இஸ்லாமிற்கும் கிறிஸ்தவத்திற்கும் வித்தியாசம் காணவேண்டுமென்றால், பைபிளின் தேவனாகிய "யேகோவா" விற்கும், குர்-ஆனின் இறைவனாகிய "அல்லா" விற்கும் உள்ள வித்தியாசத்தை நாம் காணவேண்டும்.
கிறிஸ்தவனும் இஸ்லாமியனும் வேறு வேறு இல்லை, இவர்கள் அனைவரும் ஒரு தாயின் வயிற்றுப்பிள்ளைகள். ஆனால் கிறிஸ்தவத்திற்கும், இஸ்லாத்திற்கும் தான் அதிக வித்தியாசம் உள்ளது.
யேகோவாவும், அல்லாவும் எப்போதும் ஒரே இறைவனாக ஆகமுடியாது. யேகோவா வேறு அல்லா வேறு. இதற்கான காரணங்களை இங்கே காணலாம்.
1. சத்தியம் செய்வதில் வேறுபாடு. அல்லாவிற்கும் யேகோவாவிற்கும் உள்ள ஒரு முக்கியமான வேறுபாடு என்னவென்றால், யேகோவா சத்தியம் செய்யும்போது "தன் பெயர் மீதே" சத்தியம் செய்வார், ஏனென்றால், சத்தியம் செய்வதற்கு தன்னை விட பெரியவர் ஒருவரும் இல்லை என்பதனால். ஆனால் அல்லா சத்தியம் செய்யும் போது, நிலவின் மீது, நட்சத்திரங்களின் மீது, இரவின் மீது, மற்றும் பகலின் மீதும் சத்தியம் செய்வார். இந்த ஒரு வித்தியாசமே போதும் இருவரும் ஒருவரல்ல என்பதற்கு.
எபிரேயர் 6:13,14ஆபிரகாமுக்கு தேவன் வாக்குத்தத்தம்பண்ணினபோது, ஆணையிடும்படி தம்மிலும் பெரியவர் ஒருவருமில்லாதபடியினாலே தமது பேரிலே தானே ஆணையிட்டு:
நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன்னைப்பெருகவே பெருகப்பண்ணுவேன் என்றார்.
எபிரேயர் 6:16மனுஷர் தங்களிலும் பெரியவர்பேரில் ஆணையிடுவார்கள்; உறுதிபண்ணும்படிக்கு ஆணையிடுதலே சகல விவாதத்திற்கும் முடிவு.
எரேமியா 22:5 நீங்கள் இந்த வார்த்தைகளைக்கேளாமற்போனீர்களேயாகில் இந்த அரமனை பாழாய்ப்போம் என்று என்பேரில் ஆணையிட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
"I swear by Myself, says the LORD." Jeremiah 22:5
ஆனால், அல்லா தன்னைவிட குறைவானவற்றின் (தான் படைத்ததாக சொல்லும்) பொருட்களின் மீது சத்தியம் செய்வார்.
குர்-ஆன் மீது சத்தியமாக: குர்-ஆன் 36:2 - "ஞானம் நிரம்பிய இக்குர்-ஆன் மீது சத்தியமாக". குர்-ஆன் 38:1 - "ஸாத். நினைவுறுத்தலைக் கொண்ட இக்குர்-ஆன் மீது சத்தியமாக".
வானத்தின் மீதும், அதில் உள்ளவைகளின் மீதும் சத்தியம்: குர்-ஆன் 86:1 - வானத்தின் மீது சத்தியமாக! தாரிக் மீது சத்தியமாக. குர்-ஆன் 74:32-34 - (ஸகர் என்னும் நரகு நிராகரிப்போர் கூறுவது போல்) அல்ல, இன்னும் சந்திரன் மீது சத்தியமாக. இரவின் மீதும் சத்தியமாக - அது பின்னோக்கிச் செல்லும் பொழுது. விடியற் காலையின் மீது சத்தியமாக - அது வெளிச்சமாகும் பொழுது,
குர்-ஆன் 53:1 - விழுகின்ற நட்சத்திரத்தின் மீது சத்தியமாக!
எழுதுகோல் (பென்) மீது சத்தியம்: குர்-ஆன் 68:1 - நூன்; எழுதுகோல் மீதும் இன்னும் ( அதன் மூலம்) அவர்கள் எழுதுவதின் மீதும் சத்தியமாக!
நகரத்தின் மீதும் சத்தியம்: குர்-ஆன் 90:1 - இந்நகரத்தின் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
படைப்பின் மீது சத்தியம்: குர்-ஆன் 92:1-3 - (இருளால்) தன்னை மூடிக்கொள்ளும் இரவின் மீது சத்தியமாக- பிரகாசம் வெளிப்படும் பகளின் மீதும் சத்தியமாக- ஆணையும், பெண்ணையும் (அவன்) படைத்திருப்பதின் மீதும் சத்தியமாக-
உண்மை என்னவென்றால், அல்லா எல்லாவற்றின் மீதும் சத்தியம் செய்வான் (கிறிஸ்தவர்கள் மன்னிக்கவும், " செய்வார்" என்று மதிப்போடு நான் சொன்னால், முஸ்லீம்கள் கோபப்படுவார்கள், ஏனென்றால், "செய்வார்" என்றால் அது பன்மையாகும் இதனால் அல்லாவிற்கு இணைவைப்பதாக ஆகும் என்று அவர்கள் நம்புகின்றனர்.) ஆனால் யேகோவா தன் மீது மட்டும் தான் சத்தியம் செய்வார். எனவே இவர்கள் இருவரும் ஒருவர் ஆக முடியாது.
தான் ஒருவரே பெரியவர் என்று யேகோவாவிற்குத்தெரியும்.
2) அல்லாவின் பரலோகமும் (சொர்க்கம்) யேகோவாவின் பரலோகமும்:
அல்லாவின் பரலோகம் ஆபாசம் மற்றும் உடல் சம்மந்தமானது. யேகோவானின் பரலோகம் பரிசுத்தம் நிறைந்தது மற்றும் ஆவிக்குரியது.
அல்லாவின் சொர்க்கத்தில் கிடைப்பவை: 1) தூயமனைவிகள் 2) ஹூருல் ஈன் என்னும் பெண்கள் (ஒவ்வொரு முறை இவர்களுடன் உடலுறவு கொண்டுவிட்ட பிறகு, அல்லா இவர்களை மறுபடியும் கன்னிகளாக மாற்றுவான்). 3) ஒரேவயதுள்ள கன்னிகள்
குர்-ஆன் 2:25 - "... இன்னும் அவர்களுக்கு அங்கு தூய துனணவியரும் உண்டு ; மேலும் அவர்கள் எங்கே நிரந்தரமாக வாழ்வார்கள்".
இவர்கள் பூமியில் இருந்த மனைவிகள் அல்ல, பரலோகத்தில் மட்டும் தரப்படும் புதிய மனைவிகள். (குர்-ஆன் 4:57 ம் பார்க்க)
குர்-ஆன் 56:35-38 - நிச்சயமாக (ஹுருல் ஈன் என்னும் பெண்களைப்) புதிய படைப்பாக, நாம் உண்டாக்கி அப்பெண்களைக் கன்னிகளாகவும்; (தம் துணைவர் மீது) பாசமுடையோராகவும், சம வயதினராகவும், வலப்புறத்தோருக்காக (ஆக்கி வைத்துள்ளோம்).
குர்-ஆன் 78:32-34 - தோட்டங்களும், திராட்சைப் பழங்களும். ஒரே வயதுள்ள கன்னிகளும். பானம் நிறந்த கிண்ணங்களும், (இருக்கின்றன).
ஒருவன் அல்லாவின் பாதையில் ஜிஹாதில் மரித்தால் அவனுக்கு சொர்க்கத்தில் 72 கன்னிப்பெண்கள் கிடைப்பார்கள் என்று ஹதீஸ் சொல்கிறது. ( http://en.wikipedia.org/wiki/Jannah) இப்போது புரிகிறதா நண்பர்களே ஏன் இஸ்லாமிய இளைஞர்கள் ஜிஹாதில் மரிக்க விரும்புகிறார்கள் என்று.
யேகோவாவின் பரலோகத்தில்: 1) பெண் கொடுப்பதும், பெண் கொள்வதுமில்லை ( திருமணமில்லை) 2) நீதியும், சமாதானமும், பரிசுத்த ஆவியினால் உண்டாகும் சந்தோஷமும். 3) மரணமில்லை, துக்கமில்லை, அழுகையில்லை மற்றும் வலியுமில்லை.
லூக்கா 20:34-36 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்தப் பிரபஞ்சத்தின் பிள்ளைகள் பெண்கொண்டும் பெண்கொடுத்தும் வருகிறார்கள்.
மறுமையையும் மரித்தோரிலிருந்தெழுந்திருக்குதலையும் அடையப் பாத்திரராக எண்ணப்படுகிறவர்களோ பெண் கொள்வதுமில்லை பெண் கொடுப்பதுமில்லை.
அவர்கள் இனி மரிக்கவுமாட்டார்கள்; அவர்கள் உயிர்த்தெழுதலின் பிள்ளைகளானபடியால் தேவதூதருக்கு ஒப்பானவர்களுமாய், தேவனுக்குப் பிள்ளைகளுமாயிருப்பார்கள்.
ரோமர் 14:17 தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது.
வெளி 21:3-4 மேலும், பரலோகத்திலிருந்து உண்டான ஒரு பெருஞ்சத்தத்தைக் கேட்டேன்; அது: இதோ, மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார்.
அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின என்று விளம்பினது.
இவைகள் மட்டுமில்லை அடிப்படை கொள்கைளில், சட்டங்களில் உள்ள பல வேறுபாடுகள் இவர்கள் இருவரும் ஒருவர் இல்லை என்றும் இவர்கள் ஒருவருக்கு ஒருவர் எதிர்மறையானவர்கள் என்று நாம் சுலபமாக அறிந்துக்கொள்ளலாம்.
யேகோவா உங்கள் எதிரிகளை நேசியுங்கள். உங்களைப் போல் பிறர் மீதும் அன்பு கூறுங்கள். ஒரு கன்னத்தில் அறைந்தால், மறு கன்னத்தையும் காட்டு.
இன்னும் சொல்லவேண்டியதில்லை, இயேசுவை பின் பற்றும் சீடர்களின் மூலமாக அவரும் அவர் கட்டளைகளும் வெளிப்படுகிறது. "அவர்களின் கனிகளினால் அவர்களை அறிவீர்கள்".
அல்லா: நம்பிக்கையில்லாதவர்களோடு நட்பு வேண்டாம். குர்-ஆன் 4:144, 9:16 நம்பிக்கையுள்ளவர்கள்(முஸ்லீம்கள்) தான் நண்பர்கள். குர்-ஆன் 5:55 ஜிஹாத் செய்யுங்கள். குர்-ஆன் 61:11, 2:244, 2:218 மனைவியை அடியுங்கள். குர்-ஆன் 4:34 நான்கு மனைவிகள் மற்றும் எண்ணிக்கையில்லா அடிமைப்பெண்களை வைத்துக்கொள்ளலாம். குர்-ஆன் 4:3
"அவர்களின் கனிகளினால் அவர்களை அறிவீர்கள்". | |
Comment Form under post in blogger/blogspot