நோவாவின் சமூகத்திற்கு எத்தனை தூதர்கள் அனுப்பப்பட்டார்கள்?
இன்னும்; நூஹின் சமூத்தவர் அவர்கள் (நம்) தூதர்களைப் பொய்யாக்கிய போது,
நாம் அவர்களை மூழ்கடித்தோம்;
அவர்களை மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கிவைத்தோம்; ... (25:37)
நோவாவின் சமுகத்தார்கள் நிராகரித்த இந்த இதர தூதர்கள் யார்?
பைபிள் நோவாவைத் தவிர வேறு யாரைப் பற்றியும் பேசுவதில்லை. குர்ஆனும் கூட நோவாவின் காலம் பற்றியும் வெள்ள நிகழ்ச்சிப் பற்றியும் பேசும் போதும், எல்லா வசனங்களிலும் ஒருமையிலேயே குறிப்பிடுகிறது, நோவாவின் சொந்த குடும்பம் மட்டுமே காக்கப்பட்டது என்று குறிப்பிட்டுச் சொல்கிறது.
இன்னும், நூஹ் - அவர் முன்னே பிரார்த்தித்தபோது,
அவருக்கு (அவருடைய பிரார்த்தனையை ஏற்று)) பதில் கூறினோம்;
அவரையும், அவருடைய குடும்பத்தாரையும்
மிகப் பெரிய துன்பத்திலிருந்தும் நாம் ஈடேற்றினோம். (குர்ஆன் 21:76)
மேலும், அவர்களுடைய சந்ததியரை (பிரளயத்திலிருந்து காப்பாற்றி பிற்காலம்) நிலைத்திருக்கும்படி செய்தோம். (குர்ஆன் 37:77)
இந்த இதர தூதர்கள் கூட வெள்ளத்தில் மூழ்கி மரித்திவிட்டார்களா?
நோவாவின் நிகழ்ச்சியில் உள்ள இன்னுமுள்ள பிரச்சனைகள்
Isa Koran Home Page | Back - Koran Index |
Comment Form under post in blogger/blogspot