இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Saturday, October 15, 2011

பீஜேவிற்கு கேள்வி: குர்‍ஆன் எழுத்துக்கு எழுத்து பாதுகாக்கப்பட்டுள்ளதா? வீட்டு மிருகமும் குர்‍ஆனின் தொலைந்த வசனங்களும் - பாகம் 2

 
 

பீஜேவிற்கு கேள்வி: குர்‍ஆன் எழுத்துக்கு எழுத்து பாதுகாக்கப்பட்டுள்ளதா?


வீட்டு மிருகமும் குர்‍ஆனின் தொலைந்த வசனங்களும் - பாகம் 2


(குர்ஆன் வசனத்தை தின்றுவிட்ட வீட்டு மிருகம்)

இஸ்லாமிய அறிஞர்கள் கூறுவதுபோல, குர்‍ஆன் வசனத்திற்கு வசனம், எழுத்துக்கு எழுத்து பாதுகாக்கப்பட்டவில்லை. அனேக வசனங்கள் தொலைந்துவிட்டன. தொலைந்த வசனங்கள் எவ்வளவு இருக்கும்? ஒரு வசனமா? ஐந்து வசனங்களா? பத்து வசனங்களா? அல்லது நூற்றுக்கும் அதிகமான வசனங்களா? உமர், ஆயிஷா மற்றும் உபை போன்றவர்களின் சாட்சி என்ன என்பதை நீங்களே படியுங்களேன். இதனை அறிந்துக்கொள்ள இஸ்லாமிய நூல்களிலிருந்து சில குறிப்புக்களை காண்போம்.

பாகம் 1ஐ படிக்கவும்: ஸுயூதியும் குர்‍ஆனின் தொலைந்த வசனங்களும் - பாகம் 1


வீட்டு மிருகமும் குர்‍ஆனின் தொலைந்த வசனங்களும் - பாகம் 2

இப்னு ஹஜ்ம் (Ibn Hazm) தம்முடைய புத்தகத்தில் தொகுப்பு 8, பாகம் 2, பக்கங்கள் 235 மற்றும் 236ல் கீழ்கண்ட விவரத்தை கூறுகிறார்:

"கல்லெரிந்து கொல்லுதல் குர்‍ஆன் வசனமும், மார்பக பாலூட்டுதல் வசனமும் ஆயிஷா அவர்களிடம் இருந்த குர்‍ஆன் பிரதியில் இருந்தது. முஹம்மது மரித்த சமயத்தில், மக்கள் அவருடைய அடக்கத்திற்காக ஆயத்தங்கள் செய்துக்கொண்டு இருக்கும் நேரத்தில், ஒரு வீட்டு மிருகம் வீட்டில் நுழைந்து அந்த குர்‍ஆன் வசனங்களை தின்றுவிட்டது ".

"The verses of stoning and breast feeding were in the possession of A'isha in a (Qur'anic) copy. When Muhammad died and people became busy in the burial preparations, a domesticated animal entered in and ate it ."

ஆயிஷா அவர்களும் தம்முடைய வசத்தில் இருந்த வசனங்கள் எவைகள் என்பதை அறிந்திருந்தார்கள். ஜமக் ஷாரி(Zamakh-Shari) என்பவரின் "al-Kash-shaf" என்ற புத்தகத்தை, பரிசீலித்து சீர்படுத்திய "முஸ்தபா ஹுசைன்" என்பவரும் இந்த விவரத்தை தம்முடைய புத்தகத்தின் பாகம் 3, பக்கம் 518ல் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறும் போது, "ஒரு வீட்டு மிருகம் குர்‍ஆன் வசனங்களை தின்றுவிட்ட நிகழ்ச்சியை அறிவித்தவர்கள் நம்பகமானவர்கள்" என்றும் அவர்களில் "அப்துல்லாஹ் இப்னு அபூ பக்கர் ம‌ற்றும் ஆயிஷா" அவர்களும் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார். இதே நிகழ்ச்சியை "Dar-al-Qutni", "al-Bazzar" மற்றும் "al Tabarani" போன்றவர்கள் முஹம்மது இப்னு இஷாக் என்பவரிடமிருந்து கேட்டதாக கூறியுள்ளார்கள். மேலும் முஹம்மது இப்னு இஷாக் என்பவர் இந்நிகழ்ச்சியை அப்துல்லாஹ்விடமிருந்து கேட்டதாகவும், அப்துல்லாஹ் இதனை ஆயிஷாவிடமிருந்து கேட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும், பேராசிரியர் முஸ்தபா "இந்த குர்‍ஆன் வசனங்களை வீட்டு மிருகம் சாப்பிட்ட நிகழ்ச்சிக்கு முன்பே இவ்வசனங்கள் இரத்து செய்யப்பட்டு இருக்ககூடும்" என்று குறிப்பிடுகிறார்.

மேற்கண்ட விவரங்களை நாம் படிக்கும்போது, சில கேள்விகள் நமக்கு எழுகின்றன:

1) "அந்த கல்லெரிந்து கொல்லுதல் குர்‍ஆன் வசனம் ஏற்கனவே இரத்து செய்யப்பட்டு இருந்திருந்தால், ஏன் உமர் அவர்கள் அதனை குர்‍ஆனில் சேர்க்கவேண்டும் என்று மறுபடியும் கொண்டுவருகிறார்?" (முதல் பாகத்தை இங்கு படிக்கவும்: ஸுயூதியும் குர்‍ஆனின் தொலைந்த வசனங்களும் - பாகம் 1).

2) இவ்வசனங்கள் இரத்து செய்யப்பட்டு இருந்திருந்தால், முஹம்மது மரித்துவிட்ட பிறகும் மக்கள் ஏன் "மார்பக பாலூட்டுதல் குர்‍ஆன் வசனங்களை தொடர்ந்து ஓதிக்கொண்டு இருந்தார்கள்"?

3) இந்த பாலூட்டுதல் வசனங்களை மக்கள் குர்‍ஆனின் ஒரு பாகமாக ஓதிக்கொண்டே இருக்கும் போது முஹம்மது மரித்துவிட்டதால், அவரது மரணத்திற்கு பின்பு இவ்வசனங்களை "அதிகார பூர்வமாக இரத்து செய்தவர்கள் யார்?". ஒருவேளை அந்த வீட்டு மிருகம் அவ்வசனங்களை இரத்து செய்துவிட்டதா?

இந்த நிகழ்ச்சி நடந்தது என்பதற்கு, முஹம்மதுவின் தோழர்கள் சாட்சிகளாக இருக்கிறார்கள் மற்றும் இஸ்லாமிய அறிஞர்கள் மற்றும் ஆயிஷா அவர்களே சாட்சிகளாக இருக்கிறார்கள்.

முடிவுரை: முதல் பாகத்தில் நாம் கண்டது போல, நூற்றுக்கும் அதிகமான குர்‍ஆன் வசனங்கள் தொலைந்துவிட்டன. இந்த இரண்டாம் பாகத்தில் நாம் கண்டோம், ஒரு வீட்டு மிருகம் குர்‍ஆன் வசனங்களை தின்றுவிட்டது. குர்‍ஆன் எழுத்துக்கு எழுத்து மாறாமல் அல்லாஹ் முஹம்மதுவிற்கு வெளிப்படுத்திய வசனங்கள் அப்படியே நம்மிடம் உள்ளது என்று தற்கால இஸ்லாமிய அறிஞர்கள் கூறுவது பொய். முஹம்மதுவின் தோழர்கள், மற்றும் அவரின் பிரியமான மனைவியாகிய ஆயிஷா மற்றும் ஆரம்ப கால இஸ்லாமிய அறிஞர்களின் சாட்சியின் படி நம்மிடம் உள்ள குர்‍ஆன் "பாதுகாக்கப்பட்ட ஒரு வேதமல்ல" என்பது தெளிவாக புரிகிறது.

இப்னு உமர் அல்கத்தாப்பின் கூற்றுப்படி, எந்த ஒரு இஸ்லாமியரும் "தன்னிடம் முழு குர்‍ஆன் உள்ளது என்று கூறக்கூடாது", ஏனென்றால், மூல குர்‍ஆனில் உள்ள அனேக வசனங்கள் காணாமல் போய் உள்ளன.

இன்னும் "தொலைந்த குர்‍ஆன் வசனங்கள்" தொடரும்....

ஆங்கில மூலம்: Chapter Twelve - The Perversion of Qur'an and the Loss of Many Parts of It.

--
10/06/2011 10:30:00 AM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது


இயேசு இறைவனா? குர்‍ஆன் இறைவனா?

 
       

இயேசு இறைவனா? குர்‍ஆன் இறைவனா?

இஸ்லாமியர்கள் அடிக்கடி கேட்கும் கேள்விக்கு பதிலாக ஒரு சிறிய அறிமுகம்

தமிழாக்க அறிமுகம்: இந்த சிறிய கட்டுரை ஒரு முஸ்லிம் மற்றும் ஒரு கிறிஸ்தவருக்கு இடையே நடந்த ஒரு சிறிய உரையாடல் பற்றிச் சொல்கிறது. முக்கியமாக:

குர்‍ஆன் இறைவனின் வார்த்தை என்று இஸ்லாமியர்கள் கூறுகிறார்கள்.

இயேசு இறைவனின் வார்த்தை என்று கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள்.

குர்‍ஆன் ஒரு புத்தகம், இயேசு ஒரு மனிதர்.

குர்‍ஆனை எல்லாரும் ஒரு புத்தகமாக பார்க்கிறோம், படிக்கிறோம் தொடுகிறோம், இருந்தாலும், அது தெய்வீகமானது என்று இஸ்லாமியர்கள் கருதுகிறார்கள். அதே போல, இயேசுவை மக்கள் பார்த்தார்கள், தொட்டார்கள் பேசினார்கள், இருந்தாலும் இயேசு அழிவில்லாதவர் என்று கிறிஸ்தவர்கள் நம்புகிறார்கள். அழிவில்லாத அல்லாஹ்வின் வார்த்தைகள் எப்படி ஒரு அழிவுள்ள ஒரு புத்தகமாக நம் கரங்களில் இருக்கிறது? ஒரு பொருள் "அழிவில்லாததாயும், அதே நேரத்தில் அழியக்கூடியதாகவும்" எப்படி இருக்கமுடியும்?  

என்னுடைய தளத்திற்கும் நான் "ஈஸா குர்‍ஆன்" என்ற பெயர் வைத்ததற்கும் இதுவே காரணம். எது சத்தியம் அல்லது யார் சத்தியம் என்பதை நாம் தெரிந்துக் கொள்ளவேண்டும், ஈஸாவா (தேவனின் வார்த்தை) அல்லது குர்‍ஆனா (அல்லாஹ்வின் வார்த்தை)?

பிரச்சனை யேகோவா தேவனுக்கும்,அல்லாஹ்விற்கும் இல்லை... பிரச்சனை இயேசுவிற்கும், குர்‍ஆனுக்கும் தான், ஏனென்றால் இரண்டும் இறைவனின் வார்த்தை என்று நம்பப்படுகின்றது.

(இதனை புரிந்துக்கொள்ளாமல் சிலர் எனக்கு அடிக்கடி "உன் தளத்தின் பெயரை மாற்று, "ஈஸா பைபிள்" என்று உன் தளத்திற்கு பெயரை வைத்துக்கொள் என்றுச் சொல்கிறார்கள், அவர்களுக்கு புரிந்தது அவ்வளவு தான்).

இதனை விளக்கும் ஒரு சிறிய கட்டுரை தான் இது. ஆங்கிலத்திற்கு இணையாக தமிழில் மொழியாக்கம் செய்யப்படவில்லை என்பதை உணர்ந்து, இந்த சிறிய கட்டுரையின் ஆங்கில மூலத்தை இக்கட்டுரையின் கடைசியில் கொடுத்துள்ளேன். ஆங்கிலம் தெரிந்தவர்கள் ஆங்கிலத்திலும் இச்சிறிய கட்டுரையை படித்தல் நல்லது.

(ஆங்கில மூலம் தொடுப்பு கொடுத்து சொடுக்கி படியுங்கள் என்று நான் வேண்டுகோள் விடுத்தாலும், ஆங்கில தொடுப்பை சொடுக்க சிலருக்கு நேரமிருக்காது என்பதை கவனத்தில் கொண்டு, ஆங்கில மூலத்தை இக்கட்டுரையோடு இணைக்கிறேன்... ஹி..ஹி..)


முஸ்லிம்: கிறிஸ்தவர்களின் நம்பிக்கையின் படி "இயேசு தெய்வமா?"

கிறிஸ்தவன்: உங்கள் கேள்விக்கு விடையாக நான் ஒரு கேள்வியை கேட்டு பதில் கூறுகிறேன். இஸ்லாமியர்கள்: "குர்‍ஆன் இறைவனின் வார்த்தையாகும், அது அழிவில்லாத நித்திய வார்த்தையாகும் " என்று கூறுவதை நான் கேட்டிருக்கிறேன். அப்படியானால், "குர்‍ஆன் இறைவனா? " என்பது தான் என் கேள்வி (இதற்கு நீங்கள் சொல்லும் பதிலில் உங்கள் கேள்விக்கான பதிலும் உள்ளது)

முஸ்லிம்: நிச்சயமாக இல்லை, "குர்‍ஆன் இறைவனல்ல".

கிறிஸ்தவன்: "குர்‍ஆன் இறைவன் இல்லை" என்றுச் சொல்கிறீர்கள், அப்படியானால், "குர்‍ஆன் ஒரு எல்லைக்குள் உட்பட்டதாகும், தற்காலிகமானதாகும், உருவாக்கப்பட்டதாகும்" என்று பொருள், இது சரியா?.

முஸ்லிம்:இல்லை இல்லை. இது எளிதாக புரியும் விவரமல்ல.

கிறிஸ்தவன்: அப்படியானால், நீங்கள் சொல்வதைப் பார்த்தால், "குர்‍ஆன் இறைவன் இல்லை மற்றும் அந்த குர்‍ஆன் உருவாக்கப்பட்டதும் இல்லை" என்று சொல்லவருகிறீர்களா? குர்‍ஆன் இறைவனல்ல, அதே நேரத்தில் தற்காலிகமானதும் அல்ல என்றுச் சொல்கிறீர்கள், சரி... நீங்கள் என்னை சொல்லவருகிறீர்கள் என்பதை மேலும் விளக்குங்களேன்.

முஸ்லிம்: இஸ்லாமின் படி "இறைவனின் வார்த்தையாகிய குர்‍ஆன் இறைவன் அல்ல மற்றும் இறைவன் அல்லாததும் அல்ல".

கிறிஸ்தவன்: "குர்‍ஆன் இறைவன் அல்ல, மற்றும் குர்‍ஆன் இறைவன் அல்லாததும் அல்ல"... ஒரு நிமிஷம் இருங்க. குர்‍ஆன் இறைவனும் அல்ல, குர்‍ஆன் இறைவன் அல்லாததும் அல்ல.. இந்த வாக்கியத்தில் முரண்பாடு தெரிகின்றதா? குர்‍ஆன் இறைவன் அல்ல, மற்றும் குர்‍ஆன் இறைவன் அல்லாததும் அல்ல என்று நீங்கள் சொல்வதினால்... "குர்‍ஆன் இறைவன் அல்ல" மற்றும் " குர்‍ஆன் இறைவன் தான்" என்று சொல்ல வருகிறீர்களா? அல்லது குர்‍ஆன் இறைவனாக இல்லாமல் இருந்தாலும், அது இறைவனாக இருக்கிறது என்றுச் சொல்லவருகிறீர்களா?  இறைவனுக்கும் மேலான ஒன்றாக குர்‍ஆன் இருக்கிறது என்ற நோக்கத்தில் சொன்னாலும்.. குர்‍ஆன் கூட ஒரு புத்தகம் தானே அல்லது புத்தகமாகிய மாறியது தானே!

முஸ்லிம்: இஸ்லாமின் படி, குர்‍ஆன் என்பது இறைவனின் அழிவில்லாத வார்த்தைகளாகும். பாதுகாக்கப்பட்ட பலகைகளில் பதிக்கப்பட்ட நித்தியமாக இருக்கின்ற அல்லாவின் வார்த்தைகளை பிரதிபலிப்பதே குர்‍ஆன் ஆகும். ஜிப்ராயில் தூதன் மூலமாக பூமியில் வாழ்ந்த முஹம்மதுவிற்கு இறக்கப்பட்டதுதான் குர்‍ஆன் ஆகும் என்று குர்‍ஆனே சொல்கிறது

கிறிஸ்தவன்:குர்‍ஆன் என்பது "இறைவனின் அழிவில்லாத வார்த்தை" மக்களுக்கு இறைவனால் வெளிப்படுத்தப்பட்டுள்ளதால், குர்‍ஆனை ஒரு புத்தகம் என்றுச் சொல்லலாமா? (நாம் கண்களால் காணக்கூடிய புத்தகமா?)

முஸ்லிம்: ஆம், இஸ்லாமின் படி, குர்‍ஆன் என்பது இரண்டும் சேர்ந்தது அதாவது "உருவாக்க முடியாதது (Uncreated)" மற்றும் அதே நேரத்தில் "உருவாக்கியது (Created)".

இறைவனின் அழிவில்லாத நித்திய வார்த்தைகள் ஒரு புத்தகமாக நம்மிடம் வந்துள்ளது. இது விவரிப்பதற்கு சிறிது கடினமே...

உருவாக்கப்படாதது (Uncreated) மற்றும் உருவாக்கப்பட்டது (Created) இந்த இரண்டிற்கும் இடையே இருக்கும் ஒற்றுமையை விளக்குவது சிறிது கடினமே..

கிறிஸ்தவன்: உங்களுடைய விளக்கத்தை எத்தனை முஸ்லிம்கள் அறிந்து இருக்கிறார்களோ எனக்குத் தெரியாது, எனக்கு ஆச்சரியமாகவும் உள்ளது. இருந்தபோதிலும், உங்களுடைய விளக்கத்திற்காக உங்களுக்கு என் நன்றிகள். உங்கள் விளக்கத்தின் மூலமாக, தேவனுக்கும், இயேசுவிற்கும் இடையே இருக்கும் ஒற்றுமையை இஸ்லாமியர்களாகிய நீங்கள் அறிந்துக்கொள்ள ஒரு சிறிய விளக்கத்தை நான் கூறட்டுமா? இதைத் தானே நீங்கள் ஆரம்பத்தில் கேள்வியாக கேட்டீர்கள்?

இஸ்லாமியர்கள் குர்‍ஆனைப் பற்றி கூறும் போது "குர்‍ஆன் இறைவனின் வார்த்தையாக இருக்கிறது, அது இரண்டையும் கொண்டுள்ளது, அதாவது "அதை உருவாக்கவும் முடியாது" அதே நேரத்தில் அது "இவ்வுலகில் உருவாக்கப்பட்டும் உள்ளது ". குர்‍ஆன் "அழிவில்லாததாகவும் உள்ளது",  அதே நேரத்தில் இவ்வுலகில் "தற்காலிகமானதாகவும் உள்ளது". குர்‍ஆன் ஒரு "எல்லைக்குள் உட்படாததாகவும்" உள்ளது, அதே நேரத்தில் இவ்வுலகில் "ஒரு எல்லைக்குள் உட்பட்டதாகவும் உள்ளது" என்று கூறுவார்கள்.

இதே போல, பைபிள் கூறும் இயேசுக் கிறிஸ்து கூட, இறைவனின் வார்த்தையாக உள்ளார் ,

அவரை யாரும் உருவாக்கவும் முடியாது, அதே நேரத்தில் அவர் இவ்வுலகில் உருவாகியும் உள்ளார்.

இயேசு அழிவில்லாதவராகவும் உள்ளார் அதே நேரத்தில் இவ்வுலகில் தற்காலிகமாக வாழ்ந்தவராகவும் இருந்தார்.

இயேசு ஒரு எல்லைக்குள் உட்படாதவராகவும் உள்ளார், அதே சமயத்தில் இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில் ஒரு எல்லைக்குள் உட்பட்டும் இருந்தார் .

பைபிளின் படி, இறைவனின் அழிவில்லாத வார்த்தை ஒரு புத்தகமாக அல்ல, ஒரு மனிதனாக வந்தார், அவர் தான் இயேசுக் கிறிஸ்து.

இங்கு இன்னொரு விஷயத்தை சுருக்கமாக நான் சொல்லட்டும், கிறிஸ்தவர்கள் இயேசுவை ஒரு மனிதராக, ஒரு தீர்க்கதரிசியாக, "தேவனுடைய இடத்தை" பிடித்துவிட்ட இன்னொரு தேவனாக பார்ப்பதில்லை. இதற்கு மாறாக, பைபிள் தெளிவாக கூறுகிறது, "தேவன் தம்மைத் தாமே தம்முடைய அழிவில்லாத வார்த்தை மூலமாக மனிதனாக வெளிப்படுத்தினார், ஒரு தீர்க்கதரிசியாக வெளிப்படுத்தினார், அவர் பெயர் தான் இயேசு".

இறைவன் விரும்பினால், இறைவனின் அழிவில்லாத வார்த்தை ஒரு புத்தகமாக வரமுடியுமானால், ஏன் அந்த அழிவில்லாத வார்த்தை ஒரு மனிதாக வரமுடியாது?

தம்மை தாமே மனிதனாக வெளிப்படுத்த தேவன் சித்தம் கொண்டார் அல்லது விரும்பினார் என்று பைபிள் கூறுகிறது. இது தான் இயேசுவிற்கும் தேவனுக்கும் இடையே இருக்கும் ஒற்றுமையாகும்.

நம்முடைய இந்த முதலாம் உரையாடலில், இதைப் பற்றி இன்னும் அதிகமாக நாம் பேசலாம், இருந்தாலும் அடுத்த உரையாடலில் தொடருவோம்.

ஆங்கில மூலம்: IS JESUS GOD? An Introductory Response to a Frequent Muslim Question

ஆங்கில கட்டுரை

Muslim: According to Christians is Jesus God?

Christian: Let me begin to answer your question with a question. I have heard Muslims say the Qur'an is the Word of God, the eternal Word of God. Is the Qur'an God?

Muslim: Of course not!

Christian: If the Qur'an is not God, then the Qur'an must be finite, temporal, created.

Muslim: No, it's not quite so simple.

Christian: Then, if I'm hearing you correctly, are you saying that the Qur'an is not God and is not a creation? If the Qur'an is neither divine nor temporal, then ... well ... tell me what you mean.

Muslim: According to orthodox Islam the Qur'an, as the Word of God, is not God and is not other than God.

Christian: The Qur'an is not God, nor is it other than God? Just a moment. If the Qur'an is not God and the Qur'an is not other than God, is there a contradiction here? If the Qur'an is not God, nor is the Qur'an other than God, is this to say that the Qur'an is not God and the Qur'an is God? Or even that the Qur'an is not God, yet of God (whatever that means), and, therefore, possibly even more than God in the sense that it is also a book or has become a book?

Muslim: According to orthodox Islam the Qur'an is the eternal Word of God, a representation of the eternal Word of the God on the Preserved Tablet, as the Qur'an says, which God has revealed through Jibril (Gabriel) to Muhammad on earth.

Christian: If the Qur'an is the eternal Word of God revealed by God to people, is it a real book?

Muslim: Yes, Orthodox Islam understands the Qur'an to be both uncreated and created. The eternal Word of God became a real book. It is a little difficult to explain ... The relation between the created and the uncreated is a little complex ...

Christian: I wonder how many Muslims are aware of your comments. I appreciate your explanation. May I suggest that it provides us with a format to help Muslims to begin to understand Jesus' relation with God in response to your question. As orthodox Muslims understand the Qur'an, the Word of God, to be both uncreated and created, eternal and temporal, infinite and finite, so the Bible speaks of Jesus, the Word of God, to be uncreated and created, eternal and temporal, infinite and finite. According to the Bible the eternal Word of God became not a book but a human being - Jesus the Messiah.

Let me simply add here that Christians do not turn Jesus, a man and a prophet, into a God alongside God or in the place of God. On the contrary, the Bible clearly reveals that God Himself through His eternal Word became a human being and a prophet, whose name is Jesus. If the eternal Word of God can become a book, why not a human being, if God so wills! That God has willed so is central to the Biblical understanding of Jesus' relation to God.... So far "Part I" of our discussion. Much more, of course can be said on this topic. Can we continue it another time?

 ஆங்கில மூலம்: IS JESUS GOD? An Introductory Response to a Frequent Muslim Question
--
10/03/2011 11:51:00 AM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது


Answering PJ: பீஜே அவர்களின் “இது தான் பைபிள்” புத்தகத்திற்கு மறுப்பு - 1

 
      

Answering PJ: பீஜே அவர்களின் "இது தான் பைபிள்" புத்தகத்திற்கு மறுப்பு - 1

திரு பீ. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் "இது தான் பைபிள்" என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்கள். இந்த புத்தகத்தில் அவர் பைபிளை தாக்கி அனேக குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார்கள். அந்த குற்றச்சாட்டுகளுக்கு பதில்களை நாம் தொடர் கட்டுரைகளாக காணப்போகிறோம். இவர், "இயேசு இறைமகனா?" என்ற இன்னொரு புத்தகத்தையும் எழுதியுள்ளார். அதற்கு சில பதில்களை நாம் அளித்துள்ளோம், ஆனால், அவைகளுக்கு அவர் மறுப்போ அல்லது பதிலோ அளிக்கவில்லை.

குறைந்த பட்சம் இந்த "இது தான் பைபிள்" என்ற புத்தகத்திற்கு தமிழ் கிறிஸ்தவர்கள் அளிக்கும் பதில்களுக்காகவது அவர் மறுப்பு எழுதுவார் என்ற நம்பிக்கையுடன் தொடர்கிறேன். இந்த தொடர் பதில்கள் கிறிஸ்தவர்களுக்கு பிரயோஜனமாக இருக்கும் மற்றும் இஸ்லாமியர்களுக்கும் உண்மை என்ன என்பது விளங்க ஆரம்பிக்கும். என்னிடமுள்ள பதிப்பு, "இது தான் பைபிள்" ஒன்பதாம் பதிப்பாகும், இது ஜனவரி 2010ல் வெளியானது.

நூலின் பெயர்: இது தான் பைபிள்

ஆசிரியர்: பீ.ஜைனுல் ஆபிதீன்

பதிப்பு: ஒன்பதாம் பதிப்பு, ஜனவரி 2010

வெளியீடு: நபிலா பதிப்பகம்.


பீஜே அவர்களின் "இது தான் பைபிள்" புத்தகத்திற்கு மறுப்பு - பாகம் 1

இந்த கட்டுரையில் பீஜே அவர்கள் தங்கள் புத்தகத்தின் "முன்னுரை"யில் எழுதிய விவரங்களை பார்ப்போம்.

பீஜே அவர்கள் எழுதியது:

முன்னுரை


அளவற்ற அருளாளனும் நிகரற்ற கருணையாளனுமாகிய எல்லாம் வல்ல இறைவனின் திருப்பெயரால்...

அன்புக் கிறித்தவ நண்பர்களே! புத்தகத்தின் தலைப்பு உங்களில் சிலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தக் கூடும். உங்களை ஆச்சரியப்படுத்துவதோ புன்படுத்துவதோ என் நோகக்ம் அன்று. (பக்கம் 2-3)

கிறிஸ்தவன் (உம‌ர்) எழுதியது:

முந்தினவரும் பிந்தினவருமாகிய கர்த்தரின் ஈடு இணையற்ற பெயரில் உங்களுக்கும் தமிழ் பேசும் இஸ்லாமியர்களுக்கும் என் வாழ்த்துதல்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

பீஜே அவர்களே, உங்களின் இந்த புத்தகத்தைக் கண்டு நாங்கள் ஆச்சரியப்படவில்லை. தமிழ் கிறிஸ்தவர்களின் சமீப கால முன்னேற்றம் மற்றும் தமிழ் எழுத்து உலகில் கிறிஸ்தவர்கள் காட்டும் ஆர்வம், தமிழ் பேசும் இஸ்லாமியர்களுக்கு ஆச்சரியத்தை உண்டாக்கியிருக்கும் என்று நம்புகிறேன். உங்களின் புத்தகத்திற்கு நாங்கள் எழுதும் மறுப்புக்கள் உங்களை ஆச்சரியப்பட வைப்பதற்கோ அல்லது புண்படுத்துவதற்கோ அல்ல, மாறாக, உங்கள் கண்கள் தெளிவாக்கப்படவேண்டும் என்றும், அதே நேரத்தில் உங்களைப் போன்றவர்கள் தெரிந்தோ தெரியாமலோ, பைபிள் மீது சுமத்தும் குற்றச்சாட்டுகளை கேட்டு எந்த வகையில் உங்களுக்கு பதில்களைத் தரலாம் என்று சிந்தித்துக்கொண்டு இருக்கும் கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்துவதற்குமே இந்த மறுப்புக்கள் எழுதப்படுகின்றன. ஆக, தமிழ் பேசும் முஸ்லிம்களை புண்படுத்துவது எங்கள் நோக்கமன்று, இதனை நீங்கள் விளங்கிக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

பீஜே அவர்கள் எழுதியது:

பல விஷயங்களில் உங்களுக்கும் முஸ்லிம்களாகிய எங்களுக்குமிடையே நல்லிணக்கமும் ஒத்த கருத்தும் இருக்கின்ற உரிமையில் உண்மையை உங்களுக்கு உரைக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு நோக்கம் ஏதும் எனக்கில்லை.

கிறிஸ்தவன் எழுதியது:

பீஜே அவர்களே, சரியாகச் சொன்னீர்கள்.

முஸ்லிம்கள் மற்றும் உங்களைப் போல உள்ள இஸ்லாமிய அறிஞர்கள் உண்மையை அறிந்துக்கொள்ளவேண்டும் என்பதற்காக நாங்கள் இந்த மறுப்புக்களை எழுதுகின்றோம். இந்த மறுப்புக்கள் எழுதும் வேளையில், தேவையான இடத்தில் குர்‍ஆன் பற்றிய கேள்விகளும், சந்தேகங்களும் மற்றும் விவரங்களையும் நாங்கள் குறிப்பிடுவோம். நீங்களும் உண்மையை அறிந்துக்கொள்ள வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இப்படி எழுதுகிறோம். இதைத் தவிர வேறு எந்த நோக்கமும் எங்களுக்கு இல்லை.

பீஜே அவர்கள் எழுதியது:

பரலோக ராஜ்ஜியத்தில் கர்த்தரின் முன்னிலையில் நீங்களும் முஸ்லிம்களாகிய நாங்களும் விசாரிக்கப்பட இருக்கின்றோம். இந்த உலகில் நமது நம்பிக்கையும் நடத்தையும் சரியானதாக அமைந்தால் தான் அந்த விசாரணையில் தப்பிக்க முடியும். இதை நன்றாக நீங்கள் அறிவீர்கள்.

கிறிஸ்தவன் எழுதியது:

ஆம் பீஜே அவர்களே. கர்த்தரின் முன்னிலையில் (அல்லாஹ்வின் முன்னிலையில் அல்ல) நாம் அனைவரும் அந்நாளில் நிற்போம். நம்முடைய இவ்வுலக நம்பிக்கை (விசுவாசம்) மற்றும் நடத்தைகள் மீது ஆதாரப்பட்டு அந்நாளின் நியாயந்தீர்ப்பு இருக்கும்.

அந்த நாளின் நியாயத்தீர்ப்பில் நாம் வெற்றிப் பெறுவோம் என்ற நம்பிக்கை கிறிஸ்தவர்களுக்கு உண்டு (இதனை கிறிஸ்தவர்கள் வழக்கப்படி „இரட்சிப்பின் நிச்சயம்" என்றுச் சொல்வார்கள்). அந்த நம்பிக்கை எங்களுக்கு திடமாக உள்ளது. நாம் மரித்த பிறகு நமக்கு மோட்சத்தை கொடுப்பது அல்லது மறுப்பது அந்த இறைவனின் அப்போதைய விருப்பம் போன்ற கோட்பாடு எங்களுக்கு இல்லை. இந்த உலகிலேயே எங்களுக்கு 100% இரட்சிப்பின் நிச்சயம் உண்டு. இதனால் தான் நாங்கள் உங்களுக்கு மறுப்பை எழுதிக்கொண்டு இருக்கிறோம், வாழ் நாள் எல்லாம் பயத்தோடும், அல்லாஹ் எனக்கு சொர்க்கம் அளிப்பானா இல்லையா? என்ற சந்தேகத்தோடும் வாழாமல் இருக்கும்படியான ஒரு வழியை இயேசு திறந்து வைத்துச் சென்றுள்ளார். அந்த இடுக்கமான வாசல் வழியாக செல்ல உங்களுக்கு விருப்பமா?

பீஜே அவர்கள் எழுதியது:

உங்களது வேதம், உங்களின் நம்பிக்கை, பரலோக ராஜ்ஜியத்தில் நித்திய ஜீவனை அடைய உதவுவதாக இல்லை. உங்கள் மதகுருமார்கள் உங்களைத் தறவறான வழியில் இழுத்துச் சென்று கொண்டிருக்கின்றார்கள். இந்த உண்மையை பைபிளின் துணையுடன் இந்நூலில் நிறுவியுளளோம்.

கிறிஸ்தவன் எழுதியது:

உங்களைப் போன்ற அனுபவம் வாய்ந்த இஸ்லாமிய அறிஞருக்கும் இஸ்லாமியர்களுக்கும் நாங்கள் இஸ்லாம் பற்றி தெரிவிக்க வேண்டிய விஷயங்கள் அனேகம் உண்டு, அதே நேரத்தில் பைபிள் பற்றியும் உங்களுக்கு சொல்லிக்கொடுக்கவேண்டிய விஷயங்களும் உண்டு. நித்திய ஜீவனை அடைய உலக மக்களுக்கு பைபிள் போதும், குர்‍ஆன் அதற்கு உதவாது என்பதை இந்த உங்களின் புத்தகத்திற்கு நாங்கள் மறுப்பை கொடுத்துக் கொண்டு இருக்கும்போதே அனேக இஸ்லாமியர்கள் அறிந்துக்கொள்வார்கள். எங்கள் நம்பிக்கை மற்றும் எங்கள் பரிசுத்த வேதம் எங்களை பரலோக இராஜ்ஜியத்தில் வெற்றியடையச் செய்யும், இதில் அணு அளவேனும் சந்தேகமில்லை.

பீஜே அவர்களே உங்கள் மீதும், இஸ்லாமியர்கள் மீதும் கொண்டுள்ள அன்பினிமித்தம் நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால், "உங்கள் குர்‍ஆனும், உங்கள் முஹம்மது மீது நீங்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கையும் கர்த்தரின் நியாயத்தீர்ப்பு நாளில் உங்களை வெற்றியடையச் செய்யாது, உங்களுக்கு சொர்க்கத்தை அளிக்காது என்பதை மிகவும் தாழ்மையோடு தெரிவித்துக்கொள்கிறேன்".

எங்கள் மத குருமார்கள் எங்களை தவறான வழியில் இழுத்துச் செல்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை கூறியுள்ளீர்கள். இது முழுக்க் முழுக்க மிகப் பெரிய பொய்யாகும். பைபிள் என்பது உலகத்தை படைத்த இறைவனால் எங்களுடைய வழிகாட்டுதலுக்காக கொடுக்கப்பட்ட ஒரு பொக்கிஷமாகும். இது மட்டுமல்ல, எங்களை வழி கெடுக்க எந்த ஒரு மத குருவாலும் முடியாது ஏனென்றால், நாங்கள் எங்கள் வேதத்தை எங்கள் தாய் மொழியில் படிக்கிறோம். உங்களைப் போன்று குர்‍ஆனை அரபியில் படித்தால் தான் நன்மை என்ற "தவறான" கோட்பாடு கிறிஸ்தவத்தில் இல்லை. எந்த ஒரு கிறிஸ்தவ சபையிலாவது "நீங்கள் எபிரேய மற்றும் கிரேக்க மொழியில் பைபிளை படித்தால் தான், நன்மை" என்று எந்த ஒரு போதகரும் சொல்வதில்லை, இப்படிச் சொன்னால் அது முட்டாள் தனம். இப்படிபட்ட ஒரு கோட்பாட்டை நீங்கள் பின்பற்றுகிறீர்கள்.

குர்‍ஆன் இறைவனால் கொடுக்கப்பட்ட வேதமல்ல, முஹம்மது ஒரு தீர்க்கதரிசி அல்ல என்ற உண்மையை நாங்கள் சில ஆண்டுகளாக ஆதாரங்களோடு எழுதி வருகிறோம். அதே வரிசையில் உங்கள் இந்த புத்தகத்திற்கு நாங்கள் தரவிருக்கும் மறுப்புகள் "உண்மை எது பொய் எது" என்பதை மக்கள் அறிந்துக்கொள்ள வழி வகுக்கும். எனவே, நீங்கள் சொன்ன அதே பைபிளைக் கொண்டு "நீங்கள் சொல்வது பொய், உங்கள் குற்றச்சாட்டுக்கள் பொய்" என்பதை நாங்கள் நிருபிக்கப்போகிறோம், மட்டுமல்ல, குர்‍ஆன் ஒரு வேதமல்ல என்பதும் இதன் மூலம் தெளிவாக விளங்கும்.

பீஜே அவர்கள் எழுதியது:

எழுதியவன் யார்? என்பதைப் புறக்கணித்துவிட்டுக் காலம் காலமாக உங்கள் மதகுருமார்கள் கர்த்தரின் போதனைக்கு முரணாக உங்களுக்குப் போதித்தவற்றைத் தூக்கி எறிந்துவிட்டு, மதகுருமார்கள் மீதுள்ள அளவு கடந்த மரியாதையை ஒதுக்கிவிட்டு நான் இந்நூலில் எடுத்து வைத்திருக்கின்ற வாதங்களையும் அதில் உள்ள நியாயங்களையும் நடுநிலையோடு, திறந்த மனதுடன் நீங்கள் சிந்தித்தால் நாங்கள் வந்த முடிவை நோக்கி நீங்களும் நிச்சயம் வருவீர்கள்.

கிறிஸ்தவன் எழுதியது:

உண்மையை அறிந்துக்கொள்ள விரும்புகிறவர்கள், "யார் எழுதினான்? அவன் முகவரி என்ன? அவன் பெயர் என்ன?" போன்ற விவரங்களை கேட்காமல், "அவன் சொன்னதில் உண்மை உண்டா? அவன் ஆதாரங்களை முன்வைக்கின்றானா?" போன்ற கேள்விகளை கேட்டு ஆராய்ந்தால் சத்தியம் எது அசத்தியம் எது என்பது விளங்கும். ஆனால், இன்றைய தமிழ் இஸ்லாமியர்களின் நிலை எப்படி உள்ளது என்றால் (பீஜே அவர்களே உங்கள் நிலையும் கூட), 'பெயரைச் சொன்னால் மட்டுமே, முகவரியை கொடுத்தால் மட்டுமே நாங்கள் நம்புவோம். அவன் எழுதியதில் உண்மை இருந்தாலும், ஆதாரங்கள் இருந்தாலும் அதனை நாங்கள் பார்க்கமாட்டோம் படிக்கமாட்டோம்' என்ற நிலைக்கு இஸ்லாமியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

பீஜே அவர்களுக்கு நான் தெரிவித்துக்கொள்வது என்னவென்றால், "கர்த்தரின் போதனைக்கு முரணாக எங்கள் மதகுருக்கள் போதிக்கவில்லை, ஆனால், அதே கர்த்தரின் போதனைக்கு விரோதமாகவும், முரணாகவும், போதித்தவர் உங்கள் முஹம்மதுவும், அவரது அடிச்சுவடியில் நடந்துக்கொண்டு இருக்கும் உங்களைப்போல இருக்கும் இஸ்லாமிய அறிஞர்களுமேயாவார்கள்".

இன்று கிறிஸ்தவர்கள் செய்யவேண்டிய ஒரு முக்கியமான காரியம் என்னவென்றால், "உங்களைப் போல இஸ்லாமிய அறிஞர்கள் சொல்வதை கிறிஸ்தவர்கள் தூக்கி எறிய வேண்டும், மத நல்லிணக்கனம் என்ற போர்வையில், இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் என்ற போர்வையில் விஷத்தை கொஞ்சம் கொஞ்சமாக குழந்தைகள் குடிக்கும் பாலில் (மக்களின் மனதில்) கலக்கும் இஸ்லாமிய போதனையை கிறிஸ்தவர்கள் தூக்கி எறிய வேண்டும்".

எங்களுக்கு எங்கள் கிறிஸ்தவ ஊழியர்கள் மீது இருக்கும் அந்த அளவு கடந்த மரியாதை என்பது, அவர் எந்த அளவு பைபிளுக்கு சார்ந்து போதிக்கிறார் என்பதை பொறுத்து இருக்கும். எந்த ஒரு கிறிஸ்தவ போதகராவது, பைபிளுக்கு எதிராக எதையாவது போதித்தால் நாங்கள் அவரை ஒதுக்கிவிடுவோம், எங்களை யாரும் கட்டுப்படுத்தமுடியாது, நாங்கள் சுதந்திர பறவைகள். நீங்கள் உங்கள் முஹம்மது மீது வைத்திருக்கும் அளவு கடந்த மரியாதை எங்களுக்கு இல்லை. தவறு செய்தால் நீ நபியாக இருந்தாலும் சரி தவறு தவறு தான் , அதே நேரத்தில் நன்மை செய்து, கர்த்தருக்கு ஊழியம் செய்தால், "கர்த்தரின் ஊழியர்" என்ற மரியாதை நிச்சயம் உண்டு. (இந்த மரியாதை பட்டியலில், மக்களை ஏமாற்றும் ஊழியர், கொல்லையடிக்கும் ஊழியர் வரமாட்டார்).

ஆக, பீஜே அவர்களே, எங்கள் கிறிஸ்தவ ஊழியர்கள் மீது நீங்கள் சுமத்தும் இந்த குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களின் சவாலை நான் ஏற்கிறேன், உங்கள் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு நான் பதிலை அல்லது மறுப்பை தருகிறேன். பீஜே அவர்களே, உங்கள் இஸ்லாம் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், நீங்கள் எடுத்த முடிவு மீது உங்களுக்கு முழு நிச்சயம் இருந்தால், நான் எழுதப்போகும் பதில்களை படியுங்கள், ஆதாரங்களை சரிபாருங்கள், என் வரிகள் பற்றிய உங்கள் மறுப்பை எழுதுங்கள், எங்கள் ஆதாரங்களையும், உங்கள் ஆதாரங்களையும் மக்கள் படிக்கும்படி மக்களின் முன்னிலையில்கொண்டு வாருங்கள். இப்படி நீங்கள் செய்தால், நிச்சயமாக எங்கள் முடிவிற்கு நீங்கள் வருவீர்கள் என்பதில் சந்தேகமில்லை.

பீஜே அவர்கள் எழுதியது:

பைபிள் கர்த்தரின் வார்த்தைகளாக இருக்கவே முடியாது; மனிதனது வார்த்தைகள் கலந்துள்ளன; கர்த்தரின் வார்த்தைகள் பல நீக்கப்பட்டுள்ளன; மாற்றப்பட்டுள்ளன என்பதை மிகத் தெளிவாகவே இந்த நூலிலிருந்து நீங்கள் அறிந்து கொள்வீர்கள் என்று உறுதியாக நான் நம்புகின்றேன்.

கிறிஸ்தவன் எழுதியது:

பீஜே அவர்களே, நீங்கள் வருந்த மாட்டீர்கள் என்ற எண்ணத்தில் ஒரு உண்மையைச் சொல்கிறேன் "குர்‍ஆன் இறைவனின் வார்த்தையாகவே இருக்கவே முடியாது, இதற்கு ஒரு கடுகளவும் வாய்ப்பில்லை". ஆனால், பைபிள் இறைவனின் வேதமாகும், இதனை கொஞ்ச கொஞ்சமாக நான் என் மறுப்புக்களில் விளக்குவேன், இதனை என் கட்டுரைகளை படிக்கும் எந்த ஒரு நபராக இருந்தாலும் சரி, அவர் இஸ்லாமியரோ அல்லது கிறிஸ்தவரோ அதனை அவர் அறிந்துக்கொள்வார்". உங்கள் வரிகள் மீது உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், உங்கள் தளத்தில் என் மறுப்புக்களின் தொடுப்பை கொடுப்பீர்களா? " நீங்கள் முன்வைத்த வாதங்கள் சரியானவை தான்" என்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்தால், என் தொடுப்புக்களை உங்கள் தளத்தில் குறிப்பிட்டு மறுப்போ அல்லது பதிலோ எழுதுவீர்களா? இணைய வாசகர்கள் நீங்கள் முன்வைத்த குற்றச்சாட்டுகளையும், அவைகளுக்கு நாங்கள் கொடுக்கும் பதில்களையும் படிக்க உதவுவீர்களா? அப்படி உதவுவீர்கள் என்று நம்புகிறேன்.

பீஜே அவர்கள் எழுதியது:

இந்நூலில் நான் எடுத்து வைத்துள்ள வாதங்களுக்கும் கருத்துக்களுக்கும் தக்க ஆதாரத்துடன் மறுப்பைத் தெரிவித்தால், அதைப் பரசீலித்து, ஏற்று, திருத்திக் கொள்ளவும் தயாராகவுள்ளேன். நாங்களும் நீங்களும் கர்த்தரின் பரலோக ராஜ்ஜியத்தில் நித்திய ஜீவனை அடைய உரிய வழி எது என்பதை அறிய வேண்டும் என்பதே என் ஆவல். அதற்காகவே இந்நூலைத் தந்துள்ளேன்.

அன்புடன்

P. ஜைனுல் ஆபிதீன்

கிறிஸ்தவன் எழுதியது:

பீஜே அவர்களே, இந்த விஷயத்தில் நீங்கள் பலவீனமானவர்கள், தோற்றுப்போனவர்கள், சத்தியத்தில் நிலை நிறகாதவர்கள். ஏனென்றால், "இயேசு இறைமகனா?" என்ற புத்தகத்தை எழுதினீர்கள், அதற்கு நான் சில பதில்களைக் கொடுத்துள்ளேன். இதுவரை என் பதில் கட்டுரையை குறிப்பிட்டு, அவைகளுக்கு தகுந்த பதிலை கொடுத்துள்ளீர்களா? (எனக்கு தெரிந்தவை நீங்கள் என் மறுப்புக்களுக்கு பதிலை தரவில்லை, என் கண்களில் படாமல் இருந்தால், உடனே அவைகளை எனக்கு தெரிவிக்கவும்).

குறைந்த பட்சம் இந்த உங்களின் புத்தகத்திற்கு நான் அளிக்கும் மறுப்புக்களை உங்கள் தளத்தில் பதித்து மறுப்பு எழுதுவீர்களா?

உங்களிடம் தமிழ் கிறிஸ்தவர்கள் எதிர்ப்பார்ப்பது:

1) எங்கள் மறுப்பு கட்டுரையின் தொடுப்பை உங்கள் தளத்தில் தாருங்கள் (ஏனென்றால், நீங்கள் எழுதிய புத்தகத்திற்கு தான் நாங்கள் பதில் எழுதிக்கொண்டு இருக்கிறோம், மற்றவர்கள் எழுதிய புத்தகத்திற்கு அல்ல, எனவே பொறுப்பு உங்களுக்கு உண்டு).

2) தொடுப்பை கொடுத்து, உங்கள் மறுப்பையும் எழுதுங்கள் அல்லது வீடியோவில் பேசியாவது பதியுங்கள்.


இப்படி செய்வதை விட்டுவிட்டு, நேரடியாக உமர் வந்தால் தான் நான் பதில் தருவேன் என்ற வாதத்தை மட்டும் முன் வைக்கவேண்டாம். இப்படி நீங்கள் செய்தால், மக்கள் உங்களிடம் இப்படியாக கேட்பார்கள் "பின் எந்த தைரியத்தில் நீங்கள் மட்டும் கிறிஸ்தவத்திற்கு எதிராக புத்தகத்தை வெளியிடுகிறீர்கள்? எழுத்து வடியில் உங்கள் கருத்துக்களை சொல்கிறீர்கள்?".

நீங்கள் உங்கள் புத்தகத்தின் முன்னுரையில் வாக்கு கொடுத்துள்ளீர்கள், அதனை நிறைவேற்ற தவறவேண்டாம்.

கடைசியாக பீஜே அவர்களே, நீங்களும், இதர இஸ்லாமியர்களும் பரலோக இராஜ்ஜியத்தில் பிரவேசிக்கவேண்டும் என்பதே எங்கள் ஆவலும் கூட, முக்கியமாக என்னுடைய ஆவல், ஏனென்றால், நானும் ஒரு இஸ்லாமிய பின்னணியிலிருந்து வந்தவன் என்பதால், என் ஜனங்கள் (இஸ்லாமியர்கள்) மீது எனக்குள்ள அக்கரையே இந்த எழுத்து ஊழியத்தை நான் கையில் எடுக்க காரணமாக உள்ளது.

உங்களை என் அடுத்த மறுப்பில் சந்திக்கும் வரை...

அன்புடன்

தமிழ் கிறிஸ்தவன்

பீஜே அவர்களுக்கு கொடுக்கப்பட்ட இதர மறுப்புக்களில் சில‌:

1. இஸ்லாமை மண்ணை கவ்வ வைத்த அப். நடபடிகள் - பாகம் 1

2. பதில் - 2: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை - நற்செய்தி நூல்களில் இயேசுவின் இறைத்தன்மை - 1

3. உமருடன் எழுத்து விவாதம் புரிய பீஜே மறுப்பு !?!

4. ஆன்லைன் பீஜே தள நேரடி விவாத அழைப்பும், உமரின் பதிலும்

5. பீஜே அவர்களுக்கு பதில் - 1: இயேசுவுக்குச் சம்மந்தமில்லாத கிறித்தவக் கொள்கை

6. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி? பாகம் – 2

7. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை? பாகம் - 1

8. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்

9. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)--
10/01/2011 09:46:00 AM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது


இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்