கதியா தான் முகதுவினால் முதலாக இஸ்லாமிற்கு மாற்றப்பட்டவள். அதன் பின்பு முகமது ஜனங்களுக்கு அல்லாவைப்பற்றி கூறத்தொடங்கினான். ஆரம்பத்தில் முகமதுவை அநேகர் ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக மெக்காவிலே முகமதுவிற்கு எதிர்ப்பு வந்தது. அதனால் மெதினாவுக்கு முகமதுவும், முகமதுவின் ஆட்களும் தப்பியோடினார்கள். மெதினாவிலே முகமதுவினுடைய போதனைக்கு வரவேற்பு இருந்தது. 8 வருடங்களுக்கு பின்பு முகமது மெக்கவை கைப்பற்றினான். இப்போது மெக்கா ஒரு புனித நகரமாக விளங்குகின்றது.
முகமதுவையும், குர்-ஆனையும் அன்று வாழ்ந்த கிறிஸ்தவர்களும், யூதர்களும் ஏற்றுக்கொள்ளவவில்லை. இன்றும், என்றும் ஏற்றுக்கொள்ளவில்லை.
கிறிஸ்துவுக்கு பின்
571: முகமது பிறப்பு
623: முகமது மெதீனாவுக்கு செல்லுதல்
631: முகமதுவினால் மெக்கா கைப்பற்றப்பட்டது
633: முகமதுவின் மரணம்
குர்-ஆன்- அறிமுகம்
முகமதுவினுடைய காலத்தில் குர்-ஆன் எழுதப்படவில்லை. முகமதுவுக்கு எழுதப்படிக்கவும் தெரியாது. முகமதுவினுடைய மரணத்திற்கு பின்னர், அவருடைய போதனைகளை குறித்து பல வித்தியாசமான கருத்துக்கள் இருந்தது. முகமதுவின் வார்த்தைகள் அழிந்து விடுமோ, மாற்றப்பட்டுவடுமோ என்று கருதினர்.
கி.பி 634 அளவில் யமாமா எனும் போரில் முகமதுவின் வார்த்தைகளை கேட்ட அநேகர் கொல்லப்பட்டுவிட்டதனால், சையத் பின் தபீத் என்பவரை நியமித்து அலி என்ற கலிபா குர்-ஆன் வாக்கியங்களை தொகுக்க கட்டளையிட்டார். அலியின் மரணத்தின் பின்பு கலிபா உத்மான் அரேபியாவை ஆணடார்.
குவைது என்ற போர்வீரன் உத்மானிடம் குர்-ஆன் வாக்கியங்களை குறித்து பேசினான். அதன் பின்பு அவர் 14 பேர் கொண்ட ஒரு குழுவை நியமித்து, குர்-ஆன் வாக்கியங்களை சேகரிக்க முயன்றார். முகமது வாய் வழியாக சொன்னவற்றை கேட்ட அநேகர் வந்து முகமது இதையெல்லாம் என்று சொன்னார்கள். அதிகளவு ஜனங்கள் வந்ததனால், இனி யாரும் குர்-ஆன் வாக்கியங்களை கொண்டுவர வேண்டாம் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அதுவரை சேகரித்த வாக்கியங்களை எல்லாம் தொகுத்து அமைத்தனர். இந்த நிகழ்ச்சி கி.பி 650- 656 வரையில் நடந்தது. குர்-ஆனின் தொகுப்பில் எவை சேர்க்கப்பட வேண்டும், எவை சேர்க்கப்பட கூடாது என்று உத்மான் கட்டளையிட்டார். அதிகாரப்பூர்வமான குர்-ஆன் ஒன்று தான் இருக்க வேண்டுமென்று இப்படி செய்யப்பட்டது.
தன் காலத்தில் கொடுக்கப்பட்ட குர்-ஆனின் பிரதியை ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் அனுப்பி இதற்கு முன்னர் கொடுக்கப்பட்ட, அல்லது அப்படி கருதப்படுகின்ற எந்த குர்-ஆன் வசனங்களையும், எழுத்துக்களின் முழு கையெழுத்துப்பிரதிகளையும், அல்லது துண்டுப்பகுதிகளாக இருப்பினும் அவற்றையும் எரித்து விட வேண்டுமென்று உத்மான் கட்டளையிட்டார். (ஆதாரம்: அல் புகாரி 6: 479)
இப்படித்தான் குர்-ஆன் உருவாகியது.
ஹதீஸ்- அறிமுகம்
இஸ்லாமியர்கள் குர்-ஆனிற்கு எந்தளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ, அதே அளவு முக்கியத்துவம் ஹதீஸ் கலைக்கும் கொடுக்கின்றார்கள். ஹதீஸ்- இல் முகமது நபியினுடைய உரைகள், செயல்கள் (வாழ்க்கை), அவர் அனுமதித்த காரியங்கள் ஆகியவைகள் அடங்கியுள்ளது.
உலகத்திலுள்ள அனைத்து இஸ்லாமியர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹதீஸ் நபிமொழிகள்:
ஸஹீஹ் அல்புகாரி (100 சத விகிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டதும், நடைமுறையில் இருப்பதும்)
ஸஹீஹ் முஸ்லிம்
சுனன் இப்னுமாஜா
சுனன் அபுதாவூது
ஜாமி உத் திர்மிதீ
சுனன் நஸாஜி
இவற்றில் குர்ஆனுக்கு அடுத்து ஆதாரப்பூர்வமானது என அனைத்துத் தரப்பினராலும் அ';கீகரிக்கப்பட்டுள்ளது ஸஹீஹ் அல்புகாரி ஆகும். புகாரா என்னும் ஊரில் பிறந்த இமாம் முஞம்மது பின் இஸ்மாயீல் என்பவரால் வகுக்கப்பட்டது தான்: ஸஹீஹ் அல்புகாரி எனும் நபி மொழி தொகுப்பு ஆகும்
Comment Form under post in blogger/blogspot