இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Wednesday, March 5, 2014

Fwd: [ஈஸா குர்-ஆன் - Isa Koran] பாகம் 8 - 101 காரணங்கள்: முஹம்மது ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்று கிறிஸ்தவர்கள் கருதுவது ஏன்?

 பாகம் 8

பாகம் 1பாகம் 2பாகம் 3பாகம் 4பாகம் 5பாகம் 6பாகம் 7ஐ படிக்க சொடுக்கவும். இந்த எட்டாம் பாகத்தில் 71வது காரணத்திலிருந்து 80வது காரணம் வரை காண்போம்.

71.  இசைக் கருவிகள் இசைப்பது, ஆண்கள் பட்டுத்துணி அணிவது தடுக்கப்பட்டதாகும்.

ஒரு மத ஸ்தாபகர் எதைச் சொன்னாலும் மக்கள் கேள்வி கேட்காமல் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்வார்கள் என்ற குருட்டு நம்பிக்கையில் முஹம்மது தன் மனதில் தோன்றியவைகள் அனைத்தையும் சொல்லியுள்ளார். ஆண்கள் பட்டுத் துணிகளை அணிவது தடுக்கப்பட்டதாகும் என்றும் மேலும் மக்கள் இசைக்கருவிகள் இசைப்பது  தவறாகும் என்றும் முஹம்மது கூறினார். எதன் அடிப்படையில் ஆண்கள் பட்டுத்துணிகளை அணிவது பாவமாகும்? இப்படியெல்லம் போதனைச் செய்ய இவருக்கு அதிகாரம் கொடுத்தவர் யார்? பழைய ஏற்பாட்டில் சங்கீதம் என்ற ஒரு புத்தகமே பாடல்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அனேக இசைக் கருவிகள் கொண்டு கர்த்தரை துதித்துப் பாடுவது ஒரு இன்பமான அனுபவமாகும். எகிப்திலிருந்து இஸ்ரவேலர்கள் விடுதலையாகி வரும் போது, ஆடல் பாடலோடு வந்தார்கள், ஆண்களும் பெண்களும் இசைக்கருவிகளை இசைத்து மகிழ்ந்து கர்த்தரை கொண்டாடினார்கள்.  இது பாவம் என்று முஹம்மது கூறுவதிலிருந்து,  பைபிளின் தேவனுக்கும், இவருக்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்லை என்பது புரிகின்றது. இவர் ஒரு கள்ளத்தீர்க்கதரிசி என்பது கிறிஸ்தவர்கள் கூறுவதில் தவறில்லை. [71]

72. பூமியில் பட்டாடைகள் அணிவது பாவம், சொர்க்கத்தில் அணிவது மேன்மை

ஆண்கள் பூமியில் பட்டாடைகள் அணியக்கூடாது என்றுச் சொல்லும் முஹம்மது, தன் குர்-ஆனில் மட்டும் அவைகளை அணிந்து முஸ்லிம்கள் சொர்க்கத்தில் ஜொலிப்பார்கள் என்றுச் சொல்கிறார்.  சொர்க்கத்தில் மேன்மையை குறிக்கும்  பட்டாடைகள் எப்படி பூமியில் ஒரு பாவமான காரியமாக இருக்கும்? சொர்க்கத்தில் பட்டாடை அணிய வேண்டுமென்றால், பூமியில் அதனை அணியக்கூடாதாம். மேலும் ஆண்கள் மோதிரம் அணியக்கூடாது,  வெள்ளிப்பாத்திரத்தில் பருகுவது போன்றவை கூடாது என்று சொல்லியுள்ளார்.  ஆன்மீக விஷயங்களை விட்டுவிட்டு, பிரயோஜனமற்ற உடல் சம்மந்தப்பட்ட வெளிப்புற விஷயங்களுக்கு  அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார் முஹம்மது. ஆவிக்குரிய விஷயங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டும் என்று நம்பும் கிறிஸ்தவர்கள்  முஹம்மது ஒரு உண்மையான தீர்க்கதரிசி இல்லை என்று நம்புவதில் ஆச்சரியமில்லையே! [72]

73. தொழுகையில் இமாமை முந்தித் தம் தலையை உயர்த்துபவரின் தலையை கழுதையைப் போல் அல்லாஹ் மற்றிவிடுகின்றார்

சிறுபிள்ளைகள் பேசிக்கொள்ளும் போது, ஏதாவது தவறு செய்தால் சாமி கண்ணை குத்திவிடும் என்று பேசிக்கொள்வதை நாம் காணமுடியும். நம்மில் சிலரும் இப்படி பேசி இருப்போம். ஆனால்,  உலகத்திற்கே வழிகாட்டியாக வந்தவர் என்று முஸ்லிம்கள் போற்றும் முஹம்மது இப்படி பிள்ளைகளைப் போல போதனை செய்வது ஏற்புடையதாக இருக்குமா? " உங்களில் ஒருவர் தொழுகையில் இமாமை முந்தித் தம் தலையை உயர்த்துவதால் அவரின் தலையைக் கழுதையுடை தலையாகவோ அல்லது அவரின் உருவத்தைக் கழுதையுடைய உருவமாகவோ அல்லாஹ் ஆக்கி விடுவதை அஞ்ச வேண்டாமா?" என்று முஹம்மது கூறியுள்ளார்.  தொழுகையில் ஒருவர் தலையை இமாம் உயர்த்துவதற்கு முன்பாக சீக்கிரமாக உயர்த்திவிடுவதினால், அல்லாஹ் இப்படிப்பட்ட கீழ்தரமான தண்டனையை கொடுப்பாரா? உண்மையிலேயே முஹம்மதுவை தீர்க்கதரிசி என்றுச் சொல்பவர்கள் இன்னும் அறியாமையிலேயே இருக்கிறார்கள் என்று அர்த்தம். சிறு பிள்ளைகளைப் போல்  போதனை செய்பவரை எப்படி ஒரு நபி என்று கிறிஸ்தவர்கள் நம்புவார்கள்? [73]

74. சொர்க்கவாசியான பெண் உலகத்தாரை எட்டிப்பார்த்தால், வானத்திற்கும் பூமிக்குமிடையே உள்ள அனைத்தையும் பிரகாசமாக்கி விடுவாள்

அல்லாஹ்விற்காக ஜிஹாத் போர் புரிந்து அதில் மரித்தால், அவர்களுக்கு அனேக பெண்கள் (72) தருவதாக முஸ்லிம்கள் நம்புகிறார்கள். இது தவிர சாதாரண நல்ல முஸ்லிம்களுக்கும் சொர்க்கத்தில் ஹூருல் ஈன்கள் என்ற பெண்கள் கிடைப்பார்கள் என்று குர்-ஆனும் சொல்கிறது.  இந்தப் பெண்களில் ஒருத்தி, உலகத்தாரை எட்டிப்பார்த்தால், வானத்திற்கும் பூமிக்கும் இடையே பிரகாசம் வந்துவிடுமாம். இவ்வளவு மேன்மை அந்த பெண்களின் கண்களில் இருக்கிறது என்று முஹம்மது கூறியுள்ளார். அதாவது சூரியனுக்கு சமமாக அவளின் கண்களில் வெளிச்சம் இருக்கும்.  இந்த போதனை எப்படிப்பட்டது? ஆண்களுக்கு பெண்களின் மீது ஆசையை உண்டாக்கும் விதமாக பேசுவது சரியா? மேலும், உண்மையிலேயே சொர்க்கத்தில் பெண்களோடு உடலுறவு கொள்ளமுடியும் என்றுச் சொல்லும் ஒரு இறையியல் சரியானதா? பரலோகத்தில் ஆண் பெண் உடலுறவு இருக்காது என்று பைபிள் கூறுகிறது. ஆனால், இப்படிப்பட்ட பெண்களோடு உடலுறவு கொள்ளவே சொர்க்கம் செல்லவேண்டும் என்று முஸ்லிம்கள் போதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இப்படியெல்லம் தன் தவறான கோட்பாடுகளினால் மக்களை ஏமாற்றிய இவர் ஒரு தீர்க்கதரிசியா ? இவரை கிறிஸ்தவர்கள் தீர்க்கதரிசி என்று ஒரு காலத்திலும் நம்பமாட்டார்கள். [74]

75. 'ஹூருல் ஈன்' எனப்படும் பெண்களின் கால்களின் எலும்பு மஜ்ஜைகள் (காலின்) எலும்புக்கும் சதைக்கும் அப்பாலிருந்து வெளியே தெரியும்

மனிதர்கள் அதிக சிவப்பாக/வெள்ளையாக இருந்தால், அவர்களின் கைகளில், கால்களில் இருக்கும் நரம்புகளை நாம் ஓரளவிற்கு காணமுடியும். இது இயற்கை. ஒரு பெண்ணின் காலில் உள்ள  எலுப்புக்குள் இருக்கும் மஜ்ஜை கூட வெளியே தெரியும் அளவிற்கு அவள் வெள்ளை வெளேரென்று இருந்தால் எப்படி இருக்கும்?  கிறிஸ்தவ சகோதர சகோதரிகளே, இப்படி எழுதுகிறேன் என்று கோபம் கொள்ளவேண்டாம். இப்படிப்பட்ட பெண்களை அல்லாஹ் முஸ்லிம்களுக்கு சொர்க்கத்தில் தருவதாக, இஸ்லாமிய தீர்க்கதரிசி ஆசை வார்த்தைகள் சொல்லி முஸ்லிம்களை மயக்கியுள்ளார். இப்படிப்பட்ட வர்ணனையை சிறிய வயதிலிருந்து கேட்டுக் கேட்டு முஸ்லிம் ஆண்கள் தற்கொலைத் தாக்குதலில் ஈடுபட்டு, சாகத்துணிந்து, செத்து, மற்றவர்களை சாகடித்து, இஸ்லாமிய சொர்க்கத்தில் நுழைய பயணச்சீட்டு வாங்க முயற்சி எடுக்கிறார்கள். இந்த போதனையைச் செய்யும் வேதமும், தீர்க்கதரிசியும் உண்மையான மார்க்கத்தை பின்பற்றுபவர்களாக இருக்கமுடியுமா? நிச்சயமாக இல்லை. [75]

76.  கணவன் உடலுறவு கொள்ள அழைக்கும் போது ஒரு பெண் மறுத்தால், தேவதூதர்கள் காலைவரை அவளை சபித்துக்கொண்டே இருப்பார்கள்.

இஸ்லாம் ஆண்களின் மார்க்கம் என்றுச் சொன்னால் மிகையாகாது. ஆண்களுக்காக, ஆண்களால் உருவாக்கப்பட்ட மதம் இஸ்லாம் என்பது எவ்வளவு உண்மையாக இருக்கிறது. ஒரு பெண்ணிடம் அவளின்  கணவன் உடலுறவு கொள்ள அழைக்கும்போது அவள் சம்மதிக்கவில்லையானால், வானத்திலிருந்து தேவதூதன் வந்து அவளை சபித்துக்கொண்டே இருப்பானாம். காடுகளில் வாழும் காட்டுமிராண்டி சமுதாயத்தில் கூட இப்படிப்பட்ட போதனைகள் இருக்காது என்று நம்பலாம். தேவத்தூதர்களுக்கு வேறு வேலையே இல்லையா? உலகில் உள்ள முஸ்லிம் வீடுகளில் இரவில் என்ன நடக்கும் என்று பார்த்துக்கொண்டே இருப்பது தான் அவர்களின் வேலையா? பொதுவாகவே ஆண்கள் தங்கள் மனைவிகள் மீது ஆதிக்கம் செலுத்துபவர்கள், இந்த இலட்சணத்தில், இப்படி மதத்தை சம்மந்தப்படுத்தி தீய போதனைகள் செய்தால், ஆண்களுக்கு சொல்லவா வேண்டும்? இதனால் தான் இஸ்லாமிய சமுதாயம் இன்னும் உருப்படாமல் பிந்தங்கியே இருக்கிறது. ஆண்களில் சரி பாதியாக இருக்கும் பெண்களை இழிவுப்படுத்தினால், நம்மை நாமே அழித்துக் கொள்வதற்கு  சமம் ஆகும். மேலும், பலதார திருமணம், அடிமைகளுடன் விபச்சாரம் புரிவது, அல்லாஹ் சொர்க்கத்தில் பெண்களை தயார் படுத்தி வைப்பது என்று முஹம்மது அனேக தீய விஷயங்களை சட்டங்களாக மாற்றி போதனைகள் செய்துள்ளார். இப்படி  பெண்களுக்கு எதிராக போதனை செய்த முஹம்மது ஒரு கள்ள நபி என்று கிறிஸ்தவர்கள் நம்புவது சரியே! [76]

77. இரட்சிப்பின் நிச்சயம் இல்லாத இறைத்தூதரை இரட்சிக்கப்பட்டவர்கள் நம்புவது எப்படி?

ஒரு மனிதன் இயேசுவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டால் அவனுக்கு கிடைக்கும் முதல் நம்பிக்கை, தன்னை தேவன் தம் பிள்ளையாக ஏற்றுக்கொண்டார் என்பதாகும். மேலும் தாம் மரித்தால் நிச்சயமாக தேவனுடைய பிரசன்னம் இருக்கும் பரலோகத்தில் செல்வோம் என்ற நிச்சயமாகும். இது ஒவ்வொரு கிறிஸ்தவ விசுவாசிக்கும் இருக்கும் நம்பிக்கையாகும். ஆனால், இந்த நம்பிக்கை முஹம்மதுவிற்கு இல்லை. தன்னை அல்லாஹ் நரகத்தில் இருக்கச் செய்துவிடுவாரோ என்று முஹம்மது பயந்து நடுங்கியுள்ளார். முஹம்மது "என்னை நரகம் நெருங்கி வந்தது. (எந்த அளவுக்கென்றால்) நான், 'இறைவா! நானும் அவர்களுடன் (நரகவாசிகளுடன்) இருக்கப் போகிறேனோ?" என்றுச் சொல்லி பயந்துள்ளார்.  மேலும் கல்லறைகளில் கிடைக்கும் தண்டனையைப் பற்றி பயந்துவிட்டு, அல்லாஹ்விடம் தம்மை அந்த தண்டனையிலிருந்து காக்கும் படி இவர் தொடர்ச்சியாக வேண்டிக்கொண்டுள்ளார். தனக்கு அல்லாஹ்விடம் இரட்சிப்பு இல்லை என்று நடுங்கும் ஒரு நபரை எப்படி கிறிஸ்தவர்கள் தீர்க்கதரிசி என்று நம்புவார்கள்? [77]

78. இரட்டை தண்டனையை அனுபவிக்கும் பூனை

மக்களுக்கு நல்ல விஷயங்களைச் சொல்லி, அவர்களை இறைவனின் பாதையில் பயபக்தியோடு நடக்கச் செய்வது ஒரு நல்ல தீர்க்கதரிசியின் கடமையாகும். முஹம்மதுவும் நரகம் பற்றி அனேக விஷயங்களைச் சொல்லியுள்ளார். ஆனால், தன் மனதில் தோன்றிய அனைத்தையும் சொல்லியுள்ளார், அதாவது மக்கள் திருப்பி கேள்வி கேட்கமாட்டார்கள் என்ற எண்ணத்தில் தனக்கு நரகம் காட்டப்பட்டது, அதில் நான் ஒரு பெண்ணைப் பார்த்தேன். அந்தப் பெண்ணை ஒரு பூனை பிறாண்டிக்கொண்டு இருந்தது. ஏன் இப்படி அந்த பெண் பூனையால் தண்டிக்கப்படுகிறாள் என்று இவர் கேட்டபோது, தேவதூதர்கள் இவரிடம் "இந்தப் பெண் பூமியில் இருக்கும் போது, அந்த பூனையை கட்டிவைத்து, பட்டினிப்போட்டு, சாகடித்தாளாம், அதனால் அதே பூனை பிறாண்டிக்கொண்டு இருக்கிறது" என்று கூறினார்களாம். மக்களுக்கு நல்லவைகளை அறிவுரைகளாகச் சொல்வதில் தவறில்லை, ஆனால், இப்படி பொய்களைச் சொல்லக்கூடாது. முஹம்மது கூறிய சம்பவத்தில், அந்த பூனைக்கு இரண்டு தண்டனைகள் கிடைத்தது, முதலாவது அந்தப்பெண் பூனையை பட்டினிப்போட்டு சாகடித்தாள், இரண்டாவது தண்டனையாக அல்லாஹ் அந்தப்பெண்ணை தண்டிக்க, அதே பூனையை நரகத்திற்கு அனுப்பினார். அந்தப் பெண்ணுக்கு ஒரு தண்டனை, ஆனால், பூனைக்கோ இரட்டை தண்டனை.  இது அறிவுடமையாக தெரிகின்றதா? ஒருவேளை இது அந்த பூனையல்ல, வேறு ஒரு பூனை என்று யாராவது சொன்னால், இதுவும் தவறு தான். ஒரு பாவமும் அறியாத வேறு ஒரு பூனை ஏன் நரகத்தில் அப்பெண்ணை தண்டிக்கச் செய்யவேண்டும்? ஒரு தீர்க்கதரிசி இப்படி கட்டுக்கதைகளைச் சொல்வாரா? இவரையா கிறிஸ்தவர்கள் ஒரு நபி என்று நம்பவேண்டும்? இதற்கு பதிலாக  கிறிஸ்தவர்கள் முஹம்மதுவின் செயல்களைக் கண்டு சிரிப்பார்கள். [78]

79. கணுக்கால்களுக்குக் கீழே தொங்கும் வகையில் கீழங்கியை அணிகிறவர் நரகத்தில் புகுவார்.

மக்கள் பாவங்கள் செய்தால், இறைவன் அவர்களை நரகத்தில் தள்ளுவான் என்று எல்லா மதங்களிலும் போதனைகள் உண்டு. ஆனால்,  நாம் போடும் பேண்ட் அல்லது லுங்கியை கணுக்கால்களுக்கு கீழே தொங்கும் படி அணிந்தால் கூட நரகத்தில் தள்ளப்படுவோம் என்று முஹம்மது கூறியுள்ளார். அதனால் தான் இஸ்லாமியர்கள் லுங்கியையும், பேண்டையும் கணுக்காலுக்கு மேலே அணிகிறார்கள். உடையை அணியும் விதத்தைப் பொறுத்து நரகத்தில் மனிதர்கள் தள்ளப்படுவார்கள் என்றுச் சொல்வது, கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனம் தான். கணுக்காலை மூடி உடையை அணித்தால், சமுதாயத்தில் என்ன கேடு விளைந்துவிடப் போகிறது?  எவைகளை போதிக்கவேண்டும் என்ற ஒரு கட்டுப்பாடு இல்லாமல் முஹம்மது போதனை செய்துள்ளார்? பைபிள் என்ன சொல்கிறது? அநியாயக்காரர்கள், பொய்யர்கள் என்று பெரிய பட்டியலிட்டு, இந்த தீய செயல்கள் செய்பவர்கள் நரகத்தில் தள்ளப்படுவார்கள் என்று கூறுகிறது. ஆனால், கணுக்காலை மூடுவது ஒரு பெரிய பாவமா? ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த, படிப்பறிவில்லாத மனிதனின் மூளையிலிருந்து இப்படிப்பட்ட இறைச்செய்தி தான் வெளிப்படும். கிறிஸ்தவர்கள் இவரை நபி என்றுச் சொல்லமாட்டார்கள், அதற்கு பதிலாக "முஸ்லிம்கள் பாவம்" என்று முஸ்லிம்கள் மீது பரிதாபப்படுவார்கள். [79]

80. இறைமறுப்பாளனின் இரண்டு தோள் புஜங்களுக்கிடையே உள்ள தூரம் அனேக கிலோமீட்டர்கள் இருக்கும்

முஹம்மது நரகம், சொர்கம் பற்றிச் சொல்வதை யாரும் உடனே சரி பார்க்கமுடியாது. இந்த தைரியத்தில் நம்பமுடியாத விஷயங்களை சரளமாக முஹம்மது கூறியுள்ளார்.  முஹம்மது "(நரகத்தில்) இறைமறுப்பாளனின் இரண்டு தோள் புஜங்களுக்கிடையே உள்ள தூரம், துரிதமாகப் பயணிப்பவர் மூன்று நாள்கள் கடக்கும் தூரமாகும்" என்று கூறியுள்ளார். ஒரு மனிதனின் இரண்டு தோள் புஜங்களுக்கு இடையே இருக்கும் தூரம் அனேக கிலோ மீட்டர்கள் இருக்கும் என்று இவர் கூறுகிறார். கடந்த 14 நூற்றாண்டுகளாக இதையும் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள் முஸ்லிம்கள். ஒரு ஆரோக்கியமுள்ள மனிதன் துரிதமாக நடந்தால், ஒரு மணிக்கு குறைந்த பட்ச வேகமாகிய 5 கிலோமீட்டர் என்று கணக்கிட்டால், 8 மணி நேரம் நடந்தால் அவன் 40 கிலோ மீட்டர் தொலைவை கடக்கமுடியும். மூன்று நாட்களை கணக்கில் கொண்டால், 40 x 3 = 120 கிலோ மீட்டர். ஒரு மனிதனின் ஒரு புஜத்திற்கும், அடுத்த புஜத்திற்கும் இடையே இருக்கும் தூரம் 120 கிலோ  மீட்டர் இருக்குமா? அறிவுள்ளவர்கள் சிந்திக்கட்டும். முஹம்மது குதிரையில் அல்லது ஒட்டகத்தில் பயணிப்பவர் பற்றி சொல்லியிருக்கக்கூடும். இப்படி  ஒரு குதிரையில் செல்பவன் கடக்கும் தூரத்தை கணக்கிட்டால், என்னவாகும் இந்த கணக்கு?  எங்கேயோ போகும். இப்படியெல்லாம் புதுமையான பொய்களைச் சொல்லி முஹம்மது தன் மார்க்க மக்களை குஷி படுத்தியுள்ளார். இவரை கிறிஸ்தவர்கள் நபி என்றுச் சொல்லமாட்டார்கள். [80]

அடிக்குறிப்புக்கள்:

அனைத்து குர்-ஆன் வசனங்கள் "முஹம்மது ஜான்" குர்-ஆன் தமிழாக்கத்திலிருந்து எடுக்கப்பட்டதாகும்.

[71] ஸஹீஹ் புகாரி எண் 5590 & 5863

5590. அப்துர் ரஹ்மான் இப்னு ஃகன்கி அல்அஷ்அரீ(ரஹ்) கூறினார் 

'அபூ ஆமிர்(ரலி)' அல்லது 'அபூ மாலிக் அல்அஷ்அரீ(ரலி)' என்னிடம் கூறினார்கள் - அல்லாஹ்வின் மீதாணையாக அவர்கள் என்னிடம் பொய் சொல்லவில்லை. (அவர்கள் கூறினார்) 

நான் நபி(ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன்: 

என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபசாரம் (புரிவது), (ஆண்கள்) பட்டுத் துணி (அணிவது), மது (அருந்துவது), இசைக் கருவிகள் (இசைப்பது) ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள். இன்னும் சில கூட்டத்தார் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகளை இடையன் (காலையில் மேய்த்துவிட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான். அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவி கேட்டுச்) செல்வான். அப்போது அவர்கள், 'நாளை எங்களிடம் வா' என்று சொல்வார்கள். (ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்களின் மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்துவிடுவான். (எஞ்சிய) மற்றவர்களைக் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மறுமை நாள் வரை உருமாற்றிவிடுவான். Volume :6 Book :74

5863. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். 

'தங்க மோதிரம்' அல்லது 'தங்க வளையம்', சாதாரணப் பட்டு, தடித்தப்பட்டு அலங்காரப்பட்டு, சிவப்பு மென்பட்டுத் திண்டு (மீஸரா), பட்டு கலந்த (எம்ப்திய) பஞ்சாடை, வெள்ளிப் பாத்திரம் ஆகிய ஏழு பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடை விதித்தார்கள். மேலும், நோயாளிகளை நலம் விசாரிப்பது, 'ஜனாஸா'வைப் பின்தொடர்ந்து செல்வது, தும்மியவ(ர் அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே என்று கூறுகையில் அவ)ருக்கு (யர்ஹமுகல்லாஹ் அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக என்று) பதில் சொல்வது, சலாமுக்கு பதிலுரைப்பது, விருந்து அழைப்பை ஏற்பது, சத்தியம் செய்தவர் (அதை) நிறைவேற்ற உதவிடுவது மற்றும் அநீதியிழைக்கப்பட்டவருக்கு உதவிபுரிவது ஆகிய ஏழு (நற்)செயல்களைக் கடைப்பிடிக்கும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். Volume :6 Book :77

[72] குர்-ஆன்  18:31, 22:23, 35:33, 44:51-53, 76:12, 21

ஸஹீஹ் புகாரி எண்: 5863, 886, 5838 & 5590

ஸஹீஹ் முஸ்லிம் என் 4202 & 4194

5863. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். 

'தங்க மோதிரம்' அல்லது 'தங்க வளையம்', சாதாரணப் பட்டு, தடித்தப்பட்டு அலங்காரப்பட்டு, சிவப்பு மென்பட்டுத் திண்டு (மீஸரா), பட்டு கலந்த (எம்ப்திய) பஞ்சாடை, வெள்ளிப் பாத்திரம் ஆகிய ஏழு பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடை விதித்தார்கள். மேலும், நோயாளிகளை நலம் விசாரிப்பது, 'ஜனாஸா'வைப் பின்தொடர்ந்து செல்வது, தும்மியவ(ர் அல்ஹம்துலில்லாஹ் எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே என்று கூறுகையில் அவ)ருக்கு (யர்ஹமுகல்லாஹ் அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக என்று) பதில் சொல்வது, சலாமுக்கு பதிலுரைப்பது, விருந்து அழைப்பை ஏற்பது, சத்தியம் செய்தவர் (அதை) நிறைவேற்ற உதவிடுவது மற்றும் அநீதியிழைக்கப்பட்டவருக்கு உதவிபுரிவது ஆகிய ஏழு (நற்)செயல்களைக் கடைப்பிடிக்கும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். Volume :6 Book :77

886. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 

பள்ளியின் நுழைவாயிலில் பட்டாடை ஒன்றை (விற்பனை செய்வதை) உமர்(ரலி) பார்த்தார்கள். அப்போது 'இறைத்தூதர் அவர்களே! இதை நீங்கள் விலைக்கு வாங்கி ஜும்ஆ நாளிலும் தூதுக் குழுவைச் சந்திக்கும் போதும் அணிந்து கொள்ளலாமே' என்று நபி(ஸல்) அவர்களிடம் உமர்(ரலி) கேட்டார்கள். "மறுமையில் இந்தப் பாக்கியம் அற்றவர்களின் ஆடையே இது" என்று நபி(ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்களுக்குச் சில பட்டாடைகள் வந்தன. அதில் ஓர் ஆடையை உமர்(ரலி)க்குக் கொடுத்தனர். அதற்கு உமர்(ரலி) 'பட்டாடை பற்றி வேறு விதமாக நீங்கள் கூறிவிட்டு அதை எனக்குக் கொடுக்கின்றீர்களே' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'நீர் அணிவதற்காக இதை உமக்கு நான் தரவில்லை' என்று கூறினார்கள். அந்த ஆடையை மக்காவில் இருந்த முஷ்ரிக்கான தம் சகோதரருக்கு உமர்(ரலி) வழங்கினார்கள்.

5838. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார். 

நபி(ஸல்) அவர்கள் சிவப்பு மென்பட்டு விரிப்புகளையு ('மீஸரா), 'கஸ்' வகைப்பட்டுத் துணியையும் எங்களுக்குத் தடை செய்தார்கள்.  Volume :6 Book :77

5590. அப்துர் ரஹ்மான் இப்னு ஃகன்கி அல்அஷ்அரீ(ரஹ்) கூறினார் 

'அபூ ஆமிர்(ரலி)' அல்லது 'அபூ மாலிக் அல்அஷ்அரீ(ரலி)' என்னிடம் கூறினார்கள் - அல்லாஹ்வின் மீதாணையாக அவர்கள் என்னிடம் பொய் சொல்லவில்லை. (அவர்கள் கூறினார்) 

நான் நபி(ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டேன்: 

என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்கள் விபசாரம் (புரிவது), (ஆண்கள்) பட்டுத் துணி (அணிவது), மது (அருந்துவது), இசைக் கருவிகள் (இசைப்பது) ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள். இன்னும் சில கூட்டத்தார் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகளை இடையன் (காலையில் மேய்த்துவிட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான். அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவி கேட்டுச்) செல்வான். அப்போது அவர்கள், 'நாளை எங்களிடம் வா' என்று சொல்வார்கள். (ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்களின் மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்துவிடுவான். (எஞ்சிய) மற்றவர்களைக் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மறுமை நாள் வரை உருமாற்றிவிடுவான்.  Volume :6 Book :74

ஸஹீஹ் முஸ்லிம் என் 4202 & 4194

4202. கலீஃபா பின் கஅப் அபீதிப்யான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ரலி) அவர்கள் உரை நிகழ்த்துகையில் "நீங்கள் உங்கள் (வீட்டுப்) பெண்களுக்குப் பட்டாடைகள் அணிவிக்காதீர்கள். ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "பட்டாடை அணியாதீர்கள். யார் இம்மையில் அதை அணிகிறாரோ, அவர் மறுமையில் அதை அணியமாட்டார்" என்று கூறியதாக உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டுள்ளேன்" என்றார்கள்.  Book :37

ஸஹீஹ் முஸ்லிம் எண் 4194

4194. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏழு விஷயங்களைக் கடைப்பிடிக்கும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். ஏழு செயல்களைச் செய்ய வேண்டாமென எங்களுக்குத் தடை விதித்தார்கள்.

எங்களுக்கு அவர்கள் கட்டளையிட்ட ஏழு விஷயங்களாவன:

1. நோயாளிகளை நலம் விசாரிப்பது. 2. ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்வது. 3. தும்மிய(வர் "அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்" என்று கூறினால் அ)வருக்கு ("அல்லாஹ், உங்களுக்குக் கருணை புரிவானாக!" என்று) மறுமொழி கூறுவது. 4. சத்தியத்தை நிறைவேற்றுவது அல்லது (உன்னோடு தொடர்புடைய ஒரு விஷயத்தில்) சத்தியம் செய்தவருக்கு அதை நிறைவேற்ற உதவுவது. 5. அநீதியிழைக்கப்பட்டவருக்கு உதவுவது. 6. விருந்தழைப்பை ஏற்றுக்கொள்வது. 7. (மக்களிடையே) சலாமைப் பரப்புவது.

எங்களுக்கு அவர்கள் தடை விதித்த ஏழு விஷயங்களாவன:

1. (ஆண்கள்) "பொன் மோதிரம் அணிவது" அல்லது "மோதிரங்கள் அணிவது" 2. வெள்ளிப் பாத்திரத்தில் பருகுவது. 3.மென்பட்டுத் திண்டு பயன்படுத்துவது. 4. (ஆண்கள் எகிப்தியப்) பட்டு கலந்த பஞ்சாடை அணிவது. 5. (ஆண்கள்) சாதாரணப் பட்டு அணிவது. 6. (ஆண்கள்) கெட்டிப் பட்டு அணிவது. 7. (ஆண்கள்) அலங்காரப் பட்டு அணிவது.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

- மேற்கண்ட ஹதீஸ் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில் "சத்தியத்தை நிறைவேற்றுவது, அல்லது சத்தியம் செய்தவருக்கு அதை நிறைவேற்ற உதவுவது" என்பது இடம்பெறவில்லை. அதற்குப் பகரமாக "கண்டெடுக்கப்பட்ட பொருள் பற்றி அறிவிப்புச் செய்வது" என இடம்பெற்றுள்ளது.

- மேற்கண்ட ஹதீஸ் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில், "சத்தியத்தை நிறைவேற்றுவது" என ஐயப்பாடின்றி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அவற்றில் "வெள்ளிப் பாத்திரத்தில் பருகுவது; ஏனெனில், இம்மையில் அதில் பருகியவர் மறுமையில் அதில் பருகமாட்டார்" என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

- மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஏழு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

இவற்றிலும் மேற்கண்ட ஹதீஸ்களில் உள்ள தகவல்களே இடம்பெற்றுள்ளன. ஆனால், "(மக்களிடையே) சலாமைப் பரப்புவது" என்பதற்குப் பகரமாக "சலாமுக்குப் பதிலுரைப்பது" என இடம்பெற்றுள்ளது. மேலும் "(ஆண்கள்) தங்க மோதிரம் அணிவது அல்லது "தங்க வளையம் அணிவது" என்று (ஐயத்துடன்) காணப்படுகிறது.

- மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் "சலாமைப் பரப்புவது" என்றும் "தங்க மோதிரம் அணிவது" என்றும் சந்தேகமின்றி இடம்பெற்றுள்ளது.  Book :37

[73] ஸஹீஹ் புகாரி எண்: 691

691. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

"உங்களில் ஒருவர் தொழுகையில் இமாமை முந்தித் தம் தலையை உயர்த்துவதால் அவரின் தலையைக் கழுதையுடை தலையாகவோ அல்லது அவரின் உருவத்தைக் கழுதையுடைய உருவமாகவோ அல்லாஹ் ஆக்கி விடுவதை அஞ்ச வேண்டாமா?." என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். Volume :1 Book :10

[74] குர்-ஆன் 44:54, 55:70, 72, 52:20 & ஸஹீஹ் புகாரி எண் 2799

44:54. இவ்வாறே (அங்கு நடைபெறும்); மேலும் அவர்களுக்கு ஹூருல் ஈன்களை நாம் மண முடித்து வைப்போம்.

55:70. அவற்றில், அழகு மிக்க நற் குணமுள்ள கன்னியர் இருக்கின்றனர்.

55:72. ஹூர் (என்னும் அக்கன்னியர் அழகிய) கூடாரங்களில் மறைக்கப்பட்டிருப்பர்.

52:20. அணி அணியாகப் போடப்பட்ட மஞ்சங்களின் மீது சாய்ந்தவர்களாக அவர்கள் இருப்பார்கள்; மேலும், நாம் அவர்களுக்கு, நீண்ட கண்களையுடைய (ஹூருல் ஈன்களை) மணம் முடித்து வைப்போம்.

ஸஹீஹ் புகாரி எண் 2799

2796. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

இறைவழியில் காலையில் சிறிது நேரம் அல்லது, மாலையில் சிறிது நேரம் (போர் புரியச்) செல்வது உலகத்தையும் அதிலுள்ள பொருட்களையும் விடச் சிறந்தது. உங்களில் ஒருவரின் வில்லின் அளவுக்குச் சமமான, அல்லது ஒரு சாட்டையளவுக்குச் சமமான (ஒரு முழம்) இடம் கிடைப்பது உலகத்தையும் அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்தது. சொர்க்கவாசிகளில் (ஹூருல் ஈன்களில்) ஒரு பெண், உலகத்தாரை எட்டிப் பார்த்தால் வானத்திற்கும் பூமிக்குமிடையே உள்ள அனைத்தையும் பிரகாசமாக்கி விடுவாள்; பூமியை நறுமணத்தால் நிரப்பி விடுவாள். அவளுடைய தலையிலுள்ள முக்காடோ உலகத்தையும் அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்ததாகும்.  என அனஸ்(ரலி) அறிவித்தார். Volume :3 Book :56

[75] குர்-ஆன் 44:54, 55:70, 72, 52:20 & ஸஹீஹ் புகாரி எண் 3254

44:54. இவ்வாறே (அங்கு நடைபெறும்); மேலும் அவர்களுக்கு ஹூருல் ஈன்களை நாம் மண முடித்து வைப்போம்.

55:70. அவற்றில், அழகு மிக்க நற் குணமுள்ள கன்னியர் இருக்கின்றனர்.

55:72. ஹூர் (என்னும் அக்கன்னியர் அழகிய) கூடாரங்களில் மறைக்கப்பட்டிருப்பர்.

52:20. அணி அணியாகப் போடப்பட்ட மஞ்சங்களின் மீது சாய்ந்தவர்களாக அவர்கள் இருப்பார்கள்; மேலும், நாம் அவர்களுக்கு, நீண்ட கண்களையுடைய (ஹூருல் ஈன்களை) மணம் முடித்து வைப்போம்.

3254. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

சொர்க்கத்தில் முதலாவதாக நுழையும் அணியினர் பெளர்ணமி இரவின் சந்திரனைப் போன்று தோற்றமளிப்பார்கள். (அடுத்து) அவர்களின் சுவடுகளைப் பின்தொடர்ந்து சொர்க்கத்தினுள் நுழைபவர்கள், வானத்தில் நன்கு ஒளி வீசிப் பிரகாசிக்கும் நட்சத்திரத்தைப் போன்று (பிரகாசமாகவும் அழகாகவும்) இருப்பார்கள். அவர்களின் உள்ளங்கள் ஒரே மனிதரின் உள்ளத்தைப் போன்றிருக்கும். அவர்களுக்கிடையே பரஸ்பர வெறுப்போ, பொறாமையோ இருக்காது. ஒவ்வொரு மனிதருக்கும் 'ஹூருல் ஈன்' எனப்படும் அகன்ற (மான் போன்ற) விழிகளையுடைய மங்கையரிலிருந்து இரண்டு மனைவிமார்கள் இருப்பார்கள். அவர்களின் கால்களின் எலும்பு மஜ்ஜைகள் (காலின்) எலும்புக்கும் சதைக்கும் அப்பாலிருந்து வெளியே தெரியும்.  Volume :3 Book :59

[76] ஸஹீஹ் முஸ்லிம் எண்கள்: 2829 & 2830 

2829. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு பெண் (தாம்பத்தியத்தைப் பகிர்ந்து கொள்ள மறுத்து) தன் கணவனின் படுக்கையை வெறுத்து (தனியாக) இரவைக் கழித்தால், பொழுது விடியும்வரை அவளை வானவர்கள் சபித்துக்கொண்டிருக்கின்றனர்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

- மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில், "அவள்(கணவனின் படுக்கைக்குத்) திரும்பும்வரை (சபிக்கின்றனர்)" என இடம் பெற்றுள்ளது. Book : 16

2830. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! ஒருவர் தம் மனைவியை அவளது படுக்கைக்கு அழைத்து, அவள் அவருக்கு (உடன்பட) மறுத்தால் வானிலுள்ளவன் அவள் மீது கோபம் கொண்டவனாகவே இருக்கிறான்; அவள்மீது கணவன் திருப்தி கொள்ளும்வரை. Book : 16

[77] ஸஹீஹ் புகாரி எண் 2364 & 1372, 1373, 1376 & 4707 (பார்க்க காரணம் [39])

2364. அஸ்மா பின்த்து அபீ பக்ர்(ரலி) அறிவித்தார். 

நபி(ஸல்) அவர்கள் சூரிய கிரகணத் தொழுகை தொழுதார்கள்; பிறகு சொன்னார்கள்: என்னை நரகம் நெருங்கி வந்தது. (எந்த அளவுக்கென்றால்) நான், 'இறைவா! நானும் அவர்களுடன் (நரகவாசிகளுடன்) இருக்கப் போகிறேனோ?' என்று (மருண்டு போய்க்) கேட்டேன். அப்போது (நரகத்தில்) ஒரு பெண் இருந்தாள். அந்தப் பெண்ணைப் பூனை ஒன்று (தன் நகங்களால்) பிறாண்டிக் கொண்டிருந்தது. 'இவளுக்கு என்ன ஆயிற்று? (இவள் ஏன் இப்படி வேதனைப்படுத்தப்படுகிறாள்?)" என்று கேட்டேன். அதற்கு (அங்கிருந்த வானவர்கள்), 'இந்தப் பூனையை, அது பசியால் வாடிச் செத்துவிடும் வரை இந்தப் பெண் கட்டி வைத்திருந்தாள்" என்று பதிலளித்தனர். 

இந்த அறிவிப்பின் இடையே, 'அந்தப் பெண்ணைப் பூனை ஒன்று பிறாண்டிக் கொண்டிருந்தது' என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று நான் நினைக்கிறன்" என அஸ்மா பின்த்து அபீ பக்ர்(ரலி) கூறினார்.  Volume :2 Book :42

ஸஹீஹ் புகாரி எண்கள் 1372, 1373, 1376 & 4707

1372. மஸ்ரூக் அறிவித்தார்.

ஒரு யூதப் பெண் ஆயிஷா(ரலி) அவர்களிடம் வந்து மண்ணறை வேதனை பற்றிக் கூறிவிட்டு, 'அல்லாஹ் உங்களை மண்ணறை வேதனையைவிட்டும் பாதுகாப்பாளனாக' என்றும் கூறினாள். பிறகு மண்ணறை வேதனை பற்றி ஆயிஷா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் கேட்டபோது நபி(ஸல்) அவர்கள், 'ஆம் மண்ணறை வேதனை உள்ளது" எனக் கூறினார்கள்.

ஆயிஷா(ரலி) அறிவித்தார். 'அதற்குப் பிறகு நபி(ஸல்) அவர்கள் தாம் தொழுகிற தொழுகைகளில் மண்ணறை வேதனையிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புத் தேடாமல் இருந்தேயில்லை'. Volume :2 Book :23

1373. அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்.

ஒரு முறை நபி(ஸல்) அவர்கள் உரையாற்றும்போது, மண்ணறையில் மனிதன் அனுபவிக்கும் சோதனையைப் பற்றிக் கூறினார்கள். அவ்வாறு கூறிக்கொண்டிருக்கும்போது முஸ்லிம்கள் (அச்சத்தால்) கதறிவிட்டார்கள். Volume :2 Book :23

1376. மூஸா இப்னு உக்பா அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மண்ணறை வேதனையைவிட்டுப் பாதுகாப்புத் தேடியதைத் தாம் செவியுற்றதாக காலித் இப்னு ஸயீத்(ரலி) உடைய மகள் கூறுகிறார். Volume :2 Book :23

[78] ஸஹீஹ் புகாரி எண் 2364, 745, 2365 & 3842

2364. அஸ்மா பின்த்து அபீ பக்ர்(ரலி) அறிவித்தார். 

நபி(ஸல்) அவர்கள் சூரிய கிரகணத் தொழுகை தொழுதார்கள்; பிறகு சொன்னார்கள்: என்னை நரகம் நெருங்கி வந்தது. (எந்த அளவுக்கென்றால்) நான், 'இறைவா! நானும் அவர்களுடன் (நரகவாசிகளுடன்) இருக்கப் போகிறேனோ?' என்று (மருண்டு போய்க்) கேட்டேன். அப்போது (நரகத்தில்) ஒரு பெண் இருந்தாள். அந்தப் பெண்ணைப் பூனை ஒன்று (தன் நகங்களால்) பிறாண்டிக் கொண்டிருந்தது. 'இவளுக்கு என்ன ஆயிற்று? (இவள் ஏன் இப்படி வேதனைப்படுத்தப்படுகிறாள்?)" என்று கேட்டேன். அதற்கு (அங்கிருந்த வானவர்கள்), 'இந்தப் பூனையை, அது பசியால் வாடிச் செத்துவிடும் வரை இந்தப் பெண் கட்டி வைத்திருந்தாள்" என்று பதிலளித்தனர். 

இந்த அறிவிப்பின் இடையே, 'அந்தப் பெண்ணைப் பூனை ஒன்று பிறாண்டிக் கொண்டிருந்தது' என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள் என்று நான் நினைக்கிறன்" என அஸ்மா பின்த்து அபீ பக்ர்(ரலி) கூறினார். Volume :2 Book :42

[79] ஸஹீஹ் புகாரி எண் 5787

5787. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

கணுக்கால்களுக்குக் கீழே தொங்கும் (வகையில்) கீழங்கி(யை அணிகிறவர்) நரகத்தில் (புகுவார்). என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.  Volume :6 Book :77

[80] ஸஹீஹ் புகாரி எண் 6551

6551. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

(நரகத்தில்) இறைமறுப்பாளனின் இரண்டு தோள் புஜங்களுக்கிடையே உள்ள தூரம், துரிதமாகப் பயணிப்பவர் மூன்று நாள்கள் கடக்கும் தூரமாகும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.  Volume :7 Book :83

பாகம் 9ஐ படிக்க சொடுக்கவும்

உமரின் இதர கட்டுரைகள்


© Answering Islam, 1999 - 2013. All rights reserved.


--
2/08/2014 07:23:00 பிற்பகல் அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது


இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்