இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Monday, July 16, 2007

தமிழ் கிறிஸ்தவ இணையத்துக்கு இது தான் இஸ்லாம் பதில் 1

தமிழ் கிறிஸ்தவ இணையத்துக்கு இதுதான் இஸ்லாம் ப்தில் அளிப்பாதாக கூறி ஒரு கேள்வி எழுப்பி உள்ளது அதன் விளக்கத்தை கீழே காணலாம்.


தமிழ் கிறிஸ்டியன் இணையத்திற்கு பதில் - 1
எது சத்தியம்? -1 (தமிழ் கிறிஸ்டியன் இணையத்திற்கு பதில்)
G.N
அன்பானவர்களே... இறைவனுக்கு பிரியமானவர்களாக வாழ்ந்து இறைவனுக்கு பிரியமானவர்களாக மரிப்பதே மேல்.

இறைவனின் வார்த்தையை விசுவாசித்து அவன் வார்த்தைக்கு கட்டுப்பட்டு நடப்பதன் வழியாகவே நாம் இறைவனுக்கு உவப்பானவர்களாவோம்.

இறை விசுவாசத்தைத் தீர்மானிப்பதில் ஆன்மீகவாதி என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு மத்தியில் பல மாறுபாடுகள் நிலவுகின்றன.

பிறவற்றை விட்டு விட்டு இஸ்லாம் மற்றும் கிறிஸ்த்தவத்திற்கு மத்தியில் உள்ள பிரச்சனைகளை அலசும் முகமாக இந்த விவாதம் துவங்கியுள்ளது.
நானொரு முஸ்லிம். குர்ஆனை இறைவேதம் என்று நம்புபவன். வெறும் நம்பிக்கையுடன் நின்றுவிடாமல் அதன் வார்த்தைகளை முடிந்தவரை - என் அறிவுக்கு எட்டியவரை - விளங்கி வருபவன்.
முஹம்மத் மக்காவில் பிறந்தவர். தன்னை இறைத்தூதர் என்று அவர் சொன்ன பொழுதுகளில் அவர் பிறந்த பூமி சிலைவணக்கங்களாலும் - தீய செயல்களாலும் நிறைந்திருந்தன. அந்தப் பொழுதுகளில் திருக்குர்ஆன் முன்வைத்த வாதங்கள் அனைத்தும் அவர்களைப் பற்றியும் அதேக் கொள்கையை சரிகண்டுக் கொண்டிருந்தவர்கள் - இருப்பவர்கள் பற்றியும், அவர்கள் எவ்வளவு தவறான வழியை தெரிவு செய்து தன்னை இறை நிராகரிப்பின் பக்கம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது பற்றியும் அதிலிருந்து சிந்தித்து மீண்டு வரும் வழிகளையும் முன்வைத்தது.
இறைவனால் இறைத்தூதராக ஆக்கப்பட்டு தன் பணியைத்துவங்கிய முஹம்மத் அவர்கள் பிறகு மதினா செல்கிறார்கள். அங்கு வாழ்ந்த பிற சமூகங்களை சந்திக்கின்றார்கள். அந்த சமுதாய மக்கள் விசுவாசத்தால் முந்தியவர்கள் என்று தங்களைக் கூறிகொண்டிருந்தவர்கள். அவர்கள் யூதர்களும் - கிறிஸ்த்தவர்களுமாவர்.

அநத சமூகங்களுக்கு வந்த இறைத்தூதர்களைப் பற்றியும் அவர்களின் பணிப்பற்றியும் குர்ஆன் பேசத்துவங்கியதும், அந்த சமுகங்கள் செய்த தவறுகளையும் குர்ஆன் சுட்டிக்காட்டத்துவங்கியது. அதில் முக்கிய இடம் பிடிப்பதுதான் இறைத்தூதராக வந்த இயேசு இறைமகனாக மாற்றப்பட்ட விபரம்.

முந்தைய வேதங்களை - மோசேவுக்கு அவருக்கு முன் வந்தவர்களுக்கு, இயேசுவுக்கு கொடுக்கப்பட்ட வேதங்களை நம்பவேண்டும் என்று கட்டளையிடும் குர்ஆன் அந்த வேதங்களின் நிலை என்னவாகியது என்பதையும் சுட்டிக் காட்டத்தவறவில்லை. வேதங்களை இறக்கியவனின் ஒப்புதல் இல்லாமல் அவன் வார்த்தைகள் பிறரால் மாற்றங்களுக்கு உள்ளாக்கப்பட்டதால் எவ்வித மாற்றங்களுக்கும் உட்படாத ஒரு வேதத்தை இயேசுவை அனுப்பிய அதே இறைவன் முஹம்மதுக்கு இறக்கி வைத்தான்.
பிற வேதங்களை நம்ப சொல்லும் அதே வேளை அந்த வேதங்களில் மாற்றங்கள் ஏற்பட்டு விட்டது என்ற குர்ஆனின் வாதம் தான் பிறர் வேதமாக நம்பிக்கொண்டிருக்கும் பைபிளை ஆய்வு செய்யும் நிலையை இஸ்லாமிய அறிஞர்களுக்கு ஏற்படுத்தியது. உலகலாவிய அளவில் இது ஒரு பணியாகவே நடந்துக் கொண்டிருந்தாலும் தமிழகத்தைப் பொருத்தவரை இந்த பணி மிக மிக மிகக் குறைவாகும்.

என் போன்றவர்களை பைபிளைப் படித்து அதன் நிலையை உணர செய்ய தூண்டுகோலாக அமைந்தவர் சென்னையை சேர்ந்த மெய்வழிப் பத்திரிக்கை ஆசிரியர் ஜெபமணியாவார்.

இவர் இஸ்லாத்தைப் பற்றி தப்பும் தவறுமாக எழுத துவங்கியது இஸ்லாமிய அறிஞர்களை விழிப்படைய செய்தது.

அவர்கள் பைபிளை அலசத்துவங்கினார்கள். எழுதத்துவங்கினார்கள். நேரடி விவாதத்திற்கு அழைப்பு விட்டார்கள். கிறிஸ்த்தவர்கள் சார்பாக அதே ஜெபமணி கலந்துக் கொண்டார். இஸ்லாத்திற்காக விவாத அழைப்பு விட்ட அறிஞர் பிஜே கலந்துக் கொண்டார்.

மதுரையில் சில நாட்கள் அந்த விவாதம் நடந்தது. அந்த விவாதத்தில் கிறிஸ்த்தவ தரப்புப் பற்றி எதுவும் சொல்வதற்கில்லை. (அந்த விவாத சீடிகளை கிறிஸ்த்தவர்கள் மிக அவசியமாக பார்க்க வேண்டும் என்று பரிந்துரைக்கின்றேன். விவாதம் செய்ய ஜெபமணி தகுதியானவர் அல்ல என்று உங்களில் பலர் கருதலாம். ஜெபமணிக்காக இல்லாவிட்டாலும் இஸ்லாத்தின் தரப்பில் பைபிள் குறித்து எடுத்து வைக்கப்பட்ட வாதங்கள் உஙகள் சிந்தனைக்கு பெரும் சவாலாக அமையும்.

அதன் தொடர்ச்சியாகவே இயேசு பற்றி பைபிள் நிலவரங்களை கூடுதலாக கவனம் செலுத்தத் துவங்கினோம். காழ்ப்புணர்ச்சிகளுக்கோ வெறுப்புணர்ச்சிகளுக்கோ இடமளிக்காமல் ஒரு சராசரி மனநிலையோடுதான் அன்றிலிருந்து இன்றுவரை நமது பைபிள் குறித்த சிந்தனை நீடிக்கின்றது.
பைபிள் இறைவேதமாக இருக்க முடியாது என்ற சிந்தனைக்கு நாம் முரட்டுத்தனமாக வரவில்லை. பைபிளை ஊன்றிப்படித்த பிறகே அந்த சிந்தனைக்கு வந்தோம்.

அதனால் தான் இயேசு குறித்த நிலவரங்களை மக்கள் மன்றத்தில் வைப்பதற்காக 'இயேசுவுக்கு நேர்ந்ததென்ன" என்ற வரலாற்றுத் தொடரை துவங்கினோம். அது குறித்து கிறிஸ்த்தவ சகோதரர்கள் சிலர் விவாதத்திற்காக நம்மோடு இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது.
இந்த விவாதம் ஒரு முடிவை நோக்கி நம்மை இட்டு செல்லாவிட்டாலும் பரவாயில்லை. வேதங்களை இன்னும் ஆழமாக அணுகி அலசி பார்க்க ஒரு வாய்ப்பாக அமையட்டும்.

இதுதான் இஸ்லாம் இணையத்திற்கு மறுப்பு பல இணையங்களில் வந்தாலும் (ஒரே மறுப்பு பல இணையங்களில் பிரசுரிக்கப்படுகின்றது) நாம் 'தமிழ் கிறிஸ்டியன்" இணையத்தை நம்மோடான நேரடி விவாதக்களமாக எடுத்துக் கொள்வோம். இதற்கு அவர்கள் உடன்பட்டு தங்கள் ஒப்புதலை அளிக்கட்டும்.
ஒப்புதல் கேட்பதற்கு கூட காரணம் இருக்கின்றது.

உமர் என்றப் பெயரில் எழுதும் சகோதரர் ஜுலை 6ம் தேதி செய்த பதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாம் இரு பிரிவினரும் ஒற்றுமையாக இருந்து, நம் இருவர் கருத்துக்களை பரிமாறிக்கொள்ள இந்த கட்டுரைகள் நமக்கு உதவியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

இஸ்லாமிய சகோதரர்கள் "கிறிஸ்த்தவ இணையம் மறுக்கின்றது" என்று தலைப்பு கொடுத்துயிருந்தார்கள்.

இந்த மறுப்புக் கட்டுரைகள், எழுதும் நபருடைய சொந்த கருத்துக்கள் என்றும், இதில் சொல்லப்பட்ட செய்திகளுக்கு இந்த http://www.tamilchristians.com/ தளம் பொருப்பு வகிக்காது என்றும் நான் தெரிவித்துக்கொள்கிறேன். மேற் கொண்டு இத்தளத்தின் நிர்வாகம் எடுக்கும் முடிவுகளுக்கு நான் கட்டுப்பட்டு செயல்படுவேன் என்று உறுதி கூறுகிறேன்.

இவரது கருத்துக்களுக்கு இணையத்தளம் பொருப்பு ஏற்காது என்றால் எதை நம்பி எழுதத்துவங்குவது என்பது கேள்வி.

இணையத்தின் நிர்வாகம் பொருப்பேற்கும் கருத்துக்களே இணையத்தில் பதிக்கப்பட வேண்டும். (இதுதான் இஸ்லாம் இதே நிலையில் தான் உள்ளது).நாங்கள் பொருப்பேற்க மாட்டோம் ஆனால் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பதித்து விட்டுப் போகலாம் என்று ஒரு மன்ற நிர்வாகம் அலட்சியப்படுத்தக் கூடாது.

உமர் என்பவரோ அல்லது பிற சகோதர சகோதரிகளோ யாராக இருந்தாலும் அவர்களின் பதிப்புக்கு மன்றமும் பொருப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். நிர்வாக ரீதியான ஒத்துழைப்பு மிக அவசியமாகும்.

நிர்வாகத்தின் நிலைப்பாட்டை மன்றத்தில் பதியுங்கள். தொடர்வோம்
எங்கள் தொடர்பு அஞ்சல்.
totmpage@gmail.com

(முக்கிய குறிப்பு: இதுதான் இஸ்லாம் இல்லாத மெயில் ஐடிகளை கேள்வி பதிலில் பயன்படுத்தியுள்ளதா... என்பது பற்றிய உங்கள் பதிவுக்கு உங்கள் ஒப்புதலுக்கு பிறகு விளக்கமளிப்போம். தேவன் நாடட்டும்)
உங்களின் அஞ்சல் முகவரியை வெளியிடுங்கள்.

Friday, July 13, 2007

இது தான் இஸ்லாம் பொய் சொன்னதா?????

இது தான் இஸ்லாம் வெப்சைட் வெளியிட்ட கிறிஸ்தவம் கேள்வி பதில் என்ற கட்டுரை நம் பிலோஜில் பதியப்பட்டிருந்தது.
ஆனால் இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டிருந்த அனைத்து இமெயில் ஐடிகளும் தவறானவை என்று தமிழ் கிறிஸ்தவர் வெப்சைட் குற்றம் சாட்டி உள்ளது தை பற்றி கீழே காணலாம்.

http://www.tamilchristians.com/modules.php?name=Forums&file=viewtopic&p=2123#2123

Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம் தளம்

அன்புள்ள மனித இனமே வணக்கம், "இது தான் இஸ்லாம்" தளம் இயேசுவின் வரலாறு என்று ஐந்து தொடர் கட்டுரையை எழுதியது. பைபிளைப் பற்றி தவறான தகவல்கள் கொடுத்து இருந்தார்கள். நான் அதற்கு மறுப்பு எழுதினேன்.

இக்கட்டுரைகளுக்கு மறுப்பு தெரிவிப்பதற்கு பதிலாக "இது தான் இஸ்லாம்" தளம் "கிறித்துவம் கேள்வி பதில்" என்ற தலைப்பில் நான்கு கேள்விகள் அதற்கு இஸ்லாம் முறையில் பதில் கொடுத்து இருந்தார்கள்.

இந்த நான்கு கேள்விகள் வித்தியாசமான ஈ-மெயில் அட்ரஸ் மூலமாக தங்கள் தளத்திற்கு கேள்விகளாக வந்ததாக சொல்லி, அந்த ஈ-மைல் அட்ரஸ் கூட கொடுத்து இருந்தார்கள். இதோ அந்த நான்கு ஈ-மெயில் அட்ரஸ்கள் மற்றும் கேள்விகள்: Source : http://idhuthaanislam.blogspot.com/2007/07/blog-post_12.html

1. இஸ்லாத்திற்கும் கிறிஸ்த்துவத்திற்கும் உள்ள வேறுபாடுகளை கிறிஸ்த்துவர்களிடம் விளக்குவதாக இருந்தால் எப்படி விளக்குவது? irvanm(at)reedifmaildotcom

2. நீங்கள் இயேசுவை முஸ்லிம் என்று சொல்கிறீர்கள். அப்படியானால் கிறிஸ்த்துவத்தை யார் உருவாக்கியது? kabmabulattyahoodotcom

3. முஸ்லிம்கள் குர்ஆனை holy quran என்கிறோம் கிறிஸ்த்தவர்கள் பைபிளை holy bible என்கிறார்கள் கிறிஸ்த்தவர்களின் அந்த நம்பிக்கையை நாம் மறுக்கலாமா..? rafeeqrauoofa(att)gmaildotcom

4. கிறிஸ்த்தவர்களை முஸ்லிம்களாக மாற சொல்வதை என் கிறிஸ்த்தவ நண்பர் மறுக்கிறார். ஆப்ரஹாமின் வழித்தோன்றல்களாகிய நமக்கு மத்தியில் இந்த பாகுபாடு ஏன் என்று கேட்கிறார். என்ன பதில் சொல்வது? mmsafi20(att)hotmaildotcom

இந்த நான்கு ஈ-மெயில் அட்ரஸ்களும் ஒரு பொய்யான ஈமெயில் அட்ரஸ்கள்.

இந்த நான்கு e-mail Id களும் பொய்யானவை என்று எனக்கு எப்படி தெரியும்? இந்த நான்கு அட்ரஸ்களும் பொய்யானவை, ஏனென்றால், இந்த நான்கு அட்ரஸ்களையும் நான் தான் இப்போது உருவாக்கினேன்.

இனி இந்த நான்கு ஈ-மெயில் முகவரிகளும் என் Mail Idக்கள்.

a) irvanm@rediffmail.com

b) kabmabul@yahoo.com

c) rafeeqrauoofa@gmail.com

d) mmsafi20@hotmail.com

(உங்களுக்கு சந்தேகம் இருந்தால், ஏதாவது ஒரு செய்திய இந்த ஐடிக்களுக்கு அனுப்பவும், அந்த செய்தியை இந்த பதிவில் நான் மெயிலிலிருந்து எடுத்து தருகிறேன்.)

இது எப்படி சாத்தியம் ? உண்மை என்னவென்றால், இப்படி அவர்களுக்கு கேள்விகளும் வரவில்லை, இப்பெயர் கொண்ட மெயில் முகவரிகளும் இல்லை. ஒரு சர்வரில் ஒரே பெயரில் இரண்டு முகவரிகள் இருக்க வாய்ப்பு இல்லை.

( இதைப் பற்றி ஏதாவது புதிய தகவல் இருந்தால் எனக்கு தெரியபடுத்தவும்).

இது தான் இஸ்லாமா ? அல்லது இது தானா இஸ்லாம்:

இதை படிப்பவர்கள் யாராக இருந்தாலும் சரி, சிந்தியுங்கள். நேர்மையுள்ளவர்கள், நீதியுள்ளவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் இவர்கள், இப்படி செய்யலாமா ?

ஏன் பொய்யானா முகவரியிலிருந்து கேள்விகள் வந்தது என்றுச் சொல்லவேண்டும் ?

அவர்களாகவே, இதே கேள்விகளை கொடுத்து பதில் தரலாம் இல்லையா? இதில் என்ன தவறு இருக்கிறது ?

சரி, கொடுத்தது கொடுத்தீர்கள், உங்கள் நண்பர்களது முகவரியையாவது கொடுக்கலாம் இல்லையா?

(at Worst Case :இன்னும் சொன்னால், ஏன் ஒரு மணி நேரம் செலவழித்து இந்த நான்கு முகவரிகளையும் அவர்களே உருவாக்கி இருக்ககூடாது ?)

அவர்கள் முன்வைத்த கேள்விகளுக்கு பதில் பிறகு தருகிறேன். இது என்ன விளையாட்டு இறைவனுடைய ஊழியம் செய்யும் போது?

உங்களுக்கு எங்கள் மறுப்பு கட்டுரைக்கு பதில் தரமுடிந்தால் தாருங்கள், இல்லையானால், விட்டுவிடுங்கள்? ஏன் இஸ்லாமின் பெயரை , அல்லாவின் பெயரை மற்றும் ஒட்டு மொத்த இஸ்லாமியர்களின் பெயரை கெடுக்கவேண்டும் ?

நல்ல பெயர் எடுக்க பல வருடங்கள் ஆகலாம், ஆனால் கெட்ட பெயர் எடுக்க ஒரு நிமிடம் பொதும். இதை படிக்கும் இஸ்லாமியர்களே நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா?
இவர்களை கேட்கமாட்டீர்களா?

நேர்மை: நான் எழுதும் கட்டுரைகளில், மறுப்புகளில் பிழை இருக்கலாம், எழுத்து பிழை, வசன எண் பிழை, ஏன் குர்-ஆன் மற்றும் பைபிள் வசனத்தை நான் தவறாக புரிந்துக்கொண்டு எழுதிகூட இருக்கலாம். நான் படித்த, பார்த்த சில தளங்களில் சில தவறான கருத்துக்களை நான் சொல்லியிருக்கலாம்.
என் தவறை சுட்டுக்காட்டினால், நான் திருத்திக்கொள்கிறேன், ஒப்புக்கொள்கிறேன், தேவைப் பட்டால் என் வார்த்தைகளை திரும்பபெற்றுக்கொள்கிறேன்.

இவைகளை என் கட்டுரைகளின் கடைசியில் பதித்து வைக்கிறேன். நான் மனிதன், தவறு செய்ய வாய்ப்பு உள்ளது. எனவே, அதை திருத்திக்கோள்வதில் தான் வெற்றி உள்ளது.

"இயேசுவிற்கு அல்லது கிறிஸ்தவத்தை காப்பாற்றுவதற்கு நான் ஒரு பொய்யான தகவலை என் மனசாட்சிக்கு தெரிந்தே சொல்வதை காட்டிலும், என் கைகள் தங்கள் வேலையை இழந்தால், அது எனக்கு நலமாக இருக்கும்".

பொய் பித்தலாட்டத்தை இயேசு ஒப்புக்கொள்ள மாட்டார்.

இயேசு 30 வருடங்கள் வாழ்ந்த ஊரில் உள்ளவர்களைப் பார்த்து கேட்கும்

கேள்வி: என்னில் குற்றம் உண்டென்று உங்களில் யார் என்னை குற்றப்படுத்தக்கூடும் ?

அவரை நோக்கி ஒரு விரலும் எழும்பவில்லை. இது தான் இயேசு கிறிஸ்து. இனி அவர்கள் கட்டுரைகளில் உள்ள நேர்மையை இஸ்லாமியர்களே சிந்தியுங்கள்.

(நானோ அல்லது மற்ற கிறிஸ்தவர்கள் நல்லவர்கள் என்று நான் சொல்லவரவில்லை, அதற்காக சில கிறிஸ்தவர்கள் செய்யும் தவறுகளை இங்கு சொல்லவேண்டாம். ஆனால், இயேசு நல்லவர், அவரின் வழி சரியானது என்பதில் எனக்கு எந்த சந்தேகமுமில்லை)

வாய்மையே வெல்லும், சத்தியமேயே ஜயதே.

சத்தியத்தையும் அறிவீர்கள், அந்த சத்தியும் உங்களை விடுதலையாக்கும் - இயேசு.

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்