WAS MUHAMMAD A TERRORIST?
ஆசிரியர்: சைலஸ்
நான் இந்த முக்கியமான தலைப்பை மறுபரிசீலனைச் செய்கிறேன், ஏனென்றால், இதைப் பற்றி நாம் விவாதிக்க வேண்டிய மற்றும் புரிந்துக் கொள்ளவேண்டிய அவசியத்தில் இருக்கிறோம். இஸ்லாமிய தீவிரவாத தாக்குதலாகிய 9/11க்கு பிறகு, இன்னும் ஜெர்ரி பால்வெல் (Jerry Falwell) அவர்களின் விமர்சனத்திற்காக ஏற்பட்ட கலவரத்திற்கு பிறகு இந்த "இஸ்லாமிய தீவிரவாதம்" என்ற தலைப்பு சிறிது முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஆனால், இதைப் பற்றிய ஆய்வு ஆழமாக செய்யப்படவில்லை.
இந்த கட்டுரையில் நான் கீழ்கண்ட தலைப்புகளில் எழுதப்போகிறேன்.
1) ஜெர்ரி பால்வெல் அவர்களின் விமர்சனம் பற்றி என் கருத்தைச் சொல்கிறேன்.
2) இஸ்லாமிய சரித்திர விவரங்கள் பற்றி இஸ்லாமிய நூல்களிலிருந்து ஆதாரங்களை முன்வைக்கிறேன். இந்த இஸ்லாமிய ஆதாரங்களை வாசகர்கள் தாங்களே சுயமாகவே படித்து உண்மையை தெரிந்துக்கொள்ளட்டும்.
3) முஹம்மதுவின் ஒரு சில செயல்கள் பற்றிய ஒரு சிறு குறிப்பை கொடுக்கிறேன். இவைகளை படித்தபிறகு முஹம்மதுவின் செயல்கள் வன்முறையாக அல்லது தீவிரவாத நோக்கத்தோடு இருந்ததா என்பதை வாசகர்களே முடிவு செய்துக்கொள்ளலாம். (வார்த்தைகளை விட செயல்கள் போடும் சத்தம் அதிக தூரம் கேட்கும் - Actions speak louder than words).
முஹம்மது ஒரு தீவிரவாதியாக இருந்தாரா இல்லையா என்பதை தெரிந்துக்கொள்வது மிக மிக முக்கியம்.
முஹம்மது தான் இஸ்லாம்.
இஸ்லாமின் ஆணிவேர் முஹம்மது ஆவார்.
முஹம்மதுவின் செயல்களைக் கண்டு அவைகளை அப்படியே பின்பற்றுங்கள் என்று குர்ஆன் சொல்கிறது. ஆகையால், முஹம்மதுவின் நடத்தைகளின் பாதிப்பு இஸ்லாமிய நம்பிக்கையின் மீது விழுகிறது, இஸ்லாமை பின்பற்றுகிறவர்களின் வாழ்க்கையில் அது பிரதிபலிக்கிறது. ஒருவேளை முஹம்மது ஒரு தீவிரவாதியாக இல்லாமல் இருந்தால், இதனால் இஸ்லாமில் பாதிப்பு ஏற்படாது. ஆனால், அவர் ஒரு வேளை ஒரு தீவிரவாதியாக இருந்தால், அந்த தீவிரவாத செயல்கள் இஸ்லாமில் ஒரு கோட்பாடாக மாறிவிடுகிறது.
எழுத்தாளர்கள் எழுதியவைகள் எவைகள்?
ஜெர்ரி பால்வெல் அவர்களின் விமர்சனத்திற்கு பிறகு அனேக எழுத்தாளர்கள் இந்த தலைப்பு பற்றி பலவிதங்களில் எழுதியுள்ளார்கள். இந்த எழுத்தாளர்கள் "அந்த தலைப்பு" பற்றி ஆராய்வதை எழுதுவதை விட்டுவிட்டு, பால்வெல்லையே அதிகமாக தாக்கி எழுதியுள்ளார்கள். நாம் இங்கு இரண்டு கட்டுரைகளை ஒப்பிடப்போகிறோம். முதலாவது கட்டுரையை டாக்டர் ஜுஆன் கோல் (Dr. Juan Cole) என்பவர் எழுதிய கட்டுரையாகும், இதனை இந்த தொடுப்பில் (
http://hnn.us/articles/1018.html) காணலாம்.
திரு கோல் அவர்களின் கட்டுரையானவது பால்வெல் அவர்களின் "முஹம்மது ஒரு தீவிரவாதி" என்ற விமர்சனத்தை மறுப்பு தெரிவிப்பதற்காக எழுதப்பட்டது. ஆனால், கோல் அவர்கள் தன் கட்டுரையை தவறான வழியில் கொண்டுச் சென்றுள்ளார். முஹம்மதுவின் செயல்களை குறிப்பிட்டு கேள்வி கேட்டு கேலிச் செய்யும் நபர்களை சாடும் விதத்தில் அவர் தன் கட்டுரையை அமைத்துள்ளார். விமர்சனத்தில் உள்ள தலைப்புப் பற்றி எழுதுவதை விட்டுவிட்டு, முஹம்மதுவை நிராகரிக்கும் மற்றும் இஸ்லாமை விமர்சிக்கும் நபர்களையும், பால்வெல்லையும் அவர் விமர்சித்துள்ளார்.
பால்வெல்லின் விமர்சனம் சரித்திர பூர்வமாக சரியானவைகள் அல்ல என்று கோல் அவர்கள் கூறியுள்ளார். இதற்காக வன்முறையை தூண்டாத ஒரு குர்ஆன் வசனத்தை மேற்கோள் காட்டுகிறார். பிறகு, எப்படி மேற்கத்திய சமுதாயத்தின் "இஸ்லாம் பற்றிய" பார்வை எதிர்மறையாக இருந்தது என்பதை கூறி, இப்பார்வை தற்காலத்தில் சிறிது சிறிதாக மாறிக்கொண்டு இருக்கிறது என்று கூறுகிறார்.
கடைசியாக அவர் ஓரிரு பத்திகளில் தான் எழுதவந்த தலைப்பாகிய "முஹம்மது ஒரு தீவிரவாதியா?" என்பதைப் பற்றி சிறிது கூறுகிறார். குர்ஆனிலிருந்து கோல் அவர்கள் மேற்கோள் காட்டிய வசனம், ஒடுக்குதல் மற்றும் வன்முறையை கண்டித்து குர்ஆன் கூறுகிறது:
"உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்; ஆனால் வரம்பு மீறாதீர்கள்;. நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை. (2:190)"
இந்த வசனத்தை மேற்கோள் காட்டியதின் மூலமாக "இஸ்லாம் பற்றி முழுவதுமாக அறியாதவர்களின் வாயில் உயிர் காக்கும் மத்திரையாக இவ்வசனம் உதவும் என்று" கோல் அவர்கள் நம்பியிருக்கக்கூடும். அதாவது, இந்த வசனம் இஸ்லாமிய தீவிரவாதம் பற்றி கேள்வி கேட்கும் அறியாதவர்களை திருப்திபடுத்தும் மற்றும் எல்லா பிரச்சனையை தீர்த்துவிடும் என்று அவர் நம்புகிறார். ஆனால், இப்படிப்பட்ட செயலைச் செய்த கோல் அவர்களுக்கு என் பரிதாபங்கள் உரித்தாகுக. அவர் ஒரு சரித்திர ஆசிரியராக இருந்தும் கூட இப்படி மேற்கோள் காட்டியதால், அவர் இதற்காக வெட்கப்படவேண்டும். அதிகமாக ஞானமுள்ளவர்கள் என்று சொல்லிக்கொள்கின்ற இப்படிப்பட்டவர்களை விட, வாசகர்களே எவ்வளவோ மேல். குர்ஆன் ஒரு நீண்ட புத்தகம், மற்றும் சலிப்பை உண்டாக்கும் புத்தகமாகும், இது வன்முறையைப் பற்றி அனேக வசனங்களைக் கூறுகிறது.
அவரின் கட்டுரையை படிக்கும் படி வாசகர்களை நான் கேட்டுக்கொள்கிறேன். கோல் அவர்கள் தீவிரவாதம் என்ற தலைப்பைப் பற்றி விவாதிக்காமலேயே, அந்த ஒரு வசனத்தை காட்டிவிட்டு தப்பித்துக்கொண்டார். அதுமட்டுமல்ல, அவர் ஒரு சரித்திர ஆசிரியராக இருந்தும் கூட, தன் வாதத்திற்கு சரித்திர ஆதாரங்களை காட்டாமலேயே கட்டுரையை முடித்துள்ளார். எல்லாவற்றிற்கும் மேலாக, குர்ஆன் 2:190ம் வசனத்தை அவர் தவறாக பயன்படுத்தியுள்ளார். இந்த குர்ஆன் வசனம் 2:190ஐ பற்றிய சரித்திர பின்னணியையும், அதைப் பற்றிய விவாதத்தையும் இந்த கட்டுரையில் காணலாம்:
Jihad.
மேலும் இதைப் பற்றிய ஆதாரங்களை இங்கே தருகிறேன்.
யூசுப் அலி குர்ஆன் மொழியாக்கம், பக்கம் 77. யூசுப் அலி அவர்களின் விரிவுரை கீழ்கண்ட விதமாக உள்ளது.
இந்த வசனத்தில் சொல்லப்பட்ட நிகழ்ச்சியானது ஹிஜ்ரா ஆறாம் ஆண்டில் நடைப்பெற்ற ஹுதைபிய்யாஹ் நிகழ்ச்சியாகும். ஆனால், இந்த வசனம் அந்த சமயத்தில் தான் இறக்கப்பட்டதென்று என்று திட்டவட்டமாகச் சொல்லமுடியாது. அந்த காலகட்டத்தில் இஸ்லாமியர்கள் மிகவும் வலிமை வாய்ந்தவர்களாக இருந்தனர். இவர்களில் அனேகர் மக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டவர்களாவார்கள், ஏனென்றால் மக்காவினரால் இவர்களுக்கு பிரச்சனை அதிகமாக இருந்தது. மக்காவில் இஸ்லாமியர்கள் துன்புறுத்தப்பட்டார்கள், தங்கள் வீடுகளுக்குச் செல்லவும் தடைவிதிக்கப்பட்டார்கள், புனித யாத்திரை காலத்தில் ஹஜ் செய்ய தடை செய்யப்பட்டு இருந்தார்கள். இது மிகவும் கொடுமையான செயலாகும், ஒடுக்கப்படுதலாகும், எனவே இஸ்லாமியர்கள், தாங்களும் அரேபிய குடிமக்கள் என்ற தங்கள் உரிமையை செயல்படுத்த முடிவு செய்தனர், இதனால், ஒரு உடன்படிக்கையை எழுதினர் மற்றும் இஸ்லாமியர்கள் அந்த உடன்படிக்கையின் படியே இருந்தனர்.
அஸத் தன் "குர்ஆனின் செய்தியில் (The Message of the Quran)" பக்கம் 41ல் கீழ்கண்டவிதமாக கூறுகிறார்:
மக்காவைச் சுற்றிய பகுதியில் போர் பற்றிய இந்த வசனத்தின் பின்னணி என்னவென்றால், அச்சமயத்தில் புனித நகரம் இன்னும் குரைஷி மக்களின் பிடியில் இருந்தது, இவர்கள் தான் இஸ்லாமியர்களை கொடுமைப்படுத்தினவர்கள் ஆவார்கள்.
மேற்கூறியபடி, இஸ்லாமியர்களின் வருடக் கணக்கு சரியாக இருக்கும் பட்சத்தில், அந்த வசனம் முஹம்மது மக்காவை கைப்பற்றிய இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக எழுதப்பட்ட ஹுதைய்பிய்யா உடன்படிக்கை காலம் சம்மந்தப்பட்டதாகும். இந்த வசனம் முஸ்லிம்கள் மக்காவை கைப்பற்றியதற்கு முன்பாக இறக்கப்பட்ட வசனமாகும், இது ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவே எனக்கு தென்படுகிறது. இந்த உடன்படிக்கையின்படி, ஒரு ஆண்டு அல்லது அதன் பிறகு இஸ்லாமியர்கள் புனித யாத்திரையாகிய ஹஜ் செய்ய மக்காவிற்குள் செல்லலாமே ஒழிய, மக்காவை ஆளுவதற்கோ அல்லது மக்காவைச் சுற்றிய இதர பகுதிகளை ஆளுவதற்கோ அல்ல. இந்த சமயத்தில் இஸ்லாமியர்கள் வலிமையுள்ளவர்களாக இருந்தனர், தங்களை பாதுகாத்துக்கொள்ளும் அளவிற்கு அவர்களுக்கு வலிமை இருந்தது, ஆனால், அந்த பகுதியில் அவர்கள் ஒரு மிதமிஞ்சிய வலிமையுள்ளவர்களாக இருக்கவில்லை. அதனால், மக்காவினர் அவர்களை தாக்கினால், தங்களை பாதுகாத்துக்கொள்ளுஙகள் என்று முஹம்மது அவர்களுக்கு கட்டளையிட்டார். முஸ்லிம்கள் வரம்பு மீறக்கூடாது என்று கட்டளையிடப்பட்டது ஏனென்றால், மக்காவினருடன் முஸ்லிம்கள் உடன்படிக்கையை செய்து இருந்தனர். இப்படி இருந்த போதிலும், மக்காவிற்கு வெளியே மக்காவினரோடு கூட்டுச் சேராமல் இருக்கும் இஸ்லாமியரல்லாதவர்களை தாக்க முஹம்மதுவிற்கு சுதந்திரம் இருந்தது. இதைத் தான் முஹம்மது செய்தார்.
குர்ஆன் 2:190ம் வசனத்தின் சரித்திர பின்னணியை ஒருவர் ஆராய்வாரானால், இந்த வசனமானது இஸ்லாமியர்களின் எல்லாவித வன்முறைக்கும் எதிராக இறக்கப்பட்ட வசனம் அல்ல என்பதை அறியமுடியும். மற்றும் இந்த கட்டளையானது ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் மக்களுக்காக அதாவது மக்கா மற்றும் அவர்களோடு கூட்டுச் சேர்ந்துள்ள இதர பகுதியினருக்கு மட்டுமே கொடுக்கப்பட்ட கட்டளை என்பதை அறியலாம். கோல் அவர்கள் இவ்வசனத்தின் சரியான சரித்திர பின்னணியை கூறவும், விளக்கத்தைக் கூறவும் தவறிவிட்டார்.
கோல் அவர்களின் கட்டுரையில் இருக்கும் கடைசி விமர்சனம் பற்றி காண்போம். கோல் எழுதுகிறார்:
"பால்வெல் அவர்களின் விமர்சனம் சரித்திர பின்னணியில் மட்டுமல்ல, இன்னும் பலவகைகளில் தவறானதாகும். முஹம்மது அவர்கள் கொலை செய்வதையும், குற்றமில்லாதவர்களை கொல்வதையும் தடைவித்தார். தன்னைச் சுற்றியிருந்த இஸ்லாமியரல்லாதவர்களில் பயங்கரமான எதிரிகளுக்கு விரோதமாக அவர் பயங்கரவாதத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்தியதே இல்லை."
கோல் அவர்களின் மேற்கண்ட கூற்றானது முற்றிலும் தவறானது என்பதை நாம் இக்கட்டுரையில் பிறகு காண்போம். அதாவது இஸ்லாமியரல்லாதவர்களின் மீது முஹம்மது கொலை செய்வதையும், பயங்கரவாதத்தையும், ஒடுக்குதலையும் ஒரு ஆயுதமாக பயன்படுத்தியுள்ளார் என்பதை நாம் காணப்போகிறோம்.
இந்த கட்டுரையையும் நீங்கள் படியுங்கள். முஹம்மதுவின் நடத்தைகள் பற்றிய உண்மையை அலி சினா அவர்கள் தைரியமாக தெளிவாக கூறியுள்ளார். அலி சினா கீழ்கண்ட விதமாக முஹம்மதுவின் செயல்கள் பற்றிய எடுத்துக்காட்டுகளை கூறியுள்ளார்.
"பால்வெல் சொன்னதில் எந்த பொய்யும் இல்லை. முஹம்மது அன்று செய்த செயல்களை இன்றையை தரத்தோடு ஒப்பிட்டு பார்த்தோமானால், அவைகள் "தீவிரவாத செயல்கள்" தான். முஹம்மது எந்த முன்னெச்சரிப்பும் கொடுக்காமல் பட்டணங்களை கொள்ளையிட்டார். வயல்களில் வேலை செய்துக்கொண்டு இருக்கும் போராயுதங்கள் ஏந்தாத மனிதர்ளை கொன்று குவித்தார். வியாபார சந்தைகளில் தங்கள் வியாபார வேலைகள் முடிவடைந்த போது சென்று தாக்கினார். அம்மக்களின் மனைவிமார்களையும், பிள்ளைகளையும் அடிமைகளாக பிடித்தார், அவர்களில் இளவயது பெண்களை தன் வீரர்களுக்கு பங்கிட்டுக் கொடுத்தார். மற்றும் அப்பெண்களில் மிகவும் அழகாக இருக்கும் பெண்களை தனக்காக வைத்துக்கொண்டார், மட்டுமல்ல, அப்பெண்களின் சொந்தக்காரர்களையும், தகப்பன்களையும், கணவர்களையும் கொன்ற அதே நாளில் அப்பெண்களோடு உடலுறவு கொண்டார். இவைகள் அனைத்தும் ஏதோ கட்டுக்கதைகள் அல்ல, இவைகள் உண்மை சரித்திர நிகழ்வுகளாகும், இவைகளை இஸ்லாமியர்களே பதிவு செய்து பாதுகாத்துள்ளனர். உதாரணத்திற்கு, கைபர் நகரம் கைப்பற்றப்பட்ட நிகழ்ச்சியை எடுத்துக் கொள்ளுங்கள்..... யார் யாரெல்லாம் இஸ்லாமிய புனித நூல்களாகிய குர்ஆனையும், ஹதீஸ்களையும் படிக்கிறார்களோ, அப்படிப்பட்டவர்கள் சுலபமாக இவ்விவரங்களை கண்டுக்கொள்ளலாம்.
அலி சினா எந்த மேற்கோள் ஆதார எண்களை தரவில்லை என்றாலும், அவர் யூதர்களின் பட்டணமாகிய கைபரை முஹம்மது கைப்பற்றிய நிகழ்ச்சியை குறிப்பிட்டுள்ளார். அவர் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் மேற்கோள்களை கொடுத்துள்ளார். இந்த நிகழ்ச்சி பற்றிய ஆதார மேற்கோள்களை நான் இக்கட்டுரையில் பிறகு தருகிறேன்.
மேற்கத்திய நாடுகளில் வாழும் மக்களிடம் ஒரு முக்கியமான கேள்வியை அலி சினா கேட்கிறார்:
"இப்பொழுது கேள்வி என்னவென்றால், இஸ்லாமியர்கள் நம்மீது தாக்குதல் செய்ததால், அவர்களின் இந்தபொய்யை (முஹம்மது ஒரு தீவிரவாதி இல்லை என்ற பொய்யை) பூசி மொழுகி இன்னும் தீவிரவாதம் நாம் நாடுகளில் செழித்து வளர நாம் அனுமதிக்கவேண்டுமா? .... நாம் இஸ்லாமை காப்பாற்றுவதினால், உண்மை பலியாக்கப்படுகிறது என்பதை நாம் உணரவேண்டாமா? இஸ்லாமியர்கள் வேதனை அடைவார்கள் என்று நாம் பரிதாப்பட்டு ஒன்றும் பேசாமல் இருந்தால், அது நம் பேச்சுரிமையை பரிக்கிறது என்பதை நாம் உணரவேண்டாமா? இவைகளில் எது தீமைகளிலேயே மிகவும் தீமையானது?
நெற்றியில் ஆணி அடிப்பது போன்ற ஒரு வரியுடன், அலி சினா தன் கட்டுரையை முடிக்கிறார்:
"இஸ்லாமிய கோட்பாடுகளின் பின் இருக்கும் இஸ்லாமிய தீவிரவாதம் பற்றிய ஒரு கசப்பான உண்மையை இன்றோ அல்லது நாளையோ உலகம் சந்திக்கும். அதாவது இஸ்லாமையும், தீவிரவாதத்தையும் பிரிக்கமுடியாது என்பதை உலகம் அன்று அறிந்துக்கொள்ளும், எப்படி நாஜியிஸாத்தையும், வன்முறையையும் பிரிக்கமுடியாதோ அது போன்று இஸ்லாமும் தீவிரவாதமுமாகும். இஸ்லாமை நாம் மதித்தால், அவர்களின் நம்பிக்கையை நாம் பாதுகாத்தால், அவர்களை வெற்றிகொள்ளலாம், காலப்போக்கில் இஸ்லாமியர்கள் மேற்கத்திய நாடுகளின் சகிப்புத்தன்மையுள்ள கோட்பாடுகளை ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையானது ஒரு முட்டாள் தனமாக நம்பிக்கையாகும்."
மேற்கண்ட இரண்டு கட்டுரைகளுக்கும் இடையே இருக்கும் வித்தியாசத்தை கவனிக்கவும். ஒரு கட்டுரையை சகிப்புத் தன்மை இல்லாத கல்லூரி பேராசிரியர் எழுதியது. இவர் தலைப்புப் பற்றி எழுதுவதை விட்டுவிட்டு, முஹம்மதுவிற்கும் தீவிரவாதத்திற்கும் சம்மந்தமில்லை என்பதை காட்ட மிகவும் நடித்துள்ளார், மற்றும் யார் யாரெல்லாம் இஸ்லாமை விமர்சிக்கின்றார்களோ அவர்களை தாக்கி எழுதியுள்ளார். இரண்டாவது கட்டுரையை ஒரு முன்னாள் முஸ்லிம் எழுதியது. இவர் இஸ்லாமை முதல் தரமாக அனுபவித்தவர் (ஒரு இஸ்லாமியராக, இஸ்லாமிய நாட்டில் வாழ்ந்தவர்) இதனால், தன் வாயிலிருந்து துப்பியுள்ளார். கோல் அவர்களின் கட்டுரை, எந்த சரித்திர ஆதாரத்தையும் சார்ந்து இருக்கவில்லை அதே நேரத்தில் அலி சினா முஹம்மதுவின் வன்முறைச் செயல்கள் பலவற்றை குறிப்பிட்டுள்ளார்.
இங்கு முக்கியமான கருத்து இது தான்: அலி சினா செய்தது போல, இஸ்லாமிய சரித்திர நூல்களை தேடி படித்துப்பாருங்கள், அங்கே நீங்கள் இந்த ஆதாரங்கள், நிகழ்ச்சிகள் அனைத்தையும் பற்றி அறிந்துக்கொள்வீர்கள.
சரித்திர நூல்கள்
மற்றவர்கள் எழுதுவதையும், நான் எழுதுவதையும் ஏன் நீங்கள் படிக்கவேண்டும்? நீங்களாகவே சரித்திர நூல்களை படித்து தெரிந்துக்கொண்டால் என்ன? நீங்களே படித்து சொந்தமாக ஆராய்ந்துப் பாருங்கள். நான் ஆராய்ச்சி செய்ய விரும்பிய போது, இஸ்லாம் பற்றி சரித்திர ஆசிரியர்கள் எழுத்தாளர்கள் எழுதியவைகளை படிக்க ஆரம்பித்தேன். நான் இஸ்லாம் பற்றி அறிய அதிகமாக விரும்பியதால், இஸ்லாமிய நூல்களை கட்டாயமாக படிக்கவேண்டும் என்பதை உணர்ந்தேன். இவைகள் நாம் படிப்பதற்கு கிடைக்கின்றன, யார் வேண்டுமானாலும் இவைகளை வாங்கி படிக்கமுடியும், ஆராய முடியும், சிந்திக்கமுடியும் மற்றும் தாங்களாகவே சுயமாக இஸ்லாம் என்றால் என்ன என்ற முடிவை எடுக்கமுடியும். இதை செய்ய தேவையானது எல்லாம், திறந்த மனது மற்றும் உண்மைகளை புரிந்துக்கொள்ளக் கூடிய அறிவு மட்டுமேயாகும்.
நான் மூன்று நூல்களை உங்களுக்கு அறிமுகம் செய்யட்டும், இவை அனைத்தையும் எழுதியவர்கள் இஸ்லாமியர்களே. <//font>
1) இபின் இஷாக் எழுதிய "சீரத் ரஸூலல்லாஹ்" (மொழியாக்கம் குல்லேம் - Guillaume) ["Sirat Rasulallah" by Ibn Ishaq, (translated as "The Life of Muhammad" by A. Guillaume and published by Oxford Press),]
2) தபரி எழுதிய சரித்திரம் தொகுப்பு 6 லிருந்து 10 வரை. ["Tabari's History", volumes 6 through 10, translated by various authors and published by SUNY]
3) இபின் ஸத் அவர்களின் "கிதாப் அல்-தபாகத் அல்-கபீர்" [Ibn Sa'd's, "Kitab al-Tabaqat al-Kabir" (The Book of the Major Classes)]
இஸ்லாம் பற்றி படிப்பதற்கான தகுதியுள்ள எந்த கட்டுரையை எழுதும் எழுத்தாளராக இருந்தாலும் சரி, அவர் இபின் இஷாக்கின் வரிகளை மேற்கோள் காட்டுவார். தபரி எழுதிய சரித்திரம் அமேஜான் தளத்தில் வாங்கிக்கொள்ளலாம் (Amazon.com). குல்லேம் அவர்களின் சுருக்கமான தொகுப்பு இப்போது புத்தக பதிப்பில் இல்லை, இருந்தாலும் நாம் தேடினால் நமக்கு கிடைக்கும் (தேடுங்கள் நீங்கள் கண்டடைவீர்கள்). நம்முடைய மேற்கோள்களுக்காக குல்லேம் தொகுப்பை நான் "LoM - Life of Mohammad" என்று குறிப்பிடுகிறேன்.
முஹம்மதுவின் வாழ்க்கையைப் பற்றி அறிந்துக்கொள்ளவேண்டும் என்ற விருப்பமுள்ளவர்கள், இந்த மேற்கண்ட இஸ்லாமிய ஆரம்பகால நூல்களை படித்து தெரிந்துக்கொள்ளலாம்.
அந்த சரித்திர உண்மைகள் தான் என்ன?
(கவனிக்கவும், வார்த்தைகளை விட செயல்கள் போடும் சத்தம் அதிக தூரம் கேட்கும்.)
முஹம்மதுவின் ஆன்மீக மத வாழ்க்கை 23 ஆண்டுகளைக் கொண்டது. அவர் தன் ஆன்மீக பயணத்தை ஒரு ஒடுக்கப்பட்ட பிரச்சாரக்காரராக ஆரம்பித்தார், ஆனால், ஒரு சக்தி வாய்ந்த ஆட்சியாளராக முடித்தார். இந்த 23 ஆண்டு கால கட்டத்தில் அவர் பல விதங்களில் செயல்பட்டார், பல பதவிகளில் இருந்தார், பல உணர்வுகளை வெளிக்காட்டினார், பலவற்ற செய்தும் முடித்தார், அவைகளில் நன்மைகள் தீமைகள் இரண்டும் அடங்கும்.
ஆனால், அவர் ஒரு தீவிரவாதியைப் போல நடந்துக்கொண்டாரா? இது தான் நம்முடைய கட்டுரையின் நோக்கம், மற்றும் இதற்காக நாம் சரித்திர பதிவுகளை அலசப்போகிறோம் மற்றும் அவைகளில் சொல்லப்பட்ட விவரங்களை பார்க்கப்போகிறோம். இக்கட்டுரையில் மேலே குறிப்பிட்ட சரித்திர நூல்களிலிருந்து நான் நேரடியாக என் மேற்கோள்களை முன்வைக்கிறேன், அதன் அடிப்படையில் பிறகு என் வாதத்தை முன்வைக்கிறேன். நான் 5 நிகழ்ச்சிகள் பற்றி சுருக்கமாக எழுதுகிறேன் மற்றும் அவைகளின் சரித்திர நூல்களின் குறிப்புக்களை கொடுக்கிறேன். இன்னும் இது போல பல நிகழ்ச்சிகளை நாம் சொல்லமுடியும், ஆனால், இந்த ஐந்து நிகழ்ச்சிகளே போதும், முஹம்மது எப்படிப்பட்டவர் என்பதை காட்டுவதற்கு.
1) வியாபார வழிப் பிரயாணிகள் மீது திடீர் தாக்குதல்
முஹம்மது மதினாவிற்கு இடம் பெயர்ந்த பிறகு, இஸ்லாமியரல்லாதவர்கள் மீது பயங்கரவாதத்தை காட்ட அனுமதி கொடுத்தார் மற்றும் தானும் அதில் ஈடுபட்டார்.
அது அவரின் மத பிரச்சாரம் ஆரம்பித்து 13ம் ஆண்டு ஆகும். இதற்கு முன்பாக, மக்காவில் முஹம்மது இருந்த நேரத்தில், அவரும் அவரது சகாக்களும் மிகவும் பலவீனமானவர்களாக இருந்தனர், எந்த ஒரு வன்முறையிலும் ஈடுபட அவர்களால் முடியாமல் போனது. ஒருவேளை மக்காவில் இருந்த சமயத்தில் முஹம்மதுவும் அவரது கூட்டாளிகளும் வன்முறையில் ஈடுபட்டு இருந்திருந்தால், மக்காவினர் இவரையும், இவரது கூட்டாளிகளையும் மொத்தமாக கொன்று போட்டு இருந்திருப்பார்கள்.
கடைசியாக, முஹம்மதுவிற்கு எதிராக மக்காவினர் செய்த கொடுமைகள் தீவிரம் அடைந்தது, இதனால், முஹம்மது தன் உயிரை காப்பாற்றிக் கொள்ள மதினாவிற்கு தப்பி ஓடினார். மதினா அடைந்த பிறகு, முஹம்மது தன் மனிதர்களை வழிப்பறிக் கொள்ளை அடிக்க அனுப்பினார். (இந்த நேரத்தில் மக்காவில் இருந்த முஹம்மதுவின் எதிரிகள், அவரை ஒன்றும் செய்யாமல் அப்படியே விட்டுவிட்டனர். அவர்களுக்கு தேவையாக இருந்தது எல்லாம், முஹம்மது மதினாவிற்கு சென்றுவிட்டதால் தங்கள் பிரச்சனை தீர்ந்தது என்று சும்மா இருந்து விட்டார்கள். தபரி தன் சரித்திரத்தில் கூறும் போது, மக்காவினரின் வியாபாரிகளை முஹம்மது தாக்கியதால் தான், அவருக்கும் மக்காவினருக்கு மறுபடியும் போர் மூண்டது என்று கூறுகிறார்). முஹம்மதுவின் இந்த வழிப்பறி கொள்ளைகள் தொடர்ந்தது, இஸ்லாமிய திருடர்களால் பல வியாபாரிகள் கொல்லப்பட்டனர். முஹம்மதுவின் இந்த தாக்குதல் போர் சட்டங்களையும் மீறிவிட்டது. முஹம்மது தன் குற்றங்களை நியாயப்படுத்த தனக்கு ஒரு சிறப்புச் செய்தி வருகிறது என்றுச் சொன்னார், இதனை "அல்லாஹ்விடமிருந்து வந்த வெளிப்பாடு" என்று கூறுவர். இந்த நிகழ்ச்சிக் குறித்து நீங்கள் தபரி தொகுப்பு 7, பக்கங்கள் 10-22, மற்றும் LoM (Life Of Muhammad) பக்கங்கள் 181 லிருந்து 189ம் வரையிலான பக்கங்களிலும் படிக்கலாம்.
இந்த நிகழ்ச்சிகளை நாம் அலசுவோம். வியாபாரிகளுக்கு எதிரான முஹம்மதுவின் இந்த தாக்குதல்கள் வழிப்பறி கொள்ளைகள் (highwaymen's robberies) ஆகும். தற்காலத்தில் இப்படிப்பட்ட தாக்குதல்கள் நடக்கின்றன, அதாவது இந்த வழிப்பறி கொள்ளைக்காரர்கள், பொருட்களை கொண்டு சென்றுக்கொண்டு இருக்கும் வண்டிகளை நிறுத்துவார்கள், சில சமயங்களில் ஓட்டுனர்களை கொன்று விட்டு, வண்டிகளை கொண்டுச் சென்றுவிடுவார்கள், இதனைத் தான் முஹம்மதுவும் அன்று செய்தார். ஆனால், சாதாரண குற்றவாளிகளைப் போல அல்லாமல், முஹம்மது தன் செயல்களுக்கு சாதகமாக தனக்கு அல்லாஹ்விடமிருந்து இதற்காக சிறப்புச் செய்தி கிடைத்தது என்று கூறினார்.
முஹம்மதுவின் இந்த செயல்களை நாம் பின்பற்ற தகுதியுடையவைகளாக இருக்கின்றனவா?
2) வயது முதிர்ந்த ஒரு பெரியவரின் கொலை
மதினாவில் இருந்த எல்லா இனத்தவர்களும், பிரிவினர்களும் முஹம்மதுவை ஏற்றுக்கொள்ளவில்லை. அனேகர் இவரது நபித்துவத்தை நிராகரித்தனர். இப்படிப்பட்டவர்கள் தங்கள் சொந்த இன மக்களுக்காக வேதனைப்பட்டனர், மற்றும் தான் ஒரு நபி என்று நடித்துக்கொண்டு இருக்கும் முஹம்மது குறித்து விமர்சித்தனர். இவர்களில் ஒருவர் தான் 120 வயதுள்ள முதியவர் அபூ அஃபக் என்பவராவார். அபூ அஃபக் தன் இதயத்தில் இருந்ததை பேசினார் மற்றும் முஹம்மதுவை பின்பற்றும் தன் இனத்தவர்களை கடிந்துக்கொண்டார், இது தவிர அவர் வேறு எந்த குற்றமும் செய்யவில்லை. நம்முடைய தற்காலத்தில் கூட மதத்தின் பெயரில் உலகை ஏமாற்றிக்கொண்டு இருக்கும் மதத்தலைவர்களை நாம் எப்படி பார்க்கிறோமோ அது போலத் தான் அபூ அஃபக்கும் முஹம்மதுவை கண்டார். தன் இனத்தவர்களிடம் முஹம்மதுவின் நபித்துவத்தை நம்பாதீர்கள் என்று கூறினார். ஆனால், தன் நபித்துவம் பற்றி எந்த விமர்சனத்தையும் சகிக்கும் நிலையில் முஹம்மது இல்லை, அவர் தனது சகாக்களை அழைத்து அபூ அஃபக்கை கொலை செய்யும் படி கூறினார். ஒரு நாள் இரவு நேரத்தில் அபூ அஃபக் தூங்கிக்கொண்டு இருக்கும் போது, அவர் இஸ்லாமியர்களால் கொலை செய்யப்பட்டார்.
முஹம்மது அபூ அஃபக்கிற்கு செய்த குற்றத்திற்கும், சத்தாம் உசேன் தன்னை விமர்சித்தவர்களுக்கு செய்த குற்றத்திற்கும் இடயே இருக்கும் வித்தியாசம் சிறிதளவே. அதாவது, அச்சமயத்தில் முஹம்மது (சத்தாம் உசேனைப் போல) நாட்டின் ஆளுநராக இருக்கவில்லை, அப்படி இருந்தும், தான் ஒரு குற்றவாளியாக இருந்தும், தன்னை ஒரு இராஜாவாக கருதிக்கொண்டு அவர் செயல்பட்டார். சத்தாம் உசேன் மற்றும் முஹம்மதுவின் முடிவு ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது. ஒரு வேளை மதினாவில் நீங்கள் இருந்திருந்து, அவரது நபித்துவத்திற்கும் நம்பகத்தன்மைக்கும் எதிராக நீங்கள் விமர்சித்து இருந்திருந்தால், உங்களை அவர் கொல்லாமல் விட்டு இருக்கமாட்டார். இந்த நிகழ்ச்சிப் பற்றி "Life Of Muhammad" பக்கம் 675ல் படிக்கலாம், மற்றும் தபாகத் தொகுப்பு 2, பக்கம் 32ல் கூட படிக்கலாம்.
3) ஐந்து பிள்ளைகளின் தாய் கொலை செய்யப்பட்டாள்
முஹம்மதுவின் கொடூரமாக கொலைகள் பற்றி அஸ்மா பின்ட் மர்வான் என்ற பெண் விமர்சித்தாள். தன் இன மக்கள் முஹம்மதுவோடு கூட்டு சேர்ந்துள்ளதை அவள் கடிந்துக்கொண்டாள். முஹம்மது மறுபடியும் விமர்சனத்தை எதிர்க்கொண்டார். அவரால் இதனை சகித்துக் கொள்ளமுடியவில்லை. இந்த முறையும் அப்பெண்ணை கொன்று விடும்படி முஹம்மது கட்டளையிட்டார். இந்த முறையும் ஒரு முஸ்லிம் இரவு நேரத்தில் அப்பெண்ணின் வீட்டில் நுழைந்து அவளை கத்தியால் குத்தி கொலை செய்தார். அந்த நேரத்தில் அவளின் பிள்ளைகளும் அவள் பக்கத்தில் படுத்துக்கொண்டு இருந்தார்கள். இந்த கொலைப் பற்றிய அதிக விவரங்கள் அறிய இந்த கட்டுரையை படிக்கவும்:
http://answering-islam.org/Silas/asma.htm
இந்த பெண் முஹம்மதுவை பயமுறுத்தியிருந்திருப்பாள் இதனால் பயந்து முஹம்மது இந்த பெண்ணை கொலை செய்ய கட்டளையிட்டார் என்று நீங்கள் நம்புகிறீர்களா?
4) கடைவியாபாரியின் கொலை
இஸ்லாமியரல்லாதவர்களோடு முஹம்மது நல்ல உறவுமுறையோடு நடந்துக்கொள்ள அவரால் முடியவில்லை. யூதர்களுடன் அவருடைய நட்புறவு சீக்கிரத்திலேயே மறைந்துவிட்டது. யூதர்கள் இவரின் நபித்துவத்தை நிராகரித்தது இவருக்கு மகிழ்ச்சியை தரவில்லை. யூதர்களின் விமர்சனத்தை அடக்கவேண்டும் என்று முஹம்மது விரும்பினார். இதன் பயனாக நிகழ்ந்த நிகழ்ச்சியை பாருங்கள்.
"இறைத்தூதர் கூறினார்: "உங்கள் அதிகாரத்திற்கு உட்படும் அனைத்து யூதர்களையும் கொன்றுவிடுங்கள்". இதனால், முஹய்யிஸா இபின் மஸுத் என்பவர் இபின் சுனன்யா என்ற யூதனின் மீது பாய்ந்து அவனை கொன்றுவிட்டார். இந்த யூதரோடு அவர்களுக்கு நல்ல சமூக உறவுமுறையும், வியாபார தொடர்புகளும் இருந்திருந்தன. முஹய்யிஸாவின் சகோதரர் ஹுவய்யிஸா என்பவர் ஒரு முஸ்லிமில்லாதவராக இருந்தார், இவர் குடும்பத்தின் மூத்த சகோதராக இருந்தார். முஹய்யிஸா அந்த யூதனை கொன்றதை ஹிவய்யிஸாவிற்கு தெரிந்த போது, அவர் முஹய்யிஸாவை அடிக்க ஆரம்பித்தார், பிறகு அவனை நோக்கி "இறைவனின் எதிரியே, உன் வயிற்றில் இருக்கும் கொழுப்பெல்லாம் அந்த யூதன் மூலமாக வந்த செல்வத்தின் மூலமாக அல்லவா, அப்படியிருந்தும் நீ அவனை கொன்றுவிட்டாயே" என்று கூறினார். இதற்கு பதிலாக யூதனைக் கொன்ற முஹய்யிஸா (தம்பி) "அந்த யூதனை கொல்லச் சொன்னவர் உன்னைக் கொல்லும் படி சொல்லியிருந்தால், நான் உன்னையும் கொன்று இருப்பேன்" என்று கூறினார். (Life of Mohamamd பக்கம் 369)
இதே நிகழ்ச்சி சுனான் அபூ தாவுத் என்ற ஹதீஸ் தொகுப்புகளில் கூட கூறப்பட்டுள்ளது, தொகுப்பு 19, எண் 2996:
முஹய்யிஸா கூறியது: "அல்லாஹ்வின் இறைத்தூதர் "யூதர்களின் மீது உனக்கு வலிமை கிடைக்குமானால், அவர்களை கொன்றுவிடு" என்றுச் சொன்னார். ஆகையால், முஹய்யிஸா சுபய்யாஹ் என்ற யூத வியாபாரியின் மீது பாய்ந்து அவரை கொன்றுவிட்டார். இவர்கள் இருவருக்கும் இடையே நல்ல நட்புறவு இருந்தது. இருந்தும், அவர் யூதனை கொன்றுவிட்டார். முஹய்யிஸாவின் சகோதரனாகிய ஹுவய்யிஸா இன்னும் இஸ்லாமியராக ஆகாமல் இருந்தார். இவர் முஹய்யிஸாவை விட வயதில் மூத்தவராவார். அவன் யூதனை கொன்ற போது, ஹுவய்யிஸா அவனை (தம்பியை) அடித்து "அல்லாஹ்வின் எதிரியே, நான் அல்லாஹ்வின் பெயரில் சத்தியம் செய்கிறேன், நீ கொன்ற அந்த யூதனின் செல்வத்திலிருந்து அதிகபடியான கொழுப்பு உன் வயிற்றில் இருக்கிறது" என்று கூறினான்.
(முஹம்மதுவின் செயல்கள் அல்லது போதனைகள் தொகுக்கப்பட்ட ஹதீஸ்கள் தான் சுனான் அபூ தாவுத் ஆகும்)
முஹம்மதுவின் இந்த கட்டளை "உங்கள் கையின் ஆளுகைக்குள் கிடைக்கும் எந்த யூதனையும் கொன்றுவிடுங்கள்" மிகவும் சகிப்புத்தன்மையற்றது,. முஹம்மது நீதியோடும், நியாயத்தோடும் சிந்திக்கவில்லை. இதற்கு பதிலாக அவர் கொலை செய்யவும், தன் நபித்துவத்தை மறுக்கும் அனைவரையும் பயமுறுத்தவும் தலைப்பட்டார். இதே போலத்தான் இன்றுள்ள அடிப்படைவாத முஸ்லிம்களும் கூறுகிறார்கள் "எல்லா அமெரிக்கர்களையும், பிரிட்டீஷ்காரனையும் அல்லது யூதனையும் கொன்றுவிடுங்கள்...". அதாவது யார் யாரெல்லாம் தங்களுக்கு எதிரியாக இருக்கிறார்கள் என்று இஸ்லாமியர்கள் கருதுகிறார்களோ அவர்களை கொல்லும் படி முஹம்மது சொன்னதுபோலவே, தற்கால அடிப்படைவாதிகளும் கூறுகிறார்கள். முஹம்மது அக்காலத்தில் எதை செய்தாரோ அதனையே இன்றைய இஸ்லாமிய தீவிரவாதிகள் செய்துக்கொண்டு இருக்கிறார்கள்.
முஹம்மதுவின் இந்த கீழ்தரமான செயல்கள் பின்பற்றத்தகுந்தவைகளா? மனிதன் என்றுச் சொல்கிறவன் இதைவிட நல்ல செயல்களைச் செய்யலாம் அல்லவா?
5) கஜானாவை அடையும் படி கொடுமைப்படுத்தி கொலை செய்த முஹம்மது
இக்கட்டுரையின் ஆரம்பத்தில் முஹம்மது கெய்பர் நகரத்தை கைப்பற்றிய விவரம் குறித்து அலி சினா எழுதிய கட்டுரையைக் குறித்து குறிப்பிட்டு இருந்தேன். இதோ அந்த கேவலமான கொலைப் பற்றிய முழு விவரங்கள்:
கினானா பி. அல்-ரபி என்பவர் அல்-நதிர் என்பவரின் பொக்கிஷங்களின் பாதுகாவலன் ஆவார். இவரை நபியிடம் அழைத்துக்கொண்டு வந்தார்கள், முகமது பொக்கிஷங்களைப் பற்றி இவரிடம் கேட்டார். பொக்கிஷங்கள் எங்கே உள்ளது என்று தனக்கு தெரியாது என்று அவர் மறுத்தார். ஒரு யூதன் நபியிடம் வந்தான் (T. was brought) , "இந்த கினானா ஒவ்வொரு நாளும் அதிகாலையில் ஒரு பாழடைந்த இடத்திற்கு சென்று வருவதை நான் கண்டு இருக்கிறேன்" என்றுச் சொன்னான். நபியவர்கள் கினானாவிடம் "நாங்கள் அந்த பொக்கிஷங்கள் உன்னிடம் இருப்பதாக கண்டுபிடித்தால், உன்னை கொன்றுவிடுவோம்" என்றுச் சொன்னார்கள், அதற்கு கினானா, "அப்படியே என்னை கொன்றுவிடுங்கள்" என்றுச் சொன்னான். நபியவர்கள் அந்த பாழடைந்த இடத்தை தோண்டி தேடிப்பார்க்கும் படி கட்டளையிட்டார்கள். அப்படி தேடிப்பார்க்கும் போது, அந்த இடத்தில் கொஞ்சம் பொக்கிஷங்களை அவர்கள் கண்டுபிடித்தார்கள். பின்பு நபியவர்கள் கினானாவிடம் மீதமுள்ள பொக்கிஷங்கள் எங்கே மறைத்து இருக்கிறாய்? என்று கேட்டபோது, அதை தெரிவிக்க கினானா மறுத்துவிட்டான். எனவே, நபியவர்கள் அல்-ஜுபைர் பி.அவ்வம் என்பவருக்கு கட்டளையிட்டு, "இவனிடம் மிதமுள்ள பொக்கிஷங்களை நீங்கள் தெரிந்துக்கொள்ளும் வரை இவனை கொடுமைப்படுத்துங்கள் (Torture)" என்றுச் சொன்னார். எனவே, அல்-ஜுபைர் நெருப்பை மூட்டி, இரும்பை சூடுபடுத்தி கினானாவின் மார்பிலே வைத்தான். கினானா கிட்டத்தட்ட மரித்தவன்போல் ஆகிவிட்டான். பிறகு நபி கினானாவை முஹம்மத் பி. மஸ்லமாவிடம் ஒப்புக்கொடுத்தார், அவன் தன் சகோதரன் மஹ்மத்காக பழிக்கு பழிவாங்க கினானாவின் தலையை துண்டித்து விட்டான். (LoM Page 515)
நாம் இப்போது முழு விவரங்களையும் ஆராய்வோம். முஹம்மது கெய்பர் என்ற பட்டணத்தை தாக்கி அதனை கைப்பற்றினார். அந்த பட்டணத்தில் பொக்கிஷங்கள் அல்லது பூமிக்குள் மறைத்துவைக்கப்பட்ட பொக்கிஷங்கள் இருக்கின்றன என்ற ஒரு வதந்தி இருந்தது. முஹம்மதுவிடம் கினானா என்ற பெயர் கொண்ட ஒரு யூத தலைவன் கொண்டு வரப்பட்டான். அவனிடம் அந்த பொக்கிஷம் இருக்கும் இடம் பற்றிய விவரம் கேட்கப்பட்டது. அவன் எனக்கு அதைப் பற்றி எதுவும் தெரியாது என்றுச் சொன்னான். பண ஆசை பிடிந்த முஹம்மது அம்மனிதனை கொடுமைப்படுத்த கட்டளையிட்டார். அவனின் மார்பில் நெருப்பு வைத்தார்கள், இதன் வலியினால் அவன் பொக்கிஷம் உள்ள இடத்தை சொல்லக்கூடும் என்று எண்ணினார்கள். ஆனால்,கினானா புதைக்கப்பட்ட எந்த பொக்கிஷம் பற்றி எதுவும் சொல்லவில்லை. கடைசியில், அவன் தலை துண்டித்து விடுங்கள் என்று முஹம்மது கட்டளையிட்டார்.
முழு மனித இனமும் பின்பற்றத் தகுந்த ஒரு சிறந்த எடுத்துக்காட்டு இதுதானா?
முடிவுரை
முஹம்மது ஒரு தீவிரவாதியாக இருந்தாரா? ஆம், இதில் என்ன சந்தேகம். இஸ்லாமிய சரித்திர நூல்களிலிருந்து மட்டுமே ஆதாரங்கள் காட்டப்பட்டன என்பதை நீங்கள் கவனித்து இருப்பீர்கள். முஹம்மது செய்த இன்னும் அனேக குற்றங்களை நாம் பட்டியலிட முடியும். இந்த கட்டுரை மிகவும் சுருக்கமாக இருக்கவேண்டும் என்பதற்காக நான் ஐந்து எடுத்துக்காட்டுகளை மட்டுமே முன்வைத்தேன்.
ஆம், முஹம்மது ஒரு தீவிரவாதி தான்.
ஆம், தீவிரவாதம் இஸ்லாமில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆம், இஸ்லாமை நிராகரிக்கும் ஒவ்வொருவரோடும் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சண்டையிட ஆயத்தமாகியிருக்கிறார்கள். இதற்காக அவர்கள் பயன்படுத்தும் இஸ்லாமிய சட்டப்பூர்வமான ஆயுதம் தீவிரவாதமாகும்.
இஸ்லாமிய வன்முறை மற்றும் ஜிஹாத் பற்றி ஆழமாக நீங்கள் தெரிந்துக்கொள்ள விரும்பினால், மற்றும் ஜிஹாத் எப்படி காலப்போக்கில் மாறியது என்பதைப் பற்றி அறிய இந்த நீண்ட கட்டுரையை படித்து தெரிந்துக்கொள்ளவும்:
http://answering-islam.org/Silas/jihad.htm
ஒரு முக்கியமான கேள்வி:
அக்கால இஸ்லாமிய தீவிரவாதத்தின் தாக்கம் இக்கால இஸ்லாமில் எப்படி உள்ளது? இக்காலத்தில் அனேக இஸ்லாமியர்கள் இஸ்லாமை அன்று முஹம்மது எப்படி அதனை பரப்பினாரோ அது போல பரப்ப முயற்சி எடுக்கிறார்கள், அதாவது, வன்முறை மூலமாக. பயங்கரவாதத்தோடு கூடிய வன்முறை குர்ஆனினாலும், ஹதீஸ்களினாலும் முஹம்மதுவின் செயல்களினாலும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இன்றைய தீவிரவாத இஸ்லாமியர்கள் முஹம்மதுவின் அடிச்சுவடிகளில் நடந்துக்கொண்டு இருக்கிறார்கள்.
இஸ்லாமிய தீவிரவாதிகள் முழு உலகத்திலும் இதுவரை என்ன செய்துள்ளார்கள், இனி என்ன செய்ய உள்ளார்கள் என்பதையும் நீங்கள் அறிந்து இருப்பீர்கள்.
இந்த தீவிரவாத பயங்கரவாதம் என்பது இஸ்லாமின் கோட்பாடுகளில் ஒன்றர கலந்துள்ளதால், இன்று, இன்னொரு ஒசாமா பின் லாடன், ஜான் வாக்கர் லின்ந், அல்லது ஜான் முஹம்மது, போன்றவர்களை உருவாக்க அடித்தளம் அமைக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது என்பதை அறிய உங்களுக்கு அதிக நாட்கள் பிடிக்காது. ஆனால், நாளை!?! (கவனிக்கவும்: இந்த தீவிரவாதிகள் ஒரு குறிப்பிட்ட பிரிவினரிலிருந்து உருவாக்கப்பட்டவர்கள் அல்ல, தீவிரவாதிகள் அரபியர்களாகவும், வெள்ளைக்காரர்களாவும் கருப்பின மக்களாகவும் இருக்கிறார்கள். இஸ்லாமிய தீவிரவாதம் எல்லா இன மக்களிடமும், ஆண் பெண் என்ற பாரபட்சம் இல்லாமல் காணப்படுகிறது)
ஒரு விசித்தரமான கேள்வி:
முஹம்மது தன்னை நிராகரித்தவர்களிடம் ஏன் இவ்வளவு கொடுமையாக நடந்துக்கொண்டார்? நான் முஹம்மதுவின் வாழ்க்கை சரித்திரத்தை படித்து புரிந்துக்கொண்டதால், அவரை முதன் முதலில் சந்தித்த அந்த காபிரியேல் என்ற தூதன் என்றுச் சொல்லக்கூடிய அந்த ஆவியினால் அவர் அடைந்த பயம் தான் என்று நான் நம்புகிறேன். இந்த ஆவி தான் அவரை முதன் முதலில் குகையில் சந்தித்து அவரை பயப்படவைத்தது, மற்றும் முதல் "வெளிப்பாட்டைக்" கொடுத்தது. இந்த அனுபவம் முஹம்மதுவின் மனதில் எவ்வளவு தாக்கம் உண்டாக்கியது என்றால், அதன் பிறகு சில ஆண்டுகள் அவர் அடிக்கடி தற்கொலை செய்துக்கொள்ள முயற்சி எடுக்கும் அளவிற்கு அது அவரை பாதித்தது. தன் நபித்துவத்தை யாராவது நிராகரித்தால், அவர்களை பழிக்கு பழி வாங்கினார், ஏனென்றால், இது அவரது அந்த பயமுள்ள அனுபவத்தோடு சம்மந்தப்பட்டது என்பதினால் என்று நான் நம்புகிறேன். முஹம்மது பிசாசினால் ஆளப்பட்டு இருக்கவேண்டும், அல்லது அதைக் கண்டுபயந்து இப்படி செய்திருக்கவேண்டும் அல்லது அவர் பயித்தியமாக மாறியிருப்பார். அந்த ஆவியின் அனுபவத்தை சந்திக்க அவரால் முடியவில்லை, எனவே தன் நபித்துவத்தை நிராகரிக்கும் நபர்களை இவர் கொன்று தீர்த்தார். தன்னைப் பொருத்தவரையில் தான் ஒரு அல்லாஹ்வின் நபி அல்லது பிசாசு பிடித்தவர்.
இன்னொரு தற்கொலை முயற்சி அவர் எடுக்காமல் இருப்பதற்கு இருக்கும் ஒரே வாய்ப்பு, தான் ஒரு நபி என்ற மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து வாழ்ந்துக்கொண்டு இருப்பது தான்.
முஹம்மதுவின் தற்கொலை முயற்சி பற்றி இன்னும் ஆழமாக அறிய படிக்கவும்:
முஸ்லிம்களுக்கு சவால்
இப்படிப்பட்ட நபரையா நீங்கள் பின்பற்றுகிறீர்கள்? இவர் மீது வைக்கும் நம்பிக்கையா சொர்க்கத்தின் வாசல்வரை உங்களை கொண்டுச் செல்லும்? நாம் பின்பற்றக்கூடிய நல்ல எடுத்துக்காட்டை இயேசுவின் வாழ்க்கையில் இறைவன் காண்பித்துள்ளார், நான் அல்ல.
உண்மையைச் சொல்கிறேன், முஹம்மதுவை விட நல்ல குணநலன்களோடும், அவரை விட அதிக அன்போடும், மன்னிக்கும் சுபாவத்தோடும் அவரை விட நல்ல நடத்தையுடனும் இருக்கின்ற மனிதர்கள் உலகில் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். நாம் பின்பற்றக்கூடிய அளவிற்கு நல்ல நடக்கையுடன் இருக்கின்ற வேறு ஒரு நபரை இறைவன் தெரிந்தெடுத்து இருப்பார், முஹமம்துவை நிச்சயமாக இறைவன் தெரிந்தெடுத்து இருக்கமாட்டார்.
மீட்புக்காக ஒரு விண்ணப்பம்
இந்த ஜெபம் அல்லது விண்ணப்பம் எல்லாருக்காக எழுதப்படுகிறது. இதில் உண்மையை அறிய விரும்பும், இறைவனோடு ஒரு தனிப்பட்ட நட்பை வைக்க விரும்பும் இஸ்லாமியர்களும் அடங்குவர்.
"எங்கள் ஆண்டவராகிய இயேசுவே, நான் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன். நீர் இறைக்குமாரன் என்றும் ஆண்டவர் என்றும் நம்புகிறேன். நீர் என் குற்றங்களுக்காக மரித்து மறுபடியும் உயிர்த்தெழுந்தீர் என்பதை நம்புகிறேன். நான் ஒரு பாவி என்பதை ஒப்புக்கொள்கிறேன், என் உள்ளத்தில் வரும்படி உம்மை அழைக்கிறேன். என் குற்றங்களிலிருந்து என்னை கழுவும் என் குற்றங்களை மன்னியும். நான் உம்மை பின்பற்ற மற்றும் கீழ்படிய விரும்புகிறேன். என் நம்பிக்கையை உம்மீது வைக்கிறேன். நீர் என் மஸிஹா என்று நான் அங்கீகரிக்கிறேன், என் வாழ்க்கை முழுவதும் உமக்கே அர்பணிக்கிறேன்." ஆமென்.
மாரநாதா, வாரும் இயேசு ஆண்டவரே.
செப்டம்பர் 25, 2003
© Answering Islam, 1999 - 2009. All rights reserved.