இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Monday, September 29, 2008

ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)



ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை


அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)


அபூமுஹையும் மறைத்த விவரங்களும்
 

முன்னுரை: முகமது பல அரசர்களுக்கு கடிதம் எழுதினார்கள், அவர்களை இஸ்லாமுக்கு அழைப்பு விடுத்தார்கள். இக்கடிதங்கள் வெறும் அழைப்பிதழ் என்று நினைத்துக் கொள்ளவேண்டாம், இவைகளில் முகமது பயப்படவைத்து, அழைப்பு விடுத்தார், அதாவது இஸ்லாமை ஏற்கவில்லையானால், உங்கள் ஆட்சி நிலைக்காது, நான் போர் புரிவேன் என்ற தோரணையில் எழுதினார். முகமது எழுதிய பல கடிதங்களில் நான் ஒரு கடிதத்தை வெளியிட்டு இருந்தேன். அனைத்து கடிதங்களையும் அபூ முஹை அவர்கள் வெளியிட்டார்கள்.

 


அக்கடிதங்களில் பெரும்பான்மையானவற்றில் ஒரு குறிப்பிட்ட வார்த்தையை அல்லது வரியை தமிழில் வித்தியாசமாக மொழிபெயர்த்து வெளியிட்டு இருந்தார்கள், அபூமுஹை அவர்கள்(அக்கடிதங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட புத்தகத்திலிருந்து எடுத்ததாக சொன்னார்கள்).

பிறகு நான் கீழ் கண்ட கட்டுரையை வெளியிட்டேன்.
 
 
 
 
இந்த மேலே உள்ள கட்டுரையில் எந்த வரிகளில் வித்தியாசமாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்று நான் தெளிவாக விளக்கினேன், இருந்தாலும் மறுபடியும் அபூமுஹை அவர்கள் கேட்டதாலும், ஒரு சில கேள்விகளை முன்வைத்ததாலும், இக்கட்டுரையில் அவைகளை விளக்குகிறேன்.
 
அபூமுஹை அவர்கள் கேட்ட கேள்விகள்:

… "இஸ்லாமிய அறிஞர்கள் தமிழில் மொழிபெயர்க்கும் போது வேண்டுமென்றே சில வார்த்தைகளை மறைத்து விட்டார்கள்'' என்று கூறும் பிற மத நண்பர்கள், தங்கள் விமர்சனத்தை உண்மைப்படுத்த, இஸ்லாமிய அறிஞர்கள் மறைத்த வார்த்தைகள் எது? என்பதை மூலமொழியிருந்து எடுத்துக்காட்ட கடமைப்பட்டுள்ளனர். …

…கேள்வி எழுப்பியதோடு "மறைத்த உண்மை எது?" என்பதைக் குறிப்பிட்டு எழுதியிருக்கலாமே! …

Source: http://abumuhai.blogspot.com/2008/08/blog-post.html
 
 
1) "மறைத்த உண்மை எது?"

 
அபூமுஹை அவர்கள் "மறைத்த உண்மை எது?" என்று நான் எழுதியிருக்கலாம் என்று கேட்கிறார்கள். ஆனால், அவர் என் கட்டுரையை சரியாக படிக்கவில்லை போலத் தெரிகிறது.

 
அதாவது, நான் எழுதிய கட்டுரையில் அவர் எழுதிய அனைத்து கடித கட்டுரைகளிலிருந்து எந்த வார்த்தை வித்தியாசமாக உள்ளது என்றும், அதன் ஆங்கில கட்டுரையும் பட்டியல் இட்டு, அந்த குறிப்பிட்ட வார்த்தைகளை அல்லது வரிகளை குறிப்பிட்டு இருந்தேன். இதை சரியாக பார்த்து படித்து இருந்தாலே, அபூமுஹை அவர்களுக்கு நன்றாக‌ புரிந்திருக்கும்.

 
இன்னும் முஸ்லீம்களுக்கு விளங்கவேண்டுமென்பதற்காக, கீழ் கண்டவாறு எழுதியிருந்தேன்.
 
ஆங்கிலத்தில் "if you embrace Islam, you will find safety" என்று உள்ளதை

தமிழில் "
நீ இஸ்லாத்தை ஏற்றுக்கொள், ஈடேற்றம் பெறுவாய்" என்று மொழிபெயர்த்துள்ளார்கள்.

 
 
எந்த விவரம் மறைக்கப்பட்டுள்ளது என்று மேலே உள்ள வரிகளை படித்துமா உங்களுக்கு புரியவில்லை? அபூமுஹை அவர்களே?

 
வேண்டுமானால் மறுபடியும் சொல்கிறேன், "அரசர்களை பயப்படவைத்து இஸ்லாமை ஏற்றுக்கொள் என்று முகமது சொன்னதை, முகமது சாதாரணமாக ஒரு அழைப்பிதழ் அனுப்புவதாக எழுதியுள்ளீர்களே" இது தான் மறைக்கப்பட்டுள்ளது.

முகமது தன் கடிதங்களில், இஸ்லாமை வாள் மூலமாக பரப்ப முடிவு செய்துள்ளதை நீங்கள், அமைதியான முறையில் பரப்பும்படி எழுதியுள்ளதாக எழுதியுள்ளீர்களே, இது தான் மறைக்கப்பட்டுள்ளது.
 
 
 
2) அரபியிலிருந்து நேரடியாக தமிழில் மொழிபெயர்த்த உங்கள் கடிதங்களே போதும் இஸ்லாமை அமைதியான முறையில் முகமது பரப்பவில்லை என்பதற்கு!

 
நீங்கள் அதாவது முஸ்லீம்கள் நேரடியாக அரபியிலிருந்து மொழிபெய‌ர்த்தோம் என்றுச் சொன்னீர்களே, அந்த கடிதங்களே போதும். இதற்கு மூல மொழியில் சரிபார்க்கவேண்டிய அவசியமில்லை. "if you embrace Islam, you will find safety" என்ற வார்த்தைகள் மட்டுமல்ல, நீங்கள் பதித்த கடிதங்களின் இதர வரிகளே சொல்கின்றன, முகமது பயப்படவைத்து தான் இஸ்லாமை பரப்ப முயற்சி செய்தார் என்பதை.

 
உதாரணத்திற்கு, நீங்கள் அரபியிலிருந்து தமிழில் நேரடியாக மொழிபெயர்த்த வரிகளை சிறிது பாருங்கள்.
 
 
நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் உங்களையே நான் ஆட்சியாளர்களாக ஆக்கி விடுவேன். நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டால் நிச்சயம் உங்களின் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்பதில் சந்தேகமேயில்லை. எனது வீரர்கள் உங்களது நாட்டிற்கு வெகு விரைவில் வந்திறங்குவார்கள். எனது நபித்துவம் உங்களது ஆட்சியை வெல்லும்.'

Source: http://abumuhai.blogspot.com/2008/07/8.html
 
 
அ) யார் யாரை ஆட்சியாளர்களாக ஆக்குவது? இஸ்லாமுக்கு அழைப்பிதழ் அனுப்பி அழைத்தவர், இப்படித் தான் அழைப்பார்களா?

ஆ) "இஸ்லாமை ஏற்றுக்கொள்ளாவிட்டால் உங்கள் ஆட்சி கழிந்துவிடுவது நிச்சயம" என்றால் இதன் பொருள் என்ன? இது அழைப்பிதழா அல்லது பயப்பிதழா?

இ) இஸ்லாமை ஏற்காவிட்டால், ஏன் முகமதுவின் வீரர்கள் அழைப்பிதழ் அனுப்பப்பட்ட நாட்டில் வந்து இறங்குவார்கள்? அதாவது, இஸ்லாமை அந்த நாட்டு அரசர் ஏற்கவில்லையானால், முகமதுவின் தோழர்கள் அந்த நாட்டிற்குச் சென்று, நல்ல சமுதாய சேவைகளை செய்து, இஸ்லாம் சொல்லும் நல்ல காரியங்களை மக்களுக்குச் செய்துக்காட்டி, இஸ்லாமுக்கு நல்ல பெயரை கொண்டு வருவதற்காகவா? அந்த நாட்டில் வந்து இறங்குவார்கள் என்று முகமது சொல்லியுள்ளார்? அல்லது இரத்த ஆறை அல்லாவின் பெயரால் உருவாக்குவதற்காகவா?

ஈ) ஏன் இவரது நபித்துவம், மற்றவர்களின் ஆட்சியை வெல்லவேண்டும். மனிதர்களின் மனதில் முகமதுவும் அவரது இஸ்லாமும் ஆட்சி பிடிக்கனுமா அல்லது நாட்டை பிடிக்கனுமா?

அரபியிலிருந்து நேரடியாக தமிழில் மொழிபெயர்த்த உங்களது அடுத்த கட்டுரை இப்படிச் சொல்கிறது:
அஸத் இப்னு குஸைமா கிளையைச் சேர்ந்த ஷுஜா இப்னு வஹப் இக்கடிதத்தை எடுத்துச் சென்றார். இவர் ஹாரிஸிடம் கடிதத்தை ஒப்படைத்த போது, அதைத் தூக்கி எறிந்துவிட்டு''என்னிடமிருந்து எனது ஆட்சியை யாரால் பிடுங்க முடியும். இதோ நான் அவரிடம் புறப்படுகிறேன்'' என்று கர்ஜித்தான். இவன் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளவில்லை.

Source: http://abumuhai.blogspot.com/2008/07/67.html
 
 
அ) ஒருவருக்கு இஸ்லாமை தழுவும் படி அழைப்பிதழ் அனுப்பினால், அதை படித்தவுடன் அல்லது அதில் எழுதியதை கேட்டவுடன், ஏன் அந்த அரசன் கோபம் கொள்ளவேண்டும்?

 
ஆ) எனது ஆட்சியை யாரால் பிடுங்க முடியும் என்று அந்த அரசன் ஆவேசமாக கொதித்து எழ காரணமென்ன? உன் ஆட்சியை நான் எடுத்துக்கொள்வேன் என்று அந்த கடிதத்தில்(மன்னிக்கவும், அழைப்பிதழில்) இருந்தால் தானே அந்த அரசன் கோபம் கொண்டு இப்படி பேசமுடியும்?

 
இ) "இதோ நான் அவரிடம் புறப்படுகிறேன் என்று கர்ஜித்தான்" என்று நீங்களே மொழிபெயர்த்துள்ளீர்கள். இதன் பொருள் என்ன என்று உங்களுக்கு தெரியும் என்று எண்ணுகின்றேன். ஒரு கடிதத்தில் "இஸ்லாமுக்கு உங்களை அழைக்கிறேன், விருப்பம் இருந்தால், தழுவுங்கள், இல்லையானால் உங்கள் விருப்பம், அழைப்பது என் கடமை என்றுச் சொல்லியிருந்தால், ஏன் அவர் கர்ஜிக்கப்போகிறார்"?

 
இப்படிப்பட்ட கேள்விகளுக்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள் அபூமுஹை அவர்களே. ஒரு வேளை இப்படி இல்லை, மூல மொழியில் வேறு மாதிரி இருக்கின்றது என்றுச் சொல்லப் போகிறீர்களா? அப்படி சொல்லமாட்டீர்கள் ஏனென்றால், நீங்கள்(முஸ்லீம்கள்) தான் நேரடியாக அரபியிலிருந்து மொழிபெயர்த்தது என்று நீங்களே சொல்லியுள்ளீர்கள்.
 
 
3) உங்களைத் தவிர உலகத்தில் உள்ள மற்ற அனைத்து முஸ்லீம்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு தவறு என்றுச் சொல்கிறீர்களா?

 
அன்பான அபூமுஹை அவர்களே, நான் தமிழில் மொழிபெயர்த்தது தவறு என்றுச் சொல்வதற்காக, ஒரு நொண்டிக் காரணத்தைச் சொல்லியுள்ளீர்கள். அதாவது, அரபியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்து, அதைப் பார்த்து நான் தமிழில் மொழிபெயர்த்ததால், நான் சொல்வது தவறு என்றுச் சொல்கிறீர்கள். அப்படியானால், என் கட்டுரையில் அக்கடிதங்கள் ஆங்கிலத்தில் கொடுத்து இருந்தேனே, அது கூட ஒரு இஸ்லாமிய தளம் மொழிபெயர்த்ததையே கொடுத்து இருந்தேனே? அது நேரடியாக அரபியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தது தானே. உங்களுக்கு ஆங்கில வார்த்தைகளில் உள்ள பொருள் தென்படவில்லையா?

 
தமிழ் முஸ்லீம்கள் சொல்வது தான் உண்மை, உலகத்தில் மற்ற யார் சொன்னாலும், முஸ்லீமாக இருந்தாலும் அவர்கள் சொல்வது தவறு! அப்படித் தானே?

 
உண்மையிலேயே நீங்கள் சொல்வது உண்மையாக இருக்குமானால், அதாவது, முகமது யாரையும் பயமுறுத்தி கடிதம் எழுதவில்லை என்று நீங்கள் நம்புகிறவராக இருந்தால், நான் கொடுத்த ஆங்கில தளத்துடன் தொடர்பு கொண்டு,

 
"ஏன் இப்படி இஸ்லாமுக்கு கெட்டபெயரை கொண்டுவருகிறீர்கள்?,

ஏன் தப்பு தப்பான விவரங்களை பதிக்கிறீர்கள்?

நம்முடைய நபி அவர்கள் அமைதியான முறையில் கடிதம் எழுதினால், அதை மாற்றி தப்பாக மொழிபெயர்த்து இப்படி உலகமெல்லாம் ஒரு பொய்யான செய்தியை பரப்புகிறீர்களே, இது நியாயமா? என்று கேட்டு இருப்பீர்கள்.

 
உங்களுக்கு அரபி தெரியவில்லையானால், எங்களிடம்(தமிழ் முஸ்லீம்களிடம்) கேட்டால், நாங்கள் உங்களுக்கு சரியாக மொழிபெயர்த்து தருகிறோம், இனி இப்படி செய்யாதீர்கள்" என்று கேட்டு இருப்பீர்கள்.

 
அதை விட்டுவிட்டு, என்னிடம் மூல மொழியில் எந்த வார்த்தை மறைக்கப்பட்டு இருக்கிறது என்று சொல்லுங்கள் என்றும், உங்கள் மொழிபெயர்ப்பு தவறு என்றும் சொல்லிக்கொண்டு இருக்கமாட்டீர்கள்.

 
இன்னும் ஒரு படி மேலே சென்று, "இஸ்லாமை ஏற்றுக்கொள்ளுங்கள், ஈடேற்றம் பெருவீர்கள்" என்று நீங்கள் மொழி பெயர்த்த அரபி வார்த்தையை முகமது எழுதிய கடிதங்களிலிருந்து எடுத்து, அரபியில் அவ்வார்த்தையை பதித்து, இந்த வார்த்தையைத் தான் நாங்கள் தமிழில் இப்படிமொழி பெயர்த்தோம், இதற்கு இது தான் அர்த்தம் என்றுச் சொல்லியிருப்பீர்கள். அதையும் செய்யாமல், "எந்த வார்த்தை என்று சொல்ல நீங்கள் கடமைப்பட்டுள்ளீர்கள்" என்று என்னிடம் கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்.
 
 
4) ஓமன் நாட்டு அரசாங்கத்திற்கு ஒரு கண்டன கடிதம் எழுதுங்கள், இஸ்லாமியர்களே!

 
ஓமன் நாட்டு அரசாங்கம் தன் அருங்காட்சியகத்தில், ஓமன் நாட்டுக்கு முகமது அவர்கள் எழுதிய க‌டிதத்தை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்து பதித்துள்ளார்கள். அதனை ஆங்கிலத்தில் கீழ்கண்டவாறு மொழிபெயர்த்துள்ளார்கள். தமிழ் முஸ்லீம்களுக்கும், இதர தமிழர்களுக்கும் "இஸ்லாம் அமைதி மார்க்கம் இல்லை" என்று முகமது எழுதிய கடிதங்கள் ஆங்கிலத்திலும், தமிழிலும் நான் வெளியிட்டதால், இவர்களுக்கு மட்டுமே தெரிய வாய்ப்பு இருந்தது, அதனை தவறு என்றுச் சொன்னீர்கள். ஆனால், ஓமன் நாட்டிற்கு உலகத்தின் பல நாடுகளின் பயணிகள் யார் சென்றாலும், ஆங்கிலத்தில் அக்கடிதத்தை(தவறாக மொழிப்பெயர்த்துள்ள கடிதத்தை)க் கண்டு இஸ்லாமை பயப்படவைத்து தான் முகமது பரப்பினார் என்பதை "தவறாக" புரிந்துக்கொள்வார்கள். எனவே, அந்நாட்டிற்கு கீழ் கண்டாவாறு அல்லது உங்கள் பாணியில் கடிதம் எழுதி, கண்டனம் தெரிவித்துக்கொள்ளுங்கள், அந்த வரிகள் மாற்றப்படும் வரை தொடர்ந்து செயல்படுங்கள்.

 
"Peace be upon the one who follows the right path! I call you to Islam. Accept my call, and you shall be unharmed. I am God's Messenger to mankind, and the word shall be carried out upon the miscreants. If, therefore, you recognize Islam, I shall bestow power upon you. But if you refuse to accept Islam, your power shall vanish, my horses shall camp on the expanse of your territory and my prophecy shall prevail in your kingdom."
 
மேலே உள்ள ஆங்கில எழுத்துக்களில்(அடிக்கோடிட்ட வரிகளில்) முகமது பயப்படவைத்து தன் இறைவன் அல்லாவின் மார்க்கத்தை பரப்பியதாக மொழிபெயர்த்துள்ளார்கள். இஸ்லாமியர்களே, இந்த மொழிபெயர்ப்பும் உங்களுக்கு தவறாக காணப்படலாம், ஒருவேளை உங்களுக்கு தவறாக காணப்பட்டால், உடனே, ஓமன் நாட்டு அரசாங்கத்திற்கு ஒரு கடிதம் எழுதி, தமிழ் முஸ்லீம்கள் அனைவரும் கையெழுத்து இட்டு, உங்கள் கண்டனத்தை அனுப்புங்கள்.
 
 
"ஓமன் நாட்டு அரசாங்கமே, உனக்கு அரபி தெரியவில்லையானால், எங்களை (தமிழ் முஸ்லீம்களை) கேளுங்கள், நாங்கள் கற்றுக்கொடுக்கிறோம் மற்றும் மொழி பெயர்த்துக் கொடுக்கிறோம், ஆனால், இப்படி இஸ்லாமுக்கு கெட்டபெயர்(இந்தியாவில்) கொண்டு வரும்படி நடந்துக்கொள்ள வேண்டாம்"
 
என்று எழுதுங்கள், உங்கள் இஸ்லாம் அமைதி மார்க்கம் என்பதை நிலை நாட்ட இப்படிப்பட்ட நல்ல செயல்களைச் செய்து உங்கள் ஈமானை அல்லாவிற்காக அவனது அமைதி மார்க்கத்திற்காக, அவரது ரசூலுக்காக காட்டுங்கள்.
 
5) Aslim Taslam (Arabic: أسلم تسلم) என்றால் என்ன?

 
முதலாவதாக, முகமது வாள் மூலமாகத் தான் இஸ்லாமை பரப்பினார் என்பதற்கு ஆங்கிலத்தில் உள்ள கடிதங்களே போதும் சாட்சி சொல்வதற்கு, கார‌ண‌ம் ஆங்கில‌த்தில் மொழிப் பெய‌ர்த்த‌வ‌ர்க‌ளும், உங்க‌ளைப்போல‌ முஸ்லீம்க‌ளே.

இரண்டாவதாக, நீங்கள் நேரடியாக அரபியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்தது என்றுச் சொல்லிக்கொள்ளும் கடிதங்களில் உள்ள இதர விவரங்களே போதும், முகமதுவின் பிரச்சாரம் எப்படி இருந்தது என்பதை அறிய.

மூன்றாவதாக, நீங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, முகமது அவர்கள் தங்கள் கடிதங்களில் எழுதிய அரபி வார்த்தைகளைத் தருகிறேன்.
 
 
Aslim Taslam (Arabic: أسلم تسلم)
 
 
Aslim Taslam (Arabic: أسلم تسلم) is a phrase meaning "accept Islam and you will be saved".[1] that was taken from the letters sent by the Islamic prophet Muhammad to various kings and rulers in which he urged them to convert to Islam.[2][3] ….

References in Hadith

Sahih Muslim narrates in Kitab Al-Jihad wa'l-Siyar (The Book of Jihad and Expedition) Book 19, Number 4294, Chapter 2: Appointment of the Leaders of Expeditions by the Imam and His Advice to Them on Etiquettes of War and Related Matters: "Invite them to (accept) Islam; if they respond to you, accept it from them and desist from fighting against them."[7] …..

Critical responses

In response to the aslim taslam invitation to submit to Islam, the Italian author and journalist Oriana Fallaci asserted the rejoinder "lan astaslem" (Arabic: لن استسلم ) meaning "I will not surrender". [15] [16] Michelle Malkin has taken up this slogan as a response to the WTC terrorist attacks[17]

["lan astaslem" (Arabic: لن استسلم )

இத்தாலிய‌ ஆசிரியர் மற்றும் செய்தியாளர் ஓரியான ஃபல்லசி என்பவர் "லன் அஸ்டஸ்லெம்" என்றாராம், அதாவது, "நான் இஸ்லாமுக்கு சரணடையமாட்டேன்" என்றுப்பொருள். இதே ஸ்லோகத்தை மைக்கேலே மல்கின் என்பவரும், உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்டதற்கு எதிர்த்து இப்படியே சொன்னாராம். ]


On September 17, 2006, in response to the Pope Benedict XVI Islam controversy, Imad Hamto, a Palestinian religious leader, said: "We want to use the words of the Prophet Muhammad and tell the pope: Aslim Taslam." This was interpreted as a warning.[3][18][vague]

[இஸ்லாம் பற்றி போப் பெனடெக்ட் XVI

இஸ்லாம் பற்றி போப் பெனடெக்ட் XVI அவர்களின் விமர்சனத்திற்கு எதிராக‌(செப்டம்பர் 17 2006) பாலஸ்தீன இஸ்லாம் மத தலைவர் இமத் ஹன்டோ அவர்கள், கூறினார்கள்: " நாம் நம் நபி அவர்கள் சொன்ன அதே வார்த்தையை இப்போது போப்பிற்கு கூற விரும்புகிறோம்: அதாவது, "அஸ்லிம் தஸ்லம்" என்பதாகும். ]


Source: http://en.wikipedia.org/wiki/Aslim_Taslam

 
 
முடிவுரை: அன்பான அபூமுஹை அவர்களே, நீங்கள் இஸ்லாமை இந்தியாவிற்காக திருத்திச் சொல்லவேண்டாம் (Don't try to Customize Islam for India) , எத்தனை நாட்கள் திருத்திச் சொல்வீர்கள்? ஒரு நாள், ஒரு மாதம், ஒரு வருடம் நூறு வருடம், ஆயிரம் வருடங்கள் பிறகு ஒரு நாள் உண்மை வெளிவந்தே தீரும். முகமது அவர்கள் அனுப்பிய கடிதங்களில் பயமுறுத்தல்கள் இருந்தன, மற்றும் வாள் மூலமாக தன் மார்க்கத்தை அவர் பரப்பினார் என்று புரிந்திருக்கும். இப்போது என்ன செய்யப் போகிறீர்கள்? அபூமுஹை அவர்களே , "இல்லை இல்லை" முகமது எழுதிய கடிதங்களில் அன்பு இருந்தது, அராஜம் இல்லை, அமைதி இருந்தது, கொடுமை இல்லை என்றுச் சொல்லப்போகிறீர்களா?

வெளியரங்கமாகாத அந்தரங்கமுமில்லை, வெளிக்கு வராத மறைபொருளுமில்லை - இயேசு


 

 
 

Saturday, September 27, 2008

இயேசு கிறிஸ்துவே கடவுள்-குரான் சொல்லுகிறது

Friday, September 26, 2008

முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை

 

இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
சாம் ஷமான்

Muhammad and the Seal of Prophethood

A Sign or A Physical Deformity?

முகமது, "நபிமார்களின் முத்திரையானவர்" என்று குர்‍ஆன் சொல்கிறது:

முஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார் மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன். (குர்‍ஆன் 33: 40)

Muhammad is not the father of any of your men, but (he is) the Apostle of God, and the Seal of the Prophets: and God has full knowledge of all things. S. 33:40 Y. Ali

முதன் முதலில் மேலுள்ள வசத்தை படித்தவுடன், நமக்கு, "முகமது தான் நபித்துவத்தின் முடிவானவர் என்றும், அல்லாவால் அனுப்பபட்ட நபிகளின் வரிசையில் இவரே இறுதியானவர் என்றும்" விளங்கும். ஹதீஸ் தொகுப்புக்களை படிக்கும் போது, இஸ்லாமிய ஆதாரங்களின் படி பார்த்தால், முகமதுவுக்கு முன்னிருந்த நபிமார்களின் நிலைகளோடு(Status) , முகமதுவின் நிலையைப் பற்றிப் பார்க்கும் போது இந்த 'முத்திரை" என்பது சாதாரண ஒரு கூற்றை விட அதிகமானது. (இக்கட்டுரையில் கீழ் கோடிட்ட, கனத்த குறிப்புகள் அனைத்தும் நம்முடையது.)

சஹிஹ் அல்-புகாரி(Sahih al-Bukhari):

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 190

'என்னுடைய சிறிய தாயார் என்னை நபி(ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று 'இறைத்தூதர் அவர்களே! என் சகோதரி மகன் இரண்டு பாதங்களிலும் வேதனையால் கஷ்டப்படுகிறான்' எனக் கூறியபோது, நபி(ஸல்) அவர்கள் என்னுடைய தலையைத் தடவி என்னுடைய அபிவிருத்திக்காகப் பிரார்த்தித்தார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள். அவர்கள் மீதி வைத்த தண்ணீரிலிருந்து நான் குடித்தேன். பின்னர் நபி(ஸல்) அவர்களின் முதுகிற்குப் பின்னால் எழுந்து நின்றேன். அப்போது அவர்களின் இரண்டு புஜங்களுக்கிடையில் நபித்துவத்தின் முத்திரையை பார்த்தேன். அது ஒரு புறா முட்டை போன்று இருந்தது" என ஸாயிப் இப்னு யஸீது(ரலி) அறிவித்தார்.

பாகம் 6, அத்தியாயம் 80, எண் 6352

சாயிப் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார்.

(சிறுவனாயிருந்த) என்னை என் தாயாரின் சகோதரி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொண்டுசென்று, 'இறைத்தூதர் அவர்களே! என் சகோதரி மகனுக்கு (பாதங்களில்) நோய் கண்டுள்ளது' என்றார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் (அன்புடன்) என் தலையை வருடிக் கொடுத்து என் சுபிட்சத்திற்காகப் பிரார்த்தித்தார்கள். பின்னர் அங்கசுத்தி (உளூ) செய்தார்கள். அவர்கள் அங்கசுத்தி செய்து மிச்சம் வைத்த தண்ணீரிலிருந்து சிறிது பருகினேன். பிறகு நான் அவர்களின் முதுகுக்குப் பின்னே நின்று கொண்டு அவர்களின் இரண்டு தோள்களுக்கிடையே இருந்த நபித்துவ முத்திரையைப் பார்த்தேன். அது மணவறைத் திரையில் பொருத்தப்படும் பித்தானைப் போன்றிருந்தது.

சஹிஹ் முஸ்லீம்(Sahih Muslim):

அதிகாரம் 28: அவருடைய நபித்துவத்தின் முத்திரையைப் பற்றிய உண்மை, அதன் சிறப்பு குணாதிசயம் மற்றும் உடலில் அமைந்துள்ள இடம்.

ஜபீர் பி சமுரா கூறியதாவது: நான் அவர் முதுகிலிருந்த முத்திரையைப் பார்த்தேன், அது ஒரு புறா முட்டையைப் போல் இருந்தது.(Book 030 Number 5790)

அப்துல்லா பி சார்ஜிஸ் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதரை(ஸல்)ப் பார்த்து, அவரோடு ரொட்டி மற்றும் இறைச்சி சாப்பிட்டேன். அவரிடம் கேட்டேன் "அல்லாஹ்வின் தூதர்(ஸல்) உமக்கு மன்னிப்புக் கோரினாரா? என்று. அவர் சொன்னார்: "ஆமாம் உனக்காகவும், என்று இந்த வசனத்தை ஓதினார்கள்: " உன்னுடைய பாவத்திற்காகவும் உன்னுடைய விசுவாசமுள்ள ஆண் பெண்களுக்காகவம் மன்னிப்புக் கேள்(xlvii. 19)" பிறகு நான் அவர் பின்னாகச் சென்று, நபித்துவத்தின் முத்திரையை அவரது இரண்டு தோள்பட்டைகளின் இடையில் இடது தோள்பட்டையின் பக்கத்தில் கண்டேன், அது ஒரு மச்சம் போல காட்சி அளித்தது. (Book 030, Number 5793)

அபு தாவுதின் சுனான்(Sunan of Abu Dawud):

குர்ராஹ் இபின் இயாஸ் அல்- முஸானி கூறியதாவது:

நான் முஸாயானிகளின் கூட்டத்தோடு அல்லாவின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, கூட்டு வைப்பதற்கு சத்தியம் செய்துகொண்டோம். அவருடைய சட்டையின் பொத்தான்கள் திறந்திருந்தது. நான் அவருக்கு சத்தியம் செய்து கொடுத்து என் கையை அவருடைய சட்டைக்குள்ளே கழுத்துப்பகுதியில் வைத்தேன் அப்போது அந்த முத்திரையை உணர்ந்தேன். ( Book 32, Number 4071)

திர்மிதியின் ஜமி சுனான்(Jami (Sunan) of at-Tirmidhi)

அலி இப்னு அபுதலிப் கூறியதவாது:

அலி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பற்றி வர்ணித்தபோது சொன்னார்கள்: அவர் மிகவும் உயரமானரோ அல்லது மிகவும் குட்டையானவாராகவோ இல்லை. சரியான அளிவிலே இருந்தார்கள். அவருக்கு ரொம்ப நீளமான அல்லது சுருளான மயிராக இல்லாமல் இரண்டும் கலந்ததாக சரியான விதத்தில் இருந்தது. அவர் மிகவும் பருமனாக இருக்கவில்லை அவருடைய முகம் வட்டமாக இல்லை. அவர் சிவப்பும், வெண்மையுமாகவும், அகலமான கருவிழிகளும் நீண்ட இமைகளும் கொண்டிருந்தார். அவருக்கு நீட்டமான மூட்டுகளும் தோள்பட்டைகளும் இருந்தது. ரோமம் நிறைந்திருக்கவில்லை என்றாலும் அவர் மார்பில் ரோமம் இருந்தது. அவருடைய உள்ளங்கைகளும் கால்களும் கடினமாக இருந்தது. அவர் நடந்த போது சாய்வான இடத்தில் நடப்பது போல பாதங்களை உயர்த்தி; நடந்தார். அவருடைய தோள்களுக்கு நடுவில் நபித்துவத்தின் முத்திரை இருந்தது அவர் நபிமார்களின் முத்திரையாக இருந்தார். வேறு எவரையும் விட அவருடைய மார்பு புயம் அருமையாக இருந்தது, மற்றவர்களை விடத் தோற்றத்தில் நிஜமாக இருந்தார், உயர்குலத்தை சேர்ந்தவராக இருந்தார். அவரைத் திடீரென்று பார்த்தவர்கள் அவரைப் பற்றிய அச்சத்தில் ஆழ்ந்தார்கள். அவரோடு பழக்கம் ஏற்படுத்திக் கொண்டவர்கள் அவரை நேசித்தார்கள். அவரைப் பற்றி வர்ணித்தவர்கள், அவரைப் போல் ஒருவரை அதற்கு முன்னோ அல்லது பின்னோ பார்த்ததில்லை என்றார்கள். Tirmidhi transmitted it. (Hadith 1524; ALIM CD-Rom Version)

அபுமூஸா கூறியதாவது

அபுதாலிப், குராயிஷின் சில ஷியாக்களோடு ஆஷ் - ஷாம் க்கு (சிரியா) முகமது நபியோடுகூடப் போனார். அவர்கள் அந்த துறவியினிடத்திற்கு வந்தபோது தங்களுடைய பைகளை அவிழ்த்தார்கள் அந்த துறவி அவர்களை நோக்கி வந்தார். இதற்கு முன் அவர்கள் அந்த வழியாக கடந்து போயிருந்தபோதும் இப்படி நடக்கவில்லை. அவர்கள் தங்களுடைய பைகளை அவிழ்த்துக் கொண்டிருந்தபோது அந்த துறவி அவர்கள் அருகில் வந்து அல்லாவின் தூதரை (சமாதானம் உண்டாகட்டும்) கை பிடித்துத் தூக்கி, "இவர் தான் உலகத்தின் அதிபதியாயிருக்கிறார், இவர் உலகத்தின் இறைத் தூதராயிருக்கிறார் இவரை அல்லாஹ் உலகத்திற்கு ஒரு தயவாக கொடுத்திருக்கிறார்" என்றார். குராயிஷின் சில ஷியாக்கள் அவருக்கு எப்படித் தெரியும் என்று கேட்டார்கள், அவர் கூறினார், " நீங்கள் மலைகளைக் கடந்து வந்த போது ஒரு மரமாவது அல்லது கல்லாவது பணிந்து வணங்கத் தவறவில்லை, அவைகள் நபிக்கு முன்பாக தங்களை பணித்தது. நான் அவரை நபித்துவத்தின் முத்திரை வைத்து அடையாளம் கண்டுகொண்டேன், அது ஒரு ஆப்பிளைப் போல் அவருடைய தோள் பட்டைக்கு கீழாக இருந்தது." அதற்கு பின் அவர் சென்று உணவை ஆயத்தப்படுத்தி அதை நபிக்கு(சமாதனம் அவர் மேல்) கொண்டு வந்தபோது, நபி அவர்கள் ஒட்டகங்களை கவனித்துக் கொண்டிருந்தார். பின் அதை அவருக்காக அனுப்பிவிடும்படிச் சொன்னார். மேலே ஒரு மேகம் சூழ நபி வந்தார், மக்களை நெருங்கிய போது மக்கள் அவருக்கு முன்பாக ஒரு மரநிழலடியில் சென்றிருந்தார்கள். அவர் அமர்ந்த போது மரத்தின் நிழல் அவரை சூழ்ந்துகொண்டது, அந்த துறவி , " எப்படி அந்த மரநிழல் அவரை சூழ்ந்துள்ளது என்று பாருங்கள். அல்லாவின் பேரில் வேண்டுகிறேன் உங்களில் யார் அவருடைய பாதுகாவலர் என்று எனக்கு சொல்லுங்கள்." என்றார். அபுதாலிப்தான் என்று கேள்விப்பட்டவுடன், அவரை திருப்பி அனுப்பிவிடும்படி வேண்டிக்கொண்டார். அபுபக்கர் பிலாலையும் அவரோடுகூட அனுப்பிவைத்தார், அந்ந துறவி அவர்களுக்கு ரொட்டி மற்றும் ஒலிவ எண்ணெயை கொடுத்து அளித்தார்கள். (Hadith 1534; ALIM CD-Rom Version)

அல்-டபரியின் சரித்திரம்(Tarikh (History of) al-Tabari):

…பஹிரா இதைப் பார்த்தபோது, தன்னுடைய அறையிலிருந்து இறங்கி அந்த பயணிகளை வரவேற்று ஒரு செய்தி அனுப்பினார்….. இறுதியாக அவர் முகமதுவின் பினபுறத்தைப் பார்த்தார், அவருடைய தோள்களுக்கு நடுவிலிருந்த நபித்துவத்தின் முத்திரையைப் பார்த்தார்…… அவர் பதிலுரைத்து,… "நான் அவருடைய தோள் குருத்தெழும்பின் கீழிருந்த நபித்துவத்தின் முத்திரையினால் அவரை அடையாளம் கண்டுகொண்டேன், அந்த முத்திரை ஒரு ஆப்பிள் போல் இருந்தது."…… (The History of al-Tabari: Muhammad at Mecca, translated and annotated by W. Montgomery Watt and M. V. McDonald [State University of New York Press (SUNY), Albany 1988], Volume VI, pp. 45, 46)

அல்-ஹரித்-முகமது பி. சாத– முகமது பி. 'உமர்-'அலிப் பி. ' இசா அல்- ஹக்கீமி– அவர் தந்தை– அமீர் பி. ரபி'யா: சாயித் பி கூறியதைக் கேட்டேன. 'அமர் பி. நுபாயில் கூறினதாவது……" அவர் மிகவும் குட்டையாகவும் இல்லை உயரமாகவும் இல்லை, அவருடைய தலைமயிர் மிகவும் அடர்த்தியாகவோ அல்லது அடர்த்தியற்றோ காணப்படவில்லை, அவருடைய கண்கள் எப்போதும் சிவப்பாக இருந்தது, அவருக்கு தோள்களுக்கு இடையில் நபித்துவத்தின் முத்திரை இருந்தது. அவருடைய பெயர் அகமது….." (பக்கம் 64)

அகமது பி. சினான் அல்-கட்டான் அல்-வாசிட்டி–அபு முஉ'அவியாஹ் - அ'மஷ் - அபு ஷிப்யான் இப்னு 'அப்பாஸ்: பனு அமீரைச் சார்ந்த ஒரு மனிதன் நபியினிடத்தில் வந்து, " உங்கள் தோள்களுக்கு இடையில் இருக்கும் முத்திரையை எனக்கு காட்டுங்கள், நீங்கள் ஏதாவது சூனியத்தால் கட்டுப்பட்டிருந்தால் நான் உங்களை குணமாக்குவேன் ஏனென்றால் நான் தான் அரபுகளின் மிகச் சிறந்த மந்திரவாதி." என்றான் "நான் உனக்கு ஒரு அடையாளத்தைக் காட்ட வேண்டுமா" என்று நபி கேட்டார். "ஆம், அந்த பேரீச்சைக் குலையை வரவழையுங்கள்" என்றான். நபி அந்தக் பேரீச்சை சோலையில் இருந்த பேரீச்சைக் குலையைப் பார்த்து, அது அவருக்கு முன் வந்து நிற்கும் வரை விரல் அசைத்தார். பின்பு அந்த மனிதன் "இதை திருப்பி அனுப்புங்கள்."; என்றான். அது திருப்பி அனுப்பபட்டது. அந்த அமீரி சொன்னான், " ஓ பானு அமீர், நான் இதுவரை இதுபோன்ற மிகச்சிறந்த சூனியக்காரரை நான் பார்த்ததில்லை" (பக்கம் 66- 67)

"அப்பொழுது அவர் மற்றொருவனிடம் சொன்னான், 'அவருடைய மார்பைத் திற'. அவர் என்னுடைய இருதயத்தை திறந்து, சாத்தானுடைய அசுத்தங்களையும் உறைந்த இரத்தத்தையும் எடுத்து வெளியே எறிந்து போட்டார். மற்றொருவனிடத்தில் சொன்னார், அவருடைய மார்பை தொட்டியை கழுவுவது போல கழுவு, அவருடைய இதயத்தை உறையை கழுவுவது போல கழுவு' என்றார். அதன் பின் சக்கினாவை வரவழைத்தார், அது ஒரு வெள்ளைப் பூனையின் முகத்தைப் போலிருந்தது, அதை என் இதயத்தில் பொருத்தினார். அவர்களில் ஒருவனிடத்தில் "அவருடைய மார்பைத் தையலிடு" என்று சொன்னார். அவர்கள் என்னுடைய மார்பைத் தைத்தார்கள் மேலும் என்னுடைய தோள்களுக்கு இடையில் அந்த முத்திரையை வைத்தார்கள்…." (பக்கம் 75)

இங்கே முகமதுவுடைய நபித்துவத்தின் முத்திரை என்பது ஒரு சரீர குறைபாடு என்று புலனாகிறது, புள்ளிகள் நிறைந்த மச்சம் ஒரு ஆப்பிள் போல, ஒரு சிறிய பொத்தானைப் போல அல்லது புறாவுடைய முட்டையைப் போல இருந்ததாக கூறப்படுகிறது. முகமதுவின் நபித்துவத்தை நிருபித்து மக்கள் ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கு இந்த மச்சம் போன்ற அடையாளம் எப்படி உதவமுடியும்?

மூலம்: http://www.answering-islam.org/Shamoun/seal_of_prophethood.htm

முகமது பற்றிய இதர கட்டுரைகள்


 

Tuesday, September 16, 2008

எம். எம். அக்பர் அவர்களுக்கு பதில்: பைபிள் வார்த்தை பைபிளில் இல்லையா?





எம். எம். அக்பர் அவர்களுக்கு பதில்
 


பைபிள் வார்த்தை பைபிளில் இல்லையா?
 
 

முன்னுரை:இஸ்லாமிய அறிஞர் எம். எம். அக்பர் அவர்கள், கீழ் கண்ட ஒரு விவரத்தை தன் புத்தகத்தில் எழுதியுள்ளார் என்று ஒரு கட்டுரையை நம் தமிழ் முஸ்லீம்கள் வெளியிட்டு இருந்தார்கள். அதாவது பைபிள் என்ற பெயர் பைபிளில் இல்லை என்று இவர் சொல்லியுள்ளார். ஆனால், இது சரியான தகவலா? அல்லது இது ஒரு பொய்யா? இதை அலசுகிறது இந்தக் கட்டுரை. அதுமட்டுமல்ல, பைபிள் என்ற வார்த்தை குர்‍ஆனில் இருக்குமானால் எப்படி இருக்கும்? மேலும் அறிய படியுங்கள்.
 
 
எம். எம். அக்பர் அவர்கள்:

கிறித்தவர்கள் வேதமாகக் கருதும் பைபிளுக்கு பைபிள் என்ற பெயர் பைபிளில் எங்கும் இல்லை. பல்வேறு ஆசிரியர்களால் தொகுக்கப்ப்டட புத்தகங்களின் ஒரு கோர்வைக்கு பைபிள் என்ற பெயர் பிற்காலத்தில் வழங்கப்பட்டது என்பதே ஆய்வுகள் வழங்கும் சான்று .

source: பைபிள் - ஓரு விரிவான அலசல்



 
 
முஸ்லீம்களின் தவறான புரிந்துக்கொள்ளுதல் #2

Muslim misconception #2
 
"பைபிளைப் பற்றி குர்‍ஆன் குறிப்பிடவில்லை, ஆனால், தீர்க்கதரிசிகளாகிய மோசே, தாவீது, இயேசு போன்றவர்களுக்கு வெளிப்பட்ட வெளிப்படுகளைப் பற்றித் தான் குர்‍ஆன் குறிப்பிடுகிறது"

"The Quran never alludes to the Bible, only the revelation originally given to the Prophets, i.e. Moses, David, Jesus, etc."
 
 
பதில்(Response):

 
இது முஸ்லீம்களின் இன்னொரு ஆதாரமற்ற கற்பனையாகும். முஸ்லீம்கள் இப்படியாக நினைத்துக் கொள்கின்றனர், அதாவது குர்‍ஆனில் "பைபிள்" என்ற வார்த்தை இல்லை என்பதால், யூதர்களும் கிறிஸ்தவர்களும் தேவனுடைய வார்த்தைச் என்றுச் சொல்லும் பைபிளை முஸ்லீம்கள் இறைவனின் வார்த்தை என்று நம்புவதில்லை. ஆனால், "பைபிள்" என்ற வார்த்தையைப் பற்றி கிரேக்க மொழியில் தேடினால், கண்டிப்பாக இந்த வார்த்தை "பிப்லியா - Biblia" என்ற வார்த்தையிலிருந்து வந்தது என்பதை அறிந்துக்கொள்ளலாம், மற்றும் பிப்லியா என்றால் "புத்தகங்கள்" என்று பொருள் ஆகும். பைபிளில் 66 புத்தகங்கள் இருந்த போதிலும் அதனை ஒரு புத்தகமாக தொகுத்த போதிலும், அதன் ஆசிரியர் ஒருவரே, பரிசுத்த ஆவியானவர், மற்றும் மொத்த எழுத்துக்களின் கருப்பொருளும் ஒன்று தான், அது: விடுதலைத் தரும் தேவனின் மேசியாவின் வருகையாகும் (The advent of God's Messiah-Deliverer). மட்டுமல்ல, யூதர்களின் மற்றும் கிறிஸ்தவர்களின் வேதமாகிய புத்தகத்தை(அரபியில் அல்-கிதாப்) குர்‍ஆனும் குறிப்பிடுவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.
 
 
குர்‍ஆனிலிருந்து ஆதாரங்கள்:
 
 
குர்‍ஆன் 2:113

"The Jews say, `The Christians are not (founded) upon anything.' And the Christians say, `The Jews are not (founded) upon anything.' And yet
THEY READ THE BOOK."

 
யூதர்கள் கூறுகிறார்கள்; 'கிறிஸ்தவர்கள் எந்த நல்வழியிலும் இல்லை' என்று. கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள்; 'யூதர்கள் எந்த நல்வழியிலும் இல்லை' என்று. ஆனால், இவர்கள் (தங்களுக்குரிய) வேதத்தை ஓதிக்கொண்டே (இப்படிக் கூறுகிறார்கள்) ……..

 
குர்‍ஆன் 3:79

 
"It is not for a man to whom is given the Book and wisdom and prophecy that he should then say to people, `Be worshippers of me in place of God.' But rather, `Be true teachers (rabbáníyín), since you TEACH the BOOK and you STUDY IT EARNESTLY."

 
ஒரு மனிதருக்கு அல்லாஹ் வேதத்தையும், ஞானத்தையும், நபிப் பட்டத்தையும் கொடுக்க, பின்னர் அவர் "அல்லாஹ்வை விட்டு எனக்கு அடியார்களாகி விடுங்கள்" என்று (பிற) மனிதர்களிடம் கூற இயலாது. ஆனால் அவர் (பிற மனிதரிடம்) "நீங்கள் வேதத்தைக் கற்றுக் கொடுத்துக் கொண்டும், அ(வ்வேதத்)தை நீங்கள் ஓதிக் கொண்டும் இருப்பதனால் ரப்பானீ (இறைவனை வணங்கி அவனையே சார்ந்திருப்போர்)களாகி விடுங்கள்" (என்று தான் சொல்லுவார்).
 
 
முஹம்மத் அஸத்(Muhammad Asad) என்ற ஒரு இஸ்லாமிய அறிஞர், குர்‍ஆனை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் போது, "அரபியில் கிதாப்" என்பதற்கு பொருள் "பைபிள்" என்பதை புரிந்துக்கொண்டு, அதன்படி மொழிபெயர்த்துள்ளார்.
 
 
"... And so We have cast enmity and hatred among the followers of the Bible..." S. 5:64 (Asad, The Message of the Qur'an [21], [Dar Al-Andaulus, Gibraltar, rpt. 1994], p. 157)

"If the followers of the Bible would but attain to [true] faith and God-consciousness, we should indeed efface their [previous] bad deeds, and indeed bring them into gardens of bliss;" S. 5:65 (Ibid.)
 
 
ஆக, யூதர்களும் கிறிஸ்தவர்களும் மாற்றப்படாத புத்தகத்தை படித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்று குர்‍ஆன் குறிப்பிடுகிறது. குர்‍ஆனின் காலத்தில் யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் கைகளில் இருந்த ஒரு புத்தகம் அது பைபிள் தான், அதே பைபிள் தான் இன்றும் நம்மிடம் உள்ளது. பைபிள் என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தமோ அதே அர்த்தமுள்ள வார்த்தையைத் தான் குர்‍ஆனிலும் அரபியில் பயன்படுத்தப்பட்டுள்ளது, அதாவது அல்-கிதாப், அல்-முகத்தஸ், பரிசுத்த புத்தகம்(al-Kitab al-Muqaddas, the Holy Book). குர்‍ஆனில் கிதாப் என்ற வார்த்தை, முகமதுவின் காலத்திலும், அதற்கு பிறகும் அரபிக் கிறிஸ்தவர்கள் பயன்படுத்திய புத்தகத்தையே அது குறித்தது.
 
 
 
இரண்டாவதாக, கிறிஸ்தவர்களின் கண்ணோட்டத்தின் படி பார்த்தாலும், "பைபிள்" என்ற வார்த்தை கிறிஸ்தவ வேதத்தில் உள்ள வார்த்தையிலிருந்து தான் வந்தது என்பதை காணலாம். "பைபிள்" என்ற வார்த்தையின் மூல வார்த்தை கிரேக்க மொழியின் "பிப்லியா – Biblia (books)" என்ற வார்த்தையாகும். பைபிளுக்கு வெளியே இந்த‌ வார்த்தையை கி.பி. 150ல் 2 க்ளமண்ட் 14:2ல் காணலாம்:

 
"... புத்தகங்கள் (the books -ta biblia) மற்றும் அப்போஸ்தலர்கள் சபை என்பது.... ஆதிமுதல் இருந்ததாக கூறுகிறார்கள்."

 
"பிப்ளியா" என்பது "பிப்ளியன்" என்ற கிரேக்க மொழி வார்த்தையின் பன்மையாகும். "பிப்ளோஸ்" என்ற வார்த்தைக்கு இதற்கு மூல வார்த்தையாகும் ("Biblia" is the plural form of the Greek "biblion", which is itself a diminutive of "biblos").
 
 
மூன்றாவதாக, இந்த வார்த்தை தேவனின் வெளிப்பாடாகிய பைபிளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
 
 
"And truly Jesus did many other signs in the presence of His disciples, which are not written in this book (en to biblio touto)." John 20:30

 
இந்தப் புஸ்தகத்தில்(en to biblio touto) எழுதியிராத வேறு அநேக அற்புதங்களையும் இயேசு தமது சீஷருக்கு முன்பாகச் செய்தார். யோவான் 20:30

 
"For it is written in the Book (biblo) of Psalms..." Acts 1:20

 
சங்கீத புஸ்தகத்திலே(biblo): ……..என்றும் எழுதியிருக்கிறது. அப் 1:20

 
"Then God turned and gave them up to worship the host of heaven, as it is written in the book of the Prophets (en biblo ton propheton)..." Acts 7:42

 
…. ஆகையால் உங்களைப் பாபிலோனுக்கு அப்புறத்திலே குடிபோகப் பண்ணுவேன் என்றும், தீர்க்கதரிசிகளின் புஸ்தகத்தில்(en biblo ton propheton) எழுதியிருக்கிறதே. அப் 7:43.

 
"For as many as are of the works of the law are under curse; for it is written, `Cursed is everyone who does not continue in all things which are written in the book of the law (en to biblio tou nomou), to do them" Galatians 3:10

 
நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள்; நியாயப்பிரமாண புஸ்தகத்தில்(en to biblio tou nomou) எழுதப்பட்டவைகளை யெல்லாம் செய்யத்தக்கதாக அவைகளில் நிலைத்திராதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறதே. கலாத்தியர் 3:10.

 
"For I testify to everyone who hears the words of the prophecy of this book (tes propheteias tou bibliou): If anyone adds to these things, God will add to him the plagues that are written in this book (en tou biblio); and if anyone takes away words of the book of this prophecy (tou bibliou tes propheteias), God shall take away his part from the Tree of Life, from the holy city, and from the things which are written in this book (en to biblio touto)." Rev. 22:18-19

 
இந்தப் புஸ்தகத்திலுள்ள(tes propheteias tou bibliou) தீர்க்கதரிசன வசனங்களைக் கேட்கிற யாவருக்கும் நான் சாட்சியாக எச்சரிக்கிறதாவது: ஒருவன் இவைகளோடே எதையாகிலும் கூட்டினால், இந்தப் புஸ்தகத்தில்(en tou biblio) எழுதியிருக்கிற வாதைகளை தேவன் அவன்மேல் கூட்டுவார். ஒருவன் இந்தத் தீர்க்கதரிசன புஸ்தகத்தின்(tou bibliou tes propheteias) வசனங்களிலிருந்து எதையாகிலும் எடுத்துப்போட்டால், ஜீவபுஸ்தகத்திலிருந்தும், பரிசுத்த நகரத்திலிருந்தும், இந்தப் புஸ்தகத்தில்(en to biblio touto) எழுதப்பட்டவைகளிலிருந்தும், அவனுடைய பங்கை தேவன் எடுத்துப்போடுவார். வெளி 22:18-19
 
 
மேலே நாம் குறிப்பிட்ட வசனங்கள் நமக்கு "பைபிள்" என்ற வார்த்தை கிறிஸ்தவர்களின் பரிசுத்த புத்தகங்களில் இருக்கும் வார்த்தையிலிருந்து வந்தது என்று தெரிவிக்கின்றன. முடிவாக, யூதர்களின் மற்றும் கிறிஸ்தவர்களின் வேதத்திற்கு பயன்படுத்தப்பட்ட "பைபிள்" என்ற வார்த்தை சரியான ஆதாரங்கள் இல்லாமல் கொடுக்கப்பட்ட பெயர் இல்லை, அதற்கு பதிலாக தேவனின் வெளிப்பாடுகள் அடங்கிய ஆதார வசனங்கள் அப்பெயருக்கு உண்டு என்பதை நான் கண்டுக்கொள்ளமுடியும்.

 
 
 
 
முடிவுரை:அருமையான இஸ்லாமிய அறிஞர் திரு எம். எம். அக்பர் அவர்களே, பைபிள் என்ற வார்த்தை பைபிளில் இல்லை என்ற முடிவிற்கு வர நீங்கள் செய்த ஆராய்ச்சி என்ன? பைபிள் என்றால் புத்தகங்கள் என்று பொருள் என்று தெரிந்துக்கொண்ட நீங்கள், அந்த வார்த்தை பைபிளில் உள்ளதா இல்லையா என்று தேடிப்பார்க்க மாட்டீர்களா? கிரேக்க வார்த்தையின் பொருளை தெரிந்துக்கொண்ட நீங்கள், கிரேக்க புதிய ஏற்பாட்டில் ஒரு முறையாவது தேடிப் பார்க்க தவறிவிட்டீர்களே!?!

 
இதன் தொடர்ச்சியாக, அடுத்த கட்டுரையில், எம். எம். அக்பர் அவர்கள் சொல்லியுள்ள "புர்கான்" என்ற அரபி வார்த்தையைப் பற்றி அலசுவோம். இந்த வார்த்தை வரும் இடங்களிலெல்லாம் இது குர்‍ஆனையே குறிக்குமா? அல்லது இந்த புர்கான் என்ற வார்த்தை பைபிளுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளதா? இவ்வார்த்தையை பற்றி இஸ்லாமிய அறிஞர்களின் கருத்து என்ன? என்பதை கர்த்தருக்கு சித்தமானால் அலசுவோம்.
 
 
எம். எம். அக்பர் அவர்களுக்கு எங்களின் இதர பதில்களை படிக்க சொடுக்கவும்:

இஸ்லாம் கல்வி தள கட்டுரைகளும், ஈஸா குர்ஆன் பதில்களும்

 
 
Isa Koran Home Page Back - Islam Kalvi & Mr. M.M. Akbar's Rebuttals Index  Page
 
setstats1

Saturday, September 13, 2008

பல விதமான அரபி குர்‍ஆன்கள்

 

பல விதமான அரபி குர்‍ஆன்கள்

(THE DIFFERENT ARABIC VERSIONS OF THE QUR'AN)

(இக்கட்டுரையின் முந்தைய பெயர் "குர்‍ஆனை ஓதும் ஏழு விதங்கள்")

ஆசிரியர்: சாமுவேல் கிரீன்

நான் சந்தித்துள்ள முஸ்லீம்களில் பெரும்பான்மையானவர்கள் குர்‍ஆன் பற்றி மிகவும் பெருமையாகச் சொல்லிக் கொள்வார்கள். இதுவரையிலும் பொதுவாக முஸ்லீம்கள் என்னிடம் சொல்லியுள்ள‌ ஒரு விவரம் என்னவென்றால், உலகத்தில் உள்ள அனைத்துக் குர்‍ஆன்களும் ஒன்று போலவே இருக்கின்றது(Identical) என்பதாகும். குர்‍ஆன் மட்டும் தான் முழுவதுமாக பாதுகாக்கப்பட்டுள்ளது, மற்றும் எந்த ஒரு மாறுதலும் குர்‍ஆனில் இல்லை என்று முஸ்லீம்கள் பெருமைப்படுவார்கள். குர்‍ஆன் பற்றி ஏன் இப்படி சொல்கிறார்கள் என்று சிந்தித்துப் பார்த்தால், இப்படி சொல்வதின் மூலமாக, பைபிளின் தனித்தன்மையை தாக்கி, குர்‍ஆன் தான் பைபிளை விட உயர்ந்தது என்று காட்டுவதற்கு இவர்கள் எடுக்கும் முயற்சி தான் இது என்பது புலனாகும். ஆஸ்திரேலியாவில் பெரும்பான்மையாக எல்லாரும் பயன்படுத்தும் ஒரு இஸ்லாமிய பதிப்பின் விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளது, அதனை கவனிக்கவும்.

உலகத்தில் எந்த புத்தகமும் குர்‍ஆனுக்கு ஈடாக முடியாது... அல்லாவின் இந்த புத்தகம் பற்றிய ஒரு ஆச்சரியமான விவரம் என்னவென்றால், கடந்த பதினான்கு நூற்றாண்டுகளாக குர்‍ஆன் மாறாமல் அப்படியே உள்ளது, அதுவும் ஒரு சின்ன எழுத்தின் ஒரு புள்ளி கூட(even to a dot) மாறவில்லை. ... குர்‍ஆனின் வசனங்களில் எந்த ஒரு எழுத்து மாற்றத்தையும்(No variation of Text) நாம் காணமுடியாது. இதனை நீங்களே சோதித்துப்பாருங்கள், அதாவது உலகத்தின் பல பாகங்களில் உள்ள முஸ்லீம்கள் ஓதும் குர்‍ஆன் வசனங்களை கேட்டுப் பாருங்கள், சோதித்துப்பாருங்கள். (Basic Principles of Islam, Abu Dhabi, UAE: The Zayed Bin Sultan Al Nahayan Charitable & Humanitarian Foundation, 1996, p. 4, bold added)

மேலே படித்த விவரங்களின் வாதம் என்னவென்றால், உலகத்தில் இப்போது இருக்கும் குர்‍ஆன்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்கிறதாம், அவைகளில் "எந்த ஒரு எழுத்து வித்தியாசத்தையும் காணமுடியாதாம் – No variation of text can be found". மட்டுமல்ல, அந்த பதிப்பின் ஆசிரியர், ஒரு சவாலையும் முன்வைக்கிறார் "இதனை நீங்களே சோதித்துப்பாருங்கள், அதாவது உலகத்தின் பல பாகங்களில் உள்ள முஸ்லீம்கள் ஓதும் குர்‍ஆன் வசனங்களை கேட்டுப் பாருங்கள், சோதித்துப்பாருங்கள் ". இந்த சிறிய கட்டுரையில் நாம் இந்த சவாலை ஏற்றுக்கொண்டு, உண்மையில் எல்லா குர்‍ஆன்களும் ஒரே மாதிரியாக இருக்கின்றதா என்பதை சோதித்து பார்க்கப் போகிறோம்.

தேவனுக்குச் சித்தமானால், இந்த ஆராய்ச்சியை நாம் மூன்று பாகங்களாக பிரித்து பார்க்கப் போகிறோம்:

  1. முதலில் சுருக்கமாக, குர்‍ஆனை எப்படி படிக்க(ஓத‌)வேண்டும் என்பதைப் பற்றிய பின்னனியை கவனிக்கப்போகிறோம்.
  2. பிறகு, உலகத்தில் பல பாகங்களில் இருக்கும் இரண்டு அரபி குர்‍ஆன்களை ஒப்பிட்டு ஆராயப்போகிறோம்.
  3. கடைசியாக‌, ஒரு குறிப்பிட்ட அரபிக் குர்‍ஆன் பக்கங்களின் ஓரங்களில்(Margin) "மாறுபட்ட விதத்தில் படிக்கும் படி உள்ள – Variant Readings" விவரங்களைக் காணப்போகிறோம்.

நம்முடைய ஆராய்ச்சியின் துவக்கமாக, அரபிமொழியின் அறிஞரும் குர்‍ஆனை மொழியாக்கம் செய்தவருமான திரு N. J. தாவுத் அவர்கள் தங்கள் மொழியாக்கத்தின் துவக்கத்தில் கொடுத்த முன்னுரையை படிப்போம். அவர் எழுதுகிறார்:

"... முதன் முதலில் குர்‍ஆன் எழுதப்பட்ட கியூஃபிக் எழுத்து வடிவத்தில்(Kufic Script), உயிரெழுத்து சம்மந்தப்பட்ட விவரங்கள் அல்லது உயிரெழுத்து குறியீடுகள் இல்லை என்பதால், வெவ்வேறு விதத்தில் குர்‍ஆனை படிக்கும்(ஓதும்) முறை முஸ்லீம்களால் அதிகார பூர்வமானதாக கருதப்படுகிறது".

... owing to the fact that the kufic script in which the Koran was originally written contained no indication of vowels or diacritical points, variant readings are recognized by Muslims as of equal authority. (N.J. Dawood, The Koran, Middlesex, England: Penguin Books, 1983, p. 10, bold added)

இந்த அரபி அறிஞரின் கருத்துப்படி, குர்‍ஆனை பல விதங்களில் படிக்கலாம் (Varient Readings) என்பதை அறியமுடிகிறது. ஆனால், இப்படி வித்தியாசமாக படிப்பது என்றால் என்ன? இந்த கேள்விக்கு பதில் நாம் கொடுப்பதற்கு முன்பாக, குர்‍ஆன் நமக்கு "ஓதுபவர்கள்– The Readers" என்ற மனிதர்கள் மூலமாக கிடைக்கப் பெற்றுள்ளது என்பதை நாம் உணரவேண்டும். இவர்கள் இஸ்லாமின் ஆரம்ப காலகட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற குர்‍ஆனை ஓதுபவர்கள் (Famous Reciters) என்று கருதப்பட்டவர்களாவார்கள். இந்த "குர்‍ஆனை ஓதுபவர்கள் " ஒவ்வொருவரும் எந்த வகையில், எப்படி வாசித்தார்கள் என்பதை எழுத்து வடிவில் பதிவு செய்து எழுதிவைத்தவர்களை நாம் "செய்தியை கடத்துபவர்கள் (Transmitters)" என்கிறோம். இவர்கள் உருவாக்கிய செய்தி தான் குர்‍ஆன் ஆகும்(The text made by a Transmitter is called a "transmission" of the Qur'an). ஆக, ஒவ்வொரு அதிகாரபூர்வமான "குர்‍ஆன் ஓதுபவரும்" ஒரு குர்‍ஆனை நமக்கு கொடுத்துள்ளார். தற்கால குர்‍ஆன்கள் ஒவ்வொன்றும், ஒவ்வொரு "குர்‍ஆன் ஓதுபவரின்" முறைப்படி உருவாக்கப்பட்டு இருக்கும். இந்த முறையில் நமக்கு கிடைத்த "ஓதும் முறைப்படித்தான்" நீங்கள் குர்‍ஆனை படிக்கமுடியும். இவ்விதமாக கிடைக்கப்பெற்ற ஒவ்வொரு "ஓதும் முறையிலும்" ஹதீஸ்கள் போல, செய்தியை அறிவித்தவர்கள் என்ற சங்கிலித் தொடர் உண்டு. இந்த சங்கிலித் தொடர்களில் சில பலவீனமான சங்கிலித் தொடர்கள் உண்டு, சில வலுவான சங்கிலித் தொடர்களும் உண்டு. நம்முடைய ஆராய்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் ஒரு விவரம் என்னவென்றால், உலகமனைத்திலும் இப்போது பலவிதமான "குர்‍ஆன் ஓதும் முறையை" பின்பற்றி குர்‍ஆன்கள் பயன்படுத்தப்படுகின்றன.

நான் மேலே சொன்ன விவரங்களை இன்னும் சிறிது விவரமாக கீழ் கண்ட விதமாக ஒரு இஸ்லாமிய அறிஞர் விவரிக்கிறார்:

குர்‍ஆனை வெவ்வேறு விதமாக படித்தல் என்பது இருந்தது மற்றும் அது தொடர்ந்து வந்தது மற்றும் குர்‍ஆனை மனப்பாடம் செய்த நபித்தோழர்கள் மரித்த பிறகு இவ்விதமாக வித்தியாசமாக படிப்பது அதிகரித்தது. ஏன் இப்படி என்று பார்த்தால், அடிப்படை அரபி மொழியின் எழுத்துக்களில் உயிர் எழுத்து இல்லாமல் இருந்தது மற்றும் குறிப்பிட்ட மெய் எழுத்துக்களில் உள்ள வித்தியாசத்தை காட்டும் குறியீடுகளும் இல்லாமல் இருந்தது. சிலவேளைகளில் குறியீடுகள் சில இருந்தாலும் அது போதுமானதாக இல்லை. ... நான்காவது இஸ்லாமிய நூற்றாண்டில், குர்‍ஆன் வாசிப்பதில் உள்ள வித்தியாசத்தை நீக்கி, பழைய படி கொண்டுவர, ஏழு அதிகார பூர்வமான குர்‍ஆனை வாசிப்பவர்களின் அடிப்படையில்("readers" (qurra')), முடிவு செய்யப்பட்டது; இந்த வேலை பிழையில்லாமல் நடப்பதற்கு, இரண்டு டிரான்ஸ்மிட்டர்களை –Transmitters (rawi, pl. ruwah) அடிப்படையாக கொண்டனர். ஆக, ஏழு விதமாக குர்‍ஆனை ஓதும் முறையை(al-qira'at as-sab', "the seven readings") அடிப்படையாகக் கொண்டு, இரண்டு டிரான்ஸ்மிட்டர்களின்(riwayatan) விவரங்களோடு வேலை ஆரம்பிக்கப்பட்டது. இதன் பயனாக ஒரு சில சின்ன சின்ன வித்தியாசங்கள் வரிகளில் இருந்தது, மிகவும் அதிக எச்சரிக்கையாக உயிரெழுத்துக்கள் மற்றும் இதர சப்தவித்தியாசம் உண்டாக்கும் புள்ளிகள் வைக்கப்பட்டது... அதிகார பூர்வமாக "குர்‍ஆனை ஓதுபவர்களின் பட்டியல் இப்படியாக உள்ளது".

நஃபி (மதினாவிலிருந்து; காலம் 169/785)
இபின் கதிர் (மக்காவிலிருந்து; காலம் 119/737)
அபூ அமர் அல் அலா (டமாஸ்கஸ்ஸிலிருந்து; காலம் 153/770)
இபின் அமர் (பஸ்ராவிலிருந்து; காலம் 118/736)
ஹம்ஜா (குஃபாவிலிருந்து; காலம் 156/772)
அல் கிசய் (குஃபாவிலிருந்து; காலம் 189/804)
அபூ பக்கர் அசிம் (குஃபாவிலிருந்து; காலம் 158/778)

(Cyril Glassé, The Concise Encyclopedia of Islam, San Francisco: Harper & Row, 1989, p. 324, bold added)

மேலே குறிப்பிட்டவர்கள் மட்டுமல்லாமல் இன்னும் பல ஓதூபவர்கள் (Readers) மற்றும் எப்படி ஓதவேண்டும் என்று நம்மிடம் சேர்த்தவர்கள் (Transmitters) இருக்கிறார்கள். கீழே தரப்பட்டுள்ள பட்டியலில், பொதுவாக எல்லாராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓதூபவர்கள்(Readers) மற்றும் அவர்களது Transmistters பதிப்பு மற்றும் அவைகள் தற்போது எந்த நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது என்பதை விளக்குகிறது.

The Reader The Transmitter Current Area of Use
"குர்‍ஆனின் ஏழு வாசிப்பு(ஓதும்) முறை"

நஃபி

The Qur'an according  to the Warsh transmissionவர்ஷ்

அல்ஜீரியா,மொராக்கோ,டுனிசியாவின் சில பகுதிகள்,மேற்கு ஆப்ரிக்கா,மற்றும் சூடான்.

The Qur'an according  to the Qalun transmissionகலுன்

லிபியா,டுனிசியா மற்றும் கத்தரின் சில பாகங்கள்.

இபின் கதிர்

அல் பஜ்ஜி

குன்புல்

அபூ அமர் அல்-அலா

The Qur'an according  to the al-Duri transmissionஅல்துரி

சூடானின் சில பாகங்கள்,மற்றும் மேற்கு ஆப்ரிக்கா.

அல்சுரி

இபின் அமிர்

ஹிஷம்

யெமன் நாட்டின் சில பகுதிகள்

இபின் தக்வான்

ஹம்ஜா

கலஃப்

கல்லத்

அல்கிசய்

அல்துரி

அபுல் ஹரித்

அபூ பக்கர் அசிம்

The Qur'an according  to the Hafs transmissionஹஃப்ஸ்

உலக‌ முஸ்லீம்கள் பொதுவாக பயன்படுத்துகிறார்கள்

இபின் அய்யஷ்

"குர்‍ஆனின் மூன்று வாசிப்பு முறை"

அபூ ஜப்பர்

இபின் வர்தன்

இபின் ஜமஜ்

யாகூப் அல்- ஹஸிமி

ருவய்ஸ்

ரவ்

கலஃப் அல்- பஜ்ஜர்

இஷாக்

இத்ரிஷ் அல் ஹட்டட்

Abu Ammaar Yasir Qadhi, An Introduction to the Sciences of the Qur'aan, United Kingdom: Al-Hidaayah, 1999, p. 199.

மேலே உள்ள விவரங்கள் நமக்கு, குர்‍ஆன் பல்வேறு மனிதர்களின் பதிப்புக்கள்(Transmitted Version) மூலமாக நமக்கு கிடைத்துள்ளது என்பதை விளக்குகிறது. மேலே உள்ள பதிப்புக்கள் (Versions) மட்டுமல்லாமல், இன்னும் பல பதிப்புக்கள்(Versions) உள்ளன, ஆனால், அவைகள் அதிகாரபூர்வமானதாக கருதப்படுவதில்லை. இந்த பல்வேறு பதிப்புக்கள் பலவகைகளில் மதிப்பிடப்படுகிறது, அதாவது, எப்படி ஹதீஸ்கள் மதிப்பிடப்படுகிறதோ அதுபோல இவைகளும் பலவீனமான பதிப்பு அல்லது பலமான பதிப்பு என்று மதிப்பிடப்படுகிறது. இந்த மேலே உள்ள பட்டியலில் உள்ள அனைத்து குர்‍ஆன்களும் அச்சடித்து பயன்படுத்தப்படுவதில்லை, ஆனால், பலவற்றை மட்டும் அச்சடித்து மக்கள் பயன்படுத்துகிறார்கள்.

இந்த விவரங்கள் அனைத்தையும் முதன் முதலில் நீங்கள் படிக்கும்போது, சிறிது குழப்பமாக உங்களுக்கு இருக்கலாம். இப்படி உங்களுக்கு குழப்பமாக இருந்தால், கவலைப்படவேண்டாம்; இது எல்லாருக்கும் பொதுவாக வரும் குழப்பம் தான். இந்த விவரங்கள் சுலபமாக புரியவேண்டும் என்பதற்காக, இப்போது உலகத்தில் அச்சடித்து மக்கள் பயன்படுத்தும் இரண்டு விதமான குர்‍ஆன் பதிப்புக்களை நாம் பார்க்கப்போகிறோம். இந்த இரண்டு குர்‍ஆன்களையும் நாம் ஒப்பிட்டு, இவை இரண்டும் ஒன்று போல மற்றொன்று இருக்கின்றனதா என்பதை பார்க்கப்போகிறோம். இக்கட்டுரையின் ஆரம்பத்தில் முஸ்லீம்கள் முன்வைக்கும் வாதங்களை நாம் குறிப்பிட்டு இருந்தோம், அது உண்மையா என்பதை பார்க்கப்போகிறோம். கீழே இட‌து ப‌க்க‌த்தில் இருக்கும் குர்‍ஆன் பொதுமாக‌ ம‌க்க‌ள் ப‌ய‌ன்ப‌டுத்தும் குர்‍ஆன் ஆகும், இது "Hafs Transmission" ஹஃப்ஸ் டிரான்ஸ்மிஷ‌ம் முறையில் வந்த ப‌திப்பாகும். வ‌ல‌து ப‌க்க‌த்தில் இருக்கும் குர்‍ஆன் "Warsh Transmission" வ‌ர்ஷ் டிரான்ஸ்மிஷ‌ம் முறையில் வ‌ந்த‌ ப‌திப்பாகும். இந்த‌ குர்‍ஆன் முக்கிய‌மாக‌ வ‌ட‌ ஆஃப்ரிக்காவில் ப‌ய‌ன்ப‌டுத்துகின்ற‌னர்.

இந்த இரண்டு குர்‍ஆன்களையும் நீங்கள் ஒப்பிடும் போது, இவைகள் இரண்டும் ஒன்று போல மற்றொன்று இல்லை என்பது கண்கூடாக காணும் உண்மையாகும். இந்த இரண்டு குர்‍ஆன்களுக்கும் இடையில் மூன்று விதமான வித்தியாசங்கள் உள்ளன.

The Qur'an according  to the Hafs transmission

1. அடிப்படை எழுத்துவடிவ வித்தியாசங்கள்(Graphical/Basic letter differences)

2. வெவ்வேறு சப்த புள்ளி எழுத்துக்களின் வித்தியாசங்கள்(Diacritical differences)

3. உயிர் எழுத்து வித்தியாசங்கள்(Vowel differences)

The Qur'an according  to the Warsh transmission

இந்த மேலே குறிப்பிட்ட வித்தியாசங்கள் பற்றி சில எடுத்துக் காட்டுக்களைக் காணலாம். கீழே தரப்பட்டுள்ள எடுத்துக்காட்டுகள், ஒரே வார்த்தை மற்றும் ஒரே வசனத்திலிருந்து எடுத்ததாகும். இருந்தாலும், இரண்டு குர்‍ஆன்களிலும் சில நேரங்களில் வசன எண் மட்டும் மாறுபடும் என்பதை கவனத்தில் கொள்ளவும். இப்படி ஏன் வசன எண் மாறுபடுகிறது என்றால், இந்த இரண்டு குர்‍ஆன்களிலும் வசனத்திற்கு எண்கள் கொடுக்கும் முறை வித்தியாசமாக இருப்பதினால், மாறுபடுகிறது. ஆக, ஹஃப்ஸ் குர்‍ஆனில்(Hafs Quran) சூரா 2:132 வசனமானது, வர்ஷ் குர்‍ஆனில்(Warsh Quran) சூரா 2:131 வசனமாக இருக்கிறது.

அடிப்படை எழுத்துவடிவ வித்தியாசங்கள் GRAPHICAL/BASIC LETTER DIFFERENCES: இந்த இரண்டு குர்‍ஆன்களின் எழுத்துக்களின் வடிவத்தில் வித்தியாசங்கள் உள்ளன. இந்த எழுத்து வித்தியாசத்திற்காகத் தான் உத்மான் அவர்கள் குர்‍ஆனுக்கு ஒரு அதிகாரபூர்வமான பிரதியை உண்டாக்கினார் (It was these letters that Uthman standardized in his recension of the Qur'an [1]).

இமாம் ஹஃப்ஸ் அவர்களின் படி குர்‍ஆன்

THE QUR'AN ACCORDING TO THE TRANSMISSION OF IMAM HAFS

இமாம் வர்ஷ் அவர்களின் படி குர்‍ஆன்

THE QUR'AN ACCORDING TO THE TRANSMISSION OF IMAM WARSH


சூரா 2:132 (wawassaa)


சூரா 2:131 (wa'awsaa)


சூரா 91:15 (wa laa yakhaafu)


சூரா 91:15 (fa laa yakhaafu)


சூரா 2:132 (himu)


சூரா 2:131 (hiimu)


சூரா 3:133 (wasaari'uu)


சூரா 3:133 (saari'uu)


சூரா 5:54 (yartadda)


சூரா 5:56 (yartadid)

மேலே உள்ள எடுத்துக்காட்டுக்கள், இந்த இரண்டு குர்‍ஆன்களின் அடிப்படை எழுத்துக்களில் வித்தியாசம் உள்ளது என்பதை காட்டுகின்றது.

வெவ்வேறு சப்த புள்ளி எழுத்துக்களின் வித்தியாசங்கள் (Diacritical differences): அரபியில் சில எழுத்துக்கள் ஒரே மாதிரியாக இருக்கும், இந்த வித எழுத்துக்களில் சில புள்ளிகளை இட்டால், வித்தியாசமான உச்சரிப்பை உண்டாக்கலாம். உதாரணத்திற்கு, அடிப்படை உருப்பாகிய இந்த குறியீட்டை ஐந்து வித்தியாசமான எழுத்துக்களாக மாற்றலாம். அதாவது அரபி மொழியில் இந்த எழுத்தில் எந்த இடத்தில் புள்ளிகள் வைக்கப்படுமோ அதன் படி இதன் எழுத்தும் சப்தமும் மாறும். மேலே குறிப்பிட்ட அந்த குறீயீட்டுக்கு புள்ளிகள் வைக்கும் போது, கீழ் கண்ட ஐந்து எழுத்துக்கள் உருவாகும்:

baa', taa', thaa', nuun, yaa'.

இருந்தபோதிலும், இந்த புள்ளிகள் வைத்து எழுதுவது என்பது, அரபி மொழியில் ஏற்பட்ட பிந்தைய வளர்ச்சி அல்லது மாறுதல் ஆகும். உத்மான் அவர்கள் குர்‍ஆனை ஒரு அதிகார பூர்வமான பிரதியாக அறிவித்த காலத்தில் இருந்த அரபி மொழி எழுத்துக்களுக்கு இந்த புள்ளி வைப்பது என்பது இல்லாமல் இருந்தது. ஆக, உத்மான் அவர்களின் "அதிகார பூர்வமான குர்‍ஆன் பிரதியில்" இருக்கும் குர்‍ஆன் வசனங்களுக்கு இந்த புள்ளிகள் இல்லை, மற்றும் ஒவ்வொரு எழுத்தையும், எப்படி உச்சரிக்கவேண்டும் என்கின்ற விவரம் அதில் இல்லை. எனவே, அந்த குர்‍ஆனில் இருக்கும் வசனங்களை பல விதங்களில் படிக்கமுடியும், மற்றும் சில இடங்களில் குழப்பமும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

குர்‍ஆனை வித்தியாசமாக படிப்பவர்கள்(Readers) இருந்தார்கள், இவர்கள் குர்‍ஆனை எப்படி உச்சரிக்கவேண்டும் என்று சொன்னார்கள், ஆனாலும், இன்னும் புள்ளிகள் வைத்து சரியாக உச்சரிப்பது அந்த நேரத்திலும் பயன்பாட்டில் இல்லை. நாம் இப்போது ஆராய்ந்துக்கொண்டு இருக்கும் இரண்டு குர்‍ஆன்களும் இரண்டு வித்தியாசமான ரீடர்கள் மூலமாக வந்த குர்‍ஆன்கள், இவர்களுகென்று தனியாக வாய்வழி பாரம்பரியமும்(Oral Tradition) உண்டு. இந்த பாரம்பரியங்கள் தங்களுக்கென்று வெவ்வேறான வழிமுறையை வகுத்துள்ளனர், அதாவது, எந்த இடத்தில் புள்ளிகள் வைக்கவேண்டும், எந்த இடத்தில் வைக்கக்கூடாது என்று. இந்த இரண்டு குர்‍ஆன்களுக்கு இடையிலும் இன்னொரு வித்தியாசத்தை நாம் காணமுடியும், அதாவது, இவைகளின் வசனங்களில் ஒரே இடத்தில் இரு குர்‍ஆன்களிலும் அந்த புள்ளிகள் வைக்கப்படவில்லை. இந்த இரண்டு குர்‍ஆன்களிலும், ஒரே வார்த்தைக்கு வித்தியாசமான இடத்தில் புள்ளிகள் வைத்துள்ளார்கள், அதனால், எழுத்துக்கள் வித்தியாசமாக உச்சரிக்கப்படுகின்றன (இந்த இரண்டு குர்‍ஆன்களிலும் வசனங்களுக்கு எண்கள் கொடுப்பது வித்தியாசமாக உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும்)

இமாம் ஹஃப்ஸ் அவர்களின் படி குர்‍ஆன்

THE QUR'AN ACCORDING TO THE TRANSMISSION OF IMAM HAFS

இமாம் வர்ஷ் அவர்களின் படி குர்‍ஆன்

THE QUR'AN ACCORDING TO THE TRANSMISSION OF IMAM WARSH


சூரா 2:140 (taquluna)


சூரா 2:139 (yaquluna)


சூரா 3:81 (ataytukum)


சூரா 3:80 (ataynakum)


சூரா 2:259 (nunshizuhaa)


சூரா 2:258 (nunshiruhaa)

மேலே நாம் பார்த்த எடுத்துக்காட்டுகளில், இரண்டு குர்‍ஆன்களிலும் பல புள்ளிகள் பல இடங்களில் வித்தியாசமாக வைக்கப்பட்டுள்ளது என்பதை நாம் பார்க்கலாம். இவை இரண்டிற்கும் வாய் வழி பாரம்பரியம்(Oral Tradition) வெவ்வேறாக இருக்கிறது.

உயிர் எழுத்துக்களில் வித்தியாசங்கள்(VOWEL DIFFERENCES): தற்காலத்தில் நாம் காணும் அரபி மொழி குர்‍ஆனில், உயிர் எழுத்துக்களை குறிப்பதற்கு சிறிய குறியீடுகளை அடிப்படை எழுத்துக்களின் மீதும், அல்லது கீழேயும் கொடுத்துள்ளனர். நாம் மேலே பார்த்த புள்ளிகளைப் போல(Diacritical Dots) இந்த உயிர் எழுத்து குறீயீடுகளும், அரபி மொழியில் பின்னாலில் ஏற்பட்ட வளர்ச்சியாகும். இந்த உயிரெழுத்து குறியீடுகளும், உத்மான் அவர்கள் அதிகாரபூரவமான குர்‍ஆன் பிரதியை உண்டாக்கும் போது, அரபி மொழியில் இல்லாமல் இருந்தது. ஆக, உத்மான் அவர்களின் குர்‍ஆன் பிரதியில் இந்த உயிர் எழுத்துக்களும் இல்லாமல் இருந்தது. நாம் இப்போது ஆய்வு செய்துக்கொண்டு இருக்கும் இந்த இரண்டு குர்‍ஆன்களிலும், பல இடங்களில் ஒரே வார்த்தைக்கு ஒரே உயிரெழுத்து இல்லாமல் இருக்கிறது, அவைகள் வித்தியாசமாக இருக்கின்றன. இந்த இரண்டு குர்‍ஆன்களின் உயிர் எழுத்துக்களில் எவ்வளவு வித்தியாசங்கள் உள்ளது என்பதை நீங்களே கவனித்துப் பாருங்கள்.

இமாம் ஹஃப்ஸ் அவர்களின் படி குர்‍ஆன்

THE QUR'AN ACCORDING TO THE TRANSMISSION OF IMAM HAFS

இமாம் வர்ஷ் அவர்களின் படி குர்‍ஆன்

THE QUR'AN ACCORDING TO THE TRANSMISSION OF IMAM WARSH


சூரா 2:214 (yaquula)


சூரா 2:212 (yaquulu)


சூரா 2:10 (yakdhibuuna)


சூரா 2:9 (yukadhdhibuuna)


சூரா 2:184 (ta'aamu miskiinin)


சூரா 2:183 (ta'aami masakiina)


சூரா 28:48 (sihraani)


சூரா 28:48 (saahiraani)

சில முஸ்லீம்கள் இவ்விதமாக வாதம் புரிவார்கள், அதாவது, இந்த புள்ளிகளின் மாற்றங்கள், மற்றும் உயிர் எழுத்து குறீயிடுகளில் உள்ள வித்தியாசங்கள் என்பது உத்மான் அவர்களின் குர்‍ஆன் பிரதியில் உள்ள குழப்பங்கள் அல்ல, அதற்கு பதிலாக, இப்படி குர்‍ஆனை வித்தியாசமாக படிப்பது என்பது, "அங்கீகரிக்கப்பட்ட குர்‍ஆனை படிக்கும் விதங்களாகும் – accepted variants" என்பார்கள். இதன்படி பார்த்தால், குர்‍ஆன் படிக்கும் முறை ஒன்று அல்ல, அதற்கு பதிலாக ஒவ்வொருவரும் வித்தியாசமாக தங்கள் வாய்வழி பாரம்பரியத்தின் படி பல வகைகளில் குர்‍ஆனை படிக்கிறார்கள் என்பது உண்மை. அதனால் தான் சொல்கிறேன், குர்‍ஆனுக்கு ஒரு "அதிகார பூர்வமான ஒரு பதிப்பு இல்லை" இதற்கு பதிலாக பல பதிப்புக்கள் உள்ளன. முஸ்லீம்களில் சிலர் இதனை மறுத்தாலும், குர்‍ஆனை படிப்பதற்கு ஒரே ஒரு முறை தான் உண்டு, ஆனால், இந்த வெவ்வேறாக குர்‍ஆனை படிப்பது என்பது ரீடர்கள் மூலமாக வந்தது என்பார்கள்[2]. இந்த கேள்விக்கு பலவிதமான பதில்கள் சொன்னாலும், ஒன்று மட்டும் பதில் அளிக்கமுடியாமல் அப்படியே உள்ளது, அதாவது, நாம் இப்போது பார்த்துக்கொண்டு இருக்கும் இரண்டு குர்‍ஆன்களுக்கும் இடையே உண்மையிலேயே பல வித்தியாசங்கள் உள்ளன. அடிப்ப‌டை எழுத்துக்க‌ளில், சப்த வித்தியாசத்திற்காக வைக்கப்படும் புள்ளிகளில், மற்றும் உயிரெழுத்துக்களில் வித்தியாச‌ங்க‌ள் உள்ள‌ன‌. இந்த‌ வித்தியாச‌ங்க‌ள் மிக‌வும் சிறிய‌தாக‌ இருந்தாலும், அவைக‌ள் வ‌ச‌ன‌ங்க‌ளின் பொருளை/அர்த்தத்தை மாற்றிவிடும் அபாய‌ம் உள்ள‌து.

இந்த விவரங்கள் குறித்து நான் செய்த ஆய்வை விட மிகவும் தீர்க்கமாக ஆய்வு செய்த ஒரு அறிஞரின் சொற்களை நான் கீழே தருகிறேன். இந்த அறிஞரும் இரண்டு குர்‍ஆன்களை(two of the many transmissions) மட்டுமே ஒப்பிட்டுள்ளார் என்பதை கருத்தில் கொள்ளவும்.

இந்த‌ இர‌ண்டு குர்‍ஆன்க‌ளுக்கு(transmissions) இடையே இருக்கும் வித்தியாச‌ங்களின் பட்டியல் மிக‌வும் அதிக‌ எண்ணிக்கையில் இருக்கின்ற‌து. ... (இருந்தாலும்) இந்த‌ வித்தியாச‌ங்க‌ளாகிய ஒலி வடிவ வித்தியாசங்கள் (உயிரெழுத்து, ம‌ற்றும் சப்த மாற்று புள்ளிக‌ள் வைத்த‌ல்) அல்லது அடிப்படை எழுத்து வித்தியாசங்களாகிய இவைகள், இமாம் ஹஃப்ஸ் மற்றும் இமாம் வர்ஷ் மூலமாக கிடைத்த குர்‍ஆன்களில் இருக்கும் இவைகளால் அதிகமாக ஒன்றும் பாதிப்பு இல்லை. இவைகளில் பல வித்தியாசங்கள் வசனத்தின் பொருளை மாற்றுவதில்லை, அதே போல மீதமுள்ள வித்தியாசங்கள் அந்த வசனம் சொல்லப்பட்ட இடத்தில் சிலவற்றின் மீது பாதிப்பை உண்டாக்கும், ஆனால், இந்த பாதிப்பு முஸ்லீம்களின் எண்ணங்களை மாற்றி அமைக்கும் அளவிற்கு வித்தியாசத்தை கொடுத்து விடுவதில்லை. ஒரு வித்தியாசம் மட்டும் தான் (குர்‍ஆன் 2/184) வசனத்தின் பொருளை அதிகமாக பாதிக்கக் கூடியதாக இருக்கிறது-One difference (Q. 2/184) has an effect on the meaning that might conceivably be argued to have wider ramifications.. (Adrian Brockett, `The Value of the Hafs and Warsh transmissions for the Textual History of the Qur'an', Approaches to the History of the Interpretation of the Qur'an, ed. Andrew Rippin; Oxford: Clarendon Press, 1988, pp. 34 & 37, bold added)

நாம் நம் ஆய்விற்காக இரண்டு குர்‍ஆன்களை மட்டுமே எடுத்துக்கொண்டோம். ஆனால், இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் நாம் படித்தவண்ணமாக, பல குர்‍ஆன் டிரான்ஸ்மிஷன்கள் உள்ளது, அவைகளிலும் நாம் வித்தியாசங்களை கண்டுக்கொள்ளமுடியும். நாம் அடுத்து பார்க்கப் போகின்ற புத்தகம் அதைத் தான் செய்துள்ளது. இதுவும் ஒரு குர்‍ஆன் தான், இதில் அதிகார பூர்வமான வித்தியாசமான 10 ரீடர்கள்/டிரான்ஸ்மிஷன்(The Ten Accepted Readers/Transmissions) மூலமாக உள்ள விவரங்களை பட்டியல் இட்டு தரப்பட்டுள்ளது.

Translation

Making Easy the Readings of What Has Been Sent Down

Author
Muhammad Fahd Khaaruun
The Collector of the 10 Readings
From al-Shaatebeiah and al-Dorraah and al-Taiabah

Revised by
Muhammad Kareem Ragheh
The Chief Reader of Damascus

Daar al-Beirut

இந்த புத்தகத்தின் பதிப்புரிமை பக்கம் கீழ்கண்டவாறு சொல்கிறது

Copyright is for the publisher.
First Print
1420 - 1999

Can be acquired from Daar al-Beirut Bookshop.
Halabouny, Damascus, Ph: 221 3966
PO Box 25414

(இந்த குர்‍ஆன் மிகப் பெரிய மத்திய கிழக்கு பதிப்பாளர் மூலமாக வெளியிடப்படுகிறது. இதன் பொருள் என்னவென்றால், எந்த ஒரு இஸ்லாமிய புத்தக கடைக்காரர்களும் உங்களுக்காக பெற்றுத் தரமுடியும்)

இந்த குர்‍ஆன் பதிப்பில், முஹம்மத் பஹ் காரூன் அவர்கள் 10 விதமான வித்தியாசமான அங்கீகரிக்கப்பட்ட பதிப்புக்கள்(Ten Accepted Readers) கொண்ட விவரங்களை தொகுத்து, குர்‍ஆன்(Hafs' transmission) பக்கங்களில் ஓரப்பகுதியில்(margin) சேர்த்து பதித்துள்ளார். இந்த‌ வித்தியாச‌ ப‌திப்புக்க‌ள் அனைத்தும் தெரிந்த‌ வேறுபாடுக‌ள் அல்ல‌. இந்த‌ புத்த‌க‌த்தின் ஆசிரிய‌ர், 10 வெவ்வேறான‌ ப‌திப்புக்க‌ளை ம‌ட்டுமே ப‌தித்துள்ளார், ம‌ற்ற மாற்ற‌ங்க‌ளை விட்டுவிட்டுள்ளார். இந்த‌ புத்த‌க‌த்தின் த‌லைப்பு சொல்லும் வ‌ண்ண‌மாக‌, வித்தியாசமான குர்‍ஆன்களின் வசனங்களை எப்ப‌டி ப‌டிப்ப‌து என்ப‌தை சுல‌ப‌மாக்கிக் கொடுத்துள்ளது, அவைகளை குர்‍ஆன் வசனங்கள் இருக்கும் பக்கங்களின் ஓரங்களில் தெளிவாக சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த குர்‍ஆனிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு பக்கத்தை கீழே காணலாம். இந்த பக்கத்தில் வித்தியாசமான படிக்கவேண்டிய வசனங்களை பக்கத்தின் ஓரங்களில் கொடுக்கப்பட்டு இருப்பதை நீங்கள் காணலாம். குர்‍ஆனின் மூன்றில் இரண்டு பாகத்தில், ஏதோ ஒரு வகையான வித்தியாசங்கள் இருக்கின்றன(About two thirds of the ayat (verses) of the Qur'an have some type of variant).

எனக்கு அடிக்கடி முஸ்லீம்கள் சொல்வார்கள், அதாவது பல குர்‍ஆன்களில் இருக்கும் இந்த வித்தியாசங்கள் வெறும் சப்தங்களில் இருக்கும் வித்தியாசமே(dialect or pronunciation) அன்று வேறில்லை என்பார்கள். ஆனால், உண்மையில் இது வெறும் சப்தங்களில் இருக்கும் வித்தியாசம் இல்லை. இதைப் பற்றி ஆய்வு செய்தவர் இஸ்லாமிய அறிஞராகிய சுபி அல்-சாலிஹ் என்பவராவார். அவர் இந்த வித்தியாசங்களை ஏழு வகைகளாக பிரிக்கிறார்[3].

1. இலக்கண குறியீடுகளில் இருக்கும் வித்தியாசங்கள்.

2. மெய் எழுத்துக்களில் இருக்கும் வித்தியாசங்கள்.

3. பெயர்ச் சொற்களில் இருக்கும் வித்தியாசங்கள், அதாவது அவைகள் ஒருமையா, இரட்டையா அல்லது பன்மையா, ஆண்பாலா அல்லது பெண்பாலா போன்றவைகளில் இருக்கும் வித்தியாசங்கள்.

4. ஒரு வார்த்தைக்கு பதிலாக இன்னொரு வார்த்தையை பயன்படுத்துமிடத்தில் இருக்கும் வித்தியாசங்கள்.

5. ஒரு வாக்கியத்தில் உள்ள வார்த்தைகளை இடம் மாற்றும் விதத்தில் உள்ள வித்தியாசங்கள். அரபி மொழியில் பொதுவாக இப்படி வார்த்தைகளை எதிரமறையான ஒழுங்கில் அமைப்பது உள்ளது.

6. அரபியர்களின் பழக்கவழக்கங்களினால், சில சிறிய எழுத்துக்களை கூட்டுதல் மற்றும் குறைத்தலில் உள்ள வித்தியாசங்கள்.

7. எழுத்துக்களில் வைக்கும் புள்ளிகளினால் மாறும் சப்தங்களில் உள்ள வித்தியாசங்கள்.

மேலே நாம் பார்த்த பட்டியல் வெறும் சப்தங்களில் வரும் வித்தியாசங்களைச் சொல்லவில்லை, அதற்கும் மேலே இன்னும் பல வித்தியாசங்கள் குர்‍ஆனில் இருப்பதை தெளிவாக காட்டுகிறது.

முடிவுரை: குர்‍ஆன் பற்றி ஒரு இஸ்லாமிய நிறுவனம் முன்வைத்த கீழ் கண்ட வாதத்தை மேற்கோள் காட்டி நாம் இந்த கட்டுரையை ஆரம்பித்தோம்:

உலகத்தில் எந்த புத்தகமும் குர்‍ஆனுக்கு ஈடாக முடியாது... இந்த அல்லாவின் புத்தகம் பற்றிய ஒரு ஆச்சரியமான விவரம் என்னவென்றால், கடந்த பதினான்கு நூற்றாண்டுகளாக குர்‍ஆன் மாறாமல் அப்படியே உள்ளது, அதுவும் ஒரு சின்ன எழுத்தின் ஒரு புள்ளி கூட(even to a dot) மாறவில்லை. ... குர்‍ஆனின் வசனங்களில் எந்த ஒரு எழுத்து மாற்றத்தையும்(No variation of Text) நாம் காணமுடியாது. இதனை நீங்களே சோதித்துப்பாருங்கள், அதாவது உலகத்தின் பல பாகங்களில் உள்ள முஸ்லீம்கள் படிக்கும் குர்‍ஆன் வசனங்களை கேட்டுப் பாருங்கள், சோதித்துப்பாருங்கள். (Basic Principles of Islam, Abu Dhabi, UAE: The Zayed Bin Sultan Al Nahayan Charitable & Humanitarian Foundation, 1996, p. 4, bold added)

நான் உலகத்தின் பல பாகங்களிலிருந்து குர்‍ஆன்களை வரவழைத்து, அவர்கள் சொல்வது போல உலகத்தில் இருக்கும் குர்‍ஆன்கள் அனைத்தும் ஒரே மாதிரியாக இருக்கின்றதா? என்பதை என் சுயமாக பரிசோதித்துப் பார்த்தேன். என்னுடைய இந்த ஆய்வுவின் முடிவு என்னவென்றால், முஸ்லீம்களின் இந்த வாதம் தவறானது எனபது நிரூபனமாகி விட்டது. உலகத்தில் இருக்கும் குர்‍ஆன்களை அனைத்தும் ஒன்று போல மற்றொன்று இருக்கவில்லை என்பது உண்மை. அவைகளில் பல சிறிய வித்தியாசங்கள் அடிப்படை எழுத்துக்களிலும், சப்தங்களை மாற்றும் புள்ளிகளிலும் மற்றும் உயிரெழுத்துக்களிலும் உண்டு. உண்மையில் சொல்லப்போனால், பல குர்‍ஆன்களில் இந்த வித்தியாசங்களை தங்கள் பக்கங்களில் குறிப்பிட்டும் இருக்கின்றனர். இதன் பொருள் என்னவென்றால், உலகமைத்திலும் உள்ள குர்‍ஆன்களை முஸ்லீம்கள் ஒரே மாதிரியாக நிச்சயமாக ஓதுவது இல்லை என்பது தெளிவு. எனவே, இஸ்லாமிய அறிஞர்கள், தலைவர்கள் இனி குர்‍ஆன் பற்றி அளவிற்கு அதிகமாக இப்படி புகழ்வதை விட்டு விடவேண்டும். எனவே, குர்‍ஆனில் பல வித்தியாசமாக ஓதுவதும், எழுத்துக்களில் வேறுபாடுகளும் இருப்பதனால், குர்‍ஆன் ஒன்றும் பைபிளை விட உயர்ந்தது இல்லை.


பின் குறிப்புக்கள்:
[1] How and Why Uthman Standardized the Qur'an.
[2] The Origin of the Different Readings of the Qur'an.
[3] Subhii al-Saalih, Muhaahith fii `Ulum al-Qur'aan , Beirut: Daar al-`Ilm li al-Malaayiin, 1967, pp. 109ff.


 
 

சமர்கண்ட் MSSவுடன் இன்றைய குர்‍ஆன் ஒப்பீடு

பின் இணைப்பு A - பாகம் 1

பின் இணைப்பு A: சமர்கண்ட் MSS VS 1924 எகிப்திய வெளியீடு

பின் இணைப்பு: A

பக்கம் #50

-முதல் வரியில், மூல குர்‍ஆனின் 2:142ம் வசனத்தை, நம்முடைய தற்போதைய குர்‍ஆனோடு ஒப்பிடும் போது இரண்டு இடங்களில் வேறுபடுகிறது. [சதுர குறியீடு, விடுபட்ட பகுதியை காட்டுகிறது.]

பக்கம் #62:

-இரண்டாவது வரியில், மூல குர்‍ஆனில் 2:170 வசனத்தில் "வாவ்" என்று வந்திருக்கிறது, ஆனால், இப்போது நம்மிடமுள்ள குர்‍ஆன்களின் பதிப்புகளில் "லாம்" என்பதை சேர்த்துள்ளன்ர்.

-எட்டாவது வரியில், மூல குர்‍ஆனில் 2:171ம் வசனத்தில் ஒரு வார்த்தை, இப்போதுள்ள குர்‍ஆன்களில் இருப்பதோடு வித்தியாசமாக உள்ளது.

-ஒன்பதாவது வரியில், மூல குர்‍ஆனில் மெய் எழுத்தாகிய "நூன்" என்பது இல்லாமல் இருக்கிறது, ஆனால், தற்கால குர்‍ஆன்களில் இந்த வார்த்தை வசனம் 2:172ல் சொறுகப்பட்டுள்ளது.



 

பக்கம் #64:

-பன்னிரண்டாவது வரியில், மூல குர்‍ஆனில் 2:177ம் வசனத்தில் "லாம்" என்ற மெய் எழுத்தை நாம் காணலாம், ஆனால், தற்கால குர்‍ஆனில் அவ்வார்த்தை நீக்கப்பட்டுள்ளது.



 

i


பின் இணைப்பு A: சமர்கண்ட் MSS VS 1924 எகிப்திய வெளியீடு

பக்கம் #74:

-பத்தாவது வரியில் மூல குர்‍ஆனில் 2:259ம் வசனத்தில் "வாவ்" என்ற எழுத்து இருக்கவில்லை, ஆனால், தற்கால குர்‍ஆன்களில் அதனை காணலாம்.

பக்கம் #76:

-இரண்டாம் மூன்றாம் வரியில், மூல குர்‍ஆனில் 2:259ம் வசனத்தில் "" என்ற மெய் எழுத்து இல்லை, ஆனால், தற்போது நம்மிடம் உள்ள குர்‍ஆனில் அவ்வெழுத்து உள்ளது.


 

பக்கம் #88:

-ஆறாம் வரியில், மூல குர்‍ஆனில் 2:282ம் வசனத்தில் "ட-அலிப் (ta-alif)" என்ற எழுத்துக்கள் இல்லை, ஆனால், நம்மிடமுள்ள தற்போதைய குர்‍ஆனில் இவ்வார்த்தைகள் உள்ளது.

பக்கம் #120:

-எட்டாவது வரியில், மூல குர்‍ஆனில் வசனங்கள் 3:113 மற்றும் 114 இவை இரண்டும் சந்திக்கும் இடத்தில் "வாவ்" என்ற எழுத்து உள்ளது. ஆனால், தற்கால அரபிக் குர்‍ஆனில் அதனை விட்டு விட்டார்கள்.

ii


பின் இணைப்பு A: சமர்கண்ட் MSS VS 1924 எகிப்திய வெளியீடு

பக்கம் #89:

-பத்தாவது வரியில், மூல குர்‍ஆனில் 2:283ம் வசனத்தில் "வாவ்" என்ற எழுத்து இல்லை, ஆனால் தற்கால குர்‍ஆன்களில் அவ்வெழுத்து இருக்கிறது. மட்டுமல்ல, மூல குர்‍ஆனில் "காம்பு" போன்ற ஒரு குறியீடும் அதிகமாக உள்ளது.

பக்கம் #134:

-இரண்டாவது வரியில் மூல குர்‍ஆனில் 3:146ம் வசனத்தில் "மீம்" என்ற எழுத்து இல்லை, ஆனால், தற்கால குர்‍ஆன்களில் இவ்வெழுத்து சேர்க்கப்பட்டுள்ளது.

-எட்டாவது வரியில், மூல குர்‍ஆனில் "அலிஃப்" என்ற எழுத்து இல்லை, ஆனால், தற்கால குர்‍ஆனில் வசனம் 3:147ல் உள்ளது.

பக்கம் #232:

-ஒன்பதாவது வரியில், மூல குர்‍ஆனில் 5:95ம் வசனத்தில், தற்கால குர்‍ஆனோடு ஒப்பிடும் போது, அதிகபடியான "அலிஃப்" என்ற எழுத்து உள்ளது.

iii


பின் இணைப்பு A: சமர்கண்ட் MSS VS 1924 எகிப்திய வெளியீடு
 

பக்கம் #182:

-ஆறாவது வரியில், மூல குர்‍ஆனில் 4:36ம் வசனத்தில் நாம் "அலிஃப்" இருப்பதை காணலாம், ஆனால், தற்கால குர்‍ஆனில் அது "யா" என்று உள்ளது.

-பதினோராவது-பன்னிரண்டாவது வரியில், மூல குர்‍ஆனில் அதே வசனத்தில் "மீம்-நூன்" இல்லாமல் இருக்கிறது, ஆனால், தற்கால குர்‍ஆனில் இவ்வெழுத்துக்கள் இருக்கின்றன.

பக்கம் # 238:

-ஐந்தாவது வரியில், மூல குர்‍ஆனில் 5:99ம் வசனத்தில் "அலிஃப்" உள்ளது, ஆனால், இப்போதுள்ள குர்‍ஆனில் "யா" என்று உள்ளது.

பக்கம் #244:

-தற்கால குர்‍ஆன் 5:109ம் வசனத்தில் "சீன்-லாம்" என்ற எழுத்துக்கள் உள்ளன, ஆனால், மூல குர்‍ஆனில் ஒன்பதாவது வரியில் இவ்வெழுத்துக்கள் இல்லை.


 

iv


பின் இணைப்பு A: சமர்கண்ட் MSS VS 1924 எகிப்திய வெளியீடு

பக்கம் #245:

-எட்டாவது வரியில் "அலிஃப்" என்ற எழுத்து மூல குர்‍ஆனில் 5:110ம் வசனத்தில் வருகிறது, ஆனால், இப்போதுள்ள அரபிக் குர்‍ஆனில் இவ்வெழுத்து இல்லை.

-வரிகள் பத்து-பதினொன்றில், மூல குர்‍ஆனில் "லாம்-அலிஃப்" என்ற எழுத்துக்கள் காணப்படுவதில்லை, ஆனால் தற்கால குர்‍ஆனில் அதே வசனத்தில் இவைகள் உள்ளன.

பக்கம் #257:

-முதலாவது வரியில், "மீம்" என்ற எழுத்துக்கு முன்னால், "லாம்" என்ற எழுத்து மூல குர்‍ஆனில் 6:11ம் வசனத்தில் வருகிறது. ஆனால், தற்கால குர்‍ஆனில் "" என்ற எழுத்து வருகிறது.

பக்கம் #262:

-தற்கால அரபிக் குர்‍ஆனில் 6:25ம் வசனத்தில், "நிஹின் (நூன்-ஹ-மீம்)" என்ற வார்த்தை வருகிறது, ஆனால், இந்த வார்த்தை அல்லது மூன்று எழுத்துக்கள் மூல குர்‍ஆனில் 9-10 வரிகளில் காணப்படுவதில்லை.

பக்கம் #263:

-ஆறாவது வரியில் மூல குர்‍ஆனில் 6:26ம் வசனத்தில் "அலிஃப்" என்ற குறியீடு அல்லது எழுத்து வருகிறது, ஆனால், தற்கால அரபிக் குர்‍ஆனில் அந்த எழுத்து நீக்கப்பட்டு அதற்கு பதிலாக, "ஹம்ஜா" என்ற எழுத்தை சேர்த்துள்ளனர்.

v


பின் இணைப்பு A: சமர்கண்ட் MSS VS 1924 எகிப்திய வெளியீடு
 

பக்கம் # 268:

-எட்டாவது வரியில் மூல குர்‍ஆனில் "லாம்" என்ற எழுத்து குர்‍ஆன் 6:36ம் வசனத்தில் இருக்கின்றது, ஆனால், தற்கால அரபிக் குர்‍ஆனில் "யா" என்ற எழுத்துக்கு ஒரு தண்டு போல ஒரு குறியீடு உள்ளது, ஆனால் "லாம்" இல்லை.

பக்கம் #269:

-பத்தாவது வரியில் மூல குர்‍ஆன் 6:39ம் வசனத்தில், 4வது தண்டு போல ஒரு குறியீடு உள்லது, ஆனால், தற்போதுள்ள அரபிக் குர்‍ஆனில் அது இல்லை.

பக்கம் #276:

-ஆறாவது வரியில், மூல குர்‍ஆன் 6:54 ம் வசனத்தில், 4வது தண்டு போல ஒரு குறியீடு உள்ளது, ஆனால், தற்போதுள்ள அரபிக் குர்‍ஆனில் அது இல்லை.

பக்கம் # 289:

-ஆறாவது வரியில் மூல குர்‍ஆனில் 6:80ம் வசனத்தில் "" என்ற எழுத்து உள்ளது, ஆனால் தற்கால அரபிக் குர்‍ஆனில் "காஃப்" என்ற எழுத்து உள்ளது.


ஆங்கில மூலம் பாகம் 1: http://www.answering-islam.org/PQ/A1.htm#AppendA

இதன் தொடர்ச்சியாக பாகம் 2, பாகம் 3 மற்றும் பாகம் 4ஐ படிக்கவும்.
 
 

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்