பாகிஸ்தான் பெண்: நான் ஒரு முஸ்லீமாக இருந்ததற்காக வெட்கப்படுகிறேன்
சுவிசேஷத்தின் தேவை இஸ்லாமியர்களுக்கு அதிகமாக உள்ளது. அவர்களுக்கு இயேசு என்னும் சத்தியத்தை நாம் சொல்லவில்லையென்றால், அவர்கள் ஒரு நாள் இஸ்லாமின் உண்மை முகத்தை அவர்களாகவே கண்டுபிடித்து, நாத்தீகர்களாக மாறிவிடுகிறார்கள்.
இதோ இஸ்லாமின் உண்மை முகத்தை கண்டுக்கொண்ட ஒரு பாகிஸ்தான் இஸ்லாமிய பெண், எப்படி இஸ்லாமை விட்டுவெளியேறுகிறார் என்பதை விவரிக்கிறார். இந்த சகோதரி சொல்லும் விவரத்தை ஒரு ஆண் சொன்னால் அவ்வளவு எடுபடாது, ஆகையால் ஒரு இஸ்லாமிய பெண் சொல்வதை நீங்களே கேளுங்கள்.
Faith Freedom என்ற தள நிர்வாகியாகிய அலி சினாவிற்கு பாகிஸ்தான் இஸ்லாமிய பெண் எழுதிய கடிதம். நான் என் கட்டுரைகளில் எழுதும் விவரங்களை, ஒரு இஸ்லாமிய பெண் எழுதுவதை படியுங்கள்.
இந்த கட்டுரையை இஸ்லாம் பற்றிய விழிப்புணர்வை கிறிஸ்தவர்கள் மத்தியில் உண்டாக்க பதிக்கப்படுகிறது.
---------------
I am ashamed to have ever been a Muslima
பாகிஸ்தான் பெண்: நான் ஒரு முஸ்லீமாக இருந்ததற்காக வெட்கப்படுகிறேன்
திரு சினா,
நான் என் வாழ்க்கையில் இப்படிப்பட்ட கடிதத்தை எழுதுவேன் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை. நீங்கள் ஒரு இஸ்லாமிய பெண்ணோடு விவாதித்த கட்டுரையை நான் முதன் முதலில் படித்தேன் ( FrongPage Magazine Article: http://www.frontpagemagazine.com/Articles/Read.aspx?GUID=3DDB4AD9-F928-4EF8-ADEC-8A9C90594254)
நான் ஆறாவது வகுப்பு படிக்கும் போது, இஸ்லாமில் பெண்கள் நடத்தப்படும் விதம் பற்றி அறிந்து எனக்கு வேதனை உண்டானது. அதாவது, சொத்துரிமை மற்றும் விவாகரத்து சம்மந்தப்பட்ட விவரங்களும் இதில் அடங்கும். ஆனால், என் வாழ்க்கையில் இதுவரையில், போரில் பிடிப்பட்ட பெண்களை முஸ்லீம்கள் கற்பழித்தார்கள் என்பதையும், அதனை நபி அனுமதித்தார் என்பதையும் நான் அறிந்ததேயில்லை என் வாழ்க்கையில் நான் படித்த அனைத்து இஸ்லாமிய புத்தகங்களும் போரில் பிடிப்பட்ட கைதிகளை முஸ்லீம்கள் மிகவும் கண்ணியத்தோடு நடத்தினர் என்று சொல்வதை நான் படித்துள்ளேன். ஆனால், பிடிப்பட்ட பெண்களை கற்பழிப்பதில் என்ன கண்ணியம் இருக்கிறது என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. மெக்காவை கைப்பற்றிய போது மட்டுமே இரக்கத்தோடு நடந்துள்ளார்கள். மெக்கா என்பது நபி என்று அழைக்கப்பட்டவர் பிறந்து வளர்ந்த ஊர் என்பதாலும் அங்கு அவரது உறவினர்கள் இருந்தார்கள் என்பதாலும், மெக்காவிற்கு மட்டும் இரக்கம் காட்டியிருக்கலாம்.
ஆனால், ஒன்று மட்டும் எனக்குத் தெரியும். பாகிஸ்தானில் இருக்கும் மௌலவிகள் எங்களுக்கு வினோதமான விஷயங்களைச் சொல்வார்கள். அதாவது, கண்ணாடியிலே நம்முடைய முகத்தை பார்க்கும் போது இந்த சூராவை ஓதவேண்டும், வீட்டில் நுழையும் போது இதை ஓதவேண்டும், பிராயாணம் செய்ய புறப்படும் போது, இந்த துவாவை(ஜெபத்தை) செய்யவேண்டும் என்று பல விவரங்களைச் சொல்வார்கள். இப்படிப்பட்ட விவரங்களை எங்களுக்கு அவர்கள் போதிப்பார்கள். ஆனால், போரில் பிடிப்பட்ட பெண்களை முஸ்லீம்கள் கற்பழித்தார்கள் என்ற மிகப்பெரிய விஷயத்தை எங்களிடம் சொல்லாமல் ஏன் மறைத்தார்கள்? ஆம், இதனை நாம் "கற்பழிப்பு" என்று தான் அழைக்கமுடியும். எப்படி ஒரு பெண் தன் சகோதரர்கள், அல்லது தந்தை அல்லது கணவனை கொலை செய்த அந்த ஆணோடு உடலுறவு வைத்துக்கொள்ள அனுமதிப்பாள். இந்த சூழ்நிலையில் என்னையோ அல்லது என் சகோதரியையோ அல்லது என் தாயையோ நான் கற்பனை கூட செய்து பார்க்க என்னால் முடியவில்லை. இந்த விவரம் என் மனதை கலக்கிவிடுகிறது. அலி சினா நீங்கள் என் கண்களை திறந்துவிட்டீர்கள். ஈராக்கில் பெண்களை கற்பழித்த இராணுவ வீரர்கள் செய்த தவறைப் பற்றி நான் மிகவும் வேதனை அடைந்தேன். ஆனால், இங்கு கவனிக்க வேண்டியது விவரம் என்னவென்றால், முஸ்லீம்கள் இவர்களை விட நல்லவர்களா? முஸ்லீம்கள் தங்களால் முடிந்த பெண்களை எல்லாம் கற்பழித்தார்கள். இப்போது, இஸ்லாமிய கோட்பாட்டின் படி, ஈராக் ஒரு போர்க்களமாக உள்ளது, எனவே, இஸ்லாமிய போதனைகளின் படி, ஈராக்கை ஆக்கிரமித்த இராணுவங்கள், ஈராக் பெண்களை கற்பழிப்பது நியாயம் தானே?
மற்றும் இஸ்லாமிய லாஜிக் படி, ஈராக் போரில் தோற்றுவிட்டது, இஸ்லாமின் லாஜிக் படி, ஈராக்கின் மக்கள் அனைவரும் பெண்கள் குழந்தைகள் உடபட அமெரிக்காவிற்கு அடிமைகள். ஆனால், ஈராக்கில் சில எண்ணிக்கையுள்ள பெண்கள் மட்டுமே கற்பழிக்கப்பட்டார்கள், மற்றும் கற்பழித்தவர்கள் தண்டிக்கப்பட்டார்கள், சிறைச்சாலைக்குச் சென்றார்கள். இதையே நாம் வேறு வகையில் பார்க்கலாம், அதாவது இஸ்லாமியர் அல்லாத நாட்டை இஸ்லாமியர்கள் ஆக்கிரமித்தால், அங்குள்ள அனைத்து பெண்களும் போரில் பிடிப்பட்ட சொத்துக்களாக பெண்கள் கருதப்படுவார்கள், அவர்களை இஸ்லாமிய இராணுவம் எல்லா பெண்களையும் கற்பழித்து இருப்பார்கள்.
என்னுடைய 6 வயது மகள் அல்லது எந்த ஒரு 6 வயது சிறுமி, 50 வயதான ஒரு ஆணை திருமணம் செய்துக் கொள்வதை நினைக்கும் போது எனக்கு மிகவும் வேதனையாக உள்ளது, அந்த 50 வயது ஆண் ஆன்மீகத்தில் மத விவகாரங்களில் எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தாலும் சரி.
நான் ஒரு பெண். முஹம்மது சொன்னது போல நான் அறிவில் குறைந்தவள் இல்லை. எனக்கு ஞானத்திலும் குறைவு இல்லை. என் வாழ்க்கையில் அறிவில் பல ஆண்களை நான் ஜெயித்து இருக்கிறேன். நான் படித்து பட்டம் பெற்றேன், இப்போது இரண்டாவது பட்டம் பெற படித்துக்கொண்டு இருக்கிறேன். இப்படி இருக்கும்போது எங்கள் நபி எப்படி "பெண்கள் அறிவில் குறைவுள்ளவர்கள்" என்றுச் சொன்னார்? முஹம்மதுவின் இவ்வார்த்தைகள் விஞ்ஞானத்தின் படி பிழையானதாகும்.
இப்போது ஒரு பெண் கற்பழிக்கப்படுவதைப் பற்றி கவனிப்போம். தன்னை ஒருவன் கற்பழித்தான் என்பதற்கு 4 ஆண்களை, அந்தப் பெண் உலகத்தில் எந்த நாட்டிலிருந்து சாட்சிகளாக கொண்டுவருவாள். கற்பழிப்பு என்பது சர்கஸ் இல்லை, எல்லாரும் வந்து பார்த்து சிறப்பித்து தாருங்கள் என்று அழைப்பிதழ் கொடுப்பதற்கு. கற்பழிப்பு என்பது மனிதன் நடமாட்டம் இல்லாத தனிமையான இடத்தில் நடத்தப்படுவது. உதாரணத்திற்கு ஒரு பெண் கற்பழிக்கப்பட்டு கற்பமாகிவிட்டாள் என்று நினைத்துக்கொள்ளுங்கள். தான் தற்பழிக்கப்பட்டாள் என்பதை நிரூபிப்பதற்கு தனக்கு 4 ஆண்களின் சாட்சிகள் தேவை, ஆனால், அவளுக்கு சாட்சி சொல்ல ஒரு ஆணும் கிடைக்கமாட்டான். ஆனால், திருமணத்திற்கு வெளியே தான் "உடலுறவில் ஈடுபட்டாள் என்பதற்கு மட்டும் ஆதாரத்தை தன் கர்ப்பத்தில் சுமந்துக்கொண்டு இருப்பாள்". இந்த சூழ்நிலையில் இஸ்லாமிய சட்டப்படி என்ன நடக்கும்? தன்னை ஒருவன் கற்பழித்தான் என்பதை நிருபிக்க தன்னால் ஒரு ஆதாரத்தையும் அவளால் காட்டமுடியாது? ஆக, அவள் விபச்சாரம் செய்தாள் என்பதாக குற்றம் சுமத்தப்பட்டு கல்லெறியுண்டு மரிப்பாள். இது நியாயமானதாகவும் அல்லது லாஜிக்காகவும் (அறிவுடமையாகவும்) தெரிகின்றதா? இல்லை இல்லை, இதயம் மற்றும் மூளை என்பது ஒருவனுக்கு இருந்தால், அவனுக்கு இவைகள் நியாயமானதாக தெரியாது.
ஜூலியா ரோச் என்ற பெண்மணியோடு உங்களின் உரையாடல் என்னை அசைத்துவிட்டது. இதைப் பற்றி நான் வெட்கப்படுகிறேன், வேதனைப்படுகிறேன், மூளை குழம்பிவிட்டதாக உணருகிறேன். என் வாழ்க்கை முழுவதும் நான் பின்பற்றியது என்ன? இஸ்லாமிய அறிஞர்கள் நமக்கு வெறும் நல்லவைகளை மட்டும் சொல்வார்கள், ஆனால், இந்த உண்மைகளைச் சொல்லமாட்டார்கள்.
பாகிஸ்தானில் இருக்கும் நாங்கள் குர்ஆனை மிகவும் கூர்ந்து கருத்தோடு படிக்க கவலைப்படுவதில்லை. எங்கள் பள்ளிக்கூடங்களில் சொல்லப்பட்டவைகளை மட்டுமே நாங்கள் தெரிந்துவைத்துக்கொண்டு இருக்கிறோம். மீதமுள்ள விவரங்களுக்கு நாங்கள் இஸ்லாமிய அறிஞர்கள் மீது ஆதாரப்பட்டு இருக்கிறோம், இவர்கள் நம்மிடம் பொய்களைச் சொல்வார்கள், இஸ்லாமில் உள்ள நல்லவைகளை மட்டும் சொல்வார்கள், அடிமைகள் பற்றியும், கற்பழிப்பது பற்றிய விவரங்களும் சொல்லமாட்டார்கள்.
இந்த விவரங்களை நான் என் குடும்ப நபர்களுக்குச் சொன்ன போது, என்னை அவர்கள் "காபிர்" என்று சொல்லி கேலி செய்தார்கள். நான் பாகிஸ்தானில் இருக்கும் வரை நான் இப்படியே இருந்துவிடுகிறேன். இஸ்லாமுக்கு எதிராக சொல்லப்படும் எதையும் நான் கேட்கக்கூடாது. என் கண்களையும் காதுகளையும் நான் மூடிக்கொள்ளவேண்டும். நான் இஸ்லாமை விட்டு வெளியே வரக்கூடாது, அப்படி வந்தால் என்னைப்பற்றி என் பெற்றோர்கள் முஸ்லீம்களிடையே வெட்கமடையவேண்டி வரும். நான் இனி இஸ்லாமை பின்பற்றப்போவதில்லை. ஒரு வேளை எனக்கு வாய்ப்பு கிடைத்து என் தோழிகளுக்கு நான் சொன்னாலும் அவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அவர்கள் நான் சொல்வதை கேட்க வேண்டும் என்றும் அவர்கள் சிந்திக்கவேண்டும் என்றும் விரும்புகிறேன்.
இப்படிக்கு
கோமல்(பெயர் மாற்றப்பட்டுள்ளது)
Source: http://www.faithfreedom.org/2009/01/20/i-am-ashamed-to-have-ever-been-a-muslima/
Tamil Christians Source: http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=27823#27823
Comment Form under post in blogger/blogspot