நேசமுடன் இஸ்லாம் தளம் நேர்மையான முறையில் செயல்படுகிறதா?
கிறிஸ்தவ பாதிரியார்கள் ஹஜ் செய்தார்கள்: உண்மையா பொய்யா?
முன்னுரை: நம் தமிழ் நாட்டு இஸ்லாமியர்கள்(அறிஞர்கள்) கடந்த ஒரு ஆண்டு காலமாக அதி வேகமாக தளங்களை உருவாக்கிக்கொண்டு இஸ்லாமிய செய்தியை பதித்துக்கொண்டு வருகிறார்கள். கிறிஸ்தவ கட்டுரைகளை எழுதிக்கொண்டு வருகிறார்கள். சிலர் உண்மையை பொய் என்றுச் சொல்கிறார்கள். சிலர் பொய்யை உண்மை என்று சொல்லிக்கொண்டு வருகிறார்கள்.
இஸ்லாம் தளங்களில் பொய் செய்திகள்:
இவர்களில் சிலர்(கவனிக்கவும் "சிலர்") பல பொய்யான தகவல்களை கொடுத்துக்கொண்டு வருகிறார்கள்.
பல ஆயிரம் கிறிஸ்தவர்கள், கிறிஸ்தவ போதகர்கள் திடீரென்று இஸ்லாமுக்கு மாறினார்கள் என்று மிகவும் ஆவேசமாக கட்டுரை எழுதினார்கள்? ஆதாரம் எங்கே என்றுக் கேட்டால், "மௌனம்"...... பதில் இருக்காது.....
ஒரு உதாரணம் இதோ:
நேசமுடம் தள கட்டுரைக்கு: "இஸ்லாத்திற்கு எதிராக கிறிஸ்தவ அமைப்புகள் "
, ஆதாரம் எங்கே என்று கேள்வி கேட்கப்பட்டது, இன்றுவரை பதில் இல்லை.
நேசமுடன் தளத்திற்கு ஈஸா குர்-ஆன் கேள்வி: "சந்தேகம் தீர்த்துவிடுங்கள் பிளீஸ்"
இது உண்மையானச் செய்தியா?
இதே நேசமுடன் தளம் இன்னொரு செய்தியை வெளியிட்டது, அதற்கு எந்த ஒரு மூல தொடுப்பையும் கொடுக்கவில்லை.
Quote: |
ஹஜ் கடமையை நிறைவேற்றிய முன்னாள் பாதிரியார்கள் அபூசாலிஹ் ..... ..... அலி கவுதமலா என்ற முன்னாள் கிறிஸ்தவ பாதிரியாரும் தனது ஹஜ் கடமையை இவ்வாண்டு நிறைவேற்றினார். ..... ..... செவர்டோ ரோயிஸ் (அலி கவுதமலா கிறிஸ்தவராய் இருந்த போது உள்ள பெயர்) திருக்குர்ஆனை ஒதிய போது அதனால் கவரப்பட்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக தெரிவித்திருக்கிறார். குறிப்பாக திருக்குர்ஆனின் முதல் அத்தியாயமான அல்பகறாவை ஓதிய போதே சத்தியதீனுல் இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொள்ள முடிவு செய்ததாக தெரிவிக்கிறார். தான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதால் தனது வாழ்வே மறுமலர்ச்சி பெற்றதாகக் கூறுகிறார். குருமடம் என்ற பாதிரியார்களின் பயிற்சிக் கல்விக் கூடத்தில் தனது பட்டப்படிப்பை முடித்து கொண்ட செவர்டோ ரோயிஸ் அமெரிக்காவின் தெற்கு மாநிலத்தில் குயின் சிட்டியில் தனது பணியைத் தொடங்கினார். ..... ..... அழைப்பாளர் கமர் ஹுஸைன் அழைப்பு விடுத்த 'மார்க்கம்' பற்றிய விவாத அரங்கிற்கு 5000 பேர் வருகை புரிந்தனர். இதில் 147 பேர் இஸ்லாத்தை தங்கள் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டனர். இந்த விவாத அரங்கை சவூதி தலைநகர் ரியாத்தை தளமாகக் கொண்டு இயங்கும் இஸ்லாத்தினை அறிமுகப்படுத்தும் சர்வதேச அமைப்பு நெறிப்படுத்தியது. இத்தகவலை அஷ்ரக் அல் அஸ்வத் செய்தி ஏடும் அல் ஜஸீராஹ் அரபி நாளேடும் வெளியிட்டுள்ளன. source: http://neshamudan.blogspot.com/2008/01/blog-post_13.html |
இவர் கொடுத்த ஒரே ஆதாரம், எந்த செய்தித்தாள்களில் இச்செய்தி வெளியானது என்று மட்டும் தான். அதுவும் அந்த செய்தித்தாள்களில்:
எந்த நாள் இச்செய்தி வெளியானது?
அதன் தொடுப்பு என்ன?
போன்ற விவரங்களை இவர் கொடுக்கவில்லை.
முஸ்லீம்களுக்கு ஒரு வேண்டுகோள்:
============================
நான் பலமுறை சொல்லிவிட்டேன், ஒரு செய்தியை சொல்லும் பொது அதன் மூல தொடுப்பை(Source Link or URL) கொடுக்க வேண்டும், அது தான் இணையத்தில் கட்டுரை எழுதும் போது பின்பற்ற வேண்டிய குறைந்த பட்ச நல்ல பழக்கம். அது கூட உங்களிடம் இல்லாத போது, எங்கே சென்று முறையிடுவது?
1. நீங்கள் சொன்ன விவரம் சரியானதாக இருக்குமானால் அதை ஏன் தைரியமாக சொல்ல பயப்படுகிறீர்கள்?
2. அச்செய்தி எந்த மொழியில் இருந்தால் என்ன? ஆங்கிலமோ அரபியோ அதன் தொடுப்பை கொடுத்துவிட்டால், உங்கள் நேர்மை வெளிப்படும் இல்லையா? இது ஏன் புரியவில்லை உங்களுக்கு?
3. அல்லது இது கூட ஒரு பொய்யான தகவல் தானா?
4. நீங்கள் சொல்லும் செய்தி உண்மையானதா பொய்யா? என்று எப்படி நாங்கள் முடிவு செய்வது? செய்தியை சொல்வது நீங்களாயிற்றே எப்படி உண்மையை உங்களிடம் எதிர்ப்பார்ப்பது, நேசமுடன் தள நிர்வாகத்தவர்களே?
5. உங்கள் கட்டுரை உண்மையானதாக இருக்கலாம், நான் அதை மறுக்கவில்லை. ஆனால் ஆதாரம் எங்கே என்று தான் கேட்கிறேன். உங்களை நாங்கள் நம்பவேண்டிய அவசியம் என்ன?
இந்த செய்தி வெளியான செய்தித்தாள்களின் தொடுப்பை கொடுக்கமுடியுமா?
1. நீங்கள் நேர்மையானவர்களாக இருந்தால்?
2. உங்கள் நம்பிக்கை நேர்மையானதாக இருந்தால்?
3. நீங்கள் சொல்வது உண்மை என்று உங்களுக்கு நம்பிக்கை இருந்தால்?
4. இஸ்லாமுக்கு இந்த பாதிரியார்கள் மாறினார்கள் என்ற செய்தி உண்மையான தாக இருந்தால்
இக்கட்டுரையை கண்டவுடன், உடனே தேடிக்கண்டுபிடித்து, அதன் தொடுப்பை கொடுத்து, உங்கள் நேர்மையை நிருபித்துக்கொள்ளுங்கள்.
[size=14]அப்படி தொடுப்பை கொடுப்பீர்களானால், நான் இதே கட்டுரையில் ஒரு பின்னூட்டம் இட்டு, நேசமுடன் இஸ்லாம் தளம் தன் நேர்மையை நிருபித்துவிட்டது, இச்செய்தி உண்மை தான் என்ற வரிகளை பதிப்பேன்.
அப்படி இல்லையானால், நேசமுடன் தளம் ஒரு பிராடு, பித்தலாட்டம், பொய், நேர்மையற்ற இஸ்லாம் தளம் "நேசமுடன்" தளம் என்று எல்லாரும், கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும், இந்துக்களும், நாத்தீகர்களும் நினைத்துக்கொள்வார்கள்.
இந்த தமிழ் கிறிஸ்தவர்கள் தளத்தில் ஒரு கட்டுரையை எழுதி இனி, கிறிஸ்த கட்டுரைகளை மூல தொடுப்புக்கள் இல்லாமல் எழுதும் தளங்களின் பெயர்கள் பட்டியல் இடப்படும். இனிவரும் சந்ததிகளுக்கு உங்கள் "உண்மை முகத்தை" அது காட்டும் என்பதை தாழ்மையுடம் சொல்லிக்கொள்கிறேன்.
உங்கள் தேடல் சுலபமாக சில தொடுப்புக்களை நான் தருகிறேன். நீங்கள் குறிப்பிட்ட செய்தித்தள்கள் இவைகள் என்று நம்புகிறேன்.
http://www.aawsat.com/ -- Arabic Edition
http://www.asharq-e.com/ -- English Edition
http://english.aljazeera.net
http://www.aljazeera.com/
நாங்கள் உங்களிடம் முதலில் எதிர்ப்பார்ப்பது நேர்மை, உங்கள் மார்க்கம் சரியானதா இல்லையா? என்பதைப் பற்றி பிறகு சிந்திக்கலாம்.
ஆமாம், உங்களுக்கு சராசரி இஸ்லாமிய சகோதரர்களிடமிருந்து ஏன் இப்படி செய்கிறீர்கள், ஏன் பொய்யான தகவலை தருகிறீர்கள் என்று கேள்வி கேட்டு மெயில்கள் வருவதில்லையா? ஆச்சரியமாக இருக்கிறதே?
Comment Form under post in blogger/blogspot