Fwd: ரமளான் நாள் 13 - பழைய ஏற்பாட்டில் பலதாரதிருமணங்கள் இல்லையோ?
[அன்புள்ள தம்பிக்கு உமர் எழுதும் கடிதங்கள்: கடிதம் 1, கடிதம் 2, கடிதம் 3, கடிதம் 4, கடிதம் 5, கடிதம் 6, கடிதம் 7, கடிதம் 8 , கடிதம் 9, கடிதம் 10, கடிதம் 11, கடிதம் 12 ]
உனக்கு சமாதானம் உண்டாவதாக.
முதலாவதாக உனக்கு நான் நன்றிச் சொல்லவேண்டும், அதாவது ஒன்பது வயது சிறுமியை ஒரு கிழவனுக்கு திருமணம் செய்வது தவறானது, அதை நான் நிச்சயமாக செய்யமாட்டேன் என்று நீ சொன்னதற்காக மகிழ்ச்சியாக உள்ளது. இருந்த போதிலும், என்னுடைய முந்தைய கடிதத்தில் நான் குறிப்பிட்ட ஆயிஷா திருமணம் பற்றி மேலும் நீ இஸ்லாமிய புத்தகங்களை படித்து தெரிந்துக்கொள்வதாக கூறினாய். நிச்சயமாக இறைத்தூதர் 9 வயது சிறுமியை திருமணம் செய்து இருக்கமாட்டார், ஆயிஷா அவர்களுக்கு குறைந்தபட்சம் 18 வயது இருந்திருக்கும், இதனை ஆய்வு செய்து தெரிந்துக்கொள்ளப் போவதாக கூறியிருந்தாய். உன்னுடைய பதிலுக்காகவும், மேலும் நீ அனேக இஸ்லாமிய நூல்களை படிக்கப்போவதாக கூறியதற்காகவும் மிக்க நன்றி.
என்னுடைய முந்தைய கடிதத்தைக் கண்டு உடனே பதில் அளித்ததற்காக நன்றி. எங்கே நான் உன் வழிகாட்டியின் பலதார திருமணத்தைப் பற்றி கேள்வி எழுப்புவேனோ என்று எண்ணி முன்னெச்சரிக்கையாக நீயே அதைப் பற்றி எனக்கு கடிதம் எழுதியுள்ளாய். மேலும், பழைய ஏற்பாட்டு நபர்கள் கூட பல திருமணங்களை புரிந்துள்ளார்கள் அல்லவா? என்று என்னிடம் கேள்வி கேட்டுள்ளாய். எப்போதெல்லாம் கிறிஸ்தவர்கள் முஹம்மதுவின் பல தார மணத்தைப் பற்றி கேள்வி எழுப்புகிறார்களோ, அப்போதெல்லாம் பொதுவாக இஸ்லாமியர்கள் பழைய ஏற்பாட்டை நோக்கி தங்கள் விரல்களை நீட்டுவார்கள்.
நீ என்னிடம் கேட்ட கேள்விகளின் சுருக்கம்:
"பழைய ஏற்பாட்டில் அனேகர் பல திருமணங்களை செய்து இருக்கும் போது, ஏன் கிறிஸ்தவர்கள் (அண்ணா நீங்களும் தான்) குர்ஆனுக்கு நேராகவும், நம்முடைய நபிக்கு நேராகவும் விரலை நீட்டுகிறார்கள்? அவர்கள் தங்கள் பழைய ஏற்பாட்டை படிக்கவில்லையா? எல்லாம் தெரிந்தும் ஒன்றுமே தெரியாதவர்களைப் போல கிறிஸ்தவர்கள் நடிக்கிறார்களா? அல்லது அறியாமையில் இப்படி கேள்வி எழுப்புகிறார்களா? ஏன் இந்த இரட்டை வேஷம்?".
உன்னுடைய கேள்வியும், வேதனையும் நியாயமானது தான், ஆனால், உண்மையை சரியாக புரிந்துக்கொள்ளாததால், பழைய ஏற்பாட்டையும், புதிய ஏற்பாட்டையும் சரியாக புரிந்துக்கொள்ளாததால் உனக்கு குழப்பம் வந்துள்ளது. இப்போது நான் உனக்கு எல்லாவற்றையும் சுருக்கமாக விளக்குகிறேன்.
· ஆதியிலிருந்து தேவன் "ஒருத்தனுக்கு ஒருத்தி" என்ற கோட்பாட்டை திருமணத்திற்கு அடிப்படையாக கொண்டு இருந்தார் (ஆதி 1:27; 2:21-25).
· ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாடு மனித ஆரம்பத்திலிருந்து கடைபிடிக்கப்பட்டு வந்தது , பாவம் அதனை முரிக்கும் வரைக்கும் (ஆதி 4:1).
· மோசேயின் சட்டம் "ஆனேக ஸ்திரிகளை திருமணம் செய்யவேண்டாம்" என்று தெளிவாகச் சொல்கிறது. (உபா 17:17)
· பலதாரமணத்தைப் பற்றிய எச்சரிக்கையை மறுபடியும் 1 இராஜாக்கள் 11:1,2 வசனங்கள் எடுத்துக்கூறுகின்றன. அனேக திருமணங்கள் மூலமாக எப்படி தேவனுக்கு எதிரான பாவத்தை சாலொமோன் செய்தார் என்று இந்த அதிகாரத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
· இயேசுவும் "ஒருவனுக்கு ஒருத்தி" என்ற ஆதியிலிருந்த அமைப்பை மறுபடியும் மத்தேயு 19:4ல் ஞாபகப்படுத்துகிறார்.
· புதிய ஏற்பாடு, "ஆகிலும் வேசித்தனம் இராதபடிக்கு அவனவன் தன் சொந்த மனைவியையும், அவனவன் தன் சொந்தப் புருஷனையும் உடையவர்களாயிருக்கவேண்டும்" என்று கட்டளையிடுகிறது (1 கொரிந்தியர் 7:2)
· மேலும் சபை ஊழியர்கள் ஒரே மனைவியை உடையவர்களாக இருக்கவேண்டும் என்று மறுபடியும் புதிய ஏற்பாடு கட்டளையிடுகிறது (1 தீமோத்தேயு 3:,2,12). இது சபை ஊழியர்களுக்கு மட்டுமல்ல, ஒவ்வொரு விசுவாசிக்கும் இந்த கட்டளை பொருந்தும்.
பழைய ஏற்பாட்டுக் காலத்தில் வாழ்ந்த நபர்கள் பல திருமணங்களை செய்தார்கள், அதை தேவன் கட்டளையிட்டதினால் தான் செய்தார் என்று சொல்லமுடியாது. பழைய எற்பாட்டுக் காலத்தில் பலதாரமணத்தை தேவன் ஆசீர்வதிக்கவில்லை, அதற்கு பதிலாக இதனால் விளையும் தீமைகளை ஆங்காங்கே குறிப்பிட்டு எச்சரித்துள்ளார். ஆபிராகாமின் குடும்பத்தில் நிலவிய பிரச்சனை(சாராள், ஆகார், இஸ்மவேல், ஈசாக்கு), யோசேப்புவின் வாழ்வில் நடந்த காரியங்கள் (தன் சகோதரர்களால் பட்ட பாடுகள்), சாலொமோனின் பாவம் என்று அனேக இடங்களில் பலதாரமண குடும்பத்தில் நிலவும் பிரச்சனைகளை தேவன் வெளிக்காட்ட தவறவில்லை.
பழைய ஏற்பாட்டின் நிகழ்ச்சிகள் நமக்கு எச்சரிக்கையாகவும்,படிப்பினையாகவும் எழுதப்பட்டுள்ளது. மேலும், ஒரு கிறிஸ்தவன் இயேசு போதித்த போதனையில் வாழுவதினால், அவன் பலதார மணத்தை பின்பற்றுவதில்லை.
குர்ஆனின் பலதாரமணம்:
குர்ஆனின் பலதாரமணம், அல்லாஹ் அங்கீகரித்த ஒன்றாக உள்ளது. முஸ்லிம்கள் பல திருமணங்களை செய்துக்கொள்ளலாம் என்று கட்டளை கொடுக்கப்பட்டுள்ளது. முஹம்மதுவும் 11 திருமணங்களை புரிந்துள்ளார். இதனை முஹம்மதுவின் காலத்திற்கு மட்டும் என்று சொல்லியிருந்தால், பிரச்சனையில்லை, ஆனால் உலகம் இருக்கும் வரையிலும் இந்த குர்ஆனின் கட்டளை அமுலில் இருக்குமே. உனக்குத் தெரியுமா? பல திருமணங்களை புரியும் சமுதாயத்தில் அனேக பிரச்சனைகள், தீமைகள் நடக்கிறதாக ஒரு ஆய்வு(Science Daily) சொல்கிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்ற அமைப்பே சிறந்தது, என்று இந்த ஆய்வு கூறுகிறது.
Monogamy Reduces Major Social Problems of Polygamist Cultures
ScienceDaily (Jan. 23, 2012) — In cultures that permit men to take multiple wives, the intra-sexual competition that occurs causes greater levels of crime, violence, poverty and gender inequality than in societies that institutionalize and practice monogamous marriage.
[. . .]
"Our findings suggest that that institutionalized monogamous marriage provides greater net benefits for society at large by reducing social problems that are inherent in polygynous societies."
Considered the most comprehensive study of polygamy and the institution of marriage, the study finds significantly higher levels rape, kidnapping, murder, assault, robbery and fraud in polygynous cultures.
[. . .]
Source: http://www.sciencedaily.com/releases/2012/01/120124093142.htm
பல திருமணங்கள் புரியும் சமுதாயங்களில் அனேக குற்றங்கள், கற்பழிப்புக்கள், ஏழ்மை, ஆண் பெண் உயர்வு தாழ்வு பிரச்சனைகள், ஆள் கடத்தல், கொலை, நேர்மையற்ற செயல்கள் என்று சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கும் அனேக குற்றங்கள் அதிகமாக நடப்பதாக ஆய்வு கூறுகிறது.
இந்த விஷயம் ஏன் உன் அல்லாஹ்விற்கு தெரியாமல் போனது? ஒன்று செய், நீ இருக்கும் நாட்டில் அதாவது சௌதியில் இந்த குற்றங்கள் நடைப்பெறுகிறதா இல்லையா? என்பதை ஆய்வு செய்துப்பார். எனக்கு தெரிந்த சௌதியில் இருக்கும் ஒரு நண்பன், அனேக நாட்களுக்கு முன்பாக ஒரு விஷயத்தைக் கூறினான், அதாவது பெண்கள் தனியாக இருந்தால் கடத்திக்கொண்டு சென்றுவிடுகிறார்கள் மற்றும் சில நாட்களுக்கு பின்பு கொண்டு வந்து சாலைவில் எங்கேயோ விட்டுவிடுகிறார்கள், அதாவது அந்த பெண்ணை கற்பழித்து கடைசியாக விட்டுவிடுகிறார்கள். இது நடப்பது எங்கே என்று கேட்டால், சௌதியின் தலைநகரம் ரியாத்தில்.
குர்ஆனில் நவீன விஞ்ஞானம் உண்டு என்று இஸ்லாமியர்கள் சொல்வார்கள், ஆனால், பல தார திருமணங்கள் புரியும் சமுதாயத்தில் இப்படிப்பட்ட பிரச்சனைகள், இதர சமுதாயத்தை விட அதிகமாக நடக்கிறது என்ற உண்மையை அல்லாஹ் ஏன் அறியவில்லை?
தம்பி, நீ சிந்தித்துப்பார். ஒரு குடும்பத்தில் ஒரு ஆண் நான்கு பெண்களை திருமணம் செய்துக்கொண்டால், அந்த குடும்பத்தில் அமைதி நிலவுமா? ஒவ்வொரு பெண்ணுக்கும் குழந்தைகள் பிறந்த பிறகு,
[Message clipped]
Comment Form under post in blogger/blogspot