இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Monday, July 16, 2007

இது தான் இஸ்லாம் வெப்சைட்டுக்கு ஈசா குர்ஆன் வெப்சைட் பதில்

அன்பான சகோதர சகோதரிகளே இது தான் இஸ்லாம் என்ற வெப்சைட்டில் அருமை இஸ்லாமிய சகோதரர்கள் இயேசுவுக்கு நேர்ந்ததென்ன என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டு இருந்ததை அனைவரும் அறிவோம்.
அந்தக் கட்டுரைக்கு ஈசா குர் ஆன் என்ற வெப்சைட் பதில் எழுதியது.அதன் பதிவை இதுதான் இஸ்லாம் வெளியிடாதபடியினால் தனியாக ஒரு blog கை உருவாக்கி (http://isakoran.blogspot.com/) அதில் தனது மறுப்பை அந்த நிர்வாகி வெளியிட்டார்.

இது வெப்சைட் மக்கள் அனைவருக்கும் செல்லும் விதமாக அநேக வலைப்பூக்களில் பதியப்பட்டது.

அந்தக் கட்டுரைக்கு பதில் தர வேண்டிய இது தான் இஸ்லாம் இப்பொழுது இந்த கட்டுரைக்கு சம்மந்தம் இல்லாத தமிழ் கிறிஸ்தவ வெப்சைட்டை விவாதத்துக்கு அழைக்கிறது.

பதியப்பட்டுள்ள கட்டுரைக்கு பதில் அளிக்க வேண்டிய கடமை இது தான் இஸ்லாம் தளத்துக்கு உண்டு.அந்த கட்டுரைக்காண பொறுப்பை ஈசா குர் ஆன் வெப்சைட் எடுத்துக்கொண்டுள்ளது.அதற்காண பதிவை அந்த வெப்சைட் வெளியிட்டு உள்ளது அதை காண்போம்.

http://isakoran.blogspot.com/

இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்.

அன்பு இஸ்லாமிய நண்பர்களுக்கு,
நான் (உமர்) தமிழ் கிறிஸ்டியன்ஸ் என்ற தளத்தில் ஒரு உறுப்பினன். மற்றும் என் கட்டுரைகள் முதலாவது இடம் பெற்றது என் தளமாகிய www.geocities.com/isa_koran என்ற தளத்தில் தான்.

தமிழ் கிறிஸ்டியன்ஸ் (www.tamilchristians.com) என்ற தளம் உள்ளதை தெரிந்துக்கொண்ட உடன், உறுப்பினனாகி என் கட்டுரைகளை அங்கும் வைத்தேன். நான் எழுதும் கட்டுரைகளுக்கு, மறுப்புக்களுக்கு அத்தள நிர்வாகத்திடம் நான் கேட்க மாட்டேன். அந்த தளம் கிறிஸ்தவர்களுடைய கருத்துக்களை பரிமாரிக்கொள்ள வைத்துள்ளார்கள்.

நான் என் முதல் "இயேசு வரலாறு -1 மறுப்புக் கட்டுரையை" உங்கள் (iduthaanislam.blogspot.com) தளத்தில் Comment டாக பதித்தேன், அதை பிரசுரிக்கவில்லை. எனவே தான் நான் ஒரு புதிய தளத்தை உருவாக்கவேண்டி வந்தது ( http://isakoran.blogspot.com).

கடைசியாக நான் சொல்லவிரும்புவது இது தான்:

1. எனக்கும் தமிழ் கிறிஸ்டியன்ஸ் தளத்திற்கும் எந்த நிர்வாக சம்மந்தமுமில்லை. நான் ஒரு உறுப்பினன் மட்டும் தான்.

2. என் பிரதானமான தளம் : www.geocities.com/isa_koran மற்றும் http://isakoran.blogspot.com

3. உங்களுக்கு விருப்பமானால் என் "மறுப்பு கட்டுரைகளுக்கு" மறுப்பை எழுதுங்கள், அல்லது விட்டுவிடுங்கள். அது உங்கள் விருப்பம். நீங்கள் பதில் தரவேண்டுமானால், "ஒரு நிர்வாகம் தன் ஒப்புதலை தரவேண்டும்" என்று நீங்கள் நினைத்தால், அது முடியாது.

4. என் கட்டுரைகளுக்கு மறுப்பு தெரிவித்தால், தெரிவியுங்கள், இல்லையானால், விட்டுவிடுங்கள். உங்கள் கருத்துக்களை நீங்கள் சொல்ல உங்களுக்கு உரிமை உண்டு என்று நீங்கள் எண்ணும் போது, நானும் என் கருத்துக்களை தெரிவிக்க எனக்கும் உரிமை உண்டு என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகின்றேன்.

5. ஒரு தளம் பொறுப்பேற்றால் தான் பதில் தருவேன் என்றால், அது உங்கள் விருப்பம். நான் ஒன்றும் கட்டாயப்படுத்தவில்லை.

தமிழ் கிறிஸ்தவ இணையத்துக்கு இது தான் இஸ்லாம் பதில் 1

தமிழ் கிறிஸ்தவ இணையத்துக்கு இதுதான் இஸ்லாம் ப்தில் அளிப்பாதாக கூறி ஒரு கேள்வி எழுப்பி உள்ளது அதன் விளக்கத்தை கீழே காணலாம்.


தமிழ் கிறிஸ்டியன் இணையத்திற்கு பதில் - 1
எது சத்தியம்? -1 (தமிழ் கிறிஸ்டியன் இணையத்திற்கு பதில்)
G.N
அன்பானவர்களே... இறைவனுக்கு பிரியமானவர்களாக வாழ்ந்து இறைவனுக்கு பிரியமானவர்களாக மரிப்பதே மேல்.

இறைவனின் வார்த்தையை விசுவாசித்து அவன் வார்த்தைக்கு கட்டுப்பட்டு நடப்பதன் வழியாகவே நாம் இறைவனுக்கு உவப்பானவர்களாவோம்.

இறை விசுவாசத்தைத் தீர்மானிப்பதில் ஆன்மீகவாதி என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு மத்தியில் பல மாறுபாடுகள் நிலவுகின்றன.

பிறவற்றை விட்டு விட்டு இஸ்லாம் மற்றும் கிறிஸ்த்தவத்திற்கு மத்தியில் உள்ள பிரச்சனைகளை அலசும் முகமாக இந்த விவாதம் துவங்கியுள்ளது.
நானொரு முஸ்லிம். குர்ஆனை இறைவேதம் என்று நம்புபவன். வெறும் நம்பிக்கையுடன் நின்றுவிடாமல் அதன் வார்த்தைகளை முடிந்தவரை - என் அறிவுக்கு எட்டியவரை - விளங்கி வருபவன்.
முஹம்மத் மக்காவில் பிறந்தவர். தன்னை இறைத்தூதர் என்று அவர் சொன்ன பொழுதுகளில் அவர் பிறந்த பூமி சிலைவணக்கங்களாலும் - தீய செயல்களாலும் நிறைந்திருந்தன. அந்தப் பொழுதுகளில் திருக்குர்ஆன் முன்வைத்த வாதங்கள் அனைத்தும் அவர்களைப் பற்றியும் அதேக் கொள்கையை சரிகண்டுக் கொண்டிருந்தவர்கள் - இருப்பவர்கள் பற்றியும், அவர்கள் எவ்வளவு தவறான வழியை தெரிவு செய்து தன்னை இறை நிராகரிப்பின் பக்கம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது பற்றியும் அதிலிருந்து சிந்தித்து மீண்டு வரும் வழிகளையும் முன்வைத்தது.
இறைவனால் இறைத்தூதராக ஆக்கப்பட்டு தன் பணியைத்துவங்கிய முஹம்மத் அவர்கள் பிறகு மதினா செல்கிறார்கள். அங்கு வாழ்ந்த பிற சமூகங்களை சந்திக்கின்றார்கள். அந்த சமுதாய மக்கள் விசுவாசத்தால் முந்தியவர்கள் என்று தங்களைக் கூறிகொண்டிருந்தவர்கள். அவர்கள் யூதர்களும் - கிறிஸ்த்தவர்களுமாவர்.

அநத சமூகங்களுக்கு வந்த இறைத்தூதர்களைப் பற்றியும் அவர்களின் பணிப்பற்றியும் குர்ஆன் பேசத்துவங்கியதும், அந்த சமுகங்கள் செய்த தவறுகளையும் குர்ஆன் சுட்டிக்காட்டத்துவங்கியது. அதில் முக்கிய இடம் பிடிப்பதுதான் இறைத்தூதராக வந்த இயேசு இறைமகனாக மாற்றப்பட்ட விபரம்.

முந்தைய வேதங்களை - மோசேவுக்கு அவருக்கு முன் வந்தவர்களுக்கு, இயேசுவுக்கு கொடுக்கப்பட்ட வேதங்களை நம்பவேண்டும் என்று கட்டளையிடும் குர்ஆன் அந்த வேதங்களின் நிலை என்னவாகியது என்பதையும் சுட்டிக் காட்டத்தவறவில்லை. வேதங்களை இறக்கியவனின் ஒப்புதல் இல்லாமல் அவன் வார்த்தைகள் பிறரால் மாற்றங்களுக்கு உள்ளாக்கப்பட்டதால் எவ்வித மாற்றங்களுக்கும் உட்படாத ஒரு வேதத்தை இயேசுவை அனுப்பிய அதே இறைவன் முஹம்மதுக்கு இறக்கி வைத்தான்.
பிற வேதங்களை நம்ப சொல்லும் அதே வேளை அந்த வேதங்களில் மாற்றங்கள் ஏற்பட்டு விட்டது என்ற குர்ஆனின் வாதம் தான் பிறர் வேதமாக நம்பிக்கொண்டிருக்கும் பைபிளை ஆய்வு செய்யும் நிலையை இஸ்லாமிய அறிஞர்களுக்கு ஏற்படுத்தியது. உலகலாவிய அளவில் இது ஒரு பணியாகவே நடந்துக் கொண்டிருந்தாலும் தமிழகத்தைப் பொருத்தவரை இந்த பணி மிக மிக மிகக் குறைவாகும்.

என் போன்றவர்களை பைபிளைப் படித்து அதன் நிலையை உணர செய்ய தூண்டுகோலாக அமைந்தவர் சென்னையை சேர்ந்த மெய்வழிப் பத்திரிக்கை ஆசிரியர் ஜெபமணியாவார்.

இவர் இஸ்லாத்தைப் பற்றி தப்பும் தவறுமாக எழுத துவங்கியது இஸ்லாமிய அறிஞர்களை விழிப்படைய செய்தது.

அவர்கள் பைபிளை அலசத்துவங்கினார்கள். எழுதத்துவங்கினார்கள். நேரடி விவாதத்திற்கு அழைப்பு விட்டார்கள். கிறிஸ்த்தவர்கள் சார்பாக அதே ஜெபமணி கலந்துக் கொண்டார். இஸ்லாத்திற்காக விவாத அழைப்பு விட்ட அறிஞர் பிஜே கலந்துக் கொண்டார்.

மதுரையில் சில நாட்கள் அந்த விவாதம் நடந்தது. அந்த விவாதத்தில் கிறிஸ்த்தவ தரப்புப் பற்றி எதுவும் சொல்வதற்கில்லை. (அந்த விவாத சீடிகளை கிறிஸ்த்தவர்கள் மிக அவசியமாக பார்க்க வேண்டும் என்று பரிந்துரைக்கின்றேன். விவாதம் செய்ய ஜெபமணி தகுதியானவர் அல்ல என்று உங்களில் பலர் கருதலாம். ஜெபமணிக்காக இல்லாவிட்டாலும் இஸ்லாத்தின் தரப்பில் பைபிள் குறித்து எடுத்து வைக்கப்பட்ட வாதங்கள் உஙகள் சிந்தனைக்கு பெரும் சவாலாக அமையும்.

அதன் தொடர்ச்சியாகவே இயேசு பற்றி பைபிள் நிலவரங்களை கூடுதலாக கவனம் செலுத்தத் துவங்கினோம். காழ்ப்புணர்ச்சிகளுக்கோ வெறுப்புணர்ச்சிகளுக்கோ இடமளிக்காமல் ஒரு சராசரி மனநிலையோடுதான் அன்றிலிருந்து இன்றுவரை நமது பைபிள் குறித்த சிந்தனை நீடிக்கின்றது.
பைபிள் இறைவேதமாக இருக்க முடியாது என்ற சிந்தனைக்கு நாம் முரட்டுத்தனமாக வரவில்லை. பைபிளை ஊன்றிப்படித்த பிறகே அந்த சிந்தனைக்கு வந்தோம்.

அதனால் தான் இயேசு குறித்த நிலவரங்களை மக்கள் மன்றத்தில் வைப்பதற்காக 'இயேசுவுக்கு நேர்ந்ததென்ன" என்ற வரலாற்றுத் தொடரை துவங்கினோம். அது குறித்து கிறிஸ்த்தவ சகோதரர்கள் சிலர் விவாதத்திற்காக நம்மோடு இணைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது.
இந்த விவாதம் ஒரு முடிவை நோக்கி நம்மை இட்டு செல்லாவிட்டாலும் பரவாயில்லை. வேதங்களை இன்னும் ஆழமாக அணுகி அலசி பார்க்க ஒரு வாய்ப்பாக அமையட்டும்.

இதுதான் இஸ்லாம் இணையத்திற்கு மறுப்பு பல இணையங்களில் வந்தாலும் (ஒரே மறுப்பு பல இணையங்களில் பிரசுரிக்கப்படுகின்றது) நாம் 'தமிழ் கிறிஸ்டியன்" இணையத்தை நம்மோடான நேரடி விவாதக்களமாக எடுத்துக் கொள்வோம். இதற்கு அவர்கள் உடன்பட்டு தங்கள் ஒப்புதலை அளிக்கட்டும்.
ஒப்புதல் கேட்பதற்கு கூட காரணம் இருக்கின்றது.

உமர் என்றப் பெயரில் எழுதும் சகோதரர் ஜுலை 6ம் தேதி செய்த பதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாம் இரு பிரிவினரும் ஒற்றுமையாக இருந்து, நம் இருவர் கருத்துக்களை பரிமாறிக்கொள்ள இந்த கட்டுரைகள் நமக்கு உதவியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

இஸ்லாமிய சகோதரர்கள் "கிறிஸ்த்தவ இணையம் மறுக்கின்றது" என்று தலைப்பு கொடுத்துயிருந்தார்கள்.

இந்த மறுப்புக் கட்டுரைகள், எழுதும் நபருடைய சொந்த கருத்துக்கள் என்றும், இதில் சொல்லப்பட்ட செய்திகளுக்கு இந்த http://www.tamilchristians.com/ தளம் பொருப்பு வகிக்காது என்றும் நான் தெரிவித்துக்கொள்கிறேன். மேற் கொண்டு இத்தளத்தின் நிர்வாகம் எடுக்கும் முடிவுகளுக்கு நான் கட்டுப்பட்டு செயல்படுவேன் என்று உறுதி கூறுகிறேன்.

இவரது கருத்துக்களுக்கு இணையத்தளம் பொருப்பு ஏற்காது என்றால் எதை நம்பி எழுதத்துவங்குவது என்பது கேள்வி.

இணையத்தின் நிர்வாகம் பொருப்பேற்கும் கருத்துக்களே இணையத்தில் பதிக்கப்பட வேண்டும். (இதுதான் இஸ்லாம் இதே நிலையில் தான் உள்ளது).நாங்கள் பொருப்பேற்க மாட்டோம் ஆனால் யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பதித்து விட்டுப் போகலாம் என்று ஒரு மன்ற நிர்வாகம் அலட்சியப்படுத்தக் கூடாது.

உமர் என்பவரோ அல்லது பிற சகோதர சகோதரிகளோ யாராக இருந்தாலும் அவர்களின் பதிப்புக்கு மன்றமும் பொருப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். நிர்வாக ரீதியான ஒத்துழைப்பு மிக அவசியமாகும்.

நிர்வாகத்தின் நிலைப்பாட்டை மன்றத்தில் பதியுங்கள். தொடர்வோம்
எங்கள் தொடர்பு அஞ்சல்.
totmpage@gmail.com

(முக்கிய குறிப்பு: இதுதான் இஸ்லாம் இல்லாத மெயில் ஐடிகளை கேள்வி பதிலில் பயன்படுத்தியுள்ளதா... என்பது பற்றிய உங்கள் பதிவுக்கு உங்கள் ஒப்புதலுக்கு பிறகு விளக்கமளிப்போம். தேவன் நாடட்டும்)
உங்களின் அஞ்சல் முகவரியை வெளியிடுங்கள்.

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்