இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Friday, November 9, 2007

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் பி.ஜைனுல் ஆபிதீனின் தினமணி பேட்டி : பொய்யை மறைக்க அடித்துக்கொள்ளும் இஸ்லாமியர்கள்

இஸ்லாமும்,குரானும் இந்த சமுதாயத்துக்கு நன்மையைக் கொண்டு வந்ததோ இல்லையோ ஆனால் அதிகமான தீமைகளை கொண்டு வந்து உள்ளது.இதை நன்கு உணர்ந்து கொண்ட பி.ஜைனூல் ஆபிதீன் என்பவர் இஸ்லாமின் தவறுகளை மறைக்க ஒரு முகமூடி போடுகிறார் அதன் பெயர் "இஸ்லாம் இனிய மார்கம்".
 
ஆனால் அவர் போடும் முகமூடிகளை அவருடைய சக முஸ்லீம்களே கிழித்துவிடுகிறார்கள்.
 
கடந்த வருடத்தில் ஜித்தாவில் இருந்து வெளியான ஒரு ஒளிப்படத்தில் இஸ்லாமில் இருந்து வெளியேறுபவர்கள் கொல்லப்படவேண்டும் என்றே இஸ்லாம் சொல்கிரது.மேலும் மார்கத்தை பரப்ப சண்டை போட்டால் அது தவறல்ல என்றும், பி.ஜைனூல் ஆபிதீன் போன்றவர்கள் சொல்வது போல் இஸ்லாத்தில் வற்புறுத்தல் இல்லை என்பதெல்லாம் மாற்று மதத்தவர்களின் கண் துடைப்பே அல்லாமல் உண்மையில்லை என்று டாக்டர்.அசரப் என்பவர் பேசினார்.
 
அதன் தொடுப்பு இங்கே உள்ளது;http://unmaiadiyann.blogspot.com/2007/09/blog-post_22.html
 
இப்போது ஒரு புது பிரச்சனை,அது என்ன தினமணி பத்திரிக்கையில் இஸ்லாமை பற்றி இனிப்பாக பேட்டி கொடுத்தார் பி.ஜைனூல் ஆபிதீன்.அதில் இஸ்லாமில் பலதார மணம்,வத வத என்று குழந்தை பெறுவது போன்றவை ஒழிந்து வருகிறது.எங்கள் சமுதாயம் விழிப்புணர்வு அடைந்து கொண்டிருக்கிறது என்று பேட்டி கொடுத்து விட்டார்.(இவர் பொய் சொல்லுகிறார் என்று அறிவதற்கு சிபிஐ வரவேண்டியதில்லை,சின்ன குழந்தைக்கு கூட தெரியும் உண்மை என்ன என்று)


 
பி.ஜைனூல் ஆபிதின்  பேட்டியை படிக்க;
பேட்டி

http://tntj.net/Event/Jeddah/Dinamani_Poster_1.asp
 
 
இப்பொழுது பி.ஜைனூல் ஆபிதின்   சொன்னது எல்லாம் தவறு,எங்கள் அல்லா எங்களை நான்கு பெண்களை திருமணம் செய்யச்சொல்லி இருக்கிறார்.பல குழந்தைகள் பெற்றுக்கொள்ளத்தான் சொல்லியிருக்கிறார்.இந்த குடும்ப கட்டுபாடு ,அளவான குழந்தைகள் இது எல்லாம் பி.ஜைனூல் ஆபிதினின் கதையே என்று தேங்கை முனீப் என்பவர் இஸ்லாம் கல்வி.காம் அன்ற இணையத்தில் எழுதியிறுக்கிறார்.
 
எது எப்படியோ உண்மையை உலகம் அறிந்துகொள்கிறது என்று நினைக்கும் பொழுது இறைவனுக்கு நன்றி சொல்லாமல் இருக்க முடிவது இல்லை.
 
தேங்கை முனீப் அவர்களின் கட்டுரையை நாம் கீழே காணலாம்.அதில் பி.ஜைனூல் ஆபிதீன் சொன்னவை சிவப்பு நிறத்தில் உள்ளது
 
 
 
 
"தீவிரவாதத்துக்கு இஸ்லாமில் அனுமதி கிடையாது" தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவர் சிறப்புப் பேட்டி என்ற தலைப்பிட்டு தினமணி பத்திரிகையில் வெளியான செய்தி நம் பார்வைக்குப் பட்டது. அதில் த.த.ஜ தலைவருடைய பேட்டி இஸ்லாத்தைக் கொச்சைப் படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. இஸ்லாத்தினைப்பற்றிய இவரின் விளக்கங்கள் இறைமறுப்பாளர்களின் திருப்திக்கே அன்றி இறைவனின் திருப்திக்காக அல்ல என்ற உலமாக்களின் கருத்தை மேலும் உறுதிப்படுத்தும் விதத்தில் இவரது பேட்டி அமைந்துள்ளது. இவரது பேட்டியின் மூலம் ஏற்பட்ட தேவையற்ற கருத்துக் குழப்பத்தை அகற்றும் நோக்குடன் இக்கட்டுரை வெளியிடப்படுகிறது.

 

தினமணி
 
கேள்வி: முஸ்லிம்கள் பலதார மணத்தை ஆதரிப்பதால் மக்கள்தொகை பெருகி, அவர்கள் பெரும்பான்மைச் சமுதாயமாக மாறிவிடும் ஆபத்து இருக்கிறது - இந்த வாதத்திற்கு உங்கள் பதில் என்ன?

பி.ஜைனூல் ஆபிதீன் பதில்: முஸ்லிம்கள் பலதாரமணம் செய்து கொள்ளலாம் என்று இருக்கிறதே தவிர, பலதார மணம் செய்து கொள்ளும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு. அகில இந்திய புள்ளிவிவரப்படி ஹிந்துக்களில்தான் ஒன்றுக்கு மேற்பட்ட தாரமுடையவர்கள் அதிகம் இருக்கிறார்கள். எங்கள் சமுதாய மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. படிக்கவேண்டும், தரமான வாழ்க்கை வாழவேண்டும் என்கிற எண்ணம் அதிகரித்து வருகிறது. அதிகக் குழந்தைகள் பெறுவது, பலதார மணம் இவையெல்லாம் பெரிய அளவில் குறைந்துவிட்டது என்பது தான் நிஜம் .


இவர் அளித்த பதிலில் மேலே அடிக்கோடிடப்பட்ட வாசங்களை நன்கு கவனிக்கவும். எங்கள் சமுதாய மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. படிக்கவேண்டும், தரமான வாழ்க்கை வாழவேண்டும் என்கிற எண்ணம் அதிகரித்து வருகிறது. அதிகக் குழந்தைகள் பெறுவது, பலதார மணம் இவையெல்லாம் பெரிய அளவில் குறைந்துவிட்டது என்பது தான் நிஜம் என்கிறார்.

அதாவது பலதார மணம், அதிகமாகக் குழந்தை பெறுவது இதற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட்டு வருகின்றதாம்! அதற்குக் காரணம் படிக்கவேண்டும் தரமான வாழ்க்கை வாழவேண்டும் என்ற எண்ணம் அதிகரித்து வருவது. இவரது கருத்தை இவ்வாறு விளக்கலாம். அதாவது பலதார மணமும் அதிகமாகக் குழந்தை பெறுவதும் தரமற்ற வாழ்க்கையையும் படிப்பறிவில்லாத சமூகத்தையும் உருவாக்குகின்றது. என்ன ஒரு சிந்தனை? அப்படியாயின் இதைத்தான் அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் நமக்குக் கற்றுத் தந்தார்களா? இவருடைய இந்த சிந்தனையை சற்று குர்ஆன் ஹதீசுடன் ஒப்பிட்டுப் பார்ப்போம்.


பலதார மணத்தைப் பற்றிக் கூறும் திருமறை வசனம்.

அநாதை(ப் பெண்களை திருமணம் செய்துகொண்டு அவர்)கள் விஷயத்தில் நீதமாக நடக்கமாட்டோம் என நீங்கள் அஞ்சினால் மற்ற பெண்களில் உங்களுக்கு விருப்பமானவர்களை இரண்டிரண்டாகவோ, மும்மூன்றாகவோ, நான்கு நான்காகவோ நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம். நீங்கள் நீதமாக நடக்க முடியாதென பயந்தால் ஒரு பெண்ணை (திருமணம் செய்துகொள்ள வேண்டும்) அல்லது நீங்கள் வாங்கிய அடிமைப் பெண்ணையே (போதுமாக்கிக்) கொள்ளுங்கள். நீங்கள் தவறு செய்யாமலிருப்பதற்கு இதுவே சுலபமா(ன வழியா)கும். (அல்குர்ஆன் 4:3 )

ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை அவனுக்கு சக்தியிருந்தால் நான்கு திருமணங்க்ள் வரை செய்து கொள்ளலாம் என்று இறைவன் கூறுகின்றான். இது ஒரு கட்டாயக் கடமை அல்ல. மாறாக ஒரு அனுமதியே. ஆணையும் பெண்ணையும் படைத்த இறைவன் அவர்களது இயற்கைத் தன்மையை நன்கறிந்தவன். எல்லாம் அறிந்த இறைவன் ஒரு ஆண் தேவைப்பட்டால் நான்குக்கு மேல் கூடாது என்ற நிபந்தனையுடன் பலதார மணத்தை அனுமதித்துள்ளான். ஆனால் அல்லாஹ்வின் வழிகாட்டலைப் பின்பற்றாத சமுதாயத்தில் மனைவி என்ற அந்தஸ்தை வழங்காமல் திருமணம் முடித்த மனைவிக்கும் துரோகம் இழைத்து எண்ணிக்கை வரைமுறையின்றி வைப்பாட்டிகளை வைத்துக் கொண்டிருப்பதைக் குறைகாணாதவர்கள் இஸ்லாம் கூறும் அழகிய வழிமுறையாகிய பலதாரமணத்தைக் குறை கூறுகின்றனர். இறைவன் அனுமதித்ததை விலக்க அல்லது விழிப்புணர்வு என்ற பெயரில் அதற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவது இஸ்லாமிய விரோதிகளின் செயலாகும். அல்லது அது காலத்துக்கு ஒவ்வாதது அல்லது அதனால் மக்கள் தொகை பெருக்கம் ஏற்பட்டு வாழ்க்கைத்தரம் குறைந்து கல்வி அறிவில்லாத சமுதாயம் உருவாகிவிடும் என்று கூறுவது அறியாமையில் உழல்பவர்களின் கருத்தாகும்.

உதாரணமாக தெருவீதிகளில் அசராங்கத்தின் பால் குடிநீர் தொட்டிகள் வைக்கப்பட்டு குடிநீர் என்ற போர்டும் வைத்துள்ளார்கள் என்று வைத்துக்கொள்வோம். அதன் பொருள் நீர் அருந்துவதன்பால் தேவையிருப்பின் அதிலிருந்து அருந்தலாம் என்பதாகும். ஆனால் சிலரோ அதிலிருந்து நீர் அருந்துவதைக் குறைகண்டு தாகத்தைத் தணித்துக் கொள்ள திருட்டுத்தனமாக சாக்கடை நீரை அருந்தி தங்களை அழிவில் ஆழ்த்திவிடுவதைப் போன்று விபச்சாரம் என்னும் சாக்கடையில் வீழ்வதைப் பற்றி இந்த நவீன விழிப்புணர்வு வாதிகளுக்குக் கவலையில்லை. இவர்கள் பலதாரமணத்துக்கு எதிராக விழிப்புணர்வைக் கொண்டுவரப் போகின்றார்களாம். ஆம் அல்லாஹ்வுக்கே புத்தி சொல்லும் அதிமேதாவிகள் இவர்கள்! ரோட்டோரம் இருக்கும் நல்ல நீர் தொட்டிகளையெல்லாம் உடைத்து விட்டு சாக்கடையின் பால் மக்களைத் தள்ளிவிடக் கூடியவனுடைய செயலன்றோ இவர்கள் கூறும் விழிப்புணர்வு!!!

பல நபிமார்களும் ஒன்றுக்கு மேற்பட்ட மனையவிரைத் திருமணம் முடித்து அதிகமான பிள்ளைச் செல்வங்களுடன் வாழ்ந்துள்ளனர். இதிலிருந்து பலதாரமணம் நபிமார்களுடைய வழிமுறை என்பது விளங்குகின்றது. நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் பலதார மணம் என்பது ஒரு சாதாரண நிகழ்ச்சியாக இருந்தபோதிலும் இத்தனை பேரை மணம் முடிக்கவேண்டும் என்ற வரைமுறை இல்லாமலிருந்தது. ஆனால் இஸ்லாம் அதன் வரைமுறையை நான்கு என்று ஒழுங்கு படுத்தியது. நான்குக்கு மேற்பட்ட மனைவியரைக் கொண்டிருந்த நபித்தோழர்கள் நான்கு மனைவியரை மட்டும் தக்க வைத்துக் கொண்டு பிறரை விவாகரத்து செய்துவிட்டனர். அன்றைய காலகட்டத்தில் விதவைகளாக இருந்த எத்தனையோ நபித்தோழியருக்கு ஸஹாபாக்களின் பலதார மணம் என்ற வழிமுறையால் மறுவாழ்வு கிடைத்தது. ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியரைக் கொண்டிராத நபித்தோழர்கள் மிகக் குறைவு எனலாம். ஆக பலதார மணம் என்பது நபித் தோழர்களின் வழிமுறையும் கூட.

ஆனாலும் இஸ்லாத்தை வேண்டுமென்றே விமர்சிப்பவர்கள் தாங்கள் சார்ந்துள்ள மதங்களின் புராணக் கதைகளில் அவதார புருஷர்களாக வருபவர்கள் வரைமுறையற்ற எண்ணிக்கையில் மனைவியரையும் அதற்கும் மேலாக வைப்பாட்டியரையும் கொண்டிருந்தனர் என்று கூறப்படுவதைக் குறையாகக் காணாமல். ஆனால் இஸ்லாம் நான்கு என்று ஒழுங்குபடுத்திய பலதாரமணத்தை மட்டும் குறை காண்பது நியாயமல்ல.

இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் வாழும் முஸ்லிம்கள், மற்ற சமூகத்தினரைப் பார்த்து இவர்களும் வரதட்சணை வாங்குகின்றனர். செல்வந்தர்கள் இலட்சக்கணக்கில் வரதட்சணை கொடுத்து தங்கள் பெண்பிள்ளைகளை மணம் முடித்துக் கொடுக்கின்றனர். ஆனால் ஏழைகளோ திண்டாடுகின்றனர். பல ஏழைப் பெண்கள் முதிர்கன்னிகளாகத் தேங்கிவிடுகின்றனர். அதோடு மட்டுமன்றி ஆண்களின் இறப்பு வீதம் பெண்களைவிட அதிகம் என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன. விபத்து, யுத்தம் போன்றவை காரணமாகும். நாம் அன்றாடம் கேள்விப்படும் விபத்துக்களிலும் ஆண்களின் மரணவீதமே அதிகமாக இருக்கின்றது. இதனால் சமூகத்தில் ஆண்களை விட பெண்களின் வளர்ச்சி வீதம் அதிகமாகக் காணப்படுகின்றது. இந்த பிரச்சினைக்கு சிறந்த ஒரு தீர்வாக பலதார மணம் அமைகின்றது. ஒன்றுக்கு அதிகமாக ஒரு ஆண் திருமணம் முடிப்பதன் மூலம் திருமணம் ஆகாத ஏழைப் பெண்களின் திருமணக் கனவு நிறைவேறுகின்றது. வரதட்சணை கொடுமையும் ஒழிந்து விடும். விதவைகளுக்கு மறுவாழ்வு கிடைக்கும். காரணம் இது எல்லாவற்றையும் நுட்பமாக அறிந்த மகத்தான இறைவனால் ஏழுவானங்களுக்கு அப்பாலிருந்து அருளப்பட்ட மகத்தான சட்டதிட்டங்களாகும். இதற்கு எதிராகத் தான் ஜைனுல் ஆபிதீன் விழிப்புணர்வு ஏற்படுத்தப் போகின்றாராம்!

(நம்பிக்கையாளர்களே! உங்களுக்குப் பல மனைவிகளிருந்து) நீங்கள் (உங்கள்) மனைவிகளுக்கிடையில் (முற்றிலும்) நீதமாக நடக்க வேண்டுமென்று (எவ்வளவு) விரும்பியபோதிலும் (அது) உங்களால் சாத்தியப்படாது. என்றாலும், (ஒரே மனைவியின் பக்கம்) நீங்கள் முற்றிலும் சாய்ந்து மற்றவளை (அந்தரத்தில்) தொங்கினவளாக விட்டுவிடாதீர்கள்! நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து (உங்களுக்கிடையில்) சமாதானமாக நடந்துகொண்டால் நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) குற்றங்களை மன்னித்துக் கிருபை புரிபவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 4:129)

முடிந்த வரை பல மனைவியருக்கிடையே நீதமாக நடந்து கொள்ள வேண்டும். ஆனால் எவ்வளவு தான் நீதமாக நடக்க இயன்றாலும் அதிலும் சில குறைபாடுகள் வரவே செய்யும். இருந்த போதிலும் நீங்கள் வரம்பு மீறி ஒருவளை விட்டுவிட்டு மற்றவள் பால் சாய்ந்து விடாதீர்கள். இவ்வாறுதான் இது விஷயமாக அல்லாஹ் உபதேசிக்கின்றானே தவிர இந்த நவீன விழிப்புணர்வு வாதிகள் விரும்புவது போல பலதார மணம் புரிவதை தடைசெய்யவில்லை.

பலதாரமணம் என்பது சமூகத்தில் மிகவும் இன்றியமையாத தேவை என்பதை பல எடுத்துக்காட்டுகளுடன் விளக்கினோம். இஸ்லாமியப் பாடம் பயின்ற சிறுபிள்ளை கூட பலதார மணத்தைப் பற்றிய விமர்சனங்களுக்கு எளிதில் பதில் சொல்லிவிடும் வகையில் இது பற்றிய தெளிவை இஸ்லாம் வழங்குகின்றது. ஆனால் இறைநம்பிக்கையில் சந்தேகம் அல்லது பலஹீனம் கொண்டவர்கள் அல்லது இஸ்லாமின் பெயர் தாங்கிய நவீன நாத்திகர்கள் இத்தகைய விமர்சனங்கள் வரும்போது தயங்கி கோழைத்தனமான பதில்களைத் தந்து குழப்பத்தை ஏற்படுத்திவிடுகின்றனர். இத்தகைய கேள்வி வந்தாலே நடுங்கி பயந்து கேட்டவர்களை திருப்திப் படுத்துவதற்காக எதையாவது உளறிக் கொட்டி விடுகின்றனர். இதனால் இஸ்லாத்திற்கு களங்கத்தைக் கற்பித்து விடுகின்றனர். பலதார மணம் விஷயத்தில் இவர்கள் அளித்த பதிலைப் பாருங்கள். அல்லாஹ் பலதார மணத்தை அனுமதிக்காதிருந்தால் நன்றாக இருக்குமே என்ற ரீதியில் இவர்கள் அளித்த பதில் அமைந்துள்ளது. இவர் கூறுவதைப் பாருங்கள்

 

முஸ்லிம்கள் பலதாரமணம் செய்து கொள்ளலாம் என்று இருக்கிறதே தவிர, பலதார மணம் செய்து கொள்ளும் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவு.


இதிலிருந்து என்ன சொல்ல வருகின்றார்? நீங்கள் கூறுவது போன்று அது ஒரு தவறான செயல்தான். எனினும் குர்ஆனில் அது வெறும் வார்த்தையாகத் தான் உள்ளது. அதனை செயல்படுத்தும் முஸ்லிம்கள் மிகமிகக் குறைவு. நாங்கள் அல்ல ஹிந்துக்கள்தான் அதனை செயல்படுத்துகின்றனர்.

குர்ஆனில் ஒன்று அனுமதிக்கப்பட்டது எனில் அதனைச் செயல்படுத்துவதில் என்ன தவறு இருக்க முடியும்? இவர் கூறுவது போன்று அனுமதிக்கப்பட்ட ஒவ்வொரு விஷயங்களையும் இறைமறுப்பாளர்களைத் திருப்திப்படுத்த மாற்றிக் கூறலாமே! இனி சைவத்தை விரும்பும் பார்ப்பனர்கள் அசைவ உணவை உண்பதால் மிருகங்கள் வதைக்கப்படுகின்றன என்று விமர்சித்தால் இவர் இவ்வாறு கூறுவார் போலும்! அசைவ உணவை உண்ணலாம் என்று உள்ளதே தவிர அசைவம் சாப்பிடும் முஸ்லிம்கள் மிகமிகக் குறைவு. ஹிந்துக்கள் தான் அதிகமாக அசைவம் சாப்பிடுகின்றனர். இவ்வாறே ஒவ்வொரு விஷயங்களையும் கூறலாம்.

இவர் அளித்த பதிலின் இரண்டாம் பாகம்.

 

எங்கள் சமுதாய மக்கள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. படிக்கவேண்டும், தரமான வாழ்க்கை வாழவேண்டும் என்கிற எண்ணம் அதிகரித்து வருகிறது. அதிகக் குழந்தைகள் பெறுவது, பலதார மணம் இவையெல்லாம் பெரிய அளவில் குறைந்துவிட்டது என்பது தான் நிஜம்.


அதிகமாகக் குழந்தை பெற்றுக் கொள்ளுவது தீமையா?

அதிகமாகக் குழந்தைகள் பெற்றுக் கொள்வதால் மக்கள்தொகை பெருகி, அவர்கள் பெரும்பான்மைச் சமுதாயமாக மாறிவிடும் ஆபத்து இருக்கிறதாம். பி.ஜைனுல் ஆபிதீன் போன்ற இஸ்லாமிய நாத்திகர்கள் வேண்டுமானால் இந்தக் கேள்வியைக் கண்டு நடு நடுங்கி கேட்டவர்களைச் சமாளிக்க இஸ்லாம் எக்கேடு கெட்டால் என்ன என்று ப(தி)ல் இளித்திருக்கலாம். ஆனால் ஒரு முஸ்லிமைப் பொறுத்த வரையில் இந்தக் கேள்வியே அடிப்படையற்றதாகும்.


எந்த ஒரு சமுதாயமும் பெரும்பான்மையாவதும் சிறுபான்மையாவதும் அல்லாஹ்வின் நாட்டத்தின் பாற்பட்டது. இதில் மனிதனின் எந்த முயற்சியும் பலன் தராது. எட்டு நூற்றாண்டுகள் முஸ்லிம்கள் இந்தியாவை ஆண்டனர். இப்போதும் இந்துக்களே இங்கு பெரும்பான்மையினர். இந்தோனேசியா போன்ற நாடுகளில் முஸ்லிம்களே பெரும்பான்மையினர். மக்கள் தொகைப் பெருக்கம் ஆபத்து என்று கூப்பாடு போடுபவர்களின் தாய் தந்தையர் அவர்கள் பிறப்பதற்கு முன் குடும்பக்கட்டுப்பாடு செய்திருந்தால் இவ்வாறு கூப்பாடு போடுபவர்கள் எங்கே இருந்திருப்பர்? மின் விளக்கு, தொலைபேசி, கணினி இவற்றைக் கண்டுபிடித்தவர்களின் பெற்றோர்கள் பிள்ளைபெற்றுக் கொள்வதில்லை என்று முடிவெடுத்திருந்தால் அவர்கள் பிறந்திருப்பார்களா? ஆக இரண்டுக்கு மேல் பிறக்கும் குழந்தைகள் எல்லாம் முட்டாள்கள் வீட்டுக்கும் நாட்டுக்கும் உதவாக்கறைகள் என்ற மறைவான ஞானம் இவர்களுக்கு இருந்தால் இவர்கள் கட்டுப்படுத்தட்டும் தவறில்லை. ஆனால் அவ்வாறு பிறக்கும் எத்தனை குழந்தைகள் மிகச் சிறந்த அறிவு ஜீவிகளாக சீர்திருத்தவாதிகளாக இருப்பார்கள்? எலிக்குப் பயந்து வீட்டையே கொளுத்தினானாம் முட்டாள் ஒருவன். இனி இந்த மனித சமூகத்தின் வளர்ச்சி என்பது இறைவன் வகுத்த ஒரு ஏற்பாடு என்பதை ஜைனுல் ஆபிதீன் வகையறாக்களின் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகின்றேன்.


மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரைப் படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். (அல்குர்ஆன் 4:1)

மேலும் அவன் உங்களை மண்ணிலிருந்து படைத்திருப்பதும், பின்பு நீங்கள் மனிதர்களாக (பூமியின் பல பாகங்களில்) பரவியதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். (அல்குர்ஆன் 30:20)

திருமணம் முடிந்து வருடக்கணக்காக குழந்தை பாக்கியத்துக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் எத்தனையோ தம்பதிகள். குழந்தையே வேண்டாம் என்றிருப்பவர்களுக்கும் குழந்தை பெற்றெடுக்கும் அதிசயம்! சுனாமி போன்ற பேரழிவினால் சந்ததிகள் அனைத்தையும இழந்து மீண்டும் குழந்தைப் பேற்றிற்காக ஏங்கும் எத்தனையோ தம்பதிகள். இவை அத்தனையும் இறைவனின் மகத்தான வல்லமையையும் மனிதனின் பலஹீனத்தையுமன்றோ பறைசாற்றுகின்றது! இத்தகைய பலஹீனம் மிக்க மனித மூளையில் உதித்த குறுகிய சிந்தனை இறைவன் அனுமதித்த பலதார மணத்தினால் அல்லது இறைவன் இந்த பூமியில் உருவாக்கும் மனிதர்களின் வளர்ச்சியினால் வாழ்க்கைத் தரம் குறைந்துவிடும் என்று கூறினால் அதனை எவ்வாறு ஏற்றுக் கொள்ள இயலும்?
 

வானம் பூமி ஆகியவைகளின் ஆட்சி அல்லாஹ்வுக்குரியதே. தான் விரும்பியவற்றை அவன் படைக்கின்றான். அவன் விரும்பியவர்களுக்கு பெண் சந்ததியை மட்டும் கொடுக்கின்றான். அவன் விரும்பியவர்களுக்கு ஆண் சந்தததியை மட்டும் கொடுக்கின்றான். அல்லது ஆணையும் பெண்ணையும் கலந்தே கொடுக்கின்றான். அன்றி அவன் விரும்பியவர்களை (சந்ததியற்ற) மலடாகவும் ஆக்கிவிடுகின்றான். நிச்சயமாக அவன் நன்கறிந்தவனும் ஆற்றலுடையவனகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 42: 49,50)

ஒரு சம்பவம்:

தன் ஒரு குழந்தை இறந்து விட்ட சோகத்தை மிகவும் பொறுமையுடன் எதிர்கொண்ட அன்னை உம்மு சுலைம் (ரழி) அவர்களுக்கு பரக்கத் வேண்டி நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை புரிந்தார்கள். உம்மு சுலைம் (ரழி) அவர்களுக்கு அப்துல்லாஹ் என்ற ஆண்குழந்தை பிறக்கின்றது. அந்த ஆண்குழந்தை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்படுகின்றது. நபி (ஸல்) அவர்கள் பேரித்தம் பழத்தை வாயிலிட்டு மென்று அதன் சாற்றை குழந்தைக்குக் கொடுத்து அதற்காக துஆவும் செய்கின்றார்கள். இந்த அப்துல்லாஹ்வுக்கு ஒன்பது பிள்ளைகள் பிறக்கின்றன. இந்த ஒன்பது பேரும் திருக்குர்ஆனை மனனம் செய்த சிறந்த மார்க்க அறிஞர்களாக விளங்கினர் என்று வரலாறு கூறுகின்றது.

நபி (ஸல்) அவர்களின் பிரார்த்தனையின் விளைவாக உம்மு சுலைம் அவர்களுக்கு அல்லாஹ் அளித்த வெகுமதி! ஜைனுல்ஆபிதீனின் விழிப்புணர்வுப்படி அவர்கள் குடும்பக் கட்டுப்பாடு செய்திருந்தால் மகத்தான ஒன்பது மார்க்க அறிஞர்களை இந்த சமூகம் இழந்திருக்கும்!

முஸ்லிம் என்றால் இறைவனுக்குக் கட்டுப்பட்டவன். இறைவனை மட்டும் வணங்கி அவனுக்கு அடிபணிந்து வாழ்பவன். இறைவனுக்கு அடிபணிந்து வாழும் அடியார்கள் இந்த பூமியில் பெருமளவில் வாழும்போது பூமியில் அமைதி நிலவும். கெட்டவர்கள் மட்டுமே இந்த பூமியில் வாழக் கூடிய நிலையில்தான் மறுமை நாள் ஏற்படும் என்ற நபிமொழி இங்கு கவனிக்கத் தக்கது. இறைவா இந்த சமுதாயத்தை நீ அழித்துவிட்டால் பூமியில் நீ வணங்கப்படமாட்டாய் என்று பத்ரில் முஹம்மத் (ஸல்) அவர்கள் மனமுருகி வேண்டிய பிரார்த்தனையும் நமக்கு இதனையே உணர்த்துகின்றது.

அல்லாஹ்வை வணங்கி வாழக்கூடிய தனது உம்மத் இந்த பூமியில் அதிகமாக இருக்கவேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் பெரிதும் விரும்பினார்கள். உங்களை நேசிக்கக் கூடிய அதிகமாகப் பிள்ளை பெறக்கூடிய பெண்ணைத் திருமணம் முடியுங்கள் என்ற நபிமொழிக்கு முன் மக்கள் தொகைக் குறைப்புக் கூப்பாடு போடும் ஜைனுல் ஆபிதீன் வகையறாக்களின் கூற்று எம்மாத்திரம்?

நபி (ஸல்) அவர்கள் தங்களது இறுதிப் பேருரையில் கூட இவ்வாறு கூறினார்கள்: அறிந்து கொள்ளுங்கள்: மறுமைநாளில் இறைத்தூதர்கள் தங்களது சமுதாயத்தினர் அதிகமாக இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியுறுவார்கள். அப்போது என்னை நீங்கள் கேவலப்படுத்தி விடாதீர்கள். நான் உங்களுக்காக கவ்ஸர் நீர் தடாகத்திற்கு அருகில் உட்கார்ந்திருப்பேன். (மஜ்மஉஸ் ஸவாயிது 271-3 ) (இறுதிப் பேருரை - தாருல் ஹீதா வெளியீடு)

ஆனால் குர்ஆன் கூறுகின்றது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்ற கூற்றெல்லாம் திருவாளர் ஜைனுல் ஆபிதீனிடம் எடுபடாது. அது அந்த காலத்திற்குப் பொருந்தும் இந்த காலத்துக்குப் பொருந்தாது. இந்த காலத்தில் இதனை நாம் இவ்வாறுதான் விளங்கிக் கொள்ளவேண்டும் என்று கூறுவார். இதனை நாம் இட்டுக்கட்டிக் கூறவில்லை. இவரிடமே இதற்கு முன் உதாரணங்கள் இருக்கின்றன. அல்லாஹ் ஒவ்வொரு இரவும் முதல்வானத்துக்கு இறங்குகின்றான் என்ற நபிமொழியை தனது சுய அறிவைப் பயன்படுத்தி விளக்கினார். நபித்தோழர்கள் புரிந்து கொண்டது தவறு என்று வாதிட்டார். அப்படியாயின் அது குறித்து நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு விளங்கியிருந்தனர்? என்ற கேள்விக்கு இவரிடம் பதில் இல்லை. ஜைனுல் ஆபிதீனைக் கண்மூடிப் பின்பற்றிக் கொண்டிருக்கும் சகோதரர்களே! விழித்தெழுங்கள். இவரது கூற்றுக்களை திருக்குர்ஆனுடனும் நபிமொழியுடனும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

அல்லாஹ்வே! ஜிப்ரீலின் இறைவனே! மீக்காயீல் மற்றும் இஸ்றாஃபீல் ஆகியோரதும் இறைவனே! வானங்களையும் பூமியையும் படைத்தவனே! மறைவானதையும் வெளிப்படையானதையும் அறிந்தவனே! உன் அடியார்கள் கருத்துவேறுபட்டிருக்கும் காரியத்தில் நீயே தீர்ப்பளிப்பாயாக!

அன்புடன்
தேங்கை முனீப்

muneebtpm at gmail dot com
 

இஸ்லாம்:முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர்கள் பேதுரு, யோவான், லூக்கா மற்றும் பவுல் .

நாடகம்: முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர்கள் பேதுரு, யோவான், லூக்கா மற்றும் பவுல் .கற்பனை நாடகம்: இது ஒரு கற்பனை நாடகம் ஆகும். இயேசுவின் சீடர்களில் பலர் இதில் நடிப்பவர்களாக நான் கற்பனை செய்துள்ளேன். இந்நாடகம் நடக்கும் இடம் ஒரு "முஸ்லீம் நாடாகும்". முகமதுவின் காலத்திற்கு பின்பு பல நூற்றாண்டுகள் கழித்து இது நடக்கிறது என்று கற்பனை செய்யுங்கள். முகமதுவின் காலத்திற்கு பின்பு அவரது தோழர்கள் நாடுகளை ஆட்சி செய்தார்கள். அவர்களை "காலிஃபா" என்று அழைப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு காலிஃபாவின் ஆட்சி காலத்தில் இந்த உரையாடல் அல்லது நாடகம் நடப்பதாக நாம் கற்பனை செய்துக்கொள்ள வேண்டும்.

இந்த அரசர் ஆட்சி செய்யும் போது, அந்த நாட்டில் கீழ் கண்ட இயேசுவின் சீடர்கள் சுவிசேஷம் சொல்லும் போது, கைது செய்யப்படுகிறார்கள், காவலில் வைக்கப்பட்டார்கள். இயேசுவின் இந்த சீடர்கள் அக்காலத்தில் உயிரோடு இருப்பதாக கற்பனை செய்துக்கொள்ளுங்கள்.1. பேதுரு (தனக்கு அடுத்து தன் ஆடுகளை மேய்க்க இயேசு நியமித்த மிக நம்பிக்கையான சீடர் .)

2. பவுல் (இயேசு இவரை சந்திக்கிறார், இவர் மூலமாக பலமான ஊழியம் நடைபெறுகிறது. இஸ்லாமியர்கள் இவர் மீது வைக்கும் குற்றங்களுக்கு இவர் பதில் அளிக்கப்போகிறார். )

3. யோவான் (இயேசுவிற்கு அன்பாக இருந்த சீடன், யோவான் சுவிசேஷம், வெளிப்படுத்தின விசேஷம் தரிசனம் பெற்றவர், 1,2,3 யோவான் புத்தகத்தை எழுதியவர். )

4. லூக்கா (லூக்கா சுவிசேஷம் மற்றும் அப்போஸ்தலர் நடபடிகள் என்ற இரண்டு புத்தகங்களை எழுதியவர். இவர் ஒரு மருத்துவர். )

முதலாவது, பேதுரு அரச சபைக்கு நியாயம் விசாரிக்க அழைக்கப்பட்டார். பேதுரு அரசருக்கும், மற்ற சபை அங்கத்தினர்களுக்கும் முன்பாக நிற்கிறார். இஸ்லாமிய அரசர் கேட்கும் கேள்விகளுக்கு பேதுரு பதில் அளிக்கிறார்.

இந்நாடகத்தின் அடுத்த பாகத்தில் பவுலை அழைத்து அவ்வரசர் கேள்வி கேட்கிறார். இப்படி மற்ற சீடர்களையும் அழைத்து பேசுவதை மற்ற பாகங்களில் பார்க்கலாம்.

பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு


இடம்: ஒரு இஸ்லாமிய அரச சபை

நபர்கள்(நடிகர்கள்) : ஒரு இஸ்லாமிய அரசர், சபை அங்கத்தினர்கள் மற்றும் இயேசுவின் சீடன் சீமோன் பேதுரு.

[சீமோன் பேதுரு சங்கிலிகளால் கட்டப்பட்டு அரச சபையின் நடுவில் நிற்கிறார், அரசரும் மற்றவர்களும் தங்கள் இருக்கைகளில் அமர்ந்துள்ளனர்]

அரசர்: நீங்கள் நான்கு பேரும் எங்கே இருந்து வருகிறீர்கள்? எங்கள் நாட்டில் என்ன செய்துக்கொண்டு இருக்கிறீர்கள்?

பேதுரு: நாங்கள் இஸ்ரவேல் நாட்டிலிருந்து வருகிறோம். நாங்கள் இயேசுவின் சீடர்கள். இயேசுவின் நற்செய்தியை உங்கள் நாட்டு மக்களுக்கு சொல்லும்படி நாங்கள் வந்தோம்.

அரசர்: ஓ, நீங்கள் தான் வேதம் கொடுக்கப்பட்டோர்களா?

பேதுரு: ஆம், நாங்கள் மாத்திரம் தான் வேதம் கொடுக்கப்ப்ட்டோர்கள்.

அரசர்: உனக்கு ஆணவமா? நாங்கள் மாத்திரம் தான் வேதம் கொடுக்கப்பட்டோர்கள் என்று பயமில்லாமல் சொல்கிறாய்.

பேதுரு: ஆணவம் இல்லை அரசே, அதிகாரம். இயேசு எங்களுக்கு கொடுத்த அதிகாரம்.

அரசர்: உங்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பை நான் தர விரும்புகிறேன். குர்‍ஆன் சொல்கிறது, இயேசு(PBUH) தேவகுமாரன் அல்ல, அவர் ஒரு தீர்க்கதரிசி என்று மட்டும் தான். எனவே, கடைசி நபியாகிய முகமது(அவர் மீது சாந்தி உண்டாவதாக- PBUH) கொண்டு வந்த வேதத்தின் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். நீங்கள் நல்லோர்களில் ஒருவராக எண்ணப்படுவீர்கள். இயேசு(PBUH) தான் இறைவன் என்பதை பிரசங்கிப்பதை இனி விட்டுவிடுங்கள்.

பேதுரு: அருமை இராஜாவே, உங்கள் பரிவிற்காக நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஆனால், இயேசு தான் இறைவன் என்று உலகமெங்கும் பிரசங்கிப்பதை எங்களால் நிறுத்தமுடியாது. ஏனென்றால், இயேசு தான் உண்மை தெய்வம். அவரே நமக்காக ஏன் உங்களுக்காகவும், உங்கள் நாட்டு மக்களுக்காகவும் மரித்தார், மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். மறுபடியும் வரப்போகிறார். எனவே, அவரை மட்டுமே நாங்கள் விசுவாசிக்க வேண்டும். எனவே, உங்கள் வழிகளை விட்டுவிட்டு இயேசுவை பின்பற்றும் படி உங்களை வேண்டிக்கொள்கிறேன்.

அரசர்: அப்படியா! முதலாவது என் கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியுமானால் சொல். இயேசுவை(PBUH) அல்லா அப்படியே தன் அளவில் எடுத்துக்கொண்டார், அவர் சிலுவையில் மரிக்கவில்லை, மக்களுடைய கண்களை ஏமாற்றி, இயேசுவைப் (PBUH) போல "ஒரு நபரை" அல்லா காட்டினார். மக்கள் எல்லாரும், ஏன் அவருடைய தாயாரும் கூட சிலுவையில் அறையப்பட்டது இயேசு என்று நினைத்துக்கொண்டார்கள், நீங்களும் அப்படியே எண்ணிக்கொண்டு இருக்கிறீர்கள். அவ்வளவு தான். பின் ஏன் நீ இயேசு(PBUH) மரித்தார், உயிர்த்தெழுந்தார் என்று பொய் சொல்கிறாய்.

பேதுரு: அரசரே மறுபடியும் உங்களுக்கு என் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் சொல்வதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஒரு வேளை நீங்கள் சொல்வது உண்மை என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்கொண்டாலும், நீங்கள் சொல்லும் நிகழ்ச்சி நடந்ததாக ஒரு ஆதாரமும் இல்லை.

இயேசுவை அல்லா தன் அளவில் எடுத்துக்கொண்டார், அவருக்கு பதிலாக வேறு ஒரு நபரை சிலுவையில் காட்டினார் என்று யாருக்கு தெரியும்? அல்லா எங்களுக்குச் சொன்னாரா? அல்லது இயேசுவிற்கு முன்பே அதை தெரிவித்து எங்களுக்கு சொல்லும்படி சொன்னாரா? இல்லையே? மூன்று வருடங்களுக்கு அதிகமாக நாங்கள் அவரோடு இருந்தோமே! இதைப் பற்றி அல்லா இயேசு மூலமாக எங்களுக்குச் சொல்லியிருக்கலாம் அல்லவா? அல்லது எதிர் காலத்தில் இயேசுவை மரிக்கச்செய்யாமல் அல்லா எடுத்துக்கொள்ளப்போவது அல்லாவிற்கே தெரியாமல் போனதா?

எல்லாம் முடிந்த பிறகு, நாங்கள் உலகமெல்லாம் சுற்றி, பசியிலும், தாகத்திலும், வெயிலிலும், குளிரிலும் கஷ்டப்பட்டு, இயேசுவின் நற்செய்தியை சொல்லும் போது, 600 ஆண்டுகளுக்கு பின்பு வந்து, மரித்தது இயேசு அல்ல, அவரைப் போலவே வேறு ஒருவர் என்றுச் சொன்னால், இது அல்லாவிற்கு நியாயமாக படுகிறதா, சிந்தித்துப்பாருங்கள்.

நான் இயேசு உயிர்த்தெழுந்தார் என்பதை அறியாமல் என் தொழிலுக்கு திரும்பினேன், மீன் பிடிக்கச்சென்றேன். மற்ற இயேசுவின் சீடர்களும் மீன் பிடிக்க வந்தார்கள். ஆனால், இயேசு எங்களுக்கு தரிசனமாகி தன்னை உயிருள்ளவராக காண்பித்தார்(யோவான் 21:3‍-14).

இராஜாவே, நான் சொல்வதை கேளுங்கள், நீங்கள் சொல்வது உண்மையானால், எனக்கு தரிசனமானவர் யார்? எங்கள் கண்களுக்கு முன்பாக வானத்தில் உயர எடுத்துக்கொள்ளப்பட்டவர் யார்? இரண்டு தேவ தூதர்கள் இயேசு மறுபடியும் வருவார்கள் என்று சொன்னார்களே. 

அவர் போகிறபோது அவர்கள் வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, வெண்மையான வஸ்திரந்தரித்தவர்கள் இரண்டு பேர் அவர்களருகே நின்று,11. கலிலேயராகிய மனுஷரே, நீங்கள் ஏன் வானத்தை அண்ணாந்துபார்த்து நிற்கிறீர்கள்? உங்களிடத்தினின்று வானத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த இயேசுவானவர் எப்படி உங்கள் கண்களுக்கு முன்பாக வானத்துக்கு எழுந்தருளிப்போனாரோ அப்படியே மறுபடியும் வருவார் என்றார்கள் ( அப் 1: 10).

எனவே, நான் உங்களுக்குச் சொல்கிறேன்.

அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுகுள்ளே அவருடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை(அப் 4: 12).

...நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்(அப் 2:38 )


இதர சபை அங்கத்தினர்கள் சத்தமாய்: யாரிடம் என்ன பேசுகிறாய் என்று உனக்கு தெரியுமா? நீ அரசருக்கு மதிப்பு கொடுக்கமாட்டாயா? அரசே, இவனை பேசவிடாதீர்கள்.

பேதுரு: அரசரே, நான் உங்களை அவமதிக்கவில்லை. நான் கண்டதையும் கேட்டதையும் சொல்லாமல் இருக்கக்கூடாதே. அது என் மேல் விழுந்த கடமை.

[அரச சபையில் அதிக சத்தம் எழுகிறது, அரசர் ஒரு முறை எல்லாரையும் பார்க்கிறார், உடனே சபையில் அமைதி நிலவுகிறது]

அரசர்: பேதுருவே, நீ சொல்வதை நான் ஏற்றுக்கொள்ள முடியாது. நான் அமைதியை அதிகமாக விரும்புவதால், உங்களுக்கு ஒரு வாய்ப்பை தருகிறேன். நீங்கள் எங்கள் நாட்டில் இருக்கலாம். ஆனால், இயேசு(PBUH) இறைமகன் என்று சொல்லக்கூடாது. ஏதாவது என் ஆட்சிக்கு விரோதமாக மக்களை கூட்டி, குழப்பம் செய்வீர்களா? அப்படி குழப்பம் செய்தால், தண்டனை மிகவும் கடினமாக இருக்கும்.

பேதுரு: அரசே, எங்களால் இயேசு இறைமகன் என்று சொல்லாமல் இருக்கமுடியாது. இன்னொறு விவரத்தை நான் சொல்ல எனக்கு அனுமதி கொடுங்கள். நாங்கள் இந்த உலக சொத்துக்களுக்கு, ஆசைகளுக்கு அடிமைப்பட்டவர்கள் இல்லை, நாங்கள் எந்த நாட்டில் இருந்தாலும், எங்களை ஆளுபவர்கள் கிறிஸ்தவரல்லாதவராக இருந்தாலும், அவரை எதிர்க்க மாட்டோம். வாழும் தாய் நாட்டிற்கோ அல்லது எங்களை வாழவிட்ட நாட்டிற்கோ நாங்கள் என்னாலும் கெடுதல் நினைக்கமாட்டோம். அப்படி செய்பவன் இயேசுவின் சீடன் கிடையாது. நாங்கள் அரசியல் பண்ண அழைக்கப்படவில்லை, தேவ அரசைப் பற்றி அறிவிக்க அழைக்கப்பட்டோம். ஆட்சியை கவிழ்த்து நாற்காலிக்கு ஆசைப்படுபவர்கள் நாங்கள் இல்லை.

அரசர்: என் நாட்டில் இருக்கவேண்டுமானால், ஒன்று நீங்கள் முஸ்லீமாக மாறவேண்டும், அல்லது ஜிஸ்யா என்னும் வரியை செலுத்தவேண்டும்.

பேதுரு: அரசே, நாங்கள் இந்நாட்டில் இருக்கும் நாட்கள் வரை, வரி கட்ட தயாராக இருக்கிறோம்.

[அரசர் சிறிது நேரம் அமைதியாக இருக்கிறார், அந்த நேரத்தில் அரச சபையின் பெரியவர்களில் ஒருவர், அரசரிடம் வந்து, எதோ அவரிடம் சொன்னார்]

அரசர்: இயேசுவின்(PBUH) சீடர்கள் அனைவருக்கும் நீ தான் தலைவராமே? உண்மையா? தலைவராவதற்கு உனக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள்?

பேதுரு: தலைவர் என்று தனியாக ஒரு பட்டத்தைச் சொல்லமுடியாது அரசே, ஆனால், இயேசு தன் ஆடுகளை மேய்க்கும்படிக்கும், பார்த்துக்கொள்ளும்படிக்கும் எனக்கு அதிகாரம் கொடுத்துள்ளார். என் அதிகாரம் வானத்தையும், பூமியையும் படைத்தவரிடமிருந்து வந்துள்ளது.

இயேசு என்னிடம் அன்பாக இருக்கிறாயா? என்று மூன்று முறை கேட்டார். நானும் அன்பாக இருக்கிறேன் என்றுச் சொன்னேன். அப்படியானால், என் ஆடுகளை மேய்ப்பாயாக என்று எனக்கு கட்டளையிட்டார்(யோவான் 21:15-17). எனவே தான் அரசே, என்னால் இயன்ற அளவிற்கு நான் இயேசுவின் நற்செய்தியை சொல்கிறேன். இயேசுவின் ஆடுகளில் நானும் ஒரு ஆடாக இருந்து மற்ற ஆடுகளை பார்த்துக்கொண்டு வந்துக்கொண்டு இருக்கிறேன்.

இயேசு எனக்கு பண ஆசை காட்டியோ, பெண் ஆசை காட்டியோ அல்லது மண் ஆசை காட்டியோ எனக்கு கட்டளையிட்டு இருந்தால், நான் இவ்வளவு கஷ்டப்பட்டு அவருக்கு ஊழியம் செய்து இருக்கமுடியாது, இவ்வளவு பாடுகளை சகித்து இருக்கமுடியாது. ஆனால், இயேசு தன் மீது அன்பு இருந்தால், என் ஊழியம் செய் என்றார். அவர் மீது வைத்த அன்பு மட்டும் தான் எங்களை இப்படி செய்ய ஊக்குவிக்கிறது அரசே.

அரசர்: இறைவனுடைய வழியை கெடுக்க வந்த "பவுலை" நீ ஆதரிக்கிறாயே! அவன் ஒரு எமாற்றுக்காரன் என்று உனக்கு தெரியாதா? பொய்யான உபதேசங்களைச் சொல்லி வரும் அவனை எதை ஆதாரமாக வைத்து உன்னோடு சேர்த்துக்கொண்டாய்?

பேதுரு: மன்னிக்கவேண்டும் அரசே, யார் உண்மை சொல்பவர்கள், யார் பொய் சொல்பவர்கள் என்று எங்களுக்கு நன்றாகத் தெரியும் அரசர் அவர்களே.

எங்களுக்குள் பரிசுத்த ஆவியானவர் இருக்கிறார், அவர் எல்லாவற்றையும் குறித்து தகுந்த நேரத்தில் எங்களுக்கு அறிவுரை கூறுவார். உங்களைப் போன்றவர்களுக்கு முன்பாக நாங்கள் கொண்டு போகப்படும்போது என்ன பேச வேண்டும், எப்படி பேசவேண்டும் என்றும் அவர் எங்களுக்கு சொல்லுவார்(மத்தேயு: 10:17-20). எனவே, நீங்கள் சொல்வது போல, சகோதரர், என் இயேசுவின் ஊழியக்காரர் பவுல் ஏமாற்றுக்காரர் அல்ல. இயேசுவின் கையில் அவர் ஒரு எழுத்தாணி.

தேவனுடைய வழியை கெடுக்க அவர் வந்திருப்பாரானால், எனக்கு அது தெரிந்திருக்கும், ஆவியானவரும் அதை எனக்கு உணர்த்தியிருப்பார். இயேசுவின் நற்செய்தி இஸ்ரவேல் மக்களுக்கு மட்டுமே நான் சொல்லவேண்டும் என்று நினைத்திருக்கும் போது, அப்படி இல்லை, உலகமனைத்திற்கும் இந்த நற்செய்தி சொந்தம் என்றுச் சொல்லி, ஆவியானவர் என்னை அன்னிய மக்களுக்கும் இயேசுவைப் பற்றி சொல்லும்படி வழி நடத்தினார்(அப்.நடபடிகள் 10ம் அதிகாரம்). எனவே, ஆவியானவர் எங்களோடு உள்ளார் எனவே, எங்களை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் தங்கள் துர் செய்திகள் மூலம் வழி விலகச்செய்யமுடியாது.

அரசர்: அப்படியா, பவுலுக்காக இப்படி பரிந்து பேசுகிறாயே, ஒரு முறை உனக்கு எதிர்த்து பவுல் பேசி எல்லாருக்கும் முன்பாக உன்னை அவமானப்படுத்தினானாமே? நீ இயேசுவோடு இருந்தவனா அல்லது பவுல் இருந்தவனா? உன்னை விடவா அவனுக்கு மார்க்க அறிவு அதிகமாக இருக்கப்போகிறது? உனக்கு கீழே இருக்கிறவன் எல்லாருக்கும் முன்பாக உன்னை கேவலப்படுத்தினானே, உனக்கு வெட்கமாக இல்லை?

பேதுரு: அரசே, நான் சொல்வதை சிறிது கவனமாக கேளுங்கள். கிறிஸ்தவத்தில் ஒருவன் உயர்ந்தவன், மற்றோருவன் தாழ்ந்தவன் என்று யாரும் எண்ணக்கூடாது. இதே போல, ஒரு முறை இயேசுவின் சீடர்களாகிய நாங்கள் பரலோகத்தில் யார் உயர்ந்தவர் என்று பேசிக்கொள்ளும் போது, இயேசு ஒரு சிறு பிள்ளையை எடுத்து எங்கள் நடுவில் நிறுத்தி "இந்த பிள்ளையை போல" மாறுங்கள் என்றுச் சொன்னார். பெரியவன் சிறியவன் போல பணிவிடை செய்யவேண்டும் என்றுச் சொன்னார்

நான் ஒரு தவறு செய்யும் போது சகோதரர் பவுல் அதை சுட்டிக்காட்டியது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஏனென்றால், அப்படி பவுல் சுட்டிக்காட்டவில்லையானால், சில பெரியவர்கள் தவறு செய்யும் போது சுட்டிக்காட்டக்கூடாது என்ற தவறான பழக்கம் எல்லாரிடமும் வளர்ந்து விடும். ஆனால், இப்படி பவுல் சொன்னதால், தேவனுடைய கட்டளைக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும், மனிதர்களுக்கு அல்ல என்பது தெளிவாக விளங்கும்.

எனவே, எங்களிடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. இன்னொரு விவரத்தையும் சொல்லிவிடுகிறேன், அரசே. இயேசுவிடம் கூட நான் இருந்ததால், நான் ஒன்றும் அதிகம் கற்றவன் என்றோ, ஞானவான் என்றோ பொருள் இல்லை அரசே. உண்மையைச் சொல்லவேண்டுமானால், இயேசு யாருக்கு என்ன வேலை கொடுப்பார்? யார் மூலம் தம் சித்தத்தை நிறைவேற்றிக்கொள்வார் என்று அவர் சரியாக நிர்ணயம் எடுப்பார். யூதர்களுக்கு நற்செய்தி சொல்ல என்னை உருவாக்கிய அதே இயேசு தான், யூதர் அல்லாதவர்களுக்கு நற்செய்தி சொல்ல பவுலை ஏற்படுத்தினார். எனவே, நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மதித்து, உட்சாகப்படுத்தி, தேவைப்பட்டால் கடிந்துக்கொண்டு இயேசுவின் ஊழியத்தைச் செய்கிறோம் அவ்வளவு தான்.

அரசர்: அப்படியா! நாளை நான் பவுலிடமே பேசிக்கொள்கிறேன். நாளை சபைக்கு பவுலை அழைத்துவாருங்கள். பேதுரு, இன்று நீ போகலாம். தேவைப்பட்டால் நான் அழைத்தனுப்புகிறேன். நான் சொல்வதை நேரம் எடுத்து சரியாக சிந்தித்து உன் முடிவைச் சொல். நீ இஸ்லாமை ஏற்றுக்கொண்டால், கடைசி நபியாகிய முகமது(PBUH) விற்கு வெளிப்பட்ட வேதமாகிய குர்‍ஆன் வேதம் என்று நீ ஏற்றுக்கொள்வாயானால், உனக்கு பாதுகாப்பு கிடைக்கும். நீ சுதந்திரமாக இந்நாட்டில் நடமாடலாம். இல்லையானால், வரிகட்டவேண்டி வரும், இன்னும் பல இன்னல்களை சந்திக்கவேண்டி வரும். உனக்கு இரண்டு நாட்கள் அவகாசம் தருகிறேன், சிந்தித்து உன் முடிவைச் சொல். யாரங்கே? பேதுருவை அழைத்துச்செல்லுங்கள்.

பேதுரு: ஒரு நிமிடம் அரசே, என் முடிவைச் சொல்ல இரண்டு நாட்கள் எதற்கு, அது வீண். என் முடிவு மாறாது. வேண்டுமானால், நீங்கள் உங்கள் பொல்லாத வழியை விட்டுவிட்டு, இயேசுவின் மீது நம்பிக்கை வைத்து, தேவனின் நியாயத்தீர்ப்பு நாளில் பயமில்லாமல் தைரியமாக நிற்கவேண்டுமானால், இன்றே இயேசுவை உங்கள் உள்ளத்தில் வர அனுமதியுங்கள்.

[அரசரின் முகம் சிகப்பாக மாறுகிறது, காவலர்கள் பேதுருவை அழைத்துச்செல்கிறார்கள். மறுநாள் அரச சபைக்கு அப்போஸ்தலர் பவுல் அழைத்துவரப்படுகிறார், அவரிடம் அரசர் என்ன கேள்விகளை கேட்கிறார் என்றும், பவுல் எப்படி காரசாரமாக பதில் அளிக்கிறார் என்றும் இந்த உரையாடலின் அடுத்த பாகத்தில் பார்க்கலாம் கர்த்தருக்கு சித்தமானால்...]

Source: http://www.geocities.com/isa_koran/tamilpages/Articles/MuslimKingPeter.htm Contact: isa_koran@yahoo.co.in or isa.koran@gmail.com

And

Source: http://isakoran.blogspot.com/2007/11/1.html

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்