Fwd: ரமளான் நாள் 8 - அல்லாஹ்வின் சொர்க்கத்தில் நுழைந்த முதல் நாள்
From: Genesis Revelation <isa.koran@gmail.com>
Date: 2012-07-27 10:45 GMT-07:00
Subject: ரமளான் நாள் 8 - அல்லாஹ்வின் சொர்க்கத்தில் நுழைந்த முதல் நாள்
To: my coimbatore <mycoimbatore@gmail.com>, christhu nesan <christhunesan@gmail.com>, arpu raj <arputhaa@yahoo.co.in>, RAMESH PS <mygod4all@gmail.com>, S Gokul <gketbf@gmail.com>, u adiyaan <unmaiadiyaan@gmail.com>, Ahamed Ishak <ahamed.ishak@gmail.com>
ரமளான் நாள் 8 - அல்லாஹ்வின் சொர்க்கத்தில் நுழைந்த முதல் நாள்
[அன்புள்ள தம்பிக்கு உமர் எழுதும் கடிதங்கள்: கடிதம் 1, கடிதம் 2, கடிதம் 3, கடிதம் 4, கடிதம் 5, கடிதம் 6, கடிதம் 7 ]
அன்புள்ள தம்பி,
உனக்கு சமாதானம் உண்டாவதாக.
குர்-ஆன் பற்றியும், இஸ்லாமிய தொழுகைப்பற்றியும் அதிகமாக எழுதிவிட்டேன். அல்லாஹ்வின் சொர்க்கம் பற்றி ஒரு சிறு குறிப்பு எழுத விரும்புகிறேன். சில விஷயங்கள் உரைநடையில் படித்தால் கருத்து விளங்கும், சில முக்கியமான காரியங்களை நாடகவடிவில் அல்லது கதை வடிவில் விளக்கினால், அதன் சாரம் சரியாக புரியும், எனவே இந்த கடிதத்தில் ஒரு கதையைப் போல உனக்கு ஒரு விஷயத்தை தெளிவாக்க விரும்புகிறேன்.
நான் உனக்கு ஒரு சூழ்நிலையை விளக்குகிறேன், அதை கேட்டுவிட்டு, எனக்கு நீ பதில் அளிக்கவேண்டும்.
நீ ஒரு பட்டணத்திற்குள் முதல் முறை நுழைகிறாய், அது உலகிலேயே மிகவும் அழகான பட்டணம். எங்கு பார்த்தாலும் மக்கள் அழகான வீடுகளில் உட்கார்ந்துக்கொண்டு, பழங்கள் சாப்பிட்டுக்கொண்டும், பானங்கள் பருகிக்கொண்டும், அனேக பெண்களோடு உள்ளாசமாக உடலுறவில் ஈடுபட்டுக்கொண்டும் இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி ஏதோ ஒரு வீட்டில் நடக்கும் நிலை அல்ல, ஒரு மணி அல்லது இரண்டு மணி நேரம் நடக்கும் நிகழ்ச்சி அல்ல, தொடர்ந்து நித்திய நித்தியமாக இது நடந்துக்கொண்டே இருக்கிறது. ஒரு கையில் பானம், இன்னொரு கையில் சோலைமயில், எப்போது பார்த்தலும், எங்கு பார்த்தாலும் ஆண்கள் அழகான பெண்களோடு உடலுறவில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அதுவும் ஒரே பெண்ணுடன் இல்லை, பல பெண்களுடன். இவைகளைக் கண்டவுடன் 'ஒரு சராசரி ஆண் எப்படி இப்படி தொடர்ந்து உடலுறவில் ஈடுபடமுடியும், விஞ்ஞானத்தின் படி இது முடியாதல்லவா?" என்ற கேள்வி உன் மனதில் எழுகிறது. உடனே உன் செவிகளில் 'இம்மக்களின் இறைவன், இவர்களுக்கு இப்படிப்பட்ட வினோத சக்தியை கொடுத்துள்ளான்' என்ற சத்தம் கேட்கிறது.
இப்பொழுதுச் சொல், நீ சென்றுக்கொண்டு இருந்த இடத்திற்கு என்ன பெயர் வைப்பாய்?
1) பரிசுத்தமான இறைவன் தங்கும் இடமா?
2) அல்லது பரிசுத்தமில்லாத பட்டணமா?
இவைகளைக் கண்டால் ஒரு விபச்சார விடுதிபோலவும், விபச்சார பட்டணம் போலவும் காட்சி அளிக்கிறது.
தம்பி, இது வேறு எந்த இடமும் இல்லை, நீ வணக்கும் அல்லாஹ்வின் சொர்க்கம் ஆகும். இம்மக்களுக்கு இப்படிப்பட்ட அதீத சக்தியை கொடுக்கப்போகிறவர் வேறு யாருமில்லை, தினமும் ஐந்து வேளை நீ தொழுதுக்கொள்ளும் அல்லாஹ் தான். இஸ்லாமின் அல்லாஹ், முஸ்லிம்களுக்கு 100 ஆண்களின் சக்தியை கொடுத்து, மேலும் அவர்கள் உடலுறவுக்கு பெண்களை தயார்படுத்தியும் கொடுக்கிறார்.
கீழ்கண்ட வசனங்களை ஒரு முறை படித்துப்பார், முக்கியமாக இவ்வசனங்கள் பற்றி இஸ்லாமிய விரிவுரையாளர்களாகிய இப்னு கதீர் போன்றவர்களின் விரிவுரையை நீயே படித்துப்பார். மேலும், இஸ்லாமிய சொர்க்கம் பற்றிய பயான்களை கேட்டுப்பார்.
அவற்றில் அடக்கமான பார்வையுடைய (அமர) கன்னியர் இருக்கின்றனர். அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை. (குர்-ஆன் 55:56)
[எந்த மனிதனும், ஜின்னும் இப்பெண்களை தொடவில்லை என்று அல்லாஹ் ஏன் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்? ஆண்களின் ஆர்வத்தை அதிகமாக தூண்டும் வண்ணமாக அல்லாஹ் தன் வஹியை இறக்கியுள்ளார். நிச்சயமாக இது உண்மை இறைவனின் வசனமாக இருக்கமுடியாது]
அவற்றில், அழகு மிக்க நற் குணமுள்ள கன்னியர் இருக்கின்றனர். (குர்-ஆன் 55:70)
ஹூர் (என்னும் அக்கன்னியர் அழகிய) கூடாரங்களில் மறைக்கப்பட்டிருப்பர். (குர்-ஆன் 55:72)
அவர்களை இவர்களுக்கு முன்னர் எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை. (குர்-ஆன் 55:74)
(அவர்கள்) பசுமையான இரத்தினக்கம்பளங்களின் மீதும், அழகு மிக்க விரிப்புக்கள் மீதும் சாய்ந்தவர்களாக இருப்பார்கள். (குர்-ஆன் 55:76)
(அங்கு இவர்களுக்கு) ஹூருல் ஈன் (என்னும் நெடிய கண்களுடைய) கன்னியர் இருப்பர். (குர்-ஆன் 56:22)
நிச்சயமாக (ஹூருல் ஈன் என்னும் பெண்களைப்) புதிய படைப்பாக, நாம் உண்டாக்கி, (குர்-ஆன் 56:35)
அப்பெண்களைக் கன்னிகளாகவும், (குர்-ஆன் 56:36)
(தம் துணைவர் மீது) பாசமுடையோராகவும், சம வயதினராகவும், (குர்-ஆன் 56:37)
வலப்புறத்தோருக்காக (ஆக்கி வைத்துள்ளோம்). (குர்-ஆன் 56:38)
ஒரே வயதுள்ள கன்னிகளும். (குர்-ஆன் 78:33)
பானம் நிறைந்த கிண்ணங்களும், (இருக்கின்றன). (குர்-ஆன் 78:34)
(முஹம்மது ஜான் டிரஸ்ட் தமிழாக்கம்)
நீ இவைகளைக் கண்டு சிறிது வேதனைப்பட்டு இருப்பாய், ஆனால், நாம் ஒன்றும் செய்வதற்கில்லை, இது தான் இஸ்லாமிய சொர்க்கம். இஸ்லாமின்படி ஒவ்வொரு ஆணுக்கும் 100 ஆண்களின் சக்தியை அல்லாஹ் கொடுப்பாராம். ஒரு நாளுக்கு ஒரு ஆண் 100 பெண்களிடம் உடலுறவு கொள்ளமுடியும். இஸ்லாமிய இறைவன் எவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பதை கவனி.
இஸ்லாமின் சொர்க்கத்தில் வெறும் கன்னிகள் மட்டும் கிடைப்பார்கள் என்று நான் சொல்லவில்லை, கனிவகைகள், மயக்கம் வராத பானங்கள் என்று அனேகம் உண்டு என்று குர்-ஆன் கூறுகிறது. இஸ்லாமிய பரலோகில் முஸ்லிம்கள் உடலுறவு கொள்வதற்காகவே அழகான பெண்களை படைப்பதாக அல்லாஹ் கூறுகிறார். இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், இஸ்லாமிய பெண்களுக்கும் சொர்க்கத்தில் கணவரல்லாத ஆண்களோடு உடலுறவு கொள்ள அல்லாஹ் வகை செய்வானாம். ஒரு முறை பீஜே என்ற இஸ்லாமிய அறிஞர், இஸ்லாமிய ஆண்களுக்கு புதிய பெண்கள் கிடைப்பது போல, இஸ்லாமிய பெண்களுக்கும் புதிய ஆண்கள் கிடைப்பார்கள் என்று கூறுகிறார், என்னே அல்லாஹ்வின் சொர்க்கம்!
உனக்கு யெகோவா தேவனின் பரலோகம் பற்றி தெரியுமல்லவா?
இறைவன் இருக்கும் இடம் பரிசுத்த இடமாகும், அங்கு பெண் கொடுப்பதுமில்லை, பெண் கொள்வதுமில்லை என்று பைபிள் சொல்கிறது. முக்கியமாக, உடலுறவு என்பது மனித இனம் பூமியில் பெருக இறைவன் அமைத்த ஒரு வழியாகும். அது பரலோகில் தேவையேயில்லை.
தம்பி, உன்னிடம் தனிப்பட்ட முறையில் சில கேள்விகளை கேட்க விரும்புகிறேன்:
- உனக்கு அல்லாஹ் அனேக பெண்களை சொர்க்கத்தில் கொடுக்கவேண்டுமென்று விரும்புகிறாயா?
- இறைவன் இருக்கும் இடத்தில் ஒரு ஆண் அனேக பெண்களுடன் உடலுறவில் ஈடுபடுகிறார்கள் என்ற கோட்பாட்டை நீ ஜீரணித்துக் கொள்கிறாயா? அல்லது இதுவரை இந்த விவரம் பற்றி உன் இஸ்லாமிய நண்பர்கள் உன்னிடம் கூறவே இல்லையா?
- பைபிளின் பரலோகம் மற்றும் குர்-ஆனின் சொர்க்கம், இவைகளில் எது சரியானதாக இருக்கும் என்று நீ நினைக்கிறாய்? இஸ்லாமியனாக மாறிய நீ, விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், இஸ்லாமிய சொர்க்கமே சரியானது என்பதை நம்பவேண்டும். இதைப் பற்றி உன் தனிப்பட்ட கருத்தை அறிய விரும்புகிறேன்.
தம்பி, நீ இதைப்பற்றி அதிகமாக ஆய்வு செய்யவேண்டும் என்று உனக்கு ஆலோசனை சொல்கிறேன். இந்த கடிதத்தில் நான் சொன்ன விவரங்கள் சரியானவையா இல்லையா என்பதை நீயே சோதித்துப்பார். இமாம்கள், அறிஞர்கள் இந்த சொர்க்கம் பற்றி அதிகம் பேசி இஸ்லாமிய ஆண்களை மூளைச் சலவை செய்வதாக ஒரு குற்றச்சாட்டும் உண்டு, அதாவது ஜிஹாதில் ஆண்கள் ஈடுபடவேண்டும் என்பதற்காக இப்படி செய்வதாக கேள்விப்பட்டுள்ளேன்.
ஒரு தம்பியிடம் இஸ்லாமிய சொர்க்கம் பற்றி பேச வெட்கமாகத் தான் உள்ளது, ஆனால், என்ன செய்யமுடியும் சிலருக்கு சில சத்தியங்கள் சொல்ல இவைகளை சொல்லவேண்டியுள்ளது. நீ எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து நலமானதைப் பற்றிக்கொள்.
உன்னை அடுத்த கடிதத்தில் சந்திக்கிறேன்.
இப்படிக்கு, உன் சகோதரன்
தமிழ் கிறிஸ்தவன்.
Comment Form under post in blogger/blogspot