இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Monday, December 31, 2012

பாக்.: குரானை எரித்ததாகக் கருதப்பட்டவர் எரித்துக் கொலை

 பாகிஸ்தானில் இஸ்லாமியத் திருமறையான குரானை இழிவுபடுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட முஸ்லிம் ஒருவரை கும்பல் ஒன்று எரித்துக் கொன்றுள்ளதாக பொலிசார் கூறுகின்றனர்.

நாட்டின் தென்பகுதியில் சீதா வட்டகையில் உள்ள ஒரு கிராமத்துப் பள்ளிவாசல் ஒன்றில் அந்நபர் இரவுப்பொழுதைக் கழித்திருந்தார். சம்பவம் நடந்த  தாது பள்ளிவாசல்

மறுநாள் காலையில் அந்த பள்ளிவாசலுக்குள் குரானின் பிரதி ஒன்று எரிந்து கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

அவர்தான் குரானை எரித்திருக்க வேண்டும் எனக் கருதிய கிராமவாசிகள் ஆத்திரம் மேலோங்க அவரைத் தாக்கி பின்னர் பொலிசாரிடம் ஒப்படைத்திருந்தனர்.

ஒருவர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டுள்ளார்

உயிரோடு எரித்துக் கொலை

ஆனால் ஒரு சில மணி நேரங்களில் இருநூறு பேர் அடங்கிய பெரிய கும்பல் ஒன்று காவல்நிலையத்துக்குள் தடாலடியாக நுழைந்து அந்நபரை வெளியில் இழுத்துப் போட்டு அவரைக் தீவைத்துக் கொளுத்தியிருந்தனர்.

இத்தாக்குதல் தொடர்பில் முப்பது பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கவனக்குறைவாக இருந்தார்கள் என்பதற்காக பொலிஸ்காரர்கள் ஏழு பேர் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மதநிந்தனை என்பது பாகிஸ்தானில் மரண தண்டனைக்குரிய ஒரு குற்றமாகும். ஆனாலும் மிகச் சிலருக்கே அங்கு இக்குற்றச்சாட்டுக்காக தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

மதத்தை இழிவுபடுத்திவிட்டார்கள் என்ற பொய்க் குற்றச்சாட்டுகளும் பாகிஸ்தானில் அவ்வப்போது எழுவதுண்டு.


source:BBC

”பைபிளின் மூல கையெழுத்துப் பிரதிகள் தொலைந்துவிட்டதால், பைபிள் நம்பகத்தன்மையற்றது” என்ற இஸ்லாமியர்களின் வாதம்

 

"பைபிளின் மூல கையெழுத்துப் பிரதிகள் தொலைந்துவிட்டதால், பைபிள் நம்பகத்தன்மையற்றது" என்ற இஸ்லாமியர்களின் வாதம்

பைபிளின் மூல கையெழுத்துப் பிரதிகள் தொலைந்துவிட்டதால், பைபிளை நம்பமுடியாது என்று சில முஸ்லிம்கள் வாதம்புரிகிறார்கள்.  அதாவது முதன் முதலில் எழுதப்பட்ட பிரதிகள் இல்லாததால், நம்மிடமுள்ள பிரதிகளோடு ஒப்பிட வாய்ப்பு இல்லை என்று இவர்கள் கூறுகிறார்கள்.

முதன் முதலில் எழுதப்பட்ட மூல கையெழுத்துப்பிரதிகள் இல்லை என்பது உண்மை தான், ஆனால், இதே நிலையில் தான் குர்-ஆனும் உள்ளது என்பதை இந்த முஸ்லிம்கள் அறிவார்களா?  "The Holy Qur'an / Tratislatioti and Commentary, (2nd Edition, 1977)," என்ற குர்-ஆன் மொழியாக்கத்தில் யூசுஃப் அலி அறிமுகத்தில் கீழ்கண்டவாறு கூறுகிறார்:

குர்-ஆனின் வார்த்தைகள் இறக்கப்பட்டவுடன், பரிசுத்த இறைத்தூதர் சொல்லச் சொல்ல, அவைகளை பனை மர இலைகளிலும், மரப்பட்டைகளிலும், எலும்புகளிலும் எழுதி அவைகளை ஒரு பையில் போட்டு வைப்பார்கள்.

நன்றாக கூர்ந்து கவனிக்கவும், குர்-ஆன் வசனங்களை இலைகளிலும், மரப்பட்டைகளிலும், எலும்புகளிலும் எழுதி வைத்தார்கள். மேலும் இவைகள் பற்றி ஆய்வு செய்தால், ஹதீஸ்கள் என்று அறியப்படுகின்ற, அல் புகாரி என்பவரால் தொகுக்கப்பட்ட சஹீ அல் புகாரி என்ற ஹதீஸ்களின் படி, குர்-ஆன் என்பது வெள்ளை கற்களிலும், மனிதர்களின் மார்புகளிலும் எழுதப்பட்டதாக வாசிக்கிறோம். மனிதர்களின் மார்புகளில் எழுதப்பட்டதாக சொல்லப்படுவது என்பது, மனிதர்களின் மூளையிலே(மனதிலே) பதியப்படுகின்றது என்று அர்த்தம். ஆக, வெள்ளைக் கற்களில் மேலும் மனிதர்களின் மார்புகளில் எழுதப்படும் வசனங்கள் யூசுஃப் அலி அவர்கள் சொல்வது போல "பையிலேபோட்டு சேமிக்க முடியாது".

குர்-ஆன் ஆரம்பத்தில் எழுதப்பட்ட இலைகள், மரப்பட்டைகள், எலும்புகள் போன்றவற்றை எந்த ஒரு அருங்காட்சியகத்திலும் இதுவரை உலகிலே நாம் காணமுடியாது. அதாவது ஆரம்பத்தில் குர்-ஆன் வசனங்கள் எழுதப்பட்ட இந்த வகையாக இலைகள், எலும்புகள் மரப்பட்டைகளை சேகரித்து, அவைகளை ஒரு அருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டதாக நாம் உலகத்தில் காணமுடியாது. இப்படி ஏதாவது அருங்காட்சியகத்தில் அவைகள் இருந்தால் தானே, இன்று நம்மிடம் உள்ள குர்-ஆன் வசனங்களை மூலங்களோடு சரி பார்க்கமுடியும்? 

இன்று நம்மிடம் இருக்கும் குர்-ஆன், முஹம்மது மரித்து 20 ஆண்டுகளுக்கு பிறகு உஸ்மான் அவர்கள் தயாரித்த குர்-ஆன் பிரதியோடு ஒத்து இருந்தாலும், உஸ்மான் அவர்கள் தயாரித்த குர்-ஆன் பிரதியானது, முஹம்மது சொன்ன வசனங்களோடு ஒத்து இருக்கிறது என்பதை நாம் எப்படி அறியமுடியும்? அது சாத்தியமில்லை, இதற்கு எந்த ஒரு ஆதாரமும் (இலைகள், மரப்பட்டைகள், எலும்புகள் போன்றவைகள்) நம்மிடம் இல்லை. அதாவது குர்-ஆனின் மூல பிரதிகள் நம்மிடம் இல்லை அவைகள் தொலைந்துவிட்டது. எப்படி கிறிஸ்தவர்களின் மூலப் பிரதி (முதல் கையெழுத்துப் பிரதி) இல்லையோ, அதே போல, குர்-ஆனின் மூலப் பிரதிகள் (முதல் கையெழுத்துப் பிரதிகள்  - இலைகள், மரப்பட்டைகள், எலும்புகள்) இல்லை, அவைகள் தொலைந்துவிட்டன.

குர்-ஆனின் முதல் மூல கையெழுத்துப் பிரதிகள் நம்மிடம் இல்லாமல் இருந்தாலும், "குர்-ஆன் நம்பகமானது தான்" என்று ஒரு முஸ்லிமால் ஏற்றுக்கொள்ள முடியுமென்றால்,  இதே போல கிறிஸ்தவர்கள் தங்கள் "பைபிள் நம்பகமானது என்று" ஏற்றுக்கொள்ள அவர்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் இருப்பதில்லை. இதனை அங்கீகரிக்க எந்த முஸ்லிமுக்கும் பிரச்சனை இருக்காது.

பைபிளைப் பற்றி முஸ்லிம்கள் கவலைப்படவே தேவையில்லை. ஏனென்றால், முஸ்லிம்கள் வேதம் என்று நம்பும் தங்கள் குர்-ஆனே, பைபிளைக் குறித்து சாட்சி சொல்கிறது, அதாவது, முந்தைய வேதங்களை மெய்ப்பிக்க நான் வந்தேன் என்று குர்-ஆன் சாட்சி சொல்லுகிறது.  குர்-ஆனின் இந்த மெய்ப்பிக்கின்ற வசனங்கள் உண்மை என்று ஒரு முஸ்லிம் நம்புவாரானால், அவருக்கு பைபிளின் மூல பிரதிகள் எங்கே என்று கேட்டு, கவலைப்படவேண்டிய அவசியமே அவனுக்கு இல்லை.  பைபிளில் மிகப்பெரிய தவறுகள் இருந்திருக்குமானால்,  "பைபிளை மெய்ப்பிக்க வந்துள்ளேன்" என்று குர்-ஆன் சொல்லியிருக்காது.  அதற்கு பதிலாக குர்-ஆன் தெளிவாக "நான் முந்தைய வேதங்களை மாற்ற, தள்ளுபடி செய்ய, சரிப்படுத்த, நீக்க வந்துள்ளேன்" என்று கூறியிருக்கும்.  ஆனால், இப்படிப்பட்ட வசனம் குர்-ஆனில் இல்லை. ஆகவே, இஸ்லாமியர்கள் தங்கள் சொந்த வேதமாகிய குர்-ஆன் சொல்லும் சாட்சியின் அடிப்படையில் தாராளமாக பைபிளை நம்பலாம், இதற்கு எந்த ஒரு தயக்கமும் அவர்களுக்கு தேவையில்லை.

ஆங்கில மூலம்: The Claim that the Bible is no longer Reliable because the Original Manuscripts are Lost

முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் தொடர் கட்டுரைகள்


© Answering Islam, 1999 - 2012. All rights reserved.
--
12/23/2012 07:57:00 pm அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது


முஸ்லிம்கள் பைபிளை படிக்கத் தேவையில்லை” என்ற இஸ்லாமியர்களின் வாதம்

 

"முஸ்லிம்கள் பைபிளை படிக்கத் தேவையில்லை" என்ற இஸ்லாமியர்களின் வாதம்

முஸ்லிகள் பைபிளை படிக்கத்தேவையில்லை ஏனென்றால் குர்-ஆன் தான் கடைசியாக வெளிப்பட்ட வேதமாக உள்ளது மேலும் குர்-ஆன் அனைத்து முந்தைய வேதங்களை தள்ளுபடி செய்துவிட்டது என்று இஸ்லாமியர்கள் வலியுருத்துகிறார்கள். ஆனால், முந்தைய எல்லா பரிசுத்த வேதங்களை முஸ்லிம்கள் விசுவாசிக்கவேண்டும் என்று குர்-ஆன் முஸ்லிம்களுக்கு கட்டளையிடுகிறது. அதாவது குர்-ஆனை மட்டுமல்ல, அதற்கு முன்பாக வாழ்ந்த தீர்க்கதரிசிகளுக்கு வெளியாக்கப்பட்ட வேதங்களை முஸ்லிம்கள் நம்பவேண்டும். கீழ்கண்ட வசனங்கள் இதனை தெளிவாக்குகிறது:

(முஃமின்களே!) "நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும்; இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம், அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்" என்று கூறுவீர்களாக.  (ஸுரதுல் பகரா (2):136)

(இறை) தூதர். தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள். . . . .  (ஸுரதுல் பகரா (2):285)

முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதர் மீதும், அவன் தூதர் மீது அவன் இறக்கிய (இவ்) வேதத்தின் மீதும் இதற்கு முன்னர் இறக்கிய வேதங்களின் மீதும் ஈமான் கொள்ளுங்கள்;. எவர் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும் அவனுடைய தூதர்களையும்; இறுதி நாளையும் (நம்பாமல்) நிராகரிக்கிறாரோ, அவர் வழிகேட்டில் வெது தூரம் சென்றுவிட்டார்.  (அந்நிஸா (4):136)

முக்கியமாக "அவனுடைய வேதங்கள்" என்ற வார்த்தைகளை கவனிக்கவும். இது வெறும் குர்-ஆனை குறிப்பதில்லை, இது  முந்தைய வேதங்கள் அனைத்தையும் குறிக்கிறது.  மேலும் மேற்கண்ட வசனங்களில் முதல் வசனத்தில் "அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்" என்ற சொற்றொடர்களை கவனிக்கவும். முஸ்லிம்கள் ஒரு வேதம் இன்னொரு வேதத்தை விட உயர்ந்தது என்று கருதக்கூடாது என்பதை இவ்வசனங்களின் மூலம் தெளிவாக விளங்குகிறது. இறைவனுடைய வேதமானவது எல்லா காலத்திற்கும், எல்லா மனிதர்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்கும்.  முஸ்லிம்களுக்கு நாம் தெளிவாக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், "பைபிள்" என்பது ஒரு வேத புத்தகம் அல்ல, அதற்கு பதிலாக அனேக தீர்க்கதரிசிகள் மூலமாக கொடுக்கப்பட்ட வேத புத்தகங்களின் தொகுப்பாகும். அதாவது மோசேக்கு இறக்கப்பட்ட சட்டம் (அல் தௌராத்), தாவீதுக்கு கொடுக்கப்பட்ட வேதம் (அல் ஜபூர்), இயேசுவின் போதனைகள் அடங்கிய வேதம் (இன்ஜில்), மேலும் இதர தீர்க்கதரிசிகளின் வேதம் (சுஹுப் அன் நபியூன்) போன்றவைகள் பைபிளில் அடங்கும். ஒருவர் ஒரு வேதத்தை நம்பவேண்டும் என்றால், அதன் அர்த்தமென்ன? அவர்கள் அதனை படிக்க மட்டுமல்ல, அதனை தொடர்ந்து படித்து, ஆய்வு செய்து சொல்லப்பட்ட வசனங்களின் மீது நம்பிக்கை கொள்வதாகும்.  ஆக, குர்-ஆன் சொல்வதை ஒரு முறை படியுங்கள்:

யாருக்கு நாம் வேதத்தைக் கொடுத்தோமோ அவர்கள் அதை எவ்வாறு ஓதி(ஒழுகி)ட வேண்டுமோ, அவ்வாறு ஓதுகிறார்கள்;. அவர்கள் தாம் அதன் மேல் நம்பிக்கையுள்ளவர்கள்;. யார் அதை நிராகரிக்கின்றார்களோ அவர்கள் பெரும் நஷ்டவாளிகளே!  (ஸூரதுல் பகரா (2):121)

இஸ்லாமிலே, பரிசுத்த வேதங்கள் பற்றி சொல்லப்பட்ட இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், அவைகள் மனித இனத்திற்கு உதவி செய்யும்படி இறக்கப்பட்ட "அடையாளங்கள்" ஆகும். பரிசுத்த வேதங்களில் உள்ள ஒரு வசனத்தை எடுத்துக்கொண்டாலும், அது கூட "ஆயத்" என்று சொல்லப்படுகின்ற "அடையாளங்களாக" இருக்கிறது. மேலும் இந்த "ஆயத்துக்களை" முக்கியமில்லாத ஒன்றாக நாம் கருதக்கூடாது, அவைகளில் நம்பிக்கை கொள்ளவேண்டும். யார் யாரெல்லாம் இறைவனின் அனைத்து பரிசுத்த வேதங்களில் உள்ள "அடையாளங்களை" அதாவது "ஆயத்துக்களை" நிராகரிக்கின்றார்களோ, அவர்களுக்கு இறைவன் கொடுத்த கடினமான எச்சரிப்பின் வசனங்களை பாருங்கள். 

யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்;. . . . .  (அந்நிஸா (4) :56)

எவர் நிராகரித்து, நம் திருவசனங்களையும் மறுக்கிறார்களோ, அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்.  (ஸூரதுல் மாயிதா (5):10)


© Answering Islam, 1999 - 2012. All rights reserved.
--
12/23/2012 07:55:00 pm அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது


இஸ்மாயில் தான் பலியிட கொண்டுபோகப்பட்டார் - என்ற இஸ்லாமியர்களின் வாதம்

 

இஸ்மாயில் தான் பலியிட கொண்டுபோகப்பட்டார் என்ற இஸ்லாமியர்களின் வாதம்

முஸ்லிம்களில் பலரின் குற்றச்சாட்டு என்னவென்றால், இஸ்லாமுக்கு கலங்கம் விளைவிக்கவேண்டும் என்பதற்காக பைபிளில் மாற்றம் செய்யப்பட்டது,  ஆபிரகாமின் கதையில் முக்கியமாக தன்னுடைய மகனை பலியிட இறைவன் சொன்ன விஷயத்தில் மாற்றம் செய்யப்பட்டது என்று குற்றம் சாட்டுகிறார்கள். பலியிட தேவன் சொன்ன மகன் இஸ்மவேல் ஆவார் என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள். ஆனால், பைபிள் அந்த மகன் ஈசாக்கு என்று தெளிவாக கூறுகிறது (ஆதியாகமம் 22:9, எபிரேயர் 11:17 மற்றும் யாக்கோபு 2:21 வசனங்களை படிக்கவும்.)

முழு குர்-ஆனில் ஒரே ஒரு இடத்தில் இந்த விவரம் பற்றி கூறப்பட்டுள்ளது, அதுவும் ஆபிரகாமின் வேண்டுதலாக அது ஆரம்பிக்கிறது. அதாவது தனக்கு ஒரு மகன் கொடுக்கும்படி இறைவனிடம் அவர் வேண்டுகிறார். அந்த குர்-ஆன் வசனங்களை இங்கு படியுங்கள்.

மேலும், அவர் கூறினார்; "நிச்சயமாக நான் என்னுடைய இறைவனிடம் செல்பவன்; திட்டமாக அவன் எனக்கு நேர் வழியைக் காண்பிப்பான்." "என்னுடைய இறைவா! நீ எனக்கு ஸாலிஹான ஒரு நன்மகனைத் தந்தருள்வாயாக" (என்று பிரார்த்தித்தார்). எனவே, நாம் அவருக்கு பொறுமைசாலியான ஒரு மகனைக் கொண்டு நன்மாராயங் கூறினோம். பின் (அம்மகன்) அவருடன் நடமாடக்கூடிய (வயதை அடைந்த) போது அவர் கூறினார்; "என்னருமை மகனே! நான் உன்னை அறுத்து பலியிடுவதாக நிச்சயமாகக் கனவு கண்டேன். இதைப்பற்றி உம் கருத்து என்ன என்பதைச் சிந்திப்பீராக!" (மகன்) கூறினான்; "என்னருமைத் தந்தையே! நீங்கள் ஏவப்பட்டபடியே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் - என்னை நீங்கள் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவனாகவே காண்பீர்கள்." ஆகவே, அவ்விருவரும் (இறைவன் கட்டளைக்கு) முற்றிலும் வழிப்பட்டு, (இப்றாஹீம்) மகனைப் பலியிட முகம் குப்புறக்கிடத்திய போது நாம் அவரை "யா இப்றாஹீம்!" என்றழைத்தோம். "திடமாக நீர் (கண்ட) கனவை மெய்ப்படுத்தினீர். நிச்சயமாக நன்மை செய்வோருக்கு நாம் இவ்வாறே கூலி கொடுத்திருக்கிறோம். "நிச்சயமாக இது தெளிவான ஒரு பெருஞ் சோதனையாகும்." ஆயினும், நாம் ஒரு மகத்தான் பலியைக் கொண்டு அவருக்குப்ப பகரமாக்கினோம்.  (அஸ்ஸாஃபாத் (37) :99 - 107)

மேற்கண்ட வசனங்களை நன்றாக கவனியுங்கள், அதாவது பலியிடச்சென்ற மகன் பற்றி குர்-ஆனில் வரும் ஒரே ஒரு இடம் இது தான். மேலும், அந்த ஒரு இடத்திலும் எந்த மகன், அவன் பெயர் என்ன என்ற விவரங்கள் குர்-ஆனில் கொடுக்கப்படவில்லை. ஆனால், ஒரு விஷயம் குர்-ஆனில் கூறப்பட்டுள்ளது, அது என்னவென்றால், இந்த மகன் "ஒரு நற்செய்தியாக" தீர்க்கதரிசனமாக (முன்னறிவிக்கப்பட்டவர்) உரைக்கப்பட்டவர் ஆவார். ஒருவர் முழு குர்-ஆனை தேடிப்பார்த்தாலும், இஸ்மவேலின் பிறப்பு பற்றி எந்த ஒரு இடத்திலும் சொல்லப்படவில்லை என்பதை கவனிக்கமுடியும். உண்மையைச் சொல்லவேண்டுமென்றால், இஸ்மவேல் பற்றி மிகக்குறைவாக குர்-ஆனில் கூறப்பட்டுள்ளது. மேலும் இஸ்மவேலின் தாய் பற்றியோ அல்லது இஸ்மவேலின் பிள்ளைகள் பற்றியோ எதுவும் குர்-ஆனில் கூறப்படவில்லை. முக்கியமாக, இஸ்மவேலின் தாயின் பெயர் ஆகார் என்றும் மேலும் அவருக்கு பன்னிரண்டு மகன்கள் இருந்தார்கள் என்றும் நாம் பைபிளிலிருந்து அறிகிறோம் (ஆதியாகமம் 25:12-17).  நாம் மேலே குறிப்பிட்ட "நற்செய்தி" பற்றிய குர்-ஆன் வசனம் பற்றி நம் கவனத்தை திருப்புவோம்.  ஈசாக்கு மற்றும் அவரது தாயார் சாராள் பற்றி குர்-ஆனில் கீழ்கண்ட விதமாக நாம் படிக்கிறோம்.

இப்றாஹீமின் கண்ணியம் மிக்க விருந்தினர்களின் செய்தி உமக்கு வந்ததா?  அவர்கள், அவரிடம் பிரவேசித்த போது, (அவரை நோக்கி; "உங்களுக்கு) "ஸலாம்' என்று கூறினார்கள்; (அதற்கவர்), "(உங்களுக்கு) "ஸலாம்" என்று கூறினார். . . . , பயப்படாதீர்!" எனக் கூறினார்; அன்றியும், அவருக்கு அறிவு மிக்க புதல்வர் (பிறப்பார்) என்று நன்மாராயங் கூறினர்.  பின்னர் இதைக்கேட்ட அவருடைய மனைவியார் சப்தமிட்டவராக (அவர்கள்) எதிரில் வந்து, தம் முகத்தில் அடித்துக் கொண்டு "நான் மலட்டுக் கிழவியாயிற்றே!" என்று கூறினார்.  (அறிவு மிக்க புதல்வர் பிறப்பார் என்று;) "இவ்வாறே உம் இறைவன் கூறினான், நிச்சயமாக அவன் ஞானம் மிக்கவன்; (யாவற்றையும்,) நன்கறிந்தவன்" என்று கூறினார்கள்.  (அத்தாரியாத் (51) :24-25, 28-30)

மேற்கண்ட வசனங்களுக்கு மேலதிகமாக, ஆபிரகாம் மற்றும் ஈசாக்கு பற்றிய ஒரு சுருக்கத்தை நாம் கீழ்கண்ட குர்-ஆன் வசனங்களில் காண்கிறோம்: 

"ஸலாமுன் அலா இப்ராஹீம்" (இப்ராஹீம் மீது ஸலாம் உண்டாவதாக)!  இவ்வாறே, நன்மை செய்வோருக்கு, நாம் கூலி கொடுக்கிறோம். நிச்சயமாக அவர் முஃமின்களான நம் (நல்)லடியார்களில் நின்றுமுள்ளவர்.  ஸாலிஹானவர்களிலுள்ளவரான நபி இஸ்ஹாக்கை அவருக்கு இன்னும் (மகனாகத் தருவதாக) நாம் நன்மாராயம் கூறினோம்.  இன்னும் நாம் அவர் மீதும் இஸ்ஹாக் மீதும் பாக்கியங்கள் பொழிந்தோம்; . . . .  (அஸ்ஸாஃபாத் 37:109 - 113)

மேற்கண்ட குர்-ஆன் வசனங்களில் வரும் சொற்றொடர்களாகிய "அவருக்கு அறிவு மிக்க புதல்வர் (பிறப்பார்) என்று நன்மாராயங் கூறினர்" என்பதையும் "ஸாலிஹானவர்களிலுள்ளவரான நபி இஸ்ஹாக்கை அவருக்கு இன்னும் (மகனாகத் தருவதாக) நாம் நன்மாராயம் கூறினோம்." என்பதையும் கூர்ந்து கவனியுங்கள். குர்-ஆனிலே இப்படிப்பட்ட "நன்மாராயங் கூறுவதாக" இஸ்மவேலின் பிறப்பு பற்றி கூறப்படவில்லை.  இப்போது உங்களுக்கு தெளிவாக புரிந்து இருக்கும் அதாவது குர்-ஆனில் "நன்மாராங் கூறி" பிறந்தவர் இஸ்மவேல் அல்ல அவர் ஈசாக்கு ஆவார் மேலும் ஈசாக்கே பலியிட கொண்டுப் போகப்பட்டவராவார் (குர்-ஆன் 37:99-107). மேலும் பைபிள் கூறுவது போல ஈசாக்கு தான் பலியிட கொண்டுபோகப்பட்டார்.

"முஸ்லிம்களில் பலர்" இஸ்மவேல் தான் பலியிட கொண்டுபோகப்பட்டார் என்று நம்புகிறார்கள் என்று இந்த கட்டுரையின் ஆரம்பத்தில் நான் குறிப்பிட்டு இருந்தேன். ஆம், "எல்லா முஸ்லிம்களும் இப்படி நம்புவதில்லை". முஸ்லிம்களில் அனேகர், குர்-ஆனை முழுவதுமாக ஆய்வு செய்து, "ஆம் குர்-ஆன் குறிப்பிடுவதும் ஈசாக்கைத் தான்" என்று முடிவிற்கு வந்துள்ளார்கள். யூசுஃப் அலி என்ற இஸ்லாமிய அறிஞர், தம்முடைய குர்-ஆன் மொழியாக்கத்தின் விளக்கத்தில் (பக்கம் 1204, குறிப்பு 4096), கீழ்கண்டவாறு ஒப்புக்கொள்கிறார்:

"The boy thus born was according to Muslim tradition (which however is not unanimous on this point) the first-born of Abraham viz. Ismail." 

முஸ்லிம் பாரம்பரியத்தின் படி (இதில் எல்லாரும் ஒருமித்த கருத்தை கொண்டு இருக்கவில்லை) ஆபிரகாமின் முத்த மகனாகிய இஸ்மவேல் தான் அந்த மகன்"

"முஸ்லிம் பாரம்பரியத்தின் படி" என்ற சொற்றொடர்களையும் "இதில் எல்லாரும் ஒருமித்த கருத்தை கொண்டு இருக்கவில்லை" என்ற சொற்களையும் கவனியுங்கள்.  இதன் மூலம் தெள்ளத்தெளிவாக அறிவது என்னவென்றால், குர்-ஆனின் படி "இஸ்மவேல்" பலியிட கொண்டுபோகப்படவில்லை என்பதாகும். மேலும் குர்-ஆன் சொல்வதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும், அதாவது முந்தைய வேதங்களை மெய்ப்பிக்கும்படி குர்-ஆன் வந்ததே தவிர அவைகளுக்கு எதிராக முரண்பட அல்ல என்று குர்-ஆனே சொல்வதை கவனிக்கவும். இதன் படி தெரிவது என்னவென்றால் பைபிளில் சொல்லப்பட்டவைகளை ஏகோபித்து குர்-ஆன் இந்த விஷயத்தில் முன்மொழிகிறது, ஆனால், இஸ்லாமிய பாரம்பரியங்கள் முரண்படுகின்றன.

ஆங்கில மூலம்: The Claim that Ishmael was the Sacrifice

முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் தொடர் கட்டுரைகள்


© Answering Islam, 1999 - 2012. All rights reserved.
--
12/23/2012 07:50:00 pm அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது


அறிமுகம் - முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல்

 


அறிமுகம் - முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல்

கடந்த சில ஆண்டுகளில் விளைந்த மத எழுப்புதல்களில் மிகப்பெரிய மதஎழுப்புதல் கிறிஸ்தவத்தை பின்பற்றுபவர்களிடம் அல்லாமல், இஸ்லாமை பின்பற்றுபவர்களிடம் உண்டாகியிருக்கிறது என்றுச் சொல்வார்கள். கிறிஸ்த‌வத்திற்கு வெளியே, மிஷனரி தரிசனத்தோடு செயல்பட்டு பரப்பப்படுகின்ற ஒரே மார்க்கம் இஸ்லாம் ஆகும். இஸ்லாமிய பிரச்சாரக்காரர்களின் முக்கிய நோக்கம் "முழு உலகத்தையும் இஸ்லாமுக்கு மாற்றுவது" என்பதாகும், இதில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை. இஸ்லாமியரல்லாதவர்களை இஸ்லாமுக்கு அழைக்கவேண்டும் என்பது ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும். அவர்களை முஹம்மதுவின் போதனைகளின்படி நடக்கச் செய்வதும், மத சடங்குகளை செய்யச் செய்வதும் ஒவ்வொரு முஸ்லிமின் கடமையாகும். இஸ்லாமியரல்லாதவர்களை அழைக்கும் இந்த அழைப்பிற்கு "தாவா (dawah)" என்று பெயராகும்.

துரதிஷ்டவசமாக, இஸ்லாமியர்களில் சிலர், எல்லாருமல்ல இந்த மத எழுப்புதலினால் உந்தப்பட்டு, கிறிஸ்தவத்தை கடுமையாக தாக்க ஆரம்பித்துள்ளனர். அதாவது தங்களின் இஸ்லாம் கிறிஸ்தவத்தை விட மேன்மையானது என்று எண்ணிக்கொண்டு தாக்க ஆரம்பித்துள்ளனர். இதன் மூலம் தங்கள் இஸ்லாமின் மேன்மை நிருபிக்கப்படும் என்று நினைக்கிறார்கள். ஆனால், இஸ்லாமியர்களின் இந்த அழைப்பு "மரியாதைக்குரிய அழைப்பாக இருப்பதில்லை". இன்னொரு மனிதனின் மார்க்கத்திற்கு எதிராகவும், பரிசுத்த போதனைகளுக்கு எதிராகவும் ஒரு முரட்டுத்தனமாக வழிமுறையை இஸ்லாமியர்கள் பின்பற்றி தாக்குகிறார்கள், ஆனால், இது சமுதாயத்தில் வெறுப்புணர்ச்சியையும், அமைதியின்மையையுமே உண்டாக்கும். இந்த நேரத்தில் இன்னொரு விஷயத்தையும் நாம் ஒப்புக்கொள்ளவேண்டும், அதாவது கிறிஸ்தவர்களில் சிலர் இவர்களைப் போலவே நடந்துக்கொள்கிறார்கள் என்பதாகும். கிறிஸ்துவைப்போல சிந்தை இல்லாத கிறிஸ்தவர்கள் இஸ்லாமிய நபியை கேலி செய்து, முஸ்லிம்களையும் அவர்களின் பாரம்பரியங்களையும் தாக்குகிறார்கள். இஸ்லாமியர்களுக்கு இது ஒன்றும் புதிதான ஒன்றல்ல. முஹம்மதுவின் காலத்திலும், கிறிஸ்தவர்களில் இப்படிப்பட்டவர்கள் இஸ்லாமிய நம்பிக்கையை கேள்வி கேட்டு கேலி செய்துள்ளனர். இப்படிப்பட்டவர்கள் குறித்து குர்‍ஆன் கீழ்கண்ட வசனத்தின் மூலமாக எச்சரிக்கை விடுகின்றது:

முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்.......முஃமின்களே! உங்களுக்குமுன் வேதம் வழங்கப்பட்டவர்களிலிருந்தும், காஃபிர்களிலிருந்தும், யார் உங்கள் மார்க்கத்தைப் பரிகாசமாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கிறார்களோ அவர்களை நீங்கள் பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். . . . .. ஸூரத்துல் மாயிதா (5):51,57

முஹம்மதுவின் ஆர்வத்தையும், உணர்ச்சிகளையும் ஏற்றுக்கொள்ளாமல் அவரை எதிர்த்த யூத மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிரான எச்சரிக்கை வசனத்தை குர்‍ஆன் பதிவுசெய்துள்ளது. அதே நேரத்தில் அதே குர்‍ஆன் கிறிஸ்தவர்கள் பற்றி சில வெளிப்படையான நல்ல விஷயங்களையும் சொல்லியுள்ளது என்பதை நாம் இங்கு கவனிக்கவேண்டும். இந்த கிறிஸ்தவர்கள் பெயர்க் கிறிஸ்தவர்கள் அல்ல, இவர்கள் உண்மையான கிறிஸ்தவர்களாவார்கள், இவர்கள் கிறிஸ்துவை உண்மையாக பின்பற்றுபவர்கள். கீழ்கண்ட குர்‍ஆன் வசனங்களை கவனியுங்கள்.

.....நிச்சயமாக யூதர்களையும், இணைவைப்பவர்களையும் முஃமின்களுக்குக் கடும் பகைவர்களாகவே (நபியே!) நீர் காண்பீர்;"நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோம் என்று சொல்பவர்களை, முஃமின்களுக்கு நேசத்தால் மிகவும் நெருங்கியவர்களாக (நபியே!) நீர் காண்பீர்; ஏனென்றால் அவர்களில் கற்றறிந்த குருமார்களும், துறவிகளும் இருக்கின்றனர் மேலும் அவர்கள் இறுமாப்புக் கொள்வதுமில்லை. ஸூரத்துல் மாயிதா (5):82

அவர்களில் குஃப்ரு இருப்பதை (அதாவது அவர்களில் ஒரு சாரார் தம்மை நிராகரிப்பதை) ஈஸா உணர்ந்த போது: "அல்லாஹ்வின் பாதையில் எனக்கு உதவி செய்பவர்கள் யார்?" என்று அவர் கேட்டார்; (அதற்கு அவருடைய சிஷ்யர்களான) ஹவாரிய்யூன்: "நாங்கள் அல்லாஹ்வுக்காக (உங்கள்) உதவியாளர்களாக இருக்கிறோம், நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டுள்ளோம்; திடமாக நாங்கள் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக இருக்கின்றோம், என்று நீங்கள் சாட்சி சொல்லுங்கள்" எனக் கூறினர்."எங்கள் இறைவனே! நீ அருளிய (வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள் பின்பற்றுகிறோம்; எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன் சேர்த்து எழுதுவாயாக!" (என்று சிஷ்யர்களான ஹவாரிய்யூன் பிரார்த்தித்தனர்.). ஸூரத்துல் ஆலு இம்ரான் (3):52,53

ஈமான் கொண்டவர்களே! மர்யமின் குமாரர் ஈஸா (தம்) சீடர்களை நோக்கி, "அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்வோர் யார்?" எனக் கேட்க, சீடர்கள், "நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக இருக்கின்றோம்" என்று கூறியதுபோல், நீங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக ஆகிவிடுங்கள் - எனினும், இஸ்ராயீல் மக்களில் ஒரு கூட்டம் ஈமான் கொண்டது; பிறிதொரு கூட்டமோ நிராகரித்தது; ஆகவே ஈமான் கொண்டவர்களுக்கு, அவர்களுடைய பகைவர்களுக்கு எதிராக உதவி அளித்தோம் - அதனால் அவர்கள் வெற்றியாளராய் ஆகிவிட்டார்கள்.ஸூரத்துல் அஸ்ஸஃப்(61):14

"ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்; இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்; நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்; மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்; பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது; (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்" என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)! ஸூரத்துல் ஆலு இம்ரான் (3):55

பின்னர் அவர்களுடைய (அடிச்) சுவடுகளின் மீது (மற்றைய) நம் தூதர்களைத் தொடரச் செய்தோம்; மர்யமின் குமாரர் ஈஸாவை (அவர்களை)த் தொடரச் செய்து, அவருக்கு இன்ஜீலையும் கொடுத்தோம் - அன்றியும், அவரைப் பின்பற்றியவர்களின் இதயங்களில் இரக்கத்தையும் கிருபையையும் உண்டாக்கினோம். ஸூரத்துல் ஹதீத்(57):27

அனேக‌ கிறிஸ்த‌வ‌ர்க‌ள் தெரிந்தோ தெரியாம‌லோ இஸ்லாமியர்களின் மார்க்க‌த்தையும், அவ‌ர்க‌ள‌து ந‌பியையும் தாக்கி பேசியுள்ள‌ன‌ர், என‌வே அவ‌ர்க‌ளுக்கு ப‌திலாக‌ நீங்க‌ள் (கிறிஸ்தவர்கள்), இஸ்லாமிய‌ ம‌க்க‌ளிட‌ம் ம‌ன்னிப்பு கேட்க‌ த‌ய‌ங்காதீர்க‌ள். குர்‍ஆனின் போத‌னைகள் அனைத்தையும் நீங்கள் அங்கீக‌ரிக்க‌முடியாது, இது உண்மையாக‌ இருந்தாலும் நாம் குர்‍ஆன் சொல்வது போல முஸ்லிம்க‌ளுக்கு நெருக்க‌மான‌வ‌ர்க‌ள் என்ப‌தை அவ‌ர்க‌ள் அறிய‌ட்டும். இயேசுக் கிறிஸ்துவை பின்ப‌ற்றும் "உண்மையான‌ சீட‌ர்க‌ள் நாம்" என்ப‌தை அவ‌ர்க‌ள் தெரிந்துக்கொள்ள‌ட்டும். உங்களுடைய வார்த்தைகளும், செயல்களும் இஸ்லாமியர்களுக்கு ஒரு நிரூபனமாக இருக்கட்டும், அதாவது ஆபிரகாம், ஈசாக்கு யாக்கோபு போல நாமும் ஒரே ஏக தேவனை வணங்குகிறோம் என்று அவர்கள் புரிந்துக்கொள்ளட்டும். மேலும் இறைவனின் விருப்பத்திற்கு முழுவதுமாக சமர்பணம் செய்தவர்கள் நாம் என்பதையும் அவர்கள் புரிந்துக்கொள்ளட்டும். அன்பாக இஸ்லாமியர்களுக்கு புரியவையுங்கள், அதாவது நீங்கள் கற்றுக்கொள்வதற்கு ஆர்வமாக இருப்பதாகவும், எந்த விருப்பு வெறுப்பு இல்லாமல் உரையாட தயாராக இருப்பதாகவும், இறைவனுக்கு உதவியாளராக இருக்கவும், எதிரியை வீழ்த்த ஆன்மீக வல்லமையை உடையவராக நீங்கள் இருப்பதகாவும் தெரிவியுங்கள். எல்லா மக்களுக்காகவும் வேண்டிக்கொள்வதாகவும், அவர்களுக்காக கடைசி வரை முழு இருதயத்தோடு உழைப்பதற்கு தயாராக இருப்பதாக கூறுங்கள். இப்படிப்பட்ட எண்ணங்களோடு நீங்கள் (கிறிஸ்தவர்கள்) வாழ்ந்தால், இஸ்லாமியர்களின் இருதய கதவுகள் நிச்சயமாக திறக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.

மேற்கண்ட விவரங்களை மனதில் பதிய வைத்தவர்களாக, இந்த புத்தகம் (கட்டுரைகள்) எழுதப்படுவதின் நோக்கம், இஸ்லாமியர்களை தாக்கவோ, அல்லது பதிலடி கொடுக்கவோ அல்ல என்பதை முக்கியமாக கவனிக்கவேண்டிய விஷயமாகும். இந்த தொடர் கட்டுரைகளின் நோக்கம், விவாதங்களில் ஈடுபடவோ அல்லது வாக்குவாதம் புரியவோ ஊக்குவிப்பதாக அல்லாமல், உண்மையை அறியமட்டுமே பதியப்படுகிறது என்பதை கவனிக்கவேண்டுகிறேன். இயேசுக் கிறிஸ்துவின் உண்மையான ஊழியக்காரர்களாக நீங்கள் வேத வசனங்களுக்கு கீழ்படிகின்றவர்களாக இருக்கவேண்டும்.

புத்தியீனமும் அயுக்தமுமான தர்க்கங்கள் சண்டைகளைப் பிறப்பிக்குமென்று அறிந்து, அவைகளுக்கு விலகியிரு.கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைபண்ணுகிறவனாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதகசமர்த்தனும், தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்கவேண்டும்.எதிர்பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படி தேவன் அவர்களுக்கு மனந்திரும்புதலை அருளத்தக்கதாகவும்....சாந்தமாய் அவர்களுக்கு உபதேசிக்கவேண்டும். 2 தீமோத்தேயு 2:23-26

ஒருவனையும் தூஷியாமலும், சண்டை பண்ணாமலும், பொறுமையுள்ளவர்களாய் எல்லா மனுஷருக்கும் சாந்தகுணத்தைக் காண்பிக்கவும் அவர்களுக்கு நினைப்பூட்டு. தீத்து 3:2

இந்த சிறிய புத்தகம், நான் இஸ்லாமியர்களோடு தனிப்பட்ட முறையில் உரையாடிய 15 ஆண்டுகால அனுபவத்தின் மூலமாக விளைந்ததாகும். மேலும் இதர ஆசிரியர்களின் கருத்துக்களையும் படித்து நான் இதில் சேர்த்துள்ளேன். தொடர்ந்து இஸ்லாமிய அறிஞர்களால் தாக்கப்படும் கிறிஸ்தவர்களுக்கு இந்த கட்டுரைகள் உதவியாக இருக்கும். அதாவது கிறிஸ்தவ சமுதாயத்தில் சந்தேகங்களை உருவாக்கும் இஸ்லாமிய தாவா அறிஞர்கள் மற்றும் இதர விவாதம் புரியும் இஸ்லாமியர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வண்ணமாக இருக்கும். எனினும் கிறிஸ்தவத்தை சரியாக இஸ்லாமியர்களுக்கு புரியவைக்கு ஒரு நல்ல வழிமுறை என்னவென்றால், நாம் முதலாவது கிறிஸ்தவம் சொல்வது போல வாழ்ந்து காட்டுவதாகும். முதலாவ‌து நாம் கிறிஸ்துவின் உண்மையான சீட‌ர்க‌ள் என்ப‌தை நினைவில் கொண்டு, இஸ்லாமிய‌ர்க‌ளை ச‌ந்திக்கும் ஒவ்வொரு முய‌ற்சியையும் எடுக்க‌வேண்டும். இஸ்லாமிய‌ர்க‌ளிட‌ம் ந‌ட்பாக‌ இருக்க‌வேண்டும் மேலும் ஒருவ‌ருக்கு ஒருவ‌ர் ம‌திக்க‌வேண்டும். வார்த்தைகளால் தாக்கி பேசும் வாக்குவாதங்கள், வெறும் தோல்வியை உண்டாக்கும் மேலும் நீண்ட கால மனக்கசப்பை உண்டாக்கிவிடும். ஒரு முஸ்லிம் நண்பனை உண்டாக்கி அவனுக்கு முன்னால் நாம் எந்த அளவிற்கு நேர்மையுள்ள வாழ்வை வாழ்கிறோம் என்பது தான் மிகவும் முக்கியமான விஷயம். மேலும், கிறிஸ்துவின் அன்பை நடைமுறையில் பிரதிபலிக்கச் செய்யவேண்டும், இப்படி செய்யும் போது கடினமான இருதயமும் உருகும் மேலும் சம்பூர்ண சத்தியம் அதில் தங்க அந்த இருதயத்தின் வாசல் திறக்கப்படும்.

இஸ்லாமியர்களுடன் பரஸ்பர மரியாதை மற்றும் நட்புறவுடன் நடந்துக்கொள்ளும் கிறிஸ்தவர்களுக்கு இந்த சிறிய புத்தகம் பேருதவியாக இருக்கும். அதாவது உண்மையை அறிந்துக்கொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தோடு, நம்மிடம் கேள்வி கேட்கும் இஸ்லாமியர்களுக்கு பதில் அளிக்க இது உதவியாக இருக்கும். அனேக இஸ்லாமியர்களுக்கு தாங்கள் முன்வைக்கும் இஸ்லாமிய வாதங்கள் மற்றும் உரிமைப் பாராட்டல்கள் எல்லாம் என்னவென்றே தெரியாது, ஆகையால், அவர்களுக்கு பதில் அளிக்க இந்த சிறிய தொகுப்பு உதவியாக இருக்கும். ஒரு இஸ்லாமிய நண்பரோடு விருப்பு வெறுப்பின்றி செய்யும் உரையாடல்கள் அவரின் மனதிலே பைபிளைப் பற்றிய உண்மைகளை அறியும் ஆர்வம் உண்டாகும். இதன் பயனாக மஸியாவாகிய இயேசுக் கிறிஸ்துவின் இரட்சிப்பு மீது தேடல் உண்டாகி, இரட்சிக்கப்பட அது உதவியாக இருக்கும்.

இயேசுவை பின்பற்றும் உண்மை விசுவாசிகள், எந்த காலத்திலும் ஆயுதங்களை ஏந்திய போரையோ, வார்த்தைகள் ஏந்திய போரையோ செய்ய கட்டளையிடப்படவில்லை. இதற்கு பதிலாக தங்களின் இந்த உலக நோக்கங்களை தியாகம் செய்துவிட்டு, நற்செய்தியை உலகமனைத்திற்கும் எடுத்துச் செல்லவேண்டும், அல்லது சொல்லவேண்டும். இறைவனின் ஊழியர்களாக, நம்முடைய ஒரே நோக்கம் இயேசுக் கிறிஸ்துவின் அன்பை உலகிற்கு காட்டுவதாகும், நற்செய்தியை போதிப்பதாகும், மேலும் இயேசுவின் பெயரின் மூலமாக கிட்டும் பாவமன்னிப்பை பெற மற்றவர்களை உற்சாகப்படுத்துவதாகும். கிறிஸ்தவர்கள் மற்றவர்கள் மீது நியாயத்தீர்ப்பை தீர்க்கக்கூடாது, பதிலாக இயேசுவின் தூதுவர்களாக நடந்துக்கொண்டு, ஒருங்கிணைப்பின் நற்செய்தியை கிறிஸ்துவின் மூலமாக பறைசாற்றவேண்டும். அதாவது மனிதன் இறைவனோடு ஒன்றுபடவேண்டும், அதே போல தேவனும் அவனோடு ஒன்றுபடுவார். இப்படிப்பட்ட‌ உன்னதமான செயல்களைச் செய்ய இறைவன் நல்லருள் புரிவாராக.

குறிப்பு: 
குர்-ஆன் வசனங்கள் அனைத்தும் முஹம்மது ஜான் டிரஸ்ட் வெளியிட்ட தமிழாக்கத்திலிருந்து எடுக்கப்பட்டது.


ஆங்கில மூலம்: Responding Muslims - Introduction 

முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் தொடர் கட்டுரைகள்  


© Answering Islam, 1999 - 2012. All rights reserved.
--
12/20/2012 05:59:00 pm அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது


வருகிறவர் ... கிறிஸ்துவின் தெய்வீகத்தன்மைக்கு மேலும் பல வெளிப்படையான சான்றுகள்

  வருகிறவர் ...

கிறிஸ்துவின் தெய்வீகத்தன்மைக்கு மேலும் பல வெளிப்படையான சான்றுகள்

சாம் ஷமான்

இயேசுவும் அவரது சீடர்களும் இயேசுவின் தெய்வீகத்தன்மைப் பற்றி முன்வைத்த அனேக வெளிப்படையான‌ ஆதாரங்களை இந்த கட்டுரையில் நாம் பார்க்கப்போகிறோம். இந்த கட்டுரையில், புதிய ஏற்பாட்டு இறை எழுத்துக்கள் எப்படி சர்வ வல்லவராம் இயேசுக் கிறிஸ்துவின் தெய்வீகத்தன்மையை பறைசாட்டுகின்றன என்பதை பல தலைப்புகளில் காணப்போகிறோம், அதாவது, மெய்யான இறைவன் செய்யக்கூடிய அனைத்து காரியங்களும் இயேசு செய்கிறார் என்பதை வெளிக்காட்டும் வசனங்களை காண்போம். அவரது தனித்தன்மையான பட்டப்பெயர்கள், அவரது செயல்பாடுகள் போன்றவற்றைக் காண்போம். இவைகளில் முக்கியமாக, உலகத்தை தீர்ப்பு தீர்க்க இறைவன் தம்முடைய சேனைகளோடு (தூதர்களோடு) வரும் நிகழ்ச்சி மற்றும் செயல்பற்றி காண்போம்.

யெகோவா தேவன் (Yahweh)

ஆரம்பமாக, எபிரேய பழைய ஏற்பாட்டு வேத வாக்கியங்களின் படி, யெகோவா தேவன் தம்மை "முதல் மற்றும் கடைசியானவர்" என்றுச் சொன்ன வாக்கியங்களை காண்போம்.

நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத்தவிரத் தேவன் இல்லையென்று, இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தரும், சேனைகளின் கர்த்தராகிய அவனுடைய மீட்பரும் சொல்லுகிறார். (ஏசாயா 44:6)

யாக்கோபே, நான் அழைத்திருக்கிற இஸ்ரவேலே, எனக்குச் செவிகொடு; நான் அவரே, நான் முந்தினவரும், நான் பிந்தினவருமாமே . (ஏசாயா 48:12)

இதே எபிரேய பைபிள் யெகோவா தேவன் மேகங்களில் பயணிக்கிறார் என்றும் சாட்சி சொல்கிறது. அதாவது மேகங்கள் தம்முடைய இரதமாக கொண்டு பயணிக்கிறார் என்று நாம் சொல்லலாம்.

பின்பு மோசேயும் ஆரோனும் நாதாபும் அபியூவும், இஸ்ரவேலருடைய மூப்பரில் எழுபதுபேரும் ஏறிப்போய், இஸ்ரவேலின் தேவனைத் தரிசித்தார்கள். அவருடைய பாதத்தின்கீழே நீலக்கல்லிழைத்த வேலைக்கு ஒப்பாகவும் தெளிந்த வானத்தின் பிரபைக்கு ஒப்பாகவும் இருந்தது . அவர் இஸ்ரவேல் புத்திரருடைய அதிபதிகள்மேல் தம்முடைய கையை நீட்டவில்லை; அவர்கள் தேவனைத் தரிசித்து, பின்பு புசித்துக் குடித்தார்கள். மோசே மலையின்மேல் ஏறினபோது, ஒரு மேகம் மலையை மூடிற்று. கர்த்தருடைய மகிமை சீனாய்மலையின்மேல் தங்கியிருந்தது; மேகம் ஆறுநாள் அதை மூடியிருந்தது; ஏழாம் நாளில் அவர் மேகத்தின் நடுவிலிருந்து மோசேயைக் கூப்பிட்டார். மலையின் கொடுமுடியிலே கர்த்தருடைய மகிமையின் காட்சி இஸ்ரவேல் புத்திரருடைய கண்களுக்குப் பட்சிக்கிற அக்கினியைப்போல் இருந்தது. மோசே மேகத்தின் நடுவிலே பிரவேசித்து, மலையின்மேல் ஏறி, இரவும் பகலும் நாற்பதுநாள் மலையில் இருந்தான். (யாத்திராகமம் 24:9-11, 15-18)

யெஷூரனுடைய தேவனைப்போல் ஒருவரும் இல்லை; அவர் உனக்குச் சகாயமாய் வானங்களின்மேலும் தமது மாட்சிமையோடு ஆகாய மண்டலங்களின் மேலும் ஏறிவருகிறார். (உபாகமம் 33:26)

ஒளியை வஸ்திரமாகத் தரித்து, வானங்களைத் திரையைப்போல் விரித்திருக்கிறீர். தமது மேல்வீடுகளைத் தண்ணீர்களால் மச்சுப்பாவி, மேகங்களைத் தமது இரதமாக்கி, காற்றினுடைய செட்டைகளின்மேல் செல்லுகிறார். (சங்கீதம் 104:2-3)

கர்த்தர் நீடிய சாந்தமும், மிகுந்த வல்லமையுமுள்ளவர்; அவர்களை ஆக்கினையில்லாமல் தப்புவிக்கமாட்டார்; கர்த்தருடைய வழி சுழல்காற்றிலும் பெருங்காற்றிலும் இருக்கிறது; மேகங்கள் அவருடைய பாதத்தூளாயிருக்கிறது. (நாகூம் 1:3)

மேலும், யெகோவா தேவன் பரலோகத்தின் சேனைகளோடு உலகத்தை தீர்ப்பு தீர்க்க வருகிறார் என்று பைபிள் சொல்கிறது.

சீயோன் என்னும் சுவிசேஷகியே, நீ உயர்ந்த பர்வதத்தில் ஏறு; எருசலேம் என்னும் சுவிசேஷகியே, நீ உரத்த சத்தமிட்டுக் கூப்பிடு, பயப்படாமல் சத்தமிட்டு, யூதா பட்டணங்களை நோக்கி: இதோ, உங்கள் தேவன் என்று கூறு. இதோ, கர்த்தராகிய ஆண்டவர் பராக்கிரமசாலியாக வருவார்; அவர் தமது புயத்தினால் அரசாளுவார்; இதோ, அவர் அளிக்கும் பலன் அவரோடேகூட வருகிறது; அவர் கொடுக்கும் பிரதிபலன் அவருடைய முகத்துக்கு முன்பாகச் செல்லுகிறது . மேய்ப்பனைப்போலத் தமது மந்தையை மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து, கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார். (ஏசாயா 40:9-11)

நீங்கள் சீயோன் குமாரத்தியை நோக்கி: இதோ, உன் இரட்சிப்பு வருகிறது; இதோ, அவர் அருளும் பலன் அவரோடும், அவர் செய்யும் பிரதிபலன் அவர் முன்பாகவும் வருகிறது என்று சொல்லுங்கள் என்று, கர்த்தர் பூமியின் கடையாந்தரம்வரைக்கும் கூறுகிறார் . (ஏசாயா 62:11)

(மேலும் பார்க்க சங்கிதம் 62:12; நீதிமொழிகள் 24:12; எரேமியா 11:20; 17:10; 29:23)

அடுத்த கீழ்கண்ட வசனம் என்ன சொல்கிறதென்றால், யெகோவா தேவன் தம்முடைய பாதத்தை ஒலிவ மலையில் வைத்தவுடன் அது இரண்டாக பிளந்துவிடுகிறது என்றுச் சொல்கிறது.

இதோ, கர்த்தருடைய நாள் வருகிறது, உன்னில் கொள்ளையானது உன் நடுவிலே பங்கிடப்படும். எருசலேமுக்கு விரோதமாக யுத்தம்பண்ணச் சகல ஜாதிகளையும் கூட்டுவேன்; நகரம் பிடிக்கப்படும்; வீடுகள் கொள்ளையாகும்; ஸ்திரீகள் அவமானப்படுவார்கள்; நகரத்தாரில் பாதி மனுஷர் சிறைப்பட்டுப்போவார்கள்; மீதியான ஜனமோ நகரத்தை விட்டு அறுப்புண்டுபோவதில்லை. கர்த்தர் புறப்பட்டு, யுத்தநாளிலே போராடுவதுபோல் அந்த ஜாதிகளோடே போராடுவார். அந்நாளிலே அவருடைய பாதங்கள் கிழக்கே எருசலேமுக்கு எதிரே இருக்கிற ஒலிவமலையின்மேல் நிற்கும்; அப்பொழுது மகா பெரிய பள்ளத்தாக்கு உண்டாகும்படி ஒலிவமலை தன் நடுமையத்திலே கிழக்கு மேற்காய் எதிராகப் பிளந்துபோம்; அதினாலே, ஒரு பாதி வடபக்கத்திலும் ஒரு பாதி தென்பக்கத்திலும் சாயும். அப்பொழுது என் மலைகளின் பள்ளத்தாக்கு வழியாய் ஓடிப்போவீர்கள்; மலைகளின் பள்ளத்தாக்கு ஆத்சால்மட்டும் போகும்; நீங்கள் யூதாவின் ராஜாவாகிய உசியாவின் நாட்களில் பூமியதிர்ச்சிக்குத் தப்பி ஓடிப்போனதுபோல் ஓடிப்போவீர்கள்; என் தேவனாகிய கர்த்தர் வருவார்; தேவரீரோடே எல்லாப் பரிசுத்தவான்களும் வருவார்கள் . (சகரியா 14:1-5)

அல்லாஹ் (Allah)

குர்‍ஆனின் படி, மேகங்களில் வருவதும் அதாவது பரலோக தூதர்களுடன் வந்து உலகத்தை நியாயம் தீர்ப்பது "இறைவன் செய்யக்கூடிய செயல்" ஆகும்.

அல்லாஹ்வும், (அவனுடைய) மலக்குகளும் மேக நிழல்களின் வழியாக (தண்டனையை)க் கொண்டு வந்து, (அவர்களுடைய) காரியத்தைத் தீர்த்து வைத்தல் வேண்டும் என்பதைத் தவிர (வேறு எதனையும் ஷைத்தானின் அடிச் சுவட்டைப் பின்பற்றுவோர்) எதிர் பார்க்கிறார்களா? (மறுமையில்) அவர்களுடைய சகல காரியங்களும் அல்லாஹ்விடமே (அவன் தீர்ப்புக்குக்)கொண்டு வரப்படும். (குர்-ஆன் 2:210)

அப்படியல்ல! பூமி தூள் தூளாகத் தகர்க்கப்படும் போது, உம்முடைய இறைவனும், வானவரும் அணியணியாக வரும்போது , அந்நாளில் நரகம் முன் கொண்டு வரப்படும் போது - அந்நாளில் மனிதன் உணர்வு பெறுவான்; அந்த (நாளில்) உணர்வு (பெறுவதினால்) அவனுக்கு என்ன பலன். (குர்-ஆன் 89:21-23)

மேலும், இஸ்லாமிய வேதத்தின் படி, "முதலாவதானவர், மற்றும் கடைசியானவர்" என்பது தெய்வீகத்தன்மை உடையதாகும்.

(யாவற்றுக்கும்) முந்தியவனும் அவனே, பிந்தியவனும் அவனே , பகிரங்கமானவனும் அவனே, அந்தரங்கமானவனும் அவனே, மேலும், அவன் அனைத்துப் பொருள்களையும் நன்கறிந்தவன்.(குர்-ஆன் 57:3)

இஸ்லாமின் படி, இப்படிப்பட்ட தனிப்பட்ட பெயர்கள், தகுதிகள் அனைத்தும் இறைவனுக்கு உரியதாகும். மேலும் ஒரு மனிதன் எவ்வளவு பெரிய மேன்மை உடையவனாக இருந்தாலும், இறைவனுக்கு கொடுக்கப்படும் பெயர்கள்/செயல்கள் தனக்கு உரியது என்றுச் சொல்ல அவனுக்கு அனுமதி இல்லை.

ஆண்டவராகிய இயேசுக் கிறிஸ்து (The Lord Jesus Christ)

ஆச்ச‌ரிய‌ப்ப‌டும் வித‌மாக‌, நாம் மேற்க‌ண்ட அனைத்து பெய‌ர்க‌ளையும், குண‌ங்க‌ளையும், செய‌ல்க‌ளையும் இயேசுக் கிறிஸ்துவிற்கு புதிய ஏற்பாடு சூட்டுகிற‌து.

உதாரணத்திற்கு சொல்லவேண்டுமென்றால், ஒரு மனுஷ குமாரனாக, உயிர்த்தெழுந்த இயேசுக் கிறிஸ்து பரலோகத்திலிருந்து மேகங்களில் வருவார், தம்முடைய தூதர்களோடு உலகை நியாயந்தீர்க்க வருவார். இதே இயேசுக் கிறிஸ்து தான், முத‌லாமான‌வ‌ர் ம‌ற்றும் க‌டைசியுமான‌வ‌ர், மேலும் இருத‌ய‌ங்க‌ளின் நினைவுக‌ளை அறிந்த‌வ‌ர், ஞானிகளை பரிட்சிக்கின்றவர், அதாவது ஒவ்வொரு மனிதன் தான் செய்த செயல்களுக்குத்தக்கதாக அவர்களுக்கு பலன் அளிப்பவர் இயேசு ஆவார்.

இப்போது நாம் புதிய ஏற்பாட்டிலிருந்து அனேக வசனங்களை மேற்கோள்களாக காட்டப்போகிறோம். அவைகளை விளக்கப்போவதில்லை, வசனங்களை அப்படியே காட்டப்போகிறோம். இயேசுக் கிறிஸ்துவும், அவரது சீடர்களும் "கிறிஸ்துவே யெகோவா தேவன்" என்பதை எப்படி அடையாளப்படுத்தினார்கள் என்பதை இதன் மூலம் வாசகர்கள் அறிந்துக்கொள்ளலாம். அதாவது, எபிரேய பழைய ஏற்பாடும், குர்‍ஆனும் சொல்லும் "இறைவனுக்கு மட்டும் இருக்கும் பெயர்கள், செயல்கள்" போன்றவை எப்படி இயேசுவிற்கு சூட்டப்பட்டது என்பதை இதன் மூலம் அறிந்துக்கொள்ளலாம்.

மாற்கு (Mark)

ஆதலால் விபசாரமும் பாவமுமுள்ள இந்தச் சந்ததியில் என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுவானோ, அவனைக் குறித்து மனுஷகுமாரனும் தமது பிதாவின் மகிமைபொருந்தினவராய்ப் பரிசுத்த தூதர்களோடுங்கூட வரும்போது வெட்கப்படுவார் என்றார். (மாற்கு 8:38)

அவரோ ஒரு உத்தரவும் சொல்லாமல் பேசாதிருந்தார். மறுபடியும் பிரதான ஆசாரியன் அவரை நோக்கி: நீ ஸ்தோத்திரிக்கப்பட்ட தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துதானா? என்று கேட்டான். அதற்கு இயேசு: நான் அவர்தான்; மனுஷகுமாரன் சர்வவல்லவரின் வலதுபாரிசத்தில் வீற்றிருப்பதையும், வானத்தின் மேகங்கள்மேல் வருவதையும் நீங்கள் காண்பீர்கள் என்றார். (மாற்கு 14:61-62)

மத்தேயு (Matthew)

அப்பொழுது இயேசு ஜனங்களை அனுப்பிவிட்டு வீட்டுக்குப் போனார். அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: நிலத்தின் களைகளைப்பற்றிய உவமையை எங்களுக்கு வெளிப்படுத்தவேண்டுமென்று கேட்டார்கள். அவர் பிரதியுத்தரமாக: நல்ல விதையை விதைக்கிறவன் மனுஷகுமாரன்; நிலம் உலகம்; நல்ல விதை ராஜ்யத்தின் புத்திரர்; களைகள் பொல்லாங்கனுடைய புத்திரர்; அவைகளை விதைக்கிற சத்துரு பிசாசு; அறுப்பு உலகத்தின் முடிவு; அறுக்கிறவர்கள் தேவதூதர்கள். ஆதலால், களைகளைச் சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல, இவ்வுலகத்தின் முடிவிலே நடக்கும். மனுஷகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற சகல இடறல்களையும் அக்கிரமஞ் செய்கிறவர்களையும் சேர்த்து, அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும். அப்பொழுது, நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன். (மத்தேயு 13:36-43)

மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமைபொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார்; அப்பொழுது, அவனவன் கிரியைக்குத்தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார். (மத்தேயு 16:27)

அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார். அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து, செம்மறியாடுகளைத் தமது வலதுபக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடதுபக்கத்திலும் நிறுத்துவார். அப்பொழுது, ராஜா தமது வலது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள். பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்; வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்கவந்தீர்கள் என்பார். அப்பொழுது, நீதிமான்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உமக்குப் போஜனங்கொடுத்தோம்? எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவராகக்கண்டு உம்முடைய தாகத்தைத் தீர்த்தோம்? எப்பொழுது உம்மை அந்நியராகக்கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம்? எப்பொழுது உம்மை வஸ்திரமில்லாதவராகக் கண்டு உமக்கு வஸ்திரங்கொடுத்தோம்? எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும் காவலிலிருக்கிறவராகவும் கண்டு, உம்மிடத்தில் வந்தோம் என்பார்கள். அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார். அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள். பசியாயிருந்தேன், நீங்கள் எனக்குப் போஜனங்கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், நீங்கள் என் தாகத்தைத் தீர்க்கவில்லை; அந்நியனாயிருந்தேன், நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை; வஸ்திரமில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு வஸ்திரங்கொடுக்கவில்லை; வியாதியுள்ளவனாயும் காவலிலடைக்கப்பட்டவனாயும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்க வரவில்லையென்பார். அப்பொழுது, அவர்களும் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, உம்மைப் பசியுள்ளவராகவும், தாகமுள்ளவராகவும், அந்நியராகவும், வஸ்திரமில்லாதவராகவும், வியாதிப்பட்டவராகவும், காவலிலடைக்கப்பட்டவராகவும் நாங்கள் எப்பொழுது கண்டு, உமக்கு உதவி செய்யாதிருந்தோம் என்பார்கள். அப்பொழுது அவர் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார். அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினையை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார். (மத்தேயு 25:31-46)

லூக்கா (Luke)

சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆகிலும் மனுஷகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார். (லூக்கா 18:8)

அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகத்தின்மேல் வருகிறதைக் காண்பார்கள். இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்து பார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள் என்றார். பூமியிலெங்கும் குடியிருக்கிற அனைவர்மேலும் அது ஒரு கண்ணியைப்போல வரும். (லூக்கா 21:27,28,35)

யோவான் (John)

பின்னும், அவர் அவனை நோக்கி: வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (யோவான் 1:51)

அன்றியும் பிதாவைக் கனம்பண்ணுகிறதுபோல எல்லாரும் குமாரனையும் கனம்பண்ணும்படிக்கு, பிதாவானவர் தாமே ஒருவருக்கும் நியாயத்தீர்ப்புச் செய்யாமல், நியாயத்தீர்ப்புச் செய்யும் அதிகாரம் முழுவதையும் குமாரனுக்கு ஒப்புக்கொடுத்திருக்கிறார். குமாரனைக் கனம்பண்ணாதவன் அவரை அனுப்பின பிதாவையும் கனம் பண்ணாதவனாயிருக்கிறான். அவர் மனுஷகுமாரனாயிருக்கிறபடியால், நியாயத்தீர்ப்புச் செய்யும்படிக்கு அதிகாரத்தையும் அவருக்குக் கொடுத்திருக்கிறார். இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்; அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள். (யோவான் 5:22-23, 27-29)

உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக; தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், என்னிடத்திலும் விசுவாசமாயிருங்கள். என் பிதாவின் வீட்டில் அநேக வாசஸ்தலங்கள் உண்டு; அப்படியில்லாதிருந்தால், நான் உங்களுக்குச் சொல்லியிருப்பேன்; ஒரு ஸ்தலத்தை உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்போகிறேன். நான் போய் உங்களுக்காக ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன். நான் போகிற இடத்தை அறிந்திருக்கிறீர்கள், வழியையும் அறிந்திருக்கிறீர்கள் என்றார். தோமா அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் போகிற இடத்தை அறியோமே, வழியை நாங்கள் எப்படி அறிவோம் என்றான். அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். (யோவான் 14:1-6)

பவுல் (Paul)

ஏனெனில், அவர்கள்தாமே எங்களைக்குறித்து, உங்களிடத்தில் நாங்கள் அடைந்த பிரவேசம் இன்னதென்பதையும், ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு, நீங்கள் விக்கிரகங்களைவிட்டுத் தேவனிடத்திற்கு மனந்திரும்பினதையும், அவர் மரித்தோரிலிருந்தெழுப்பினவரும், இனிவரும் கோபாக்கினையினின்று நம்மை நீங்கலாக்கி இரட்சிக்கிறவருமாயிருக்கிற அவருடைய குமாரனாகிய இயேசு பரலோகத்திலிருந்து வருவதை நீங்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறதையும், அறிவிக்கிறார்களே. (1 தெச 1:9-10)

எங்களுக்கு நம்பிக்கையும் சந்தோஷமும் மகிழ்ச்சியின் கிரீடமுமாயிருப்பவர்கள் யார்? நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வரும்போது அவருடைய சந்நிதானத்திலே நீங்களல்லவா அப்படியிருப்பீர்கள்; (1 தெச 2:9)

இவ்விதமாய் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தமது பரிசுத்தவான்கள் அனைவரோடுங்கூட வரும்போது, நீங்கள் நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாகப் பிழையற்ற பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கும்படி உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துவாராக. (1 தெச 3:13)

நீங்கள் தேவனுடைய ராஜ்யத்தினிமித்தம் பாடு அநுபவிக்கிறவர்களாயிருக்க, அந்த ராஜ்யத்திற்கு நீங்கள் பாத்திரரென்றெண்ணப்படும்படிக்கு, தேவன் நியாயமான தீர்ப்புச் செய்கிறவரென்பதற்கு, அதுவே அத்தாட்சியாயிருக்கிறது. உங்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தையும், உபத்திரவப்படுகிற உங்களுக்கு எங்களோடேகூட இளைப்பாறுதலையும் பிரதிபலனாகக் கொடுப்பது தேவனுக்கு நீதியாயிருக்கிறதே. தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையைச் செலுத்தும்படிக்கு, கர்த்தராகிய இயேசு தமது வல்லமையின் தூதரோடும், ஜுவாலித்து எரிகிற அக்கினியோடும், வானத்திலிருந்து வெளிப்படும்போது அப்படியாகும். அந்நாளிலே தம்முடைய பரிசுத்தவான்களில் மகிமைப்படத்தக்கவராயும், நீங்கள் எங்களுடைய சாட்சியை விசுவாசித்தபடியினாலே உங்களிடத்திலும், விசுவாசிக்கிறவர்களெல்லாரிடத்திலும் ஆச்சரியப்படத்தக்கவராயும், அவர் வரும்போது, அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும், அவருடைய வல்லமை பொருந்திய மகிமையிலிருந்தும் நீங்கலாகி, நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள். (2 தெச 1:5-10)

நீக்கப்படும்போது, அந்த அக்கிரமக்காரன் வெளிப்படுவான்; அவனைக் கர்த்தர் தம்முடைய வாயின் சுவாசத்தினாலே அழித்து, தம்முடைய வருகையின் பிரசன்னத்தினாலே நாசம்பண்ணுவார். (2 தெச 2:8)

அப்படியே நீங்கள் யாதொரு வரத்திலும் குறைவில்லாதவர்களாய், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வெளிப்படுவதற்குக் காத்திருக்கிறீர்கள். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாளிலே நீங்கள் குற்றஞ்சாட்டப்படாதவர்களாயிருக்கும்படி முடிவுபரியந்தம் அவர் உங்களை ஸ்திரப்படுத்துவார். (1 கொரிந்தியர் 1:7-8)

நம்முடைய குடியிருப்போ பரலோகத்திலிருக்கிறது, அங்கேயிருந்து கர்த்தராயிருக்கிற இயேசு கிறிஸ்து என்னும் இரட்சகர் வர எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். அவர் எல்லாவற்றையும் தமக்குக் கீழ்ப்படுத்திக்கொள்ளத்தக்க தம்முடைய வல்லமையான செயலின்படியே, நம்முடைய அற்பமான சரீரத்தைத் தம்முடைய மகிமையான சரீரத்திற்கு ஒப்பாக மறுரூபப்படுத்துவார். (பிலிப்பியர் 3:20,21)

நான் தேவனுக்கு முன்பாகவும், உயிரோடிருக்கிறவர்களையும் மரித்தவர்களையும் நியாயந்தீர்க்கப்போகிற கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு முன்பாகவும், அவருடைய பிரசன்னமாகுதலையும் அவருடைய ராஜ்யத்தையும் சாட்சியாக வைத்துக் கட்டளையிடுகிறதாவது: இதுமுதல் நீதியின் கிரீடம் எனக்காக வைக்கப்பட்டிருக்கிறது, நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தர் அந்நாளிலே அதை எனக்குத் தந்தருளுவார்; எனக்கு மாத்திரமல்ல, அவர் பிரசன்னமாகுதலை விரும்பும் யாவருக்கும் அதைத் தந்தருளுவார். கர்த்தர் எல்லாத் தீமையினின்றும் என்னை இரட்சித்து, தம்முடைய பரம ராஜ்யத்தை அடையும்படி காப்பாற்றுவார்; அவருக்குச் சதாகாலங்களிலும் மகிமை உண்டாவதாக. ஆமென். (2 தீமோத்தேயு 4:1, 8, 18)

யாக்கோபு (James)

இப்படியிருக்க, சகோதரரே, கர்த்தர் வருமளவும் நீடிய பொறுமையாயிருங்கள். இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்பலனை அடையவேண்டுமென்று, முன்மாரியும் பின்மாரியும் வருமளவும், நீடிய பொறுமையோடே காத்திருக்கிறான். நீங்களும் நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள்; கர்த்தரின் வருகை சமீபமாயிருக்கிறதே. சகோதரரே, நீங்கள் நியாயந்தீர்க்கப்படாதபடிக்கு ஒருவருக்கொருவர் விரோதமாய் முறையிடாதிருங்கள்; இதோ, நியாயாதிபதி வாசற்படியில் நிற்கிறார். (யாக்கோபு 5:7-9)

நியாயப்பிரமாணத்தைக் கட்டளையிடுகிறவர் ஒருவரே, அவரே இரட்சிக்கவும் அழிக்கவும் வல்லவர்; மற்றவனைக் குற்றப்படுத்துகிறதற்கு நீ யார்? (யாக்கோபு 4:12)

தேவனுக்கும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கும் ஊழியக்காரனாகிய யாக்கோபு, சிதறியிருக்கிற பன்னிரண்டு கோத்திரங்களுக்கும் வாழ்த்துதல் சொல்லி எழுதுகிறதாவது: (யாக்கோபு 1:1)

என் சகோதரரே, மகிமையுள்ள நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசத்தைப் பட்சபாதத்தோடே பற்றிக்கொள்ளாதிருப்பீர்களாக. (யாக்கோபு 2:1)

யாக்கோபு தாம் தேவனுக்கும், கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்துவிற்கும் ஊழியக்காரன் என்று மட்டும் சொல்லவில்லை, மேலும், கிறிஸ்து ஆண்டவராகவும், மகிமை பொறுந்தியவராகவும் இருக்கிறார் என்று கூறுகிறார். அதாவது, தேவனுடைய மகிமை என்பது அவரது குணங்களில் ஒன்றாகும், அந்த குணமாகிய மகிமையை இயேசுக் கிறிஸ்து பெற்று இருப்பதினால், அவரது தெய்வீகத்தன்மை வெளிப்படுகிறது.

ஆகையால், சீக்கிரமாக வரப்போகிற ஆண்டவர், உயிர்த்தெழுந்த கர்த்தராகிய இயேசுக் கிறிஸ்து தான் என்பதில் யாக்கோபிற்கு எந்த ஒரு சந்தேகமுமில்லை.

மற்றவர்களைப் போலவே, யூதாவும் தான் இயேசுவின் ஊழியக்காரன் என்று கூறுகிறார், மேலும், இயேசுவே நம்முடைய நித்திய ஆண்டவராகவும், பரிசுத்த தூதர்களோடு வரப்போகும் தேவனாகவும் இருக்கிறார் என்றும், அவர் வந்து தீயவர்களை நியாயந்தீர்த்து, தம்மீது நம்பிக்கை வைத்தவர்களுக்கு நித்திய ஜீவனை கொடுக்கிறவராகவும் இருக்கிறார் என்றும் எழுதுகிறார்.

யூதா (Jude)

இயேசு கிறிஸ்துவினுடைய ஊழியக்காரனும், யாக்கோபினுடைய சகோதரனுமாயிருக்கிற யூதா, பிதாவாகிய தேவனாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களும், இயேசு கிறிஸ்துவினாலே காக்கப்பட்டவர்களுமாகிய அழைக்கப்பட்டவர்களுக்கு எழுதுகிறதாவது. . . ஏனெனில் நமது தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்துக்கேதுவாகப் புரட்டி, ஒன்றான ஆண்டவராகிய தேவனையும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையும் மறுதலிக்கிற பக்தியற்றவர்களாகிய சிலர் பக்க வழியாய் நுழைந்திருக்கிறார்கள்; அவர்கள் இந்த ஆக்கினைக்குள்ளாவார்களென்று பூர்வத்திலே எழுதியிருக்கிறது. ஆதாமுக்கு ஏழாந்தலைமுறையான ஏனோக்கும் இவர்களைக்குறித்து: இதோ, எல்லாருக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்கிறதற்கும், அவர்களில் அவபக்தியுள்ளவர்கள் யாவரும் அவபக்தியாய்ச் செய்துவந்த சகல அவபக்தியான கிரியைகளினிமித்தமும், . . . தமக்கு விரோதமாய் அவபக்தியுள்ள பாவிகள் பேசின கடின வார்த்தைகளெல்லாவற்றினிமித்தமும், . . . நீங்களோ பிரியமானவர்களே, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலரால் முன் சொல்லப்பட்ட வார்த்தைகளை நினைவுகூருங்கள். நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணி, . . .தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்தியஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய இரக்கத்தைப்பெறக் காத்திருங்கள். . . . தாம் ஒருவரே ஞானமுள்ளவருமாகிய நம்முடைய இரட்சகரான தேவனுக்குக் கனமும் மகத்துவமும் வல்லமையும் அதிகாரமும் இப்பொழுதும் எப்பொழுதும் உண்டாவதாக. ஆமென் (யூதா 1:1, 4, 14-15, 17, 20-21, 25)

யோவானுக்கு வெளிப்படுத்தின விசேஷம் (Revelation of John)

இதோ, மேகங்களுடனே வருகிறார்; கண்கள் யாவும் அவரைக் காணும், அவரைக் குத்தினவர்களும் அவரைக் காண்பார்கள்; பூமியின் கோத்திரத்தாரெல்லாரும் அவரைப் பார்த்துப் புலம்புவார்கள். அப்படியே ஆகும், ஆமென்.. . அப்பொழுது என்னுடனே பேசின சத்தத்தைப் பார்க்கத் திரும்பினேன்; திரும்பினபோது, ஏழு பொன் குத்துவிளக்குகளையும், அந்த ஏழு குத்துவிளக்குகளின் மத்தியிலே, நிலையங்கி தரித்து, மார்பருகே பொற்கச்சை கட்டியிருந்த மனுஷகுமாரனுக்கொப்பானவரையும் கண்டேன். அவருடைய சிரசும் மயிரும் வெண்பஞ்சைப்போலவும் உறைந்த மழையைப்போலவும் வெண்மையாயிருந்தது; அவருடைய கண்கள் அக்கினிஜுவாலையைப் போலிருந்தது; அவருடைய பாதங்கள் உலைக்களத்தில் காய்ந்த பிரகாசமான வெண்கலம் போலிருந்தது; அவருடைய சத்தம் பெருவெள்ளத்து இரைச்சலைப்போலிருந்தது. தமது வலதுகரத்திலே ஏழு நட்சத்திரங்களை ஏந்திக்கொண்டிருந்தார்; அவர் வாயிலிருந்து இருபுறமும் கருக்குள்ள பட்டயம் புறப்பட்டது; அவருடைய முகம் வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனைப்போலிருந்தது. நான் அவரைக் கண்டபோது செத்தவனைப்போல அவருடைய பாதத்தில் விழுந்தேன்; அப்பொழுது அவர் தம்முடைய வலதுகரத்தை என்மேல் வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்; மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன். (வெளி 1:7, 12-18)

தியத்தீரா சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: அக்கினிஜுவாலை போன்ற கண்களும், பிரகாசமான வெண்கலம்போன்ற பாதங்களுமுள்ள தேவகுமாரன் சொல்லுகிறதாவது; உன் கிரியைகளையும், உன் அன்பையும், உன் ஊழியத்தையும், உன் விசுவாசத்தையும், உன் பொறுமையையும், நீ முன்பு செய்த கிரியைகளிலும் பின்பு செய்த கிரியைகள் அதிகமாயிருக்கிறதையும் அறிந்திருக்கிறேன். ஆகிலும், உன் பேரில் எனக்குக் குறை உண்டு; என்னவெனில், தன்னைத் தீர்க்கதரிசியென்று சொல்லுகிற யேசபேல் என்னும் ஸ்திரீயானவள் என்னுடைய ஊழியக்காரர் வேசித்தனம்பண்ணவும் விக்கிரகங்களுக்குப் படைத்தவைகளைப் புசிக்கவும் அவர்களுக்குப் போதித்து, அவர்களை வஞ்சிக்கும்படி நீ அவளுக்கு இடங்கொடுக்கிறாய்.. . . அவளுடைய பிள்ளைகளையும் கொல்லவே கொல்லுவேன்; அப்பொழுது நானே உள்ளிந்திரியங்களையும் இருதயங்களையும் ஆராய்கிறவரென்று எல்லாச் சபைகளும் அறிந்துகொள்ளும்; அன்றியும் உங்களில் ஒவ்வொருவனுக்கும் உங்கள் கிரியைகளின்படியே பலனளிப்பேன். (வெளி 2:18-20, 23)

பின்பு, பரலோகம் திறந்திருக்கக் கண்டேன்; இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமுமுள்ளவரென்னப்பட்டவர்; அவர் நீதியாய் நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார். அவருடைய கண்கள் அக்கினி ஜுவாலையைப் போலிருந்தன, அவருடைய சிரசின்மேல் அநேக கிரீடங்கள் இருந்தன; அவருக்கேயன்றி வேறொருவருக்குந் தெரியாத ஒரு நாமமும் எழுதியிருந்தது. இரத்தத்தில் தோய்க்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்திருந்தார்; அவருடைய நாமம் தேவனுடைய வார்த்தை என்பதே. பரலோகத்திலுள்ள சேனைகள் வெண்மையும் சுத்தமுமான மெல்லிய வஸ்திரந் தரித்தவர்களாய், வெள்ளைக் குதிரைகளின்மேல் ஏறி, அவருக்குப் பின் சென்றார்கள். புறஜாதிகளை வெட்டும்படிக்கு அவருடைய வாயிலிருந்து கூர்மையான பட்டயம் புறப்படுகிறது; இருப்புக்கோலால் அவர்களை அரசாளுவார்; அவர் சர்வவல்லமையுள்ள தேவனுடைய உக்கிரகோபமாகிய மதுவுள்ள ஆலையை மிதிக்கிறார். ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய வஸ்திரத்தின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது. (வெளி 19:11-16)

இதோ, சீக்கிரமாய் வருகிறேன்; அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது. நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன். . . . சபைகளில் இவைகளை உங்களுக்குச் சாட்சியாக அறிவிக்கும்படிக்கு இயேசுவாகிய நான் என் தூதனை அனுப்பினேன். நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார். இவைகளைச் சாட்சியாக அறிவிக்கிறவர்: மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன் என்கிறார். ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும். . . .நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபை உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென். (வெளி 22:12-13, 16, 20-21)

முடிவுரை:

இயேசு மற்றும் அவரது சீடர்களின் சாட்சி மிகவும் தெள்ளத்தெளிவாக உள்ளது. இயேசுக் கிறிஸ்து தான் "முதலும் முடிவுமானவர்" என்றும், உயிர்த்தெழுந்தவர் மேகங்கள் மீது தம் தூதர்களோடு வந்து, ஒவ்வொரு மனிதனும் செய்த செயல்களுக்கு ஏற்ற நியாயத்தீர்ப்பு செய்வார் என்று உரிமை பாராட்டுவதின் மூலமாக, கிறிஸ்துவும், புதிய ஏற்பாட்டு எழுத்தாளர்களும் இயேசு என்பவர், சர்வ வல்ல இறைவன் தான் என்பதை பறைசாற்றியுள்ளனர். இந்த உண்மையை தவறு என்றுச் சொல்ல மற்றவர்களுக்கு எந்த வழியும் இல்லை.

இதுமட்டுமல்ல, இதுவரை கண்ட விவரங்களில் மிகவும் ஆச்சரியப்படவைக்கும் விஷயம் என்னவென்றால், அப்போஸ்தலர் நடபடிகள் புத்தகம் சொல்லும் விவரமாகும், அதாவது இயேசு எந்த இடத்திலிருந்து வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டாரோ (ஒலிவ மலை), அதே ஒலிவ மலைமீது யெகோவா தேவனின் பாதங்கள் தொடும், அப்போது அது இரண்டாக பிளந்துவிடும் என்று சகரியா தீர்க்கதரிசி முன்னறிவித்துள்ளார்.

இவைகளை அவர் சொன்னபின்பு, அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கையில், உயர எடுத்துக்கொள்ளப்பட்டார்; அவர்கள் கண்களுக்கு மறைவாக ஒரு மேகம் அவரை எடுத்துக்கொண்டது. அவர் போகிறபோது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, வெண்மையான வஸ்திரந்தரித்தவர்கள் இரண்டுபேர் அவர்களருகே நின்று: கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ, அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள். அப்பொழுது அவர்கள் எருசலேமுக்குச் சமீபமாய் ஒரு ஓய்வுநாள் பிரயாண தூரத்திலிருக்கிற ஒலிவமலை என்னப்பட்ட மலையிலிருந்து எருசலேமுக்குத் திரும்பிப்போனார்கள். (அப் 1:9-12)

இதன் அர்த்தம் என்னவென்றால், பரிசுத்த ஆவியானவரால் உந்தப்பட்டு சகரியா தீர்க்கதரிசி, உயிர்த்தெழுந்த இயேசுக் கிறிஸ்து வானத்திலிருந்து தம் மகிமை பொருந்திய சரீரத்தோடு இறங்குவார் என்பதை கண்டு தீர்க்கதரிசனமாக எழுதியுள்ளார்.

இதுவரை கண்ட விவரங்களின் வெளிச்சத்தில் கண்டால், "சரீரத்தில் வந்த யெகோவா தேவன் தான் இயேசுக் கிறிஸ்து என்று பைபிள் நமக்கு தெளிவாக சொல்லவில்லையா"? (அவர் பிதாவாக, பரிசுத்த ஆவியானவராக இல்லாமல் இருந்தாலும், சரீரத்தில் வெளிப்பட்ட யெகோவா தேவனாக இருக்கிறார்)

ஆமென், வாரும் யெகோவா இயேசுவே, வாரும்.

உம்மை உண்மையாக நாங்கள் நேசிக்கிறோம், நித்திய நித்தியமாக ஆராதிக்கிறோம். கனத்தையும், மகிமையையும் துதியையும் பெற தகுதியானவர் நீர் மாத்திரமே. ஆமேன்.

ஆங்கில மூலம்: He Who Comes – More Explicit Evidence for the Deity of Christ


© Answering Islam, 1999 - 2012. All rights reserved.
--
12/22/2012 03:14:00 pm அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது


Sunday, December 30, 2012

"மோசேயைப் போல ஒரு தீர்க்கதரிசி முஹம்மது ஆவார்" என்ற இஸ்லாமியர்களின் வாதம்

 


"மோசேயைப் போல ஒரு தீர்க்கதரிசி முஹம்மது ஆவார்"  என்ற இஸ்லாமியர்களின் வாதம்

உன்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்; நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார்.  (உபாகமம் 18:18)

மேற்கண்ட வசனம் பற்றி அனேக இஸ்லாமியர்கள் இவ்விதமாக வாதிக்கிறார்கள், அதாவது தேவன் ஈசாக்கின் சந்ததிகளாகிய இஸ்ரவேல் மக்களிடம் பேசுகிறார், அவர்களிடம் "அவர்கள் சகோதரரிலிருந்து" என்று கூறுகிறார். இதன் அர்த்தம் இஸ்மவேல் சந்ததியிலிருந்து என்பதாகும், இஸ்மவேல் ஈசாக்கின் சகோதரராக  இருக்கிறார். எனவே, மோசேயைப் போல ஒரு நபியை எழுப்புவேன் என்று தேவன் சொன்னது முஹம்மதுவை குறிக்கும். மேலும் முஹம்மதுவே இஸ்மவேல் சந்ததியில் எழும்பிய மிகப்பெரிய நபியாவார். இவர் அற்புதங்கள் செய்து, இறைவனின் சட்டத்தை நிலை நிறுத்தினார்.  இப்படியாக முஸ்லிம்களில் அனேகர் வாதிக்கின்றனர்.

முதலாவது நாம், "அவர்கள் சகோதரரிலிருந்து" என்ற சொற்றொடரைப் பற்றி ஆராய்வோம். இந்த சொற்றொடரை சரியாக புரிந்துக்கொள்ள, இதே போல வேறு இடத்தில் தேவன் சொன்ன வார்த்தைகளை கவனிக்கவேண்டும். அதாவது இதே இஸ்ரவேல் மக்களை நோக்கி "ஒரு ராஜாவை எப்படி நியமிக்கலாம்" என்பதைப் பற்றி தேவன் கட்டளை கொடுக்கிறார். இதனை நாம் அதே உபாகமம் 17:14-15ம் வசனங்களை கவனித்தால் புரியும்:

உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்தில் நீ போய்ச் சேர்ந்து, அதைச் சுதந்தரித்துக்கொண்டு, அதில் குடியேறினபின், நீ; என்னைச் சுற்றிலும் இருக்கிற சகல ஜாதிகளையும் போல, நானும் எனக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்தவேண்டும் என்பாயானால்; உன் தேவனாகிய கர்த்தர் தெரிந்து கொள்பவனையே உனக்கு ராஜாவாக வைக்கக்கடவாய்; உன் சகோதரருக்குள்ளிருக்கிற ஒருவனையே உன்மேல் ராஜாவாக ஏற்படுத்தக்கடவாய்; உன் சகோதரன் அல்லாத அந்நியனை ராஜாவாக ஏற்படுத்தக் கூடாது. (உபாகமம் 17:14-15)

நிச்சயமாக, பழங்கால மத்திய கிழக்கு நாட்டு பழக்கத்தின்படி, இஸ்ரவேலர்கள் தங்களுக்கு ஒரு ராஜாவை இஸ்மவேல் வம்சத்திலிருந்து ஏற்படுத்தமாட்டார்கள் என்று முஸ்லிம்களுக்கு சரியாக தெரிந்திருக்காது.  மேலும் "உன் சகோதரருக்குள்ளிருக்கிற ஒருவனையே" என்ற சொற்றொடரானது தெளிவாக சொல்வது போல, அவன் ஒரு இஸ்ரவேல் வம்சத்தானாகவே இருக்கவேண்டும்.

இரண்டாவதாக, முஹம்மதுவை மோசேவோடு ஒப்பிடுவதற்கு முன்பாக உபாகமம் 34:10-12ம் வசனங்களை நாம் படிக்கவேண்டும். இவ்வசனங்கள் மோசேயைப் பற்றிய ஒரு சுருக்க குணங்களை தெரிவிக்கிறது, அதே போல, இவரைப்போல வருபவரின் எதிர்ப்பார்ப்பு எப்படிப்பட்ட்து என்றும் இது தெளிவாக்குகிறது.

மோசே எகிப்துதேசத்திலே பார்வோனுக்கும், அவனுடைய எல்லா ஊழியக்காரருக்கும், அவனுடைய தேசமனைத்திற்கும் செய்யும்படி கர்த்தர் அவனை அனுப்பிச் செய்வித்த சகல அடையாளங்களையும் அற்புதங்களையும், அவன் இஸ்ரவேலர் எல்லாருக்கும் பிரத்தியட்சமாய்ச் செய்த சகல வல்லமையான கிரியைகளையும், மகா பயங்கரமான செய்கைகளையும் பார்த்தால், கர்த்தரை முகமுகமாய் அறிந்த மோசேயைப்போல, ஒரு தீர்க்கதரிசியும் இஸ்ரவேலில் அப்புறம் எழும்பினதில்லை என்று விளங்கும். (உபாகமம் 34:10-12)

பரிசுத்த வேத எழுத்துக்களின் மூலம் நாம் அறிவதாவது,

1) மோசே ஒரு இஸ்ரவேலராக இருந்தார்

2) தேவனால் அவர் அறியப்பட்டு இருந்தார் அதாவது, தேவனை முகமுகமாய் அறிந்தவர், இதன் அர்த்தம் என்னவென்றால், மறைமுகமாக அல்லது இன்னொரு இடைத்தரகர் மூலமாக அல்லாமல் தேவன் நேரடியாக இவரோடு  பேசுபவராக இருந்தார்.

3) மோசே மிகப்பெரிய அற்புதங்களைச் செய்தார்.

ஆனால், உபாகமத்தில் சொல்லப்பட்ட முன்னறிவிப்பு முஹம்மதுவில் நிறைவேறியது என்று முஸ்லிம்கள் கூறுகிறார்கள்.  கிறிஸ்தவர்களோ, மோசேயைப்போல ஒரு தீர்க்கதரிசி என்பவர் மேசியாவாகிய இயேசு என்று நம்புகிறார்கள், மேலும் கீழ்கண்ட ஒப்பிட்டு பட்டியலின் படி, கிறிஸ்தவர்களின் நம்பிக்கை சரியானதேயாகும்.

மோசே

இயேசு

முஹம்மது

இஸ்ரவேலர்களின் மத்தியில் தோன்றிய தீர்க்கதரிசியாவார்

இஸ்ரவேலர்களின் மத்தியில் தோன்றிய தீர்க்கதரிசியாவார். (யூதாவின் வம்சத்தில் வந்தவர் – மத்தேயு 1:3, லூக்கா 3:33)

அரபியர்களின் மத்தியில் தோன்றிய தீர்க்கதரிசி (இவர் ஒரு நபி என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள்)

(ஸூரா 32:3, 36:6, 34:43-44)

தேவனிடமிருந்து நேரடியான வெளிப்பாட்டை பெற்றவர் (ஸூரா 4:164, யாத்திராகம்ம் 33:11)

தேவனிடமிருந்து நேரடியான வெளிப்பாட்டை பெற்றவர் (யோவான் 12:49-50, 4:10)

நேரடியாக அல்லாமல் மறைமுகமாக வெளிப்பாடுகளை காபிரியேல் தூதன் மூலம் பெற்றவர் (ஸூரா 2:97)

அனேக அற்புதங்களைச் செய்தார் (ஸூரா 2:50 – கடல், ஸூரா 2:57 – மன்னா)

 

அனேக அற்புதங்களைச் செய்தார் (ஸூரா 3:49, மத்தேயு 8:27 – கடல், யோவான் 6:11-14 - மன்னா)

எந்த ஒரு அற்புதமும் செய்யாதவர் (ஸூரா 6:37, ஸூரா 28:48)

மேற்கண்ட விவரங்கள் போக, புதிய ஏற்பாடு, உபாகமத்தில் 18:18ன் தீர்க்கதரிசனம் மேசியாவாகிய இயேசுவில் நிறைவேறியது என்று கூறுகிறது. படிக்க அப்போஸ்தலர் நடபடிகள் 3:17-26. மேலும் 22ம் வசனத்தை கவனிக்கவும் : 

 "மோசே பிதாக்களை நோக்கி: நீங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப்போல ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக உங்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவர் உங்களுக்குச்சொல்லும் எல்லாவற்றிலும் அவருக்குச் செவிகொடுப்பீர்களாக"

முடிவுரையாக, குர்-ஆன் 28:48 சொல்வதை சிறிது கூர்ந்து கவனிக்கவும்:

எனினும் (இப்பொழுது) நம்மிடமிருந்து சத்திய(மார்க்க)ம் அவர்களிடம் வந்த போது, "மூஸாவுக்குக் கொடுக்கப்பட்டது போன்று இவருக்கு ஏன் கொடுக்கப்படவில்லை" என்று கேட்கிறார்கள்;.  (குர்-ஆன் 28:48)

மேற்கண்ட குர்-ஆன் வசனத்தின் படியும், முஹம்மது மோசேக்கு சமமான தீர்க்கதரிசி அல்ல என்பது தெளிவாக புரியும்.

ஆங்கில மூலம்: The Claim that Muhammad was the Prophet like Moses 

முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் தொடர் கட்டுரைகள்


© Answering Islam, 1999 - 2012. All rights reserved.
--
12/22/2012 03:12:00 pm அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது


"பைபிளிலிருந்து முஹம்மதுவின் பெயர் நீக்கப்பட்டுவிட்டது” என்ற இஸ்லாமியர்களின் வாதம்

 

"பைபிளிலிருந்து முஹம்மதுவின் பெயர் நீக்கப்பட்டுவிட்டது" என்ற இஸ்லாமியர்களின் வாதம்

முஹம்மதுவின் பெயர் ஒரு முறை கூட பைபிளில் காணப்படவில்லை என்பதால் அனேக இஸ்லாமியர்கள் பைபிளை குற்றப்படுத்துகிறார்கள். யூத மற்ற கிறிஸ்தவர்களின் வேதங்களில் முஹம்மதுவின் பெயர் காணப்படவேண்டும் என்று முஸ்லிம்கள் எதிர்ப்பார்க்கின்றனர். இப்படி இவர்கள் எதிர்ப்பார்ப்பதற்கு காரணம்  குர்-ஆனில் காணப்படும் இரண்டு வசனங்களாகும்.

மேலும், மர்யமின் குமாரர் ஈஸா, "இஸ்ராயீல் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும்; எனக்குப் பின்னர் வரவிருக்கும் 'அஹமது' என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன்" என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவு கூர்வீராக!) எனினும், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளை அவர் கொண்டு வந்த போது, அவர்கள் "இது தெளிவான சூனியமாகும்" என்று கூறினார்கள். (குர்-ஆன் 61:6)

எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ - அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப் பட்டிருப்பதைக் காண்பார்கள்; அவர், அவர்களை நன்மையான காரியங்கள் செய்யுமாறு ஏவுவார்; பாவமான காரியங்களிலிருந்து விலக்குவார்; ….(குர்-ஆன் 7:157)

இஸ்லாமியர்களில் நன்கு கற்றுத் தேர்ந்த அறிஞர்கள், ஆய்வு மூலமாக, முஹம்மதுவிற்கு பின்பு உள்ள பைபிளின் கையெழுத்துப் பிரதிகளும், முஹம்மதுவிற்கு முன்பு இருந்த பைபிளின் கையெழுத்துப் பிரதிகளும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கின்றன என்பதை அறிவார்கள்.  ஆகையால், முஹம்மதுவின் பெயரை பைபிளிலிருந்து நீக்கிவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டு அடிப்படையற்ற ஒன்றாகும்.  எனினும், முஹம்மதுவின் பெயர் பைபிளில் காணப்படவில்லையானாலும்,  பைபிளில் காணப்படும் சில வசன்ங்கள் முஹம்மதுவை குறிக்கின்றன என்று முஸ்லிம்கள் கூறுகிறார்கள். ஆகவே, யூத கிறிஸ்தவர்களையும் சேர்த்து, உலகமனைத்திற்கும் முஹம்மது நபியாக வந்தார் மற்றும் ஊழியம் செய்தார் என்பது இதன் மூலம் நிருபிக்கப்படுகிறது என்று வாதிக்கிறார்கள். இப்படிப்பட்ட வாதங்களினால், முடிந்தவரை முஹம்மதுவை கிறிஸ்தவர்கள் பின்பற்றும்படி செய்யலாம் என்றும் மேலும் முஹம்மது உருவாக்கிய மார்க்கமாகிய் இஸ்லாம் ஒருமுழுமை அடைந்த மதம் என்று கிறிஸ்தவர்கள் கருதுவார்கள் என்று முஸ்லிம்கள் நினைக்கிறார்கள்.

மேற்கண்ட குர்-ஆன் வசனம் இயேசு  கூறியதாக இப்படி சொல்கிறது: "எனக்குப் பின்னர் வரவிருக்கும் 'அஹமது' என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும்". இதனை படித்த அனேக இஸ்லாமியர்கள் பைபிளை முழுவதுமாக தேடிப்பார்த்தார்கள், ஆனால் அவர்களுக்கு எந்த வசனமும் தென்படவில்லை. ஆகையால், பரிசுத்த ஆவியானவர் பற்றி புதிய ஏற்பாட்டில் யோவான் சுவிசேஷத்தின்  சில வசனங்களை எடுத்துக்கொண்டு, இவைகள் தான் முஹம்மது பற்றிய முன்னறிவிப்பு வசனங்கள் என்று இஸ்லாமியர்கள் வாதிக்கிறார்கள். உதாரணத்திற்கு கூறவேண்டுமென்றால், யோஆவன் 14:16, 15:26 மற்றும் 16:7 வசனங்களை கூறலாம். மூல கிரேக்க மொழியில் "பராக்லெடோஸ் (paracletos)" என்ற வார்த்தைக்கு ஆங்கில மொழியாக்கங்களில் "தேற்றரவாளன்", "அறிவுறுத்துகிறவர்" (அ) நமக்கு பதிலாக பேசுகிறவர் (வழக்கறிஞர்) என்று மொழியாக்கம் செய்துள்ளார்கள். தமிழில் "தேற்றரவாளன்" என்று தமிழாக்கம் செய்துள்ளார்கள். சில இஸ்லாமிய அறிஞர்கள், "கிரேக்க வார்த்தை ஆரம்பத்திலிருந்து தவறாக எழுதப்பட்டுள்ளது, அதாவது சரியான வார்த்தை "பெரிக்லோடஸ்" ஆகும், இவ்வார்த்தையின் நெருங்கிய அர்த்தம் "அஹமத்" என்பதாகும், அதாவது "போற்றுதலுக்கு உரியவர்"  என்பதாகும். 

ஒரு முக்கியமான விஷயத்தை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும், அதாவது "அஹமத்" மற்றும் "முஹம்மத்" என்ற வார்த்தைகள் இரண்டும் வித்தியாசமானவைகள்.  முஹம்மத் என்பது ஒரு தனிப்பெயராகும் இதன் அர்த்தம் "போற்றுதலுக்குரிய ஒருவர் (the one who is praiseworthy)" என்பதாகும். ஆனால், "அஹமத்" என்பது ஒரு உரிச்சொல் ஆகும், இதன் அர்த்தம் "போற்றுதலுக்கு தகுதியானவர் – (worthy of praise)" என்பதாகும்.  மேலும் அஹமத் என்ற பெயர் முஹம்மதுவின் காலத்திற்கு முன்பு வேறு யாருக்கும் சூட்டப்படவில்லை என்று தெரிகின்றது. இதனால் தான் முழு குர்-ஆனிலும் இஸ்லாமிய நபியை குறிப்பிடும் போது, "அஹமத்" என்று குறிப்பிடவில்லை. இதற்கு பதிலாக "முஹம்மது" என்ற தனிப்பெயரையே  நாம் குர்-ஆனில் குறிப்பிட்டு இருப்பதைக் காணலாம்.

புதிய ஏற்பாட்டின் யோவான் சுவிசேஷத்தின் வசனத்தைக் குறித்து கவனித்தால், இந்த வசனத்திற்கு அடுத்து வரும் வசனங்களில் அந்த "பராக்லேடோஸ் (தேற்றரவாளர், பரிந்து பேசுபவர், அறிவுறுத்துபவர்)" என்பவர், "சத்தியத்தின் ஆவியானவர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சத்திய ஆவியானவரை உலகம் காணமுடியாது, ஏனென்றால் அவர் விசுவாசிகளின் உள்ளங்களில் வாழுபவர் மேலும் அவர் இயேசுக் குறித்து சாட்சி சொல்லுவார் என்று சொல்லப்பட்டுள்ளது.  தம்முடைய சீடர்களுக்கு அறிவுரை கூறும் போது குறிப்பிட்டதும் இந்த சத்திய ஆவியானவரைப் பற்றித் தான், முஹம்மதுவைப் பற்றி அல்ல.

பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.  (அப்போஸ்தலர் நடபடிகள் 1:8)

இயேசுவின் மரணத்திற்கு 50 நாட்களுக்கு பின்பு, இந்த பரிசுத்த ஆவியானவர் பற்றிய வாக்குறுதி சீடர்களின் வாழ்வில் நிறைவேறியது. மேலும் பெந்தேகோஸ்தே என்ற நாளில் மிகவும் அற்புதமான ஒரு நிகழ்வாக அது நடைப்பெற்றது. இந்த மிகப்பெரிய நிகழ்ச்சிப் பற்றி, பேதுரு என்று இயேசுவால் பெயர் சூட்டப்பட்ட சீடர் கீழ்கண்டவாறு கூறுகிறார்:

இந்த இயேசுவைத் தேவன் எழுப்பினார்; இதற்கு நாங்களெல்லாரும் சாட்சிகளாயிருக்கிறோம்.  அவர் தேவனுடைய வலதுகரத்தினாலே உயர்த்தப்பட்டு, பிதா அருளிய வாக்குத்தத்தத்தின்படி பரிசுத்த ஆவியைப் பெற்று, நீங்கள் இப்பொழுது காண்கிறதும் கேட்கிறதுமாகிய இதைப் பொழிந்தருளினார். (அப்போஸ்தலர் நடபடிகள் 2:32-33)

மேற்கண்ட விவரங்கள் மூலமாக அறிவது என்னவென்றால், "பராக்லெடோஸ்" என்ற வார்த்தையானது தேவனின் ஆவியானவரை குறிப்பிடுகின்றதே தவிர, ஒரு மனிதனை அது குறிப்பிடவில்லை. மேலும், இந்த "பாரக்லேடோஸ்" என்பவர், பிதாவிடமிருந்து சீடர்களுக்கு கொடுக்கப்படுகிறார். எனவே, சீடர்களின் வாழ்நாளிலேயே அவர் வந்தாகவேண்டும். இயேசுவின் சீடர்கள் மரித்து 500 ஆண்டுகளுக்கு பிறகு தான் முஹம்மது வருகிறார், இப்படி இருக்கும் போது, "பாரக்லேடோஸ்" என்பவர் எப்படி முஹம்மதுவாக இருக்கமுடியும்?

முஸ்லிம்கள் பழைய ஏற்பாட்டையும் தேடிப்பார்த்துள்ளனர், முக்கியமாக தோராவில் முஹம்மது பற்றி ஏதாவது வசனம் கிடைக்குமா என்று தேடிப்பார்த்துள்ளனர். இதன் பயனாக அவர்கள் இரண்டு பழைய ஏற்பாட்டு வசனங்களை பொதுவாக மேற்கோள் காட்டுவார்கள், அவைகள் உபாகமம் 18:15 மற்றும் 18ம் வசனங்கள் ஆகும்.

உன் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவருக்குச் செவிகொடுப்பீர்களாக.  உன்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன்; நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார்.  (உபாகமம் 18:15,18)

மோசேயைப் போல வெளிப்பட அந்த தீர்க்கதரிசி, முஹம்மது தான் என்று அனேக இஸ்லாமியர்கள் வாதம் புரிவார்கள். இந்த தலைப்பு பற்றி அடுத்த கட்டுரையில் நான் விவரிக்கிறேன்.

ஆங்கில மூலம்: The Claim that Muhammad's Name has been Removed from the Bible

முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் தொடர் கட்டுரைகள்


© Answering Islam, 1999 - 2012. All rights reserved.
--
12/22/2012 03:10:00 pm அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது


”பைபிள் மாற்றப்பட்டுவிட்டது” என்ற இஸ்லாமியர்களின் வாதம்

  "பைபிள் மாற்றப்பட்டுவிட்டது" என்ற இஸ்லாமியர்களின் வாதம்

கிறிஸ்தவர்கள் தங்கள் பரிசுத்த எழுத்துக்களாகிய யூத மற்றும் கிறிஸ்தவ வேதத்தை மாற்றிவிட்டார்கள் என்று எந்த ஒரு இடத்திலும் குர்-ஆன் கிறிஸ்தவர்களை குற்றப்படுத்தவில்லை. குர்-ஆன் வேதங்களுடையவர்களை குற்றப்படுத்துவதெல்லாம் "தஹரிஃப் (taharif)" என்பது பற்றியதாகும். அதாவது தங்கள் நாவுகளால் வேத எழுத்துக்களின் பொருளை மாற்றி அல்லது மறைத்து கூறுவதாகும். 

நிச்சயமாக அவர்களில் ஒரு பிரிவார் இருக்கின்றார்கள் - அவர்கள் வேதத்தை ஓதும்போதுத் தங்கள் நாவுகளைச் சாய்த்து ஓதுகிறார்கள் -. . . . ஸூரதுல் ஆலஇம்ரான் (3):78

வேத எழுத்துக்கள் மாற்றப்பட்டுவிட்டது என்று வாதிக்கும் இஸ்லாமியர்களுக்கு ஒரு முக்கியமான வேலை இருக்கிறது, அது என்னவென்றால், வேதம் மாற்றப்படுவதற்கு முன்பாக எப்படி இருந்தது? என்ற ஆதாரத்தை அவர்கள் கொண்டு வரவேண்டும், அப்போது தான் எந்த வசனங்கள் மாற்றப்பட்டது என்பதை நாம் ஒப்பிடமுடியும். இந்த கேள்விக்கு இஸ்லாமியர்களின் பொதுவான பதில் என்னவென்றால், "பர்னபாஸ் சுவிசேஷம்" ஆகும்.  எனினும் "பர்னபாஸ் சுவிசேஷம்" இஸ்லாமியர்களை தர்மசங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது, ஏனென்றால், குர்-ஆனுக்கு  முரண்படும் அனேக விஷயங்கள் இந்த பர்னபாஸ் சுவிசேஷ நூலில் இருப்பது தான். பைபிளின் பழைய மூல பிரதிகளில் சில எழுத்து வித்தியாசங்கள் இருந்தாலும், அவைகள் வேண்டுமென்றே செய்யப்பட்ட மாற்றங்கள் அல்ல, மேலும் அவைகள் பைபிளின் அடிப்படை கோட்பாடுகளை மாற்றவில்லை.  மூல கைப்பிரதிகளில் காணப்படும் வித்தியாசங்கள் குர்-ஆனுக்கும் உண்டு. இதைப் பற்றி யூசுப் அலி அவர்கள் "குர்-ஆனின் அறிமுகம்" என்ற தலைப்பில் தன் புத்தகத்தின் இரண்டாவது பதிப்பில் (1977), 36வது பக்கத்தில், கீழ்கண்டவாறு கூறுகிறார்:

மேற்கண்ட சரித்திர விவரங்களின் படி, குர்-ஆன் பல வகைகளில் (வித்தியாசமான வார்த்தைகளைக் கொண்டு – variations) ஓதப்பட்டு இருப்பது மிகத் தெளிவாக தெரியவருகிறது.  இந்த விதமாகத் தான் நம் பரிசுத்த இறைத்தூதரும் ஓதினார் மற்றும் கற்றுக் கொடுத்துள்ளார். மேலும் குர்-ஆனை ஓதும் குர்ரா(Qurra) என்ற இஸ்லாமிய அறிஞர்களும், கீழ்கண்ட வகையில் ஒத்துப்போகிற "ஓதும் முறை" தான் சரியானது என்று ஒட்டுமொத்தமாக சந்தேகத்திற்கு இடமின்றி அங்கீகரித்துள்ளனர். அதாவது a) குர்-ஆன் ஹஜ்ரத் உஸ்மான் அவர்கள் வெளியிட்ட குர்-ஆன் பிரதியில் உள்ளது போல ஓதப்படவேண்டும் b) அரபி மொழியின் இலக்கணம் மற்றும் அகராதியின்படி ஓதப்படவேண்டும் c) மூன்றாவதாக எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த ஓதும் முறையானது சரியான சங்கிலித்தொடருடன், பரிசுத்த இறைத்தூதர் வரை செல்லக்கூடிய ஆதாரப் பூர்வமானதாக இருக்கவேண்டும்.  இதனால் சில வழிமுறைகளில்(Few Variations) குர்-ஆன் ஓதும் முறை உள்ளது, மேலும் முரண்பாடு இல்லாமல், குர்-ஆன் வசனங்களின் பொருள் இன்னும் மேருகேரும் வகையில் இருக்கிறது. இன்று நம்மத்தியில் நிலவும் பல வகையான குர்-ஆன் ஓதும் முறையில் தான் இறைத்தூதர் அவர்களும் ஓதினார்கள் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இப்படி ஓதுவதினால் வசனங்களின் பொருள் சொறிவும் அதிகமாக இருக்கிறது.

உதாரணத்திற்கு: இரண்டு அதிகார பூர்வமான ஓதும் முறை எடுத்துக்காட்டுகளை இப்போது காண்போம். அ) அல்பாத்திஹா அத்தியாயத்தின் மூன்றாம் வசனம். ஆ) அல்மாயிதா அத்தியாயத்தின் ஆறாம் வசனம். 

முதலாவது வகை குர்-ஆன் ஓதும் முறையில், குர்-ஆன் 1:3ம் வசனத்தில் வரும் அரபி வார்த்தையின் அர்த்தம் "நியாயத்தீர்ப்பு நாளின் எஜமானன்" என்று உள்ளது, இன்னொரு வகை குர்-ஆன் ஓதும் முறையில், அந்த வார்த்தையின் அர்த்தம் "நியாயத்தீர்ப்பு நாளின் அதிபதி" என்று உள்ளது.  இந்த இரண்டு வகையான ஓதும் முறையில் இவ்வசனத்தை படிக்கும் போது, அர்த்தம் இன்னும் தெளிவாக புரிகிறது. 

மேலும், குர்-ஆன் 5:6ம் வசனத்தில் வரும் அரபி வார்த்தையின் பொருள் "உங்கள் முகத்தையும்… உங்கள் கால்களையும் கழுவுங்கள்" என்பதாகும். அதாவது வெறுங்கால்களுடன் உலூ செய்வதாகும். இதே வசனத்தை வேறு ஒரு வகையான குர்-ஆன் ஓதும் முறையில் கவனித்தால், "உங்கள் முகங்களை கழுவுங்கள், ஈரமாக கரங்களால் உங்கள் தலையை துடையுங்கள் மற்றும் கால்களையும் துடையுங்கள்" என்ற பொருள் வருகிறது.

Reproduction from Yusuf Ali's "The Holy Qur'an Translation and Commentary," 2nd Edition, 1977

மேலே குர்-ஆனில் காண்பது போலவே, பைபிளிலும் மாற்றங்கள் உண்டு என்று இஸ்லாமியர்கள் சொல்வார்களானால், அவர்களிடம் கீழ்கண்ட கேள்விகள் கேட்கப்படுகின்றன.

கேள்வி 1 . . . யார் பரிசுத்த எழுத்துக்களை மாற்றியது?

இஸ்லாம் பரவுவதை தடுக்க யூதர்களும், கிறிஸ்தவர்களும் ஒன்றாக சேர்ந்து தங்கள் பரிசுத்த வேதங்களை மாற்றிவிட்டார்கள் என்று இஸ்லாமியர்கள் அடிக்கடி குற்றம்சாட்டுகிறார்கள்.  ஆனால், உண்மையில் இது சாத்தியமில்லாத ஒன்றாகும். ஏனென்றால், யூதர்களும் கிறிஸ்தவர்களும் அவர்களுக்குள் அனேக வித்தியாச கண்ணோட்டங்கள் கொண்ட மக்களாக இருக்கிறார்கள்.

யூதர்கள் கூறுகிறார்கள்; 'கிறிஸ்தவர்கள் எந்த நல்வழியிலும் இல்லை' என்று. கிறிஸ்தவர்கள் கூறுகிறார்கள்; 'யூதர்கள் எந்த நல்வழியிலும் இல்லை' என்று. ஆனால், இவர்கள் (தங்களுக்குரிய) வேதத்தை ஓதிக்கொண்டே (இப்படிக் கூறுகிறார்கள்) . . ..  (ஸூரதுல் பகரா 2:113)

அடிப்படை சத்தியங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்திருக்குமானால், இதற்கு கடும் எதிர்ப்பு உண்டாகி இருந்திருக்கும், ஏனென்றால் யூத மற்றும் கிறிஸ்தவ மார்க்கத்தில் அனேக பிரிவுகள் இருக்கிறது, ஆகையால் இவர்கள் மாற்றங்களை அங்கீகரித்து இருக்கமாட்டார்கள். சபை சரித்திரத்தில் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நடந்ததாக எந்த ஒரு ஆதாரமும் இல்லை. வேத வார்த்தைகளை மாற்றப்பட்டதாக எந்த ஒரு குற்றச்சாட்டும் எழும்பினதில்லை. ஆனால், வசனங்களுக்கு பல வகையாக வியாக்கீனம் கொடுக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு உண்டு.

இயேசு கூட யூதர்கள் தங்கள் வேதங்களை மாற்றிவிட்டார்கள் என்று குற்றம் சாட்டவில்லை, அதற்கு பதிலாக வேத வசனங்களின் உண்மை அர்த்தத்திற்கு திரும்புங்கள் என்று அவர்களை உற்சாகப்படுத்தினார். யூதர்கள் வேத எழுத்துக்களை மாற்றி இருந்திருந்தால், அவர்களின் அந்த குற்றத்தை அவர் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து இருந்திருப்பார்.

முஹம்மதுவின் காலத்தில் வாழ்ந்த மற்றும் முஸ்லிம்களோடு நல்ல நட்புறவுடன் இருந்த உண்மையான கிறிஸ்தவர்கள் (அபிசீனியாவில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள்), இப்படிப்பட்ட ஏதாவது மாற்றங்கள் யூதர்களால் வேதத்தில் செய்யப்பட்டு இருந்திருந்தால் அதனை இவர்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வந்து இருப்பார்கள்.

 . . .. "நிச்சயமாக நாங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கின்றோம்" என்று சொல்பவர்களை, முஃமின்களுக்கு நேசத்தால் மிகவும் நெருங்கியவர்களாக (நபியே!) நீர் காண்பீர். ஏனென்றால் அவர்களில் கற்றறிந்த குருமார்களும், துறவிகளும் இருக்கின்றனர். மேலும் அவர்கள் இறுமாப்புக் கொள்வதுமில்லை.  (ஸூரதுல் மாயிதா 5:82)

 கேள்வி 2: எப்போது வேதம் மாற்றப்பட்டு இருக்கலாம்?

ஒருவேளை யூதர்களும், கிறிஸ்தவர்களும் ஒன்றாக சேர்ந்து முஹம்மதுவின் மரணத்திற்கு முன்பு தங்கள் வேதங்களை மாற்றியிருந்திருந்தால், நிச்சயமாக கீழ்கண்ட வசனங்களை இறக்கி,  இறைவன் முஹம்மதுவிற்கு அறிவுரை கூறியிருக்கமாட்டான்.

. . . ; இன்னும், "அல்லாஹ் இறக்கி வைத்த வேதங்களை நான் நம்புகிறேன்; …" என்றும் கூறுவீராக.  ( ஸூரதுல் அஷ்ஷூரா (42):15)

 (முஃமின்களே!)"நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும்; இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம், அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்" என்று கூறுவீர்களாக.   ( ஸூரதுல் பகரா 2:136)

"வேதமுடையவர்களே! நீங்கள் தவ்ராத்தையும், இன்;ஜீலையும், இன்னும் உங்கள் இறைவனிடமிருந்து உங்கள் மீது இறக்கப்பட்டவற்றையும் நீங்கள் கடைப்பிடித்து நடக்கும் வரையிலும் நீங்கள் எதிலும் சேர்ந்தவர்களாக இல்லை" என்று கூறும்;. ….  (ஸூரதுல் அல் மாயிதா (5):68)

 (ஆதலால்) இன்ஜீலையுடையவர்கள், அதில் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பு வழங்கட்டும்;. ....  (ஸூரதுல் அல் மாயிதா (5):47)

இன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்;. அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன. அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது. அது பயபக்தியுடையவர்களுக்கு நேர் வழிகாட்டியாகவும் நல்லுபதேசமாகவும் உள்ளது.  (ஸூரதுல் அல் மாயிதா (5):46)

(நபியே!) நாம் உம் மீது இறக்கியுள்ள இ(வ்வேதத்)தில் சந்தேகம் கொளிவீராயின், உமக்கு முன்னர் உள்ள வேதத்தை ஓதுகிறார்களே அவர்களிடம் கேட்டுப் பார்ப்பீராக நிச்சயமாக …..  (ஸூரா யூனுஸ் (10):94)

அவர்களிடம் இருக்கக்கூடிய வேதத்தை மெய்ப்படுத்தக்கூடிய (இந்த குர்ஆன் என்ற) வேதம் அவர்களிடம் வந்தது. …  …, "எங்கள் மீது இறக்கப்பட்டதன் மீதுதான் நம்பிக்கை கொள்வோம்" என்று கூறுகிறார்கள்; அதற்கு பின்னால் உள்ளவற்றை நிராகரிக்கிறார்கள். ஆனால் இதுவோ(குர்ஆன்) அவர்களிடம் இருப்பதை உண்மைப் படுத்துகிறது. ….  அவர்களிடம் உள்ள(வேதத்)தை மெய்ப்பிக்கும் ஒரு தூதர் அல்லாஹ்விடமிருந்து அவர்களிடம் வந்த போது, ….  (2:89, 91, 101)

மெய்ப்பிக்கும்படியாக" என்ற சொற்றொடரை கவனிக்கவும்.  இந்த வசனங்கள் அனைத்தும் சொல்லும் குர்-ஆனின் தெளிவான போதனை என்னவென்றால், "முந்தைய வேதங்களைக் மெய்ப்பிக்க குர்-ஆன் இறக்கப்பட்டதாகும்". அதாவது முஸ்லிம்கள் கருதுவதுபோல, முந்தைய வேதங்களை சரிப்படுத்தவோ, அல்லது தள்ளுபடி செய்யவோ குர்-ஆன் வரவில்லை என்பதாகும். குர்-ஆனில் எந்த ஒரு இடத்திலும், "திருத்தப்பட்ட முந்தைய வேதங்களிலிருந்து, தொலைந்துவிட்ட முந்தைய வேதங்களிலிருந்து மக்களை காக்கவே குர்-ஆன் இறக்கப்பட்டது" என்று கூறவில்லை. அதாவது தௌராத் மற்றும் இஞ்சில் திருத்தப்பட்டது அவைகளிலிருந்து காக்க குர்-ஆன் வந்தது என்று எந்த ஒரு வசனத்தையும் குர்-ஆனில் காட்டமுடியாது.

பரிசுத்த வேதமானவது, முஹம்மதுவின் மரணத்திற்கு பின்பு மாற்றப்பட்டது என்று குற்றம் சாட்டுவதும் சாத்தியமில்லாதது என்பதை கீழ்கண்ட விவரங்கள் மூலம் அறியலாம்.

கி.பி. 600 காலகட்ட வரையிலும், கிறிஸ்தவமானது ஆசியா, ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பா கண்டங்களில் பரவிவிட்டது. உலக அளவில், இந்த மூன்று கட்டங்களில் உள்ள கிறிஸ்தவர்கள் அனைவரும், பரிசுத்த வேதத்தை மாற்றுவதற்கு ஒரு குழுவாக ஒரு இடத்தில் சேர்ந்தார்கள் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் உலகில் இல்லை.

முஸ்லிம்கள் பரிசுத்த வேதங்களை மதிக்கிறார்கள். யூத மற்றும் கிறிஸ்தவத்திலிருந்து முஸ்லிம்களாக மாறியவர்களும் தங்களிடம் இருந்த முந்தைய வேதங்களை அப்படியே பாதுகாத்து தங்களிடம் வைத்திருந்திருப்பார்கள். எனினும், இந்த இஸ்லாமியர்கள் பாதுகாத்த வேதங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. 

கி.பி. நான்காம் மற்றும் ஐந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கையெழுத்துப் பிரதிகள் இன்னும் நம்மிடம் பாதுகாக்கப்பட்டுள்ளது (முஹம்மது ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்தார்). இந்த கையெழுத்துப் பிரதிகள் தற்கால மொழியாக்கங்களோடு ஒப்பிடப்பட்டுள்ளது, மேலும் அவைகள் தற்கால வேதத்தோடு ஒத்து இருப்பதை காணமுடிகிறது.

கேள்வி 3: வேதங்கள் எப்படி மாற்றப்பட்டது?

யூத மார்க்கவும், கிறிஸ்தவ மார்க்கவும் உலகம் முழுவதும் பரவியிருப்பதினால்,  இவ்விரு பிரிவினரிடம் உள்ள அனைத்து வேதங்களையும், கையெழுத்துப் பிரதிகளையும், இதர எழுத்துக்களையும், வேத மேற்கோள்கள் காட்டப்பட்ட மூல ஆவணங்களையும் சேகரிப்பது என்பது முடியாத காரியமாகும். மேலும், உலகில் உள்ள அனைத்து கிறிஸ்தவ திருச்சபைகளில், யூத சினகாக் ஆலயங்களில், நூலகங்களில் பள்ளிகளில் மேலும் வீடுகளில் உள்ள அனைத்து வேதங்களையும், ஆவணங்களையும் சேகரித்து அவைகளில் மாற்றம் செய்துவிட்டு, உலகில் யாருக்குமே தெரியாமல் அவைகள் இருந்த இடங்களிலேயே மறுபடியும் அவைகளை  திருப்பி வைப்பது என்பது நிச்சயமாக செய்ய முடியாத ஒரு செயலாகும். 

குர்-ஆன் கூட இறைவனின் வார்த்தையை மாற்றமுடியாது என்று கூறுகிறது:

மேலும் உம்முடைய இறைவனின் வார்த்தை உண்மையாலும் நியாயத்தாலும் முழுமையாகிவிட்டது - அவனுடைய வார்த்தைகளை மாற்றுவோர் எவரும் இல்லை - . . . .  (ஸூரதுல் அன்ஆம் (6):115)

. . .; அல்லாஹ்வின் வாக்கு(றுதி)களில் எவ்வித மாற்றமுமில்லை - . . .  (ஸூரதுல் யூனுஸ் (10):64)

ஒரு வேளை மேற்கண்ட வசனங்களை கண்டு, 'அல்லாஹ் எங்கள் குர்-ஆனை திருத்தப்படுதலிலிருந்து காக்க வல்லவர்" என்று முஸ்லிம்கள் கூறுவார்களானால், அதே சர்வ வல்ல இறைவன் தன்னுடைய முந்தைய வேதங்களையும் காக்க வல்லவர் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

ஆங்கில மூலம்:  The Claim that the Scriptures of the Bible have been Changed

முஸ்லிம்களுக்கு பதில் அளித்தல் தொடர் கட்டுரைகள்


© Answering Islam, 1999 - 2012. All rights reserved.
--
12/22/2012 03:07:00 pm அன்று ஈஸா குர்-ஆன் - Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது


இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்