இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Tuesday, March 4, 2014

Fwd: ரமளான் நாள் 29 – பவுலை குற்றப்படுத்தி அல்லாஹ்வை அவமதிக்கும் முஸ்லிம்கள்


 
 
அன்புள்ள தம்பிக்கு,
 
உனக்கு சமாதானம் உண்டாவதாக.
 
நீ எழுதிய கடிதத்தை படித்தேன், உன் நண்பர்கள் பவுல் பற்றி கேள்வி கேட்கிறார்கள் என்று என்னிடம் கூறினாய்: "கிறிஸ்தவத்தை தோற்றுவித்தவர் பவுல் தான், இயேசு அல்ல" என்ற குற்றச்சாட்டிற்கு உங்கள் பதில் என்ன என்னிடம் கேள்வி கேட்டுள்ளாய்.
 
கேள்வியை கேட்கும் இஸ்லாமியர்களிடம் ஒரே ஒரு முறை அவர்கள் புதிய ஏற்பாட்டை முழுவதுமாக படித்தார்களா? என்று கேட்டுப்பார். யாரோ சொன்ன விவரத்தை அப்படியே  சொல்லும் இவர்கள் நிதானமாக ஆராய ஆரம்பித்தால் இவர்களின் இஸ்லாமிய நம்பிக்கை ஆட்டங்காணும்.   சரி நான் இப்போது உனக்கு சுருக்கமாக விளக்குகிறேன்.
 
உன் கேள்விக்கு சம்மந்தப்பட்ட புதிய ஏற்பாட்டு கால அட்டவணையை சுருக்கமாக கொடுக்கிறேன்.
 
கி.மு. 4 – கி.பி. 1 – இயேசுவின் பிறப்பு
கி.பி. 30 – 33: இயேசுக் கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு, உயிர்த்தெழுந்தார்
கி.பி. 35 – 36: சவுலின் மனந்திரும்புதல்
 
கவனிக்கவும்: இயேசு உயிர்த்தெழுந்த பிறகு, இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தான் பவுல் மனந்திரும்புகிறார்.
 
 
1) இது இஸ்லாமியர்களின் அறியாமையா அல்லது வஞ்சகமா?
 
தம்பி, புதிய ஏற்பாட்டை படித்து முழுவதுமாக ஆய்வு செய்யும் ஒரு நபர் இப்படி அப்போஸ்தலர் பவுல் மீதும், கிறிஸ்தவத்தின் மீதும் இப்படிப்பட்ட குற்றச்சாட்டை சுமத்தமாட்டார். ஏனென்றால், எவர் ஒருவர் அப்போஸ்தலர் நடபடிகளை படிப்பாரோ, அவர்  நிச்சயமாக இப்படிப்பட்ட குற்றச்சாட்டை வைக்கமாட்டார். ஏனென்றால், அப்போஸ்தலர் நடபடிகளில் கிறிஸ்தவத்தின் ஆரம்ப விவரங்கள் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இந்த கேள்வியை கேட்கும் இஸ்லாமியர்கள் ஒன்று அறியாமையில் இப்படி கேட்கவேண்டும் அல்லது கிறிஸ்தவத்தின் மீது வெறுப்போடு இப்படி வஞ்சகமான குற்றச்சாட்டுகளை சுமத்தவேண்டும்.
 
2) இயேசுவின் சீடர்களின் ஆரம்பகால வாழ்க்கை வரலாறு:
  
இஸ்லாம் சொல்லுகின்றபடி, இயேசுவை அல்லாஹ் தன்னலவில் எடுத்துக்கொண்டு இருந்திருந்தால், சீடர்களின் வாழ்வு அப்போஸ்தலர் நடபடிகளில்  உள்ளது போல இருந்திருக்காது. சீடர்கள் தங்களின் சொந்த தொழிலை செய்துக்கொண்டு, வாழ்ந்திருப்பார்கள். ஆனால், சரித்திரம் வேறுவகையாகச் சொல்கிறது. குர்-ஆனில் இயேசுவின் சிலுவைப் பற்றி அல்லாஹ் சொன்னது சுத்தப்பொய், அதாவது மிகப்பெரிய பொய்.
 
இயேசு உயிர்த்தெழுந்த பிறகு சீடர்களோடு அனேக நாட்கள் இருந்து அவர்கள் அடுத்து என்ன செய்யவேண்டுமென்று இயேசு அறிவித்துச் சென்றார். பரிசுத்த ஆவியானவரின் வருகைக்காக காத்திருக்கும் படி இயேசு கட்டளையிட்டார், அதே போல சீடர்கள் காத்திருந்தார்கள், பரிசுத்த ஆவியானவரும்
பொழிந்தருளினார்.  அதன் பிறகு சீடர்களின் ஊழியம் ஆரம்பித்தது.
 
[தம்பி, இந்த விவரம் பற்றி ஒரு கட்டுரையை நான் இணையத்தில் படித்தேன், அதனை ஒரு முறை நீயும் படித்துப் பார் (Answering PJ - 3: இஸ்லாமை மண்ணை கவ்வ வைத்த அப். நடபடிகள் - பாகம் 1 - http://isakoran.blogspot.in/2010/04/answering-pj-3-1.html).]
 
3) பவுல் இல்லாமலேயே தொடர்ந்த இயேசுவின் ஊழியம்:
 
தம்பி, அப்போஸ்தலர் நடபடிகள் முதல் 8 அதிகாரங்களை படித்துப் பார்த்தால், முஸ்லிம்களின் குற்றச்சாட்டு ஒரு மிகப்பெரிய பொய் என்பது எல்லாருக்கும் தெளிவாக விளக்கும். அதாவது இயேசுவின் சீடர்களே ஊழியத்தை ஆரம்பித்தார்கள். அவர்கள் இயேசுவை தெய்வம் என்று அறிவித்தார்கள், அதனால் அனேக கஷ்டங்களை அனுபவித்தார்கள், ஸ்தேவான் என்ற சீடரும் கொல்லப்பட்டார், இவரின் மரணத்தின் போது சவுலும் அங்கீகரித்து இருந்தார்.
 
அப்போஸ்தலருடைய நடபடிகளின் முதல் எட்டு அதிகாரங்களின் சுருக்கம்:
 
1) உயிர்த்தெழுந்த இயேசு சீடர்களுக்கு காணப்படல், மற்றும் பரமேறுதல் (1:4-11)
 
2) தேற்றரவாளனாகிய பரிசுத்த ஆவியானவருக்காக சீடர்கள் எருசலேமில் காத்திருத்தல் (1:12-14)
 
எருசலேம் சபையின் ஆரம்பகால விசுவாசிகளின் நடபடிகள் (1:15 - 8:3)
 
1) யூதாசுக்கு பதிலாக மத்தியாஸை நியமித்தல் (1:15-26)

2) பெந்தேகோஸ்தே நாளில் பரிசுத்த ஆவியானவரின் வருகை (2: 1-13)

3) எருசலேமில் பேதுருவின் முதல் பிரசங்கம், அனேகர் மனந்திரும்பினர்(2:14-41)

4) பேதுரு மற்றும் யோவான், ஒரு முடவனை சுகமாக்குதல் (3:1-10)

5) அற்புதத்திற்கு பிறகு பேதுரு செய்த இரண்டாம் பிரசங்கம் (3:11-26)

6) பேதுரு மற்றும் யோவானின் கைது, நீதிமன்றத்திற்கு முன்பு சாட்சி கொடுத்தல் (4:1-22)

7) பேதுரு யோவானின் விடுதலை, விசுவாசிகளின் கூட்டு ஜெபம் (4:23-31)

8) அப்போஸ்தலர்களின் அற்புதங்கள், சுகமாக்குதல் (5:12-16)

9) மறுபடியும் அப்போஸ்தலர்கள் கைது செய்யப்படல், நீதிமன்றத்திற்குமுன்பு சாட்சியிடல் ( 5:17-42)

10) ஸ்தேவான் கைது செய்யப்படல், பயமில்லாமல் அவர் செய்த பிரசங்கம் ( 6:8 - 7:53)

11) ஸ்தேவான் கல்லெறியப்பட்டு கொல்லப்படல், தன்னை கொன்றவர்களுக்காக வேண்டிக்கொள்ளுதல் (7:54 - 60)

12) சவுல் சபையை துன்புறுத்த ஆரம்பித்தல் (8:1-3)

 
4) பவுல் எதிரியாக இருந்த போதிலும் தொடர்ந்த இயேசுவின் ஊழியம்:
 
தம்பி, பவுல் கிறிஸ்தவர்களுக்கு மிகபெரிய எதிரியாக மாறினார். அவர்களை கொடுமைப்படுத்தினார். தமஸ்குவில் இருக்கும் கிறிஸ்தவர்களை கொடுமைப்படுத்த அவர் பிரயாணம் செய்யும் போது இயேசுவால் சந்திக்கப்பட்டு அவர் மனந்திரும்பினார். அதன் பிறகு சீடர்களோடு சேர்ந்து அவரும் ஊழியம் செய்தார்.
 
தம்பி, இதுவரை நான் மேலே சொன்ன விவரங்களின் அடிப்படையில் உன்னிடம் சில கேள்விகளை வைக்கப்போகிறேன். உன்னால் முடிந்தால், உலக இஸ்லாமிய அறிஞர்களில் மிகப்பெரிய அறிஞரிடம் கேட்டு எனக்கு பதில்களை அனுப்பு:
 
அ) இயேசு கி.பி. 30 – 33 ல் சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்தார். பவுல் கி.பி. 35ம் ஆண்டு மனந்திரும்பினார் (கிறிஸ்தவரானார்), அப்படியானால், இந்த இடைப்பட்ட காலகட்டட்தில் (2 அல்லது 3 ஆண்டுகள்) சீடர்கள் என்ன செய்துக் கொண்டு இருந்தார்கள்? இயேசுவின் சிலுவைப் பற்றி இஸ்லாம் சொல்வது உண்மையானது என்று கருதுபவர்கள் மேற்கண்ட கேள்விக்கு பதில் சொல்லட்டும்.
 
ஆ) பவுல் கிறிஸ்தவராக மாறுவதற்கு முன்பாக, இயேசுவின் சீடர்கள் யூத மத தலைவர்களால் எந்த குற்றத்திற்காக துன்புறுத்தப்பட்டார்கள்?
 
இ) பவுல் கிறிஸ்தவர்களை அல்லது இயேசுவின் சீடர்களை கொடுமைப்படுத்த காரணமென்ன? இஸ்லாமியர்களின் கருத்துப்படி, இயேசு ஒரு நபி மட்டுமே என்று சீடர்கள் சொல்லியிருந்தால், இவர்களை கொலை செய்யவேண்டும் என்று பவுல் ஏன் நினைக்கவேண்டும்? யூத தலைவர்கள் ஏன் நினைக்கவேண்டும்? இதிலிருந்து அறிவது என்ன?
 
ஈ) இயேசு ஒரு நபி என்று சொல்லியிருந்தால், யூத தலைவர்கள் சீடர்களை ஏன் சிறைச்சாலையில் அடைக்கவேண்டும்?
 
உ) இயேசு ஒரு நபி என்று சொல்லியிருந்தால், ஏன் யூத தலைவர்கள் ஸ்தேவானை கல்லெரிந்து கொல்லவேண்டும்? ஏன் இவர்களுக்கு துணையாக பவுல் இருக்கவேண்டும்?
 
5) குர்-ஆனை அவமதிக்கும் இஸ்லாமிய குற்றச்சாட்டுகள்:
 
இயேசுவோடு மூன்று ஆண்டுகளுக்கும் அதிகமான நாட்கள் வாழ்ந்த அனைத்து சீடர்கள், இயேசு சொன்னதையெல்லாம் காற்றிலே விட்டுவிட்டு, பவுல் சொன்னதை ஏற்றுக்கொண்டார்கள்  என்று இஸ்லாமியர்கள் குற்றப்படுத்துவது வேடிக்கையாக இருக்கிறது. இயேசுவின் அற்புதங்களை கண்டவர்கள், வார்த்தைகளை கேட்டவர்கள் எப்படி அவர் மூன்று ஆண்டுகளாக சொன்ன விவரங்களை மறந்துவிடுவார்கள்? இது சாத்தியமில்லாத ஒன்றாகும். ஒருவேளை ஒன்று அல்லது இரண்டு சீடர்கள் சிறிது தவறினாலும், மற்றவர்கள் அதனை சரிபடுத்தியிருப்பார்கள். ஆக, இஸ்லாமியர்களின் குற்றச்சாட்டு ஒரு பச்சைப்பொய்யாகும். முஹம்மதுவின் தோழர்கள் மீது இஸ்லாமியர்களுக்கு எவ்வளவு நம்பிக்கை உள்ளதோ அதைவிட பல ஆயிரமடங்கு நம்பிக்கை இயேசுவின் சீடர்கள் மீது கிறிஸ்தவர்களுக்கு உள்ளது என்பதை எல்லா இஸ்லாமியர்களுக்கு நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
 
இதுமட்டுமல்ல, இஸ்லாமியர்களின் குற்றச்சாட்டு குர்-ஆனையும், அல்லாஹ்வையும் அவமதிக்கிறது: இந்த குர்-ஆன் வசனத்தை படி தம்பி:
 
அவர்களில் குஃப்ரு இருப்பதை (அதாவது அவர்களில் ஒரு சாரார் தம்மை நிராகரிப்பதை) ஈஸா உணர்ந்த போது, "அல்லாஹ்வின் பாதையில் எனக்கு உதவி செய்பவர்கள் யார்?" என்று அவர் கேட்டார்; (அதற்கு அவருடைய சிஷ்யர்களான) ஹவாரிய்யூன்; "நாங்கள் அல்லாஹ்வுக்காக (உங்கள்) உதவியாளர்களாக இருக்கிறோம், நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டுள்ளோம்;. திடமாக நாங்கள் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லீம்களாக இருக்கின்றோம், என்று நீங்கள் சாட்சி சொல்லுங்கள்" எனக் கூறினர்.  (குர்ஆன் 3:52)
 
தம்பி, நன்றாக சிந்தித்துப் பார். கி.பி. முதல் நூற்றாண்டில் வாழ்ந்த சீடர்கள் பற்றி, 7ம் நூற்றாண்டில் வந்த குர்-ஆன் மேற்கண்ட புகழாரத்தை சூட்டுகிறது. அதாவது, இயேசுவின் சீடர்கள் அல்லாஹ்விற்கு உதவியாளர்களாக இருப்பதாக கூறினார்களாம், அதனை முஹம்மதுவின் காலத்தில் அல்லாஹ் சாட்சி கொடுக்கிறார்.  இப்போது நமக்கு எழும் கேள்விகள் என்னவென்றால்:
 
அ) இன்று இஸ்லாமியர்கள் சூட்டும் குற்றச்சாட்டு உண்மையென்றால், அன்று அல்லாஹ் சூட்டிய புகழாரம் பொய்யாகும். எனவே, குர்-ஆன் சொல்வது பொய் என்று இன்று இஸ்லாமியர்கள் ஏற்க தயாராக இருக்கிறார்களா? இயேசுவின் சீட்ர்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக இல்லை, அவர்கள் பவுலின் பேச்சைக் கேட்டு மாறிவிட்டார்கள் என்று இஸ்லாமியர்கள் கூறப்போகிறார்களா?
 
ஆ) இயேசுவின் சீடர்களாகிய பேதுரு, யோவான் போன்றவர்கள், பவுலின் வார்த்தைகளை நம்பி அவர் சொன்னது போல செய்தார்கள் என்று இஸ்லாமியர்களின் குற்றசாட்டு உண்மையானால், குர்-ஆனில் சீடர்கள் பற்றி அல்லாஹ் சொல்வது பொய்யானதாகும்.
 
எனவே, பவுலின் மீது குற்றம் சுமத்த விரும்பும் இஸ்லாமியர்கள் குர்-ஆனை இறக்கிய அல்லாஹ்வை அவமானப்படுத்துகிறார்கள். தங்களுக்கு எல்லாம் தெரியும், ஆனால் அல்லாஹ்விற்கு ஒன்றுமே தெரியாது என்று நேரடியாகவே முஸ்லிம்கள் சொல்கிறார்கள்.
 
அல்லாஹ் சொல்கின்றான் "இயேசுவின் சீடர்கள் தனக்கு உதவியாளர்கள்", ஆனால், இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள், "இல்லை இல்லை, பவுலின் போதனைகளை கேட்டு சீடர்கள் கெட்டுவிட்டார்கள், இயேசு போதிக்காத கொள்கைகளை ஏற்றுக்கொண்டார்கள்".
 
ஆக, பவுலை குற்றப்படுத்துபவர்கள் கரியை தங்கள் அல்லாஹ்வின் முகத்தில் தான் முதலாவது பூசுகிறார்கள். பாவம் அல்லாஹ், இன்று நம்மிடம் இருக்கும் இஸ்லாமியர்களை விட அறிவில் குறையுள்ளவராக இஸ்லாமியர்களுக்கு காணப்படுகிறார். இன்றைய இஸ்லாமியர்கள் அல்லாஹ்வை விட சர்வ ஞானிகளாக இருக்கிறார்கள்.
 
தம்பி, பவுல் மீது குற்றம் சுமத்தும் இஸ்லாமியர்கள் முதலாவது புதிய ஏற்பாட்டை படிக்கட்டும், அதன் பிறகு தங்கள் குர்-ஆனை தமிழில் படிக்கட்டும், அதன் பிறகு கொஞ்சம் ஆய்வு செய்யட்டும். ஏனென்றால், இஸ்லாமியர்கள் கிறிஸ்தவத்தின் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் அவர்கள் அல்லாஹ்விற்கும், குர்-ஆனுக்குமே பிரச்சனையாக இருப்பதினால், அவர்கள் சிறிது எச்சரிக்கையாக இருக்கட்டும்.
 
முடிவுரை: தம்பி, கடைசியாக நான் உனக்கு சொல்லிக்கொள்வது என்னவென்றால், முதல் நான்கு சுவிசேஷங்களில் இயேசு தம்முடைய தெய்வீகத்தன்மையை ஆணித்தரமாக விளக்கியுள்ளார். பவுலுக்கு முன்பாக இயேசுவின் சீடர்கள் இயேசுவே தெய்வம் என்று அறிக்கையிட்டு, சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளார்கள், கொலை செய்யப்பட்டுள்ளார்கள். சரித்திரம் நமக்கு முன்பாக தெளிவாக இருக்கும் போது அதனை ஏற்கமறுப்பவர்களை நாம் என்னவென்று கூறமுடியும்?
 
கிறிஸ்தவத்தை குற்றப்படுத்தினால், இஸ்லாமுக்கு ஆபத்து,
 
பைபிளை குற்றப்படுத்தினால், குர்-ஆனுக்கு ஆபத்து,
 
இயேசுவின் சீடர்களை, பவுலை குற்றப்படுத்தினால், அல்லாஹ்விற்கே ஆபத்து.
 
எனவே, இவைகளை மனதில் வைத்து இஸ்லாமியர்கள் பேசட்டும், எழுதட்டும், மறுத்தால் விளைவுகளை சந்திக்க தயாராகிக்கொள்ளட்டும்.
 
உன்னை அடுத்த கடிதத்தில் சந்திக்கிறேன்.
 
இப்படிக்கு, உன் சகோதரன்
தமிழ் கிறிஸ்தவன்.

 



--
8/18/2012 10:18:00 pm அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது


இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்