இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Monday, June 29, 2009

அபூ அப்திர் ரஹ்மானும், நிர்வாணமும், லூக்கா 22:36ன் பட்டயமும்

 

அபூ அப்திர் ரஹ்மானும், நிர்வாணமும், லூக்கா 22:36ன் பட்டயமும்கிறிஸ்தவம் பார்வை தளத்தின் "பைபிளில் பயங்கரவாதம் (3)க்கு பதில்"


முன்னுரை:கிறிஸ்தவம் பார்வை என்ற இஸ்லாமிய தளம் "பைபிளில் பயங்கரவாதம்" என்ற தலைப்பில் கட்டுரைகளை எழுதிக்கொண்டு வருகிறது. அவர்களின் இந்த தொடர் கட்டுரைகளுக்கு இதுவரை நான்கு பதில்கள் தரப்பட்டுள்ளன, அவைகளை இங்கு படிக்கவும்:


பாகம் 1, பாகம் 2, பாகம் 3.1 மற்றும் பாகம் 3.2 - (லூக்கா 22:36ல் உள்ள பட்டயம் பற்றி ஒரு சிறு விளக்கம்)இக்கட்டுரையின் அவசியம் என்ன?


அபூ அப்திர்ரஹ்மான் அவர்கள் "லூக்கா 22:36ல், பட்டயம் பற்றி இயேசு சொல்கிறாரே, அதன் அர்த்தம் என்ன? தன் சீடர்களும் பட்டயங்களை பயன்படுத்த இயேசு அனுமதிப்பது போல உள்ளதே? என்று கேட்டு இருந்தால், மேலே கொடுத்த இந்த கட்டுரையே "பாகம் 3.2: லூக்கா 22:36 ல் உள்ள பட்டயம் பற்றி ஒரு சிறு விளக்கம்" போதுமானது. ஆனால், அவர் அப்படி கேட்காமல், இஸ்லாமியர்களுக்கே உரித்தான பாணியில் "நிர்வாணமாக இருந்தாலும் பரவாயில்லை, பட்டயத்தை வாங்கிக் கொள்ளுங்கள்" என்று இயேசு சொன்னார் என்று சொந்தமாக விரிவுரை கொடுத்ததால், அதற்கான பதிலைச் சொல்லவே, அவரது வரிகளை மேற்கோள் காட்டி இந்த கட்டுரை எழுதப்படுகிறது.


கிறிஸ்தம் பார்வை தளம் தன் மூன்றாம் பாகத்தில் புதிய ஏற்பாடு வசனம் பற்றி என்ன எழுதியிருக்கிறது என்பதை முதலில் காண்போம்.அபூ அப்திர் ரஹ்மான் அவர்கள் எழுதியது:பைபிள் கூறும் பயங்கரவாதம் (3)"நீ ஆடையின்றி நிர்வாணமாக இருந்தாலும் ஆயுதமின்றி மட்டும் இருக்காதே" என்று பைபிள் கட்டளையிடுகிறது. பைபிளின் இவ்வசனப்படி கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் கையில் ஒரு துப்பாக்கியின்றி இருக்கக் கூடாது. இக்கலாச்சாரத்தின் வெளிப்பாடாகத் தான் அமெரிக்காவில் பள்ளி மாணவன் சக மாணவனை துப்பாக்கியால் சுடுவது அடிக்கடி நிகழ்ந்து வருகிறதோ?


… "நீங்கள் உங்கள் ஆடைகளை விற்றாவது ஒரு ஆயுதத்தை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்" என்று புதிய ஏற்பாட்டில் இயேசுவின் கட்டளையாகக் கூறப்பட்டிருப்பதைக் குறித்து என்ன விளக்கம் கூறுவார்கள்?அதற்கு அவர், இப்பொழுதோ பணப்பையும் சாமான்பையும் உடையவன் அவைகளை எடுத்துக் கொள்ளக்கடவன்; பட்டயம் இல்லாதவன் தன் வஸ்திரத்தை விற்று ஒன்றைக் கொள்ளக்கடவன். (லூக்கா: 22:36)
."ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் காட்ட வேண்டும்" என்று கூறும் அதே பைபிள் தான், "உன் எதிரியிடமிருந்து உன்னைப் பாதுகாத்துக் கொள்ள உன் ஆடையை விற்றாவது ஒரு வாளை வாங்கிக் கொள்" என்று கட்டளையிடுகிறது. அதாவது "நீ ஆடையின்றி நிர்வாணமாக இருந்தாலும் ஆயுதமின்றி மட்டும் இருக்காதே" என்று பைபிள் கட்டளையிடுகிறது. பைபிளின் இவ்வசனப்படி கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவரும் கையில் ஒரு துப்பாக்கியின்றி இருக்கக் கூடாது. இக்கலாச்சாரத்தின் வெளிப்பாடாகத் தான் அமெரிக்காவில் பள்ளி மாணவன் சக மாணவனை துப்பாக்கியால் சுடுவது அடிக்கடி நிகழ்ந்து வருகிறதோ?Source: http://christianpaarvai.blogspot.com/2009/02/3.html
(emphasis mine)மேற்கண்ட அபூ அப்திர் ரஹ்மான் அவர்களின் வரிகளை காணும் போது, கீழ் கண்ட விவரங்களை அவர் சொல்வதைக் காணலாம்.1) ஆடையின்றி நிர்வாணமாக இருந்தாலும் ஆயுதமின்றி இருக்கவேண்டாம் என்று பைபிள் கூறுகிறதாம்.2) இவ்வசனத்தின் படி கிறிஸ்தவர்கள் தங்கள் கைகளில் ஆயுதமின்றி இருக்கக்கூடாதாம் (பல நூற்றாண்டுகளாக‌ இந்த வசனத்தை படித்துக்கொண்டு இருக்கும் கிறிஸ்தவர்களுக்கே வராத புதிய யோசனை இஸ்லாமியர்களுக்கு வந்துள்ளது - அருமையான முற்போக்குச் சிந்தனை).3) இவ்வசனத்தின் வெளிப்பாடு தான் அமெரிக்காவில் மாணவன் சகமாணவனை துப்பாக்கியால் சுடுகின்றானாம் (21ம் நூற்றாண்டின் இஸ்லாமிய கண்டுபிடிப்பு)4) லூக்கா 22:36ம் வசனத்தின் விளக்கமாக கிறிஸ்தவர்கள் என்ன கூறுவார்கள் என்று கேட்கிறார்?5) லூக்கா 22:36ம் வசனம் "எதிரிகளிடமிருந்து காத்துக்கொள்ள ஒரு ஆயுதத்தை வாங்கிக்கொள் என்று" கட்டளையிடுகிறதாம்இந்த ஐந்து விவரங்களுக்கும் நாம் இப்போது பதிலைக் காண்போம்.


ஆரம்பமாக குர்‍ஆனின், முஹம்மதுவின் பயங்கரவாதத்தை மறைக்க இஸ்லாமியர்களின் ஒரு புதிய யுக்தியை காண்போம்.


இஸ்லாமியர்கள் நபியாக கருதும் முஹம்மதுவின் வாழ்க்கையிலும், குர்‍ஆனிலும், ஹதீஸ்களிலும் வன்முறையும், பயங்கரவாதமும் மிகுதியாக காணக்கிடக்கிறது. அதனை இன்று இஸ்லாமிய நாடுகளிலும், இஸ்லாமிய நாடுகளில் வாழும் இஸ்லாமியர்களின் வாழ்க்கையிலும் காணலாம். இன்று தீவிரவாதத்தினால் உலகை அழித்துக்கொண்டு இருக்கும் "இஸ்லாமிய தீவிரவாதிகள்" தங்கள் வழிகாட்டியாக முஹம்மதுவையும், குர்‍ஆனையும் வைத்துள்ளார்கள். ஒரு கையில் துப்பாக்கியுடனும் இன்னொரு கையில் குர்‍ஆனுடனும் காட்சியளிக்கிறார்கள். இது என் சொந்த கருத்தல்ல, நீங்கள் செய்தித்தாள்களை படிப்பவர்களாக இருந்தால், இப்படிப்பட்ட தீவரவாதிகளின் படங்களை காணலாம்.


இப்படி இருந்தும், இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம் என்பதை நிருபிக்க இஸ்லாமிய அறிஞர்கள் படாத படு படுகிறார்கள், மற்றும் இஸ்லாமின் பெயரில் தீவிரவாத செயல்கள் புரிபவர்கள் இஸ்லாமியர்கள் அல்ல என்றுச் சொல்கிறார்கள்.


இஸ்லாமிய அறிஞர்களின் இப்படிப்பட்ட யுக்தியில் ஒரு யுக்தி தான் "இயேசுவின் வாழ்க்கையிலும் செயலிலும்" வன்முறையை கண்டுபிடிக்க முயல்வது. ஆனால், அவர்களுக்கு நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால், இயேசுவின் வாழ்வில், செயலில் தீவிரவதத்தை/பயங்கரவாதத்தை கண்டுபிடிக்க முயல்வது, குருடனாக இருக்கும் முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படுவது போலாகும்.1) ஆடையின்றி நிர்வாணமாக இருந்தாலும், ஆயுதமின்றி இருக்கவேண்டாம் என்று பைபிள் கூறுகிறதாம்.உண்மையில் அபூ அப்திர்ரஹ்மான் அவர்கள் புதிய ஏற்பாட்டை படித்து தான் எழுதுகிறாரா? என்ற சந்தேகம் வருகிறது.


லூக்கா 22:36ம் வசனத்தை குறிப்பிட்டு கேள்வி எழுப்பிய அபூ அப்திர் ரஹ்மான் அவர்கள் முதலில் இயேசுவின் வாழ்க்கை வரலாறையும், அவரது கட்டளைகளையும் படித்தாரா? இல்லையா? ஏதோ ஒரு வசனத்தை எடுத்துக்கொண்டு அதற்கு முன்பும் பின்பும் உள்ள வசனங்களை படிக்காமல் (அப்படி படித்தாலும், குற்றப்படுத்தவேண்டும் என்ற காரணத்தால் மறைத்துவிட்டு) வியாக்கீனம் செய்வது சரியானதா?


அருமை இஸ்லாமிய அறிஞரே, நீங்கள் சொல்வது போலவா லூக்கா 22:36ம் வசனம் சொல்கிறது?லூக்கா 22:36அதற்கு அவர், இப்பொழுதோ பணப்பையும் சாமான்பையும் உடையவன் அவைகளை எடுத்துக் கொள்ளக்கடவன்; பட்டயம் இல்லாதவன் தன் வஸ்திரத்தை விற்று ஒன்றைக் கொள்ளக்கடவன்.இவ்வார்த்தைகளை சொல்லும் போது, இயேசுவின் மனதில் நீங்கள் நினைப்பது போல "ஆடையின்றி நிர்வாணமாக இருந்தாலும் பரவாயில்லை, என் சீடர்கள் பட்டயங்கள் இல்லாமல் இருக்கக்கூடாது" என்ற கண்ணோட்டத்திலா சொல்லியிருப்பார்?


ஒரு பெண்ணை ஆபாச இச்சையோடு பார்க்கின்ற ஒவ்வொருவனும், ஒரு ஆணை ஆபாச இச்சையோடு பார்க்கின்ற பெண்களும், "விபச்சார" குற்றம் செய்தவர்களுக்கு சமம் என்றுச் சொன்ன இயேசுவா தன் சீடர்கள் நிர்வாணமாக இருந்தாலும் பரவாயில்லை, வாளோடு இருக்கக்கூடாது என்று சொல்லியிருப்பார்?


ஓ! முஹம்மதுவை வழிகாட்டியாக பின் பற்றும் இஸ்லாமியர்களே, சிறிது சிந்தித்து எழுதமாட்டீர்களா? எதை எழுதினாலும் கிறிஸ்தவர்கள் கேட்கமாட்டார்கள் என்ற தைரியமா உங்களுக்கு? கிறிஸ்தவர்கள் வாள்களை தூக்க மாட்டார்கள் உண்மை தான், ஆனால், வாளை விட வலிமையான பேனாவை பயன்படுத்துவார்களே! நீங்கள் பைபிள் பற்றி, இயேசுவைப் பற்றி என்ன சொன்னாலும் கிறிஸ்தவர்கள் உங்களை சபிக்கமாட்டார்கள், உண்மை தான், ஆனால், கேள்வி கேட்கப்படும் போது சரியான பதிலைக் கொடுப்பார்கள் என்பதை மட்டும் அறிந்துக் கொள்ளுங்கள்.• இயேசு போர்கள் புரிந்து, அதில் பிடிபடும் பெண்களை பிடிபட்ட அன்றே கற்பழிக்கும் நபர் என்று நினைத்துவிட்டீர்களா?• என்னை பின்பற்றினால் சொர்க்கத்தில் அனேக பெண்கள் உங்களுக்கு கிடைப்பார்கள் என்று தன் சீடர்களுக்கு ஆபாச ஆசைக் காட்டியவர் என்று நினைத்துக் கொண்டீர்களா?• ஆறுவயது சிறுமியையும் திருமணம் செய்ய விரும்பியர் என்று நினைத்துக் கொண்டீர்களா?• வளர்ப்பு மகனின் மனைவியையும் விவாகரத்திற்கு பிறகு திருமணம் செய்துக்கொண்ட நபர் என்று இயேசுவை நினைத்துக் கொண்டீர்களா?• அடிமைப் பெண்களை திருமணம் செய்துக் கொள்ளாமல் உடலுறவு கொள்ள தன்னை பின் பற்றுகிறவர்களுக்கு கட்டளைகளை கொடுத்துச் சென்றவர் என்று நினைத்துவிட்டீர்களா?அருமை அப்திர் ரஹ்மான் அவர்களே, லூக்கா வசனத்தில் "பட்டயம்" என்ற வார்த்தை உங்கள் கண்களுக்கு தெரிந்ததே, அதே வசனத்தில் உள்ள "பணப்பையும், சாமான் பையும்" என்ற வார்த்தைகள் இருப்பதை உங்கள் கண்களுக்கு தெரியாமல் போனதென்ன? இயேசு, ஏன் தன் சீடர்கள் "பணப்பையும், சாமான்கள் வைக்கும் பையும் உள்ளவன் எடுத்துக்கொள்ளுங்கள்?" என்றுச் சொல்கிறார் என்று விளக்கமுடியுமா? இந்த வசனத்தில் "நிர்வாணம்" இருப்பதாக எங்கு கண்டீர்கள்? உடைகளை விற்றாவது பட்டயத்தை வாங்குங்கள் என்றுச் சொல்லும் போது, நாம் உடுத்திக்கொண்டு இருக்கும் உடையை கழற்றி விற்று, நிர்வாணமாகித் தான் வாங்கவேண்டும் என்று ஏன் புரிந்துக்கொண்டீர்கள் நீங்கள்? நம்மிடம் இருக்கும் வேறு உடையை விற்று வாங்கலாம் என்று நீங்கள் ஏன் புரிந்துக்கொள்ளவில்லை? இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும் என்று இயேசு கூறியிருப்பது, எவ்வளவு உண்மையாக இருக்கிறது!2) இவ்வசனத்தின் படி கிறிஸ்தவர்கள் தங்கள் கைகளில் ஆயுதமின்றி இருக்கக்கூடாதாம். (பல நூற்றாண்டுகளாக இந்த வசனத்தை படித்துக்கொண்டு இருக்கும் கிறிஸ்தவர்களுக்கே வராத புதிய யோசனை இஸ்லாமியர்களுக்கு வந்துள்ளது - அருமையான முற்போக்குச் சிந்தனை)கிறிஸ்தவர்களின் வேத வசனத்திற்கு இஸ்லாமிய முறையில் விரிவுரை கொடுக்க முன்வருவதற்கு முன்பு, ஒரு முறையாவது, இந்த வசனம் பற்றி கிறிஸ்தவ அறிஞர்கள் என்ன உரை எழுதுகிறார்கள்? இதன் பின்னணி என்ன என்று படித்தீர்களா?


இவ்வசனத்தின் முன்பும் பின்பும் உள்ள வசனங்கள் என்ன சொல்கின்றன என்று ஒருமுறையாவது படித்தீர்களா?


அருமை அப்திர் ரஹ்மான் அவர்களே, இந்த வசனத்தை கிறிஸ்தவர்கள் பல்லாண்டு காலமாக படித்துக்கொண்டு இருக்கிறார்கள், ஆனால், நீங்கள் சொல்வது போன்ற ஒரு அர்த்தத்தை அவர்கள் புரிந்துக்கொண்டதில்லை, புரிந்துக்கொண்டு இருந்திருந்தால், கிறிஸ்தவர்களும் தங்களோடு எப்போது ஆயுதங்களை வைத்துக்கொண்டு அவைகளை பயன்படுத்தியிருந்தால், இஸ்லாமிய நாடுகளில் வாழும் கிறிஸ்தவர்களை இஸ்லாமியர்கள் தாக்கும் போது, அவர்களின் தலைகளை அல்லவா வெட்டிச் சாய்த்து இருப்பார்கள். இது போல எந்த இஸ்லாமிய நாடுகளிலாவது நடக்கின்றதா?


ஒரு நாளுக்கு ஆயிரம் முறை "இஸ்லாம் அமைதி மார்க்கம்" என்று ஓயாமல் சொல்லிக்கொண்டு இருந்தால், இஸ்லாம் அமைதி மார்க்கமாக மாறிவிடாது, அதனை அமைதி மார்க்கமாக அதனை பின் பற்றும் இஸ்லாமியர்களே வாழ்ந்து காட்டவேண்டும் (பிளீஸ், இந்திய இஸ்லாமைப் பற்றி எதுவும் சொல்லவேண்டாம், இங்கு பின் பற்றுவது, இஸ்லாம் அல்ல, இஸ்லாம் மாதிரி). கிறிஸ்தவர்கள் உங்களைப்போலச் சொல்வதில்லை, ஆனால், வன்முறையில்லாமல் வாழ்ந்து காட்டிவிடுகிறோம்.


நீங்கள் இந்த வசனத்தை மட்டுமே பார்க்கிறீர்கள், ஆனால், கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவின் முழு வாழ்க்கையையும் பார்க்கிறார்கள். இன்று நீங்கள் இதற்கு ஒரு புதிய விளக்கத்தை இஸ்லாமிய முறைப்படி கொடுத்துள்ளீர்கள்.


எங்கே காட்டுங்கள்? கிறிஸ்தவர்கள் ஒரு கையில் பைபிளோடும் இன்னொரு கையில் துப்பாக்கியுடனும் இருப்பதை உங்களால் காணமுடியுமா? ஆனால், இதற்கு நேர் எதிராக, ஒரு கையில் துப்பாக்கியுடனும் இன்னொரு கையில் குர்‍ஆனுடனும் காட்சியளிக்கும் அமைதிப் புறாக்களை நாம் காணமுடியும்.


கீழ் கண்ட படங்களை ஒருமுறை பார்க்கவும், அவர்களது கையில் இருப்பது என்ன? பைபிளா அல்லது குர்‍ஆனா? அவர்கள் பின்பற்றுவது இயேசுவையா முஹம்மதுவையா? அவர்கள் பின்பற்றுவது இஸ்லாமையா அல்லது கிறிஸ்தவத்தையா?ஒருவேளை இந்த படங்களில் இருக்கும் இஸ்லாமியர்கள், பைபிளில் இருக்கும் லூக்கா 22:36ம் வசனம் குர்‍ஆனில் இருப்பதாக தவறாக நினைத்துக் கொண்டு இப்படி புகைப்படங்களுக்கு போஸ் கொடுக்கிறார்களோ?3) இவ்வசனத்தின் வெளிப்பாடு தான் அமெரிக்காவில் மாணவன் சகமாணவனை துப்பாக்கியால் சுடுகின்றானாம் (21ம் நூற்றாண்டின் இஸ்லாமிய கண்டுபிடிப்பு)எவனோ ஒருவன் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு சகமாணவர்களை கொன்றால், அதற்கு லூக்கா 22:36ம் வசனம் தான் காரணம் என்று நீங்கள் சொன்னால், இது தான் கிறிஸ்தவத்தின் கலாச்சாரம் என்று முஸ்லீம்கள் அதுவும் முஹம்மதுவை வழிகாட்டியாக வைத்துள்ள முஸ்லீம்கள் சொன்னால், கீழ் கண்ட செய்திகள் இஸ்லாமின் கலாச்சாரமா சொல்லுங்கள்?


இந்த படங்களில் துப்பாக்கியுடன் இருக்கும் இந்த பிஞ்சுக் குழந்தைகள் யார்? இவர்கள் முஸ்லீம்களா அல்லது கிறிஸ்தவர்களா? இந்த சிறிய வயதில் இவர்களின் நோக்கம் என்ன? இவன் இயேசுச் சொன்ன லூக்கா 22:36ம் வசனம் போதிக்கப்பட்டதால் தான் இப்படி காட்சியளிக்கிறானோ? அல்லது குர்‍‍ஆன் படி இவன் போஸ் கொடுக்கின்றானா?இஸ்லாம் அமைதி மார்க்கமானால் ஏன் இப்படி ஒரு கையில் குர்‍ஆனோடும், இன்னொரு கையில் ஆயுதத்தோடும் காட்சியளிக்கிறான்.


எங்கோ இடிக்கிறது போல இருக்கிறதே? லூக்கா 22:36ம் வசனத்தை படிப்பவர்களாகிய கிறிஸ்தவர்கள்/பிள்ளைகள் என்னடா என்றால், இப்படி காட்சியளிப்பதில்லை, ஆனால், உலகத்திலேயே மிகவும் அமைதியான மதமாக இஸ்லாமியர்களால் மட்டுமே கருதப்படும் முஸ்லீம்கள் கையில் துப்பாக்கியுடனும், குர்‍ஆனுடனும் காட்சியளிக்கிறார்களே! எங்கேயோ பிரச்சனை உள்ளது. அது என்ன என்று இப்போதாவது புரிகிறதா?நான் இஸ்லாமியர்களுக்குச் சொல்லிக்கொள்வது, அமெரிக்கர்கள் செய்வதெல்லாம் கிறிஸ்தவம் என்று எண்ணிவிடாதீர்கள். யாரோ துப்பாக்கியால் சுட்டால் அவன் பைபிளை படித்து தான் இப்படி செய்கின்றான் என்றுச் சொல்வது அறிவுடமையாகாது. ஆனால், அனேக இஸ்லாமிய தீவிரவாத செய்லகள் புரிபவர்களும், தீமைகள் புரிபவர்களும் தாங்கள் இஸ்லாமுக்காகத் தான் இப்படி செய்கிறார்கள் என்று சொல்கிறார்கள்.


உலகத்தில், எல்லா மதங்களை பின்பற்றுகிறவர்களிலும், நாத்தீகர்களிலும் நல்லவர்களும் உண்டு, கெட்டவர்களும் உண்டு. திருடர்கள் உண்டு, லஞ்சம் வாங்குபவர்கள் உண்டு, வன்முறையில் ஈடுபவர்கள் உண்டு, மனைவிமார்களை அடிப்பவர்கள் உண்டு, பெற்றோரை கொலை செய்பவர்கள், சொந்த குடும்ப நபர்களை கொல்பவர்கள் உண்டு. முக்கியமான நான் சொல்லவருவது என்னவென்றால்,


மற்ற மார்க்கங்களை பின்பற்றுகிறவர்கள் மற்றும் நாத்தீகவாதிகள் தாங்கள் தவறுகள் செய்யும் போது (முக்கியமாக தீவிரவாத செயல்களில் ஈடுபடும் போது, கொலைகளை செய்யும்போது) அதற்கு தாங்களே பொறுப்பு என்று ஒப்புக்கொள்கின்றனர், தங்கள் மார்க்கம் இப்படி செய்யச்சொன்னது என்று சொல்வதில்லை, அல்லது நான் வளர்ந்த சூழ்நிலை என்னை இப்படி மாற்றியது என்றுச் சொல்வார்கள், ஆனால், இதே குற்றத்தை செய்யும் முஸ்லீம்களில் பெரும்பான்மையானவர்கள் இதற்கு காரணம் எங்கள் மதம், இஸ்லாம் மற்றும் கு‍ர்‍ஆன் என்றுச் சொல்கிறார்கள், நாங்கள் இப்படித்தான் செய்வோம், இதற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம் என்றுச் சொல்வார்கள். இது தான் மற்ற எல்லா மார்க்கங்களை விட இஸ்லாமை உலகம் ஒரு வித்தியாசமான கண்ணோட்டத்தில் காண்பதற்கு காரணம். ஏன் இப்படி என்று இஸ்லாமியர்களே நீங்களே சிந்தியுங்கள்.


இப்படிப்பட்ட இஸ்லாமியர்களின் இந்த செயல்கள் எந்த கலாச்சாரம் சொல்லமுடியுமா?


அமெரிக்கா "கிறிஸ்தவம்" அல்ல, இங்கிலாந்து "கிறிஸ்தவம்" அல்ல, வேறு எந்த நாடும் கிறிஸ்தவம் அல்ல, கிறிஸ்தவம் தனிப்பட்ட மனிதனின் தனிப்பட்ட வாழ்க்கையில் காணமுடியும்.


ஆனால், சௌதி அரேபியா தான் இஸ்லாம், பாகிஸ்தான் தான் இஸ்லாம், மலேசியா தான் இஸ்லாம், ஆப்கானிஸ்தான் தான் இஸ்லாம், எகிப்து தான் இஸ்லாம். இந்த நாடுகளில் இஸ்லாமை பொதுவில் காணலாம், சாலைகளில் காணலாம், அரசாங்க சட்டங்களில் காணலாம். இஸ்லாமியர்கள் சொல்வார்கள், இந்த நாடுகளில் பின் பற்றப்படுவது இஸ்லாம் இல்லை என்று, ஆனால், இந்த வார்த்தைகள் ஜனநாயக நாட்டின் பாமர மக்களை திசைத் திருப்பும் வரிகளாகும். யாருக்குத் தெரியும், நாளைக்கு இந்தியாமும் ஒரு இஸ்லாமிய நாடாக மாறினால், எத்தனை பெண்கள் கற்பழிக்கப்படுவார்கள், கற்பழித்தவனுக்கு எதிராக சாட்சிச் சொல்ல நம் இந்தியப் பெண்கள் ஆண்களை எங்கே தேடுவார்கள், எத்தனை பேர் சாலைகளின் மத்தியில் தூக்கிலிடப்படுவார்கள்? ஆகையால், அமெரிக்காவில் நடக்கும் அட்டூழியங்களுக்கு கிறிஸ்தவத்தை குறை கூறாதீர்கள், அங்கு கிறிஸ்தவ சட்டம் நடைபெறவில்லை.4) லூக்கா 22:36ம் வசனத்தின் விளக்கமாக கிறிஸ்தவர்கள் என்ன கூறுவார்கள் என்று கேட்கிறார்?


இதற்கான பதிலை இந்த கட்டுரையில் காணலாம்:

பாகம் 3.2: லூக்கா 22:36ல் உள்ள பட்டயம் பற்றி ஒரு சிறு விளக்கம்5) லூக்கா 22:36ம் வசனம் "எதிரிகளிடமிருந்து காத்துக்கொள்ள ஒரு ஆயுதத்தை வாங்கிக்கொள் என்று" கட்டளையிடுகிறதாம்லூக்கா 22:36ம் வசனத்தின் உண்மைப் பொருள் எதிரிகளிடமிருந்து காத்துக்கொள்ள அல்ல என்பதை மேலே காட்டியுள்ள கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது, மட்டுமல்ல, இந்த கட்டுரையிலும் நான் அதை விளக்கவுள்ளேன்.


நம்மை எதிரிகளிடமிருந்து காத்துக்கொள்ள சண்டையிடுவது பயங்கரவாதமா?


நாம் சென்றுக்கொண்டு இருக்கும் போது திருடர்கள் வழிமறித்து பணமும் நகையும் கொடுக்கவேண்டும் என்றுச் சொல்கிறார்கள், நாம் கொடுக்காமல் சண்டைபோடுகிறோம், இது பயங்கரவாதமா?


அபூ அப்திர ரஹ்மான் அவர்களிடம் கேட்கிறேன், "கட்டுரையின் பெயரை பயங்கரவாதம்" என்று வைத்துவிட்டு, எதிரிகளிடமிருந்து, தற்காத்துக்கொள்வதை இந்த கட்டுரையில் எழுதியுள்ளீர்களே! இது நியாயமா?


எது பயங்கரவாதம் / எது தற்காப்பு:


உங்களுக்கு எது பயங்கரவாதம் எது தற்காப்பு என்று தெரியவில்லை என்று நினைக்கிறேன். அதை நான் விளக்குகிறேன். மக்கா வியாபாரிகள் மதினாவிலிருந்து 70 அல்லது 80 மைல் தொலைவில் பத்ரு என்ற இடம் வழியாக அமைதியாகச் சென்றுக்கொண்டு இருக்கும் போது, உங்கள் முஹம்மது தன் அடியார்(ட்)களோடுச் சென்று தாக்கினாரே அதைத் தான் பயங்கரவாதம், வன்முறை என்றுச் சொல்வார்கள்.


அதே போல, முஹம்மது தங்கள் வியாபாரிகளை தாக்க வருகிறார் என்று தெரிந்துக்கொண்டு மக்கா மக்கள் ஒரு பெரும்படையோடு வந்து சண்டையிட்டார்களே, அதனை "தற்காப்பு" என்பார்கள்.


ஆக, லூக்கா 22:36ம் வசனம் ஒரு தற்காப்புக்காக என்று நீங்கள் சொல்பவர்களாக இருந்தால், இந்த கட்டுரையில் அதைப் பற்றி எழுதியிருக்கக்கூடாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.


இப்போது லூக்கா 22:36ம் தற்காப்புக்காக சொல்லப்படவில்லை என்பதை விளக்குகிறேன்.இயேசு தற்காப்புக்காக பட்டயங்களை வாங்கிக்கொள்ளுங்கள் என்றுச் சொல்லவில்லை


இயேசு தற்காப்புக்காக இப்படி பட்டயங்களை வாங்குங்கள் என்றுச் சொல்லவில்லை என்பதற்கு அனேக ஆதாரங்கள் உள்ளன.ஆதாரம் 1: அக்கிரமக்காரரில் ஒருவராக இயேசு கருதப்படவேண்டும் - லூக்கா 22:37:லூக்கா 22:36ம் வசனத்தை படித்த அபூ அப்திர ரஹ்மான் அவர்கள் அடுத்த வசனமாகிய 37ம் வசனத்தை படித்துயிருந்தால் இப்படியெல்லாம் கேட்டு இருக்கமாட்டார்.


அடுத்த வசனத்திலேயே ஏன் இயேசு பட்டயங்களை வாங்கச் சொல்கிறார், அதுவும் தங்கள் உடைகளை விற்றாவது வாங்குங்கள் என்று ஏன் சொல்கிறார் என்று லூக்கா 22:37ல் சொல்லப்பட்டுள்ளது, இந்த வசனத்தை படிக்க அபூ அப்திர் ரஹ்மான் அவர்கள் மறந்துவிட்டார்கள் (என்ன செய்யமுடியும் அவருக்கு தேவையானதை மட்டும் அவர் படித்தார்)லூக்கா 22:37 இவ்விதமாகச் சொல்கிறது:


அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்று எழுதியிருக்கிற வாக்கியம் என்னிடத்தில் நிறைவேறவேண்டியதென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். என்னைப்பற்றிய காரியங்கள் முடிவுபெறுங்காலம் வந்திருக்கிறது என்றார்.மேசியா (மஸீஹா) பற்றி பழைய ஏற்பாடு சொல்லும் தீர்க்கதரிசனங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறிக்கொண்டு இருக்கின்றன. அது போல, "மேசியா ஒரு அக்கிரமக்காரனைப் போல, ஒரு குற்றவாளியைப்போல கருதப்படவேண்டும்" என்ற ஏசாயா 53:12ம் வசனத்தின் நிறைவெறுதலுக்காகவே அவர் இப்படிச் சொன்னார்.அவர் தம்முடைய ஆத்துமாவை மரணத்திலூற்றி, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்பட்டு, அநேகருடைய பாவத்தைத் தாமே சுமந்து, அக்கிரமக்காரருக்காக வேண்டிக் கொண்டதினிமித்தம் அநேகரை அவருக்குப் பங்காகக் கொடுப்பேன்; பலவான்களை அவர் தமக்குக் கொள்ளையாகப் பங்கிட்டுக்கொள்வார். ஏசாயா 53:12ஆக, இயேசு அக்கிரமக்காரர்களில் ஒருவர் என்று கருதப்படவேண்டும் என்றுச் சொன்னால், அவரின் சீடர்களில் யாரிடமாவது சில பட்டயங்கள் இருக்கவேண்டும். அதற்காகவே அவர் இப்படிச் சொன்னார் என்பது தெளிவு. இதனை ஏன் அப்திரரஹ்மான் அவர்கள் பார்க்கவில்லை. இந்த வசனத்தில் இல்லாத வார்த்தையாகிய "நிர்வாணம்" என்ற வார்த்தையை நுழைத்து பொருள் கூறத்தெரிந்த அவருக்கு, அடுத்த வசனத்தில் சொல்லப்பட்ட பதில் ஏன் தெரியவில்லை. இதைத் தான் "கண்கள் இருந்தும் காணாதவர்களாய் இருக்கிறார்கள்" என்று இயேசு கூறினாரோ?


உங்கள் வஸ்திரங்களை விற்றாவது என்று இயேசு சொல்லும் போது, உடலில் போட்டுக்கொண்டு இருக்கின்ற உடைகளை கழற்றி நிர்வாணமாகித் தான் பட்டயத்தை வாங்க வேண்டும் என்று ஏன் அபூ அப்திர் ரஹ்மான் அவர்கள் புரிந்துக் கொள்ளவேண்டும்? சீடர்களிடமிருக்கும் இன்னொரு ஜோடி உடைகளை விற்று வாங்கக்கூடாது என்று என் அவர் புரிந்துக்கொள்ளவில்லை?


மத்தேயு 5:40ஐ அபூ அப்திர ரஹ்மான் அவர்கள் எப்படி புரிந்துக்கொள்வார்கள்?


மத்தேயு 5:40 உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக் கொள்ளவேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு.And if any man will sue thee at the law, and take away thy coat, let him have thy cloke also. (KJV)இன்றைய நம்முடைய உடைகளின் படி, ஒருவன் உங்களுடன் வழக்காடி உங்கள் கோட் அல்லது மேல் சட்டையை எடுத்துக்கொண்டால், அவனுக்கு உங்கள் பனியனையும் கொடுத்துவிடுங்கள் என்று அப்திர ரஹ்மான் புரிந்துக்கொள்வாரா, அல்லது மேல் சட்டைக்காக ஒருவன் வழக்காடினால், அவனுக்கு உங்கள் பனியன், கால் சட்டை (பேண்ட்), உள்ளாடை கூட கொடுத்துவிட்டு, உடலில் ஒரு ஆடையும் இல்லாமல் நிர்வாணமாக சென்று விடுங்கள் என்று இயேசு சொன்னார் என்று புரிந்துக்கொள்வாரா? ஒரு வசனம் சொல்லப்படும் போது, அது சொல்லப்பட்ட இடம், சொல்லும் நபர், அவரின் குணநலன்கள், பின்னணி போன்றவைகளை தெரிந்துக்கொண்டால் தான் சரியான பொருள் வரும், இல்லையானால், அப்திர ரஹ்மான் அவர்களுக்கு தென்பட்டது போல, எல்லாவற்றிலும், "நிர்வாணமே தெரியும்".ஆதாரம் 2: இயேசு சண்டையிட்டு, தப்பித்துக் கொண்டாரா? இல்லையே!?இயேசு பட்டயங்களை வாங்கிக்கொள்ளுங்கள் என்றுச் சொன்னது, தீர்க்கதரிசனம் நிறைவேற்றுவதற்காகவே தவிர தப்பிப்பதற்கு அல்ல என்பதை மேலே விளக்கினோம்.இப்போது, உண்மையில் அன்று இரவு என்ன நடந்தது? உண்மையாகவே தப்பித்துக்கொள்ளவே இயேசு பட்டயங்கள் வாங்குங்கள் என்றுச் சொன்னாரா என்பதை காண்போம்.1) இயேசு தன் மூன்றரை ஆண்டு காலத்தில் பல முறை எருசலேமுக்கு வந்துள்ளார்
, ஆனால், இந்த முறை தான் அவர் ஒரு திட்டத்தோடு வந்தார். அவருடைய மரணம், உயிர்த்தெழுதல் பற்றி சீடர்களிடம் முன்னுரைத்தார். (லூக்கா 18:31-34)2) உண்மையாகவே இயேசு தப்பித்துக்கொள்ளவேண்டும் என்று நினைத்திருந்தால்
, அவர் எருசலேமுக்குள் வந்திருக்கவே மாட்டார்.3) உண்மையாகவே அதிகாரிகளிடமிருந்து தப்பிக்க விரும்பியிருந்தால்,
வழக்கமாகச் செல்லும் இடத்திற்கு அவர் அன்று இரவு சென்றுயிருக்கவே மாட்டார். அன்று இரவு, "தன்னோடு சாப்பிடும் ஒருவன் காட்டிக்கொடுப்பான்" என்றுச் சொன்னவர், தப்பிக்க விரும்பியிருந்தால், வேறு இடத்திற்கு சென்றுயிருப்பார், கெத்சமனே தோட்டத்திற்கே வழக்கமாக சென்றுயிருக்கமாட்டார்.


பின்பு: இதோ, என்னைக் காட்டிக்கொடுக்கிறவனுடைய கை என்னுடனேகூடப் பந்தியிலிருக்கிறது. தீர்மானிக்கப்பட்டபடியே மனுஷகுமாரன் போகிறார், ஆனாலும் அவரைக் காட்டிக்கொடுக்கிற மனுஷனுக்கு ஐயோ என்றார். (லூக்கா 22:21-22)


4) தன்னை விட்டு தன் சீடர்கள் ஓடிப்போவார்கள் என்று இயேசு முன்னுரைத்தார்.
அப்பொழுது, இயேசு அவர்களை நோக்கி: மேய்ப்பனை வெட்டுவேன், மந்தையின் ஆடுகள் சிதறடிக்கப்படும் என்று எழுதியிருக்கிறபடி, இந்த இராத்திரியிலே நீங்கள் எல்லாரும் என்னிமித்தம் இடறலடைவீர்கள். (மத்தேயு 26:31)
இப்படி தன்னை விட்டு ஓடிப்போகும் இவர்களை நம்பியா இயேசு இரண்டு பட்டயங்கள் போதும் என்றுச் சொல்வார்?5) உண்மையிலேயே சீடர்கள் இயேசுவை விட்டு ஓடிப்போனார்கள்
இயேசு அவர்களை நோக்கி: கள்ளனைப் பிடிக்கப் புறப்படுகிறதுபோல, நீங்கள் பட்டயங்களையும் தடிகளையும் எடுத்துக்கொண்டு என்னைப் பிடிக்கவந்தீர்கள்; நான் தினந்தோறும் உங்கள் நடுவிலே தேவாலயத்தில் உபதேசம்பண்ணிக் கொண்டிருந்தேன்; அப்பொழுது நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே; ஆனாலும் வேதவாக்கியங்கள் நிறைவேறவேண்டியதாயிருக்கிறது என்றார். அப்பொழுது எல்லாரும் அவரை விட்டு ஓடிப்போனார்கள். (மாற்கு 14:48-50)
இரண்டு பட்டயங்கள் எங்களிடம் உண்டு என்றுச் சொன்னவர்கள் தான் தப்பி ஓடினார்கள், நான் உங்களை விட்டு ஓடமாட்டேன் என்றுச் சொன்ன சீடர்கள் தான் அவரை விட்டு ஓடினார்கள், ஆனால், இயேசு அங்கேயே இருந்தார்.6) இயேசு தப்பிக்க முயற்சி எடுக்கவில்லை, அவர்கள் அவரை பிடித்துக்கொண்டார்கள்
அவன் வந்தவுடனே, அவரண்டையில் சேர்ந்து: ரபீ, ரபீ, என்று சொல்லி, அவரை முத்தஞ் செய்தான். அப்பொழுது அவர்கள் அவர்மேல் கைபோட்டு, அவரைப் பிடித்தார்கள். (மாற்கு 14:45-46)இயேசு தப்பிக்க நினைத்திருந்தால், இப்படி அவர்களுக்கு முன்பாக நின்று பேசியிருக்கமாட்டார், பட்டயத்தை எடுத்து சண்டைபோடவில்லையானாலும் குறைந்தபட்சம் ஓடியாவது இருப்பார், ஆனால், இயேசு இப்படி செய்யவில்லை, காரணம் அவர் அதற்காகவே வந்தார்.


ஆனால், இதே இயேசு தன் ஆரம்ப கால ஊழியத்தின் போது, தன் சிலுவை மரணம் நேரம் வரவில்லை என்பதால், பரிசேயர் அவரை கொலை செய்ய திட்டம் தீட்டியபோது, அவர்களிடமிருந்து தப்பித்துச் சென்றார்.அப்பொழுது, பரிசேயர் வெளியே போய், அவரைக் கொலை செய்யும்படி அவருக்கு விரோதமாய் ஆலோசனைபண்ணினார்கள். இயேசு அதை அறிந்து, அவ்விடம்விட்டு விலகிப்போனார். திரளான ஜனங்கள் அவருக்குப் பின்சென்றார்கள்; அவர்களெல்லாரையும் அவர் சொஸ்தமாக்கி, தம்மைப் பிரசித்தம்பண்ணாதபடி அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார். (மத்தேயு 12:14-16)எருசலேமுக்கு வெளியே தான் மரணிக்கப்போவதில்லை, எருசலேமில் மட்டுமே தன் மரணம் இருக்கும் என்பதை இயேசு தெளிவாகச் சொல்லியுள்ளார்.அந்த நாளிலே சில பரிசேயர் அவரிடத்தில் வந்து: நீர் இவ்விடத்தை விட்டுப் போய்விடும்; ஏரோது உம்மைக் கொலைசெய்ய மனதாய் இருக்கிறான் என்றார்கள். இன்றைக்கும் நாளைக்கும் மறுநாளைக்கும் நான் நடமாடவேண்டும்; எருசலேமுக்குப் புறம்பே ஒரு தீர்க்கதரிசியும் மடிந்துபோகிறதில்லை யென்று நான் சொன்னதாக நீங்கள் போய் அந்த நரிக்குச் சொல்லுங்கள். (லூக்கா 13:31, 33)மரணத்தை முத்தமிட வந்தவர் அதிலிருந்து தப்பிக்க முயற்சி எடுக்கவில்லை. எனவே இரண்டு பட்டயங்களை வாங்கச் சொன்னது, தீர்க்கதரிசன நிறைவேறுதலுக்காகவேயாகும் தற்காப்புக்காக அல்ல.ஆதாரம் 3: இரண்டு பட்டயங்கள் வைத்துக் கொண்டு 12 பேர் தப்பிப்பது எப்படி?இயேசு இரண்டு பட்டயங்களை வாங்குங்கள் என்றுச் சொன்னபோது, சீடர்கள் இதோ இரண்டு பட்டயங்கள் இங்குண்டு என்றுச் சொன்னார்கள், அதற்கு இயேசு மறுமொழியாக, "போதும்" என்றுச் சொன்னார்.


இஸ்லாமியர்கள், முக்கியமாக அப்திர் அரஹ்மான் அவர்கள் சொல்வது போல, இயேசு தப்பித்துக்கொள்ளத் தான் பட்டயங்களை வாங்குங்கள் என்றுச் சொல்லியிருந்தால், ஒவ்வொருவருக்கு ஒரு பட்டயமாவது தேவைப்பட்டிருக்குமே, குறைந்த பட்சம் 12 பட்டயங்களாவது தேவைப்பட்டிருக்குமே! ஆனால், இரண்டு பட்டயங்களை சீடர்கள் உண்டு என்றுச் சொன்னபோது "இது போதும்" என்று ஏன் சொன்னார்? இதனை அப்திர ரஹ்மான் அவர்கள் தான் விளக்கவேண்டும்.அதற்கு அவர்கள்: ஆண்டவரே, இதோ, இங்கே இரண்டு பட்டயம் இருக்கிறது என்றார்கள். அவர்: போதும் என்றார். பின்பு அவர் புறப்பட்டு, வழக்கத்தின்படியே ஒலிவமலைக்குப் போனார்; அவருடைய சீஷரும் அவரோடேகூடப் போனார்கள். (லூக்கா 22:38-39)உண்மையாகவே, தற்காப்பிற்காக பட்டயங்களை வாங்குங்கள், அதுவும் அப்திர ரஹ்மான் அவர்களின் விரிவுரையின் படி நிர்வாணமாக இருந்தாலும் பரவாயில்லை, பட்டயம் வேண்டும் என்ற கோணத்தில் இயேசு சொல்லியிருந்தால், "இரண்டு பட்டயங்கள்" இருக்கின்றது என்று சீடர்கள் சொல்லியிருந்தால், இயேசு மேற்கொண்டு சில கேள்விகளை கேட்டுயிருக்கமாட்டாரா?


1) என்ன சீடர்களே, இரண்டு பட்டயங்களை வைத்துக்கொண்டு நாம் அனைவரும் தப்பிக்கமுடியுமா?


2) எனவே, எல்லாரும் சென்று ஒவ்வொருவரும் ஒரு பட்டத்தை வாங்கிக்கொண்டு வாருங்கள் (அப்திர் ரஹ்மான் அவர்கள் சொன்னதுபோல, நீங்கள் நிர்வாணமாக எனக்கு முன்பாக வந்தாலும் பரவாயில்லை, ஆனால், பட்டயம் இல்லாமல் இருக்கக்கூடாது)


என்று இயேசு கேட்டிருப்பாரே, ஆனால், இயேசு இப்படி கேட்கவில்லையே?! ஒரு வேளை இயேசுவின் சீடர்களுக்கு மார்ஷியல் ஆர்ட்ஸ் என்றுச் சொல்லக்கூடிய, கராத்தே, குன்பூ, வர்மக்கலை போன்ற சண்டைப்பயிற்சிகளை இயேசு கற்றுக்கொடுத்துயிருப்பாரோ? பட்டயம் இல்லாமல் மீதமுள்ளவர்கள் சண்டையிடுவதற்கு!


குறிப்பு: மீன்களை பிடித்துக்கொண்டு இருந்த பேதுருவிற்கு பட்டயத்தை எப்படி கையாளுவது என்று சரியாகத் தெரியவில்லை, இதனால் தான் அவர் தலையை வெட்டப்போய், காதை வெட்டினார். எனவே, சீடர்களுக்கு எந்த சண்டைப் பயிற்சியும் கொடுக்கப்படவில்லை, இதற்கெல்லாம் முஹம்மதுவின் சீடர்கள் தான் சரி.ஆதாரம் 4: பட்டய பயன்பாடு பற்றி இயேசுவின் எச்சரிப்புதற்காப்பிற்காக பட்டயம் தேவை, இயேசு தப்பிக்க வேண்டும் என்று நினைத்து இருந்தால், பேதுரு பட்டயத்தால் ஒருவனின் காதை வெட்டும் போது, அதை உற்சாகப்படுத்தியிருப்பரே அன்றி, காயப்பட்ட தன் எதிரியை அந்த இடத்திலேயே சுகப்படுத்தியிருக்கமாட்டார்.அப்பொழுது இயேசுவோடிருந்தவர்களில் ஒருவன் கைநீட்டித் தன் பட்டயத்தை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனைக் காதற வெட்டினான். அப்பொழுது, இயேசு அவனை நோக்கி: உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள். (மத்தேயு 26:51-52)பட்டயத்தை அநியாயமாக கையாள்பவர்கள் அதனாலேயே மரிப்பார்கள் என்று இயேசு கூறினார். இந்த உலகம் எத்தனையோ சர்வாதிகாரிகளைக் கண்டது, அவர்களின் முடிவு, கொலை செய்யப்பட்டோ, விஷம் வைத்து கொல்லப்பட்டோ, தற்கொலை செய்துக்கொண்டோ மரித்துள்ளார்கள்.


ஒரு ஹிட்லர், சத்தாம் உசேன், இன்னும் முஹம்மதுவிற்கும் ஒரு யூதப்பெண் விஷத்தைக் கொடுத்தாளே, அதன் பயனாக அவர் நோய்வாய்ப்பட்டு மரித்தாரே. பட்டயத்தை அநியாயமாக பயன்படுத்துபவர்களுக்கு இயேசுவின் இந்த வார்த்தைகள் எச்சரிக்கைகள்.


ஆக, முடிவாக சுருக்கத்தைச் சொல்கிறேன்,


1) இயேசு தற்காப்பிற்காக பட்டயத்தை வாங்கச் சொல்லவில்லை.2) தீர்க்கதரிசன நிறைவேறுதலுக்காகவே பட்டயம் பற்றி சொன்னார்.3) சீடர்கள் தன்னை விட்டு ஓடிப்போவார்கள் என்றுச் சொன்னார், அப்படியே நடந்தது.4) இயேசு தானாகவே எருசலேமுக்கு வந்தார், வ‌ழக்கமாக செல்லும் இடத்திற்கே அன்றும் சென்றார்.5) சீடர்களுக்கு அனேக கடைசி கட்டளைகளை கொடுத்தார்.


6) தீர்க்கதரிசன நிறைவேறுதலுக்காக பட்டயங்களை வைத்துக்கொள்ளுங்கள் என்றார், ஏனென்றால், இவர் அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்படவேண்டும் என்று ஏசாயா 53:12ல் வரப்போகும் மேசியாவைப் பற்றி சொல்லப்பட்டுள்ளது.7) வழக்கமான இடத்திற்கே சென்றார், யூதாஸும் சரியாக அந்த இடத்திற்கே காவலாளிகளோடு ஆசாரியர்களோடு வந்தான்.8) பிடிபட்டார், அவர் நினைத்து இருந்தால், அனேக தேவ தூதர்கள் அவருக்கு பாதுகாப்பிற்கு வந்திருப்பார்கள், ஆனால், அவர் அந்த பாத்திரத்தில் குடிக்கவே வந்தார், அப்படியே செய்தார்.9) மட்டுமல்ல, பேதுருவும் மற்ற சீடர்களும் இயேசுவின் பட்டயம் பற்றிய லூக்கா 22:36ஐ நீங்கள் சொல்வது போல புரிந்துக்கொள்ளவில்லை. ஆகையால், சீடனாகிய யோவான் தவிர மற்ற அனைவரும் இரத்தசாட்சிகளாக கிறிஸ்துவிற்காக மரித்தார்களே தவிர, கிறிஸ்துவின் பெயரினால் "இரத்தம் சிந்தவில்லை".அபூ அப்திர ரஹ்மான் அவர்கள் கூறுவது போல, தற்காப்பிற்காக இயேசு பட்டயங்களை வாங்கச் சொல்லவில்லை. கிறிஸ்தவ சபையோ, கிறிஸ்தவர்களோ வன்முறையில் ஈடுபடக்கூடாது என்பதற்கு இயேசுவின் வாழ்க்கையும், அவரது கட்டளைகளும் ஒரு அடித்தளமாக அமைகிறது.


கிறிஸ்தவர்கள் தங்களை எதிரிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ளக்கூடாது என்பதல்ல, இதன் அர்த்தம், "இயேசு பட்டயங்களை வாங்கச் சொன்னது, தற்காப்பிற்காக அல்ல" என்பதை விளக்கவே இந்த கட்டுரை எழுதப்படுகிறது.


இஸ்லாமியர்களுக்குச் சவால்: இயேசுவோ, அவரது சீடர்களோ, அல்லது புதிய ஏற்பாட்டில் எந்த புத்தகத்திலாகிலும், "கிறிஸ்தவ சபையை நிறுவுவதற்கு வன்முறையை பயன்படுத்தலாம்" என்று எங்கும் சொல்லப்படவில்லை. கிறிஸ்துவை விட்டு வெளியேறுகிறவர்களை கொல்லுங்கள் என்று இயேசு எங்கும் சொல்லவில்லை, அவரது சீடர்களும் அதனை போதிக்கவில்லை. உங்களால் முடிந்தால், கிறிஸ்துவின் நற்செய்தியை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லையானால் அவர்களை கொலை செய்யுங்கள், கிறிஸ்தவர்கள் வேறு மார்க்கத்திற்கு மாறினால் அவர்களை கொலை செய்யுங்கள் என்று ஒரு வசனத்தை இயேசுவின் கட்டளையாகவோ, அவரது சீடர்களின், அப்போஸ்தலர்களின் கட்டளைகளாகவோ, புதிய ஏற்பாட்டில் காட்டுங்கள், பார்க்கலாம்.


ஆகவே, இஸ்லாமியர்களே வன்முறைக்கும் கிறிஸ்தவ சபைக்கும் முடிச்சு போடாதிருங்கள். அப்படி நீங்கள் போட்டாலும், அவைகளை எப்படி அவிழ்க்கவேண்டும் என்று கிறிஸ்தவர்களுக்குத் தெரியும். இயேசுவின் வாழ்க்கையும், போதனையும் கிறிஸ்தவ சபைக்கு அடித்தளமாக இருக்கிறது, அவரது சீடர்களின் வாழ்க்கையும் போதனையும், அந்த அடித்தளத்தில் எழுப்பப்பெற்ற அழகான மாளிகையாக இருக்கின்றது. ஒரு வேளை உலகம் கிறிஸ்தவர்களில் சிலரிடம் வன்முறையை காணலாம், ஆனால், கிறிஸ்துவிடம் காணமுடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.


இன்னும், லூக்கா 22:36ம் வசனம் பற்றி ஏதாவது தெரியவேண்டுமானால், மறுப்போ பதிலோ எழுதுங்கள், அதற்கு பதிலை நான் மறுபடியும் எழுதுவேன்.


கர்த்தருக்கு சித்தமானால், நான்காம் பாகத்தில் சந்திக்கலாம். அதுவரை, தன்னை பிடிக்கவந்தவனுக்கும் சுகம் கொடுத்து, தன்னை சிலுவையில் அறைந்தவர்களும் அறியாமையினால் இப்படி செய்தார்கள் என்று பரிந்து பேசிய இயேசுக் கிறிஸ்துவின் சமாதானம், அமைதி உங்கள் உள்ளங்களையும் இல்லங்களையும் ஆண்டுக்கொள்வதாக. ஆமென்.


Source: http://sites.google.com/site/isakoran/rebuttals/abunoora/abdhirrahman_luke_2236
 
 

கிறிஸ்தவம் பார்வைக்கு பதில்: லூக்கா 22:36 ல் உள்ள ...


 

கிறிஸ்தவன் பார்வையின்: "பைபிள் கூறும் பயங்கரவாதம் (3)" கட்டுரைக்கு பதில்: 3.2

 

 
முன்னுரை:

 

 
கிறிஸ்தவம் பார்வை என்ற இஸ்லாமிய தளம் "பைபிளில் பயங்கரவாதம்" என்ற தலைப்பில் கட்டுரைகளை எழுதிக்கொண்டு வருகிறது. அவர்களின் இந்த தொடர் கட்டுரைகளுக்கு இதுவரை மூன்று பதில்கள் தரப்பட்டுள்ளது, அவைகளை இங்கு படிக்கவும்: 

 

 

 

 

 

 
மூன்றாம் பாகத்திற்கான இரண்டாம் பகுதி ( 3. 2 ) பதிலை இந்த கட்டுரையில் காணலாம். அதாவது, லூக்கா 22:36ம் வசனத்தில் இயேசு பட்டயத்தை பயன்படுத்தவேண்டும் என்று போதித்தார் என்று இவர்கள் கூறியுள்ள விமர்சனத்திற்கு மறுப்பாக இந்த பதில் தரப்படுகிறது.  

 

 
அபூ அப்திர ரஹ்மான் அவர்கள் இந்த மூன்றாம் பாகத்தில் லூக்கா 22:36ம் வசனம் பற்றி எழுதிய வரிகளுக்கு தனியாக இன்னொரு பதிலை வேறு கட்டுரையில் தருகிறேன்.
-----------------------------------------

 

 

லூக்கா 22:36 ல் உள்ள பட்டயம் பற்றி ஒரு சிறு விளக்கம்


ஜேம்ஸ் அர்லண்ட்சன்


சுவிசேஷங்களில் இயேசு வன்முறையை ஆதரித்ததும், ஊக்குவித்தமும் உண்டா? குறைந்த பட்சம் நியாயமான முறையில் வன்முறையில் ஈடுபடுவதையாவது அவர் ஆதரித்ததுண்டா? அவர் தன்னுடைய உண்மையான சீடர்களை இதற்கென்று அழைத்தாரா? அவர் தன்னுடைய எல்லா சீடர்களிடமும் பட்டயங்களை வாங்கும்படி உண்மையாகவே கட்டளையிட்டாரா? அவர் இப்படி சொன்னதாக ஒரு வசனத்தைக் குறிப்பிடலாம். லூக்கா 22:36 சொல்லுகிறது.அதற்கு அவர்: இப்பொழுதோ பணப்பையும் சாமான்பையும் உடையவன் அவைகளை எடுத்துக்கொள்ளக்கடவன்; பட்டயம் இல்லாதவன் தன் வஸ்திரத்தை விற்று ஒன்றைக் கொள்ளக்கடவன்.இந்த வசனத்தை தனியாக நாம் படிக்கும் போது, வன்முறையும் பட்டயமும் சாத்தியமானவைகள் என்று இந்த வசனம் சொல்வதாக தெரிகிறது. எல்லா சீடர்களும் சென்று பட்டயங்களை கட்டாயமாக‌ வாங்கிக் கொள்ளவேண்டும் என்று இவ்வசனத்தில் காணப்படுகிறது. இயேசுவின் மரணம் மற்றும் அடக்கத்திற்கு பின் அவரில்லாமல் தனியாக உலகத்தை சந்திக்க வேண்டும் என அவர்கள் நினைத்தார்கள்.எனினும், இந்த வசனத்தை தனியாக பிரித்துபடிக்காமல் அதன் பின்னணியத்தோடு படிக்கையில் அதன் பிரத்தியட்சமான அர்த்தம் என்னவாயிருக்கும்? உண்மையாக இயேசு ஒரு பட்டயத்தை உபயோகித்தாரா? மேலும் தன்னுடைய சீடர்கள் ஆளுக்கொரு பட்டயத்தை வாங்கிக்கொள்ள வேண்டும் என்று விரும்பினாரா?லூக்கா 22:36ம் வசன‌ விளக்க உரைசுமார் மூன்று வருடங்கள் அவர் எருசலேமுக்குள் வெளிப்படையான ஒரு வெற்றி பவனியாக நுழைவதை தவிர்த்தார் ஏனென்றால் அப்படி அவர் பரிசுத்த நகரத்திற்குள் கால் வைக்கும் போது பல நூறு வருடங்களுக்கு முன் ஏசாயா தீர்க்கதரிசியினால் உரைக்கப்பட்டபடி (ஏசாயா 53:12) ஒரு சாதாரண குற்றவாளியின் மரணத்தை போல மரணம் அடைந்து தன் ஊழியத்தை நிறைவேற்ற வேண்டியிருக்கும் என்பதை அவர் அறிந்திருந்தார் என்று லூக்கா 22:36 ன் சரித்திர பின்னணி தெளிவாக விளக்குகிறது. எனவே அவர் தன்னுடைய பணிகளை எருசலேமுக்கு வெளியே முடிக்க வேண்டியிருந்தது.இறுதியாக தன்னுடைய தீர்க்கதரிசிகளை கொல்லுவதில் புகழ்பெற்ற அந்த நகரத்திற்குள் இயேசு நுழைகிறார் (லூக்கா 13:33-34). அவர் தன்னுடைய கைது, விசாரணை மற்றும் சிலுவையில் அறையப்படுதல் போன்றவைகள் நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பே அவை எல்லாவற்றையும் பற்றி முன்னுரைத்திருந்தார். மதத்தலைவர்கள் அவரை இரக‌சியமாக கண்காணித்துக் கொண்டிருந்தார்கள் அவர் மீது பழி சுமத்துவதற்காக வஞ்சகமான கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள் (லூக்கா 20:20). இந்த நேர்மையற்ற கேள்விகள் அவர் நகரத்திற்குள் நுழைவதற்கு முன் கேட்கப்பட்டிருந்தாலும், அந்த நெருக்கடியான நாட்களில் இப்படிப்பட்ட கேள்விகள் அதிகமாக கேட்கப்பட்டது. ஆனால் அவர்களுடைய எல்லா தந்திர வலைகளையும் தவிர்த்து அவர் ஆச்சரியமான விதத்தில் பதிலளித்தார். பிரச்சனைகளுக்கு நடுவிலும் ஒவ்வொரு நாளும் அவர் தேவாலயத்தில் பிரசங்கித்தார், ஜனங்கள் திரளாய் கூடிவந்தார்கள் ஜனங்களுக்கு பயந்ததினால் அதிகாரிகள் அவரை கைது செய்ய முடியவில்லை. பிறகு யூதாஸ், ஜனக்கூட்டம் இல்லாத போது தான், அவர்களுக்கு அறிவிப்பு கொடுப்பதற்கும், அவரைக் காட்டிக் கொடுப்பதற்கும் தானாகவே முன்வந்தான். (லூக்கா 22:1-6)பஸ்கா பண்டிகை நெருங்கியிருந்த போது அவர் இறுதி போஜனத்தை ஆயத்தப்படுத்தும் படி தன்னுடைய சில சீடர்களுக்குச் சொன்னார். புதிய உடன்படிக்கையில் (லூக்கா 22:17-20) உலகத்தின் பாவத்திற்காக சிந்தப்படுகிற தன் இரத்தத்தையும் உடைக்கப்படுகிற தன் சரீரத்தையும் பிரதிபலிக்கிற ரொட்டியையும் திராட்சைரசத்தையும் அவர் உயர்த்திப்பிடித்தார். அப்படியிருக்கும்போது அந்த போஜனத்திலிருந்து யூதாஸ் நைசாக நழுவினான், அதிகாரிகளிடம் அவனுக்கு போகவேண்டியிருந்தது. ஏனென்றால் இயேசு வழக்கமாக ஒலிவ மலைக்கு சென்று ஜெபிப்பார் என்பதை அவன் அறிந்திருந்தான் (லூக்கா 21:37). அந்த இரவிலும் எந்த வித்தியாசமின்றி அப்படியே நடந்தது.இப்பொழுது நாம் லூக்கா 22: 36ம் வசனத்தின் வசன பின்னணியை (Textual Context) கவனிப்போம். இயேசு தாம் காட்டிக் கொடுக்கப்பட்ட அந்த இராத்திரியிலே கடைசி போஜனத்தை சாப்பிடுகிறார்.லூக்கா 22:35-38 சொல்லுகிறது:35 பின்னும் அவர் அவர்களை நோக்கி: நான் உங்களைப் பணப்பையும் சாமான்பையும் பாதரட்சைகளும் இல்லாமல் அனுப்பின போது, ஏதாகிலும் உங்களுக்குக் குறைவாயிருந்ததா என்றார். அவர்கள், ஒன்றும் குறைவாயிருந்ததில்லை என்றார்கள்.36 அதற்கு அவர்: இப்பொழுதோ பணப்பையும் சாமான்பையும் உடையவன் அவைகளை எடுத்துக் கொள்ளக்கடவன்; பட்டயம் இல்லாதவன் தன் வஸ்திரத்தை விற்று ஒன்றைக் கொள்ளக்கடவன்.


37 அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்று எழுதியருக்கிற வாக்கியம் என்னிடத்தில் நிறைவேறவேண்டியதென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். என்னைப்பற்றிய காரியங்கள் முடிவு பெறுங்காலம் வந்திருக்கிறது என்றார்.38 அதற்கு அவர்கள்: ஆண்டவரே, இதோ, இங்கே இரண்டு பட்டயம் இருக்கிறது என்றார்கள். அவர்: போதும் என்றார்.இதன் வசன‌ பின்னணி (Textual Context) குறைந்தது இரண்டு உண்மைகளை வெளிப்படுத்துகிறது. முதலாவதாக, வேவுபார்க்கிறவர்களும் அதிகாரிகளும் இயேசுவை எப்படியாவது சிக்கவைக்க வேண்டும் என்று தீவிரமாக இருந்த அந்த பதட்டமான‌ சில நாட்களில் எருசலேமுக்குள் நுழைவதற்கு முன் இயேசு தம்முடைய ஊழியத்தை வித்தியாசப்படுத்துகிறார். இயேசு எதற்காக தன்னுடைய சீடர்களிடம் பட்டயத்தைப் போய் வாங்கிக்கொள்ளுங்கள் என்றுச் சொன்னார் என்பதை புரிந்து கொள்ளுவதற்கு இந்த பதட்டமான‌ சூழ்நிலை ஏதாவது பங்கு வகிக்கிறதா? இந்தக் கேள்விக்கு கீழே பதிலளிக்கப்பட்டுள்ளது. ஏசாயா 53:12 ல் முன்னுரைக்கப்பட்டபடி தான் கைது செய்யப்படுவார் என்றும் அக்கிரமக்காரனைப் போல விசாரிக்கப்படுவார் என்பதையும் அவர் கூறினார். இதற்கும் பட்டயத்திற்கும் ஏதாவது தொடர்பு உண்டா? குற்றவாளிகள் பட்டயங்களை தங்களோடு சுமந்து கொண்டிருப்பார்களா? இதுவும் கீழே விளக்கப்பட்டுள்ளது. பட்டயத்தை உபயோகப்படுத்தும் வன்முறையைக் காட்டிலும் ஏதோ ஆழமான அர்த்தம் இயேசுவின் மனதில் இருக்கும். அது என்ன?இந்த வசனங்களின் பொருளை இரண்டு வகைகளில் புரிந்துக்கொள்ளலாம்.முதலாவதாக‌, எழுத்தின் படி இவ்வசனத்தை படித்தால், "இயேசுவின் கடைசி மணித்துளிகளில் பட்டயங்களை பயன்படுத்தலாம்" என்று சொல்வது போல தோன்றும். இரண்டாவதாக, இதே வசனங்களை சரித்திர மற்றும் வசன பின்னணியத்தோடு படித்தால், "இயேசுவின் கடைசி மணி நேரத்தில் பட்டயங்களை பயன்படுத்தக்கூடாது" என்று சொல்வதாகத் தோன்றும்.மேற்கண்ட வசனங்களின் உண்மையான பொருள் நிச்சயமாக "எழுத்தின் படியான பொருள்" இல்லை என்பது மட்டும் தெளிவு. முதலில், ஏன் இவ்வசனங்களின் பொருள் "பட்டயங்களை பயன்படுத்த வேண்டும்" என்ற எழுத்தின் படியான பொருளில் இல்லை என்பதை காண்போம். ஏன் லூக்கா 22:34-38 க்கும் கெத்சமனே தோட்டத்தில் கைது செய்யப்பட்ட (லூக்கா 22: 39-53) பகுதிக்கும் சரியாக பொருந்தாது என்பதை ஆராய்வோம்.பட்டயங்களின் கொடூர உபயோகம் (Violent use of Swords)இயேசு தன்னுடைய சீடர்களிடம் பட்டயங்களை வாங்கும் படிச் சொல்கிறார், அவர்கள் இரண்டு பட்டயங்களை காண்பித்தபோதோ அது போதும் என்கிறார். வசனங்களை புரிந்துக் கொள்வதில் முதல் முறையானது, "வசனத்தை அப்படியே படித்து எழுத்தின்படி புரிந்துக் கொள்வதாகும்". இவ்வசனங்களுக்கு "எழுத்தின்படி பொருள் கூறுதல்" பொருந்துவதாக இல்லை. இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.முதலாவதாக, ஒரு வெளிப்படையான கேள்வியை கவனிப்போம்:இரண்டு பட்டயங்கள் எதற்கு போதுமானது?


காவலாளிகள் அவரை கைது செய்வதை தடுத்து எதிர்த்து போராடுவதற்கு அந்த இரண்டு பட்டயங்கள் போதுமா?இது அரிதான காரணம் ஏனென்றால் இயேசு கைது செய்யப்படும்போது சீடர்களில் ஒருவன் (யோவான் 18:10 ன் படி பேதுரு) தன்னுடைய பட்டயத்தை எடுத்து பிரதான ஆசாரியனின் வேலைக்காரர்களில் ஒருவனுடைய (யோவான் 18: 10 ன் படி மல்குஸ்) காதை வெட்டினான். இயேசு பேதுருவிடம் பட்டயத்தை போடும்படி 'இம்மட்டும் போதும் நிறுத்துங்கள்" என்று கடுமையாக கூறுகிறார். பிறகு அவனுடைய காதை மறுபடியும் அவனுக்கு பொருத்தி அவனை சுகப்படுத்துகிறார் (லூக்கா 22: 49-51) . இரண்டு பட்டயஙகள் இயேசுவை கைது செய்வதை எதிர்த்து போராடுவதற்காக மட்டும் போதுமானதாக நிச்சயமாக‌ இருக்கமுடியாது.இரண்டாவதாக, அந்த இரண்டு பட்டயங்கள் கைது செய்யவரும் அதிகாரிகளை எதிர்த்து, ஆயுதங்களை வைத்துக்கொண்டு போராடும் ஒரு அரசியல் சேனையாக மற்றும் இராணுவ ரீதியான‌ "இயேசு இயக்கத்தை" ஸ்தாபிப்பதற்கு போதுமானதா?லூக்கா 22:52ல் இயேசு இந்த நோக்கத்தை மறுக்கிறார். அதிகாரிகள் அவரை பிடிக்க வந்திருக்கும் போது, "நீங்கள் தடிகளோடும் பட்டயத்தோடும் என்னைப் பிடிக்க வருவதற்கு நான் என்ன கலவர கூட்டத்தையா நடத்திக் கொண்டிருக்கிறேன்?" என்று கேட்கிறார். அவர் ஒரு கலவர கூட்டத்தை நடத்தவில்லை என்பது தான் இதற்கு பதில். எனவே, அவர் பிடிக்கப்பட்டார் கொண்டுச் செல்லப்பட்டார் (வசனம் 54).எனவே லூக்கா 22:36ல் எழுத்தின்படியுள்ள விளக்கமாகிய‌ "பட்டயம் உபயோகப்படுத்தபடவேண்டும்" என்பது அதன் நீண்ட பின்னணியை ஆராய்ந்துப் பார்த்தால், இது ஒவ்வாத விளக்கமாக உள்ளது என்பதை அறியலாம். இரண்டு பட்டயங்களானது இயேசு கைது செய்வதை எதிர்த்து எந்தவித கலகம் செய்வதற்கோ அல்லது இயேசுவும் சீடர்களும் கெத்சமெனேத் தோட்டத்தில் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கோ போதுமாயிராது.பட்டயம் பற்றி வசன பின்னணி ரீதியிலான விளக்கம் (Contextual meaning of the Swords)பட்டயங்களை உபயோகிக்க வேண்டும் என்ற எழுத்தின்படியான விளக்கத்திற்கு முரண்பாடாக பின்வரும் விளக்கமானது அமைப்பில் இலகுவாக காணப்படுகிறது, அதனால் குழப்பத்தின் எல்லா பகுதிகளும் சரியாக இந்த விளக்கத்தின் மூலம் இணைக்கப்படுகிறது.முதலாவது, இயேசு எருசலேமுக்குள் பிரேவேசிப்பதற்கு முன்னரே தன்னுடைய சீடர்களிடத்தில் அவர்களுக்கான தன்னுடைய ஊழியத்தின் நோக்கம் என்ன என்பதை நினைவு படுத்துகிறார் (லூக்கா 9:3; 10:1-17). இயேசு அவர்களோடு இருந்த காலக் கட்டத்தில் சீடர்களுக்கு அதிகமான பணப்பையும், சாமான் பையும் அல்லது அதிகபடியான இன்னொரு ஜோடி காலணிகளும் தேவைப்பட்டதா? என்று கேட்டால், "இல்லை" என்பது தான் பதிலாக இருந்தது. ஏனென்றால் ஜனங்கள் அவர்களிடத்தில் நட்பாக இருந்தார்கள்.இயேசுவின் மீது, மதத்தலைவர்களின், அதிகாரிகளின் எதிர்ப்பு மூன்று வருடங்களாக சிறிது சிறிதாக பரவியது. இப்பொழுது அவர் எருசலேமில் இருக்கிறார், அவருடைய வார்த்தைகளாலேயே அவரை குற்றப்படுத்த வேண்டும் என்று முனைப்பாயிருந்த அதிகாரிகளின் கட்டுப்பாடான விரோதத்திற்கு உள்ளாயிருந்தார். அதிகாரிகள் இல்லாத போது இயேசுவிடம் அவர்கள் தங்கள் ஆட்களை வேவுபார்க்க அனுப்புவார்கள். எனவே சூழ்நிலையானது மிகவும் பதட்டமானதாக காணப்பட்டது - அந்த இரண்டு பட்டயங்கள் - பதட்டத்தை இன்னும் வெளிக்காட்டுகிறது. இயேசுவின் ஊழியம் தெளிவாக ஒரு ஆபத்திற்குள்ளாக‌ மாற்றப்பட்டிருந்தது, சீடர்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டியிருந்தது. இருந்தபோதும், நாம் மேலே பார்த்தபடி நேரடியாக தன்னுடைய சீடர்கள் பட்டயங்களை உபயோகிக்க வேண்டும் என்று நிச்சயமாக அவர் சொல்லவில்லை. ஏனெனில் பேதுருவிடம் பட்டயத்தை தன் ஸ்தானத்தில் வைக்கும்படி இயேசு சொல்கிறார்.இரண்டாவதாக, அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்று எழுதியிருக்கிற வாக்கியம் என்னிடத்தில் நிறைவேறவேண்டியதென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். என்னைப்பற்றிய காரியங்கள் முடிவுபெறுங்காலம் வந்திருக்கிறது என்றார். (லூக்கா 22:37) இரண்டு பட்டயங்களுக்கான தெளிவான நோக்கம் ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தை (53:12) மேற்கோள்காட்டும் இயேசுவின் குறிப்பினால் விளங்குகிறது. அவர் ஒரு அக்கிரமக்காரனைப் போல் கைது செய்யபடவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டிருந்தார், ஒரு அக்கிரமக்காரனைப் போலவே விசாரிக்கப்ட்டார், ஒரு அக்கிரமக்காரனைப் போலவே சிலுவையிலும் அறையப்பட்டார். ( ஆனால் அவரது கைது, விசாரணை, மரண தண்டன எல்லாம் பொய்ச் சாட்சிகளினிமித்தம் வழங்கப்பட்டது, அவர் நன்மையைத் தவிர‌ ஒன்றுமே செய்யவில்லை) இருந்தாலும் அவர் இரண்டு கள்ளர்களுக்கு நடுவே தொங்க வேண்டியாதயிற்று, அதுவும் ஏசாயா தீர்க்கதரிசனத்தின் நிறைவேறுதலாகும் (லூக்கா 23:32, 39-43) அக்கிரமக்காரர்கள் தங்களோடு எதை சுமந்துசெல்வார்கள்? ஆயுதங்களை, அக்கிரமக்காரரில் ஒருவராக எண்ணப்படுவதற்கு இயேசுவும் ஆயுதங்களை வைத்திருப்பது அவசியமாயிருந்தது. எனவே தான் தீர்க்கதரிசனத்தை நிறைவேற்ற இயேசு, இரண்டு பட்டயங்கள் போதுமென்று சொன்னார்.இன்னும் தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றுவது பற்றி மத்தேயு (26:54) கூறுகிறார். ஒருவேளை இயேசுவை கைது செய்வதைத் தடுக்க பேதுரு தொடர்ந்து பட்டயத்தை உபயோகப்படுத்திக் கொண்டேயிருந்தால், தீர்க்கதரிசனம் தடையில்லாமல் இலகுவாக நிறைவேற்றப்பட்டிருக்க முடியாது. தான் வேண்டிக் கொண்டால் பன்னிரண்டு லேகியோனுக்கும் (இராணுவ சேனைக்கும்) மேற்பட்டவர்களை தன்னுடைய பாதுகாப்பிற்காக பெறமுடியும் என்று இயேசு கூறுகிறார். ஆனால், தான் மரிக்க வேண்டிய பணியை நிறைவேற்றுவதற்காக பிதாவினால் நியமிக்கப்பட்டிருப்பதால், அதை நிறைவேற்றுவதிலிருந்து மகா ரோமப் படைகளை தடுத்து நிறுத்துவதற்கு இயேசு அனுமதிக்கவில்லை (மத்தேயு 26:53). எனவே தான் இயேசு பேதுருவிடம் பட்டயத்தை அதன் உறையிலே போடும் படிச் சொன்னார் (மத் 26:52). மேலும் லூக்கா சுவிசேஷத்தில் பேதுரு ஒருவனுடைய காதை வெட்டின பிறகு அவனிடம் சொல்லுகிறார், 'இம்மட்டும் நிறுத்துங்கள்" அல்லது "இனி ஒருபோதும் வேண்டாம்"! (22: 51) என்றுச் சொல்கிறார்.மூன்றாவதும் இறுதியுமான விளக்கம் கூறுவதென்னவென்றால், இயேசு அடிக்கடி வெளிப்படையான பொருட்களைக் குறிப்பிட்டே (விதைகள், விளக்கு, திராட்சைத் தோட்டம், நாணயம், தொலைந்துபோன ஆடு இன்னும் பல உள்ளன), ஆன்மீக பாடங்களை, சத்தியங்களை கற்றுக் கொடுத்திருக்கிறார். அது தான் அந்த இரண்டு பட்டயங்களின் காரியத்திலும் உண்மையாக இருக்கமுடியும். இந்த அர்த்தத்திற்குரிய விளக்கத்திற்கு ஆதரவாக மத்தேயு 10:34 காணப்படுகிறது. "நான் பூமியின் மீது சமாதானத்தை அனுப்ப வந்தேன் என்று எண்ணாதிருங்கள் சமாதானத்தை அல்ல பட்டயத்தையே அனுப்பவந்தேன்" (10:34) . இந்த கட்டுரையில் படிப்பது போல‌ மத்தேயு 10: 34 ம் வசனத்தின் பின்னணியத்தை பார்க்கும் போது அவர் வெட்டிச் சாய்த்து குடும்பத்தை இரத்தக்களரியாக்கும் ஒரு நிஜமான பட்டயத்தை குறிப்படவில்லை. மாறாக ஒரு ஆவிக்குரிய பட்டயம், அது சரீரரீதியற்ற உள்ளான பிரிவினையை உண்டாக்கலாம். மேலும், ஒரே மாதிரிப் பகுதிகளான மத்தேயு 10:34 மற்றும் லூக்கா 12:51 ல் இயேசு குறிப்பிட்ட "பட்டயத்திற்கு" நேரடியான எழுத்தின் படியான (Literal) அர்த்தம் இல்லை என்பதை லூக்கா விளக்குகிறார். லூக்கா 12:51 இல் இதை லூக்கா செய்திருந்தாரானால், பிறகு ஏன் லூக்கா 22:36-38ல் "பட்டயம்" என்பதன் அர்த்தத்தை கொஞ்சம் மாற்றியிருக்கவில்லை?ஆதி கிறிஸ்தவத்தின் வரலாறு (Early Christian History)நேரடியாக பட்டயங்களை உபயோகிப்பது மேற்கண்ட வசனங்களின் உண்மைப்பொருள் அல்ல என்று சொன்னதால், இவ்வசனங்களில் பட்டயமே இருக்கவில்லை என்ற அர்த்தம் கிடையாது (லூக்கா 22:38). அவைகள் அடையாளக்குறிகளோ, காணப்படாத கற்பனைகளோ அல்ல. பேதுரு உண்மையாகவே இரண்டு பட்டயங்களில் ஒன்றை எடுத்து ஒரு வேலைக்காரனுடைய காது அறுபடும்படி வெட்டினான் (மத்தேயு 26:50-51; லூக்கா 22:49-51) .இருந்தபோதும், பேதுரு பட்டயத்தை உபயோகப்படுத்தினது சபை உருவான பெந்தோகோஸ்தே நாளுக்கு முன்பாக ஆகும். பெந்தோகோஸ்தே நாள் அன்று பேதுரு முன் எப்போதும் நிகழ்ந்திராத விதத்தில் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டார் (அப்போஸ்தலர் 2) . பேதுரு பரிசுத்த ஆயினால் நிரப்பப்படுவதற்கு முன் நடந்த‌ நிகழ்ச்சியாகும், அந்த பட்டயத்தை பயன்படுத்திய நிகழ்ச்சி. பெந்தேகோஸ்தே நாளுக்கு முன் இயேசு கைது செய்யப்பட்ட அந்த இராத்திரியில் அன‌ல்பர‌ந்த நேரத்தில் நடந்த பேதுரு காதை வெட்டிய அச்செயலின் மீது சபைக் கொள்கைகளை கட்டி எழுப்புவது தவறான வழிமுறையாகும். பேதுரு அந்த சூழலில் பட்டயத்தை பயன்படுத்தினார் என்பதற்காக, கிறிஸ்தவ சபையின் கொள்கைகள் அதன் மீது சார்ந்து உருவாக்குவது தவறானதாகும்.இது மட்டுமல்ல, இயேசு தோட்டத்தில் பேதுருவிடம் கூறினார், "பட்டயத்தை அதன் இடத்திலே வை" என்றார். இத‌ன் அர்த்தம் – "பட்டயத்திற்குரிய உறையிலே அல்லது பேதுருவின் இடுப்பில் கட்டியிருக்கும் பெல்ட்டிலே அல்லது ஆயுதம்பொருத்தக்கூடிய வேறு உடையிலே வை" என்பதாகும். அவர் பட்டயத்தை எட்டாத அளவிற்கு தூரத் தூக்கிப்போடும்படிக் கூறவில்லை. எனவே சில சீடர்கள் அவருடைய சிலுவை மற்றும் மரணத்திற்கு பிறகும் எதிர்ப்பு நிறைந்திருந்த அந்த தேசப்பகுதியில் அந்த இரண்டு பட்டயங்களையும் தங்களோடு வைத்திருந்தார்கள் என அறியலாம். இன்னும் சிலர் அவருடைய உயிர்த்தெழுதல் மற்றும் பரமேறுதலுக்கும் பின்னும் தங்களோடு ஆயுதங்களை வைத்திருந்திருக்கலாம்.இருந்தபோதிலும், நம்பத்தகுந்த பாரம்பரியங்கள், சரித்திரங்கள் அப்போஸ்தலர்களில் ஒருவராவது போரிடவும், கொடிய சோதனைகளிலிருந்து தப்பிப்பதற்கு தவறாக வழிநடத்தப்பட்ட, புரட்டப்பட்டிருந்த கலகக்கார இரத்தசாட்சிகளைப் போல பட்டயங்களை உபயோகிக்க முயற்சிக்கவும் இல்லை என்று கூறுகிறது. அதற்கு பதிலாக யோவானைத் தவிர எல்லா சீடர்களும் உபத்திரவத்தினாலே இரத்தசாட்சிகளாக கொல்லப்பட்டனர். (யோவான் முதிர் வயதிலே இயற்கையாக மரித்தார்). சீடர்களுடன் இயேசு வாழ்ந்த நாட்களிலும், கெத்சமனே தோட்டத்திலும் இயேசுவின் முன்னுதாரமான வாழ்க்கை அவர்களுக்குள் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியருந்தது.முடிவுரை:கெத்சமனே தோட்டத்தில் நடந்த சம்பவங்களும் அங்கே இயேசு தன்னுடய சீடர்களுக்கு கட்டளையிட்டவைகளும் அவர்களுக்கு அகிம்சையை அல்லது சாந்தத்தை கற்றுக்கொடுத்தது, எனவே லூக்கா 22:36 வன்முறையை அனுமதிப்பதில்லை. "அப்பொழுது, இயேசு அவனை நோக்கி: உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள்." (மத் 26:52). பேதுருவும் மற்றவர்களும் பட்டயத்தை உபயோகப்படுத்துவதினால் உண்டாகும் விளைவு பற்றி இயேசு சொன்ன இந்த வார்த்தைகளைக் கேட்டார்கள். எனவே, இயேசுவின் உயிர்த்தெழுத்த நம்பிக்கையின் செய்தியை பிரசங்கிக்கும் சீடர்களின் வாழ்க்கையில், "பட்டயங்கள்" ஒரு பகுதியாக இருக்கவே முடியாது.புதிய ஏற்பாட்டில் "பட்டயம்" என்ற தலைப்பின் கீழ் எழுதப்பட்ட தொடர் கட்டுரைகளை படிக்க இங்கு சொடுக்கவும்: Jesus, Pacifism, and the Sword. இப்போது நீங்கள் படித்த கட்டுரை இந்த தொடர் கட்டுரையின் இரண்டாம் பாகத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு பாகமாகும்.புதிய ஏற்பாட்டின் மத்தேயு 10:34ம் வசனத்தில் இயேசு பயன்படுத்திய "பட்டயம்" என்ற வார்த்தைக்கான சிறிய விளக்க கட்டுரைக்காக இங்கு சொடுக்கவும்.


ஆங்கில மூலம்: A Brief Explanation of the Sword in Luke 22:36


ஜேம்ஸ் அர்லண்ட்சன் அவர்களின் கட்டுரைகள்


Tamil Source:  http://www.answering-islam.org/tamil/authors/arlandson/luke_22_36.html 
 

Saturday, June 27, 2009

மத்தேயு 10:34: சமாதானத்தை அல்ல, பட்டயத்தையே அனுப்ப...


 

மத்தேயு 10:34ல் உள்ள பட்டயத்தைப் பற்றி ஒரு சுருக்கமான விளக்கம்

ஜேம்ஸ் அர்லண்ட்சன்


இயேசு கூறிய ஒரு குறிப்பிட்ட‌ வசனத்தைக் குறித்து கிறிஸ்தவர்கள் பெருமைபட்டுக் கொள்ளக் கூடாது என்று நான் அடிக்கடி வாசிக்கிறேன். அந்த வசனம் இப்படிச் சொல்லுகிறது:"பூமியின் மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தை அல்ல, பட்டயத்தையே அனுப்பவந்தேன்."இவ்வசனத்தை மேலோட்டமாக படிக்கும் போது உண்மையில் ஒரு நியாயமான வன்முறையை இயேசு ஆதரிப்பதாகவும் தன்னுடைய சீடர்களை அதற்கு பயிற்றுவிப்பது போலவும் தெரியும். ஆனால் "வெளித்தோற்றம்" ஏமாற்றக்கூடியதாக இருக்கிறது. ஒரு வசனத்தை அதன் சரித்திர மற்றும் வசன பின்னணியின்றி படிக்கும்போது, அதன் அர்த்தம் முழுவதுமாக மாறிவிடுகிறது, இதனை ஆங்கிலத்தில் இவ்விதமாக கூறுவார்கள் "A text without a context often becomes a pretext". எனவே இந்த வசனத்தை சரித்திர மற்றும் வசன பின்னணியோடு படிக்கும்போது இதன் பொருள் சிறப்பாக மாறிவிடுகிறது.இவ்வசனம் பற்றிய சரியான விளக்கத்திற்குள் இப்போது நாம் கடந்துச் செல்வோம்.நாம் மேலே கண்ட வசனம் கூறப்பட்ட காலம், சரித்திர அமைப்பில், அது யூத கலாச்சாரம் என்பதையும், இயேசு தன்னுடைய மக்களுக்கு ஊழியம் செய்துக்கொண்டு இருந்தார் என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். தன்னுடைய உயிர்த்தெழுதலுக்குப் பிறகு சந்திக்கப்படவிருக்கிற புறஜாதிகளிடத்தில் அனுப்பாமல் "காணமற் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் மக்களிடத்திற்கே" முதலாவது தன்னுடைய பன்னிரண்டு சீடர்களையும் இயேசு அனுப்புகிறார். சரித்திரப் பூர்வமாக சொன்னால், அவர் தன்னுடைய வார்த்தைகளை யூத மக்களாகிய த‌ன் சீடர்களைக் கொண்டு பரப்பினார் என்பதில் எந்த ஆச்சரியமுமில்லை. இரண்டாவதாக, தன் சீடர்களை சில பட்டணங்களின் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்றும், அதன் அதிகாரிகள் அவர்களை விசாரணைக்கு ஒப்புக்கொடுத்து சாட்டையால் அடிப்பார்கள் என்றும் முன்னுரைத்தார். அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் அவர்கள் தங்கள் கால்களில் உள்ள தூசியை உதறிவிட்டு, அந்த பட்டணத்தை விட்டு வேறு இடத்திற்கு போய் விட வேண்டும், அவர்களுக்காக ஜெபம்பண்ண வேண்டும் என்று கூறினார். மூன்றாவதாக, முதலாம் நூற்றாண்டு யூதர்கள் இயற்கையாகவே இந்த புதிய பிரிவை அல்லது "இயேசு இயக்கத்தை" எதிர்த்தார்கள் (சில புதிய ஏற்பாட்டு சமூகவியலர் "இயேசு இயக்கம்" என்று கூறுவார்கள்). இப்படி இயேசுவின் சீடர்களுக்கு எதிர்ப்பு இருந்ததினால், இயேசு தன்னுடயை சக யூதர்களுக்கு எதிராக ஒரு சரீரப்பிரகாரமான‌ இராணுவ பட்டயங்களோடு கூடிய ஒரு புனிதப் போருக்கு தயாராகும் படி தன் சீடர்களுக்கு அழைப்புக் கொடுக்கிறார் என்று மேலே கண்ட வசனத்திற்கு பொருள் கொள்ளமுடியுமா? முக்கியமாக, தன் இனத்தார்களே, "இவருக்கு பையித்தியம் பிடித்திருக்கிறது" என்றுச் சொல்லி, இவரை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைக்க விரும்பியவர்களுக்கு எதிராக புனிதப்போரை புரியுங்கள் என்று இயேசு சொல்வதாக இந்த வசனத்திற்கு பொருள் கொள்ளமுடியுமா? (மாற்கு 3:21).அடுத்ததாக, அந்த கலாச்சார சம்பவங்கள் குடும்ப‌ நபர்களுக்கு மத்தியில் இருக்கும் பிரிவினைகளைப் பற்றி தெளிவாக காண்பிக்கின்றது. மத்தேயு 10:34 ல் உள்ள "பட்டயம்" என்பதின் அர்த்தத்தை விளக்குவதற்கு, அவ்வசனத்தின் முன்பின் வசனங்கள் முழுவதுமாக‌ விளக்கப்பட வேண்டும்.


32. மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைபண்ணுவேன்.


33. மனுஷர் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன்.


34. பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்பவந்தேன்.


35. எப்படியெனில்,


மகனுக்கும் தகப்பனுக்கும்,


மகளுக்கும் தாய்க்கும்,


மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன்.


36. ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே.


37. தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல; மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல.


38. தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்குப் பாத்திரன் அல்ல.


39. தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தம் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் காப்பான்.


இந்த நீண்ட வேதப் பகுதியில் ஒரு முக்கியமான ஆதார வார்த்தை "பட்டயம்" என்பதாகும், அதன் அர்த்தம் இப்போது தெளிவாக விளங்கியிருக்கும். ஒரு யூதன் இயேசுவின் சீடனாக மாறுவதினால், தன் சொந்த யூத குடும்பத்தில் "சமாதானம்" அல்ல, பிளவு தான் ஏற்படும். இந்த "பிரிவினை அல்லது பிளவைத்" தான் இயேசு "பட்டயம்" என்று உருவகப்படுத்தி கூறியுள்ளார். அதற்கு அவருடைய சீடர்கள் தயாரா? இந்த கண்ணுக்குத் தெரியாத‌ ஆவிக்குரிய பட்டயமானது ஒரு மனிதனை அவன் தகப்பனிடத்திலிருந்தும், மகளை தாயினிடத்திலிருந்தும் அப்படி பல உறவுகளை (மீகா 7:6) துண்டித்து விடுகிறது. துவக்கத்தில் இயேசுவின் சொந்த குடும்பமும் எதிர்த்தனர், பிறகு இணைந்தனர். இதனால் தான் " ஒருவன் என்னைப் பின்பற்ற விரும்பினால், என்ன நடந்தாலும் சரி, ஒருவேளை தன்னுடைய குடும்பத்தை இழக்க நேரிட்டாலும் சரி என்னை இறுதிவரைப் பின்பற்ற வேண்டும்" என்று இயேசு சொல்லியிருப்பது இயற்கையானது. ஆனால் இது, ஒரு குடும்பத்தினர் புதிதாக இயேசுவை ஏற்றுக்கொண்ட‌வரை வெறுத்து ஒதுக்கும் போது மட்டுமே பொருந்தும், அவருடைய புதிய நம்பிக்கையில் அவரை ஏற்றுக்கொள்ளும் போது அந்த குடும்பத்தை அவர் வெறுத்து ஒதுக்கக்கூடாது. ஏனென்றால் இயேசு வந்ததின் முழு நோக்கமே எவ்வளவுக்கு அதிகமான மக்களை ஜெயித்து அவர் பக்கமாய் சேர்க்க முடியுமோ சேர்க்க வேண்டும், ஒருவேளை அது உலகமே இரண்டாக பிரிந்தாலும் பரவாயில்லை, ஆனால் வன்முறை இல்லாமல் செய்யப்படவேண்டும்.


இன்னும் கூட நாம் இதற்கான நீண்ட வசன‌ பின்னணியை மத்தேயு சுவிசேஷத்திலிருந்து குறிப்பிடலாம். கெத்சமனே தோட்டத்தில் இயேசு காட்டிக் கொடுக்கப்பட்டு கைது செய்யப்படும் வேளையில், பேதுரு தன்னுடைய ஆண்டவரை காப்பாற்றுவதற்காக பிராதான ஆசாரியனுடைய வேலைக்காரனின் காதை வெட்டுகிறான். ஆனால் இயேசு அவனை நிறுத்தச் சொல்லுகிறார்.


மத்தேயு 26:52-53 சொல்லுகிறது:


52. அப்பொழுது, இயேசு அவனை நோக்கி: உன் பட்டயத்தைத் திரும்ப அதின் உறையிலே போடு; பட்டயத்தை எடுக்கிற யாவரும் பட்டயத்தால் மடிந்து போவார்கள்.


53. நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்பமாட்டாரென்று நினைக்கிறாயா?


இறைவனுயை விருப்பத்தை நிறைவேற்ற வன்முறை தான் வழி என்பதை இயேசு மறுக்கிறார்- இறைவனின் விருப்பத்தை வன்முறையை பின் பற்றியாவது நிறைவேற்ற பேதுரு நினைத்திருந்திருப்பார். பின்னர், தன் கட்டளைக்காக பன்னிரண்டு பெரும் இராணுவத்திற்கும் அதிகமாக தூதர்கள் காத்திருக்கிறார்கள் என்று இயேசு கூறுகிறார். அவர் ரோம ராஜ்ஜியத்தை தவிடு பொடியாக்க வரவில்லை மாறாக தன்னுடைய ஜீவனை கொடுத்து உலக மக்களின் பாவங்களுக்காக மரிக்க வந்தார். இந்த உலகம் அந்த அற்புதமான பரிசை ஏற்றுக் கொள்ளுமா?


இப்பொழுது நாம் இன்னும் பெரிய வாக்கிய பின்னணியத்தைப் பார்ப்போம். லூக்கா சுவிசேஷத்திலுள்ள ஒரு இணை பகுதி பட்டயம் உருவகமாக பயன்படுத்தப்படுவதை உறுதி செய்கிறது.


லூக்கா 12:49-53 கூறுகிறது:


49. பூமியின்மேல் அக்கினியைப் போடவந்தேன், அது இப்பொழுதே பற்றி எரிய வேண்டுமென்று விரும்புகிறேன்.


50. ஆகிலும் நான் முழுகவேண்டிய ஒரு ஸ்நானமுண்டு, அது முடியுமளவும் எவ்வளவோ நெருக்கப்படுகிறேன்.


51. நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்கவந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்கவந்தேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.


52. எப்படியெனில், இதுமுதல் ஒரே வீட்டிலே ஐந்துபேர் பிரிந்திருப்பார்கள், இரண்டுபேருக்கு விரோதமாய் மூன்றுபேரும், மூன்றுபேருக்கு விரோதமாய் இரண்டுபேரும் பிரிந்திருப்பார்கள்.


53. தகப்பன் மகனுக்கும் மகன் தகப்பனுக்கும், தாய் மகளுக்கும் மகள் தாய்க்கும், மாமி மருமகளுக்கும் மருமகள் மாமிக்கும் விரோதமாய்ப் பிரிந்திருப்பார்கள் என்றார்.


மத்தேயு மற்றும் லூக்கா சுவிசேஷத்தில் உள்ள இரண்டு ஒரே மாதிரியான பகுதிகளும் இரண்டு வெவ்வேறான சூழ்நிலைகளை பிரதிபலிக்கிறது எனலாம். நானும் கூட ஒரு தலைப்பை இரண்டு வகுப்புகளில் கற்றுக் கொடுக்கும்போது, நான் கற்றுக்கொடுக்கப்போகும் தலைப்பில் சில வார்த்தைகளை மாற்றுவதுண்டு. வகுப்பில் யாருக்கும் அந்த சிறிய மாற்றம் தெரியப்போவதில்லை, அது ஒரு பொருட்டல்ல ஏனென்றால் தலைப்பின் அர்த்தம் மாறுவதில்லை. அதைப் போலவே, இயேசு கற்றுக் கொடுத்த இந்த மூன்று வருடங்களில் அவர் இஸ்ரவேலர்களுக்கு போதிக்கும் போது வெவ்வேறான‌ பார்வையாளர்களுக்கு அவர் அநேக முறை (சுவிசேஷகங்களில் இரண்டு முறை பதிவு செய்யப்பட்டிருந்த போதும்) இந்த அர்ப்பணிப்பின் அழைப்பைக் மீண்டும் மீண்டுமாக கொடுத்துள்ளதாக அறியலாம். தன் போதனையை கேட்பவர்களிடம், அவர்களுடைய சிலுவையை எடுத்துக் கொண்டு தன்னைப் பின்பற்றி வரவேண்டும் என்ற தீவிரமான அழைப்பை அடிக்கடிக் கொடுத்திருக்கிறார். (மத் 16: 24, மாற்கு 8:34, லூக்கா 9:23, 14:27). எது எப்படியிருந்தாலும், வேத வாக்கியங்களுக்கு விளக்கம் கொடுக்கும் சரியான முறை என்பது வசனங்களே வசனங்களை தெளிவுபடுத்துவதற்கு விட்டு விடுவதாகும், அதிலும் குறிப்பாக ஒரே மாதிரியான வேத பகுதிகளை ஆராயவேண்டும். இப்பொழுது லூக்கா 12: 49-53 நம்முடைய மத்தேயு 10:34 விளக்கத்தை உறுதிபடுத்துகிறது. இயேசு ஒருவருடைய சொந்த குடும்பத்திற்கு விரோதமான சரீர வன்முறையை ஆதரிக்கவில்லை மாறாக குடும்பத்தில் பிரிவினைகள் உண்டாவதற்கான வாய்ப்புகளைப் பற்றி அவர் எச்சரிக்கிறார் (Jesus did not endorse physical violence against one's own family, but he warns people about possible family division).


மேலே விவரிக்கப்பட்ட அனைத்து விவரங்களிலிருந்து நாம் அறிந்துக்கொள்வது என்ன?


இயேசு ஒருபோதும் எந்த ஒரு மனிதன் மீதும் பட்டயத்தை உபயோகிக்கவில்லை என்பதை சரித்திரம் நமக்கு தெளிவாக சித்தரிக்கிறது. மேலும் மத்தேயு 10:34 ம் வசனத்தில் தன்னைப் பின்பற்றுபவர்களுக்கு யார் மீதும் பட்டயத்தை சுழற்றுவதற்கோ எந்தக் காரணத்திற்காகவும், குடும்பத்தில் தம்மை எதிர்ப்பவர்களை கொல்லுவதற்கோ அவர் கட்டளையிடவில்லை. ஆனால் ஒரு உண்மையான சீடன் இயேசுவை பூரணமாக பின்பற்றும் போது எதிர்ப்பு நிறைந்த குடும்பத்திலிருந்து வரும் போது தன்னுடைய சிலுவை சுமக்கும் (சீடனுக்ககான அழைப்பில் மற்றொரு உருவகம்) அளவுக்கு எல்லாவித எதிர்ப்புகளிலிருந்து தன்னை துண்டித்துக் கொள்வதற்கு விரும்பி ஆன்மீக பட்டயத்தை (சரீரப் பிரகாரமான உண்மை பட்டயத்தை அல்ல) உபயோகிக்க வேண்டும். இயேசு இந்த உலகத்தை இரண்டு பிரிவாக பிரிக்கிறார் என்பது உண்மையே, அவரைப் பின்பற்றுபவர்கள் அவரைப் பின்பற்றாதவர்கள், வெளிச்சத்தில் உள்ளவர்கள் இருளில் உள்ளவர்கள். இருந்தபோதும் தன்னுடைய சீடர்களிடத்தில் எல்லார் மீதும் போர் தொடுங்கள் குறிப்பாக ஒருவனுடைய குடும்பத்தின் மீது மீதும் போர் தொடுங்கள் என்று நிச்சயமாகக் கூறவில்லை.


ரோமப் பேரரசர் கான்ஸ்டான்டைன், மத்திய படையெடுப்பாளர்கள், புரட்டஸ்டன்ட்கள் மற்றும் கத்தோலிக்கர்கள் அவிசுவாசிகள் மீதும் மற்றவர்கள் மீதும் பட்டயத்தை உபயோகித்தார்கள் என்பது உண்மை தான். இருந்தாலும் அவர்களில் ஒருவரேனும் கிறிஸ்தவத்திற்கு அஸ்திபாரம் கிடையாது, இயேசு மட்டுமே கிறிஸ்தவத்திற்கு அஸ்திபாரம். அவர் ஒருபோதும் தன்னுடைய செய்தியை பரப்புவதற்கு பட்டயத்தை ஆதரிக்கவில்லை. மேலும் கிறிஸ்தவம் ஒரு மறுமலர்ச்சிக்குள் பிரவேசித்தது (கி.பி 1400-1600). மேலும் ஞானஉபதேசத்தின் அழுத்தத்தில் கிறிஸ்தவம் விடப்பட்டது (கி.பி 1600-1800) அது சமாதானத்தை கோரியது. இவைகள் ஒருபக்கமிருக்க‌, இயேசு ஒருபோதும் ஒரு இராணுவப் புனிதப் போரை அறிவிக்கவில்லை, அவர் தன்னுடைய இயக்கத்திற்கு ஒழுக்க நெறிகளை மட்டுமே நியமித்தார்.


புதிய ஏற்பாட்டிலே சுவிசேஷத்தைப் பரப்புவதற்கோ, சபைகளை நாட்டுவதற்கோ அல்லது வேறு எதையும் சாதிப்பதற்கோ சபையானது பட்டயத்தை உபயோகிக்க வேண்டும் என்று ஒரு வசனம் கூட இல்லை. மாறாக புதிய ஏற்பாடு பட்டயத்தை ஆளுகையிடம் அரசாங்கத்திடம் கொடுக்கிறது (ரோமர் 13:1-6). எந்த விதத்திலும் சரீரப் பிரகாரமான பட்டயத்தை அல்ல ஆவிக்குரிய பட்டயத்தை எடுக்க இயேசு கூறுகிறார், ஒருவேளை குடும்ப உறவுகளைத் துண்டிக்க நேர்ந்தாலும் சீடர்கள் அதற்கு தயாராக இருக்கவேண்டும்.


ஆங்கில மூலம்: A Brief Explanation of the Sword in Matthew 10:34


ஜேம்ஸ் அர்லண்ட்சன் அவர்களின் கட்டுரைகள்


Tamil Source: http://www.answering-islam.org/tamil/authors/arlandson/matthew_10_34.html
 
 

Tuesday, June 23, 2009

அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?


 

அல்லாஹ் ஜெபங்களுக்கு பதில் அளிக்கிறாரா?

ஆசிரியர்: முடே அல்ஃபதி

பல சமயங்களில் நமது இஸ்லாமிய நண்பர்கள் தங்களது அல்லாஹ்வைக் குறித்து உண்மைக்கு மாறாக மிகவும் நேர்த்தியான ஒரு தோற்றத்தைக் காட்ட முயற்சிக்கிறார்கள். அதாவது அல்லாஹ் பைபிளின் தேவனைப் போல‌, கருணையும் அன்பும் நிறைந்தவராக இஸ்லாமியர்களால் சித்தரிக்கப்படுகிறார்.

தீவிர‌ இஸ்லாமிய நாடாகிய ச‌வுதி அரேபியாவில் என்னுடைய சொந்த ஊரில் ஒரு பக்தி வைராக்கியமான வஹாபி முஸ்லீமாக வாழ்ந்து, கிறிஸ்தவர்களுடன் எவ்விதத் தொடர்புமின்றி வளர்ந்த நான், இப்போது என்னுடைய‌ இஸ்லாமிய மக்கள், கிறிஸ்தவர்களிடம் அல்லாஹ்வைப் பற்றியும் இஸ்லாமைப் பற்றியும் பகிர்ந்துகொள்ளும் ஒரு சில விவாதங்களைக் குறித்து மிகவும் ஆச்சரியப்படுகிறேன். அவர்கள் அல்லாஹ்வைக் குறித்து, மசூதிகளில் நான் ஒருபோதும் கேள்விப்பட்டிராத வண்ணமாயும், குறிப்பாக மதப் பற்றான முஸ்லீம்களின் மத்தியில் சொல்லப்படாத வகையினில் அவரை ஒரு மாறுபட்ட விதமாகச் சித்தரிக்கின்றார்கள். மக்கள் அல்லாஹ்வை, கூப்பிடும் போதெல்லாம் ஜனங்களின் ஜெபங்களைக் கேட்டு அதற்கு பதிலளிக்கும் கடவுளாக அல்லாஹ்வை சித்தரிக்க முஸ்லீம்கள் அரும்பாடு படுகிறார்கள். இந்தக் காரணத்திற்காக அவர்கள் சில கு‍ர்‍ஆன் வசனங்களை நம் முன் வைக்கிறார்கள், ஆனால் அவைகளைச் சற்று ஆராய்வோமானால், அவர்களின் கூற்றுக்கு எதிரானவையாக அவ்வசனங்கள் இருப்பதைக் காணலாம். அதாவது, அவர்கள் காட்டும் கடவுள், சாதாரண மனிதர்களைப் போலவே அவர்கள் மீது உண்மையான அக்கரை கொண்டவராக அல்லாமல், மாறாக தமது நலனிலேயே குறியாக இருப்பவராகவே இவ்வசனங்கள் நமக்குக் காண்பிக்கின்றன‌.

நமது ஜெபங்களுக்குப் பதிலளிப்பதில் அல்லாஹ் விருப்பம் கொண்டவராகவோ அல்லது அவ‌ர் நமது விண்ணப்பங்களை நாம் இருக்கும் வண்ணமாகவே அவரிடம் சொல்ல‌ சாத்தியமுள்ளவராகவோ நாங்கள் ஒருபோதும் கற்பிக்கப்பட்டதில்லை. ஆயினும், ஒரு மேற்கத்திய நாட்டில் வசிக்கும் நான், பைபிள் போதிக்கும் தேவனின் சாயலை இஸ்லாமியர்கள், அல்லாஹ்வுக்கு ஒப்பாக்கவும், அவர் பைபிளின் தேவன் போன்றே கருதப்படவும் வேண்டுமென்று முயற்சிக்கிறார்கள் எனக் காண்கிறேன். அதாவது, வேறு விதமாகச் சொல்வோமாயின், அல்லாஹ்வின் தோற்றத்தை அவர்கள் "கிறிஸ்துவ மயமாக்க" (Christianize Allah's image) முயற்சிக்கிறார்கள் .

இச்சிறிய கட்டுரையில், மேற்கத்திய முஸ்லீம்கள் அல்லாஹ்வை எவ்விதம் சித்தரிக்கிறார்கள் என்பதற்கு ஒரு உதாரணத்தைக் காண்பிக்க விரும்புகிறேன். இதற்காக இஸ்லாமியர்கள் பொதுவாகக் குறிப்பிட்டுக் காட்டும் இரண்டு குர்‍ஆன் வசனங்களையும், அதற்கான இஸ்லாமிய அறிஞர்களின் அதிகார பூர்வமான விளக்கங்களையும் எடுத்துக் கொள்ளுவோம். அவைகளின் மூலம் நமது வாசகர்களும், குறிப்பாக இஸ்லாமின் ஆதரவாளர்களும், "அல்லாஹ்வின் கருணையும் நம் ஜெபங்களுக்கான அவரின் பதிலும்" சில இஸ்லாமிய நண்பர்களின் மனதில் உதித்த‌ புதிய‌ விருப்பத்தின் தோற்றமே தவிர வேறல்ல என்பதினைத் தாமே புரிந்துகொள்ளும் வகையில் ஒரு எளிதாக்கப்பட்ட விளக்கத்தினைக் கொடுக்க முற்படுகின்றேன்.

நாம் ஆராய‌ப்போகும் முத‌லாவ‌து வ‌ச‌ன‌ம் சூரா: 2:186 ல் அட‌ங்கியுள்ள‌து

(நபியே!) என் அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால்; "நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்;, அவர்கள் என்னிடமே (பிரார்த்தித்துக்) கேட்கட்டும்;, என்னை நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்" என்று கூறுவீராக.

"And when My servants ask you concerning Me, then surely I am very near; I answer the prayer of the suppliant when he calls on Me, so they should answer My call and believe in Me that they MAY walk in the right way." – Q. 2:186 Shakir (emphasis ours)

இந்த வசனம் எடுத்த எடுப்பில், இஸ்லாமிய‌ரின் க‌ட‌வுளாகிய‌ அல்லாஹ், அவரைப் பின்பற்றுவோரின் ஜெபங்களைக் கேட்டு அவைகளுக்குப் பதிலளிப்பவராக தெரிந்தாலும், இவ்வசனத்தின் வரிகளுக்கு ஊடே இழையோடியிருக்கும் அர்த்தத்தைச் சிந்திப்போமானால், இவ்விதம் நடைபெறுவதற்குச் சில நிபந்தனைகள் இடப்பட்டிருப்பதினைக் காணலாம்.

1. அல்லாஹ்வை நோக்கிக் கூப்பிடும் நபரை இந்த வசனம் அல்லாஹ்வின் கட்டளைகளைக் கைக்கொள்ளும்படிச் சொல்கின்றது. அதாவது அந்த நபர் தனது கடமையைச் செய்தல் வேண்டும்; அநீதியானவற்றையோ அல்லது அல்லாஹ் வெறுக்கும் காரியங்களையோ செய்தல் கூடாது.

2. அந்த நபர் உண்மையிலேயே அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். குழப்பம் இங்குத் தான் உருவாகின்றது. இந்த வசனம் அல்லாஹ்வால் அவரது அடியார்க்கு (இஸ்லாமியர்கள்) கொடுக்கப்பட்டிருந்தால், அவர்கள் அல்லாஹ்வை நம்பும்படிக்கு மறுபடியும் கேட்டுக் கொண்டிருக்கப்படுவதின் அவசியம் என்ன? இது அல்லாஹ் அவர்களின் பக்தியினையும் அவர்களது உள்ளுணர்வினையும் குறித்துச் சந்தேகத்துடன் இருப்பதாகத் தோற்றமளிக்கிறது. உண்மையில், இவ்விதமான எதிர்பார்ப்பு, அல்லாஹ், அவரது அடியார்கள் அவரை நோக்கிக் கூப்பிடும்போதெல்லாம் அவர்களுக்கு பதிலளிக்கும்படியான உறுதியினை வழங்கும் தெய்வம் அல்ல என்பதனையே காட்டுகின்றது.

3. இந்த‌ வ‌ச‌ன‌ம், அல்லாஹ்வை நோக்கிக் கூப்பிடும் ஒருவருக்கு, அவர் அல்லாஹ்வின் எல்லாக் கட்டளைகளுக்கும் கீழ்ப்படிந்து நல் வழியில் நடந்திருப்பினும் அவ‌னின்/அவ‌ளின் ஜெப‌ங்க‌ளுக்கு அவ‌ர் உண்மையிலேயே ப‌தில‌ளிப்பார் என்கின்ற வகையில் எந்த விதமான‌ உத்திரவாத‌த்தையும் கொடுக்க‌வில்லை.

அல்-குர்துபி (Al Qurtubi)[1], இந்த வசனத்தின் விளக்க உரையில், ஒரு முஸ்லீமின் வேண்டுதல் அல்லாஹ்வினால் பதிலளிக்க‌ப்படுவதற்குச் சில நிபந்தனைகள் உள்ளன எனக் குறிப்பிடுகிறார்:

• அல்லாஹ்வை நோக்கி ஜெபித்து விண்ணப்பம் செய்யும் ஒருவர் அறிந்தோ அல்லது அறியாமலோ அல்லாஹ்விற்கு எதிரான பாவங்களைச் செய்து இருத்தலாகாது. இதற்கு ஆதாரமாக அவர் சூரா 7:55 ஐக் காட்டுகிறார்.

(ஆகவே, முஃமின்களே!) உங்களுடைய இறைவனிடம் பணிவாகவும், அந்தரங்கமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள் - வரம்பு மீறியவர்களை நிச்சயமாக அவன் நேசிப்பதில்லை.

"வரம்பு மீறுதல்" என்றால் என்ன‌?

அல்-குர்துபி சொல்வதின்படி இதன் அர்த்தம் என்னவென்றால்:

• தடை செய்யப்பட்ட எவற்றையும் கேளாதிருத்தல்

• உங்களுடைய வாழ்கையில், உங்கள் பணத்திற்கு வட்டி வாங்குதல், பிறர் பொருளை அபகரித்தல், பணப் பற்றுவரவில் நாணயமற்று இருத்தல் போன்ற பாவங்கள் செய்து கொண்டிருக்கும் போது அல்லாஹ்விடம் எதனையும் கேளாதிருத்தல்.

• தான் கேட்பதற்கு அல்லாஹ் பதிலளிப்பாரென்ற நம்பிக்கையின்றி ஒரே காரியத்தை தொடர்ந்து கேட்டுக்கொண்டேயிருத்தல்.

• அல்லாஹ்வை நோக்கிக் கூப்பிடும் ஒருவர் தெளிவான சிந்தையுடன் தூய மனதுடன் அவ்வாறு செய்ய வேண்டும். ஜெபிக்கும் போது மனதினை வேறு திசையில் அலைய விடக்கூடாது.

உண்மையில், இபின் அட்டாவின் (Ibn Atta) கூற்றுப்ப‌டி அல்லாஹ்வை வேண்டிக்கொள்ளும் போது, வேண்டிக்கொள்ளும் ந‌ப‌ர் க‌டைப்பிடிக்க‌ வேண்டிய‌ சில‌ நிபந்தனைக‌ள் உள்ளன‌ என‌ அல்-குர்துபி சொல்கிறார். இந்த‌ நிபந்த‌னைக‌ள் கீழ்க‌ண்ட‌வ‌ற்றை உள்ள‌ட‌க்கிய‌து:

• மனத்தாழ்ச்சியுடன் கூடிய பணிவு, பயம், நம்பிக்கை, தொடர்ந்து விண்ணப்பித்தல், தடை செய்யப்படாத உணவையே (ஹலால்) உண்ணுதல்.

• விண்ணப்பம் செய்தல் உண்மையுடன் கூடியதாக இருக்க வேண்டும் என இபின் அட்டா கூறுகிறார்.

• விண்ணப்பம் செய்தல், கீழ்கண்டவாறு ஏற்ற வேளையிலே செய்யப்படுதல் வேண்டும்:

o உப‌வாச‌த்தை முடிக்கும் போதோ அல்ல‌து விடிய‌லுக்கு முன்பாக‌ உப‌வாச‌த்தைத் தொட‌ங்கும் போதோ, தொழுகைக்கான‌ அழைப்பிற்கும் தொழுகை ஆரம்பிக்கும் வேளைக்கும் இடைப்பட்ட நேரம், நாளின் இரண்டாவது மற்றும் மூன்றாவது தொழுகை வேளைக்கு இடைப்ப‌ட்ட‌ நேர‌ம், ம‌ற்றும் புத‌ன் கிழ‌மைக‌ள். ஏனைய‌ வேளைக‌ள் தேவைக்கேற்ப துரித ம‌ற்றும் அவ‌ச‌ர‌ கால‌ங்க‌ளை உள்ள‌ட‌க்கும்.

o விண்ணப்பத்தின் முதன்மையான நோக்கம் முஹம்மது நபியினை மகிமைப்படுத்தும் வண்ணம் இருத்தல் வேண்டும்.

o விண்ணப்பம் கேட்பதற்குத் தெளிவாக இருக்கும் வண்ணம் செய்தல் வேண்டும். முணுமுணுத்தல் இருத்தலாகாது.

மேலே கண்ட நிபந்தனைகளை வாசிக்கும்போது, கட்டுகளுடன் கூடிய ஒரு சட்டரீதியான ஒப்பந்த பத்திரத்தினை வாசிப்பது போன்ற ஒரு உணர்வினையே ஒருவர் பெறுவாரேயன்றி, திறந்த வாசலை உடையவர் என்று வர்ணிக்கப்படக்கூடிய கடவுளின் (அல்லாஹ்) வார்த்தைகளைப் ப‌டிக்கும் உணர்வினை அடையமாட்டார்.

நாம் ஆராய‌ப் போகும் அடுத்த‌ வ‌ச‌ன‌ம் சூரா 40:60ல் அட‌ங்கியுள்ள‌து.

وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ

உங்கள் இறைவன் கூறுகிறான்; "
என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள்; நான் உங்(கள் பிரார்த்தனை)களுக்கு பதிலளிக்கிறேன்; எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் சிறுமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள்."

"And your Lord says: Call upon Me, I will answer you; surely those who are too proud for My service shall soon enter hell abased" – Q. 40:60 Shakir

அரபியில் இது கீழ் கண்டவாறு வாசிக்கப்படுகிறது[2].

"Waqala rabbukumu odAAoonee astajib lakum inna allatheena yastakbiroona AAan AAibadatee sayadkhuloona jahannama dakhireena"

மேலே காணப்பட்ட வசனத்தில் ஆய்வுக்குரிய வார்த்தை "Call upon Me" அரபி மொழியில் "odAAoonee" (ادْعُونِي) என்பதாகும். இதன் விளக்கத்தினை/விளக்கவுரையை[3] நாம் வாசிப்போமானால், ஆரம்ப கால இஸ்லாமியர்கள் "odAAoonee" (ادْعُونِي)" என்ற வார்த்தைக்கு "என்னையே தொழுதுக்கொள்ளுங்கள் – Worship me" அல்லது "சேவியுங்கள் – Serve me" என்றே பொருள் கொண்டார்கள் என்பதினைக் காணலாம். உண்மையில் இஸ்லாமின் நபியாகிய முஹம்மதுவிடம், இந்த வசனத்தின் பொருள் குறித்துக் கேட்டபோது, "Call upon Me" அல்லது "odAAoonee" (ادْعُونِي)" என்ற வார்த்தை அரபி மூலத்தில் "D-A-A" (دعا) என்பதில் இருந்து உருவாக்கப்பட்டது எனக் காண்பித்தார். அவரது கூற்றின்படி இந்த வார்த்தையின் அர்த்தம் என்னவெனில் "அல்லாஹ்வைத் தொழுகையின் மூலம் சேவித்தல் - serve Allah in worship" என்பதாகும். (அதாவது அரபியில் Ibada). மேலும், முஹம்மது உபயோகித்த வார்த்தையை நாம் அரேபிய அகராதியில்[4] பார்த்தால் ("A-B-D" (عبد) ) என்ற மூல வார்த்தை "சமய தொழுகையை – Religious Worship" குறிப்பதை காணலாம்.

இஸ்லாமிய‌ர்க‌ள், அல்லாஹ் தங்களின் ஜெபங்களுக்கு பதிலளிக்கக் காட்டும் ஆர்வத்திற்கு ஆதாரமாகச் சொல்லும் இந்த இரு வசனங்களை நன்கு ஆராய்ந்த பின்பு இவைகளில் இதற்கான சான்றோ, அல்லாஹ்வின் பதிலளிக்கும் முனைப்போ அல்லது அவர்களை அவர் இக்கட்டுகளிலிருந்து காப்பாற்ற விரைந்து வரும் பண்போ இருப்பதாக சிறிதளவேனும் நம்மால் காண முடியவில்லை. இதற்கு ஒப்பீடாகவுள்ள மெய்யான கடவுளாகிய பைபிளின் தேவன் அவரைப் பின்பற்றுவோருக்கு தங்களின் ஜெபங்களுக்கு பதிலினை காலங்காலமாக வாக்களிப்பவராக இருக்கிறார்.

"ஆபத்துக் காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப் படுத்துவாய்." (சங்கீதம் 50:15)

"
கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள்; தட்டுங்கள் அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும். ஏனென்றால், கேட்கிற எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும். உங்களில் எந்த மனுஷனானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக்கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக்கேட்டால் அவனுக்குப் பாம்பைக்கொடுப்பானா? ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?" (மத்தேயு 7:7-11)

"மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிறகிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்.
நீங்கள் என் நாமத்தினாலே எதைக் கேட்பீர்களோ, குமாரனில் பிதா மகிமைப்படும்படியாக, அதைச் செய்வேன். என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்." (யோவான் 14:12-14)

"அந்த நாளிலே நீங்கள் என்னிடத்தில் ஒன்றுங் கேட்கமாட்டீர்கள். மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்தில்
கேட்டுக்கொள்வதெதுவோ அதை அவர் உங்களுக்குத் தருவார். இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்.… இவைகளை நான் உவமைகளாய் உங்களுடனே பேசுகிறேன்; காலம் வரும், அப்பொழுது நான் உவமைகளாய் உங்களுடனே பேசாமல், பிதாவைக்குறித்து வெளிப்படையாக உங்களுக்கு அறிவிப்பேன். அந்த நாளில் நீங்கள் என் நாமத்தினாலே வேண்டிக்கொள்வீர்கள். உங்களுக்காகப் பிதாவை நான் கேட்டுக்கொள்வேனென்று உங்களுக்குச் சொல்லவேண்டியதில்லை. நீங்கள் என்னைச் சிநேகித்து, நான் தேவனிடத்திலிருந்து புறப்பட்டுவந்தேனென்று விசுவாசிக்கிறபடியினால் பிதாதாமே உங்களைச் சிநேகிக்கிறார்." (யோவான் 16:23-27)

"அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையினுடைய ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அநுக்கிரகம் பண்ணவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன்.
நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு, சபையிலே கிறிஸ்து இயேசுவின் மூலமாய்த் தலைமுறை தலைமுறைக்கும் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென்.(எபேசியர் 3:19-21).

"
நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படிகேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம். நாம் எதைக் கேட்டாலும் அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்று நாம் அறிந்திருந்தோமானால், அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றுக்கொண்டோமென்றும் அறிந்திருக்கிறோம்.." (I யோவான் 5:14-15)

இதன் பயனாக, நமது இஸ்லாமிய நண்பர்கள் முன்பு நாம் குறிப்பிட்ட‌ வசனங்களை முன்னிறுத்தி முனைவதினைக் குறித்து அவர்கள் தவறாக நடத்தப்படுகிறார்களோ அல்லது தவறாகப் பிறரை வழி ந‌டத்த விழைகிறார்களோ என்ற சந்தேகத்துடன் பார்ப்பதைத் தவிர‌ நமக்கு வேறு வழி இல்லை. இதன் பின்னணியில், உண்மையாகவே இக்காரியத்தினை ஆராய முற்படும் இஸ்லாமியர்களை நான் வரவேற்பதுடன், தேவன் தாமே இவர்களின் சத்திய தாகத்தினை ஆற்றும்படிக்கு வேண்டிக்கொள்கிறேன்.

"ஆகையால் குமாரன் உங்களை விடுதலையாக்கினால் மெய்யாகவே விடுதலையாவீர்கள்" (யோவான் 8:36)

கேட்கிறவரும் பதிலளிப்பவருமாகிய நம் ஆண்டவரும் மீட்பருமாகிய இயேசு கிறிஸ்துவுக்கே, சதாகாலங்களிலேயும் மகிமையும் மகத்துவமும் உண்டாகியிருப்பதாக, ஆமென்.

Footnotes

1
Arabic source, translation is my own.
2
Source
3
Ibn Kathir, Al Jalalayn, Al Tabari and Al Qurtubi
4 Lane's Lexicon,
source

ஆங்கில மூலம்:
Does Allah Answer Prayers?

ஆசிரியரின்
இதர கட்டுரைகளை படிக்க‌வும்--
6/22/2009 03:07:00 AM அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது

 

Friday, June 5, 2009

தினத்தந்தி பத்திரிக்கையின் தவறான நிதானிப்பு


 

நேற்றைய தினத்தந்தி பத்திரிக்கை கீழ்கண்ட தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டு இருந்தது.
 
என்பது தான் அந்த செய்தி.இதில் தவறு என்ன என்று கேட்டால் "பாக்கிஸ்தான் தீவிரவாதிகள் அட்டூழியம்" என்று தன்னுடைய ஆதங்கத்தை கொட்டியிருந்தது.
ஆனால் குரானை பற்றி நன்கு  அறிந்தவர்களுக்கு இது பாக்கிஸ்தான் தீவிரவாதிகளின் அட்டூழியமாக தெரியாது.ஏன் என்றால் "எய்தவன் இருக்க அம்பை நோகாதே" என்ற பழமொழிக்கு ஏற்ப இவர்கள் இந்த மாதிரி நடக்க காரணமான அல்லாவும் அவருடைய தூதரையுமே குறை சொல்ல வேண்டும்.ஏன் என்றால் குரானை உண்மையாக பின்பற்றும் ஒரு முஸ்லீம் தன்னுடைய நாட்டில் மற்ற மதத்தவர்களிடம் ஜிஸ்யா என்ற மார்க்க வரியை வாங்கின பிறகுதான் அவர்களின் மத சடங்குகள் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும்.
 
ஆதாரமான குரான் வசனம்.
 

9:29

வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கெள;ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.

 
இப்பொழுது சொல்லுங்கள் நான் சொல்லுவது சரிதானே?
 
 தினத்தந்தியின் முழு செய்தியை கீழே படிக்கலாம்

இஸ்லாமாபாத், ஜுன்.4-

பாகிஸ்தானில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களிடம் தலீபான்கள் மதவரி என்ற பெயரால் கட்டாய வரி வசூல் செய்து வருகிறார்கள். இதுபோல அந்த நாட்டில் உள்ள இன்னொரு தீவிரவாத இயக்கமான லஸ்கர்-இ-இஸ்லாம் என்ற அமைப்பு பிற மதத்தினரிடம் கட்டாய வரி வசூல் செய்கிறது.

கைபர் கணவாய் பகுதியில் பழங்குடி இன மக்கள் வசிக்கும் இடத்தில் இந்த அமைப்பு செல்வாக்குடன் திகழ்கிறது. இந்த அமைப்பை கடந்த ஆண்டு அரசாங்கம் தடை செய்து உள்ளது. இந்த அமைப்பு பிற மதத்தினரிடம் மதவரியாக ஆண்டுக்கு ரூ.1000 வசூலித்து வருகிறது.

இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் ஆகிய சமூகத்தினர் இந்த மதவரியை செலுத்துவதற்கு சம்மதித்து உள்ளனர். இந்த அமைப்பின் தலைவர் மங்கள் பாக் கை சந்தித்த சீக்கிய தூதுக்குழு இந்த வரியை செலுத்த சம்மதித்து உள்ளது. வரி செலுத்தினால், அவர்களின் பாதுகாப்புக்கு நாங்கள் பொறுப்பு ஏற்கிறோம் என்று மங்கள் பாக் உறுதி அளித்தார். பெண்கள், குழந்தைகள், ஊனமுற்றோர் ஆகியோருக்கு இந்த வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.
 
http://www.dailythanthi.com/article.asp?NewsID=491944&disdate=6/4/2009

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்