இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Saturday, October 13, 2007

ஒரு இஸ்லாமிய மத குருவின் மகனாக இருந்து, இயேசுவை கண்டுகொண்டது எவ்விதம்?

சாட்சி: இயேசுவின் கேரளச் சிங்கம் Rev. K.K. Alavi

(ஒரு இஸ்லாமிய மத குருவின் மகனாக இருந்து, இயேசுவை கண்டுகொண்டது எவ்விதம்?)

http://tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=4817#4817

தற்போது, சில இஸ்லாமிய தளங்களில் பல பொய்யான சாட்சிகளை எழுதுகின்றனர். அதாவது ஒரு புகழ்பெற்ற கிறிஸ்தவர் இஸ்லாமை தழுவினார் என்று சொல்லிக்கொள்கிறார்கள். ஆனால், உண்மை என்னவென்று தேடிப்பார்த்தால், அது ஒரு பொய் என்பது நிருபனமாகும். உதாரணத்திற்கு நேசமுடன் தளத்தில் வெளியான கட்டுரையை படிக்கவும்: நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...? ஈஸா குர்-ஆன் சந்தேகம்


ஆனால், இதோ இயேசுவிற்காக வாழும் சாட்சி ஒன்று, நம் இந்தியாவிலிருந்து, அதுவும் ஒரு முல்லாவின்(இஸ்லாமிய மத குருவின்) மகனாக பிறந்து இயேசுவை பின்பற்றி எழுந்து பிரகாசிக்கும் சாட்சி. படியுங்கள், இயேசுவை துதியுங்கள், ஜெபியுங்கள்.

இந்த கட்டுரையை கீழ்கண்ட இரண்டு பிரிவுகளாக பிரித்து எழுதுகிறேன்.

1. K.K. ஆலவி அவர்களின் தற்போதைய ஊழியம், (இஸ்லாமியர்களின் பயமுறுத்தல், துப்பாக்கிச் சூடு ) வாழ்க்கை குறிப்பு.

2. K.K. ஆலவி அவர்களின் வாழ்க்கைச் சாட்சி(எப்படி இயேசுவை ஏற்றுக்கொண்டார்)
===================================================


1. K.K. ஆலவி அவர்களின் தற்போதைய ஊழியம், (இஸ்லாமியர்களின் பயமுறுத்தல், துப்பாக்கிச் சூடு ) வாழ்க்கை குறிப்பு.

பெயர்: K.K. Alavi
ஊர்: செருக்குன்னு கிராமம் (Cherukunnu) (இப்போது இருப்பது, காலிகட் என்ற ஊரில்)
மாநிலம்: கேரளா, இந்தியா.
பிறந்த நாள்: July 15, 1951

இஸ்லாமிய குழுக்களின் எதிர்ப்புக்கள்:

தன்னுடைய 21வது வயதில் இயேசுவை தன் சொந்த தெய்வமாக ஏற்றுக்கொண்ட நாள் முதல் கொண்டு இவருக்கு பல பிரச்சனைகள் வர ஆரம்பித்தது. இவரை இவர் தந்தை ஒரு தூணில் கட்டிவைத்து ஒரு தடியால் அடித்ததிலிருந்து இவருக்கு பிரச்சனைகள் வர ஆரம்பித்தது. இவர் எதிர்கொண்ட பிரச்சனைகளை சுருக்கமாக கீழே தருகிறேன்.

1. நான்கு முறை இவர் மீது கொலை முயற்சி செய்யப்பட்டுள்ளது.
2. கடிதங்கள் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் பல பயமுறுத்தல்கள் இவருக்கு வந்தவண்ணமாகவே உள்ளன.
3. இஸ்லாமிய குழுக்களால் இவர் மீது 11 வழக்குகள் தொடரப்பட்டன.
4. ஒரு முறை துப்பாக்கி ஏந்திய ஒருவன் இவர் வீட்டை நோக்கிச் சுட்டான்.
5. சில பத்திரிக்கையாளர்கள் இவரிடம் வந்து "உங்கள் உயிருக்கு ஆபத்து என்று சொல்லும் போது" கீழ்கண்டவாறு இவர் பதில் கூறினார்.
Quote:
"Last month, a few reporters came to me warning that killers were out to take me down," Alavi said. "All my life I have had threats from fundamentalists. So I wasn't surprised to hear this from reporters who were tipped off by a source with a radical, Indian Islamic group."

6. இஸ்லாமிய அமைப்புக்கள் நாங்கள் இப்படி பயமுறுத்தவில்லை என்று சொல்கிறார்கள், ஆனால், இவர்களின் கை இதில் உள்ளது என்று காவல் துறை சொல்கிறது.
Quote:
Though Muslim extremist organizations deny having any part in the attempts on his life, police officials and intelligence agencies have confirmed their role.

7. இவர் இதுவரையில் 20 புத்தகங்கள் எழுதியுள்ளார், முக்கியமாக முஸ்லீம்களை இயேசுவிடம் அழைப்பதற்காக.

8. இவருடைய ஊழியத்தைப் பற்றி.
Quote:
In an Islamic area where Christianity is considered blasphemy, Rev. Alavi has led at least 50 Muslims – estimates range as high as 200 – to a saving knowledge of Jesus Christ. Each year thousands of inquiries pour in. Working out of his home in Calicut, he meets curious and questioning Muslims asking about Jesus.

9. 1981ல் சில சுன்னி முஸ்லீம் கூட்டம் இவரை கொலை செய்ய இவர் வீட்டில் புகுந்த போது, இவர் தப்பியோடு ஒரு "இந்து வழக்கறிஞர்" வீட்டில் தஞ்சம் புகுந்தார். இந்த சகோதரர் இவருக்கு பாதுகாப்பு அளித்தார்.
Quote:
The threats on his life began in 1981. "A mob of Sunni Muslims stormed into my property looking for me with machetes," he said. "I ran all the way to the police station. Later I took refuge at the home of a Hindu attorney." The lawyer's family fed him and eventually provided an escort back to his home

10. 1993ல் National Development Front (NDF) என்ற ஒரு இஸ்லாமிய குழு உருவானது(பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு இந்த குழு உருவானது). இந்த குழு பல கூட்டங்களை நடத்தி இவர் "இஸ்லாமின் ஒரு முக்கிய எதிரி" என்று சொல்லிக்கொண்டு வருகிறார்கள். மட்டுமல்ல பல கேசட்களில் இவரைப் பற்றி பதிவுச் செய்து இந்தியாவிலும், மத்திய கிழக்கு நாடுகளில் வினியோகிக்கிறார்கள்.

11. 1998ல் இவர் மீது ஒரு இஸ்லாமிய குழு 11 வழக்குகளை தொடர்ந்தது, முக்கியமாக இவர் ஒரு ஏமாற்றுக்காரர் என்று, இவர் ஒரு பெண்ணை கற்பழித்தார் என்றும் வழக்குகள் தொடர்ந்தன. இந்த இஸ்லாகிய குழு "இவர் கற்பழித்தார் என்று நிருபிக்க ஒரு பெண்ணையும் தயார் படுத்தினார்களாம்".
Quote:
"All were well-planned and backed by renowned lawyers supported by Islamic groups," he said. "They also produced a woman who claimed I raped her."

இவர் மீது பொய் வழக்குகள் போட்டு, போஸ்டர்களை ஊரெல்லாம் ஒட்டினார்களாம், இவர் குடும்பம் மிகவும் கஷ்டப்பட்டது.
Quote:
Muslim groups announced these crimes throughout the towns of Manjeri, Calicut, Tirur, and others, he said. Posters appeared on walls saying he smuggled arms. These attacks were hard on his family, including his wife Yasmin Alavi, the daughter of Muslim converts, who is very active in extending hospitality to the hundreds of people who come to the Alavi home. The Alavis have three grown children.
"My family was shaken, but I knew the Lord would protect me," he said

.


12. இவர் மீது போடப்பட்ட எல்லா வழக்கையும் ஒவ்வொன்றாக கேரள உயர் நீதி மன்றம் தள்ளுபடி செய்ததாம், சரியான ஆதாரங்கள் இல்லாததால். மட்டுமல்ல, இவருக்கு பாதுகாப்பு அளிக்க முன்வந்ததாம்

13. மரண அச்சுருத்தல்: இவருக்கு பல இஸ்லமைய ஸ்தானபங்களிலிருந்து அச்சுருத்தல்கள் வருகின்றன. இவருடைய சர்ச்(சபை) மீது தாக்குதல் செய்யப்பட்டது, சர்சின் சிலுவையை அழித்துவிட்டார்களாம்.

14. ஒரு முறை இவர் பாஸ்டராக ஊழியம் செய்யும் லூதரன் சர்ச் அதிகாரிகள்,இவர் உயிரை காப்பாற்ற இவரை கட்டாயத்தின் பேரில் பெங்களுருக்கு அனுப்பிவிட்டார்களாம்.


15. சில வருடங்களுக்கு முன், சில இஸ்லாமிய குழுவிலிருந்து சிலர், சிகன்னூர் கிராமத்தின் மௌலவியை கொல்ல சென்றார்களாம், மற்றுமொரு குழு இவரை கொலை செய்ய வந்தார்களாம், இவர் வீட்டில் இல்லாததால், இவர் உயிர் தப்பியது, ஆனால், அந்த சிகன்னூர் இஸ்லாமிய மௌலவியின் இரத்தத்தை அவர் குடித்து சென்றுவிட்டனர். இந்த இஸ்லாமிய மௌலவி, இஸ்லாமியர்களில் தீவிரவாதம் நல்லதல்ல என்று சொன்னதால் அவரை கொன்றார்களாம்.
Quote:
A decade ago, a group of Islamic extremists came looking for him while another team was dispatched to murder Chekannur Maulvi, a liberal Muslim teacher who broke with convention and decried Islamic fundamentalism. Maulvi was murdered that day, but Alavi was away from home and thus spared

16. NDF பட்டியலில் இவரது பெயர் இரண்டாவதாக இருக்கிறதாம்.
Quote:
"Now, sources have alerted me that I'm second on the hit list prepared by the Muslim fundamentalist NDF," he says.

17. ஒரு முறை இவரது வீட்டில் இரவு 10 மணி அளவில் ஒரு மனிதன் துப்பாக்கியால் சுட்டானாம், குண்டு சுவரில் தேய்த்துக்கொண்டு சென்றதாம். மற்றுமொரு முறை இவர் சபையில் பேசிக்கொண்டு இருக்கும் போது ஒருவன் துப்பாக்கியுடன் சபையின் பக்கத்தில் நின்றுக்கொண்டு இருந்தானாம், ஒரு சகோதரி அவனிடம் பேசப்போனபோது அவன் தப்பி சென்று விட்டான்.
Quote:
Last August, while he was still in Manjeri, someone shot at his house in Calicut at around 10 p.m. "The stone wall still carries the mark," he said.

On another occasion, as he was speaking in church, there was a man in the church holding a gun. "But he had to flee when a Lutheran sister tried to talk to him," he said.

18. இவ்வளவு ஆபத்து அவருக்கு இருந்தும் அவர் சொல்கிறார்:
"மனிதனின் பாதுகாப்பு எனக்கு வேண்டாம், தேவன் என்னோடு இருக்கும் போது, யார் என்னை என்ன செய்யமுடியும்?"

In spite of the dangers, Rev. Avali said he has declined the court-approved security offered to him.
"I can claim security from police wherever I go, but I believe if I do that I'll lose the protection of my guardian angels," said Rev. Alavi, who has been diagnosed with a weak heart. "So I've declined man's support and have turned to God's care and protection. Who can kill me if God's with me?"

Source: All quotations are taken from this page: http://persecution.in/node/170?PHPSESSID=32e2a6e665c6b3aa19c076c0b5fb0e0d


2. K.K. ஆலவி அவர்களின் வாழ்க்கைச் சாட்சி
(எப்படி இயேசுவை ஏற்றுக்கொண்டார்)

இவருடைய சாட்சியை 32 மொழிகளில் மொழிபெயர்த்துள்ளார்களாம், கண்டிப்பாக தமிழிலும் இருக்க வாய்ப்பு உள்ளது. யாருக்காவது தமிழில் கிடைத்தால், அதை இத்தளத்தில் பதியும் படி கேட்டுக்கொள்கிறேன்.

இவருடைய சாட்சியை ஆங்கிலத்தில் இங்கு படிக்கலாம்: http://www.the-good-way.com/eng/article/a16.htm

இவருடைய சாட்சி தமிழில் கிடைக்கும்வரை, நம் தள சகோதரர்களுக்காக, இவரது சாட்சியின் சுருக்கத்தை தமிழில் தருகிறேன். முழு சாட்சியையும் ஆங்கிலத்தில் படித்துக்கொள்ளவும். இந்த மொழி பெயர்ப்பு, இவரது சாட்சியின் சுருக்கமே தவிர, ஒவ்வொரு வரியையும் மொழிபெயர்க்கவில்லை.

============================


IN SEARCH OF ASSURANCE (நிச்சயத்தைத் தேடி)
by K. K. Alavi

CONTENTS - உள்ளடக்கம்

MY CHILDHOOD - என் பள்ளிப்பருவம்
AN EVENTFUL DAY - ஒரு முக்கியமான நாள்
FURTHER STUDY - மேலும் அதிகமாக படித்து அறிய
CHAINED BY LOVE - அன்பால் கட்டப்பட்டேன்
GOD DELIVERS ME - தேவன் என்னை விடுதலையாக்கினார்
FINDING THE LIGHT - வெளிச்சத்தை கண்டேன்
A GREAT DECISION - ஒரு முக்கியமான முடிவு
IN HIS SERVICE - அவரது ஊழிய பாதையில்
CONCLUSION - முடிவுரை

MY CHILDHOOD - என் பள்ளிப்பருவம்

நான் ஜூலை 15 1951 வெள்ளிக்கிழமையன்று பிறந்தேன். என் தந்தை ஒரு முல்லா(இஸ்லாமிய மத குரு) ஆவார். என் ஊர் கேரளாவிலுள்ள செருக்குன்னு கிராமம். நாங்கள் மதத்தில் மிகவும் கண்டிப்பாக இருப்பதால், கிராமத்தில் எங்கள் குடும்பம் என்றால் எல்லாருக்கும் ஒரு தனிமதிப்பு.

என் தந்தை எல்லாருக்கும் குர்-ஆனை கற்றுக்கொடுப்பார், எனக்கும் கற்றுக்கொடுப்பார். என் தந்தையின் மடியில் உட்கார்ந்து குர்-ஆன் கற்ற நினைவு இன்னும் எனக்கு நினையில் உள்ளது. ஒவ்வொரு நாளின் துவக்கமும், முடிவும் குர்-ஆன் படித்து தான் நாங்கள் துவக்குவோம், முடிப்போம்.

எனக்கு 5 வயதான போது, குர்-ஆன்(அரபி) கற்றுக்கொள்ள, நான் மதரஸாவிற்கு அனுப்பப்பட்டேன். மற்ற பாடங்களையும் கற்றேன். எனக்கு 10 வயதாகும் போது, நான் கோட்டக்கால்(Kottakal) என்ற இடத்திலுள்ள பள்ளிக்கு அனுப்பப்பட்டேன். அங்கு நான் 1 வருடம் 6 மாதங்கள் மட்டுமே படித்தேன், பிறகு நிறுத்தப்பட்டேன், ஏன் என்று உங்களுக்கு பிறகு புரியும்.


AN EVENTFUL DAY - ஒரு முக்கியமான நாள்


ஒரு நாள் பள்ளியிலிருந்து வீட்டிற்குச் சொல்லும் பொது, சந்தையில் சில கிறிஸ்தவர்கள் தங்கள் நம்பிக்கையைப் பற்றியும், இயேசுவின் வாழ்க்கையைப் பற்றியும் சொல்லிக்கொண்டு இருந்தார்கள், பல புத்தகங்களை விற்றுக்கொண்டு இருந்தார்கள். முதலில் அவர்களைப் பார்த்து கேலிச் சிரிப்பு சிரித்துவிட்டு, நானும் என் நண்பர்களும் சில புத்தகங்களை வாங்கினோம்.

நான் வாங்கிய புத்தகம் "பாக் என்பவனின் இதயம் (The Heart of Pak)", என் நண்பன் வாங்கிய புத்தகம் "இரட்சிப்பின் வழி (The Way of Salvation)" ஆகும். அவன் அதை வழியிலேயே கிழித்துவிட்டு எரிந்துவிட்டான். எனக்கு கிறிஸ்தவர்கள் என்றால் பிடிக்காது என்றாலும், நான் கிழிக்காமல் வைத்துக்கொண்டேன். வீட்டிற்குச் சென்று தனிமையில் உட்கார்ந்து அந்த புத்தகத்தை படித்தேன். அது ஒரு கிறிஸ்தவருக்கும் ஒரு பையனுக்கு இடையில் நடந்த உரையாடலாக இருந்தது. எனக்கு ஆச்சரியமாக இருந்தது, "இதில் சொல்லப்பட்ட இயேசுவா... நாங்கள் நபி என்று கூறும் ஈஸா" என்று வியந்தேன். குர்-ஆன் சொல்லும் இயேசுவும் நான் படித்த இந்த இயேசுவின் வேறுவேறாக இருக்கிறதே. இவர் பாவங்களை மன்னிக்கிறவர் என்று நான் அதில் படித்தேன். இயேசுவின் மன்னிக்கும் குணம் அந்த புத்தகத்தில் வரும் பையனை மாற்றிவிட்டது. இது இயேசுவை நான் நேசிக்கும்படி செய்தது.

இந்த புத்தகம் படிக்கும்போது ஒரு கிறிஸ்தவர் என்னோடு பேசியது போல் இருந்தது. என் இதயம் இந்த பையனுடைய இதயத்தைவிட கேடுள்ளதாக இருந்தது. எப்படி எனக்கு இதிலிருந்து முக்தி கிடைக்கும்? அந்த புத்தகம் எனக்கு ஒரு வழியை சொல்லியது, இருந்தாலும் நான் எப்படி அதை ஏற்றுக்கொள்ளமுடியும்? இறைவன் தவிர வேறு யாரும் பாவத்தை மன்னிக்கமுடியாது, இயேசு ஒரு நபி மட்டும் தான் என்று நான் போதிக்கப்பட்டு இருந்தேன்.

அந்த புத்தகத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு என்னால் பதில் தரமுடியவில்லை. என் பாவத்திலிருந்து எப்படி விடுதலை பெறுவது? நான் மரித்தபிறகு இறைவனின் நியாயத்தீர்ப்பில் எப்படி நிற்பேன் போன்ற கேள்விகள் என்னை துளைத்தன. எனவே, அந்த புத்தகத்தில் இருந்த "தபால் வழி" பைபிள் கோர்ஸ் படிக்கமுடிவு செய்தேன்.

FURTHER STUDY - மேலும் அதிகமாக படித்து அறிய

தபால்காரன் எனக்கு வந்த பைபிள் கோர்ஸ் புத்தகத்தை என் சித்தப்பாவிடம் கொடுத்துவிட்டான். அவர் அதை திறந்து பார்த்தார், அதில் உள்ள கிறிஸ்தவ புத்தகத்தை பார்த்து திகைத்தார், என் அப்பாவிடம் காட்டிவிட்டார். அவர்கள் என் பைபிள் கோர்ஸ் படிப்பை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய முடிவு செய்தனர்.

அன்று மாலை நான் பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்தேன், என் அப்பா என்னை வராண்டாவில் உள்ள ஒரு தூணுக்கு என்னை கட்டி, ஒரு பிரம்பால் நான் பலவீனப்பட்டு போகும் வரைக்கும் என்னை அடித்தார்.

மறு நாள் காலை என் அப்பா என்னை அழைத்து அன்பாக பேசினார். "நாம் முஸ்லிம்கள் அப்படிப்பட்ட புத்தகங்களை படிக்கக்கூடாது, அவைகள் தடை செய்யப்பட்டவை, முக்கியமாக கிறிஸ்தவர்களின் புத்தகங்கள் மார்க்கத்தில் தடை செய்யப்பட்டவை. அவைகள் படிப்பதற்கு மிகவும் அருமையான இருக்கும், ஆனால், அவைகளை நாம் படித்தால், நாமும் கிறிஸ்தவர்களாகி விடுவோம். பிறகு நம் குடும்பம் என்ன ஆவது? நம் முழுவாழ்க்கையும் பாழாகும், நம் சமுதாயம் நம்மை ஒதுக்கிவிடும்.இது இஸ்லாமிலே சாபமாகும்." என்று எனக்குச் சொன்னார். இனி நானும் அப்படிப்பட்ட புத்தகங்களை படிக்கமாட்டேன் என்று என் அப்பாவிடம் சத்தியம் செய்து கொடுத்தேன்.


நான் அந்த புத்தகத்தை கிழித்துவிட்டேன், என் நண்பனைப் போல நான் முன்னமே ஏன் கிழித்துப் போடவில்லை என்று என்னை நானே நொந்துக்கொண்டேன். அன்றிலிருந்து நான் ஒரு தீவிர முஸ்லீமாக தினமும் என் குர்-ஆன் படிப்பதிலும், நமாஜ் செய்வதிலும் கழித்தேன். நாட்கள் செல்லச் செல்ல, அந்த புத்தகம் சொன்னது போல, நான் என் இதயத்தின் பாவ நிலையை நினைக்கும் போதேல்லாம், என் மனதிற்கு அமைதி இல்லாமல் இருந்தது. ஒவ்வொரு நாளும் குர்-ஆன் படிக்கும் போதேல்லாம், திரும்ப திரும்ப வாசிக்கப்படும் "இயேசு" என்ற பெயரை நான் எப்படி மறக்கமுடியும். எனவே, இயேசு பற்றிய இஸ்லாமிய புத்தகங்களையும், குர்-ஆனிலும் என்ன சொல்லப்பட்டுள்ளது என்று தெரிந்துக்கொள்ள முடிவுசெய்தேன்.

எனக்கு அரபி அதிகமாக தெரியாது என்பதால், நண்பன் யூசுப் மௌலாவி உதவியுடன் படித்து தெரிந்துக்கொண்டேன். அவன் அரபி பள்ளியில் ஒரு ஆசிரியன், எங்கள் குடும்ப நண்பரும் கூட. ஈஸாவிற்கு குர்-ஆனிலும், ஹதீஸ்களிலும் முக்கியமான இடம் இருப்பதை நான் கண்டுபிடித்தேன். குர்-ஆனிலே " இயேசுவிற்கு என் நபியாகிய முகமதுவைவிடவும் அதிக முக்கியத்துவம் இருப்பதாக" எனக்கு பட்டது. என் குடும்ப நண்பரும், என் குடும்ப நபர்களும் எனக்கு மிகவும் மரியாதையாக எச்சரித்தார்கள், நான் அதிகமாக முகதுவை பற்றி அறிய முயற்சி எடுக்கச் சொன்னார்கள். இருந்தும், இயேசுவின் பிறப்பு, மற்றும் அவரின் அற்புத செயல்களைப் பற்றி குர்-ஆன் சொல்லும் வசனத்தைப் பற்றி நான் அதிகமாக ஆச்சரியப்பட வைத்தது.
Quote:

மலக்குகள் கூறினார்கள்; "மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் தன்னிடமிருந்து வரும் ஒரு சொல்லைக் கொண்டு உமக்கு (ஒரு மகவு வரவிருப்பது பற்றி) நன்மாராயங் கூறுகிறான். அதன் பெயர் மஸீஹ்;. மர்யமின் மகன் ஈஸா என்பதாகும். அவர் இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் கண்ணியமிக்கோராகவும் (இறைவனுக்கு) நெருங்கி இருப்பவர்களில் ஒருவராகவும் இருப்பார்;. (3:45)

"மேலும், அவர் (குழந்தையாகத்) தொட்டிலில் இருக்கும்போதும், (பால்யம் தாண்டி) முதிர்ச்சியடைந்த பருவத்திலும் அவர் மக்களுடன் பேசுவார்; இன்னும் (நல்லொழுக்கமுடைய) சான்றோர்களில் ஒருவராகவும் அவர் இருப்பார்." (3:46)

(அச்சமயம் மர்யம்) கூறினார்; "என் இறைவனே! என்னை ஒரு மனிதனும் தொடாதிருக்கும்போது எனக்கு எவ்வாறு ஒரு மகன் உண்டாக முடியும்?" (அதற்கு) அவன் கூறினான்; "அப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு காரியத்தைத் தீர்மானித்தால், அவன் அதனிடம் 'ஆகுக' எனக்கூறுகிறான், உடனே அது ஆகி விடுகிறது." (3:47)

இன்னும் அவருக்கு அவன் வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுப்பான். (3:4

இஸ்ராயீலின் சந்ததியனருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான்; இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர் "நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன்;. நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன்;. அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன்;. அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன்;. நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவேன். நீங்கள் முஃமின்கள் (நம்பிக்கையாளர்) ஆக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது" (என்று கூறினார்). (3:49)

"எனக்கு முன் இருக்கும் தவ்ராத்தை மெய்பிக்கவும், உங்களுக்கு விலக்கி வைக்கப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும், உங்கள் இறைவனிடமிருந்து (இத்தகைய) அத்தாட்சியை உங்களிடம் நான் கொண்டு வந்திருக்கிறேன்;, ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; என்னைப் பின் பற்றுங்கள்." (3:50)

தோராவையும், சுவிசேஷங்களையும் குர்-ஆன் குறிப்பிடுவதை நான் கவனித்தேன். அவைகளை நம்பும்படி குர்-ஆன் வசனம் என்னை உட்சாகப்படுத்தியது: "அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன (5:46)" என்று குர்-ஆன் சொல்கிறது.

இன்னொரு வசனம் என் மனதில் அடிக்கடி வருவது, குர்-ஆன் 10:94 ஆகும்.

(நபியே!) நாம் உம் மீது இறக்கியுள்ள இ(வ்வேதத்)தில் சந்தேகம் கொளிவீராயின், உமக்கு முன்னர் உள்ள வேதத்தை ஓதுகிறார்களே அவர்களிடம் கேட்டுப் பார்ப்பீராக் நிச்சயமாக உம் இறைவனிடமிருந்து உமக்குச் சத்திய (வேத)ம் வந்துள்ளது - எனவே சந்தேகம் கொள்பவர்களில் நீரும் ஒருவராகி விட வேண்டாம். (10:94)

இந்த வசனத்தை படித்தவுடன் எனக்கு அந்த கிறிஸ்தவ புத்தக நியாபகம் வந்தது. இஸ்லாம் படி கிறிஸ்தவர்கள் "வேதங்கள் கொடுக்கப்பட்டவர்கள்" ஆவார்கள். முகமதுவின் சந்தேகங்களை கிறிஸ்தவர்களோடு பகிர்ந்துக்கொள்ள குர்-ஆன் அவரை உட்சாகப்படுத்தும் போது, நான் ஏன் என் சந்தேகங்களை கிறிஸ்தவர்களோடு பகிர்ந்துக்கொள்ளக்கூடாது. எனக்கு அவர்களை சந்திக்க வாய்ப்புக்கள் குறைவு.

எங்கள் ஊரின் பக்கத்தில் ஒரு கிறிஸ்தவ மிஷினரி மருத்துவமனை இருந்தது. அங்கு சென்று மிகவும் பயத்துடன் ஒரு மிஷனரியை சந்தித்தோம் நானும் என் நண்பன் அப்துல்லாவும். அவர் எங்களை அன்புடன் வரவேற்று, சிறிது நேரம் பேசிவிட்டு, ஞாயிறு பள்ளிக்கு(Sunday School) வரும் படிச் சொன்னார்.

எங்களுக்கு கிறிஸ்தவ நூலகத்தை(Christian Reading Room) அறிமுகம் செய்தார்கள், அங்கு ஒரு நண்பன் எனக்கு கிடைத்தான். நாங்கள் யோவான் சுவிசேஷ தபால் வழி படிப்பை படித்தோம். பல வாரங்கள் கழித்து ஒரு முறை சிலர் என்னையும், அப்துல்லாவையும் பார்த்துவிட்டார்கள், அப்துல்லாவை அதிகமாக அடித்ததால், அவன் உண்மையை சொல்லிவிட்டான்.

அடுத்த நாள மாலை நான் பள்ளியிலிருந்து விட்டிற்கு வந்தேன், என் அம்மா, சகோதரிகள் அழுதுக்கொண்டு இருந்தார்கள், என் அப்பா என்னை கட்டினார், அடித்தார், பச்சை மிளகாய் அறைத்து என் முகத்திலும், கண்களிலும் தேய்த்தார். பக்கத்து விட்டு அம்மாவினாலும், என் அண்ணியின் உதவியினாலும், நான் விடுவிக்கப்பட்டு, தண்ணிரால் கழுவப்பட்டேன்.

மறு நாள் காலையில் என் அப்பா என்னை அழைத்தார், என்னை கீழ்கண்ட இஸ்லாமிய பிரமாணத்தை சொல்லச் சொன்னார்.

"அல்லாவை தவிர வேறு இறைவன் இல்லை, முகமது அல்லாவின் தூதராவார்"

என் அப்பா, கிறிஸ்தவத்தைப் பற்றியும், அவர்கள் இஞ்ஜிலை திருத்திவிட்டார்கள் என்றும், மற்றும் கிறிஸ்தவர்களின் கெட்ட வாழ்க்கையைப் பற்றியும் எச்சரித்தார். என் எல்லா கிறிஸ்தவ புத்தகங்களை என் சகோதரியிடம் எரித்துவிடும்படிச் சொன்னார். எல்லாம் எரிக்கப்பட்டது. இச்செயல்கள் என்னை அதிகமாக பாதித்தது. நான் கதரி கதரி அழுதேன். எனக்கு மன அமைதியில்லை, கிறிஸ்துவை அதிகமாக அறியும் எல்லா வாய்ப்புக்களும் துண்டிக்கப்பட்டது.


புத்தகம் எரிக்கப்பட்ட இடத்திற்குச் சென்று பார்த்தேன். நான் மிகவும் வேதனைப்பட்டேன். அந்த புத்தகத்தில் சொல்லப்பட்ட பையனைப்போல, நானும் என் பாவத்தின் பாரத்தை சுமப்பதை உணர்ந்தேன். ஒரு முஸ்லீமாக " ஒருவன் பாவத்தை ஒருவன் சுமக்கமுடியாது Sura al-An`am 6:165" என்று நான் போதிக்கப்பட்டுள்ளேன். அப்படியானால், இயேசு எப்படி என் பாவத்தை மன்னிக்கமுடியும்? என்னை வழி நடத்தும்படி இறைவனிடம் வேண்டினேன்.

என் பாவங்கள் என்னை விட்டு நீங்க வில்லை என்பதை நான் உணர்ந்தேன். என் இதயத்தை தொடர்ந்து நான் கடிந்துக்கொண்டேன். நான் என் கிறிஸ்தவ நண்பர்களை சந்திக்கவேண்டும் என்ற ஆவல் மறுபடியும் என்னில் எழும்பிற்று. நான் படும் கஷ்டத்தை அவர்களிடம் சொல்லி ஆறுதல் அடையலாம் என்று எண்ணினேன். அந்த மிஷனரியை நான் சந்தித்தேன். அவர் கிறிஸ்தவத்தில் இப்படிப்பட்ட கஷ்டங்களை நான் அனுபவிக்கவேண்டும் என்றுச் சொன்னார். அவருக்கு குர்-ஆனும், இஸ்லாமும் தெரியும்.

ஒரு யோவான் சுவிசேஷத்தோடு வீட்டிற்கு வந்தேன், யாரும் பார்க்கக்கூடாது என்று காட்டில் ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு, ஒரு கல்லின் அடியில் வைத்தேன். அவ்வப்போது சென்று படிப்பேன்.

"Do not let your hearts be troubled. Trust in God; trust also in me." John 14:1
யோவான்: 14:1. உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும்விசுவாசமாயிருங்கள்.

"என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள்" என்ன வார்த்தைகள் என்னை மிகவும் அசைத்தது.

அடுத்த வாரம் ஞாயிறு பள்ளிக்கு பேருந்தில் செல்லும் போது என் சித்தப்பா பார்த்துவிட்டார், வீட்டில் எனக்கு என்ன காத்திருக்கும் என்று நினைத்து மிகவும் பயந்துபோனேன். இருந்தும், அன்று ஞாயிறு பள்ளிக்கு சென்று விட்டு தான் வீட்டிற்குச் சென்றேன்.


கிறிஸ்தவ நண்பர்களை நான் சந்திக்கும் முன்பு, எனக்கு கிறிஸ்தவர்களைப் பற்றி கெட்ட எண்ணம் இருந்தது. ஆனால்,இந்த மிஷனரியை சந்தித்த பின்பு, அவரின் நடத்தை, அவரின் வாழ்க்கை முறை, முஸ்லீம்களை பற்றி அவர் கொண்டுள்ள நல்ல எண்ணம் போன்றவைகளை பார்த்து. இஸ்லாமியர்களால் கிறிஸ்தவர்களின் வாழ்க்கையைப் பற்றி சுமத்தப்படும் எல்லா குற்றச்சாட்டுகளும் உண்மையானது அல்ல என்று அறிந்துக்கொண்டேன்.

இந்த மிஷனரியின் அன்பு, இஸ்லாமியர்களின் அன்பை விட அதிகமா? என் நபியாகிய முகமது எனக்காக செய்ததை விட, மேஸீஹா இயேசு இந்த மிஷனரிக்காக அதிகமாக செய்தாரா?

குர்-ஆன் சொல்வது போல, கிறிஸ்தவர்கள் காபிர்களா(அல்லா மிது நம்பிக்கையில்லாதவர்களா)?
Quote:
நிச்சயமாக அல்லாஹ் மூவரில் மூன்றாமவன் என்று கூறியவர்கள் காஃபிர்களாக (நிராகரிப்பவர்களாக) ஆகிவிட்டார்கள்;. ஏனென்றால் ஒரே இறைவனைத் தவிர வேறு நாயன் இல்லை. அவர்கள் சொல்வதை விட்டும் அவர்கள் விலகவில்லையானால் நிச்சயமாக அவர்களில் காஃபிரானவர்களை துன்புறுத்தும் வேதனை கட்டாயம் வந்தடையும். (5:73)


நான் என்னை அல்லாவிற்கு சமர்பித்து வாழுவதால், கிறிஸ்தவர்களை விட பரிசுத்தவான் என்று நான் நினைத்து இருந்தேன். ஆனால், என் உள்ளத்தின் கேடுகளைப் பற்றி என்று தெரிந்துக்கொள்ள ஆரம்பித்தேனோ, அன்று நான் உணர்ந்தேன், உண்மையில் இறைவனுக்கு சமர்பித்து வாழுவது அந்த மிஷனரி தான், இவரிடம் உள்ள அன்பு இயேசுவிடமிருந்து வந்தது என்று உணர்ந்தேன்.

ஒரு காந்தத்தைப் போல இயேசுவின் அன்பு என்னை இழுத்தது. இயேசு என் எஜமான்(Master) என்று நான் எண்ணினால், எப்படி நான் அவரில் அன்பு கூறுவது என்று சிந்திக்கலானேன். எப்போதெல்லாம் நான் கிறிஸ்தவனாக வேண்டும் என்ற எண்ணம் வருகிறதோ, உடனே "இது சாத்தான் கொண்டு வரும் எண்ணம் என்று நான் மறுத்துவிடுவேன், ஏனென்றால், நான் ஒரு முஸ்லீம் இல்லையா.

ஞாயிறு பள்ளியிலிருந்து மிகவும் பயத்தோடு வீட்டிற்கு வந்தேன். என் அப்பா எனக்கு என்ன செய்தாலும், அதை சந்திக்க நான் தயாராகி விட்டேன், ஆனால், இரண்டு நாட்களாக ஒன்றுமே நடக்கவில்லை. மூன்றாவது நாள் பள்ளிக்கூடம் விட்டபிறகு என் அப்பா என்னை பிடித்து ஒரு புதரில் தள்ளி தடியால் நான் செத்துபோகும் அளவிற்கு என்னை அடித்தார். என் தாய் என்னை காப்பாற்ற வந்தார்கள், அவர்களுக்கும் சில அடிகள் விழுந்தன. ஆனால், நான் உயிரோடு அன்று தப்பியது இறைவனின் கிருபையே. மறுபடியும், இஸ்லாமிய பிரமானத்தைச் சொன்னேன், கிறிஸ்தவர்களிடம் ஒரு தொடர்பும் வைத்துக்கொள்ளமாட்டேன் என்று சத்தியம் செய்தேன். அன்று, நான் செய்த சத்தியம், இன்னும் அடி வாங்காமல் தப்பிப்பதற்காகவா?

என் நண்பன் அப்துல்லா இந்த விவரங்கள் அனைத்தையும் எங்கள் மாகானம் அனைத்திலும் பரப்பிவிட்டான். எனக்கு தோந்தரவுகள் அதிகமாயின. மக்கள் என்னை முரைத்து பார்த்தார்கள். பல கெட்டவார்த்தைகளை சொன்னார்கள், சில நேரங்களில் என் மீது கல்லெரிந்தார்கள்.

நான் பள்ளிக்கூடத்தை விட்டு வரும்போது, என்னை பார்த்துச் சொல்வார்கள் " இதோ போகிறான் பார் சபிக்கப்பட்டவன்", "இதோ போகிறான் பார் கிறிஸ்தவன்"

On the way home from school they called out, "There goes the cursed one!" and "Here comes Mathai, the Nasrani (Christian)!"

என் உறவினர்களும், நண்பர்களும், ஆசிரியர்களும் என்னிடம் மிகவும் கடுமையாக நடந்துக்கொண்டார்கள். நான் குழம்பிவிட்டேன், உடைந்துவிட்டேன், தனிமையை உணர்ந்தேன், கஷ்டப்பட்டேன். இந்த நேரங்களில், பரிசுத்த சுவிசேஷங்களே என் துணைகள். எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், காட்டிற்குச் செல்வேன், சுவிசேஷத்தை படிப்பேன், ஆனால், இரகசியமாக படிப்பது எனக்கு மறுபடியும் பயத்தை உண்டாக்கும். பல முக்கியமான அடிப்படை கொட்பாடுகளில், பைபிளும், இஸ்லாமிய கோட்பாடுகளும் வேறுபடுகின்றன.

ஒரு முஸ்லீமுக்கு கீழே கொடுக்கப்பட்ட இயேசு சொன்ன வார்த்தைகள் எவ்வளவு குழப்பத்தையும்(Puzzle), சிந்தையை ஒளிர்க்கக்கூடியதாக(thought -provoking) இருக்கும்?


யோவான்: 14:6. அதற்கு இயேசு, நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல்ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.

யோவான்: 17:3. ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதேநித்தியஜீவன்.

யோவான்: 1: 12. அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார்.

யோவான்: 14:23. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக, ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக்கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்துஅவனோடே வாசம்பண்ணுவோம்.

இந்த இயேசு சொன்ன வார்த்தைகளை விவரித்து விளக்குவதற்கு எனக்கு ஒருவரும் இல்லை. எனவே, மறுபடியும் இறைவன் எனக்கு வழிநடத்த வேண்டும் என்று வேண்டிக்கொண்டேன்.

=====================================================

மீதமுள்ள சாட்சியை நாளைக்கு மொழிபெயர்த்து தருகிறேன்... அதுவரை சஸ்பன்ஸ் என்ன என்று தெரிந்துக்கொள்ள விருப்பமா...? ஆங்கிலத்தில் கீழே உள்ள தொடுப்பில் படிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.

மீதமுள்ள தலைப்புக்கள்:

CHAINED BY LOVE - அன்பால் கட்டப்பட்டேன்
GOD DELIVERS ME - தேவன் என்னை விடுதலையாக்கினார்
FINDING THE LIGHT - வெளிச்சத்தை கண்டேன்
A GREAT DECISION - ஒரு முக்கியமான முடிவு
IN HIS SERVICE - அவரது ஊழிய பாதையில்
CONCLUSION - முடிவுரை

இவருடைய சாட்சியை ஆங்கிலத்தில் இங்கு படிக்கலாம்: http://www.the-good-way.com/eng/article/a16.htm

Rev. K. K. Alavi




Family: Rev. K.K. Alavi, his Wife, and Daughters

http://www.gracelutheranchurch.ca/00040004.jpg
[it is a big image, so, click and see separately)


His Testimony Booklet:
(நாம் இன்று படித்துக்கொண்டு இருப்பது இந்த புத்தகத்தில் உள்ள சாட்சியைத் தான்)


இவருக்காகவும், இவர் குடும்பம், ஊழியத்திற்காகவும் ஒரு நிமிடம் ஜெபிப்போமா...?



Wikipedia: http://en.wikipedia.org/wiki/Christianity_in_India


Muslim - Christian Conflict
Muslims in India who convert to Christianity have been known to be subjected to harassment, intimidation, and attacks. In Kashmir, a Christian convert named Bashir Tantray was killed, allegedly by militant Islamists in 2006.[24]

A Christian priest, K.K. Alavi, who is a convert from Islam, recently raised the ire of his former Muslim community and has received many death threats. An Islamic terrorist group named "The National Development Front" actively campaigned against him.[25]


CHAINED BY LOVE - அன்பால் கட்டப்பட்டேன்
GOD DELIVERS ME - தேவன் என்னை விடுதலையாக்கினார்
FINDING THE LIGHT - வெளிச்சத்தை கண்டேன்
A GREAT DECISION - ஒரு முக்கியமான முடிவு
IN HIS SERVICE - அவரது ஊழிய பாதையில்
CONCLUSION - முடிவுரை
============================

CHAINED BY LOVE - அன்பால் கட்டப்பட்டேன்

என் உடலில் ஏற்பட்ட காயங்கள், வலிகள் மறைந்தன, ஆனால், கிறிஸ்தவர்களின், மற்றும் நான் படித்த புத்தகத்தின் பாதிப்பு இன்னும் என்னை விட்டு போகவில்லை. என் கிறிஸ்தவ நண்பர்களை சந்திக்கவேண்டும் என்று ஏதோ ஒன்று என்னை உருத்திக்கொண்டு இருந்தது. நான் அந்த மிஷனரியிடம் சென்று என் காயங்களைன் வடுக்களை காண்பித்தேன். நான் மைசூருக்கு செல்ல எனக்கு உதவி செய்யும்படி அவரிடம் கேட்டுக்கொண்டேன், மைசூரில் என் அக்காள் தன் குடும்பத்தோடு வாழ்கிறாள். அவர்கள் என்னை அதிகமாக நேசிக்கிறார்கள் என்றுச் சொன்னேன். அதற்கு அந்த மிஷனரி, வேண்டாம், நீ உன் வீட்டுக்கு போ, நீ பெரியவனாகிவிட்ட பிறகு வேண்டுமானால், போகலாம் என்று சொல்லி அனுப்பிவிட்டார். நீ பெரியவானும் வரை உன் வீட்டில் அமைதியோடு, உன் நண்பர்களோடு வாழு என்றுச் சொன்னார். தேவன் தான் உனக்கு பாதுகாப்பு, காப்பாற்றுபவர், உன் நண்பர் ஆவார் என்றுச் சொன்னார்.

நான் ஏழாவது படித்துகொண்டு இருந்த நேரம், ஒரு நாள் நான் கிறிஸ்தவ நூலகத்தில் இருக்க அனுமதி கேட்டு அன்று தங்கியிருந்தேன். இதை அறிந்து பல முஸ்லீம்கள், போலிஸ்களுடன் அங்கு வந்து என்னைப் பற்றி விசாரித்தார்கள். அங்கு பெரிய அமளி உண்டானது. நான் பின்பக்கத்திலிருந்து ஓடிப்போய் ஒரு கால்வாயில் குதித்து குளிப்பது போல நடித்தேன்.

சிறிது நேரத்திற்கு பின்பு என்னை அவர்கள் கால்வாயில் குளிப்பதாக கண்டார்கள், என்னிடம் பல கேள்விகள் கேட்டார்கள், திட்டினார்கள். இதற்கிடையில் என் அம்மா என்னை தேடிக்கொண்டு இருந்தார்கள். எப்போது என் மாமா என்னை அங்கு கண்டுபிடித்து, வீட்டிற்கு கொண்டு வந்தார். என் அப்பா என் சித்தப்பா எல்லாரையும் அழைத்து அனுப்பினார். எங்கள் வீட்டு முன்பு ஒரு பெரிய கூட்டம் கூடியது.

கூட்டத்தைப் பார்த்து என் அப்பா ஒவ்வொருவரையும் கேட்க ஆரம்பித்தார்," இப்போது நாம் ஆலவிக்கு என்ன செய்யலாம்?". இவன் கிறிஸ்தவர்களோடு சேராமல் இருப்பதற்கு எவ்வளவோ முயற்சி எடுத்து பார்த்தேன் பயனில்லை என்றார். ஒரு சித்தப்பா, "இவன் தொண்டையை அறுத்து இவனை கொண்று விடலாம்" என்றார். அடுத்தவரும் இதையே சொன்னார். மூன்றாவது ஒருவர், வேண்டாம், இவனுக்கு பட்டினி போட்டு கொன்றுவிடலாம் என்றார். என் அம்மா அழுதுக்கொண்டு, முதலில் என்னை கொள்ளுங்கள், பிறகு என் மகனை கொள்ளுங்கள் என்றார்கள். அப்போது நான் மிகவும் அழுதேன். நான் மிகவும் பயந்தேன், இந்த கூட்டம் என்னை என்ன செய்யும் என்று பயந்துக்கொண்டு இருந்தேன், அந்த வலியை விவரிக்கமுடியாது.

கடைசியாக என்னை பட்டினி போடுவது என்று முடிவு செய்தார்கள், ஒரு சித்தப்பா என்னை அதிகமாக அடித்தார், என் அப்பா தடுக்கும்வரை. என் அப்பா என் கைகளை பின்புறம் வைத்து கட்டினார். இப்படி மூன்று வாரம் நான் இருந்தேன். ஒரு நாளுக்குஒரு முறை தான் சோறு என்று என் அப்பா சொன்னார், ஆனால் அவர் போனபின்பு என் அம்மா எனக்கு உணவு பல முறை கொடுத்துக்கொண்டு இருப்பார்கள்.

ஒரு நாள் என் தந்தை அவர் தம்பியோடு என்னிடம் வந்தார், ஒரு தச்சனை அழைத்துக்கொண்டு வந்தார். நான் முஸ்லீமுடைய பிரமானத்தை சொல்லும்படிக்கு என் சித்தப்பா என்னிடம் கேட்டார், எனக்கு என்ன ஆனதோ தெரியவில்லை, என்னால் அதை சொல்லமுடியவில்லை. என் அம்மாவும், சகோதரியும் சொல்லடா என்று கத்தினார்கள். ஆனால், நான் சொல்லவில்லை. கடைசியாக என் அப்பா, தச்சனிடம் சொன்னார்கள், இவன் கால்களுக்கு இரும்பு விலங்கு போட்டு புட்டிவிடு என்றார், அப்படி செய்யப்பட்டது, இப்படி 6 வாரங்கள் இருந்தேன், என் பழைய நண்பன் அப்துல்லா வந்தான், உன்னை இப்படி செய்யவைத்தது எது என்று கேட்டான், நான் பதில் சொல்லவில்லை, அவனுக்கே தெரியும். இப்படிப்பட்ட நேரங்களில் என்னை உட்சாகப்படுத்தியது யோவான் சுவிசேஷத்தின் வசனங்களே.


யோவான்: 14:1. உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும்விசுவாசமாயிருங்கள்.

யோவான்: 8:32. சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.


நான் என் கால் விலங்குகளை பார்க்கும் போதெல்லாம், இயேசுவின் வார்த்தைகளை நினைத்துக்கொள்வேன். அவர் எனக்கு மிகவும் அருகாமையில் இருந்தார்.

GOD DELIVERS ME - தேவன் என்னை விடுதலையாக்கினார்

ஒரு நாள் யாரும் வீட்டில் இல்லாத சமயம் பார்த்து, என் அம்மா வழி சொந்தக்காரர் ஒருவர் என் கால்களின் பூட்டை உடைத்தார் நான் தப்பித்தேன். அப்போதிலிருந்து யாரும் என்னை கட்டிவைக்க நினைக்கவில்லை, என் குடும்பமும், நண்பர்களும் என்னை அன்புடன் கவனித்துகொண்டனர், இப்படி இரண்டு வாரங்கள் இருந்தேன். என் மன அமைதியை கெடுத்து, எனக்கு பயத்தை உண்டாக்கும் வீட்டிலும், சமுதாயத்திலும் நான் ஏன் இருக்கவேண்டும் என்று சிந்திக்கலானேன். நான் வீட்டை விட்டு ஓடிப்போவது என்று முடிவு செய்தேன்.

ஒரு நாள் மதியம் சாப்பாடு சாப்பிட்ட பிறகு என் அம்மாவின் முகத்தை பார்த்தேன், என் கண்கள் கலங்கியது, என் திட்டத்தைப் பற்றி அவர்களுக்கு தெரியாது. நான் குளித்துவிட்டு வருவதாக என் அம்மாவிடம் பொய் சொல்லி வெளியே வந்தேன். தேவன் என்னை மன்னிப்பாராக நான் பொய் சொன்னதற்காக. 10 மைல் தூரம் நடந்து திருச்சூர் இரயில் நிலையத்தை அடைந்தேன், பிறகு காலிகட் இரயிலில் ஏறினேன். அங்கே வேலைக்காக அலைந்தேன், ஒரு டிக்கடையில் வேலை கிடைத்தது.

என் கிறிஸ்தவ நண்பர்கள் நான் கட்டப்பட்டு இருக்கும் போது எனக்காக ஜெபித்ததாக கேள்விப்பட்டேன். அந்த சமயத்தில் இஸ்லாமிய குருக்கள், கிறிஸ்தவ மிஷன் காம்பவுண்டு பக்கம் கூட போக வேண்டாம் என்று முஸ்லீம்களுக்கு கட்டளையிட்டுள்ளனர். தங்கள் பிள்ளைகளை கிறிஸ்தவ நர்சரி பள்ளிக்கு அனுப்பாமல் நிறுத்திவிட்டதாக அறிந்தேன்.

என் கிறிஸ்தவ நண்பர்களை மைக் வைத்துக்கொண்டு இஸ்லாமியர்கள் திட்டியுள்ளனர், கிறிஸ்தவ மிஷன் மருத்துவமனையின் வாசலில் ஒரு பாதுகாவலனை வைத்து, யார் யார் மருத்துவமனைக்குள் போகிறார்கள் என்று கண்காணித்துள்ளனர். மருத்துவ சேவைக்காக மட்டும் முஸ்லீம்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். சில நாட்களுக்குள் நிலைமை மறுபடியும் சாதாரண நிலைக்கு திரும்பியுள்ளது.

நான் வேலை செய்யும் டீக்கடையின் முதலாலி ஒரு முஸ்லீமாவார், நான் பைபிள் தபால் வழி கல்வி பாடங்கள் படிப்பது அவருக்கு பிடிக்கவில்லை. நான் 5 மாதங்கள் அங்கு வேலை செய்தேன், பிறகு காலிகட்டை விட்டு மைசூருக்குச் சென்றேன். என் அக்காளின் வீட்டில் தங்கியிருந்தேன். என் கிறிஸ்தவ நண்பன் ஜியார்ஜுக்கு கடிதம் எழுதினேன். நான் நன்றாக உள்ளேன், இயேசு சொல்லிக்கொடுத்த பிரார்தனையை தினமும் ஜெபிக்கிறேன் என்று கடிதம் எழுதினேன்.


நான் மைசூரில் என் மாமாவோடு சேர்ந்து ஒரு வருடம் வேலை செய்தேன், பிறகு 18 மாதங்கள் காலிகட் கப்பல் துறைமுகத்தில் வேலை செய்தேன். பிறகு என் ஊருக்குச் சென்றேன், என் நண்பர்களைக் கண்டு சந்தோஷப்பட்டேன். அந்த மிஷனரி தன் நாட்டிற்கு சென்று இருந்தார். பிறகு மைசூருக்கு வந்தேன், என் மாமாவின் உதவியுடன் அப்பரன்டிஸ்( lineman) வேலை "தொலை தொடர்பு" பிரிவில் கிடைத்தது, ஆனாலும், என் இடுப்பு வலியின் காரணமாக சீக்கிரமாகவே அதிலிருந்து வேளியேறவேண்டி வந்தது.

நான் என் உடல் சிகிச்சைக்காக மளபாருக்கு போக முடிவுசெய்தேன், அங்கு என் நண்பன் மிஷன் மருத்தமனையில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தான், அந்த மிஷனரியும் இந்தியாவிற்கு வந்து இருந்தார், சுகம் விசாரித்தார், எல்லாவற்றையும் சொன்னேன், அனேகர் உனக்காக ஜெபித்துக்கொண்டு இருக்கிறார்கள் என்றார். இவர்கள் இருவரின் உதவியுடன், வேலுர் கிறிஸ்துவ கல்லூரி மருத்துவமனையில் எனக்கு சிகிச்சைக்கு அனுமதி கிடைத்தது. இந்த கிறிஸ்தவ மிஷனரி என் ஆவிக்குரிய தந்தையாவார், இவர் மனைவி என் ஆவிக்குரிய தாயாவார்கள்.


வேலூர் மருத்துவ மனையிலிருந்து திரும்பி வந்தேன், மைசூரில் உள்ள என்ற ஸ்தாபனத்தில் சேர்ந்து, இயேசுவின் பிரதிகளை எல்லாருக்கும் கொடுத்தேன். இதைக் கண்ட என் அக்காவும், மாமாவும் அவர்கள் வீட்டிற்கு வரவேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள். பிறகு மிஷனரியின் உதவியுடன், ஒரு போதகருடன்(at Gundulupet) நான் தங்க ஆயத்தம் செய்தார், நான் 4 மாதங்கள் பைபிளை மிகவும் ஆர்வமாக கற்றுக்கொண்டேன், இது எனக்கு மிகவும் சந்தோஷத்தை கொடுத்தது. பிறகு "India Evangelical Lutheran Church" என்ற ஸ்தாபனத்தோடு சேர்ந்து தென் இந்தியா முழுவதிலும் கைபிரதிகளை கொடுக்கும் ஊழியத்தைச் சேய்தேன். தேவன் அவருடைய ஊழியத்தில் என்னை பயன்படுத்திக்கொண்டு இருந்தார்.

நான் இன்னும் பைபிளை அதிகமாக அறிந்துக்கொள்ள விருப்பமுற்றேன். அதே போல நாகர்கோயிலில் இருக்கும் Concordia Seminary என்ற பைபிள் கல்லூரியில் ஒரு ஆண்டு பைபிள் படிக்க வாய்ப்பு ஜூன் 1970ல் கிடைத்தது. அந்த கல்லூரியின் நூலகத்தில் பல இஸ்லாமிய புத்தகங்கள் இருந்தன, அதை படித்து பல சந்தேகங்களை தீர்த்துக்கொண்டேன்.


FINDING THE LIGHT - வெளிச்சத்தை கண்டேன்

இப்போது தான் பைபிள் கல்லூரியில் அதிகமாக இயேசுவைப் பற்றி கற்றுக்கொண்டேன், இயேசுவைப் பற்றிய குர்-ஆனின் வசனங்களை ஆராய்ந்து பார்த்தேன். பைபிள் அறிவை பெருக்கிக்கொண்டேன்.

என்னுடைய முக்கிய சந்தேகங்களில் ஒன்று, இயேசுவின் பாவமற்ற வாழ்க்கையைப் பற்றியும், நம் பாவங்களை மன்னிக்கும் அவரது அதிகாரத்தைப் பற்றியுமே. இயேசுவின் பாவமில்லாத வாழ்க்கையைப் பற்றிய விவரங்களும், அதே நேரத்தில் குர்-ஆன் சொல்லும் மற்ற நபிகளின் பாவங்களையும் ஆராய்ந்தால், இவைகளுக்கு இடையே உள்ள பெரிய வித்தியாசத்தை காணலாம்.

முகமதுவைப் பற்றி குர்-ஆன் குறிப்பிட்டுச்சொல்லும் போது, கீழ் கண்டவாறு சொல்கிறது:

உமக்காக உம்முடைய முந்திய தவறுகளையும், பிந்தியவற்றையும் அல்லாஹ் மன்னித்து, உமக்காக தனது அருட்கொடையையும் பூர்த்தி செய்து உம்மை நேரான வழியில் நடத்துவதற்காகவும். (குர்-ஆன் 48:2, cross reference: Sura Ghafir 40:45; Sura Muhammad 47:19)

(மறுமை நாளில் தன்) சுமையைக் சுமக்கும் ஒருவன், வேறொருவனுடைய சுமையைச் சுமக்க மாட்டான்; ....(குர்-ஆன் 35:1Cool


அப்படியானால், இந்த நபிகள் எப்படி மற்றவர்களுடைய பாரத்தை சுமக்கமுடியும்?


ஆனால், குர்-ஆனில் காபிரியேல் தூதன் மரியாளிடம் சொன்னதாக உள்ள வசனம் இது:

"நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன்; பரிசுத்தமான புதல்வரை உமக்கு அளிக்க (வந்துள்ளேன்") என்று கூறினார். (19:19)

இதே விவரத்தை ஹதீஸும் சொல்கிறது, "பிறக்கும் எல்லா குழந்தைகளையும் சாத்தான் தன் விரலால் தொடுகிறான், மரியாளையும், இயேசுவையும் அல்ல".

சுவிசேஷங்களும் கூட இயேசுவின் பரிசுத்தத்தையும், பாவமில்லாமையையும் சொல்கின்றன.

யோவான்: 8: 46. "என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்? நான்சத்தியத்தைச் சொல்லியிருக்க, நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்கிறதில்லை."

அவர் நம் பாவங்களை சுமந்தார் என்று பைபிள் சொல்கிறது.

1 யோவான்: 3:4. பாவஞ்செய்கிற எவனும் நியாயப்பிரமாணத்தை மீறுகிறான்; நியாயப்பிரமாணத்தை மீறுகிறதே பாவம்.5. அவர் நம்முடைய பாவங்களைச் சுமந்து தீர்க்க வெளிப்பட்டாரென்று அறிவீர்கள்; அவரிடத்தில் பாவமில்லை."

மற்றவர்களின் பாரங்களை சுமப்பதற்காகவா இயேசுவை பாவமில்லாதவராக இருந்தார்? இயேசு பாவமில்லாதவர் என்று குர்-ஆன் சொல்கிறது. ஆனால், ஏன் பாவமில்லாத ஒரு மகனை அல்லா மரியாளுக்கு அருளினார் என்று குர்-ஆன் எந்த காரணத்தையும் சொல்வதில்லை. குர்-ஆன் இயேசுவிற்கு அளிக்கும் உன்னத நிலை வேறு எந்த தீர்க்கதரிசிக்கும், அப்போஸ்தலருக்கும் அருளவில்லை. இயேசு இறைவனின் வார்த்தை என்றும், இயேசு இறைவனின் ஆவி(ஆத்துமா) என்றும் குர்-ஆன் சொல்கிறது.

வேதத்தையுடையோரே! நீங்கள் உங்கள் மார்க்கத்தில் அளவு கடந்து செல்லாதீர்கள். அல்லாஹ்வைப் பற்றி உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள்;. நிச்சயமாக மர்யமுடைய மகனாகிய ஈஸா அல்மஸீஹ் அல்லாஹ்வின் தூதர் தான்;. இன்னும் ("குன்" ஆகுக என்ற) அல்லாஹ்வின் வாக்காக (அதனால் உண்டானவராகவும்) இருக்கின்றார். அதை அவன் மர்யமின்பால் போட்டான்;. (எனவே) அவரும் அவனிடமிருந்து (வந்த) ஓர் ஆன்மா தான்;. ஆகவே, அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொள்ளுங்கள்;. இன்னும், (வணக்கத்திற்குரிய இறைவன்) மூன்று என்று கூறாதீர்கள் - (இப்படிக் கூறுவதை விட்டு) விலகிக் கொள்ளுங்கள்;. (இது) உங்களுக்கு நன்மையாகும் - ஏனெனில் வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ் ஒருவன் தான்;. அவனுக்கு எவரும் சந்ததியாக இருப்பதிலிருந்து அவன் தூய்மையானவன். வானங்களிலும்;, பூமியிலும் இருப்பவையெல்லாம் அவனுக்கே சொந்தம். (காரியங்கள் அனைத்துக்கும்) பொறுப்பேற்றுக் கொள்வதற்கு அல்லாஹ்வே போதுமானவன். 4:171

மற்றும் காபிரியேல் தூதன் மரியாளிடம் கீழ்கண்டவாறு சொல்கிறார்:
"அவ்வாறேயாகும்; 'இது எனக்கு மிகவும் சுலபமானதே மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும், நம்மிடமிருந்து ஒரு ரஹ்மத்தாகவும் நாம் அவரை ஆக்குவோம்; இது விதிக்கப்பட்ட விஷயமாகும்' என்று உம் இறைவன் கூறுகிறான்" எனக் கூறினார். (19:21, cf. Sura al-Anbiya' 21:91)


இயேசு பற்றி குர்-ஆன் எதை சொன்னாலும், அதினால் இயேசு ஒரு தனித்தன்மை உடையவராக காட்டப்படுகிறார். தேவனோடு அவருடைய உறவாகிய "தேவனுடைய வார்த்தை" என்றும், தேவனிடமிருந்து வந்த ஆத்துமா என்றும் குர்-ஆன் சொல்கிறது. இயேசுவின் படைக்கும் அல்லது உருவாக்கும் செயல்கள், அவர் சுகமாக்கியது, அவர் மரித்தவர்களை உயிரோடு எழுப்பியது ,(குர்-ஆன் Sura Al Imran 3:49), அவர் வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது போன்றவைகளைச் சொல்லலாம்.

இஸ்ராயீலின் சந்ததியனருக்குத் தூதராகவும் (அவரை ஆக்குவான்; இவ்வாறு அவர் ஆகியதும் இஸ்ரவேலர்களிடம் அவர் Wink "நான் உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் நிச்சயமாக வந்துள்ளேன்;. நான் உங்களுக்காக களிமண்ணால் ஒரு பறவையின் உருவத்தை உண்டாக்கி நான் அதில் ஊதுவேன்;. அது அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு (உயிருடைய) பறவையாகிவிடும். பிறவிக் குருடர்களையும், வெண் குஷ்டரோகிகளையும் குணப்படுத்துவேன்;. அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு இறந்தோரையும் உயிர்ப்பிப்பேன்;. நீங்கள் உண்பவற்றையும், நீங்கள் உங்கள் வீடுகளில் சேகரம் செய்து வைப்பவற்றையும் பற்றி நான் உங்களுக்கு எடுத்துக் கூறுவேன். நீங்கள் முஃமின்கள் (நம்பிக்கையாளர்) ஆக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்குத் திடமான அத்தாட்சி இருக்கிறது" (என்று கூறினார்). 3:49

மேலும் நான் சில முக்கிய வித்தியாசத்தை பற்றி படித்தேன், பைபிள் சொல்லும் "தேவனுடைய குமாரன்" என்ற பொருளுக்கும், குர்-ஆன் சொல்லும், "தேவனுடைய குமாரன்" என்பதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. இறைவனுக்கு ஒரு குமாரன் இருக்கமாட்டார் என்று குர்-ஆன் சொல்கிறது. அதாவது மனித முறையில் பிறக்கமாட்டார் என்றுச் சொல்கிறது(Lam yalid wa lam yulad). ஆனால், இயேசு தேவனுடைய குமாரன் என்று பைபிள் சொல்வதை நான் ஏற்றுக்கொள்கிறேன், ஏனென்றால், பைபிள் அதை ஆவிக்குரிய பொருளில் சொல்கிறது. Here again I was grateful to the Qur'an for serving as a bridge to a fuller comprehension of the Biblical significance of the term "Son of God" when uniquely applied to Jesus.

கீழ்கண்ட வசனத்தின் அடிப்படையில் முஸ்லீம்கள் இயேசுவின் மரணம், உயிர்த்தெழுதல், பரமேறுதல் போன்றவற்றை மறுக்கின்றனர்.

இன்னும், "நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்" என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்). அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்;. மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்ராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது. நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை.4:157

ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் - இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான். 4:158

வேதமுடையவர்களில் எவரும் தாம் இறப்பதற்கு முன் அவர் (ஈஸா) மீது ஈமான் கொள்ளாமல் இருப்பதில்லை. ஆனால் மறுமை நாளில் அவர் அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்பவராக இருப்பார். 4:159



மற்றுமொறு இடத்தில் குர்-ஆன் இயேசுவின் மரணத்தைப் பற்றிச் சொல்கிறது, ஆனால், முஸ்லீம்கள் இதற்கு வித்தியாசமான பொருளை கூறுகிறார்கள்.

"Peace on me the day I was born, and the day I die, and the day I shall be raised alive!" (Sura Maryam 19:33)

"இன்னும், நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் (மறுமையில்) நான் உயிர் பெற்று எழும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும்" என்று (அக்குழந்தை) கூறியது. 19:33

"(And remember) when Allah said: O Jesus! Lo! I am gathering thee and causing thee to ascend unto Me, and am cleansing thee of those who disbelieve and am setting those who follow thee above those who disbelieve until the Day of Resurrection. Then unto Me ye will (all) return, and I am judge between you as to that wherein ye used to differ." (Sura Al Imran 3:55)

"ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்;. இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்;. நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்;. மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்;. பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது. (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்" என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)! 3:55


"I spake unto them only that which Thou commandest me, (saying) Worship Allah, my Lord and your Lord. I was a witness of them while I dwelt among them, and when Thou tookest me Thou wast the Watcher over them. Thou art Witness over all things." (Sura al Ma'ida 5:117)

"நீ எனக்குக் கட்டளையிட்டபடி (மனிதர்களை நோக்கி), "என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்" என்பதைத் தவிர வேறு எதையும் அவர்களுக்கு நான் கூறவில்லை. மேலும், நான் அவர்களுடன் (உலகில்) இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன்;. அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கிறாய்" (என்றும்); 5:117

But is Pickthall's interpretation of mutawaffika ("I am gathering thee" Sura Al Imran 3:55) and tawaffaitani ("Thou tookest me" Sura al-Ma'ida) correct? Some respectable Muslim commentaries translate this verb "to cause to die", indicating that the death of Jesus preceded His ascension into heaven.

குர்-ஆனின் ஆங்கில மொழிபெயர்ப்பின் ஆசிரியர் பிக்தால் என்பவரின் பொருள் கூறுதல் சரியா? சில இஸ்லாமிய ஆசிரியர்கள் வேறு விதத்தில் பொருள் கூறுகிறார்கள்.

ஆனால், பைபிள் சொல்லும் விவரங்களில் வித்தியாசமான பொருள் கொள்வதற்கு வாய்ப்பு இல்லை. இயேசுவை சிலுவையில் அறைந்தது, பிலாத்து யூதாவின் ஆளுநராக இருந்தது போன்றவைகள் அனைத்தும் சரித்திர உண்மைகள்.

என் மனதில் ஒரு கேள்வி இருந்தது, அது என்னவென்றால், முகமது வருவார் என்று இயேசு முன் அறிவித்தார் என்று குர்-ஆன் சொல்லும் வசனமாகும்.

மேலும், மர்யமின் குமாரர் ஈஸா, "இஸ்ராயீல் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும்; எனக்குப் பின்னர் வரவிருக்கும் 'அஹமது' என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன்" என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவு கூர்வீராக!) எனினும், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளை அவர் கொண்டு வந்த போது, அவர்கள் "இது தெளிவான சூனியமாகும்" என்று கூறினார்கள். (Sura al-Saff 61:6)

அஹமத் என்றால் "புகழ்ச்சிக்கு உரியவர்" என்று பொருள். முகமதுவைப் பற்றி இயேசு சொல்லியுள்ளார் என்று முஸ்லீம்கள் போதிக்கப்படுகிறார்கள்.

முகமது பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று தெரிந்துக்கொள்ள நான் பைபிளை முழுவதும் தேடிப்பார்த்தேன், ஒன்றும் கிடைக்கவில்லை, என் பேராசிரியரைக் கேட்டேன், அவரும் ஒன்றும் இல்லை என்றுச் சொன்னார். ஆனால், இஸ்லாமிய அறிஞர்கள் பல ஆதாரங்களை காட்டுகிறார்கள். அவர் காட்டும் வசனங்களில் முக்கியமானது குர்-ஆன் 61:6ம் வசனமாகும்.

இதற்காக அவர்கள் காட்டும் பைபிள் வசனம் யோவான் 14:16 ஆகும்.

யோவான் 14:16. நான் பிதாவை வேண்டிக்கொள்வேன், அபொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூடஇருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத்தந்தருளுவார்.

முஸ்லீம் அறிஞர்கள் சொல்கிறார்கள், கிறிஸ்தவர்கள் periklutos - "Praised One" என்ற வார்த்தையை மாற்றி "Counsellor - Parakletos" என்று மாற்றிவிட்டார்கள் என்று.

The Greek Word for Counsellor is Parakletos . (Greek is the original language of the New Testament.) The commentator said that the original Greek word was periklutos , which means "Praised One". Christians, he said, substituted parakletos for periklutos to remove the reference to the prophet Muhammad.

எனக்கு கிரேக்க மொழி தெரியாது, எனவே, முகமதுவை நம்பாமல் இருக்கமுடியவில்லை. எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது, இன்னும் முகமது என் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

நான் ஒரு கிரேக்க பேராசிரியரிடம் என் சந்தேகத்தை கேட்டேன், அவர் எனக்கு விவரித்தார், இஸ்லாமியர்கள் சொல்லுவது போல, அந்த வார்த்தையை யாரும் மாற்றவில்லை. இயேசு பரிசுத்த ஆவியானவரைப் பற்றி சொல்கிறார் என்று விவரித்தார்.

இந்த பிரச்சனைக்கு பதில் தரும்படி தேவனிடம் ஒப்படைத்துவிட்டேன். ஒரு நாள் இரவு ஜெபித்துவிட்டு, தூங்கச் சென்றேன், தூக்கம் வரவில்லை, ஒரு சத்தம் எனக்கு கேட்டது " எழுந்திரு, படி" என்று, நான் அது என் கற்பனை என்று எண்ணினேன். மறுபடியும் அதே சத்தம் கேட்டது, நான் எழுந்து யோவான் 14:15-17 வசனத்தை பல முறை படித்தேன்.

I placed the problem before God and asked Him to give me clear understanding. One night, after I had prayed and gone to bed, I could not sleep. I heard a voice or felt as though I had heard a voice. It said, "Get up and read!" I thought it was only my imagination. But I heard it again and again. I got up and opened my Bible. Several times I read the passage in John 14:15-17:

யோவான் 14:15. நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.16. நான் பிதாவை வேண்டிக்கொள்வேன், அபொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூடஇருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத்தந்தருளுவார்.17. உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப்பெற்றுக்கொள்ளமாட்டாது; அவர் உங்களுடனே வாசம்பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால், நீங்கள்அவரை அறிவீர்கள்.

இதை படிக்கும் போது ஒரு கேள்வி "நீ எப்போதாவது குர்-ஆனிலோ அல்லது ஹதீஸ்களிலோ " முகமது ஒரு ஆத்துமா அல்லது ஆவியாக இருக்கிறார் என்றோ, எப்போதும் உன்னுடன் இருக்கிறார் என்றொ, அவர் உனக்குள் வாழ்கிறார் என்றோ படித்தாயா என்ற கேள்வி எழுந்தது.".

இப்போது நான் புரிந்துக்கொண்டேன், அதாவது இயேசு சொன்ன ஆவியானவர் தேற்றளவாளன் ஒரு மனிதனுக்கு பொருந்தாது, முகமதுவிற்கு பொருந்தாது என்று. இயேசு சொன்ன ஆவியானவர் அப்போஸ்தலர் நடபடிகள் 2:1-11ம் வசனத்தில் நிறைவேறியது என்று அறிந்துக்கொண்டேன். ஆவியானவர் என்னை வழிநடத்தினார், கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக. ஆமென்.

அன்றிலிருந்து பைபிளை மிகவும் ஊக்கமாக படிக்க ஆரம்பித்தேன், இயேசு கொடுக்கும் மன அமைதியை, பாவமன்னிப்பின் நிச்சயத்தை முழுவதுமாக உணர்ந்தேன்.

The Holy Bible brought the answers to the problems which worried me. Its living word was able to satisfy my soul. What I had never found before in my religious experience, I now discovered. I became sure that the Holy Bible faithfully and accurately recorded the works and teaching of Jesus - this mystery of God's eternal Word coming into our world as man. Now I became convinced of the truth of His death, resurrection, ascension, and second coming, which before I had not understood and had even hated. The Bible contains the message of God's power to save and His love for me and all men, and this brings us peace. This love of God focuses sharply on Jesus, His death and resurrection for sinners - as Paul, echoing Jesus and His other apostles, says in the New Testament,

1 கொரிந்தியர்: 15:3. நான் அடைந்ததும் உங்களுக்குப் பிரதானமாக ஒப்புவித்ததும் என்னவென்றால், கிறிஸ்துவானவர் வேதவாக்கியங்களின்படி நமது பாவங்களுக்காக மரித்து,4. அடக்கம்பண்ணப்பட்டு, வேதவாக்கியங்களின்படி மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்து,5. கேபாவுக்கும், பின்பு பன்னிருவருக்கும் தரிசனமானார்.

நிறைய முஸ்லீம்கள் பைபிள் மாற்றப்பட்டது என்று நம்புகிறார்கள், அவர்கள் அப்படியே நம்பட்டும், ஆனால், அவர்கள் குர்-ஆனின் வசனங்களையும் , பைபிளையும் என்னைப்போல ஆராய்ந்துப்பார்த்தால் நிச்சயமாக சத்தியத்தை தெரிந்துக்கொள்வார்கள்.

A GREAT DECISION - ஒரு முக்கியமான முடிவு

ஜூலை 19, 1970ல் நான் என் மனதை முழுவதுமாக இயேசுவிற்கு ஒப்புவித்தேன், என் பாவங்களை அறிக்கையிட்டு, மன்னிப்பை பெற்றேன், ஞானஸ்நானம் பெற்றேன், ஆவியின் உட்சாகத்தை உணர்ந்தேன், அந்த சந்தோஷம் இன்று வரை எனக்கு உள்ளது.


IN HIS SERVICE - அவரது ஊழிய பாதையில்

என் பைபிள் படிப்பை படித்துக்கொண்டு இருக்கும் போதே, எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது, "Operation Mobilization" என்ற பிரிவில் இரண்டு ஆண்டுகள் இந்தியா முழுவதிலும் சுவிசேஷம் சொல்ல வாய்ப்பு பெற்றேன், அப்பொது அறிந்துக்கொண்டேன், இயேசுவை பின்பற்றுதல் என்றால் என்ன என்று. பிறகு 1975ல் என் பைபிள் படிப்பை முடித்தேன்.

என்னுடைய அதிகமான பாரம் என் மக்களுக்கு இயேசுவின் நற்செய்தியைச் சொல்வது அவர்கள் எங்கு இருந்தாலும், முக்கியமாக நான் வளர்ந்த ஊரிலிருக்கும் எல்லாருக்கும் சொல்வது. இவர்கள் இயேசுவின் இரட்சிப்பின் இந்த அழைப்பை ஏற்றுக்கொள்வார்களா?

யோவான் 14:6. அதற்கு இயேசு, நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல்ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.

யோவான் 17:3. ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதேநித்தியஜீவன்.

யோவான் 8:12. மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி, நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப்பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.


CONCLUSION - முடிவுரை

நான் இயேசுவை என் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டேன். அவர் என் வாழ்க்கையை மாற்றி நிம்மதி, சந்தோஷம் , நம்பிக்கையை கொடுத்துள்ளார்.
என் பலவீனங்களில் எனக்கு பெலனையும் கொடுத்துள்ளார். ஒரு உயிருள்ள இறைவனாக என் வாழ்க்கைக்கு ஒரு நோக்கத்தை கொடுத்துள்ளார்.
எனக்கு தெரியும் நான் இயேசுவின் பரலோக குடும்பத்தின் ஒரு அங்கத்தினன்.

தாவீது இராஜா சொல்வது போல,

சங்கீதம் 27:10. என் தகப்பனும் என் தாயும் என்னைக் கைவிட்டாலும், கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்ளுவார்.

என்னுடைய பிரச்சனை நேரங்களில், சோதனை நேரங்களில் நான் அவர் முகத்தை பார்க்கிறேன், இதுவே எனக்கு போதும். நான் தனிமையில், சோர்ந்து இருக்கும் போது, நான் அவரின் கிருபையை நினைத்து துதிக்கிறேன்.

இயேசு சொல்கிறார்:
யோவான்: 15:16. நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்; நீங்கள் என்நாமத்தினாலே பிதாவைக் கேட்டுக்கொள்வது எதுவோ, அதை அவர் உங்களுக்குக்கொடுக்கத்தக்கதாக நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனிநிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன்.

நான் அவரை தெரிந்துக்கொள்ளவில்லை, அவர் என்னை தெரிந்துக்கொண்டார். ஆம், அந்த பாக் என்ற பையனின் கதை தான் இந்த ஆலவியின் கதையும் கூட. தேவனுக்கே சதாகாலங்களிலும் மகிமை உண்டாகட்டும், ஆமென்.

தொடர்பு கொள்ள:

Markaz Ul Bishara, PO Box 18
Manjeri, Kerala, India 676 121



இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்