முஸ்லிம்கள் பைபிளை படிக்கத் தேவையில்லை” என்ற இஸ்லாமியர்களின் வாதம்
"முஸ்லிம்கள் பைபிளை படிக்கத் தேவையில்லை" என்ற இஸ்லாமியர்களின் வாதம்
முஸ்லிகள் பைபிளை படிக்கத்தேவையில்லை ஏனென்றால் குர்-ஆன் தான் கடைசியாக வெளிப்பட்ட வேதமாக உள்ளது மேலும் குர்-ஆன் அனைத்து முந்தைய வேதங்களை தள்ளுபடி செய்துவிட்டது என்று இஸ்லாமியர்கள் வலியுருத்துகிறார்கள். ஆனால், முந்தைய எல்லா பரிசுத்த வேதங்களை முஸ்லிம்கள் விசுவாசிக்கவேண்டும் என்று குர்-ஆன் முஸ்லிம்களுக்கு கட்டளையிடுகிறது. அதாவது குர்-ஆனை மட்டுமல்ல, அதற்கு முன்பாக வாழ்ந்த தீர்க்கதரிசிகளுக்கு வெளியாக்கப்பட்ட வேதங்களை முஸ்லிம்கள் நம்பவேண்டும். கீழ்கண்ட வசனங்கள் இதனை தெளிவாக்குகிறது:
(முஃமின்களே!) "நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும்; இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம், அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்" என்று கூறுவீர்களாக. (ஸுரதுல் பகரா (2):136)
(இறை) தூதர். தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள். . . . . (ஸுரதுல் பகரா (2):285)
முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், அவன் தூதர் மீது அவன் இறக்கிய (இவ்) வேதத்தின் மீதும் இதற்கு முன்னர் இறக்கிய வேதங்களின் மீதும் ஈமான் கொள்ளுங்கள்;. எவர் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும் அவனுடைய தூதர்களையும்; இறுதி நாளையும் (நம்பாமல்) நிராகரிக்கிறாரோ, அவர் வழிகேட்டில் வெது தூரம் சென்றுவிட்டார். (அந்நிஸா (4):136)
முக்கியமாக "அவனுடைய வேதங்கள்" என்ற வார்த்தைகளை கவனிக்கவும். இது வெறும் குர்-ஆனை குறிப்பதில்லை, இது முந்தைய வேதங்கள் அனைத்தையும் குறிக்கிறது. மேலும் மேற்கண்ட வசனங்களில் முதல் வசனத்தில் "அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்" என்ற சொற்றொடர்களை கவனிக்கவும். முஸ்லிம்கள் ஒரு வேதம் இன்னொரு வேதத்தை விட உயர்ந்தது என்று கருதக்கூடாது என்பதை இவ்வசனங்களின் மூலம் தெளிவாக விளங்குகிறது. இறைவனுடைய வேதமானவது எல்லா காலத்திற்கும், எல்லா மனிதர்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்கும். முஸ்லிம்களுக்கு நாம் தெளிவாக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், "பைபிள்" என்பது ஒரு வேத புத்தகம் அல்ல, அதற்கு பதிலாக அனேக தீர்க்கதரிசிகள் மூலமாக கொடுக்கப்பட்ட வேத புத்தகங்களின் தொகுப்பாகும். அதாவது மோசேக்கு இறக்கப்பட்ட சட்டம் (அல் தௌராத்), தாவீதுக்கு கொடுக்கப்பட்ட வேதம் (அல் ஜபூர்), இயேசுவின் போதனைகள் அடங்கிய வேதம் (இன்ஜில்), மேலும் இதர தீர்க்கதரிசிகளின் வேதம் (சுஹுப் அன் நபியூன்) போன்றவைகள் பைபிளில் அடங்கும். ஒருவர் ஒரு வேதத்தை நம்பவேண்டும் என்றால், அதன் அர்த்தமென்ன? அவர்கள் அதனை படிக்க மட்டுமல்ல, அதனை தொடர்ந்து படித்து, ஆய்வு செய்து சொல்லப்பட்ட வசனங்களின் மீது நம்பிக்கை கொள்வதாகும். ஆக, குர்-ஆன் சொல்வதை ஒரு முறை படியுங்கள்:
யாருக்கு நாம் வேதத்தைக் கொடுத்தோமோ அவர்கள் அதை எவ்வாறு ஓதி(ஒழுகி)ட வேண்டுமோ, அவ்வாறு ஓதுகிறார்கள்;. அவர்கள் தாம் அதன் மேல் நம்பிக்கையுள்ளவர்கள்;. யார் அதை நிராகரிக்கின்றார்களோ அவர்கள் பெரும் நஷ்டவாளிகளே! (ஸூரதுல் பகரா (2):121)
இஸ்லாமிலே, பரிசுத்த வேதங்கள் பற்றி சொல்லப்பட்ட இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், அவைகள் மனித இனத்திற்கு உதவி செய்யும்படி இறக்கப்பட்ட "அடையாளங்கள்" ஆகும். பரிசுத்த வேதங்களில் உள்ள ஒரு வசனத்தை எடுத்துக்கொண்டாலும், அது கூட "ஆயத்" என்று சொல்லப்படுகின்ற "அடையாளங்களாக" இருக்கிறது. மேலும் இந்த "ஆயத்துக்களை" முக்கியமில்லாத ஒன்றாக நாம் கருதக்கூடாது, அவைகளில் நம்பிக்கை கொள்ளவேண்டும். யார் யாரெல்லாம் இறைவனின் அனைத்து பரிசுத்த வேதங்களில் உள்ள "அடையாளங்களை" அதாவது "ஆயத்துக்களை" நிராகரிக்கின்றார்களோ, அவர்களுக்கு இறைவன் கொடுத்த கடினமான எச்சரிப்பின் வசனங்களை பாருங்கள்.
யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்;. . . . . (அந்நிஸா (4) :56)
எவர் நிராகரித்து, நம் திருவசனங்களையும் மறுக்கிறார்களோ, அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள். (ஸூரதுல் மாயிதா (5):10)
© Answering Islam, 1999 - 2012. All rights reserved.
--
12/23/2012 07:55:00 pm அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது
Comment Form under post in blogger/blogspot