புதுவிதமான யானைக் கதை
1. குர்ஆன் 105ம் அதிகாரம் "யானை".
Quote: |
(நபியே!) யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? (105:1) அவர்களுடைய சூழ்ச்சியை அவன் பாழாக்கி விடவில்லையா? (105:2) மேலும், அவர்கள் மீது பறவைகளைக் கூட்டங் கூட்டமாக அவன் அனுப்பினான். (105:3) சுடப்பட்ட சிறு கற்களை அவர்கள் மீது அவை எறிந்தன. (105:4) அதனால், அவர்களை மென்று தின்னப்பட்ட வைக்கோலைப் போல் அவன் ஆக்கி விட்டான். (105:5). |
சிறு குறிப்பு: யெமன் என்ற நாட்டில் (எத்தியோப்பியா) ஒரு பெரிய சர்ச் அதாவது கிறிஸ்தவ சபையை ஒரு அரசன் அப்ரஹா கட்டினானாம், எல்லாரும் அவ்விடம் வந்து தொழுதுக் கொள்ள கட்டாயப்படுத்தினானாம், இன்னும் அனேக செயல்களைச் செய்தானாம். மக்காவிலிருந்து ஒரு மனிதன், அந்த சர்சை அசுசிப்படுத்தி, கெடுத்துவிட்டானாம், அதற்காக காபாவை அழிப்பதற்காக, யெமன் என்ற நாட்டிலிருந்து, அப்ரஹா என்பவர் பல யானைகளோடு, 60,000 ஆயிரம் இராணுவத்தோடு மக்காவிற்கு வந்தாராம், அப்போது காபாவை காப்பாற்ற அல்லாஹ், பறவைகளை அனுப்பி, சூடான கற்களை அவர்கள் மீது எரிந்து கொன்றாராம்.(http://www.al-islam.org/lifeprophet/4.htm)
2. கிறிஸ்தவர் கேட்டார் என்று முன்வைக்கப்பட்ட கேள்வி:
Quote: |
கேள்வி: 1400 ஆண்டுகளுக்கு முன்பு அரேபியாவில் யானைகள் ஏதும் இல்லை என்று கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள். எத்தியோபாவிலும் கூட யானைகள் ஏதும் இல்லை என்று கூறுகிறார்கள். இப்படியிருக்கும் நிலையில் அவர் கூற முயற்சிப்பது 'அலம் தர கைஃப பஅல ரப்புக பி அஸ்ஹாபில் ஃபீல்' என்ற குர்ஆன் வசனத்தை பொய் என்று கூற முயல்கிறார். ஏன் என்றால் அந்த நாட்களில் யானை இருந்தது என்று கூறுவதற்கு ஆதாரம் இல்லை என்று கூறுகிறார். |
இந்த கேள்வியை சிறிது மாற்றி கேட்டு இருக்கவேண்டும். யானைகள் அக்காலத்தில் உலகில் எங்கும் இல்லை என்பது சரியாகாது, இந்நாடுகளில் (எத்தியோப்பியாவில்) மனிதர்கள் யானைகளை பயன்படுத்தினார்களா? அல்லது குறைந்த பட்சம் போரிலாவது பயன்படுத்தினார்களா? என்று கேட்டு இருக்கவேண்டும்.
3. முஹம்மதுவின் காலத்தில் எத்தியோப்பியாவில் யானைகளை போரில் பயன்படுத்தினார்களா?
யானைகள் ஆப்ரிக்காவில் இருந்திருக்கும், ஆனால் மனிதன் தன் தேவைக்கு பயன்படுத்தினானா? என்பது தான் கேள்வி?
முஹம்மதுவின் காலத்தில் எத்தியோப்பியாவில்(ஆப்ரிக்காவில்) யானைகளை மனிதன் பயிற்சி கொடுத்து பயன்படுத்தவில்லை என்று எத்தியோப்பிய பல்கலைக் கழக பேராசியர்கள் கூறியுள்ளார்கள்.
Quote: |
The Problem There is only one problem. Elephants in Africa, including Ethiopia, were never domesticated and used by humans. By "Never", I mean throughout history. I came to know this fact through talking with three Ethiopian university professors. True, elephants were and still are domesticated and used for labor in Southeast Asia, but never in Africa. Source: http://www.islam-watch.org/Kammuna/Quran-Sura-Alfeel-A-Myth.htm |
4. குர்ஆன் சொல்வது போல, யானைகளோடு அப்ரஹா மன்னார் வந்ததாக நினைத்தாலும் கீழ் கண்ட பிரச்சனைகள் புதிதாக உருவாகின்றன.
4.1 யெமன் நாட்டிலிருந்து மெக்காவிற்கு இடையே உள்ள தூரம் : 500 மைல்கள்
குர்ஆன் சொல்வது போல, யானைகளோடு அப்ரஹா அரசர் வந்தார் என்ற விவரம் மற்றும் அல்லா பறவைகள் மூலமாக அவர்களை விரட்டியடித்தார் என்பதை ஏற்றுக்கொண்டால், பல பிரச்சனைகள் வருகின்றன. யெமன் நாட்டிலிருந்து மெக்காவிற்கு நேர்க்கோட்டில் தூரத்தை கணக்கெடுத்தால் 500 மைல்கள் இருக்கின்றன, அதாவது, 800 கிலோமீட்டர் தூரம் உள்ளது. காடு மலைகள், போன்றவற்றிலும் நடந்து நேரடியாக வந்தால் தான் இவ்வளவு தூரம் இருக்கும், ஆனால், தடைகளை சுற்றி வரவேண்டுமானால் இன்னும் தூரம் அதிகமாகும்.
Miles: 507.97
Kilometers: 817.47
Source: http://www.mapcrow.info/Distance_between_Sanaa_YM_and_Mecca_SA.html
இதனை கவனத்தில் கொண்டு அடுத்த விவரத்தை படிக்கவும்.
4.2 எத்தனை யானைகளோடு, இராணுவத்தோடு மெக்காவிற்கு வந்தார்?
அப்ரஹா மன்னர் 9 அல்லது 13 யானைகளோடும், 60,000
இராணுவத்தோடும் மக்காவிற்கு வந்தாராம்.
Quote: |
So, in 570 or 571 A. D., he took 60,000 troops and 13 elephants (according to another tradition, 9 elephants) and set off for Makkah. Source : Syed Maududi's Commentary for Surah #105 http://www.islamicity.com/Mosque/QURAN/maududi/mau105.html |
இந்த விவரத்தையும், கவனத்தில் கொண்டு அடுத்த விவரத்தை படிக்கவும்.
4.3 யானைகளின் தேவைகளாகிய உணவு, தண்ணீர், பயணிக்கும் தன்மைகள் பற்றிய குறிப்பு:
இப்போது யானைகள் பற்றிய விவரங்களை கவனிப்போம்.
ஒரு ஆரோக்கியமான யானை தினமும்:
• 189 லிட்டர் (50 gallons) தண்ணீர் குடிக்கும். (http://www.jstor.org/pss/294124 )
• உணவு கிடைக்காத பட்சத்தில், உணவிற்காக ஒரு நாளுக்கு 50 மைல்கள் ஒரு யானை பயணிக்குமாம். (http://www.sandiegozoo.org/wordpress/default/how-far-do-elephants-walk-in-one-day/)
• 300 லிருந்து 350 Pound(159 Kilograms) அளவுள்ள உணவை ஒரு யானை ஒரு நாளுக்கு உண்ணுமாம்.( http://www.jstor.org/pss/294124)
• யானைகள் ஒரு நாளில் 16 மணி நேரம் சாப்பிடுவதற்கு செலவிடுமாம்.( http://en.wikipedia.org/wiki/Elephant)
• யானைகளின் உடலில் வியர்வை சுரப்பிகள் இருப்பதில்லை, எனவே, தங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க, அவைகள் சேறு மற்றும் தண்ணீர் உள்ள இடங்களில் அதிக நேரம் செலவழித்து, சேற்றை வாறி தங்கள் உடல்களில் போட்டுக் கொள்கின்றன.
4.4 யெமனிலிருந்து மெக்காவிற்கு வர ஒரு யானையின் தேவை:
யெமனிலிருந்து மெக்காவிற்கு நேர்க்கோட்டிலேயே பயணம் செய்ததாக நாம் கற்பனை செய்துக் கொண்டாலும், 500 மைல்கள் கடக்கவேண்டும், அப்படியானால்:
ஒரு நாளுக்கு 50 மைல்கள் ஒரு யானை பயணித்தால், 500 மைல்களை
கடக்க 10 நாட்கள் ஆகும். அதாவது :
தண்ணீர்: 189* 10 = 1890 லிட்டர் தேவை
உணவு: 159 * 10 = 1590 பவுண்ட்கள் தேவை
[16 மணி நேரம் உணவிற்காக மட்டும் யானை செல்வழித்தால், இவ்வளவு
தூரம் (50 Miles) செல்லமுடியாது, அதே நேரத்தில் தன்னை குளிர்ச்சியாக்கிக் கொள்ள பாலைவனத்தில் யானைக்கு வசதி இருக்காது. இதனால், தொடர்ந்து போகமுடியாமல், 500 மைல்கள் கடக்க 10 நாட்கள் அல்ல அதற்கும் அதிகமாகவே தேவைப்படும். அதுவும் விமானம் போல, நேர்க்கோட்டில் பயணித்தால் தான், மேடு பள்ளங்களை சுற்றிச் செல்லவேண்டுமானால், பாலைவன மணலில் செல்லவேண்டுமானால், இன்னும் கால தாமதம் ஆகும். அந்த அரசனோடு வந்த இராணுவனும் யானைகளைப் போல வேகமாக ஒரு நாளுக்கு 50 மைல்கள் நடக்கமுடியாது]
ஒரு யானைக்கே இவ்வளவு தண்ணீர், உணவுகள்(இலைகள் etc..) தேவைப்படுமானால்,
9 or 13 யானைகளுக்கு எவ்வளவு தேவைப்படும்? ஒரு பேச்சுக்கு 10 யானைகள் என்றே வைத்துக் கொண்டாலும்,
தண்ணீர் : 1890 * 10 = 18, 900 லிட்டர் தேவை
உணவு: 1590 * 10 = 15, 900 பவுண்ட்கள் தேவை
இவ்வளவு உணவுப்பொருட்களை வைத்துக் கொண்டு போருக்கு வரமுடியுமா? இது சாத்தியமா? வாசகர்கள் சிந்திக்கட்டும்.
4.5 60,000 இராணுவத்தோடு வந்தாராம்:
யானைகள் மட்டுமல்ல, 60, 000 (அறுபது ஆயிரம்) இராணுவத்தோடு வந்தாராம்? இத்தனை பேருக்கு உணவு எப்படி பாலை வனத்தில் கிடைக்கும், இவர்களுக்கு தண்ணீர் எப்படி கிடைக்கும்? மட்டுமல்ல், பாலைவன வெயிலில் யானைகளானாலும் சரி, மனிதர்களானாலும் சரி, தினமும் அதே வேகத்தில் நடக்கமுடியாது?
இவைகள் தான் குர்ஆன் 105ம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட விவரங்களின் சாத்தியக் கூறுகள்.
4.6 யானைகளைக் கொண்டு நடத்தப்பட்ட போர்களின் பட்டியல்:
• ….
• ….
• 190 BC, Battle of Magnesia
• 167 BC-160 BC, Revolt of the Maccabees
• 164 BC, Battle of Beth-zur
• 153 BC, Roman siege of Numantia (Spain)
• 149 BC-146 BC, Siege of Carthage
• 108 BC, Battle of Muthul
• 46 BC, Battle of Thapsus
• AD 451, Battle of Vartanantz
• 636, Battle of al-Qādisiyyah
• 738, Battle of Rajasthan
• 1214, capture of Cremona by Frederick II, Holy Roman Emperor
• 1659, Battle of Khajwa
• 1526, First Battle of Panipat
• 1556, Second Battle of Panipat
• 1761, Third Battle of Panipat
Source : http://en.wikipedia.org/wiki/List_of_battles_involving_war_elephants
இந்த மேலே உள்ள பட்டியலில், கி.பி. 570 நடந்த யானைப்போர் தென்படுகிறதா பாருங்கள். அடுத்த முறை, கண்டிப்பாக குர்ஆன் 105ம் அதிகாரத்தின் யானைப்போரும் கட்டாயமாக சேர்த்துவிடுவார்கள்.
எத்தியோப்பியா அரசர் இருந்தது உண்மைத் தான், ஆனால், யானைகளோடு வந்தாரா? என்பது தான் இப்போது சந்தேகம். மேலே உள்ள அனேக பிரச்சனைகள் விடையளிக்கப்பட்டால் தான் சந்தேகங்கள் தீரும்.
இங்கு ஒரு விவரம் குறிப்பிடவேண்டும், அல்லா 360 விக்கிரகங்கள் உள்ள காபாவை, குரைஷி மக்களுக்காக ஏன் காப்பற்றவேண்டும்? அதுவும் வேதம் அளிக்கபப்ட்டவர்களை (கிறிஸ்தவர்களை) அழித்து, விக்கிரகங்களை வணங்கும் குரைஷிகளை காப்பாற்ற வேண்டிய அவசியமென்ன? அப்ரஹா மன்னன் மக்காவை நெருங்கும் போது, காபாவை காப்பற்றும் படி, அல்லாவிடம் வேண்டிக் கொண்டார்களாம் மக்கா மனிதர்கள். மக்காவில் இருந்த அந்த 360 கற்களில் ஒரு கல் கண்டிப்பாக அல்லாவாக இருந்திருப்பார் இல்லையா?
அந்த ஆண்டில் தான் முஹம்மது(A.D 570) பிறந்தாராம், ஒரு சிலர் கூறுகிறார்கள், அந்த அரசன் போர் தொடுத்த ஆண்டு கி.பி. 552ம் ஆண்டு ஆகும். 552ம் ஆண்டு முஹம்மது பிறந்திருந்தால், தனக்கு 70 வயதான போது தான் அவர் ஆயிஷாவை(6 வயது சிறுமியை திருமணம்) செய்திருக்கவேண்டும், 50 வயதாகும் போதல்ல, இது இன்னும் பெரிய சிக்கலை உண்டாக்குகிறாது (Prophet of Doom, Page 112, and 113)
இப்படி பல கேள்விகள் எழுகின்றன.
இது மட்டுமல்ல, இஸ்லாமியர்கள் குர்ஆனில் விஞ்ஞானத்தை கண்டுபிடிக்க மிகவும் அதிகமாக உழைக்கிறார்கள், அதனால், தான் இப்படியான எழுதுகிறார் ஒரு இஸ்லாமிய அறிஞர்:
Quote: |
திருக்குர்ஆனின் இந்த 105வது அத்தியாயத்தில் அறிவியல் உண்மையும் உள்ளடங்கி இருக்கிறது என்பது தான் அந்த சான்று. அதாவது, அதிகமாக வெப்பம் ஏற்றப்பட்ட சிறிய ஆயுதங்கள் மூலம் மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கு இது முன்னோடியாக அமைந்துள்ளது. ஏனெனில் இந்நிகழ்ச்சியை வெறும் அற்புதமாக மட்டும் இறைவன் குறிப்பிடவில்லை. நீர் சிந்திக்கவில்லையா? என்றும் இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் குறிப்பிடுவதால் மனிதன் சிந்தித்துப் பார்த்து இது போன்ற ஆயுதங்களைக் கண்டு பிடிக்க முடியும் என்ற கருத்தும் இதனுள் அடங்கியிருக்கிறது. (திருக்குர்ஆன் 105:5) |
இதை எழுதியவர், நம் அருமை இஸ்லாமிய அறிஞர், பிஜே அவர்கள் தான், அவரது குர்ஆன் மொழிபெயர்ப்பில் இப்படி எழுதியுள்ளார்.
இந்த யானை விவரம் பற்றி இப்போதைக்கு இவ்வளவு விவரங்கள் தான்.
ஆக, யானைகளை எத்தியோப்பியாவில் போரில் அக்காலத்தில் பயன்படுத்தினார்களா என்பதை முதலில் விளக்கப்படவேண்டும், இரண்டாவது, அப்படி பயன்படுத்தினாலும், அவ்வளவு தூரம், அத்தனை பேர்களோடு பாலைவனத்தில் வருவது என்பது முடியாத காரியம். அப்படி வந்தார்கள் என்றுச் சொன்னால், எப்படி வந்தார்கள், மற்றும் மேலே நாம் கண்ட கேள்விகளுக்கு பதில்கள் தரப்படவேண்டும்.
References:
http://www.answering-islam.org/Responses/Saifullah/rahman_av.htm#elephants
http://www.elephant.se/elephant_foot_and_nail_problems.php
http://www.jstor.org/pss/294124
http://www.sandiegozoo.org/wordpress/default/how-far-do-elephants-walk-in-one-day/
http://en.wikipedia.org/wiki/Elephant
http://www.onlinepj.com/vilakkam/vilakkam8.htm
http://www.mapcrow.info/Distance_between_Sanaa_YM_and_Mecca_SA.html
http://en.wikipedia.org/wiki/List_of_battles_involving_war_elephants
இத்தொடுப்புக்களில் சென்று படிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.