இஸ்லாமியர்கள் கேட்கும் கேள்விகளும் பதில்களும்
இஸ்லாமியர்கள் கேட்கும் கேள்விகளும் ஈசா குர் ஆனின் பதில்களும்
கேள்வி: புனிதமாக கருதப்படும் பைபிளில் "யூதா மற்றும் தாமாரின்" நிகழ்ச்சி இடம் பெறலாமா? வேதம் என்றுச் கருதப்படும் புத்தகத்தில் இப்படிப்பட்ட கதைகள் இடம் பெறுவது சரியா? இயேசுவின் வம்சத்தில் யூதா, தாமார் போன்றவர்கள் இடம் பெறலாமா ?
பதில்: உலகம் அனைத்திலுமுள்ள இஸ்லாமியர்கள் இந்த "யூதா, தாமார்" என்ற கதை பைபிளில் இருப்பதனால், பைபிள் ஒரு வேதமல்ல என்று சொல்கிறார்கள். முக்கியமாக "இது தான் இஸ்லாம்" மற்றும் "தமிழ் முஸ்லீம் " என்ற தள நண்பர்கள் இந்த கேள்வியை கேட்டதால், அவர்களுக்காகவே இந்த பதில் தரப்படுகிறது. இது தான் இஸ்லாம் தளம் சகோதரர்கள் பல கேள்விகள் கேட்டு இருக்கிறார்கள். அவைகளில் "யூதா மற்றும் தாமாரின்" நிகழ்ச்சியைப் பற்றிய கேள்விக்கு மட்டும் இந்த கட்டுரையில் நாம் பதிலை காணப்போகிறோம். தேவனுக்கு சித்தமானால், மற்ற கேள்விகளுக்கும் பதிலை நாம் நிச்சயமாக காண்போம்.
இது தான் இஸ்லாம், தமிழ்முஸ்லீம் தளம் முன்வைத்த கேள்வி அல்லது குற்றச்சாட்டு ஒவ்வொருவரும் அவர்கள் நம்பும் ஒன்றை புனிதம் என்று கருதுவது அவர்களின் விருப்பத்தை சார்ந்தது என்றாலும் பைபிளைப் பற்றி நாம் கருத்து வைப்பதற்கு காரணம் இறைவேதம் என்ற தகுதியில் அது இல்லை என்பதால் தான். இறை வேதம் என்று அறிமுகப்படுத்தப்படும் ஒன்றில் எதுவெல்லாம் இருக்கக் கூடாதோ அவைகள் பரவலாக பைபிளில் கிடைக்கின்றன. வரலாற்றுக் குழப்பங்கள், முரண்பாடுகள், பச்சையாக விவரிக்கப்படும் பாலியல் கதைகள், மாமனாருக்கு மருமகளுடன் தொடர்புப் பற்றி கிறிஸ்த்தவர்கள் புனிதமாக கருதும் பைபிள் இப்படி விவரிக்கின்றது.
Source : http://www.idhuthanislam.com/QA/qa35.htm இந்த கட்டுரையின் சிறப்பு என்னவென்றால், கேட்டகேள்விக்கு பதில் தருவதோடு மட்டுமல்லாமல், தேவைப்படும் போது, தகுந்த கேள்விகளும் இஸ்லாமியர்களுக்காக முன்வைக்கப்படும். இக்கேள்விக்கான பதிலை கீழ்கண்ட தலைப்புகளாக பிரித்துக்காணலாம்.
1. பைபிளின் "பழைய ஏற்பாடு" ஓர் அறிமுகம்
2. யூதா மற்றும் பழைய ஏற்பாட்டு நபர்களின் குண நலங்கள்
3. லேவிரேட் திருமணம் (Levirate Marriage) என்றால் என்ன?
4. தாமார் அறிமுகம்
5. பொறுப்பை உதறித்தள்ளிய யூதா?
6. உரிமையை திரும்பப் பெற்ற தாமார்.
7. தேவதாசி (Shrine Prostitute / Temple Prostitute / Devadasi - India) முறை
8. பைபிள் எதிர்க்கும் Shrine or Temple Prostitute or "தேவதாசி" முறை:
9. தன் தவறை உணர்ந்து, திருத்திக்கொண்ட யூதா:
10. முகமது என்னும் மாமனார்: ஒரு சிறு குறிப்பு
11. வேதம் என்றால் அதில் என்ன என்ன இருக்கவேண்டும்? வேதம் என்பதின் அளவுகோல் என்ன? இஸ்லாமியர்கள் தான் சொல்லவேண்டும்.
12. இயேசுவின் வம்ச வரலாறு
13. முடிவுரை
1. பைபிளின் "பழைய ஏற்பாடு" ஓர் அறிமுகம்
பைபிள், பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடு என்று இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. பழைய ஏற்பாட்டில் இயேசுவிற்கு முன்பு (கி.மு.) எபிரேய மக்களாகிய இஸ்ரவேல் மக்களின் வாழ்க்கை வரலாறு, அவர்கள் தேவனுக்கு கீழ்படியும் போது அவர்களுக்கு கிடைத்த ஆசீர்வாதம், மற்றும் அவர்கள் தேவனுக்கு கீழ்படியாமல் துன்மார்க்க வாழ்க்கை வாழும் போது, தேவன் அவர்களுக்கு கொடுத்த தண்டனைகள் போன்றவற்றை படிக்கலாம். புதிய ஏற்பாட்டில் இயேசுவின் வாழ்க்கை வரலாறு, அவர் போதனைகள், இன்னும் கிறிஸ்தவ திருச்சபையின் வளர்ச்சி, இயேசுவின் சீடர்கள் சந்தித்த இடையூறுகள் அவைகளிலிருந்து கிடைத்த விடுதலை போன்றவற்றைக் காணலாம். குறிப்பாக பழைய ஏற்பாட்டின் நிகழ்ச்சிகளைப் பற்றி புதிய ஏற்பாடு கீழ்கண்டவாறு சொல்கிறது:
2 தீமோத்தேயு: 3:16-17:
16. வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படி,17. அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளயிருக்கிறது.
கிறிஸ்தவத்தின் பெரும்பான்மையான அடிப்படை கோட்பாடுகள் அனைத்தும், புதிய ஏற்பாட்டிலிருந்து எடுக்கப்படுகிறது. இயேசுவின் மீது வைக்கும் விசுவாசம், ஞானஸ்நானம், சபை இன்னும் பெரும்பான்மையான அடிப்படை சத்தியங்கள் புதிய ஏற்பாட்டின் மிது ஆதாரப்படுகிறது. பழைய ஏற்பாட்டுக்காலத்தில் வாழ்ந்த நபர்களின் வாழ்க்கை வரலாறை படிப்பதினால், அவர்களில் உள்ள நல்ல குணங்களை தியானித்தும் பின்பற்றியும், தீய செயல்களை விட்டும் கிறிஸ்தவர்கள் எச்சரிக்கப்படுகிறார்கள். உலகத்தில் எந்த சபையிலும் பழைய ஏற்பாட்டு பக்தன் இப்படி சில தவறுகள் செய்தான், இருந்தாலும், நாமும் இப்படி செய்யவேண்டும் என்று எந்த போதகரும் மக்களுக்கு அறிவுரை கூறுவதில்லை. தாவீது என்ற அரசன் பல யுத்தங்களை செய்தான், அதனால் நாமும் செய்யவேண்டும் என்று எந்த சர்ச் போதகரும் சொல்வதில்லை. பழைய ஏற்பாட்டு பக்தர்கள் பல மனைவிகளை கொண்டு இருந்தார்கள், அதற்காக, நாமும் அப்படி வாழவேண்டும் என்று எந்த நாட்டில் உள்ள சர்சும் இப்படி பிரசங்கம் செய்வதில்லை. இஸ்லாமில் மட்டும் தான், முகமது வயதிற்கு வராத பெண்ணை(சிறுமியை) திருமணம் செய்தார், அதை பின்பற்றி நாம் இன்று செய்யலாம், அவர் யுத்தம் செய்தார், நாமும் செய்யலாம் என்று அனுமதி கொடுக்கிறது. ஆனால், பைபிள் அப்படி சொல்வதில்லை. கி.பி. 2000 ல் வாழ்ந்த மனிதனுக்கு இறைவன் கொடுத்த கட்டளைகளை இன்று பின்பற்றும் படி பைபிள் சொல்வதில்லை. ஆனால், அதே மனிதனுக்கு கொடுத்த நல்ல பத்து கட்டளைகளை இன்றும் பின்பற்றும்படி பைபிள், சபை சொல்கிறது. கொலை, திருட்டு, விபச்சாரம் செய்யாதிருப்பாயாக, உன் பெற்றோரை கணம் செய்வாயாக போன்ற கட்டளைகள் பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டாலும், அது உலகம் இருக்கும் வரை பின்பற்றப்பட வேண்டிய கட்டளைகள். எனவே, பழைய ஏற்பாட்டில் வரும் நிகழ்ச்சிகள் நமக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்க எழுதப்பட்டிருக்கிறது, எல்லாவற்றையும் பின்பற்ற அல்ல.
2. யூதா மற்றும் பழைய ஏற்பாட்டு நபர்களின் குண நலங்கள்
யாக்கோபு என்பவருக்கு மொத்தம் 12 மகன்கள், அவர்களில் யூதாவும் ஒருவர். தன் சகோதரன் "யோசேப்பை" எகிப்திற்குச் செல்லும் வியாபாரிகளுக்கு விற்க யூதாவும் சம்மதித்தார். இப்படி தன் சகோதரனை அடிமையாக விற்க முன்வந்தவர் இந்த யூதா. பின்பு தன் தந்தையிடம் "யோசேப்பை" காட்டு மிருகம் கொன்றுவிட்டது என்று பொய்யும் சொன்னார். இப்படி பல தவறுகள் செய்தவர் தான் இந்த யூதா என்பவர். பைபிள் ஒரு குறிப்பிட்ட நபர்களின் நல்ல குணங்களை மட்டும் சொல்லி, அவர்களின் கெட்ட குணங்களை சொல்லாமல்என்றும் மறைத்ததில்லை. இறைவனின் வார்த்தையை நம்பி ஒரு பேழையை செய்த "நோவாவின்" நல்ல குணங்களை சொன்ன அதே பைபிள், அந்த நோவா அதிகமாக திராட்சை ரசம் குடித்து வெறித்து தன் ஆடை விலகி போதையில் (ஒரு குடிக்காரன் போல) இருந்ததை சொல்ல மறக்கவில்லை. பல ஆண்டுகள் காத்திருந்து பெற்ற மகனைகூட இறைவனுக்காக பலியிட துணிந்த ஆபிரகாமின் விசுவாசத்தை மெச்சிக்கொள்ளும் அதே பைபிள், அவன் சொன்ன பொய்களையும் சொல்ல பின்வாங்கியதில்லை. இரண்டுமுறை தன் சகோதரனை ஏமாற்றிய யாக்கோபின் சுயநலத்தையும் பைபிள் சொல்லாமல் விட்டதில்லை. கிறிஸ்தவத்திலும், இஸ்லாமிலும் அதிகமாக கவுரவிக்கப்படும் நபர் "மோசே" என்றால் மிகையாகாது, அப்படி இறைவனிடமிருந்து 10 கட்டளைகளையும், மற்ற சட்டங்களையும் பெற்ற மோசே, ஒரு சமயத்தில் இறைவனின் கட்டளையை சரியாக பின்பற்றவில்லையென்றுச் சொல்லி, 40 ஆண்டுகள தலைவராக இருந்து இஸ்ரவேல் மக்களை "கானானுக்கு" அழைத்துக்கொண்டு வந்த மோசேக்கு, "கானானுக்குள் செல்லும்" அனுமதியை தேவன் மறுத்தார்.
"தேவனுக்கு எதிர்த்து நின்ற எவரும் தண்டனையடையாமலிருந்ததில்லை, கர்த்தரை முகமுகமாய் அறிந்த மோசெயும் கூட" -- தானியேல் ரெஃபெரென்ஸ் வேதாகமம், Page 217.
இன்னும் சவுல், தாவீது, சாலொமோன் என்று எந்த நபரை எடுத்துக்கொண்டாலும், ஒருவரும் 100% தேவனுக்கு முன்பாக "சன்மார்க்கமாக" வாழ்ந்தவர்களில்லை. இருந்தாலும் தேவன் அவர்களோடு இருந்தார், அது தேவனுடைய இரக்கம், கிருபை அவ்வளவே.
எனவே, தேவன் ஒருவரை தெரிந்தெடுத்தால், அந்த நபர் தன்னைப் பற்றி பெருமை பாராட்ட ஒன்றுமில்லை. அவர்களை தேவன் தெரிந்தெடுத்தது தேவையான தகுதி அவர்களிடம் இருந்ததால் அல்ல, தேவன் அவர்களை தெரிந்தெடுத்ததால் தான் அவர்களுக்கு பழைய ஏற்பாட்டு நபர்கள் என்ற தகுதியே வந்தது.
ஆனால், அல்லா இப்படி இல்லை. முகமது என்ன செய்தாலும் அவருக்கு மட்டும் ஒரு தனிப்பட்ட அனுமதி அல்லா கொடுப்பார். ஒரு முஸ்லீம் 4 மனைவிகளை திருமணம் செய்யலாம் என்று அல்லாவின் கட்டளை, ஆனால் முகமதுவிற்கு இது பொருந்தாது, எத்தனை வேண்டுமானாலும் திருமணம் செய்துக்கொள்ளலாம். முகமது 6-9 வயது சிறுமியை திருமணம் செய்ய நினைத்தால், தேவ தூதன் அந்த சிறுமியை கனவில் காண்பிப்பார். வளர்ப்பு மகன் மனைவியின் மீது ஆசைப்பட்டால், அல்லா உடனே அதற்கு அனுமதி அளிப்பார். இப்படி அல்லா சொன்னது போல, முகமது வாழ்ந்தாரா அல்லது முகமது வாழ்ந்தது போல அல்லா தன் வசனங்களை இறக்கினாரா என்பது தான் புரியாத புதிராக உள்ளது. இயேசு தவிர மற்ற எல்லா நபர்களும் ஏதோ ஒரு வகையில் குறைபாடு உள்ளவர்கள் தான். முக்கியமாக, கிறிஸ்தவர்கள் அதிகமாக தொடப்படுவது, பழைய ஏற்பாட்டு நபர்களின் வாழ்க்கை முறையினால் மட்டுமல்ல, இன்றைய மற்றும் இதற்கு முன்பு வாழ்ந்துச் சென்ற இயேசுவின் ஊழியர்களின்(Pastors, Missionaries, etc) வாழ்க்கையிலிருந்தே என்பதை எந்த கிறிஸ்தவனும் மறுக்கமுடியாது.
3. லேவிரேட் திருமணம் (Levirate Marriage) என்றால் என்ன?
ஒரு நபர் குழந்தை இல்லாமல் இறந்துவிட்டால், அந்த இறந்தவரின் வம்சத்தை நிலைநாட்ட, இறந்தவரின் சகோதரன் அந்த விதவையை மறுமணம் செய்துக்கொண்டு தன் சகோதரனின் வம்சத்தை தொடரவேண்டும். இவர்களுக்கு பிறக்கும் குழந்தை, அந்த மரித்தவரின் பெயராலேயே அழைக்கப்படும்.
Source : Wikipedia - http://en.wikipedia.org/wiki/Levirate_marriage.
Levirate marriage is a type of marriage in which a woman marries one of her husband's brothers after her husband's death, if there were no children, in order to continue the line of the dead husband. The term is a derivative of the Latin word levir, meaning "husband's brother". Levirate marriage has been practiced by societies with a strong clan structure in which exogamous marriage, i.e. that outside the clan, was forbidden. It is or was known in societies including the Punjabis, Jats, Israelites, Huns (Chinese "Xiongnu", "Hsiong-nu", etc.), Mongols, and Tibetans.
இந்த "லேவிரேட் திருமணம்" முறைதான் இந்த தாமார் வாழ்விலும் நிகழ்ந்தது. பழைய ஏற்பாட்டுக்காலத்தில் ஒரு பெண், குழந்தை இல்லாமல் இருந்தால், அவள் இறைவனால் சபிக்கப்பட்டவள் என்று கருதினர். அப்படிப்பட்ட பெண் மிகவும் கேவளமாக கருதப்பட்டாள். ஆபிரகாமின் மனைவியாகிய சாராள், தன் அடிமைப்பெண் ஆகாரை ஆபிரகாமுற்கு மனைவியாக கொடுத்தபோது, ஆகார் கர்ப்பமானபோது, தன் நாச்சியராகிய "சாராளை" மிகவும் கேவளமாக பார்த்தால், எனவே தான் சாராள் ஆகாரை கடினமாக நடத்தினாள். பழைய ஏற்பாட்டுக்காலத்தில், இப்படி தன் சகோதரரின் குடும்பத்தை நிலைநாட்டாதவனுக்கு சமுதாயத்தில் தண்டனையும் கொடுக்கப்பட்டது. இந்த கட்டளைகள் பழைய ஏற்பாட்டு மனிதர்களாகிய எபிரேயர்களுக்கு மட்டும் கொடுக்கப்பட்டது, கிறிஸ்தவர்களுக்கு கிடையாது. இப்போது இதை யாரும் (கிறிஸ்தவர்கள்) பின்பற்றுவதில்லை,பின்பற்றவேண்டிய அவசியமில்லை.
உபாகமம்: 25:5-10
5. சகோதரர் ஒன்றாய்க் குடியிருக்கும்போது, அவர்களில் ஒருவன் புத்திர சந்தானமில்லாமல் மரித்தால், மரித்தவனுடைய மனைவி புறத்திலிருக்கிற அந்நியனுக்கு மனைவியாகக்கூடாது; அவளுடைய புருஷனின் சகோதரன் அவளைத் தனக்கு மனைவியாகக் கொண்டு, அவளிடத்தில்சேர்ந்து, புருஷனுடைய சகோதரன் செய்யவேண்டிய கடமையைச் செய்யக்கடவன்.6. மரித்த சகோதரனுடைய பேர் இஸ்ரவேலில் அற்றுப்போகாதபடிக்கு, அவன்பேரை அவள் பெறும் தலைப்பிள்ளைக்குத் தரிக்கவேண்டும்.7. அவன் தன் சகோதரனுடைய மனைவியை விவாகம்பண்ண மனதில்லாதிருந்தால், அவன் சகோதரனுடைய மனைவி வாசலில் கூடிய மூப்பரிடத்துக்குப்போய், என் புருஷனுடைய சகோதரன் தன் சகோதரனுடைய பேரை இஸ்ரவேலில் நிலைக்கப்பண்ணமாட்டேன் என்கிறான்; புருஷனுடைய சகோதரன் செய்யவேண்டிய கடமையைச் செய்ய அவன் மனதில்லாதிருக்கிறான் என்று சொல்வாளாக.8. அப்பொழுது அந்தப் பட்டணத்து மூப்பர் அவனை அழைப்பித்து அவனோடேபேசியும், அவன் அவளை விவாகம்பண்ணிக்கொள்ள எனக்குச் சம்மதமில்லை என்று பிடிவாதமாய்ச் சொன்னால்,9. அவன் சகோதரனுடைய மனைவி மூப்பரின் கண்களுக்கு முன்பாக அவனிடத்தில் வந்து, அவன் காலிலிருக்கிற பாதரட்சையைக் கழற்றி, அவன் முகத்திலே துப்பி, தன் சகோதரன் வீட்டைக் கட்டாதவனுக்கு இப்படியே செய்யப்படவேண்டும் என்று சொல்லக்கடவள்.10. இஸ்ரவேலில் அப்படிப்பட்டவன் வீடு, பாதரட்சை கழற்றிப்போடப்பட்டவன் வீடு என்னப்படும். இதன் படி ஒரு எபிரேய பெண்ணிற்கு தன் இறந்த கணவனின் பெயரை நிலைநாட்ட பிள்ளை பெற்றுக்கொள்வது ஒரு "உரிமையாக" தரப்பட்டது. ஒரு முறை இயேசுவிடம் சதுசேயர் வந்து இந்த லேவிரேட் திருமணம் பற்றித் தான் கேள்விகேட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது (பார்க்க மத்தேயு 22:23-30 வரை).
4. தாமார் அறிமுகம்:
யூதா தன் சகோதரர்களை விட்டுச்சென்று, ஒரு "கானானிய" பெண்ணை திருமணம் செய்துக்கொண்டார். தனக்கு மூன்று மகன்கள் பிறக்கிறார்கள், தன் மூத்தமகனுக்கும்(ஏர் என்பவனுக்கு) அந்த சமுதாயத்திலேயே "தாமார்" என்ற பெண்ணை தெரிந்தெடுத்தார். தாமார் என்பவள் ஒரு "கானானிய" பெண் ஆவாள். இவள் இஸ்ரவேல் வம்சத்தைச் சேர்ந்தவள் அல்ல.
ஆதியாகமம்: 38: 1- 9
1. அக்காலத்திலே யூதா தன் சகோதரரை விட்டு, அதுல்லாம் ஊரானாகிய ஈரா என்னும் ஒரு மனிதனிடத்தில் போய்ச்சேர்ந்தான்.
2. அங்கே யூதா, சூவா என்னும் பேருள்ள ஒரு கானானியனுடைய குமாரத்தியைக் கண்டு, அவளை விவாகம்பண்ணி, அவளோடே சேர்ந்தான்.
3. அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்றாள்; அவனுக்கு ஏர் என்று பேரிட்டான்.
4. அவள் மறுபடியும் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்கு ஓனான் என்று பேரிட்டாள்.
5. அவள் மறுபடியும் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சேலா என்று பேரிட்டாள்; அவள் இவனைப் பெறுகிறபோது, அவன் கெசீபிலே இருந்தான்.
6. யூதா தன் மூத்தமகனாகிய ஏர் என்பவனுக்குத் தாமார் என்னும் பேருள்ள ஒரு பெண்ணைக் கொண்டான்.
7. யூதாவின் மூத்தமகனாகிய ஏர் என்பவன் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாதவனாயிருந்ததினால், கர்த்தர் அவனை அழித்துப் போட்டார்.
8. அப்பொழுது யூதா ஓனானை நோக்கி, நீ உன் தமையன் மனைவியைச் சேர்ந்து, அவனை மைத்துனச் சுதந்தரமாய்ப் படைத்து, உன் தமையனுக்குச் சந்ததியை உண்டாக்கு என்றான்.
9. அந்தச் சந்ததி தன் சந்ததியாயிராதென்று ஓனான் அறிந்தபடியினாலே, அவன் தன் தமையனுடைய மனைவியைச் சேரும்போது, தன் தமையனுக்குச் சந்ததியுண்டாகாதபடிக்குத் தன் வித்தைத் தரையிலே விழவிட்டுக் கெடுத்தான்.
10. அவன் செய்தது கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாததாயிருந்ததினால், அவனையும் அவர் அழித்துப்போட்டார்.
11. அப்பொழுது யூதா, தன் குமாரனாகிய சேலாவும் அவன் சகோதரர் செத்ததுபோலச் சாவான் என்று அஞ்சி, தன் மருமகளான தாமாரை நோக்கி, என் குமாரனாகிய் சேலா பெரியவனாகுமட்டும், நீ உன் தகப்பன் வீட்டிலே கைம்பெண்ணாய்த் தங்கியிரு என்று சொன்னான்; அந்தப்படியே தாமார் போய்த் தன் தகப்பன் வீட்டிலே தங்கியிருந்தாள்.
இந்த "ஏர்" என்பவன் கெட்டவனாக இருப்பதினால், தேவன் அவனை அழித்துப்போட்டார். இவனிடம் எந்த வகையான குணங்கள் இருந்தது என்று பைபிள் சொல்லவில்லை. யூதா தன் இரண்டாவது மகன் "ஓனான்" என்பவனை அழைத்து, "லேவிரேட்" திருமண முறைப்படி நீ உன் அண்ணனின் குடும்பத்திற்கு சந்ததியை உண்டாக்கு என்றுச் சொன்னார். இந்த "ஓனான்" என்பவன் இரண்டு விதமாக தவறுகளைச் செய்கிறான்.
1. இவன் தனக்கு விருப்பமில்லாமல் இருந்தாலும், தன் தகப்பனுக்காக தாமாரை திருமணம் செய்துக்கொள்கிறான்.
2. அப்படி திருமணம் செய்துக்கொண்டவன், "இயற்கை குடும்பக்கட்டுப்பாடு முறையில்" தன் சகோதரனுக்கு சந்தானம் உண்டாகாமல் பார்த்துக்கொண்டான். இவன் நினைத்தது, தன் மூலமாக குழந்தை பிறந்தால், அந்த குழந்தை மரித்த சகோதரன் பெயரைக்கொண்டு அழைக்கப்படும், மட்டுமல்லாமல் தன் தந்தை மரித்தபிறகு, தன் மரித்த சகோதரனின் பங்கு இவனுக்குச் செல்லும். ஒருவேளை தாமாருக்கு இவன் மூலமாக குழந்தை பிறக்கவில்லையானால், இருக்கும் சொத்துக்கள் தனக்கும், தன் இளைய சகோதரன் இருவருக்குமே வரும் என்று நினைத்து இப்படிச் செய்தான். இங்கு பலிகடா ஆனது "தாமார்" தான்.
5. பொறுப்பை உதறித்தள்ளிய யூதா?
தன் இரண்டாவது மகனின் இந்தச் செயல், தேவனின் பார்வைக்கு பொல்லாததாக இருந்ததால், அவனையும் அழித்துப்போட்டார். ஓனான் எத்தனை நாட்கள் இதைச் தொடர்ந்து செய்தான் என்று தெரியாது.
ஆதியாகமம்: 38: 10-11
10. அவன் செய்தது கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாததாயிருந்ததினால், அவனையும் அவர் அழித்துப்போட்டார்.11. அப்பொழுது யூதா, தன் குமாரனாகிய சேலாவும் அவன் சகோதரர் செத்ததுபோலச் சாவான் என்று அஞ்சி, தன் மருமகளான தாமாரை நோக்கி, என் குமாரனாகிய் சேலா பெரியவனாகுமட்டும், நீ உன் தகப்பன் வீட்டிலே கைம்பெண்ணாய்த் தங்கியிரு என்று சொன்னான்; அந்தப்படியே தாமார் போய்த் தன் தகப்பன் வீட்டிலே தங்கியிருந்தாள். யூதா நடந்த விவரம் என்ன என்று தெரிந்துக்கொண்டு இருந்திருக்கலாம். ஆனால், அவன் அப்படிச் செய்யாமல், தன் மருமகள் தான் இதற்கு காரணம் என்று நினைத்து, மூன்றாவது குமாரனும் இறந்துவிடுவான் என்று எண்ணி, (குற்றத்தை அவள் மிது சுமத்தி, தன் மகன்கள் மரணத்திற்கு அவள் தான் காரணம் என்று எண்ணி ) வேண்டுமென்றே அவளை தன் தகப்பான் வீட்டில் விதவையாக காத்து இருக்கும்படிக்குச் சொன்னான். ஒரு வேளை நடந்த விவரம் என்ன என்று தெரிந்துக்கொண்டு இருந்தாலோ, அல்லது தன் மூன்றாவது மகன் இன்னும் திருமண வயது வரவில்லை, அதனால், நீ உன் தகப்பன் சொல்படி கேட்டு வேறு திருமணம் செய்துக்கொள் என்றுச் சொல்லி இருக்கலாம். இந்த இரண்டு காரியமும் செய்யாமல், அவளை காலமெல்லாம் "விதவையாகவே" (குழந்தையும் இல்லாமல், கணவனும் இல்லாமல்) இருக்கும் படிக்கு அனுப்பிவிட்டான். யூதா ஒரு பொறுப்புள்ள மனிதனாக நடந்துக்கொள்ளவில்லை.
6. உரிமையை திரும்பப் பெற்ற தாமார்.
21ம் நூற்றாண்டின் மற்றும் இந்திய பெண்களின் கண்ணியத்தின்படி பார்த்தால்,தாமாரின் செயல் ஒரு குடும்பப்பெண் செய்யக்கூடிய செயல் தானா என்றுக் கேட்டால்? அந்தச் செயல் ஒரு சாதாரண குடும்பப்பெண் செய்யக்கூடிய செயல் இல்லை என்று தான் சொல்லவேண்டும். ஒரு பெண்ணின் மற்றும் குடும்பத்தின் கௌரவத்திற்கு களங்கம் விளைவிக்கும் அளவிற்கு இருக்கிறது, தாமாரின் செயல்.
ஆதியாகமம்: 38:12 - 26
12. அநேகநாள் சென்றபின், சூவாவின் குமாரத்தியாகிய யூதாவின் மனைவி மரித்தாள். யூதாவினுடைய துக்கம் ஆறினபின், அவன் அதுல்லாம் ஊரானாகிய தன் சிநேகிதன் ஈராவுடனே திம்னாவிலே தன் ஆடுகளை மயிர்க்கத்தரிக்கிறவர்களிடத்திற்குப் போனான்.13. அப்பொழுது, உன் மாமனார் தம்முடைய ஆடுகளை மயிர்க்கத்தரிக்கத் திம்னாவுக்குப் போகிறார் என்று தாமாருக்கு அறிவிக்கப்பட்டது.14. சேலா பெரியவனாகியும் தான் அவனுக்கு மனைவியாகக் கொடுக்கப்படவில்லை என்று அவள் கண்டபடியால், தன் கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களைக் களைந்துபோட்டு, முக்காடிட்டுத் தன்னை மூடிக்கொண்டு, திம்னாவுக்குப் போகிற வழியிலிருக்கிற நீரூற்றுகளுக்கு முன்பாக உட்கார்ந்தாள்.15. யூதா அவளைக் கண்டு, அவள் தன் முகத்தை மூடியிருந்தபடியால், அவள் ஒரு வேசி என்று நினைத்து,16. அந்த வழியாய் அவளிடத்தில் போய், அவள் தன் மருமகள் என்று அறியாமல், நான் உன்னிடத்தில் சேரும்படி வருவாயா என்றான்; அதற்கு அவள், நீர் என்னிடத்தில் சேரும்படி, எனக்கு என்ன தருவீர் என்றாள்.17. அதற்கு அவன், நான் மந்தையிலிருந்து ஒரு வெள்ளாட்டுக் குட்டியை அனுப்புகிறேன் என்றான். அதற்கு அவள், நீர் அதை அனுப்புமளவும் ஒரு அடைமானம் கொடுப்பீரா என்றாள்.18. அப்பொழுது அவன், நான் உனக்கு அடைமானமாக என்ன கொடுக்கவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவள், உம்முடைய முத்திரை மோதிரமும் உம்முடைய ஆரமும் உம்முடைய கைக்கோலும் கொடுக்கவேண்டும் என்றாள். அவன் அவைகளை அவளுக்குக் கொடுத்து, அவளிடத்தில் சேர்ந்தான்; அவள் அவனாலே கர்ப்பவதியாகி,19. எழுந்துபோய், தன் முக்காட்டைக் களைந்து, தன் கைம்பெண்மைக்குரிய வஸ்திரங்களை உடுத்திக்கொண்டாள்.20. யூதா அந்த ஸ்திரீயினிடத்தில் இருந்த அடைமானத்தை வாங்கிக்கொண்டு வரும்படி அதுல்லாம் ஊரானாகிய தன் சிநேகிதன் கையிலே ஒரு வெள்ளாட்டுக்குட்டியைக் கொடுத்தனுப்பினான்; அவன் அவளைக் காணாமல்,21. அவ்விடத்து மனிதரை நோக்கி, வழியண்டை நீரூற்றுகள் அருகே இருந்த தாசி எங்கே என்று கேட்டான்; அதற்கு அவர்கள், இங்கே தாசி இல்லை என்றார்கள்.22. அவன் யூதாவினிடத்தில் திரும்பி வந்து, அவளைக் காணோம், அங்கே தாசி இல்லையென்று அவ்விடத்து மனிதரும் சொல்லுகிறார்கள் என்றான்.23. அப்பொழுது யூதா, இதோ, இந்த ஆட்டுக்குட்டியை அனுப்பினேன், நீ அவளைக் காணவில்லை; நமக்கு அவகீர்த்தி வராதபடிக்கு, அவள் அதைக் கொண்டுபோனால் போகட்டும் என்றான்.24. ஏறக்குறைய மூன்றுமாதம் சென்றபின்பு உன் மருமகளாகிய தாமார் வேசித்தனம்பண்ணினாள், அந்த வேசித்தனத்தினால் கர்ப்பவதியுமானாள் என்று யூதாவுக்கு அறிவிக்கப்பட்டது. அப்பொழுது யூதா, அவளை வெளியே கொண்டுவாருங்கள், அவள் சுட்டெரிக்கப்படவேண்டும் என்றான். தன் உரிமையை பெறுவதற்கு தாமார் தன் விதவை கோலத்தை கலைத்துவிட்டு, ஒரு வேசியின் வேடமிட்டு, தன் மாமனாரை வஞ்சித்தாள். அன்றைய கானானில் ஒரு பெண் தன் முகத்தை மூடிக்கொண்டு வழியோரமாக உட்கார்ந்தால், அவள் "வேசி" என்று பொருள். அவள் ஒரு வேசி என்று நினைத்து, யூதா செய்யக்கூடாத தவறை செய்கிறார். தாமார் எத்தனை வருடங்கள் இப்படி விதவை கோலத்தில் காத்துயிருந்தாளோ தெரியாது, யூதாவின் மூன்றாவது மகன் வாலிபனாக ஆனவுடன் யூதா, அவனை தனக்கு திருமணம் செய்துகொடுப்பார் என்று காத்திருந்தாள். பெண்ணாக இருந்தாலும் சரி, ஆணாக இருந்தாலும் சரி, உரிமைக்காக போராடுவதில் தவறில்லை, ஆனால், அந்த உரிமையை பெற பின்பற்றப்படும் வழிமுறையில் தான் உள்ளது உண்மையான வெற்றி. ஒரு குழந்தைக்காக தன் மாமனாரை ஏமாற்றி வெற்றிப் பெற்றது ஒரு உண்மையான வெற்றியாகாது. உரிமை பெறுவதில் வெற்றிப்பெற்றாள், ஆனால், தன் வாழ்க்கைக்கு தானே கலங்கத்தை உண்டாக்கிக்கொண்டாள் இந்த தாமார்.
7. தேவதாசி (Shrine Prostitute / Temple Prostitute / Devadasi - India) முறை
ஏன் தாமார் இப்படிப்பட்ட செயலைச் செய்யவேண்டும்? தனக்கு வரவேண்டிய உரிமையை யூதா மறுக்கும் போது : 1. இதைப்பற்றி ஊரில் உள்ள பெரியவர்களுக்குச் சொல்லி, யூதாவை நியாயத்தில் நிறுத்தியிருக்கலாம், அல்லது 2. தன் விதவை கோலத்தை கலைத்து விட்டு, யூதாவிற்குச் சொல்லி, தான் வேறு ஒரு திருமணம் செய்து இருக்கலாம், ஆனால், தாமார் அப்படிச் செய்யவில்லை. இதற்கு காரணம் "கானான்" தேசத்தில் உள்ள மக்களிடையே இருந்த "Shrine or Temple Prostitute முறையாகும்" - இந்தியாவில் இதையே "தேவதாசி" என்றுச் சொல்வார்கள். ஒரு பெண்ணை கோவிலுக்கென்று(God of Fertility) நேர்ந்துக்கொள்வார்கள், அவள் ஒரு பொது பொருளாக கருதப்படுவாள்.
Source : Wikipedia : http://en.wikipedia.org/wiki/Shrine_prostitute
Religious prostitution is the practice of having sexual intercourse (with a person other than one's spouse) for a religious purpose. A woman engaged in such practices is sometimes called a temple prostitute or hierodule, though modern connotations of the term prostitute cause interpretations of these phrases to be highly misleading. It was revered highly among Sumerians and Babylonians. In ancient sources (Herodotus, Thucydides) there are many traces of hieros gamos (holy wedding), starting perhaps with Babylon, where each woman had to reach, once a year, the sanctuary of Militta (Aphrodite or Nana/Anahita), and there have sex with a foreigner, as a sign of hospitality, for a symbolic price. (Cf. Herodotus, Book I, para 199) A similar type of prostitution was practiced in Cyprus (Paphos) and in Corinth, Greece, where the temple counted more than a thousand prostitutes (hierodules), according to Strabo. It was widely in use in Sardinia and in some of the Phoenician cultures, usually in honour of the goddess ‘Ashtart. Presumably by the Phoenicians[citations needed], this practice was developed in other ports of the Mediterranean Sea, such as Erice (Sicily), Locri Epizephiri, Croton, Rossano Vaglio, and Sicca Veneria. Other hypotheses[specify] concern Asia Minor, Lydia, Syria and Etruscans. It was common in Israel too, but some prophets, like Hosea and Ezekiel, strongly fought it; it is assumed that it was part of the religions of Canaan, where a significant proportion of prostitutes were male (roughly the same proportion as there were men in society at large, about 50%).[citations needed] [specify] speculates that the Canaanite peoples had a system of religious prostitution, inferring from passages such as Genesis 38:21, where Judah asks Canaanite men of Adullam "Where is the harlot, that was openly by the way side?". The Hebrew original employs the word "kedsha" in Judah's question, as opposed to the standard Hebrew "zonah". The word "kedsha" is derived from the root KaDeSh, which signifies uniqueness and holiness; thus it (according to his speculation) possibly represents a religious prostitute. IndiaThe practice devadasi and similar customary forms of hierodulic prostitution in Southern India (such as basavi),[1] involving dedicating adolescent girls from villages in a ritual marriage to a deity or a temple, who then work in the temple and act as members of a religious order. Human Rights Watch claims that devadasis are forced at least in some cases to practice prostitution for upper-caste members[2]. Various state governments in India have enacted laws to ban this practice. They include Bombay Devdasi Act, 1934, Devdasi (Prevention of dedication) Madras Act, 1947, Karnataka Devdasi (Prohibition of dedication) Act, 1982, and Andhra Pradesh Devdasi (Prohibition of dedication) Act, 1988.[3] அந்த காலத்தில், சில நாடுகளில் ஒவ்வொரு பெண்ணும் வருடத்திற்கு ஒரு முறை, இப்படி தன் தெய்வத்திற்காக ஒரு நாள், தன் கணவரல்லாத ஒருவரோடு இருக்கவேண்டும், இதை அவர்கள் புனிதமாக எண்ணினர்.
8. பைபிள் எதிர்க்கும் Shrine or Temple Prostitute or "தேவதாசி" முறை:
நாம் பழைய ஏற்பாட்டில் பார்க்கலாம், பல இடங்களில் தேவன் இஸ்ரவேல் மக்களுக்கு "அந்நியர்களுடன் திருமண உறவுமுறைகளை" வைத்துக்கொள்ளவேண்டாம் என்று கட்டளையிடுகிறார். இதற்கு காரணம் அந்நிய ஜனங்களிடையே இருந்த இப்படிப் பட்ட பழக்கங்கள், மற்றும் இஸ்ரவேலர்களில் இப்படிப்பட்ட "தேவதாசியாக" ஒருவரும் இருக்கக்கூடாது என்று தேவன் கட்டளையிடுகிறார்
உபாகமம்: 23:17-18 ( Deuteronomy 23:17-18)
No Israelite man or woman is to become a shrine prostitute. You must not bring the earnings of a female prostitute or of a male prostitute into the house of the LORD your God to pay any vow, because the LORD your God detests them both. (NIV) 17. இஸ்ரவேலின் குமாரத்திகளில் ஒருத்தியும் வேசியாயிருக்கக்கூடாது; இஸ்ரவேலின் குமாரரில் ஒருவனும் ஆண்புணர்ச்சிக்காரனாயிருக்கக்கூடாது.18. வேசிப்பணயத்தையும், நாயின் கிரயத்தையும் எந்தப் பொருத்தனையினாலாகிலும் உன் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்திலே கொண்டுவராயாக; அவைகள் இரண்டும் உன் தேவனாகிய கர்த்தருக்கு அருவருப்பானவைகள். மூலமொழியில் இங்கு சொல்லப்படும் வார்த்தை "வேசியில்லை" அது "தேவதாசி"( Shrine Prostitute) என்பதாகும். எந்த ஒரு இஸ்ரவேல் பெண்ணும், ஆணும் இப்படி "தேவதாசியாக" இருக்கக்கூடாது என்பதாகும். அந்த கானானியரின் ஜனங்களில் ஆண்களும் இப்படி இருந்தனர். இப்படி Shrine Prostitute ஈடுபடுபவர்கள் அதற்காக சிறிது பணமும் பெறுவார்கள், அப்படிப்பட்ட பணம் கூட தேவனுடைய ஆலயத்திற்குள் வரக்கூடாது என்று தேவன் கட்டளையிட்டுள்ளார். நாயின் கிரயம்(the Price of a Dog) என்றால், ஆண்கள் இப்படி வேசித்தனம் செய்து சம்பாதிக்கும் பணம் ஆகும். இப்படியாக தேவன் பலமுறை இஸ்ரவேல் மக்களுக்கு கானானியர் செய்ததுபோல செய்யவேண்டாம் என்று கட்டளையிட்டுள்ளார். பழைய ஏற்பாட்டு இராஜாக்கள் இப்படிப்பட்டவர்களை தங்கள் நாட்டிலிருந்து துரத்தி இருக்கிறார்கள்.
1 இராஜா 14:23-24, 15:11-12, 22:46 & 2 இராஜா 23:7
1 இராஜா 14:23 . அவர்களும் உயர்ந்த சகல மேட்டின் மேலும், பச்சையான சகல மரத்தின்கீழும், மேடைகளையும் சிலைகளையும் தோப்பு விக்கிரகங்களையும் தங்களுக்கு உண்டாக்கினார்கள்.24. தேசத்திலே இலச்சையான புணர்ச்சிக்காரரும் இருந்தார்கள்; கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு முன்பாகத் துரத்திவிட்ட ஜாதிகளுடைய அருவருப்புகளின் படியெல்லாம் செய்தார்கள். 1 இராஜா 15:11. ஆசா தன் தகப்பனாகிய தாவீதைப் போல் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்.12. அவன் இலச்சையான புணர்ச்சிக் காரரை தேசத்திலிருந்து அகற்றி, தன் பிதாக்கள் உண்டுபண்ணின நரகலான விக்கிரகங்களையெல்லாம் விலக்கி, 1 இராஜா 22:46. தன் தகப்பனாகிய ஆசாவின் நாட்களில் மீதியாய் விட்டிருந்த இலச்சையான புணர்ச்சிக்காரரையும் அவன் தேசத்திலிருந்து அற்றுப்போகப்பண்ணினான். 2 இராஜா 23:7. கர்த்தரின் ஆலயத்திற்கு அருகே ஸ்திரீகள் தோப்பு விக்கிரகத்துக்குக் கூடாரங்களை நெய்த இடத்திலுள்ள இலச்சையான புணர்ச்சிக்காரரின் வீடுகளை இடித்துப்போட்டான். இஸ்ரவேலில் தேவனுக்கு பயந்த இராஜாக்கள் இப்படிப்பட்டவர்களை நாட்டிலிருந்து விறட்டிவிட்டார்கள். புதிய ஏற்பாட்டு காலத்திலும், பவுல் ஊழியம் செய்த "கொரிந்தி" பட்டணமும் இப்படிப்பட்ட அருவருப்புக்களால் நிறைந்திருந்தது. சுமார் இப்படிப்பட்ட ஆண், பெண் தேவதாசிகள் 1000 பேர் இருந்ததாக சொல்லப்படுகிறது. According to Nelson's Bible Dictionary Corinth was ancient Greece's most important trade city. At Corinth the apostle Paul established a flourishing church made up of a cross section of the worldly minded people who had flocked to Corinth to participate in gambling, legalized temple prostitution, business adventures, and amusements available in this first century navy town. The city soon became a melting pot for the approximately 500,000 people who lived there at the time of Paul's arrival. Source: http://www.christiangay.com/he_loves/corinth.htm எனவே தான் கொரிந்தியருக்கு எழுதிய நிருபத்தில் கீழ்கண்டவாறு அவர்கள் எச்சரிக்கப்படுகிறார்கள். புதிதாக இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு அறிவுரை கூறப்பட்டுள்ளது.
1 கொரி 6:9-11
9. அநியாயக்காரர் தேவனுடைய ராஜயத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று அறியீர்களா? வஞ்சிக்கப்படாதிருங்கள்; வேசிமார்க்கத்தாரும், விக்கிகாராதனைக்காரரும், விபசாரக்காரரும், சுயபுணர்ச்சிக்காரரும், ஆண்புணர்ச்சிக்காரரும் ,10. திருடரும், பொருளாசைக்காரரும்,வெறியரும், உதாசினரும், கொள்ளைக்கராரும் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லை.11. உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள். மூலமொழியில், இந்த வசனத்தில் வரும் "வேசிமார்க்கத்தார், விபச்சாரக்காரர், ஆண்புணர்ச்சிக்காரர்" என்பது இந்த "Male/Female Temple Prostituttes " பற்றியே சொல்லப்பட்டுள்ளது. ஆக, யேகோவாவிற்கு அருவருப்பை உண்டாக்கக்கூடியதாக இருந்தது அந்நியர்களுடைய இப்படிப்பட்ட செயல்கள். எஸ்றா என்ற வேதபாரகன் எருசலேமில் உள்ளவர்களில் சிலர், அந்நிய ஜனங்களை திருமணம் செய்துக்கொண்டதை அறிந்தவுடன் அவர்களை விட்டு வேறுபடுங்கள் என்றுச் சொல்லி வேறுபடுத்தினான். (எஸ்றா 9 மற்றும் 10ம் அதிகாரத்தை படிக்கவும்.)
எஸ்றா 9: 1-2
9:1 இவைகள் செய்து முடித்தபின்பு, பிரபுக்கள் என்னிடத்தில் சேர்ந்து: இஸ்ரவேல் ஜனங்களும் ஆசாரியரும், லேவியரும் ஆகிய இவர்கள், கானானியர், ஏத்தியர், பெரிசியர், எபூசியர், அம்மோனியர், மோவாபியர், எகிப்தியர், அம்மோரியர் என்னும் இந்த தேசங்களின் ஜனங்களுக்கும், அவர்களுடைய அருவருப்புக்களுக்கும் விலகியிருக்கவில்லை. 9:2 எப்படியென்றால், அவர்களுடைய குமாரத்திகளிலே தங்களுக்கும் தங்கள் குமாரருக்கும் பெண்களைக் கொண்டார்கள். இப்படியே பரிசுத்த வித்து தேசங்களின் ஜனங்களோடே கலந்துபோயிற்று: பிரபுக்களின் கையும், அதிகாரிகளின் கையும், இந்தக் குற்றத்தில் முந்தினதாயிருக்கிறது என்றார்கள்.
9. தன் தவறை உணர்ந்து, திருத்திக்கொண்ட யூதா:
தன் மருமகள் கர்ப்பமாக இருப்பதாக அறிந்த யூதா, செய்வதை எல்லாம் செய்துவிட்டு, ஒன்றும் தெரியாதவன் போல, தீர்ப்பு வழங்குகிறான். அவளை வெளியே கொண்டு வாருங்கள், அவள் சுட்டரிக்கப்படவேண்டும் என்று தீர்ப்பு வழங்குகிறான் . தாமார் யுதாவிடமிருந்து பெற்ற "ஆரமும், கோலும், முத்திரை மொதிரமும்" காட்டியவுடன், தலை குனிந்தான், வெட்கப்பட்டான். அப்பொது சொல்கிறான் "தாமார் என்னைவிட நீதியுள்ளவள்". எந்த வாய் குற்றம் சுமத்தியதோ, அதே வாய் இப்போது புகழ்கிறது. தாமார் விடுதலையாக்கப்பட்டள். யூதா மனம் திரும்பினான். அவன் எல்லா கெட்ட குணங்கள் மாறியது.
ஆதியாகமம்: 38:25-26
25. அவள் வெளியே கொண்டுவரப்பட்டபோது, அவள் தன் மாமனிடத்துக்கு அந்த அடைமானத்தை அனுப்பி, இந்தப் பொருட்களை உடையவன் எவனோ அவனாலே நான் கர்ப்பவதியானேன்; இந்த முத்திரை மோதிரமும் இந்த ஆரமும் இந்தக் கோலும் யாருடையவைகள் பாரும் என்று சொல்லி அனுப்பினாள்.26. யூதா அவைகளைப் பார்த்தறிந்து என்னிலும் அவள் நீதியுள்ளவள்; அவளை என் குமாரனாகிய சேலாவுக்குக் கொடாமற்போனேனே என்றான். அப்புறம் அவன் அவளைச் சேரவில்லை. இந்த செயல் மூலமாக பிறந்த இரண்டு பிள்ளைகளுக்கு தான் ஒரு தந்தையாக பொறுப்பேற்று வளர்த்தான். அவன் எந்த அளவிற்கு மாறினான என்றால், இந்த நிகழ்ச்சிக்கு பிறகு "அவன் தாமாரை சேரவில்லை" அதாவது, தாமாரின் மூலமாக பிறந்த பிள்ளைகளுக்கு தந்தையானானே தவிர, தாமாருக்கு கணவனாக எந்த உரிமையும் பெறவில்லை. தாமாரும் சரி, யூதாவும் சரி பிறகு எப்போழுதும் கணவன் மனைவி போல இருந்ததில்லை என்று பைபிள் சொல்கிறது. ஒரு முறை எகிப்திலே தன் சகோதரனுக்காக பினைக்கைதியாக கூட மாற தயாராக இருந்தவன் இந்த யூதாவே (பார்க்க ஆதியாகமம் 44:18-34). யூதாவின் முதல் மூன்று மகன்களோடு கூட, இந்த இரண்டு பிள்ளைகளையும் சேர்த்து, யுதாவிற்கு 5 மகன்கள் என்று வேதம் சொல்கிறது. தாமார் தன் சொந்த வாழ்க்கையை வாழ்ந்தாள், யூதாவும் தன் சொந்த புத்தியில் நடந்துக்கொண்டான். இதில் தேவனை இழுக்கமுடியாது.
10. முகமது என்னும் மாமனார்:
ஒரு சிறு குறிப்பு இஸ்லாமியர்கள் யூதாவின் தாமாரின் இந்த கதை பைபிளில் இருப்பதினால், அது ஒரு வேதமல்ல என்றுச் சொல்கிறார்கள். பழைய ஏற்பாட்டு நிகழ்ச்சிகள் நமக்கு ஒரு எச்சரிக்கையாகவும், படிப்பினையாகவும் இருக்கும்படியாக எழுதப்பட்டுள்ளது, அதை அப்படியே பின்பற்ற அல்ல. இஸ்லாமிலும் ஒரு மாமனார் வருகிறார், அவர் பற்றியும் நாம் தெரிந்துக்கொள்ளவேண்டும் அல்லவா? அவருடைய நடக்கைக்கும் குணத்திற்கும் உலக மக்கள் யாரும் ஈடு ஆகமுடியாது, அவ்வளவு நேர்மையாக பரிசுத்தமாக வாழ்ந்தார் என்று இஸ்லாமியர்கள் பெருமைபடுவார்கள். அவருடைய வாழ்வு எல்லாருக்கும் எடுத்துக்கட்டாக உள்ளதா என்பதை, இதைப் படிப்பவர்கள் முடிவு செய்யுங்கள். அவர் தான் முகமது. முகமதுவிற்கு ஒரு வளர்ப்பு மகன் இருந்தான், அவனுக்கு முகமது ஒரு பெண்ணை திருமணம் செய்தார். ஒரு நாள் அவர் தன் வளர்ப்பு மகனின் வீட்டிற்குச் செல்கிறார், ஆனால், தன் வளர்ப்பு மகன் அங்கில்லை. அவர் மருமகள் அவரை வீட்டிற்குள் வரும்படி அழைக்கிறார், இவர் வரமறுக்கிறார். இந்த நிகழ்ச்சியைப் பற்றி இஸ்லாமியர் சரித்திர ஆசிரியர் "டபரி" என்ன சொல்கிறார் என்றுப் பாருங்கள் .
Imam Tabari wrote (History of Tabari, vol 8):
"One day Muhammad went out looking for Zaid (Mohammed's adopted son). Now there was a covering of hair cloth over the doorway, but the wind had lifted the covering so that the doorway was uncovered. Zaynab was in her chamber, undressed, and admiration for her entered the heart of the Prophet". The admiration was noticed by Zainab. She mentioned it to her husband Zaid later. He rushed to his father's house and offered Zainab to him. Mohammed worried about possible bad press and refused to accept it. But Allah will not take no for an answer and sent an instant revelation insisting on their union.
முகமது தன் வளர்ப்பு மகனின் வீட்டிற்குச் செல்லும் போது, வாசலில் போடப்பட்டிருந்த துணி சிறிது காற்றினால் நகர்ந்ததால், தன் மருமகளிடம் பார்க்கக்கூடாததை முகமது பார்த்துவிடுகிறார். தன் மருமகளின் அழகு இவர் உள்ளைத்திற்குள் செல்கிறது . இதை தன் கணவனுக்கு ஜைனப் தெரிவிக்கும்போது, அவன் முகமதுவிடம் சென்று "தான் தன் மனைவியை விவாகரத்து செய்துவிடுகிறேன், நீங்கள் ஆசைப்பட்டதால், திருமணம் செய்துக்கொள்ளுங்கள்" என்றுச் சொல்கிறார். அதற்கு முகமது, "வேண்டாம், உன் மனைவியை நீயே வைத்துக்கொள்" என்று சொல்கிறார்(அந்த காலத்தில் இஸ்லாமுக்கு முன்பு, இப்படி மருமகளை திருமணம் செய்துக்கொள்வது, மிகப்பெரும் குற்றமாக கருதப்பட்டது. அன்று மட்டுமல்ல இன்று கூட அது குற்றம் தான்.), இதை பார்த்துக்கொண்டு இருக்கிற அல்லா, உடனே ஒரு வசனத்தை இறக்குகிறார், தன் நபியின் ஆசையை பூர்த்தி செய்ய, அது தான் குர்-ஆன் 33:37.
குர்-ஆன் 33:37
(நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர்; "அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்" என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; ஆகவே ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும். (33:37)
அல்லா சொல்கிறார், முகமதுவிற்கு தன் மருமகள் மீது ஆசை இருந்தும், மனிதர்களுக்கு பயந்து, (ஏனென்றால், அப்படிப் பட்ட வழக்கம் இருட்டில் வாழ்ந்ததாகச் சொல்லும் மக்கா அரபி மக்களிடம் கூட இல்லை) அதை மனதிலே மறைத்து " உன் மனைவியை விவாகரத்து" செய்யவேண்டாம் என்றுச் சொன்னாராம். அதை அறிந்த அல்லா, வளர்ப்பு மகன் விவாகரத்து செய்துவிட்ட பிறகு உனக்கு உன் மருமகளோடு திருமணத்தை "நாம் செய்தோம் " என்றுச் சொல்கிறார். இப்படியெல்லாம் நடக்கவில்லை, சரித்திர ஆசிரியர் தவறாகச் சொன்னார் என்று இஸ்லாமியர்கள் சொல்வார்கள். சரி சரித்திர ஆசிரியர் சொன்னது தவறு என்றே வைத்துக்கொள்வோம், குர்-ஆனில் அல்லா சொன்னது தவறாகுமா? இந்த வசனம் இன்று இஸ்லாமியர்களிடம் உள்ள குர்-ஆனில் இல்லையா? ஒரு வளர்ப்பு மகன் தன் தந்தையைப் பார்த்து, "நான் விவாகரத்து செய்துவிடுகிறேன், நீங்கள் திருமணம் செய்துக்கொள்ளுங்கள்" என்றுச் சொன்னால் அதன் பொருள் என்ன? இதற்கு முன்பு என்ன நடந்துயிருந்தால் இந்த வார்த்தைகள் வெளிவரும்? "உன் மனைவியை நீயே வைத்துக்கொள்" என்று முகமது சொன்னார் என்று குர்-ஆன் சொல்கிறது, சரித்திர ஆசிரியரை விட்டுவிடுவோம். முகமது சொன்னது பதில் என்றால், அதற்கு முன்பு தன் மகன் என்ன சொல்லியிருப்பான் என்று சுலபமாக யூகிக்கலாம். இதற்கு Ph.D பட்டம் படித்துவரவேண்டிய அவசியமில்லை. எனவே, குர்-ஆன் வசனப்படி, முகமது தன் மகனின் வீட்டிற்குச் சென்று வரும் போது, ஏதோ நடந்துள்ளது, அதை தன் மனைவி மூலம் அறிந்த வளர்ப்பு மகன் தந்தையிடம் என்ன சொல்லியிருந்தால், முகமது இப்படி "உன் மனைவியை நீயே வைத்துக்கொள் " என்றுச் சொல்லமுடியும். சிந்தித்து பார்க்கவேண்டும்.
தன் மருமகளை வளர்ப்பு மகன் விவாகரத்து செய்தது உண்மையா இல்லையா?
முகமது தன் முன்னால் மருமகளை திருமணம் செய்தது உண்மையா இல்லையா? இதை யாரும் மறுக்கமாட்டார்கள்.
இந்த இரண்டு விவரங்கள் மட்டும் தவறு என்றுச் சொல்லுங்கள் பார்க்கலாம்? இந்த கட்டுரையில் நாம் சிந்திக்கவேண்டியது: ஒரு நபர் தன் மருமகள் வேசியாக வேடமிட்டு உட்கார்ந்து இருப்பதை அறியாமல் அவளிடம் வேசித்தனம் செய்ததால், அந்த நிகழ்ச்சி பைபிளில் இருப்பதால், அது வேதம் என்று அழைக்கப்படக்கூடாது என்றால்..... தன் மருமகள் என்று தெரிந்தே அவள் மீது ஆசைப் பட்டு ( எப்படி ஆசை உருவானது என்று சரித்திர ஆசிரியர் சொல்வதை நாம் மறந்துவிடுவோம்), அதை அறிந்த மகன் அவளை விவாகரத்து செய்வதும், அதற்காகவே ஒரு வசனத்தை அல்லா இறக்குவதும் உண்மையானால். அப்படிப் பட்ட நபரை எப்படி ஒரு "நபி" இறைத்தூதர் என்றும், அவர் மூலமாக இறக்கிய வசனங்கள் இறைவேதம் என்றும் எப்படி நம்புவது? எந்த ஆணாக இருந்தாலும் சரி, தற்செயலாக சில காட்சிகளை தெரியாமல் பார்த்துவிடுவது உண்டு, அதற்காக அல்லா ஒரு வசனத்தை இறக்கவேண்டுமா? தன் தகப்பன் தன் மனைவியின் மீது ஆசைப்படுகிறான் என்றுச் சொல்லி தன் தந்தையை கொலை செய்த மனிதர்கள் பற்றி நாம் செய்தித்தாள்களில் படிக்கிறோம், ஆனால் இங்கு ஒரு மகன் தன் தந்தைக்காக தன் மனைவியையே விவாகரத்து செய்கிறான் என்றால்..... என்ன சொல்வது? இதற்குச் சரியாக அல்லாவும், இப்படிப் பட்ட திருமணங்கள் எல்லாரும் செய்யலாம் என்றுச் சொல்லி எல்லாருக்கும் அனுமதி அளிக்கிறார், இதை யாரிடம் சொல்லி முறையிடுவது? யூதா தெரியாமல் பாவம் செய்தான், தெரிந்துவிட்ட பிறகு வேதனைப்பட்டான் பிறகு அதைச் செய்யவில்லை. ஆனால் முகமது ? முகமதுவை விட யூதாவே மிகவும் நல்லவன் என்றுச் சொல்லத் தோன்றுகிறது.
விவரம் 2: சிலர் இந்நிகழ்ச்சியை இப்படியும் சொல்கிறார்கள், முகமது முதலிலேயே ஜைனப்பை திருமணம் செய்ய ஜைனப் பெற்றோரிடம், கேட்டதாகவும், அதற்கு அவர்கள்(முஸ்லீம்களாக மாறியவர்கள்) வயது வித்தியாசம் முகமதுவிற்கும், ஜைபப்பிற்கும் அதிகமாக இருப்பதால், கொடுக்கமாட்டேன் என்றுச் சொன்னதாகவும், இதனால் ஏமாற்றமடைந்த முகமது, தன் வளர்ப்பு மகனை ஜைனப்பிற்கு மனமுடித்து கொடுத்ததாகவும், அவர்கள் இருவரும் அதிகமாக சண்டையிட்டுக்கொண்டு இருப்பதால், வளர்ப்பு மகன் விவாகரத்து செய்ததாகவும், ஜனப்பிற்கு வேறு வழியில்லாததால், கடைசியாக முகமதின் கோரிக்கையை அல்லாவின் வசனம் இறக்கியவுடன், ஜைனப் முகமதை திருமணம் செய்ததாகவும் சொல்கிறார்கள். Source : Read this Article
விவரம் 3: இஸ்லாமியர்கள் சொல்கிறார்கள், ஜயத்(வளர்ப்பு மகன்), மற்றும் ஜைனப்(மருமகள்) இருவருக்கும் திருமணம் செய்து வைத்தது முகமது தான், அவர்கள் தாம்பத்திய வாழ்வில் சண்டைகள் அதிகமாக இருப்பதால், ஜையத் விவாகரத்து செய்யும் போது, அல்லாவின் கட்டளையின் படி, முகமது திருமணம் செய்தார் என்று.மேலே சொன்ன மூன்று விவரங்களில் எது சரி என்று ஒரு தனி கட்டுரையில் பார்க்கலாம்., இந்த கட்டுரைக்கு இது போதும். சரித்திர ஆசிரியர் சொல்வதும், குர்-ஆன் வசனம் சொல்வதும் கவனித்தால், ஒரு உண்மை புரியும். அது என்ன? முகமது தன் வளர்ப்பு மகனின் மனைவியை விவாகரத்திற்கு பின்பு திருமணம் செய்துக்கொண்டார் என்பது. சொன்ன விவரங்களில் எது உண்மையாக இருக்கும், என்பதை கீழுள்ள் தொடுப்புகளை பார்க்கவும். மற்றும் இஸ்லாமிய தளங்களில் இதைப் பற்றிச் சொல்லும் விவரங்களையும் படியுங்கள். islam Watch Muslim Hope Islam Review Daniel Piles Faith Freedom News FaithFreedom News FaithFreedom hadith Muslim from usc.edu
11. வேதம் என்றால் அதில் என்ன என்ன இருக்கவேண்டும்? வேதம் என்பதின் அளவுகோல் என்ன? இஸ்லாமியர்கள் தான் சொல்லவேண்டும்.
இனி இஸ்லாமியர்கள் தான் ஒரு பட்டியல் இடவேண்டும்.
வேதம் என்றால், என்ன என்ன இருக்கலாம்? ஒரு "நபி" அல்லது "தீர்க்கதரிசி" என்றால் எப்படி வாழவேண்டும் என்று? யூதாவை பின்பற்றுங்கள் என்று பைபிளில் எங்கும் சொல்லவில்லை, எந்த சர்சிலும் இதைப் பற்றி பேசினால், யூதா செய்தது தவறு தான் என்றுச் சொல்லி, எல்லா பாஸ்டர்களும் மக்களை எச்சரிப்பார்கள். ஆனால், குர்-ஆன் முகமது செய்தது ஒரு வழிகாட்டி என்றுச் சொல்கிறது அதை மற்றவர்கள் பின்பற்றும்படி வாய்ப்பும் கொடுக்கிறது. யூதாவை கிறிஸ்தவர்கள் எப்போதோ மறந்துவிட்டார்கள், ஆனால் இஸ்லாமியர்கள் இன்னும் வளர்ப்பு மகன்களை தத்து எடுக்க பயப்படுகிறார்கள்? ஏன் தெரியுமா? மாமனாருக்கு தன் மருமகள் மீது ஆசை வந்துவிடுமோ, அதனால், அவன் விவாகரத்து செய்யவேண்டி வருமோ என்று தான். முகமது எத்தனை மனைவிகளை திருமணம் செய்தாலும், யாரை திருமணம் செய்தாலும், கிறிஸ்தவர்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை, இதைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை, ஆனால், இப்படிப் பட்டவர் மூலமாக வந்த புத்தகம், பைபிள் திருத்தப்பட்டது என்றுச் சொல்வதனால் மற்றும் இஸ்லாமியர்கள் பைபிளில் உள்ள நிகழ்ச்சிகளைப் பற்றி தவறாக விமர்சிப்பதனால் தான், நாங்கள் உண்மையை வெளியே சொல்லவேண்டி வருகிறது. இஸ்லாமியர்களே இதற்கு பதில் சொல்லுங்கள் (முக்கியமாக இது தான் இஸ்லாம் நண்பர் இதற்கு பதில் சொல்லவேண்டும்) வேதம் என்றால் அளவு கோல் என்ன? அதில் என்ன என்ன விவரங்கள் இருக்கலாம்? நபி என்றால் என்ன? அவரிடம் மனிதர்கள் எதிர்பார்க்கும் குணங்கள் என்ன? இறைவன் ஒரு மனிதனை நபியாக தெரிந்தெடுக்க அவர் எதிர்பார்க்கும் தகுதிகள் என்ன ? என்று சொல்வார்களானால், எல்லாருக்கும் பிரயொஜனமாக இருக்கும்.இதற்கு பதில் சொல்வீர்களானால், பைபிளில் வரும் நபிகள் (தீர்க்கதரிசிகள்), நீங்கள் சொல்லும் தகுதிகளை பெற்று இருக்கிறார்களா இல்லையா என்று நாங்கள் முடிவு செய்கிறோம். மற்றும் நாங்களும், "நபி" என்ற ஒருவருக்கு பைபிள் படி , யேகோவா தேவன் என்ன தகுதிகளை எதிர்பார்த்தார் என்றுச் சொல்கிறோம்.
12. இயேசுவின் வம்ச வரலாறு
யூதாவின் இந்த நிகழ்ச்சி கிட்டத்தட்ட கி.மு. 1850ல் நடந்ததாகக் கொள்ளலாம். யூதாவிற்கும் இயேசுவிற்கும் தோராயமாக 1850 வருடங்கள் இடைவேளி உள்ளது. ஒரு வம்சத்திர்கு 25 அல்லது 30 வருடங்கள் எடுத்துக்கொண்டாலும், சுமார் 61 வம்சங்கள் உள்ளது (1850/30= 61.67). இஸ்லாமியர்கள் எனக்கு ஒரு விவரத்தைச் சொல்லுங்கள். யூதா தாமார் நிகழ்ச்சி போன்று ஒரு தவறில் ஒரு மனிதன் பிறக்கிறான். அவன் அல்லாவை நம்பி, அல்லாவின் வழியில் தவறாது வாழ்கிறான். அவனை அல்லா ஏற்றுக்கொள்ளமாட்டாரா? இன்னும் ஒரு விவரத்தை இஸ்லாமியர்கள் மறந்து போகிறார்கள். உலம மக்கள் எல்லாரும் முகமதுவோடு கூட பிறந்தது சாதாரண கணவன் மனைவி உறவுமுறையில், ஆனால், இயேசு மட்டும் தான் தந்தையில்லாமல் பிறந்தவர். இதை மறுக்கமுடியுமா உங்களால்? ஒருவன் எவ்வளவு பெரிய தவறு செய்தாலும், அவன் மன்னிப்பு கோரினால், மற்றும் அதன் பிறகு அவன் அப்படிப் பட்ட தவறுகள் செய்யாமல் இருந்தால், அல்லா மன்னிக்க மாட்டாரா? இந்த யுதாவும், தாமாரும் அப்படித்தான் தவறு செய்தார்கள்? பிறகு திருந்தினார்கள். இன்று உங்களுடைய மற்றும் இந்தியாவில் உள்ள எல்லா இஸ்லாமியர்களின் மூதாதையர்கள் யார்? விக்கிரகங்களை வணங்கியர்கள் தானே? அதனால் உங்களை அல்லா வெறுத்து தள்ளுவாரா? இயேசு ஒரு இஸ்ரவேல் வம்சத்தில் பிறந்தவர் என்பதை காட்டவே, பைபிளில் வம்சவரலாறு சேர்க்கப்பட்டுள்ளது. இயேசு இந்த வம்சத்தில் பிறந்தார், அது சரியல்ல என்றுச் சொல்லும் நீங்கள். இயேசுவின் உண்மையான வம்சத்தைச் சொல்லுங்கள் பார்க்கலாம்? உங்களால் அந்த விவரத்தைச் சொல்லமுடியுமா?
13. முடிவுரை
தாவீது இப்படி விபச்சாரம் செய்த போது, அதன் மூலம் பிறந்த குழந்தையை மரிக்கச் செய்த யேகோவா தேவன், ஏன் யூதா மூலமாக பிறந்த இரண்டு பிள்ளைகளை மரிக்கச் செய்யவில்லை? 1. ஆதாம் முதல் மோசே மூலம் 10 கட்டளைகள் கொடுக்கும் வரை முதல் காலகட்டம். 2. மேசேயின் கட்டளைகள் முதல் - இயேசுவரை இரண்டாவது காலக்கட்டம். 3. இயேசு முதல் - இன்று வரை மூன்றாவது காலக்கட்டம். ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதனிடம் தேவன் எதிர்பார்த்த தகுதிகள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. முதல் காலக்கட்டத்தில் ஒரு குடும்பத்தை (ஆபிரகாம் மற்றும் அவர் வம்சம்) தேவன் தெரிந்தெடுத்தார். இரண்டாம் காலக்கட்டத்தில் ஒரு நாடாக (கானானுக்கு வந்த இஸ்ரவேல் நாடு) மாறினார்கள். எனவே தான், பத்து கட்டளைகள் கொடுக்கப்பட்டது, மற்றும் விபச்சாரம் செய்யவேண்டாம் என்ற கட்டளை, செய்தால் தண்டனை. மூன்றாம் காலக்கட்டம், நாம் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறோம். ஒரு பெண்ணை தவறான கண்ணோட்டத்தில் பார்த்தாலே, அது விபச்சாரம் செய்த பாவத்திற்கு சமம். யூதா முதலாம் காலக்கட்டத்திற்கு சம்மந்தப்பட்டவன். அதனால், பாவம் செய்யலாம் என்று நான் சொல்லவரவில்லை. ஆனால், கட்டளை வந்தபிறகு பாவம் செய்பவன் தண்டனையிலிருந்து தப்பமுடியாது என்றுச் சொல்லவருகிறேன், தாவீதைப் போல. தாவீது இரண்டாம் கால கட்டத்தில் வாழ்ந்தவன். மோசேயின் கட்டளைகள் அனைத்தும் தெரிந்தவன், மட்டுமல்லாமல் ஒரு அரசன், அவனே தவறு செய்தால், தண்டனை கொடுத்தே ஆகவேண்டும். பைபிள் தேவன் குர்-ஆனில் அல்லா போல அல்ல, தவறு செய்தவன் தன் தீர்க்கதரிசியே ஆனாலும், தண்டனை உண்டு. இனி, நாம் மூன்றாம் காலகட்டம், எங்களிடம் தேவன் எதிர்பார்க்கும் தகுதிகள், குணங்கள் இன்னும் அதிகம். புதிய ஏற்பாட்டின் மற்றும் இயேசுவின் மலைப் பிரசங்கத்தின் முன்பு, எந்த பழைய ஏற்பாட்டு நபரும் நீதிமான் ஆகமுடியாது. எனவே காலகட்டத்தைப் மாற்றி நாம் நல்ல குணங்களை அவர்களிடம் எதிர்பார்க்கமுடியாது, கூடாது. New International Bible Commentary, Page : 7 சொல்கிறது, "It is anachronistic to judge Joshua or David by the standards of the Sermon on the Mount". ("யோசுவாவையும், தாவீதையும் இயேசுவின் மலைப் பிரசங்க தகுதியோடு (Standard) ஒப்பிடுவது சரியானது அல்ல" ) எனவே, இஸ்லாமியர்கள் இனி ஏதாவது சொல்லவேண்டுமானால், புதிய ஏற்பாட்டில் இயேசுவைப் பற்றிப் பேசுங்கள். அவர் குணங்கள், நடத்தை, அற்புதங்கள், மன்னிக்கும் தன்மை, பொருமை போன்றவற்றைப் பற்றி கேள்வி எழுப்புங்கள். பழைய ஏற்பாட்டு நபர்கள் எங்களுக்கு ஒரு எச்சரிக்கையே தவிர, எங்கள் வாழ்விற்கு அடிப்படை இல்லை. எங்கள் அஸ்திபாரம் இயேசு மற்றும் எங்கள் கோட்பாடுகள் பெரும்பான்மையாக புதிய ஏற்பாட்டிலிருந்து எடுக்கப்படுகிறது. நீங்கள் பழைய ஏற்பாட்டு நபர் தவறு செய்தானே என்றுச் சொன்னால், நாங்களும் ஆமாம் என்றுச் சொல்லி இன்னும் சிலவிவரங்களை உங்களுக்கு சொல்வோம். அதனால், "குர்-ஆன்" வேதம் என்றும், "முகமது" ஒரு நபி என்றும் உங்களுக்கு சாதகமாக அது நிருபிக்கப்படாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
http://www.geocities.com/isa_koran/tamilpages/Rebuttals/BibleTamar1.html