இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Wednesday, July 4, 2007

இது தான் இஸ்லாம் வலைதளத்துக்கு பதில்

இது தான் இஸ்லாம் வலைதளத்துக்கு பதில்,
ஈஸா குர்-ஆன் வலைதளம் கலக்கல்

http://isakoran.blogspot.com/2007/07/1-1.html


இயேசுவின் வரலாறு - 1 : மறுப்புக் கட்டுரை - 1
இயேசுவின் வரலாறு - 1 : மறுப்புக் கட்டுரை - 1தமிழ்முஸ்லீம் என்ற வெப்தளத்தில் ஜி. நிஜாமுத்தீன் அவர்கள் ஒரு கட்டுரையை எழுதுயிருந்தார்கள். இயேசுவின் பிறப்பின் விவரங்கள் பைபிளிலும், குர்-ஆனிலும் வேறு வேறுவிதமாக உள்ளது. இவர் குர்-ஆனில் சொன்னவிவரங்கள் தான் சரியானது, பைபிளில் சொன்ன நிகழ்ச்சிகள் சரியானது அல்ல என்று எழுதியுள்ளார்.

அவர் எழுதிய கட்டுரைக்கு மறுப்பை இப்பக்கத்தில் காணப்போகிறோம். பைபிளை படிக்காமலேயே அதில் சொல்லிய நிகழ்ச்சிகளைப் பற்றி எழுதுகிறார் இவர். பைபிளில் அவர் காட்டிய மேற்கோள்கள் தவறாக உள்ளது. பைபிளில் என்ன அதிகாரத்தில் என்ன சொல்லியிருக்கிறது என்று படிக்காமலேயே , இந்த அதிகாரத்தில் இப்படி பைபிளில் சொல்லியிருக்கிறது என்றுச் சொல்கிறார், நம் இஸ்லாமிய நண்பர்.

இவர் எழுதிய 5 தொடர்களில், முதல் தொடரின் மறுப்பையும், பைபிளைப் பற்றிய அவரின் அறியாமைப் பற்றியும் நாம் இக்கட்டுரையில் காணப்போகிறோம். மற்றும் இயேசுவின் பிறப்பைப் பற்றிய விவரங்கள் பைபிளில் சொல்லப்பட்டது தான் சரியானது என்றும் நாம் காணப்போகிறோம்.

தேவனுக்கு சித்தமானால், அவரின் மற்ற தொடர் கட்டுரைக்கும் (இயேசுவின் பிறப்பு சம்மந்தப்பட்ட), என்னுடைய விமர்சனங்களை அல்லது மறுப்பை கூடிய சீக்கிரத்தில் காண்போம்.

அவர் எழுதிய கட்டுரையை இங்கு காணலாம் :
இயேசுவுக்கு நேர்ந்ததென்ன? - தொடர் - 1
(http://www.tamilmuslim.com/)
http://idhuthaanislam.blogspot.com/
நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:
ரங்கிப்பேட்டை ஜி - நிஜாமுத்தீன்தொடர் - 1 அறிமுகம்.உலக அளவில் 200 கோடி மக்களால் - அவர்களுக்கு போதிக்கப்பட்டுள்ள படி இரச்சகராகவும், 170 கோடி முஸ்லிம்களால் அவர்களின் வேத அறிவிப்புப் படி இறைத்தூதராகவும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு சிறந்த மனிதர் இயேசு என்று அழைக்கப்படக் கூடிய ஈஸா(அலை) அவர்கள்.இவர்களின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான சர்ச்சை இரு சமூக, சமூக தலைவர்களுக்கு மத குருக்களுக்கு மத்தியில் நீண்ட நெடுங்காலமாக நடந்து வந்துக்கொண்டிருக்கிறது.

என் மறுப்பு: மிக மிக உண்மை. இயேசுவின் பிறப்புபற்றி கி.பி. முதலாம் நுற்றாண்டில் அவருடைய சீடர்கள், அவரோடு வாழ்ந்தவர்கள், ஏன் அவருடைய தாயாரே ஏற்றுக்கொண்டதை, கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வந்த குர்-ஆன் வேறு விதமாகச் சொன்னதால், இந்த சர்ச்சை இன்னும் உள்ளது.இயேசுவின் தாய், இயேசுவின் சீடர்களோடு சேர்ந்து ஊழியம் செய்தார்கள். இயேசுவின் சீடர்கள் மற்றவர்களுக்கு பிரசங்கிப்பதையும், இயேசுவின் பிறப்பு, மற்றும் மற்ற விவரங்களை இதர மக்களுக்கு சொல்லும்போதும், மரியாள் கூட இருந்தார்கள். குர்-ஆன் சொல்வது போல இருந்துஇருந்தால், மரியாள் தடுத்துயிருப்பார்கள். இயேசுவின் சீடர்கள் மரியாளோடு இயேசுவின் வாழ்வு பற்றி கேள்விகள் கேட்டுயிருப்பார்கள். மரியாள் தான் வளர்த்த பிள்ளையைப்பற்றிய விவரங்களை தெளிவாகவும், சந்தோஷமாகவும் சொல்லியிருந்திருப்பார்கள். இவைகளைப் பற்றித்தான் புதிய ஏற்பாட்டின் சுவிசஷங்கள் சொல்கின்றன.

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது: இதில் இயேசுவை இரச்சகர் - கடவுளின் மகன் என்று கூறி வழிப்படுவோர் வெறும் கற்பனையால் புனையப்பட்ட யூகத்தின் அடிப்படையில்தான் தம்முடைய நம்பிக்கையை வளர்த்து வைத்துள்ளார்கள் என்று அந்த சமூகம் சார்ந்த சில வரலாற்று ஆய்வாளர்கள் துணிந்து தெரிவித்து வருகிறார்கள். பரிசுத் வேதாகாமம் என்று கிறிஸ்துவர்களால் போற்றப்படும் பைபிளில் இயேசுவைப் பற்றி முன்னுக்குப் பின் முரணாக வந்துள்ள கருத்துக்களையும் சம்பவங்களையும் அந்த வரலாற்றாளர்கள் தங்களுடைய கருத்துக்கு சாதகமாக ஆதாரமாக எடுத்து வைக்கிறார்கள். உரிய இடத்தில் இறை நாட்டப்படி அதை நாம் விளக்குவோம். என் மறுப்பு:குர்-ஆன் கற்பனையா? அல்லது பைபிள் கற்பனையா என்பது இரண்டையும் ஆராயும் அன்பர்களுக்கு விளங்கும். குர்-ஆனில் உள்ள முரண்பாடுகளுக்கு குர்-ஆனும், ஹதீஸ்களும் இஸ்லாமிய சரித்திர நூல்களுமே சாட்சி. சரித்திர நூல்களும், தொல்பொருள் ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளும் பைபிளில் சொல்லப்பட்டவைகளே உண்மையானவை என்று நிருபிக்கின்றன.

ஆரோனின் சகோதரியான மிரியாம் பற்றி சிறிது தெரிந்துக்கொண்டு, இயேசுவின் தாயை "ஆரோனின் சகோதரியே" என்று கூறுவதிலும், பெர்சிய அரசன் அகாஸ்வோறு அரசனின் மந்திரியாக இருந்த "ஆமான்" என்ற நபரை, எகிப்தின் பார்வோனோடு சம்மந்தப்படுத்தி பேசும் போதும் குர்-ஆன் முரண்படுகின்றது.சொத்துக்களை பிரித்துகொடுப்பதில் எவ்வளவு பிரச்சனை இருக்கிறது என்று எல்லாருக்கும் தெரியும். ஹதிஸ்கள், மற்றும் ஷரியாவின் உதவியில்லாமல் குர்-ஆனில் சொல்லியபடி, சொத்துக்களை பிரித்து கொடுக்கமுடியுமா? மிகத் தெளிவாக உள்ள குர்-ஆனின் தவறை திருத்துவதற்கு சீராக்களும், சரித்திர நூல்களும், ஹதீஸ்களும் தேவைப்படுகின்றன. குர்-ஆன் படி சொத்துக்களை பிரித்துகொடுத்தால், 100 சதவிகிதத்திற்கு அதிகமாக போகிறது. யார் மீதி சொத்துக்களை தருவது. இதைப்பற்றியும் நாம் ஒரு கட்டுரையைக் காண்போம்.குர்-ஆன் 4:11, 4:12, மற்றும் 4:176 வசனங்கள் சொத்துக்கள் பிரிப்பதைப்பற்றி அல்லாவின் கட்டளையை கொண்டுள்ளது.
இந்த முரண்பாட்டைப்பற்றி இங்கு படிக்கலாம்.
Inheritance in Koran Koran Contradictions
இயேசுவின் பிறப்பு பற்றியும், அவரின் மரணம், மற்றும் உயிர்த்தெழுதலைப்பற்றியும் எந்த ஒரு முரண்பாடும் இல்லை. இந்நிகழ்ச்சிகளில் உள்ள ஒற்றுமையை இங்கு காணலாம். Bible

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது: இயேசுவை இறைத்தூதராக ஏற்றுக் கொண்ட முஸ்லிம்களிடம் அவரை இறைத்தூதர் என்று அறிவிக்கும் குர்ஆன் உள்ளது. இதில் இயேசுவின் பிறப்பு அதிசயம், குழந்தை பருவம், மழலை பருவத்தில் அவர் தம் தாயின் கற்புக்கு கொடுத்த உத்திர வாதம், வாலிபம், பிரச்சாரம், அவரது சீடர்கள், எதிரிகளின் சூழ்ச்சி, இறுதி முடிவு என்று அவர் பற்றிய எல்லா விபரங்களும் கூறப்பட்டுள்ளன. அவரை கடவுளின் குமாரர் என்று - இரச்சகர் என்றோ குர்ஆன் ஏற்கவில்லை. அவ்வாறு கூறுவோரின் கூற்றை குர்ஆன் கடுமையாக மறுத்துள்ளது.

என் மறுப்பு: குர்-ஆன் வருவதற்கு 600 ஆண்டுகளுக்கு முன்பே இயேசு தெளிவாக சொல்லிவிட்டார், தனக்கு பின் அனேக "கள்ள தீர்க்கதரிசிகள்" வருவார்கள், அவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள் என்று.குர்-ஆனுக்கு இறைத்தூதருக்கும்(தீர்க்கதரிசிக்கும்), நல்ல இறைவனிடியார்களுக்கும் ( நீதிமானுக்கும்) உள்ள வித்தியாசமே தெரியவில்லை. ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, யோசேப்பு போன்றோர்கள் எந்த இனமக்களுக்காகவும் நபிகளாக அனுப்பப்படவில்லை. அவர்கள் தங்களுக்கு தேவன் காண்பித்த தேசத்தில் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தார்கள். இவர்கள் நீதிமான்கள் அவ்வளவு தான். தங்கள் குடும்பங்களுக்கு இவர்கள் எதிர்காலத்தைப்பற்றியும், நீதிமானாக வாழ்வதைப்பற்றியும் எச்சரித்தார்களே தவிர, ஊருக்கெல்லாம் தீர்க்கதரிசனம் உரைத்து, அவர்கள் பாவங்களிலிருந்து மனம்திரும்பும்படி யாருக்கும் எச்சரிக்கவில்லை. ஆனால் இவர்கள் தங்கள் இனமக்களுக்கு எச்சரிக்க அல்லாவால் அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் என்றுச் சொல்கிறது. எலியா, எலிஷா, எசாயா, யோவான் போன்று மக்களை நல்வழிப்படுத்த அனுப்பப்பட்ட தீர்க்கதரிசிகள் அல்ல.இப்படிப்பட்ட குர்-ஆன், இயேசு ஒரு நபி மட்டும் தான் என்றுச் சொல்வதில், கிறிஸ்தவர்களுக்கு எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை.

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது: சமூகமும் - இயேசுவின் பிறப்பும்இயேசுவின் வாழ்க்கையைப் பற்றி முழுமையான தெரிந்துக் கொள்ள வேண்டுமானால் அவர் எந்த சமுதாயத்திற்கு வந்து தம் பணியை சிறப்பாக செய்தாரோ அந்த சமுதாயம் பற்றி ஓரளவு தெரிந்துக் கொள்ள வேண்டும்.இயேசுவின் வருகைக்கு ஏறத்தாழ 2000 - 2500 வருடங்களுக்கு முன் அப்ரஹாம் (இப்ராஹீம்) என்ற தீர்க்கதரிசி (இன்றைய இராக்கில்) தோன்றினார். அவருக்கு சாராள் (சபுரா) ஆகார் (ஹாஜரா) என்று இரு மனைவிகள்.

என் மறுப்பு: சாராளுடைய அடிமைப்பெண்தான் ஆகார். ஆகார் என்றுமே ஆபிரகாமின் மனைவியாக தேவன் கருதவில்லை. ஆகாரை சாராளின் அடிமைப்பெண் என்று தான் பைபிள் குறிப்பிடுகிறது.

a) அடிமைப்பெண் மறுமனையாட்டியாகிறாள்: ஆதியாகமம்: 16:1-3ஆதியாகமம் 16:1-3 16:1. ஆபிராமுடைய மனைவியாகிய சாராய்க்குப் பிள்ளையில்லாதிருந்தது. எகிப்து தேசத்தாளாகிய ஆகார் என்னும் பேர் கொண்ட ஒரு அடிமைப் பெண் அவளுக்கு இருந்தாள்.16:2. சாராய் ஆபிராமை நோக்கி, நான் பிள்ளைபெறாதபடிக்குக் கர்த்தர் என் கர்ப்பத்தை அடைத்திருக்கிறார்; என் அடிமைப் பெண்ணோடே சேரும், ஒருவேளை அவளால் என் வீடு கட்டப்படும் என்றாள். சாராயின் வார்த்தைக்கு ஆபிராம் செவிகொடுத்தான்.16:3. ஆபிராம் கானான் தேசத்தில் பத்து வருஷம் குடியிருந்தபின்பு, ஆபிராமின் மனைவியாகிய சாராய் எகிப்து தேசத்தாளான த்ன் அடிமைப்பெண்ணாகிய ஆகாரை அழைத்து, அவளைத் தன் புருஷனாகிய ஆபிராமுக்கு மறுமனையாட்டியாகக் கொடுத்தாள்.

b) சாராள் ஆகாரை அடிமைப்பெண் என்றுச்சொல்கிறாள்: ஆதியாகமம்: 16:4-5ஆதியாகமம் 16:4-5 16:4. அவன் ஆகாரோடே சேர்ந்தபோது, அவள் கர்ப்பந்தரித்தாள்; அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டபோது, தன் நாச்சியாரை அற்பமாக எண்ணினாள்16:5. அப்பொழுது சாராய் ஆபிராமை நோக்கி, எனக்கு நேரிட்ட அநியாயம் உமதுமேல் சுமரும்; என் அடிமைப் பெண்ணை உம்முடைய மடியிலே கொடுத்தேன்; அவள் தான் கர்ப்பவதியானதைக் கண்டு என்னை அற்பமாக எண்ணுகிறாள்; கர்த்தர் எனக்கும் உமக்கும் நடுநின்று நியாயந்தீர்ப்பாராக என்றாள்.

c) ஆபிரகாம் ஆகாரை அடிமைப்பெண் என்றுச்சொல்கிறார் ஆதியாகமம்: 16:6 ஆதியாகமம் 16:6 16:6. அதற்கு ஆபிராம் சாராயை நோக்கி, இதோ உன் அடிமைப்பெண் உன் கைக்குள் இருக்கிறாள்; உன் பார்வைக்கு நலமானபடி அவளுக்குச் செய் என்றான். அப்பொழுது சாராய் அவளைக் கடினமாய் நடத்தினபடியால் அவள் அவளைவிட்டு ஓடிப்போனாள்

d) கர்த்தருடைய தூதனானவர் ஆகாரை அடிமைப்பெண் என்றுச்சொல்கிறார்: ஆதியாகமம்: 16:7-8 ஆகாரும் தன்னை "ஆபிரகாமின் மனைவி என்றுச் சொல்லிக்கொள்ளவில்லை" தன்னை சாராளின் ( நாச்சியார் ) அடிமைப்பெண் என்றே சொல்கிறாள்.கர்த்தருடைய தூதனானவர் கூட "ஆபிரகாமின் மனைவியே அல்லது ஆகாரே என்றுச் சொல்லாமல்" சாராளின் அடிமைப்பெண்ணே என்றுத் தான் அழைக்கிறார்.ஆதியாகமம் 16:7-8 16:7. கர்த்தருடைய தூதனானவர் அவளை வனாந்தரத்திலே சூருக்குப்போகிற வழியருகே இருக்கிற நீரூற்றண்டையில் கண்டு,16:8. சாராயின் அடிமைப்பெண்ணாகிய ஆகாரே, எங்கேயிருந்து வருகிறாய்? எங்கே போகிறாய்? என்று கேட்டார்; அவள், நான் என் நாச்சியாராகிய சாராயைவிட்டு ஓடிப்போகிறேன் என்றாள்.

e) இஸ்மவேல் ஒரு தீர்க்கதரிசி அல்ல: ஆதியாகமம்: 16:9-12முகமதுவுடைய நம்பிக்கை என்னவென்றால், ஆபிரகாமிற்கு பிறப்பவர்கள் எல்லாம் தீர்க்கதரிசிகள் என்று நம்பினார். ஆனால், இஸ்மவேல் ஒரு சாதாரண் மனிதனே தவிர ஒரு தீர்க்கதரிசி அல்ல. மற்றுமில்லை, அவன் ஒரு "துஷ்டமனுஷனாக இருப்பான்" என்று கர்த்தர் என்று சொல்லியிருக்கிறார்.ஆதியாகமம் 16:9-12 16:9. அப்பொழுது கர்த்தருடைய தூதனானவர், நீ உன் நாச்சியாரண்டைக்குத் திரும்பிப்போய், அவள் கையின்கீழ் அடங்கியிரு என்றார்.16:10. பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி, உன் சந்ததியை மிகவும் பெருகப்பண்ணுவேன்; அது பெருகி, எண்ணிமுடியாததாயிருக்க்கும் என்றார்.16:11. பின்னும் கர்த்தருடைய தூதனானவர் அவளை நோக்கி, நீ கர்ப்பவதியாயிருக்கிறாய், ஒரு குமாரனைப் பெறுவாய்; கர்த்தர் உன் அங்கலாய்ப்பைக் கேட்டபடியினால், அவனுக்கு இஸ்மவேல் என்று பேரிடுவாயாக.16:12. அவன் துஷ்டமனுஷனாயிருப்பான்; அவனுடைய கை எல்லாருக்கும் விரோதமாகவும், எல்லாருடைய கையும் அவனுக்கு விரோதமாகவும் இருக்கும்; தன் சகோதரர் எல்லாருக்கும் எதிராகக் குடியிருப்பான் என்றார்.f) ஆபிரகாமின் மற்றொரு மனைவி: ஆதியாகமம்: 25:1-2ஆபிரகாமிற்கு இரண்டு மனைவிகள் மட்டுமல்ல, அவருக்கு இன்னொரு மனைவியும் இருந்தாள். இவர்களுடைய பிள்ளைகளைப்பற்றி குர்-ஆன் ஒன்றுமே சொல்லவில்லையே. இவளுடைய பிள்ளைகள் தீர்க்கதரிசிகள் ( இறைத்தூதர்கள் ) இல்லையோ?ஆதியாகமம் 25:1-225:1. ஆபிரகாம் கேத்தூராள் என்னும் பேர் கொண்ட ஒரு ஸ்திரீயையும் விவாகம்பண்ணியிருந்தான்.25:2. அவள் அவனுக்குச் சிம்ரானையும், யக்ஷானையும், மேதானையும், மீதியானையும், இஸ்பாக்கையும், சூவாகையும் பெற்றாள்.

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது: இதில் ஆகார் என்ற இரண்டாவது மனைவியான ஹாஜராவிற்கு இஸ்மவேல் என்ற இஸ்மாயீல் முதல் மகனாக பிறக்கிறார்கள். இஸ்மவேலையும் (இஸ்மாயீல்) அவர் தாயார் ஆகார் (ஹாஜராவையும்) ரையும் இறைப்பணிக்காக அரபு தேசத்தில் (சவூதி அரோபியாவில்) இருக்கும் மக்கா என்ற ஊரில் ஆப்ரஹாம் கொண்டு போய் விட்டு விடுகிறார்கள். இந்த விபரம் குர்ஆனிலும் இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கையை போதிக்கும் புகாரி என்ற பெரு நூலிலும், பைபிளின் பழைய ஏற்பாட்டின் ஆதியாகாமத்தின் அதிகாரங்கள் 12, 13. 14, 15, 16. 17 ஆகியவைகளிலும் விரிவாக கூறப்பட்டுள்ளது.


என் மறுப்பு:
அருமை அருமை. அவ்வளவு தெளிவாகச் சொல்கிறீர்கள். குர்-ஆனில், ஹதீஸ்களில் உள்ளது என்றுச் சொன்னால், பரவாயில்லை போனால் போகட்டும் என்று விட்டுவிடலாம். பழைய ஏற்பாட்டில் கூட உள்ளதாமே! மக்காவில் ஆபிரகாம் இஸ்மவேலை விட்டு வந்த செய்தி. இதை படிக்கும் இஸ்லாமியர்கள் பழைய ஏற்பாட்டில் தேடிபார்க்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை தானே உங்களுக்கு.
இறைபணிக்காக சவுதி அரேபியாவில் உள்ள மக்காவில் ஆபிரகாம் விட்டு வந்தார் என்று பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டுள்ளதா? அல்லது வீட்டைவிட்டு துரத்திவிட்டார் அல்லது அனுப்பிவிட்டார் என்று உள்ளதா?அவ்வளவு ஏன், நீரே பழைய ஏற்பாட்டை தொடவில்லை என்று நன்றாக புரிகிறது. ஆபிரகாம், ஆகாரையும், இஸ்மவேலையும், தன் வீட்டைவிட்டு அனுப்புவிடும் செய்தியை மாற்றி மக்காவில் கொண்டுவிட்டதாக சொல்கிறீர்.
இது மட்டுமா, ஆதியாகமம் 21ம் அதிகாரத்தில் சொல்லப்பட்ட காரியத்தை, நீர் ஆதியாகமம் 17வது அதிகாரம் வரையில் சொல்லியிருக்கிறது என்றுச் சொல்கிறீர்.
ஆதியாகமம்: 21:12-21
21:12. அப்பொழுது தேவன் ஆபிரகாமை நோக்கி, அந்தப் பிள்ளையையும், உன் அடிமைப்பெண்ணையும் குறித்துச் சொல்லப்பட்டது உனக்குத் துக்கமாயிருக்க வேண்டாம்; ஈசாக்கினிடத்தில் உன் சந்ததி விளங்கும்; ஆதலால் சாராள் உனக்குச் சொல்வதெல்லாவற்றையும் கேள்.
21:13. அடிமைப்பெண்ணின் மகனும் உன் வித்தாயிருக்கிறபடியால், அவனையும் ஒரு ஜாதியாக்குவேன் என்றார்.
21:14. ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, அப்பத்தையும் ஒரு துருத்தி தண்ணீரையும் எடுத்து, ஆகாருடைய தோளின்மேல் வைத்துப் பிள்ளையையும் ஒப்புக்கொடுத்து, அவளை அனுப்பிவிட்டான்; அவள் புறப்பட்டுப்போய், பெயர்செபாவின் வனாந்தரத்திலே அலைந்து திரிந்தாள்.
21:15. துருத்தியிலிருந்த தண்ணீர் செலவழிந்தபின்பு, அவள் பிள்ளையை ஒரு செடியின்கீழே விட்டு,
21:16. பிள்ளை சாகிறதை நான் பார்க்கமாட்டேன் என்று, எதிராக அம்பு பாயும் தூரத்திலே போய் உட்கார்ந்து சத்தமிட்டு அழுதாள்.
21:17. தேவன் பிள்ளையின் சத்தத்தைக் கேட்டார்; தேவதூதன் வானத்திலிருந்து ஆகாரைக் கூப்பிட்டு ஆகாரே, உனக்கு என்ன சம்பவித்தது, பயப்படாதே, பிள்ளையிருக்கும் இடத்திலே தேவன் அவன் சத்தத்தைக் கேட்டார்.
21:18. நீ எழுந்து பிள்ளையை எடுத்து அவனை உன் கையினால் பிடித்துக்கொண்டுபோ, அவனைப் பெரிய ஜாதியாக்குவேன் என்றார்.
21:19. தேவன் அவளுடைய கண்களைத் திறந்தார்; அப்பொழுது அவள் ஒரு தண்ணீர்த் துரவைக் கண்டு, போய், துருத்தியிலே தண்ணீர் நிரப்பி, பிள்ளைக்குக் குடிக்கக் கொடுத்தாள்.
21:20. தேவன் பிள்ளையுடனே இருந்தார்; அவன் வளர்ந்து வனாந்தரத்திலே குடியிருந்து, வில்வித்தையிலே வல்லவனானான்.
21:21. அவன் பாரான் வனாந்தரத்திலே குடியிருக்கையில், அவனுடைய தாய் எகிப்து தேசத்தாளாகிய ஒரு பெண்ணை அவனுக்கு விவாகம்பண்ணுவித்தாள்இந்த முறை தேவன், ஆகாரை நோக்கி, நீ உன் நாச்சியாரிடம் ( சாராள்) போ, என்றுச் சொல்லவில்லை. காரணம், ஈசாக்கு மூலமாகத்தான் தன் திட்டத்தை நிறைவேற்ற தேவன் சித்தம் கொண்டார்.
ஆபிரகாம் மக்காவிற்கு இஸ்மவேலோடு வந்தார், அங்கு காபாவை புதுப்பித்தார் என்ற குர்-ஆனின், ஹதீஸ்களின் வாதத்திற்கு இதுவரையில் எந்த சரித்திர ஆதாரமும், அகழ்வாராச்சி ஆதாரமும் இல்லை.
1. ஊர் என்ற தேசத்திலிருந்து, பாலும், தேனும் ஓடும் தேசத்திற்கு போகும்படி சொன்ன அல்லா, ஏன் பிறகு இங்கிருந்து மக்காவிற்கு போகச்சொல்கிறார்?

2. 100 வயதுள்ள ஆபிரகாம், ஒரு குழந்தையை எடுத்துக்கொண்டு, ஆகாரோடு ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள மக்காவிற்கு பாலைவனத்தில் எப்படி சென்றார் என்பது தான் ஆச்சரியம். ஒரு பாம்பு வழிகாட்டியதோ?

3. மக்காவில் தீர்க்கதரிசனம் உரைத்து, மக்கா மக்களை நேர்வழியில் நடத்துவதற்காகவா?

4. இவர்கள் காபாவை புதுப்பிக்கும்போது மக்காவில் யாரும் வாழவில்லை. ஒரு மனிதனும் இல்லை. ஊரிலே யாரும் இல்லாத போது, அங்கு காபாவை பாதுகாக்க அல்லது ஒரு பொருப்பாளியாக இஸ்மாயில் எதற்கு? கி.மு. 2000 லிருந்து கி.பி வரை மக்காவில் மனித நடமாட்டம் இல்லை என்று சரித்திரம் சொல்கிறது.
Tabari VI:52 “The Ka’aba had not had any custodians since its destruction in the time ofNoah. Then Allah commanded Abraham to settle his son by the Ka’aba, wishing thereby toshow a mark of esteem to one whom he later ennobled by means of his Prophet Muhammad.”“Abraham and his son Ishmael were custodians of the Ka’aba after the time of Noah. At the time, Mecca was uninhabited….”
இஷாக், மற்றும் டபரி போன்றவர்களின் தொகுப்பில் இதைப்பற்றிச் சொல்லியுள்ளது. ஆனால் நீர் சொன்னது போல எந்த ஹதீஸிலும் இல்லை. புகாரி ஹதீஸிலும் இந்நிகழ்ச்சி பற்றிய செய்தி இல்லை.

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:
(முக்கிய குறிப்பு) கிறிஸ்துவ மத குருமார்கள்; இயேசுவிற்குபிறகு எந்த நபியும் இல்லை என வாதிக்கிறார்கள். இதற்கு காரணம் ஆப்ரஹாமின் முதல் மகன் இஸ்மவேலின் வரலாற்றை அவர்கள் கண்டுக் கொள்ளாததேயாகும். இரண்டாவது மகனான ஈசாக்குவின் பக்கமே அவர்களின் கவனம் செலுத்தப்படுகிறது. அதனால் இஸ்மவேலைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதை உரிய இடத்தில் பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்)

என் மறுப்பு:
அருமை நண்பரே, ஆபிரகாமின் முதல் மனைவி மூலம் பிறந்த ஈசாக் மட்டுமல்ல, ஆகார் மூலமாக பிறந்த இஸ்மவேல் கூட ஒரு நபி என்று சொல்கிறீர். இவரை கிறிஸ்தவ குருக்கள் சிந்திக்கவில்லை என்றுச் சொல்கிறீர். ஆபிரகாமின் வேறு ஒரு மனைவியைப் பற்றி உமக்குத் தெரியுமா? அவர்கள் பிள்ளைகள் பற்றி அல்லா என்ன சொல்லியுள்ளார்? அவர்கள் பக்கம் உங்கள் கவனம் ஏன் போகவில்லை ?

a) ஆபிரகாமின் மற்றொரு மனைவி:
ஆபிரகாமிற்கு இரண்டு மனைவிகள் மட்டுமல்ல, அவருக்கு இன்னொரு மனைவியும் இருந்தாள். இவர்களுடைய பிள்ளைகளைப்பற்றி குர்-ஆன் ஒன்றுமே சொல்லவில்லையே. இவளுடைய பிள்ளைகள் தீர்க்கதரிசிகள் ( இறைத்தூதர்கள் ) இல்லையோ?
ஆதியாகமம்: 25:1-225:1. ஆபிரகாம் கேத்தூராள் என்னும் பேர் கொண்ட ஒரு ஸ்திரீயையும் விவாகம்பண்ணியிருந்தான்.
25:2. அவள் அவனுக்குச் சிம்ரானையும், யக்ஷானையும், மேதானையும், மீதியானையும், இஸ்பாக்கையும், சூவாகையும் பெற்றாள்.

b) நபிக்கள் வருவது ( நபித்துவம் ), வேதம் கொடுக்கப்படுவது ஈசாக்கு வம்சத்திற்கு - குர்-ஆன் சாட்சி :
குர்-ஆனில் சொல்லப்பட்ட நபித்துவத்தைப்பற்றி 4 வசனமும் இஸ்ரவேல் மக்களைப்பற்றியே பேசுகிறது. நபித்துவமும், வேதமும் ஈசாக் வம்சத்திற்கு மட்டுமே உரியது என்று குர்-ஆன் சொல்கிறது, இஸ்மவேல் வம்சத்திற்கு அல்ல. 2500 ஆண்டுகளாக ( ஆபிரகாமிலிருந்து ( 2000 கி.மு), முகமது (570 கி.பி.) வரை) எல்லா நபிகளும் ஈசாக்கு வம்சத்திலிருந்து தான் வந்துள்ளார்கள். ஒரு நபிகூட இஸ்மவேல் வம்சம் இல்லை.
இஸ்மவேல் நபி என்றால், அவரின் பிள்ளைகள் அல்லது மற்ற வம்சத்தார்கள் யார் நபியாக இருந்தார்கள்? யாருடைய பெயரையாவது சொல்லமுடியுமா?

c) இதோ ஈசாக்கு வம்சத்திற்குத் தான் நபித்துவம், வேதம் என்று குர்-ஆன் சொல்லும் சாட்சி: 6:89, 11:28, 29:27, 57:26
குர்-ஆன் 6:89, 11:28, 29:27, 57:266:89 இவர்களுக்குத்தான் நாம் வேதத்தையும், அதிகாரத்தையும், நபித்துவத்தையும் கொடுத்தோம்; ஆகவே இவற்றை இவர்கள் நிராகரித்தால் இதனை நிராகரிக்காத ஒரு சமுதாயத்தினரை இதற்கு நாம் நிச்சயமாக பொறுப்பாக்குவோம்.
11:28 (அதற்கு) அவர் (மக்களை நோக்கி) 'என் சமூகத்தவர்களே! நீங்கள் கவனித்தீர்களா? நான் என் இறைவனிடமிருந்து (பெற்ற) தெளிவின் மீது இருந்து அவனிடமிருந்து (நபித்துவம் என்னும்) ஓர் அருளையும் அவன் எனக்கு தந்திருந்து அது உங்களுக்கு (அறியமுடியாமல்) மறைக்கப்பட்டு விடுமானால் நீங்கள் அதனை வெறுத்துக் கொண்டிருக்கும் போது அதனை(ப் பின்பற்றுமாறு) நான் உங்களை நிர்பந்திக்க முடியுமா?" என்று கூறினார்.
29:27 மேலும், அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் அளித்தோம்; இன்னும் அவருடைய சந்ததியிலே, நபித்துவத்தையும், வேதத்தையும் ஏற்படுத்தினோம்; அவருக்கு அவருடைய கூலியை இவ்வுலகத்திலும் கொடுத்தோம்; நிச்சயமாக மறுமையில் அவர் நல்லவர்களில் ஒருவராவார்.
57:26 அன்றியும், திடமாக நாமே நுூஹையும், இப்ராஹீமையும் (தூதர்களாக) அனுப்பினோம்; இன்னும், அவ்விருவரின் சந்ததியில் நுபுவ்வத்தை (நபித்துவத்தை)யும் வேதத்தையும் ஏற்படுத்தினோம்; (அவர்களில்) நேர்வழி பெற்றவர்களும் உண்டு; எனினும் அவர்களில் ரும்பாலோர் ஃபாஸிக்குகளாக - பாவிகளாக இருந்தனர்.

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:
ஆப்ரஹாம் (இப்ராஹீம்) அவர்களின் முதல் மனைவியான சாராள் என்ற சபுராவிற்கு ஈசாக்கு என்ற இஸ்ஹாக் அவர்கள் இரண்டாவது குழந்தையாக பிறக்கிறார்கள். இவர்களின் சந்ததி பல கிளைகளாக பிரிந்து பெருகி பல இடங்களில் வாழ்ந்தார்கள். இவர்களில் ஒவ்வொரு சந்ததியினருக்கும் நேர்வழிக் காட்ட இறைவன் புறத்திலிருந்து தீர்கதரிசிகள் - இறைத்தூதர்கள் வந்துள்ளார்கள்.ஈசாக்(இஸ்ஹாக்)குடைய மகனாக யாகோப்(யஃகூப்) என்ற தீர்கதரிசி பிறக்கிறார்கள். இவர்களே 'இஸ்ராயீல்' என்றும் அழைக்கப்பட்டார்கள். இவர்களின் சந்ததியில் வந்தவர்கள்கள் தான் யூதர்கள் என்று அழைக்கப்படக்கூடிய இஸ்ரவேலர்கள்.அப்ரஹாம்(இப்ராஹீம்) அவர்கள் தம் மக்களுக்கு செய்த உபதேசத்தையே அவர்களின் மகன் ஈசாக்(இஸ்ஹாக்) அவர்களும், அவர்களுக்கு பின் மகன் வழி பேரன் யாகோப்(யஃகூப்) அவர்களும் செய்கிறார்கள். இந்த விபரங்கள் அனைத்தும் குர்ஆனில் வருகிறது.'
(ஆப்ரஹாம் ஆகிய) அவருக்கு அவருடைய இறைவன் ''எனக்கு நீர் கீழ்படியும்'' என்று கூறியதும் ''அகிலத்தாரின் இரச்சகனுக்கு நான் கீழ்படிந்து விட்டேன்'' என்று கூறினார் (அல் குர்ஆன் 2:131)இதையே தம் மக்களுக்கு அவர்கள் நல்லுரையாகவும் கூறினார்கள்.(இஸ்ரவேலாகிய) யஃகூபும் '' என் மக்களே! நிச்சயமாக இறைவன் இ(ஸ்லா)ம் மார்க்கத்தையே உங்களுக்கு தேர்ந்தெடுத்துள்ளான். எனவே நீங்கள் (அந்த ஏக இறைவனுக்கு) முற்றிலும் கீழ் படிந்தவர்களாக அன்றி மரணித்து விட வேண்டாம்'' என்கிறார்கள். (அல் குர்ஆன் 2:132)
யாகோபிற்கு மரணம் நெருங்கியதும் அவர் தம் மக்களிடம் கேட்கிறார் ''எனக்கு பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள்?''மக்கள் பதில் சொல்கிறார்கள் ''நீங்கள் வணங்கிய அந்த வணக்கத்திற்குறியவனும் உங்கள் (குடும்ப) முன்னோர்களான அப்ரஹாம்(இப்ராஹீம்) இஸ்மவேல்(இஸ்மாயீல்) ஈசாக்(இஸ்ஹாக்) ஆகியோர் வணக்கத்திற்குறியவனாக ஏற்று வணங்கிய அந்த ஒரே அறைவனையே வணங்குவோம்'' (அல் குர்ஆன் 2:133)

என் மறுப்பு:
ஆபிரகாம், ஈசாக் பட்டியலில் இஸ்மவேலும் சேர்ந்துவிட்டார். பைபிளில் ஒரு இடத்திலும் ஆபிரகாம், ஈசாக் பட்டியலில் இஸ்மவேலின் பெயரை சேர்த்து " நான் ஆபிரகாமின், இஸ்மவேலின், ஈசாக்கின் தேவன்" என்றுச் சொன்னதில்லை.இப்படிச் சொன்னால், கிறிஸ்தவர்கள் மாற்றி எழுதிவிட்டார்கள் என்றுச் சொல்வீர்கள்.

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:
இப்படி பல இறைத்தூதர்களிடமிருந்து அறிவுரைகளைப் பெற்ற யூதர்கள் பின்னாளில் கடின சித்தம் உள்ளவர்களாகவும் எத்தகைய கொடுமையை செய்வதற்கும் அஞ்சாதவர்களாகவும் மாறிப்போனர்கள். இத்தயை மக்களிடம் தான் இயேசு(ஈஸா) அவர்கள் பிரசாரம் செய்வதற்காக வருகிறார்கள் கடைசியாக.

என் மறுப்பு:
பிரச்சாரம் செய்வதற்காக மட்டுமல்ல, உலகத்தின் எல்லா மக்களுக்காகவும் மரிப்பதற்காகவும், பிறகு உயிரோடு எழுந்திருப்பதற்காகவும் வந்தார்.
குர்-ஆன் 19:33"இன்னும் நான் பிறந்த நாளிலும், நான் இறக்கும் நாளிலும் (மறுமையில) நான் உயிர் பெற்று எழும் நாளிலும் என் மீது சாந்தி நிலைத்திருக்கும்" என்று (அக்குழந்தை) கூறியது. -- இயேசு.

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:
இயேசுவிற்கு முன்னால் மோஸே (மூஸா) அவர்கள் அதே மக்களை வந்து சந்திக்கிறார்கள்.''நாம் மூஸாவிற்கு திட்டமாக வேதத்தை கொடுத்தோம். அவருக்கு பின்னால் தொடர்ச்சியாக இறைத்தூதர்களை அனுப்பிக் கொண்டிருந்தோம். மரியாளின் (மர்யமின்) குமாரர் இயேசு(ஈஸா)விற்கு nதிளிவான அத்தாட்சிகளை வழங்கியும் பரிசுத்த ஆத்மாவைக் கொண்டு அவரை பலப்படுத்தியும் வைத்தோம். (யூதர்களே) உங்கள் மனம் விரும்பாததை (நம்முடைய) எந்த தூதர் உங்களிடம் கொண்டு வந்தாலும் நீங்கள் பெருமையடிக்கிறீர்கள். ஒரு சாராரை பொய்படுத்தினீர்கள் ஒரு சாராரை கொலையும் செய்தீர்கள்.'' (அல் குர்ஆன் 2:87)
மோஸே அவர்களுக்க பிறகு இறைவன் தொடர்சியாக யூதர்களுக்காக தீர்கதரிசிகளை அனுப்பிக் கொண்டிருந்தான். அப்படி அனுப்பப்பட்ட தீர்கதரிசிகள் யூதர்களால் ''பொய்பிக்கப்பட்டார்கள்'' அல்லது ''கொலை செய்யப்பட்டார்கள்'' என்ற விபரம் மேற்கண்ட வசனத்தில் கிடைக்கின்றன. பொய்பிப்பதற்கும் கொலை செய்யப்பட்டதற்கும் என்ன காரணம்? அதே வசனத்தில் விடையும் கிடைத்து விடுகிறது. 'உங்கள் மனம் விரும்பாததை எந்த தூதர் உங்களிடம் கொண்டு வந்தாலும்..' என்ற இறைவனின் வார்த்தைகள், யூதர்கள் அவர்களின் மன விருப்பத்திற்கு மாற்றமாக - அவர்களை நல்வழிப்படுத்தக் கூடிய எந்த செய்தியையும் ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை.

என் மறுப்பு:
நல்லது, தொடருங்கள்.

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:
ஒரு கொள்கை நமக்கு பிடிக்காவிட்டால் அதை விட்டு நாம் ஒதுங்கிப் போகலாம் அல்லது அதை விமர்சிக்கலாம் இதை நாம் உலகில் இன்றும் பார்க்கிறோம். ஆனால் தாம் விரும்பாத ஒரு கொள்கையை - செய்தியை சொல்பவர்களை கொலை செய்யும் மனப்பக்குவம் பெற்றவர்களை கண்டிருக்கிறோமா... யூதர்கள் அந்த காரியத்தில் ஈடுபட்டார்கள். இதையும் அந்த வசனத்திலிருந்தே அறியலாம்.

என் மறுப்பு:
ஆமாம், யூதர்கள் அப்படிச்செய்தார்கள், உண்மை தான். இன்னொரு பிரிவினரும் இப்படிச் செய்தார்கள். அவர் தான், முகமதுவும் அவரது தோழர்களும். தன்னை விமர்சித்து கவிதை எழுதிய ஐந்து பிள்ளைகளின் தாய்க்கு முகமது என்ன செய்தார்?

இங்கு படிக்கவும்.The Death of `Asma' Bint Marwan "

ஒரு கொள்கை நமக்கு பிடிக்காவிட்டால் அதை விட்டு நாம் ஒதுங்கிப் போகலாம் அல்லது அதை விமர்சிக்கலாம் இதை நாம் உலகில் இன்றும் பார்க்கிறோம். " -- இதனை நான் ஆமோதிக்கிறேன்.

நிஜாமுத்தீன் அவர்கள் எழுதியது:
இந்த சூழலில் தான் அந்த சமூகத்திற்கு வழிகாட்ட இயேசு(ஈஸா) தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். எவ்வளவுதான் கெட்ட சமுதாயமாக இருந்தாலும் அதிலும் அபூர்வமாக இறைவனுக்கு அஞ்சி தம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளக் கூடிய சில நல்ல மனிதர்கள் இருந்து விடுவது இயல்புதான். அந்த நல்லவர்கள் மூலமாகவும், தாம் நல்லவர்களாக உருவாக்கும் தம்முடைய சந்ததிகள் மூலமாகவும் - வரும் தலைமுறைக்கு - நல்ல விஷயங்கள் போய் சேர இது வழிவகுக்கிறது இறைவன் தான் இந்த ஏற்பாட்டை செய்கிறான்.
இறைவனின் இந்த ஏற்பாட்டின் அடிப்படையில்தான் யூத வம்சத்தில் பிறந்த இயேசு(ஈஸா) அவர்களின் பாட்டி - அதாவது மரியாள்(மர்யம்) உடைய தாயார் - நல்லவர்களாக இருந்திருக்கிறார்கள். இறைவனுக்கு அஞ்சி அவனுக்கு மட்டும் வழிபட்டு நடந்த அந்த அம்மையாரின் பிரார்த்தனைக்காகவும்,'இயல்பாக' சராசரியாக வந்த தூதர்கள் அனைவரும் பொய்பிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதால் 'பிறப்பிலேயே அற்புதம் மிக்க ஒரு இறைத்தூதரை யூதர்களுக்காக அனுப்புவோம்' என்ற இறைவனின் ஏற்பாட்டின் படியுமே இயேசு(ஈஸா) அவர்களின் பிறப்பு நிகழ்கிறது.

என் மறுப்பு:
பிறப்பிலே அற்புதம் மட்டுமில்லை, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அவருடைய பிறப்பு, மரணம், உயிர்தெழல் போன்ற எல்லாம் தூள்ளியமாக பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்டிருக்கிறது.
Regards
David - isa.koran@gmail.com
Posted by Isa Koran at 4:50 AM
Labels:

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்