மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
குர்ஆன் முரண்பாடுகள்
மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?
Who Adopted Moses: Pharaoh's Daughter or Pharaoh's Wife?
எபிரேய ஆண் பிள்ளைகளை கொல்லும் படி பார்வோன் கட்டளையிட்டு இருக்கும்போது, பார்வோனின் மகள் மோசேயை தத்து எடுத்ததின் மூலமாக, தேவன் மோசேயை காப்பாற்றியதாக பரிசுத்த பைபிள் கூறுகிறது:
லேவியின் குடும்பத்தாரில் ஒருவன் லேவியின் குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம்பண்ணினான். அந்த ஸ்திரீ கர்ப்பவதியாகி, ஒரு ஆண்பிள்ளையைப் பெற்று, அது அழகுள்ளது என்று கண்டு, அதை மூன்று மாதம் ஒளித்துவைத்தாள். அவள் அதை அப்புறம் ஒளித்துவைக்கக்கூடாமல், ஒரு நாணற்பெட்டியை எடுத்து, அதற்குப் பிசினும் கீலும் பூசி, அதிலே பிள்ளையை வளர்த்தி, நதியோரமாய் நாணலுக்குள்ளே வைத்தாள். அதற்கு என்ன சம்பவிக்கும் என்பதை அறியும்படி அதின் தமக்கை தூரத்திலே நின்றுகொண்டிருந்தாள். அப்பொழுது பார்வோனுடைய குமாரத்தி நதியில் ஸ்நானம்பண்ண வந்தாள்; அவளுடைய தாதிகள் நதியோரத்தில் உலாவினார்கள்; அவள் நாணலுக்குள்ளே இருக்கிற பெட்டியைக் கண்டு, தன் தாதியை அனுப்பி அதைக் கொண்டுவரும்படி செய்தாள். அதைத் திறந்தபோது பிள்ளையைக் கண்டாள்; பிள்ளை அழுதது; அவள் அதின்மேல் இரக்கமுற்று, இது எபிரெயர் பிள்ளைகளில் ஒன்று என்றாள். அப்பொழுது அதின் தமக்கை பார்வோனின் குமாரத்தியை நோக்கி: உமக்கு இந்தப் பிள்ளையை வளர்க்கும்படி எபிரெய ஸ்திரீகளில் பால்கொடுக்கிற ஒருத்தியை நான் போய் உம்மிடத்தில் அழைத்துக்கொண்டு வரட்டுமா என்றாள். அதற்குப் பார்வோனுடைய குமாரத்தி: அழைத்துக்கொண்டுவா என்றாள். இந்தப் பெண் போய்ப் பிள்ளையின் தாயையே அழைத்துக்கொண்டு வந்தாள். பார்வோனுடைய குமாரத்தி அவளை நோக்கி: நீ இந்தப் பிள்ளையை எடுத்துக்கொண்டுபோய், அதை எனக்கு வளர்த்திடு, நான் உனக்குச் சம்பளம் கொடுக்கிறேன் என்றாள். அந்த ஸ்திரீ பிள்ளையை எடுத்துக்கொண்டுபோய், அதை வளர்த்தாள். பிள்ளை பெரிதானபோது, அவள் அதைப் பார்வோனுடைய குமாரத்தியினிடத்தில் கொண்டுபோய் விட்டாள். அவளுக்கு அவன் குமாரனானான். அவள்: அவனை ஜலத்தினின்று எடுத்தேன் என்று சொல்லி, அவனுக்கு மோசே என்று பேரிட்டாள். (யாத்திராகமம் 2:1-10)
அவன் வெளியே போட்டுவிடப்பட்டபோது, பார்வோனுடைய குமாரத்தி அவனை எடுத்துத் தனக்குப் பிள்ளையாக வளர்த்தாள். (அப்போஸ்தலர் நடபடிகள் 7:21)
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இரண்டாயிரம் வருடங்களுக்கு பிறகு வந்த குர்ஆன், இந்த சரித்திர விவரத்திற்கு முரண்பட்டு கூறுகிறது:
நாம் மூஸாவின் தாயாருக்கு; "அவருக்கு (உன் குழந்தைக்குப்) பாலூட்டுவாயாக அவர் மீது (ஏதம் ஆபத்து வரும் என்று) நீ பயப்படுவாயானால், அவரை ஆற்றில் எறிந்து விடு - அப்பால் (அவருக்காக) நீ பயப்படவும் வேண்டாம், துக்கப்படவும் வேண்டாம்; நிச்சயமாக நாம் அவரை உன்னிடம் மீள வைப்போம்; இன்னும், அவரை (நம்) தூதர்களில் ஒருவராக்கி வைப்போம்" என்று வஹீ அறிவித்தோம். (நதியில் மிதந்து வந்த) அவரை ஃபிர்அவ்னுடைய குடும்பத்தினர் எடுத்துக் கொண்டார்கள்; (பிற்காலத்தில் அவர்) அவர்களுக்கு விரோதியாகவும் துக்கந்தருபவராகவும் ஆவதற்காக! நிச்சயமாக ஃபிர்அவ்னும், ஹாமானும், அவ்விருவரின் படைகளும் தவறிழைப்பவர்களாகவே இருந்தனர். இன்னும்; (குழந்தையைக் கண்ட) ஃபிர்அவ்னின் மனைவி ("இக்குழந்தை) எனக்கும் உங்களுக்கும் கண் குளிர்ச்சியாக இருக்கிறது - இதை நீங்கள் கொன்று விடாதீர்கள்; நமக்கு இவர் பயன் அளிக்கக்கூடும்; அல்லது நாம் இவரை நம் புதல்வராக்கிக் கொள்ளலாம்" என்று சொன்னார்; இன்னும் அவர்கள் (இதன் விளைவு என்னவாகும் என்பதை) உணர்ந்து கொள்ளவில்லை. (குர்ஆன் 28:7-9)
பார்வோனின் மகள் அல்ல, பார்வோனின் மனைவி மோசேயை தத்து எடுத்ததாக குர்ஆன் கூறுகிறது. ஆனால், பைபிள் சொல்வது தான் சரியானது, எப்படியென்றால், எபிரேய பைபிளின் முதல் ஐந்து புத்தகங்களை (தோரா) எழுதியவர் மோசே என்பதால், தன்னை யார் தத்து எடுத்தார்கள் என்ற விவரம் அவரை விட வேறு யாருக்கு சரியாக தெரிந்து இருக்கும்?
இந்நிகழ்ச்சி நடைப்பெற்ற காலத்திற்கு சமீபமான காலத்தில் தான் எபிரேய பைபிள் எழுதப்பட்டது. இஸ்ரவேல் மக்களின் மதிப்பிற்குரிய இரட்சகராக மோசே இருக்கிறார். ஆகையால், முஹம்மது மற்றும் இஸ்லாமியர்களை விட யூதர்களுக்குத் தான் தங்கள் சரித்திரம் பற்றிய விவரம் அதிகமாகவும், சரியாகவும் தெரியும். இஸ்லாமியர்களுக்கு யூதர்களின் சரித்திரம் பற்றிய சந்தேகம் வந்தால், அவர்கள் பைபிளை படித்தும், யூதர்களிடம் சென்றும் விவரங்களை தெரிந்துக்கொள்ளவேண்டும் என்று குர்ஆன் இஸ்லாமியர்களுக்கு கட்டளையிடுகிறது. அதாவது குர்ஆன் சொல்வது சரியானதா என்ற சந்தேகம் வந்தால், இப்படி செய்யுங்கள் என்று அல்லாஹ் கூறுகிறார்.
(நபியே!) நாம் உம் மீது இறக்கியுள்ள இ(வ்வேதத்)தில் சந்தேகம் கொளிவீராயின், உமக்கு முன்னர் உள்ள வேதத்தை ஓதுகிறார்களே அவர்களிடம் கேட்டுப் பார்ப்பீராக நிச்சயமாக உம் இறைவனிடமிருந்து உமக்குச் சத்திய (வேத)ம் வந்துள்ளது - எனவே சந்தேகம் கொள்பவர்களில் நீரும் ஒருவராகி விட வேண்டாம். (குர்ஆன் 10:94)
நிச்சயமாக நாம் மூஸாவுக்குத் தெளிவான ஒன்பது அத்தாட்சிகளை கொடுத்திருந்தோம்; அவர் அவர்களிடம் (அவற்றைக் கொண்டு) வந்தபோது (என்ன நடந்தது என்று) பனீ இஸ்ராயீல்களிடம் (நபியே!) நீர் கேளும். ஃபிர்அவ்ன் அவரை நோக்கி 'மூஸாவே! நிச்சயமாக நான் உம்மை சூனியம் செய்யப்பட்டவராகவே எண்ணுகிறேன்' என்று கூறினான். (குர்ஆன் 17:101)
மேலும், இயேசு தன்னிடமுள்ள எபிரேய பைபிளை உறுதிப்படுத்தினார் என்று குர்ஆன் கூறுகிறது:
இன்னும் அவருக்கு அவன் வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுப்பான் …. "எனக்கு முன் இருக்கும் தவ்ராத்தை மெய்பிக்கவும், உங்களுக்கு விலக்கி வைக்கப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும், உங்கள் இறைவனிடமிருந்து (இத்தகைய) அத்தாட்சியை உங்களிடம் நான் கொண்டு வந்திருக்கிறேன்…(குர்ஆன் 3:48,50)
இன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்;. அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன. அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது. அது பயபக்தியுடையவர்களுக்கு நேர் வழிகாட்டியாகவும் நல்லுபதேசமாகவும் உள்ளது. (குர்ஆன் 5:46)
ஆக, இயேசு உறுதிப்படுத்தின வேதம் தான் இப்போது நம்மிடம் உள்ள பைபிளாக இருப்பதால், குர்ஆன் ஒரு சரித்திர பிழை செய்துள்ளது என்பதை நாம் அறியலாம். குர்ஆனின் இந்த பிழையை பரிசுத்த பைபிள் சரிப்படுத்துகிறது என்ற முடிவிற்கு நாம் வரலாம்.
சாம் ஷமான்
குர்ஆனின் இந்த பிழையைப் பற்றிய ஆய்வுக் கட்டுரை: குர்ஆனின் இந்த பிழை முஹம்மது ஏதோ அறியாமையில் செய்த பிழை அல்ல, இது வேண்டுமென்றே தெரிந்தே செய்த மாற்றமாகும். இதனை விளக்கும் ஒரு ஆய்வு கட்டுரையை படிக்கவும்: Adoption by Adaption
ஆங்கில மூலம்: Qur'an Contradiction: Who Adopted Moses: Pharaoh's Daughter or Pharaoh's Wife?
இதர குர்ஆன் முரண்பாடுகளை படிக்கவும்
சாம் ஷமான் அவர்களின் இதர கட்டுரைகள்
source:http://www.answering-islam.org/tamil/quran/contra/moses_adoption.html









Comment Form under post in blogger/blogspot