இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Monday, February 23, 2009

வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?

வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்?

ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?

இஸ்லாமும் நோவாவும்

முன்னுரை: நோவாவின் வெள்ளம் உலகம் முழுவதும் வியாபித்தது என்று பைபிள் கூறுகிறது, இதையே குர்‍ஆனும், ஆரம்ப கால இஸ்லாமியர்களும் கூறினார்கள். ஆனால், தற்கால இஸ்லாமிய அறிஞர்கள் வெள்ளம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே அதாவது நோவாவின் சமூகத்தார்களை மட்டுமே அழித்தது, பைபிள் சொல்வது தவறு என்றுச் சொல்கிறார்கள்.

குர்‍ஆன் சொல்வதும் "உலகம் முழுவதும் ஏற்பட்ட வெள்ளமே" என்று விளக்கும் கட்டுரையை இங்கு படிக்கவும்:

குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா? (DOES THE QURAN TEACH A LOCAL FLOOD?)

இந்த கட்டுரையில் நாம் தற்கால இஸ்லாமியர்கள் சொல்வது போல, வெள்ளமானது ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே ஏற்பட்டது என்பதை ஒரு விவாதத்திற்கு ஏற்றுக்கொண்டு, இதனால், விளையும் பிரச்சனைகள் என்ன? அவைகளை எப்படி இஸ்லாமியர்கள் சரி செய்வார்கள் என்பதை காண்போம்.

1) அல்லாஹ்வின் கட்டளை: ஒவ்வொரு வகையிலும் ஆண் பெண் கொண்ட ஒரு ஜோடியை கப்பலில் ஏற்றிக்கொள்

ஒவ்வொரு வகையான மிருகங்களில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என்று ஒரு ஜோடியை தன்னிடம் கப்பலில் ஏற்றிக்கொள் என்று அல்லாஹ் நோவாவிற்கு கட்டளையிடுகிறார். அதனை குர்‍ஆன் 11:40 என்ற வசனத்தில் படிக்கலாம்.

முஹம்மது ஜான் மொழிபெயர்ப்பு:

இறுதியாக, நம் உத்தரவு வந்து, அடுப்புப் பொங்கவே, (நாம் நூஹை நோக்கி;) "உயிர்ப் பிராணிகள் ஒவ்வொரு வகையிலிருந்தும் (ஆண் பெண் கொண்ட) ஒவ்வொரு ஜோடியை (அக்கப்பலில்) ஏற்றிக் கொள்ளும்; (மூழ்கடிக்கப்படுவார்கள் என்று எவர்களைக் குறித்து முன்பே நம்) வாக்கு ஏற்பட்டுவிட்டதோ அவர்களைத் தவிர் உம் குடும்பத்தாரையும், ஈமான் கொண்டவர்களையும் ஏற்றிக்கொள்ளும்" என்று நாம் கூறினோம்; வெகு சொற்ப மக்களைத் தவிர மற்றவர்கள் அவருடன் ஈமான் கொள்ளவில்லை. (குர்‍ஆன் 11:40)

பி.ஜைனுல் ஆபிதீன் மொழிபெயர்ப்பு:

நமது கட்டளை வந்து, தண்ணீர் பொங்கிய போது "ஒவ்வொன்றிலும் ஒரு ஜோடியையும், உமது குடும்பத்தாரில் நமது விதி முந்தி விட்டவர்களைத் தவிர மற்றவர்களையும், நம்பிக்கை கொண்டோரையும் ஏற்றிக் கொள்வீராக!" என்று கூறினோம். அவருடன் மிகச் சிலரே நம்பிக்கை கொண்டனர். (குர்‍ஆன் 11:40)

குர்‍ஆனும், இஸ்லாமியர்கள் நபி என்று கருதும் முஹம்மதுவும், மற்றும் ஆரம்பகால இஸ்லாமிய அறிஞர்களாகிய இபின் அப்பாஸ், போன்றோர்களும், மற்றும் இபின் கதீர் போன்ற குர்‍ஆன் விரிவுரையாளர்களும், நோவாவின் காலத்தில் ஏற்பட்ட வெள்ளம் பூமி அனைத்தும் வியாபித்தது என்றுச் சொல்வதை ஏற்றுக்கொள்ளாமல், பைபிளை குற்றம் பிடிப்பதற்காகவே "வெள்ளம் ஒரு பகுதியில் மட்டும் ஏற்பட்டது" என்றுச் சொல்லும் இஸ்லாமியர்களுக்கு கீழ் கண்ட கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.

ஒரு குறிப்பிட்ட இடம் மட்டுமே அழிக்கபோவதாக இருந்தால், ஏன் மிருகங்களில் ஆண் பெண் என்று ஒரு கோடி பாதுகாக்கப்படவேண்டும் என்று அல்லாஹ் விரும்பினார்/செயல்படுத்தினார்?

• அல்லாஹ் அழிக்க நினைத்தது, நோவாவின் சமூகத்தினரை மட்டுமே என்று சொன்னால், ஏன் அவர் மிருகங்களை பாதுகாக்க அதுவும் இனவிருத்தி அடைவதற்கு தேவையான ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் மிருகங்களை தன் கப்பலில் சேகரித்துக் கொள் என்று நோவாவிற்கு கட்டளையிடவேண்டும்?

• நோவாவும் அவரது சமூகத்தார்களும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வசித்து இருப்பார்கள், அவர்கள் சில கிலோ மீட்டர் தூரம் வியாபித்து இருக்கலாம், உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டால், ஒரு சின்ன ஊராக இருக்கலாம், அல்லது ஒரு சிறிய பட்டணமாக இருக்கலாம். ஒரு பேச்சுக்காக சென்னை பட்டணம் அளவிற்கு பெரிய இடத்தில் அவர்கள் வசித்ததாகவே கணக்கெடுத்துக் கொண்டாலும், அந்த இடத்தில் இருக்கும் மிருகங்களில் ஒரு ஆண் பெண் ஜோடியை பாதுகாக்கவேண்டிய அவசியம் என்ன?

• ஒரு இடத்தில் இருக்கும் மிருகங்கள் அடுத்த இடத்தில் இருக்காதோ? நோவாவின் சமூகத்தார்கள் வாழ்ந்த இடத்தில் இருந்த மிருகங்கள் வேறு இடத்தில் இல்லாமல் போகுமா? இஸ்லாமியர்கள் சிந்திக்கவேண்டும்.

• நோவாவின் காலத்தில் அவரது இருப்பிடமுள்ள இடத்தில் மட்டுமே மிருகங்கள் இருந்தனவா? இவ்வளவு பெரிய பூமியில் வேறு எங்குமே மிருகங்கள் இல்லையா?

• நோவாவின் வசிப்பிடத்திலுள்ள மிருகங்களை அப்படியே மனிதர்களோடு சேர்த்து அழித்துவிட்டால், உலகத்தில் அந்த மிருக இனமே இல்லாமல் போகும் என்று அல்லாஹ் சிந்தித்து, ஒரு ஜோடியை பாதுகாக்கவேண்டிய அவசியமென்ன? உதாரணத்திற்கு, நோவா சென்னை பட்டணத்தில் வசித்திருந்தால், அல்லாஹ் சென்னையை மட்டும் அழிக்க திட்டமிட்டிருந்தால், சென்னையில் வசிக்கும் ஒரு ஜோடி ஆடுகளை(ஆண் பெண்) பாதுகாக்க வேண்டிய அவசியமென்ன? சென்னையில் இருக்கும் ஆடுகள், மதுரையில் இருக்காதா? மும்பையில் இருக்காதா? கொல்கத்தாவில் இருக்காதா? அதிகபட்சமாக மற்ற கண்டங்களில், நாடுகளில் இருக்காதா?

• சிலர், ஆஸ்திரேலியாவில் மட்டும் காணப்படும் கங்காரு போன்ற மிருகங்களை பாதுகாக்கும் வண்ணம் அல்லாஹ் இப்படி சொல்லியிருக்கலாம் அல்லவா? என்று சொல்லக்கூடும். நீங்கள் சொல்வது உண்மை தான், ஆனால், நாம் மேலே படித்த குர்‍ஆன் வசனத்தின் படி, அசாதாரணமாக காணப்படும் மிருகங்களை மட்டுமே பாதுகாக்கும் படி அல்லாஹ் சொல்லவில்லை, "ஒவ்வொரு இனத்திலும் ஒரு ஜோடி" என்று பொதுவாகச் சொல்லியுள்ளார். ஆகவே, உங்களின் இந்த வாதம் சரியானது அல்ல.

மேற்கண்ட விவரங்களிலிருந்து நாம் காண்பது என்னவென்றால், குர்‍ஆன் சொல்லும் பெரு வெள்ளம், ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே ஏற்பட்ட வெள்ளமல்ல, அது உலகம் முழுவதும் பரவிய வெள்ளமே, அப்போது மட்டுமே, ஒவ்வொரு இனத்தையும் பாதுகாக்க ஒரு ஜோடி ஆண் பெண் மிருகங்கள் தேவைப்படும். ஆக, நோவாவின் வெள்ளம் சம்மந்தப்பட்டு நவீன கால இஸ்லாமியர்களின் நவீன எண்ணங்கள் தவறானவைகளாகும்.

2) பூமி முழுவதும் வெள்ளத்தால் சூழாத போது தப்பிக்க கப்பல் எதற்கு?

முதலாவதாக நாம் மேலே கண்டோம், மிருகங்களை பாதுகாக்க அல்லாஹ் செய்த ஏற்பாடு, அந்த பெரு வெள்ளம் பூமியனைத்திற்கும் பரவியது என்பதை காட்டுகிறது.

இரண்டாவதாக, ஒரு குடும்பத்தை காப்பாற்ற அதுவும் ஒரு குறிப்பிட்ட இடம் மட்டுமே வெள்ளத்தில் மூழ்கடிக்க, அந்த குடும்பம் மற்றும் மிருகங்கள் தப்பிக்க கப்பல் எதற்கு? வெள்ளம் சூழாத இடத்திற்கு இடம் பெயர்ந்து இருக்கலாமே?

ஒரு குறிப்பிட்ட இடத்தை வெள்ளத்தால் அழிக்கும் போது, ஒரு கப்பலைக் கொண்டு சமாளித்தது அறிவுடமையாக இருக்குமா சிந்தியுங்கள்.

ஒருவேளை நான் கடவுளாக இருப்பேனானாள், ஒரு இடத்தை மட்டுமே அழிக்க திட்டமிட்டால், நோவா தன் மக்களை எச்சரிக்கை செய்யும் படி சில ஆண்டுகள் அவகாசம் கொடுப்பேன், பிறகு, அவரை இருக்கும் இடத்தை விட்டு, எங்கு வெள்ளம் வராதோ அவ்வளவு தூரம் அவரை கொண்டுச் சென்று அல்லது அவரை பிரயாணம் செய்யச் சொல்லி, பிறகு அழித்து இருப்பேன். ஒரு தனி குடும்பத்திற்கு ஒரு பெரிய கப்பல் கட்ட தேவைப்படும் ஆண்டுகள் அவர்கள் இடம் பெயர்ந்து இருந்தால், அதிக தூரம் சென்று இருப்பார்கள்

சென்னையில் வெள்ளம் கொண்டுவர விரும்பினால், வேறு தூரமான மாவட்டமுள்ள இடத்திற்கு சென்று விடு என்று சொல்லிவிட்டால் முடிந்துவிட்டது கதை, அதே போல மிருகங்களையும் இடம் பெயர்ந்து செல்லச் சொல்லிவிட்டால் முடிந்துவிட்டது கதை. இதை செய்வதை விட்டுவிட்டு, ஒரு இடத்தை வெள்ளத்தால் அழிக்க, ஒரு பெரிய கப்பலை தயார் செய்யச் சொல்லி, அதுவும் எந்த தொழில் நுட்பமும், இல்லாத அந்த காலத்தில் அவ்வளவு பெரிய கப்பலை இந்த சின்ன விஷயத்திற்கு தயார் செய்யச் சொல்வது, அறிவுடமையா?

சிலர் கேட்கலாம், மிருகங்கள் எப்படி இடம்பெயரும் என்று? இதுமிகவும் சுலபம், மிருகங்கள் இயற்கையாகவே வரும் ஆபத்தை கண்டு தானாகவே இடம் பெயரும், ஒரு வேளை அவைகள் இடம் பெயரவில்லையானாலும், இந்த வெள்ளத்தை கொண்டு வருபவர் அல்லாஹ் அதாவது இறைவன் தானே, அவனால் எல்லாம் கூடும், ஒன்றுமில்லாத போது மிருகங்களை உருவாக்கியவர் மிருகங்களை இடம் பெயர வைப்பது அவருக்கு கடினமான வேலையா?

ஒரு பகுதியை வெள்ளத்தால் அழிக்க,

• ஒரு பெரிய கப்பலை தயார் படுத்தச் சொல்லி,

• மிருகங்களை ஜோடியாக அதனுள் அனுப்பி,

• வெள்ளத்தை கொண்டு வந்து, பிறகு

• தண்ணீரை பூமியிலிருந்து வடியும் படி செய்து, அதுவரை கப்பலில் பிரயாணம் செய்து

• பிறகு அந்த ஒரு குடும்பத்தையும், மிருகங்களையும் அந்த இடத்தில் வைப்பது என்பது

எல்லாம் அறிந்த இறைவன் செய்தார் என்றுச் சொல்வது அறிவுடமையா?

இதற்கு பதிலாக,

• பல ஆண்டுகள் தன் மக்களை எச்சரிக்கை செய்யச் சொல்லி,

• நோவாவை வேறு பாதுகாப்பான இடத்திற்கு செல்ல உதவி செய்து, (ஆபிரகாமை எப்படி தூரமாக இடத்திலிருந்து கொண்டு வந்தார் அது போல)

• அந்த அழியும் பகுதியில் இருக்கும் விசேஷித்த மிருகங்களை (அதாவது கங்காரு போன்ற வேறு எங்கும் இல்லாத மிருகங்களை) மட்டுமே இடம் பெயரச் செய்து

• வெள்ளம் கொண்டு அழித்துவிட்டால், முடிந்தது வேலை.

சென்னையில் வெள்ளமும், அரசாங்கத்தின் டைடானிக் கப்பல் அறிவுரையும்:

வெள்ளமானது ஒரு குறிபிட்ட இடத்தில் மட்டுமே வந்தது என்றுச் சொல்பவர்களின் கருத்து எப்படி இருக்கிறது தெரியுமா?

சென்னையில் வெள்ளம் வரும் என்று தெரிந்தவுடன், அரசாங்கம், எல்லா மக்களையும் வேறு இடத்திற்கு அனுப்பாமல், ஒரு டைடானிக் போன்ற ஒரு கப்பலை தயார் செய்து, "சென்னை வாசிகளே, நீங்கள் எல்லாரும் இந்த கப்பலுக்குள் ஏறிக்கொள்ளுங்கள், அதில் எல்லா உணவு, தங்கும் வசதிகள் உண்டு, எத்தனை மாதங்கள் ஆனாலும் சரி, நாம் வெள்ளத்தில் மூழ்காமல், கப்பலிலேயே சுற்றிக்கொண்டு இருப்போம், பல‌ (ஆறு) மாதம் கழித்து தண்ணீர் வழிந்த பிறகு, நாம் மறுபடியும் சென்னையில் வசிக்கலாம்" என்றுச் சொல்வது போல உள்ளது.

அடுத்த மாநிலம, அல்லது மாவட்டம் நன்றாக இருக்கிறதே, அங்கு வெள்ளம் இல்லையே, அங்கே பாதுகாப்பாக நாம் இருப்போம், வெள்ளம் வடிந்த பிறகு சென்னைக்கு வரலாம் என்றுச் சொல்வதை விட்டுவிட்டு, ஒரு கப்பலில் ஆறுமாதம் சென்னையைச் சுற்றியே வலம் வர அறிவுரை கூறுவது அறிவுடமையாக இருக்குமா?

இப்படி இருக்கிறது, நோவாவின் வெள்ளம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே என்றுச் சொல்வது. வெள்ளம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வந்தது என்றுச் சொல்வதில் தவறில்லை, ஆனால், குர்‍ஆனின் விவரங்கள் அனைத்தும் இதற்கு எதிராக இருக்கிறதே! இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?

சென்னையில் வெள்ளம் வந்தால், உலகத்தில் கணக்கிலடங்கா ஆடுகள் பாதுகாப்பாக இருக்கும் போது, சென்னையிலிருந்து ஒரு ஜோடி ஆண் பெண் ஆடுகளை பாதுகாக்க வேண்டிய அவசியமென்ன?

சென்னையில் வெள்ளம் வந்தால், மதுரைக்கு செல்லவேண்டியது தானே? கேரளாவிற்கு செல்லவேண்டியது தானே! அவ்வளவு ஏன் வட இந்தியாவிற்கு செல்லவேண்டியது தானே?

லோத்து வாழ்ந்த இடம் அழிக்கப்படும் போது, அவரை அவ்வூர் விட்டு வெளியேற்றவில்லையா இறைவன்?

சோதோம் கோமோரா அக்கியால் அழியும் என்பதால், லோத்துவிற்கும் அவரது குடும்பத்தார்களுக்கும் ஃபையர் புரூப் (Fire Proof Dress) உடைகளை கொடுத்து, இந்த பட்டணத்திலேயே இருங்கள் என்றுச் சொன்னாரா இறைவன்?

முடிவுரை: முடிவாகச் சொல்லிக்கொள்கிறேன், நோவாவின் வெள்ளம் பூமியனைத்திலும் ஆக்கிரமித்த ஒன்றாகும், இதனை குர்‍ஆனும், முஹம்மதுவும் இதர இஸ்லாமிய அறிஞர்களும் அங்கீகரித்துள்ளார்கள் (இக்கட்டுரையை படிக்கவும்: குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா? (DOES THE QURAN TEACH A LOCAL FLOOD?). இல்லை இல்லை, நாங்கள் ஒப்புக்கொள்ளமுடியாது என்றுச் சொன்னால், இந்த கட்டுரையில் நாம் கண்ட பிரச்சனைகளுக்கு பதில் என்ன என்று நீங்கள் தேடிப்பார்க்க வேண்டியவர்களாக இருப்பீர்கள்.

ஒரு சின்ன இடத்தில் வெள்ளம்கொண்டுவர இவ்வளவு பெரிய வேலையை அதுவும் சம்மந்தமில்லாத வேலையை செய்வதற்கு இறைவன் நம்மைப் போல அறிவில் குறைந்தவன் அல்ல என்பதை மட்டும் நான் சொல்லிக்கொள்கிறேன்.Isa Koran Home Page Back - Koran Index

 

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்