முஸ்லிம்களை மதம் மாற்றும் கிறிஸ்தவ மிஷனரிகள்!
சமரசம் 16-31 ஜனவரி இதழில் ஒரு செய்தி வெளியிடப்பாட்டு உள்ளது அதை முழுமையாக படிக்க http://www.samarasam.com/16-31_Jan_08/index.htm,அதன் தலைப்பு "முஸ்லிம்களை மதம் மாற்றும் கிறிஸ்தவ மிஷனரிகள்! "
இந்த கட்டுரை எந்த அளவுக்கு உண்மை என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம்.ஆனால் ஒரு சில உண்மையான விஷயங்கள் அவர்களாகவே ஒத்துக்கொண்டதும்,ஒரு சில விஷயங்களை நகைச்சுவையாக எழுதியததயும் காண முடிந்தது.
//"சுதந்திரத்திற்கான போர்" எனும் போர்வையில் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்காவின் தாக்குதல்கள், பார்ப்பதற்கு மற்ற போர்களைப் போன்று தோன்றினாலும் திரைமறைவில் பல்வேறு இடங்களில் கிறிஸ்தவ பிரச்சாரகர்கள் வெளிப்படையாகத் தங்களது நிர்மாணிக்கப்பட்ட இலக்கிற்காக மிகவும் முனைப்புடன் செயலாற்றிக் கொண்டிருக்கின்றனர்.//
போர் புரிந்த அமேரிக்க வீரர்கள் என்னமோ ஒரு கையில் துப்பாக்கியும் மறுகையில் பைபளையும் தூக்கிச் சென்றார்காள் என்று சொல்ல வருகிரார்களோ?
//ஜூலை மாதத்தில் (2007) தாலிபான், தென்கொரியாவைச் சேர்ந்த 21 நபர்களைக் கைது செய்த போதுதான் இவ்வுண்மை முதன் முதலில் வெளிச்சத்திற்கு வந்தது. மக்கள் சேவை செய்வதற்கென்றே இவர்கள் பணியாற்றுவது போன்று வெளியுலகிற்குத் தெரிந்தாலும் தாலிபான் அரசின் முடிவிற்குப் பிறகு 2001 லிருந்தே இந்த கிறிஸ்தவ மிஷனரிகளின் செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
கைதானவர்கள் தாங்கள் சர்வதேச சேவை அமைப்பான ( Shaltarnaw) 'ஷல்டர்னாவ்'வுக்காக செயல் புரிவதாக ஒப்புக் கொண்டனர், இந்த அமைப்பானது மேற்குலகின் பலமான கிறித்தவ இயக்கமாகும், இது ஆப்கானிஸ்தானில் 5 ஆண்டுகளாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தென்கொரியாவைச் சேர்ந்தவர்களே இதில் பெரும்பாலோர் உள்ளனர், இவ்வமைப்பானது கடந்த 5 ஆண்டுகளில் பெரும் எண்ணிக்கையிலான ஆண்களையும், பெண்களையும் சேவைக்கென்று ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பியது. இவர்கள் அங்கு கிறிஸ்தவ இலக்குகளை அடைய மிகப் பெரும் பங்காற்றியுள்ளனர்.//
முந்தின வரியில் நீங்கள் எழுதியது அமேரிக்க மதமாற்றத்தை தலைமைதாங்கி நடத்துவது போல் எழுதிவிட்டு அதில் இருந்த அனைவரும் தென்கொரியாவை சேர்ந்தவர்கள் என்று சொல்லுவது முரன்பாடாக தெரிகிறது.
//தாலிபான் அமைப்பு 2006 ல் இதே போன்ற ஒரு இத்தாலியக் குழுவைக் கைது செய்தது, இக்குழு ஓர் ஆப்கானிய நபரை (அப்துர் ரஹ்மான்) கிறிஸ்தவராக மாற்றி பிலிப்பைனுக்குக் நாடு கடத்தியது. இவர்களை (குழு) விடுதலை செய்ய வேண்டுமெனில் அந்நபரை மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு வர வேண்டும் என்று தாலிபான் கேட்டுக் கொண்டது, ஆனால் இதில் வெற்றி கிடைக்கவைல்லை, //
ஏதோ அந்த நபரின் விருப்பம் இல்லாமல் கடத்திக் கொண்டு போனது மாதிரி திரித்து எழுதுகிறிர்கள்.அந்த நபர் இயேசுவை ஏற்றுக்கொண்டதற்காக காவலில் வைக்கப்பட்டதும்,அதன் பின் நடந்தவைகளும் உலகம் அறியும்.
அப்துல் ரஹ்மான் பற்றிய தொடுப்பு; http://unmaiadiyann.blogspot.com/2007/12/blog-post_4450.html
//'ஷல்டர்னாவ்' போன்ற மற்ற கிறிஸ்தவ இயக்கங்கள் மருத்துவமனைகளை அமைத்தல், நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தல் மூலம் கிறிஸ்தவப் பிரச்சாரத்துக்காக பல்வேறு விதமான நூல்களை மக்களிடையே விநியோகம் செய்கின்றன. இச்சேவை அமைப்புகள் அயராது உழைத்து நிறைய பேரை கிறிஸ்தவர்களாக மதம் மாற்றியுள்ளன. இவர்களின் முக்கிய இலக்கு போரில் காயம்பட்டு இவர்களுடைய மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளே.
ஆப்கனின் பல்வேறு இனத்தலைவர்கள் அதிபர் ஹாமித் கர்சாயியைச் சந்தித்து, இந்தச் சேவை அமைப்புகள் சேவை எனும் போர்வையில் கிறிஸ்தவக் கலாச்சாரத்தையும், குடியையும் வளர்ப்பதாக முறையிட்டனர், அவரோ இவர்களின் நன்மையளிக்கும் செயல்கள் தீமையான செயல்களைக் காட்டிலும் அதிகம் எனக் கூறி எந்த வித நடவடிக்கையும் எடுப்பதை நிராகரித்து விட்டார்.//
ஆப்கான் அதிபருக்கே அறிந்தே கிறிஸ்தவர்களின் சேவை நன்றாக இருந்த படியினாலேயே அதை அனுமதித்து உள்ளார் என்பதை நீங்காளே ஒப்புக்கொண்டதற்கு நன்றி
//ஐக்கிய கூட்டணி செயலாளர் ஜெனரல் மௌலானா பஜ்லுர் ரஹ்மான் இக்கம்பெனிகளைப் பற்றி பின்வரும் உண்மையை கண்டறிந்தார். 2004 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை இவ்வமைப்புகள் மூன்று இலட்சம் பேர்களை கிறிஸ்தவர்களாக மாற்றியுள்ளன. மேலும் இவை உளவு நிறுவனங்களாகவும் செயலாற்றி, இரகசிய செய்திகளை சேகரித்து தங்களது தலைமைக்கு அனுப்பும் பணிகளையும் செய்கின்றன.//
இத்தனை நாளும் இஸ்லாம் வேகமாக வளர்கிறது என்று கூப்பாடு போட்டு வந்த முஸ்லீம்கள் ஆப்கானிஸ்தானில் மட்டும் " மூன்று இலட்சம் பேர்களை கிறிஸ்தவர்களாக மாற்றியுள்ளனர்" என்று சொல்வது யோசிக்க வேண்டிய செய்தி.
//இவர்களின் இந்த அசெயல்களின் விளைவாக இது வரை ½ மில்லியன் பாகிஸ்தானியர்கள் கிறிஸ்தவ வாழ்க்கை முறையை ஏற்று வாழ்ந்து வரும் பேரிடியான செய்தியை மௌலானா பஜ்லுர் ரஹ்மான் வெளியிட்டுள்ளார்.//
இதுவும் யோசிக்க வேண்டிய விசயம் தான்.
//ஆப்கானிஸ்தான் போரின் முடிவுக்குப் பிறகு இவ்வமைப்புகள் புதிய பெயர்களுடன் செயல்பட்டு வருகின்றன. தற்போது இவை பாகிஸ்தானின் பெரிய நகரங்களை குறிப்பாகக் கராச்சியைக் குறி வைத்து இயங்குகின்றன. இங்குள்ள ஏழை எளியவர்களுக்குத் திருமண ஆசை, பண ஆசை காட்டி கிறிஸ்தவ மதத்தில் இணைக்க முயன்று வருகின்றன.//
இது நல்ல நகைச்சுவையாக உள்ளது.திருமண,மற்றும் பண ஆசை காண்பித்து பாக்கிஸ்தானில் இருக்கும் ஒரு முஸ்லீமை கிறிஸ்தவனாக மாற்றினால் அதை அனுபவிக்க அவன் உயிர் மட்டும் இருக்காது என்பதை உலகமே அறியும்.அப்படி இருந்தும் எப்படி உங்களால் மட்டும் இப்படி பொய் பேசமுடிகிறது.
//பாகிஸ்தானிலும் ஆப்கனிலும் செயல்பட்டு வரும் கிறிஸ்தவ அமைப்புகளைப் பற்றிய குறைந்தபட்ச தகவல்களே இவை. இதை விட ஆச்சரியமளிக்கும் விஷயத்தை பிரான்ஸிலிருந்து வெளியாகும் ஒரு பத்திரிக்கை கிறிஸ்தவ பணிகளின் பரவலைப் பற்றி வெளியிட்டுள்லது. தென்கொரியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த ஏறத்தாழ அறுபதாயிரம் (60,000) கிறிஸ்தவப் பணியாளர்கள் தற்போது முஸ்லிம்களிடையே முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனராம்,//
இதுதான் கிறிஸ்துவின் அன்பு,தங்களின் உயிரை விட இயேசுவை
இஸ்லாமியர்கள் அறிந்து கொள்வதே மேலானதாக என்னுவது.
Comment Form under post in blogger/blogspot