இஸ்லாம்; Dr. Zakir Naik உடன் Pope Benedict XVI ஏன் விவாதிக்கக்கூடாது? ஏன்?
அவர் தெரிவித்த செய்தி இது தான்:
"டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் தற்போதைய கத்தோலிக்க போப் பெனெடிக்ட் அவர்களை தன்னுடன் இஸ்லாம் பற்றியும், முகமது பற்றியும் விவாதம் செய்யும் படி அழைப்பு விடுத்து இருந்தார். ஆனால், இதுவரை போப் இந்த அழைப்பிற்கு பதில் தரவில்லை. "
இந்த அழைப்பை போப் ஏற்றுக்கொண்டு டாக்டர் ஜாகிர் நாயக்கிடம் விவாதித்து இருக்கலாம் இல்லையா ?
என்றும், இதைப் பற்றி என் கருத்து என்ன என்று கேட்டுயிருந்தார்.
தற்போதைய போப் பெனெடிக்ட் ஒரு கூட்டத்தில் பேசும் போது, முகமது குறித்து ஒரு கருத்தை தெரிவித்து இருந்தார். இதன் விளைவாக, இஸ்லாமியர்கள் அவர்
சொன்ன கருத்தை திரும்பி பெறவேண்டும் என்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்துக்கொண்டனர். இதனால், ஒரு கன்னியாஸ்திரியும் கொலை செய்யப்பட்டார்கள்.
உடனே, போப் தன் கருத்தை திரும்பி பெற்றுக்கொண்டார்.
என் கருத்தை சிலருக்கு பிரயோஜனமாக இருக்கும் என்று இங்கு அதை தருகிறேன். இந்த வாய்ப்பை பயன்படுத்து திரு ஜாகிர் நாயக் பற்றி சில விவரங்களை தெரிந்துக்கொள்வோம்.
ஏன் தற்போதைய கத்தோலிக்க போப் பெனெடிக்ட் டாக்டர் ஜாகிர் நாயக்கிடம் விவாதம் செய்யக்கூடாது?
இக்கேள்விக்கு என் பதிலை கீழ் கண்டவாறு பிரித்துச் சொல்கிறேன்.
1. அறிமுகம்: டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள்.
2. டாக்டர் ஜாகிர் நாயக்கின் அவர்களின் விவாதத் திறமை.
3. ஏன் ஜாகிர் நயாக் அவர்கள் எழுத்து வடிவில் விவாதத்தில் இறங்குவதில்லை?
4. இஸ்லாமியர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதம்:
5. யார் பொறுப்பு வகிப்பது : ஜாகிர் நாயக் அல்லது போப் பெனெடிக்ட்?
6. முடிவுரை - என் கருத்து:
1. அறிமுகம்: டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள்:
டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் ஒரு மருத்துவ(MBBS) படிப்பை முடித்தவர். மும்பையில் Islamic Research Foundation "இஸ்லாமிக் ரீஸர்ச் ஃப்வுண்டேஷன்" என்ற இயக்கத்தின் தலைவராக இருக்கிறார்.
இது வரை கணக்கிலடங்கா இஸ்லாமிய சொற்பொழிவுகள் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் அவர் ஆற்றியுள்ளார்.
(http://www.irf.net/irf/drzakirnaik/index.htm) உலக இஸ்லாமியர்களின் கண்ணியத்திற்கும், மதிப்பிற்கும் அவர் பாத்திரமாக உள்ளார். Peace TV (பீஸ் டீவி) என்ற ஒரு சானலையும் அவர் நடத்திவருகிறார் என்று கேள்விப்பட்டேன்.
2. டாக்டர் ஜாகிர் நாயக்கின் அவர்களின் விவாதத் திறமை:
டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் "ஒரு நடமாடும் குர்-ஆன்" என்றுச் சொன்னால் அது மிகையாகாது. அவருடைய சொற்பொழிவுகளில் ஒரு முக்கிய அம்சமே "குர்-ஆன் வசனங்களை" கடகடவென்று வசன எண்ணோடு அப்படியே சொல்வது தான். அதுவும் அரபியில் முதலில் சொல்லி, பிறகு அதை ஆங்கிலத்தில் சொல்லுவார்.
கேட்கும் மக்கள் அப்படியே பூரித்துப்போவார்கள். இப்படிப் பட்ட திறமையுள்ளவர் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள்.
இவருடைய விவாத சொற்பொழிவுகளில் முக்கிய இடம் வகிப்பது, "இதர மத தலைவர்களுடன், பெரியவர்களுடன்" விவாதிப்பது தான்.
[ தன்னைப் போல பிறரையும் நேசிக்கவேண்டும் என்பது இயேசுவின் கட்டளை. "பிறர்" என்பது கிறிஸ்தவராக இருக்கவேண்டிய அவசியமில்லை, அவர் திரு ஜாகிர் நாயக் அவர்கள் போல் "பைபிளை எதிர்த்து அதை விமர்சித்து" பல தவறான கருத்துக்களை பரப்புபவராக கூட இருக்கலாம். இவருடைய இரட்சிப்பிற்காக ஜெபியுங்கள். யாருக்குத் தெரியும், இவரும் மனந்திரும்பி ஒரு பவுலைப் போல், இயேசுவின் ஊழியராக கூட ஆகலாம்.]
3. ஏன் ஜாகிர் நயாக் அவர்கள் எழுத்து வடிவில் விவாதத்தில் இறங்குவதில்லை?
டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களுடைய கருத்துக்களில் உள்ள பிழைகளை, மற்றும் பைபிளுக்கு எதிராக அவர் வைக்கும் கருத்துக்கள், பைபிளில் பிழைகள் உள்ளது என்று அவர் சொல்லும் குற்றச்சாட்டுகளுக்கு, பதிலை கிறிஸ்தவ தளங்கள் ஏற்கனவே மறுப்பை, கட்டுரைகள் வடிவில் தெரிவித்துவிட்டன. அந்த மறுப்பை அவர்கள் தங்கள் தளங்களிலும் பிரசுரித்துள்ளனர்.
ஆனால், டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் தன்னுடைய தளத்தில், அந்த மறுப்புக் கட்டுரைகளுக்கு எழுத்து வடிவில் பதிலைத் தருவதில்லை. தன்னுடைய தளத்தில் தான் ஆரம்ப முதல் சொல்லிவரும் சில கேள்விகள், அதற்கு பதில்கள் என்று கட்டுரைகள் கொடுத்துள்ளாரே தவிர, தன் கருத்துக்களை மறுக்கும் தளங்களுக்கு மறுப்பை அல்லது பதிலை கொடுக்கவில்லை. (நான் தேடிப்பார்த்ததில் கிடைக்கவில்லை, தெரிந்தவர்கள் தெரிவித்தால் நல்லது - நாமும் சேர்ந்து எழுதலாமே என்று கேட்கிறேன்.)
இதற்கு பதிலாக, தன்னிடம் நேரடியாக வாதம் செய்ய, தன் கருத்துக்களை மறுக்கும் நபர்களுக்கும், குர்-ஆனை விமர்சிக்கும் நபர்களுக்கும் அவர் அழைப்பு விடுத்துக் கொண்டு இருப்பார்.
1. பைபிள் சம்மந்தமான ஜாகிர் நாயக் அவர்கள் குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பை இந்த கிறிஸ்தவ தளத்தில் காணலாம்.
http://www.answering-islam.org/Responses/Naik/index.htm
2. திரு ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பை இங்கும் காணலாம்:
http://www.faithfreedom.org/debates/NaikCampbellintro.htm
http://www.wikiislam.com/wiki/Rebuttals_to_Zakir_Naik
http://www.islam-watch.org/RebuttingIslam/index.html
3. A critical review on the debate between "William Campell Vs Dr. Zakir Naik" by Ali Sina
சவுதி அரசரின் சம்பளத்தில் "பைபிள் குர்-ஆன் விஞ்ஞானத்தின் வெளிச்சத்தில்(The Qur'an and the Bible in the Light of Science )" என்று ஒரு புத்தகத்தை "புகைலி" என்றவர் எழுதினார். குர்-ஆனின் வசனங்கள் தற்கால விஞ்ஞானத்திற்கு ஒத்துப் போகிறது என்று கூறினார்.
இந்த புத்தகத்தில் உள்ள தவறான ஆராய்ச்சியை விமர்சித்து வில்லியம் காம்பெல் என்ற கிறிஸ்தவர் ஒரு புத்தகத்தை எழுதினார்.
திரு ஜாகிர் நாயக்கிற்கும், வில்லியம் காம்பெல்லுக்கும் இடைய ஒரு விவாதம் 2001 ல் நடந்தது. அந்த விவாததில் ஜாகிர் நாயக் முன் வைத்த கருத்துக்களில் உள்ள பிழைகளை அலி சீனா இங்கு ஆதாரத்தோடு விவரித்துள்ளார். இங்கு அவர்கள் பேசிய வீடியோவும் கிடைக்கும்.
http://www.faithfreedom.org/debates/NaikCampbellintro.htm
4. ஜாகிர் நாயக் அவர்கள் சொல்வது இஸ்லாமிற்கு(சுன்னா) விரோதமாக இருக்கிறது என்று ஒரு இஸ்லாமிய தளம் அவரின் பிழையை சுட்டிக்காட்டும் தொடுப்பு.
http://www.sunniforum.com/forum/showthread.php?t=7220
(விவரம் சுருக்கமாக - சொர்க்கத்தில் அல்லா நல்ல அழகிய பெரிய கண்களுடைய "ஹூர்" என்ற பெண்களை ஆண்களுக்கு தருவதாக வாக்குத்தத்தம் செய்துள்ளார், மக்களிடம் நல்ல பெயர் எடுப்பதற்காக ஜாகிர் நாயக் அவர்கள், இந்த "ஹூர்" என்பவர்கள் "பெண்களுமல்ல, ஆண்களுமல்ல - Al-Hur Has No Gender! என்று சொல்லியுள்ளார் தன் பிரசங்களில், இதை இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொள்வதில்லை, அவர்கள் பெண்கள் தான் என்றும், அவர் சொல்வது தவறு என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்)
4. எழுத்துவடியில் விவாதிக்க அலி சீனாவின் அழைப்பை, ஜாகிர் நாயக் மறுத்தார் ஏன்?
அலி சீனா ஈரான் நாட்டில் வாழ்ந்த முன்னால் முஸ்லீம் ஆவார். இப்போது அவர் www.faithfreedom.org என்ற தளத்தை நடத்துகின்றார். இவர் பல இஸ்லாமிய அறிஞர்களிடம் இஸ்லாம், குர்-ஆன், முகமது தலைப்புகளில் பல விவாதங்களை மெயில் வடிவில் ( எழுத்து வடிவில்) செய்துள்ளார்.
Invitation to Zakir Naik:
1. http://www.faithfreedom.org/debates/ZakirNaik.htm
இவர் தன்னிடம் மெயில் மூலமாக விவாதிக்கும் படி திரு ஜாகிர் நாயக்கிற்கு அழைப்பு விடுத்துள்ளார், ஆனால், பதில் இல்லை. இது வரை ஏற்றுக்கொள்ளவில்லை.
இதற்கு மாறாக, அலி சீனாவை தன்னிடம் நேரடியாக மேடையில் விவாதிக்கும் படி, திரு ஜாகிர் நாயக்கிற்கு பதிலாக மற்றவர்கள் அழைப்பு விடுக்கின்றனர். ஆனால், இதற்கு அலி சீனா மறுப்பு தெரிவித்தார்.
( http://www.news.faithfreedom.org/index.php?name=News&file=article&sid=1358 )
இவர் தன் முகத்தை வெளியே காட்டாமல் வாழ்கிறார், தன் முகம் என்று வெளியே தெரியுமோ, நம் தமிழ் நாட்டு வழக்கப்படிச் சொல்லவேண்டுமானால், அடுத்த நளே அலிசீனாவிற்கு பால் ஊற்றவேண்டி வரும். எனவே, அலி சீனா இதற்கு ஒப்புக்கொள்ள வில்லை.
Wikipedia said:
Sina also posted a letter in his website claiming to be sent to Dr. Zakir Naik[11] inviting him for an open online debate. Mr. Sina received the information that Dr. Naik does not debate online but rather in person in public view.[11] Dr. Naik's office said "There are hundreds of such Ali Sina who have requested Dr. Zakir Naik to debate with him to gain popularity." (Source : http://en.wikipedia.org/wiki/Faith_Freedom_International )
சரி, தன் உயிருக்கு பயந்து அலி சீனா நேரடி வாதத்திற்கு மறுப்பு தெரிவித்தார். பின் ஏன், ஜாகிர் நாயக் மெயில் மூலமாக, எழுத்து வடியில் வாதிக்க சம்மதிக்கவில்லை?
காரணம்: நேரடி விவாதத்தில் திரு ஜாகிர் நாயக்கிற்கு கிடைக்கும் நன்மைகள்:
1. மேடையில் ஒரு மனிதனின் சொற்கள் மட்டும் வெளிப்படாது, அவனின் முகபாவனை, அவரின் கை அசைப்பு, கம்பீரம் மற்றும் இதர விஷயங்கள் வெளிப்படும். ஆனால், மெயில் மூலமாக செய்யும் விவாதத்தில், மனிதன் தெரியமாட்டன், அவன் எழுத்து, அவன் முன் வைக்கும் ஆதாரங்கள், மட்டும் தான் தெரியும்.
2. எழுத்து விவாதத்தில் திரு ஜாகிர் நாயக் தெரிய மாட்டார், அவரின் கருத்துக்கள், அவர் முன்வைக்கும் ஆதாரங்கள், மட்டும் தான் தெரியும். இது ஒரு வகையில் அவருக்கு தோல்வி தான்.
3. நேரடி விவாதத்தில் ஒருவருக்கு சொற்ப நேரம் மட்டும் ஒதுக்குவதால், இஸ்லாமுக்கு எதிரான எல்லா ஆதாரங்களையும் முன் வைக்க முடியாது. ஆனால், எழுத்து வடிவில் விவாதித்தால், பல ஆதாரங்கள், அகராதிகளிலிருந்து வார்த்தைகளின் பொருள், இன்னும் பல ஆதாரங்களை எவ்வளவு வேண்டுமானாலும் வைக்கலாம்.
4. நேரடி விவாதத்தில் பங்கு பெருபவர்கள், மேடையில் முன் வைக்கும் ஆதாரங்களை உடனே, சரி பார்க்க முடியாது, ஆனால், வெப் தளத்தில் படிப்பவர்கள் உடனே வசனங்களை, அதன் பொருளை உடனே சரி பார்க்க முடியும்.
5. கடைசியாக, அலி சீனா சொல்வது போல, மேடையில் ஒருவர் தன் வார்த்தைகளால், மாஜிக் காட்டி கேட்பவர்களை திசை திருப்பமுடியும். ஆனால், எழுத்தில், இதற்கு வாய்ப்பு இல்லை.
எனவே, திரு ஜாகிர் நாயக் அவர்கள், எழுத்து வடியில் அல்லது இணைய தளத்தின் கட்டுரைகள் மூலமாக விவாதிப்பது இல்லை.
4. இஸ்லாமியர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதம்:
ஒரு முறை நான் ஒரு வாசகத்தை படித்தேன் "The World would become bored, if everyone agreed on everything". இது உண்மை தான்.
உலகத்தில் மனிதர்கள் தங்கள் எதிர்ப்பை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்துவார்கள். முஸ்லீம்களில் கூட தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த, சிலர் கட்டுரை எழுதுவார்கள், சிலர் மேடை போட்டு பேசுவார்கள், சிலர் புத்தகங்கள் எழுதுவார்கள், சிலர் எதிர்ப்பு ஊர்வளம் வருவார்கள்.
ஆனால், முஸ்லீம்களில் ஒரு சிலரோ (கவனிக்கவும், ஒரு சிலர், எல்லாருமல்ல) தங்கள் எதிர்ப்பை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்துவார்கள். அதாவது, கடைகளை உடைப்பது, சொன்னவரை கொலை செய்வேன் என்று மிரட்டுவது இப்படி. போப் பெனெடிக்ட் முகமது பற்றி ஒரு புத்தகத்திலிருந்து ஒரு வாசகத்தைச் சொன்னார், அதற்காக ஒரு கத்தோலிக்க கன்னியாஸ்திரியை(Nun) ஒருவர் துப்பாக்கியால் சுட்டார்.
http://news.bbc.co.uk/2/hi/africa/5353850.stm
5. யார் பொறுப்பு வகிப்பது : ஜாகிர் நாயக் அல்லது போப் பெனெடிக்ட்? (இருவரும் விவாதித்தால் - உத்தரவாதம் யார் தருவார்)
ஒரு வார்த்தையை சொன்னதிற்காகவே, ஒரு கொலை நடக்குமானால், போப் மேடையில் இன்னும் அதிகமாக பேசினால், இதனால், யாரோ ஒருவர் கொலை செய்துக்கொண்டு இருந்தால்,
இதற்கு யார் பொறுப்பு வகிப்பது ?
டாக்டர் ஜாகிர் நாயக் பொறுப்பேற்றுக்கொள்வாரா ? அல்லது
போப் பெனெடிக்ட் இதற்கு பொறுப்பு வகிப்பாரா?
திரு ஜாகிர் நாயக்கிடம் கேட்டால், கொன்றவன் "முஸ்லீமே இல்லை" இது கண்டிக்கத்தக்கது என்று சொல்லுவார், இதனால், மரித்தவர்கள் எழுந்து வந்துவிடுவார்களா?
போப் என்ன செய்வார், சொன்ன வார்த்தையை நான் திரும்ப பெற்றுக்கொள்வேன் என்பார், போன உயிர் திரும்ப வருவது எப்படி?
மேடை என்று வந்துவிட்டால், முகமது செய்த யுத்தங்கள், அவரின் திருமண உறவுகள், இப்படி எதை வேண்டுமானாலும் விவாதிக்க வரலாம். இது சிலருக்கு எரிச்சலை உண்டாக்கும்.
6. முடிவுரை - என் கருத்து:
எனவே, என் கருத்து என்னவென்றால், இஸ்லாமைப் பற்றி சரியான விவரம் மக்களுக்கு தெரியும் வரை, இப்படி இணைய தளத்தில் கருத்துக்களை பகிர்ந்துக்கொள்வது தான் சரியான வழி.
திரு ஜாகிர் நாயக்கிடம் ஒரு சாதாரண மனிதன் விவாதித்தால், அதினால் பெரும் பாதிப்பு இல்லை, ஆனால் ஒரு பொறுப்புள்ள பதவி வகிக்கும் போப் போன்றவர்கள் இந்த வேலையை செய்யக்கூடாது. செய்தால், விளைவு மிகப்பெரிய அளவில் இருக்கும், இஸ்லாமியர்களோடு விவாதிப்பதால்.
Comment Form under post in blogger/blogspot