இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Tuesday, March 24, 2009

[ஈஸா குர்-ஆன் - Isa Koran] பன்றி மீது ஷப்பீர் அலி அவர்களின் அதீத விருப்பம் பற...

 

பன்றி மீது ஷப்பீர் அலி அவர்களின் அதீத விருப்பம் பற்றிய ஆய்வு

 
"ப‌ன்றி க‌றியை உண்ணுத‌ல்" க‌ட்டுரைக்கு கிறிஸ்த‌வ‌ ப‌தில்
 

An Examination of Shabir Ally's Fascination with Pigs

 

Being a Christian Response to his "Eating Pork" Article

 
[பாகம் 1]
 

கிறிஸ்தவர்கள் பன்றியின் மாமிசம் உண்ணக்கூடாது என்பதை நிருபிப்பதற்காக ஷப்பீர் அலி அவர்கள் ஒரு கட்டுரையை எழுதியிருக்கிறார்கள். தன் வாதத்தை நிருபிப்பதற்காக அவருக்கு பல விவரங்களை மறைக்கவேண்டி வந்துள்ளது, மற்றும் வசனங்கள் சொல்லப்பட்ட சூழ்நிலைக்கு வெளியே கொண்டு வந்து பொருள் கூறவேண்டி வந்துள்ளது. ஷப்பீர் அலி அவர்களின் தவறான வழிமுறையினாலும் மற்றும் தவறான ஆய்வினாலும், அவர் கொடுத்த முடிவுரையைக் கண்டு, பைபிளின் வசனங்களுக்கு தவறான பொருளை அவர் கொடுத்ததைக் கண்டு நாம் வியப்படையத் தேவையில்லை.

 
ஷப்பீர் எழுதுகிறார்:

பைபிளும் குர்‍ஆனும் பன்றியின் மாமிசம் சாப்பிடுவதை தடை செய்துள்ளன. இந்த தடையை இஸ்லாமியர்கள் அறிந்துவைத்துள்ளனர், மற்றும் அதனை தீவிரமாக கடைபிடுத்தும் வருகின்றனர். ஆனால், பைபிளை ப‌டிக்கும் அனேகர், இந்த‌ விவ‌ர‌ம் எங்கே உள்ள‌து என்று கூட‌ தெரிவ‌தில்லை என்றுச் சொல்கிறார்கள்.
 
பதில்:

பைபிள் "பன்றியின் மாமிசம்" உண்பதை தடை செய்த விவரத்தை ஷப்பீர் அலி அவர்கள் பொதுவாக எல்லாருக்கும் எல்லா காலத்திற்கும் பைபிள் சொன்னதாக கூறியுள்ளார். பைபிளில் உள்ள அனேக புத்தகங்களில் ஒரு புத்தகத்தை நாம் குறிப்பிடுவதற்கு அல்லது ஒரு பகுதியை குறிப்பிடுவதற்கு பொதுவாக "பைபிள்" என்று நாம் சொல்கிறோம். ஆனால், பன்றியின் மாமிசம் உண்பதைப் பற்றிய இந்த விவரமானது, பைபிளில் ஒரு பகுதியில் சொல்லப்பட்ட விவரமாகும். இதன் பொருள் என்னவென்றால், நாம் எழுதும் போது சரியான வார்த்தைகளை சரியான இடத்தில் பயன்படுத்தவேண்டும். நாம் எச்சரிக்கையாக இல்லாத பட்சத்தில், மக்கள் தவறாக புரிந்துக்கொள்ள வாய்ப்பு உண்டாகும். அதாவது பைபிள் ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட மக்களுக்குச் சொன்ன கட்டளைகளை பைபிள் முழுவதும் சொல்லப்பட்டுள்ளது என்று மக்கள் தவறாக புரிந்துக்கொள்ளக்கூடும்.

நாம் முழூ பைபிளையும் சரியாக படித்தால், இந்த தடையானது ஒரு குறிப்பிட்ட மக்களுக்காக கொடுக்கப்பட்டது என்பதைக் காணலாம். இந்த தடையானது "எல்லா மக்களுக்கும், எல்லா காலத்தில் வாழ்பவர்களுக்கும்" விதிக்கப்பட்டதல்ல. இந்த விவரம் பற்றிய அதிகபடியான விவரங்களை கீழே காணலாம்.

பன்றி தடைப் பற்றிய வசனம் பைபிளில் எங்குள்ளது என்பதுப் பற்றி, பைபிளைப் படிக்கும் அனேகருக்கு தெரியாமல் இருக்கிறது என்று ஷப்பீர் அலி சொல்கிறார், மற்றும் இதனை எந்த காரணத்திற்காக குறிப்பிடுகிறார் என்பது நமக்கு தெரியாது. ஆனால், இதே போல, பெரும்பான்மையான இஸ்லாமியர்களுக்கு "இஸ்லாமின் கட்டளைகளாகிய" சுன்னத்து செய்தல் (விருத்தசேதனம்) மற்றும் தினமும் ஐந்து வேளை நமாஜ் (தொழுகை) செய்தல் போன்ற கட்டளைகள் எங்கு உள்ளது என்பதும் தெரியாமல் இருக்கிறது என்பதை இங்கு குறிப்பிடவேண்டும். இஸ்லாமியர்களில் அனேகருக்கு சுன்னத்துப் பற்றி மற்றும் ஐந்து வேளை தொழுகை பற்றி குர்‍ஆன் எந்த வசனத்தில் சொல்கிறது என்று தெரியாது. இந்த இரண்டு விவரங்கள் பற்றிய அறியாமையில் இஸ்லாமியர்கள் இருக்கிறார்கள் என்று நாங்கள் அவர்கள் மீது குற்றம் சுமத்தவில்லை, ஏனென்றால், இந்த இரண்டு கட்டளைகளும் குர்‍ஆனில் இல்லை என்பது தான் உண்மை.
 
ஷப்பீர் எழுதுகிறார்:

லேவியராகமம் என்ற புத்தகத்தில், 11ம் அதிகாரத்தில் 7ம் வசனத்தில் "நம்பிக்கையாளர்களுக்கு பன்றி ஒரு சுத்தமில்லாத மிருகம்" என்று தேவன் கூறியுள்ளார். மறுபடியும், 8ம் வசனத்தில், தேவன் கூறுகிறார்: "இவைகளின் மாம்சத்தைப் புசிக்கவும், இவைகளின் உடல்களைத் தொடவும் வேண்டாம்; இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது". இதே கட்டளை மறுபடியும் உபாகமம் 14: 7-8ம் வசனத்திலும் கொடுக்கப்பட்டுள்ளது. பிறகு, ஏசாயா 65:2-4, 66:17ம் வசனத்திலும் பன்றியின் மாமிசம் உண்பவர்களைப் பற்றி மிகவும் கடுமையான எச்சரிக்கையை தேவன் கொடுத்துள்ளார்.
 
பதில்:

ஒரு முக்கியமான விவரம் என்னவென்றால், ஷப்பீர் அவர்கள் பன்றியைப் பற்றிய தடையைப் பற்றிய விவரங்களிலேயே நிலைக் கொண்டுவிட்டார், ஆனால், அந்த தடைக்குப் பிறகு லேவியராகமம் 11ம் அதிகாரத்தில் என்ன சொல்லியிருக்கிறது என்பதைக் காண தவறிவிட்டார்.
 
கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: நீங்கள் இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால், பூமியிலிருக்கிற சகல மிருகங்களிலும் நீங்கள் புசிக்ககத்தக்க ஜீவ ஜந்துக்கள் யாதெனில்: மிருகங்களில் விரிகுளம்புள்ளதாயிருந்து, குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருக்கிறதும் அசைபோடுகிறதுமானவைகளையெல்லாம் நீங்கள் புசிக்கலாம். ஆனாலும், அசைபோடுகிறதும் விரிகுளம்புள்ளதுமானவைகளில் ஒட்டகமானது அசைபோடுகிறதாயிருந்தாலும், அதற்கு விரிகுளம்பில்லாதபடியால், அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும். லேவியராகமம் 11:1-4
 
ஷப்பீர் அலி அவர்கள் உபாகமத்திலிருந்து வசனத்தை மேற்கோளாக காட்டினாலும், அந்த வசனத்திற்கு பிறகு என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதை காட்ட தவறிவிட்டார்.
 
அருவருப்பானதொன்றையும் புசிக்க வேண்டாம். நீங்கள் புசிக்கத்தகும் மிருகங்களாவன: மாடும், செம்மறியாடும், வெள்ளாடும், மானும், வெளிமானும், கலைமானும், வரையாடும், புள்ளிமானும், சருகுமானும், புல்வாயுமே. மிருகங்களில் விரிகுளம்புள்ளதாயிருந்து, குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருக்கிறதும், அசைபோடுகிறதுமான சகல மிருகங்களையும் நீங்கள் புசிக்கலாம்; அசைபோடுகிறவைகளிலும், விரிகுளம்புள்ளவைகளிலும், நீங்கள் புசிக்கத்தகாதவைகள் எவையென்றால்: ஒட்டகமும், முசலும், குழிமுசலுமே; அவைகள் அசைபோட்டும் அவைகளுக்கு விரிகுளம்பில்லை; அவைகள் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக. (உபாகமம் 14:3-7)
 
நம்முடைய தற்போதைய விவாதத்திற்கும், ஒட்டகத்தின் மாமிசம் உண்ணக்கூடாது என்ற தடைக்கும் சம்மந்தமென்ன என்று இக்கட்டுரையை படிக்கும் வாசகர்கள் வியக்கலாம். இதற்கு பதில், ஒட்டக மாமிசம் உண்ணலாம் என்றும், ஒட்டகங்களை அல்லாஹ்விற்கு பலி இடலாம் என்றுச் சொல்லி, அனுமதி அளிக்கும் கீழ்கண்ட வசனங்கள் தான் காரணம்.
 
இன்னும் கால்நடைகளில் சில சுமை சுமப்பதற்கும், சில உணவுக்காகவும் உள்ளன. அல்லாஹ் உங்களுக்கு அளித்ததிலிருந்து உண்ணுங்கள் - நீங்கள் ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்- நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான். (நபியே! அம்மக்களிடம்) "கால்நடைகளில் எட்டு வகைகள் உள்ளன - செம்மறி ஆட்டில் (ஆண், பெண்) இரு வகை, வெள்ளாட்டில் (ஆண், பெண்) இரு வகை, அவன் (அல்லாஹ்) ஆண் இரண்டையும் ஹராமாக்கி விட்டானா? அல்லது பெட்டை இரண்டையும் ஹராமாக்கி விட்டானா? அல்லது அவ்விரு வகைகளிலுமுள்ள பெண்களின் கர்ப்பங்களில் உள்ளவற்றையா (அவன் தடுத்திருக்கிறான்?) நீங்கள் உண்மை கூறுபவர்களாக இருந்தால், (இதனை) ஆதாரத்துடன் எனக்கு அறிவியுங்கள்" என்று கேட்பீராக. இன்னும், "ஒட்டகையில் (ஆண், பெண்) இரு வகை, மாட்டிலும் (பசு, காளை) இரு வகையுண்டு - இவ்விரு வகைகளிலுள்ள ஆண்களையா அல்லது பெட்டைகளையா அல்லது இவ்விரு வகையிலுள்ள பெட்டைகளின் கர்ப்பங்களில் உள்ளவற்றையா (இறைவன்) தடுத்திருக்கிறான். இவ்வாறு அல்லாஹ் கட்டளையிட்ட(தாகக் கூறுகிறீர்களே, அச்)சமயம் நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா?" என்றும் (நபியே!) நீர் கேளும் - மக்களை வழி கெடுப்பதற்காக அறிவில்லாமல் அல்லாஹ்வின் மீது பொய்க் கற்பனை செய்பவனைவிட அதிக அநியாயக்காரன் யார்? நிச்சயமாக அல்லாஹ் இத்தகைய அநியாயக்காரக் கூட்டத்தினருக்கு நேர்வழி காட்டமாட்டான். (நபியே!) நீர் கூறும்; "தானாக இறந்தவைகளையும் வடியும் இரத்தத்தையும் பன்றியின் மாமிசத்தையும் தவிர உண்பவர்கள் புசிக்கக் கூடியவற்றில் எதுவும் தடுக்கப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்டதில் நான் காணவில்லை" - ஏனெனில் இவை நிச்சயமாக அசுத்தமாக இருக்கின்றன. அல்லது அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் சொல்லி அறுக்கப்பட்டது பாவமாயிருப்பதனால் - (அதுவும் தடுக்கப்பட்டுள்ளது) - ஆனால் எவரேனும் நிர்ப்பந்திக்கபட்டு, வரம்பை மீறாமலும் பாவம் செய்ய நினைக்காமலும் புசித்துவிட்டால் - (அவர்மீது குற்றமாகாது ஏனெனில்) நிச்சயமாக உங்கள் இறைவன் மிக்க மன்னிப்போனாகவும், பெருங் கருணையுடையோனுமாகவும் இருக்கின்றான். நகத்தையுடைய அனைத்தையும் யூதர்களுக்கு நாம் ஹராமாக்கியிருந்தோம்; ஆடு, மாடு ஆகியவற்றில் - அவற்றின் முதுகுகளிலோ அல்லது வயிறுகளிலோ அல்லது எலும்புகளுடன் கலந்தோ இருக்கும் கொழுப்பைத் தவிர மற்ற அவற்றின் கொழுப்பையும் ஹராமாக்கினோம் - அவர்கள் அக்கிரமம் செய்த காரணத்தினால் அவர்களுக்கு இதனை நாம் கூலியாக கொடுத்தோம் - நிச்சயமாக நாம் உண்மையே கூறுகிறோம். நபியே!) இவர்கள் உம்மைப் பொய்ப்பிப்பார்களானால், "உங்களுடைய இறைவன் விசாலமான கருணையுடையவன்தான்; (எனினும்) குற்றம் செய்த கூட்டத்தாரைவிட்டு அவன் தண்டனை தடுக்கப்படமாட்டாது. (6:142-147)

இன்னும் (குர்பானிக்கான) ஒட்டகங்கள்; அவற்றை உங்களுக்காக அல்லாஹ்வின் அடையாளங்களிலிருந்தும் நாம் ஆக்கியிருக்கிறோம்; உங்களுக்கு அவற்றில் மிக்க நன்மை உள்ளது எனவே (அவை உரிய முறையில்) நிற்கும் போது அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயரைச் சொல்(லி குர்பான் செய்)வீர்களாக் பிறகு, அவை தங்கள் பக்கங்களின் மீது சாய்ந்து கீழே விழுந்(து உயிர் நீத்)த வின் அவற்றிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; (வறுமையிலும் கையேந்தாமல் இருப்பதைக் கொண்டு) திருப்தியாய் இருப்போருக்கும், இரப்போருக்கும் உண்ணக் கொடுங்கள் இவ்விதமாகவே, நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டு அவற்றை உங்களுக்கு வசப்படுத்திக் கொடுத்திருக்கிறோம். (22:36)
 
ஹதீஸ்கள் கீழ் கண்டவிதமாக சொல்கின்றன:
 
பாகம் 2, அத்தியாயம் 25, எண் 1551

அனஸ்(ரலி) அறிவித்தார்.

நாங்கள் நபி(ஸல்) அவர்களோடு இருந்தோம். அவர்கள் மதீனாவில் நான்கு ரக்அத்கள் லுஹர் தொழுதார்கள். துல் ஹுலைஃபாவில் இரண்டு ரக்அத்கள் அஸர் தொழுதார்கள். பிறகு விடியும் வரை அங்கேயே தங்கிவிட்டு மீண்டும் வாகனத்தின் மீதமர்ந்து பைதா எனுமிடத்தில் வாகனம் நிலைக்கு வந்தபோது 'அல்ஹம்துலில்லாஹ், ஸுப்ஹானல்லாஹ், அல்லாஹு அக்பர்' எனக் கூறினார்கள். பிறகு ஹஜ், உம்ரா இரண்டிற்காகவும் இஹ்ராம் அணிந்து, தல்பியா கூறினார். நாங்கள் மக்கா வந்து (உம்ராவை முடித்த போது) இஹ்ராமிலிருந்து விடுபடும்படி மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். மக்கள் துல்ஹஜ் பிறை எட்டு அன்று ஹஜ்ஜுக்காக மீண்டும் இஹ்ராம் அணிந்தார்கள்.

நபி(ஸல்) அவர்கள் ஒட்டகங்களை நிற்கவைத்துத் தம் கைகளாலேயே அறுத்தார்கள். இன்னும் நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் பெருநாளில் இரண்டு கருப்பு நிறம் கலந்த வெள்ளை நிற ஆடுகளை அறுத்தார்கள்.

பாகம் 2, அத்தியாயம் 25, எண் 1716

அலீ(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (குர்பானி ஒட்டகங்களை பலியிடுவதற்கு) என்னை நியமித்தார்கள். பிறகு அவற்றின் இறைச்சிகளைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே செய்தேன். அவற்றின் சேணங்களையும் தோல்களையும் பங்கிட்டுவிடுமாறும் எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே செய்தேன்.

இன்னொரு அறிவிப்பில் 'பலிப் பிராணிகளை கவனித்துக் கொள்ளுமாறும் அவற்றை அறுப்பதற்குக் கூலியாக அவற்றில் எதையும் கொடுக்கக்கூடாது என்றும் எனக்கு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்" என அலீ(ரலி) கூறினார் என உள்ளது.
 
யேகோவா தேவன் ஒட்டக மாமிசம் தடை செய்தார், ஆனால், அல்லாஹ் அதனை சாப்பிட அனுமதியும் அளித்து, தனக்காக ஒட்டகங்களை பலியிடவும் அனுமதியளித்தார்.

இன்னும் தண்ணீரில் வசிக்கும் குறிப்பிட்ட உயிரிணங்களை சாப்பிடுவதை தவ்ராத் (ஐந்தாகமங்கள் - Torah) தடை செய்துள்ளது, அதாவது சிறகும் செதிள்களும் இல்லாதவைகளை உண்ணக்கூடாது என்றுச் சொல்கிறது (லேவியராகமம் 11:9-12; உபாகமம் 14:9-10). ஆனால், இஸ்லாமில் எல்லா நீர் வாழும் உயிரிணங்களை உண்ண அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
 
உங்களுக்கும் (இதர) பிரயாணிகளுக்கும் பலன் கிடைக்கும் பொருட்டு (நீங்கள் இஹ்ராம் கட்டியிருந்தாலும்) கடலில் வேட்டையாடுவதும், அதைப் புசிப்பதும் உங்களுக்கு ஹலாலாக - ஆகுமானதாக ஆக்கப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் இஹ்ராம் கட்டியிருக்கும் காலமெல்லம் தரையில் வேட்டையாடுவது உங்கள் மீது ஹராமாக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள், அவனிடத்திலேயே நீங்கள் ஒன்று சேர்க்கப்படுவீர்கள். (குர்‍ஆன் 5:96)

நீங்கள் கடலிலிருந்து நய(மும், சுவையு)முள்ள மீன் போன்ற மாமிசத்தை புசிப்பதற்காகவும், நீங்கள் அணிந்து கொள்ளக்கூடிய ஆபரணத்தை அதிலிருந்து நீங்கள் வெளிப்படுத்தவும் அவன் தான் அதனையும் (கடலையும்) வசப்படுத்தித் தந்தான்; இன்னும் அதில் தண்ணீரைப் பிளந்து கொண்டு செல்லும் கப்பலை நீங்கள் காணுகிறீர்கள்; (பல்வேறு இடங்களுக்குச் சென்று) அவன் அருட்கொடையை நீங்கள் தேடவும், நீங்கள் நன்றி செலுத்தும் பொருட்டும் (அதை) இவ்வாறு வசப்படுத்திக் கொடுத்தான். (குர்‍ஆன் 16:14)
 
இமாம் மாலிக் கீழ்கண்ட விதமாக பதிவு செய்துள்ளார்:
 
Yahya related to me from Malik from Safwan ibn Sulaym from Said ibn Salama of the Bani Azraq from al-Mughira ibn Abi Burda of the tribe of Bani Abd ad-Dar that he had heard Abu Hurayra speak about a man who came to the Messenger of Allah, may Allah bless him and grant him peace, and said, "Messenger of Allah! We travel by sea and we do not carry much fresh water with us so if we do wudu with it we go thirsty. Can we do wudu with seawater?" The Messenger of Allah, may Allah bless him and grant him peace, replied, "Its water is pure, and its dead creatures are halal." (Malik's Muwatta, Book 2, Number 2.3.12)

Yahya related to me from Malik from Nafi that Abd ar-Rahman ibn Abi Hurayra asked Abdullah ibn Umar about eating what was cast up by the sea and he forbade him to eat it. Then Abdullah turned and asked for a Qur'an, and read, "The game of the sea and its flesh are halal for you." Nafi added, "Abdullah ibn Umar sent me to Abdar-Rahman Ibn Abi Hurayra to say that there was no harm in eating it." (Malik's Muwatta, Book 25, Number 25.3.9)

Yahya related to me from Malik from Abu'z-Zinad from Abu Salama ibn Abd ar-Rahman that some people from al-Jar came to Marwan ibn al-Hakam and asked him about eating what was cast up by the sea. He said, "There is no harm in eating it." Marwan said, "Go to Zayd ibn Thabit and Abu Hurayra and ask them about it, then come to me and tell me what they say." They went to them and asked them, and they both said, "There is no harm in eating it " They returned to Marwan and told him. Marwan said, "I told you."

Malik said that there was no harm in eating fish caught by magians, because the Messenger of Allah, may Allah bless him and grant him peace, said, "In the sea's water is purity, and that which is dead in it is halal. "

Malik said, "If it is eaten when it is dead, there is no harm in who catches it." (Malik's Muwatta, Book 25, Number 25.3.12)
 
கடைசியாக, ஷப்பீர் அவர்கள் ஏசாயாவிலிருந்து பன்றி மாமிசம் பற்றி ஒருமேற்கோளை காட்டினாரே தவிர, அந்த ஏசாயா புத்தகத்தில் அவ்வசனத்தைச் சுற்றியுள்ள இதர விவரங்களை படிக்க தவறிவிட்டார். ஏசாயாவில் கீழ்கண்ட விதமாக உள்ளது:
 
கர்த்தர் சொல்லுகிறார்: நீங்கள் நியாயத்தைக் கைக்கொண்டு, நீதியைச் செய்யுங்கள்; என் இரட்சிப்பு வரவும், என் நீதி வெளிப்படவும் சமீபமாயிருக்கிறது. இப்படிச் செய்கிற மனுஷனும், இதைப் பற்றிக்கொண்டிருந்து, ஓய்வுநாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடி ஆசரித்து, ஒரு பொல்லாப்பையும் செய்யாதபடி தன் கையைக் காத்துக்கொண்டிருக்கிற மனுபுத்திரனும் பாக்கியவான். கர்த்தரைச் சேர்ந்த அந்நியபுத்திரன்: கர்த்தர் என்னைத் தம்முடைய ஜனத்தைவிட்டு முற்றிலும் பிரித்துப்போடுவாரென்று சொல்லானாக, அண்ணகனும்: இதோ, நான் பட்டமரமென்று சொல்லானாக. என் ஓய்வுநாட்களை ஆசரித்து, எனக்கு இஷ்டமானவைகளைத் தெரிந்துகொண்டு, என் உடன்படிக்கையைப்பற்றிக்கொள்ளுகிற அண்ணகர்களைக் குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: நான் அவர்களுக்கு என் ஆலயத்திலும், என் மதில்களுக்குள்ளும் குமாரருக்கும் குமாரத்திகளுக்குமுரிய இடத்தையும் கீர்த்தியையும்பார்க்கிலும், உத்தம இடத்தையும் கீர்த்தியையும் கொடுப்பேன், என்றும் அழியாத நித்திய நாமத்தை அவர்களுக்கு அருளுவேன். கர்த்தரைச் சேவிக்கவும், கர்த்தருடைய நாமத்தை நேசிக்கவும், அவருக்கு ஊழியக்காரராயிருக்கவும், அவரைச் சேர்ந்து, ஓய்வுநாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடி ஆசரித்து, என் உடன்படிக்கையைப் பற்றிக்கொண்டிருக்கிற அந்நியபுத்திரர் அனைவரையும், நான் என் பரிசுத்த பர்வதத்துக்குக் கொண்டுவந்து: என் ஜெபவீட்டிலே அவர்களை மகிழப்பண்ணுவேன்; அவர்களுடைய சர்வாங்கதகனங்களும், அவர்களுடைய பலிகளும், என் பலிபீடத்தின்மேல் அங்கிகரிக்கப்பட்டிருக்கும்; என்னுடைய வீடு சகல ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும். இஸ்ரவேலில் தள்ளுண்டவர்களைச் சேர்க்கிற கர்த்தராகிய ஆண்டவர்: அவனிடத்தில் சேர்க்கப்பட்டவர்களையல்லாமல் இன்னும் அவனிடத்தில் சேர்ப்பேன் என்கிறார். (ஏசாயா 56:1-8)

என் பரிசுத்தநாளாகிய ஓய்வுநாளிலே உனக்கு இஷ்டமானதைச் செய்யாதபடி, உன் காலை விலக்கி, உன் வழிகளின்படி நடவாமலும், உனக்கு இஷ்டமானதைச் செய்யாமலும், உன் சொந்தப்பேச்சைப் பேசாமலிருந்து, ஓய்வுநாளை மனமகிழ்ச்சியின் நாளென்றும், கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையுள்ள நாளென்றும் சொல்லி, அதை மகிமையாக எண்ணுவாயானால், அப்பொழுது கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருப்பாய்; பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்படி பண்ணி, உன் தகப்பனாகிய யாக்கோபுடைய சுதந்தரத்தால் உன்னைப் போஷிப்பேன்; கர்த்தருடைய வாய் இதைச் சொல்லிற்று. (ஏசாயா 58:13-14)
 
ஓய்வு நாளை கடைபிடிக்கும் அனைவரையும் தேவன் ஆசீர்வதிப்பதாக கூறுகிறார். தவ்ராத்தின் (ஐந்தாகமங்கள் - Torah) கட்டளையை மறுபடியும் நியாபகப்படுத்துகிறார் ஏசாயா.
 
ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக; ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக; ஏழாம்நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும், யாதொரு வேலையும் செய்யவேண்டாம். கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஒய்ந்திருந்தார்; ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார். (யாத்திராகமம் 20: 8-11)

மேலும், கர்த்தர் மோசேயினிடத்தில்: நீ இஸ்ரவேல் புத்திரரை நோக்கி, நீங்கள் என் ஓய்வுநாட்களை ஆசரிக்கவேண்டும்; உங்களைப் பரிசுத்தப்படுத்துகிற கர்த்தர் நான் என்பதை நீங்கள் அறியும்படி, இது உங்கள் தலைமுறைதோறும் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும். ஆகையால், ஓய்வுநாளை ஆசரிப்பீர்களாக; அது உங்களுக்குப் பரிசுத்தமானது; அதைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறவன் கொலையுண்கக்கடவன்; அதிலே வேலைசெய்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனத்தின் நடுவில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான். ஆறுநாளும் வேலைசெய்யலாம்; ஏழாம் நாளோ வேலை ஒழிந்திருக்கும் ஓய்வுநாள்; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது; ஓய்வுநாளில் வேலைசெய்கிறவன் எவனும் கொலைசெய்யப்படவேண்டும். ஆகையால், இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தலைமுறைதோறும் ஓய்வுநாளை நித்திய உடன்படிக்கையாக ஆசரிக்கும்படி, அதைக் கைக்கொள்ளக்கடவர்கள். அது என்றைக்கும் எனக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் அடையாளமாயிருக்கும்; ஆறுநாளைக்குள்ளே கர்த்தர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கி, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்து பூரித்தார் என்றார். (யாத்திராகமம் 31:12-17)

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டபடியே, ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் ஆசரிப்பாயாக. ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக. ஏழாம் நாளோ உன் தேவனாகிய கர்த்தருடைய ஓய்வுநாள்; அதிலே நீயானாலும், உன் குமாரனானாலும், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக்காரனானாலும், உன் வேலைக்காரியானாலும், உன் எருதானாலும், உன் கழுதையானாலும், உனக்கு இருக்கிற மற்றெந்த மிருகஜீவனானாலும், உன் வாசல்களில் இருக்கிற அந்நியனானாலும் யாதொரு வேலையும் செய்யவேண்டாம்; நீ இளைப்பாறுவதுபோல உன் வேலைக்காரனும் உன் வேலைக்காரியும் இளைப்பாறவேண்டும்; நீ எகிப்துதேசத்தில் அடிமையாயிருந்தாய் என்றும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னை அவ்விடத்திலிருந்து வல்லமையுள்ள கரத்தினாலும் ஓங்கிய புயத்தினாலும் புறப்படப்பண்ணினார் என்றும் நினைப்பாயாக; ஆகையால் ஓய்வுநாளை ஆசரிக்க உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கட்டளையிட்டார். (உபாகமம் 5: 12-15)
 
ஓய்வு நாளை கடைபிடிப்பது எவ்வளவு முக்கியமென்றால், யாராவது வேண்டுமென்றே தெரிந்தே ஓய்வு நாளை கடைபிடிக்கவில்லையானால், அவர்கள் கொல்லப்படவேண்டும் என்று கட்டளையும் உள்ளது.
 
அன்றியும் தேசத்திலே பிறந்தவர்களிலாகிலும் அந்நியர்களிலாகிலும், எவனாவது துணிகரமாய் யாதொன்றைச் செயதால், அவன் கர்த்தரை நிந்திக்கிறான்; அந்த ஆத்துமா தன் ஜனத்தாரில் இராதபடிக்கு அறுப்புண்டுபோகவேண்டும். அவன் கர்த்தரின் வார்த்தையை அசட்டைபண்ணி, அவர் கற்பனையை மீறினபடியால், அந்த ஆத்துமா அறுப்புண்டுபோகவேண்டும், அவன் அக்கிரமம் அவன்மேல் இருக்கும் என்று சொல் என்றார். இஸ்ரலே புத்திரர் வனாந்தரத்தில் இருக்கையில், ஓய்வுநாளில் விறகுகளைப் பொறுக்கிக்கொண்டிருந்த ஒரு மனிதனைக் கண்டுபிடித்தார்கள். விறகுகளைப் பொறுக்கின அந்த மனிதனைக் கண்டுபிடித்தவர்கள், அவனை மோசே ஆரோன் என்பவர்களிடத்துக்கும் சபையார் அனைவரிடத்துக்கும் கொண்டுவந்தார்கள். அவனுக்குச் செய்யவேண்டியது இன்னதென்று தீர்க்கமான உத்தரவு இல்லாதபடியினால், அவனைக் காவலில் வைத்தார்கள். கர்த்தர் மோசேயை நோக்கி: அந்த மனிதன் நிச்சயமாய்க் கொலைசெய்யப்படவேண்டும்; சபையார் எல்லாரும் அவனைப் பாளயத்திற்குப் புறம்பே கல்லெறியக்கடவர்கள் என்றார். அப்பொழுது சபையார் எல்லாரும் கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே, அவனைப் பாளயத்திற்குப் புறம்பே கொண்டுபோய்க் கல்லெறிந்தார்கள்; அவன் செத்தான். (எண்ணாகமம் 15:30-36)
 
இப்போது கீழ்கண்ட கேள்விகள் எழும்புகின்றன:

யேகோவாவின் ஓய்வு நாளை கட்டாயமாக கடைபிடிப்பதை இஸ்லாம் கடமையாக்கியுள்ளதா?

ஒரு முஸ்லீம் தவ்ராத்திலும், ஏசாயாவிலும் கட்டளையிடப்பட்ட ஓய்வு நாளை கட்டாய கடமையாக கடைபிடிக்கவேண்டுமா?

இந்த கேள்விகளுக்கு பதில் "இல்லை" என்றுச் சொல்வார்கள் இஸ்லாமியர்கள்.

இது மட்டுமல்ல, இன்னொரு உதாரணத்தையும் கூறலாம், எப்படி உண்மையான தேவனின் வார்த்தைக்கு குர்‍ஆன் முரண்படுகிறது என்பதை எடுத்துக்காட்ட கீழ்கண்ட விவரங்களை படிக்கவும், தவ்ராத் சொல்கிற‌து:
 
ஒருவன் ஒரு ஸ்திரீயை விவாகம்பண்ணிக்கொண்டபின்பு, அவளிடத்தில் இலச்சையான காரியத்தைக் கண்டு, அவள்மேல் பிரியமற்றவனானால், அவன் தள்ளுதலின் சீட்டை எழுதி, அவள் கையிலே கொடுத்து, அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பிவிடலாம். அவள் அவனுடைய வீட்டைவிட்டுப் போனபின்பு, வேறொருவனுக்கு மனைவியாகலாம். அந்த இரண்டாம் புருஷனும் அவளை வெறுத்து, தள்ளுதலின் சீட்டை எழுதி, அவள் கையிலே கொடுத்து, அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பிவிட்டாலும், அவளை விவாகம்பண்ணின அந்த இரண்டாம் புருஷன் இறந்துபோனாலும், அவள் தீட்டுப்பட்டபடியினால், அவளைத் தள்ளிவிட்ட அவளுடைய முந்தின புருஷன் திரும்பவும் அவளை மனைவியாகச் சேர்த்துக்கொள்ளக்கூடாது; அது கர்த்தருக்கு முன்பாக அருவருப்பானது; உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் தேசத்தின்மேல் பாவம் வரப்பண்ணாயாக. (உபாகமம் 24:1-4)
 
இப்போது கீழ் கண்ட குர்‍ஆன் விவரங்களை இதனோடு ஒப்பிட்டுப்பார்க்கவும்:
 
(இத்தகைய) தலாக் இரண்டு முறைகள் தாம் கூறலாம் - பின் (தவணைக்குள்)முறைப்படி கணவன், மனைவியாகச் சேர்ந்து வாழலாம்; அல்லது நேர்மையான முறையில் பிரிந்து போக விட்டுவிடலாம்;;. அவ்விருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நிறுத்த முடியாது என்று அஞ்சும் போது தவிர. நீங்கள் மனைவியருக்கு கொடுத்தவற்றிலிருந்து யாதொன்றையும் திருப்பி எடுத்துக் கொள்ளுதல் கூடாது - இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் வரம்புகளை அவர்களால் நிலை நிறுத்த முடியாது என்று அஞ்சினால், அவள் (கணவனுக்கு) ஏதேனும் ஈடாகக் கொடுத்து(ப் பிரிந்து) விடுவதில் குற்றமில்லை. இவை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள வரையறைகளாகும்;. ஆகையால் அவற்றை மீறாதீர்கள்;. எவர் அல்லாஹ்வின் வரையறைகளை மீறுகிறார்களோ, அவர்கள் அக்கிரமக்காரர்கள் ஆவார்கள். மீட்ட முடியாதபடி - (அதாவது இரண்டு தடவை தலாக் சொன்ன பின்னர் மூன்றாம்) தலாக் சொல்லிவிட்டால் கணவன் அப்பெண்ணை மறுமணம் செய்து கொள்ள முடியாது. ஆனால் அவள் வேறு ஒருவனை மணந்து - அவனும் அவளை தல?ாக் சொன்னால் அதன் பின் (முதற்) கணவன் - மனைவி சேர்ந்து வாழ நாடினால் - அதன் மூலம் அல்லாஹ்வுடைய வரம்புகளை நிலைநிறுத்த முடியும் என்று எண்ணினால், அவர்கள் இருவரும் (மறுமணம் செய்து கொண்டு மணவாழ்வில்) மீள்வது குற்றமல்ல. இவை அல்லாஹ்வின் வரையறைகளாகும்; இவற்றை அல்லாஹ் புரிந்து கொள்ளக்கூடிய மக்களுக்குத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறான். (குர்‍ஆன் 2:229-230)
 
எதை யேகோவா தேவன் "கேவலம் என்றும் அருவருப்பு" என்றும் அழைக்கிறாரோ, அதனை அல்லாஹ் "அனுமதிக்கப்பட்டது" என்று அழைக்கிறார்!

இதுவரை நாம் கண்ட விவரங்களிலிருந்து, ஏன் ஷப்பீர் அலி அவர்கள் குர்‍ஆன் மற்றும் தவ்ராத்திற்கு இடையே உள்ள ஒரு குறிப்பிட்ட விவரம் பற்றி மட்டும் குறிப்பிட்டுவிட்டு, இவ்விரண்டு புத்தகங்களுக்கும் இடையே உள்ள மற்ற மிகப்பெரிய வித்தியாசங்களை, முரண்பாடுகளை பார்க்க தவறிவிட்டார் என்பதை கண்டுக்கொள்ளலாம். இப்போது, மோசேயின் கட்டளைகளுக்கு முரண்பட்டதாக குர்‍ஆன் இருக்கிறது என்பதை உணர்ந்தவராக, ஷப்பீர் அலி அவர்கள் முஹம்மது தேவனின் சட்டங்களை மீறிவிட்டார் என்பதை கண்டு, முஹம்மதுவை மறுதலிப்பாரா? அல்லது மோசேயின் கட்டளைகள் அந்த குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கொடுக்கப்பட்டது, தற்கால விசுவாசிகளுக்கு / நம்பிக்கையாளர்களுக்கு அவைகள் பொருந்தாது என்றுச் சொல்வாரா? இந்த‌ இர‌ண்டாம் தெரிவை ஷ‌ப்பீர் அலி எடுப்பாரானால், கிறிஸ்த‌வ‌ர்க‌ளுக்கும் ப‌வுலுக்கும் எதிராக‌ ப‌ன்றியின் க‌றியைப் ப‌ற்றி அவர் முன்வைக்கும் குற்ற‌ச்சாட்டான‌து அவ‌ர‌து காலுக்கு கீழேயே ந‌சுங்கிவிடும். ஷ‌ப்பீர் அலி அவ‌ர்க‌ளின் வாத‌ங்க‌ளை நாம் கூர்மையாக‌ அல‌சுவோம் என்றால், அவ‌ருடைய‌ வாத‌ங்க‌ளுக்கு நிற்க‌ இட‌மில்லாம‌ல், த‌டுமாறுவ‌தைக் காண‌லாம்.

முதல் பாகம் இதோடு முடிகிறது, இரண்டாம் பாகத்தை இங்கு படிக்கவும்: An Examination of Shabir Ally's Fascination with Pigs - Part 2




 

 


 
 

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்