இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Wednesday, March 9, 2011

Answering Ahmad Deedat: பைபிளில் "அல்லாஹ்", அஹமத் தீதத் கொடுத்த "அல்வா"

 

Answering Ahmad Deedat: பைபிளில் "அல்லாஹ்", அஹமத் தீதத் கொடுத்த "அல்வா"



இது அஹமத் தீதத் அவர்களின் அறியாமையா? அல்லது மக்களை ஏமாற்றும் யுக்தியா?



முன்னுரை: காலஞ்சென்ற இஸ்லாமிய அறிஞர் அஹமத் தீதத் அவர்களை (இஸ்லாமிய வட்டாரங்களில்) தெரியாதவர்கள் இருக்கமாட்டார்கள் என்றுச் சொல்லலாம். இவருக்கு இஸ்லாமியர்களிடையே அதிக செல்வாக்கு இருக்கிறது. இஸ்லாமியர்களுக்கே உரித்தான பாணியில் உண்மையை மாற்றி திருத்திச் சொல்வதில் இவர் மன்னர் என்றால் மிகையாகாது. இவரது இடத்தை எனக்குத் தெரிந்தவரை திரு ஜாகிர் நாயக் அவர்களும், தமிழ் பேசும் மக்களின் மத்தியில் திரு பீஜே அவர்களும் நிறப்பிக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களைப் பற்றி இப்படி விமர்சிக்க எனக்கு (உமருக்கு) தகுதி உண்டு, ஏனென்றால் பீஜே மற்றும் ஜாகிர் நாயக் அவர்களின் எழுத்துக்களில் இருக்கும் ஏமாற்றுத் தன்மையை மக்களுக்கு எடுத்துச் சொல்லிக்கொண்டு இருக்கிறேன். இவர்களுக்கு நான் கொடுத்த மறுப்புக்களை இங்கு (http://isakoran.blogspot.com) படிக்கவும்.



இந்த கட்டுரையில் திரு அஹமத் தீதத் அவர்கள் எப்படி மக்களை ஏமாற்றுகிறார் என்பதை பார்க்கப்போகிறோம். இது இவரது அறியாமையா அல்லது வஞ்சிக்கும் திறமையா? அனேக நாடுகளுக்குச் சென்று இஸ்லாமுக்காக உழைத்தவர், அனேக அறிஞர்களை சந்தித்து பேசியவர், அதிக ஞானமுள்ளவர் என்று பெயர் பெற்ற ஒருவர் இப்படி ஒரு "ஆங்கில வாக்கியத்திற்கு என்ன பொருள்" என்பதையும் தெரியாமல் புத்தகம் எழுதுவாரா என்ற சந்தேகம் வருகிறது. இது அறியாமை அல்ல, இது ஒரு ஏமாற்று வேலை.



அஹமத் தீதத் தன்னுடைய "Is the Bible God's Word?" என்ற புத்தகத்தில் எழுதியவைகளை படத்தோடு கீழே தருகிறோம், அதன் பிறகு அதற்கான மறுப்பை பார்ப்போம்.


கிறிஸ்தவ பைபிளில் அல்லாஹ்





5. ALLAH IN THE CHRISTIAN BIBLE


The Rev. C. I. Scofield, D. D. with a team of 8 Consulting Editors, also all D.D.'s in the "Scofield Reference Bible" thought it appropriate to spell the Hebrew word "Elah" (meaning God) alternatively as "Alah" The Christians had thus swallowed the camel — they seemed to have accepted at last that the name of God is Allah — but were still straining at the gnat by spelling Allah with one "L"! (Photographic reproduction of the Bible page showing the word "ALAH" is preserved here for posterity below). ...


(Ahmed Deedat, Is the Bible God's Word?, ch. 4, pp. 21-22)

Source

இந்த பக்கத்தை/படத்தை முழுவதுமாக பார்க்க ‌இத்தொடுப்பை சொடுக்கவும்.



அஹமத் தீதத் அவர்கள் கூறுவது:



1) எபிரேய வார்த்தை "Elah" என்பதை "Alah" என்று உச்சரிக்கலாமாம்.



2) கிறிஸ்தவர்கள் முழு ஒட்டகத்தை (முழூ பூசணிக்காயை) விழுங்கிவிட்டார்களாம், கடைசியாக, தங்கள் தேவனின் பெயர் "Allah - அல்லாஹ்" என்பதை ஒப்புக்கொண்டார்களாம்.



3) இப்படி கிறிஸ்தவர்கள் ஒப்புக்கொண்டாலும், "ALLAH" என்று உச்சரிக்காமல், அதிலிருந்து "L" என்ற ஒரு எழுத்தை எடுத்துவிட்டு "ALAH" என்று உச்சரிக்கிறார்களாம்.



4) அவரது ஆராய்ச்சிக்கு அவர் ஆதாரமாக காட்டுவது "Scofield Reference Bible" என்ற ஆங்கில பைபிள் மொழியாக்கத்தில் கொடுக்கப்பட்ட‌ விளக்கவுரையாகும்.



அஹமத் தீதத் அவர்களுக்கு மறுப்பு:



"Scofield Reference Bible" என்ற பைபிள் மொழியாக்கத்தின் விளக்கவுரை படத்தை இவர் தன்னுடைய புத்தகத்தில் பதித்தார், மற்றும் அதன் மீது "The word ALLAH in the Christian Bible in the Latest SCOFIELD VERSION, THE WORD "ALLAH" IS NOW OMITTED" என்ற வரிகளையும் அச்சிட்டு வெளியிட்டுள்ளார், அதனை நாம் மேலே காணலாம்.



தீதத் அவர்கள் வட்டமிட்டு மேற்கோள் காட்டிய வரிகளை கீழே தருகிறேன், அதனை படிக்கவும், அப்படத்தில் உள்ளது போலவே நான் எழுதியுள்ளேனா என்பதை சரி பார்க்கவும்.



"Elohim (sometimes El or Elah), English form "God", the first of the three primary names of Deity, is a uni-plural noun formed from El - strength, or the strong one, and
Alah, to swear, to bind oneself by an oath, so implying faithfulness."


ஓரளவிற்கு ஆங்கிலம் தெரிந்தவர் மேலே உள்ள வரிகளை படித்தால், பைபிளில் இறைவனின் பெயர் "அல்லாஹ்" என்று உள்ளது என்றுச் சொல்வாரா?

"சொல்லமாட்டார்" என்பது தான் பதிலாக வரும். ஆனால், இஸ்லாமிய மேதையாகிய அஹமத் தீதத் அவர்கள் மட்டும் "பைபிளில் இறைவனின் பெயர் "அல்லாஹ்" என்று கிறிஸ்தவர்கள் ஒப்புக்கொண்டார்கள்" என்று கூறுகிறார். இவருக்கு குறைந்த பட்சம் ஆங்கில அறிவு இருக்கிறதா என்று கேட்கத் தோன்றுகிறது, ஆனால், உண்மை இதுவல்ல, அஹமத் தீதத் ஒரு ஏமாற்றுக்காரர், வஞ்சிக்கிறவர், எப்படியாவது இஸ்லாமுக்கு நல்லபெயர் கொண்டு வர எவ்வளவு கீழ்தரமாக செயல்படமுடியுமோ அவ்வளவு செயல்படுவார் என்பது இதன் மூலம் அறியலாம். இவர் மட்டுமல்ல, எல்லா இஸ்லாமிய அறிஞர்களின் நிலையும் இதுதான்.



சரி, மேற்கண்ட ஆங்கில வரிகளை அலசுவோம்:



1) "Elohim- எலோஹிம்" (தேவன்/இறைவன்/கடவுள்) என்ற வார்த்தை இரண்டு வார்த்தைகளின் கூட்டு என்று இந்த விளக்கவுரையில் ஆசிரியர் எழுதுகிறார். (யூசுப் அலி அவர்களும், பீஜே அவர்களும் தங்கள் குர்‍ஆன் மொழியாக்கத்தில் பின்குறிப்பு மற்றும் விளக்கவுரைகளை எழுதுவது போல, இவர்களும் எழுதியிருந்தார்கள்.)



2) அந்த இரண்டு வார்த்தைகள் "EL" மற்றும் "ALAH" என்பதாகும்.



3) "EL" என்றால், வலிமை அல்லது வலிமை உள்ளவன் என்று பொருள் (El - strength, or the strong one)



4) "ALAH" என்றால் சத்தியம் செய்தல், வாக்குறுதி கொடுத்தல், செய்த சத்தியத்திற்கு கட்டுப்பட்டு இருத்தல் என்று பொருள் (Alah, to swear, to bind oneself by an oath, so implying faithfulness).



இந்த விளக்கத்தில் எந்த இடத்தில் "Alah" என்றால் "God" என்று பொருள் என்று விளக்கவுரை கூறுகிறது?



அஹமத் தீதத் அவர்களுக்கு மட்டும் எப்படி வேறு மாதிரியாக தெரிகிறது?



ஏமாற்றுபவர்களுக்கு உண்மையை திருத்திக் கூறவேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு எல்லாமே அவர்களுக்கு சாதகமாகவே தெரியும், இந்த இலட்சணத்தில் "கிறிஸ்தவர்கள் முழு ஒட்டகத்தை விழுங்கிவிட்டார்கள்" உண்மையை மறைத்துவிட்டார்கள் என்று கூறுகிறார்.

ஓ அஹமத் தீதத் அவர்களே, உங்கள் வயதுக்கும், அறிவிற்கும் இப்படிப்பட்ட கிண்டர்கார்டன் விளக்கங்களை நீங்கள் கொடுப்பது உங்களுக்கு ஏற்புடையதாக இருக்கிறதா?



அஹமத் தீதத் அவர்கள் "பைபிள் விளக்கவுரையில் 'Alah' " என்று இருப்பதை மேற்கோள் காட்டினார், பொருள் தவறாக கூறியுள்ளார். நான் "அலாஹ்", "அல்லா" மற்றும் "அல்லாஹ்" என்ற வார்த்தைகள் எபிரேய மற்றும் கிரேக்க மூல மொழிகளில் என்ன பொருளோடு பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை கீழ்கண்ட கட்டுரையில் தெளிவாக விளக்கியுள்ளேன்.



Answering Ziya: "அல்லாஹ்" என்றால் "கர்வாலி மரம்" என்று பொருள்


Link



இனி எந்த இஸ்லாமியரும், "விளக்கவுரையில்" கொடுக்கப்பட்ட விவரங்களில் "அல்லாஹ்" இருக்கிறார் என்பதை தேடி அலையவேண்டாம், பைபிள் வசனங்களிலேயே "அல்லாஹ்" என்ற வார்த்தை இருக்கிறது என்பதை தெரிந்துக்கொள்ளட்டும். ஆனால், அவ்வார்த்தைக்கு பொருள் கர்வாலி மரம், சாபம், சத்தியம் செய்தல் மற்றும் ஒப்பாறி வைத்து புலம்புதல் என்பதாகும் என்பதை எல்லா இஸ்லாமியர்களும் அறிந்துக்கொள்ளட்டும்.



Scofield Version குழுவினர் தங்களுடைய அடுத்த பதிவில் தாங்கள் கொடுத்த விளக்கம் (Commentary) சரியானது அல்ல என்பதை அறிந்து அவர்கள் திருத்திவிட்டார்கள்.



முடிவுரை: இஸ்லாமிய அறிஞர்களே, நீங்கள் கிறிஸ்தவர்களை ஏமாற்றியது போதும், அல்வா கொடுத்தது போதும். இனி இப்படி செய்யாதீர்கள். மூத்த அறிஞர்கள் என்ற பெயர் பெற்ற அஹமத் தீதத் முதற்கொண்டு, நெற்று முளைத்த இஸ்லாமிய அறிஞர்கள் வரை, மாற்று மத அன்பர்களை "ஏமாற்றுவதை" ஒரு கலையாக பாவித்து நடந்துக்கொள்கிறார்கள். அஹமத் தீதத் அவர்கள் செய்தது போல பொய்யான தகவலை கொடுக்கவேண்டாம் என்று உங்களை எச்சரிக்கிறேன், நாங்கள் கேட்கமாட்டோம் என்றுச் சொல்வீர்களானால், அதனால் விளையும் விளைவை நீங்கள் அறுக்க தயாராகிவிடுங்கள்.



--
2/18/2011 10:02:00 AM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது


இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்