இது தான் இஸ்லாம் வலைதள அறிவிப்பு
இது தான் இஸ்லாம் வலைதளம் கீழ்காணும் செய்தியை அறிவிப்பு செய்துள்ளது
கிறிஸ்த்தவ இணையம் மறுக்கின்றது
இயேசுவின் வரலாற்றை தொகுக்கும் நாம், கிறிஸ்த்தவர்களை சிந்திக்கத் தூண்டும் பல கேள்விகளை வைத்திருந்தோம்.தற்சமயம் கிறிஸ்த்தவம் - பைபிள் குறித்து நமக்கு வந்துள்ள கேள்விகளுக்கு பதில் தொகுத்துக் கொண்டிருக்கும் போது இணையத்தில் வலை வீசினோம். அப்போது நமது தொடருக்கு மறுப்பளித்து எழுதப்பட்டு வரும் ஒரு மன்றம் நம் பார்வைக்கு கிடைத்தது. அதில் கிறிஸ்த்தவ சகோதரர்கள் நமக்கு சில கேள்விகளை வைத்து சில இடங்களில் குர்ஆனை மேற்கோள் காட்டியுள்ளார்கள்.இந்த விவாதத்தை நாம் மனம் திறந்து வரவேற்கின்றோம். இரு தரப்பு வாதங்களையும் படிக்கும் நடுநிலை சி்ந்தனையுள்ளவர்கள் எது சத்தியாமானது என்பதைப் புரிந்துக் கொள்வார்கள் என்ற அடிப்படையில் அவர்களின் இணையத்தை இங்கு தொடுப்பு கொடுக்கின்றோம். வாசகர்கள் அங்கு சென்று மறுப்புக் கட்டுரைகளை நேரடியாகப் படித்துக் கொள்ளலாம்.அவர்கள் நமக்களித்துள்ள பதில்கள் அதிலுள்ள நேர்மைகள்- கிறிஸத்தவ உலகால் மொத்தமாக மறைக்கப்பட்டு விட்ட இஸ்மவேல் மற்றும் இஸ்மவேலின் சந்ததியில் உதித்த இறைத்தூதர் முஹம்மத் அவர்கள் பற்றிய விபரங்கள் பைபிளின் துணையுடன் இங்கு விரைவில் எழுதப்படும். கர்த்தர் நாடட்டும்.
நமக்குமறுப்பளித்துவரும்இணையதொடுப்பு: http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=638
Comment Form under post in blogger/blogspot