சில நாட்களுக்கு முன்பு தான் "பீஜே அவர்களின்" புதிய தளத்தை அறிமுகப்படுத்தினேன். இப்போது கிறிஸ்தவத்திற்கு பதில் சொல்ல இன்னொரு தளம் உருவாக்கியுள்ளார்கள். இந்த தளத்தை உருவாக்கியர் தன்னை "அப்ஸ்" என்று குறிப்பிடுகிறார். ஆனால், இவரது உண்மைப்பெயர் என்னவோ... இந்த குறுநில மன்னர் யாரோ... [சில மாமன்னர்கள் தங்கள் தளத்தில் பதில் அளிக்கமுடியாவிட்டால், சில குறுநில மன்னர்களாக தங்களை காட்டிக்கொண்டு இப்படி தளங்களை ஆரம்பித்து செயல்படுகிறார்கள்]. எப்படியோ இஸ்லாமியர்கள் எழுதினால், பேசினால் அதிகமாக நாமும் பேசவும், எழுதவும் வாய்ப்பு உண்டாகும்
அது என்ன? உமரின் தள பெயரையே இந்த புதிய தளத்திற்கும் இருக்கிறதே! என்று ஆச்சரியப்படவேண்டாம். இது என் தளத்தின் பெயரே தான், ஆனால் ஒரு எழுத்தை அதிகமாக வைத்திருக்கிறார் இந்த இஸ்லாமிய(அறிஞ)ர். ஏன் இந்த பெயர் என்று நான் கேட்கப்போவதில்லை, இவரது தளத்திற்கும் சேர்த்து பதில் சொல்வது தான் நம்முடைய வேலை.
பீஜே அவர்களின் தளத்தை அறிமுகப்படுத்தியது போலவே, அப்ஸ் அவர்களின் தளத்தையும் கிறிஸ்தவ உலகிற்கு அறிமுகப்படுத்துகிறேன்.
இவர் என் ஈஸா குர்ஆன் தளத்திற்கு வந்து, கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல், சம்மந்தமில்லாத விவரங்களை பின்னூட்டமிட்டார், சிலவற்றை வெளியிட்டேன். இவரது தளத்தின் பெயரை பின்னூட்டமிட்டார், அதை இதுவரை பின்னூட்டமாக அனுமதிக்கவில்லை, ஆனால், அவருடைய பின்னூட்டத்திற்கு பதிலாக, அவருடைய தளத்தையே அறிமுகப்படுத்தி, இந்த கட்டுரையை எழுதிக்கொண்டு இருக்கிறேன். இக்கட்டுரையைக் கண்டு அவர் அதிகமாக மகிழுவார் என்று நினைக்கிறேன்.
அவருடைய தளத்திற்கு பதில்கள் இனி தொடர்ந்து வரும்.
ஆனால், அவருடைய தளத்தில் எங்கள் பதில்களை பின்னூட்டமாக நாங்கள் இட இவர் அனுமதிப்பாரா? எங்கள் பின்னூட்ட தொடுப்புக்களை வெளியிடுவாரா?
இவருக்கு இஸ்லாம் மீது நம்பிக்கை இருந்தால்,
அல்லாஹ்வின் மீது நம்பிக்கை இருந்தால்,
முஹம்மது ஒரு நல்ல மனிதர் என்று இவர் நம்பினால், எங்கள் தொடுப்புக்களை அனுமதிக்கிறேன் என்றுச் சொல்லட்டும், சொல்லுவாரா? அல்லது
மற்ற இஸ்லாமிய தளங்களைப் போல கோழைகளாக செயல்பட்டு, எங்கள் தொடுப்பை கொடுத்தால் எங்கே இஸ்லாமின் அஸ்திபாரம் ஆட்டம் காணும் என்று பயப்பட்டு, இவரும் எங்கள் தொடுப்பை கொடுக்க பயப்படுவாரா என்று தெரியவில்லை.
எங்களுடைய கட்டுரைகளுக்கு இவர் பதில் கொடுக்க முன்வந்தமையால் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அனேக தளங்கள் பதில் கொடுப்போம் என்று வந்தன, வந்த வண்ணமாகவே இருந்துவிட்டன. முஹம்மது பற்றியும், குர்ஆன் பற்றியும் கெட்கப்படும் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் இருந்துவிட்டன. உதாரணத்திற்கு, "முஹம்மது ஒரு பாவி" என்ற தலைப்பில் கட்டுரைகளை பதித்துள்ளோம், யாரும் பதில் தரவில்லை, எனக்கு தெரிந்த வரை.
திரு அப்ஸ் அவர்கள் பதில் சொல்வாரோ இல்லையோ... நாங்கள் தொடர்ந்து இவருக்கு பதில்கள் சொல்ல, கேள்விகள் கேட்க ஆரம்பித்து விடுகிறோம், இதற்காகவே, இந்த தளத்தை அறிமுகப்படுத்துகிறோம்.
ஈஸா குர்ஆனில் இருக்கும் இஸ்லாம் சம்மந்தப்பட்ட கட்டுரைகள் ஒவ்வொன்றாக எடுத்து இவர் பதில் அளிப்பாரா அல்லது வெறும் கேள்விகள் மட்டும் கேட்டுக்கொண்டு இருப்பாரா?... பொறுத்து இருந்து பார்ப்போம்.
திரு அப்ஸ் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். இவரது கட்டுரைகளுக்கு நம்முடைய பதில்கள்/கேள்விகள் தொடரும்.
இப்படிக்கு,
--
11/06/2010 11:20:00 AM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது
Comment Form under post in blogger/blogspot