கிறிஸ்தவர்களில் படித்தவர்கள் எத்தனை பேர்
கடந்த வார இந்தியா டுடே- யில் ஒதுக்கீடு தீர்வாகுமா? என்ற தலைப்பில் வந்த ஒரு கட்டுரையை படித்த போது கிறிஸ்தவர்களை பற்றிய சில ஆச்சிரியமான தகவல்கள் கிடைத்தன. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
கிழே உள்ள படத்தில் இந்தியாவில் உள்ள எழுத்தறிவுள்ளோர் மற்றும் எழுத்தறிவற்றவர்கள் பற்றிய புள்ளி விவரங்களை காணலாம்
இந்திய மக்கள் தோகையில் 1.9%(இரகசிய கிறிஸ்வர்களை சேர்க்காமல்) உள்ளனர். அவர்களில் 80.3% பேர் எழுத்தறிவு உடையவர்களாகவும், 8.7% பேர் பட்டதாரிகளாவும் இருக்கின்றனர். இது மற்றவர்களைவிட அதிகமாகும். மேலும் சில மாதங்களுக்கு முன்பு இந்தியா டுடே ஆங்கில மீடியாவில் பணிபுரியும் நபர்களை மதம் வாரியாக பிரித்து வெளியீட்டு இருந்தார்கள் அதிலும் கிறிஸ்தவர்களின் ஆதிக்கம் அதிமாகவே இருந்து. என்ன ஒரு நல்ல சாட்சி இது. தேவன் நமக்கு கொடுத்துள்ள இந்த கல்வி வாய்ப்புகளுக்காக, இந்த சுதந்திர தேசத்திற்காக தேவனுக்கு நன்றி கூறுவோம். மேலும் கத்தோலிக்க கல்வி நிறுவனங்களுக்காக, அவர்களின் அர்பணிப்புள்ள வாழ்கைக்காகவும் நன்றி கூறுவோம்.
கிறிஸ்தவம் நமது பாரத தேசத்திற்கு எழுத்தறிவை, ஒப்பற்ற இலக்கியங்களை தந்து இருக்கிறது. இதோ! இந்த வாண் புகழ் கொண்ட தமிழ் எழுத்துகளை வடிவமைத்து தந்தது யார்? வீரமாமுனிவர் அல்லவா?
எம் தாய் மொழி தமிழ் இருக்கும் வரையில்
எம்மவர்கள் தமிழுக்காக செய்த பணியும் இருக்கும்.
இதை ஏன் இங்கு கூறுகிறேன் என்றால் தமிழ்மணத்தில் சில நண்பர்கள் தொடர்நது கிறிஸ்வர்களை தாக்கி எழுதிவருகின்றனர். அவர்களுக்கு அங்கு பதில் கூற எனக்கும் ஆசை தான். ஆனால் அந்த பதிலுக்கு அங்கு கிடைக்ககூடிய வசைமொழிகள் சற்று அதிகமாகவே இருப்பதால், ஏனோ எனக்கு தமிழ்மணத்தில் எழுத விருப்பமில்லாமல் போகிவிட்டது.
வரைபடம்:- இந்திய டுடே
Comment Form under post in blogger/blogspot