வளருவது கிறிஸ்தவமா? இஸ்லாமா?
கிறிஸ்தவத்திற்கு
மாறின இலட்சக்கணக்கான முஸ்லீம்கள் கிறிஸ்மஸ் கொண்டாடினார்கள்.பல செய்தி ஊடகங்களும்,மிஷனரி அமைப்புகளும் இதை தெரிவிக்கின்றன.சாலேம்
தொனி ஊழியங்கள் இந்தியாவிலும் ,பிற முகமதிய நாடுகளிலும் முஸ்லீம்களுக்கு மத்தியில் சுவிசேசத்தை பிரசங்கித்து வருகின்றனர்.ஆப்பிரிக்க நாடுகளிலும் ,மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளிலும் 500 அதிகமான நற்செய்தியாளர்கள் முகமதியர் மத்தியில் ஊழியம் செய்துகொண்டிருக்கிறார்கள்.ஒவ்வொரு நாளும் ஒரு பெரிய எண்ணிக்கையிலான முஸ்லீம்கள் உண்மையை கண்டுகொண்டு இயேசுகிறிஸ்துவின் இரட்சிப்பை அடைகிறார்கள்.சரித்திரத்தில்
இல்லாத அளவு கடந்த பத்தாண்டுகளில் அதிகமான இஸ்லாமியர்கள் கிறிஸ்தவ விசுவாசத்திற்கு மாறியுள்ளனர்.வட ஆப்பிரிக்கா,மத்திய கிழக்கு,மத்திய ஆசியா பகுதிகளில் இப்பொழுது ஓர் ஆவிக்குரிய புரட்சி ஏற்பட்டுக்கொண்டிருக்கிறது.இதன் விளைவாக ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான முன்னாள் முகமதியர்கள் கடும் உபத்திரவங்கள்,படுகொலைகள்,மற்றும் ஆங்காங்கே சபை குண்டு வெடிப்புகளுக்கு மத்தியிலும் இந்த வருட கிறிஸ்துமஸ் கொண்டாடுகிறார்கள்.
ஜோயல் அவர்கள் சொன்னார் அவரும்,அவருடைய மனைவி,மற்றும் குழந்தைகளும் மூன்று மாதங்கள் மத்திய கிழக்குப் பகுதியில் வசித்தார்கள்.அந்த சமயத்தில் மூன்று டஜனுக்கு அதிகமான அரேபிய மற்றும் ஈரானிய போதகர்கள்,நற்செய்தியாளர்களை கண்டு பேட்டி எடுக்க வாய்ப்புகிடைத்தது என்று.
கடந்த
வருடத்தில் இந்தியா முழுவதும் 10,000 க்கும் அதிகமான முஸ்லீம்கள் இயேசுகிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுகொண்டுள்ளனர்.முகமதியர்களுக்கு பல்வேறு இந்திய மொழிகளிலும்,தாஷி மொழியிலும் அவர்களுடைய பேச்சு நடையின்படி ஆயிரக்கணக்காண புதிய ஏற்பாடுகளை இந்திய வேதாகம சங்கம் அச்சடித்துள்ளது .சாலேம் தொனி ஊழியங்களின் இயக்குனரான போதகர் பவுல் சினிராஜ் முகமது, இஸ்லாமியர்களுக்கு சுவிஷேசத்தை கொண்டு செல்லும் இந்திய வேதாகம மொழிபெயர்பாளர்களின் முக்கிய நபராவார்.அவர் உபத்திரவங்களுக்கு மத்தியில் இருக்கிறார்.சமீபத்தில் கூட அவருக்கும் ,அவருடைய குடும்பத்துக்கும் பயங்கரவாதிகளால் கொலை மிரட்டல் விடப்பட்டது.ஈராக்கில் ஏற்பட்ட பெரிய யுத்தம் முடிவுக்கு வந்ததில் இருந்து
5000 க்கும் மேற்பட்டவர்கள் கிரிஸ்தவத்திற்கு மாறியிருப்பது தெரியவந்துள்ளது .பாக்தாதில்
14 புதிய சபைகளும் ,குர்திஸ்தானில் சில சபைகளும் திறக்கப்பட்டுள்ளது.அவைகளில் சில 500 லிருந்து 800 விசுவாசிகளைக் கொண்டுள்ளது.2003லிருந்து ஒரு லட்சத்துக்கும் அதிகமான வேதாகமங்கள் கடல் வழியாக நாட்டிற்குள் கொண்டு போகப்பட்டுள்ளது.ஈராக்கியர்கள் அவைகளை வேகமாக பறித்துக்கொள்ளுகிறார்கள் .அவர்களுக்கு இன்னும் அதிகமான வேதாகமங்கள் தேவைப்படுகிறது.
மொராக்கோ
,சோமாலியா, இந்தோனேசியா,தாய்லாந்து,மலேசியா ,சிங்கப்பூர்,பாகிஸ்தான்,பங்களாதேஷ் ,சவுதி அரேபியா,ஐக்கிய அரபு எமிரேட்ஸ்,மற்றும் மாலத்தீவுகளில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கிறிஸ்துவிடம் திரும்பி ஆண்டவரை தொழுது கொள்ளுகிறார்கள் .ஏறக்குறைய ஒரு லட்சம் பேர் எகிப்தில் கடந்த
10 வருடங்களில் இயேசுவில் விசுவாசம் வைத்துள்ளனர் .1990 களில் எகிப்திய வேதாகமச்சங்கம் ஒரு வருடத்துக்கு ஏறக்குறைய "இயேசு "திரைப்படத்தின் 3000 காப்பிகளை விற்பனை செய்து வந்தது .2000.ல் நடைபெற்ற மில்லினிய முகாமில் இருந்து எடுக்கப்பட்ட ஆய்வின் படி அவர்கள் 600000 காப்பிகள் ,மற்றும் 750000 தனித்தனி ஆடியோ கேசட்டுகள்(அரபி ),மற்றும் அரபி புதிய ஏற்பாட்டின் அரை மில்லியன் காப்பிகளை விற்பனை செய்துள்ளனர்.எகிப்திய வேதாகம சங்கத்தின் பொது செயலாளர் ரமீஸ் அட்டல்லா இந்த விஷயங்களை போதகர் பவுல் சினி ராஜ் முகமது அவர்களுக்கு இமெயில் மூலம் தெரியப்படுத்தியுள்ளார் ."எகிப்தியர்கள் வேதவசனத்திற்கு அதிக பசியோடு இருக்கிறார்கள்"என்றும் அவர் கூறியுள்ளார் .
கடந்த வருட கிறிஸ்துமஸ் விழாவில் மத்திய கிழக்கில் உள்ள ஒரு மிகப்பெரிய கிறிஸ்தவ கூடுகையை சந்திக்கும் படியான வாய்ப்பு எனக்கு கிடைத்தது
(பவுல் சினிராஜ் முகமது).அது கெய்ரோ பட்டணத்தின் புறநகர் பகுதியில் உள்ள ஒரு மிகப்பெரிய குகையில் கூடுகிறது .ஒவ்வொரு வாரமும் சுமார் 10000 விசுவாசிகள் அங்கே கூடி ஆராதிக்கின்றனர் .ரோசன் பெர்க் கூறினார்"மே-2005ல் நடந்த அந்த சபயின் ஜெப கருத்தரங்குக்கு சுமார் 20000 விசுவாசிகள் கூடினார்கள்" என்று .2001
ல் ஆப்கானிஸ்தானில் வெறும் 17 கிறிஸ்தவர்கள்(இஸ்லாமில் இருந்து வந்தவர்கள்)இருந்தார்கள் .ஆனால் தற்போது 10000க்கும் அதிகமான பேர் விசுவாசிகளாக உள்லனர். ஒவ்வொரு வாரமும் ஒரு டஜன் ஞானஸ்தானம் நடைபெறுகிறது.1990
ல் மூன்றே அறியப்பட்ட கிறிஸ்தவர்கள் கஜகஸ்தானில் இருந்தார்கள் .உஸ்பேக்கிஸ்தானில் ஒரு கிறிஸ்தவரும் இல்லை.ஆனால் இப்போத் 15,000 க்கும் அதிகமானோர் கஜகஸ்தானிலும்,30,000க்கும் அதிகமானோர் உஸ்பேகிஸ்தானிலும் கிறிஸ்தவர்களாக உள்ளனர்.1979 ல்வெறும் 500கிறிஸ்தவர்கள் ஈரானில் இருந்தார்கள்.ஆனால் இன்று ஒரு மில்லியனுக்கும் அதிகமான ஈரானியர்கள் இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கிறார்கள் .இவர்கள் இரகசிய வீட்டு சபைகளில் கூடுகிறார்கள்.
சூடானில் கடும் இஸ்லாமிய ஆட்சி மற்றும்
200000 பேரை பலிகொண்ட தொடர் இனப்படுகொலைகளுக்கு மத்தியில் ஒரு மில்லியன் பேர் 2000த்திலிருது கிறிஸ்தவர்களாய் மாறியுள்ளனர்.மற்றும் 5 மில்லியன் பேர் 1990லிருந்து கிறிஸ்தவ விசுவாசத்திற்கு வந்திருக்கின்றனர். இயேசுவிடம் திரும்பும் இந்த பெரிய மக்கள் கூட்டத்தை வழிநடத்துவதற்கு போதகர்களுக்கு சிறப்பு பயிர்சிகள் குகைகளில் நடத்தப்படுகிறது.ஏன் இப்படி ஒரு ஆவிக்குரிய எழுச்சி
?ஒரு சூடானிய நற்செய்தியாளர் சொன்னார் "ஜனங்கள் உண்மையான இஸ்லாத்தை கண்டு விட்டார்கள்,அதற்கு பதிலாக அவர்கள் இயேசுவை விரும்புகிறார்கள் "டிசம்பர்
2001ல் ஷேக் அகமது அல் குட்டானி என்ற பிரபல சவுதி மதகுரு அல்ஜஷீரா தொலைக்காட்சியில் தோன்றி "ஒரு மிகப்பெரிய எண்ணிக்கையில் முஸ்லீம்கள் இயேசுவிடம் திரும்பிக்கொண்டிருக்கிறார்கள் ""
ஒவ்வொரு மணிநேரத்துக்கும் 667 முஸ்லீம்கள் கிறிஸ்தவத்துக்கு மாறிவருகின்றனர்""ஒவ்வொரு நாளும் 16000முஸ்லீமகள் கிறிஸ்தவர்களாக மாறுகின்றனர் என்று எச்சரித்தார் .அதிர்ச்சியடைந்த பேட்டியாளர் அந்த மதகுருவை இடை மறித்து"ஒரு நிமிஷம் கொஞ்சம் தெளிவாக சொல்லுங்கள் "6 மில்லியன் பேர் இஸ்லாமில் இருந்து கிறிஸ்தவத்துக்கு மாறுகிறார்களா?அவருடைய சொல்ல முடியாத ஆச்சரியத்துக்கு பதிலளித்த அல் குட்டானி சொன்னார் "ஒவ்வொரு வருடமும் மாறுகிறார்கள்" இது ஒரு துக்கமான விஷயம் என்று சொன்னார்ஈரான்
,ஈராக்கில் உள்ள முஸ்லீம்கள் ,மற்ற பல முஸ்லீம்களுடைய சிறப்பான விஷயம் என்னவென்றால் அவர்கள் முதலில் இயேசுவைப் பற்றிய கணவுகளையும், தரிசனங்களையும் கண்டு பின் சபைக்கு வருவார்கள்.ஏற்கனவே மாறினவர்களாக வரும் அவர்களுக்கு வேதாகமமும், மற்றும் எப்படி இயேசுவை பின்பற்ற வேண்டும் என்ற வழிநடத்துதலும் தான் தேவைப்படும்.இது வேதாகம யோவேல்லின் தீர்க்கதரிசன நிறைவேறுதல் ஆகும் .
"
யோவேல்2; .28. அதற்குப் பின்பு நான் மாம்சமான யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன்; அப்பொழுது உங்கள் குமாரரும் உங்கள் குமாரத்திகளும் தீர்க்கதரினஞ் சொல்லுவார்கள்; உங்கள் மூப்பர் சொப்பனங்களையும், உங்கள் வாலிபர் தரிசனங்களையும் காண்பார்கள்.29. ஊழியக்காரர்மேலும் ஊழியக்காரிகள்மேலும், அந்நாட்களிலே என் ஆவியை ஊற்றுவேன்.30. வானத்திலும் பூமியிலும் இரத்தம் அக்கினி புகைஸ்தம்பங்களாகிய அதிசயங்களைக் காட்டுவேன் .31. கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருமுன்னே சூரியன் இருளாகவும், சந்திரன் இரத்தமாகவும் மாறும்.32. அப்பொழுது கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ளுகிறவனெவனோ அவன் இரட்சிக்கப்படுவான்; கர்த்தர் சொன்னபடி, சீயோன் பர்வதத்திலும் எருசலேமிலும் கர்த்தர் வரவழைக்கும மீதியாயிருப்பவர்களிடத்திலும் இரட்சிப்பு உண்டாயிருக்கும். "
இன்னும் சில வருடங்களில் எல்லா முஸ்லீம் நாடுகளும் பரிசுத்த ஆவியின் கிரியையினால் இயேசுவிடம் திரும்பும்
. இதை சாத்தான் அறிந்தபடியினால்தான் கிறிஸ்தவ விசுவாசிகளையும்,போதகர்களையும் உபத்திரவத்தினாலும் ,கொலைகளைனாலும் சோர்வுக்குள்ளாக்க முயற்சி செய்கிறான்.ஆனால் நமது ஆஹ்டவர் இயேசு இறுதி வெற்றியை தமதாக்குவார் .
சாலேம் தொனி ஊழியங்களின் போதகர் இத்ரீஸ் சலாஹீதீன் சொன்னார்கள்
.நூற்றுக்கணக்கான சதாரன மூஸ்லீம்கள் ,கிறிஸ்தவர்களுக்கு விரோதமான மத வெறியர்களின் காட்டுமிராண்டித்தனத்தை பார்ப்பதினால் , அவர்கள் இரகசியமாக கிறிஸ்தவத்திற்கு மாறி கிறிஸ்தவ விசுவாசிகளாகிறார்கள்.பெயரளவில் உள்ள கிறிஸ்தவர்களுக்கு விசுவாசத்தையும் ,தைரியத்தையும் இந்த உபத்திரவங்கள் அளிக்கும்.
http://www.islam-watch.org/LeavingIslam/Muslims2Christianity.htm
Comment Form under post in blogger/blogspot