இஸ்லாம் அமைதி மார்கமா? இஸ்லாம் இனிய மார்கமா? இஸ்லாம் உண்மையான மார்கமா?

ஆன்சரிங் இஸ்லாம்

பல உண்மைகளின் உறைவிடம்,உள்ளே சென்று பாருங்கள்

சத்தியவான் தளம் செல்ல

Showing posts with label கிறிஸ்தவம். Show all posts
Showing posts with label கிறிஸ்தவம். Show all posts

Saturday, September 12, 2009

Answering Mist: குர்‍ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா


 

Answering Mist: இஸ்லாமியராக மாற பணம் கொடுத்த முஹம்மது
 
குர்‍ஆன் 9:60ன் "உள்ளங்கள் ஈர்க்கப்பட" பணம் பட்டுவாடா
 
 
 
முன்னுரை: மிஸ்ட் என்ற பெயரில் இஸ்லாமிய சகோதரர் ஒருவர், ஈஸா குர்‍‍ஆன் கட்டுரைகளில் பின்னூட்டமிட்டுக் கொண்டு இருக்கிறார். Dr. ஜாகிர் நாயக் அவர்கள் பற்றிய கட்டுரைக்கு நான் கொடுத்திருந்த ஒரு பின்னூட்டத்திற்கு, மிஸ்ட் அவர்கள் கீழ் கண்ட விதமாக மறுபின்னூட்டமிட்டார்.
 
 
Mist said:

படுக்கை அறையில் வளர்ப்பதை விட கேவலமானது அதாவது கூட்டி கொடுப்பதற்கு சமமானது பணம் கொடுத்து ஆசை வார்த்தை காட்டி ஒருத்தனுடைய இயலாமையை பயன்படுத்தி மதம் மாற்றுவது.. //

மூலம்: பின்னூட்ட பகுதியைக் (comments section) காணவும்.
 
(மிஸ்ட் அவர்களின் மூழு பின்னூட்டத்தையும், அதற்கான என் பதிலையும் இந்த "Answer Mist: இந்தியாவிலும் இஸ்லாமிய நாடுகளிலும் அபோஸ்டசி" என்ற‌ கட்டுரையில் படிக்கவும்.

 
இந்த தற்போதைய‌ கட்டுரையில் அவரது மேலே கண்ட‌ குறிப்பிட்ட விமர்சனம் பற்றி காண்போம்.

அதாவது பணம் கொடுத்து மதம் மாற்றுவது என்பது "கூட்டிக் கொடுப்பதற்கு சமம், அல்லது அவ்வளவு கீழ்தரமானது" என்று கூறுகிறார். பணம் கொடுத்து மதம் மாற்றுவது என்பது கீழ்தரமானது என்பது தான் என் கருத்தும். ஆனால், மிஸ்ட் அவர்கள் இன்னும் ஒரு படி மேலே சென்று "இப்படி செய்வது கூட்டிக் கொடுப்பது" போன்ற பாவத்திற்கு சமமானது என்று கூறியுள்ளார்.

 
இவருக்கு இஸ்லாம் பற்றி தெரிந்திருந்தால், கு‍ர்‍ஆன் ஜகாத்தை யார் யாருக்குக் கொடுக்கச் சொல்கிறது போன்ற விவரங்கள் தெரிந்திருந்தால் இப்படி கூறியிருக்கமாட்டார். இந்த கட்டுரையில் சில விவரங்களை நாம் காணப்போகிறோம். இந்த ஆதாரங்களின் படி "கூட்டிக் கொடுப்பது போன்ற பாவத்தை முஹம்மது செய்துள்ளார்" என்ற முடிவிற்கு மிஸ்ட் வரவேண்டியிருக்கும். ஏனென்றால், குர்‍ஆன் வசனமும், சஹீஹ் புகாரி மற்றும் முஸ்லிம் ஹதீஸ்களும் சொல்கின்றபடி, பணத்தை கொடுத்தாவது ஒரு சிலரை இஸ்லாமியராக முஹம்மது மாற்றியுள்ளார்.

 
நம்முடைய ஆதாரங்கள் கீழ் கண்ட இஸ்லாமிய நூல்களிலிருந்து கொடுக்கப்படுகிறது:
 
  • குர்‍ஆன்
  • சஹீஹ் புகாரி ஹதீஸ்
  • சஹீஹ் முஸ்லிம் ஹதீஸ்
  • இபின் கதீர் விரிவுரை
  • இபின் இஷாக்:முஹம்மதுவின் வாழ்க்கை சரிதை (சீரத் ரஸுல் அல்லாஹ்)

 
இனி குர்‍ஆன் 9:60ம் வசனத்தின் விளக்கத்திற்குள் செல்வோம்
 
 
1) பணத்தைக் கொடுத்து இதர மக்களை இஸ்லாமுக்கு ஈர்க்க குர்‍ஆன் கட்டளை:

 
குர்‍ஆன் 9ம் அதிகாரம் 60ம் வசன கூற்றின்படி, "ஜகாத்" அல்லது "ஸகாத்" என்றுச் சொல்லக்கூடிய பணத்திலிருந்து ஒரு பகுதியை "இஸ்லாமியரல்லாதவர்களை ஈர்க்க பயன்படுத்தவேண்டும்". இந்த வசனத்தை இரண்டு தமிழாக்கத்தில் படிப்போம்.
 
முஹம்மது ஜான் தமிழாக்கம்

(ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன். (குர்‍ஆன் 9:60)

 
பீ. ஜைனுல் ஆபிதீன் தமிழாக்கம்

யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்படவேண்டியவர்களுக்கும்204. அடிமை(களை விடுதலை செய்வதற்)கும், கடன்பட்டோருக்கும், அல்லாஹ்வின் பாதையிலும்,205 நாடோடிகளுக்கும்206 தர்மங்கள் உரியனவாகும். இது அல்லாஹ்வின் கடமை. அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்130 (குர்‍ஆன் 9:60)
 
மிஸ்ட் அவர்களே, இஸ்லாமின் பக்கம் உள்ளங்கள் ஈர்க்கப்பட பணத்தை பயன்படுத்தலாம், கொடுக்கலாம் என்று இவ்வசனம் சொல்கிறதே, உங்களின் விளக்கம் அல்லது கருத்து இந்த வசனத்தைச் சொன்னவருக்கு பொருந்துமா? தெரிவிக்கவும்.
 
 
2) பீஜே அவர்களின் "உள்ளங்கள் ஈர்க்கப்படவேண்டியவர்கள்" பற்றிய விளக்கம்:

 
பீஜே அவர்களும் "உள்ளங்கள் ஈர்க்கப்படவேண்டியவர்கள்" என்பது "இஸ்லாமியரல்லாதவர்களைக் குறிக்கும்" என்று கூறுகிறார்.
 
204. உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும் :

ஸகாத் நிதியைப் பெறத் தகுதியானவர்களில் முஸ்லிமல்லாதவர்களும் ஒரு பிரிவினராவர். முஸ்லிமல்லாதவர்களில் யார் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் உளமாற அன்பு செலுத்துகிறார்களோ அத்தகையோருக்கும் ஸகாத் நிதியைச் செலவிடலாம். (திருக்குர்‍ஆன் 9:60)

உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காக என்பது இத்தகையோரையே குறிக்கிறது. பகைமை பாராட்டும் முஸ்லிமல்லாதவர்கள் பகைமையைக் கைவிடுவார்கள் என்றால் அத்தகையோருக்கும் கொடுக்கலாம். 'உள்ளங்கள் ஈர்க்கப்பட' என்பதில் இவர்களும் அடங்குவார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு வழங்கியுள்ளனர். (நூல்: முஸ்லிம் 4275, 4277)

மூலம்: formats mine
 
முஸ்லிமல்லாதவர்களுக்கு ஜகாத் தரப்படவேண்டும் என்று இவ்வசனம் சொல்கிறது என்று பிஜே அவர்கள் விளக்கம் கூறியுள்ளார்கள். அதாவது, இஸ்லாமியர்கள் ஹலாலான முறையில் சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை ஜகாத்தாக கொடுக்கவேண்டும். அதில் ஒரு பகுதியை காபிர்களுக்கு தரப்படவேண்டும், அதுவும் அவர்கள் இஸ்லாமின் பக்கம் திரும்பவேண்டும் என்பதற்காக தரப்படவேண்டும். எனவே, மிஸ்ட் அவர்களே, பணத்தின் ஆசைக்காட்டி இஸ்லாமின் பக்கம் ஈர்க்கக்கிறவர்கள் உங்களின் கருத்துப்படி "கூட்டிக்கொடுப்பவர்கள்", இது சரியாக இஸ்லாமுக்கு பொருந்துகிறதா? விளக்கவும்.

3) இபின் கதிர் இவ்வசனத்தின் விளக்கத்தை கீழ்கண்டவாறு கூறுகிறார்:
 
"இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும்" என்ற பிரிவில் வருபவர்கள் இவர்களாவார்கள்: அதாவது இஸ்லாமுக்கு மாறுவதற்காக பணம் கொடுக்கப்பட்டவர்கள் ஆவார்கள். இது எப்படியென்றால், ஹுனைன் யுத்தத்தில் கிடைத்த பொருட்களிலிருந்து முஹம்மது (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) சில பொருட்களை சஃப்வான் பின் உமய்யா என்பவருக்கு கொடுத்தார்கள். இவர் ஒரு இஸ்லாமியரல்லாதவராக (முஸ்ரிக்காக) இருந்து அந்த யுத்தத்தில் சண்டையிட்டு இருந்தார்.... (ஸயித் பின் அல் மஸியப் என்பவரிடமிருந்து, யூனிஸ் அல் ஜஹ்ரியிடமிருந்து, இபின் அல் முபாரக் என்பவரிடமிருந்து, ஜகரியா பின் உத்தி அறிவித்ததாவது) சஃப்வான் பின் உமய்யா கூறியதாக இமாம் அஹமத் கூறியதாவது: "இறைத்தூதர் - அவர் மீது சாந்தி உண்டாகட்டும், ஹுனைன் யுத்தத்தில் எனக்கு பொருட்கள் (பணம்) கொடுத்தார்கள், நான் அதிகமாக வெறுக்கும் நபர்களில் இறைத்துதரும் ஒருவராக இருந்தார்கள்; ஆனால், "நான் அதிகமாக நேசிக்கும் நபர்களில் அவர் ஒருவராக இருக்கிறார் என்று நான் நினைக்கும் வரையிலும் அவர் எனக்கு பொருட்களை கொடுத்துக்கொண்டே இருந்தார்கள்" [*].

மூலம்: இஸ்லாமுக்கு மாற பணம் கொடுத்த முஹம்மது (http://isakoran.blogspot.com/2009/08/blog-post.html ) 
 
மிஸ்ட் அவர்களே, இதை கவனியுங்கள்:

"நான் அதிகமாக வெறுக்கும் நபர்களில் இறைத்துதரும் ஒருவராக இருந்தார்கள்; ஆனால், நான் அதிகமாக நேசிக்கும் நபர்களில் அவர் ஒருவராக இருக்கிறார் என்று நான் நினைக்கும் வரையிலும் அவர் எனக்கு பொருட்களை கொடுத்துக்கொண்டே இருந்தார்கள் "

உங்கள் நபி கொடுத்தாராம், கொடுத்தாராம் கொடுத்துக்கொண்டே இருந்தாராம், எதுவரையில்? அந்த நபர் முஹம்மதுவை நேசிக்கும் நபராக மாறும்வரை கொத்துக்கொண்டே இருந்தாராம்... இது எதற்கு சமம் - சிறிது சொல்லமுடியுமா?

மிஸ்ட் அவர்களே உங்களின் கருத்துப்படி, இது ஆசைக் காட்டி மசியவைப்பதா? அல்லது லஞ்சம் கொடுத்து இஸ்லாமியராக மாற்றுவதா? அல்லது கூட்டிக்கொடுப்பதா?
 
 
4) சஹீஹ் புகாரி

 
சில நேரங்களில் முஹம்மது இஸ்லாமியரல்லாதவர்களுக்கு (அல்லது புதிதாக இஸ்லாமியராக மாறியவர்களுக்கு) பொருட்கள்/பணம் தருவதைக் கண்டு " இதர இஸ்லாமியர்கள் கோபித்துக் கொண்டார்கள்", இன்னும் சிலர் இது சரியில்லை, நீதியில்லை என்று உங்கள் நபி மீது கோபம் கொண்டார்கள். பிறகு முஹம்மது அப்படிப்பட்டவர்களை சமாதானப்படுத்தியுள்ளார்.

மிஸ்ட் அவர்களே, கீழ் கண்ட புகாரி ஹதீஸ்களை படித்து உங்கள் கருத்தை திரும்பச் சொல்லமுடியுமா?
 
பாகம் 5, அத்தியாயம் 65, எண் 4667

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்களுக்கு ஒரு பொருள் அனுப்பி வைக்கப்பட்டது. அதை அவர்கள் (புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய) நான்கு பேருக்கிடையே பங்கிட்டார்கள். மேலும், 'இவர்களுடைய உள்ளங்களை நான் இணக்கமாக்குகிறேன்' என்று கூறினார்கள். (அப்போது பங்கு கிடைக்காத) ஒருவர் 'நீங்கள் நீதி செய்யவில்லை' என்று கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், இவருடைய சந்ததியினரிடமிருந்து (வேட்டைப் பிராணியின் உடலிலிருந்து) அம்பு வெளியேறிச் செல்வதைப் போல் மார்க்கம் வெளியேறிச் சென்றுவிடுகிற கூட்டத்தினர் தோன்றுவர்' என்று கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 60, எண் 3344

அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

அலீ(ரலி) (யமனிலிருந்து) நபி(ஸல்) அவர்களிடம் சிறிய தங்கக் கட்டி ஒன்றை அனுப்பி வைத்தார்கள். அதை நபி(ஸல்) அவர்கள் அக்ரவு இப்னு ஹாபிஸ் அல்ஹன்ழலீ அல்முஜாஷியீ(ரலி), உயைனா இப்னு பத்ர் அல் ஃபஸாரீ(ரலி), பனூ நப்ஹான் குலத்தவரில் ஒருவரான ஸைத் அத் தாயீ(ரலி) மற்றும் பனூ கிலாப் குலத்தாரில் ஒருவரான அல்கமா இப்னு உலாஸா அல் ஆமிரி(ரலி) ஆகிய நால்வரிடையே பங்கிட்டுவிட்டார்கள். அதனால் குறைஷிகளும் அன்சாரிகளும கோபமடைந்து, 'நஜ்து வாசிகளின் தலைவர்களுக்குக் கொடுக்கிறார்; நம்மைவிட்டுவிடுகிறாரே" என்று கூறினார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'இவர்கள் (இப்போது தான் இஸ்லாத்தை தழுவியிருப்பதால்) அவர்களின் உள்ளங்களை (முழுமையாக) இணக்கமாக்குவதற்காக (அவர்களுடன் நேசம் பாராட்டும் விதத்தில்) தான் கொடுத்தேன்" என்று கூறினார்கள். ………..

பாகம் 4, அத்தியாயம் 64, எண் 4332

அனஸ்(ரலி) அறிவித்தார்

மக்கா வெற்றியின் போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் குறைஷிகளுக்கிடையே போர்ச் செல்வங்களைப் பங்கிட்டார்கள். எனவே, அன்சாரிகள் (தமக்குப் பங்கு தரவில்லையே என்று) கோபித்துக் கொண்டார்கள். (இதையறிந்த) நபி(ஸல்) அவர்கள், 'மக்கள் உலகச் செல்வத்தை எடுத்துக் கொண்டு செல்ல, நீங்கள் அல்லாஹ்வின் தூதரையே உங்களுடன் கொண்டு செல்வதை விரும்பவில்லையா?' என்று கேட்டார்கள். அதற்கு அன்சாரிகள், 'ஆம், (அதைத் தான் விரும்புகிறோம்)'' என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'மக்கள் ஒரு கணவாயிலோ, பள்ளத்தாக்கிலோ சென்றால், நான் அன்சாரிகளின் கணவாயிலோ, பள்ளத்தாக்கிலோ தான் செல்வேன்'' என்று கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 64, எண் 4334

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் அன்சாரிகளில் சிலரை ஒன்று கூட்டி, '(இந்தக்) குறைஷிகள், அறியாமைக் கொள்கையை இப்போது தான் கைவிட்டுப் புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்கள்; (இஸ்லாத்தை ஏற்றதனல் நேரும்) சோதனைகளுக்குப் புதியவர்கள். எனவே, அவர்களுக்கு நிவராணம் வழங்கவும், (இஸ்லாத்துடன்) அவர்களுக்கு இணக்கத்தை ஏற்படுத்தவும் விரும்பினேன். மக்கள் உலகச் செல்வத்தைப் பெற்றுக் கொண்டு திரும்பிச் செல்ல, நீங்கள் அல்லாஹ்வின் தூதருடனேயே உங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்வதை நீங்கள் விரும்ப வில்லையா?' என்று கேட்டார்கள். அன்சாரிகள், 'ஆம் (அதைத் தான் விரும்புகிறோம்)'' என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'மக்கள் ஒரு கணவாயில் செல்ல, அன்சாரிகள் வேறொரு கணவாயில் செல்வார்களாயின், நான் அன்சாரிகளின் கணவாயில் தான் அல்லது அன்சாரிகளின் பள்ளத்தாக்கில் தான்... செல்வேன்'' என்று கூறினார்கள்.

பாகம் 4, அத்தியாயம் 64, எண் 4333

அனஸ்(ரலி) அறிவித்தார்

…………. பின்னர், நபி(ஸல்) அவர்கள் (மக்கா வெற்றியில்) மன்னிப்பளிக்கப்ட்டு (புதிய முஸ்லிம்களாக) இருந்தவர்களுக்கும் முஸாஜிர்களுக்கும் (போர்ச் செல்வத்தில் பங்கு) கொடுத்தார்கள். அன்சாரிகளுக்கு எதையும் கொடுக்கவில்லை. அன்சாரிகள் (தமக்குக் கொடுக்காததைக் குறித்து அதிருப்தியுடன்) பேசினர். உடனே நபி(ஸல்) அவர்கள், அன்சாரிகளை அழைத்து (தாமிருந்த) கூடாரத்தினுள் இருக்கச் செய்து, 'இந்த மக்கள் ஆடுகளையும் ஒட்டகங்களையும் கொண்டு செல்ல, நீங்கள் அல்லாஹ்வின் தூதரையே கொண்டு செல்வதை விரும்பவில்லையா?' என்று கேட்டார்கள். பிறகு நபி(ஸல்) அவர்கள், 'மக்கள் ஒரு கணவாயில் நடந்து செல்ல, அன்சாரிகள் வேறொரு கணவாயில் சென்றால், நான் அன்சாரிகளின் கணவாயையே தேர்ந்தெடுப்பேன்'' என்று கூறினார்கள்.
 
5) சஹீஹ் முஸ்லீம் ஹதீஸ்

திர்மிதி ஹதீஸிலிருந்து இபின் கதீர் அவர்கள் விளக்கியபடியே, முஸ்லிம் ஹதீஸிலும் வந்துள்ளது. மிஸ்ட் அவர்களே, இந்த ஹதீஸ் சொல்வது ஆசைக் காட்டுவது ஆகாதா? இது கூட்டிக்கொடுப்பது ஆகாதா? சிறிது விளக்குங்களேன்.
 
...அல்லாஹ்வின் தூதர் (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) சஃப்வன் பி. உமய்யாவிற்கு நூறு ஒட்டகங்களைக் கொடுத்தார்கள். அவர் மறுபடியும் அவருக்கு நூறு ஒட்டகங்களைக் கொடுத்தார்கள், மறுபடியும் நூறு ஒட்டகங்கள் கொடுத்தார்கள். சஃப்வான் கூறியதாக ஸயத் பி. முஸய்யிப் கூறியதாவது, "நான் வெறுப்பவர்களில் அதிகமாக வெறுக்கும் நபராக அல்லாஹ்வின் தூதர் (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) அவர்கள் இருந்தார்கள், அவர் எனக்கு தொடர்ந்து கொடுத்துக்கொண்டே இருந்தார், எதுவரையில் என்றால், நான் அதிகமாக நேசிக்கும் நபராக அவரை நான் நினைக்கும் வரையிலும் அவர் கொடுத்துக்கொண்டே இருந்தார்". (என் சொந்த மொழியாக்கம், இதன் மூலம் ஆங்கிலத்தில் கீழே உள்ளது)

Book 030, Number 5730:

…., and Allah's Messenger (may peace be upon him) gave one hundred camels to Safwan b. Umayya. He again gave him one hundred camels, and then again gave him one hundred camels. Sa'id b. Musayyib said that Safwan told him: (By Allah) Allah's Messenger (may peace be upon him) gave me what he gave me (and my state of mind at that time was) that he was the most detested person amongst people in my eyes. But he continued giving to me until now he is the dearest of people to me.
 
6) இபின் இஷாக் - முஹம்மதுவின் வாழ்க்கை வரலாறு

முஹம்மது பணத்தைக் கொடுத்து ஆசைக் காட்டி மட்டுமல்ல, இதர மக்களை பயமுறுத்தியும் இஸ்லாமுக்கு அழைத்துள்ளார்.
 
மாலிக் என்பவரிடம் கீழ் கண்டவாறு கூறும் படி இறைத்தூதர் சொன்னார்கள்:

"மாலிக் ஒரு முஸ்லிமாக மாறி தன்னிடம் வந்தால் அப்போது அவரது குடும்பத்தையும் சொத்துக்களையும் திரும்ப கொடுத்து, இன்னும் நூறு ஒட்டகங்களையும் தருவேன்"

.... இதைக் கேட்டவுடன் மாலிக் எழுந்து.... இறைத்தூதரிடம் சேர புறப்பட்டு வந்தார்... அவர் (முஹம்மது) மாலிக்கிற்கு அவரது குடும்பத்தையும், சொத்துக்களையும் கொடுத்து, பிறகு நூறு ஒட்டகங்களையும் கொடுத்தார்கள். மாலிக் மிகவும் சிறப்பான ஒரு முஸ்லிமாக மாறினார் (இபின் இஷாக், சீரத் ரஸுல் அல்லாஹ், பக்கம் 593)

The apostle told them to tell Malik that if he came to him as a Muslim he would return his family and property to him and give him a hundred camels. On hearing this Malik came out ... and rode off to join the apostle ... He (Muhammad) gave him back his family and property and gave him a hundred camels. He became an excellent Muslim. (Ibn Ishaq, Sirat Rasul Allah, p. 593)
 
மிஸ்ட் அவர்களின் கூற்றை இன்னொரு முறை படிப்பது நன்று:

//Mist said:

படுக்கை அறையில் வளர்ப்பதை விட கேவலமானது அதாவது கூட்டி கொடுப்பதற்கு சமமானது பணம் கொடுத்து ஆசை வார்த்தை காட்டி ஒருத்தனுடைய இயலாமையை பயன்படுத்தி மதம் மாற்றுவது.. //
 
 
மிஸ்ட் அவர்களே உங்களின் வரிகளில் பயன்படுத்திய வார்த்தைகளின் படியெல்லாம் உங்கள் முஹம்மது செய்துள்ளார். அதாவது "பணம் கொடுத்து ஆசை வார்த்தைக் காட்டி ஒருத்தனுடைய இயலாமையை பயன்படுத்தி மதம் மாற்றுவது" என்ற உங்களின் வார்த்தைகளின் சாராம்சத்தின்படி, அப்படியே முஹம்மது செய்துள்ளார்.

 
இந்த மாலிக் என்பவரை பாருங்கள், அவர் இஸ்லாமியராக மாறினால், அவரது குடும்பத்தை (மனைவி பிள்ளைகளை...) திரும்ப தருவாராம்... இன்னும் அவரது சொத்துக்களையே திரும்ப தருவாராம்... இன்னும் அதிகமாக (லஞ்சம்) நூறு ஒட்டகங்களைத் தருவாராம்....

யாராவது தன் சொந்த குடும்பம் திரும்ப கிடைக்கும் போது, தன் சொத்துக்கள் கிடைக்கும் போது, இன்னும் போனஸ்ஸாக நூறு ஒட்டகங்கள் கிடைக்கும் போது "லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மது ரஸூலில்லாஹி" என்று ஏன் சொல்லமாட்டான்?!?

மாலிக் என்பவர் ஒரு அறிவாளி என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால், நான் இஸ்லாமியனாக மாறமாட்டேன் என்று மாலிக் சொல்லியிருந்தால், தன் மனைவி யாரோ ஒரு முஸ்லிமுடைய வைப்பாட்டியாகவோ (மிகவும் அழகாக இருந்தால் முஹம்மதுவின் வைப்பாட்டியாகவோ) அல்லது குர்‍ஆனின் வார்த்தைகளின் படி சொல்லவேண்டுமானால், "இஸ்லாமியர்களின் வலக் கரம் சொந்தமாக்கிக்கொண்ட ஆபாச ஆசைகளை தீர்க்கும் அடிமைப்பெண்ணாகவோ" மாறியிருப்பாள்.

அது மட்டுமல்ல தன்னுடைய உயிருக்கும் எந்த உத்திரவாதமும் இல்லை. எனவே தான் மாலிக் சுலபமான வழியை புத்திசாலியான வழியை தெரிந்துக்கொண்டார். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், "இப்படி இஸ்லாமுக்கு மாறிய மாலிக் ஒரு நல்ல இஸ்லாமியராக மாறினாராம்?!?..." (இஸ்லாமியர்களின் அகராதியின் படி "நல்ல முஸ்லிம்" என்றால் என்ன அர்த்தம் என்று வாசகர்கள் சிந்திக்கவும்).

முடிவுரை: அருமை மிஸ்ட் அவர்களே, கூட்டிக் கொடுத்தவர் யார்? என்று இப்போது புரிகிறதா?

குர்‍ஆனும் ஹதீஸ்களும் இஸ்லாமிய விரிவுரையாளர்களும் என்ன சொல்கிறார்கள் என்பதை படித்துப்பார்த்து விமர்சனம் செய்யவேண்டும். முதலில் இஸ்லாம் பற்றி தெரிந்துக்கொண்டு விமர்சியுங்கள், இல்லையானால்... அதிகமாக அவமானப்படவேண்டிவரும்.

நீங்கள் தொடர்ந்து பின்னூட்டம் இடுங்கள், புதிய தலைப்புக்களை எடுத்துத் தாருங்கள்.

உங்களின் இதர பின்னூட்ட பதிலில் சந்திக்கிறேன்....
 

Thursday, July 9, 2009

அல்-ஜன்னத்திற்கு "யூதன்" தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்

 


ல்-ஜன்னத்திற்கு "யூதன்" தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்

அல் ஜன்னத்தின்


"யூதர்கள் ஜாக்கிரதை" என்ற எச்சரிப்பிற்கு ஒரு எச்சரிக்கை


முன்னுரை:



எனக்கு ஒரு நண்பர் மார்ச் மாத அல்ஜன்னத் இஸ்லாமிய பத்திரிக்கையின் 17ம் பக்கத்தை ஸ்கான் செய்து படமாக அனுப்பினார். இந்த 17ம் பக்கத்தில் "யூதர்கள் ஜாக்கிரதை" என்ற தலைப்பில், நான்கு வலைத்தளங்களின் பெயர்களை குறிப்பிட்டு "இத்தளங்களை யூதர்கள் நடத்துகிறார்கள், இஸ்லாமுக்கு எதிரான பல விவரங்களை அவர்கள் பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள்" என்று எழுதியிருந்தார்கள், மற்றும் யூதர்களை வன்மையாக கண்டிக்கிறோம் என்று எழுதியிருந்தார்கள். யூதர்கள் பற்றி இஸ்லாமியர்கள் எழுதியிருந்தால் எழுதட்டும் என்று விட்டுவிடலாம், ஆனால், அவர்கள் குறிப்பிட்ட நான்கு தளங்களில் ஒரு தளம் "ஆன்சரிங் இஸ்லாம்" தளமாகும். ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் தமிழ் பிரிவில் "தமிழ் பேசும் கிறிஸ்தவர்களாகிய நாங்கள் ஒருசிலராக சேர்ந்து" கட்டுரைகளை தமிழாக்கம் செய்து பதித்துக்கொண்டு இருக்கிறோம்.


ஆன்சரிங் இஸ்லாம் தளம், யூதர்களால் நடத்தப்படும் தளம் என்று அல் ஜன்னத் இஸ்லாமிய பத்திரிக்கை சொன்னதால், அவர்களுக்கு பதில் அளிக்கவேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. இந்த கட்டுரையில் இஸ்லாமியர்களின் குற்றச்சாட்டிற்கு என் பதிலையும், அதே நேரத்தில், அவர் குறிப்பிட்ட இதர தளங்கள் பற்றி ஒரு சில வரிகளையும் எழுதலாம் என்று எண்ணுகின்றேன், அதாவது மக்கள் படிக்கும் பத்திரிக்கையில் ஒரு விவரத்தைச் சொல்லும் போது, குறைந்த பட்சம் பட்டியலிடும் அத்தளங்களை ஒரு முறையாவது பார்த்துவிட்டு எழுதியிருந்தால் மிகவும் நன்றாக இருக்கும். இக்கட்டுரையில் அல் ஜன்னத் பத்திரிக்கை செய்த வேடிக்கையை தந்திரத்தை உங்களுக்கு காட்ட விரும்புகிறேன்.


இப்பொழுது, அல் ஜன்னத் பத்திரிக்கை 17ம் பக்கத்தில் என்ன எழுதியிருக்கிறது என்று படியுங்கள்.



யூதர்கள் ஜாக்கிரதை




யூதர்கள் அன்று முதல் இன்றுவரை மனித சமூகத்தில் ஒழுக்கவீனத்தைப் பரப்புவதிலும், மானக்கேடான விஷயங்களைச் செய்யத் தூண்டுவதிலும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். பொய்யையும், பித்தலாட்டங்களையுமே தங்கள் மூலதனமாகப் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக இஸ்லாமிய சமூகத்தின் மீது பொய் தகவல்களையுப் பரப்புவதில் கை தேர்ந்தவர்கள். சமீபகாலமாக தங்களுடைய பொய் தகவல்களைப் பரப்புவதற்கு இணைய தளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது ஒரு சில வலைத் தளங்களை இஸ்லாமியப் பெயர்களிலேயே துவங்கி அதன் வாயிலாக இஸ்லாத்தை அழித்துவிடலாமெனவும் இஸ்லாமிய வளர்ச்சியைத் தடுத்துவிடலாம் எனவும் கருதுகின்றனர். எனவே இது விஷயத்தில் முஸ்லிம்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.



w.w.w.  answering  islam.  org,      www.  about islam.com



w.w.w. The quran.com,     w.w.w. allah



இந்த முகவரித் தளங்களில் வருகின்ற எந்தச் செய்தியானாலும் அதை அப்படியே நம்பிவிடக்கூடாது. இதில் நிறைய தகவல்கள் இஸ்லாமிய மார்க்கத்திற்கு எதிராகப் பரப்பப்படுகின்றன. முஸ்லிம்கள் இதையெல்லாம் நம்பி ஏமாந்துவிடாமல் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.



இஸ்லாத்தின் பெயரைப் பயன்படுத்தி இதுபோன்ற தில்லு முல்லுகளைச் செய்துவரும் யூத சக்திகளை வன்மையாகக் கண்டிக்கவேண்டும்.



Source: அல் ஜன்னத் இஸ்லாமிய மாத இதழ் - மார்ச் 2009, பக்கம் 17
emphasis mine


ஜன்னத் இஸ்லாமிய மாத இதழ் - மார்ச் 2009, பக்கம் 17




1. முதலாவதாக‌, யூதர்கள் மீது குற்றச்சாட்டுகளை குவிக்கிறது -அல் ஜன்னத் பத்திரிக்கை:


அல் ஜன்னத் பத்திரிக்கையின் கீழ்கண்ட தகவலுக்கு வேறு ஒரு கட்டுரையில் விவரிக்கலாம் என்று விரும்புகிறேன், ஆகையால், இந்த கட்டுரையில், "ஆன்சரிங் இஸ்லாம் தளம்" பற்றிய விவரத்திற்கு மட்டுமே பதிலை அளிக்கிறேன்.



அல் ஜன்னத் பத்திரிக்கை எழுதியது:



யூதர்கள் அன்று முதல் இன்றுவரை மனித சமூகத்தில் ஒழுக்கவீனத்தைப் பரப்புவதிலும், மானக்கேடான விஷயங்களைச் செய்யத் தூண்டுவதிலும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர். பொய்யையும், பித்தலாட்டங்களையுமே தங்கள் மூலதனமாகப் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக இஸ்லாமிய சமூகத்தின் மீது பொய் தகவல்களையுப் பரப்புவதில் கை தேர்ந்தவர்கள்.



2. முஸ்லீம்களுக்கு யூதன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்


இஸ்லாமிய உலகில் எது நடந்தாலும் சரி, அதற்கு யூதன் தான் காரணம், இது இஸ்லாமியர்களின் நம்பிக்கை. இஸ்லாமை யாராவது விமர்சித்தால் உடனே, அதன் பின்னால் யூதன் இருப்பான், முஸ்லீம்களுக்கு எங்கும் யூதன் எதிலும் யூதன், தூணிலும் யூதன் துரும்பிலும் யூதன் இருப்பான்.


இந்த நிலை தொடருமானால், ஒரு இஸ்லாமியரின் வீட்டில் பிரியாணில் இருக்கும் கறி வேகவிலையானாலும் சரி, அதற்கு காரணம் யூதன் தான் என்று முஸ்லீம்கள் சொன்னாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. (இதில் சில விஞ்ஞான விவரங்களையும் இஸ்லாமியர்கள் தருவார்கள், அதாவது இந்தியாவில் வளர்க்கும் ஆடுகளுக்கு தரும் மருந்துக்கள், ஊசிகள் இஸ்ரேல் நாட்டிலிருந்து இறக்குமதியாகின்றன, அதனால் தான் கறி வேக வில்லை என்று ஆவேசமாக சொல்லும் இஸ்லாமியர்களும் இருப்பார்கள்.)


3. ஆன்சரிங் இஸ்லாம் தளம் யூத தளமா?


அல் ஜன்னத் நான்கு தளங்களில் பெயர்களை குறிப்பிட்டு, அவைகள் யுத தளங்கள் என்றுச் சொல்கிறது. அவைகளில் ஆன்சரிங் இஸ்லாம் தளம் பற்றிய விவரத்தை இப்போதுச் சொல்கிறேன்.



அல் ஜன்னத் பத்திரிக்கை எழுதியது:



சமீபகாலமாக தங்களுடைய பொய் தகவல்களைப் பரப்புவதற்கு இணைய தளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது ஒரு சில வலைத் தளங்களை இஸ்லாமியப் பெயர்களிலேயே துவங்கி அதன் வாயிலாக இஸ்லாத்தை அழித்துவிடலாமெனவும் இஸ்லாமிய வளர்ச்சியைத் தடுத்துவிடலாம் எனவும் கருதுகின்றனர். எனவே இது விஷயத்தில் முஸ்லிம்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.




w.w.w.  answering  islam.  org,      www.  about islam.com



w.w.w. The quran.com,     w.w.w. allah



நான் அல் ஜன்னத் இஸ்லாமிய பத்திரிக்கையின் ஆசிரியரிடம் கேட்க விரும்புவது:


1) நீங்கள் ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் உள்ள கட்டுரைகளில் ஒரு சில கட்டுரைகளையாவது படித்தீர்களா? குறைந்த பட்சம் தமிழ் பிரிவில் உள்ள கட்டுரைகளையாவது படித்ததுண்டா?


2) அப்படி படித்து இருந்தால், ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் எத்தனை கட்டுரைகள் உங்களுக்கு, இந்த தளம் ஒரு "யூத தளம்" என்ற எண்ணத்தைக் கொடுத்தது? உங்கள் கணிப்பு/நம்பிக்கை சரியாக இருந்தால், கட்டுரைகளின் தொடுப்புக்களை பெயர்களைத் தரமுடியுமா? ஏனென்றால், நான் அந்த தளம் ஒரு கிறிஸ்தவ தளம் என்பதாலேயே ஆங்கில கட்டுரைகளை தமிழில் மொழியாக்கம் செய்து, பதிக்கிறேன். முக்கியமாக கடந்த பல ஆண்டுகளாக நான் அத்தளத்தின் கட்டுரைகளை படித்துக்கொண்டு இருக்கிறேன். நீங்கள் சந்தேகம் படும்படி இருக்கின்ற கட்டுரைகளின் பெயர்களை கொடுத்தால், எனக்கு உதவி செய்பவர்களாக இருப்பீர்கள், இதனை செய்யமுடியுமா?


3) அல்லது, இப்படி எதுவுமே படிக்காமல், யாரோ சொன்னார்கள் ஆகையால் நானும் சொல்கிறேன் என்பதாக சொல்கிறீர்களா? ஒரு வேளை யூதனின் பெயரை பயன்படுத்தினால் தான் ஆன்சரிங் இஸ்லாம் கட்டுரைகளை முஸ்லீம்கள் படிக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் இப்படி செய்தீர்களோ?



ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் நூற்றுக்கணக்கான கட்டுரைகள் உள்ளன, தமிழில் 50க்கும் அதிகமான கட்டுரைகள் உள்ளன? இவைகளில் எந்தெந்த கட்டுரைகளை யூதர்கள் எழுதினார்கள்/எழுதியிருப்பார்கள் என்று உங்களால் சொல்லமுடியுமா?



4. இஸ்லாமுக்கு பதில் சொல்ல/விமர்சிக்க "யூதன்" தான் வேண்டுமா?


ஒருவர் இஸ்லாமை விமர்சித்தால், இஸ்லாமின் உண்மை முகத்தை உலகம் அறியும் படி எழுதினால், அவன் நிச்சயமாக யூதனாகத் தான் இருக்க வேண்டும் என்ற குருட்டு நம்பிக்கையா அல் ஜன்னத்திற்கு?



ஒருவன் யூதனாக இருக்கட்டும், கிறிஸ்தவனாக இருக்கட்டும், இந்துவாக இருக்கட்டும் அல்லது நாத்தீகனாக இருக்கட்டும், ஒரு மதம் அல்லது மார்க்கம் என்றால், கேள்வி கேட்கத்தான் செய்வான்? (இன்னும் அந்த மார்க்கத்தை ஸ்தாபித்தவரின் நடத்தையில் ஆபாசமோ அல்லது வன்முறையோ இருந்தால், சொல்லவேண்டியதில்லை கேள்விகளுக்கு பஞ்சமிருக்காது).



உலக நியதிக்கு எதிராகவும், சமுதாயத்தில் மனிதனுக்கு தீமை விளைவிக்கும் சட்டங்களை கொண்டுள்ள இஸ்லாமை விமர்சிக்க ஒரு யூதன் தான் வரவேண்டும் என்பதில்லை, மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும், சிந்திக்கும் திறமையுள்ள ஒவ்வொருவனும் கேள்வி கேட்கலாம், விமர்சிக்கலாம்.



இந்த நிலை இஸ்லாமுக்கு மட்டுமல்ல, கிறிஸ்தவத்திற்கும் பொருந்தும், இந்துத்துவத்திற்கும் பொருந்தும் அவ்வளவு ஏன் நாத்தீகனுக்கும் பொருந்தும். பெற்றோர்கள் நாத்தீகர்களாக இருந்தால், அவர்களின் வளர்ந்த பிள்ளைகளும் நாத்தீகர்களாக இருக்கவேண்டிய அவசியமில்லை, தனக்கு சரி என்று படுகின்ற வழியை மனிதன் பின்பற்றுவான்.



எனவே, எதற்கெடுத்தாலும் யூதன் யூதன் என்றுச் சொல்வதை விட்டு, நேர்மையானவர்களாக குற்றங்களை முன்வைத்தால், உலகம் உங்களை நம்பும்.


5. கிறிஸ்தவ போர்வையில் "யூதன்" தளம் அமைக்க வேண்டிய அவசியம் என்ன?

 

ஆன்சரிங் இஸ்லாம் யூதர்களால் நடத்தப்படும் தளம் என்று நீங்கள் சொல்வதை ஒரு பேச்சுக்காக ஒப்புக்கொண்டாலும், அதற்கான ஆதாரங்களை நீங்கள் தரவேண்டுமே?


ஆன்சரிங் இஸ்லாம் தளத்தின் கட்டுரைகளை படித்துப்பாருங்கள், எத்தனை கேள்விகள், பதில்கள் மறுப்புக்கள், மற்றும் புதிய ஏற்பாட்டிலிருந்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு பதில்கள் மறுப்புகள், பழைய ஏற்பாட்டிலிருந்து மேசியாவாகிய இயேசுவைக் குறித்த கேள்விகளுக்கு பதில்கள் என்று நூற்றுக்கணக்கான கட்டுரைகள் உள்ளன.


இக்கட்டுரைகளை படிப்பவன் கண்டிப்பாக "இக்கட்டுரைகளை யூதர்கள் தான்" எழுதினார்கள் என்பதை நம்பமாட்டான், ஏனென்றால்,


இஸ்லாமை விமர்சிக்கிறேன் என்பதற்காக ஒரு யூதன் கிறிஸ்தவத்திற்கு ஆதாரவாக நூற்றுக்கணக்கான கட்டுரைகளை எழுதி பதிப்பானா?


நீங்கள் நினைப்பதுபோல செய்வதற்கு யூதர்கள் என்ன முட்டாள்கள் என்று நினைத்தீர்களா?


"வருவார் என்று நாங்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் மேசியா இயேசு அல்ல", என்றுச் சொல்லும் யூதன், இயேசு தான் மேசியா (மஸீஹா) என்பதற்காக தன் ஆயிரக்கணக்கான மணித்துளிகளை இதற்காக செலவிடுவானா? பணத்தை செலவிடுவானா?


6. யூதன் யூதனாகவே இஸ்லாமை விமர்சிக்க/மறுப்புக்கள் எழுத அவனுக்கு என்ன தடை?


ஒரு யூதன் யூதனாக இருந்து இஸ்லாமுக்கு பதில்கள் தருவது சுலபம், ஆனால், கிறிஸ்தவ போர்வையில் அவன் பதில்கள் கொடுத்தால், அது மிகவும் கடினம்.


ஏனென்றால், யூதன் யூதனாக இருந்து பதில்கள் அளித்தால், அவன் பழைய ஏற்பாடு அல்லது யூத சட்டங்கள் பற்றிய கேள்விகளுக்கு மட்டும் பதில்களை கொடுத்தால் போதும், ஆனால், அவன் கிறிஸ்தவனாக தன்னை அடையாளம் கட்டிக்கொண்டு பதில்கள் எழுதினால், அவனிடம் கேட்கப்படும் கேள்விகள், பழைய ஏற்பாட்டிலிருந்து மட்டுமல்ல, புதிய ஏற்பாட்டிலிருந்தும் கேட்கப்படும்.


ஆன்சரிங் இஸ்லாம் ஆங்கில தளத்தில் சென்று பாருங்கள், எத்தனை பதில்கள் மறுப்புக் கட்டுரைகள் புதிய ஏற்பாட்டைப் பற்றியும், இயேசுவின் சீடர்கள், அப்போஸ்தலர் பவுல் போன்றவர்கள் பற்றியும் கொடுக்கப்பட்டுள்ளது என்பது உங்களுக்கு விளங்கும்.


யூதன் யூதனாக தன்னை காட்டிகொண்டால் இந்த புதிய ஏற்பாட்டிலிருந்து பதில்களை கொடுக்கவேண்டிய கடமை இருக்காதல்லவா? அல் ஜன்னத் ஆசிரியர்களே, இப்போதாவது சிறிது புரிகின்றதா? உங்கள் கற்பனை உலகத்திலிருந்து வெளியே வந்து சிந்துத்துப் பாருங்கள், உண்மைகள் விளங்கும்.


7. கிறிஸ்தவர்கள் ஏன் இஸ்லாமை விமர்சிக்கக்கூடாது?


இதுவரை, ஆன்சரிங் இஸ்லாம் தளம் யூதர்களால் நடத்தப்படும் தளம் அல்ல, இதற்கு அவசியமே யூதர்களுக்கு இல்லை என்பதை விளக்கினேன், இப்போது, ஆன்சரிங் இஸ்லாம் தளம் ஏன் கிறிஸ்தவர்களால் நடத்தப்படக்கூடாது என்பதை விளக்குகிறேன்.


7.1 யூதர்களை விட இஸ்லாமை விமர்சிக்க கிறிஸ்தவர்களுக்கு உரிமை அதிகம்:


யூதர்களை விட கிறிஸ்தவர்களுக்கு இஸ்லாமை கேள்வி கேட்க, முஹம்மது பற்றிய உண்மைகளை வெளிக்கொணர, விமர்சிக்க உரிமை உண்டு என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால், முஹம்மது இயேசுவை நபி என்றுச் சொன்னார், இயேசுவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்த்தெழுதலை மறுத்தார், குர்‍ஆனில் எழுதியும் வைத்துவிட்டார், கிறிஸ்தவத்தை விமர்சித்தார். ஆக, இஸ்லாமுக்கு நாங்கள் பதில் சொல்லவேண்டாமா? உங்களுக்கு பதில் சொல்ல கிறிஸ்தவர்களுக்கு அதிக விவரங்கள் உண்டு, அதே போல, இஸ்லாமின் தரத்தை சரிபார்க்க, தராசில் நிறுத்தி தரத்தை பரிசோதிக்க கிறிஸ்தவர்களுக்கு உரிமை உண்டு.


தன்னைப் பற்றி பைபிளில் உள்ளது என்று முஹம்மது கூறினார், அவர் சொல்வது உண்மையா இல்லையா என்று நாங்கள் சோதிக்கவேண்டாமா? ஆராய்ச்சி செய்யவேண்டாமா? முஹம்மது உண்மையிலேயே ஒரு நபி தானா என்று சோதிக்கவேண்டாமா? பைபிளை விமர்சிக்க குர்‍ஆனுக்கும் முஹம்மதுவிற்கும் தகுதி உள்ளதா என்று சோதித்துபார்க்க வேண்டாமா? இஸ்லாம் சொல்வதையெல்லாம் அப்படியே அங்கீகரிக்கவேண்டிய அவசியம் இல்லையே!


இஸ்லாமியர்கள் கேள்விகளை கேட்டால், யூதர்களுக்கு வெறும் பழைய ஏற்பாடு பற்றிய கேள்விகளுக்கு மட்டும் பதில்கள் கொடுத்தால் போதும், ஆனால், நாங்கள் பழைய மற்றும் புதிய ஏற்பாடு பற்றிய கேள்விகளுக்கு பதில்களை தரவேண்டும். "பைபிள் கூறும் நபிகள் வரிசையில் நான் கடைசியானவன்" என்று முஹம்மது சொன்னதாலும், பைபிளின் மீது "இஸ்லாம்" ஆதாரப்பட்டு இருப்பதாலும், எங்களுக்கு இஸ்லாமை கேள்வி கேட்க அதிகாரம் உண்டு.


தங்கத்தை சுத்தம் செய்ய நெருப்பில் சுடவேண்டும், அப்படி செய்யும் போது, அசுத்தம் நீங்கும், அப்போது தான் சுத்தப்பொன்னாக அது மாறும், எனவே, இஸ்லாமை நாங்கள் நெருப்பில் போட்டு சுடுகிறோம், உண்மையிலேயே, உங்கள் நபி ஒரு உண்மை நபியாக இருந்தால், சுத்த பொன்னாக மாறுவார். நெருப்பிலே போட்டது தங்கம் என்று நினைத்து கரித்துண்டை போட்டால், அது எரிந்து சாம்பலாகி விடும். அக்கினி எல்லாவற்றையும் சோதித்தறியும், உண்மை கண்டிப்பாக வெளியே வரும்.


ஆனால், இஸ்லாமை விமர்சிக்கும் போது, அதற்கு எதிராக கேள்விகள் கேட்கப்படும் போது, முஹம்மதுவின் நடத்தையை வெளிச்சத்தில் வைத்து சரி பார்க்கும் போது, இஸ்லாமியர்களுக்கு அதிகமாக கோபம் வருகிறது? ஏன் கோபம் வரவேண்டும்? தங்கமாக இருந்தால், இன்னும் சுத்தமாகுமே, இஸ்லாம் ஒரு தங்கமல்ல அது ஒரு கரித்துண்டு என்ற நம்பிக்கை உங்களுக்கு அதிகமோ?


எனவே, நான் உங்களை கேட்டுகொள்கிறேன், ஆன்சரிங் இஸ்லாம் ஒரு யூத தளம் என்ற பொய்யை சொல்வதை விட்டுவிடுங்கள், அல்லது அதற்கான ஆதாரங்களைத் தாருங்கள்?


மருந்து மாத்திரைகளை போல "பொய்கள் ஒரு கால அவகாச தேதியோடு (Expiry Dates)" தான் வரும் . அந்த மாத்திரையின் காலம் முடிந்துவிட்டால், அந்த மாத்திரை வேலை செய்யாது, மட்டுமல்ல‌ அவைகள் எதிர்விளைவுகளை கொண்டுவரும். அது போல, இஸ்லாமியர்கள் 14 நூற்றாண்டுகளாக சொல்லிக்கொண்டு வந்த பொய்களுக்கு முடிவு தேதி (Expiry Date) நெருங்கிவிட்டது. இன்னும் அந்த மாத்திரைகளை பயன்படுத்தினால், பயன்படுத்துபவருக்கு பக்க விளைவுகளை கொடுக்கும், 14 நூற்றாண்டுகளாக குணமாக்கிய அதே மருந்து இப்போது விஷமாக மாறும். பொய்களை அனேக நாட்கள் வாழவைக்கவும் முடியாது, அதே போல, உண்மைகளை அனேக நாட்கள் மண்ணுக்குள் புதைத்து வைத்திருக்கவும் முடியாது.


ஆக, ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும், இஸ்லாமை கேள்வி கேட்கும் உரிமை உண்டு, இது எங்கள் பிறப்புரிமை. இதே போல மற்றவர்களுக்கும் கிறிஸ்தவத்தை, இதர மார்க்கங்களை கேள்வி கேட்க, விமர்சிக்க உரிமை உண்டு.


இனி அல் ஜன்னத் கொடுத்த இதர தளங்கள் யூத தளங்களா என்று பார்ப்போம்.



அபவுட் இஸ்லாம் டாட் காம் தளம்: (www.aboutislam.com)


இந்த தளத்தின் பெயரை கொடுத்துப் பார்த்தால், அது "http://www.perfumesofarabia.com/" என்ற தளத்தைக் காட்டுகிறது. அதாவது, அரேபிய பெண்களின் வாசனை திரவியங்கள் (சென்ட்) பற்றிய தளம் வருகிறது (Redirected to perfumeofarabia site). இந்த தளம் ஒரு வியாபார தளமாக வாசனை திரவியங்களை விற்கும் தளமாக‌ இருக்கிறது.


ஒரு வேளை, இந்த தளம் முதலாவது ஒரு யூதர்களின் தளமாக (அல் ஜன்னத் ஆராய்ச்சி செய்து சொன்னது போல) இருந்து, பிறகு அவர்கள் தங்கள் டொமைனை (domain) விட்டுவிட்டு தங்கள் தள கட்டுரைகளை நீக்கிவிட்டு சென்று இருப்பார்கள், என்ற சந்தேகத்தில் வெப் ஆர்கவ்வில் (Web Archive) சென்று பார்த்தேன்.


இந்த பக்கத்தை சொடுக்கி பார்க்கவும்: http://web.archive.org/web/*/http://www.aboutislam.com


இந்த தொடுப்பில், "About Islam" தளம் எப்போது ஆரம்பிக்கப்பட்டது, எத்தனை முறை கட்டுரைகள் பதிக்கப்பட்டது போன்ற விவரங்களை காணலாம்.


இதன் படி "About Islam" ஒரு கிறிஸ்தவ தளமாக ஜனவரி மாதம் 1999ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அனேக கிறிஸ்தவ இஸ்லாமிய கட்டுரைகள் பதிக்கப்பட்டுள்ளது.


பார்க்கவும்: http://web.archive.org/web/19990117021402/http://www.aboutislam.com/


பல ஆண்டுகளுக்கு பிறகு, கிறிஸ்தவ தளமாக இருந்த இந்த தளம், இஸ்லாமிய தளமாக மாறியுள்ளது. இஸ்லாமை தழுவுகிறவர்கள் இந்த தளப்பெயரை வாங்கி தங்கள் தளத்தோடு இணைத்துள்ளார்கள்.


பார்க்கவும்: http://web.archive.org/web/20071023173418/www.convertstoislam.org/


www.convertstoislam.org என்ற தளம் www.aboutislam.com என்ற டொமைனை வாங்கி. பல ஆண்டுகள் பயன்படுத்தி மறுபடியும் விற்றுவிட்டு இருக்கும், இன்று www.aboutislam.com என்ற தளத்தை சொடுக்கினால், நமக்கு அரேபிய பெண்களின் வாசனை தரவியங்கள் என்ற வியாபார தளம் தான் வருகிறது. இவைகள் தான் www.aboutislam.com தளப் பெயரைப் பற்றிய மேலோட்ட விவரங்களாகும், இதனை வெப் ஆர்கவ்வில் சென்று மேலும் அறிந்துக்கொள்ளுங்கள் (http://web.archive.org/web/*/http://www.aboutislam.com).



அல் ஜன்னத் ஆசிரியருக்கு கேள்விகள்:


2009ம் ஆண்டு மார்ச் மாதம் 17ம் தேதி, இந்த தளம் www.aboutislam.com பற்றி எச்சரிக்கை செய்தியை உங்கள் பத்திரிக்கையில் பிரசுரிப்பதற்கு முன்பு, நீங்கள் ஒருமுறையாவது இணையத்தில் இந்த தளத்தை சொடுக்கி பார்த்தீர்களா? பார்த்து இருந்தால், இப்படி எழுதியிருக்கமாட்டீர்கள்?


எந்த ஆதாரத்தை வைத்து, இந்த தளம் யூதர்கள் நடத்தும் தளம் என்று எழுதினீர்கள்?


உங்கள் பத்திரிக்கையை படிக்கும் வாசகர்க‌ள் உங்களின் நேர்மையை கவனிக்கட்டும். மற்ற மார்க்க விஷயங்களை எழுதுவதில் இவ்வளவு நேர்மையற்ற விவரங்களை தரும் நீங்கள், உங்கள் இஸ்லாமிய விவரங்களை சொல்வதில் எவ்வளவு விஷயங்களை மறைப்பீர்கள்! இறைவனுக்கே வெளிச்சம்.



அல்லாஹ் டாட் காம் தளம் (www.allah.com)



அடுத்ததாக, நீங்கள் "அல்லாஹ் டாட் காம்" என்ற தளத்தைப் பற்றி எழுதினீர்கள்! இந்த தளமும் யூதர்களின் தளம் என்று எழுதிவிட்டீர்கள். ஆனால், இந்த தளத்தை சொடுக்கிப்பார்த்தால் இது ஒரு "ஷியா முஸ்லீம்களின்" தளம் போல தென்படுகிறது.



இந்த தளத்தின் முகப்புப் பக்கத்திலேயே கீழ் கண்ட வரிகள் கொட்டை எழுத்துக்களில் தென்படுகிறது.



THE FIRST AND LARGEST SITES ON IMAN, ISLAM, IHSAN

இந்த தளத்தை நீங்கள் பார்வையிட்டீர்களா? என்று நான் கேட்க மாட்டேன், ஏனென்றால், இதனால் உபயோகமில்லை.


இந்த தளத்தின் முகப்புப் பக்கத்தை ஒருமுறை பார்வையிட்டால், அனேக இஸ்லாமிய அறிஞர்களின் படங்கள் (அஹமத் தீதத் அவர்கள் உட்பட), இஸ்லாம் பற்றிய கட்டுரைகள், வீடியோக்கள் என்று அனேக தொடுப்புக்கள், புத்தகங்கள், குர்‍ஆன் என்று அனேக விவரங்கள் உள்ளன.


சிந்திக்கும் எந்த மனிதனும் இந்த தளத்தைக் கண்டு, இது யூதர்களின் தளம் என்றுச் சொல்லமாட்டான்.


குறிப்பு: அல் ஜன்னத் குறிப்பிட்ட தளம் www.allah.com இல்லை, அது www.allah.org என்று பதில் சொல்ல அவசரப்படாதீர்கள் இஸ்லாமியர்களே, இந்த அல்லாஹ் டாட் ஓஆர்ஜி தளமும் ஒரு இஸ்லாமிய தளமாகும் என்பதை மனதில் கொள்ளவும்.


இப்போது அடுத்த தளத்திற்குச் செல்வோம்…



த குர்‍ஆன் தளம் (www.thequran.com)



அடுத்ததாக நீங்கள் "த குர்‍ஆன் டாட் காம்" என்ற தளத்தின் பெயரைக் குறிப்பிட்டு, இதுவும் யூதர்களின் தளம் என்று எழுதியிருந்தீர்கள். நான் இந்த தளத்தையும் பார்வையிட்டேன்.


இந்த தளத்தில் ஆங்கிலம் உட்பட அனேக குர்‍ஆன் மொழியாக்கங்கள் தரப்பட்டு இருந்தன (Arabic, Shakir (English), yusufali (English), Pickthal (English), Al-Hilali (English), Spanish, French and Turkish).


இந்த தளத்தில் குர்‍ஆன் பிழைகள் (Quranic Errors), இரத்து செய்யப்பட்ட வசனங்கள் (Abrogated Verses) மற்றும் ஒரே மாதிரியாக அடிக்கடி வரும் வசனங்கள் (Repeated Verses) என்று ஒரு சில பக்கங்கள் இருக்கின்றன.


இந்த தளம் கண்டிப்பாக ஒரு இஸ்லாமிய தளம் இல்லை என்பது மட்டும் நிச்சயம். ஆனால், இந்த தளம் ஒரு கிறிஸ்தவராலோ கூட ஆரம்பிக்கப்பட்டு இருக்கலாம்.


குர்‍ஆனின் பிழைகள் என்ற பக்கத்தில் அனேக புதிய ஏற்பாட்டு வசனங்களை குறிப்பிட்டு விவரங்கள் உள்ளன. எனவே, இந்த தளமும் கிறிஸ்தவ தளமாக இருக்க வாய்ப்பு உண்டு. ஆனால், யூதர்களின் தளம் என்பதற்கு சரியான ஆதாரம் எதுவும் இல்லை.


ஒரு பேச்சுக்காக இந்த ஒரு தளத்தை மட்டும் யூத தளமாக நாம் கருதினாலும், அல்‍ ஜன்னத் குறிப்பிட்ட நாங்கு தளங்களில் மூன்று தளங்கள் யூதர்களின் தளங்கள் இல்லை என்பது மட்டும் உண்மை.




வெட்டு ஒன்று துண்டு மூன்று - அல் ஜன்னத்தின் யுக்தி வேலை செய்யவில்லை




அல் ஜன்னத் பிரசுரித்த விவரங்களின் உண்மை நிலையை நாம் கண்டோம். சில முஸ்லிம்கள் "ஏதோ தெரியாதவிதமாக நடந்துவிட்டது" என்று அல் ஜன்னத்தின் பொய்யுக்கு சாயம் பூசலாம். ஆனால், பல ஆண்டுகளாக இயங்கும் பத்திரிக்கை, இப்படிப்பட்ட விவரங்களைத் தருவது சரியா? இப்படித் தான் எல்லா விவரங்களும் இருக்குமா?



இதில் இவர்களின் (முக்கியமாக முஸ்லிம்களின்) தந்திரமும் தெரியவரும், அதாவது கிறிஸ்தவ தளத்தையும், ஷியா முஸ்லீம்களின் தளத்தையும் குறிப்பிட்டுவிட்டு, அவைகள் யூதர்களின் தளம் என்ற பொய்யைச் சொன்னால், தமிழ் முஸ்லிம்களை சுலபமாக முட்டாள்களாக்கி விடலாம் என்று கனவு கண்டது, அல் ஜன்னத் பத்திரிக்கை. ஆனால், அது பகல் கனவாக முடிந்துவிட்டது.



எதெற்கெடுத்தாலும் யூதனை இழுத்தால் போது, முஸ்லிம்களுக்கு அப்படியே கண்கள் சிவக்கும், உடலில் சூடு உண்டாகும், அதனால் இந்த தளங்கள் பக்கமும் தலை வைத்து படுக்கமாட்டார்கள். இதனை கருத்தில் கொண்டு தான் அல் ஜன்னத் இந்த புதிய வேஷத்தை போட்டது, ஆனால், என்ன செய்யமுடியும், வேஷம் போட்டால் ஒரு நாள் கலையத்தானே வேண்டும்.



ஷியா இஸ்லாமை எதிர்க்கவேண்டுமானால், நேரடியாகவே எதிர்க்கலாம் அல்லவா? ஏன் இந்த யூத வேஷம் போடவேண்டும்?



அல்லாஹ் டாட் காம் என்ற தளத்தின் முதல் பக்கத்தை பார்த்தலோ போதும், அது ஒரு ஷியா தளம் என்பது தெளிவாக விளங்கும். தமிழ் முஸ்லிம்கள் இந்த தளத்தை பார்வையிடக்கூடாது என்று நீங்கள் விரும்பினால், அதற்காக ஒரு கட்டுரையை தனியாக எழுதவேண்டியது தானே! இந்த குறிப்பிட்ட தளம் ஷிய தளமாகும், அந்த தளத்தை யாரும் பார்வையிடவேண்டாம், என்று முஸ்லீம்களுக்கு நேரடியாகச் சொல்லவேண்டியது தானே! ஷியா கோட்பாட்டிற்கு மறுப்புக்களோ/பதில்களோ எழுதவேண்டியது தானே! அதை விட்டுவிட்டு ஏன் யூதர்களை அழைக்கிறீர்கள்? இஸ்லாமிய அறிஞர்களே, உங்களின் வேஷம் சிறிது சிறிதாக வெட்ட வெளிச்சத்திற்கு வருகிறது, இனியும் உங்கள் தந்திரங்கள் வேலை செய்யாது. எவ்வளவு புத்திசாலித் தனமாக நீங்கள் நடந்துக்கொண்டாலும், பொய்யை அதிக நாட்கள் மறைத்து வைக்க முடியாது, என்பதை சொல்லிகொள்கிறேன்.



அல் ஜன்னத்தும் பொய்யும் பித்தலாட்டமும்



அல் ஜன்னத் கீழ் கண்ட வரிகளை யூதர்களுக்கு சூட்டியது, இப்போது இந்த கட்டுரையை படித்த நீங்கள், இந்த வரிகள் அல் ஜன்னத்திற்கு சரியாக பொருந்துவதைக் காணமுடிகிறதா?


யூதர்கள் பற்றி அல் ஜன்னத் கூறியது



பொய்யையும், பித்தலாட்டங்களையுமே தங்கள் மூலதனமாகப் பயன்படுத்தி வருகின்றனர்.



ஆன்சரிங் இஸ்லாம் தளம் ஒரு கிறிஸ்தவ தளம், அதன் கட்டுரைகளை படிக்கக்கூடாது என்பதற்காக அதற்கு ஒரு "யூத சாயம்" பூசி, பொய்யையும் பித்தலாட்டத்தையும் மூலதனமாக அல் ஜன்னத் பத்திரிக்கை செயல்படுகிறது. இதற்கு இந்த கட்டுரையில் தரப்பட்ட விவரங்களே போதும்.



அல் ஜன்னத் பத்திரிக்கைக்கு நான் கூறிக்கொள்வது, நீங்கள் யூதர்க்ளை திட்டுங்கள், சபியுங்கள் என்னவாவது செய்துக்கொண்டு போங்கள், நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது, ஆனால், கிறிஸ்தவ பெயரை பயன்படுத்தி தில்லுமுல்லு செய்தால் பொய்களைச் சொன்னால் மட்டும் சரியான பதில் கண்டிப்பாக தரப்படும்.



நீங்கள் கண்டித்த அதே வரிகளை உங்களுக்குச் சொல்கிறேன், "இஸ்லாத்தின் பெயரைப் பயன்படுத்தி இதுபோன்ற தில்லு முல்லுகளைச் செய்துவரும் அல் ஜன்னத் சக்திகளை வன்மையாகக் கண்டிக்கவேண்டும்".



இதோடு இன்னும் முடியவில்லை, அல் ஜன்னத் கீழ் கண்ட விதமாக எழுதியுள்ளது,



யூதர்கள் அன்று முதல் இன்றுவரை மனித சமூகத்தில் ஒழுக்கவீனத்தைப் பரப்புவதிலும், மானக்கேடான விஷயங்களைச் செய்யத் தூண்டுவதிலும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.



7ம் நூற்றாண்டிலிருந்து சமுதாயத்திற்கு, உலகிற்கு யாரால் அதிக நன்மைகள் முஸ்லீம்களாலா அல்லது யூதர்களாலா? என்பதைப் பற்றிய தலைப்பை என் சிந்தையில் நிறுத்திக்கொண்டு இப்போதைக்கு விடைபெறுகிறேன்.


Source: http://sites.google.com/site/isakoran/rebuttals/aljannath/aljannathjews1




 

Monday, February 23, 2009

வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்? ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?

வெள்ளம் சிறிது என்றால்? கப்பல் ஏன்?

ஆண் பெண் ஜோடி மிருகங்கள் ஏன்?

இஸ்லாமும் நோவாவும்

முன்னுரை: நோவாவின் வெள்ளம் உலகம் முழுவதும் வியாபித்தது என்று பைபிள் கூறுகிறது, இதையே குர்‍ஆனும், ஆரம்ப கால இஸ்லாமியர்களும் கூறினார்கள். ஆனால், தற்கால இஸ்லாமிய அறிஞர்கள் வெள்ளம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே அதாவது நோவாவின் சமூகத்தார்களை மட்டுமே அழித்தது, பைபிள் சொல்வது தவறு என்றுச் சொல்கிறார்கள்.

குர்‍ஆன் சொல்வதும் "உலகம் முழுவதும் ஏற்பட்ட வெள்ளமே" என்று விளக்கும் கட்டுரையை இங்கு படிக்கவும்:

குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா? (DOES THE QURAN TEACH A LOCAL FLOOD?)

இந்த கட்டுரையில் நாம் தற்கால இஸ்லாமியர்கள் சொல்வது போல, வெள்ளமானது ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே ஏற்பட்டது என்பதை ஒரு விவாதத்திற்கு ஏற்றுக்கொண்டு, இதனால், விளையும் பிரச்சனைகள் என்ன? அவைகளை எப்படி இஸ்லாமியர்கள் சரி செய்வார்கள் என்பதை காண்போம்.

1) அல்லாஹ்வின் கட்டளை: ஒவ்வொரு வகையிலும் ஆண் பெண் கொண்ட ஒரு ஜோடியை கப்பலில் ஏற்றிக்கொள்

ஒவ்வொரு வகையான மிருகங்களில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என்று ஒரு ஜோடியை தன்னிடம் கப்பலில் ஏற்றிக்கொள் என்று அல்லாஹ் நோவாவிற்கு கட்டளையிடுகிறார். அதனை குர்‍ஆன் 11:40 என்ற வசனத்தில் படிக்கலாம்.

முஹம்மது ஜான் மொழிபெயர்ப்பு:

இறுதியாக, நம் உத்தரவு வந்து, அடுப்புப் பொங்கவே, (நாம் நூஹை நோக்கி;) "உயிர்ப் பிராணிகள் ஒவ்வொரு வகையிலிருந்தும் (ஆண் பெண் கொண்ட) ஒவ்வொரு ஜோடியை (அக்கப்பலில்) ஏற்றிக் கொள்ளும்; (மூழ்கடிக்கப்படுவார்கள் என்று எவர்களைக் குறித்து முன்பே நம்) வாக்கு ஏற்பட்டுவிட்டதோ அவர்களைத் தவிர் உம் குடும்பத்தாரையும், ஈமான் கொண்டவர்களையும் ஏற்றிக்கொள்ளும்" என்று நாம் கூறினோம்; வெகு சொற்ப மக்களைத் தவிர மற்றவர்கள் அவருடன் ஈமான் கொள்ளவில்லை. (குர்‍ஆன் 11:40)

பி.ஜைனுல் ஆபிதீன் மொழிபெயர்ப்பு:

நமது கட்டளை வந்து, தண்ணீர் பொங்கிய போது "ஒவ்வொன்றிலும் ஒரு ஜோடியையும், உமது குடும்பத்தாரில் நமது விதி முந்தி விட்டவர்களைத் தவிர மற்றவர்களையும், நம்பிக்கை கொண்டோரையும் ஏற்றிக் கொள்வீராக!" என்று கூறினோம். அவருடன் மிகச் சிலரே நம்பிக்கை கொண்டனர். (குர்‍ஆன் 11:40)

குர்‍ஆனும், இஸ்லாமியர்கள் நபி என்று கருதும் முஹம்மதுவும், மற்றும் ஆரம்பகால இஸ்லாமிய அறிஞர்களாகிய இபின் அப்பாஸ், போன்றோர்களும், மற்றும் இபின் கதீர் போன்ற குர்‍ஆன் விரிவுரையாளர்களும், நோவாவின் காலத்தில் ஏற்பட்ட வெள்ளம் பூமி அனைத்தும் வியாபித்தது என்றுச் சொல்வதை ஏற்றுக்கொள்ளாமல், பைபிளை குற்றம் பிடிப்பதற்காகவே "வெள்ளம் ஒரு பகுதியில் மட்டும் ஏற்பட்டது" என்றுச் சொல்லும் இஸ்லாமியர்களுக்கு கீழ் கண்ட கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.

ஒரு குறிப்பிட்ட இடம் மட்டுமே அழிக்கபோவதாக இருந்தால், ஏன் மிருகங்களில் ஆண் பெண் என்று ஒரு கோடி பாதுகாக்கப்படவேண்டும் என்று அல்லாஹ் விரும்பினார்/செயல்படுத்தினார்?

• அல்லாஹ் அழிக்க நினைத்தது, நோவாவின் சமூகத்தினரை மட்டுமே என்று சொன்னால், ஏன் அவர் மிருகங்களை பாதுகாக்க அதுவும் இனவிருத்தி அடைவதற்கு தேவையான ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் மிருகங்களை தன் கப்பலில் சேகரித்துக் கொள் என்று நோவாவிற்கு கட்டளையிடவேண்டும்?

• நோவாவும் அவரது சமூகத்தார்களும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வசித்து இருப்பார்கள், அவர்கள் சில கிலோ மீட்டர் தூரம் வியாபித்து இருக்கலாம், உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டால், ஒரு சின்ன ஊராக இருக்கலாம், அல்லது ஒரு சிறிய பட்டணமாக இருக்கலாம். ஒரு பேச்சுக்காக சென்னை பட்டணம் அளவிற்கு பெரிய இடத்தில் அவர்கள் வசித்ததாகவே கணக்கெடுத்துக் கொண்டாலும், அந்த இடத்தில் இருக்கும் மிருகங்களில் ஒரு ஆண் பெண் ஜோடியை பாதுகாக்கவேண்டிய அவசியம் என்ன?

• ஒரு இடத்தில் இருக்கும் மிருகங்கள் அடுத்த இடத்தில் இருக்காதோ? நோவாவின் சமூகத்தார்கள் வாழ்ந்த இடத்தில் இருந்த மிருகங்கள் வேறு இடத்தில் இல்லாமல் போகுமா? இஸ்லாமியர்கள் சிந்திக்கவேண்டும்.

• நோவாவின் காலத்தில் அவரது இருப்பிடமுள்ள இடத்தில் மட்டுமே மிருகங்கள் இருந்தனவா? இவ்வளவு பெரிய பூமியில் வேறு எங்குமே மிருகங்கள் இல்லையா?

• நோவாவின் வசிப்பிடத்திலுள்ள மிருகங்களை அப்படியே மனிதர்களோடு சேர்த்து அழித்துவிட்டால், உலகத்தில் அந்த மிருக இனமே இல்லாமல் போகும் என்று அல்லாஹ் சிந்தித்து, ஒரு ஜோடியை பாதுகாக்கவேண்டிய அவசியமென்ன? உதாரணத்திற்கு, நோவா சென்னை பட்டணத்தில் வசித்திருந்தால், அல்லாஹ் சென்னையை மட்டும் அழிக்க திட்டமிட்டிருந்தால், சென்னையில் வசிக்கும் ஒரு ஜோடி ஆடுகளை(ஆண் பெண்) பாதுகாக்க வேண்டிய அவசியமென்ன? சென்னையில் இருக்கும் ஆடுகள், மதுரையில் இருக்காதா? மும்பையில் இருக்காதா? கொல்கத்தாவில் இருக்காதா? அதிகபட்சமாக மற்ற கண்டங்களில், நாடுகளில் இருக்காதா?

• சிலர், ஆஸ்திரேலியாவில் மட்டும் காணப்படும் கங்காரு போன்ற மிருகங்களை பாதுகாக்கும் வண்ணம் அல்லாஹ் இப்படி சொல்லியிருக்கலாம் அல்லவா? என்று சொல்லக்கூடும். நீங்கள் சொல்வது உண்மை தான், ஆனால், நாம் மேலே படித்த குர்‍ஆன் வசனத்தின் படி, அசாதாரணமாக காணப்படும் மிருகங்களை மட்டுமே பாதுகாக்கும் படி அல்லாஹ் சொல்லவில்லை, "ஒவ்வொரு இனத்திலும் ஒரு ஜோடி" என்று பொதுவாகச் சொல்லியுள்ளார். ஆகவே, உங்களின் இந்த வாதம் சரியானது அல்ல.

மேற்கண்ட விவரங்களிலிருந்து நாம் காண்பது என்னவென்றால், குர்‍ஆன் சொல்லும் பெரு வெள்ளம், ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே ஏற்பட்ட வெள்ளமல்ல, அது உலகம் முழுவதும் பரவிய வெள்ளமே, அப்போது மட்டுமே, ஒவ்வொரு இனத்தையும் பாதுகாக்க ஒரு ஜோடி ஆண் பெண் மிருகங்கள் தேவைப்படும். ஆக, நோவாவின் வெள்ளம் சம்மந்தப்பட்டு நவீன கால இஸ்லாமியர்களின் நவீன எண்ணங்கள் தவறானவைகளாகும்.

2) பூமி முழுவதும் வெள்ளத்தால் சூழாத போது தப்பிக்க கப்பல் எதற்கு?

முதலாவதாக நாம் மேலே கண்டோம், மிருகங்களை பாதுகாக்க அல்லாஹ் செய்த ஏற்பாடு, அந்த பெரு வெள்ளம் பூமியனைத்திற்கும் பரவியது என்பதை காட்டுகிறது.

இரண்டாவதாக, ஒரு குடும்பத்தை காப்பாற்ற அதுவும் ஒரு குறிப்பிட்ட இடம் மட்டுமே வெள்ளத்தில் மூழ்கடிக்க, அந்த குடும்பம் மற்றும் மிருகங்கள் தப்பிக்க கப்பல் எதற்கு? வெள்ளம் சூழாத இடத்திற்கு இடம் பெயர்ந்து இருக்கலாமே?

ஒரு குறிப்பிட்ட இடத்தை வெள்ளத்தால் அழிக்கும் போது, ஒரு கப்பலைக் கொண்டு சமாளித்தது அறிவுடமையாக இருக்குமா சிந்தியுங்கள்.

ஒருவேளை நான் கடவுளாக இருப்பேனானாள், ஒரு இடத்தை மட்டுமே அழிக்க திட்டமிட்டால், நோவா தன் மக்களை எச்சரிக்கை செய்யும் படி சில ஆண்டுகள் அவகாசம் கொடுப்பேன், பிறகு, அவரை இருக்கும் இடத்தை விட்டு, எங்கு வெள்ளம் வராதோ அவ்வளவு தூரம் அவரை கொண்டுச் சென்று அல்லது அவரை பிரயாணம் செய்யச் சொல்லி, பிறகு அழித்து இருப்பேன். ஒரு தனி குடும்பத்திற்கு ஒரு பெரிய கப்பல் கட்ட தேவைப்படும் ஆண்டுகள் அவர்கள் இடம் பெயர்ந்து இருந்தால், அதிக தூரம் சென்று இருப்பார்கள்

சென்னையில் வெள்ளம் கொண்டுவர விரும்பினால், வேறு தூரமான மாவட்டமுள்ள இடத்திற்கு சென்று விடு என்று சொல்லிவிட்டால் முடிந்துவிட்டது கதை, அதே போல மிருகங்களையும் இடம் பெயர்ந்து செல்லச் சொல்லிவிட்டால் முடிந்துவிட்டது கதை. இதை செய்வதை விட்டுவிட்டு, ஒரு இடத்தை வெள்ளத்தால் அழிக்க, ஒரு பெரிய கப்பலை தயார் செய்யச் சொல்லி, அதுவும் எந்த தொழில் நுட்பமும், இல்லாத அந்த காலத்தில் அவ்வளவு பெரிய கப்பலை இந்த சின்ன விஷயத்திற்கு தயார் செய்யச் சொல்வது, அறிவுடமையா?

சிலர் கேட்கலாம், மிருகங்கள் எப்படி இடம்பெயரும் என்று? இதுமிகவும் சுலபம், மிருகங்கள் இயற்கையாகவே வரும் ஆபத்தை கண்டு தானாகவே இடம் பெயரும், ஒரு வேளை அவைகள் இடம் பெயரவில்லையானாலும், இந்த வெள்ளத்தை கொண்டு வருபவர் அல்லாஹ் அதாவது இறைவன் தானே, அவனால் எல்லாம் கூடும், ஒன்றுமில்லாத போது மிருகங்களை உருவாக்கியவர் மிருகங்களை இடம் பெயர வைப்பது அவருக்கு கடினமான வேலையா?

ஒரு பகுதியை வெள்ளத்தால் அழிக்க,

• ஒரு பெரிய கப்பலை தயார் படுத்தச் சொல்லி,

• மிருகங்களை ஜோடியாக அதனுள் அனுப்பி,

• வெள்ளத்தை கொண்டு வந்து, பிறகு

• தண்ணீரை பூமியிலிருந்து வடியும் படி செய்து, அதுவரை கப்பலில் பிரயாணம் செய்து

• பிறகு அந்த ஒரு குடும்பத்தையும், மிருகங்களையும் அந்த இடத்தில் வைப்பது என்பது

எல்லாம் அறிந்த இறைவன் செய்தார் என்றுச் சொல்வது அறிவுடமையா?

இதற்கு பதிலாக,

• பல ஆண்டுகள் தன் மக்களை எச்சரிக்கை செய்யச் சொல்லி,

• நோவாவை வேறு பாதுகாப்பான இடத்திற்கு செல்ல உதவி செய்து, (ஆபிரகாமை எப்படி தூரமாக இடத்திலிருந்து கொண்டு வந்தார் அது போல)

• அந்த அழியும் பகுதியில் இருக்கும் விசேஷித்த மிருகங்களை (அதாவது கங்காரு போன்ற வேறு எங்கும் இல்லாத மிருகங்களை) மட்டுமே இடம் பெயரச் செய்து

• வெள்ளம் கொண்டு அழித்துவிட்டால், முடிந்தது வேலை.

சென்னையில் வெள்ளமும், அரசாங்கத்தின் டைடானிக் கப்பல் அறிவுரையும்:

வெள்ளமானது ஒரு குறிபிட்ட இடத்தில் மட்டுமே வந்தது என்றுச் சொல்பவர்களின் கருத்து எப்படி இருக்கிறது தெரியுமா?

சென்னையில் வெள்ளம் வரும் என்று தெரிந்தவுடன், அரசாங்கம், எல்லா மக்களையும் வேறு இடத்திற்கு அனுப்பாமல், ஒரு டைடானிக் போன்ற ஒரு கப்பலை தயார் செய்து, "சென்னை வாசிகளே, நீங்கள் எல்லாரும் இந்த கப்பலுக்குள் ஏறிக்கொள்ளுங்கள், அதில் எல்லா உணவு, தங்கும் வசதிகள் உண்டு, எத்தனை மாதங்கள் ஆனாலும் சரி, நாம் வெள்ளத்தில் மூழ்காமல், கப்பலிலேயே சுற்றிக்கொண்டு இருப்போம், பல‌ (ஆறு) மாதம் கழித்து தண்ணீர் வழிந்த பிறகு, நாம் மறுபடியும் சென்னையில் வசிக்கலாம்" என்றுச் சொல்வது போல உள்ளது.

அடுத்த மாநிலம, அல்லது மாவட்டம் நன்றாக இருக்கிறதே, அங்கு வெள்ளம் இல்லையே, அங்கே பாதுகாப்பாக நாம் இருப்போம், வெள்ளம் வடிந்த பிறகு சென்னைக்கு வரலாம் என்றுச் சொல்வதை விட்டுவிட்டு, ஒரு கப்பலில் ஆறுமாதம் சென்னையைச் சுற்றியே வலம் வர அறிவுரை கூறுவது அறிவுடமையாக இருக்குமா?

இப்படி இருக்கிறது, நோவாவின் வெள்ளம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே என்றுச் சொல்வது. வெள்ளம் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வந்தது என்றுச் சொல்வதில் தவறில்லை, ஆனால், குர்‍ஆனின் விவரங்கள் அனைத்தும் இதற்கு எதிராக இருக்கிறதே! இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?

சென்னையில் வெள்ளம் வந்தால், உலகத்தில் கணக்கிலடங்கா ஆடுகள் பாதுகாப்பாக இருக்கும் போது, சென்னையிலிருந்து ஒரு ஜோடி ஆண் பெண் ஆடுகளை பாதுகாக்க வேண்டிய அவசியமென்ன?

சென்னையில் வெள்ளம் வந்தால், மதுரைக்கு செல்லவேண்டியது தானே? கேரளாவிற்கு செல்லவேண்டியது தானே! அவ்வளவு ஏன் வட இந்தியாவிற்கு செல்லவேண்டியது தானே?

லோத்து வாழ்ந்த இடம் அழிக்கப்படும் போது, அவரை அவ்வூர் விட்டு வெளியேற்றவில்லையா இறைவன்?

சோதோம் கோமோரா அக்கியால் அழியும் என்பதால், லோத்துவிற்கும் அவரது குடும்பத்தார்களுக்கும் ஃபையர் புரூப் (Fire Proof Dress) உடைகளை கொடுத்து, இந்த பட்டணத்திலேயே இருங்கள் என்றுச் சொன்னாரா இறைவன்?

முடிவுரை: முடிவாகச் சொல்லிக்கொள்கிறேன், நோவாவின் வெள்ளம் பூமியனைத்திலும் ஆக்கிரமித்த ஒன்றாகும், இதனை குர்‍ஆனும், முஹம்மதுவும் இதர இஸ்லாமிய அறிஞர்களும் அங்கீகரித்துள்ளார்கள் (இக்கட்டுரையை படிக்கவும்: குறிப்பிட்ட பகுதி மட்டும் வெள்ளத்தால் மூழ்கியது என குர்‍ஆன் போதிக்கின்றதா? (DOES THE QURAN TEACH A LOCAL FLOOD?). இல்லை இல்லை, நாங்கள் ஒப்புக்கொள்ளமுடியாது என்றுச் சொன்னால், இந்த கட்டுரையில் நாம் கண்ட பிரச்சனைகளுக்கு பதில் என்ன என்று நீங்கள் தேடிப்பார்க்க வேண்டியவர்களாக இருப்பீர்கள்.

ஒரு சின்ன இடத்தில் வெள்ளம்கொண்டுவர இவ்வளவு பெரிய வேலையை அதுவும் சம்மந்தமில்லாத வேலையை செய்வதற்கு இறைவன் நம்மைப் போல அறிவில் குறைந்தவன் அல்ல என்பதை மட்டும் நான் சொல்லிக்கொள்கிறேன்.



Isa Koran Home Page Back - Koran Index

 

Wednesday, December 31, 2008

இருளை ஒளியாக்குதல் - Lighting Up The Darkness


 

இருளை ஒளியாக்குதல்

Lighting Up The Darkness

 
 
 
 
 
இறை நம்பிக்கையுள்ள மக்கள் தெய்வீக ஒளியை நம்புகிறார்கள். பைபிள் கூறுகிறது: "தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை…" (1 யோவான் 1:5). தேவன் தன் சித்தத்தை தன் தீர்க்கதரிசிகளுக்கு அறிவிப்பதின் மூலமாக இருளில் தன் ஒளியை பிரகாசிக்கச் செய்தார். வேதவசனம் இவ்விதமாக எழுதப்பட்டுள்ளது, "உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது " (சங்கீதம் 119:105). குர்‍ஆன் கூறுகிறது " அல்லாஹ் வானங்கள் பூமிக்கு ஒளி (ஏற்படுத்துபவன்) ...நிச்சயமாக நாம்தாம் 'தவ்ராத்'தை யும் இறக்கி வைத்தோம்;. அதில் நேர்வழியும் பேரொளியும் இருந்தன"(சூரா 24:35, 5:44).

 
 
கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் இயேசு கிறிஸ்து "இறைவனின் வார்த்தையாக இருக்கிறார்" என்று நம்புகிறார்கள் (அரபியில் கலிமதுல்லா). அவர் தேவனுடைய வார்த்தையாக இருப்பதினால், வெளிச்சத்தை கொடுக்கிறார். நற்செய்தி என்றுச் சொல்லும் இஞ்ஜிலில் நாம் படிக்கிறோம், "அந்த வார்த்தை மாம்சமாகி...அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது;" (யோவான் 1:14, 4, 5). இன்னும் குர்‍ஆனிலும் படிக்கிறோம், அதாவது இயேசு இஞ்ஜிலை பெற்றார், "அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்;. அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன, அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது" (குர்‍ஆன் 5:46).
 
 
 
வெளிப்படும் ஒளி - Releavling Light

 
 
இயேசு குழந்தையாக இருக்கும் போது, அவரை விருத்தசேதனம் செய்வதற்காக ஆலயத்திற்கு கொண்டுவந்த போது, அவரைப் பற்றி ஒரு ஆச்சரியமான தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டது. "அவன்(சிமியோன்) அவரைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு, தேவனை ஸ்தோத்திரித்து: ஆண்டவரே,... புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும், தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான்"(லூக்கா 2:28-32).

 
 
மேசியாவின் மூலமாக வெளியாக்கப்பட்ட இந்த வெளிச்சமானது, "அந்தகாரத்திலும் மரண இருளிலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தரவும், ...அவ்விரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது.."(லூக்கா 1:78,79) என்று சொல்லப்பட்டது. இதுமட்டுமல்ல‌, இன்னொரு தீர்க்கதரிசனமும் மேசியாவினால் நிறைவேறியது, "..என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்;.."(மல்கியா 4:2).
 
 
 
சுகப்படுத்தும் ஒளி - Healing Light

 
 
"நீதியின் சூரியன் உங்கள் மேல் உதித்து, அதன் செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் இருக்கும்" என்ற தீர்க்கதரிசனத்தின் பொருளை விளக்குவது போல ஒரு அரேபிய பழமொழி உண்டு. இந்த பழமொழி, சூரியனுக்கும், ஆரோக்கியம் அடைவதற்கும் இடையே உள்ள தொடர்பை விளக்குகிறது. இது மக்களுக்கு அறிவுரை இப்படியாக கூறுகிறது: "நீ மருத்துவரிடம் செல்வது போல, சூரியனிடம் போ - Go to the sun like you go to the doctor". இதனால் தான், தங்கள் உடலின் தோலில் சுகவீனமுள்ள நோயாளிகளுக்கு மருத்துவர்கள், காலையில் உதிக்கும் சூரிய ஒளியில் சிறிது நேரம் காட்டும் படி உற்சாகப்படுத்துகின்றனர். இதுமட்டுமல்ல, சூரிய ஒளியின் மூலமாக நம் உடலின் ஆரோக்கியத்திற்கு தேவையான "உயிர்ச்சத்து டி"யை நாம் பெறமுடியும் மற்றும் நீண்ட நாட்களாக சோர்ந்துப் போய் இருக்கும் மன அழுத்தமுள்ளவர்களுக்கும் சூரிய ஒளி நனமையை பயக்கும்.

 
 
இயேசு மிகவும் அற்புதமான முறையில் பலரை சுகப்படுத்தினார் என்பதை நாம் அறிவோம். இஞ்ஜிலில் இவ்விதமாக எழுதப்பட்டுள்ளது, அதாவது இயேசுவினால் "இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது... பின்பு, இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து, ... ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கிச் சொஸ்தமாக்கினார்... அப்பொழுது பலவித வியாதிகளையும் வேதனைகளையும் அடைந்திருந்த சகல பிணியாளிகளையும், பிசாசு பிடித்தவர்களையும் சந்திரரோகிகளையும், திமிர்வாதக்காரரையும் அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவர்களைச் சொஸ்தமாக்கினார்"(மத்தேயு 4:15,23,24).
 
 
 
இரட்சிக்கும் ஒளி - Saving Light

 
 
 
இயேசு சுகமாக்கிய அனேக மக்களில் சிலரின் நோய் மிகவும் தீவிரமாக இருந்தது. இப்படிப்பட்டவர்களின் வாழ்க்கையில் இயேசு இடைப்பட்டதால், அவர்கள் உயிர் பிழைத்தார்கள், இவர்களுக்கு அவரே இரட்சிப்பாக மாறினார்(லூக்கா 7:2, 8:43). தன் வல்லமையுள்ள‌ ஒளியை மரணத்தை எதிர்ப்பார்த்துக்கொண்டு இருந்தவர்களின் மீது பாய்ச்சி காப்பாற்றியதால், "மரண இருளில் இருந்தவர்களுக்கு அவர் வெளிச்சம் கொடுத்தார்" என்ற மேசியா பற்றிய வசனங்களின் பொருள் இன்னும் சிறப்பு மிக்கதாக மாறுகிறது. இது மட்டுமல்ல, மரித்துப்போனவர்களையும் அவர் உயிரோடு எழுப்பினார், இதனை பைபிளும் குர்‍ஆனும் போதிக்கின்றன. குஷ்ட வியாதியினால் நம்பிக்கையின்றி வாழ்ந்தவர்களுக்கு, இயேசு நம்பிக்கையின் கலங்கரை விளக்காக இருந்தார்.

 
 
மேசியாவின் ஒளியைப் பற்றிய இன்னொரு தீர்க்கதரிசனத்தை நாம் சிந்திப்பது நல்லது. ஏசாயா 49:6ல் நாம் படிக்கிறோம், தேவனுடைய தாசனாகிய மேசியா இரட்சிப்பு மற்றும் ஒளியாக இருக்கிறார், "பூமியின் கடைசிபரியந்தமும் என்னுடைய இரட்சிப்பாயிருக்கும்படி, உம்மை ஜாதிகளுக்கு ஒளியாகவும் வைப்பேன்".
 
 
 
வாழ்வு தரும் ஒளி - Life-Giving Light

 
 
இதற்கு முன்பாக "தேவனுடைய வார்த்தை நம் எல்லாருடைய‌ வாழ்விற்கு ஒளி தருகிறது" என்று கண்டோம். இப்போது நாம் இயேசுவின் போதனை எப்படி வாழ்வு தருகிறது என்பதைக் காண்போம், மற்றும் ஒளிக்கும் வாழ்விற்கும் இடையே உள்ள தொடர்பையும் காண்போம். "நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்" என்று இயேசு கூறினார் மற்றும் "என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பான் என்றார்"(யோவான் 8:12).

 
 
இயேசு வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு பல ஆண்டுகளுக்கு பின்பு, தன் சீடரான யோவானுக்கு தரிசனத்தில் இவ்விதமாக கூறினார்:".. நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்; மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்."(வெளி 1:16-18).

 
 
இயேசுவின் முகம் பற்றிச் சொல்லும் போது, "அவருடைய முகம் வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனைப் போலிருந்தது" என்று யோவான் விவரிக்கிறார். இயேசுவின் முகத்திலிருந்து வெளிப்பட்ட இந்த ஆச்சரியமான ஒளி நமக்கு "நீதியின் சூரியன்" என்று மேசியாவைக் குறிக்கும் பெயரை நியாபகப்படுத்துகிறது. பிரகாசமான ஒளி என்பது அவர் பாவமற்ற பரிசுத்தர் என்பதை காட்டுகிறது (சூரா 19:19ஐ ஒப்பிட்டுப்பார்க்கவும்).

 
 
நான் உங்களிடம் ஒரு கேள்வியை கேட்கலாமா? "உண்மையிலேயே இயேசு மரித்ததிலிருந்து எழுந்தார் என்றுச் சொன்னால், அவரிடம் மரணத்தின் மற்றும் பாதாளத்தின் திறவுகோள் உள்ளது என்று பொருள் படுகிறதல்லவா?" இயேசு பாதாளத்தின் காரிருளில் நுழைந்து மற்றும் அதிலிருந்து வெற்றிகரமாக வெளியே வந்தார். இதைப்போல செய்தவர்கள் யாருமில்லை!(May I ask you to consider: "If Jesus really did rise from the dead doesn't it make sense that he has the keys of death and the grave?" After all, he entered that dark realm and exited successfully! No one else has ever done that!).
 
 
யூத‌ர‌ல்லாத‌வ‌ர்க‌ளுக்கு ஓளி - A Light to Non-Jews

 
 
யோவான் 4ம் அதிகார‌த்தில் ஒரு சுவார‌சிய‌மான‌ நிக‌ழ்ச்சி ந‌டைபெறுகிற‌து, இந்த‌ நிக‌ழ்ச்சியில் "ச‌மாரிய‌ர்க‌ள்" என்றுச் சொல்ல‌க்கூடிய‌ ம‌க்க‌ளுக்கு ஒரு ஆன்மீக‌ வெளிச்ச‌த்தை இயேசு கொண்டு வ‌ந்தார். த‌ங்கள் சகோதரர் இனமான யூதர்களைப்போல, இந்த சமாரியர்களும் படைப்பாளியாகிய தேவனை நம்புகிறார்கள், அவர் தான் மோசேக்கும் சட்டத்தை கொடுத்தார் என்றும் நம்புகிறார்கள். துரதிஷ்டவசமாக இவர்கள் சில வகைகளில் உண்மையான பாதையை விட்டு விட்டார்கள். இவர்களுக்கு தேவன் யார் என்றுத் தெரியவில்லை, ஏனென்றால், "இரட்சிப்பு யூதர்கள் வழியாக வருகிறது" என்று இயேசு இவர்களிடம் கூறினார்"(யோவான் 4:22).

 
 
தற்காலத்தில் அனேகர் இந்த கருத்தை விமர்சிக்கிறார்கள், அதாவது "இது குறுகிய எண்ணமுடையது" என்றுச் சொல்கிறார்கள். ஆனால், இந்த யூத இனத்தில் தான் தேவன் தீர்க்கதரிசிகளை அனுப்பினார், வேதத்தை அருளினார் மற்றும் கடைசியாக உலகத்தின் அனைத்து மக்களுக்கும் இரட்சிப்பை தரும் மேசியாவாக வருவார் என்பதை இவர்கள் மறந்துப்போகிறார்கள். கடைசியாக, சமாரியர்கள் இயேசுவின் அன்பான கடிந்துக்கொள்ளுதலை ஏற்றுக்கொண்டு, "உண்மையாக அவரே உலகத்தின் இரட்சகர்" என்பதை அங்கீகரித்தனர்(யோவான் 4:42).

 
 
இயேசுவின் இந்த பெயரின் பொருளை(இரட்சகர்-Saviour) இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள், ஆனால், இயேசு (ஈஸா) என்ற பெயரை அல்லா தெரிந்தெடுத்து அதனை ஒரு தூதன் மூலமாக வெளிப்படுத்தினார் என்று குர்‍ஆன் சொல்கிறது. இயேசு என்ற பெயரின் பொருள் "தேவனே இரட்சகர்-God is salvation" என்று முஹம்மத் ஐ எ உஸ்மான் என்ற இஸ்லாமிய அறிஞர் "இஸ்லாமிய பெயர்கள்" என்ற புத்தகத்தில்(பக்கம் 77) அங்கீகரித்துள்ளார்.

 
 
இயேசுவே இறைவனின் ஒளி மற்றும் இரட்சகர் என்று நம்புகிறீர்களா?

 
 
உங்கள் கேள்விகள் சந்தேகங்களை எனக்கு அனுப்பு இங்கு சொடுக்கவும்.

 
 
 

Wednesday, December 24, 2008

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் இஸ்லாமியர்களே! - Merry Christmas to Muslims!


 

 

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் இஸ்லாமியர்களே!


Merry Christmas to Muslims!

 
وَالَّتِي أَحْصَنَتْ فَرْجَهَا فَنَفَخْنَا فِيهَا مِنْ رُوحِنَا وَجَعَلْنَاهَا وَابْنَهَا آَيَةً لِلْعَالَمِينَ
இன்னும் தம் கற்பைக் காத்துக் கொண்ட (மர்யம் என்ப)வரைப் பற்றி (நபியே! நினைவு கூரும்) எனினும், நம் ஆன்மாவிலிருந்து நாம் அவரில் ஊதி அவரையும், அவர் புதல்வரையும் அகிலத்தாருக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கினோம். (குர்‍ஆன் 21:91)

And (remember) her who guarded her chastity: We breathed into her of Our spirit, and We made her and her son a sign for all peoples. (Surah Al Anbiyaa 91)
 
 
ஒவ்வொரு ஆண்டும் இயேசுக் கிறிஸ்துவின் பிறந்த நாளை நினைவு கூர்ந்து "கிறிஸ்துமஸ்" என்றுச் சொல்லக்கூடிய "கிறிஸ்து ஜெயந்தியை" கொண்டாடுகிறோம். இந்த முக்கியமான நிகழ்ச்சி பற்றிய பல நிகழ்வுகளை குர்‍ஆன் உறுதிப்படுத்துகிறது. இயேசுவின் தாய் ஒரு கன்னியாக இருந்தார்கள். உலக முக்கியத்துவம் வாய்ந்த அவரது அற்புத பிறப்புப் பற்றிய செய்தியை ஒரு தூதன் வெளிப்படுத்தினான். ஆகையால், இந்த நிகழ்வுகளை நாம் கண்டால், இஸ்லாமியர்களுக்கு கிறிஸ்து ஜெயந்தி வாழ்த்துதல்கள் சொல்வது சரியே.
 
 
 
எனினும், சில இஸ்லாமியர்கள் கிறிஸ்து ஜெயந்தி கொண்டாட்டங்களில் கலந்துக் கொள்வதில்லை. இதற்கு முக்கிய காரணம் என்று அவர்கள் சொல்வது, "கிறிஸ்தவர்கள் இயேசுவை திரித்துவத்தில் ஒருவர் என்று கருதி அவரை வணங்குகிறார்கள்" என்பதாகும். இறைவன் தனித்தன்மை வாய்ந்த ஒருவரே இறைவன் என்றும் மற்றும் அந்த இறைவன் தான் இயேசுவாக இறங்கிவந்தார் என்றும் பைபிள் தெளிவாகச் சொல்கிறது(உபாகமம் 6:4,5, சகரியா 14:9, யோவான் 1). கிறிஸ்தவத்தில் உள்ள அனைத்து பெரிய குழுக்களின் முக்கிய போதனையும் இது தான். இதை ஏன் எல்லா கிறிஸ்தவ குழுக்களும் உண்மை என்று நம்புகிறார்கள் என்பதற்கான முக்கிய காரணம், "பைபிள் இதை போதிக்கிறது" என்பதால் தான். தேவன் மனிதனாக இயேசுவில் வந்தார் என்ற "அதிர்ச்சி தரும்" உண்மையை நாம் நீக்கிவிட்டால், பைபிளில் உள்ள அனைத்தையும் நம்புவது இஸ்லாமியர்களுக்கு சுலபமாகிவிடும். தேவனுடைய வார்த்தையாகிய பைபிளில் இயேசுவைப் பற்றிய உண்மை இருந்தும் ஏன் இஸ்லாமியர்கள் அதை ஏற்க மறுக்கிறார்கள் என்றால், அவர்கள் பைபிள் மாற்றப்பட்டது என்று நம்புவதினால் தான். உண்மையில் சிந்தனையில் மாறுபாடுள்ளவர்கள் "கடினமான பகுதிகளை" எடுத்துவிட விரும்புவார்கள், ஆனால் "நம்புவதற்கு கடினமான" விவரங்களை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள் (The fact that they always have been contained in God's Word makes it very unlikely that it was changed. Surely evil people would take out the difficult parts and definitely not add 'hard-to-believe' things).
 
 
 
 
கிறிஸ்தவ போதனைகளுக்கு எதிரான‌ இஸ்லாமியர்களின் எதிர்ப்புக்கள் பெரும்பான்மையாக "அவைகள் எப்படி உண்மையாக இருக்கமுடியும்?" என்ற சந்தேகத்தைச் சுற்றியே இருக்கும், அதற்கு பதிலாக, "ஏன் அவைகள் அப்படி இருக்கின்றன என்று முன்வைக்கபப்டும் காரணங்களை" அவர்கள் கவனிப்பதில்லை. இது மிகவும் ஆச்சரியமானது, ஏனென்றால், விசுவாசிகள்(இறை நம்பிக்கையுள்ளவர்கள்) "இறைவன் என்பவர் நம்முடைய புரிந்துக்கொள்ளுதலுக்கு அப்பாற்பட்டவர் என்றும், அவருக்கு ஆரம்பமுமில்லை, முடிவுமில்லை மற்றும் அவருக்கு எல்லாம் தெரியும்" போன்ற அவருடைய குணங்களை சுலபமாக ஏற்றுக் கொள்வார்கள். ஆகையால், நம்முடைய இப்போதைய விளக்கத்தில், "ஏன் இறைவன் மனிதனாக இயேசுவில் வந்தார் என்பது தான் முக்கியமே தவிர அவர் அதை எப்படி செய்தார்" என்பதல்ல (Therefore, it is more important to focus on explaining why God became a man in Jesus rather than how he managed to do so).
 
 
 
கிறிஸ்து ஜெயந்திக்கான முதல் காரணம்: பாவத்தின் முக்கியத்துவம்

First reason for the Christmas season: The seriousness of sin
 
 
 
நாம் நினைப்பதை விட நம்முடைய பாவங்கள் மிகவும் கொடுமையானவைகளாகும். உங்களில் அனேகருக்கு தெரியும் என்று நினைக்கிறேன், ஆதாமும் ஏவாளும் எத்தனை பாவங்கள் செய்தார்கள் என்று அவர்களை இறைவன் ஏதேன் தோட்டத்திலிருந்து துரத்திவிட்டார். அவர்கள் செய்தது ஒரே ஒரு பாவம் தான். ஒரே ஒரு முறை பாவம் செய்து கீழ்படியாமல் போனதினால், அவ்வளவு பெரிய விளைவை அது உண்டாக்கியது எனபதிலிருந்து, பாவம் என்பது வெறும் சிறிய பிழை அல்ல என்பதை நாம் விளங்கலாம். பைபிளின் படி, பாவம் என்பது நம்மை படைத்த இறைவனுக்கு எதிராக நாம் கலகஞ் செய்வதாகும் மற்றும் நம்முடைய தகாத ஆசைகளினாலும், சிந்தனையினாலும் மற்றும் செயல்களாகும் இறைவனை துக்கப்படுத்துவதாகும்.
 
 
 
பாவம் மிகவும் கொடுமையானது என்பதை, இஸ்லாமிய போதனையிலிருந்தும் கூட நாம் தெளிவாக புரிந்துக்கொள்ளலாம். அதாவது, அல்லாவிற்கு இணைவைத்து வணங்கும் பாவமாகிய "ஷிர்க் - SHIRK" என்ற பாவம் "நியாயத்தீர்ப்பு நாளில்" கூட மன்னிக்கப்படாது என்று இஸ்லாம் போதிக்கிறது. இஸ்லாமிய அறிஞர்களின் கருத்துப்படி, "பெரிய பாவங்கள்(Major Shirks)" என்று க‌ருதுப‌வ‌ற்றில் ஒரு சில‌ இவ்வித‌மாக‌ உள்ள‌து, அதாவது, 1)அல்லாவின் கட்டளைக்கு எதிராக வேறு ஒரு அதிகாரத்திற்கு கீழ் படிந்து இருப்பது, மற்றும் 2) அல்லாவிற்கு காட்ட‌வேண்டிய‌ அன்பை ம‌ற்றவ‌ர்க‌ளிட‌ம் காட்டுவ‌து ஆகும்.

 
இதே போல, "சிறிய‌ பாவ‌ங்க‌ள்(Mijor Shirks)" கூட‌ ப‌ல‌ வ‌கையாக‌ உள்ள‌ன‌. அதாவ‌து, ச‌குண‌ம் பார்ப்ப‌து, குறிசொல்ப‌வ‌ரிட‌ம் சென்று குறி பார்ப்ப‌து, இன்னுமுள்ள‌ மூட‌ப‌ழ‌க்க‌வ‌ழ‌க்க‌ங்க‌ளை பின்ப‌ற்றுவ‌து, ந‌ல்ல‌ ம‌னித‌ர்க‌ளின் க‌ல்ல‌ரைக‌ளில் சென்று அவ‌ர்க‌ளிட‌ம் ஜெபிப்பது(துவா கேட்ப‌து), ஜோசிய‌ம் பார்ப்ப‌வ‌ர்க‌ளையும், எதிர் காலத்தில் நடக்கும் நிகழ்வு பற்றிய கனவுகளுக்கு பொருள் கூறுப‌வ‌ர்க‌ளை புக‌ழுவ‌து, ந‌ம்மிட‌ம் உள்ள‌வைக‌ள் ப‌ற்றி பெருமையாக‌ வெளியே மற்ற‌வ‌ர்க‌ளுக்கு காட்டுவ‌து, அல்லாவின் க‌ட்ட‌ளையின் ப‌டி பாதிக்க‌ப்ப‌ட்டு இருக்கும் ஒருவ‌ரின் அவ‌ல‌ நிலையைக் க‌ண்டு ம‌ன‌த‌ள‌வில் திருப்தியில்லாம‌ல் இருப்ப‌து போன்ற‌வைக‌ள் சிறிய‌ ஷிர்க்குள் ஆகும். இந்த பெரிய மற்றும் சிறிய ஷிர்க்குகள்(Major and Minor Shirk) மிகவும் கடுமையானவைகள், மற்றும் இவைகளை ஒருவர் சுலபமாக செய்துவிடும் ஆபத்தும் உள்ளது. இவைகளை நாம் சுலபமாக கண்டுபிடித்தும் விடலாம்.
 
 
 
இறைவனின் பார்வையில் பாவம் என்பது எவ்வளவு வருந்தப்படத் தக்கது என்பதை ஒரு எடுத்துக்காட்டு மூலமாக நாம் விவரிப்போம். இந்த விளக்கத்தை நாம் பைபிள் மற்றும் குர்‍ஆனின் அடிப்படையிலேயே பார்க்கப்போகிறோம். குர்‍ஆன் அடிப்படையில் பொதுவாக நாம் "இறைவனைப் பற்றி" விவரிக்கும் போது, "அவர் பார்க்கிறார், அறிகிறார்" என்றுச் சொல்கிறோம். அவர் பார்க்கிறார் மற்றும் எல்லாவற்றையும் முழுவதுமாக அறிந்தும் இருக்கிறார், ஆனால், நம்மை அன்போடு பார்க்கிறாரா என்பது தான் கேள்வி. இறைவனின் குணநலன்களைப் பற்றி விவரிப்பது வீணாகுமா? ஆகாது, இப்போது "பாவத்தை" பற்றிய ஒரு எடுத்துகாட்டை நாம் காண்போம்.

 
நீங்கள் அதிகமாக விரும்பி வாங்கிய ஒரு விலை உயர்ந்த மோட்டார் கார் (Car) உங்களிடம் இருப்பதாக கற்பனை செய்துக் கொள்ளுங்கள். ஒரு நாள் காலை உங்கள் காரின் முன்பாகத்தில் ஒரு பகுதி கீறலால் பாதிக்கப்பட்டு அவலட்சனமாக இருப்பதை காண்கிறீர்கள். நீங்கள் உங்கள் பிள்ளைகளிடம் விசாரித்து கேட்டதில், அதைச் செய்தவர், இரண்டு வயதுடைய உங்கள் மகன் "அமீர்" என்று தெரியவருகிறது. இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்கள் இரண்டு வயது மகனிடம் அவன் செய்த செயல் எவ்வளவு பெரிய தவறு என்றும், அதை மறுபடியும் பழுதுபார்க்க உங்களுக்கு எவ்வளவு பணம், நேரம் செலவாகும், என்பதையும் அவனுக்கு விவரித்துச் சொல்ல உங்களால் முடியுமா? அவன் இன்னும் குழந்தை என்பதால் இப்படி சொல்ல உங்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போகும். அப்படி சொன்னாலும், அமீருக்கு நீங்கள் சொல்லும் விவரங்களை புரிந்துக்கொள்ளும் புத்திகூர்மை இன்னும் வரவில்லை. எப்படியாயினும், அந்த சேதத்திற்கு தேவையான பணத்தை, நேரத்தை அமீர் தான் தரவேண்டும், ஆனால், இப்போது அதற்கு வாய்ப்பு இல்லை. இதனால், உங்கள் மகனோடு "தந்தை மகன்" என்ற உறவுமுறையை முறித்துக்கொள்வீர்களா? அவன் மீது எப்போதும் கோபமாக இருப்பீர்களா? இல்லை, இப்படி செய்யமாட்டீர்கள். இந்த நேரத்தில் அவனிடம், இனி இப்படி செய்யவேண்டாம் என்றுச் சொல்வீர்கள் மற்றும் அவனது வயதிற்கு ஏற்றாற் போல கடிந்துக்கொள்வீர்கள்/அதட்டுவீர்கள், அவ்வளவு தான். இப்படி நீங்கள் செய்தாலும், இதற்கு முன்பு அவன் மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தீர்களோ அதே போல அன்பு கூறுவீர்கள். அவன் செய்த சேதத்திற்கு நியாயமான தண்டனையை அவனுக்கு இடாமல், அவன் மீது இரக்கத்தோடும், அன்போடும் நடந்துக்கொள்வீர்கள், ஏனென்றால், அந்த சேதத்திற்கான தண்டனையை(பணம் மற்றும் நேரம் செலவை) நீங்களே ஏற்றுக்கொண்டபடியால், அவன் மீது மறுபடியும் இரக்கம் பாராட்டுவீர்கள்.
 
 
 
கிறிஸ்து ஜெயந்திக்கான இரண்டாம் காரணம்: நம்மீது பொழிந்த‌ இறைவனின் உயர்ந்த‌ அன்பு

Second reason for the Christmas season: The greatness of God's love for us
 
 
 
இப்போது மேலே நாம் கண்ட எடுத்துக்காட்டில் சொல்லப்பட்டது போல, இறைவன் மிகவும் பரிசுத்தமானவர் மற்றும் பிழையில்லாதவர். நம்முடைய பாவங்கள் எவ்வளவு பயங்கரமானது/கொடுமையானது என்பதை அறிந்துள்ளார், அதே நேரத்தில் அதன் பயனாக வரும் தண்டனையை நம்மால் சுமக்க முடியாது என்றும் அவர் அறிந்துள்ளார். அவருடைய கண்ணோட்டத்தின் படி நாம் என்ன செய்தோம்? அதன் விளைவு என்ன? என்பதை நாம் சரியாக அறியாத காரணத்தினால், நம்மிடம் அவர் "ஏன் செய்தாய்?" என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தால் அதனால் பயன் இல்லை. இறைவனுக்கு முன்பாக நல்லவர்கள் போல வாழ்ந்தால் போதும் என்று சிலர் எண்ணுகின்றார்கள். இப்படி எண்ணுவது எப்படி இருக்குமென்றால், அமீருக்கு அந்த காரை பழுதுபார்க்க எவ்வளவு செலவாகும் என்பதை தெரிவித்த பிறகு, அமீர் அமைதியாக ஒரு நாற்காலியில் இரண்டு நிமிடம் மௌனமாக உட்கார்ந்து இருப்பதற்கு சமமாகும். இப்படி அமீரின் தந்தை அமீருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தாலும், அந்த காரை பழுதுபார்க்கும் செலவு தானாகவே சந்திக்கப்படுமா?

 
தேவன் நம்மை நேசிக்கிறார், அதனால், நம் பாவங்களை மன்னிக்க விரும்புகிறார். இருந்தாலும், அவரது நீதியான நியாயத்தீர்ப்பு நமக்கு தண்டனையாக நம்மை அவரோடு வாழ இடம்கொடாமல் நிரந்தரமாக‌ பிரித்துவிடும். சிலுவை என்ற இடத்தில் தான் தேவன் தன் இரண்டு குணநலன்களையும் நிறைவேற்றிய இடமாகும்(The cross is the place on which God has fulfilled both characteristics.). நம்மீது வைத்தை அன்பினால் அவர் மனிதனாக இயேசுவாக வந்தார், நமக்காக நம் தண்டனையை தன் மேல் ஏற்றுக்கொண்டு மரித்தார். இந்த தண்டனையை நாம் தான் ஏற்றுக்கொள்ளவேண்டும், ஆனால், நம்மால் அது முடியாது. நாம் தேவனுக்கு எதிராக செய்த மாறுபாட்டினால் வந்த அவமானத்தை இயேசு தன் இரத்தம் சிந்தி எடுத்துப்போட்டார். பைபிளிலும் மற்றும் குர்‍ஆனிலும் தேவனின் மேன்மை மற்றும் புகழ் இயேசுவின் பலியினால் மறுபடியும் நிலைநிறுத்தப்பட்டது (ஒப்பிட்டுப் பார்க்கவும் எண்ணாகமம் 19:1 - 10 மற்றும் குர்‍ஆன் 2:67 – 74).
 
 
 
தேவன் தானே நீதியை நிலைநிறுத்த வேண்டுமென்று விரும்பினார்! எந்த மனிதன் தன் மனதை புதிதாக மாற்றிக்கொண்டு இயேசுவின் மீது நம்பிக்கை வைப்பானோ அவனுக்கு பரலோகத்தில் ஒரு இடம் உண்டு. இயேசுவின் மூலமாகத் தான் தேவன் நம்மை மன்னிதார் மற்றும் இயேசுவை பின்பற்றுகிறவர்கள் தங்களுக்கு தீமை செய்தவர்களை மன்னிப்பதற்கு காரணரும் இவர் தான். இயேசு செய்த இவ்விதமான நன்மைக்கு நன்றிக் கடனாக மற்றும் அவர் கொடுத்த மனவலிமையினாலே கிறிஸ்தவர்கள் எல்லாருக்கும், தங்கள் எதிரிகளுக்கும் சேர்த்து தங்களால் இயன்ற நன்மைகளை, செய்துக்கொண்டு இருக்கிறார்கள். இயேசுவை பின்பற்றுகிறவர்களின் இந்த மாற்றம் மற்றவர்களை தேவனின் பக்கம் இழுக்கிறது, தேவன் காட்டிய வழி மூலமாக நீதி செய்யும் படி உற்சாகப்படுத்துகிறது. எவன் ஒருவன் வன்முறையின் மூலமாகவோ அல்லது கட்டாயத்தின் மூலமாகவோ தன் சொந்த நீதியை பின்பற்ற விரும்புவானோ அவன் நியாயத்தீர்ப்பு நாளில் குற்றவாளி என்று தீர்ப்பிடப்படுவான். தேவனின் விருப்பத்தை ஏற்று, அவரை பின்பற்ற யார் யார் விரும்புவார்களோ, அவர்களுக்கு சமாதானம் நிம்மதி ஏற்கனவே கொடுக்கப்பட்டு விட்டது. அந்த நாள் இரவிலே தேவ தூதர்கள் "உலகத்தின் இரட்சகர்" பிறந்தார் என்று மேய்ப்பர்களுக்குச் சொன்னதில் எந்த ஆச்சரியமும் இல்லை.


 
 
உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும்,

மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக …

"Glory to God in the heavenly heights,

Peace to all men and women on earth who please him." (லூக்கா 2:14)
 
 
 
அன்பு என்ற வார்த்தையின் பொருள் சுயமாக முடிவெடுக்கும் உரிமை(Freedom of Choice) என்ற வார்த்தைகளோடு தொடர்புடையது. தேவனின் விலைமதிப்பில்லா இந்த பரிசை நாம் ஏற்கலாம் அல்லது மறுத்துவிடலாம். இது எப்படி நடக்கும் என்றும், எனக்கு புரியவில்லை என்றும் நாம் சொல்வதால், நாம் இதனை மறுக்கக்கூடாது. இப்படிப்பட்ட மறுப்பானது "பொதுவாக இறைவன்" பற்றிய போதனைக்கு எதிரானதாகும். உதாரணத்திற்கு யாத்திராகமம் 3:2 லிருந்து 4 வசனங்களையும், குர்‍ஆன் சூரா 20:11 லிருந்து 13 வரையிலும் உள்ள வசனங்களை படிக்கவும். இந்த வசனங்களில், எரியும் நெருப்பிலிருந்து தேவன்/இறைவன் மோசேயுடன் பேசினார் என்று நாம் படிக்கிறோம். இறைவன் எரியும் நெருப்பில் தன் குரலை/சத்தத்தை பொதித்து மோசேயுடன் கடந்த காலத்தில் பேச அவரால் முடியுமென்றால், நிச்சயமாக தன்னை ஒரு உடலில் பொதித்துக்கொண்டு நம்மை மறுபடியும் தன்னுடன் சேர்த்துக்கொள்வது என்பது அவருக்கு சுலபமானது தான்! என் அருமை இஸ்லாமிய நண்பரே, உங்கள் இருதயத்தின் கண்களை தேவன் திறப்பாராக, நீங்கள் உண்மையான கிறிஸ்து ஜெயந்தியின் உண்மை மகிழ்ச்சியை அடைந்து ஆனந்தம் அடைவீராக.

 
ஆசிரியரோடு தொடர்பு கொள்ள இங்கு சொடுக்கவும்

 

Isa Koran Home Page Back - Oskar's Index Page

Saturday, December 13, 2008

இஸ்லாமின் எதிரி நம்பர் 1க்கு உலக தானியேல் பரிசு 2008:

 
Islam's Public Enemy #1, Got WORLD's 2008 Daniel of the Year

தந்தை ஜகரியா பூட்ரோஸ்


(என் அகராதியில் "பயம்" என்ற வார்த்தை இருக்காது, நான் இஸ்லாமியர்களை எவ்வளவு நேசிக்கிறேனோ, அவ்வளவு அதிகமாக இஸ்லாமை வெறுக்கிறேன்)




Coptic Priest Fr. Zakariya Boutrus
(My dictionary does not contain the word "Fear")




இஸ்லாமின் பகிரங்க எதிரி என்று அரபி செய்தித்தாள்களால் அழைக்கப்பட்ட "தந்தை ஜகரியா பூட்ரோஸ்"க்கு "WORLD 2008, Daniel of the Year" என்ற கவுரவ பட்டத்தைக் கொடுத்து "WORLD MAGAZINE" என்ற கிறிஸ்தவ பத்திரிக்கை சிறப்பித்துள்ளது.

["Times Magazine" என்ற பத்திரிக்கை, "Man of the Year" என்ற பட்டம் கொடுத்து எப்படி கவுரப்படுத்துகிறதோ அது போல கிறிஸ்தவ உலகில் "World Magazine" என்ற பத்திரிக்கை "Daniel of the Year 2008" என்ற பட்டம் கொடுத்து கவுரப்படுத்துகிறது.]

படிக்கவும்: http://www.worldmag.com/articles/14763

இந்த விவரத்தைப் பற்றி வாசகர்களின் பின்னூட்டங்களை இங்கு காணலாம். http://www.jihadwatch.org/archives/023804.php


ஏன் இவரை "இஸ்லாமின் பகிரங்க எதிரி நம்பர் 1" என்று இஸ்லாமியர்கள் கருதுகிறார்கள்?

இக்கேள்விக்கு பதில் தெரியவேண்டுமானால், கீழ் கண்ட விவரங்களைப் படியுங்கள்.

இவர் எகிப்திய‌ காப்டிக் கிறிஸ்தவ பாதிரியார். இவருக்கு யாரைக்கண்டும் பயமில்லை. [இஸ்லாமிய ஜிஹாதிகளைக் கண்டு பயப்படாதவர் என்றுச் சொன்னால் பார்த்துக் கொள்ளுங்கள் இவரது தைரியத்தை].

தன் அகராதியில் பயம் என்ற வார்த்தை இருக்காது என்றுச் சொல்கிறார். நான் இஸ்லாமியர்களை எவ்வளவு நேசிக்கிறேனோ, அவ்வளவு அதிகமாக இஸ்லாமை வெறுக்கிறேன் என்கிறார்.


இஸ்லாமியர்களுக்கு 10 கோரிக்கைகள்: குர்‍ஆன் வசனங்களை எடுத்துவிடுங்கள்..... இஸ்லாமிய அரசுகள் கிறிஸ்தவர்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்....

Coptic Priest Zakaria Boutrus: Verses Must be Struck from the Koran; I Demand an Official Apology from Muslim Governments to Christians

இவரது தைரியத்திற்கு ஒரு நிதர்சனம், இவர் இஸ்லாமியர்களிடம் முன்வைத்த 10 கோரிக்கைகளாகும். இஸ்லாமிய நாடுகளில் அதிக சூட்டை உருவாக்கிய அந்த 10 கோரிக்கைகள் என்ன? மேலும் படிக்கவும்....

இவரது இந்த 10 கோரிக்கைகளை இவர் அரபியில் சொல்ல, ஆங்கிலத்தில் வீடியோவின் அடியில் காட்டப்பட்ட இந்த வீடியோவை காணவும்.

http://www.youtube.com/watch?v=4HXX2fO8pM4

இந்த வீடியோவின் ஆங்கில மொழிபெயர்ப்பை இங்கு படிக்கலாம்: http://memri.org/bin/articles.cgi?Page=archives&Area=sd&ID=SP94305



இந்த 10 கோரிக்கைகளை தமிழிலும் ஆங்கிலத்திலும் கீழே படிக்கவும்:

நேர்க்காணல் காண்பவர்: நீங்கள் இப்படி இஸ்லாம் பற்றி விமர்சிப்பதை நிறுத்தவேண்டுமானால், இஸ்லாமியர்கள் என்ன செய்யவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்?

தந்தை ஜகரியா: என் கோரிக்கைகள் 10 பிரச்சனைகளை உள்ளடக்கியது. இவைகளை நாம் 10 தேவைகள் (10 Demands) என்று கூட அழைக்கலாம். இவைகளை நான் கேட்பது எனக்காக அல்ல, சத்தியத்திற்காகவும், எங்கள் நம்பிக்கைக்காகவும், இயேவிற்காகவும் கேட்கிறேன்.

கோரிக்கை 1: முதலாம் கோரிக்கை இது தான், அதாவது இயேசுவின் தெய்வீகத்தன்மையை மறுக்கும் எல்லா குர்‍ஆன் வசனங்களையும் குர்‍ஆனிலிருந்து எடுத்துவிடுங்கள்.

First, striking out all the Koranic verses that deny the divinity of Jesus and the revelation of God in him.

கோரிக்கை 2: இரண்டாவதாக, இயேசுவே இறைவனின் வார்த்தை என்றும், இறைவனின் ஆவி என்றும் அங்கீகரியுங்கள். இதை மறைக்காமல் ஏற்றுக்கொள்ளுங்கள்.

Second, acknowledging that Jesus is the spirit and word of God, as they truly believe, without hiding this fact.

கோரிக்கை 3: கிறிஸ்தவர்களை கொள்ளுங்கள் என்று வரும் குர்‍ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் எடுத்துவிடுங்கள். உதாரணத்திற்கு குர்‍ஆன் அல்-தவ்பா வசனம் 29 போன்ற வசனங்களை எடுத்துவிடுங்கள்.

வேதம் அருளப் பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொள்ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள். (குர்‍ஆன் 9:29)


Third, striking out the Koranic verses and hadiths that incite to kill Christians, like in the Al-Tawba chapter, v.29: 'Fight those who do not believe in Allah, nor in Judgment Day, nor do they prohibit what Allah and His messenger have prohibited, nor do they follow the religion of truth' – that is, Islam. Among whom? 'Among the People of the Book.'

நேர்க்காணல் காண்பவர்: இவ்வசனத்தில் "வேதம் அருளப்பெற்றவர்கள்" என்றால் யார்? "Who are..."

தந்தை ஜகரியா: கிறிஸ்தவர்களும் யூதர்களும் தான். "ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்" என்பது கொலைக்கு சமமாகும்.

"The Christians and Jews. 'Until they pay the Jizya poll tax in submission.' This is murder.



கோரிக்கை 4: நான்காவதாக, குர்‍ஆனிலும் ஹதீஸ்களிலும், தீவிரவாததிற்கும் இதற்கு இணையாக உள்ள அடக்கியாளுதல் பற்றியுள்ள அனைத்து வசனங்களையும் நீக்கி விடுங்கள்.

Number four, striking out the Koranic verses and Hadiths that incite to terrorism and oppression in all their forms."


நேர்க்காணல் காண்பவர்: தீவிரவாதம் மற்றும் அடக்கியாளுதல் என்றால் என்ன?
"What do you mean by terrorism and oppression?"


தந்தை ஜகரியா: நம்பிக்கையாளர்கள் சண்டையிடவேண்டும் என்றுச் சொல்வது தீவிரவாதமாகும், இன்னும் ஒரு ஹதீஸில் "அல்லாவைத் த‌விர‌ தொழுதுக் கொள்வ‌த‌ற்கு வேறு யாருமில்லை என்று ம‌க்க‌ள் சொல்லும் வ‌ரை அவ‌ர்க‌ளோடு போரிட‌ நான் க‌ட்ட‌ளையிட‌ப்ப‌ட்டுள்ளேன்" என்று கூறப்பட்டுள்ளது. இதைத் தான் தீவிரவாத‌ம் என்ப‌து, கொலை செய்த‌ல் என்ப‌து.

"Terrorism – 'Urge the believers to fight,' and the hadith: 'I was commanded to fight people until they say: There is no God but Allah.' All this is terrorism and murder.

கோரிக்கை 5: தேவனின் இரட்சிப்பின் திட்டமாகிய இயேசுவின் சிலுவை பற்றிய அனைத்து வசனங்களையும், குர்‍ஆனிலிருந்து நீக்கவேண்டும்.

Deleting all the quran verses that are aspersing in the crucifixion of the Christ, and scepticizing in the great God's plan for the redemption


கோரிக்கை 6: ஆறாவதாக, இஸ்லாமியர்களின் மசூதிகளும், இதர ஊடகங்கள் மூலமும் இயேசுவையும், எங்கள் பரிசுத்த வேதாகமத்தையும், தாக்குவதை நிறுத்திக்கொள்ளுங்கள்.

Number six:Stopping the attack on Jesus and the Holy Book in mosques and in all the media.

கோரிக்கை 7: ஏழாவதாக, எல்லா மக்களுக்கும், முக்கியமாக இஸ்லாமியர்களுக்கும் மத சுதந்திரத்தை தரவேண்டும். நீங்கள் கேட்கலாம், இஸ்லாமியர்கள் பற்றி எனக்கு என்ன கவலை என்று? இல்லை, இஸ்லாமியர்களுக்கும் தங்களுக்கு விருப்பமான மார்க்கத்தை பின்பற்ற மற்றும் தன் நம்பிக்கையை வெளிப்படுத்த அவர்களுக்கு சுதந்திரம் தரவேண்டும்.

Number seven: Giving people and Muslims the freedom of... You may ask what do I care about the Muslims? No! They must have the freedom to choose their religion and the freedom to express their belief.


கோரிக்கை 8: இஸ்லாமை விட்டு வெளியேறுகிறவர்களை கொல்லும் தண்டனையை இரத்து செய்யவேண்டும். கிறிஸ்தவத்திற்கு மாறினால் அவர்களை கொடுமைப்படுத்துவதை நிறுத்தவேண்டும், அவர்களை சிறைகளில் அடைப்பதை நிறுத்தவேண்டும், மட்டுமல்ல அவர்களை கொல்வதை நிறுத்த வேண்டும்.

Number eight:To abolish the punishment for apostasy, to stop torturing people who convert to Christianity, and to stop imprisoning or even killing them.

கோரிக்கை 9: இஸ்லாமியர்களால் ஆக்கிரமித்து அங்கிருந்த கிறிஸ்தவர்களைக் கொன்ற காரணத்தினால், அரபி நாடுகள் அனைத்தும், கிறிஸ்தவர்களிடம் "அதிகார பூர்வமாக" பொது மன்னிப்பை கேட்கவேண்டும்.

Number nine:Formal apologies must be made by leaders throughout the Arab world for the murder of Christians in countries invaded by Islam.

கோரிக்கை 10: இஸ்லாமிய ஆரம்ப கால முதல் இன்று வரை இஸ்லாமிய‌ சரித்திரம் அனைத்திலும், கிறிஸ்தவ நம்பிக்கைக்கு எதிராக செய்த அனைத்து அவதூறுகளுக்காக, இஸ்லாமிய அரப் நாடுகளில் உள்ள அனைத்து தலைவர்கள் எங்களிடம் பொது மன்னிப்பை அல்லது மன வருத்தத்தை கோரவேண்டும்.

Number ten: Leaders throughout the Arab world should make formal apologies for the insults directed against our faith throughout Islamic history.

இந்த பாதிரியாருக்கு என்ன பைத்தியமா பிடித்துள்ளது?


இந்நிகழ்ச்சியை காண்பவர்கள் என்னிடம் கேட்கலாம்: "இந்த பாதிரியாருக்கு என்ன பைத்தியமா பிடித்துள்ளது?" அல்லது "இந்த கோரிக்கைகளை ஒரு பத்தியக்காரனால் மட்டுமேயா கேட்கமுடியும்!" "குர்‍ஆன் வ‌ச‌ன‌ங்க‌ளை நீக்கிவிடுங்க‌ள்" என்ற‌ வாசக‌த்தில் என்ன‌ அர்த்த‌ம் உள்ள‌து என்று கேட்கிறீர்க‌ளா? இப்ப‌டியெல்லாம் கேட்டு இவ‌ர் என்ன‌ செய்ய‌ப்போகிறார் என்று என்னிட‌ம் கேட்கிறீர்க‌ளா?

ச‌ரி, உங்க‌ளால் உங்க‌ள் குர்‍ஆனில் உள்ள‌ வ‌ச‌ன‌ங்க‌ளை நீக்கமுடியாது என்றுச் சொல்வீர்களானால்? எங்களிடம் ஏன் எங்கள் நம்பிக்கையை மாற்றிக் கொள்ளுங்கள் என்று கேட்கிறீர்கள்? நீங்கள் சொல்வதையே நாங்களும் சொல்லவேண்டும் என்று எங்களிடம் ஏன் கேட்கிறீர்கள்? அப்படி நாங்கள் மாற்றிக்கொள்ளவில்லையானால், ஏன் வாளை காட்டுகிறீர்கள்?

The viewers may say: 'Is this priest crazy, or what? These demands could only be made by an insane man... To strike out Koranic verses... Does this make any sense? What is he going on about?' OK, if you cannot change (the Koran), why are you asking us to change our beliefs? Why do you demand that we say what you say, or else - the sword?


தமிழாக்க குறிப்பு: மற்றும் கீழ் கண்ட விவரங்களைக் ஆங்கிலத்தில் படியுங்கள், வீடியோவில் அவர் பேசியதை நீங்களே கேளுங்கள். ஒரு பெண் முஹம்மதுவிற்கு தேவையானால், அதை மற்றவர்கள் கொடுக்கவேண்டுமாம்....

"(Al-Halabi) says: ' If the Prophet wanted an available woman...' – in other words, an unmarried woman, a widow, or a single woman – '...he was allowed to enter her...' I don't like to use the word i-n-t-e-r-c-o-u-r-s-e. '...without her guardian and without witnesses...' Without witnesses. '...and against her will.' Against her will. 'If he desired a married woman, her husband had to divorce her for him. And if he desired a servant-girl, her master had to give her to him. He can even marry off the woman to whoever he wants, against her will.'"

நேர்க்காணல் காண்பவர்: "நமக்கு தெரியும் அல்லவா? அதாவது இவைகள் மற்ற சாதாரண மனிதர்களுக்கு அனுமதிக்கப்படாதது, ஆனால், நபிக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டது"

Interviewer: "We know that the Prophet is allowed what others are not."

தந்தை ஜகரியா: "ஏன் இப்படி?". உலகத்தில் உள்ள மற்ற மனித வர்க்கம் படைக்கப்பட்ட விதமாக அல்லாமல் வேறு விதமாக இவர் படைக்கப்பட்டு இருக்கிறாரா?

Boutrus: "Why? Is he made of different stuff than the rest of mankind?"

தந்தை ஜகரியாவின் "10 கோரிக்கை" நேர்ககாணலின் தமிழாக்கம் முற்றிற்று


இந்த கட்டுரையை வாசிக்கும் வாசகர்கள் இப்போது புரிந்துக்கொண்டு இருப்பார்கள் "ஏன் இஸ்லாமியர்கள் இவரை இஸ்லாமின் பகிரங்க எதிரி நம்பர் 1" என்று அழைக்கிறார்கள் என்று!





தந்தை ஜகரியா அவர்களின் தளம் பற்றிய அறிமுகம்:

இவர் இஸ்லாமியர்களுக்கு பதிலை மிகவும் காரசாரமாக அளிக்கிறார். ஆதரத்தோடும் அளிக்கிறார். இவரது தளத்தில் அனேக பதில்களை Word and PDF Formatல் காணலாம். இவைகளை நம் தளங்களில் பயன்படுத்திக்கொள்ள அனுமதியும் கொடுத்துள்ளார். அடி மேல் அடி போட்டால் அம்மியும் நகரும் என்றுச் சொல்வார்கள், அதே போல, இவர் தன் பதில்களை இணையம் மற்றும் தொலைத் தொடர்பு என்று அனேக வழிகளில் "சத்தியத்தை" பரப்புகிறார், பொய்யின் அடித்தளத்தை அசைக்கிறார்.

இன்று இஸ்லாமியர்களின் [பொய்) வாதங்கள் வேகமாக பரவுவதற்கு காரணம், இஸ்லாம் பற்றிய உண்மையை நாம் அறியாததினால் தான். அவர்கள் நமக்கு உண்மையைச் சொல்லமாட்டார்கள், நாம் தான் அவைகளை படித்து தெரிந்துக்கொள்ள வேண்டும், மற்றவர்களுக்கும் தெரிவிக்க வேண்டும். மயிலே மயிலே இறகு தா என்று கேட்டால், அது கொடுக்காது, நாம் தான் சென்று அதனிடமிருந்து எடுத்துக் கொள்ளவேண்டும்.

அவரின் தளத்திலிருந்து(http://www.fatherzakaria.net/) சில கட்டுரைகளை இங்கு தருகிறேன்.

இந்த பத்து கோரிக்கைகள் பற்றிய அவரது கட்டுரை (PDF)

The ten petitions : http://www.fatherzakaria.net/books/qaf/pdf/81-Episode.pdf

இந்த புத்தகங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் (Word / PDF Format ல்) உள்ளன.

இவரது தள புத்தகங்கள்/கட்டுரைகள்/கேள்வி பதில்கள்:
Link : http://www.fatherzakaria.net/books.htm



Spiritual Books 8 புத்தகங்கள்
Questions About Faith 90 புத்தகங்கள்
Books About Islam 15 புத்தகங்கள்


இவர் பேசிய வீடியோக்கள் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சிகளின் "YouTube" வீடியோக்களை இந்த தொடுப்பை சொடுக்கி பார்க்கலாம்.

http://www.youtube.com/results?search_query=father+zakaria

ஏன் இவருக்கு "WORLD MAGAZINE" என்ற பத்திரிக்கை "தானியேல்" என்ற பழைய ஏற்பாட்டு நபரில் பட்டம் அளித்து கவுரவித்தது என்பதை இன்னும் கிறிஸ்தவர்கள் புரிந்துக் கொள்ளாமல் இருக்க வாய்ப்பு இல்லை.





தானியேல் 6:10 தானியேலோவென்றால், அந்தப் பத்திரத்துக்குக் கையெழுத்து வைக்கப்பட்டதென்று அறிந்தபோதிலும், தன் வீட்டுக்குள்ளேபோய், தன் மேல் அறையிலே எருசலேமுக்கு நேராகப் பலகணிகள் திறந்திருக்க, அங்கே தான் முன் செய்து வந்த படியே, தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம்பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான்.

இராஜாவின் கட்டளையானாலும் பயப்படுவதில்லை, தேவனைத் தவிர இராஜாவிடம் வேண்டிக்கொள்வதில்லை. மனுஷனுக்கு கீழ் படிவதைப் பார்க்கிலும் இறைவனுக்கு கீழ்படிவது மேன்மை. சிங்கத்தின் கெபியில் அடைக்கப்பட்டாலும் சரி, பயபடப்போவதில்லை என்ற எண்ணி செயல்பட்ட மாவீரனாம் தானியேலின் பெயரில் "தந்தை ஜகரியாவை" கவுரவித்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

இவ்வாண்டு 2008, கிறிஸ்தவர்கள் தைரியமாக சத்தியத்தை வெளிப்படுத்தும் ஆண்டு.

வாழ்க இயேசு
வாழ்க தானியேல்
2008ம் ஆண்டின் தானியேலே நீ வாழ்க
வாழ்க தந்தை ஜகரியா பூட்ரோஸ்



மேலும் விவரங்களுக்கு (ZAKARIA BOTROS )
Meet Zakaria Botros, WORLD's 2008 Daniel of the Year.

Islam's Public Enemy #1 — Coptic priest Zakaria Botros fights fire with fire
 

இஸ்லாம் இணைய பேரவைக்கு எழுத்து வடிவ விவாதத்துக்கு அழைப்பிதல்

முன் பக்கம் செல்ல

HOME PAGE

தமிழ் உலகின் இஸ்லாம் அறிஞர்களுக்கு ஈசாகுரான் உமர் எழுத்து வடிவ விவாதத்துக்கு பகிரங்க அழைப்பு

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் தலைவரும்,பிரபல இஸ்லாம் அறிஞருமான பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்கள்

1,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-1

2,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-2

3,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-3

4,பி.ஜைனூல் ஆபிதீன் அவர்களுக்கு ஈசா குரான் இணைய உமர் அவர்களின் பதில்-4

பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி கட்டுரைகள்

1,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -1

2,பிரபல இஸ்லாம் அறிஞர் Dr.ஜாகிர் நாயக் அவர்களுக்கு ஈசாகுரான் இணைய உமரின் பதிலடி -2

பிரபல இஸ்லாமிய இணையதளமான இஸ்லாம் கல்வி இணையத்தின் கட்டுரைக்கு ஈசாகுரான் இணையம் அளித்த பதில்கள்

1, இஸ்லாம்கல்வி இணையக் கட்டுரையும், 1 தீமோ 2:5ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் உமர் பதில்

2, இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்: ஈஸா குர்‍ஆன் பதில்