விபச்சார பாவமும் பீஜே அவர்களும்: திருத்தல் மன்னர் இவர் தானோ!
இயேசு இறைமகனா புத்தகத்திற்கு மறுப்பு விபச்சார பாவமும் பீஜே அவர்களும்: திருத்தல் மன்னர் இவர் தானோ! இயேசு இறைமகனா என்ற பீஜே அவர்களின் புத்தகத்திற்கு மறுப்புக்கள் கொடுத்துக்கொணடு இருக்கிறோம். பீஜே அவர்கள் "கடவுள் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்" என்ற தலைப்பில் தங்கள் திருத்தல் வேலையை அரங்கேற்றியுள்ளார். இந்த மறுப்புக் கட்டுரை பீஜே அவர்களின் திருத்தல் வேலையை உலகிற்கு வெளிச்சம் காட்டும். பைபிள் சொல்லாத ஒன்றை தானாகவே கற்பனை செய்துக்கொண்டு தன் புத்தகத்தில் எழுதியுள்ளார். இதனை இக்கட்டுரையை படிக்கும் இஸ்லாமியர்களும் புரிந்துக் கொள்ளலாம். பீஜே எழுதியவைகளின் சுருக்கம்: 1) விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை தண்டிக்க, விபச்சாரம் செய்யாதவன் எவனோ அவன் தண்டிக்கட்டும் என்று இயேசு கூறினாராம். 2) யூத சமுதாயத்தில் எவருமே விபச்சாரம் செய்யாமல் இருக்கவில்லையாம். (பீஜேவின் கண்டுபிடிப்பு 1) 3) இயேசுவின் சீடர்களும் விபச்சாரம் செய்துள்ளார்களாம்! (பீஜேவின் கண்டுபிடிப்பு 2) 4) இயேசுவும் விபச்சாரம் செய்தார் என்று பைபிள் மறைமுகமாகச் சொல்கிறதாம் (பீஜேவின் கண்டுபிடிப்பு 3). 5) இது தான் கடவுளின் இலக்கணமா? என்று கேள்வியை பீஜே எழுப்புகிறார். 6) இயேசு விபச்சாரம் செய்யவில்லையானால், ஏன் அவளை அப்போதே தண்டிக்கவில்லை என்று இரண்டாவது கேள்வியை எழுப்புகிறார் இதனை படிக்கும் நீங்கள் கிறிஸ்தவராக இருந்தால், இப்படியெல்லாம் நாங்கள் பைபிளில் படிக்கவில்லையே என்று எண்ணுவீர்கள். உங்கள் சந்தேகம் உண்மை தான், ஆனால், பீஜே அவர்கள் மிகப்பெரிய ஆய்வு செய்து இதனை கண்டுபிடித்து இருக்கிறார்கள். இக்கட்டுரையில் அவைகளுக்கு நாம் பதிலைக் காண்போம். இக்கட்டுரையின் தலைப்புக்கள்: 1) பைபிள் மீது பீஜே அவர்கள் சுமத்தும் குற்றச்சாட்டிற்கு மறுப்பு 2) மோசே சொன்னது போல, விபச்சாரத்தில் பிடிப்பட்ட பெண்ணை இயேசு ஏன் தண்டிக்கவில்லை? 1) பைபிள் மீது பீஜே அவர்கள் சுமத்தும் குற்றச்சாட்டிற்கு மறுப்பு பீஜே அவர்கள், இயேசு இறைமகனா புத்தகத்தில் கீழ்கண்டவாறு எழுதுகிறார் 12. கடவுள் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர் விபச்சாரம் செய்வது தண்டனைக்குரிய குற்றம் என்கிறது பைபிள். (நீதிமொழிகள் 6:29) ஒரு பெண் விபச்சாரம் செய்த போது விபச்சாரம் செய்யாதவன் எவனோ அவன் அவளைத் தண்டிக்கட்டும் என்று இயேசு கூறியதாகவும் பைபிள் கூறுகிறது. (யோவான் 8:3-11) அந்தச் சமுதாயத்தில் எவருமே விபச்சாரம் செய்யாமல் இருக்கவில்லை. இயேசுவின் சீடர்களும் கூட அதைச் செய்துள்ளனர். ஏன் இயேசுவும் கூட அதில் ஈடுபட்டதாக அந்த வசனம் மறைமுகமாகக் கூறுகிறது. (நாம் அவ்வாறு நம்பவில்லை) இது தான் கடவுளின் குமாரனுக்குரிய இலக்கணமா? இயேசு அந்தப் பாவத்தைச் செய்திருக்கவில்லையானால் கடவுளின் கட்டளைப் படி அவராவது தண்டனையை நிறைவேற்றியிருக்க வேண்டுமல்லவா? கிறித்தவர்கள் விசுவாசிக்கின்ற பைபிளே அவரை இவ்வாறு அறிமுகம் செய்யும் போது அவரைக் கடவுள் என்று எவ்வாறு கருதுகிறார்கள்? இன்னொரு முறை அவர் எழுதியவைகளின் சுருக்கத்தை இங்கே தருகிறேன்: 1) விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை தண்டிக்க, விபச்சாரம் செய்யாதவன் எவனோ அவன் தண்டிக்கட்டும் என்று இயேசு கூறினாராம். 2) யூத சமுதாயத்தில் எவருமே விபச்சாரம் செய்யாமல் இருக்கவில்லையாம். 3) இயேசுவின் சீடர்களும் விபச்சாரம் செய்துள்ளார்களாம்? 4) இயேசுவும் விபச்சாரம் செய்தார் என்று பைபிள் மறைமுகமாகச் சொல்கிறதாம் (இதனை பீஜே எப்படியோ கண்டுபிடித்து இருக்கிறார்). 5) இது தான் கடவுளின் இலக்கணமா? என்று கேள்வியை பீஜே எழுப்புகிறார் 6) இயேசு விபச்சாரம் செய்யவில்லையானால், ஏன் அவளை அப்போதே தண்டிக்கவில்லை என்று இரண்டாவது கேள்வியை எழுப்புகிறார். பீஜே அவர்களின் வரிகளுக்கு செல்வதற்கு முன்பாக, அவர் மேற்கோள் காட்டிய நிகழ்ச்சி பற்றி சுருக்கமாக நாம் பார்ப்போம். இயேசுவிடம் குற்றம் கண்டுபிடிக்கவேண்டும் என்ற எண்ணத்தில், அக்கால யூதகுருக்கள் விபச்சாரத்தில் பிடிப்பட்ட ஒரு பெண்ணை கொண்டு வந்து,மோசேயின் சட்டத்தின்படி இப்பெண் கல்லெரிந்து கொல்லப்படவேண்டும், நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று இயேசுவிடம் கேட்டார்கள். இது சாதாரண கேள்வி அல்ல, இதில் அனேக பிரச்சனைகள் உள்ளது. அதாவது,அக்காலத்தில் ரோமர்கள் இஸ்ரவேலை ஆண்டுக்கொண்டு இருந்தார்கள், ரோம சட்டம் அமுலில் இருந்தது. மோசேயின் சட்டத்தை ஆதரித்து, ரோம சட்டத்தை மீறலாமா அல்லது ரோம சட்டத்திற்கு கீழ்படிந்து மோசேயின் சட்டத்தை மீறலாமா? (இதில் எதை இயேசு செய்வார் என்று அவர்கள் காத்திருந்தார், ஆனால்,இயேசு வேறு ஒன்றை செய்தார்). மோசேயின் சட்டத்தை ஆதரிக்கலாமா: ஆம், மோசேயின் சட்டத்தின் படி, இப்பெண் கல்லெரிந்து கொல்லப்படவேண்டும் என்று இயேசு சொன்னால், உடனே யூத தலைவர்கள், இவர் "ரோம சட்டத்தை மீறிவிட்டார்" என்றுச் சொல்லி, அரசாங்கத்திடம் இயேசுவை சிக்கவைத்துவிடுவார்கள். ஏனென்றால், ரோமர்களின் ஆட்சியில், மரண தண்டனை விதிக்கும் உரிமை ரோம அரசாங்கத்திற்கே தவிர, தனி மனிதனுக்கு இல்லை.எனவே இயேசு, மக்களிடத்தில் கலகத்தை உண்டாக்கி, சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டார் என்று ரோம அரசாங்கத்திடம் சொல்லிவிடலாம் என்று அவர்கள் நினைத்தார்கள். ரோம சட்டத்தை ஆதரிக்கலாமா: ஒருவேளை, இவளுக்கு மோசேயின் சட்டத்தின்படி தண்டனை இல்லை என்றுச் சொல்லிவிட்டால், பொது மக்களிடம் இயேசுவிற்கு இருக்கும் செல்வாக்கை அல்லது நற்பெயரை கெடுப்பதற்கு இந்த பதில் யூத குருக்களுக்கு உதவியாக இருக்கும். அதாவது, நம்முடைய மோசேயின் சட்டத்தை இவர் மீறிவிட்டார்,அல்லது அதனை அவமதித்துவிட்டார் என்றுச் சொல்லி, மக்களிடையே இயேசு பற்றி சொல்லலாம் என்று யூதகுருக்கள் நினைத்தனர். இந்த இரண்டு தெரிவுகளையும், இயேசு செய்யாமல், கீழ்கண்டவாறு கூறினார், யூத குருக்கள் தோல்வி அடைந்தார்கள், (இதே போல, பீஜே அவர்களும் தோல்வி அடைந்துவிட்டார்). யோவான் 8:4 லிருந்து 11 வசனங்கள் வரை: போதகரே, இந்த ஸ்திரீ விபசாரத்தில் கையும் மெய்யுமாய்ப் பிடிக்கப்பட்டாள்.இப்படிப்பட்டவர்களைக் கல்லெறிந்து கொல்லவேண்டுமென்று மோசேநியாயப்பிரமாணத்தில் நமக்குக் கட்டளையிட்டிருக்கிறாரே, நீர் என்னசொல்லுகிறீர் என்றார்கள். அவர்மேல் குற்றஞ்சுமத்துவதற்கான காரணம்உண்டாகும்பொருட்டு அவரைச் சோதிக்கும்படி இப்படிச் சொன்னார்கள்.இயேசுவோ குனிந்து, விரலினால் தரையிலே எழுதினார். அவர்கள் ஓயாமல்அவரைக் கேட்டுக் கொண்டிருக்கையில், அவர் நிமிர்ந்து பார்த்து: உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவதுகல்லெறியக்கடவன் என்று சொல்லி, அவர் மறுபடியும் குனிந்து, தரையிலே எழுதினார். அவர்கள் அதைக் கேட்டு, தங்கள்மனச்சாட்சியினால் கடிந்துகொள்ளப்பட்டு, பெரியோர்முதல்சிறியோர்வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய்விட்டார்கள். இயேசுதனித்திருந்தார், அந்த ஸ்திரீ நடுவே நின்றாள். இயேசு நிமிர்ந்து அந்த ஸ்திரீயைத் தவிர வேறொருவரையுங் காணாமல்:ஸ்திரீயே, உன்மேல் குற்றஞ்சாட்டினவர்கள் எங்கே? ஒருவனாகிலும் உன்னைஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கவில்லையா என்றார். அதற்கு அவள்: இல்லை,ஆண்டவரே, என்றாள். இயேசு அவளை நோக்கி: நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை;நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே என்றார். இந்த வரிகளை படித்துவிட்டுத் தான் பீஜே அவர்கள் மேலே நாம் படித்தது போல எழுதியுள்ளார். மேலேயுள்ள வசனங்களை படித்த நீங்கள், பீஜே அவர்கள் சொன்னதை ஒப்பிட்டுப் பாருங்கள். பீஜே அவர்கள் எழுதியவைகளை ஒரு முறை படிப்பது நல்லது: ஒரு பெண் விபச்சாரம் செய்த போது விபச்சாரம் செய்யாதவன் எவனோ அவன் அவளைத் தண்டிக்கட்டும் என்று இயேசு கூறியதாகவும் பைபிள் கூறுகிறது. (யோவான் 8:3-11) பீஜே அவர்களுக்கு கேள்விகள்: 1) ஆய்வு செய்து புத்தகம் எழுதிய பீஜே அவர்களே, "விபச்சாரம்" செய்யாதவன் எவனோ அவன் முதலாவது கல்லெரியக்கடவன் என்று இயேசு சொன்னாரா? அல்லது "பாவம் செய்யாதவன் எவனோ அவன் முதலாவது கல்லெரியக்கடவன்" என்றுச் சொன்னாரா? 2) "பாவம்" என்ற வார்த்தை உங்களுக்கு எப்படி "விபச்சாரம்" என்று தெரிந்தது? 3) உங்களுக்கு ஏன் இந்த திருத்திச் சொல்லும் வேலை? உள்ளதை அப்படியே சொல்லி உங்கள் வாதங்களை முன்வைக்கலாம் அல்லவா? 4) "பாவம்" என்ற வார்த்தை பொதுவான வார்த்தை, எல்லா வித தீய செயல்களை குறிக்க பொதுவாக "பாவம்" என்று பயன்படுத்தலாம்.அதாவது பொய் சொல்லுதல், ஏமாற்றுதல், திருடுதல், கொலை செய்தல்,விபச்சாரம் செய்தல், தீவிரவாத செயல்களில் ஈடுபடுதல் என்று அனேக தீய செயல்களை நாம் பொதுவாக பாவம் என்று அழைக்கிறோம். இந்த சாதாரண விஷயம் கூடவா உங்களுக்கு தெரியவில்லை? அல்லது வேண்டுமென்றே பைபிள் மீதும் கிறிஸ்தவர்கள் மீதும் உங்கள் வெறுப்புணர்ச்சியை வெளிக்காட்டும் செயலா? எது எப்படியோ உங்கள் திருத்தல் வேலை உலகிற்கு காட்டப்பட்டுவிட்டது, சாயம் வெளுத்துவிட்டது. விபச்சாரம் செய்யாதவன் கல்லெரியவேண்டும் என்று இயேசு கூறவில்லை, "பாவம்" செய்யாதவன் கல்லெரியட்டும் என்று தான் கூறினார், இதனை தெரிந்துக்கொள்ளுங்கள். "பாவம்" என்று இயேசு சொன்னதை ஏன் நாம் "விபச்சாரம்" என்று எடுத்துக்கொள்ளக்கூடாது என்று சில இஸ்லாமியர்கள் கேட்பார்கள்: இந்த கேள்விக்கு இடமே இல்லை, காரணங்களை கீழே படிக்கவும்: அ) பாவம் என்ற வார்த்தை பைபிள் முழுவதும் "விபச்சாரத்திற்கு" மட்டும் பயன்படுத்தப்படவில்லை, எல்லா வித தீய செயல்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. (குர்ஆனிலும் இதே நிலைதான், யாராவது மறுக்க தயாரா?) ஆ) உங்களில் பாவம் இல்லாதவன் முதலாவது கல்லை எறியட்டும் என்று இயேசு சொன்னதை, அந்த பெண்ணை கொண்டு வந்த எல்லாருக்கும் புரிந்தது (பீஜேவிற்கு மட்டும் புரியாது). நான் எப்படி இதை அவ்வளவு நிச்சயமாக சொல்லமுடியும்?அதாவது, பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஒவ்வொருவராக ஒன்றும் செய்யாமல் சென்றுவிட்டனர், அதாவது பெரியவர்கள் மட்டுமல்ல, அவர்களோடு வந்திருந்த சிறியவர்கள் கூட சென்று விட்டனர். பீஜேவின் கூற்றுப்படி சிறியவர்கள் கூட விபச்சாரம் செய்ததாக நாம் அர்த்தம் கொள்ளவேண்டும், இதுசாத்தியமில்லையல்லவா? ஆனால், சிறுவர்கள் பொய் சொல்வார்கள், இதர சிறிய சிறிய தவறுகளைச் செய்வார்கள், இது சாத்தியம். இ) சிறியவர்களும் சென்றுவிட்டார்கள் என்றுச் சொல்வதினால், இயேசு கூறியது,சிறிய சிறிய தவறுகளாகிய பெற்றோர்களிடம் பொய் சொல்லுதல், இன்னும் பல தீய செயல்களை செய்தலை கூட குறிக்கும் என்பதை அங்குள்ளவர்கள் புரிந்துக்கொண்டதினால், அவர்கள் சென்றுவிட்டனர். ஈ) சரி, இயேசு சொன்னது "பொதுவான தீய செயல்களைக் குறிக்கும் பாவம்" என்பதாக இருந்தாலும், ஏன் ஒரு யூத குருவும், அல்லது பெரியவர்களும், அல்லது சிறியவர்களும் கல்லெரியவில்லை? பாவமில்லாதவன் ஒருவனுமில்லை, ஏதோ ஒரு சிறிய பாவத்தையாவது செய்து இருப்பார்கள், பொய் சொல்லியிருக்கலாம், பெற்றோருக்கு கீழ்படியாமல் இருந்திருக்கலாம், கெட்ட வார்த்தைகளை கோபத்தில் சொல்லியிருக்கலாம், ஒரு சிலர் விபச்சாரமும் செய்து இருக்கலாம் அல்லது வேறு ஏதாவது செய்து இருக்கலாம். ஆனால், யாருக்கு தெரியப்போகுது? ஒரு கல்லை எடுத்து அந்த பெண்ணின் மீது வீசிவிட்டால் போதுமே என்று ஏன் யாருமே நினைக்கவில்லை?இதற்கும் வாய்ப்பு இல்லை. சாதாரண பாவம் செய்து இருந்தாலும் அதனை மறைத்து, அப்பெண்ணின் மீது கல்லெரிய யாருக்கும் தைரியமில்லை ஏன்? ஏனென்றால், அங்கு உட்கார்ந்து தரையில் எழுதிக்கொண்டு இருப்பவர் யார் தெரியுமா? ஏதோ, நான் தான் நபி என்னை நம்புங்கள் என்றுச் சொல்லுகின்ற பொய் தீர்க்கதரிசி அல்ல, தேவைப்படும் போது, தனக்கு வெளிப்பாடு வந்தது என்றுச் சொல்லி அல்லாஹ்விடமிருந்து வசன பொட்டலங்களை வாங்கித் தருபவர் அல்ல. இயேசு மிகப்பெரிய அற்புதங்களை அடையாளங்களைச் செய்துள்ளார், யூத தலைவர்களின் மடங்கடிக்கும் கேள்விகளுக்கு தக்க பதில் சொல்லியுள்ளார்,அவர்கள் உள்ளத்தில் நினைப்பதையும் அப்படியே சொல்லியுள்ளார். எனவே,யாராவது உண்மையாகவே, தான் பாவம் செய்யவில்லை என்றுச் சொல்லி,இயேசுவை ஏமாற்றலாம் என்று நினைத்து ஒரு கல்லை எரிந்து இருந்தால்,உடனே, இயேசு அந்த கல்லை எரிந்தவனிடம், நீ இந்த நாள் இந்த நாழிகையில் இந்த பாவத்தைச் செய்தாயே என்றுச் சொல்லிவிட்டால் என்ன செய்வது?இருக்கும் கொஞ்ச நஞ்ச பெயரும் கெட்டுவிடுமே, ஊரே சிரிக்குமே! நமக்கு ஏன் வம்பு என்று தலையை தொங்க போட்டுக்கொண்டு மூச்சு விடாமல் சென்றுவிட்டனர். எனவே, யாரும் ஏமாற்றமுடியாது, தான் ஒரு சிறிய பாவமும் செய்யவில்லை என்றுச் சொல்லி கல்லை எடுக்கமுடியாது. ஏன் அவர்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்த வேண்டும் என்றுச் சொல்லி, இயேசு தலை குனிந்து இருந்தார். இது தான் வாய்ப்பு என்று முகத்தில் அசடு வழிந்தவர்களாக ஒவ்வொருவராக சென்றுவிட்டனர். ஆக, இயேசு சொன்னது "சிறிய பெரிய பாவங்களை,தவறுகளை உள்ளடக்கிய" பாவம் என்ற வார்த்தையே தவிர, குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய "விபச்சார பாவத்தை" அல்ல. இனியும்,ஏதாவது விளக்கம் தேவையா? சரி, இனி பீஜே அவர்களின் அடுத்தடுத்துள்ள வரிகளுக்குச் செல்வோம்: பீஜே எழுதுகிறார்: அந்தச் சமுதாயத்தில் எவருமே விபச்சாரம் செய்யாமல் இருக்கவில்லை. பீஜ அவர்களே, நீங்கள் முதலாவது கொடுத்த விளக்கமே தவறு, அதாவது "எந்த ஒரு சிறு பாவமும் செய்யாமல் இருப்பவன் கல்லெரியவேண்டும்" என்று இயேசு சொன்னதை, நீங்கள் திருத்தி "விபச்சாரம் செய்யாதவன்" என்று பொருள் கொடுத்து இருக்கிறீர்கள். இரண்டாவதாக, அந்த பெண்ணை கொண்டு வந்த கூட்டமக்கள், இயேசு சொன்னதின் பொருளை அறிந்தவர்களாக திரும்பிச் சென்றுவிட்டனர். இயேசு மீது குற்றம் சுமத்தவேண்டும் என்ற எண்ணத்தோடு வந்த கூட்டத்தினர் திரும்பிச்சென்று இருக்கும் போது, "அந்த சமுதாயமே" விபச்சாரம் செய்தவர்கள் என்று எப்படி சொல்கிறீர்கள் நீங்கள்? எருசலேமில் இருக்கும் எல்லா யூதர்களும் ஒன்று கூடி வரவில்லை பீஜே அவர்களே, இயேசு மீது குற்றம் சுமத்தவேண்டும் என்று எண்ணம் கொண்டவர்கள் மட்டுமே வந்தார்கள். ஏன் இப்படி ஒரு சமுதாயமே அப்படி செய்தது என்றுச் சொல்கிறீர்கள்? உலகத்தில் ஒரு கூட்ட இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளாக இருக்கிறார்கள், பெண்களை கற்பழிப்பவர்களாக இருக்கிறார்கள், மனைவிகளை கொடுமைபடுத்துபவர்களாக இருக்கிறார்கள், இதனால், உலகில் இருக்கும் எல்லா இஸ்லாமியர்களும் அதே போல இருக்கிறார்கள் என்றுச் சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களோ? எனவே, உங்களின் இப்படிப்பட்ட திருத்தல் வேலை இனி தமிழ் கிறிஸ்தவர்களிடம் பலிக்காது, இனியாவது இப்படி சொல்வதை நிறுத்திக் கொள்ளுங்கள்,நிறுத்தமாட்டேன் என்றுச் சொல்வீர்களானால், இப்படி மாட்டிக்கொண்டு முழிக்கவேண்டி வரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். எனவே, மேலே நீங்கள் சொன்னது மிகப்பெரிய இஸ்லாமிய பொய்யாகும். பீஜே எழுதுகிறார்: இயேசுவின் சீடர்களும் கூட அதைச் செய்துள்ளனர். பீஜே அவர்களே, இந்த நிகழ்ச்சியின் போது, இயேசுவின் சீடர்கள் அவ்விடத்தில் இருந்தார்கள் என்று நீங்கள் படித்த வசனங்களில் உள்ளதா? பீஜே அவர்களே வேண்டாம், உங்களைப்போன்ற இஸ்லாமிய அறிஞர்கள் இப்படியெல்லாம் கீழ்தரமாக பொய்யைச் சொல்வது தகுதியாக இருக்காது, இது உங்களுக்கு அடுக்காதும் கூட. ஒரு வேளை சீடர்கள் அங்கு இருந்திருந்தாலும்: அந்த இடத்தில் இயேசுவின் சீடர்கள் அப்போது அங்கே இருந்தார்களா இல்லையா என்று வசனங்கள் சொல்லவில்லை. உங்கள் பேச்சுக்கே வருகிறேன், ஒரு வேளை,சீடர்கள் அங்கு இருப்பதாகவே எடுத்துக்கொள்வோம். அப்படி அவர்கள் இருந்திருந்தாலும், இயேசுவிடம் கேள்வி கேட்டவர்கள் யூத மத தலைவர்கள் மற்றும் அவர்களோடு வந்தவர்களாவார்கள். ஆக, இயேசு சொன்னது தன் மீதுகுற்றம் சுமத்த வந்தவர்களிடமே தவிர, தன் சீடர்களிடமில்லை. இது கூடவா உங்களுக்கு புரியவில்லை. நிச்சயமாக உங்களுக்கு புரிந்து இருக்கும், இருந்தாலும் என்ன செய்வது இஸ்லாமிய அறிஞராயிற்றே, மற்ற மார்க்கங்களின் மீதுபொய்யை சொல்லியாவது இஸ்லாமை காப்பாற்றவேண்டுமே. பீஜே அவர்களே,மறுபடியும் சொல்லிக்கொள்கிறேன், எச்சரிக்கையாக எழுதுங்கள். எனவே, உங்க லாஜிக் வார்த்தைகளையெல்லாம் இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் என்ற மேடைப்பேச்சில் வைத்துக்கொள்ளுங்கள், கிறிஸ்தவர்களிடம் வேண்டாம். பீஜே எழுதுகிறார்: ஏன் இயேசுவும் கூட அதில் ஈடுபட்டதாக அந்த வசனம் மறைமுகமாகக் கூறுகிறது. (நாம் அவ்வாறு நம்பவில்லை) இது தான் கடவுளின் குமாரனுக்குரிய இலக்கணமா? இயேசு அந்தப் பாவத்தைச் செய்திருக்கவில்லையானால் கடவுளின் கட்டளைப் படி அவராவது தண்டனையை நிறைவேற்றியிருக்க வேண்டுமல்லவா? கிறித்தவர்கள் விசுவாசிக்கின்ற பைபிளே அவரை இவ்வாறு அறிமுகம் செய்யும் போது அவரைக் கடவுள் என்று எவ்வாறு கருதுகிறார்கள்? ஒரு சமுதாயமே விபச்சாரம் செய்தது என்றுச் சொன்னீர்கள், பிறகு இயேசுவின் சீடர்கள் கூட விபச்சாரம் செய்தார்கள் என்று சொன்னீர்கள் (என்னவோ, அவர்கள் விபச்சாரம் புரியும் போது பக்கத்தில் இருந்து பார்த்தது போல எழுதுகிறார் பீஜே அவர்கள்). கடைசியாக, இயேசுவும் விபச்சாரம் செய்தார் என்று மறைமுகமாக பைபிள் சொல்கிறது என்று சொன்னதால் பீஜே அவர்கள் "திருத்திச் சொல்வதில் மன்னர்"என்ற பட்டத்தை பெற்றுவிட்டார் என்றுச் சொல்லத்தோன்றுகிறது. ஆனால், பீஜே அவர்களே, உங்கள் இஸ்லாமிய நபி முஹம்மது விபச்சாரம் செய்தார், கற்பழித்தார், இது உண்மை - இல்லை என்று மறுப்பவர்கள் எப்படி என்று என்னிடம் கேளுங்கள், நான் பதில் தருகிறேன், உங்கள் இஸ்லாமிய நூல்களாகிய குர்ஆன், ஹதீஸ்கள், அவரது வாழ்க்கை வரலாறு, இஸ்லாமிய அறிஞர்களின் விளக்கவுரைகள் இவைகளைக் கொண்டே நான் நிருபிக்கிறேன். இயேசு விபச்சாரம் செய்தார் என்று பைபிள் மறைமுகமாகச் சொல்கிறதா? எங்கே கண்டுபிடித்தீர்கள்? எப்படி கண்டுபிடித்தீர்கள்? இயேசு முஹம்மதுவைப் போல ஒரு பாவி அல்ல, அவர் ஒரு பரிசுத்தர்: முஹம்மது ஒரு பாவியாவார், அவர் பாவ மன்னிப்பு கோரியுள்ளார், அவர் பாவ மன்னிப்பு கேட்கும்படி அல்லாஹ் குர்ஆனில் சொல்லியுள்ளார், முஹம்மது நம்மைப்போல ஒரு பாவம் செய்யும் மனிதர் தான் என்பதை குர்ஆனிலிருந்து விளக்கியுள்ள கீழ்கண்ட கட்டுரையை படிக்கவும்: பாகம் 1: முஹம்மது ஒரு பாவியா? - குர்ஆனின் சாட்சி ஆனால், இயேசு பரிசுத்தர், அவர் பாவம் செய்யவில்லை, "என்னில் பாவமுண்டு என்று உங்களில் யார் கூறமுடியும்?" என்று அவர் யூதர்களிடம் கேட்டபோது ஒருவரும் அவருக்கு எதிராக விரலை நீட்டவில்லை. சரி, இதைப் பற்றி வேறு ஒரு கட்டுரையில் காணலாம். இப்போது நான் பீஜே அவர்களிடம் கேட்க விரும்புவது, நானும் உன்னை தண்டிப்பதில்லை என்று இயேசு சொன்னது,அவரும் விபச்சாரம் செய்துள்ளார் என்று அவருக்கு தெரிந்ததினால் தான் இப்படி சொன்னார் என்று பொருள் கொள்வீர்களா பீஜே அவர்களே? இதுவரையில் பைபிளை படிக்கும் யாருக்கும் வராத ஒரு எண்ணம் உங்களுக்கு வந்துள்ளது, இது போற்றத்தக்கது பீஜே அவர்களே. ஆனால், முஹம்மது செய்த விபச்சாரம், வளர்ப்பு மகனின் மனைவியை திருமணம் செய்துக்கொள்ளுதல், பேத்தி வயதில் இருக்கும் ஆறு வயது சிறுமியை திருமணம் செய்ய பேசிவிட்டு, 9வயதில் அந்த சிறுமியை (தாத்தா வயதில்) திருமணம் செய்துக்கொண்டது, மற்றும், போரில் பிடிபட்ட பெண்ணை அன்றே கற்பழித்தது, கல் நெஞ்சத்துடன் பெண்ணென்றும் பார்க்காமல் கொலை செய்ய கட்டளை பிறப்பித்தது, இவைகள் எல்லாம் உங்கள் பார்வையில் எப்படி தெரிகின்றது பீஜே அவர்களே! இந்த விவரங்கள் எல்லாம் இஸ்லாமிய நூல்களில் மறைமுகமாக அல்ல,நேரடியாகவே சொல்லியுள்ளது பீஜே அவர்களே, இவைகள் எல்லாம் முஹம்மது செய்துவிட்டபோதிலும், அவரே உலக மக்கள் பின்பற்றக்கூடிய நல்ல எடுத்துக்காட்டு, வழிகாட்டி என்றுச் சொல்கிறீர்கள். நான் உங்களுக்கு சவால் விடுகின்றேன், முஹம்மதுவின் வாழ்க்கை அனைத்தையும் அறிந்த நீங்கள், இயேசுவின் வாழ்க்கை முழுவதும் படித்துப் பார்த்து, எந்த சூழ்நிலையில் இயேசுவை விட முஹம்மது நல்லவராக நடந்துக்கொண்டுள்ளார் என்று கண்டுபிடியுங்கள். ஒரு தந்தை தன் மகன் செய்த தவறை மன்னித்துவிட்டு, இனி இப்படியெல்லாம் செய்யாதே என்று சொன்னால், உடனே "அந்த தந்தையும் அதே தவறை செய்துள்ளதால், தான் தண்டிக்கவில்லை" என்று முடிவு செய்துவிடுவீர்களோ! இயேசு மனிதர்களை குணமாக்கிவிட்டு, கடைசியாக சொல்லும் வார்த்தை எவைகள் என்று உங்களுக்குத் தெரியுமா? "இனி பாவம் செய்யாதே..." என்பதாகும். அதைத் தான் இந்த நிகழ்ச்சியிலும் அவர் செய்தார். உங்களுக்கு தெளிவாக புரியும் படி சொல்கிறேன், பைபிள் மறைமுகமாக இயேசு விபச்சாரம் செய்தார் என்றுச் சொல்லவில்லை நேரடியாகவே அவர் பரிசுத்தர் என்றே சொல்கிறது. உங்கள் இஸ்லாமிய அறிவு தான் அப்படி விளக்கமளிக்கிறது. அப்படியானால், மோசேயின் சட்டத்தின்படி இயேசு ஏன் அப்பெண்ணை தண்டிக்கவில்லை: பீஜே அவர்கள் கேட்கிறார்கள்: "இயேசு அந்தப் பாவத்தைச் செய்திருக்கவில்லையானால் கடவுளின் கட்டளைப் படி அவராவது தண்டனையை நிறைவேற்றியிருக்க வேண்டுமல்லவா?". இந்த கேள்வியை கேட்டதிலிருந்து, இரண்டு விஷயங்கள் தெளிவாக புரிகின்றது: முதலாவதாக, பீஜே அவர்களுக்கு முழு பைபிள் பற்றிய அறிவு இல்லை, அல்லது அவருக்கு பைபிளைப் பற்றி முழுவதுமாக தெரியவில்லை. இரண்டாவதாக, இயேசு பிறந்ததின் நோக்கத்தைப் பற்றி புதிய ஏற்பாடு சொல்வதை பீஜே அறிந்துக்கொள்ளவில்லை, அல்லது அவர் வேண்டுமென்றே,தெரிந்துக்கொண்டே இப்படி பொய்யை அவிழ்த்து விட்டுள்ளார் என்பதாகும். இயேசு இரட்சிக்க வந்தார், தண்டிக்க அல்ல: பீஜே அவர்களே, உங்களுக்கு சில விவரங்களை தெளிவாக்க விரும்புகிறேன். இயேசுவின் முதல் வருகை மனிதர்களை தண்டிக்க அல்ல, அவர்களை இரட்சிக்க வந்தார். அவர்களுக்காக தன் உயிரை கொடுக்க வந்தார், எனவே தான் அவர் மனிதர்களை குணமாக்கி "இனி பாவம் செய்யாதே" என்று சொல்லி, அவர்கள் தீய வழியை விட்டுவிட்டு, நல்ல வழியில் நடக்கும் படி அறிவுறுத்தினார். இதனை புரிந்துக்கொள்ள பெரிய பட்டங்கள் தேவையில்லை பீஜே அவர்களே, புதிய ஏற்பாட்டின் முதல் நான்கு நற்செய்தி நூல்களில் ஏதாவது ஒன்றை படித்தாலும் போதும் புரிந்துக்கொள்ளலாம். இந்த விவரத்திற்கு அனேக வசனங்களை நான் கொடுக்கவிரும்பவில்லை,ஒரே வசனம் போதும்: இழந்துபோனதைத் தேடவும் இரட்சிக்கவுமே மனுஷகுமாரன்வந்திருக்கிறார் என்றார். லூக்கா 19:10 பீஜே அவர்களே, இயேசு தொலைந்துபோனதை தேடவும், பாவிகளை இரட்சிக்கவுமே வந்தாரே தவிர, கற்களை எடுத்துக்கொண்டு பாவிகள் மீது வீசுவதற்கு அல்ல. இயேசு அந்த பெண்ணை மன்னித்தது போல, உங்களையும் மன்னிக்க விரும்புகிறார், அவரிடம் உங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, உமக்காக இனி நீதிமானாக வாழ்வேன் என்று வாக்குறுதி கொடுத்து, இயேசு தரும் சமாதானம் சந்தேஷத்தை பெற்றுக்கொள்ளும்படி உங்களுக்கு இன்று நான் அழைப்பு விடுகிறேன். முஹம்மது இஸ்லாமுக்கு வரும்படி கொடுத்த அழைப்பைபோல, இஸ்லாமை ஏற்றுக்கொள், நீ பாதுகாப்பாக இருப்பாய் இல்லையானால், என் இராணுவம் உங்கள் நாட்டை வந்தடையும் என்பது போல அல்லாமல், இயேசு உங்களை நேசிக்கிறார்,அவரின் மீது நம்பிக்கை கொண்டு இறைவனின் குமாரனாக மாற உங்களுக்கு ஒரு வாய்ப்பு இந்த வரிகளை படிக்கும்போது தரப்படுகின்றது. பிறகு இந்த வாய்ப்பு தரப்படுமோ தெரியாது, பயன்படுத்திக்கொள்ளவும். இப்போது ஒரு கேள்வியை நான் கேட்கட்டும், இயேசுவிடம் அப்பெண்ணை கொண்டு அந்த பரிசேயர்கள் வேதபாரகர்களாகிய யூத மத தலைவர்கள் அப்பெண்ணை தாங்களாகவே கல்லெரிந்து கொல்லவில்லை, அதற்கு பதிலாக ஏன் இயேசுவிடம் கொண்டு வந்தார்கள்? காரணம், ரோம அரசாங்கத்தின்படி, யாரையும் கொல்ல யூதர்களுக்கு அதிகாரமில்லை, யாரும் சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ளமுடியாது, எனவே,இயேசுவின் மீது குற்றம் சுமரவேண்டும் என்று நினைத்து அவர்கள் அந்த பெண்ணை கொண்டு வந்தார்கள். இயேசு மறுபடியும் வருவார், மன்னிக்க அல்ல, சிட்சிக்க: இயேசு இன்னொரு முறை வானத்தில் வருவார், அன்று அவர் மன்னிக்கமாட்டார்,தண்டிப்பார், நியாயந்தீர்ப்பார். அப்போது பீஜே அவர்களாகிய நீங்களும், நானும் அவருக்கு முன்பாக நிற்போம், அப்போது அவர் மன்னிக்கின்றவராக அல்ல,சிட்கிக்கின்றவராக நீதியாக நியாயந்தீர்ப்பார். அதுவரை, மக்களுக்கு வாய்ப்பு தரப்படுகின்றது, இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வதும், கொள்ளாததும் தனி மனிதனுக்கு இயேசு கொடுத்த உரிமை. பீஜே அவர்களே, இயேசு ஏன் அப்பெண்ணை தண்டிக்கவில்லை என்று கேள்வி கேட்டு இருக்கிறீர்கள், அவர் இரட்சிக்க வந்தபடியால் அவர் தண்டிக்கவில்லை, இயேசு (ஜீசஸ்) என்பதின் அர்த்தம் என்ன என்பதை தெரிந்துக்கொள்ளவும். முடிவுரை: பீஜே அவர்களே, உங்களின் வரிகளில் உள்ள தாறுமாறுகளை நான் சொல்லியுள்ளேன், தெளிவுபடுத்தியுள்ளேன். இனியாவது ஏதோ குற்றம்பிடிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் எழுதவேண்டாம். இனியும், தமிழ் கிறிஸ்தவர்கள் சும்மா உட்கார்ந்துக்கொண்டு, "ஸ்தோத்திரம்" சொல்லிக்கொண்டு இருக்கமாட்டார்கள். கற்பனையை அதிகமாக பயன்படுத்தவேண்டுமானால், நல்ல விஷயத்தில் பயன்படுத்தவும், இப்படி குறுக்குவழி வேண்டாம் என்று உங்களை தாழ்மையாக எச்சரிக்கிறேன். இயேசுவையும், அவரது சீடர்கள் பற்றியும் பொய்யாக எழுதியதற்காக நான் பதில் கொடுத்துவிட்டேன், ஆனால், முஹம்மது பற்றி இனி நான் சொல்லப் போகும் உண்மைகளுக்கு (கட்டுரைகளுக்கு) பதிலை தயாராக வைத்துக் கொள்ளவும். உங்களின் "இயேசு இறைமகனா" என்ற புத்தகத்திற்கு பதில்கள் தொடரும்..
Comment Form under post in blogger/blogspot