அன்புள்ள தம்பிக்கு உமர் எழுதும் கடிதம். நீ என்னுடைய முந்தைய கடிதத்தை படித்து இருந்திருப்பாய் என்று நம்புகிறேன். உன்னுடைய விருப்பத்தின் படியே, இஸ்லாமிம் பற்றிய சில விவரங்களை உன்முன் வைக்கிறேன். இதன் மூலம் நீ இஸ்லாம் பற்றி விவரமாக விளக்கலாம்.
மக்காவும் மதினாவும்:
முஹம்மது மக்காவில் இருக்கும் வரைக்கும் ஒரு அமைதியான, சகிப்புத்தன்மையுள்ள வாழ்க்கையை வாழ்ந்தார், மற்றவர்களும் அந்தப்படியே வாழும் படி கேட்டுக்கொண்டார். அல்லாஹ்வின் வசனங்களும் பெரும்பான்மையாக சகிப்புத்தன்மையுள்ள வசனங்களாகவே வந்து இறங்கின. ஆனால், அவர் மதினாவிற்கு வந்த பிறகு, ஆட்களின் பலம் அவருக்கு அதிகரித்த போது, அமைதி மார்க்கமாக இருந்த இஸ்லாம், சிறிது சிறிதாக வன்முறையில் ஈடுபட ஆரம்பித்தது. முஹம்மது மதினாவில் வாழ்ந்த அந்த 10 ஆண்டுகளில் இஸ்லாமுடைய ஆரம்பத்தை அப்படியே தலைகீழாக மாற்றிவிட்டார்.
இந்த கடிதத்தில், இஸ்லாமின் முதல் மூன்று வழிப்பறி கொள்ளைகள் பற்றி உனக்கு சுருக்கமாக விவரிக்கிறேன். இவைகளை ஆங்கிலத்தில் "Raid" என்பார்கள்.
என்னது? வழிப்பறி கொள்ளையா? இப்படியெல்லாம் இஸ்லாமில் நடைப்பெறவில்லை என்று நீ நினைக்கிறாயா? தம்பி தொடர்ந்து படி. மக்காவிலிருந்து மதினாவிற்கு ஹிஜ்ரி வந்த முதல் ஆண்டே முஹம்மது தம் கைவரிசயை காட்ட ஆரம்பித்துவிட்டார். மார்ச், ஏப்ரல் மற்று மே மாதங்களில் தொடர்ந்து வழிப்பறிக்காக ஆட்களை முஹம்மது அனுப்பினார். கீழ்கண்ட மூன்று வழிப்பறி கொள்ளைகள் மூலமாக, முஹம்மதுவிற்கு எந்த பொருளும் கிட்டவில்லை. மேலும் எந்த ஒரு உயிர்ச்சேதமும் நடைப்பெறவில்லை. சரி, வழிப்பறி கொள்ளைகள் பற்றி இப்போது படித்து அறிந்துக்கொள். அதன் பிறகு என் கேள்விகளை முன்வைக்கிறேன்.
முதல் வழிப்பறிக் கொள்ளை (First Raid): ஸய்ஃபுல் பஹர்
ஹிஜ்ரி 1, ரமழான் (கி.பி. 623 மார்ச்) மாதம் ஒரு படைப் பிரிவை நபி (ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். 30 முஹாஜிர்கள் இந்தப் பிரிவில் இடம்பெற்றனர். அவர்களுக்கு ஹம்ஜா(ரழி) அவர்களைத் தலைவராக ஆக்கினார்கள். ஷாமிலிருந்து மக்காவை நோக்கி வந்து கொண்டிருந்த குறைஷிகளின் வியாபாரக் குழுவை வழி மறிப்பதற்காக இவர்கள் சென்றார்கள். இந்த வியாபாரக் கூட்டத்தில் முந்நூறு நபர்களும் அவர்களுக்குத் தலைமையேற்று அபூஜஹ்லும் வந்து கொண்டிருந்தான். 'ஈஸ்' என்ற நகரத்தின் ஓரத்தில் உள்ள 'ஸய்ஃபுல் பஹ்ர்' எனும் இடத்தை இரு கூட்டத்தினரும் அடைந்த போது சண்டையிடுவதற்காக அணிவகுத்தனர். ஆனால், இரு கூட்டதினருக்கும் நண்பராக இருந்த மஜ்தி இப்னு அம்ர் அல்ஜுஹனி என்பவர் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி போரைத் தவிர்க்கச் செய்தார்.
இப்போல் நபி (ஸல்) ஹம்ஜாவுக்கு வெள்ளை நிறக் கொடியைக் கொடுத்தார்கள். இதுதான் நபி (ஸல்) அவர்கள் நிறுவிய முதல் கொடியாகும். இக்கொடியை அபூ மர்ஸத் கன்னாஸ் இப்னு ஹுஸைன் அல்கனவி (ரழி) ஏந்தியிருந்தார்கள்.
இரண்டாம் வழிப்பறிக் கொள்ளை (Second Raid): 'ராபிக்'
ஹிஜ்ரி 1, ஷவ்வால் (கி.பி. 623 ஏப்ரல்) மாதம் நபி (ஸல்) அவர்கள் 'ராபிக்' என்ற இடத்தை நோக்கி ஒரு படைப் பிரிவை அனுப்பினார்கள். இதற்குத் தலைவராக உபைதா இப்னுல் ஹாரிஸ் இப்னுல் முத்தலிப் (ரழி) இருந்தார். இப்படையில் 60 முஹாஜிர்கள் கலந்து கொண்டார்கள். இவர்கள் 'பத்தன் ராபிக்' என்ற இடத்தில் அபூஸுஃப்யானைச் சந்தித்தார்கள். இரு கூட்டத்தார்களும் ஒருவரை நோக்கி ஒருவர் அம்பெய்து கொண்டனர். மற்றபடி, உக்கிரமான சண்டை ஏதும் நடைபெறவில்லை.
காஃபிர்களின் படையிலிருந்த அல்மிக்தாத் இப்னு அம்ர் அல்பஹ்ரானி, உத்பான் இப்னு கஸ்வான் அல்மாஜினி ஆகிய இருவர் முஸ்லிம்களுடன் இணைந்து கொண்டனர். இவர்கள் முஸ்லிமாகத்தான் இருந்தனர். என்றாலும், ஹிஜ்ராவிற்காக மக்காவிலிருந்து வெளியேற முடியாத காரணத்தால், காஃபிர்களுடன் சேர்ந்திருந்தனர். எப்பொழுதாவது சந்தர்ப்பம் கிடைத்தால் தப்பித்து முஸ்லிம்களிடம் சேர்ந்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இந்த வியாபாரக் கூட்டத்துடன் வந்திருந்தனர்.
இந்தப் படையின் கொடி வெள்ளை நிறமாக இருந்தது. இதை மிஸ்தஹ் இப்னு உஸாஸா இப்னு அல் முத்தலிப் இப்னு அப்து மனாஃப் ஏந்தியிருந்தார்கள்.
மூன்றாம் வழிப்பறிக் கொள்ளை (Third Raid): 'கர்ரார்'
ஹிஜ்ரி 1, துல்கஅதா (கி.பி. 623 மே) மாதம் 'கர்ரார்' என்ற இடத்திற்கு ஸஅது இப்னு அபீ வக்காஸ் (ரழி) தலைமையில் படைப் பிரிவு ஒன்றை நபி (ஸல்) அனுப்பினார்கள்.
குறைஷிகளின் வியாபாரக் கூட்டத்தை இடைமறிப்பதற்காகப் புறப்பட்ட இவர்களிடம் 'கர்ரார்' என்ற இடத்தை தாண்டிச் செல்லக் கூடாது என நபி (ஸல்) அவர்கள வலியுறுத்தினார்கள். இந்தப் படை கால்நடையாகவே சென்றது. பகலில் பதுங்குவதும் இரவில் நடப்பதுமாக வியாழன் காலை கர்ராரை அடைந்தது. ஆனால், அந்த வியாபாரக் கூட்டமோ இவர்கள் சென்றடைவதற்கு ஒரு நாள் முன்னதாகவே அந்த இடத்தைக் கடந்து சென்று விட்டிருந்ததால், இவர்கள் சண்டையின்றித் திரும்பினர். இந்தப் படையின் கொடி வெள்ளை நிறமாக இருந்தது. இதை மிக்தாத் இப்னு அம்ர் (ரழி) ஏந்தியிருந்தார்கள்.
இவைகள் போர்களா? வழிப்பறி கொள்ளைகளா?
தம்பி, மேற்கண்ட மூன்று நிகழ்ச்சிகளை நீ படித்துள்ளாய். நீ நன்றாக நிதானமாக ஒவ்வொரு வார்த்தையையும் படி, அந்தந்த நிகழ்ச்சியில் சொல்லப்பட்ட சில வரிகளை கீழே தருகிறேன். இவைகளை படித்து இவைகள் வழிப்பறி கொள்ளைகளா அல்லது போர்களா என்று நீயே முடிவு செய்.
முதலாவது கொள்ளை – " ஷாமிலிருந்து மக்காவை நோக்கி வந்து கொண்டிருந்த குறைஷிகளின் வியாபாரக் குழுவை வழி மறிப்பதற்காக இவர்கள் சென்றார்கள்."
இரண்டாவது கொள்ளை - இவர்கள் 'பத்தன் ராபிக்' என்ற இடத்தில் அபூஸுஃப்யானைச் சந்தித்தார்கள். இரு கூட்டத்தார்களும் ஒருவரை நோக்கி ஒருவர் அம்பெய்து கொண்டனர்.
மூன்றாவது கொள்ளை - குறைஷிகளின் வியாபாரக் கூட்டத்தை இடைமறிப்பதற்காகப் புறப்பட்ட இவர்களிடம் 'கர்ரார்' என்ற இடத்தை தாண்டிச் செல்லக் கூடாது என நபி (ஸல்) அவர்கள வலியுறுத்தினார்கள்.
கேள்விகள்:
- வியாபாரிகள் தங்கள் வழியே சென்றுக்கொண்டு இருக்கும் போது, அவர்களைத் தாக்கி, பொருட்களை அபகரிக்க ஆட்களை அனுப்பினார் முஹம்மது. இந்த செயலுக்கு என்ன பெயர் வைப்பது?
- ஆயுதங்கள் இல்லாமல், போருக்கு ஆயத்தமில்லாமல் சென்றுக்கொண்டு இருக்கும் வியாபாரிகளை திடீரென்று தாக்குவதற்கு என்ன பெயர்?
- இந்த வகையான வழிப்பறி கொள்ளைகளை செய்ய முஹம்மதுவை தூண்டியது எது?
- மதினாவிற்கு இடம்பெயர்ந்த பிறகு, முஹம்மதுவும் அவரது சகாக்களும் என்ன வியாபரம் புரிந்து சம்பாதித்தார்கள்? அவர்களின் அனுதின உணவிற்கு என்ன செய்தார்கள்? உழவுத்தொழில் செய்தார்களா? ஆடுகளை, ஒட்டகங்களை மேய்த்து சம்பாதித்தார்களா? வெளியூர்களுக்குச் சென்று வியாபாரம் புரிந்தார்களா? முஹம்மது நபியாக மாறுவதற்கு முன்பு நன்றாக வியாபாரம் செய்யக்கூடியவர் இப்போது ஏன் பணத்திற்காக, தங்களுடைய ஏழ்மையை போக்கிக்கொள்வதற்காக கீழ்தரமான வழிப்பறி கொள்ளையில் ஈடுபடவேண்டும்?
- இந்த வகையான வழிப்பறி கொள்ளைகளை செய்யும் படி, அல்லாஹ் கட்டளையிடாமல், முஹம்மது தானாக செய்து இருக்கமாட்டார். இப்படியிருக்க, ஒரு இறைவன் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட அனுமதி கொடுப்பானா?
தம்பி, இன்னும் நான் சொல்லிக்கொண்டே செல்வேன், ஆனால் இதோடு நிறுத்திக்கொள்கிறேன். நீ இவைகள் படித்து, உனக்குத் தெரிந்த பதில்களை கொடுக்கும் படி கேட்டுக்கொள்கிறேன். (என் தம்பி மட்டுமல்ல, எந்த ஒரு முஸ்லிமாக இருந்தாலும் இவைகளுக்கு பதில்களை எழுதி அனுப்பலாம்.)
திருடுவதை நிறுத்தும் படி பைபிள் கட்டளையிடுகிறது:
ஒருவன் திருடுகின்றவனாக இருந்தால் தன் திருட்டை நிறுத்துவானாக. அவன் வேலை செய்யத் தொடங்கட்டும். அவன் தனது கைகளை நல்ல செயல்களைச் செய்வதற்குப் பயன்படுத்தட்டும். பிறகு ஏழைகளோடு பகிர்ந்துகொள்ள அவனுக்கென்று சில இருக்கும். (
எபேசியர் 4:28)
10 "ஒரு மனிதன் வேலை செய்யாவிடில் அவன் உண்ணக்கூடாது" என்று உங்களோடு இருந்தபோது நாங்கள் இந்த விதியைத் தந்தோம். (
தெச 3:10)
இப்படிக்கு,
உன் பதிலுக்காக காத்திருக்கும் உன் அண்ணன்
உமர்.
------------------------------------
மேற்கண்ட கடிதத்தை கண்டவுடன் என் தம்பி கீழ்கண்ட பதிலை அனுப்பினான்.
அன்புள்ள அண்ணாவிற்கு,
உங்களின் கடிதம் கண்டேன், உங்களைப் பற்றி வேதனை அடைந்தேன்.
பொதுவாக நீங்கள் எவைகளை எழுதினாலும், ஆதாரங்களோடு எழுதுவீர்கள் என்று நான் அறிவேன். ஆனால், இந்த முறையோ, மற்றவர்களைப் போல ஆதாரங்களை கொடுக்காமல் எழுதியுள்ளீர்கள்.
உங்களுக்கு ஒரு சவால்
உங்களுடைய கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்ட அந்த மூன்று வழிப்பறி கொள்ளைகள் பற்றி நான் இதுவரை எந்த புத்தகத்திலும் படிக்கவில்லை. மேலும், உங்களால் அதற்கான ஆதாரங்களை காட்டமுடியாது. நீங்கள் உலகம் முழுவதும் சுற்றினாலும், எங்கும் இந்த நிகழ்ச்சிகள் நடந்ததாக ஒரு ஆதாரத்தையும் உங்களால் கொண்டுவரமுடியாது என்று நான் சவால் விட்டுச் சொல்கிறேன்.
ஒரே ஒரு இஸ்லாமிய புத்தகத்திலாவது உங்களால் மேற்கண்ட நிகழ்ச்சிகளை எடுத்துக்காட்டமுடியுமா?
முதலாவது நீங்கள் எனக்கு ஆதாரங்களை காட்டுங்கள், அதன் பிறகு நான் உங்கள் கேள்விகளுக்கு பதில்களைச் சொல்வேன்.
இப்படிக்கு,
உங்கள் தம்பி
--------------------------------
என் தம்பியின் மெயில் கிடைத்தவுடன் நான் கீழ்கண்ட பதிலை எழுதினேன்:
அன்பான தம்பிக்கு,
நீ என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துவாய் என்று நம்பினேன், ஆனால், நீ ஏமாற்றிவிட்டாய்.
நான் வேண்டுமென்றே, என் முந்தைய கடிதத்தில் ஆதாரங்களை தரவில்லை, ஏனென்றால் நான் மேற்கொள் காட்டப்போகும் புத்தகம் இஸ்லாமிய உலகில் புகழ்பெற்ற புத்தகமாகும். நீ ஏற்கனவே இந்த புத்தகத்தை படித்து இருந்திருக்கவேண்டும், ஆனால் நீ தவறிவிட்டாய். சரி இப்போது அந்த முதல் மூன்று வழிப்பறி கொள்ளைப் பற்றி ஆதாரத்தைத் தருகிறேன். அந்த தலைப்புக்களை மட்டும் கொடுத்தேன், மீதமுள்ள நிகழ்ச்சி விவரங்களை கீழ்கண்ட புத்தகத்தின் 200 மற்றும் 201ம் பக்கங்களிலிருந்து எடுத்தேன்.
புத்தகத்தின் பெயர்: ரஹீக்
ஆசிரியர்:இஸ்லாமிய பேரறிஞர் ஸஃபிய்யூர் ரஹ்மான்.
தமிழாக்கம்: மௌலவி முஃப்தி உமர் ஷரீஃப் காசிமி
பக்கம்: 200 மற்றும் 201ம் பக்கங்கள்.
புத்தகத்தின் தனிச்சிறப்பு: உலகளாகிய போட்டியில் முதல் பரிசு பெற்ற நூல். இந்த புத்தகம் இதர 170 புத்தகங்களோடு போட்டியிட்டு, முதல் பரிசை தட்டிச் சென்றது (
தம்பி இந்த புத்தகத்தை முழுவதுமாக ஒரு முறை நீ படிக்கவேண்டும்.
உன் கேள்விக்கு நான் பதில் அளித்துவிட்டேன், என் கேள்விகளுக்கு நீ பதில்களைத் தருவாய் என்று எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறேன்.
உன்னை அடுத்த கடிதத்தில் சந்திக்கிறேன்.
இப்படிக்கு
உன் அண்ணன்,
உமர்
Comment Form under post in blogger/blogspot