இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Friday, September 26, 2008

முகமது மற்றும் நபித்துவத்தின் முத்திரை

 

இது ஒரு அடையாளமா அல்லது ஒரு சரீர குறைபாடா?
சாம் ஷமான்

Muhammad and the Seal of Prophethood

A Sign or A Physical Deformity?

முகமது, "நபிமார்களின் முத்திரையானவர்" என்று குர்‍ஆன் சொல்கிறது:

முஹம்மது(ஸல்) உங்கள் ஆடவர்களில் எவர் ஒருவருக்கும் தந்தையாக இருக்கவில்லை ஆனால் அவரோ அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களுக்கெல்லாம் இறுதி (முத்திரை)யாகவும் இருக்கின்றார் மேலும் அல்லாஹ் எல்லாப் பொருள்கள் பற்றியும் நன்கறிந்தவன். (குர்‍ஆன் 33: 40)

Muhammad is not the father of any of your men, but (he is) the Apostle of God, and the Seal of the Prophets: and God has full knowledge of all things. S. 33:40 Y. Ali

முதன் முதலில் மேலுள்ள வசத்தை படித்தவுடன், நமக்கு, "முகமது தான் நபித்துவத்தின் முடிவானவர் என்றும், அல்லாவால் அனுப்பபட்ட நபிகளின் வரிசையில் இவரே இறுதியானவர் என்றும்" விளங்கும். ஹதீஸ் தொகுப்புக்களை படிக்கும் போது, இஸ்லாமிய ஆதாரங்களின் படி பார்த்தால், முகமதுவுக்கு முன்னிருந்த நபிமார்களின் நிலைகளோடு(Status) , முகமதுவின் நிலையைப் பற்றிப் பார்க்கும் போது இந்த 'முத்திரை" என்பது சாதாரண ஒரு கூற்றை விட அதிகமானது. (இக்கட்டுரையில் கீழ் கோடிட்ட, கனத்த குறிப்புகள் அனைத்தும் நம்முடையது.)

சஹிஹ் அல்-புகாரி(Sahih al-Bukhari):

பாகம் 1, அத்தியாயம் 4, எண் 190

'என்னுடைய சிறிய தாயார் என்னை நபி(ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று 'இறைத்தூதர் அவர்களே! என் சகோதரி மகன் இரண்டு பாதங்களிலும் வேதனையால் கஷ்டப்படுகிறான்' எனக் கூறியபோது, நபி(ஸல்) அவர்கள் என்னுடைய தலையைத் தடவி என்னுடைய அபிவிருத்திக்காகப் பிரார்த்தித்தார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள். அவர்கள் மீதி வைத்த தண்ணீரிலிருந்து நான் குடித்தேன். பின்னர் நபி(ஸல்) அவர்களின் முதுகிற்குப் பின்னால் எழுந்து நின்றேன். அப்போது அவர்களின் இரண்டு புஜங்களுக்கிடையில் நபித்துவத்தின் முத்திரையை பார்த்தேன். அது ஒரு புறா முட்டை போன்று இருந்தது" என ஸாயிப் இப்னு யஸீது(ரலி) அறிவித்தார்.

பாகம் 6, அத்தியாயம் 80, எண் 6352

சாயிப் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார்.

(சிறுவனாயிருந்த) என்னை என் தாயாரின் சகோதரி இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொண்டுசென்று, 'இறைத்தூதர் அவர்களே! என் சகோதரி மகனுக்கு (பாதங்களில்) நோய் கண்டுள்ளது' என்றார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் (அன்புடன்) என் தலையை வருடிக் கொடுத்து என் சுபிட்சத்திற்காகப் பிரார்த்தித்தார்கள். பின்னர் அங்கசுத்தி (உளூ) செய்தார்கள். அவர்கள் அங்கசுத்தி செய்து மிச்சம் வைத்த தண்ணீரிலிருந்து சிறிது பருகினேன். பிறகு நான் அவர்களின் முதுகுக்குப் பின்னே நின்று கொண்டு அவர்களின் இரண்டு தோள்களுக்கிடையே இருந்த நபித்துவ முத்திரையைப் பார்த்தேன். அது மணவறைத் திரையில் பொருத்தப்படும் பித்தானைப் போன்றிருந்தது.

சஹிஹ் முஸ்லீம்(Sahih Muslim):

அதிகாரம் 28: அவருடைய நபித்துவத்தின் முத்திரையைப் பற்றிய உண்மை, அதன் சிறப்பு குணாதிசயம் மற்றும் உடலில் அமைந்துள்ள இடம்.

ஜபீர் பி சமுரா கூறியதாவது: நான் அவர் முதுகிலிருந்த முத்திரையைப் பார்த்தேன், அது ஒரு புறா முட்டையைப் போல் இருந்தது.(Book 030 Number 5790)

அப்துல்லா பி சார்ஜிஸ் கூறியதாவது: நான் அல்லாஹ்வின் தூதரை(ஸல்)ப் பார்த்து, அவரோடு ரொட்டி மற்றும் இறைச்சி சாப்பிட்டேன். அவரிடம் கேட்டேன் "அல்லாஹ்வின் தூதர்(ஸல்) உமக்கு மன்னிப்புக் கோரினாரா? என்று. அவர் சொன்னார்: "ஆமாம் உனக்காகவும், என்று இந்த வசனத்தை ஓதினார்கள்: " உன்னுடைய பாவத்திற்காகவும் உன்னுடைய விசுவாசமுள்ள ஆண் பெண்களுக்காகவம் மன்னிப்புக் கேள்(xlvii. 19)" பிறகு நான் அவர் பின்னாகச் சென்று, நபித்துவத்தின் முத்திரையை அவரது இரண்டு தோள்பட்டைகளின் இடையில் இடது தோள்பட்டையின் பக்கத்தில் கண்டேன், அது ஒரு மச்சம் போல காட்சி அளித்தது. (Book 030, Number 5793)

அபு தாவுதின் சுனான்(Sunan of Abu Dawud):

குர்ராஹ் இபின் இயாஸ் அல்- முஸானி கூறியதாவது:

நான் முஸாயானிகளின் கூட்டத்தோடு அல்லாவின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, கூட்டு வைப்பதற்கு சத்தியம் செய்துகொண்டோம். அவருடைய சட்டையின் பொத்தான்கள் திறந்திருந்தது. நான் அவருக்கு சத்தியம் செய்து கொடுத்து என் கையை அவருடைய சட்டைக்குள்ளே கழுத்துப்பகுதியில் வைத்தேன் அப்போது அந்த முத்திரையை உணர்ந்தேன். ( Book 32, Number 4071)

திர்மிதியின் ஜமி சுனான்(Jami (Sunan) of at-Tirmidhi)

அலி இப்னு அபுதலிப் கூறியதவாது:

அலி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பற்றி வர்ணித்தபோது சொன்னார்கள்: அவர் மிகவும் உயரமானரோ அல்லது மிகவும் குட்டையானவாராகவோ இல்லை. சரியான அளிவிலே இருந்தார்கள். அவருக்கு ரொம்ப நீளமான அல்லது சுருளான மயிராக இல்லாமல் இரண்டும் கலந்ததாக சரியான விதத்தில் இருந்தது. அவர் மிகவும் பருமனாக இருக்கவில்லை அவருடைய முகம் வட்டமாக இல்லை. அவர் சிவப்பும், வெண்மையுமாகவும், அகலமான கருவிழிகளும் நீண்ட இமைகளும் கொண்டிருந்தார். அவருக்கு நீட்டமான மூட்டுகளும் தோள்பட்டைகளும் இருந்தது. ரோமம் நிறைந்திருக்கவில்லை என்றாலும் அவர் மார்பில் ரோமம் இருந்தது. அவருடைய உள்ளங்கைகளும் கால்களும் கடினமாக இருந்தது. அவர் நடந்த போது சாய்வான இடத்தில் நடப்பது போல பாதங்களை உயர்த்தி; நடந்தார். அவருடைய தோள்களுக்கு நடுவில் நபித்துவத்தின் முத்திரை இருந்தது அவர் நபிமார்களின் முத்திரையாக இருந்தார். வேறு எவரையும் விட அவருடைய மார்பு புயம் அருமையாக இருந்தது, மற்றவர்களை விடத் தோற்றத்தில் நிஜமாக இருந்தார், உயர்குலத்தை சேர்ந்தவராக இருந்தார். அவரைத் திடீரென்று பார்த்தவர்கள் அவரைப் பற்றிய அச்சத்தில் ஆழ்ந்தார்கள். அவரோடு பழக்கம் ஏற்படுத்திக் கொண்டவர்கள் அவரை நேசித்தார்கள். அவரைப் பற்றி வர்ணித்தவர்கள், அவரைப் போல் ஒருவரை அதற்கு முன்னோ அல்லது பின்னோ பார்த்ததில்லை என்றார்கள். Tirmidhi transmitted it. (Hadith 1524; ALIM CD-Rom Version)

அபுமூஸா கூறியதாவது

அபுதாலிப், குராயிஷின் சில ஷியாக்களோடு ஆஷ் - ஷாம் க்கு (சிரியா) முகமது நபியோடுகூடப் போனார். அவர்கள் அந்த துறவியினிடத்திற்கு வந்தபோது தங்களுடைய பைகளை அவிழ்த்தார்கள் அந்த துறவி அவர்களை நோக்கி வந்தார். இதற்கு முன் அவர்கள் அந்த வழியாக கடந்து போயிருந்தபோதும் இப்படி நடக்கவில்லை. அவர்கள் தங்களுடைய பைகளை அவிழ்த்துக் கொண்டிருந்தபோது அந்த துறவி அவர்கள் அருகில் வந்து அல்லாவின் தூதரை (சமாதானம் உண்டாகட்டும்) கை பிடித்துத் தூக்கி, "இவர் தான் உலகத்தின் அதிபதியாயிருக்கிறார், இவர் உலகத்தின் இறைத் தூதராயிருக்கிறார் இவரை அல்லாஹ் உலகத்திற்கு ஒரு தயவாக கொடுத்திருக்கிறார்" என்றார். குராயிஷின் சில ஷியாக்கள் அவருக்கு எப்படித் தெரியும் என்று கேட்டார்கள், அவர் கூறினார், " நீங்கள் மலைகளைக் கடந்து வந்த போது ஒரு மரமாவது அல்லது கல்லாவது பணிந்து வணங்கத் தவறவில்லை, அவைகள் நபிக்கு முன்பாக தங்களை பணித்தது. நான் அவரை நபித்துவத்தின் முத்திரை வைத்து அடையாளம் கண்டுகொண்டேன், அது ஒரு ஆப்பிளைப் போல் அவருடைய தோள் பட்டைக்கு கீழாக இருந்தது." அதற்கு பின் அவர் சென்று உணவை ஆயத்தப்படுத்தி அதை நபிக்கு(சமாதனம் அவர் மேல்) கொண்டு வந்தபோது, நபி அவர்கள் ஒட்டகங்களை கவனித்துக் கொண்டிருந்தார். பின் அதை அவருக்காக அனுப்பிவிடும்படிச் சொன்னார். மேலே ஒரு மேகம் சூழ நபி வந்தார், மக்களை நெருங்கிய போது மக்கள் அவருக்கு முன்பாக ஒரு மரநிழலடியில் சென்றிருந்தார்கள். அவர் அமர்ந்த போது மரத்தின் நிழல் அவரை சூழ்ந்துகொண்டது, அந்த துறவி , " எப்படி அந்த மரநிழல் அவரை சூழ்ந்துள்ளது என்று பாருங்கள். அல்லாவின் பேரில் வேண்டுகிறேன் உங்களில் யார் அவருடைய பாதுகாவலர் என்று எனக்கு சொல்லுங்கள்." என்றார். அபுதாலிப்தான் என்று கேள்விப்பட்டவுடன், அவரை திருப்பி அனுப்பிவிடும்படி வேண்டிக்கொண்டார். அபுபக்கர் பிலாலையும் அவரோடுகூட அனுப்பிவைத்தார், அந்ந துறவி அவர்களுக்கு ரொட்டி மற்றும் ஒலிவ எண்ணெயை கொடுத்து அளித்தார்கள். (Hadith 1534; ALIM CD-Rom Version)

அல்-டபரியின் சரித்திரம்(Tarikh (History of) al-Tabari):

…பஹிரா இதைப் பார்த்தபோது, தன்னுடைய அறையிலிருந்து இறங்கி அந்த பயணிகளை வரவேற்று ஒரு செய்தி அனுப்பினார்….. இறுதியாக அவர் முகமதுவின் பினபுறத்தைப் பார்த்தார், அவருடைய தோள்களுக்கு நடுவிலிருந்த நபித்துவத்தின் முத்திரையைப் பார்த்தார்…… அவர் பதிலுரைத்து,… "நான் அவருடைய தோள் குருத்தெழும்பின் கீழிருந்த நபித்துவத்தின் முத்திரையினால் அவரை அடையாளம் கண்டுகொண்டேன், அந்த முத்திரை ஒரு ஆப்பிள் போல் இருந்தது."…… (The History of al-Tabari: Muhammad at Mecca, translated and annotated by W. Montgomery Watt and M. V. McDonald [State University of New York Press (SUNY), Albany 1988], Volume VI, pp. 45, 46)

அல்-ஹரித்-முகமது பி. சாத– முகமது பி. 'உமர்-'அலிப் பி. ' இசா அல்- ஹக்கீமி– அவர் தந்தை– அமீர் பி. ரபி'யா: சாயித் பி கூறியதைக் கேட்டேன. 'அமர் பி. நுபாயில் கூறினதாவது……" அவர் மிகவும் குட்டையாகவும் இல்லை உயரமாகவும் இல்லை, அவருடைய தலைமயிர் மிகவும் அடர்த்தியாகவோ அல்லது அடர்த்தியற்றோ காணப்படவில்லை, அவருடைய கண்கள் எப்போதும் சிவப்பாக இருந்தது, அவருக்கு தோள்களுக்கு இடையில் நபித்துவத்தின் முத்திரை இருந்தது. அவருடைய பெயர் அகமது….." (பக்கம் 64)

அகமது பி. சினான் அல்-கட்டான் அல்-வாசிட்டி–அபு முஉ'அவியாஹ் - அ'மஷ் - அபு ஷிப்யான் இப்னு 'அப்பாஸ்: பனு அமீரைச் சார்ந்த ஒரு மனிதன் நபியினிடத்தில் வந்து, " உங்கள் தோள்களுக்கு இடையில் இருக்கும் முத்திரையை எனக்கு காட்டுங்கள், நீங்கள் ஏதாவது சூனியத்தால் கட்டுப்பட்டிருந்தால் நான் உங்களை குணமாக்குவேன் ஏனென்றால் நான் தான் அரபுகளின் மிகச் சிறந்த மந்திரவாதி." என்றான் "நான் உனக்கு ஒரு அடையாளத்தைக் காட்ட வேண்டுமா" என்று நபி கேட்டார். "ஆம், அந்த பேரீச்சைக் குலையை வரவழையுங்கள்" என்றான். நபி அந்தக் பேரீச்சை சோலையில் இருந்த பேரீச்சைக் குலையைப் பார்த்து, அது அவருக்கு முன் வந்து நிற்கும் வரை விரல் அசைத்தார். பின்பு அந்த மனிதன் "இதை திருப்பி அனுப்புங்கள்."; என்றான். அது திருப்பி அனுப்பபட்டது. அந்த அமீரி சொன்னான், " ஓ பானு அமீர், நான் இதுவரை இதுபோன்ற மிகச்சிறந்த சூனியக்காரரை நான் பார்த்ததில்லை" (பக்கம் 66- 67)

"அப்பொழுது அவர் மற்றொருவனிடம் சொன்னான், 'அவருடைய மார்பைத் திற'. அவர் என்னுடைய இருதயத்தை திறந்து, சாத்தானுடைய அசுத்தங்களையும் உறைந்த இரத்தத்தையும் எடுத்து வெளியே எறிந்து போட்டார். மற்றொருவனிடத்தில் சொன்னார், அவருடைய மார்பை தொட்டியை கழுவுவது போல கழுவு, அவருடைய இதயத்தை உறையை கழுவுவது போல கழுவு' என்றார். அதன் பின் சக்கினாவை வரவழைத்தார், அது ஒரு வெள்ளைப் பூனையின் முகத்தைப் போலிருந்தது, அதை என் இதயத்தில் பொருத்தினார். அவர்களில் ஒருவனிடத்தில் "அவருடைய மார்பைத் தையலிடு" என்று சொன்னார். அவர்கள் என்னுடைய மார்பைத் தைத்தார்கள் மேலும் என்னுடைய தோள்களுக்கு இடையில் அந்த முத்திரையை வைத்தார்கள்…." (பக்கம் 75)

இங்கே முகமதுவுடைய நபித்துவத்தின் முத்திரை என்பது ஒரு சரீர குறைபாடு என்று புலனாகிறது, புள்ளிகள் நிறைந்த மச்சம் ஒரு ஆப்பிள் போல, ஒரு சிறிய பொத்தானைப் போல அல்லது புறாவுடைய முட்டையைப் போல இருந்ததாக கூறப்படுகிறது. முகமதுவின் நபித்துவத்தை நிருபித்து மக்கள் ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கு இந்த மச்சம் போன்ற அடையாளம் எப்படி உதவமுடியும்?

மூலம்: http://www.answering-islam.org/Shamoun/seal_of_prophethood.htm

முகமது பற்றிய இதர கட்டுரைகள்


 

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்