இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Tuesday, October 27, 2009

இமாம்கள் பட்வா எனப்படும் தண்டனை விதிப்பதற்கு சவூதி அரேபியாவில் தடை

 

 

துபாய், அக்.26-

முஸ்லிம் நாடுகளில் வசிக்கும் இமாம்கள் மதத்தின் பெயரால் பட்வா எனப்படும் தண்டனைகளை அறிவிப்பது வழக்கம். இதற்கு ஒரு எடுத்துக்காட்டு வேண்டுமானால், ஈரான் நாட்டின் மதத்தலைவரான கோமேனி சைத்தானின் கவிதை என்ற நாவலை எழுதிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு மரண தண்டனை விதித்ததை சொல்லலாம். இப்படி இமாம்கள் தங்கள் இஷ்டத்துக்கு பட்வா விதிப்பதற்கு சவூதி அரேபியா அரசு தடை விதித்து உள்ளது. இஸ்லாமிய விவகாரத்துக்கான அமைச்சரகம் இந்த தடையை பிறப்பித்து உள்ளது.

சவூதிஅரேபிய மன்னர் அப்துல்லா சமீபத்தில் தொழில் நுட்ப பல்கலைக்கழகம் ஒன்றை தொடங்கினார். இந்த பல்கலைக்கழகம் சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்டு உள்ளது. இதில் ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிக்கலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதை விமர்சித்த மதகுரு ஒருவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இஸ்லாமிய நெறிகளை பாதுகாக்கும் போலீசுக்கு இந்த பல்கலைக்கழக வளாகத்தில் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Monday, October 26, 2009

செக்ஸ் பற்றி பகிரங்க பேச்சு: சவுதி அரேபிய பெண் பத்திரிகையாளருக்கு 60 கசையடி

 

  ரியாத், அக்.25- சவுதி அரேபியாவைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ரோசானா அல்-யாமி. இவர், லெபனான் நாட்டில் இருந்து ஒளிபரப்பாகும் டி.வி. சானல் ஒன்றில், சவுதி அரேபியாவைச் சேர்ந்த அப்துல் ஜவாத் என்பவரிடம் பகிரங்கமாக செக்ஸ் பற்றி பேசிய காட்சிகள் அண்மையில் ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியை தயாரித்ததோடு, அது பற்றிய விளம்பரத்தை இணைய தளத்திலும் வெளியிடச் செய்ததற்காக ரோசானாவுக்கு சவுதி அரேபிய கோர்ட்டு 60 தடவை கசையடி கொடுக்கும்படி உத்தரவிட்டது. ரோசானாவுடன், செக்ஸ் பற்றி விவரித்து பேசிய அப்துல் ஜவாத்துக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனையும், ஆயிரம் கசையடி வழங்கவும் கோர்ட்டு உத்தரவிட்டது. சவுதி அரேபியாவில் செக்ஸ் பற்றி பகிரங்கமாக ஆணோ, பெண்ணோ பேசுவது சட்டப்படி குற்றமாகும்.

 
http://thamilislam.blogspot.com/2009/10/60_25.html

Friday, October 9, 2009

குர்-ஆன் முரண்பாடுகள்: மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்



 

குர்-ஆன் முரண்பாடுகள்

 

மரியாள், ஆரோனின் சகோதரி மற்றும் அம்ராமின் மகள்

 
அநேக சூராக்களில் குர்-ஆன், இயேசுவின் தாயாகிய மரியாளை (எபிரேய மொழியில் 'மிரியம்'), ஏறக்குறைய 1400 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஆரோன், மோசேயின் சகோதரியும் மற்றும் அம்ராமின் மகளுமான 'மிரியாமோடு' சேர்த்து குழப்புகிறது.
 
பின்னர் (மர்யம்) அக்குழந்தையைச் சுமந்து கொண்டு தம் சமூகத்தாரிடம் வந்தார்; அவர்கள் கூறினார்கள்; "மர்யமே! நிச்சயமாக நீர் ஒரு விபரீதமான பொருளைக் கொண்டு வந்திருக்கிறீர்!" "ஹாரூனின் சகோதரியே! உம் தந்தை கெட்ட மனிதராக இருக்கவில்லை உம் தாயாரும் நடத்தை பிசகியவராக இருக்கவில்லை" (என்று பழித்துக் கூறினார்கள்). (19:27-28)

மேலும், இம்ரானின் புதல்வியான மர்யமையும்.....சுரா 66:12
 
 
இந்த பிரச்சனைக்கு முஸ்லீம்கள் என்ன பதிலைத் தருவார்கள் என்பதை நான் அறிந்திருக்கிறேன். மேலேயுள்ள வசனங்களை பற்றி யூசுப் அலி கீழ்கண்டவாறு விரியுரை கூறுகிறார்:
 
 
"மோசேயின் சகோதரன் ஆரோன் இஸ்ரவேலின் ஆசாரிய வரிசையில் முதன்மையானவர். மரியாளும் அவளுடைய உறவின் முறையான எலிசபெத்தும் (யஹ்யாவின் தாய்) ஒரு ஆசாரிய சந்ததியில் வந்தவர்கள். எனவே அவர்கள் ஆரோனின் சகோதரிகளும் இம்ரானின் (ஆரோனின் தகப்பன்) மகளுமாவார்கள்." (Footnote: 2481)

 
மரியாள் லேவி வம்சமா அல்லது யூதா வம்சமா என்பதை அறிய இக்கட்டுரையை படிக்கவும்: Is Mary from the tribe of Levi or Judah?
 
 
இது ஒரு தவறான பதில் அல்லது சுட்டிக்காட்டலாகும். ஆரோன் மட்டும் தான் தேவனுடைய "ஆசாரியன்" அதுவும் முதல் ஆசாரியன் ஆனார். மேலும் ஆரோனின் சந்ததியார் மட்டுமே ஆசாரியர்களாவார்கள். ஆரோனின் சகோதரனாகிய மோசேயோ அல்லது அவர் சகோதரி மிரியாமோ ஆசாரிய சந்ததிகளாக கருதப்படமாட்டார்கள். அம்ராம் (ஆரோனின் தந்தை) நிச்சயமாக ஒரு ஆசாரியன் அல்ல. இஸ்ரவேலில் ஒவ்வொரு ஆசாரியனும் ஆரோனின் சந்ததிகளாக இருக்கிறார்கள். ஆரோனுடைய சகோதரனும் சகோதரியும் ஆசாரிய சந்ததிகளாக எண்ணப்படமாட்டார்கள். ஒரு வேளை இயேசுவின் தாயாகிய மரியாள் ஆசாரிய வம்சத்தில் வந்தவர் என்றுச் சொல்லவேண்டுமானால், அவரை "ஆரோனின் குமாரத்தி/மகள்" என்று மட்டுமே சொல்லவேண்டும்.

 
 
"தகப்பன்", 'மகள்" மற்றும் "சகோதரி" என்று உபயோகப்படுத்தப்படுபவைகள் அதிகமாக ஒரு 'பொதுவான குடும்ப உறவுகளை' குறிக்கின்றன என்பதை நான் அங்கீகரிக்கிறேன். எனவே அப்படிப்பட்ட ஒவ்வொரு குறிப்புகளையும் அதில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது என்று மிக கவனமாக நாம் ஆராயவேண்டும். இந்த காரியத்தில் "மகள்" மற்றும் "சகோதரி" என்ற குறுகிய சரீரப்பிரகாரமான உறவைப் பற்றி குர்-ஆன் என்ன சொல்கிறது என்பதை நான் கீழே விளக்குகிறேன். ஒருவேளை அங்கே "ஆசாரியத்துவம்" முக்கியமாக கருதப்படவில்லையென்றாலும், ஒரு நீண்ட குடும்ப உறவுமுறை காணப்படுகிறது. அப்படியிருக்க குர்-ஆன் ஏன் மரியாளுடைய புகழ் பெற்ற முற்பிதாவான "ஆரோனின் புதல்வி" என்று கூறுவதில்லை?

 
 
"சகோதரி" என்ற வார்த்தை ஒரே குடும்பத்தில் உள்ள நபர்களின் உறவுமுறைகளை குறிப்பதோடு மட்டுமில்லாமல், பரந்த முறையிலும் பயன்படுத்தப்படுகிறது என்பது உண்மையானாலும், இரண்டு நபர்களை ஒப்பிடும் போது குர்-ஆனில் கூட "சகோதரர்கள், சகோதரிகள்" என்ற வார்த்தைகள் ஒரே காலகட்டத்தில் வாழும் உறவினர்களை குறிப்பதற்கும், "தந்தை மகள்" என்ற வார்த்தைகள் பல வம்சங்களுக்கு இடையில் இருப்பவர்களை குறிக்கவும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறதே!

 
ஏன் முஹம்மதுவின் மனைவிகள் "நம்பிக்கையாளர்களின் சகோதரிகள்" என்று அழைக்கப்படாமல் "நம்பிக்கையாளர்களின் தாய்கள்" என்று அழைக்கப்படுகின்றனர்?[இன்றைய நம்பிக்கையாளர்களே! - ஆயிஷா நிச்சயமாக முஹம்மதுவின் சம காலத்தில் வாழ்ந்த உதமான், உமர், அபூ பக்கர் மற்றும் மற்றவர்களின் தாய் என்று அழைக்கப்படவில்லை.]

குர்-ஆன் எந்த காரணத்திற்காக மரியாளை புகழ்பெற்ற ஆரானின் சகோதரியாக அழைக்கிறது ஆனால் இம்ரானின் மகளாக (பைபிளில்: அம்ராம்) அழைக்கிறது? (ஆரோன் ஏறக்குறைய 1400 வருடங்கள் மரியாளை விட மூத்தவராக இருக்கிறார்). இம்ரான் பற்றி யாத்திராகமம் 6 மற்றும் 1 நாளாகமம் 23 ல் வரும் வம்சாவழிப் பட்டியலில் அவருடைய பெயர் இருப்பதை தவிர வேறொன்றும் நாம் அறியாதிருக்க, அவருடைய மகள் என்று ஏன் மரியாள் அழைக்கப்பட வேண்டும்? எனவே இந்த இரண்டு மிரியாம்களையும் குறித்து குர்-ஆன் குழம்பியிருப்பது தெளிவாக தெரிகிறது. ஆனால் அதை ஒற்றுமைப் படுத்துவதற்கு எடுக்கப்படும் இஸ்லாமியர்களின் முயற்சிகள் உண்மையிலேயே அறிவுடமையானதாக இல்லை.

 
மேலேயுள்ள குறிப்புகள் ஒரு சில 'சிறிய கேள்விகளே'. ஆனால் இங்கே பெரிய பிரச்சனை என்பது பின்வரும் வசனங்களில் நாம் பார்ப்பது போல, குர்-ஆன் வெளிப்படையாக ஒரு பரந்த வம்ச உறவைப் பற்றி (Wider Clan Relationships) பேசுவதில்லை.
 
 
இம்ரானின் மனைவி; "என் இரைவனே! என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணிக்க நான் நிச்சயமாக நேர்ந்து கொள்கிறேன்;. ……(பின், தான் எதிர்பார்த்ததற்கு மாறாக) அவள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றதும்; "என் இறைவனே! நான் ஒரு பெண்ணையே பெற்றிருக்கின்றேன்" ….(மேலும் அந்தத்தாய் சொன்னாள்;) "அவளுக்கு மர்யம் என்று பெயரிட்டுள்ளேன்;. …. 3:36
 
 
முஸ்லீம்கள் வழக்கமாக ஒரு பெண் யாருடைய மனைவி என்பதில் மிகவும் குறிப்பாக இருக்கிறார்கள். அவளுடைய ஏதோ ஒரு 'தூரத்து உறவின் முறை' என்பதால் அவளோடு யாரும் உடலுறவு வைத்துக்கொள்ள நிச்சயமாக அனுமதியில்லை. ஒருவேளை மரியாள் இம்ரானின் மனைவியின் கர்ப்பத்திலிருந்து உருவான பெண்குழந்தை எனில் அவள் இம்ரானின் நேரடி மகளாவாள். மேலும் குர்-ஆனிலேயே முரண்பாடக இருக்கும் "தூரத்து சந்ததி" என்ற கருத்துக்கே இங்கு இடமில்லை.

 
 
யூசுப் அலி சூரா 3:35க்கான தன்னுடைய விரிவுரை 375ல் இன்னும் கொஞ்சம் அதிகமாக கண்டுபிடிக்க(?) முயற்சி எடுத்து "இரண்டாம் இம்ரானை" அறிமுகப்படுத்துகிறார். எப்படியாவது குர்-ஆனை இந்த முரண்பாட்டிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, "பாரம்பரியமாக மரியாளின் தாய் "ஹன்னா (அன்னாள்)" என்று அழைக்கப்பட்டாள் .... அவளுடைய தகப்பன் "இம்ரான்" என அழைக்கப்பட்டார்" என்று கூறுகிறார். ஆனால் மரியாளின் தாயை அன்னாள் என்று அழைக்கும் அதே பாரம்பரியம் அவளுடைய கணவனுக்கு "யோயாக்கிம்" என்ற பெயரைக் கொடுக்கிறது. எதற்காக யூசுப் அலி பாரம்பரியத்தின் ஒரு பகுதியை மட்டும் ஏற்றுக் கொண்டு (e.g. in the Proto-Evangelion of James the Lesser) அதே பாரம்பரியத்தின் அடுத்த பகுதியை விட்டுவிடவேண்டும்? யூசுப் அலி அவர்கள் தன் வாதத்தை நிருபிப்பதற்காக எந்த ஒரு ஆதாரத்தையும் கொடுக்கவில்லை. இவர் சொன்ன பாரம்பரியத்தின் ஆதாரத்தை நாம் காணும் வரை, இவர் சொல்வதை நாம் நம்பமுடியாது. எனக்கு தெரிந்தவரை, முஹம்மதுவின் காலத்திற்கு முன்பு இப்படிப்பட்ட ஒரு பாரம்பரியம் எதுவும் இல்லை. சில முஸ்லீம் விரிவுரையாளர்கள் இந்த பிரச்சனையை தீர்ப்பதற்காக பின்னாட்களில் எதையாவது உருவாக்கியிருக்கலாம், ஆனால் அப்படிப்பட்ட பின் கொள்கை/பாரம்பரியம் நம்பத்தகுந்தது அல்ல.

 
 
இறுதியாக ஒரு கேள்வி: பெரிய உறவு முறையில் ஒரு நபர் தொடர்ச்சியாக இன்னாரின் மகள் (மகன்) அல்லது சகோதரி (சகோதரன்) என்று அழைக்கப்பட்ட வேறு சம்பவம் ஏதாவது குர்-ஆனில் உண்டா? (And a last question: Is there any other instance in the Qur'an where a person is consistently called daughter [son] or sister [brother] of people which are only wider relatives?)

 
 
எனவே ஒவ்வொருவரும் ஒரு நபருடனான தன்னுடைய உறவு முறையின் அடிப்படையிலேயே பெயரிடப்படுவதற்கு கடடைமப்பட்டிருக்க, அவனுடைய அல்லது அவளுடைய உண்மையான தந்தை, தாய் அல்லது சகோதரன், சகோதரியுடனான உறவை குறிப்பிடமால் வேறு இரண்டு தூரத்து உறவினர்களை எப்பொழுதும் தன்னுடைய "தந்தை" மற்றும் "சகோதரனின்" இடத்தில் வைத்து பெயரிடப்படுவது என்பது கண்டிப்பாக நிகழக் கூடியது அல்ல. ஒருவேளை இதுதான் ஒரே தீர்வு என்றுச் சொன்னால், இதனால் முஸ்லீம்களின் விளக்கமானது அடிப்படை விளக்கத்திலிருந்து இன்னும் அதிகமாக நீட்டப்படும் (அதாவது, விளக்கம் என்பது வேறு எதற்காகவும் அல்லாமல் இந்த ஒரு பிரச்சனையை விளக்கவேண்டும், அப்படியிராவிட்டால் அந்த விளக்கம் நம்பத்தகுந்தது அல்ல). இந்த விஷயத்தில் இது ஒரு உண்மைப்போலத் தோன்றும் செயற்கையான இஸ்லாமிய காரணமாகும். உண்மையில் ஆரோன் இம்ரானின் மகன் ஆவார், இது ஒரு நேரடி மற்றும் சரியான உறவாகும், மேலும் மற்றவர்கள் சகோதரிகள் என்றும் புதல்விகள் என்றும் இன்றைய வழக்கத்தின்படி பரவலாக புரிந்து கொள்ளப்படுகிறார்கள்.

 
 
தாமஸ் பாட்ரிக்ஸ் ஹக்ஸ் (Thomas Patrick Hughes) என்பவர் தன்னுடைய "Dictionary of Islam", என்ற புத்தகத்தில் பக்கம் 328ல் இந்த விஷயத்தை குறித்து கீழ்கண்டவாறு கூறுகிறார்:
 
 
"நிச்சயமாக இது விரிவுரையாளர்களின் சில குழப்பத்தின் விளைவு ஆகும். அல்-பைதாவி (Al-Baidawi ), அவள் லேவி கோத்திரத்தைச் சேர்ந்தவளாக இருந்ததினால் 'ஆரோனின் புதல்வி' என்று அழைக்கப்பட்டாள் என்று கூறுகிறார். ஆனால் ஹுஸைன் என்பவர், இந்த வசனத்தில் குறிப்பிட்பட்டுள்ள 'ஆரோன் மோசேயின் சகோதரனாகிய ஆரோன் அல்ல' என்று கூறுகிறார்".
 
 
எனவே, இஸ்லாமியர்களின் இவ்விதமான முரண்பாடான விளக்கங்கள் "உண்மையிலேயே ஒரு பிரச்சனை உள்ளது" என்பதை காட்டுகிறது. ஒருவரும் திருப்திகரமான தெளிவான தீர்வை கொடுக்கவில்லை என்பது திண்ணம்.

 
குறிப்பு: மோசேயும், ஆரோனும் "மூஸா இபின் இம்ரான்" என்றும், "ஹாருன் இபின் இம்ரான்" என்று ஹதீஸ்களில் அழைக்கப்படுகிறார்கள். இதே போலத் தான் குர்-ஆன் 66:12ல் "மர்யம் இபினத் இம்ரான்" என்று அழைக்கப்படுகிறார்.
 

ஆங்கில மூலம்: Mary, Sister of Aaron & Daughter of Amram


இந்த தலைப்பைப் பற்றிய இதர இஸ்லாமிய ஆதாரங்களோடு கூடிய கட்டுரைகளை இங்கு படிக்கவும்: லஸ்: Is Mary the Sister of Aaron? , ஷாம் ஷமான்:Mary, the Mother of Jesus and Sister of Aaron .

 


 
© Answering Islam, 1999 - 2009. All rights reserved.
 
 

 

Tuesday, October 6, 2009

இயேசு ஏன் அத்திமரத்தை சபித்தார் என்ற கட்டுரையை மட்டும் நீங்கள் பதித்தால் போதும்.

 

பொதுவான கேள்விகளுக்கான தொடர் பதில்கள்

இயேசு ஏன் அத்திமரத்தை சபித்தார்?

ஷாம் சாமான்
 
 
கேள்வி:


சுவிசேஷ நூல்களில், இயேசு சாப்பிட கனிகள் ஏதாவது இருக்குமா என்று பார்க்க ஒரு அத்திமரத்தினிடம் செல்கிறார் (மத் 21:18-22; மாற்கு 11: 12-14, 20-21). அந்த மரத்தில் கனிகள் ஒன்றும் இல்லாதிருப்பதைக் கண்டபோது அவர் அந்த மரத்தை சபித்தார். இந்த சம்பவத்தில் உள்ள ஒரு பிரச்சனை என்னவென்றால், மாற்கு 11:13ம் வசனத்தின் படி, அந்த காலம் அத்தி மரம் கனி கொடுக்கிற காலமல்ல. இயேசு "இறைவனாக" இருந்தால் "அது அத்திப் பழத்திற்கான காலம் (Season) இல்லை" என்பதை ஏன் அறியாதிருந்தார்? அந்த காலம் அத்திப் பழ காலமாக இல்லாமலிருந்தது மரத்தினுடைய குற்றமாகாதபோதும் அதை அவர் ஏன் சபிக்க வேண்டும்?
 
 
பதில்:

அத்திமர காலமாக இல்லாதபோதும் இயேசு ஏன் அந்த மரத்தை சபித்தார் என்பதற்கு சரியான காரணம் உள்ளது. அத்திமரமானது கனி காலம் (Season) தொடங்குவதற்கு முன்பே சிறிய உருண்டை வடிவிலான அத்தி கனிகளை கொடுக்கும், அதை வழிப்போக்கர்கள் உண்பார்கள். புகழ்பெற்ற புதிய ஏற்பாட்டு அறிஞர் காலஞ் சென்ற எப்.எப். புரூஸ் (F.F. Bruce) அவர்கள் கிழ்கண்ட விதமாக குறிப்பிடுகிறார்:
 
 
'இயேசு செய்த இன்னொரு அற்புதம் என்னவென்றால் "கனிகொடாத அத்தி மரத்தை சபித்த அற்புதமாகும்." (மாற்கு 11:12-14), இந்த அற்புதம் அநேகருக்கு ஒரு இடறுதலாக காணப்படுகிறது. அவர்கள், இந்த அற்புதத்தை இயேசு செய்து இருக்கமாட்டார், யாரோ ஒருவர் "நடந்ததை தவறாக புரிந்து கொண்டிருக்கிறார் என்றும்", அல்லது ஒரு உவமையாக சொல்லப்பட்டதை நடந்த ஒரு அற்புதமாக திரித்துக் கூறியிருக்கிறார்கள், அல்லது அதைப் போல ஏதாவது இருக்கும் என்று சொல்கிறார்கள். மற்றொருபுறம், சிலர் அந்த சம்பவத்தை வரவேற்கிறார்கள் ஏனென்றால், அவர்களுக்கு இந்த சம்பவமானது இயேசுவும் சில சந்தர்ப்பங்களில் காரணமில்லாமல் கோபப்படக் கூடிய சாதாரண ஒரு மனிதனே என்று காட்டுகிறது என்று நம்புகிறார்கள். எப்படியிருந்தாலும், அத்திமரத்தைப் பற்றிய புரிந்துக்கொள்ளுதல் அல்லது முழு அறிவு கிடைக்குமானால் இப்படிப்பட்ட தவறான விளக்கங்கள் தடுக்கப்பட்டிருக்கும். "அத்திப்பழக் காலமாயிரதாபடியால்" என்று மாற்கு எழுதுகிறார், ஏனென்றால் அது பஸ்கா பண்டிகைக்கு முன்னதாக, "நல்ல அத்திப்பழமாக முழுமையடைவதற்கு" ஏறக்குறைய ஆறு வாரங்களுக்கு முன் நடந்தது. உண்மையாக, இந்த வார்த்தைகளை அவர் சேர்ப்பதன் மூலம் தான் எதைப்பற்றிச் சொல்லுகிறார் என்பதை மாற்கு நன்கு அறிந்திருந்தார்.மார்ச் மாத இறுதியில் அத்தி இலைகள் காணப்படும் போது அவைகளோடு சேர்ந்து கொத்தாக சிறிய உருண்டை அத்திப்பழங்களும் தோன்றும், அதை அரபியர்கள் "டக்ஷ்" (taqsh) என்று அழைத்தனர். அவைகள் உண்மையான அத்திப் பழங்களுக்கு முன்னோடியாக தோன்றுபவை. இந்த "டக்ஷ்" என்ற பழங்களை விவசாயிகள் மற்றம் வழிப்போக்கர்கள் பசியாக இருக்கும் போது சாப்பிடுவார்கள். உண்மையான அத்திப்பழ காலத்தின் அத்திப்பழங்கள் உருவாகும் போது அவைகள் உதிர்ந்து விடும். ஒருவேளை அந்த அத்தி இலைகள் அந்த "டக்ஷ்களோடு" சேர்ந்து தோன்றவில்லை என்றால் அந்த மரமானது அந்த வருடத்தில் கனி கொடுக்காது என்று பொருள். எனவே, அந்த மரத்தில் அப்போதைக்கு பசியாற்றுவதற்கு ஏதாவது "டக்ஷ்" கிடைக்குமா என்று திரும்பிய நம்முடைய ஆண்டவருக்கு டக்ஷ் இல்லாமாலிருப்பது உண்மையான அத்திப்பழங்கள் வருவதற்கான காலத்திலும் அங்கே அத்திப்பழங்கள் இருக்காது என்பது தெளிவாக தெரிந்திருந்தது. எனவே அந்த மரத்தில் அத்தனை அழகான இலைத்தொகுப்புகள் இருந்தும் அந்த மரமானது ஒரு கனியற்ற, நம்பிக்கையற்ற மரமாகும்." (Bruce, Are The New Testament Documents Reliable? [Intervarsity Press; Downers Grove, Ill, fifth revised edition 1992], pp. 73-74; bold emphasis ours)
 
 
மற்றொரு குறிப்படப்படும் சுவிசேஷ அறிஞர் கிரெய்க் எஸ். கீனர் (Craig S. Keener) பின்வரும் ஆய்வை அளிக்கிறார்.
 
 
"பஸ்கா பண்டிகையின் நாட்களில் மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் தொடக்கத்தில் ஒலிவ மலைக்கு கிழக்கில் அத்தி மரங்கள் இலைகள் மிகுந்ததாக காணப்படும். வருடத்தின் இந்த சமயத்தில் அந்த அத்தி மரங்கள் பச்சையான தொடக்க அத்திப் பழங்களை மட்டும் கொண்டிருக்கும்.(அரபியர்கள் அவைகளை டக்ஷ் என்று அழைப்பார்கள்), அவைகள் ஏறக்குறை ஜூன் மாதத்தின்போது பழுக்கும் அல்லது அதற்கு முன்பே பச்சையான இலைகளை மட்டும் விட்டுவிட்டு உதிர்ந்து விடும். எனவே இலைகள் நிறைந்த ஒரு அத்திமரம் தொடக்க அத்திப் பழங்களை இழந்திருந்தால் அந்த வருடத்தில் அம்மரம் நிச்சயமாக கனிகளை கொடுக்காது". (Keener, A Commentary on the Gospel of Matthew [Wm. B. Eerdmans Publishing Company, July 1999], p. 504)
 
 
அவ்வாறாக, புதிய ஏற்பாட்டின் உண்மைக்கு எதிரான உதாரணம் என்று கருதப்பட்டவை உண்மையில் அதன் (புதிய ஏற்பாட்டின்) வரலாற்று ரீதியான நம்பகத்தன்மைக்கு வலிமையான விவாதமாக மாறுவதில் முடிவடைந்திருக்கிறது! இது சுவிசேஷ நூல்களின் உண்மைத் தன்மையை காட்டுகிறது, அதாவது எந்த இடத்தில் எந்த காலத்தில் நிகழ்ச்சிகள் நடந்தன என்பவற்றை "பஸ்கா பண்டிகையின் போது நடந்தது" என்றும், அத்திமரங்கள் ஒலிவ மலையின் கிழக்குப் பகுதியில் அமைந்திருந்தது என்றும் மிக நுட்பமான காரியங்களை படம்பிடித்துக் காட்டுகிறது. மேலும் இது மத்தேயு, மாற்கு சுவிசேஷ நூல்கள் இதர சுவிசேஷ நூல்களுக்கு முன்பாக எழுதப்பட்டது என்பதைக் காட்டுகிறது அல்லது எருசலேமின் வீழ்ச்சிக்கு முன் எழுதப்பட்டவைகள் என்று அதன் பழமைக்கு தகுந்த ஆதாரங்களை அளிப்பதாக இருக்கிறது. ஆனால் இந்த விளக்கங்களின் முழு விவரங்கள் எருசலேமின் வீழ்ச்சிக்குப் பிறகு எழுதும் ஆசிரியர்களுக்கு தெரியாமல் இருந்திருக்கிறது.

 
இன்னும் அதிகமாக, அத்தி மரத்தை சபித்து பட்டுப்போகச் செய்த இந்த காரியம் ஒரு உவமையாகவும் காட்டப்பட்டுள்ளது, இஸ்ரவேலுக்கு வரவிருக்கும் நியாயத்தீர்ப்புக் குறித்து எச்சரிக்கை செய்யும் ஒரு காரியமாகவும் இந்நிகழ்ச்சி உள்ளது. மெசியானிக் அறிஞர் டேவிட் ஸ்டெர்ன் (David Stern) கூறுகையில்:
 
 
'…இயேசு அந்த மரத்தை சபித்து பட்டுப்போகச் செய்ததற்கு காரணம், பசியாற்ற வந்தவருக்கு அது கனி தராமல் ஏமாற்றியது தான், இனி அந்த மரம் வேறு யாருக்கும் பயன்படப்போவதில்லை, எனவே, மேசியாவே அதற்கு சரியான தண்டனையைக் கொடுத்தார். இதனால், இயேசு இங்கே ஒரு தீர்க்கதரிசன நாடகத்தை உவமையாக நடத்துகிறார் (லூக் 13:6-9 ல் கூறியது போல ஒரு உவமை). "தனக் (Tanakh)" என்று யூதர்கள் அழைக்கும் பழைய ஏற்பாட்டில் எரேமியா 19ம் அதிகாரத்தில் "ஒரு களிமண் பாண்டத்தை" கொண்டுவந்து உடைக்கும் படி" தேவன் கூறுகிறார். இதே போல எசேக்கியேல் 4,5ம் அதிகாரங்களில் "எருசலேமின் ஒரு மாதிரியைச் செய்து அதை எரித்துப் போடும் படி" எசேக்கியேலுக்கு தேவன் கட்டளையிடுகிறார். இவைகள் எல்லாம் உவமைகளாகச் சொல்லி, செய்துக்காட்டிய எடுத்துக்காட்டுகளாகும். இதே போல ஒரு சம்பவத்தை புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலர் நடபடிகள் 21:10-11 வசனங்களில் காணலாம்.

 
கனி தரும் காலம் இல்லாத போதும் ஒரு அத்தி மரம் இலைகளோடு காணப்படுகிறது - அது தொலைவிலிருந்து பார்க்கக்கூடிய அளவிற்கு இலைகளோடு இருந்திருக்கிறது (வசனம் 12) - கனிகளுக்கான நிச்சயத்தை அளிப்பதாக இருந்தது. சாதரணமாக இஸ்ரவேல் தேசத்தில் அத்திப் பழங்களுக்கான தொடக்க காலம் ஜூன் ஆகும். ஆனால் பச்சையான பழங்களின் தொடக்க காலமானது (உன்னதப்பாட்டு 2:13) பஸ்கா பண்டிகைக்கு முன்பதாக இன்னும் வசந்தகால இலைகள் கிளைகளில் தோன்றுவதற்கு முன்பே தோன்றும்.

 
தேவனுடைய ஜனங்கள் நீதியென்னும் கனிகளை கொடுக்க வேண்டும் என்று இயேசு எதிர்பார்ப்பதும், மற்றும் கனி தராத கிளைகளை அக்கினியிலே போடப்படும் என்பதும் நமக்கு தெரியும் (மத் 7:16-20; 12:33; 13:4-9, 18-23; யோவான் 15:1-8). இவ்வாறாக அந்த அத்தி மரத்தை சபித்து பட்டுப்போகப் பண்ணியது என்பது இஸ்ரவேலுக்கு ஒரு எச்சரிப்பாகும். நீதிமொழிகள் 27:18ன் படி "அத்திமரத்தைக் காக்கிறவன் அதின் கனியைப் புசிப்பான்; தன் எஜமானைக் காக்கிறவன் கனமடைவான்". இயேசு இங்கே தன்னுடைய சீடர்களுக்கு தங்கள் எஜமானகிய தேவனுக்கு ஊழியம் செய்வது என்பது என்ன என்பதை கற்றுக் கொடுக்கிறார். அதாவது தேவனிடத்திலிருந்து வரும் விசுவாசத்தை உடையவர்களாக இருக்கவேண்டும் என கற்றுக்கொடுக்கிறார் (வசனம் 22). அப்படியிராவிட்டால் அவர்கள் உதிர்ந்துவிடுவார்கள். இயேசு எந்த ஒரு அற்புதத்தையும் தன்னுடைய கோபத்திலோ அல்லது மனம்போன போக்கிலோ ஒரு மாயவித்தைக்காரன் செய்வது போல செய்வதில்லை. அவருடைய ஒவ்வொரு அற்புதமும் ஒரு ஆவிக்குரிய முக்கியத்துவத்தை கொண்டிருக்கிறது.' (Stern, Jewish New Testament Commentary [Jewish New Testament Publications, Inc., Clarksville Maryland, Fifth edition 1996], pp. 95-96; bold emphasis ours)
 
 
பழைய ஏற்பாடு அத்திமரத்தை இஸ்ரவேல் மக்களுக்கு ஒப்பிட்டுக் அடிக்கடி குறிப்பிடுகிறது.
 
 
"அவர்களை முற்றிலும் அழித்துப் போடுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; திராட்சச்செடியிலே குலைகள் இராது, அத்திமரத்திலே பழங்கள் இராது, இலையும் உதிரும், நான் அவர்களுக்குக் கொடுத்தது அவர்களை விட்டுத் தாண்டிப் போகும் என்று சொல்." எரேமியா 8:13

 
கர்த்தர் எங்களுக்குப் பாபிலோனிலும் தீர்க்கதரிசிகளை எழுப்பினார் என்று சொல்லுகிறீர்கள். ஆனால் தாவீதின் சிங்காசனத்தில் உட்கார்ந்திருக்கிற ராஜாவைக் குறித்தும், உங்களோடேகூடச் சிறையிருப்பில் புறப்பட்டுப்போகாமல் இந்த நகரத்தில் குடியிருக்கிற உங்கள் சகோதரராகிய எல்லா ஜனங்களைக் குறித்தும், இதோ, நான் பட்டயத்தையும், பஞ்சத்தையும், கொள்ளை நோயையும் அவர்களுக்குள் அனுப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; புசிக்கத்தகாத கெட்டுப்போன அத்திப் பழங்களுக்கு அவர்களை ஒப்பாக்குவேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். அவர்கள் என் வார்த்தைகளைக் கேளாமற்போனபடியால், நான் அவர்களைப் பட்டயத்தாலும், பஞ்சத்தாலும் கொள்ளைநோயாலும் பின்தொடர்ந்து, அவர்களைப் பூமியிலுள்ள எல்லா ராஜ்யங்களிலும் அலைந்து திரிகிறவர்களாகவும், நான் அவர்களைத் துரத்துகிற எல்லா ஜாதிகளிடத்திலும் சாபமாகவும், பாழாகவும், ஈசலிடுதலுக்கிடமாகவும், நிந்தையாகவும் வைப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார். நான் உங்களிடத்திற்குத் தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரரை ஏற்கனவே அனுப்பிக்கொண்டேயிருந்தும், நீங்கள் செவிகொடாமற்போனீர்களே என்று கர்த்தர் சொல்லுகிறார். எரேமியா 29: 15-19

 
வனாந்தரத்தில் திராட்சக்குலைகளைக் கண்டுபிடிப்பதுபோல இஸ்ரவேலைக் கண்டுபிடித்தேன்; அத்திமரத்தில் முதல்தரம் பழுத்த கனிகளைப் போல உங்கள் பிதாக்களைக் கண்டுபிடித்தேன்; ஆனாலும் அவர்கள் பாகால்பேயோர் அண்டைக்குப் போய், இலச்சையானதற்குத் தங்களை ஒப்புவித்து, தாங்கள் நேசித்தவைகளைப் போலத் தாங்களும் அருவருப்புள்ளவர்களானார்கள். எப்பிராயீமர் வெட்டுண்டுபோனார்கள்; அவர்கள் வேர் உலர்ந்துபோயிற்று, கனிகொடுக்கமாட்டார்கள்; அவர்கள் பிள்ளைகளைப் பெற்றாலும், அவர்களுடைய கர்ப்பத்தின் பிரியமான கனிகளை அதம் பண்ணுவேன். ஓசியா 9: 10,16

 
ஐயோ! உஷ்ணகாலத்துக் கனிகளைச் சேர்த்து, திராட்சப்பழங்களை அறுத்தபின்பு வருகிறவனைப்போல் இருக்கிறேன்; புசிக்கிறதற்கு ஒரு திராட்சக்குலையும் என் ஆத்துமா இச்சித்தமுதல் அறுப்பின் கனியும் இல்லை (none of the early figs that I crave). தேசத்தில் பக்தியுள்ளவன் அற்றுப்போனான்; மனுஷரில் செம்மையானவன் இல்லை; அவர்களெல்லாரும் இரத்தஞ்சிந்தப் பதிவிருக்கிறார்கள்; அவனவன் தன்தன் சகோதரனை வலையிலே பிடிக்க வேட்டையாடுகிறான். பொல்லாப்புச் செய்ய அவர்கள் இரண்டு கைகளும் நன்றாய்க் கூடும்; அதிபதி கொடு என்கிறான்; நியாயாதிபதி கைக்கூலி கேட்கிறான்; பெரியவன் தன் துராசையைத் தெரிவிக்கிறான்; இவ்விதமாய்ப் புரட்டுகிறார்கள். அவர்களில் நல்லவன் முட்செடிக்கொத்தவன், செம்மையானவன் நெரிஞ்சிலைப்பார்க்கிலும் கடுங்கூர்மையானவன்; உன் காவற்காரர் அறிவித்த உன் தண்டனையின் நாள் வருகிறது; இப்பொழுதே அவர்களுக்குக் கலக்கம் உண்டு. மீகா 7:1-4

 
உன் அரண்களெல்லாம் முதல் பழுக்கும் பழங்களுள்ள அத்திமரங்களைப் போல் இருக்கும்; அவைகள் குலுக்கப்பட்டால் அவைகளின் பழம் தின்கிறவன் வாயிலே விழும். நாகூம் 3:12
 
 
 
எனவே மேலேயுள்ள மேற்க்கோள்கள் இயேசு ஏன் அத்திமரத்திற்கு அப்படி செய்தார் என்பதை விளக்குகிறது. பழைய ஏற்பாடு கூறுவது போல யேகோவா தேவன் குறிப்பாக இஸ்ரேவேல் ஒரு கனிகொடுக்கும் ஒரு மரம், மலடோ பட்டுப் போனதோ அல்ல என்பதற்கான அடையாளத்தை தேடுகிறார், அதையே கிறிஸ்துவும் தேடுகிறவராக வந்தார். எனவே ஆவிக்குரிய ரீதியில் இஸ்ரவேல் ஜீவனோடுதான் இருக்கிறது மேலும் தன்னுடைய தேவனை திருப்தி படுத்தக் கூடிய கனிகளை கொடுப்பதற்கு ஆயத்தமாயிருக்கிறது என்று வெளிப்படுத்த வேண்டிய தொடக்க அத்திப்பழங்களை (ஒசியா 9:10; மீகா 7: 1) காண்பதற்கு பதிலாக தேசம் ஆவிக்குரிய ரீதியில் மலடாகவும் மரித்தும் இருப்பதை கிறிஸ்து கண்டார். இஸ்ரவேலின் ஆவிக்குரிய மலட்டுத்தன்மையின் காரணமாக தேவன் தன்னுடைய அத்தி மரங்களை, தன்னுடைய திராட்சை செடிகளை வெட்டி அக்கினியில் சுட்டெரித்துப்போடுகிறார்.
 
 
 
"அப்பொழுது அவர் ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவன் தன் திராட்சத் தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான்; அவன் வந்து அதிலே கனியைத் தேடினபோது ஒன்றுங் காணவில்லை. அப்பொழுது அவன் தோட்டக்காரனை நோக்கி: இதோ, மூன்று வருஷமாய் இந்த அத்திமரத்திலே கனியைத் தேடிவருகிறேன்; ஒன்றையுங் காணவில்லை, இதை வெட்டிப்போடு, இது நிலத்தையும் ஏன் கெடுக்கிறது என்றான். அதற்கு அவன்: ஐயா, இது இந்தவருஷமும் இருக்கட்டும்; நான் இதைச் சுற்றிலுங் கொத்தி, எருப்போடுவேன், கனிகொடுத்தால் சரி, கொடாவிட்டால், இனிமேல் இதை வெட்டிப்போடலாம் என்று சொன்னான் என்றார்." லூக்கா 13:6-9

 
"பின்பு அவர் உவமைகளாய் அவர்களுக்குச் சொல்லத்தொடங்கினதாவது: ஒரு மனுஷன் ஒரு திராட்சத்தோட்டத்தை உண்டாக்கி, அதைச் சுற்றிலும் வேலியடைத்து, இரசத்தொட்டியை உண்டுபண்ணி, கோபுரத்தையும் கட்டி, தோட்டக்காரருக்கு அதைக் குத்தகையாக விட்டு, புறத்தேசத்துக்குப் போயிருந்தான். தோட்டக்காரரிடத்தில் திராட்சத்தோட்டத்துக் கனிகளில் தன் பாகத்தை வாங்கிக்கொண்டு வரும்படி, பருவக்காலத்திலே அவர்களிடத்தில் ஒரு ஊழியக்காரனை அனுப்பினான். அவர்கள் அவனைப்பிடித்து, அடித்து, வெறுமையாய் அனுப்பிவிட்டார்கள். பின்பு வேறொரு ஊழியக்காரனை அவர்களிடத்தில் அனுப்பினான்; அவர்கள் அவன்மேல் கல்லெறிந்து, தலையிலே காயப்படுத்தி, அவமானப்படுத்தி, அனுப்பிவிட்டார்கள். மறுபடியும் வேறொருவனை அனுப்பினான்; அவனை அவர்கள் கொலைசெய்தார்கள். வேறு அநேகரையும் அனுப்பினான்; அவர்களில் சிலரை அடித்து, சிலரைக் கொன்றுபோட்டார்கள். அவனுக்குப்பிரியமான ஒரே குமாரன் இருந்தான்; என் குமாரனுக்கு அஞ்சுவார்களென்று சொல்லி, அவனையும் கடைசியிலே அவர்களிடத்தில் அனுப்பினான். தோட்டக்காரரோ: இவன் சுதந்தரவாளி, இவனைக் கொலைசெய்வோம் வாருங்கள்; அப்பொழுது சுதந்தரம் நம்முடையதாகும் என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டு; அவனைப் பிடித்துக் கொலைசெய்து, திராட்சத்தோட்டத்துக்குப் புறம்பே போட்டுவிட்டார்கள். அப்படியிருக்க, திராட்சத்தோட்டத்துக்கு எஜமான் என்ன செய்வான்? அவன் வந்து அந்தத் தோட்டக்காரரைச் சங்கரித்து, திராட்சத்தோட்டத்தை மற்றவர்களுக்கு ஒப்புக்கொடுப்பான் அல்லவா? " மாற்கு 12:1-9

 
"எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளும்வண்ணமாக நான் எத்தனைதரமோ உன் பிள்ளைகளைக் கூட்டிச்சேர்த்துக்கொள்ள மனதாயிருந்தேன்; உங்களுக்கோ மனதில்லாமற்போயிற்று. இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும். கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று நீங்கள் சொல்லுமளவும் இதுமுதல் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். " மத்தேயு 23:37-39

 
"அவர் சமீபமாய் வந்தபோது நகரத்தைப்பார்த்து, அதற்காகக் கண்ணீர்விட்டழுது, உனக்குக் கிடைத்த இந்த நாளிலாகிலும் உன் சமாதானத்துக்கு ஏற்றவைகளை நீ அறிந்திருந்தாயானால் நலமாயிருக்கும், இப்பொழுதோ அவைகள் உன் கண்களுக்கு மறைவாயிருக்கிறது. உன்னைச் சந்திக்குங்காலத்தை நீ அறியாமற்போனபடியால், உன் சத்துருக்கள் உன்னைச் சூழ மதில்போட்டு, உன்னை வளைந்துகொண்டு, எப்பக்கத்திலும் உன்னை நெருக்கி, உன்னையும் உன்னிலுள்ள உன் பிள்ளைகளையும் தரையாக்கிப்போட்டு, உன்னிடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்குச் செய்யும் நாட்கள் வரும் என்றார்." லூக்கா 19:41-44
 
 
 
இயேசு அத்தி மரத்தை சபித்ததின் அர்த்தம் இதுதான், ஒரு அடையாளமாக தேவன் தன்னுடைய உடன்படிக்கையின் ஜனங்களிடத்தில் ஆவிக்குரிய கனிகளை தேடி வந்தார் ஆனால் ஒன்றையும் காணாத அவர், அவர்கள் மீது தண்டனையை கொண்டு வருவார்.

 
எனவே அவர் அத்திமரத்தை சபித்ததில் எந்த தவறும் கிடையாது அதோடு இந்த செயல் அவருடைய பரிபூரண தெய்வீகத் தன்மையை குறைப்பதாகவும் இல்லை.

 
 

 
© Answering Islam, 1999 - 2009. All rights reserved.
 
 
 

 

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்