இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
இஸ்லாமும் விபச்சாரமும்-முஹம்மதுவின் திருமண சலுகைகள் பற்றிய ஆய்வு
இறைவனின் பரிசுத்த வார்த்தையாகிய பரிசுத்த பைபிள் "மற்றவர்களின் மனைவிகள் மீது விருப்பம் கொள்வதை" கண்டிக்கிறது.
பிறனுடைய வீட்டை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய மனைவியையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார். (யாத்திராகமம் 20:17)பிறனுடைய மனைவியை இச்சியாதிருப்பாயாக; பிறனுடைய வீட்டையும், அவனுடைய நிலத்தையும், அவனுடைய வேலைக்காரனையும், அவனுடைய வேலைக்காரியையும், அவனுடைய எருதையும், அவனுடைய கழுதையையும், பின்னும் பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக என்றார். (உபாகமம் 5:21)
விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ்செய்தாயிற்று. (மத்தேயு 5:27-28)
நபியே! எவர்களுக்கு நீர் அவர்களுடைய மஹரை கொடுத்து விட்டீரோ அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும், நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம்; அன்றியும் உம் தந்தையரின் சகோதரர்களின் மகள்களையும், உம் தந்தையரின் சகோதரிகள் மகள்களையும், உம் மாமன் மார்களின் மகள்களையும், உம் தாயின் சகோதரிமாரின் மகள்களையும் - இவர்களில் யார் உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ அவர்களை (நாம் உமக்கு விவாகத்திற்கு ஹலாலாக்கினோம்); அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் (மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம்) இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே (நாம் இத்தகு உரிமையளித்தோம்; மற்ற முஃமின்களைப் பொறுத்தவரை) அவர்களுக்கு அவர்களுடைய மனைவிமார்களையும், அவர்களுடைய வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம்; உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே (விதி விலக்களித்தோம்) மேலும் அல்லாஹ் மிக மன்னப்பவன்; மிக்க அன்புடையவன். (குர்ஆன் 33:50)
(நபியே!) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து, நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில் நீர்; "அல்லாஹ்வுக்குப் பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்" என்று சொன்ன போது அல்லாஹ் வெளியாக்க இருந்ததை, மனிதர்களுக்குப் பயந்து நீர் உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர்; ஆனால் அல்லாஹ் அவன் தான், நீர் பயப்படுவதற்குத் தகுதியுடையவன்; ஆகவே ஜைது அவளை விவாக விலக்கு செய்துவிட்ட பின்னர் நாம் அவளை உமக்கு மணம் செய்வித்தோம்; ஏனென்றால் முஃமின்களால் (சுவீகரித்து) வளர்க்கப்பட்டவர்கள், தம் மனைவிமார்களை விவாகரத்துச் செய்து விட்டால், அ(வர்களை வளர்த்த)வர்கள் அப்பெண்களை மணந்து கொள்வதில் யாதொரு தடையுமிருக்கக் கூடாது என்பதற்காக (இது) நடைபெற்றே தீர வேண்டிய அல்லாஹ்வின் கட்டளையாகும். நபியின் மீது அல்லாஹ் விதியாக்கியதை அவர் நிறைவேற்றுவதில் எந்தக் குற்றமும் இல்லை இதற்கு முன் சென்று போன (நபிமா)ர்களுக்கு ஏற்பட்டிருந்த அல்லாஹ்வின் வழி இதுவேயாகும் - இன்னும் அல்லாஹ்வின் கட்டளை தீர்மானிக்கப்பட்ட விதியாகும். (குர்ஆன் 33:37-38)
…அன்றியும் முஃமினான ஒரு பெண் நபிக்குத் தன்னை அர்ப்பணித்து, நபியும் அவளை மணந்து கொள்ள விரும்பினால் அவளையும் (மணக்க நாம் உம்மை அனுமதிக்கின்றோம்) இது மற்ற முஃமின்களுக்கன்றி உமக்கே (நாம் இத்தகு உரிமையளித்தோம்; மற்ற முஃமின்களைப் பொறுத்தவரை)…
1) போரில் கிடைத்த பொருட்களை பங்கிடுவதில் நேர்மையாக இருத்தல்
2) போரில் கிடைத்த பொருட்களில் ஐந்தில் ஒரு பங்கை அல்லது ஐந்தில் ஒரு பங்கின் ஐந்தில் ஒரு பங்கை எடுத்துக்கொள்ளலாம்.
3) அல் விசல் - Al Wisal (திமிட்ரியஸ்: இது நோம்பை அல்லது உணவு உண்ணாமல் இருப்பதைக் குறிக்கும்)
4) நான்கு மனைவிகளை விட அதிகமான பெண்களை திருமணம் செய்துக்கொள்ளுதல்
5) தன்னை முஹம்மதுவிற்கு அற்பணித்தேன் என்று வாய்வழியாக அறிக்கை செய்தபெண்ணை திருமணம் செய்துக்கொள்ளுதல், அவளுடன் தாம்பத்தியத்தில் ஈடுபடுதல் ("Yas-tan-kih").
6) ஒரு பெண்ணின் பாதுகாப்பாளரின் அனுமதியின்றி, அவரது முன்னிலையில் அல்லாமலும் அப்பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள நபிக்கு அனுமதியுண்டு ("Yas-tan-kih")
7) மஹர் கொடுக்காமலேயே ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளும் உரிமை ("Yas-tan-kih").
8) மார்க்க சுத்திகரிப்பு நாட்களிலும், ஒரு பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு, உடலுறவில் ஈடுபட அனுமதியுண்டு.
9) தான் செய்த சத்தியத்தை முறித்துக்கொண்டு தன் மனைவிகளை மறுபடியும் சேர்த்துக்கொள்ள அனுமதியுண்டு.
10) முஹம்மது ஒரு பெண்ணைக் கண்டு அப்பெண்ணை விரும்பினால், முஹம்மது அவளை திருமணம் செய்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக,அப்பெண்ணின் கணவன் அவளை விவாகரத்து செய்யவேண்டும். இபின் அல் அரபி கூறுகையில், "இதைத் தான் இரண்டு பரிசுத்த மசூதிகளின் தாசரும் கூறினார், மற்றும் ஜையத் கதையில் வரும் நிகழ்ச்சியும் இப்படிப்பட்ட பொருளில் வந்ததே என்று அறிஞர்களும் கூறுகிறார்கள்".
11) இறைத்தூதர் போரில் பிடிப்பட்டிருந்த ஷபியாவை விடுதலையாக்கினார், இந்த விடுதலையானது, ஷபியாவின் மஹராக கருதினார்.
12) மார்க்க சுத்திகரிப்பு இல்லாமல் மக்காவில் நுழைய அனுமதியுண்டு.
13) மக்காவிலும் போர் புரிய அனுமதியுண்டு.
14) அவரின் சொத்துக்களை யாரும் சுவிகாரம் பெறமுடியாது. அதாவது ஒரு மனிதன் வியாதியின் காரணமாக மரணத்தை நெருங்கும் போது, அவரது அனைத்து சொத்துக்களும் எடுத்துக்கொள்ளப்படும், அவருக்கு மூன்றில் ஒரு பாகம் மட்டுமே இருக்கும். ஆனால், இறைத்தூதருக்கு இப்படியில்லாமல், அவரின் சொத்துக்கள் அனைத்தும் எடுத்துக்கொள்ளப்படாமல் அவருடையதாகவே இருக்கும். இதனை நாம் "சொத்துக்களை பிரித்துக்கொடுக்கும் வசனங்களிலும், சூரத் மரியம் அத்தியாயத்திலும் காணலாம்.
15) முஹம்மதுவின் மரணத்தின் பிறகும் அவரது திருமண பந்தங்கள் இரத்து செய்யப்படாது.
16) ஒரு பெண்ணை முஹம்மது விவாகரத்து செய்தால், அப்பெண் அதன் பிறகு வேறு எந்த நபரையும் திருமணம் (நிக்காஹ்) செய்துக்கொள்ளக்கூடாது, வாழ்நாள் முழுவதும் அப்படியே இருக்கவேண்டும்.
" أَنْ يَسْتَنْكِحهَا " أَيْ يَنْكِحهَا , يُقَال : نَكَحَ وَاسْتَنْكَحَ , مِثْل عَجِبَ وَاسْتَعْجَبَ , وَعَجِلَ وَاسْتَعْجَلَ . وَيَجُوز أَنْ يَرِد الِاسْتِنْكَاح بِمَعْنَى طَلَب النِّكَاح , أَوْ طَلَب الْوَطْء .
இன்னும் (போரில் பிடிபட்டு உங்கள் ஆதரவிலிருக்கும்) அடிமைப் பெண்களைத் தவிர, கணவனுள்ள பெண்களை நீங்கள் மணமுடிப்பது விலக்கப்பட்டுள்ளது. (இவையனைத்தும்) அல்லாஹ் உங்கள் மீது விதியாக்கியவையாகும். இவர்களைத் தவிர, மற்றப் பெண்களை, தவறான முறையில் இன்பம் அனுபவிக்காமல், அவர்களுக்கு உங்கள் செல்வங்களிலிருந்து (மஹராக) கொடுத்துத் (திருமணம் செய்யத்) தேடிக் கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே இவ்வாறு (சட்டப்பூர்வமாக மணந்து கொண்ட) பெண்களிடமிருந்து நீங்கள் சுகம் அனுபவிப்பதால் அவர்களுக்காக (விதிக்கப்பட்ட மஹர்)தொகையைக் கடமையாக கொடுத்து விடுங்கள். எனினும் மஹரை பேசி முடித்தபின் அதை(க் கூட்டவோ அல்லது குறைக்கவோ) இருவரும் சம்மதித்துக் கொண்டால் உங்கள் மேல் குற்றமாகாது - நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தோனும், ஞானமுடையோனுமாக இருக்கிறான். (குர்ஆன் 4:24)
இந்த தலைப்பு பற்றிய இதர கட்டுரைகள், விவாதங்களை இங்கு படிக்கவும்:
Comment Form under post in blogger/blogspot