அமெரிக்காவில் இருக்கும் முஸ்லிம்களுக்கு ஓர் பகிரங்கக் கடிதம்
An open letter to Muslims in the U.S.
இஸ்லாமிய அடிப்படைவாதிகள் எனக் கருதப்படுவோரால் அரங்கேற்றப்பட்ட அமெரிக்கா மீதான சமீபத்திய வெறித்தனமான தாக்குதல்கள் அமெரிக்காவில் வாழும், மற்றும் வந்து போகும் முஸ்லீம்களின் மீது கவனத்தை ஈர்த்துள்ளது. இத்தகைய தாக்குதல்களை நடத்தியவர்கள் பெருவாரியான முஸ்லீம்களின் பிரதிநிதிகள் அல்ல என்று சரியாகக் கணிக்கப்பட்டுள்ளது. உண்மை இவ்வாறிருப்பினும், அமைதியை விரும்பும் முஸ்லிம்களுக்கு எதிராக அமெரிக்காவில் ஆங்காங்கே சிற்சில தாக்குதல்கள் நடந்துள்ளன. முஸ்லிம்களுக்கு எதிரான இத்தகைய புரிந்துகொள்ளுதலற்ற மனிதாபிமானத்திற்கு எதிரான செயல்கள் நாகரீகம் அற்றதும் மன்னிக்க முடியாததும் ஆகும்.
எனினும், இத்தகைய கண்டனங்கள் சில நாட்களாகவே மீண்டும் மீண்டும் வந்துகொண்டிருக்கின்றன. பொறுமையோடிருக்க வலியுறுத்தும் இத்தகைய கண்டனங்களின் மத்தியில் நான் கேள்விப்படாதது என்னவென்றால், அமைதியை விரும்பும் முஸ்லீம்கள் சமீபத்திய கொடுமைகளினால் ஏற்பட்ட முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு தவறான பொது அபிப்பிராயத்தை எதிர்கொள்ளும்படி இக்கொடுமையை நிறைவேற்றியவர்கள் தங்கள் செயல்கள் தவறானது எனப் புரிந்து கொள்ளும் வகையில் எதிர் நடவடிக்கையாக ஒரு ஆக்கபூர்வமான செயல்களை முஸ்லீம்கள் ஏற்படுத்தினார்களா? என்று கவனித்தால், இல்லை என்பது தான் பதிலாக உள்ளது.
மத சுதந்திரமுடைய மேலைநாட்டு ஜனநாயக நாடுகளில் வசிக்கும் முஸ்லிம்கள், இத்தகைய மேலை நாடுகளிடமிருந்து உரிமையுடன் எதிர்பார்க்கும் அதே பொறுமையை முஸ்லிம்கள் பெரும்பான்மையாய் வசிக்கும் நாடுகளும் கடைப்பிடிக்கும்படி அறிவுறுத்த அனைவரும் காணும்படி வெளிப்படையான தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன். சௌதி அரேபியா போன்ற முன்னேற்றமான இஸ்லாமிய நாடுகளில் கூட அடிக்கடி இஸ்லாம் தவிர வேறு மதங்களுக்கு மாறுபவர்கள் மீது பகிரங்க நடவடிக்கைகள் கொடுமைகள் எடுக்கப்படுகின்றன. சௌதி அரேபியாவில் மதம் மாறுதல் தண்டனைக்குரிய குற்றம்; அதிலும் இஸ்லாமிலிருந்து வேறு மதத்திற்கு மாறினால் அது மரணதண்டனைக்கு ஏதுவான குற்றம். இதற்கு மறுபக்கமாக, வேறு மதங்களிலிருந்து இஸ்லாமுக்கு மாறுவதில் தடையேதுமில்லை. சூடான், பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தான் போன்ற பல நாடுகளில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. மாற்று மத நம்பிக்கையாளர்கள் சாதாரணமாகவே தொடர்ச்சியாக சிறைப்படுத்தப் படுகிறார்கள்; பெரும்பான்மையானோர் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளவில்லை என்ற அற்ப காரணத்திற்காகவே மரணத்தைத் தழுவுகிறார்கள்.
சகிப்புத்தன்மை மிக்க நாடுகளில் வசித்துக்கொண்டு முழூ மத சுதந்திரத்திரத்தை முற்றிலும் அனுபவிக்கும் முஸ்லிம்களில் ஐம்பது சதவிகிதத்தினராவது தங்களது சொந்த நாடுகளுக்கு இது பற்றி உணர்வு பூர்வமாகக் கடிதங்கள் எழுதும் பணியினைச் செய்வார்களா? இஸ்லாமிய அருட்பணியாளர்களாகிய இமாம்கள், சகிப்புத்தன்மையோடு வாழ்தல் பற்றி முறையாகத் தம் மக்களுக்குப் தொடர்ந்து போதித்தால் எப்படி இருக்கும்? எந்த ஒரு இஸ்லாமிய நாட்டிலும் இஸ்லாமியரல்லாதோர் ஒருவர் தேவதூஷணம் சொன்னார் என்றோ அல்லது இஸ்லாமிலிருந்து ஒருவர் விலகினார் என்பதாலேயோ தண்டிக்கப்படும் போது ஆயிரக்கணக்கான முஸ்லீம் மக்கள் ஒன்றுகூடி அந்த நாட்டின் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்து மறுப்புத் தெரிவித்தால் என்ன? இத்தகைய நெருக்கடிகள் ஒரு சிறிய மாற்றத்தையாவது கொண்டுவரும் என்பது உறுதி, சில சமயங்களில் அதிக மாற்றத்தையும் கொண்டுவரும். சக இஸ்லாமியரால் ஏற்படுத்தப்படும் இத்தகைய நெருக்கடி, மாற்று மதத்தினரிடமிருந்து வரும் கண்டணங்களை விட முஸ்லீம்களுக்கு அதிக ஏற்புடையதாய் இருக்கும். முஸ்லீம்களின் இத்தகைய நடவடிக்கை, எல்லா முஸ்லீம்களுமே தீவிரவாதிகள் தான் என்கின்ற கண்ணோட்டத்தை உடையவர்களை நிச்சயம் வாயடைக்கும்.
இஸ்லாமிய நாடுகளில் முஸ்லீமல்லாதவர்களுக்கு எதிராக முக்கியமாக கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடந்துக் கொண்டு இருக்கும் கொடுமைகள் பற்றியும், வன்முறைகள் பற்றியும் உங்களுக்கு சரியான விவரம் தெரியவில்லையானால் "
Project Openbook" என்ற தளத்தில் சென்று படிக்கவும், உங்களுக்கு அதிக விவரங்கள் கிடைக்கும்.
முகப்புப் பக்கம்: ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்
© Answering Islam, 1999 - 2008. All rights reserved.
தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு
தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்
1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1
2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2
3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3
4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4
பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்
1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1
2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2
பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்
1,
இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்ஆன் உமர் பதில்
2,
இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்ஆன் பதில்
Comment Form under post in blogger/blogspot