இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Friday, April 30, 2010

மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?

குர்ஆன் முரண்பாடுகள்

மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?

Who Adopted Moses: Pharaoh's Daughter or Pharaoh's Wife?

எபிரேய ஆண் பிள்ளைகளை கொல்லும் படி பார்வோன் கட்டளையிட்டு இருக்கும்போது, பார்வோனின் மகள் மோசேயை தத்து எடுத்ததின் மூலமாக, தேவன் மோசேயை காப்பாற்றியதாக பரிசுத்த பைபிள் கூறுகிறது:

லேவியின் குடும்பத்தாரில் ஒருவன் லேவியின் குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம்பண்ணினான். அந்த ஸ்திரீ கர்ப்பவதியாகி, ஒரு ஆண்பிள்ளையைப் பெற்று, அது அழகுள்ளது என்று கண்டு, அதை மூன்று மாதம் ஒளித்துவைத்தாள். அவள் அதை அப்புறம் ஒளித்துவைக்கக்கூடாமல், ஒரு நாணற்பெட்டியை எடுத்து, அதற்குப் பிசினும் கீலும் பூசி, அதிலே பிள்ளையை வளர்த்தி, நதியோரமாய் நாணலுக்குள்ளே வைத்தாள். அதற்கு என்ன சம்பவிக்கும் என்பதை அறியும்படி அதின் தமக்கை தூரத்திலே நின்றுகொண்டிருந்தாள். அப்பொழுது பார்வோனுடைய குமாரத்தி நதியில் ஸ்நானம்பண்ண வந்தாள்; அவளுடைய தாதிகள் நதியோரத்தில் உலாவினார்கள்; அவள் நாணலுக்குள்ளே இருக்கிற பெட்டியைக் கண்டு, தன் தாதியை அனுப்பி அதைக் கொண்டுவரும்படி செய்தாள். அதைத் திறந்தபோது பிள்ளையைக் கண்டாள்; பிள்ளை அழுதது; அவள் அதின்மேல் இரக்கமுற்று, இது எபிரெயர் பிள்ளைகளில் ஒன்று என்றாள். அப்பொழுது அதின் தமக்கை பார்வோனின் குமாரத்தியை நோக்கி: உமக்கு இந்தப் பிள்ளையை வளர்க்கும்படி எபிரெய ஸ்திரீகளில் பால்கொடுக்கிற ஒருத்தியை நான் போய் உம்மிடத்தில் அழைத்துக்கொண்டு வரட்டுமா என்றாள். அதற்குப் பார்வோனுடைய குமாரத்தி: அழைத்துக்கொண்டுவா என்றாள். இந்தப் பெண் போய்ப் பிள்ளையின் தாயையே அழைத்துக்கொண்டு வந்தாள். பார்வோனுடைய குமாரத்தி அவளை நோக்கி: நீ இந்தப் பிள்ளையை எடுத்துக்கொண்டுபோய், அதை எனக்கு வளர்த்திடு, நான் உனக்குச் சம்பளம் கொடுக்கிறேன் என்றாள். அந்த ஸ்திரீ பிள்ளையை எடுத்துக்கொண்டுபோய், அதை வளர்த்தாள். பிள்ளை பெரிதானபோது, அவள் அதைப் பார்வோனுடைய குமாரத்தியினிடத்தில் கொண்டுபோய் விட்டாள். அவளுக்கு அவன் குமாரனானான். அவள்: அவனை ஜலத்தினின்று எடுத்தேன் என்று சொல்லி, அவனுக்கு மோசே என்று பேரிட்டாள். (யாத்திராகமம் 2:1-10)

அவன் வெளியே போட்டுவிடப்பட்டபோது, பார்வோனுடைய குமாரத்தி அவனை எடுத்துத் தனக்குப் பிள்ளையாக வளர்த்தாள். (அப்போஸ்தலர் நடபடிகள் 7:21)

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இரண்டாயிரம் வருடங்களுக்கு பிறகு வந்த குர்ஆன், இந்த சரித்திர விவரத்திற்கு முரண்பட்டு கூறுகிறது:

நாம் மூஸாவின் தாயாருக்கு; "அவருக்கு (உன் குழந்தைக்குப்) பாலூட்டுவாயாக அவர் மீது (ஏதம் ஆபத்து வரும் என்று) நீ பயப்படுவாயானால், அவரை ஆற்றில் எறிந்து விடு - அப்பால் (அவருக்காக) நீ பயப்படவும் வேண்டாம், துக்கப்படவும் வேண்டாம்; நிச்சயமாக நாம் அவரை உன்னிடம் மீள வைப்போம்; இன்னும், அவரை (நம்) தூதர்களில் ஒருவராக்கி வைப்போம்" என்று வஹீ அறிவித்தோம். (நதியில் மிதந்து வந்த) அவரை ஃபிர்அவ்னுடைய குடும்பத்தினர் எடுத்துக் கொண்டார்கள்; (பிற்காலத்தில் அவர்) அவர்களுக்கு விரோதியாகவும் துக்கந்தருபவராகவும் ஆவதற்காக! நிச்சயமாக ஃபிர்அவ்னும், ஹாமானும், அவ்விருவரின் படைகளும் தவறிழைப்பவர்களாகவே இருந்தனர். இன்னும்; (குழந்தையைக் கண்ட) ஃபிர்அவ்னின் மனைவி ("இக்குழந்தை) எனக்கும் உங்களுக்கும் கண் குளிர்ச்சியாக இருக்கிறது - இதை நீங்கள் கொன்று விடாதீர்கள்; நமக்கு இவர் பயன் அளிக்கக்கூடும்; அல்லது நாம் இவரை நம் புதல்வராக்கிக் கொள்ளலாம்" என்று சொன்னார்; இன்னும் அவர்கள் (இதன் விளைவு என்னவாகும் என்பதை) உணர்ந்து கொள்ளவில்லை. (குர்‍ஆன் 28:7-9) 

பார்வோனின் மகள் அல்ல, பார்வோனின் மனைவி மோசேயை தத்து எடுத்ததாக குர்ஆன் கூறுகிறது. ஆனால், பைபிள் சொல்வது தான் சரியானது, எப்படியென்றால், எபிரேய பைபிளின் முதல் ஐந்து புத்தகங்களை (தோரா) எழுதியவர் மோசே என்பதால், தன்னை யார் தத்து எடுத்தார்கள் என்ற விவரம் அவரை விட வேறு யாருக்கு சரியாக தெரிந்து இருக்கும்?

இந்நிகழ்ச்சி நடைப்பெற்ற காலத்திற்கு சமீபமான காலத்தில் தான் எபிரேய பைபிள் எழுதப்பட்டது. இஸ்ரவேல் மக்களின் மதிப்பிற்குரிய இரட்சகராக மோசே இருக்கிறார். ஆகையால், முஹம்மது மற்றும் இஸ்லாமியர்களை விட யூதர்களுக்குத் தான் தங்கள் சரித்திரம் பற்றிய விவரம் அதிகமாகவும், சரியாகவும் தெரியும். இஸ்லாமியர்களுக்கு யூதர்களின் சரித்திரம் பற்றிய சந்தேகம் வந்தால், அவர்கள் பைபிளை படித்தும், யூதர்களிடம் சென்றும் விவரங்களை தெரிந்துக்கொள்ளவேண்டும் என்று குர்ஆன் இஸ்லாமியர்களுக்கு கட்டளையிடுகிறது. அதாவது குர்ஆன் சொல்வது சரியானதா என்ற சந்தேகம் வந்தால், இப்படி செய்யுங்கள் என்று அல்லாஹ் கூறுகிறார்.

(நபியே!) நாம் உம் மீது இறக்கியுள்ள இ(வ்வேதத்)தில் சந்தேகம் கொளிவீராயின், உமக்கு முன்னர் உள்ள வேதத்தை ஓதுகிறார்களே அவர்களிடம் கேட்டுப் பார்ப்பீராக நிச்சயமாக உம் இறைவனிடமிருந்து உமக்குச் சத்திய (வேத)ம் வந்துள்ளது - எனவே சந்தேகம் கொள்பவர்களில் நீரும் ஒருவராகி விட வேண்டாம். (குர்ஆன் 10:94)

நிச்சயமாக நாம் மூஸாவுக்குத் தெளிவான ஒன்பது அத்தாட்சிகளை கொடுத்திருந்தோம்; அவர் அவர்களிடம் (அவற்றைக் கொண்டு) வந்தபோது (என்ன நடந்தது என்று) பனீ இஸ்ராயீல்களிடம் (நபியே!) நீர் கேளும். ஃபிர்அவ்ன் அவரை நோக்கி 'மூஸாவே! நிச்சயமாக நான் உம்மை சூனியம் செய்யப்பட்டவராகவே எண்ணுகிறேன்' என்று கூறினான். (குர்ஆன் 17:101)

மேலும், இயேசு தன்னிடமுள்ள எபிரேய பைபிளை உறுதிப்படுத்தினார் என்று குர்ஆன் கூறுகிறது:

இன்னும் அவருக்கு அவன் வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுப்பான் …. "எனக்கு முன் இருக்கும் தவ்ராத்தை மெய்பிக்கவும், உங்களுக்கு விலக்கி வைக்கப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும், உங்கள் இறைவனிடமிருந்து (இத்தகைய) அத்தாட்சியை உங்களிடம் நான் கொண்டு வந்திருக்கிறேன்…(குர்‍ஆன் 3:48,50) 

இன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்;. அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன. அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது. அது பயபக்தியுடையவர்களுக்கு நேர் வழிகாட்டியாகவும் நல்லுபதேசமாகவும் உள்ளது. (குர்ஆன் 5:46)

ஆக, இயேசு உறுதிப்படுத்தின வேதம் தான் இப்போது நம்மிடம் உள்ள பைபிளாக இருப்பதால், குர்ஆன் ஒரு சரித்திர பிழை செய்துள்ளது என்பதை நாம் அறியலாம். குர்ஆனின் இந்த பிழையை பரிசுத்த பைபிள் சரிப்படுத்துகிறது என்ற முடிவிற்கு நாம் வரலாம்.

சாம் ஷமான்

குர்ஆனின் இந்த பிழையைப் பற்றிய ஆய்வுக் கட்டுரை: குர்ஆனின் இந்த பிழை முஹம்மது ஏதோ அறியாமையில் செய்த பிழை அல்ல, இது வேண்டுமென்றே தெரிந்தே செய்த மாற்றமாகும். இதனை விளக்கும் ஒரு ஆய்வு கட்டுரையை படிக்கவும்: Adoption by Adaption

ஆங்கில மூலம்: Qur'an Contradiction: Who Adopted Moses: Pharaoh's Daughter or Pharaoh's Wife?

இதர குர்‍ஆன் முரண்பாடுகளை படிக்கவும்
சாம் ஷமான் அவர்களின் இதர கட்டுரைகள்


source:http://www.answering-islam.org/tamil/quran/contra/moses_adoption.html

குர்ஆனின் சரித்திர பிழை

 
யோசேப்பின் தாயும் தந்தையும் எகிப்திற்கு சென்றார்களா?

Did Joseph's parents go to Egypt?

யோசேப்பின் இளைய சகோதரன் பென்யமீன் பிறந்த பிறகு, அவர்களின் தாய் ராகேல் மரித்துவிட்டதாக பைபிள் கூறுகிறது (ஆதியாகமம் 35: 16-18).

பின்பு, பெத்தேலை விட்டுப் பிரயாணம் புறப்பட்டார்கள். எப்பிராத்தாவுக்கு வர இன்னும் கொஞ்சம் தூரமிருக்கும்போது, ராகேல் பிள்ளைபெற்றாள்; பிரசவத்தில் அவளுக்குக் கடும்வேதனை உண்டாயிற்று. பிரசவிக்கும் போது, அவளுக்குக் கடும் வேதனையாயிருக்கையில், மருத்துவச்சி அவளைப் பார்த்து: பயப்படாதே, இந்த முறையும் புத்திரனைப் பெறுவாய் என்றாள். மரணகாலத்தில் அவள் ஆத்துமா பிரியும்போது, அவள் அவனுக்கு பெனொனி என்று பேரிட்டாள்; அவன் தகப்பனோ, அவனுக்கு பென்யமீன் என்று பேரிட்டான். (ஆதியாகமம் 35:16-18)

ஆனால், குர்ஆனின் ஆசிரியருக்கு இந்த விஷயம் தெரியவில்லை என்று தெரிகிறது. அதனால் தான் அவர் யாக்கோபின் குடும்பம் எகிப்திற்குச் சென்ற விஷயத்தை குர்ஆன் வசனமாக வெளிப்படுத்திய போது, கீழ் கண்டவாறு கூறுகிறார்.

(பின்னர் குடும்பத்துடன்) அவர்கள் யூஸுஃபிடம் வந்தபோது, அவர் தம் தாய் தந்தையரை (கண்ணியத்துடன் வரவேற்றுத்) தம்முடன் வைத்துக் கொண்டார்; இன்னும் "அல்லாஹ் நாடினால் நீங்கள் மிஸ்ருக்குள் அச்ச மற்றவர்களாகப் பிரவேசியுங்கள்" என்றும் குறினார். இன்னும், அவர் தம் தாய் தந்தையரை அரியாசனத்தின் மீது உயர்த்தி (அமர்த்தி)னார்; அவர்கள் (எல்லோரும்) அவருக்கு (மரியாதை செலுத்தியவர்களாகச்) சிரம் பணிந்து வீழ்ந்தனர்; அப்போது அவர் (தம் தந்தையை நோக்கி), "என் தந்தையே! இது தான் என்னுடைய முந்தைய கனவின் விளக்கமாகும்; அதனை என் இறைவன் உண்மையாக்கினான்; மேலும், அவன் என்னைச் சிறைச்சாலையிலிருந்து வெளியாக்கியதுடன் எனக்கும் என் சகோதரர்களுக்குமிடையில் ஷைத்தான் பிரிவினையை உண்டு பண்ணி விட்ட பின்னர் உங்களை கிராமத்திலிருந்து கொண்டு வந்ததன் மூலம் அவன் நிச்சயமாக எனக்குப் பேருபகாரம் செய்துள்ளான்; நிச்சயமாக என் இறைவன், தான் நாடியவற்றை மிக நுட்பமாகச் செய்கிறவன், நிச்சயமாக அவன் (யாவற்றையும்) நன்கறிந்தவன்; மிக்க ஞானமுள்ளவன்" என்று கூறினார். (குர்ஆன் 12:99-100)

குர்ஆனின் இந்த தவறை அறிந்த இரண்டு இஸ்லாமிய விரிவுரையாளர்கள், இந்த பிரச்சனையை சரி செய்ய முயற்சி எடுத்து, பின்குறிப்பு எழுதியுள்ளார்கள்.

"... அவரின் தாய் ராகேல் ஏற்கனவே மரித்து விட்டார்கள். ஆனால், யோசேப்பு தன் தாயின் சகோதரியாகிய லேயாளினால் வளர்க்கப்பட்டார். லேயாளையும் அவரது தந்தை திருமணம் செய்து இருந்தார். இதனால், இப்போது லேயாள் தான் யோசேப்பின் தாயாக உள்ளார். இவர்கள் யோசேப்போடு தங்கி இருந்தார்கள்". (அப்துல்லாஹ் யூசுப் அலி, த ஹோலி குர்ஆன், சௌதி பதிப்பு, பின்குறிப்பு 1777)

பைபிளில் கூறப்பட்டது போலவே, யோசேப்பின் தாய் ராகேல், மென்யமீனை பெற்ற போது மரித்துவிட்டார். இந்த விவரம் குர்ஆனுக்கு முரண்பட்ட விவரமல்ல. இந்த இடத்திலே "பெற்றோர்கள்" என்றுச் சொன்னால், அது யாக்கோபின் இதர மனைவிகளையும் குறிக்கும், அதாவது யோசேப்பையும், பென்யமீனையும் வளர்த்தவரை குறிக்கும். இது பழங்கால அரேபிய பழக்க வழக்கங்களுக்கு பொருந்துகிறது, அதாவது வளர்ப்பு தாயை ஒருவர் "தாய்" என்று அழைக்கலாம். (முஹம்மது அஸத், த மெஸேஜ் ஆப் த குர்ஆன், பக்கம் 352, பின்குறிப்பு: 96)

இந்த நிகழ்ச்சியைப் பொருத்தவரையில் அரேபிய பழக்கவழக்கங்கள் பற்றிய விவரம் சம்மந்தமில்லாதது, ஏனென்றால் யாக்கோபு ஒரு அரேபியர் அல்ல. இருந்தபோதிலும், யோசேப்பு மற்றும் பென்யமீனின் தாயாகிய ராகேல் மரித்துவிட்டபடியால் இவ்விருவரையும் லேயாளே தாயாக இருந்து வளர்த்தார் என்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும். மேலும் யோசேப்பு லேயாளை தாய் என்று அழைத்து இருந்திருப்பார்.

ஆனாலும், மேற்கண்ட இரண்டு இஸ்லாமியர்களின் வாதங்கள் அல்லது விவரங்கள் குர்ஆனின் பிழையிலிருந்து அதனை காப்பாற்ற முடியவில்லை. ராகேலின் மரணத்தை மட்டும் பைபிள் கூறவில்லை, லேயாளின் மரணம் பற்றியும் கூறுகிறது, அதுவும் யாக்கோபும் தன் குடும்பத்தார் அனைவரும் எகிப்திற்கு செல்வதற்குமுன்பாக லேயாள் மரித்தார்.

அதற்குப்பின்பு, யாக்கோபு பெயெர்செபாவிலிருந்து பிரயாணம் புறப்பட்டான். இஸ்ரவேலின் குமாரர் தங்கள் தகப்பனாகிய யாக்கோபையும் தங்கள் குழந்தைகளையும் தங்கள் மனைவிகளையும் பார்வோன் அனுப்பின வண்டிகளின்மேல் ஏற்றிக்கொண்டு, தங்கள் ஆடுமாடுகளையும், தாங்கள் கானான் தேசத்தில் சம்பாதித்த தங்கள் பொருட்களையும் சேர்த்துக்கொண்டு, யாக்கோபும் அவன் சந்ததியார் யாவரும் எகிப்துக்குப் போனார்கள். அவன் தன் குமாரரையும் தன் குமாரரின் குமாரரையும் தன் குமாரத்திகளையும் தன் குமாரரின் குமாரத்திகளையும் தன் சந்ததியார் அனைவரையும் எகிப்துக்குத் தன்னோடே அழைத்துக்கொண்டுபோனான். (ஆதியாகமம் 46:5-7)

மேற்கண்ட வசனங்களில், பெயர் குறிப்பிடாமல் எல்லா பெண்களையும் சுருக்கமாக மொத்தமாகச் சொல்கிறது: "இஸ்ரவேலின் குமாரர் தங்கள் தகப்பனாகிய யாக்கோபையும் தங்கள் குழந்தைகளையும் தங்கள் மனைவிகளையும்" என்றுச் சொல்கிறது.

எகிப்திற்குச் சென்றவர்களின் பட்டியலில், யாக்கோபின் ஒரு மனைவியின் பெயரும் இடம் பெறவில்லை. ஒரு வேளை, யாகோபின் மகன்கள் தங்கள் தாய்மார்களை எகிப்திற்கு அழைத்துச் செல்ல மறந்துவிட்டார்கள் என்றுச் சொல்வது ஏற்கத்தகாத அவமானமாகும். அதே போல, யாக்கோபு தன் மனைவிகளை ஏன் அழைத்துச் செல்லவில்லை என்று தன் மகன்களுக்கு ஞாபகப்படுத்த மறந்துவிட்டார் என்றுச் சொல்வதும் ஏற்கத் தக்கது அல்ல. நாம் படித்த வசனங்களில், "இஸ்ரவேலின் குமாரர் தங்கள் தகப்பனாகிய யாக்கோபையும் ..." என்ற வாக்கியமானது, யாக்கோபு அதிக வயதானவராக இருக்கிறார் என்றும் அவர் பலவீனமாக இருக்கிறார் என்பதையும் காட்டுகிறது. ஆதியாகமம் 47:8-9 வரையிலுள்ள வசனங்களின் படி, யாக்கோபுக்கு அந்த நேரத்தில் 130 வயது ஆகும். யாக்கோபுக்கு இவ்வளவு வயது இருக்கின்ற இந்த சமயத்தில் அவரது மனைவிகள் உயிரோடு இருந்திருப்பார்களா என்பது சந்தேகம் தான்.

கடைசியாக, எகிப்து தேசத்திலே, தன்னுடைய மரணம் நெருங்கிவிட்டது என்று உணர்ந்த யாக்கோபு, தன்னுடைய அனைத்து மகன்களையும் அழைத்து கீழ்கண்டவாறு கூறுகிறார்:

பின்னும் அவன் அவர்களை நோக்கி: நான் என் ஜனத்தாரோடே சேர்க்கப்படப்போகிறேன்; ஏத்தியனான எப்பெரோனின் நிலத்திலுள்ள குகையிலே என்னை என் பிதாக்களண்டையிலே அடக்கம் பண்ணுங்கள் என்று கட்டளையிட்டு; அந்தக் குகை கானான் தேசத்திலே மம்ரேக்கு எதிராக மக்பேலா என்னப்பட்ட நிலத்தில் இருக்கிறது; அதை நமக்குச் சொந்தக் கல்லறைப் பூமியாயிருக்கும்படி, ஆபிரகாம் ஏத்தியனாகிய எப்பெரோன் கையில் அதற்குரிய நிலத்துடனே வாங்கினார். அங்கே ஆபிரகாமையும் அவர் மனைவியாகிய சாராளையும் அடக்கம்பண்ணினார்கள்; அங்கே ஈசாக்கையும் அவர் மனைவியாகிய ரெபெக்காளையும் அடக்கம்பண்ணினார்கள்; அங்கே லேயாளையும் அடக்கம்பண்ணினேன். அந்த நிலமும் அதில் இருக்கிற குகையும் ஏத்தின் புத்திரர் கையில் கொள்ளப்பட்டது என்றான். (ஆதியாகமம் 49:29-32)

யாக்கோபு தன் மனைவியாகிய லேயாளை கானான் தேசத்தில் அடக்கம் செய்தார் என்பதை மேற்கண்ட வசனங்கள் மிகவும் தெளிவாக நமக்கு கூறுகின்றன. அதிக வயதை அடைந்தவரும், மிகவும் பலவீனவருமான யாக்கோபு தன் மனைவி லேயாள் எகிப்திலே மரித்த பிறகு அவளை கானானுக்குக் கொண்டுச் சென்று அடக்கம் செய்தார் என்றுச் சொல்வது ஏற்கத்தக்கது இல்லை, இதற்கு யாக்கோபின் வயதும் பலவீனமான அவரது உடல்நிலையும் தாங்காது. ஆக, லேயாளை யாக்கோபு கானானில் அடக்கம் செய்தது, இவர்கள் கானானில் இருக்கும் காலத்தில் தானே தவிர, எகிப்திற்கு வந்துவிட்ட பிறகு அல்ல. ராகேல் எங்கே மரித்தாளோ அதே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது போல, லேயாளும் தான் மரித்த இடத்திலேயே (கானானில்) அடக்கம் செய்யப்பட்டாள் (ஆதியாகமம் 35:19-20).

முடிவுரை: யோசேப்பு எகிப்திற்கு வருவதற்கு முன், பல ஆண்டுகளுக்கு முன்பே அவரின் தாய் மரித்துவிட்டார். அதே போல, யாக்கோபும், அவரது குடும்பத்தாரும் எகிப்திற்கு வருவதற்கு முன்பாகவே, லேயாளும் மரித்துவிட்டார். யாக்கோபின் மனைவிகளில் ஒருவரும் எகிப்திற்கு யாக்கோபோடு செல்லவில்லை. பைபிள் கொடுக்கும் விவரம் மிகவும் சரியாக உள்ளது. யோசேப்பின் தாய் தந்தையர் (பெற்றோர்) எகிப்திற்கு வந்தார்கள் என்று குர்ஆன் சொல்லி மிகப்பெரிய தவறை செய்துள்ளது.

இதுமட்டுமல்ல, தன்னை பெற்றெடுத்த தாயை அல்லது தந்தையை மட்டுமே "தாய்" என்றும் "தந்தை" என்றும் அழைக்க வேண்டும் என்ற ஒரு கோட்பாட்டை குர்ஆன் சொல்கிறது. இதன்படி பார்த்தால், யூசுப் அலி மற்றும் முஹம்மது அஸத் என்ற இவ்விரு விரிவுரையாளர்களின் பதில்கள் குர்ஆனின் கோட்பாடுகளுக்கு எதிராக இருக்கிறது என்பதைக் காணலாம். இதைப் பற்றி இன்னும் அறிய, இக்கட்டுரையை "Can I call her mother?" படிக்கவும்.

ஜோசன் கட்ஜ்

ஆங்கில மூலம்: Qur'an Error: Did Joseph's parents go to Egypt?

இதர குர்ஆன் முரண்பாடுகளை படிக்கவும்source:http://www.answering-islam.org/tamil/quran/contra/joseph_parents.html

குர்ஆனும் விஞ்ஞானமும்

 


சூரியனும் சந்திரனும் மனிதனுக்கு வசப்பட்டுள்ளதா (கட்டுப்பட்டுள்ளதா)?

Qur'an & Science Problem:

Are Sun and Moon subject to mankind?

குர்‍ஆன் 14:33 கீழ்கண்டவாறு கூறுகின்றது:

(தவறாமல்), தம் வழிகளில் ஒழுங்காகச் செல்லுமாறு சூரியனையும் சந்திரனையும் அவனே உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான். மேலும், அவனே இரவையும் பகலையும் உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான். (குர்ஆன் 14:33)

And He has made subject to you the sun and the moon, both diligently persuing their courses; and the night and the day has He (also) made subject to you. (Sura 14:33)

இவ்விரண்டு கோள்களும் எனக்கு வசப்படவில்லை. நான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவைகள் தங்கள் பாதையில் சுற்றிகொண்டே இருக்கும். எனக்கு மட்டுமல்ல, இக்கட்டுரையை படிக்கும் எந்த வாசகருக்கும் சரி, இவ்விரு கோள்கள் வசப்பட்டு இருக்காது என்பதை நான் அறிவேன். ஆனால், பல்வேறு வகைகளில், குர்‍ஆன் சொல்லும் வாக்கியத்திற்கு எதிராக, மனிதர்கள் இவ்விரு கோள்களுக்கு வசப்பட்டு இருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.

சூரியனின் ஒளி பூமியின் மேல் இருப்பதும், அது இல்லாமல் இருப்பதும் (பகல் மற்றும் இரவு) நம்முடைய வாழ்க்கையில் அதிக மாற்றத்தை உண்டாக்குகிறது, அதாவது நாம் அதன் மேல் ஆதாரப்பட்டு (வசப்பட்டு) இருக்கிறோம். இதுமட்டுமல்ல, சந்திரனின் ஈர்ப்பு காரணமாக சமுத்திரங்களில் அலைகளின் தீவிரம் சில நேரங்களில் அதிகமாகவும், சில நேரங்களில் சாதாரண நிலையிலும் இருக்கும். கடலோரங்களில் வாழும் மக்கள் சந்திரனின் இவ்விதமான ஈர்ப்பினால் ஏற்படும் கடல் அலைகளுக்கு வசப்பட்டு வாழ்கிறார்கள். அவர்கள் இதனை மாற்றமுடியாது, அதற்கு பதிலாக, அவைகளுக்கு ஏற்றாற்போல அவர்கள் தங்கள் வாழ்வை மாற்றிகொள்கிறார்கள்.

மின் விளக்குகளின் (மின்சாரத்தின்) கண்டுபிடிப்பினால், சூரிய ஒளி இல்லாத நேரங்களில் (இரவு நேரங்களில்) மனிதன் ஓரளவிற்கு 'சூரிய ஒளிக்கு கட்டுப்பட்டு' இருக்கவில்லை என கூறலாம். இயற்கையாக உள்ள சூரிய ஒளிக்கு நிகராக ஓரளவிற்கு மனிதன் மின் விளக்குகளை கண்டுபிடித்துள்ளான் எனலாம். இப்படி இருந்தும், நாம் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டுமே மின் விளக்குகளைக் கொண்டு இரவை பகலாக்க முடியுமே தவிர, நம்முடைய தற்போதைய தொழில் நுட்பங்களின் உதவி கொண்டு உலகம் முழுவதும் வெளிச்சமாக்கவோ, அல்லது இரவாக்கவோ முடியாது. ஆக, இன்னும் சூரியனும், சந்திரனும் நம்முடைய கட்டுப்பாட்டில் (நமக்கு வசப்பட்டு) இல்லை. அவைகள் நாம் சொல்வது போல கேட்பதில்லை, நாம் தான் அவைகள் சொல்கிறபடி கேட்கிறோம், அல்லது அவைகளுக்கு ஏற்றாற் போல நம்முடைய வாழ்வை மாற்றிக்கொண்டு இருக்கிறோம்.

மனிதனின் நன்மைக்காக இறைவன் சூரியனையும், சந்திரனையும் வானத்தில் வைத்தார் என்றுச் சொல்வதை ஏற்றுக்கொள்ளலாமே தவிர, அவைகள் மனிதனுக்கு கட்டுப்பட்டு இருக்கின்றன, செல்கின்றன என்றுச் சொல்வது உண்மை அல்ல. நாம் எந்த வகையிலும் அவைகளை கட்டுப்படுத்துவதில்லை, அவைகள் நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லை. இதனால், குர்ஆன் சொல்வது விஞ்ஞானத்திற்கு ஏற்காத ஒரு கருத்தாக உள்ளது.

ஆங்கில மூலம்: Qur'an & Science Problem: Are Sun and Moon subject to mankind?

குர்‍ஆனின் இதர முரண்பாடுகளை படிக்கவும்


source:http://www.answering-islam.org/tamil/quran/contra/qe005.html

குர்ஆன் முரண்பாடுகள்

 

ஷைத்தானை (சாத்தானை) துரத்த நட்சத்திரங்கள் எறியப்படும்?

குர்ஆன் 76:5 மற்றும் 37:6-8 கீழ்கண்ட வாறு கூறுகிறது:

அன்றியும், திட்டமாக நாமே (பூமிக்குச்) சமீபமாக இருக்கும் வானத்தை (நட்சத்திர) விளக்குகளைக் கொண்டு அலங்கரித்திருக்கின்றோம்; இன்னும், அவற்றை ஷைத்தான்களை (வெருட்டும்) எறி கற்களாகவும் நாம் ஆக்கினோம்; அன்றியும் அவர்களுக்காகக் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பின் வேதனையைச் சித்தம் செய்திருக்கின்றோம். (குர்ஆன் 76:5)

நிச்சயமாக நாமே (பூமிக்கு) சமீபமாக இருக்கும் வானத்தை நட்சத்திரங்களின் அழகைக் கொண்டு அழகுபடுத்தியிருக்கிறோம். (அதைத்) தீய ஷைத்தான்கள் அனைவருக்கும் தடையாகவும் (ஆக்கினோம்). (அதனால்) அவர்கள் மேலான கூட்டத்தார் (பேச்சை ஒளிந்து) கேட்க முடியாது இன்னும், அவர்கள் ஒவ்வோர் திசையிலிருந்தும் வீசி எறியப்படுகிறார்கள். (குர்ஆன் 37:6-8)

குர்ஆன் 15:16-18, 55:33-35ம் வசனங்களை நாம் பார்க்கும் போதும், இதைப்பற்றியே கூறுவதைப்போல் இருக்கின்றது.

அல்லாஹ் சாத்தானின் மீது எறிவதற்காகவா நட்சத்திரங்களை படைத்தார்? மேலானோர் கூட்டத்தின் பேச்சை சாத்தான் கேட்கக்கூடாது என்பதற்காகவா நட்சத்திரங்கள் படைக்கப்பட்டன? இது விஞ்ஞான உலகின் பார்வைக்கு முரண்பாடாக உள்ளது.

ஆங்கில மூலம்: Qur'an Contradiction: Throwing Stars at the Devils?

இதர குர்‍ஆன் முரண்பாடுகளை படிக்கவும்


source:http://www.answering-islam.org/tamil/quran/contra/qe004.html

Wednesday, April 28, 2010

அவர்கள் இருவரும் வாலிபர்களா?

 

Two young men?

யோசேப்பின் வாழ்க்கையைப் பற்றியும், அஜீஜ் என்பவரின் மனைவியினால் அவர் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டது பற்றியும் குர்ஆன் கூறுகிறது.

அவருடன் இரண்டு வாலிபர்களும் சிறையில் புகுந்தனர்; அவ்விருவரில் ஒருவன், "நான் திராட்சை மது பிழிவதாக நிச்சயமாக ஒரு கனவு கண்டேன்" என்று கூறினான். மற்றவன், "நான் என் தலைமீது ரொட்டி சுமப்பதாகவும், அதிலிருந்து பறவைகள் தின்பதாகவும் கனவு கண்டேன்" என்று கூறினான். (பின் இருவரும் "யூஸுஃபே!) எங்களுக்கு இவற்றின் விளக்கத்தை அறிவிவப்பீராக மெய்யாக நாங்கள் உம்மை (ஞானமுள்ள முஹ்ஸின்களில்) - நன்மை செய்பவர்களில் ஒருவராகக் காண்கிறோன்" (என்று கூறினார்கள்). (குர்‍ஆன் 12:36)

And there entered with him two young men in the prison. One of them said: "Verily, I saw myself (in a dream) pressing wine." The other said: "Verily, I saw myself (in a dream) carrying bread on my head and birds were eating thereof." (They said): "Inform us of the interpretation of this. Verily, we think you are one of the Muhsinûn (doers of good)." [Hilali/Khan Translation] (Surah 12:36)

ஆதியாகமம் 40ம் அதிகாரத்தில் இந்த நிகழ்ச்சி விவரமாக கூறப்பட்டுள்ளது. அந்த இரண்டு நபர்களில் ஒருவர், பார்வோன் இராஜாவின் பானங்களை சுமப்பவர்களுக்கு தலைவராக இருப்பதாகவும், இன்னொருவர் பார்வோன் இராஜாவிற்கு உணவு தயாரிப்பவராக இருப்பதாகவும் நாம் காண்கிறோம்.

மேலே படித்த குர்ஆன் வசனத்தில் இரண்டு தவறுகள் உள்ளது. முதலாவதாக, குர்ஆன் தோராவிற்கு முரண்பட்டதாக உள்ளது, அதாவது ஆதியாகமம் 39:19 லிருந்து 40:3 வரையிலுள்ள வசனங்களின் படி, அந்த இரண்டு மனிதர்கள் யோசேப்பு அடைக்கப்பட்ட அதே சிறைச்சாலைக்கு வருவதற்கு முன்பதாகவே யோசேப்பு சிறைச்சாலையில் இருந்தார். இதற்கு முரண்பட்ட விதமாக, அவர்கள் இருவரும் யோசேப்போடு கூட ஒரே சமயத்தில் சிறைச்சாலையில் சென்றார்கள் என்று குர்ஆன் கூறுகிறது.

இரண்டாவதாக, அந்த இருவரின் வயது பைபிளில் குறிப்பிடவில்லையானாலும், பார்வோன் இராஜ்யத்தில் இந்த இரண்டு நபர்கள் அப்படிப்பட்ட உயர்ந்த பதவியில் இருக்கிறார்கள் (இராஜாவிற்கு பானங்களை சுமப்பவர்களின் தலைவராக, மற்றும் உணவு தயாரிப்பவர்களுக்கு தலைவராக இருக்கிறார்கள்) என்பதை கவனிக்கும் போது, குர்ஆன் சொல்வது போல இவர்கள் வாலிபர்களாக இருக்கமுடியாது என்பதை அறியலாம்.

ஆங்கில மூலம்: Two young men?

இதர குர்‍ஆன் முரண்பாடுகளை படிக்கவும்


source:http://www.answering-islam.org/tamil/quran/contra/qb015.html

ஆபிரகாமின் பெயர்

 

Abraham's name

தோராவில், ஆதியாகமம் 17:1,3,5ம் வசனங்கள் கீழ்கண்டவாறு கூறுகின்றன:

ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு. ..... அப்பொழுது ஆபிராம் முகங்குப்புற விழுந்து வணங்கினான். தேவன் அவனோடே பேசி: ........ இனி உன் பேர் ஆபிராம் என்னப்படாமல், நான் உன்னைத் திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாக ஏற்படுத்தினபடியால், உன் பேர் ஆபிரகாம் என்னப்படும்.

When Abram was ninety-nine years old, the LORD appeared to him and said, "I am God Almighty, walk before me and be blameless. ... Abram fell facedown, and God said to him ... No longer will you be called Abram, your name will be Abraham for I have made you father of many nations."

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவரின் பெயர் "ஆபிரகாம்" என்றே பயன்படுத்தப்பட்டது. பைபிளின் பழைய ஏற்பாட்டில் குலத்தலைவராகிய இவரை எல்லாரும் இந்த பெயரிலேயே அறிவார்கள். சிலருக்கு அவருக்கு முன்பாக இருந்த உண்மையான பெயர் தெரியாது.

பைபிளைப் பற்றிய அறிவு இல்லாத அனேக மக்களுக்கு ஆபிரகாமின் உண்மைப் பெயர் என்னவென்று தெரியாமல் இருப்பதுபோல, முஹம்மதுவிற்கும் இந்த பெயர் தெரியாமல் இருந்திருக்கிறது. ஆபிராம் என்ற பெயரை தேவன் ஆபிரகாம் என்று மாற்றி மற்றும் அதே நேரத்தில் ஈசாக்கின் பிறப்பு பற்றிய வாக்குறுதியையும் கொடுத்தார், உடன்படிக்கையையும் உறுதிப்படுத்தினார். ஆனால், "ஆபிராம்" வாலிபராக இருக்கும் சமயத்தில் அவரை "ஆபிரகாம்" என்று அழைப்பதை நாம் குர்ஆனில் காண்கிறோம். உண்மையில் அவரது பெயர் அந்த நேரத்தில் "ஆபிராம்" என்பதாகும்.

அதற்கு (அவர்களில் சிலர்) "இளைஞர் ஒருவர் இவற்றைப் பற்றி (அவதூறாகக்) குறிப்பிட்டு வந்ததை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம், அவருக்கு இப்றாஹீம் என்று பெயர் சொல்லப்படுகிறது" என்று கூறினார்கள். (குர்ஆன் 21:60)

They said: "We heard of the youth talked of them: He is called Abraham." (Sura 21:60)

குர்ஆனின் அனேக சரித்திர தவறுகளில் இதுவும் ஒன்று. ஆபிராமுக்கு எண்பது அல்லது அதற்கும் குறைவான வயது இருக்கும் போது அவரை "ஆபிரகாம்" என்று குர்ஆன் அழைத்து சரித்திர பிழையை செய்துள்ளது. அப்போது அவருக்கு இருந்த பெயர் "ஆபிராம்" என்பதாகும். இது அல்லாஹ்விற்கு தெரியாமல் இருந்திருக்கிறது. இது ஒரு சிறிய தவறாக தெரியலாம், ஆனால், பைபிள் பற்றிய பொது அறிவு இல்லாமல், அல்லாஹ் மேலோட்டமாக செய்த தவறு சிறிய தவறு அல்ல‌.

ஆங்கில மூலம்: Abraham's name

குர்‍ஆன் பற்றிய கட்டுரைகளை படிக்கவும்


source:http://www.answering-islam.org/tamil/quran/contra/qbhc12.html

Monday, April 5, 2010

கிறிஸ்தவர்களுக்கும் ஒரு பீஜே கிடைப்பாரா?

 

 

கிறிஸ்தவர்களுக்கும் ஒரு பீஜே கிடைப்பாரா?

 

பெரியார்தாசன் அவர்கள் இஸ்லாமியராக மாறியது நாம் அனைவரும் அறிந்ததே. அவருக்கு கொலை மிரட்டல்கள் வருகின்றன என்றுச் சொல்லி, அவருக்கு ஆதரவு அளிப்பதாக, பாதுகாப்பு அளிப்பதாக‌ இஸ்லாமிய குழுக்கள் அவரைச் சந்தித்து, அவருக்கு ஆறுதல் அளித்து வருகின்றனர். பீஜே அவர்களும் அவரை பாதுகாப்பதாகவும் வாக்கு கொடுத்துள்ளார்.  இன்னும் ஒரு படி மேலே சென்று உயிரைக் கொடுத்தாவது காப்பதாக‌ கூறியுள்ளார்.  இது மிகவும் நல்ல விஷயம் தான்.

 

பீஜே அவர்கள் பேசிய வீடியோவை இங்கு காணலாம்.

 

LInk:  http://www.tntj.net/?p=13085

 

விளக்கம்: பி.ஜே

தலைப்பு: பெரியார்தாசன் பற்றிய தவ்ஹீத் ஜமாஅத் நிலை பாடு என்ன?

நேரம்: 6:00 min

அளவு: 5:0 MB

 

 

இந்த வீடியோவைக் கண்டவுடன் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. அதாவது, ஒருவர் இஸ்லாமியராக மாறினால் அவருக்கு சகல வித பாதுகாப்பும் அளிப்பதாக ஒட்டு மொத்த இஸ்லாமிய குழுக்கள் போட்டி போட்டுக்கொண்டு வாக்கு கொடுக்கின்றனர். இது நல்ல விஷயம் தான், இதற்காக நாம் இஸ்லாமியர்களை மெச்சிக் கொள்ளவேண்டும்.

 

ஒருவர் இஸ்லாமியராக மாறினால் தவறென்ன?

 

ஒரு நாத்தீகர் ஆராய்ச்சி செய்து, இஸ்லாம் தான் சரியானது என்று முடிவு செய்து, இஸ்லாமியராக மாறினால் தவறா? 

 

இஸ்லாமியர்களின் பதில்: இல்லை..இல்லைவே இல்லை.

 

ஒரு இந்து சகோதரர், இஸ்லாம் தான் நேர்வழி என்று நினைத்து, இஸ்லாமியராக மாறினால் தவறா? 

 

இஸ்லாமியர்களின் பதில்:  கண்டிப்பாக இல்லை.

 

ஒரு கிறிஸ்தவர், முஹம்மது தான் கடைசி நபி என்றும், இஸ்லாம் தான் சரியான வழி என்றும் நம்பி, இஸ்லாமியறாக மாறினால் தவறா?

 

இஸ்லாமியர்களின் பதில்:  தவறு இல்லை.

 

எனவே, ஒருவர் இஸ்லாமியராக மாறினால் அவருக்கு தீங்கு செய்ய நினைப்பவர்களிடமிருந்து பாதுகாப்பது அளிப்பது ஒவ்வொரு இஸ்லாமியரின் கடமையாகும்.  உயிரைக் கொடுத்தாவது அவரை நாம் காப்பாற்றுவோம், இது தான் இஸ்லாமியர்களின் ஒருமித்த கோஷம்.   

 

இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம், சக‌மனிதர்களை மனிதாபமானத்தோடு  பார்த்துக்கொள்ளும் மார்க்கம். இது இஸ்லாமியர்களின் இதயத்தில் பதிந்துவிட்ட வரிகள். இதை கேட்பதற்கும், படிப்பதற்கும் நன்றாக இருக்கிறது.

 

ஆனால்,

ஒரு இஸ்லாமியர், இறைவன் இல்லை, நாத்தீகம் தான் சரியானது, எனவே நான் நாத்தீகனாக மாறிவிடுகிறேன் என்றுச் சொல்லி, நாத்தீகராக மாறினால் தவறா?

 

இஸ்லாமியர்களின் பதில்:  அது எப்படி சரியாகும், இது தவறாகும்.

 

ஒரு கட்டுக்கோப்பான இஸ்லாமிய சூழ்நிலையில் வளர்ந்த ஒரு இஸ்லாமியர், இந்துத்துவம் தான் மனிதாபமான மார்க்கம், அதில் அடாவடி இல்லை என்று நம்பி, ஒரு இந்துவாக மாறினால் தவறா?

 

இஸ்லாமியர்களின் பதில்:  இது தவறாகும், இது மிகப்பெரிய குற்றமாகும்.

 

ஒரு இஸ்லாமியர், இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கமன்று, இது ஒரு பொய்யான மார்க்கம், முஹம்மது ஒரு பொய்யான நபி என்றுச் சொல்லி, கிறிஸ்தவம் தான் சரியான மார்க்கம் என்று நம்பி, கிறிஸ்தவராக மாறினால் தவறா?

 

இஸ்லாமியர்களின் பதில்: இது தவறு தவறு தவறு... இது  மரண தண்டனைக்குரிய குற்றமாகும்.

 

ஏன் இந்த முரண்பாடு & இஸ்லாமியர்கள் இருவேஷம் போடுவது ஏன்?

 

இஸ்லாமிய சட்டம் அமுலில் இருக்கும் நாடுகளில் ஒரு இஸ்லாமியர் நாத்தீகராகவோ, கிறிஸ்தவராகவோ அல்லது இந்துவாகவோ மாறினால், அவனுக்கு மரண தண்டனை தருகிறார்கள்.  ஆனால், வேறு மதத்தவர் மட்டும் இஸ்லாமியராக மாறினால், "இது தவறு, உன் பழைய மதத்திற்குச் சென்றுவிடு" என்றுச் சொல்வதில்லை.

 

 

இஸ்லாமிய நாடுகளில் இஸ்லாமிலிருந்து வெளியேறும் ஒவ்வொரு நபரும் அனுபவிக்கும் கொடுமைகள் கொஞ்ச நஞ்சமல்ல, இதை நான் சொல்லித் தான் தெரியவேண்டுவதில்லை. அப்படிப்பட்ட நபருக்கு தனிப்பட்ட முறையில் சக இஸ்லாமியர்களும், குடும்ப நபர்களும் தரும் தொல்லைகள், பயமுறுத்தல்கள் எண்ணிக்கையில் அடங்கா.

 

இந்தியா போன்ற நாடுகளில், இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கமென்றுச் சொல்லி, மேடைகள் போட்டு காதுகிழிய பேசும் இஸ்லாமியர்கள், ஒரு மாற்று மதத்தவர் இஸ்லாமியராக மாறினால் அவருக்கு சகலவித பாதுகாப்பு அளிக்க முன்வரும் மனித நேய பிரியர்கள், வெளி நாடுகளில், முக்கியமாக இஸ்லாமிய சட்டம் நடைமுறையில் இருக்கும் நாடுகளில் இஸ்லாமிலிருந்து வெளியேறுகிறவர்களுக்கு விரோதமாக நடக்கும் கொடுமைகள், நிறைவேற்றப்படும் மரண தண்டனைகள் குறித்து ஒரு சிறிய சத்தத்தையும் இவர்கள் அந்நாடுகளுக்கு விரோதமாக எழுப்புவதில்லை.

 

முக்கியமாக நம் அருமை இஸ்லாமிய அறிஞர்  பீஜே அவர்கள், "இஸ்லாமிய நாடுகளில் செய்வது சரியல்ல, இஸ்லாம் தன்னை விட்டு வெளியேறுபவர்களை கொலைச் செய்ய சொல்லவில்லை, இது அமைதி மார்க்கம், அவர்களுக்கு மார்க்க அறிவு இல்லை, இது மிகப்பெரிய பாவம்" என்றுச் சொல்வாரா?

 

[இந்தியாவில் இஸ்லாம் அமைதி மார்க்கமென்று அறைகூவல் விடும் இஸ்லாமிய அறிஞர்கள் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளில் இருப்பார்களானால், இஸ்லாமை விட்டு வெளியேறுபவர்களை கொல்லும் நிகழ்ச்சியில் முதல் கல் வீசுபவர்களாக இவர்களாகத் தான் இருப்பார்கள்]

 

 

வேறு மதத்த்திலிருந்து இஸ்லாமுக்கு மாறுபவர்கள் கண்டிப்பாக பயமில்லாமல் வாழவேண்டும் என்று விரும்பும் நீங்கள், இஸ்லாமிலிருந்து வெளியேறுபவனும் பயமில்லாமல் வாழவேண்டும் என்று நினைப்பதில்லையே, அது ஏன்?

 

ஒருவனுக்கு மனிதாபமான ஆதாரவும், இன்னொருவனுக்கு மரண தண்டனையா?

 

பீஜே அவர்கள் நேர்மையானவராக‌ இதற்கு பதில் தருவாரா?

 

ஒரு இந்து இஸ்லாமியராக மாறுவது தவறில்லையானால், ஒரு இஸ்லாமியர் இந்துவாக மாறுவதும் தவறில்லையே?

 

இஸ்லாமியரல்லாதவர்களுக்கும் ஒரு பீஜே கிடைப்பாரா?

 

இஸ்லாமியராக இருந்து கிறிஸ்தவத்திற்கு மாறும் போது, இஸ்லாமிய ஆட்சியின் கையிலிருந்து, இஸ்லாமிய சட்டத்திலிருந்து காப்பாற்ற, உயிரைக் கொடுத்து காப்பாற்ற எங்களுக்கு ஒரு பீஜே கிடைப்பாரா?

 

இஸ்லாமியராக இருந்து, பிறகு வேறு மதத்திற்கு மாறி, தான் எடுத்த முடிவு சரியானது தான், இதற்காக நான் பெருமைக் கொள்கிறேன் என்றுச் சொல்லி, வெளிப்படையாக தன் முடிவை மக்கள் முன் வைத்து வாழ ஒருவனுக்கு இஸ்லாமிய நாடுகளில் உரிமை அளிக்கப்படுமா?  இஸ்லாம் இதற்கு அனுமதி அளிக்குமா? மனிதாபமானம் அதிமுள்ள இஸ்லாமிய அறிஞர்கள் அனுமதி கொடுப்பார்களா?

 

பெரியார்தாசனுக்கு ஒரு பீஜே கிடைத்தது போல, இஸ்லாமிய நாடுகளில் வாழும் பெயர் சொல்லமுடியாதவர்களுக்கும் ஒரு பீஜே கிடைப்பார்களா?

 

நல்லதோர் வீணை செய்தே, அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ....

 

 

Umar:  http://isakoran.blogspot.com  &  http://www.answering-islam.org/Tamil

 --
4/02/2010 06:24:00 AM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்