இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Wednesday, March 5, 2008

தமிழ் நாட்டில் ஒரு தீவிரவாத முஸ்லீம் கிறிஸ்தவரானது எப்படி?


அகமது

நான் தமிழ்நாட்டில்

உள்ள ஒரு பட்டணத்தில் ஒரு பாரம்பரிய வைராக்கியமான முஸ்லீம் குடும்பத்தில் 1967ம் ஆண்டு பிறந்தேன் . என்னுடைய தகப்பனார் A .G குலாம் ரசூல் , தாயார் G .ஷாஜதீ பேகம் . எனக்கு ஒரு இளைய சகோதரியும் உண்டு .

நான் பிறந்த போது என் தகப்பனாருக்கு

42 வயது , நான் 12 வயதாக இருக்கும் போது சுகவீனத்தின் நிமித்தம் என் தந்தை மரித்து விட்டார் . நாங்கள் உதவியற்று மிகவும் கஷ்ட்டப்பட்டோம் . தினசரி வாழ்க்கை நடத்துவதற்கே மிகவும் சிரமப்படவேண்டியிருந்தது. அந்தநிலையிலும் நானும் என் சகோதரியும் மாநகராட்சி பள்ளியிலும் மதரஸாவிலும் பயின்று வந்தோம் . மத சம்பந்தமான எல்லா சடங்குகளிலும் , சட்டங்களிலும் வளர்க்கப்பட்டோம் .

எங்களுடைய தினசரி

வாழ்க்கைக்காக நான் மிகவும் பாடுபட வேண்டியிருந்தது. ஹோட்டல் சுத்தம் செய்வது , கார் சுத்தம் செய்வது , சாயப்பட்டறை , பிரிண்ட்டிங் பிரஸ் மற்றும் தொழிற்சாலைகளில் வேலை செய்தும் , சிறு வகுப்புமாணவர்களுக்கு டியூஷன் எடுத்தும் நான் பணம் சம்பாதிக்கத் தொடங்கினேன் . என்னுடைய வகுப்பில் எல்லா பாடங்களிலும் முதல் மதிப்பெண்கள் எடுத்தேன் . ஆனால் ஒரு பிரபலமான கம்பெனியில் நான் வேலையாளாக சேர்ந்தேன் ( ஆசியன் பெயிண்ட் (இந்தியா லிமிட்டெட்)

இதன் மூலம் எப்படியாவது என் வாழ்க்கையை உயர்த்திவிட முடியும் என்று நான் எண்ணினேன்

. ஆனால் முஸ்லீம் மதத்தீவிரவாதிகள் மூலம் பெரிய ஆபத்தில் சிக்கிக்கொண்டேன் . அவர்கள் என்னிடத்தில் நெருக்கமாக பழக ஆரம்பித்ததினால் நான் வெகுவிரைவில் உணர்ச்சிப்பூர்வமாக அவர்களைப் பின்பற்றி, அவர்கள் பின் அலைய ஆரம்பித்தேன் . 1990 ல் நான் ஒரு தீவிரவாத அமைப்பில் உறுப்பினராகவும் , காரியதர்சியாகவும் இருந்தேன் . இந்த வருடத்தில் இந்து - முஸ்லீம் பிரச்சினை பெரிய அளவில் வெடித்துக்கொண்டிருந்தது. எங்களுடைய அமைப்பில் இருந்து சில வாலிபர்கள் இன்னும் தீவிரமாக மாறி அல் ஜிகாத் ல் தங்களை இணைத்துக் கொண்டனர் . என்னுடைய குலம் மற்றும என்னுடைய மூதாதையர் நிமித்தம் அவர்கள் எனக்கு ஒரு பெரிய பதவியையும் அளித்தனர். துன்மார்க்கத்தின் ஆவி இந்தக் குழுக்களை ஆண்டுகொண்டிருந்தது, நானும் அதிலே தள்ளப்பட்டிருந்தேன் .

இந்து

-முஸ்லீம் பிரச்சினை பெரிய அளவில் உருவானது , நானும் அதிலே பங்கு வகித்திருந்தேன் .ஆனால் என்னை நல்லவன் போலக் காட்டிக்கொண்டேன் . இதற்கிடையில் என்னுடய சகோதரிக்கு ஒரு முஸ்லீமோடு திருமணம் நடைபெற்றிருந்தது. இந்த சம்பவங்கள் வரை நான் பாவம், மீட்பு ,இரட்சிப்பு , பாவமன்னிப்பு , நித்திய வாழ்க்கை ஆகிய இவைகளைப் பற்றி எந்த தெளிவும் இல்லாமல் இருந்தேன் .ஏனென்றால் நான் 22 வயதாகும் வரை இவைகளைப் பற்றி ஒரு சிறு வார்த்தைக் கூட கேட்டதேயில்லை. முற்றிலும் சமாதானத்தை இழந்தவனாக வாழ்க்கையின் அர்த்தத்தை உணரமுடியாமல் அலைந்தேன் . மிகவும் குழம்பிப்போன நான், தற்கொலை செய்து கொள்ளவும் தீர்மானித்திருந்தேன் .

ஒரு நாள்

, செப்டம்பர் 20, 1992 ல் நான் சென்னைக்கு போகவேண்டியிருந்தது இரவு பிராயணத்திற்காக திருச்சி பஸ்டாண்டில் நின்று கொண்டிருந்தேன் , அப்போது ஒரு நபர் என்னிடம் ஒரு கைப்பிரதியைக் கொடுத்தார் , அதின் தலைப்பு இப்படியாக இருந்தது "இயேசு சிலுவையில் அடிக்கப்பட்டாரா? " , தமிழில் அச்சடிக்கப்பட்டிருந்த அதில் குர் ஆன் வசனத்துடன் வேதத்தை விளக்கி எழுதியிருந்தனர் . உடனடியாக அதின் முகவரியைப் பார்த்தேன் வேகமாக பஸ்ஸைப் பிடித்து அவர்களுடைய வீட்டை சென்றடைந்தேன் . அங்கே ஒரு தம்பதியனர் என்னை வரவேற்றார்கள். காலை உணவுக்குப் பிறகு இயேசு கிறிஸ்துவின் சுவிஷேசத்தை என்னோடு பகிர்ந்து கொண்டார்கள் , முதல் முறையாக ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தைகளை கேட்ட போது எனக்குள்ளே வித்தியாசமான உணர்வுகள் ஏற்பட்டது . இயேசு கிறிஸ்து என் பாவங்களுக்காக மரித்தார் , அவர் என் பாவங்களை மன்னிக்கிறார் , புது வாழ்வு, நம்பிக்கை , நித்திய வாழ்க்கையை கொடுக்கிறார் என்ற உண்மையை எடுத்துக் கூறினர் .

நான் வேதாகமத்தை வாசிக்க ஆரம்பித்தேன்

, விஷேசமாக புதிய ஏற்பாட்டை வாசித்தேன் . கொஞ்சம் கொஞ்சமாக தேவனுடைய வார்த்தையின் ழூலமாக என்னுடைய வார்த்தை , வாழ்க்கை மற்றும் சிந்தையில் மாற்றம் ஏற்பட்டது . தேவனுடைய கிருபையினால் இயேசு கிறிஸ்து ழூலமாக நான் எப்படி மீட்கப்பட்டேன் என்பதை உணர்ந்து கொண்டேன் .

என்னுடைய தாயார்

, சகோதரி , அவளுடைய கணவன் மற்றும் என்னுடைய நண்பர்கள் எல்லாரும் என்னை பரிகாசம் செய்தனர் . இறுதியாக என்னுயை தாயார் என்னை வீட்டை விட்டு வெளியேறும் படிக் கூறினார்கள் .அந்த இரவிலே நான் வீட்டை விட்டு வெளியேறி திருச்சிக்கு சென்றேன் , அங்கே அந்த தம்பதிகள் வசித்து வந்தனர் . அவர்களோடு 15 நாள் தங்கினேன் . தேவன் எனக்கு ஜெபிக்க கற்றுக்கொடுத்தார் , உள்ளான மனிதனை பெலப்படுத்தி ஆவியில் களிகூறச் செய்தார் .

ஒரு நாள் அப்படி நான் ஜெபித்துக் கொண்டிருந்த போது அவருடைய ஊழியத்திற்காக ஜெபிக்கும்படியான பாரத்தை என் உள்ளத்தில் தந்தார்

. என்னை தேவ ஊழியத்திற்கு ஒப்புக்கொடுத்தேன் , மே 7 , 1993 ல் நான் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டேன் . தேவனுடைய சித்தப்படி இந்தியாவில் உள்ள ஒரு பெரிய வேதாகமக் கல்லூரிக்கு 1993 வருடம் சென்று ழூன்று வருடம் இறையியல் (Bachealor of Thealogy )படித்தேன், தேவ கிருபையால் 1996 ஏப்ரல் -லில் படிப்பை முடித்தேன். (Grace Bible College, Haryana)

நான் வேதாகமக் கல்லூரிமுடித்து வந்தவுடனே சென்னையில் முஸ்லீம்களுக்கு மத்தியில் ஊழியம் செய்து கொண்டிருந்த ஒரு சுவிஷேசக் குழுவுடன் இணைந்து கொண்டேன்

. ஆகஸ்டு 20 , 1997 ல் இயேசுவை ஏற்றுக் கொண்ட ஒரு இஸ்லாமிய சகோதரி நூர்ஜகானோடு தேவன் என் திருமணத்தை ஏற்படுத்திக் கொடுத்தார் .

தேவன் எங்கள் திருமண வாழ்க்கையை ஆசீர்வதித்தார்

, முஸ்லீம்கள் மத்தியில் ஊழியத்திற்காக இருவரும் ஜெபித்தோம் தேவன் வாசலைத் திறந்தார் . அக்டோபர் ,1998 லிருந்து ஊழியம் செய்து வர கர்த்தர் கிருபை கொடுத்திருக்கிறார். தேவன் எங்களுக்கு இரண்டு ஆன் குழந்தைகளை முறையே மே 15, 1998 , ஆகஸ்டு 21 , 2004 ல் கொடுத்தார் . ( சாம் இம்மானுவேல் மற்றும் சந்தோஷ் மார்ட்டின் ) தற்போது எங்கள் முழுக்குடும்பம் , மாமியார் , மைத்துனர் ( இறையியல் படித்துக்கொண்டிருக்கிறார் ) தேவனுக்கு ஊழியம் செய்து வருகிறோம் . எங்களை எதிர்த்த மக்களுக்கு முன்பாக தேவன் எங்கள் நிலைமையை முழுவதும் மாற்றிவிட்டார் . அவரே ஜீவனுள்ள தேவன் என்று நாங்கள் சாட்சி கொடுத்து வருகிறோம் . எங்கள் குடும்பத்திற்காகவும் , ஊழியத்திற்காகவும் ஜெபிக்கும் படி வேண்டிக் கொள்ளுகிறோம் .

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்