சவுதி அரேபியாவில் முதிர் கன்னிகள் எண்ணிக்கை 14 லட்சம்
சவுதி அரேபியாவில் வேலை இல்லா திண்டாட்டம் அதிக அளவில் இருக்கிறது. அதோடு
வீடுகளுக்கும் தட்டுப்பாடு உள்ளது. இதனால் அந்த நாட்டு ஆண்கள் திருமணத்தை
நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இதன் காரணமாக 32 வயதாகியும்
திருமணமாகாமல் இருக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இப்போது இந்த எண்ணிக்கை 14 லட்சம் ஆகும். அதாவது 16 பெண்களில் ஒருத்தி
திருமணம் ஆகாமல் இருக்கிறார்.
இந்த எண்ணிக்கை இன்னும் 4 ஆண்டுகளில் அதாவது 2015-ம் ஆண்டில் 40 லட்சமாக
உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வளைகுடா நாடுகளில் பெண்கள் தகுதியான ஆண்கள் கிடைக்காமல் தவிக்கிறார்கள்.
ஆண்களால் திருமணத்துக்கான பணத்தை பெண்வீட்டாருக்கு கொடுக்க முடியாததது
தான் காரணமாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆண்கள் வெளிநாடுகளில் உள்ள
பெண்களை திருமணம் செய்து கொள்வதில் ஆர்வமாக இருக்கிறார்கள்.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=619004&disdate=1/7/2011