இருளை ஒளியாக்குதல் - Lighting Up The Darkness
Posted by உண்மை அடியான் at 2:15 PM 0 comments
"ஆரம்பத்திலிருந்தே, இயேசுவின் போதனைகளை பெண்கள் கேட்டு, அவருக்கு கீழ்படிந்தார்கள். லாசருவின் சகோதரிகளான மரியாளும் மார்த்தாளும் பெத்தானியாவில் இருக்கும் தங்கள் வீட்டை இயேசு தங்கி ஓய்வு எடுத்துக்கொள்ளும் அன்பான வீடாக மாற்றியிருந்தார்கள். சமுதாயத்தில் இருந்த அனைத்துமட்ட பெண்கள், இயேசு நன்மை செய்பவராகவும், நல்ல நண்பாராகவும் இருப்பதைக் கண்டார்கள். இவர்கள் இயேசுவின் பன்னிரண்டு சீடர்களோடு சேர்ந்து எப்போதும் இயேசுவின் ஊழிய பாதையில் ஒரு பட்டணத்திலிருந்து இன்னொரு பட்டணத்திற்குச் அவரோடு சென்றார்கள். இவர்களில் மேரி மகதலேனா என்ற பெண் கூட இருந்தார், இப்பெண் தன் தீய வாழ்க்கையிலிருந்து மனம் திரும்பியிருந்தார்(லூக்கா 8:2). இதர பெண்கள் யார் என்றால், கூசாவின் மனைவியாகிய யோவன்னாளும், மற்றும் சூசன்னாளும் அவர்களுடைய ஆஸ்திகளால் இயேசுவின் ஊழியத்தின் தேவைகளை சந்தித்தார்கள்(லூக்கா 8:3). இவர்கள் மட்டுமன்றி, தங்கள் தீய நடத்தைகளால் சமுதாயத்தால் ஒதுக்கப்பட்ட பெண்களையும் இயேசு அங்கீகரித்து, அவர்களிடமிருந்து கூட பெண் இனத்தில் காணப்படும் நல்ல குணங்களை வெளிக்கொணர்ந்து கிறிஸ்த பக்தி மார்க்கத்தில் வளர இயேசு உதவி புரிந்தார்(லூக்கா 7:37-50). தாய்மார்கள் தங்கள் பிள்ளைகள் இயேசுவினால் ஆசீர்வதிக்கபடுவதை கண்டு இரசிக்கும் பாக்கியத்தைப் பெற்றார்கள்(மாற்கு 10:13-16). அதே போல தங்கள் மரித்த பிள்ளைகளை அவர் உயிரோடு எழுப்பும் காட்சியை கண்டும் ஆனந்தித்தார்கள்(லூக்கா 7:12-15). இயேசுவின் கடைசிப் பயணமான கலிலேயாவிலிருந்து எருசலேமுக்குச் சென்ற பயணத்திலும் பெண்கள் அவரோடு வந்தார்கள், மற்றும் கலவாரிக்குச் சென்ற அந்த வழியிலும் கூட பெண்கள் அவருக்கு ஊழியம் செய்தார்கள்(மத்தேயு 27:55, மத்தேயு 27:56).
பெண்கள் அவரது சிலுவையறையப்படுதலைக் கண்டு அவருக்கு சாட்சிகளானார்கள்(லூக்கா 23:49), கல்லரையில் வைக்க அவரது உடலை கொண்டு போனபோது கூட பெண்கள் சென்றார்கள்(மத்தேயு 27:61, லூக்கா 23:55); அவரது உடலில் பூசுவதற்கு நறுமனங்களை தயார் செய்து கொண்டுவந்தார்கள்(லூக்கா 23:56); அவர் உயிர்த்தெழுந்த நாளில் அவரது கல்லரைக்கு முதலில் சென்றவர்களும் பெண்கள் தான்(மத்தேயு 28:1, மாற்கு 16:1, லூக்கா 24:1, யோவான் 20:1); இயேசு உயிர்த்தெழுந்து முதன் முதலில் காணப்பட்டது பெண்களுக்குத் தான்(மத்தேயு 28:9, மாற்கு 16:9, யோவான் 20:14). இப்படி விசுவாசிகளான பக்தியுள்ள பெண்களில் மகதலேனா மரியாளும், யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், சலோமியும் இருந்தார்கள்(மத்தேயு 27:56), யோவன்னாளும், மற்றும் பெயர் குறிப்பிடப்படாத ஒரு ஸ்திரியும் இருந்தார்(லூக்கா 24:10). தெரிந்துக்கொள்ளப்பட்ட சீடர்களுக்கு இயேசு உயிர்த்தெழுந்தார் என்ற செய்தியைச் சொல்லும் பாக்கியத்தைப் பெற்றவர்களும் பெண்கள் தான்(லூக்கா 24:9, லூக்கா 24:10, லூக்கா 24:22).
இப்பெண்களில் இயேசுவின் தாயும் அடங்குவார்கள். மற்றும் மேலறையில் எல்லாரோடும் சேர்ந்து ஜெபத்தில் தரித்திருந்து, பெந்தேகோஸ்தோ அனுபவத்தைப் பெற்ற 120 பேர்களில் இயேசுவின் தாயும் ஒருவராவார்(அப் 1:14); முதன் முதலில் கிறிஸ்தவத்தை தழுவியவர்களில் பெண்களும் இருக்கிறார்கள்(அப் 8:12); ஆரம்ப திருச்சபை கஷ்டங்களில், பாடுகளில் பெண்கள் பங்கு பெற்றார்கள்(அப் 9:2). புதிய விசுவாத்தை எதிர்த்த யூத எதிரிகள் பல கனம்பொருந்திய பெண்களின் உதவியுடன் பவலையும் பர்னபாசையும் துன்பப்படுத்தினார்கள்(அப் 13:50); அதே நேரத்தில் கிரேக்கரான கனம்பொருந்திய பெண்கள் கிறிஸ்தவ விசுவாசிகளாகி நற்குணசாலிகளாக இருந்தார்கள்(அப் 17:12). இயேசுவின் மூன்று வருட ஊழியத்திலும், சிலுவையின் அடியிலும், கல்லரையில் வைக்கப்படுதலிலும், பெண்கள் தங்கள் உண்மையை நேர்மையை நிருபித்தார்கள், இதுவே இவர்களின் பக்தியை வெளிப்படுத்தின...1
Posted by உண்மை அடியான் at 7:34 PM 1 comments
இஸ்லாமியரும் கிறிஸ்தவர்களும் ஆபிரஹாமின் விசுவாசத்தை ஒரே மாதிரியாகக் காத்துக் கொள்கிறார்கள். இவ்விரு பிரிவினரும், தங்கள் தீர்க்கதரிசிகள் மூலமாக தங்கள் தேவன்/அல்லா இறக்கிய வெளிப்பாடுகள் பாதுகாக்கப்பட்டுள்ளது என்றுச் சொல்கிறார்கள். ஆனால் இவர்கள் வெளிப்பாடு என்ற வார்த்தைக்கு என்ன பொருள் கொள்கின்றனர்? மெய்யான ஒரே தெய்வத்தினை வழிபடுதலையே நாடும் நாம் அனைவரும் கடவுள் தான் தம்மை நமக்கு வெளிப்படுத்த வேண்டும் என ஒப்புக்கொள்கிறோம். நம்முடைய சொந்த முயற்சியினால் நாம் அவரைக் கண்டுகொள்ள முடியாது, அதனால் தம்மை வெளிப்படுத்த அவரே வேண்டும். கடவுள் தம்மை எவ்வாறு வெளிப்படுத்துகிறார்?
குர்ஆன் 42:51-52 "அல்லாஹ் எந்த மனிதரிடத்திலும் வஹீயாகவோ அல்லது திரைக்கப்பால் இருந்தோ அல்லது தான் விரும்பியதைத் தன் அனுமதியின் மீது வஹீயை அறிவிக்கக் கூடிய ஒரு தூதரை அனுப்பியோ அன்றி (நேரிடையாகப்) பேசவதில்லை நிச்சயமாக அவன் உயர்ந்தவன்; ஞானமுடையவன்.
(நபியே!) இவ்வாறே நாம் நம்முடைய கட்டளையில் ஆன்மாவானதை (குர்ஆனை) வஹீ மூலமாக உமக்கு அறிவித்திருக்கிறோம்; (அதற்கு முன்னர்) வேதம் என்பதோ ஈமான் என்பதோ என்னவென்று நீர் அறிபவராக இருக்கவில்லை - எனினும் நாம் அதை ஒளியாக ஆக்கி, நம் அடியார்களில நாம் விரும்பியோருக்கு இதைக் கொண்டு நேர்வழி காட்டுகிறோம் - நிச்சயமாக நீர் (மக்களை) நேரான பாதையில் வழி காண்பிக்கின்றீர்."
மனோரீதியான தூண்டுதலினாலன்றி(Inspiration) மனிதரிடம் அல்லா நேரிடையாகப் பேசுவதில்லை என சூரா 42:51-52 தெளிவாகச் சொல்கிறது. இக்காரணத்தினாலேயே, "அனுப்பப்பட்டவர்" எனப் பொருள்படும் ரசூல் என்றழைக்கப்படும், நபிகளாக நியமிக்கப்பட்டவர்களின் மூலமாக அல்லா தம்மை வெளிப்படுத்துகிறார். இந்த நபிகள் வெறும் மனிதர்கள் தாம், எனவே ஒரு வரம்புக்கு உட்பட்டவர்களே (சூரா 80:1-3). இஸ்லாமில் வெளிப்பாடு(Revelation) என்பது கடவுளிடமிருந்து மனிதர்களுக்கு நபிகள் மூலமாக வருவதே. இஸ்லாமின் படி, இறுதி வெளிப்பாடு என்று இஸ்லாமியர்களால் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படும் வெளிப்பாடே குர்ஆன் என்பது. இது முஹம்மதுவிற்கு கி.பி. 610 - 632 ல் காபிரியேல் தூதன், வார்த்தைக்கு வார்த்தை இறங்குதல் என்பதாக, Nazil எனப்படும் (கீழிறங்கி வரும் Tanzil) முறையில் வெளிப்படுத்தப்பட்டது.
சொர்க்கத்தில் இருக்கும் கற்பலகைகளை (சூரா 85:21-22) பற்றி கவனிப்போம். குர்ஆன் நிரந்தரமாகப் பதிவு செய்யப்பட்டு இருக்கும் இப்பலகைகள், உண்டாக்கப்பட்டவை அல்ல, இவைகள் நிரந்தரமானவைகள். அல்லா, அளவிட முடியாதவரும் அற்புதமானவருமாய் இருப்பதினால், அவருடைய வார்த்தையும் வெளிப்பாடுகளும் அளவிட முடியாதவையும் அற்புதமானவையுமாய் இருக்கின்றன. முகமதுவின் மூலமாகக் கொடுக்கப்பட்ட இந்த இறுதி வெளிப்பாடு தெய்வீகமானது; எனவே மனிதர்களின் மதிப்பீட்டிற்கும் சர்ச்சைக்கும் அப்பாற்பட்டது. இதன் அர்த்தம் என்னவென்றால், இப்பொழுது நம் கையில் இருக்கும் குர்ஆன், இன்றும் என்றும் ஒரு எழுத்தும் மாறக்கூடாதபடி அசலாயும் இறுதியாயும் இருக்கும் என்பதே.
நாம் அல்லாவின் குர்ஆனுக்கு, அதன் வாசகங்களைப் பற்றிக் கேள்வியேதும் கேட்காமல் அடிபணிய வேண்டும். ஒரு அடிமை, தன் எஜமானிடம் கேள்வி கேட்க முடியுமா? முடியாதல்லவா, அதுபோன்றே, ஒரு முஸ்லிம் குர்ஆனைப் பற்றி வினவ முடியாது.
இந்தக் கட்டத்தில், முஸ்லிம்கள் கிறிஸ்தவர்களைப் பார்த்து, "உங்களுடைய புத்தகம் எப்படி?" எனக் கேட்கிறார்கள். நாமும் குர்ஆனையும் பைபிளையும் ஒப்பிடுவோம்.
வெளிப்பாடு குறித்த கிறிஸ்தவர்களின் பார்வை
The Christian View of Revelation
துரதிர்ஷ்டவசமாக, இந்த விஷயம், தவறான அடிப்படையில் ஆரம்பிக்கப்படுகிறது. கிறிஸ்தவர்களைப் பொருத்தமட்டில், வெளிப்படுத்துதல் தொடர்பான அவர்களின் கருத்தில் இருந்து பைபிள் மற்றும் குர்ஆனின் ஒப்பீடு சற்றுக் குறைவுபடுகிறது.
கிறிஸ்தவர்கள் புரிந்துகொண்டுள்ளபடி, தேவன் ஒரே ஒரு வழியின் மூலமாக அல்லாமல், பல வழிகளில் பேசியிருக்கிறார்:
1. படைத்தல்(Creation): இயற்கை, இது தெய்வீக வேலைப்பாட்டின் வெளிப்பாடு.
2. கிரியைகள்(Action): அதிசயப்படத்தக்க அற்புதங்கள் மூலமாக பல வழிகளில் தேவன் மனித காரியங்களில் நேரடியாக இடைபட்டிருக்கிறார்.
3. தீர்க்கதரிசிகள்(Prophets): அவர்களுக்கு அருளப்பட்ட வார்த்தைகள் மூலமாக.
நாம் இந்த வெளிப்படுகளைப் பெற்றிருக்கிறோம். ஆனால், ஏதேன் தோட்டத்தில் ஆதாமின் கீழ்படியாமையினால் நாம் பாவிகளானோம். இது நம் மனதினைக் குருடாகி, தேவனை நாம் காணக்கூடாதபடி செய்தது.(2 கொரிந்தியர் 4:4). இவ்விதமாய், மனுக்குலம் முழுவதும் தொடர்ந்து தேவனைப் புரிந்துகொள்ளத் தவறியது. இந்தப் பாவத்தினாலே விக்கிரக ஆராதனை ஆரம்பித்தது. மெய்யான ஒரே தேவனைப் பற்றிய அறிவினை நாம் ஒருபோதும் பற்றிக் கொள்ளவில்லை.
இதன் காரணமாக, தேவன் இறுதியான வழியினைத் தெரிந்துகொண்டார். அவர் நம்மில் ஒருவராகி, தமக்காகத் தாமே பேசினார். அவர் தேவனாய் இருப்பதினால், அவரே அவரை நமக்கு வெளிப்படுத்த முடியும். தேவன் ஒருவரே தேவனுக்காய்ப் பேச முடியும். தேவன் யார் என்று நீங்கள் எனக்குச் சொல்ல முயன்றால் நீங்கள் தோற்றுப் போவீர்கள். நானும் ஒன்றும் பெரிதாய்ச் சொல்லிவிட முடியாது, ஏனெனில், பாவியான ஒரு சாதாரண மனிதனால் தேவன் உண்மையில் எப்படிப்பட்டவர் என்பதில் திரித்தே தான் கூற முடியும். அவரைப் பற்றி அவரே தான் வெளிப்படுத்த வேண்டும்; ஏனெனில் இடையிலுள்ள அனைவரும் அவர் போன்ற அளவிட முடியாத பரிசுத்த ஞானத்தில் மிகவும் குறைவு பட்டவர்களே. எனவே அவர் பேசிய நான்காவது வழி இதுவே:
4. தேவனின் அப்பழுக்கற்ற பரிபூரணமான வார்த்தையாகிய இயேசு தேவன் யார் என்பதை நமக்குக் காண்பித்தார்.
இயேசு கிறிஸ்து, தேவனின் வார்த்தை
Jesus Christ, the Word of God
தாம் யார் என்பதை மனிதருக்கு வெளிப்படுத்தியதில் இயேசு கிறிஸ்து தேவனுக்குக் கீழானவர் அல்ல, அவர் தேவனுக்கு சமமானவர். அனைவரையும் ஒதுக்கிவிட்டு தேவனே தமக்காகப் பேசுகிறார். நிச்சயமாக, கிறிஸ்துவில் மட்டுமே அவர் அறியப்படுகிறார்.
இயேசுவே இதனை அறிவித்தார். இயேசுவின் சீடராகிய அப்போஸ்தலர் பிலிப்பு ஒருமுறை தேவனை அறிய விரும்பினார். அதற்கு இயேசு,
பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்?
நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார்." என்றார் (யோவான் 14:9-10)
இப்போது நாம் இயேசுவின் வெளிப்பாடினை கடவுளின் ஏனைய வெளிப்பாடுகளுடன் ஒப்பிடுவோம்.
1. படைப்பு தேவனின் மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆனால் விக்கிரக ஆராதனைக்காரர்களும், இதர தெய்வங்களை வணங்குகிறவர்களும்(Pagans) கூட இதைச் சொல்கிறார்கள்! இவர்கள், "தேவன்/இறைவன் யார்" என்று அறிந்துகொண்டார்கள் என நாம் கூற முடியுமா? இல்லை, தேவனைப் பற்றி அறிந்துகொள்ள வெறும் இயற்கையை விட அதனினும் மேலானவையும் தேவை(No, they need more than just nature to tell them what God is like).
2. அற்புதங்கள், ஒரு தீர்க்கதரிசி தேவனிடமிருந்து வந்தவர் என்பதை உறுதி செய்கிறது. ஆனால், கள்ளத் தீர்க்கதரிசனம் உரைப்பவர்களைப் பாருங்கள், அவர்கள் அனேகம் தேவர்கள் உள்ளார்களென்றும், சில வேளைகளில் தாங்களே தேவர்களென்றும் அறிக்கை செய்கின்றனர்! இந்துக்கள் மற்றும் புத்த மதத்தினரின் தீர்க்கதரிசிகள், அற்புதங்கள் செய்து, நம்பாதவர்களைக் கூட ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றனர். ஆனால், இத்தகைய அதிசயங்கள் தேவனைப் புரிந்துகொள்ளப் போதுமானவையா? இல்லை, நமக்கு அற்புதங்களைக் காட்டிலும் அதிகம் தேவை.
3. பைபிள், தீர்க்கத்தரிசிகளின் மற்றும் தூதர்களின் செய்திகளின் தொகுப்பாகும். அது எள்ளளவும் தவறே இல்லாத, தவறவே முடியாத தேவனின் வார்த்தையாகும். இயேசு கிறிஸ்துவில் தேவனின் வெளிப்பாடு அது. முழு பைபிளும் தேவனைப் பற்றிப் பேசுவதாகவே இயேசு போதித்தார். "வேத வாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; ... என்னைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே" (யோவான் 5:39), பைபிள் நமது புரிந்து கொள்ளுதலின் முடிவல்ல. அது ஒரு ஆரம்ப இடமே, அதாவது, அது இயேசு கிறிஸ்துவை நோக்கிச் சுட்டிக்காட்டும் ஓர் கைகாட்டி. எனினும், நம்முடைய மனித மூளையினால், மிகவும் பக்தியோடும், அதிக அக்கரையோடும் நாம் என்ன தான் ஆராய்ச்சி செய்தாலும், தேவனைப் பற்றி முழுவதுமாக நாம் அறிந்துக் கொள்ளமுடியாது.(Yet our human minds cannot discover God by any investigation of a book, no matter how devout, serious or religiously committed that investigation is). எனவே, தேவ ஆவியின் (ruh-allah) மூலம் இயேசு கிறிஸ்துவை பைபிளின் வார்த்தைகளில் நாம் கண்டுபிடிக்கிறோம்.
இது இஸ்லாமியருக்குக் குழப்பமாகத் தோன்றலாம்; அல்லது பயமுறுத்துவது போன்றும் இருக்கலாம். இவ்வுண்மையை அவர்களுக்கு விளக்க, நமக்கு ஒரு வித்தியாசமான கோணம் தேவைப் படுகிறது. பலர் ஆராய முனைவது போல குர்ஆனை பைபிளுடன் ஒப்பிடாமல், அதனை இயேசுவுடனாக ஒப்பிடுவது அதிக பலனுள்ளதாய் இருக்கும். ஏனெனில் இரண்டும் கடவுளின் வார்த்தை என்பது மட்டுமல்லாமல் மனிதர்களுக்குக் கடவுளின் உண்மையான வெளிப்பாடாகவும் நிலை நிற்கின்றன.
சரியான ஒப்பிடுதல்
Better Comparisons
காலங்காலமாக, பல இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும், முஹம்மதுவை இயேசுவோடும், மற்றும் குர்ஆனை பைபிளோடும் ஒப்பிட்டு வந்துள்ளனர். (கீழேயுள்ள பட்டியலைப் பார்க்கவும்)
முந்தய ஒப்பீடுகள் | ஏனெனில் இவை இரண்டும் (இவர்கள் இருவரும்) |
குர்ஆன்-பைபிள் ஒப்பீடு | ...புத்தகங்கள் |
முஹம்மது-இயேசு ஒப்பீடு | ...மனிதர்கள் |
OLD COMPARISONS | Because both are... |
Qur'an compared to Bible | ...books |
Muhammad compared to Jesus | ...men |
இஸ்லாமியரும் கிறிஸ்தவரும் சிறப்பான முறையில், ஒருசில விவாதங்களையே நடத்தியுள்ளனர் என்பதில் ஆச்சரியம் இல்லை! இஸ்லாமின் மற்றும் கிறிஸ்துவத்தின் பொதுவான தன்மைகளை ஒப்பிட்டுப் பார்ப்பது அவைகளை நன்முறையில் விளங்கிப் புரிந்து கொள்ள ஏதுவாகும். ஒப்பிடுவதற்கேதுவான இத்தன்மைகளின் பிரிவுகள் (1) குர்ஆனும், இயேசுவும், (2) முஹம்மதுவும், இயேசுவின் அப்போஸ்தலரும், மற்றும் (3) பைபிளும், ஹதீஸ்கள்/தரிக்ஹ், சீராக்கள் மற்றும் உரைகள் இவைகளும் ஆகும், (பட்டியலைப் பார்க்கவும்).
முன்னிலும் சிறந்த ஒப்பீடு | ஏனெனில் இவை இரண்டும் இவ்வாறாகக் கருதப்படுகின்றன ... |
குர்ஆனும், இயேசுவும் | ...கடவுளின் நித்திய வெளிப்பாடு |
முஹம்மதுவும், இயேசுவின் அப்போஸ்தலரும் | ...வெளிப்பாட்டின் செய்தியினை அறிவித்தவர்கள் |
பைபிளும், ஹதீஸ்கள்/தரிக்ஹ், சீராக்கள் மற்றும் உரைகள் ஆகிய இவைகளும் | ...வெளிப்பாட்டின் வரலாறும் போதனைகளும் செய்திகளும் |
ஆங்கிலத்தில்
BETTER COMPARISONS | Because both are regarded as... |
Qur'an compared to Jesus | ...the eternal revelation of God |
Muhammad compared to Jesus' Apostles | ...messengers of the revelation |
Hadith, Tarikh, Sira and Tafsir compared to the Bible | ...the history and teachings of the revelation and messengers |
இது ஒருவரையொருவர் புரிந்துகொள்ள உதவியாயிருக்கும் என்ற அதே வேளையில், நாம் ஒன்றினைக் கவனமாக மனதிற் கொள்ள வேண்டும். அதாவது, புதிய ஏற்பாடு இயேசுவைப் பற்றியே பிரதானமாகப் பேசினாலும், அவருடைய வாழ்க்கை நடைமுறைகளைப் பற்றி அதில் அதிகம் சொல்லப்படவில்லை. மாறாக, ஹதீஸ்களும் சூராவும், முகமதுவின் வாழ்க்கை முறைகளை அவர் என்ன செய்தார் என்பன போன்றவற்றை அவர் கூறியவற்றின் விளக்கங்களுடன் விவரமாகச் சொல்கின்றன.
கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியருக்குள்ளான இறைவனின் வெளிப்பாடு தொடர்பான ஒரு விவாதத்தில் நாம் ஈடுபடுவோமேயானால், அதில் இயேசு கிறிஸ்துவையும் குர்ஆனையும் மட்டுமே ஒப்பிடுதல் வேண்டும், பைபிளையும் குர்ஆனையும் அல்ல. அதாவது, நாம் பைபிளை அல்ல, மாறாக இயேசு கிறிஸ்துவையே நிச்சயமான தேவனின் வெளிப்பாடாகக் கொள்ள வேண்டும். இயேசு தான் தேவனின் இறுதி வார்த்தை. தேவனின் ஆவி மூலமும் பைபிளின் எழுதப்பட்ட வார்த்தையின் மூலமாகவும் நம் தனிப்பட்ட அனுபவத்தின் மூலமாகவும் இன்றும் நாம் காணக்கூடியவர் அவரே.
இக்காரணத்தினாலேயே, நாம் பைபிளை, தேவனால் அருளப்பட்ட பிழையற்ற தேவ வார்த்தை எனவும், இயேசுவின் பிறப்பு, வாழ்க்கை மற்றும் உயிர்த்தெழுதலின் சரித்திரம் முழுவதிலும் அது செயலாற்றுகிறது எனவும் மதிக்கிறோம். விசுவாசத்தின் மூலம் நாம் அவரை அணுகும்போது தேவனை அவர் நமக்கு வெளிப்படுத்துவார். தேவன், மனிதர்களின் வார்த்தைகட்கு மிகவும் அப்பாற்பட்டவர். அவரின் வார்த்தையினாலன்றி எதினாலும் அவரை வெளிப்படுத்த முடியாது.
தேவ ஆவியானவர் தாமே தேவனைத் தேடுபவர்களுக்குத் தம்மை வெளிப்படுத்த இயேசு கிறிஸ்துவிடமே அழைத்துச் செல்கிறார். வெறும் மனிதர்களின் வார்த்தைகளில் மட்டுமே போலியான கடவுளின் வெளிப்பாட்டைக் கண்டு திருப்தி அடைவோர் வீண் நம்பிக்கையை வளர்க்கட்டும், தடையில்லை, ஆனால் தாமே சுயமாக வெளிப்படுத்தும் தேவனைச் சந்திப்பதைத் தவிர நாம் வேறெதிலும் திருப்தியடைய மாட்டோம்.
இப்புதிய ஒப்பிடுதலின்படி, இயேசு மற்றும் குர்ஆன் இரண்டிற்கும் எந்த விதப் பொருத்தமும் இல்லை. குர்ஆன் என்பது ஒரு சாதாரணப் புத்தகம் தான். அதன் ஆதாரம் ஒரு அநித்தியமான பாவமுள்ள மனிதனின் தோளின் மீது சுமத்தப்பட்டுள்ளது(சூரா 80:1-3). இது இஸ்லாமியராலும் கிறிஸ்தவராலும் ஒரு மனதாய்ப் பாவமற்றவர் எனக் கருதப்படும் இயேசுவுக்கு எவ்வகையிலும் நிகராகாது. அவரின் வார்த்தையின் படியே அவர் தேவன் தான் என்பது பூரணமான வெளிப்பாடு.
In light of these new comparisons, there is no match between the two revelations, Jesus and the Qur'an. The Qur'an is merely a book whose authenticity rests solely on the shoulders of one finite and sinful man (Sura 80:1-3). It is no match against Jesus, revered by Muslims and Christians alike as sinless, who, according to His word, is God Himself, the perfect revelation.
"பூர்வகாலங்களில் பங்குபங்காகவும் வகைவகையாகவும், தீர்க்கதரிசிகள் மூலமாய்ப் பிதாக்களுக்குத் திருவுளம்பற்றின தேவன், இந்தக் கடைசி நாட்களில் குமாரன் மூலமாய் நமக்குத் திருவுளம் பற்றினார்; இவரைச் சர்வத்துக்கும் சுதந்தரவாளியாக நியமித்தார், இவரைக் கொண்டு உலகங்களையும் உண்டாக்கினார்."(எபிரெயர் 1:1-2)
Source: http://debate.org.uk/topics/trtracts/t08.htm
This pamphlet was compiled by an interdenominational group of evangelical Christians concerned with Muslim-Christian dialogue.
பைபிள் பற்றிய கட்டுரைகள்
முகப்புப் பக்கம் ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்
Posted by உண்மை அடியான் at 7:36 PM 1 comments
இன்னும் தம் கற்பைக் காத்துக் கொண்ட (மர்யம் என்ப)வரைப் பற்றி (நபியே! நினைவு கூரும்) எனினும், நம் ஆன்மாவிலிருந்து நாம் அவரில் ஊதி அவரையும், அவர் புதல்வரையும் அகிலத்தாருக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கினோம். (குர்ஆன் 21:91)
And (remember) her who guarded her chastity: We breathed into her of Our spirit, and We made her and her son a sign for all peoples. (Surah Al Anbiyaa 91)
Isa Koran Home Page | Back - Oskar's Index Page |
Posted by உண்மை அடியான் at 1:14 PM 1 comments
ஏகத்துவ தளத்திற்கு பதில்: இயேசுவும் பவுலும்:
ஒரே நிகழ்ச்சியை வித்தியாசமாகச் சொல்லும் அல்லா, குர்ஆன் முரண்பாடுகள்: பாகம் - 1
மோசேயும், எரியும் புதரும்-MOSES AND THE BURNING BUSH
தலைப்புக்கள் | குர்ஆன் 20:38-40 | குர்ஆன் 28:7, 11-13 |
1. அல்லாவின் உரையாடல் | "உம் தாயாருக்கு அறிவிக்க வேண்டியதை அறிவித்த நேரத்தை (நினைவு கூர்வீராக)! (20:38) அவரை (குழந்தையை)ப் பேழையில் வைத்து (அப்பேழையை நீல்) நதியில் போட்டுவிடும்; பின்னர் அந்த நதி அதைக் கரையிலே கொணர்ந்து எறிந்து விடும், அங்கே எனக்கு பகைவனும், அவருக்குப் பகைவனுமாகிய (ஒரு)வன் அவரை எடுத்துக்கொள்வான்" (எனப் பணித்தோம்). மேலும், "(மூஸாவே!) நீர் என் கண் முன்னே வளர்க்கப்படுவதற்காக உம் மீது அன்பைப் பொழிந்தேன். (20:39) | நாம் மூஸாவின் தாயாருக்கு; "அவருக்கு (உன் குழந்தைக்குப்) பாலூட்டுவாயாக அவர் மீது (ஏதம் ஆபத்து வரும் என்று) நீ பயப்படுவாயானால், அவரை ஆற்றில் எறிந்து விடு - அப்பால் (அவருக்காக) நீ பயப்படவும் வேண்டாம், துக்கப்படவும் வேண்டாம்; நிச்சயமாக நாம் அவரை உன்னிடம் மீள வைப்போம்; இன்னும், அவரை (நம்) தூதர்களில் ஒருவராக்கி வைப்போம்" என்று வஹீ அறிவித்தோம். (28:7) |
2. மோசேயின் சகோதரியின் உரையாடல் | (பேழை கண்டெடுக்கப்பட்ட பின்) உம் சகோதரி நடந்து வந்து, 'இவரை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒருவரை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?' என்று கேட்டாள், ஆகவே நாம் உம் தாயாரிடம், அவருடைய கண் குளிர்ச்சியடையும் பொருட்டும், அவர் துக்கம் அடையாமல் இருக்கும் பொருட்டும் உம்மை (அவர்பால்) மீட்டினோம், பின்னர் நீர் ஒரு மனிதனைக் கொன்று விட்டீர், அப்பொழுதும் நாம் உம்மை அக்கவலையிலிருந்து விடுவித்தோம், மேலும் உம்மைப் பல சோதனைகளைக் கொண்டு சோதித்தோம். அப்பால் நீர் பல ஆண்டுகளாக மதியன் வாசிகளிடையே தங்கியிந்தீர்; மூஸாவே! பிறகு நீர் (நம் தூதுக்குரிய) தக்க பருவத்தை அடைந்தீர். (20:40) | இன்னும் மூஸாவின் சகோதரியிடம்; "அவரை நீ பின் தொடர்ந்து செல்" என்றும் (தாய்) கூறினாள். (அவ்வாறே சென்று ஃபிர்அவ்னின்) ஆட்கள் காண முடியாதபடி அவள் தூரத்திலிருந்து அவதை கவனித்து வந்தாள். (28:11) நாம் முன்னதாகவே அவரை(ச் செவிலித்தாய்களின்) பாலருந்துவதை தடுத்து விட்டோம்; (அவருடைய சகோதரி வந்து) கூறினாள்; "உங்களுக்காக பொறுப் பேற்று அவரை(ப் பாலூட்டி) வளர்க்கக் கூடிய ஒரு வீட்டினரை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? மேலும் அவர்கள் அவர் நன்மையை நாடுபவராக இருப்பார்கள்." (28:12) இவ்வாறு அவருடைய தாயாரின் கண்குளிர்ச்சியடையவும், அவள் துக்கப்படாதிருக்கவும், நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது என்பதை அவள் அறிந்து கொள்வதற்காகவும் நாம் அவரை அவர் தாயாரிடத்தே திரும்பச் சேர்த்தோம் - எனினும், அவர்களில் பெரும்பாலோர் (இதை) அறிய மாட்டார்கள். (28:13) |
(குர்ஆன் 20:39) அவரை (குழந்தையை)ப் பேழையில் வைத்து (அப்பேழையை நீல்) நதியில் போட்டுவிடும்; பின்னர் அந்த நதி அதைக் கரையிலே கொணர்ந்து எறிந்து விடும், அங்கே எனக்கு பகைவனும், அவருக்குப் பகைவனுமாகிய (ஒரு)வன் அவரை எடுத்துக்கொள்வான்"…..
(குர்ஆன் 28:7) நாம் மூஸாவின் தாயாருக்கு; "அவருக்கு (உன் குழந்தைக்குப்) பாலூட்டுவாயாக அவர் மீது (ஏதம் ஆபத்து வரும் என்று) நீ பயப்படுவாயானால், அவரை ஆற்றில் எறிந்து விடு - அப்பால் (அவருக?காக) நீ பயப்படவும் வேண்டாம், துக்கப்படவும் வேண்டாம்; நிச்சயமாக நாம் அவரை உன்னிடம் மீள வைப்போம்; இன்னும், அவரை (நம்) தூதர்களில் ஒருவராக்கி வைப்போம்" என்று வஹீ அறிவித்தோம்.
1. குர்ஆன் 20:39ம் வசனத்தில் "குழந்தையை பேழையில் வைத்து நதியில் போட்டு விடும்" என்று உள்ளது ஆனால், குர்ஆன் 28:7ல், "நீ பயப்பட்டால் ஆற்றில் போட்டுவிடு" என்று வருகிறது. ஏன் இந்த வித்தியாசம். அதாவது, "நீ பயப்பட்டால்" என்ற வார்த்தையை அல்லா சொன்னாரா இல்லையா? ஒருமுறை சொன்னவர் இன்னொரு முறை ஏன் சொல்லவில்லை?
2. இரண்டு இடங்களிலும் பேசியவர் "அல்லா" தான் என்றுச் சொன்னால், தான் பேசியதை தானே மறந்துவிட்டாரா?3. ஆற்றில் விட்டுவிட்டு, அவரைப் பற்றி "நீ பயப்படவும் வேண்டாம், துக்கப்படவும் வேண்டாம்" என்று குர்ஆன் 28:7ல் அல்லா சொல்கிறார். ஆனால், இந்த விவரத்தை குர்ஆன் 20:38ல் அல்லா சொல்லவில்லை? ஏன் இந்த வித்தியாசம்?
4. குர்ஆன் 20:39ல் "அங்கே எனக்கு பகைவனும், அவருக்குப் பகைவனுமாகிய (ஒரு)வன் அவரை எடுத்துக்கொள்வான்" என்றுச் சொல்கிறார். ஆனால், இந்த விவரம் குர்ஆன் 28:7ல் இல்லை. ஏன் இந்த வித்தியாசம்?
5. குர்ஆன் 28:7ல், "நிச்சயமாக நாம் அவரை உன்னிடம் மீள வைப்போம்; " என்றும், "அவரை (நம்) தூதர்களில் ஒருவராக்கி வைப்போம்" என்றும் சொல்லியுள்ளார். ஆனால், இந்த விவரம் குர்ஆன் 20:39ல் இல்லை? அது ஏன்?
6. உண்மையில் மோசேயின் தாயிடம் குர்ஆன் 20:39ம் வசனத்தில் வருவதைப்போலச் சொனனாரா அல்லது குர்ஆன் 28:7ம் வசனத்தில் வருவதைப்போலச் சொன்னாரா?
(பேழை கண்டெடுக்கப்பட்ட பின்) உம் சகோதரி நடந்து வந்து, 'இவரை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒருவரை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?' என்று கேட்டாள்,….. (குர்ஆன் 20:40)
….; (அவருடைய சகோதரி வந்து) கூறினாள்; "உங்களுக்காக பொறுப் பேற்று அவரை(ப் பாலூட்டி) வளர்க்கக் கூடிய ஒரு வீட்டினரை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? மேலும் அவர்கள் அவர் நன்மையை நாடுபவராக இருப்பார்கள்." (குர்ஆன் 28:12)
1. குர்ஆன் 20:40ல், "பொறுப்பை ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒருவரை" என்றுச் சொன்ன அதே சகோதரி, குர்ஆன் 28:12ல் "ஒரு வீட்டினரை" என்று சொல்கிறார். இதில் எது சரி, எது தவறு? மோசேயின் சகோதரி "ஒருவரை காட்டட்டுமா?" என்றுச் சொன்னாரா அல்லது "ஒரு வீட்டினரைக் காட்டட்டுமா?" என்றுச் சொன்னாரா? பொருளில் அதிகமாக வித்தியாசம் இல்லையானாலும், இஸ்லாமியர்களின் "வேத நிபந்தனையை" குர்ஆனுக்கு இட்டால் எப்படி இருக்கும் என்று நாம் சோதிக்கும் போது, இப்படிப்பட்ட முரண்பாடுகள் வெடிக்கின்றன
2. குர்ஆன் 28:12ல் "அவர்கள் அவர் நன்மையை நாடுபவராக இருப்பார்கள்" என்ற அதிகபடியாக சொன்னதாக உள்ளது, ஆனால் இந்த விவரம் குர்ஆன் 20:40ல், அதே சகோதரி பேசிய உரையாடலில் இல்லை. அல்லாவின் மாறாத பிழையில்லாத, குர்ஆனில் ஏன் இந்த வித்தியாசம்? இஸ்லாமியர்கள் முக்கியமாக ஏகத்துவ தள அறிஞர்கள் விளக்குவார்களா?
குர்ஆன் 2:58-59 | குர்ஆன் 7:161-162 |
இன்னும் (நினைவு கூறுங்கள்;) நாம் கூறினோம்; " இந்த பட்டினத்துள் நுழைந்து அங்கு நீங்கள் விரும்பிய இடத்தில் தாராளமாகப் புசியுங்கள்; அதன் வாயிலில் நுழையும் போது, பணிவுடன் தலைவணங்கி 'ஹித்ததுன்' (-"எங்கள் பாபச் சுமைகள் நீங்கட்டும்") என்று கூறுங்கள்; நாம் உங்களுக்காக உங்கள் குற்றங்களை மன்னிப்போம்; மேலும் நன்மை செய்வோருக்கு அதிகமாகக் கொடுப்போம். (2:58) | இன்னும் அவர்களை நோக்கி; "நீங்கள் இவ்வூரில் வசித்திருங்கள், இதில் நீங்கள் விரும்பிய இடத்திலெல்லாம் (நீங்கள் நாடிய பொருட்களைப்) புசித்துக் கொள்ளுங்கள்; 'ஹித்ததுன்' (எங்களுடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதாக,) என்று கூறியாவாறு (அதன்) வாயிலில் (பணிவோடு) தலைதாழ்த்தியவர்களாக நுழையுங்கள்; நாம் உங்கள் குற்றங்களை மன்னிப்போம். நன்மை செய்பவர்களுக்கு நாம் அதிகமாகவே (கூலி) கொடுப்போம்" என்று கூறப்பட்டபோது (7:161) |
ஆனால் அக்கிரமக்காரர்கள் தம்மிடம் கூறப்பட்ட வார்த்தையை அவர்களுக்குச் சொல்லப்படாத வேறு வார்த்தையாக மாற்றிக் கொண்டார்கள்; ஆகவே அக்கிரமங்கள் செய்தவர்கள் மீது - (இவ்வாறு அவர்கள்) பாபம் செய்து கொண்டிருந்த காரணத்தினால் வானத்திலிருந்து நாம் வேதனையை இறக்கிவைத்தோம். (2:59) | அவர்களில் அநியாயம் செய்தவர்கள் அவர்களுக்கு கூறப்பட்டதை வெறொரு சொல்லாக மாற்றி விட்டார்கள்; எனவே அவர்கள் அநியாயம் செய்ததின் காரணமாக அவர்கள் மீது நாம் வானத்திலிருந்து வேதனையை இறக்கினோம். (7:162) |
And remember We said: "Enter this town, and eat of the plenty therein As ye wish; but enter The gate with humility, In posture and in words, And We shall forgive you your faults And increase (the portion of) Those who do good." But the transgressors Changed the word from that Which had been given them; So we sent on the transgressors A plague from heaven, for that they infringed (Our command) repeatedly. [S. 2:58-59] | And remember it was said to them: "Dwell in this town And eat therein as you wish, But say The word of humility and enter the gate In a posture of humility: We shall forgive you Your faults; We shall increase (The portion of) those Who do good." But the transgressors among them Changed the word from that Which had Been given them So we sent on them a plague from heaven For that they repeatedly transgressed. [S. 7:161-162] |
யூசுப் அலி அவர்களின் பின்குறிப்பு:இந்த அதிகாரத்தின் 58 மற்றும் 59ம் வசனங்களை, குர்ஆன் 7 :161-162 வசனங்களோடு நாம் ஒப்பிட்டால், இரண்டு எழுத்து வித்தியாசங்களை நாம் காணலாம். இங்கு (2:28ம் வசனத்தில்) "பட்டனத்திற்குள் நிழைந்து" என்று வருகிறது, மற்றும் குர்ஆன் 7:161ல் "நீங்கள் இவ்வூரில் வசித்திருங்கள்" என்று வருகிறது. அதே போல, குர்ஆன் 2:59ம் வசனத்தில் நாம் "infringed (Our command)" என்று உள்ளதை காணலாம் மற்றும் குர்ஆன் 7:162ம் வசனத்தில் " transgressed" என்று வருகிறது. இப்படி வார்த்தைகளில் வித்தியாசம் இருந்தாலும், சொல்லப்பட்ட செய்தியின் பொருளில் வித்தியாசம் இல்லை. (Ali, The Holy Quran-Translation and Commentary, p. 31, f. 72)
A. Yusef Ali's footnote:These verses, 58-59, may be compared to vii. 161-162. There are two verbal differences. Here (ii. 58) we have "enter the town" and in vii. 161 we have "dwell in the town." Again in ii. 59 here we have "infringed (Our command)," and in vii. 162, we have "transgressed." The verbal differences make no difference to the sense. (Ali, The Holy Quran-Translation and Commentary, p. 31, f. 72)
Source
Posted by உண்மை அடியான் at 10:07 AM 0 comments
Posted by உண்மை அடியான் at 5:44 PM 0 comments
Labels: allah, Christians, ISLAM-இஸ்லாம்
கேரளாவில் உள்ள கொல்லம் பகுதியில் ஒரு இஸ்லாமிய மௌலவியின் மகளான நசீலா பீவி என்ற முஸ்லீம் பெண் இயேசு கிறிஸ்துவை ஏற்ற்குக்கொண்டது எப்படி என்று அவரே சொல்லுகிறார் கேளுங்கள்
nazeela beevi 1
|
|
|
|
|
|
HOME PAGE |
தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு
1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1
2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2
3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3
4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4
1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1
2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2
1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்ஆன் உமர் பதில்
2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்ஆன் பதில்
Subscribe to இஸ்லாம் உண்மைகள் |
Visit this group |
Christian News Service - Worthy News
My blog is worth $3,387.24.
How much is your blog worth?