உலகம் வியாக்யானம் பேசினால் அதையும் பைபிள் மறுத்து விடுகின்றது

------------------ என் மறுப்பு: ------------------ நீங்கள் சொன்னது போல, கிறிஸ்தவ குருக்கள் போல, நான் சொல்ல மாட்டேன். இஸ்மவேல் அபிரகாமின் மகன் தான். நாங்கள் ஏற்றுகொள்கிறோம். ஆனால், என் வாதம் என்ன ? தேவன் பலியிடச் சொன்னபோது, இஸ்மவேல் அங்கு வீட்டில் இல்லை, ஆபிரகாமின் வீட்டில் இல்லை, உங்கள் கூற்றுப்படி, பைபிள் இஸ்மவேலை சிறப்பித்து தனியே அனுப்பிவிட்டது. சிம்பில்.


:
அபிரகாம் கானான் தேசத்தில் பத்து வருஷம் குடியிருந்த பின்பு ஆபிரகாமின் மனைவியாகிய சாராய் எகிப்து தேசத்தாளான தன் அடிமைப் பெண்ணாகிய ஆகாரை அழைத்து அவளை தன் புருஷனாகிய ஆபிரகாமுக்கு மறுமணையாட்டியாக் கொடுத்தாள். (ஆதியாகமம் 16:3) சட்டப்படி இரண்டாம் மனைவியாக ஆகாரை முதல் மனைவியே தேர்ந்தெடுக்கின்றார். ஆகார் மனைவி என்ற அந்தஸ்த்தில் வந்த பிறகே ஆபிரகாம் அந்த மனைவியுடன் சேர்ந்து இஸ்மவேலை பெற்றெடுக்கிறார். கர்த்தர் எந்த ஒரு இடத்திலும் ஆகாரை ஆப்ரகாமின் மனைவியல்ல என்று குறிப்பிடவில்லை. ஆப்ரகாமும் இஸ்மவேலை தன் மகனல்ல என்று எந்த இடத்திலும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப்போனால் ஆப்ரகாமின் மனநிலையை கர்த்தர் எப்படி வெளிபடுத்துகிறார் என்று பாருங்கள். ஆப்ரகாமுடைய நுனித்தோல் மாம்சம் விருத்தசேதனம் பண்ணப்படும் போது அவன் தொண்ணூற்றொன்பது வயதாயிருந்தான். அவனுடைய குமாரன் இஸ்மவேலுடைய நுனித்தோலின் மாம்சம் விருத்தசேதனம் பண்ணப்படும் போது அவன் பதிமூன்று வயதாயிருந்தான். (ஆதியாகமம் 17:23-25) ஆபிரகாமை நோக்கி: இந்த அடிமைப் பெண்ணையும் அவள மகனையும் புறம்பே தள்ளும். இந்த அடிமைப் பெண்ணின் மகன் என் குமாரனாகிய ஈசாக்கோடே சுதந்திரவாளியாயிருப்பதில்லை என்றாள். தன் மகனைக்குறித்துச் சொல்லப்பட்ட இந்தக் காரியம் ஆபிரகாமுக்கு மிகவும் துக்கமாயிருந்தது. (ஆதியாகமம் 21:10-11) இஸ்மவேலை அபிரகாமும் - கர்த்தரும் சொந்த மகன் என்று வாக்குமூலம் கொடுத்திருக்கும் போது அதற்கு மாற்றமாக மத குருக்கள் சொன்னால் அதை கிறிஸ்த்தவ அறிவாளிகள் யாரும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். நாம் இதில் எடுத்துக் காட்டியுள்ள பைபிள் வசனங்கள் அதற்கான விளக்கங்கள் இவற்றை நிதானத்தோடு ஊன்றி படிக்கும் யாவரும் இஸ்லாத்திற்கான அழைப்பின் வாசல் பைபிளில் இருக்கின்றது என்பதை கண்டுக் கொள்வார்கள்.

------------------ என் மறுப்பு: ------------------ //கர்த்தர் எந்த ஒரு இடத்திலும் ஆகாரை ஆப்ரகாமின் மனைவியல்ல என்று குறிப்பிடவில்லை. ஆப்ரகாமும் இஸ்மவேலை தன் மகனல்ல என்று எந்த இடத்திலும் சொல்லவில்லை// பைபிளில் உள்ள வசனங்களை நான் தருகிறேன்: கீழே உள்ள வசனங்களைப் பார்த்தால், தேவன் "ஆகாரை" சாராளின் அடிமை அலல்து வேலையாள் என்று அழைக்கிறார். தனக்கு சாராள் நாச்சியார்(முதலாளி) என்றுச் ஆகார் சொல்லுகிறார். a) கர்த்தருடைய தூதனானவர் ஆகாரை அடிமைப்பெண் என்றுச்சொல்கிறார்: ஆதியாகமம்: 16:7-8 ஆகாரும் தன்னை "ஆபிரகாமின் மனைவி என்றுச் சொல்லிக்கொள்ளவில்லை" தன்னை சாராளின் ( நாச்சியார் ) அடிமைப்பெண் என்றே சொல்கிறாள். கர்த்தருடைய தூதனானவர் கூட "ஆபிரகாமின் மனைவியே அல்லது ஆகாரே என்றுச் சொல்லாமல்" சாராளின் அடிமைப்பெண்ணே என்றுத் தான் அழைக்கிறார். ஆதியாகமம் 16:7-8 16:7. கர்த்தருடைய தூதனானவர் அவளை வனாந்தரத்திலே சூருக்குப்போகிற வழியருகே இருக்கிற நீரூற்றண்டையில் கண்டு, 16:8. சாராயின் அடிமைப்பெண்ணாகிய ஆகாரே, எங்கேயிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்? என்று கேட்டார்; அவள், நான் என் நாச்சியாராகிய சாராயைவிட்டு ஓடிப்போகிறேன் என்றாள். மற்றொரு இடத்தில் "ஆகாரே" என்று அழைக்கிறார், தேவதூதனானவர். ஆதியாகமம்: 21: 12. அப்பொழுது தேவன் ஆபிரகாமை நோக்கி, அந்தப் பிள்ளையையும், உன் அடிமைப்பெண்ணையும் குறித்துச் சொல்லப்பட்டது உனக்குத் துக்கமாயிருக்க வேண்டாம்; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்; ஆதலால் சாராள் உனக்குச் சொல்வதெல்லாவற்றையும் கேள். 13. அடிமைப்பெண்ணின் மகனும் உன் வித்தாயிருக்கிறபடியால், அவனையும் ஒரு ஜாதியாக்குவேன் என்றார். ஆதியாகமம்: 21:17. தேவன் பிள்ளையின் சத்தத்தைக் கேட்டார்; தேவதூதன் வானத்திலிருந்து ஆகாரைக் கூப்பிட்டு ஆகாரே, உனக்கு என்ன சம்பவித்தது, பயப்படாதே, பிள்ளையிருக்கும் இடத்திலே தேவன் அவன் சத்தத்தைக் கேட்டார் b) ஆபிரகாம் ஆகாரை அடிமைப்பெண் என்றுச்சொல்கிறார் ஆதியாகமம்: 16:6 ஆதியாகமம் 16:6 16:6. அதற்கு ஆபிராம் சாராயை நோக்கி, இதோ உன் அடிமைப்பெண் உன் கைக்குள் இருக்கிறாள்; உன் பார்வைக்கு நலமானபடி அவளுக்குச் செய் என்றான். அப்பொழுது சாராய் அவளைக் கடினமாய் நடத்தினபடியால் அவள் அவளைவிட்டு ஓடிப்போனாள் மேலே சொன்ன வசனங்களில் தேவனும், அபிரகாமும், "அடிமைப் பெண்ணே" என்று தான் அழைக்கிறார். மற்றொரு இடத்தில் தேவதுதன் "ஆகாரே" என்று அழைக்கிறார். இப்படி இருக்க எப்படிச் சொல்கிறீர் நீர், "தேவன் அழைக்கவில்லை என்று"? ஒன்று செய்யலாம் நீர், இந்த வசனங்களை நம்பவேண்டாம். அவ்வளவு தான், பைபிளில் இருக்கும் வசனம் இல்லை என்று எப்படிச் சொல்கிறீர் ? //இஸ்மவேலை அபிரகாமும் - கர்த்தரும் சொந்த மகன் என்று வாக்குமூலம் கொடுத்திருக்கும் போது அதற்கு மாற்றமாக மத குருக்கள் சொன்னால் அதை கிறிஸ்த்தவ அறிவாளிகள் யாரும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.// இப்போது பிரச்சனையே, மதகுருக்கள் சொன்னதால் அல்ல, "பைபிள்" சொன்னதால் தான். கிறிஸ்தவ குருக்கள் என்ன தங்கள் கையில் "எபிரேய" பைபிளை வைத்துக்கொண்டு "இதில் இப்படி உள்ளது" நம்புங்கள் என்றுச் சொல்கிறார்களா? எங்களிடம் தமிழில், ஆங்கிலத்தில் பைபிள் இல்லையா? அவர்கள் சொல்வதைக்கேட்டு அப்படியே நம்பிவிடுவதற்கு?


Quote:
எந்த தேவன் மோசேயை அனுப்பினாரோ எந்த தேவன் இயேசுவை அற்புதமான முறையில் தேர்ந்தெடுத்து அனுப்பினாரோ அதே தேவன் தான் முஹம்மத் அவர்களை இஸ்மவேலின் வம்சாவழியில் பிறக்க செய்து இறைத்தூதராக்கி அவரைப் பின்பற்ற சொல்லியுள்ளான். இயேசுவை ஏற்போம் முஹம்மதை புறக்கணிப்போம் என்று யாராவது முடிவெடுத்தால் அவர் முஹம்மதை புறக்கணிக்கவில்லை. மாறாக இயேசுவை அனுப்பிய அந்த தேவனைப் புறக்கணிக்கிறார் என்பதே உண்மையாகும். கிறிஸ்த்தவ சகோதரர்கள் சிந்திப்பார்களா

------------------ என் மறுப்பு: ------------------ ஒரு விவரத்தை சொல்லட்டுமா, இயேசு தான் "மோசேயை" அனுப்பினார் தெரியுமா உமக்கு? ஆதியிலே வார்த்தை இருந்தது, அது தேவனிடத்தில் இருந்தது, அது தேவனாயிருந்தது. அந்த வார்த்தை இயேசுக் கிறிஸ்து. சரி, நாங்கள் கடைசியா எதை நம்புகிறோம் என்று சொல்லிவிடுகிறேன்: 1. இஸ்மவேல் ஆபிரகாமின் குமாரன் - ஆமென். 2. தேவன் இஸ்மவேலை அபரீதமாக ஆசீர்வதித்து வருகிறார், இன்னும் ஆசீர்வதிப்பார். - ஆமென். 3. கிறிஸ்தவர்கள் இஸ்மவேலை ஆபிரகாமுக்கும், ஆகாருக்கும் பிறந்தவர் என்பதை நம்புகின்றனர் - ஆமென். 4. தேவனுடைய வார்த்தை மாறாதது, அவர் கொடுத்த வாக்குத்தத்தம் "ஈசாக்கு" மூலமாக நிறைவேறியது. - ஆமென். 5. நாங்கள் இஸ்லாமியர்களை நேசிக்கிறோம், ஜெபிக்கிறோம், அதற்காக முகமதுவை நம்பவேண்டும் என்ற கட்டாயம் எங்களுக்கு இல்லை பைபிள் படி. ஜெபம் : எங்கள் அனைவரையும் நேசிக்கின்ற எங்கள் இயேசுவே, நீர் தான் வழி என்பதை எல்லாரும் அறியும் படி மனக்கண்களை திறந்தருளும். நானே வழி என்றுச் சொன்னீரே. உம்முடைய வழியில் நடக்க அருள் புரியும். இயேசுவின் பெயரில் ஜெபிக்கின்றேன்(றோம்) - ஆமென்.


Monday, July 9, 2007

இது தான் இஸ்லாம் வலை தளத்துக்கு பதில் 5

இது தான் இஸ்லாம் வலைதளத்துக்கு பதில், ஈஸா குர்-ஆன் வலைதளம் மீண்டும் கலக்கல்
http://isakoran.blogspot.com/

http://www.geocities.com/isa_koran//tamilpages/Rebuttals/JesusBirth-part4.html


நிஜாமுத்தீன் எழுதிய தொடர் - 5ன் மறுப்பு

இந்த தொடரில், நீஜாமுத்தீன் அவர்கள் பைபிளுக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுகளை வைக்கிறார்.

அ) இயேசுவின் உண்மை வரலாறு குர்-ஆனில் மட்டும் தான் கிடைக்கும், பைபிளில் கிடைக்காது என்று கூறுகிறார்.

ஆ) பைபிளில் சொல்லப்படாத "குழந்தை இயேசு அற்புதம்". இந்த இரண்டு குற்றச்சாட்டுகளுக்கும் சுருக்கமாக, இந்த கட்டுரையில் பதில் அல்லது மறுப்பு ஆதாரங்களோடு காண்போம்.

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

இயேசுவிற்கு நேர்ந்ததென்ன..!

பைபிளில் சொல்லப்படாத குழந்தை அற்புதம் (தொடர்-5)

பரங்கிப்பேட்டை ஜி. நிஜாமுத்தீன்

இக்கட்டுரைப் பற்றி கருத்து மேலதிக விளக்கம் சொல்ல எண்ணுபவர்கள் கீழ் கண்ட லிங்கில் பதிக்கலாம். http://idhuthanislam.blogspot.com/2006/09/5.html
இதுவரை வந்த நான்குத் தொடர்களில் இயேசுவின் தாயார் மரியாள் எந்த ஆணும் தீண்டாத நிலையில் கர்ப்பம் தரிக்க தயாராக வேண்டிய அவசியத்தையும், மன ரீதியாக அவரை இறைவன் தயார் படுத்திய விபரத்தையும் கண்டோம். இனி பைபிள் கண்டுக் கொள்ளாத குர்ஆன் மிக அற்புதமாக சொல்லக் கூடிய இயேசுவின் பால்ய நிலையைக் காண்போம். பிறந்த குழந்தை தன் தாயின் களங்கத்தை துடைத்தெறியும் விதமாகவும், தன்னைப் பெற்றெடுத்தத் தாய் எத்துனை புனிதமானவள் என்பதையும் காலாகாலத்திற்கும் மக்கள் விளங்கும் விதத்தில் அற்புதம் செய்தது. ஆனால் இதைப் பற்றி பைபில் கண்டுக் கொள்ளவே இல்லை. ஏன் இந்த வித்தியாசம்? அதை அறிவோம்.

மரியாளின் கற்பிற்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில் குர்-ஆன் இயேசுவின் பிறப்பைப் பற்றி நிகழ்ச்சிகளைச் சொல்கிறது. ஆனால், பைபிளில் மரியாளுக்கு எந்த களங்கமும் வராத விதத்தில் யோசேப்பிற்கு தெரியப்படுத்தி, மரியாளை யோசேப்பு தன்னிடத்தில் சேர்த்துக்கொள்ளும் படி செய்துள்ளார். எனவே, எது உண்மை என்பது இக்கட்டுரையை படிப்பவர்களுக்கு தெரியவரும்.

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:

பைபிளில். 18 இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாராகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடி வருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியால் கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது. 19. அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான். 20. அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளை சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது. 21. அவள் ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான். 22. தீர்க்கதரிசியின் மூலமாய்க் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது. 23. அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம். 24. யோசேப்பு நித்திரை தெளிந்து எழுந்து, கர்த்தருடைய தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே தன் மனைவியைச் சேர்த்துக்கொண்டு; 25. அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்து, அவருக்கு இயேசு என்று பேரிட்டான் (மத்தேயு அதிகாரம் 1) -------------------------------------------------------------------------------- 4. அப்பொழுது யோசேப்பும் தான் தாவீதின் வம்சத்தானும் குடும்பத்தானுமாயிருந்தபடியினாலே தனக்கு மனைவியாக நியமிக்கப்பட்டுக் கர்ப்பவதியான மரியாளுடனே குடிமதிப்பெழுதப்படும்படி, 5. கலிலேயா நாட்டிலுள்ள நாசரேத்தூரிலிருந்து யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊருக்குப்போனான். 6. அவ்விடத்திலே அவர்கள் இருக்கையில், அவளுக்குப் பிரசவகாலம் நேரிட்டது. 7. அவள் தன் முதற்பேறான குமாரனைப்பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள். (லூக்கா அதிகாரம் 2) --------------------------------------------------------------------------------
இயேசுவின் பிறப்புப் பற்றி அதாவது மரியாள் கர்ப்பம் தரித்து குழந்தைப் பெற்றெடுத்த பொழுதுவரை உள்ள விபரங்களை மத்தேயும் - லூக்காவும் மேற்கண்டவாறு சொல்லியுள்ளார்கள்.

பைபிளில் சொல்லப்பட்டது தான் சரியான தகவல் என்பதை இது வரை நாம் பார்த்த நான்கு மறுப்புக் கட்டுரைகளே நிருபிக்கின்றன.

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:
பரிசுத்த ஆவியால் மரியாள் கர்ப்பம் தரித்தால் என்பதில் சுவிஷேசம் எழுதியவர்களுக்கு மத்தியில் ஒத்த கருத்து உள்ளது. இனி குர்ஆன் இதுபற்றி என்ன சொல்கிறது என்பதை பார்த்து விட்டு வருவோம். குர்ஆனில். வானவர்கள் (மரியாளி)மரியமிடம் கூறினார்கள்: நிச்சயமாக இறைவன் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகன் பிறக்கப்போவது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அவர் பெயர் மஸீஹ், மர்யமின் மகன் ஈஸா (மரியாளின் மகன் இயேசு) என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார். (அல்குர்ஆன் 3:45) இது மரியமுக்கு (மரியாளுக்கு) சொல்லப்பட்ட சுப செய்தியாகும். இப்படி நடக்க வாய்ப்புள்ளதா.. என்ற சந்தேகம் மரியமுக்கு (மரியாளுக்கு) ஏற்படுகின்றது. அந்த சந்தேகத்தை அவர் வெளிபடுத்தவும் செய்கிறார். (மர்யம் இறைவனிடம்) கூறினார்: 'என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?' (அதற்கு) அவன் கூறினான்: 'அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் 'ஆகுக' எனக் கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது.' (அல் குர்ஆன் 3:47)

1. அல்லா ஏன் "இயேசுவை குறிப்பிடும் போது மரியாளின் குமாரன்" என்றுச் சொல்கிறார், இதனால் என்ன சொல்ல வருகிறார்? இயேசு மரியாளின் மகன் என்று புதிய ஏற்பாட்டில் "ஒரு இடத்தில்" மட்டும் தான் வருகிறது. அதுவும் தேவனோ அல்லது அவரது சீடர்களோ சொன்னது இல்லை, யூதர்கள் சொன்னது. பார்க்க மாற்கு: 6: 1-3
மாற்கு 6: 1-3
1. அவர் அவ்விடம் விட்டுப் புறப்பட்டு, தாம் வளர்ந்த ஊருக்கு வந்தார்;அவருடைய சீஷரும் அவரோடேகூட வந்தார்கள்.
2. ஓய்வு நாளானபோது, ஜெபஆலயத்தில் உபதேசம்பண்ணத்தொடங்கினார்.அநேகர் கேட்டு, ஆச்சரியப்பட்டு, இவைகள் இவனுக்கு எங்கே இருந்துவந்தது? இவன் கைகளினால் இப்படிபட்ட பலத்த செய்கைகள் நடக்கும்படிஇவனுக்குக் கொடுக்கப்பட்ட ஞானம் எப்படிப்பட்டது?
3. இவன் தச்சன் அல்லவா? மரியாளுடைய குமாரன் அல்லவா? யாக்கோபுயோசே யூதா சீமோன் என்பவர்களுக்குச் சகோதரன் அல்லவா? இவன்சகோதரிகளும், இங்கே நம்மிடத்தில் இருக்கிறார்கள் அல்லவா? என்றுசொல்லி, அவரைக் குறித்து இடறலடைந்தார்கள். புதிய ஏற்பாட்டில் இந்த (மாற்கு: 6: 1-3)இடம் தவிர "மரியாளின் குமாரன்" என்று வேறு எங்கும் நாம் பார்க்கமுடியாது. இயேசுவை குறிப்பிடும் இடங்களில் எல்லாம் "மரியாளின் மகன்" என்று அவரை குர்-ஆன் அறிமுகம் செய்கிறது. இதற்கு பல காரணங்கள் உண்டு.


1. இயேசு "தேவனின் குமாரன்" என்று எல்லா கிறிஸ்தவர்களும் முகமது காலத்தில் சொல்லிக்கொண்டு இருந்தார்கள். முகமதுவும் அப்படியே "தேவக்குமாரன்" என்றுச் சொன்னால், இஸ்லாம் பொய்யாகிவிடும் என்பதால் அவர் இயேசுவை "மரியாளின் மகன்" என்றுச் சொன்னார்.

2. இயேசுவின் தெய்வீகத்தன்மையை மறுக்கவேண்டும் என்பதனால், இயேசுவை "மரியாளின் மகன்" என்று அடிக்கடி முகமது சொல்லியுள்ளார், இயேசு "அல்லாவுடைய ரூவால்" ( பரிசுத்த ஆவியால்) பிறந்தாலும் சரி. 3. மற்ற தீர்க்கதரிசிகளைப் போல இயேசுவும் ஒரு "தீர்க்கதரிசி" மட்டும் தான் என்றுக் காட்ட "மரியாளின் மகன்" என்று அறிமுகப்படுத்துகிறது குர்-ஆன். 2. அல்லா ஏன் "இயேசுவை குறிப்பிடும் போது மஸீஹா" என்றுச் சொல்கிறார், இதனால் என்ன பிரச்சனை?(அல்லாவின் அறியாமை:) என்னதான் இயேசுவின் தெய்வீகத்தன்மையை மறுப்பதற்கு இயேசு "மரியாளின் மகன்" என்று அல்லா சொன்னாலும், தன்னை அறியாமலேயே "இயேசுவை மஸீஹா" என்றுச் சொன்னதினால், யூதர்களும், கிறிஸ்தவர்களும், அல்லாவின் வசனத்தை இறைவனின் வசனமாக ஏற்றுக்கொள்ளவில்லை. காரணம் என்ன? "மஸீஹா" என்றால் என்ன? அது இயேசுவிற்கு பொருந்தும் என்று ஏன் கிறிஸ்தவர்கள் சொல்கிறார்கள். யூதர்கள் ஏன் இன்னும் அந்த "மஸீஹா" வின் வருகைக்காக எதிர் நோக்கியுள்ளனர்? அல்லா இயேசுவின் பிறப்பைப் பற்றி முதன்முதலில் அறிமுகம் செய்யும்போது. இயேசுவின் பெயரை "மேசிய" (அ) "மஸிஹா" (Messiah) என்றுச் சொல்கிறார். குர்-ஆன் பதினோரு முறை இயேசுவை "மஸீஹா" என்றுக்கூறுகிறது.
குர்-ஆன்
குர்-ஆன் 3:45 மலக்குகள் கூறினார்கள்; 'மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்; மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்; குர்-ஆன் 4:157 இன்னும், 'நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை குர்-ஆன் 4:171 வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்; நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா மஸீஹ் குர்-ஆன் 4:172 (ஈஸா) மஸீஹும், (அல்லாஹ்வுக்கு) நெருக்கமான மலக்குகளும் அல்லாஹ்வுக்கு குர்-ஆன் 5:17 திடமாக எவர் மர்யமுடைய குமாரர் மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ் என்று கூறுகிறாரோ, அத்ததையோர் நிச்சயமாக நிராகரிப்போர் ஆகிவிட்டனர். 'மர்யமுடைய குமாரர் மஸீஹையும் அவருடைய தாயாரையும குர்-ஆன் 5:72 'நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய மஸீஹ் (ஈஸா) தான் அல்லாஹ்" என்று கூறுகிறவர்கள் உண்மையிலேயே நிராகரிப்பவர்கள் ஆகிவிட்டார்கள்; ஆனால் மஸீஹ் கூறினார்: குர்-ஆன் 5:75 மர்யமுடைய குமாரர் மஸீஹ் இறை தூதரேயன்றி வேறில்லை, குர்-ஆன் 9:30 யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் எள்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; குர்-ஆன் 9:31 அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்;
எப்போது இயேசுவை "மஸீஹா" என்று அறிமுகம் செய்தாரோ, அப்போதே இஸ்லாமுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் அல்லா, தன்னை அறியாமலேயே. 3. பைபிளில் மஸீஹா ( மேசியா )எபிரேய மொழியில் "மஸீஹா" என்றால் "அபிஷேகம் செய்யப்பட்டவர்" என்றுப்பொருள். கிரேக்க மொழியில் இதையே "கிறிஸ்தோஸ்" என்றுச் சொல்வார்கள். இவ்வார்த்தை தான் "கிறிஸ்து" என்று சொல்கிறோம். பழைய ஏற்பாட்டில் தீர்க்கதரிசிகளையும், இராஜாக்களையும், எண்ணையால் அபிஷேகம் செய்வார்கள் ( தலையில் ஊற்றுவார்கள்). யாத் 30:22-31, 1 சாமுவேல் 10:1, 16:12-13. கோரேசு என்ற அரசனை கூட தேவன் மேசிய (அபிஷேகம் செய்யப்பட்டவர்) என்றுச் சொல்கிறார். ஏசாயா: 45:1. கர்த்தராகிய நான் அபிஷேகம்பண்ணின கோரேசுக்கு முன்பாக ஜாதிகளைக் கீழ்ப்படுத்தி, ராஜாக்களின் இடைக்கட்டுகளை விழ்க்கும்படிக்கும், அவனுக்கு முன்பாக வாசல்கள் பூட்டப்படாதிருக்க, கதவுகளைத் திறந்துவைக்கும்படிக்கும், அவனைப்பார்த்து, அவன் வலதுகையைப் பிடித்துக்கொண்டு, அவனுக்குச் சொல்லுகிறதவது, ஆனால் பழைய ஏற்பாட்டில் தேவன் ஒரு "மேசியாவை" மட்டும் குறிப்பிட்டு பல அற்புதமான வசனங்கள் சொல்லியுள்ளார். அவர் யார் ? அவர் மற்ற அரசர்களைப்போல இல்லை. அவர் வித்தியாசமானவர்.
சங்கீதம்: 2:1 - 11
1. ஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதாக்காரியத்தைச் சிந்திப்பானேன்?
2. கர்த்தருக்கு விரோதமாகவும் அவர் அபிஷேகம்பண்ணினவருக்கு விரோதமாகவும், பூமியின் ராஜாக்கள் எழும்பிநின்று, அதிகாரிகள் ஏகமாய் ஆலோசனைபண்ணி,
3. அவர்கள் கட்டுகளை அறுத்து அவர்கள் கயிறுகளை நம்மைவிட்டு எறிந்துபோடுவோம் என்கிறார்கள்.
4. பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார்; ஆண்டவர் அவர்களை இகழுவார்.
5. அப்பொழுது அவர் தமது கோபத்திலே அவர்களோடே பேசி, தமது உக்கிரத்திலே அவர்களைக் கலங்கப்பண்ணுவார்.
6. நான் என்னுடைய பரிசுத்தபர்வதமாகிய சீயோன்மீதில் என்னுடைய ராஜாவை அபிஷேகம்பண்ணி வைத்தேன் என்றார்.
7. தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; கர்த்தர் என்னை நோக்கி, நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்
8. என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்;
9. இருப்புக்கோலால் அவர்களை நொறுக்கி, குயக்கலத்தைப்போல் அவர்களை உடைத்துப்போடுவீர் என்று சொன்னார்.
10. இப்போதும் ராஜாக்களே, உணர்வடையுங்கள் பூமியின் நியாயாதிபதிகளே, எச்சரிக்கையாயிருங்கள்.
11. பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள், நடுக்கத்துடனே களிகூருங்கள்.
12. குமாரன் கோபங்கொள்ளாமலும் நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ்செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்.
சங்கீதம்: 110 : 1, 4
1. கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி, நான் உம்முடைய சத்துருக்களை உமக்கு பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார். 4. நீர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராயிருக்கிறீர் என்று கர்த்தர் ஆணையிட்டார், மனம் மாறாமலுமிருப்பார்.
இந்த மேசிய எப்படிப்பட்டவர், மேலே பார்த்த வசனங்கள் நமக்குச் சொல்கிறது. இவர்: 1. தேவனுடைய குமாரன் . சங்கீதம்: 2:7 2. ஜாதிகளை(Countries) சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை சொந்தமாகவும் பெற்றுக்கொள்வார் சங்கீதம்: 2:8 3. இருப்புக்கோலால் நொறுக்குவார் , குயக்கலத்தைப்போல் அவர்களை உடைத்துப்போடுவார் சங்கீதம்: 2:9 4. ராஜாக்களே, உணர்வடையுங்கள் பூமியின் நியாயாதிபதிகளே, இவரைப்பற்றி எச்சரிக்கையாயிருங்கள் சங்கீதம்: 2:10 5. குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு அவரை முத்தஞ்செய்யுங்கள் சங்கீதம்: 2:11 6. தேவனுடைய வலது பாரிசத்தில் உட்காருவார். சங்கீதம்: 110:1 7. நிரந்தரமாக அவர் ஆசாரியராக இருப்பார். சங்கீதம்: 110:4 இந்த மேசிய மற்ற தீர்க்கதரிசிகளைப்போல, இராஜாக்களைப்போல அல்ல, இவர் இராஜாதி இராஜாவாக இருப்பார். எல்லாரையும் விட மேலானவராக இருப்பார். இவரைத் தான் கிறிஸ்தவர்கள் "மேசிய" என்றும், "கிறிஸ்து" என்று அழைத்தார்கள். மேசியா என்றால் என்னவென்று பொருள் தெரியாமல், அல்லா இயேசுவின் பெயர் "மஸீஹா" என்று சொல்லிவிட்டார். அல்லா "இயேசுவை மேசியா என்றுச் சொன்னதினால், இயேசு ஒரு தேவ குமாரன் என்றும், இராஜாதி இராஜா என்றும் " தன்னை அறியாமலேயே சொல்லியுள்ளார். தன் தலை மிது தானே மண்ணை அள்ளி போட்டுக்கொண்ட கதை தான்.


நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:
இறைவன் இதை மட்டும் சொல்லாமல் மேலும் இரு செய்திகளை சொல்கிறான். ஏற்கனவே ஜகரிய்யா வீட்டில் வளர்ந்த மரியம் அவர்கள் உளவியல் ரீதியாக தயாராகி இருந்ததை முந்தைய தொடர்களில் கண்டோம். அதோடு சேர்த்து இறைவனின் இரு சந்தோஷமான செய்திகளும் மரியமை (மேரியை) அடைகின்றது. 1) உலகப் பெண்களில் அவர் சிறந்தவராக தேர்ந்தெடுக்கப்பட்டது. மரியமே! உம்மை இறைவன் தேர்வு செய்து தூய்மையாக்கி உலக பெண்கள் அனைவருக்கும் மேலாக உம்மை சிறப்பித்துள்ளான் என்று வானவர் கூறினார். (அல் குர்ஆன் 3:42) 2) குழந்தையால் ஏற்படும் சிறப்பும் பாதுகாப்பும். (உமக்கு பிறக்கும் குழந்தையாகிய அவர்) தொட்டில் பருவத்திலும் இளமையிலும் மக்களிடம் பேசுவார். மேலும் நல்லவர்களில் ஒருவராகவும் அவர் இருப்பார். (அல் குர்ஆன் 3:46) இந்த உரையாடல்கள் நடந்தப்பின்பு மரியம் கர்ப்பம் தரிக்கிறார். இறைவனின் வல்லமையை அவரது கர்ப்பப்பை உணர்கின்றது. காலங்கள் நகர்கின்றன. மரியமின் கர்ப்பம் அவர் வளர்ந்த வீட்டில் இருந்தவர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லை. ஏனெனில் அதே வீட்டில் மாதவிடாயெல்லாம் நின்று போய் கிழட்டுத் தன்மை தட்டி விட்ட ஜகரிய்யாவின் மனைவி (எலிசபத்து)க்கு யஹ்யா என்ற மகன் பிறந்துள்ளார். கணவனும் மனைவியுமாக இருப்பதால் அவர்களின் குழந்தையை அவர்கள் வாழ்ந்த பகுதி மக்கள் சந்தேகக் கண் கொண்டு பார்த்திருக்க மாட்டார்கள். முதிர்ந்த வயதில் குழந்தை பிறந்தாலும் இறைவனின் வல்லமை என்று அந்த மக்கள் விளங்கி இருப்பார்கள்.


மரியம் உலக பெண்களில் சிறந்தவர் என்பதில் எந்த கிறிஸ்தவருக்கும் சந்தேகமில்லை. உண்மையிலேயே மரியம் சிறந்தவர் தான். அவர் மட்டுமல்ல, அவர் கணவராகிய இயேசுவின் வளர்ப்புத் தந்தையும் சிறந்தவர்.


நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:
ஆனால் மரியமைப் பொருத்தவரை அந்தப் பகுதி மக்களுக்கு இந்த நம்பிக்கை வர வாய்ப்பில்லை. ஏனெனில் அவர் திருமணமாகாத கன்னிப் பெண்ணாக இருக்கிறார். இந்த சந்தர்பத்தில் அவர் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தால் எந்த மனித கண்ணும், மனமும் அதை வேறுவிதமாகத்தான் நோக்கும். அதனால் மர்யம் அவர்கள் கருவளர்ந்தப் பின்பு பேரீத்தப்பழங்களும் நீரோடையும் உள்ள ஒரு தூரமான இடத்தைப் பார்த்து அங்கு சென்று விடுகிறார்கள். அந்த இடத்தின் நிகழ்வுகளை குர்ஆன் சொல்கின்றது. கருவுற்று அக்கருவுடன் தூரமான இடத்தில் ஒதுங்கினார். பிரசவ வலி அவரை ஒரு பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்திற்குக் கொண்டு சென்றது. ''நான் இதற்கு முன்பே இறந்து, அடியோடு மறக்கடிக்கப்பட்டவளாக இருந்திருக்கக் கூடாதா?'' என்று அவர் கூறினார். ''கவலைப்படாதீர்! உமது இறைவன் உமக்குக் கீழே ஊற்றை ஏற்படுத்தியுள்ளான்'' என்று அவரது கீழ்ப்புறத்திலிருந்து வானவர் அழைத்தார். ''பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தை உலுக்குவீராக! அது உம் மீது பசுமையான பழங்களைச் சொரியும்'' (என்றார்)

குர்-ஆன் விளக்கும் இயேசுவின் பிறப்பு நிகழ்ச்சி நடைமுறைக்கு எவ்வளவு முரணாக இருப்பதை நாம் காணலாம். //அதனால் மர்யம் அவர்கள் கருவளர்ந்தப் பின்பு பேரீத்தப்பழங்களும் நீரோடையும் உள்ள ஒரு தூரமான இடத்தைப் பார்த்து அங்கு சென்று விடுகிறார்கள்.// குர்-ஆன் சொல்கிறது,
1. மரியாளின் பெற்றோர்கள் மரித்துவிடவே, வில் எரிந்து மரியாள் யார் வீட்டில் இருக்கவேண்டும் என்று முடிவு செய்தார்கள். மரியாள், தேவ மனிதர் ஜகரியா(சகரியா) வீட்டில் வளர்க்கப்பட்டார்கள். 2. அல்லா, மரியாளுக்கு உணவு அளித்து அற்புதம் செய்தார். 3. ஜகரியாவிற்கும் வயதான காலத்தில் ஒரு குழந்தையை கொடுத்தார். இதுவும் ஒரு அற்புதம். 4. மரியாளுக்கு காபிரியேல் தூதன் இயேசுவின் பிறப்புச் செய்தியைச் சொன்னார், மரியாள் பரிசுத்த ஆவியால் கர்ப்பம் தரித்தார்கள். 5. ஊருக்கு வெளியே தூரமான இடத்திற்கு மரியாள் தஞ்சம் புகுந்தார். 6. மரியாள் அங்கேயே இயேசுவை பெறுகிறார்கள்.இதனால் இப்போது பிரச்சனை என்ன? என்று கேள்வி கேட்கலாம். முதலில் கீழே உள்ள கேள்விகளை படியுங்கள், குர்-ஆன் சொல்வது சாத்தியம் தானா என்று அப்போது புரியும்?
1. மேற்கண்ட செய்திகளை படிக்கும் போது, மரியாள் ஜகரியா வீட்டில் சேர்க்கப்பட்டது, ஊரில் எல்லாருக்கும் தெரிந்த செய்தி . (இப்போது இருப்பது போல பல இலட்ச மக்கள் ஒரு ஊரில் இருந்திருக்க மாட்டார்கள்.) 2. ஜகரியா தேவ மனிதர் எனவே, அவர் வீட்டில் யார் யார் இருக்கிறார்கள் என்று எல்லாருக்கும் தெரியும் . 3. குர்-ஆன் சொல்வது போல, மரியாள் கர்ப்பம் ஆனவுடன், அல்லது சில மாதங்கள் கழித்து கூட, தனியாக ஒரு இடத்திற்கு சென்று விட்டால்? ஊர்க்காரர்களுக்கு அது தெரியாமல் போகுமா ? 4. மரியாளுக்கு அல்லா, உணவு அளித்து அற்புதம் செய்தபோது, அது ஊரில் எல்லாருக்கும் தெரிந்து இருக்கும், ஊரில் மரியாள் ஒரு முக்கியமான "நபராக", எல்லாருக்கும் தெரிந்த புகழ்பெற்ற நபராக மாறியிருந்திருப்பார்கள். 5. இந்த சூழ்நிலையில், சில மாதங்கள் (1-9 மாதங்கள்), மரியாள், ஜகரியாவின் வீட்டில் இல்லாமல் போனால், ஊர்காரருக்கு தெரியாமல் போகுமா? 6. ஜகரியாவிடம் இதைப்பற்றிக் மக்கள் கேட்டுயிருப்பார்களே, ஜகரியாவின் பதில் என்னவாக இருந்திருக்கும்? இதற்கு குர்-ஆனில் பதில் இல்லை. 7. ஜகரியா ஒன்றும் சாதாரண மனிதன் இல்லை, தன் வீட்டில் இரண்டு அற்புதங்கள் இதுவரை நடந்துள்ளது. யஹ்யா(யோவான்) பிறப்பு ஒரு அற்புதம், மரியாளுக்கு அல்லா, உணவு அளித்தது ஒரு அற்புதம். 8. ஊரைவிட்டு எவ்வளவு தூரம் சென்றாலும், மக்கள் மரியாளை கண்டுயிருப்பார்கள். அப்போது அவர் கர்ப்பமாக இருப்பது தெரிந்துயிருக்கும். உடனே, யூதர்களின் முறைமையின் படி, கல்லெரிந்து கொன்றுயிருப்பார்கள். இதற்கு குர்-ஆனிடம் பதில் இல்லை. 9. பல மாதங்கள் ஒரு பெண் அதுவும் கர்ப்பமான ஒரு பெண், மனித நடமாட்டமில்லாத இடத்தில் எப்படி இருக்கமுடியும் ? உணவு, பாதுகாப்பு, உடை, மிருகங்களிலிருந்து பாதுகாப்பு, ஒரு காட்டில் அல்லது பாலைவனத்தில் எப்படி கிடைக்கும் ? இதற்கு பதில் உண்டா? 10. உலக பெண்களில் உயர்ந்த இடத்தை கொடுத்த பெண்ணிற்கு அல்லா கொடுக்கும் சன்மானம் இது தானா?
பிரசவ வலியால் துடித்த மரியாள், உணவுக்கு ஏற்பாடு செய்த அல்லா!
மரியாள் பிரசவ வலியால் துடித்துக்கொண்டு இருக்கிறார், ஆனால், அல்லா மரியாளுக்கு வலி போக்கும் மார்க்கத்தை காட்டவில்லை. அதற்கு பதிலாக உணவுக்கு வழி காட்டுகிறார். குழந்தை பிறந்த பிறகு தான் உணவு தேவைப்படுமே தவிர, வலி எடுக்கும் போது இல்லை. இது எல்லா பெண்களுக்கும், ஆண்களுக்கும் தெரிந்த விஷயம். இதில் இன்னொரு பிரச்சனை என்னவென்றால், மரியாள் ஏற்கனவே, பேரிச்ச மரங்கள்(உணவு), நீரோடை உள்ள இடத்தில் தான் இருக்கிறார்(குர்-ஆன் படி). அப்படி இருக்கும் போது, பிரசவ வலியால் மரியாள் துடிக்கும் போது,
நீரோடையை அல்லா ஏன் உருவாக்கி தருகிறேன் என்றுச் சொல்கிறார்?
ஏற்கனவே, உணவு, நீர் மரியாள் இருக்கும் இடத்தில் உண்டே? பிரசவ வலியால் துடிக்கும் மரியாள், பேரிச்சை மரத்தின் அடிபாகத்தை உலுக்கச் சொன்ன அல்லா:
என்ன கொடுமையடா இது?
மரியாள் தன் உயிரே போகும் அளவிற்கு வலியால் துடித்துக்கொண்டு இருக்கிறார். இதற்கு முன்பே செத்துப் போயிருந்தால், நலமாக இருக்குமே என்று கதரும் அளவிற்கு அவர் வலி அதிகமாகியது. ஆனால், அல்லா என்ன சொல்கிறார் என்றுப் பாருங்கள். //''பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தை உலுக்குவீராக! அது உம் மீது பசுமையான பழங்களைச் சொரியும்'' (என்றார்) //
வலியால் துடிக்கும் பெண் உணவுக்காக அதுவும், "பேரிச்சை மரத்தின் அடிபாகத்தை" பிடித்து உலுக்கவேண்டுமாம். ஒருவேளை இதை படிப்பவர்கள் பெண்களாக (அதுவும் பிள்ளைகளை பெற்றவர்களாக) இருந்தால், இது சாத்தியமா அல்லது இது சரிதானா, நியாயமா? என்று சிந்தித்துப் பாருங்கள். இது தான் உலக பெண்களிலெல்லாம் உயர்ந்த இடத்தை பிடித்த பெண்ணிற்கு அல்லா காட்டும் அன்பா? குழந்தை பெறும் போது வலி வரக்கூடாது என்று நான் சொல்லவரவில்லை. அந்த நேரத்தில் அல்லா சொன்ன வார்த்தை அல்லது செய்யச் சொன்ன செயல், உலகத்தில் வேறு எந்த பெண்ணுக்காவது வந்திருக்குமா? இப்படிச் சொல்வது அறிவுடமையாகுமா? சிந்தியுங்கள். குழந்தை பிறந்த பிறகு தேவைப்படுமே அந்த உணவைப் பற்றி அல்லா சொல்கிறார் என்றுச் சொல்லாதீர்கள். பிரசவ வலி உயிரை குடிக்கும்போது, சாப்பாட்டிற்கு தேவையானவற்றை சேகரித்துக்கொள் என்றுச் சொல்வது எந்த வகையில் அறிவுடமையாகும் என்று சிந்தித்துப் பாருங்கள். அல்லா சொன்னாலும், சொல்லாவிட்டாலும், தனக்கு பசித்தால் மரியாள் சாப்பிடாமல் இருந்திருப்பார்களா? அவர் தான் பல மாதங்களாக நீரோடையும் (தண்ணீரும்), பேரிட்சை மரங்கள் (உணவு) உள்ள இடத்தில் இருக்கிறார்களே?
முடிவாக, 1. மரியாள் இப்படி தூரமான இடத்திற்கு சென்றது, நடைமுறைக்கு ஒத்துவராக ஒரு செய்தி. 2. பிரசவ வலி எடுக்கும் போது, சாப்பாட்டு பற்றிப் பேசுவதும், ஒரு சம்மந்தமில்லாத செய்தி. 3. மொத்தத்தில் குர்-ஆன் சொல்லும் இச்செய்திகளை அறிவுடமையுடையவர்கள் ஏற்றுக்கொள்வதற்கு எந்த ஒரு சரியான ஆதாரமும் இல்லை.

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:
நீர், உண்டு பருகி மன நிறைவடைவீராக! மனிதர்களில் எவரையேனும் நீர் கண்டால் ''நான் அளவற்ற அருளாளனுக்கு நோன்பு நோற்பதாக நேர்ச்சை செய்து விட்டேன். எந்த மனிதனுடனும் பேச மாட்டேன்'' என்று கூறுவாயாக ! (அல் குர்ஆன் 19: 22-26)

"பேச மாட்டேன்" என்று "பேசச் சொன்ன" அல்லா: இந்த வசனத்தில் அறியாமை எப்படி வெளிப்படுகிறது என்றுப் பாருங்கள். இங்கு குர்-ஆன் எப்படி முரண்படுகிறது என்றுப் பாருங்கள்:
1. இவ்வசனத்தின் படி பார்த்தால், மனிதர்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் மரியாள் இருப்பதாக அறிகிறோம். 2. நான் இறைவனுக்கு நோம்பு "மௌன விரதம்" இருக்கிறேன் என்று, மரியாள் சொன்ன மாத்திரத்தில், அந்த விரதம் கலைந்துவிடாதா? 1. மனிதர்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் மரியாள் இருப்பதாக அறிகிறோம். நான் மேலே சொன்னது போலவே, "மனிதர்களில் யாரையாவது நீ கண்டால்" என்று அல்லா சொல்வதிலிருந்து புரிந்துவிடுகிறது, மரியாள் மனித நடமாட்டம் உள்ள இடத்திலே தான் இருக்கிறார் அல்லது மனிதர்களின் நடமாட்டம் உள்ள இடத்தின் அருகாமையில் இருக்கிறார். அப்படி மனிதர்கள் கண்டுயிருந்தால், யூதர்கள் கல்லெரிந்தல்லவா கொன்று இருப்பார்கள்? அந்த இடத்திற்கு 9 மாதங்களாக ஒரு மனிதனும் அவ்வழியாக வரவில்லையா? 2. நான் இறைவனுக்கு நோம்பு "மௌன விரதம்" இருக்கிறேன் என்று, மரியாள் சொன்ன மாத்திரத்தில், அந்த விரதம் கலைந்துவிடாதா? முன்னுக்கு பின் முரணாக ஒரு வார்த்தையை அல்லா சொல்கிறார். பேச மாட்டேன் என்று நோம்பு(விரதம்) இருந்தால், யாராவது கேட்கும் போது "பேச மாட்டேன்,விரதம் இருக்கிறேன்" என்றுச் சொன்னால், விரதம் கலைந்து விடும் அல்லவா, மற்றும் கேட்கிறவன் என்ன நினைப்பான்? பேச மாட்டேன் என்று விரதம் இருந்து பேசிவிட்டாளே என்று நினைக்கமாட்டான்? ஒரு வேளை, மரியாள் அல்லா சொல்வது போல் சொல்லியிருந்தாலும், அல்லது சைகை காட்டி பேசியிருந்தாலும், "குழந்தை யாருடையது" என்று அடுத்த கேள்வி கேட்டுயிருக்க மாட்டான் அவன்? இதற்கெல்லாம், குர்-ஆனில் பதில் இல்லை.


நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:
இதுவரை நாம் கண்ட சம்பவங்களில் பெரிய அளவிளான கருத்து வேற்றுமைகள் எதுவும் இல்லை. மரியமுக்கு மனம் முடிப்பதற்காக நிச்சயிக்கப்பட்டிருந்தவரைப் பற்றி குர்ஆன் எங்கும் குறிப்பிடவில்லை. குழந்தை வழியாக மரியம் மிகப் பெரிய அளவில் சிறப்பிக்கப்படவிருப்பதால் மற்ற சாதாரண விஷயங்களை இறைவன் சொல்லாமல் இருந்திருக்கலாம்.

அப்படி என்றால், உம்முடைய கூற்றுப்படி, யோசேப்பு என்ற ஒரு "நபரோடு" ஏற்கனவே மரியாளுக்கு திருமண நிச்சயதார்தம் நடந்ததுள்ளது (பைபிள் சொல்வதும் இதுவே).
மரியாளுக்கு நிச்சயிக்கப்பட்ட யோசேப்பு பற்றி குர்-ஆன் ஒன்றும் குறிப்பிடவில்லை அல்லவா. இதனால் வரும் பிரச்சனை என்ன தெரியுமா? இது வரை குர்-ஆன் சொன்னதாக சொல்லிக்கொண்டு வரும் நிகழ்ச்சிகள் அனைத்தும் பொய் என்பதை இது காட்டுகிறது. எப்படி ? மேற்கொண்டு படியுங்கள். மரியாள் ஜகரியாவின் வீட்டில் இருந்து காணாமல் (தூர இடத்திற்கு) போனது, யோசேப்பிற்குத் தெரியுமா? இக்கேள்விக்கு இரண்டு பதில்கள் சொல்லலாம். 1. யோசேப்பிற்குத் தெரியாது 2. யோசேப்பிற்குத் தெரியும் என்பதே.
1) யோசேப்பிற்கு தெரியாது என்று வைத்துக்கொள்வோம்:
1. யோசேப்பிற்கு தெரியாது என்றுச் சொன்னால், தன் மனைவி பற்றி இவர் ஜகரியாவிடம் கேட்டுயிருப்பார் அல்லவா? அதற்கு ஜகரியா என்ன பதில் சொல்லியிருப்பார்? 2. எனக்கு தெரியாது என்று சாதாரணமாக ஜகரியா சொல்லியிருப்பாரா? அப்படி சொல்லியிருந்தால், இதை யோசேப்பு ஏற்றுக்கொண்டு இருப்பாரா? 3. எனக்கு மரியாள் சொல்லிவிட்டு போகவில்லை. எங்கே போனாள் என்று கூட தெரியாது, என்றுச் சொல்லியிருப்பாரா ஜகரியா? 4. ஜகரியாவை சும்மா விட்டுயிருப்பார்களா யோசேப்பும், மற்ற ஊர் மக்களும்? 5. ஜகரியா எந்த பதில் சொன்னாலும், மரியாள் அவர் வீட்டில் இல்லை என்பது உண்மை(குர்-ஆன் படி), அப்போது யோசேப்பும் மற்றவர்களும் மரியாளைத் தேடி சென்று இருக்கமாட்டார்களா? இவர்கள் தேடினாலும் மரியாள் கண்டுபிடிக்காமல் போவதற்கு, மரியாள் என்ன பல நூறு அல்லது ஆயிரம் மைல்களுக்கு அப்பால் சென்று இருப்பார்களா? இந்த கேள்விகளுக்கு குர்-ஆனிடம் பதில் இல்லை.2) யோசேப்பிற்கு தெரியும் என்று வைத்துக்கொள்வோம்: உண்மையாகவே தன் மனைவி ஆகப்போகிறவள், இறைவனுடைய ஆவியால் கர்ப்பம் தரித்தால் என்று யோசேப்பிற்கு தெரிந்து இருந்தால்,
1. இது வரை குர்-ஆன் சொல்லும் மரியாளின் தூரப்பயணம், 2. பல மாதங்கள் தனிமை வாழ்வு, 3. உதவி செய்ய யாரும் இல்லாததால் மரியாளின் பிரசவ வலி கதரல், 4. பிரசவ வலி நேரத்திலும் மரத்தின் அடிபாகத்தை உலுக்கவேண்டிய கட்டாயம்,உணவிற்காக 5. மனிதர்களிடம் சொல்லவேண்டிய பொய்கள், "விரதம் இருக்கிறேன் பேச மாட்டேன்" என்று "பேசிய" மரியாள் 6. தன் ஜனங்களுக்கு முன்பாக தனிமையாக நிற்கவேண்டிய நிலை இவை எல்லாம் வீண் தானே ? இதற்கு பதிலாக பைபிள் சொல்வது போல, யோசேப்பிற்கு தூதர்கள் உண்மையைச் சொல்ல, தன் மனைவியை தன்னிடம் சேர்த்துக்கொண்டு, பைபிள் சொல்வது போல இயேசு பிறக்கும் வரை, மரியாளை கணவன் என்ற முறையில் தொடாமல், பாதுகாப்பு அளித்து, எந்த அவதூறு பெயரும் மரியாளுக்கு வராமல், அல்லா செய்து இருக்கலாம் அல்லவா? //குழந்தை வழியாக மரியம் மிகப் பெரிய அளவில் சிறப்பிக்கப்படவிருப்பதால் மற்ற சாதாரண விஷயங்களை இறைவன் சொல்லாமல் இருந்திருக்கலாம்// மரியாளுக்கு யோசேப்போடு நிச்சயமானது சாதாரண விஷயம் அல்ல, இது தான் மிக முக்கியமான விஷயம். இயேசு குழந்தை அற்புதத்திற்கு அடுத்து, யோசேப்பு மரியாளை திருமணம் செய்துக்கொண்டாரா இல்லையா? இயேசு குழந்தை அற்புதம் கண்டு மரியாளை ஏற்றுக்கொண்ட யோசேப்பு, ஒரு தூதனோ, அல்லாவோ முன்பே சொல்லியிருந்தால், ஏற்றுக்கொண்டு இருக்கமாட்டாரா? இத்தனை பாடுகள் மரியாளுக்கு தேவையே இல்லாமல் போகுமே? இதற்கெல்லாம் பதில் சொல்லமுடியுமா? பார்த்தீர்களா எத்தனை பிரச்சனைகள், சிக்கல்கள், குர்-ஆன் சொல்லும் நிகழ்ச்சிகளில், சிந்திக்க வேண்டும் இஸ்லாமிய நண்பர்களே? ஆனால், பைபிள் சொல்கிறது, யோசேப்பிற்கு தூதன் விஷயத்தைச் சொல்கிறான், யோசேப்பு தன் மனைவியை ஏற்றுக்கொள்கிறான். ஊரில் உள்ளவர்களுக்கோ மரியாள் கர்ப்பம் ஆனது ஒரு சாதாரண விஷயம் (யோசேப்பு மூலம் மரியள் கர்ப்பம் ஆனார் என்று நினைத்துக்கொண்டார்கள்). எந்த பிரச்சனையும் இல்லை. எது நடைமுறைக்கு ஏற்றது, பைபிள் சொல்வதா? அல்லது குர்-ஆன் சொல்வதா? என்று சிந்தியுங்கள்.

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:
இனி பைபிள் கண்டுக் கொள்ளாத, குர்ஆனில் மட்டுமுள்ள இயேசுவின் முதல் அற்புதத்தையும் அதனால் மரியாளுக்கு ஏற்பட்ட உலகச் சிறப்பையும் பார்ப்போம். பெற்றெடுத்த பிஞ்சுக் குழந்தையுடன் தன் சமூகத்திற்கு மரியம் திரும்பினார். திருமணமாகாத ஒரு கன்னிப் பெண் அதிலும் நல்லக் குடும்பத்தில் பிறந்தப் பெண் கைக்குழந்தையுடன் வருவதைக் கண்ட அந்த பகுதி மக்கள், .(பிள்ளையைப் பெற்று) அப்பிள்ளையைத் தமது சமுதாயத்திடம் கொண்டு வந்தார். ''மர்யமே! விபரீதமான ஒரு காரியத்தைச் செய்து விட்டாயே?'' என்று அவர்கள் கேட்டனர். (அல் குர்ஆன் 19:27) ''ஹாரூனின் சகோதரியே! உனது தந்தை கெட்டவராக இருந்ததில்லை. உனது தாயும் நடத்தை கெட்டவராக இருக்கவில்லை'' (என்றனர்)( அல்குர்ஆன் 19:28). அவர் குழந்தையைச் சுட்டிக் காட்டினார்! ''தொட்டிலில் உள்ள குழந்தையிடம் எவ்வாறு பேசுவோம்?'' என்று அவர்கள் கேட்டார்கள் (அல் குர்ஆன் 19:29).


குர்-ஆன் சொல்லுகின்ற, "இயேசு குழந்தையாக இருக்கும் போது செய்த அற்புதம்", எகிப்து தேசத்தில் தோன்றிய அரபி தள்ளுபடி ஆகமமான "The first Gospel of the Infancy of Christ" என்ற புத்தகத்திலிருந்து எடுத்தது. ----------------------------------------------------------- The Book : Infancy Gospel of Jesus ----------------------------------------------------------- இந்த தள்ளுபடி புத்தகம், இயேசுவின் சீடர்களால் எழுதப்பட்டதல்ல. இது 2ம் அல்லது 3ம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. ஆனால், புதிய ஏற்பாட்டின் சுவிசேஷங்கள் எல்லாம், முதல் நூற்றாண்டிலேயே எழுதி முடிக்கப்பட்டது. இந்த புத்தகத்தில் தான் இயேசு குழந்தையாக இருக்கும் போது பேசியதாக வசனம் வருகிறது. அதை முகமது குர்-ஆனிலும் சேர்த்துவிட்டார்.
Wikipedia Encyclopedia says about Gospel of the Infancy of Christ : The Infancy Gospel of Thomas is a non-canonical text that was part of a popular genre, aretalogy, of the 2nd and 3rd centuries — The text describes the life of the child Jesus, with fanciful, and sometimes malevolent, supernatural events, comparable to the trickster nature of the god- child in many a Greek myth. One of the episodes involves Jesus making clay birds, which he then proceeds to bring to life, an act also attributed to Jesus in the Qur'an, thus indicating the text may have had substantial influence on Arabic tradition by the 7th century. Source : http://en.wikipedia.org/wiki/Infancy_Gospel_of_Thomas
Britannica Encyclopedia Says about Gospel of the Infancy of Christ : ...of Mark, and Gospel of Philip) preserve some legends and myths found in the early Christian centres of Edessa, Alexandria, and Asia Minor. The First Gospel of the Infancy of Jesus (known also as the Arabic Infancy Gospel ), for example, recounts that, one day, Jesus and his playmates were playing on a rooftop and one fell down and... Source: http://www.britannica.com/eb/topic-208181/First-Gospel-of-the-Infancy-of-Jesus இந்த புத்தகத்தின் முதல் 3 வசனங்களிலேயே இயேசு குழந்தையாக இருக்கும் போது தன் தாயாகிய மரியாளிடம் பேசியதாக எழுதப்பட்டுள்ளது.
1st Gospel of the Infancy of Christ - Verse 2 and 3
இயேசு குழந்தையாக இருக்கும் போது பேசியதாக எழுதப்பட்டுள்ளது
வசனம் 3: மரியாளே, காபிரியேல் தூதன் உனக்கு சொன்னது போல நான் தேவனுடைய குமாரனாகிய இயேசு, உலகத்தின் இரட்சிப்பிற்காக என் பிதா என்னை அனுப்பியுள்ளார்.
2. He relates that Jesus spoke even when he was in the cradle and said to his mother :
3. Mary, I am Jesus the Son of God, that word which you brought forth according to the declaration of the angel Gabriel to you, and my Father has sent me for the salvation of the world.
இந்த புத்தகத்தை முழுவதுமாக இங்கு படிக்கலாம்:
http://wesley.nnu.edu/biblical_studies/noncanon/gospels/infgos1.htm http://www.pseudepigrapha.com/LostBooks/infancy1.htm http://ministries.tliquest.net/theology/apocryphas/nt/infancy1.htm
இதில் மற்றுமொறு முரண்பாடு என்னவென்றால், மரியாளை ஆரோனின் சகோதரி என்று அழைப்பது. ஆரோன் என்பவர் மோசேயின் சகோதரர் ஆவார். அவர் மரியாளுக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர். இந்த முரண்பாட்டைப் பற்றி நாம் இதற்கு முந்தைய மறுப்புகளில் கண்டோம். இந்த அற்புதம் நடைபெறவில்லை, இப்படி மரியாள் தனியாகச் சென்று 9 மாதங்கள் தனிமையில் இருந்தார்கள் என்பதும் வெறும் குர்-ஆன் சொல்லும் கதைகளே தவிர இவைகள் நடைமுறைக்கு ஏற்றதல்ல.

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:
அந்தப் பகுதி மக்கள் வெளிபடுத்திய வார்த்தைகளிலிருந்து மரியாளின் குடும்பம், அவர் வளர்ந்தக் குடும்பம் எத்துனை கண்ணியமான குடும்பமாக இருந்துள்ளது என்பதை விளங்கலாம். அத்தகைய சிறப்பான குடும்பத்தில் பிறந்த - வளர்ந்த ஒரு கன்னிப் பெண் திருமணம் ஆகாத நிலையில் கையில் குழந்தையுடன் வந்து நிற்கிறார். இப்போது அந்த மக்களின் தூற்றலுக்கும் நக்கல் பேச்சுக்கும், குத்தலுக்கும் யாரால் பதில் சொல்ல முடியும? அந்த சந்தர்பத்தில் 'தான் குற்றமற்றவள்' என்று மரியாள் எத்துனை வலுவாக வாதாடினாலும் அதை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் மட்டுமல்ல என்றைக்கும் எவரும் அந்த வார்த்தையை பொருட்படுத்தவே மாட்டார்கள். ஏனெனில் உலக நடப்பும் சூழ்நிலையும் அப்படி. மரியம் தன் நிலையை எவ்வளவு விளக்கினாலும் அதை பிற மனிதர்களால் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதால் தான் இறைவன் மரியாளை 'நீ பேச வேண்டாம்' என்று சொல்லி விட்டான். அந்த சந்தர்பங்களில் மரியாள் பேசுவது அர்த்தமற்றதாகவே கருதப்படும். 'தவறையும் செய்து விட்டு, குழந்தையையும் பெற்றுக் கொண்டு, எப்படி வீண் விதண்டாவாதம் செய்கிறாள்' என்றுதான் சமுதாயம் தூற்றும். அதனால் அந்த சந்தர்பத்தில் மரியம் வாய் மூடி மெளனமாக இருப்பதே அறிவார்ந்த செயலாகும். இறைவன் மிகத் தெளிவாக இதை மரியாளுக்கு உணர்த்தி விட்டான்.


அல்லா என்ன சொல்கிறார் என்றுப் பாருங்கள். //நீர், உண்டு பருகி மன நிறைவடைவீராக! மனிதர்களில் எவரையேனும் நீர் கண்டால் ''நான் அளவற்ற அருளாளனுக்கு நோன்பு நோற்பதாக நேர்ச்சை செய்து விட்டேன். எந்த மனிதனுடனும் பேச மாட்டேன்'' என்று கூறுவாயாக! (அல் குர்ஆன் 19: 22-26)// தான் மௌன விரதம் இருப்பதாக பேசச் சொல்கிறார். மௌன விரதம் இருந்துக்கொண்டு எப்படி பேசுவது - இது தான் குர்-ஆன்.

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:
தான் குற்றமற்றவள் என்பது நிரூபிக்கப்பட வேண்டும். அது தான் பெற்ற குழந்தை அதை உலகிற்கு உணர்த்தும் என்பதை இறைவனின் அறிவிப்பால் உணர்ந்திருந்த மரியாள் அந்த மக்களின் கேள்விக்கு பதிலளிக்கும் முகமாக குழந்தையின் பக்கம் செய்கை செய்கிறார். மரியமுக்கு எதிராக குற்றச்சாட்டு வைத்த அந்த மக்களுக்கு ஆச்சரியம். நாங்கள் உன்னிடம் கேள்விக் கேட்டால் நீ குழந்தையை காட்டுகிறாயே.. தொட்டில் குழந்தையிடம் நாம் எவ்வாறு பேசுவோம்? என்று கேட்கிறார்கள். அப்போதுதான் அந்த அற்புதம் நடக்கின்றது. மரியம் சுமந்து வந்த அந்தக் குழந்தைப் பேசுகின்றது. நான் கர்த்தரின் அடிமையாக இருக்கிறேன். அவர் எனக்கு வேதத்தைக் கொடுத்து என்னை தூதராகவும் ஆக்கி இருக்கிறார். நான் எங்கிருந்தாலும் என்னைப் பாக்கியம் பொருந்தியவனாக ஆக்கி இருக்கிறார். நான் உயிருடன் இருந்து தாயாருக்கு பணிவிடை செய்யும் காலமெல்லாம் தொழுதுவருமாறும், ஜக்காத் (என்ற பொருளாதார பங்கீடல்) கொடுத்து வருமாறும் ஏவப்பட்டுள்ளேன். நான் பிறந்த நாளிலும், நான் மரணிக்கும் நாளிலும், மீண்டும் உயிர் பெற்று எழும் நாளிலும் என்மீது சாந்தி நிலவும் என்று அந்தக் குழந்தைக் கூறிற்று. (அல் குர்ஆன் 19:30,31,32,33)


இதற்கு முன்பே நாம் பார்த்தோம், இயேசு குழந்தையாக இருக்கும் போது பேசியது, இரண்டாம் அல்லது மூன்றாம் நூற்றாண்டில் தோன்றிய புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது என்று. இயேசு "ஜகாத்" பற்றிப் பேசியது, உண்மையா என்பதை இப்போது பார்க்கலாம்.1. ஜகாத் என்ற பொருளாதார பங்கிடு: ஜகாத் என்பது ஒவ்வொரு முஸ்லீம் சகோதரர்களும் கொடுக்கும் பணம், ஜகாத் என்பது இயேசுவின் காலத்தில் இல்லை. இது முகமது உருவாக்கியது. இயேசுவிற்கு பின்பு 500 வருடங்களுக்கு பிறகு முகமது உருவாக்கிய "ஜகாத்" பற்றி இயேசு பேசுவது ஒரு குர்-ஆனின் வெளிப்படையான சரித்திர பிழையாகும்.
"ஜகாத்" பற்றி தமிழ்முஸ்லீம் தளம் என்ன சொல்கிறது என்றுப்பாருங்கள். http://tamilmuslim.blogspot.com/2005/05/blog-post_28.htmlஒரு முஸ்லிம், ஓராண்டில் தன் கையிருப்பில் உள்ள பணம், நகை உள்ளிட்டவற்றில் 2.5% ஜகாத்தாக கொடுக்க வேண்டும். யாருக்கு கொடுக்க வேண்டும்? குர் ஆனிடமே கேட்போம்.(ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்பவர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன்பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிபவர்களுக்கும்), வழிப்போக்கருக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன். (9:60) // 2. யூதர்கள் கொடுப்பது "ஜகாத்" அல்ல, அது "தசம பாகம்": சில இஸ்லாமியர்கள் சொல்லலாம், யூதர்களும் ஜகாத் கொடுத்தார்கள் என்று. யூதர்கள் கொடுத்தது "ஜகாத்" அல்ல, அது "தசம பாகம்". யூதர்கள் கொடுத்த "தசம பாகமும்", இஸ்லாம் சொல்லும் "ஜகாத்தும்" ஒன்றல்ல, இவைகள் வெவ்வேறானவை. இதில் கூட குர்-ஆன் அல்லது முகமது ஒரு முரண்பாட்டை செய்துள்ளார். "ஜகாத்திற்கும்" "தசமபாகத்திற்கும்" உள்ள வித்தியாசங்கள்: 1. ஜகாத் என்பது வருடத்திற்கு ஒரு முறை கொடுப்பது. தசம பாகம் என்பது நம் வருமானத்தில் அது ஒரு நாள் சம்பளமாகவோ, வார சம்பளமாகவோ அல்லது மாதசம்பளமாகவோ இருக்கலாம். அதிலிருந்து கொடுப்பது. 2. ஜகாத் 2.5%, தசமபாகம் 10%. 3. ஜகாத் ஏழை எளிய மக்களுக்கு, இன்னும் இதர தர்மங்களுக்கு, தசம பாகம் சபைக்கு அல்லது சர்ச்சிற்குத் அதன் தேவைகளை சந்திப்பதற்காகத் தருவது. கிறிஸ்தவத்தில் தானதருமங்கள் வேறு தசமபாகம் வேறு. இயேசுவின் காலத்தோடு சம்மந்தப்படுத்தி "ஜகாத்" நான் கொடுப்பேன் என்று இயேசு சொன்னார் என்பது ஒரு வெளிப்படையான குர்-ஆன் முரண்பாடாகும்.

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:
பச்சிலங்குழந்தையான இயேசு தனது முதல் பேச்சிலேயே ஏராளமான விபரங்களை கூறியுள்ளார். அதை அறியுமுன் பவுலால் தொகுக்கப்பட்டு இயேசுவின் புத்தகம் என்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பைபிளில் இவ்வளவு பெரிய அற்புதம் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். உலகில் எங்குமே இதுவரையும் நடக்காத ஒரு அற்புதத்தை இயேசுவின் குழந்தைப் பருவம் அதிலும் பிறந்த சில நாட்களில் நடத்துகின்றது. இதை பைபிள் கண்டுக் கொள்ளவில்லை. திருமணமாகத கன்னிப் பெண் குழந்தைப் பெற்றெடுக்கிறாள் என்றால் நிச்சயம் சமூகம் தூற்றவே செய்யும். மரியாளுக்கு ஏற்பட்ட இந்த நிலையை அவர் எப்படி எதிர் கொண்டு தன்னை தூய்மையான பெண் என்பதை மக்கள் முன்னிலையில் நிரூபித்தார் என்ற விபரம் எதுவும் பைபிளில் கிடைக்கவில்லை.


1. குர்-ஆன் சொல்லும் குழந்தை அற்புதம், முதன் முதலாக எழுதியது, குர்-ஆனில் இல்லை. 2. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஒரு நூலிலிருந்து ஒரு அற்புதத்தை சொல்லிவிட்டு, நான் தான் முதலில் சொன்னேன் என்று மார்தட்டுவது, இஸ்லாமியர்களுக்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாமே ஒழிய, மற்றவர்களுக்கு அல்ல. 3. "The Gospel of Infancy of Christ" என்ற நூலில் ஏற்கனவே "இயேசு குழந்தையாக இருக்கும் போது பேசியதாக உள்ளது" அதை இஸ்லாமிற்கு ஏற்றவாரு மாற்றி சொல்லிவிட்டார் முகமது அல்லது அல்லா. // பவுலால் தொகுக்கப்பட்டு இயேசுவின் புத்தகம் என்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பைபிளில் இவ்வளவு பெரிய அற்புதம் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.// புதிய ஏற்பாட்டை தொகுத்தவர் "பவுல்" என்று சொல்வதிலிருந்து, அறியாமை வெளிப்படுகிறது. புதிய ஏற்பாட்டில் இத்தனை புத்தகங்கள் உள்ளது என்று பவுலுக்கே தெரியாது, எப்படி குர்-ஆனில் 114 அதிகாரங்கள் இருப்பது முகமதுவிற்கு தெரியாதோ அது போல. இயேசுவிற்கு அடுத்து, முதல் நூற்றாண்டிற்கு பின்பு பலபேர் பல புத்தகங்களை எழுதினார்கள். அதையெல்லாம் பைபிள் என்றும், அவைகளில் சொல்லப்பட்டது உண்மை என்றும் ஏற்றுக்கொண்டால் எப்படி? //மரியாளுக்கு ஏற்பட்ட இந்த நிலையை அவர் எப்படி எதிர் கொண்டு தன்னை தூய்மையான பெண் என்பதை மக்கள் முன்னிலையில்நிரூபித்தார் என்ற விபரம் எதுவும் பைபிளில் கிடைக்கவில்லை.// 4. குர்-ஆனில் சொல்லப்பட்ட நிகழ்ச்சிய்கள் (மரியாள் சம்மந்தப்பட்ட) எல்லாம் நடைமுறைக்கு முரணானது என்றுப் பார்த்தோம். அப்படி இருக்கும் போது யூத சமூகத்திற்கு மரியாளின் தூய்மையை தெரிவிக்கவேண்டிய அவசியமே பைபிள் படி இல்லையே. பின் ஏன் இல்லாத கதைகளை பைபிள் சொல்லப்போகிறது?

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:
மரியாள் திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் தரிக்கிறார் என்ற செய்தி சாதாரண ஒன்றல்ல. பைபிளின் வரலாறுபடி மரியாளுக்கு நிச்சயம் செய்யப்பட்டிருந்த யோசேப் என்ற கணவர் திருமணத்திற்கு முன் தனக்கு பேசிவைத்திருந்த பெண் கர்ப்பம் தரிக்கிறாள் என்பதை ஒத்துக்கொள்ள முடியாமல் அவளை தள்ளி விட (திருமணம் செய்யாமல் புறக்கணித்து விட வேண்டும்) என்று மனதிற்குள் எண்ணிய விபரத்தை பைபிள் கூறுகின்றது. 18 மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடி வருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியால் கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது. 19. அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான். (மத்தேயு) இந்நிலையில் தான் தேவத்தூதர்கள் யோசேபை சந்தித்து மரியாளின் நிலவரத்தைக் கூறுகிறார்கள். யோசேபு பிறகு சமாதானமடைகின்றார். யோசேபின் நிலையே இதுவென்றால் ஊர் மக்களின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். ஊர் மக்களைப் பற்றி பைபிள் கண்டுக்கொள்ளவே இல்லை.

ஊர் மக்களுக்கு தெரியவே வாய்ப்பு இல்லையே. யோசேப்பிற்கு தெரிந்தவுடனே, அவர் திருமணம் செய்துக்கொள்கிறார். இப்படி இருக்கும் போது, மரியாள் கர்ப்பமானது, யோசேப்பின் மூலம் என்று மக்கள் நினைத்துயிருப்பார்கள். எனவே, பிரச்சனை ஒன்றும் இல்லை. யோசேப்பு பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். 1. அவர் பைபிள் சொல்வது போல, நிச்சயமான பிறகு, தூதன் மூலம் அறிந்து மரியாளை ஏற்றுக்கொண்டாரா? 2. அல்லது, யோசேப்பு என்ற ஒரு நபரே மரியாளின் வாழ்வில் இல்லை என்றுச் சொல்கிறீர்களா? இதில் எதை நீங்கள் தெரிந்தெடுத்தாலும், உங்கள் குர்-ஆனின் நிகழ்ச்சிகள் உண்மையில்லை என்பது நிருபனமாகும்.

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:
இயேசுவின் சிறப்பையும், மரியாளின் கற்பொழுக்கத்தையும் திருக்குர்ஆன் மட்டுமே உலகிற்கு தெளிவாக எடுத்துச் சொல்கின்றது. இயேசு வளர்ந்து பெரியவராக ஆன பின் செய்த பல அற்புதங்களை விட பச்சிலங்குழந்தையாக இருக்கும் போது செய்த அற்புதம் தான் மிகப் பெரியதாகும். வளர்ந்தப்பின் செய்யுமம் அற்புதங்களுக்கு வேறு அர்த்தம் கற்பித்து விடலாம். இயேசுவின் அற்புதம் உட்பட பல இறைத்தூதர்களின் அற்புதங்களுக்கு அந்தந்தப் பகுதி மக்கள் வெவ்வேறு அற்புதம் கற்பித்தார்கள் என்பது பைபிள் உட்பட கூறும் வரலாற்று உண்மையாகும். அதே சமயம் குழந்தை செய்யும் அற்புதத்திற்கு யாரும் வேறு அர்த்தம் கற்பிக்க முடியாது. அது கலப்படமற்ற அற்புதமாகவே உலகிற்கு தெரியும். அப்படிப்பட்ட ஒரு அற்புதம் தான் இயேசுவின் குழந்தைப்பருவத்தில் நிகந்து அவர் அந்தப்பகுதி மக்களிடம் பேசியதாகும். இந்தப் பேச்சு அவரை இறைத்தூதர் என்றும் அவரது தாயார் மரியாள் கற்பு நெறித் தவறாத தூய்மையான பெண் என்றும் உலகிற்கு உணர்த்தியது. இன்றுவரையிலும் உலகின் இறுதிநாள் வரையிலும் அந்த அற்புதம் குர்ஆனில் பேசப்படுகின்றது. இந்த அற்புதத்தை பைபிள் கண்டுக்கொள்ளவில்லை.


குர்-ஆன் சொல்லும் இயேசுவின் குழந்தை அற்புதம் உண்மையில்லை என்பதை இயேசுவின் வாழ்க்கையிலிருந்தே தெரிந்துக்கொள்ளலாம். 1. ஒரு நாள் குழந்தை அல்லது சில நாள் குழந்தை பேசுவது என்பது, உலக அதிசயம்: குர்-ஆன் சொல்வது போல, மரியாள், குழந்தையை கொண்டுவருகிறார்கள், யூத ஜனங்கள் கேள்விகள் கேட்கிறார்கள், உடனே குழந்தை பேசுகிறது. என்னவாகியிருக்கும், இதை பார்க்கும் ஜனங்கள் தலை தெரிக்க ஓடியிருப்பார்கள், ஏதோ விபரீதம் நடக்கிறது என்றுச் சொல்லி ஓடி ஒளிந்துயிருப்பார்கள். சிலருக்கோ இதயமே நின்றுயிருக்கும். எல்லாரும் பயந்து போய், நடுங்கியிருப்பார்கள். 2. இயேசுவை சிறுவயதிலிருந்தே ஒரு தெய்வீக புருஷராக மதித்துயிருப்பார்கள், அவரை எதிர்த்து, சிலுவையில் அறைந்து (குர்-ஆன் படி சிலுவையில் அறைய பிடிக்க சென்று) இருக்க மாட்டார்கள். பிறந்த குழந்தை இப்படிப்பட்ட அற்புதம் செய்யுமானால், அந்த குழந்தையை ஒரு சாதாரண குழந்தையாக பார்க்கமுடியாது. இயேசுவிற்கு சிறுவயதிலிருந்தே ஒரு தனி மதிப்பு, மரியாதை, புகழ் எல்லாம் கிடைத்துயிருக்கும். காணிக்கைகள், பணம் என்று பரிசுகளைக் கொண்டுவந்து பலவாறு தங்கள் நம்பிக்கையை அக்குழந்தை மீது காட்டியிருப்பார்கள். நீங்கள் சொல்வது போல, பெரியவராக ஆனபிறகு செய்த அற்புதங்களுக்கு வேறு அர்த்தங்கள் சொன்னாலும், இந்த அற்புதம் வைத்துக்கொண்டு எல்லாம் சாதித்துவிடலாம். ஆனால் நடந்தது என்ன? ஒரு சாதாரண தச்சனின் மகனாக நடுத்தர வாழ்வை வாழ்ந்தார் இயேசு. எந்த வசதியில்லாமல் வாழ்ந்தார். இயேசு செய்த அற்புதங்களைப் பார்த்த ஆசாரியர்கள், யூத மக்கள், இவனுக்கு எப்படி இந்த வல்லமை கிடைத்தது, இவன் தச்சனின் குமாரன் அல்லவா? என்று ஆச்சரியப்பட்டார்கள்(மாற்கு: 6: 1-3). இன்னும் குர்-ஆன் சொல்வது போல, குழந்தை அற்புதம் நடந்து இருக்குமானால், இவ்விதம் அவர்கள் சொல்வதற்கு வாய்ப்பே இல்லை. இவன் தான் குழந்தையாக இருக்கும் போதே அற்புதம் செய்தவன் ஆயிற்றெ, இந்த அற்புதங்கள் என்ன புதுசா? என்றுச் சொல்லியிருப்பார்கள். எனவே, குழந்தை இயேசு அற்புதம் என்பது ஒரு கற்பனைக் கதையே தவிர வேறில்லை. இதற்கு பதில் சொல்லுங்கள், சுவிசேஷங்கள் எழுதிய சீடர்கள் இயேசுவின் எதிரிகளா? இல்லையே, தங்கள் தலைகளை இயேசுவிற்காக வெட்டித்தள்ள நீட்டியவர்கள். ஒருவேளை இந்த அற்புதம் நடந்துயிருக்குமானால், அதை எழுதுவதினால், தங்கள் மதிப்பு கூடுமே தவிர குறையாது. ஏன் ஒருவரும் சொல்லவில்லை, இயேசுவின் மீது கோபமா அல்லது இது ஒரு சாதாரண அற்புதமா? பின் ஏன் யாரும் எழுதவில்லை. காரணம் அது நடக்கவில்லை .

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:
இயேசுவின் முதல் பேச்சு குழந்தைப் பருவத்தில் நிகழ்ந்தது என்று குர்ஆன் சொல்லும் போது பைபிள் முதல் பேச்சை எப்படி சொல்கின்றது என்பதைப் பாருங்கள். அவருக்கு பனிரெண்டு வயதானபோது அவர்கள் அந்த பண்டிகை முறைமையின் படி எருசலேமுக்குப் போய்.......அப்போது அவருடைய தாயார் அவரை நோக்கி மகனே! ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய் இதோ உன் தகப்பனும் நானும் விசாரத்தோட உன்னைத் தேடினோமே என்றாள். அதற்கு அவர் 'நீங்கள் ஏன் என்னைத் தேடினீர்கள் என் பிதாவுக்கடுத்தவைகளில் நான் இருக்க வேண்டியதென்று அறியீர்களா என்றார். (லூக்கா 42-49) பைபிளின் நான்கு சுவிசேசக்காரர்களின் தொகுப்பிலும் இயேசுவின் முதல் பேச்சு இந்த இடத்தில் தான் சொல்லப்பட்டுள்ளது. அதாவது இயேசு தனது பணிரென்டு வயதுக்கு முன் பேசிய எந்த விபரமும் கிடைக்கவில்லை. பைபிளை மட்டுமே நம்பிக்கொண்டு திருக்குர்ஆன் பற்றிய எந்த சிந்தைனையுமில்லாத கிறிஸ்த்தவ சகோதரர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இயேசுவின் சரியான வரலாறு எங்கு கிடைக்குமென்று. குழந்தைப் பருவத்தில் இயேசு பேசிய வார்த்தைகள் அதன் ஆழம் அதிலிருந்து வேறுபடும் இன்றைய கிறிஸ்த்துவம் இனி அதுபற்றிப் பார்ப்போம். இறைவன் நாடட்டும்.


இயேசுவின் உண்மை வரலாறு பைபிளில் தான் கிடைக்கும். இயேசுவின் பிறப்பு விவரங்களை குர்-ஆன் விவரிக்கும் போது செய்த முரண்பாடுகளையும், சரித்திர பிழைகளையும் நாம் இதுவரை கண்ட மறுப்புகளில் கண்டோம். எனவே, இயேசுவின் உண்மை வரலாறு குர்-ஆனில் அல்ல பைபிளில் தான் கிடைக்கும். இயேசுவின் வரலாறு மட்டுமல்ல வேறு எந்த தீர்க்கதரிசியின் முழு வரலாறும் குர்-ஆனில் காணமுடியாது. அவ்வளவு ஏன், முகமதுவிற்குப் பிறகு 150 ஆண்டுகளுக்கு பின்பு தொகுக்கப்பட்ட ஹதீஸ்கள், டபரி, இஷாக் போன்றவர்கள் தொகுத்த சரித்திர நூல்கள் இல்லையானால், முகமது என்பவர் யார், அவர் எப்படி வாழ்ந்தார், என்ன பேசினார் என்றே தெரிந்திருக்காது. அல்லா இறக்கியதாகச் சொல்லப்படும் குர்-ஆன் மட்டும் வைத்துக்கொண்டு, மனிதர்கள் உருவாக்கிய ஹதீஸ்கள் உதவி இல்லாமல், முகமது யார் என்றுச் சொல்லமுடியுமா இஸ்லாமியர்களால்? குர்-ஆனில் வரும் நபர்களைப் பற்றி முழுவதுமாக அறிந்துக்கொள்ள வேண்டுமானால், நமக்கு பைபிள் வேண்டும். முகமதுவிற்கு குர்-ஆனில் ஏதாவது சந்தேகம் வந்தால், பைபிளை படிப்பவர்களிடம் கேட்டுத் தெரிந்துக்கொள்ள வேண்டுமென்று அல்லா முகமதுவிற்கு கட்டளையிடுகிறார். குர்-ஆன் 10:94 (நபியே!) நாம் உம் மீது இறக்கியுள்ள இ(வ்வேதத்)தில் சந்தேகம் கொளிவீராயின், உமக்கு முன்னர் உள்ள வேதத்தை ஓதுகிறார்களே அவர்களிடம் கேட்டுப் பார்ப்பீராக் நிச்சயமாக உம் இறைவனிடமிருந்து உமக்குச் சத்திய (வேத)ம் வந்துள்ளது - எனவே சந்தேகம் கொள்பவர்களில் நீரும் ஒருவராகி விட வேண்டாம். குர்-ஆன் 10:95 அன்றியும் அல்லாஹ்வின் வசனங்களை பொய்ப்பிப்போர்களில் ஒருவராக நீரும் ஆகிவிட வேண்டாம்; அவ்வாறாயின் நஷ்டமடைவோரில் நீரும் ஒருவராவீர். எனவே, இயேசுவின் பிறப்புப் பற்றிச் சொல்லும் குர்-ஆன் நிகழ்வுகள் முகமது தள்ளுபடி ஆகமங்களிலிருந்து எடுத்தார் என்பதும், இயேசு "ஜகாத்" என்பதைப் பற்றிப் பேசுவது ஒரு சரித்திர முரண்பாடு என்பதும் இந்த மறுப்பில் கண்டோம். மற்றும் மரியாளின் கணவன் யோசேப்பு மரியாளை எப்படி, எப்போது திருமணம் செய்துக்கொண்டார் என்பதைப் பற்றி குர்-ஆன் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. இதனால், குர்-ஆன் சொல்லும் மரியாளின் தூரப்பயணம், மற்றும் இதர நிகழ்வுகள் நடைமுறைக்கு ஒத்துவராததாக மாறுகிறது. பைபிள் சொல்லும் மரியாளின், இயேசுவின் சரித்திரமே சரியானது என்பதை இதன் மூலம் அறியலாம்.

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்