இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Wednesday, March 5, 2014

Fwd: [ஈஸா குர்-ஆன் - Isa Koran] 2013 ரமளான் நாள் 7 – இஸ்லாமிய தாவா அழைப்பிதழ் - நீ இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், இறைத்தூதர் உன்னை கொல்லமாட்டார்

 
2013 ரமளான் நாள் 7 – இஸ்லாமிய தாவா அழைப்பிதழ்
 நீ இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், இறைத்தூதர் உன்னை கொல்லமாட்டார்


முஹம்மது புரிந்த வழிப்பறி கொள்ளைகள் அனைத்தும் இந்த மாதத்தில் பதிவு செய்யவேண்டும் என்பதால், இவைகள் பற்றி மட்டுமே எழுதுகிறேன். எதிர் காலத்தில் தமிழர்களுக்கு இக்கட்டுரைகள் ஒரு சிறிய கையேடாக பயன்படவேண்டும்.


இந்த பக்கத்தை ஒரு முறை பார்வையிடுங்கள். முஹம்மது புரிந்த 100 கொள்ளைகள்/போர்கள்/கொலைகள் என்று பட்டியல் தொடர்கிறது.


உங்களில் யாராவது, இந்த தொடுப்பில் உள்ள ஏதாவது ஒரு விவரத்தை எடுத்துக்கொண்டு,  நான்கு அல்லது ஐந்து பக்கங்களுக்குள் கட்டுரைகளை எழுதி அனுப்புங்கள். நான் அவைகளை ரமளான் தொடர் கட்டுரையாக பதிக்கிறேன். 

முதல் 10 வழிப்பறி கொள்ளைகளை விட்டுவிடுங்கள், நான் அவைகளை பதித்துக்கொண்டு இருக்கிறேன்.

இந்த முறை 30 கட்டுரைகளை பதிக்கமுடியுமோ முடியாதோ எனக்கு சந்தேகமாக உள்ளது. எத்தனை கட்டுரைகளை நம்மால் பதிக்க முடியுமோ அத்தனை கட்டுரைகளை நாம் பதிப்போம். கர்த்தருக்கு மகிமை உண்டாகட்டும்.


---------- Forwarded message ----------
From: Isa Koran <isa.koran@gmail.com>
Date: 2013/7/24
Subject: [ஈஸா குர்-ஆன் - Isa Koran] 2013 ரமளான் நாள் 7 – இஸ்லாமிய தாவா அழைப்பிதழ் - நீ இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், இறைத்தூதர் உன்னை கொல்லமாட்டார்
To: isa.koran@gmail.com


2013 ரமளான் நாள் 7 – இஸ்லாமிய தாவா அழைப்பிதழ்
 நீ இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், இறைத்தூதர் உன்னை கொல்லமாட்டார்

முந்தைய ஆறு தொடர் கட்டுரைகளை கீழேயுள்ள தொடுப்புகளை சொடுக்கி படிக்கலாம்: 2013 ரமளான் நாள் 1, நாள் 2, நாள் 3, நாள் 4, நாள் 5 & நாள் 6.

ஏழாவது தொடர் கட்டுரையை இப்போது படிப்போம்.

அன்பான தம்பிக்கு, 

உன் அண்ணன் எழுதும் கடிதம். நலம் நலமறிய ஆவல்.

இந்த ரமளான் மாதத்தில் ஒரு அருமையான தலைப்பை எனக்கு எடுத்து கொடுத்ததினால், உனக்கு நான் நன்றி செலுத்துகிறேன்.  இந்த கடிதத்தில் எட்டாவது வழிப்பறி கொள்ளை பற்றி மிகவும் சுருக்கமாக எழுதலாம் என்று விரும்புகிறேன். இஸ்லாம் அமைதி மார்க்கம் என்று இஸ்லாமியர்கள் மிகவும் அழுத்தம் திருத்தமாகச் சொன்னாலும், இஸ்லாமிய சரித்திரம் அவர்களின் முகங்களில் கரியை பூசி விடுகின்றது. இந்த எட்டாவது வழிப்பறி கொள்ளையிலும் இது தான் நடந்தது.

எட்டாவது வழிப்பறி கொள்ளை: "நஜ்து" (Nejd Raid) 

குறைஷிகள் ஒரு புதிய வழியின் மூலமாக தங்கள் வியாபாரிகளை அனுப்பினார்கள், இதனை அறிந்த முஹம்மது, 100 பேரை அனுப்பி, அவர்களை கொள்ளையிட்டார். இதில் ஒரு லட்சம் திர்ஹம் மதிப்புள்ள பொருட்களை கொள்ளையிட்டார்கள். முஹம்மதுவிற்கு ஐந்தில் ஒரு பாகம் (20 ஆயிரம் திர்ஹம்) தரப்பட்டது, மூதமுள்ளதை சண்டைடயிட்டவர்களுக்கு பகிர்ந்து தரப்பட்டது. (என்னே பொருளாதாரம்! இப்படி வாரி வாரி வழங்கினால், யார் தான் சண்டைக்கு போகமாட்டேன் என்பான்?)

இதில் முக்கியமான நிகழ்ச்சி என்னவென்றால், இவர்கள் கைது செய்த "ஃபுர்ராத் இப்னு ஹய்யான்" என்பவருக்கு முஹம்மது கொடுத்த விடுதலையாகும். எப்படி ஒரு கைதியை முஹம்மது விடுதலை செய்தார்? தெரிந்துக்கொள்ள மேற்கொண்டு படிக்கவும்.

1) 'The Sealed Nectar' புத்தக ஆசிரியரின் வஞ்சகம்:

இந்த நஜ்து வழிப்பறி பற்றி மேற்கண்ட புகழ்பெற்ற புத்தகத்தின் ஆசிரியர் அல்லது ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தவர் கீழ்கண்டவாறு எழுதுகிறார். (இந்த புத்தகம் "முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு தலைப்பில், உலக புத்தக போட்டியில் முதலிடம் பெற்றது").

The caravan was carrying silver and wares whose value amounted to 100 thousand dirhams. The booty was distributed among the Muslim warriors after one- fifth had been set aside for the Prophet [pbuh]. Furat bin Haiyan embraced Islam out of his own sweet free will.[Ibn Hisham 1/50,51; Fiqh As-Seerah p.190; Rahmat-ul-lil'alameen 2/219] (The Sealed Nectar, Page No: 153)

[ஃபுர்ராத் என்பவர் சுய விருப்பத்தின் படியே இஸ்லாமை தழுவினாராம் – இது தான் மிகப்பெரிய பொய்]

2) இந்த புத்தகத்தை தமிழில் "ரஹீக்" என்ற பெயரில் மொழியாக்கம் செய்யப்பட்டது. தமிழில் எப்படி இதனை விவரிக்கிறார் என்பதை பாருங்கள்:

நபி (ஸல்) அவர்கள் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினார்கள். 100 பேர் கொண்ட வாகனப் படையை ஜைது இப்னு ஹாஸாவின் தலைமையின் கீழ் குறைஷிகளைத் தாக்க அனுப்பி வைத்தார்கள். ஜைது (ரழி) தங்களது வீரர்களுடன் விரைந்து சென்று, நஜ்து மாநிலத்தில் ~கர்தா| என்ற இடத்தின் நீர் தேக்கத்திற்கு அருகில் அந்த வியாபாரக் கூட்டம் தங்கியிருந்த போது திடீரென அதன் மீது தாக்குதல் நடத்தி வியாபாரப் பொருட்களை கைப்பற்றினார்கள். ஸஃப்வானும் அக்கூட்டத்தைப் பாதுகாப்பதற்காக வந்திருந்த வீரர்களும் எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் உயிர் பிழைத்தால் போதும் என்று தப்பித்து ஓடினர்.

முஸ்லிம்கள் இக்கூட்டத்திற்கு வழிகாட்டியாக வந்த ஃபுர்ராத் இப்னு ஹய்யானைக் கைது செய்தனர். சிலர், 'இவரையன்றி மேலும் இருவரையும் முஸ்லிம்கள் கைது செய்தனர்" என்றும் கூறுகின்றனர். முஸ்லிம் வீரர்கள் இந்த வியாபாரக் கூட்டத்திடமிருந்த பாத்திரங்கள் மற்றும் வெள்ளிகளை வெற்றிப் பொருளாக எடுத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் திரும்பினார்கள். இவர்கள் கொண்டு வந்த பொருட்களின் மதிப்பு ஒரு லட்சம் திர்ஹம் ஆகும். நபி (ஸல்) ஐந்தில் ஒரு பங்கை ஒதுக்கிவிட்டு மற்ற அனைத்தையும் அதில் கலந்துகொண்ட வீரர்களுக்குப் பங்கு வைத்துக் கொடுத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் முன்னிலையில் ஃபுராத் இஸ்லாமைத் தழுவினார்.
(ரஹீக் பக்கம் 252) 

ஆங்கிலத்தில் "Furat bin Haiyan embraced Islam out of his own sweet free will" என்று ஆசிரியர் எழுதுகிறார்.

தமிழில் "நபி (ஸல்) அவர்கள் முன்னிலையில் ஃபுராத் இஸ்லாமைத் தழுவினார்." என்று எழுதுகிறார்.

ஆனால், இஸ்லாமிய சரித்திர ஆசிரியர் தபரி மற்றும் இப்னு ஹிஷாம் என்ன கூறியுள்ளார்கள்:

According to Tabari, he was told "If you accept Islam, the Messenger of God will not kill you" (according to Tabari's version of the event),[5] he accepted Islam out of his own free will, and was allowed to go free according to Ibn Hisham.[6]

கழுத்து பக்கத்தில் கத்தி வைத்து, இஸ்லாமை ஏற்றுக்கொள்வாயா இல்லையா? என்று கேட்டால், உயிர் பயம் உள்ளவன் என்ன முடிவு எடுப்பான்:

கைதியாக பிடிபட்ட "ஃபுர்ராத்" என்பவரிடம், "நீ இஸ்லாமை ஏற்றுக்கொள், இல்லையானால் இறைத்தூதர் உன்னை கொன்றுவிடுவார்" என்று முஸ்லிம்கள் கூறினார்கள்.  [இப்படி கேட்க முஸ்லிம்களுக்கு கேவலாக தென்படவில்லை? இப்படி மற்றவர்களை பயமுறுத்தி முஸ்லிமாக மாற்றுவதை விட,. . . . . தம்பி இதற்கு மேலே என்ன சொல்லவேண்டும் என்று எனக்கு தெரியவில்லை.] 

உயிருக்கு பயந்த "ஃபுர்ராத்" என்பவர் என்னசெய்வார்? நான் இஸ்லாமை ஏற்கமாட்டேன் என்றுச் சொல்லி மரிக்க தயாராக இருப்பாரா? அல்லது "ஆம் நான் இஸ்லாமியனாக மாறுகிறேன்" என்றுச் சொல்லி உயிர் தப்பிச் செல்வாரா?

ஒரு புத்திசாலியான மனிதன், தன் உயிரை காப்பாற்றிக்கொள்ள என்ன முடிவு எடுப்பாரோ அதே முடிவைத்தான் இவரும் எடுத்துள்ளார்.   அதாவது அல்லாஹ்வின் மார்க்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார், இதனால் விடுதலை அடைந்தார், புத்திசாலியான மனிதன் இவர்.

இந்த விவரங்களை அப்படியே எழுதினால், இஸ்லாமின் மானம் மரியாதை காற்றில் பறந்துவிடும் என்பதால், இஸ்லாமியரல்லாதவர்கள் கேவலமாக பேசுவார்கள் என்பதால் மேற்கண்ட புத்தகத்தை எழுதியவர்கள், மொழியாக்கம் செய்தவர்கள், மிகப்பெரிய உண்மையை மறைத்து பொய்யை எழுதியுள்ளார்கள். இஸ்லாமை இப்படி பொய் சொல்லித்தான் காப்பாற்றவேண்டுமா? வெட்கக்கேடு, மானக்கேடு.

தம்பி, இந்த கடிதத்தின் ஆரம்பத்தில் நான் எழுதியது போல, "இஸ்லாம் அமைதி மார்க்கம்" என்று முஸ்லிம்கள் என்ன தான் கூக்குரல் இட்டு கும்மாளம் போட்டாலும், இஸ்லாமிய சரித்திரம், அவர்களின் கூக்குரலை அடக்கிவிடுகின்றது. 

தம்பி, இஸ்லாம் ஒரு அராஜக மார்க்கமாகும்.
இஸ்லாம் ஒரு வன்முறையினால் பரவின மார்க்கமாகும்.
முஹம்மது வன்முறையினால் தான் இஸ்லாமை பரப்பினார்.
இஸ்லாம் மக்களை பயமுறுத்தி இஸ்லாமியர்களாக மாற்றும் மதமாகும்.

இதற்கு யாராவது மறுப்பு கூறமுடியுமா? 
தம்பி, உன்னைத் தான் கேட்கிறேன், மனசாட்சியோடு சிந்தித்துப்பார். 

உன்னை அடுத்த கடிதத்தில் (அடுத்த வழிப்பறி கொள்ளை நிகழ்ச்சியோடு)  சந்திக்கிறேன்.

உன் பதில் கடிதத்துக்காக காத்துக்கொண்டு இருக்கும் உன் அண்ணன். 
உமர்.



--
7/24/2013 10:38:00 PM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது


இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்