[ஈஸா குர்-ஆன் - Isa Koran] குர்-ஆனின் கட்டுக்கதைகளும், பழங்கதைகளும் - சாலொமோனின் பறக்கும் பாய்!
குர்-ஆனின் கட்டுக்கதைகளும், பழங்கதைகளும்
சாலொமோனின் பறக்கும் பாய்!
குர்-ஆன் சிறிது கூட சிந்திக்காமல், அல்லாஹ் சாலொமோனுக்கு காற்றின் மீது அதிகாரம் கொடுத்து இருந்தார், ஆகையால் அவர் இரண்டு மாத பிரயாண தூரத்தை ஒரு நாளுக்குள் கடந்துவிடுகிறார் என்று கூறுகிறது.
இன்னும் ஸுலைமானுக்குக் கடுமையாக வீசும் காற்றையும் (நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்) அது, அவருடைய ஏவலின் படி, நாம் எந்த பூமியை பாக்கியமுடையதாக்கினோமோ (அந்த பூமிக்கும் அவரை எடுத்துச்) சென்றது இவ்வாறு, ஒவ்வொரு பொருளையும் பற்றி நாம் அறிந்தோராகவே இருக்கின்றோம். (குர்-ஆன் 21:81) (முஹம்மது ஜான் டிரஸ்ட் தமிழாக்கம்)
வேகமாக வீசும் காற்றை ஸுலைமானுக்கு வசப்படுத்திக் கொடுத்தோம் . அது நாம் பாக்கியம் செய்த பூமிக்கு அவரது கட்டளைப்படி சென்றது. நாம் ஒவ்வொரு பொருளையும் அறிவோராக இருக்கிறோம்.(குர்-ஆன் 21:81) (பீஜே தமிழாக்கம்)(அவருக்குப் பின்னர்) ஸுலைமானுக்குக் காற்றை (வசப்படுத்திக் கொடுத்தோம்), அதனுடைய காலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் மாலைப் பயணம் ஒரு மாத தூரமாகவும் இருந்தது மேலும் நாம் அவருக்காக செம்பை ஊற்றுப் போல் உருகியோடச் செய்தோம்; தம் இறைவனுடைய அனுமதிப்படி அவருக்கு முன் உழைப்பவற்றில் ஜின்களிலிருந்தும் (வசப்படுத்திக் கொடுத்தோம்.) அவர்களில் எவர் (அவருக்கு ஊழியம்செய்வதில்) நம்முடைய கட்டளையைப் புறக்கணிக்கின்றாரோ, அவரைக் கொழுந்து விட்டெரியும் (நரக) வேதனையைச் சுவைக்கும் படி நாம் செய்வோம் (என்று எச்சரித்தோம்). (குர்-ஆன் 34:12) (முஹம்மது ஜான் டிரஸ்ட் தமிழாக்கம்)
ஸுலைமானுக்குக் காற்றை வசப்படுத்தினோம். அதன் புறப்பாடு ஒரு மாதமாகும். அதன் திரும்புதல் ஒரு மாதமாகும். அவருக்காக செம்பு ஊற்றை ஓடச் செய்தோம். தனது இறைவனின் விருப்பப்படி அவரிடம் பணியாற்றும் ஜின்களும் இருந்தனர். அவர்களில் நமது கட்டளையை யாரேனும் புறக்கணித்தால் நரகின் வேதனையை அவருக்குச் சுவைக்கச் செய்வோம்.(குர்-ஆன் 34:12)(பீஜே தமிழாக்கம்)
சாலொமோனுக்கு ஒரு பறக்கும் பாய் இருந்ததாகவும், அதன் மூலம் அவர் பிரயாணம் செய்ததாகவும் இஸ்லாமிய பாரம்பரியம் கூறுகிறது. இஸ்லாமிய விரிவுரையாளர்களில் சுன்னி பிரிவைச் சேர்ந்த இப்னு கதீர் ஸூரா 21:81 பற்றி கீழ்கண்ட விதமாக விளக்குகிறார்:
கட்டைகளால் செய்யப்பட்ட ஒரு பாய் போன்ற ஒன்று சாலொமோனுக்கு இருந்தது. அதன் மீது அவர் தன் எல்லா வஸ்துக்கள், குதிரைகள், ஒட்டகங்கள், கூடார பொருட்கள், படைவீரர்கள் அனைத்தையும் வைத்துவிட்டு, இந்த பாயை அப்படியே கொண்டுச் செல்லும் படி காற்றுக்கு கட்டளையிடுவார். இந்த பறக்கும் பாய் மேலே எழும்பும் போது, அதன் கீழே இவரையும் அக்காற்று அப்படியே கொண்டுச் செல்லும். வெயிலிலிருந்து இவர் பாதுகாப்பாக அப்படியே நிழலில் பிரயாணம் செய்வார். அவர் எங்கு செல்லவேண்டும் என்று கட்டளையிடுவாரோ அந்த இடத்திற்கு காற்று இவைகள் அனைத்தையும் கொண்டுச் செல்லும். தாம் செல்லவேண்டிய இடம் வந்த உடன், அந்த மரத்தால் செய்யப்பட்ட பாய் கீழே இறங்கும், அதன் பிறகு எல்லாவற்றையும் அதிலிருந்து கீழே இறக்கிக்கொள்வார்கள். . . (Tafsir Ibn Kathir (Abridged) (Surat Al-Isra', Verse 39 To the end of Surat Al-Mu'minun), by a group of scholars under the supervision of Shaykh Safiur Rahman Al-Mubarakpuri [Darussalam Publishers & Distributors, Riyadh, Houston, New York, London, Lahore; First Edition: July 2000], Volume 6, pp. 476-477)
மேலும் ஸூரா 34:21ம் வசனம் பற்றி இப்னு கதீர் கீழ்கண்டவாறு விளக்கம் அளிக்கிறார்:
தாவூத் மீது அல்லாஹ் குவித்த ஆசீர்வாதங்களை குறிப்பிட்டுவிட்டு, அல்லாஹ் தாவூத்தின் மகனாகிய சுலைமானுக்கு (சாலொமோனுக்கு) கொடுத்த ஆசீர்கள் பற்றி பேசுகிறார் (இவ்விருவர் மீதும் சாந்தி உண்டாகட்டும்). அல்லாஹ் சுலைமானுக்கு காற்றின் மீது அதிகாரத்தை கொடுத்தார். இந்த காற்றானது சுலைமானை ஒரு பறக்கும் பாய் மீது கொண்டுச் செல்லும், செல்வதற்கு ஒரு மாதமும், திரும்பி வருவதற்கு ஒரு மாதமும் ஆகும் . அல் ஹசன் அல் பஸ்ரி இவ்விதமாக கூறுகிறார்: "காலையிலே தமாஸ்கஸ்ஸிலிருந்து சுலைமான் புறப்படுவார், இஸ்தகாரில் சேர்ந்துவிடுவார், அங்கே தன் மதிய உணவை உண்பார். திரும்பவும் இஸ்தகாரிலிருந்து புறப்படுவார் ஒரு மாதம் காற்றிலே வேகமாக பயணம் செய்வார், அதன் பிறகு காபுலை வந்து அடைவார். இஸ்தகாருக்கும் காபுலுக்கும் இடையே ஒரு மாத பிரயாணம் ஆகும். (Tafsir Ibn Kathir (Abridged) (Surat Al-Ahzab, Verse 51 to the end of Surat Ad-Dukhan), Shaykh Safiur Rahman Al-Mubarakpuri [Darussalam Publishers & Distributors, Riyadh, Houston, New York, London, Lahore; First Edition: September 2000], Volume 8, p. 70; capital emphasis ours)
காலஞ்சென்ற இஸ்லாமிய அறிஞர் முஹம்மது அஸத் என்பவர் ஸூரா 34:21ம் வசனம் பற்றி கீழ்கண்டவாறு பின்குறிப்பினை எழுதுகிறார்.
"மேலும் ஸூரா 21:81ஐயும் மற்றும் அதன் பின்குறிப்பையும் படிக்கவும். சுலைமானுக்கு சம்மந்தப்பட்ட புராண கட்டுக் கதைகள் பற்றி மேலும் அறிய ஸூரா 21:82ம் வசனத்தை பார்க்கவும். (மூலம்)
இஸ்லாமிய அறிஞர் முஹம்மது அஸத் அவர்கள் சாலொமோன் பற்றிய குர்-ஆனின் கதைகளை கட்டுக்கதைகளாகவும், புராணக்கதைகளாகவும் கருதுகிறார் என்பதை படிக்கும் வாசகர்களாகிய உங்களுக்கு ஆச்சரியமாக இல்லையா?
ஆங்கில மூலம்: Fables and Legends of the Quran - Solomon's Flying Carpet
குர்-ஆனின் புராணங்கள் மற்றும் கட்டுக்கதைகள் பற்றிய இதர கட்டுரைகள்
© Answering Islam, 1999 - 2012. All rights reserved.
--
9/30/2012 09:48:00 pm அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது
Comment Form under post in blogger/blogspot